ஊர்ப்புதினம்

பலாலி மீன்பிடி துறைமுக புனரமைப்பு பணிகளை இளங்குமரன் எம்பி பார்வையிட்டார்

3 months 2 weeks ago

பலாலி மீன்பிடி துறைமுக புனரமைப்பு பணிகளை இளங்குமரன் எம்பி பார்வையிட்டார்

24 JUN, 2025 | 11:11 AM

image

பலாலி பகுதியில் உள்ள மீன்பிடி துறைமுகம் தற்போது துரித கெதியில் புனரமைக்கப்பட்டு வருகின்றது. கடந்த யுத்தத்தின் காரணமாக அப்பகுதி மக்கள் சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்த நிலையில், துறைமுகத்தினதும் அதனை சூழவுள்ள பகுதிகளின் நீர்ப்பாதைகள் மற்றும் அடித்தளங்கள் மோசமாக சேதமடைந்திருந்தன.

மேலும், கடல் பகுதியில் பலத்த கற்கள் காணப்படுவதால், அப்பகுதியிலுள்ள கடற்தொழிலாளர்கள் படகுகளை கடலுக்குள் செலுத்தும்போது கடலின் ஆழம் சரிவர இல்லாததுடன், அடிக்கடி படகுகள் சேதமடைவது போன்ற இடர்களை எதிர்கொண்டு வந்துள்ளனர். இதனை அடுத்து, பல ஆண்டுகளாகக் கடற்தொழிலாளர்கள் துறைமுக பகுதிகளை புனரமைக்கக் கோரி வந்த நிலையில், தற்போது இந்த பணி நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த புனரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் திங்கட்கிழமை (23) அப்பகுதிக்கு நேரில் சென்று நிலவரத்தை பார்வையிட்டார்.

4__1___2_.jpg4__3___1_.jpg

https://www.virakesari.lk/article/218294#google_vignette

பூம்புகாரில் இன்னல்களுடன் வாழும் மக்கள் - நேரில் சென்ற நல்லூர் தவிசாளர் தலைமையிலான குழு

3 months 2 weeks ago

பூம்புகாரில் இன்னல்களுடன் வாழும் மக்கள் - நேரில் சென்ற நல்லூர் தவிசாளர் தலைமையிலான குழு

24 JUN, 2025 | 11:12 AM

image

யாழ்ப்பாணம், அரியாலை, பூம்புகார் பகுதிக்கு திங்கட்கிழமை (23) நல்லூர் பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டனர். 

நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பூம்புகார் பகுதி மக்கள் உரிய அடிப்படை வசதிகள் இன்றி, பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வாழ்ந்து வருகின்றனர். 

குறிப்பாக கடற்தொழில் செய்வோர், உரிய தொழில் உபகரணங்கள் இன்றியும் , மீன் பிடி துறைமுக வசதிகள், படகுகளை நிறுத்தி வைப்பதற்கான உரிய வசதிகள் இன்றி சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் 

இது தொடர்பில் பூம்புகார் கடற்தொழில் சங்க பிரதிநிதிகளின் அழைப்பினை ஏற்று , நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் , உபதவிசாளர் ஜெயகரன், யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் மற்றும் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வ. பார்த்தீபன் ஆகியோர் நேரில் சென்று அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டனர். 

அப்பகுதி மக்களின் குறைகளை தீர்க்க விரைந்து தம்மால் முடிந்த நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என உறுதி அளித்துள்ளனர்.

4__1___4_.jpg

https://www.virakesari.lk/article/218297

யாழில். வீசிய கடும் காற்றினால் 159 பேர் பாதிப்பு!

3 months 2 weeks ago

windy_trees_d.jpg?resize=750%2C375&ssl=1

யாழில். வீசிய கடும் காற்றினால் 159 பேர் பாதிப்பு!

யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை திடீரென மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் 45 குடும்பங்களைச் சேர்ந்த 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 2 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதமாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வேலணை பிரதேச செயலர் பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகளும், சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9 வீடுகளும் ஒரு அடிப்படை கட்டமைப்பும் சேதமடைந்துள்ளன.

அதேசமயம் காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 18பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1436816

மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

3 months 2 weeks ago

New-Project-313.jpg?resize=750%2C375&ssl

மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஐந்து சர்வதேச விமானங்களை மஸ்கட், ரியாத் மற்றும் துபாய் ஆகிய இடங்களில் உள்ள மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விட்டுள்ளன.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பாதிக்கப்பட்ட விமானங்கள் மாற்று வழித்தடத்தில் திருப்பி விடப்பட்டதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAASL) திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட சரியான வழித்தடங்களை CAASL குறிப்பிடவில்லை.

ஆனால் பயணிகள் நிகழ்நேர புதுப்பிப்புகளுக்கு விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.

பிராந்திய வான்வெளி இடையூறுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, இலங்கையின் இரண்டு சர்வதேச விமான நிலையங்கள் – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) மற்றும் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் (MRIA) – எந்தவொரு அவசர தரையிறக்கங்கள் அல்லது மாற்றுப்பாதையில் இயக்கப்படும் விமானங்களையும் பொருத்துவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கட்டார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட சிவில் விமான நிறுவனங்களுக்கு உதவ ஆணையம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2025/1436779

மின், இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வாரம் கிளிநொச்சியில் ஆரம்பம்

3 months 2 weeks ago

23 JUN, 2025 | 02:50 PM

image

கிளிநொச்சியில் மின் மற்றும் இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வாரம் - 2025 திங்கட்கிழமை (23)  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாண அலுவலகத்தின் ஏற்பாட்டில், கரைச்சி பிரதேச சபையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.

"சுற்றாடல் எம்மைக் காக்கும் நாம் சுற்றாடலைக் காப்போம்" எனும் தொனிப்பொருளில் திங்கட்கிழமை (23) திகதி தொடக்கம் வெள்ளிக்கிழமை (27) ம் திகதி வரை இந்த வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது 

இதேவேளை,  இலத்திரனியல் மற்றும் மின்கழிவு சேகரிப்பு நிகழ்வு கரைச்சி பிரதேச சபையில் இன்று இடம்பெறுகிறது.

நிகழ்வை கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன்  கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வட மாகாண பணிப்பாளர் R.M.Jaltota  தலைமையில் நடைபெற்ற  இந் நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன், கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி திணைக்களத்தின்  உள்ளூராட்சி உதவியாளர் மணிமேகலை, கரைச்சி பிரதேச சபை செயலாளர் த.ஞானராஜ்  மற்றும் துறை சார்ந்த திணைக்கள உத்தியோகத்தர்கள்   கலந்துகொண்டனர்.

1000546182.jpg

1000546190__1_.jpg

1000546184__1_.jpg

https://www.virakesari.lk/article/218216

வலி. வடக்கில் 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி தொடரும் போராட்டம்

3 months 2 weeks ago

23 JUN, 2025 | 11:21 AM

image

யாழ்ப்பாணம், வலி. வடக்கில் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரிய போராட்டம் நேற்று (22) இரண்டாவது நாளாகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. 

மயிலிட்டி சந்தியில் சனிக்கிழமை (21) ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டத்தின்போது, இன்று 500க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றுள்ளதோடு, தங்குதடையின்றி அமைதி வழியில் உணவு சமைத்து அங்கேயே தங்கியிருந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், பாடசாலைச் சிறுவர்கள் கூட தமது பெற்றோருடன் பதாகைகளைத் தாங்கியவாறு, மூன்றாம் தலைமுறையாக தங்கள் நிலங்களுக்கான உரிமையைக் கோரி போராட்டத்தில் இணைந்துள்ளனர். 

01__3_.jpg

மயிலிட்டி, பலாலி, அந்தோணிபுரம், காங்கேசன்துறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த முதியவர்கள், இளைஞர்கள், பெண்கள் எனப் பல தரப்பினரும் இத்தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

1990ஆம் ஆண்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள், போர் முடிவடைந்த பின்னரும் தங்கள் காணிகளை முழுமையாகப் பெறவில்லை. ஆட்சிக்கு வந்த ஒவ்வோர் அரசாங்கமும் காணியை விடுவிப்பதாகக் கூறி, சிறிய பகுதிகளை மட்டுமே விடுவித்துள்ளன. இதனால், வாடகை வீடுகளிலும், உறவினர் வீடுகளிலும், முகாம்களிலும் காணி உரிமையாளர்கள் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனர்.

"அனைத்துக் காணிகளையும் உடனடியாக விடுவிப்போம்" என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம், ஆறு மாதங்களாகியும் பெரியளவில் காணி விடுவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என போராட்டக்காரர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக இராணுவம் நிலங்களை வைத்திருப்பதாகவும், தற்போது அமைதியான சூழ்நிலை நிலவுகிறபோதும் காணிகள் விடுவிக்கப்படாமல் இருப்பது மக்களைத் தொடர்ந்தும் அகதிகளாக்குகிறது எனவும் அவர்கள் வேதனையுடன் குறிப்பிட்டனர். 

தமிழ் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டுள்ளதாகக் கூறும் புதிய அரசாங்கம் இப்போராட்டம் குறித்து கவனம் செலுத்தும் வரை இது தொடரும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் உறுதியளித்துள்ளனர்.

01__16_.jpg

01__11_.jpg

01__9_.jpg

01__10_.jpg

https://www.virakesari.lk/article/218189

50வது பாடசாலைகளுக்கிடையான வருடாந்திர  நீச்சல் விளையாட்டுப் போட்டி

3 months 2 weeks ago

கல்வி ஒரு இம்சையாக மாறிவிட்ட காலத்திலும் விளையாட்டின் மூலம் தலைமைத்துவத்தை வளர்த்துக்கொள்ள முடிந்துள்ளது - பிரதமர் ஹரிணி

Published By: DIGITAL DESK 2

23 JUN, 2025 | 11:46 AM

image

கல்வி ஒரு இம்சையாக மாறிவிட்ட காலத்திலும், விளையாட்டின் மூலம் தலைமைத்துவம், அணி உணர்வு மற்றும் சகிப்புத்தன்மை போன்ற மிகவும் முக்கியமான பண்புகளை வளர்த்துக்கொள்ள முடிந்திருக்கிறது. நாம் விளையாட்டைத் தேர்ந்தெடுப்பது ஒற்றுமை உட்பட விளையாட்டின் நற்பண்புகளை நமக்குள் வளர்த்துக்கொள்வதற்கே ஒழிய வெற்றியை மட்டும் இலக்காகக் கொண்டு அல்ல என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

சுகததாச விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற பாடசாலை நீச்சல் விளையாட்டு சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 50வது பாடசாலை வருடாந்திர  நீச்சல் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், பிரதமர் பல்வேறு பிரிவுகளின் நீச்சல் மற்றும் நீர் மூழ்கும் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

இதனுடன், ஒட்டுமொத்த ஆண்கள் நீச்சல் சாம்பியன்ஷிப்பை தொடர்ந்து 20 வருடங்களாக மருதானை புனித ஜோசப் கல்லூரியும், ஒட்டுமொத்த பெண்கள் சாம்பியன்ஷிப்பை கொழும்பு மகளிர் கல்லூரியும், ஒட்டுமொத்த கலப்பு பாடசாலைச் சாம்பியன்ஷிப்பை வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையும் வென்றன.

அதேபோல் நீர் மூழ்கும் பிரிவில் ஒட்டுமொத்த பெண்கள் சாம்பியன்ஷிப்பை கொழும்பு பேராயர் கல்லூரி அணியும், ஆண்கள் சாம்பியன்ஷிப்பை கொழும்பு றோயல் கல்லூரியும் வென்றன.

இந்த நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

"நாம் விளையாட்டில் வெற்றியோடு தோல்வியையும் சமமாக அனுபவித்து தாங்கிக்கொள்ள வேண்டும். இதை நாம் முதலில் நமது பிள்ளைகளுக்குப் பழக்கப்படுத்த வேண்டும்.

கல்வி ஒரு இம்சையாக மாறிவிட்ட காலத்திலும், விளையாட்டின் மூலம் தலைமைத்துவம், அணி உணர்வு மற்றும் சகிப்புத்தன்மை போன்ற மிகவும் முக்கியமான பண்புகளை வளர்த்துக்கொள்ள முடிந்திருக்கிறது.

இன்றைய இந்த திறமைகள் என்னை வியக்கவைத்தன. உண்மையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நமது நாட்டின் குழந்தைகளின் திறமைகள் மிக உயர்ந்த மட்டத்தில் இருக்கிறன.

வரலாற்றில் எப்போதும் இலங்கையின் நாமத்தை சர்வதேச அளவில் ஓங்கச் செய்ய நமது விளையாட்டு வீரர்களால் முடிந்திருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் நான் அதனையும் நன்றியுடன் நினைவுகூர விரும்புகிறேன்.

இன்று என் முன்னால் இருக்கும் உங்களுக்கும் அவ்வாறு நமது நாட்டின் பெயரை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்ல தேவையான சக்தியும் தைரியமும் கிடைக்க வேண்டுமென நான் பிரார்த்திக்கிறேன்" என்றார்.

இந்த நிகழ்வில் கல்வி அமைச்சின் அதிகாரிகள், பாடசாலை நீர் விளையாட்டுச் சங்க உறுப்பினர்கள், அதிபர்கள் மற்றும் நெஸ்லே லங்கா தனியார் நிறுவன அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

WhatsApp_Image_2025-06-23_at_09.39.37__2WhatsApp_Image_2025-06-23_at_09.39.33__1WhatsApp_Image_2025-06-23_at_09.39.33.jpWhatsApp_Image_2025-06-23_at_09.39.34__1WhatsApp_Image_2025-06-23_at_09.39.36__1WhatsApp_Image_2025-06-23_at_09.39.36.jpWhatsApp_Image_2025-06-23_at_09.39.35__1WhatsApp_Image_2025-06-23_at_09.39.35.jpWhatsApp_Image_2025-06-23_at_09.39.37.jpWhatsApp_Image_2025-06-23_at_09.39.37__1WhatsApp_Image_2025-06-23_at_09.39.38.jpWhatsApp_Image_2025-06-23_at_09.39.34.jp

https://www.virakesari.lk/article/218186

யாழ்ப்பாணத்தில் நிலத்தடி நீர்த் தேவை பற்றிய ஆய்வு

3 months 2 weeks ago

நிலத்தடி நீர்த் தேவை பற்றிய ஆய்வு

Jun 22, 2025 - 10:20 -

நிலத்தடி நீர்த் தேவை பற்றிய ஆய்வு

யாழ்ப்பாணத்தில் வழுக்கியாற்றைப் புனரமைப்பு செய்து நிலத்தடி நீர்த் தேவை மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஆய்வு ஒன்றினை யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் நேற்று (21) ஆரம்பித்தனர்.

யாழ்ப்பாணம் வறுத்தலைவிளான் பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்பிக்கும் வழுக்கையாற்றில் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், அரச திணைக் களத்தை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த ஆராய்ச்சி பயணத்தில் வருத்தலைவிளான் பகுதியில் ஆரம்பிக்கும் வழுக்கையாற்று பயணம் அராலியில் முடிவடையும்.

இதன்போது பொறியியலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மருத்துவ பீடம் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmc76w60i0076qp4khyhg75fy

வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் நீதிக்கான நீண்டகாத்திருப்பு ஆவனப்பட திரையிடலும் கருத்துப்பகிர்வும்

3 months 2 weeks ago

வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் நீதிக்கான நீண்டகாத்திருப்பு ஆவனப்பட திரையிடலும் கருத்துப்பகிர்வும்

Published By: VISHNU

23 JUN, 2025 | 02:37 AM

image

வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் நீதிக்கான நீண்டகாத்திருப்பு ஆவனப்பட திரையிடலும் கருத்துப்பகிர்வும் ஞாயிற்றுக்கிழமை (22) மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி திருமதி அ.அமலநாயகி தலைமையில் அமெரிக்கமிசன் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வின்போது வடகிழக்கில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி அலைந்து உயிர்நீர்த்த உறவுகளை நினைவுகூரும் வகையில் ஈகச்சுடர் ஏற்றப்பட்ட அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இதன்போது காணாமல்ஆக்கப்பட்டவர்களின் கண்ணீர்கதைகளை சுமந்துவந்த எழுநா அமைப்பினால் தயாரிக்கப்பட்ட நீதிக்கான  நீண்டகாத்திருப்பு ஆவனப்படம் திரையிடப்பட்டது.

இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கியநாதன்,ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் மு.முரளிதரன்,ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை உறுப்பினரும் ஊடகவியலாளருமான எஸ்.நிலாந்தன்,பிரதேசசபை உறுப்பினர்களான வசந்தன்,சுவேந்திரன்,சமூக செயற்பாட்டாளர்கள்,வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஆவன திரைப்படத்தினை பார்வையிட்டதன் பின்னர் கருத்துப்பகிர்வுகள் முன்னெடுக்கப்பட்டன.  

WhatsApp_Image_2025-06-22_at_16.09.48.jp

WhatsApp_Image_2025-06-22_at_16.09.47.jp

WhatsApp_Image_2025-06-22_at_16.09.47__2

WhatsApp_Image_2025-06-22_at_16.09.47__1

WhatsApp_Image_2025-06-22_at_16.09.46.jp

WhatsApp_Image_2025-06-22_at_16.09.46__1

WhatsApp_Image_2025-06-22_at_16.09.45__1

WhatsApp_Image_2025-06-22_at_16.09.45__2

WhatsApp_Image_2025-06-22_at_16.09.44.jp

WhatsApp_Image_2025-06-22_at_16.09.44__1

WhatsApp_Image_2025-06-22_at_16.09.43.jp

https://www.virakesari.lk/article/218173

192 உள்ளூராட்சி மன்றங்கள் தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில்!

3 months 2 weeks ago

New-Project-299.jpg?resize=750%2C375&ssl

192 உள்ளூராட்சி மன்றங்கள் தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில்!

தேசிய மக்கள் சக்தி (NPP) இப்போது இலங்கை முழுவதும் 192 உள்ளூராட்சி மன்றங்களின் கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளது.

இவற்றில், NPP 151 நிர்வாகங்களில் நேரடி பெரும்பான்மையைப் பெற்றது.

அதே நேரத்தில் அவர்கள் 41 பிற மன்றங்களில் தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பான்மையைப் பெற்று நிர்வாகங்களை அமைத்தனர்.

NPP இப்போது கொழும்பு, களுத்துறை, காலி, குருநாகல், புத்தளம் மற்றும் நுவரெலியா உட்பட பல முக்கிய மாநகர சபைகளை ஆளுகிறது.

அக்கரபத்தனை, கொட்டகலை மற்றும் நுவரெலியா பிரதேச சபைகளில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் பதவியை வகிக்கிறது.

அதே நேரத்தில் துணைத் தலைவர்கள் பதவிகளை NPP பிரதிநிதிகள் பெற்றுள்ளனர்.

இதற்கிடையில், எந்தவொரு கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை இல்லாத 95 உள்ளூராட்சி மன்றங்களில் 53 இல் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளதாகவும், கட்டுப்பாட்டைத் தீர்மானிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களிடையே உள் தேர்தல்கள் நடத்தப்பட்டதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அந்த 53 சபைகளில் 22 இல் ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமே நிர்வாகங்களை அமைத்துள்ளதாக அவர் கூறினார்.

வடக்கில் 16 மன்றங்களை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

தற்போது, 53 மன்றங்களில் NPP அல்லாத கட்சிகளால் நிர்வகிக்கப்படுகின்றன.

அதே நேரத்தில் நான்கு மன்றங்களின் நிர்வாகங்களை அமைப்பது சர்ச்சைகள் காரணமாக தாமதமாகியுள்ளது.

இரகசிய வாக்கெடுப்பின் போது ஏற்பட்ட உள் மோதல்கள் காரணமாக சீதாவகபுர நகராட்சி மன்றம், சீதாவகபுர பிரதேச சபை மற்றும் மாவதகம பிரதேச சபை ஆகியவற்றின் அமர்வுகள் இடைநிறுத்தப்பட்டன.

நிர்வாக சிக்கல்கள் காரணமாக ஆராட்சிகட்டுவ பிரதேச சபையின் தொடக்க அமர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜூன் 20 ஆம் திகதிக்குள், நாடு முழுவதும் உள்ள 339 உள்ளூராட்சி மன்றங்களில் 245 இல் நிர்வாகங்கள் நிறுவப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1436665

வவுனியா மாநகர சபை உறுப்பினரின் முன் மாதிரியான செயற்பாடு

3 months 2 weeks ago

22 JUN, 2025 | 05:17 PM

image

வவுனியா மாநகரசபை உறுப்பினர் ஒருவர் 18 மணித்தியாலயத்திற்கு மேலாக நீர் விநியோகம் தடைப்பட்டிருந்த பகுதிகளில் தனது சொந்த நிதியில் வாகனத்தை கூலிக்கு அமர்த்தி நீர் விநியோகம் மேற்கொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

வவுனியா மாநகர சபையின் பண்டாரிக்குள வட்டார உறுப்பினரான சி.பிறேமதாஸ் என்பவராலேயே குறித்த வேலைத்திட்டம்  ஞாயிற்றுக்கிழமை (22) மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா நகரின் சில பகுதிகள், மன்னார் வீதி, குருமன்காடு, நகரசபை விடுதி, அரச விடுதிப் பகுதி உளளிட்ட சில பகுதிகளில் சனிக்கிழமை  (21) பிற்பகல் 3 மணி முதல் தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பினால் வழங்கப்படும் நீர் விநியோகத்தில் தடை ஏற்பட்டு சுமார் 18 மணித்தியாலயத்திற்கு மேலாக நீர் விநியோகம் தடைப்பட்டிருந்தது.  

இதனால் வர்த்தக நிலையங்கள், உணவகங்கள், அரச விடுதிகள், வீடுகள் என்பவற்றில் தமது அன்றாட செயற்பாடுகளுக்கு நீரைப் பெற்றுக் கொள்ள முடியாமல் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கினர். 

இந்நிலையில் வவுனியா மாநககர சபை உறுப்பினர் சி.பிறேமதாஸ் நீர்தாங்கி வாகனம் ஒன்றினை வாடகைக்கு அமர்த்தி அதன் மூலம் அப் பகுதியில் உள்ள மக்களது வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு தானே நீரை எடுத்துக் கொடுத்து மக்களது அவசர நீர்த்தேவையை பூர்த்தி செய்துள்ளார். இவரது முன்மாதிரியான செயற்பாடு மக்களது பாராட்டைப் பெற்றுள்ளது.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நீர் விநியோக குழாயில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த வெடிப்பு புகையிரத தண்டவாளத்திற்கு கீழ் உள்ள குழாயில் ஏற்பட்டுள்ளதால் புகையிரத திணைக்க அதிகாரிகள் வருகை தந்த பின்னரே அதனை சீர் செய்ய முடியும் என்பதாலேயே தாமத நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிது. 

IMG_20250622_101103709.jpg

IMG_20250622_101549215__1_.jpg

IMG_20250622_101123139.jpg

https://www.virakesari.lk/article/218156

யாழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்வு திடீரென நிறுத்தப்பட்டது

3 months 2 weeks ago

Published By: VISHNU

22 JUN, 2025 | 08:52 PM

image

யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்வு திடீரென காற்றுடன் பெய்த மழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

510050127_1045307764410340_6968750021693

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) மாலை தென்னிந்திய இசை கலைஞர்களின் பங்கேற்புடன் இசை நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

தனியார் நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் 5000, 3000 மற்றும் 2000 ரூபாய் பெறுமதியான நுழைவு சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு, நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

508122182_581302848051753_53849795013466

இந்நிலையில் இசை நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக, மங்கள விளக்கேற்றும் வேளை திடீரென கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தமையால், நிகழ்வுக்காக போடப்பட்டிருந்த கதிரைகள், அருகில் இருந்த பந்தல்களின் தகரங்கள் என்பன காற்றினால் தூக்கி வீசப்பட்டமையால், பார்வையாளர்கள் அங்கிருந்து வெளியேறி சென்றனர். 

சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தமையால், நிகழ்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக ஏற்பாட்டளர்கள் அறிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/218169

குறைந்த செலவிலான தரமான வலுசக்தி உற்பத்திக்கு உலக வங்கி 150 மில்லியன் டொலர் நிதியுதவி

3 months 2 weeks ago

22 JUN, 2025 | 01:08 PM

image

(நா.தனுஜா)

இலங்கையில் தூய, தரமான, குறைந்த செலவிலான வலுசக்தி உற்பத்தி செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்காக 150 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்குவதற்கு உலக வங்கிக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது.

இச்செயற்திட்டத்தின் ஊடாக இலங்கையினால் குறைந்த செலவில் பாதுகாப்பானதும், நிலைபேறானதுமான வலுசக்தியை உற்பத்தி செய்யமுடியும் எனவும், இது அதிக செலவில் இறக்குமதி செய்யப்படும் புதைபடிவ எரிபொருளில் நாடு தங்கியிருப்பதைக் குறைப்பதற்கும், சோலார் மற்றும் காற்று மூலமான வலுசக்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் உலக வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

'இச்செயற்திட்டத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் உள்ள குடும்பங்களுக்கும் வணிகங்களுக்கும் குறைந்த விலையில், தீங்கற்ற மின்சாரத்தை விநியோகிக்க முடியும்.

இந்த இலக்கை யதார்த்தபூர்வமாக அடைந்துகொள்வதை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்துடனும் தனியார் துறையினருடனும் இணைந்து பணியாற்றுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்' என மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் டேவிட் சிஸ்லென் தெரிவித்துள்ளார்.

அதேவேளை வலுசக்தி உற்பத்தியில் இலங்கை அடையவிருக்கும் நிலைமாற்றமானது தூய வலுசக்தி உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கும், வலுசக்திக் கிடைப்பனவை மேம்படுத்துவதற்கும், நீண்டகால அடிப்படையிலான வலுசக்தி மீளெழுச்சியைக் கட்டியெழுப்புவதற்கும் வாய்ப்பாக அமையும் என சர்வதேச நிதிக்கூட்டுத்தாபனத்தின் தெற்காசியப்பிராந்தியப் பணிப்பாளர் இமாத் என் ஃபகோரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/218131

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த தமிழரசு கட்சி உறுப்பினர் நீக்கம்

3 months 2 weeks ago

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த தமிழரசு கட்சி உறுப்பினர் நீக்கம்

tna-jvp.jpg

சேருவில பிரதேச சபையின் தவிசாளர் தெரிவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முடிவுக்கு எதிராக  தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினருக்கு வாக்களித்த, உறுப்பினரை  கட்சியின் தலைமைப் பீடம் இடை நிறுத்தியுள்ளதாக கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

17505767370.png

இரகசிய வாக்கெடுப்பில் கலந்து கொண்டு தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினருக்கு வாக்களித்த தங்கநகர் வட்டார உறுப்பினர் கந்தசாமி சுதேஸ்குமார் என்பவரையே, கட்சியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்தும், பிரதேச உறுப்பினர் பதவியில் இருந்தும் கட்சியின் தலைமைப் பீடம் இடை நிறுத்தியுள்ளது.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கட்சி அறிவித்துள்ளது

17505767371.png

https://akkinikkunchu.com/?p=329829

வாகரை பிரதேச சபையை பிள்ளையான் கட்சி கைப்பற்ற உதவிய கறுப்பு ஆடு யார்?

3 months 2 weeks ago

வாகரை பிரதேச சபையை பிள்ளையான் கட்சி கைப்பற்ற உதவிய கறுப்பு ஆடு யார்?

pillayan-2.jpg

மட்டக்களப்பு, கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை தவிசாளராக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் தெரிவு செய்யப் பட்டு ஆட்சியை கைப்பற்றியதுடன் அதற்கு தேவையான ஒரு வாக்கை தமிழரசு கட்சி உறுப்பினரா? அல்லது சிறிலங்கா முஸ்லீம் காங்கரஸ் கட்சி உறுப்பினரா ? ஆதரவு வழங்கிய கறுப்பு ஆடு ? என அரசியல் கட்சிகளுக்குள்ளே கறுப்பாடு தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

வாகரை பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர்களை தெரிவு செய்யும் அமர்வு வெள்ளிக்கிழமை (20) பிரதேச சபை மண்டபத்தில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இலங்கை தமிழரசு கட்சியைச் சேர்ந்த பல்கோஸ் மோகனராசா மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர்.

இதனையடுத்து தவிசாளர் தெரிவு செய்ய உள்ளூராட்சி ஆணையாளர் கோரியபோது திறந்த வாக்கெடுப்பு நடத்துவதற்கு தமிழரசு கட்சி 6 உறுப்பினர்களும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் 2 பேர் உட்பட 8 உறுப்பினர்கள் திறந்த வாக்கெடுப்புக்கு வாக்களித்ததுடன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 7 உறுப்பினர்களும் தேசிய மக்கள் கட்சி 3 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சத்தி ஒரு உறுப்பினர் உட்பட 11 உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்புக்கு வாக்களித்தனர்.

இதனை தொடர்ந்து தவிசாளரை தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது இதில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் 12 வாக்குகளை பெற்றதுடக் இலங்கை தமிழரசு கட்சி பல்கோஸ் மோகனராசா 7 வாக்குகளை பெற்றதையடுத்து கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

இதனையடுத்து பிரதித் தவிசாளருக்கு தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சண்முகநாதன் ரசிகரன் ஐக்கிய மக்கள் சத்திய சேர்ந்த கட்சியைச் சேர்ந்த மொஹமட் புகாரி மொஹமெட் ஹைதர் போட்டியிட்டனர் இதில் சன்முகநாதன் ரசிகரனுக்கு 10 வாக்குகளும். மொஹமெட் ஹைதருக்கு ஆதரவாக 8 வாக்குகளும் கிடைத்ததுடன் ஒரு உறுப்பினர் வாக்களிப்பதை நிராகரித்த நிலையில் தமிழரசு கட்சி சண்முகநாதன் ரசிகரன் பிரதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தவிசாளராக போட்டியிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினருக்கு 7 பேருடன் தேசிய மக்கள் கட்சி 3 உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சத்தி உறுப்பினர் ஒருவர் உட்பட 11 பேர் ஆதரவு வழங்கியுள்ள நிலையில் அவர் 12 வாக்குகளை பெற்றுள்ளார். எனவே மேலதிகமாக அந்த ஒரு வாக்கை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஆதரவாக தமிழரசு கட்சி உறுப்பினரா? அல்லது சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி உறுப்பினரா? வாக்களித்தார். இதனால் யார் அந்த கறுப்பு ஆடு, எந்த கட்சி உறுப்பினர் ? என்பது அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் குழப்பகரமாக உள்ளது.

https://akkinikkunchu.com/?p=329808

காணிகளைச் சுவீகரிக்கும் வர்த்தமானியை இரத்துச் செய்வதற்கு தயங்குவது ஏன்? - எம்.ஏ. சுமந்திரன்

3 months 2 weeks ago

காணிகளைச் சுவீகரிக்கும் வர்த்தமானியை இரத்துச் செய்வதற்கு தயங்குவது ஏன்? - எம்.ஏ. சுமந்திரன்

http://www.samakalam.com/wp-content/uploads/2021/03/111103829_sumanthiran-04.jpg

வடக்கில் காணிகளைச் சுவீகரிக்கும் வர்த்தமானியை இரத்துச் செய்வதற்கு தீர்மானித்திருந்த அரசாங்கம், குறித்த இரத்து செய்யும் நடவடிக்கையை நடைமுறைப்படுத்த ஏன் தாமதிக்கிறது என தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் வினவியுள்ளார்.

தனது முகநூலில் இட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

”வடக்கில் 5941 ஏக்கர் காணிகளுக்கான தமது உரித்தை நிரூபிக்குமாறு காணி நிர்ணய சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் 28.03.1025 அன்று 2420/25 இலக்கமிட்ட வர்த்தமானி, காணி உரிமையாளர்களுக்கு கொடுத்த காலக்கெடு 28.06.2025 உடன் முடிவடைகிறது. சட்ட மறுப்புப் போராட்டத்துக்கு நாம் கொடுத்த அவகாசம் முடிவடைவதற்கு 1 நாள் இருக்க, அதை மீளப் பெறப் போவதாக 27. 05.2025 அன்று அரசு அறிவித்தது. அது உடனடியாக செய்யப்படும் என்று நாம் எதிர்பார்த்தோம். ஆனால் 2 வாரமாகியும் இ‌‌ந்த வர்த்தமானி மீள் கைவாங்கப்படாத காரணத்தால் உச்ச நீதிமன்றத்திலே அடிப்படை உரிமை மீறல் வழக்கு (SC FR 112/2025) 12.06.2025 அன்று தாக்கல் செய்தேன். 17.06.2025 இவ் வழக்கு ஆதரிப்பதற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது அமைச்சரவையின் அறிவுறுத்தல் பெறுவதற்கு சட்ட மா அதிபர் இன்று வரை கால அவகாசம் கேட்டிருந்தார். இன்று வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அரசின் முடிவை அறிவிக்க 27.06.2025 வரை (காலக்கெடு முடிவதற்கு 1 நாள் அவகாசம் இருக்க) மீண்டும் அவகாசம் கோரியிருக்கிறார்! தாம் தீர்மானித்ததாக கூறியதை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தயங்குவது ஏன்?” என சுமந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

https://www.samakalam.com/காணிகளைச்-சுவீகரிக்கும்/

மலையக மக்கள் சிறுபான்மையினமா? தேசிய இனமா? இந்திய வம்சாவழியா? மலையகத் தமிழரா? ; யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேள்வி

3 months 2 weeks ago

22 JUN, 2025 | 11:22 AM

image

மலையக மக்கள் சிறுபான்மையினமா? தேசிய இனமா? இந்திய வம்சாவழியா? மலையகத் தமிழரா? என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேள்வி எழுப்பியுள்ளது.

மலையக மக்களின் காணி உரிமை பிரச்சனை தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சனிக்கிழமை (21) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லகீதரன், யாழ்ப்பாண பல்கலைக்கழக மலையக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மைக்கல் பெவன், கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் உப தலைவர் திருச்செல்வம் , மற்றும் மலையக மாணவர் ஒன்றியத்தின் உப தலைவர் லக்சரண், முகாமைத்துவ பீடம், விஞ்ஞான பீடம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துக்கொண்டு மலையக மக்களின் காணி உரிமை தொடர்பான கருத்துக்களை ஊடகங்களுக்கு முன்வைத்தனர்.

மலையக மக்களின் காணி உரிமை பிரச்சனை தொடர்பான  ஊடக அறிக்கையில்,  

மலையக மக்களின் அடிப்படை உரிமைகளில் காணி உரிமையும் முக்கியமான தொன்றாக இருக்கின்றது. நீண்ட காலமாகவே நிலத்திற்கான உரிமையற்ற ஒரு சமூகமாக மலையக மக்கள் இருப்பதோடு எங்கள் உறவுகளின் தலைமுறைக்கே நில உரிமை என்பது மறுக்கப்பட்ட இருளாகவே காணப்படுகின்றது.

அதற்கான வெளிச்சம் இதுவரையிலும் எட்டப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. மனிதர்கள் காலடி படாத காடுகளை அழித்து அதில் பெருந்தோட்டங்களை உருவாக்கி இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு உழைப்பை வழங்கிய மலையக மக்களின் விழித்தோன்றல்களுக்கு அடிப்படையான காணி உரிமை என்பது மறுக்கப்பட்ட ஒன்றாகவே காணப்படுகின்றது.

உண்மையிலேயே இது நீதியானதா? இதற்கான நீதியை நிலைநாட்ட அரசாங்கங்களும் பெருந்தோட்ட கம்பெனிகளும் அதற்கான முற்றுமுழுதான முனைப்போடு தொழிற்சங்கங்களும் முன்வருவதில்லை என்பது கேள்விக்குறிய விடயமாகும்.

மக்கள் அவர்களுக்கான காணி உரிமையை பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு போராட்டங்களை அன்று தொட்டு இன்று வரை மேற்கொண்டு தான் வருகிறார்கள். ஆனாலும் இன்று வரை தீர்வு காண முடியாத தன்மையே காணப்படுகின்றது. காணி உரிமைக்கான முதலாவது போராட்டம் 1946 ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி மலையக மக்களின் முதலாவது காணிக்கான போராட்டம்.

கேகாலையின் உருலவள்ளி பெருந்தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது. அப்பெருந்தோட்டத்தில் அம்மக்களின் 400 ஏக்கர் குடியிருப்பு நிலம் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமது காணிகளைப் பாதுகாக்க முன்னெடுக்கப்பட்ட போராட்டமாக அது அமைந்திருந்தது.

இலங்கைப் பெருந்தோட்டங்களில் உள்ள இந்திய வம்சாவளித் தொழிலாளர்களின் காணி உரிமைகளைக் கோரி இப்போராட்டத்தில் கேகாலை மற்றும் களனிப் பள்ளத்தாக்கு பிரதேசங்களைச் சேர்ந்த 125,000 த்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்றிருந்தனர்.

1972 ஆம் ஆண்டின் காணிச் சீர்திருத்தச் சட்டம் குடியேற்றங்கள் உருவாகவும் காணிக் கையகப்படுத்தல்கள் நிகழவும் வழிவகுத்தது. தொடர்ச்சியான காணிக் கையகப்படுத்தல்கள் போராட்டங்களுக்கு வழிவகுத்தன. டெவோன் தோட்டத்தின் 7,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு எதிராக மே 11, 1977 அன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது சிவானு லட்சுமணன் என்ற இளம் தோட்டத்தொழிலாளி பொலிசாரினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதன் விளைவாக பெருந்தோட்ட நிலங்களை பறிமுதல் செய்யும் திட்டம் கைவிடப்பட்டது. அதே போன்று, 2000 ஆம் ஆண்டில், மேல் கொத்மலை நீர் மின்சார திட்டத்துக்காக அப்பிரதேச மக்களை வெளியேற்றும் முன்னெடுப்பு தொடர்ச்சியான மக்கள் போராட்டம் காரணமாக கைவிடப்பட்டது.

2014 ஆம் ஆண்டு பதுளை மாவட்டத்தின் ஹபுத்தளை பிரதேசத்தில் மிரியாபேத்த பகுதியில் இடம்பெற்ற நிலச்சரிவு பேரழிவின் பின்னர், மலைநாட்டில் வாழும் மக்களுக்கு குடியிருப்புக்கு பொருத்தமான இடங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க கோரிக்கை நாட்டின் அனைத்து பாகங்களில் இருந்தும் முன்வைக்கப்பட்டது.

காணி உரிமைகள் மற்றும் ஏனைய உரிமைகளுக்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் மேற்கொண்ட தியாகங்கள் அளப்பெரியன. மலையக மக்களின் காணி உரிமைக்கான அங்கீகாரத்தை பாதுகாக்க பல ஆர்ப்பாட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதும், அவர்களின் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளதுடன் அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மீறல்கள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. எனவே, இந்தக் கோரிக்கை இலங்கையின் உரையாடலில் உள்ளடக்கப்படும் ஒரு தேவை தற்போது எழுந்துள்ளது.

மேலும் மலையக மக்களுக்கு பெருந்தோட்டக் காணிகளை வழங்குவதற்கு பெருந்தோட்டக் கம்பெனிகளுக்கும் அரச நிறுவனங்களுக்கும் இடையே காணப்படுகின்ற குத்தகை ஒப்பந்தம் காரணமாக காணி உரிமை மறுக்கப்பட்டு வருகின்றது.

அத்தோடு பெருந்தோட்ட கம்பெனிகளுடன் எவ்வித தொடர்புமற்ற காணி சீர்திருத்த ஆணைக்குழு (JEDB),(SLSPC),(TRI) ஆகிய அரச நிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்ட அமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ள பெருந்தோட்ட காணிகளை அவற்றில் வாழும் மலையக மக்களுக்கு குடியிருப்பு தேவைக்காக அனுமதிப்பத்திரம், அழைப்பு பத்திரம், அளிப்பு பத்திரம் அறுதியீட்டு உறுதி ஊடாக வழங்குவதற்கு இதுவரையில் எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்பதே உண்மையாகும்.

மலையக மக்களுக்கு குடியிருப்புக்காக காணி வழங்கப்படும் பொழுது மாத்திரம் மக்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட தேயிலைச் செடிகளுக்கும் ரப்பர் மரங்களுக்கும் அம்மக்களை விட அதிக மதிப்பு வழங்கப்பட்டு தேயிலைச் செடிகளையும் ரப்பர் மரங்களையும் காப்பாற்றுவதாக கூறி அவர்கள் தொடர்ந்து லயங்களிலே வாழவைக்கப்படுகின்றனர்.

மலையக சமூகங்களின் காணி உரிமைகளை உறுதி செய்வதற்காகவும் காணியற்றவர்களுக்காக காணிகளைக் கோருவதற்காக ஒத்த சிந்தனையுள்ளவர்களை ஒன்று திரட்டவும் ஒரு தேசிய தினமாக "காணி தினம்" இருக்கின்றது.

இதன் அடிப்படையில் நான்காவது காணி தினத்தினை நேற்று சனிக்கிழமை (21) அட்டன் நகரில் முன்னெடுப்பதற்கு "நிலமற்றோர்க்கு நிலம்" எனும் தொணிப்பொருளில் "மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம் ஏற்பாடுகளை செய்து வருவதாக அறியப்படுகிறது.

மலையக மக்களின் காணி பிரச்சினை இன்னும் ஒரு கொள்கை ரீதியில் தேசிய வேலைத் திட்டத்துடன் முன்னெடுக்கப்படாத நிலையில், தற்போது அதற்கான அழுத்தங்கள் பாரியளவில் எழுந்திருப்பது முக்கியமான விடயமாகும்.

நீண்ட காலமாக மக்களின் தேவையாகவும் மக்களின் நிலம் சார்ந்த இருப்பியலை தக்க வைத்து கொள்வதற்கு இவ்விடயத்தில் முன்னேடுப்புக்களை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இனிமேல் சிறிதும் பின் நிற்காது முற்றுமுழுதாக ஆதரவளிக்கும் என்று தெரிவித்துக்கொள்கின்றோம் என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/218116

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று நள்ளிரவில் வெளியிடப்படாது என்று கல்வி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது

3 months 2 weeks ago

Published By: VISHNU

22 JUN, 2025 | 12:22 AM

image

2024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படுவது தொடர்பாக கல்வி அமைச்சு சிறப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

2024 (2025) சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் 21ஆம் திகதி சனிக்கிழமை நள்ளிரவில் வெளியிடப்படும் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்புடைய தேர்வு முடிவுகள் இன்று நள்ளிரவில் வெளியிடப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று நள்ளிரவில் வெளியிடப்படாது என்றும், முடிவுகள் வெளியிடப்படும் என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் அனைத்து செய்திகளும் தவறானவை என்றும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/218089

2400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக்கோரிய தொடர் போராட்டம் முன்னெடுப்பு!

3 months 2 weeks ago

IMG-20250621-WA0011.jpg?resize=750%2C375

2400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக்கோரிய தொடர் போராட்டம் முன்னெடுப்பு!

வலிகாமம் வடக்கிலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக்கோரிய தொடர் போராட்டம் ஒன்று இன்றும்(21)  முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மயிலிட்டிச் சந்தியில் காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் பதாதைகளைத் தாங்கியவாறு, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகின்ற காணிகளை விடுவிக்க கோரிய அமைதிவழிப் போராட்டம் இடம்பெற்று வருகிறது.

மக்களின் விவசாய நிலங்கள், குடியிருப்பு நிலங்கள் மற்றும் தொழில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு காணிகள் யுத்தம் காரணமாக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து வருகிறது, ஆனால் யுத்தம் நிறைவிற்கு வந்த பின்னராக ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு ஆட்சியாளர்களும் மக்கள் காணிகளை படிப்படியாக  சிறிய சிறிய துண்டுகளாக விடுவித்தனர்.

இருப்பினும் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் சுயமாக தமது வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முடியாத நிலையில் 2400 ஏக்கர் காணிகளையும் முழுமையாக விடுவிப்பதே தமது வாழ்வியலை முன்னெடுக்க முடியும் என்ற நோக்கில் குறித்தபோராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

IMG-20250621-WA0007.jpg?resize=600%2C338

IMG-20250621-WA0006.jpg?resize=600%2C338

https://athavannews.com/2025/1436516

Checked
Sat, 10/11/2025 - 17:51
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr