தூக்கு மேடையில் தமிழ் அரசியல்! மன்னிப்புக் கோருவார்களா?
சிங்கள டயஸ்போரா Vs தமிழ் டயஸ்போரா
—————————————————————-
சிங்கள டயஸ்போராக்கள் எவ்வளவு துல்லியமாக புத்திசாதுரியமாக செயல்பட்டு தமக்கான ஊழலற்ற சிறந்த தலைமையொன்றை கட்டி அமைக்க வேண்டும் என்று சில வருடங்களாக செயல்பட்டு அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.
உண்மையில் அனுரவின் வெற்றிக்கு மிக காத்திரமான காய் நகர்த்தல்களை புரிந்தவர்கள் சிங்கள புலம்பெயர் மக்கள் என்றால் மிகையாகாது!
லண்டன் , கனடா , அமெரிக்கா, யப்பான் , ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் என சிங்கள டயஸ்போராக்கள் மிகச் சிறப்பாக செயற்பட்டு குறுகிய காலத்துக்குள் சிங்கள மக்களின் மனதில் அனுரவை இடம்பிடிக்க வைத்து இந்த அபார வெற்றியை எற்படுத்தியிருக்கிறார்கள்.
சிங்கள டயஸ்போராங்கள் தங்கள் தாய் மண்ணுக்கான நல்ல சிறந்த அரசியல் தலைவனை உருவாக்க வேண்டும் தம் தாய் நாடு வீறு கொண்டு முன்னேற வேண்டும் என்று இனவாதத்திற்கு அப்பால் போய் மிக நுண்ணரசியல் செய்து இன்று தமக்கான சிறந்த தலைவனை அரசியலை நிலைநிறுத்தி வெற்றி கண்டிருக்கிறார்கள். அவர்களின் ஒரே இலக்கு தம் நாட்டின் மீதான தேசத்தின் மீதான மக்கள் மீதான தீரா காதல்.
அத்தனை படித்தவர்கள், அரசியல் விற்பன்னர்கள், பொருளாதார நிபுணர்கள் , சாமானிய மக்கள் என புலம்பெயர் சிங்கள டயஸ்போராக்கள் ஒரே புள்ளியில் குவிந்து நின்று செயல்பட்டார்கள், அதன் விளைவுவாக வெற்றியை பெற்றார்கள்.
கம்னியூச கொள்கைகளில் பின் புதைந்துள்ள JVP யிலிருந்து இரு தலைவன் மேலெழுந்து விட கூடாது என பிராந்திய வல்லரசு தொடக்கம் அமெரிக்கா ஐரோப்பா என்பன இவ்வளவு காலமும் விழிப்பாக இலங்கையில் செயல்பட்டுகொண்டிருந்தன. அலகரய போராட்டத்தில் அனுரவின் எழுச்சியின் அபரிவிததன்மையை உணர்த அமெரிக்க தூதுவர் அப்போது அனுரவை அடிக்கடி சந்தித்துப் பேசியுமிருக்கிறார்.
ஏன் அனுரவுக்கான மக்கள் எழுச்சியினை முன்னரே தீர்மானித்திருந்த இந்தியா என்றுமில்லாதவாறு ஜெய்சங்கரை அனுப்பி பல மாதகங்களுக்கு முன் சந்திப்புக்களை செய்திருந்தது . ஆனாலும் அனுரவின் அசுர வளர்ச்சி இந்தியா அமெரிக்காவுக்கு கண்ணுள் தூசி விழுந்தால் போல் உருத்தல் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது! ஏனெனில் இப்போதுள்ள பேஉம் போட்டி நிலை பூகோள வல்லாதிக்க அரசியல் களத்தில் இலங்கை மீளவும் கம்னீசிய கொள்கை கொண்ட சீன வல்லாதிக்கம் பக்கம் சாய்ந்தால் அதுவும் கம்னீசிய கொள்கையுடனான ஆயுத போராட்ட வழி வந்த அரசு ஒன்று சீன கம்னீச பேரரசு பக்கம் சற்று சாய்ந்தால் கூட மற்றைய வல்லாதிக்கங்களுக்கு பேஉம் குடைசலாகவே இருக்கும்!அதற்கும் அவர்கள் மீண்டும் பெரும் விலையொன்றை கொடுக்க வேண்டி வரும்.
அனுரவின் வெற்றியை தடுக்க பல முனை முனைப்புக்களையும் முயற்சிகளையும் அந்த வல்லாதிக்க சக்திகள் மேற்கொள்ளவும் தவறவில்லை.
உதாரணமாக நாட்டிலும் புலத்திலும் சிங்கள மக்கள் மத்தியில் அனுர அலை அடிக்க தொடங்கியவுடன் அரசியல் ஆய்வு புள்ளிவிபரங்களின் படி வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பெருவாரி வாக்குகள் அனுர பக்கம் சாயமல் பார்த்துக்கொள்ளவும் அந்த வல்லாதிக்கங்கள் நிகழ்சி நிரல்களை வரையவும் தவறவில்லை.
அதற்காக பல தந்திரோபாய சுய வேட்பாளர் நிறுத்தல்கள் மற்றும் இதர நிகழ்வுளும் நிகழ்ந்தேறின!!
இதெல்லாம் அனுர தரப்புக்குக்கும் தெரியாமலில்லை அதன் தாக்கம் தான் அவர் யாழ்பாணத்தில் நிகழ்த்திய கூட்டத்தில் " சிங்கள மக்கள் பெருவாரியாக தனக்கு ஆதரவை தரும் இச் சந்தர்பத்தில் தமிழர்களும் ஆதரவை நல்காது போனால் சரியாக இராது" என சாரப்பட கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் அக்கருத்தின் நீள , அகல, ஆழம் அறியாதோர் அதை அவரின் இனவாத கருத்தாடலாக சித்தரித்தனர்.
இவ்வளவு நிகழ்வுகள் மறைமுக நிகழ்சி நிரல்களுக்கு மத்தியிலும் சிங்கள டயஸ்போராக்கள் அத்தனை வல்லாதிக்க இராஜதந்திரத்துக்கு மேலாக பல படி மேல் போய் ஒற்றுமையாக காய்நகர்த்தி இராஜதந்திர வெற்றியடைந்திருக்கிறார்கள். தமக்கான தூய தலைவனை தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள்.
ஆனால் நம் புலம்பெயர் தமிழ் டயஸ்போராக்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் அவர்களின் அரசியல் நிலைபாடு என்ன ? அவர்கள் இதுவரை தமிழ் மக்களுக்காக சாதித்ததும் என்ன?
குறுகிய காலத்துக்குள் சிங்கள டயஸ்போராக்கள் கண்ட வெற்றியை பல தசாப்தகாலமாக புலம்பெயர் நாடுகளில் இலங்கை எம்பசிகளின் எண்ணிக்கைக்கு அதிகமாக செயல்படும் தமிழ் டயஸ்போராக்களினால் இவ்வளவு காலமும் தமிழினத்துக்காக நிகழ்த்தப்பட்ட சாதனை என்ன?
புலம்பெயர் தேசங்களில் போட்டிக்கு போட்டியாக பல அமைப்புக்களை தொடங்குவதும் தங்களுக்குள் புடுங்கு பட்டுகொள்வதும் ஈழத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் இன்னும் பல படி போய் ஒரு கட்சியின் பல உறுப்பினர்களை பிரித்தாள நிதி அனுப்பி செயல்பட்டு கொண்டிருகிறார்கள்.
இந்த தமிழ் டயஸ்போராக்களினான் ஈழத்தில் ஏறபடுத்தப்பட அரசியல் முயற்சி என்ன? பொருளாதார முயற்சி என்ன ? என்பதை யாரும் பட்டியல்படுத்த முடியுமா?
அதிலும் பல அமைப்புக்கள் திரைமறைவில் சிங்கள புலனாய்வாளர்களோடு இயங்கிகொண்டு பேருக்கு தமிழ் டயஸ்போரா என இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். போராட்டம் நிறைவடைது ஒன்றரை தசாப்தங்களை எட்டியுள்ள நிலையில் ஒரு இனத்துக்கான நீடித்த நிலைத்த அரசியலை கட்டமைக்க இயலவில்லை! ஒரு தலைவனை இனம் காண முடியவில்லை!
இவர்களால் இதுவரை சாதித்தவை இன்றுமே இல்லை!
ஈழ போராட்டத்தின் அவலங்களுக்கு மேல் நின்று காசு பறித்ததை தவிர...
ஆனால் சிங்கள டயஸ்போராக்கள் சொற்ப காலத்தில் சிறு விதையாய் இருந்த ஒரு கட்சியை ஆலமரமாக்கியிருக்கிறார்கள்!
JVP கூட்டத்தின் பேச்சை கேட்க வேண்டுமென்றால் கூட்டம் திரளும் ஆனால் வாக்கு திரளாது என்ற கருத்தியலை இரு வருடங்களுக்குள் ஒழித்துகட்டி 3% வாக்கு வங்கியை 60% மாக்கி அபரிவித அதிசயத்தை நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள்.
தன் தேசத்துக்காக தன் இன மக்களின் விடிவுக்காக, தன் இனத்துக்கான தூய அரசியலுக்காக அனைத்து சிங்கள டயஸ்போராக்களும் ஒரு நேர்கோட்டில் நின்று அத்தனை வல்லாதிக்க சக்திகளின் இராஜதந்திர நகர்வுகளையும் முறியடித்து வெற்றி கண்டிருக்கிறார்கள்.
ஆனால் பல தசாப்தங்களாக சிங்கள மக்களை விட அதிக சனத்தொகையினை புலம்பெயர் நாடுகளில் கொண்ட எம் தமிழ் டயஸ்போராக்கள் எம் இனத்துக்கான தலைவனை அல்லது சரியான தூய அரசியல் பொருளாதார கொள்கைகளை இதுவரை கட்டியமைக்காமை தமிழினத்துக்கான சாபக்கேடு!!
ஈழ நிலத்திலும் சரி புலத்திலும் சரி தமிழன் தன் நிலைபாடுகளில் ஒரு சேர மாற்றம் உண்டாகாதவரை உணர்ச்சிவசப்பட்ட உப்பு சப்பில்லாத , எதற்குமே உதவாத எதிர்கால சந்ததிக்கு உகந்தல்லாத இந்த வீணாய்போண இழிநிலை அரசியல் தான் தொடர்சியாக மிஞ்சும்!
அவர்கள் இனத்துக்கான அரசியலை முன்னெடுக்கிறார்கள் ஆனால் நாங்கள் தனி மனித அரசியலை முன்னெடுக்கின்றோம்.
நாம் சிங்கள மக்களிடம் படிக்க நிறையவே உண்டு!
நன்றி
மதுசுதன்
23.09.2024
WhatsApp பகிர்வு
இந்தப் புகைப்படம் ஒரு ஸ்பெஷல். JVP இன் ஆரம்பம், அதன் தலைவர் பொரளை மயானத்தில் வைத்து இராணுவத்தால் பின்தலையில் சுட்டுக் கொல்லப்பட்டமை, அந்த இயக்கம் மீதான அரச இராணுவ இயந்திரத்தின் தேடலும் அழிப்பும், அதனாலான அந்தப் போராளிகளின் மறைவு வாழ்க்கை என்று அந்தப் போராட்ட இயக்கம் மீதான தடை நீக்கப்படும் வரையான வரலாற்றைப் படித்தவர்களுக்கு, இந்தப் புகைப்படம் ஏன் ஸ்பெஷல் என்று புரியும்.
போராளிகளைத் தேடித்தேடி அழித்த ஒரு சீருடை இயந்திரம், அதே போராளி ஒருவரின் முன்னால் பவ்வியமாக தங்கள் கட்டளைக்காகக் காத்திருக்கிறது. காலம்தான் எவ்வளவு வலியது பாருங்கள்!
வேட்கை நிறைந்த போராளிகள் ஆளும் தேசம் நேர்மையானது என்பார்கள். தமிழர்களுக்கு அது புரியும்.
காலம் எப்போதும் மாறலாம். கனவு எப்போதும் திரும்பலாம். மாற்றம் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். அதிசயம் சொல்லாமல் கொள்ளாமல் நம் வானத்தில் உதிக்கலாம். இதற்கு அநுரவே பெரும் சாட்சி.
அவர்கள் அவர்களின் இனதிற்கு உரிய அரசாங்கத்திற்கு எதிராக போராடியவர்கள், மேலும் அவர்கள் இப்போது ஜனநாயகப்படுத்தப் பட்டு விடடார்கள் ஆனால் இங்கு கதை வேறு. விமர்சனம் வைத்தாலே உள்பேட்டியில் கொலை மிரட்டல், விடுதலை போராட்டத்தின் சரி பிழைகளை கலந்துரையாடி தற்கால சூழலுக்கு ஏற்றது போல நவீனப் படுத்தப்பட வேண்டும், ஏனெனில் தமிழர் யுத்தம் செய்தது வேறு இனத்துடன் அவர்கள் யுத்தம் செய்தது தம்மினத்துடன்,, இல்லாவிட்டால் இறுதிவரை சுயபெருமை பேசிக்கொண்டும் புகழ் பாடிக்கொண்டும் இருக்க வேண்டியதுதான் ,,
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது இன்றைய பத்திரிகை சந்திப்பு
ஒரு தம்பதிக்கு மூன்று மகள்கள்.
மூவருக்கும்
திருமணம் ஆகிவிட்டது. மருமகன்களின் அன்பை
பரிசோதிக்க மாமியார்
விரும்பினார்.
அதற்காக ஒரு நாடகத்தை நடத்த எண்ணி
முதலாவது மகள் மற்றும் மருமகனுடன்
ஒரு ஏரியில் படகு சவாரி
செய்தார்.
தான் திட்டமிட்டபடி ஏரியில் விழுந்து உயிருக்கு போராடுவதாய் நடித்தார்.
இதையறியா மருமகன் உடனே தண்ணீரில் குதித்து மாமியாரைக் காப்பாற்றினார்.
அடுத்த நாள் காலை படுக்கையை விட்டு வெளியே வந்த மருமகன் வாசலில் ஒரு புத்தம் புதிய மாருதி desire கார் இருப்பதைக் கண்டார்.
அருகில் சென்று பார்த்தார். அதில் மாமியாரின் அன்புப் பரிசு என்று இருந்தது.
இதே போல் இரண்டாவது மருமகனையும் சோதித்தார்.
அவரும் முதல் மருமகனைப் போலவே
செய்ததால் அவருக்கும் ஒரு மாருதி desire கார் பரிசாக வழங்கினார்.
முன்றாவது மருமனுக்கும் இதே சோதனை.
திட்டமிட்டபடி தண்ணீரில் விழுந்து தவித்தார். மாப்பிள்ளை கண்டுகொள்ளவேயில்லை.
மாமியார் கெஞ்சினார்.
ம் ஹும்.
பார்க்காதது போல் இருந்தார்.
மாப்பிள்ளை காப்பாற்றுங்கள்.. இன்னோவா கார் வாங்கித் தருகிறேன் என்று சொன்னார்.
காரும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்..
பொண்ண வளக்க சொன்னா பேயை வளர்த்திருக்கிற... சாகுன்னு சொல்லிட்டு திரும்பிப் பார்க்காமல் வீட்டுக்கு வந்துவிட்டார்.
மாமியார் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார்.
அடுத்த நாள் காலை படுக்கையை விட்டு வெளியே வந்து பார்த்தால்....
ஒரு புத்தம் புதிய BMW கார் வாசலில் நின்றது.
அருகில் சென்று பார்த்தால்.. .............
மாமனாரின் அன்புப் பரிசு என்றவாசகம் காரில் தொங்கியது. 😂
Published By: DIGITAL DESK 2
17 SEP, 2024 | 03:49 PMஉலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் இன்று செவ்வாய்கிழமை (17) அனுசரிக்கப்படுகிறது.
'நோயாளிகளின் பாதுகாப்பிற்காக நோயறிதலை மேம்படுத்துதல்' என்பது இந்த ஆண்டுக்கான தொனிப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நோயாளிகள், குடும்பங்கள், பராமரிப்பாளர்கள், சமூகங்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்புத் தலைவர்கள் ஆகியோர் நோயாளிகளின் பாதுகாப்பில் தங்களது அர்ப்பணிப்பைக் காட்ட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இந்த தினம் நியமிக்கப்பட்டுள்ளது.
ஏறேறு சங்கிலி
“என்னவாம்” எண்டு மனிசி கேக்க “இல்லை, மூத்தவளுக்கு நாள் வைச்சிருக்காம் எல்லாரையும் கட்டாயம் வரட்டாம் எண்டு சொல்லக் கந்தன் வந்தவன் , உன்னைக் கேட்டவன் நான் தான் நீ வேலையா இருக்கிறாய் எண்டு சொன்னான்”எண்டு சொல்லி முடிக்க முதல் , “நான் அப்பவும் சொன்னான் எங்கடை மூத்தவனுக்கு கேளுங்கோ எண்டு , நீங்க வாய் பாக்க எவனோ ஒருத்தன் தூக்கீட்டான்” எண்டு என்டை இயலாமையை மனிசி சுட்டிக்காட்ட அதைக்கவனிக்காம சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளிக்கிட்டன்.
அடுத்த கிழமை மூண்டு நாள் கொண்டாட்டத்தோடு கலியாணம் சிறப்பா நடந்து முடிஞ்சுது. கட்டி முடிச்சு மூண்டு மாசத்தில முழுகாம மகள் இருக்கிறா எண்டு கந்தன் சொல்ல வீட்டில இருந்து கோழிமுட்டை கொண்டேக் குடுக்கப் போனன். போனால் கந்தன்டை மருமோன் “வாங்கோ” எண்டு சொல்லீட்டு விடியவே சீவல் வேலைக்கு வெளிக்கிட்டுப் போனான்.
திருப்பி வீட்டை வந்து மனிசிக்கு விசயம் சொல்ல “உவன் நடுவிலான் படிப்பும் இல்லை சும்மா பந்தடிச்சுக் கொண்டு திரியிறான், அவனுக்கு தொழிலைப் பழக்குங்கோ உங்களுக்கும் அடிக்கடி நாரிப் பிடிப்பு வரூது” எண்டு சொன்னதைக் கேட்டு அவனைக் கூட்டிக் கொண்டு போனன்.
எப்பிடியும் கள்ளமா எங்கயாவது ஏறி இருப்பான் எண்டு தெரிஞ்சாலும் தெரியாதது மாதிரி “ ஏறத் தெரியுமோ “ எண்டு கேக்க, “அப்பப்ப இளநி புடுங்க தென்னை ஏறினான் இதுகும் ஏறுவன்” எண்டான் நடுவிலான். “பனை அப்பிடி இல்லை இது பாத்து ஏறோனும்” எண்டு சொன்னதைக் கேக்காமல் எல்லாம் தெரியும் எண்ட மாதிரி அந்தரப்பட்டவனை சரி ஏறிப்பட்டாத்தான் தெரியும் எண்டு போட்டு ஏறி ஓலையை வெட்டு எண்டு விட்டன். சடசடவெண்டு முதல் பத்தடி ஏறினவன் பிறகு அப்பிடியே இறங்கீட்டான் . இறங்கினவன் தோல்வியை ஒத்துக்கொள்ளாமல் கிட்ட வந்தான்.
ஏறிறது எண்டால் சும்மா இல்லை. ஏற முதல் இறுக்கமா கச்சையைக்கட்டி, இருந்தால் shorts ஐப்போட்டிட்டு சாரத்தை மடிச்சுக் கொடுக்குக் கட்டு கட்டோணும். உனக்கெண்டு சாமாங்கள் எல்லாம் வேணும். ஏறு பட்டி பழசு தான் வெட்டாது அதோட அடிக்கால் சிராய்ப்பு வராது, எண்டாலும் இழுத்துப் பாத்திட்டு அளவு சரி எண்டாத்தான் காலில போடோணும். தளைநாரைப் பாத்து அம்மாட்டைக் கேட்டுப் பின்னி எடுத்து வை. தொழில் இல்லாட்டியும் பாளைக் கத்தியை ஒவ்வொருநாளும் தீட்டி வைக்கோணும், தொழிலுக்கு கொண்டு போறதை வேற ஒண்டுக்கும் பாவிக்கப்படாது, பழைய கருங்காலித் தட்டுப்பொல்லு ஒண்டிருக்கு பாளையைத்தட்டக் கட்டாயம் தேவை. சுத்திச் சுத்தி தட்டோணும், அப்ப தான் நுனி நசிஞ்சு நல்லா கள்ளு வடியும் எண்டு முறை ஒவ்வொண்டாச் சொல்லத் தொடங்கினன்.
ஏற முதல் மனசுக்கு அம்மனைக் கும்பிட்டிட்டி ஏறோணும். “ஏறு பட்டி வெட்டுதா எண்டு பாத்து , இடுப்புப்பட்டியை இறுக்கிக் கொண்டு பறீக்க சாமான் எல்லாம் இருக்கா எண்டு பாத்து, ஏறேக்க பறிக்கால கீழ விழாம சரியா வைச்சிட்டுத்தான் ஏறத்தொடங்கோணும். பிரதட்டைக்குக் கால் ரெண்டையும் சேத்துக் கீழ்க்கட்டு கட்டிற மாதிரித் தான் கால்ரெண்டையும் சேத்தபடி தளைநாரைப் போடோணும். கட்டிப்பிடிச்சு ரெண்டடி ஏறீட்டுப் கொடுக்கு மாதிரி ரெண்டு காலாலேம் மரத்தைப் பிடிச்சிட்டுக் கையை உயத்தி மரத்தைச் சுத்திப் பிடிச்சபடி உடம்பை நிமித்தி எழும்ப வேணும். எழும்பீட்டு திருப்பியும் காலால மரத்தை கொடுக்குப்பிடி பிடிச்சபடி கையை இன்னும் மேல எடுத்து பிறகு மரத்தைக் ஒரு கையால கட்டிப் பிடிச்சபடி balance பண்ணிக்கொண்டு மற்றக்கையை மரத்தோட கவிட்டுப்பிடிச்சு கையைக்குத்தி கால் ரெண்டையும் சேத்தபடியே எடுத்து மேல எடுத்து வைக்க வேணும் . அப்பிடிக் காலை உயத்தேக்க உடம்பு மரத்தோட சாயாம சரிவாத்தான் இருக்கோணும் இல்லாட்டி காலை உயத்திறது கஸ்டம் . மரத்தைக் கட்டிப்பிடிச்சுக் கொண்டு மரத்தோட சேத்துக் காலை இழுத்தாக் கை கால் நெஞ்செல்லாம் சிராயப்புத் தான் வரும்” எண்டு சொல்லப் பேசாம கேட்டுக் கொண்டு நிண்டான் இந்த முறை சரியாப் பழகோணும் எண்ட விருப்பத்தோட.
முதலில வெறும் ஏத்தம் இறக்கம் தான் பயிற்சி. ஓலை வெட்டி, நொங்கு புடுங்கி , சீவின பாளையில பானை மாத்தி இறக்கப் பழகி கடைசீல தான் சீவத் தொடங்கிறது. பிளேன் ஓடிற மாதிரித்தான் இதுகும் ஏற முதலே check list மாதிரி எல்லாம் இருக்கா எண்டு விபரமாய்ப் பாக்கோணும், ஏறீட்டு முட்டீல ஓட்டை, கத்தி மொட்டை எண்டு சொல்லக்கூடாது. “தொடக்கத்தில ஏறினாப்பிறகு பாளை வெட்டி முட்டி கட்டேக்க இடுப்புக்கயித்தைப் போட்டுக் கொண்டு நிக்கோணும், போகப்போக மட்டைக்குள்ள ஏறி நிண்டு வெட்டிலாம்”, எண்டு திருப்பித்தருப்பிச் சொல்லிக் குடுக்க இதிலேம் இவ்வளவு விசயம் இருக்கிறது அவனுக்கு விளங்கத் தொடங்கினது .
“அதோட ஏறேக்க நேராப் பாக்கோணும் இல்லாட்டிப் பக்கத்து மரத்தைப் பாக்கலாம். மேல போகேக்க மேகத்தைப் பாத்தாலோ இல்லாட்டி இறங்கேக்க நிலத்தைப் பாத்தாலா சரி தலைசுத்தத் தொடங்கப் பயம் வந்திடும். ஆனால் கொஞ்ச நாளில பழகினாப் பிறகு ஏறி நிண்டபடி கீழ என்ன நடக்குது எண்டு பாக்க நல்லா இருக்கும் எண்டு சொன்னன். காத்துக்க ஏறி இறங்கேக்க பனைசாயிறதுக்கு எதிர்ப் பக்கமா ஏறு மற்றப்பக்கம் நிண்டா மரம் முறிஞ்சு விழப்போற மாதிரி இருக்கும். ஒரு நாளும் பனை ஆக்கள் ஏறேக்க விழாது. ஆளைத் தாங்கிற சத்தில்லாட்டி பனை சோடைபத்தீடும். முதலில ஓலை விழுந்து, நுனி பட்டு பிறகு தான் அடி பழுதாப் போகும் ஆனபடியா நுனி பழுதாப்போன மரங்களில ஏறிரேல்லை.
அதோட ஒருநாளும் விக்கிற சாமானை வாயில வைச்சுப் பாக்காத. மரம் ஒருக்காலும் கலப்படம் செய்யாது. அது தன்டை சாறைத்தான் தாறது. சாறு கெட்டதில்லை, இனிப்பும் புளிப்பும் தண்ணிக்கு, மண்ணுக்கு, மழைக்கு எண்டு மாறும்” எண்டு கள்ளுபதேசம் செய்யக் கேட்டுக் கொண்டிருந்தான்.
ஒலை வெட்டக்கேட்டா கவனம் ஒண்டைவிட்டொரு வருசம் தான் வெட்டிறது, காண்டாவனம் நடக்கேக்க வெட்டிறேல்லை. அப்பிடி ரெண்டு வருசம் வெட்டாத மரம் எண்டால் கவனம் காவோலை வெட்டேக்க குளவி இருக்கும் எண்டு அனுபவத்தை அப்பா சொல்லக் கவனாமாக் கேட்டான் சின்னவன்.
மூண்டு மாசம் அப்பரோட போனவன் , தனக்கெண்டு மூண்டு மரம் தேடிப்பிடிச்சு தனிச்சுத் தொழில் தொடங்கினான்.
காலமைத் தொழிலுக்கு நாலு நாலரைக்குப் போறாக்களும் இருக்கினம். இரவல் காணீல பேசிக் காசு குடுத்து ஏறிப் பாளை வெட்டி நுனி கொத்தி , முட்டி கட்டி இறக்கி , எல்லா மரத்தையும் ஒரு can இல ஊத்திக் முழுசா நிரப்பிக் கொண்டு போக வழி மறிச்சுக் கேட்டவனுக்கும் முட்டீல இருக்கிறதை குடுத்திட்டு மிச்சத்தை தவறணைக்கு கொண்டு போக , அவன் சும்மா விலையைக் குறைக்க “ என்ன நேற்றைக்கு கொஞ்சம் புளிச்சிட்டு” எண்டிற புளிச்சல் கதையையும் கேட்டிட்டு , திருப்பி வந்து மனிசி விடிய கட்டித் தந்ததை விழுங்கீட்டு திருப்பி அடுத்த வளவுக்க ஏறி இறக்க பத்து மணி ஆகீடும். வெய்யில் ஏறக் கள்ளுப் புளிச்சிடும் எண்டதால மத்தியானக் கள்ளை ஆரும் கிட்ட இருக்கிற ஆக்களுக்கு வீடு வளிய போய்க்குடுத்தா கொஞ்சம் கூடக்கூறையத் தாறதோட வெறுந்தேத்தண்ணியும் கிடைக்கும். போய்ச் சாப்பிட்டிட்டுப் படுத்தாஅடுத்த இறக்கம் பின்னேரம் நாலு மணிக்குத்தான்.
“என்ன மாமா வெளீல இருந்து வந்திருக்கிறார் போல, எங்களுக்கு ஏதும் போத்திலைக் கீத்திலைக் கொண்டந்தவரே” எண்டு கேட்ட படி வாறவருக்கு ஓம் ஒரு party ஐப் போடுவம் ஆனால் , “ அவருக்கு நல்ல கூழ்வேணுமாம் அதோடரெண்டு கிடாய்ப் பங்கும் வேணுமாம், பங்கு போட்டிட்டு ரத்தவறை வறுத்து முடிய உடன் கள்ளும் வேணுமாம்” எண்ட சம்பாசணை எல்லா வீட்டையும் கேட்டிருக்கும் .
இக்கரைக்கு அக்கரைப் பச்சையாய் எங்கடை சனத்துக்கு அவை கொண்டாற போத்தில தான் நாட்டம் இருக்கும் , ஆனா அவை குடிச்சா ஒரு பனைக்கள்ளுத் தான் குடிப்பன் எண்டு தேடிக் குடிப்பினம். அவையோட ஊருக்குப் புதுசா வாறதுகள் இறக்கிறவனை ஏறவிட்டு நிமிந்து பாத்துப் வீடியோ எடுத்து ஊரெல்லாம் “எங்கள்” புகழைப் பரப்ப வெளிக்கிடுவினம் .
வந்தவை இறக்கினதை குனிஞ்ச படி குடிச்சிட்டு “எண்டாலும் பழைய taste இல்லை” எண்டு ஒரு கதை விட்டு ஆனாலும் அடி மண்டி வரை குடிப்பினம். இறக்கினதை மட்டும் பாக்கிறவைக்கு ஒருநாளும் இறக்கிறவனைத் தெரியாது . நெஞ்சு மடிப்போட சேத்தா 8 packs பனங்கட்டி நிறத் தேகம், பிறப்புக்கு முதலே எழுதப்பட்ட விதியால் பிரியோசனமில்லாமல் போய் ஏறிஏறியே அழிக்கப்பட்ட கைரேகை,
காலமை குளிச்சாப்பிறகு உடம்பைத் துடைச்சிட்டுத் தலையில கட்டின துவாயத்துண்டு, எப்பவுமே மடிச்சுக்கட்டின சாரம், இடுப்பில கட்டின சாரத்தை இறுக்கிக் கொண்டிருந்த இடுப்புப் பட்டியில இயனக்கூடு, சைடில தொங்கிற தளைநார், அதோட சேந்த முட்டி , சாரத்துக்க செருகின பாளைக்கத்தி, tyre less ரியூப் மாதிரி இருக்கிற வழுவழுப்பான tyreஓட முன்னுக்கும் பின்னுக்கும் பழைய can தொங்கவிட்ட கறள் கட்டின சைக்கிளில வாறவனின்டை கள்ளு மட்டும் எங்களுக்கு இனிக்கும், ஆனாலும் இன்னும் இறக்கிறவனை மட்டும் ஏனோ இனிக்கேல்லை இன்றைக்கும்.
Dr. T. கோபிசங்கர்
யாழப்பாணம்.
ஒரு கிராமத்தில் கந்தசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்..
அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது .
வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை
நடந்து சென்றே... ரெகுலராக ஒரு மளிகைக் கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம் !!
முருங்கை காயை கொடுத்து விட்டு அதற்கு பதிலாக அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார் !!
கந்தசாமி கொண்டு வரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம் !!
இதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை கடைக்காரரும் நல்ல லாபம் சம்பாதித்து விடுவார் !!
பல வருடமாக கந்தசாமி முருங்கைக்காய் கொண்டு வருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை !!
கந்தசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார் !!
காரணம் கந்தசாமி யின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது!
ஒரு நாள் கந்தசாமி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச்சென்றார்....
சிறிது நேரத்தில்....
பத்து கிலோ முருங்கைக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க...அவருக்காக மளிகைக்காரர் ... எடைபோட... அதில் ஒன்பது கிலோ
மட்டுமே இருந்தது !!
அன்று முழுவதும் மளிகைகாரருக்கு தூக்கமே வரவில்லை! கந்தசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம், இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டாரே !!
இத்தனை வருடங்களுக்காக இப்படி முட்டாள் தனமாக எடை குறைவான முருங்கைக்காயை வாங்கி ஏமாந்து விட்டோமே !!
அடுத்த முறை கந்தசாமி வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார் !!
நான்கு நாட்கள் கழித்து கந்தசாமி மிகவும் சந்தோஷமாக வந்தார் !!
நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தார் !!
‘கையும் களவுமாக பிடிக்கவேண்டும் என்று, எத்தனை கிலோ என்று மளிகைக்காரர் கேட்க ஒரு கட்டு பத்து கிலோ என்றார் கந்தசாமி ...
அவர் முன்னாலேயே எடைபோட்டு பார்க்க ஒவ்வொரு கட்டிலும் ஒன்பது கிலோ தான் இருந்தது .
வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார்,பளார் என கந்தசாமியின் கன்னத்தில் அறைந்தார் !!
‘இத்தனை வருஷமா இப்படித் தான் ஏமாத்திட்டு இருக்கியா? கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பி தானே எடை போடாம அப்படியே வாங்கினேன், இப்படி துரோகம் பண்ணிட்டியே சீய்...’ என துப்ப, நிலைகுலைந்து போனார் கந்தசாமி .
அய்யா...என்ன மன்னிச்சிடுங்க நான் ரொம்ப ஏழை, எடைக்கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு இல்லீங்க...
ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக்காயையும் வச்சி தான் எடைபோட்டு கொண்டு வருவேன்.
‘இதை தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலை பிடித்து அழ, .
மளிகைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது.....
தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார் !!
இத்தனை வருடங்களாக கந்தசாமி யை ஏமாற்ற நினைத்த மளிகைக்காரரும்...
அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டு தான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது !!
இது தான் உலகநியதி !!
நாம் எதைத் தருகிறோமோ
அதுதான் நமக்குத் திரும்ப வரும் ....
நல்லதை தந்தால் நல்லது வரும்,...
தீமையை தந்தால் தீமை வரும் !!
வருகின்ற காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம் ,
ஆனா....
நிச்சயம் வரும் !!
ஆகவே நல்லதை மட்டுமே தருவோம், நல்லதை மட்டுமே விதைப்போம் !!
மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். இதனை எப்போதும் நினைவில் கொள்ளுதல் வேண்டும்.
மனைவி; "என்னங்க உங்கம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்க்கப் போனீங்களே என்னாச்சு?"
கணவன்;"அதெல்லாம் சேர்த்தாச்சு"
ம;"எங்கம்மா சொன்னது சரிதாங்க"
க;"என்னா சொன்னாங்க"
ம; "நீங்க தங்கமானவங்கலாம். ஆம்பளனா உங்கள போலதான் இருக்கனும்பாங்க"?
க; "ஏனாம்?
ம;"மனைவி சொல்ல தட்டாம கேட்கிறீங்கனுதா."
க;" சொல்ல மறந்துட்டேன்.வயசான காலத்தில் பேச்சுத் துணைக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லாமல் அம்மா எப்படி இருப்பாங்கனு யோசனையா இருந்தேன்"
ம; "பேச்சு துணைக்கு ஆள் கிடைச்சுட்டாங்களா?"
க; "கிடைச்சுட்டாங்க"
ம; "அப்படியா யாரு?"
க;"உங்கம்மா.இப்பத்தான் உன் அண்ணன் வந்து உங்கம்மாவை சேர்த்துட்டு போனான்"
ம;"என்னது?பொண்டாட்டி பேச்சை கேட்டு பெத்த அம்மாவை அனாதை ஆஸ்ரமத்தில் சேர்க்கிறவன் எல்லாம் ஒரு ஆம்பளயா?"
உங்கம்மானா அம்மா! எங்கம்மானா சும்மாவா?
25 வருடங்களுக்கு மேல் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகளில் சிறந்த தம்பதியை தேர்ந்தெடுத்து ஒரு கார் பரிசு வழங்குவது என்று ஒரு நிறுவனம் முடிவு செய்து விளம்பரம் செய்தது.
நூற்றுக்கணக்கான தம்பதிகள் கலந்து கொண்டார்கள்.
அதில் ஒரு தம்பதியினரில்...
மனைவி ''அப்படி என்னத்த பெருசா வாழ்ந்து கிழிச்சிட்டோம்னு சொல்ல சொல்ல கேக்காம இந்த போட்டிக்கு கூட்டிட்டு வர்றீங்க '' என்ற படி சண்டையிட்டு கொண்டே உள்ளே வந்தார்.
கொஞ்ச நேரத்தில் போட்டி தொடங்கியது கணவன் மனைவியை தனித்தனியாக அழைத்து நிறைய கேள்விகள் கேட்டார்கள் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் ஓரளவுக்கு சரியான பதிலை சொன்னார்கள்
அதில் ஒரு தம்பதி சொன்ன பதில்கள் அரங்கத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது யாரிடமும் இல்லாத அளவிற்கு அவர்களிடத்தில் அவ்வளவு ஒற்றுமையும் பரஸ்பர புரிதலும், விட்டு கொடுத்தலும் நிறைந்திருந்தது.
அவர்களுக்கு கிடைத்த மதிப்பெண் 100/100 எல்லோருக்குமே தெரிந்து விட்டது அவர்கள் தான் ஜெயிக்கப் போகிறார்கள் என்று.
எல்லோரிடமும் கேள்வி கேட்டு முடித்த பின் நூறு மதிப்பெண்கள் வாங்கிய அந்த சிறந்த தம்பதியையும்
மிகக் குறைவாக பூஜ்ஜியம் மதிப்பெண் வாங்கிய ஒரு தம்பதியையும் மேடைக்கு அழைத்தார்கள்.
பூஜ்ஜியம் வாங்கியது வேறு யாரும் இல்லை வரும் போதே சண்டை போட்டுக் கொண்டு வந்தார்களே அவர்கள் தான்.
இரண்டு தம்பதிகளும் மேடைக்கு வந்தார்கள்
ஜீரோ மதிப்பெண் பெற்ற தம்பதியை அழைத்து காதல் திருமணமா என்று கேட்க இல்லை பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றார்கள்.
எத்தனை குழந்தைகள் என்றதற்கு நான்கு என்றார்கள் திருமணம் ஆகி எவ்வளவு வருடங்கள் ஆகிறது என்றதற்கு
35 வருடங்கள் என்று சொல்ல எல்லோரும் சிரித்து விட்டார்கள்.
35 வருடங்களாகியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவில்லை என்று ஏளனமாய் கேலி பேசினார்கள் அவமானம் தாங்கமுடியாமல் அவர்களுக்கு அழுகை வர கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டார்கள்.
ஆனால் போட்டியின் நடுவர் இந்த போட்டியில் கலந்துகொண்ட 500 தம்பதிகளில் மிகச்சிறந்த தம்பதி இவர்கள் தான் என்று அறிவித்து ஜீரோ மார்க் வாங்கிய தம்பதிக்கு காரை பரிசளித்தார்!
காரணம்...
எல்லாவித மனப்பொருத்தத்தோடும் புரிதல்களோடும் 25 வருடங்கள் வாழ்வது பெரிய விஷயம் கிடையாது எந்த ஒரு மன ஒற்றுமையும், புரிதலும் இல்லா விட்டாலும் 35 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்களே இது தான் உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம் என்று பாராட்டினார்.
இருவரும் ஆனந்தக் கண்ணீரோடு கார் சாவியை வாங்கிக் கொண்டு செல்ல எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்.
எந்நிலையும் தன் கணவனை/மனைவியை விட்டும் பிரியாத இதுவும் ஒரு வகையான அன்பு தான்.
அந்த துணிக்கடையில் ஒரு பெண் உள்ளே நுழைந்தார்..
"ஏங்க, வன்னியர் குழந்தைக்கு ட்ரெஸ் கிடைக்குமா..?? என்றார்...
.
"இருக்குமா, அந்த செக்ஷனுக்கு போங்க.." என்றார்...
.
என்னடா பெரியாரு மண்ணுக்கு வந்த சோதனைனு பீதியில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்த என்னை கடைக்காரரே சமாதானப்படுத்தினார்...
.
அவங்க கேட்டது One Year, குழந்தைக்கு Dress, நீங்க ஒன்னும் பதறாதீங்க...
.
அப்பாடா..
.
ஓ.. இது சாதி பிரச்சனையோன்னு பார்த்தேன்..
நல்ல வேளை இது மொழியை ஸ்டைலா பேசற குந்தானிகளால வந்த பிரச்சனை..
.
24 மணி நேரமும் நம்ம பதட்டத்துலயே வச்சுருக்கானுங்க....
ஆசிரியர் தினக் குறிப்பு இது. ஆனால் ஆசிரியர்களைப் பாராட்டுவதோ பெருமிதத்தில் திளைப்பதோ நன்றியுணர்ச்சியில் பொங்குவதோ என் நோக்கம் அல்ல. நன்றியுணர்ச்சி மிகவும் நல்லதே என்றாலும் அதைவிட முக்கியமான ஒரு பிரச்சினையை இங்கு பேச வேண்டும் என நினைக்கிறேன் - இந்த ஆசிரியர் தினமன்று பெரும்பாலான ஆசிரியர்கள் மகிழ்ச்சியாக இல்லை. இதை நான் கண்கூடாகப் பார்க்கிறேன். என் நண்பர்கள் பலர் கல்லூரி ஆசிரியர்களாக தனியாரிலும் அரசுதவி நிறுவனங்களிலும் இருக்கிறார்கள். தனியார் பல்கலைக்கழகங்களில் இருக்கிறார்கள். தனியார் பள்ளிகளிலும் அரசுப் பள்ளிகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து புலம்பிக் கொண்டே இருக்கிறார்கள் - வேலையும் அழுத்தமும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது, வாழ்க்கையில் நிம்மதியில்லை, வேலையில் திருப்தியில்லை. ஓய்வு பெற்ற பேராசிரியர்களிடம் பேசும் போது “நல்லவேளை நாங்கள் தப்பித்துவிட்டோம், உங்கள் தலைமுறையில் ஆசிரிய வேலையானது சார்ளி சாப்ளினின் மாடர்ன் டைம்ஸ் படத்தில் அவர் எந்திரத்துக்குள் மாட்டிக்கொள்வாரே அதைப் போல ஆகிவிட்டது, நல்லவேளை நாங்கள் தப்பித்துவிட்டோம்” என்கிறார்கள்.
முதன் முதலில் 1845-ல் ராபர்ட் தாம்சன் என்பவர் காற்றடைத்த டியூப் மூலம் சிறிய சைக்கிளை ஓட்ட முடியும் என்று கண்டுபிடித்திருந்தார். ஆனால், அவரால் அது முழுமையானதாக இல்லை அது அந்த அளவு மேம்படுத்தப்படவில்லை மற்றும் பிரபலமாகவில்லை என்பது John Boyd dulop ஜான் பாய்டு டன்லப்புக்குத் தெரியாது.
அவர் குதிரை வண்டிகள் மற்றும் சைக்கிள் போன்றவற்றில் இதுபோன்ற டியூபில் காற்றடைக்கும் தொழில்நுட்ப முறையை தனது மகனின் மரத்தாலான சைக்கிளுக்கு தான் சோதனை செய்தார்.
பிறகு காற்றடைக்கப்பட்ட இந்த டயரை மேலும் ஆராய்ந்து, பரிசோதனைகள் செய்து, மேம்படுத்தி 1888-ல் பிரிட்டனில் இதற்கான காப்புரிமையைப் பெற்றார். 1890-ல் அமெரிக்காவிலும் காப்புரிமை பெற்றார்.
பெல்ஃபாஸ்டில் நடைபெற்ற மிதிவண்டி ஓட்டும் ஒரு போட்டியில் இந்த மிதிவண்டியைப் பயன்படுத்திய போட்டியாளர் வெற்றி பெற்றதை அறிந்த டபிள்யு. ஹெச். டு கிராஸ் என்ற அயர்லாந்து தொழிலதிபருக்கு இதில் ஆர்வம் ஏற்பட்டது.
டன்லப்புடன் சேர்ந்து ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். அது டன்லப் ரப்பர் கம்பெனி என்று அழைக்கப்பட்டது. தனது கண்டுபிடிப்பால் இவர் பெரிதாக லாபமடைய வில்லை. தனது காப்புரிமையை 1896-ல் டு கிராசுக்கு விற்றுவிட்டு, ஊர் திரும்பிவிட்டார்.
ஆனால் அந்த நிறுவனம் டன்லப் ரப்பர் கம்பெனி என்று இவரது பெயராலேயே இயங்கிவந்தது. 1888-ல் காற்று அடைக்கப்பட்ட டயர்கள் அறிமுகமான பிறகு பழைய டயர்கள் வழக்கொழிந்து போய் விரைவில் இவை புழக்கத்திற்கு வந்துவிட்டன.
இது மெல்ல மெல்ல உலகம் முழுவதும் பரவியது. 1895-ல் முதல் மோட்டார் வாகனம் உருவானது. 1900-மாவது ஆண்டுக்குப் பின் சைக்கிள்களுக்கும் மோட்டார் வாகனங்களுக்கும் பயன்படுத்தப்படும் நீடித்து உழைக்கும் ரப்பர் பொருள்களின் தேவை அதிகரித்துக்கொண்டே போனது.
இன்று இந்த உலகில் டியூப்லெஸ் டயர்கள் எனப்படும் டியூப் இல்லாத டயர்கள் வந்துவிட்டாலும் இன்றைய உலகின் அனைத்து போக்குவரத்து தொழிற்சாலை உற்பத்தி போன்றவற்றில் இவரது பங்களிப்பு மனிதகுலத்திற்கே உதவியது 🙏
படத்தில் 1945ல் வெளிவந்த ஒரு டன்லப் விளம்பரம்.
இராம ஸ்ரீநிவாஸன்
இராம ஸ்ரீநிவாஸன்பட மூலாதாரம்,NETFLIX
ஹாய், யாஸ்மின் ரூஃபோவிடமிருந்து உங்களுக்கு வாய்ஸ் மெயில் (குரல் பதிவு) வந்திருக்கிறது. அதை கேட்க மாட்டேன் என்றோ அல்லது பின்னர் அழைக்கிறேன் என்றோ தயவுசெய்து மெசேஜ் அனுப்பாதீர்கள்.
துரதிருஷ்டவசமாக நான் அப்படி மெசேஜ் அனுப்பப் போவதில்லை. ஆனால், பெரும்பாலான ஜென் Z மற்றும் மில்லினியல் (Millennial) தலைமுறையினரை போன்று, நானும் அப்படி மெசேஜ் அனுப்ப விரும்புகிறேனா? நிச்சயமாக.
(1980களின் முற்பகுதியில் துவங்கி 1990களின் பிற்பகுதி வரை பிறந்தவர்கள் மில்லினியல் என அழைக்கப்படுகின்றனர். இந்த தலைமுறையினருக்குப் பிறகு பிறந்தவர்களை Z தலைமுறையினர் என்று அழைக்கப்படுவர்.)
18 முதல் 34 வயதுடையவர்களில் கால்பகுதி மக்கள், தங்களுக்கு வரும் போன் அழைப்புகளை ஏற்பதில்லை என, சமீபத்திய புள்ளிவிவரம் ஒன்று கூறுகிறது. போன் அழைப்புகளை தாங்கள் புறக்கணிப்பதாகவும், மெசேஜ் மூலம் பதில் அளிப்பதாகவும் தங்களுக்கு தெரிந்த எண்ணாக இல்லையென்றால் அதுகுறித்து இணையத்தில் தேடுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
யுஸ்விட்ச் (Uswitch) நிறுவனம் 2,000 பேரிடம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில், 18-34 வயதுடைய 70% பேர், போன் அழைப்புக்கு மெசேஜ் மூலம் பதில் அனுப்புவதையே தாங்கள் விரும்புவதாக கூறியுள்ளனர்.
முந்தைய தலைமுறையினருக்கு போனில் பேசுவது சாதாரணமான விஷயம். என்னுடைய பெற்றோர் தங்களின் பதின்பருவத்தில் தன்னுடைய உடன்பிறந்தோரிடம் வீட்டின் தாழ்வாரத்தில் தொலைபேசியில் சண்டையிட்டதை, அவர்களின் ஒட்டுமொத்த குடும்பமும் அப்போது கேட்டது.
பட மூலாதாரம்,YASMIN RUFO
அதற்கு முரணாக, என்னுடைய பதின்பருவம் மெசேஜ் அனுப்புவதிலேயே கழிந்தது.
என்னுடைய 13-வது பிறந்தநாளில், இளஞ்சிவப்பு நிற ஃபிலிப் மாடல் நோக்கியாவை அன்பளிப்பாக பெற்றபோது, மெசேஜ் அனுப்புவதில் எனக்கு தீவிர ஆர்வம் ஏற்பட்டது.
பள்ளி முடிந்து ஒவ்வொரு மாலையும் என் நண்பர்களுக்கு 160-எழுத்துகள் கொண்ட மெசேஜை அனுப்ப நேரம் செலவிடுவேன். தேவையில்லாத இடைவெளி, எழுத்துக்களை எல்லாம் நீக்கி, ஜி.சி.ஹெச்.க்யூ (அரசாங்க தகவல் தொடர்புகள் தலைமையகம்) கூட புரிந்துகொள்வதற்கு சிரமமாக இருக்கும் வகையில் அந்த மெசேஜ் குழப்பமானதாக இருக்கும்.
ஒரு மெசேஜுக்கு 10பி (10 பென்ஸ் பிரிட்டிஷ் நாணயம்) எனும்போது, 161 எழுத்துகளுக்கு மேல் அனுப்ப நான் நினைக்கவில்லை.
2009-ல் மொபைலில் ஒருவரை அழைக்க செலவு மிகவும் அதிகமாகும்.
“மாலை முழுதும் உன் நண்பர்களுடன் கிசுகிசுக்க இந்த போனை உனக்கு நாங்கள் தரவில்லை,” என, என்னுடைய மாதாந்திர போன் கட்டணத்தைப் பார்த்த பின்னர் என் பெற்றோர் எனக்கு நினைவூட்டுவர்.
மெசேஜ்கள் மட்டுமே அனுப்பும் தலைமுறையினர் உருவாகினர். மொபைல் போன் அழைப்புகள் அவசரகாலத்திற்கு மட்டுமே என்றானது, தாத்தா-பாட்டிகளிடம் பேசுவதற்கு தொலைபேசியில் எப்போதாவது மட்டுமே அழைக்கப்பட்டது.
பட மூலாதாரம்,GETTY IMAGES
இளம்வயதினர் போனில் பேசும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளவில்லை என்பதால் அவர்கள் இவ்வாறு இருப்பதாக, டாக்டர் எலெனா டூரோனி தெரிவித்தார். “போனில் பேசுவது இப்போது வழக்கமில்லை என்பதால் அது வித்தியாசமாக தெரிகிறது” என்கிறார் அவர்.
இதனால் தங்களுடைய போன் ஒலிக்கும்போது (35 வயதுக்குட்பட்டோர் சத்தமான ரிங்டோனை வைத்துக்கொள்வதில்லை என்பதால், செல்போனில் லைட் எரியும்போது,) இளம் வயதினர், மோசமானது ஏதோ நடந்துவிட்டதாக அச்சப்படுகின்றனர்.
யுஸ்விட்ச் கருத்துக்கணிப்பில் பேசிய பாதிக்கும் மேற்பட்ட இளம்வயதினர், எதிர்பாராத அழைப்புகள் மோசமான செய்தியாகத்தான் இருக்கக்கூடும் என தாங்கள் நினைத்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
மனநல தெரபி வழங்கிவரும் எலோய்ஸ் ஸ்கின்னர், செல்போன் அழைப்புகள் குறித்த பயம், “மோசமான ஏதோவொன்று குறித்த அச்ச உணர்விலிருந்து வருவதாக” தெரிவித்தார்.
“நம்முடைய பரபரப்பான வாழ்க்கை மற்றும் முன்கூட்டியே திட்டமிடப்படாத வேலைநேரம் காரணமாக, வெறுமனே பேசுவதற்காக போனில் அழைப்பதற்கு நமக்கு நேரம் இல்லை. முன்பெல்லாம், போன் அழைப்புகள் முக்கியமான செய்தியை கூறுவதற்கான ஒன்றாக இருந்தது, அவை பெரும்பாலும் சிக்கலானதாகவும் கடினமானதாகவும் இருக்கும்.”
“அதுதான் காரணம்,” என்கிறார் 26 வயதான ஜேக் லாங்லி. “மோசடியாளர்கள் அல்லது விற்பனையாளர்கள் யாராவது அழைப்பார்கள் என்பதால்,” தானும் தெரியாதவர்களின் அழைப்புகளை ஏற்பதில்லை என்கிறார் அவர்.
“முறையான அழைப்புகள் எது என்பதை சல்லடை போட்டு தேடுவதற்கு பதிலாக, அந்த அழைப்புகளை ஏற்காமல் இருப்பது எளிதானது.”
பட மூலாதாரம்,NETFLIX
போனில் பேசுவதில்லை என்பது, இளம் வயதினர் நண்பர்களுடன் தொடர்பில் இல்லை என அர்த்தமில்லை. சாதாரண மெசேஜ்கள், மீம்கள், வதந்திகள், கிசுகிசுக்கள் மற்றும் குரல் பதிவுகள் என, எங்களுடைய குரூப் சேட்-கள் நாள் முழுவதும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
இந்த உரையாடல்களில் பல இப்போது சமூக ஊடகங்களில் நடக்கின்றன, குறிப்பாக இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற சமூக ஊடகங்களில் மெசேஜ்களுடன் படங்கள், மீம்களை பகிர முடியும் என்பதால் அவற்றை பெரும்பாலும் விரும்புகின்றனர்.
போன் அழைப்புகள் வேண்டாம் என்பதை ஏற்றுக்கொள்ளும் இளம் வயதினர், வாய்ஸ் மெசேஜ் தொடர்பான கருத்தில் இருவேறு கருத்துகளை கொண்டுள்ளனர்.
யுஸ்விட்ச் புள்ளிவிவரத்தில் 18-34 வயதுக்குட்பட்ட 37% பேர், வாய்ஸ் மெசேஜ் அனுப்புவதை தொடர்புக்கான தங்களின் விருப்ப தேர்வாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதனுடன் ஒப்பிடுகையில், 35-54 வயதுக்குட்பட்டவர்களில் 1 சதவிகித பேர் மட்டுமே அழைப்புகளுக்கு பதிலாக வாய்ஸ் மெசேஜ் அனுப்புவதை தேர்ந்தெடுக்கின்றனர்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
“வாய்ஸ் நோட் அனுப்புவது போனில் பேசுவது போன்றுதான், ஆனால் அதைவிட சிறப்பானது,” என்கிறார் 19 வயது மாணவர் சூசி ஜோன்ஸ். “உங்களுடைய நண்பரின் குரலை எந்தவித அழுத்தமும் இல்லாமல், இன்னும் தன்மையாக அவருடன் தொடர்புகொள்ள இதில் முடியும்”.
ஆனால், தங்கள் வாழ்க்கை குறித்து நண்பர்கள் அனுப்பும் ஐந்து நிமிட வாய்ஸ் நோட்டை கேட்பது வலிமிகுந்தது, ஒவ்வொரு வார்த்தைக்கும் அடுத்து, “லைக்” (like) அல்லது “உம்” (uhm) போன்ற வார்த்தைகளே இருக்கும். அந்த ஒட்டுமொத்த செய்தியையும் இரண்டு மெசேஜ்களில் சொல்லிவிட முடியும்.
மெசேஜ்கள் மற்றும் வாய்ஸ் நோட்கள் இளம்வயதினரை தங்களுடைய வேகத்தில் இன்னும் சிந்தித்து, பதில்களை அனுப்ப அனுமதிக்கின்றன.
ஆனால், போன் அழைப்புகள் குறித்த பயம், உங்களின் பணி வாழ்க்கையை எந்தளவுக்கு பாதிக்கும்?
வழக்கறிஞரும் கண்டென்ட் கிரியேட்டருமான 31 வயது ஹென்றி நெல்சன்-கேஸ்-யின் மில்லினியல்கள் குறித்த தொடர் வீடியோக்களுடன் வேதனையான விதத்தில் அதிகம் தொடர்புபடுத்திக்கொள்ள முடிகின்றன.
அதில், வேலை தொடர்பாக பலருக்கும் மின்னஞ்சல் அனுப்புவதில் ஏற்படும் பதட்டம், அதிக நேரம் வேலை செய்வதை தன்மையுடன் மறுத்தல், போன் அழைப்பை தவிர்ப்பதற்கு எதையும் செய்யும் பணியாளர் ஆகியனவும் அடங்கும்.
“உடனடியாக அழைப்பை ஏற்க வேண்டும் என்ற அழுத்தம், உரையாடுவதில் ஏற்படும் பதட்டம், சங்கடம், பதில்கள் இல்லாமல் இருப்பது,” ஆகியவை போன் அழைப்புகளை வெறுக்க வைப்பதாக அவர் கூறுகிறார்.
“அதிகளவில் நம்மை வெளிப்படுத்திக் கொள்வதாகவும் அதிகளவு நெருக்கத்தை கோருவதாகவும் போன் அழைப்புகள் உள்ளன. மாறாக, மெசேஜ்கள் நம்மை வெளிப்படுத்திக் கொள்ளாமல் தொடர்புகொள்ள அனுமதிக்கும்,” என டாக்டர் டூரோனி விளக்குகிறார்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
வேலை நேரத்தில் அழைப்புகளை ஏற்பதை தான் தவிர்ப்பதாக கூறும் 27 வயதான வழக்கறிஞர் துஞ்சா ரெலிக், “அந்த அழைப்புகள் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும், உங்கள் பணிகளில் பின்னடைவை ஏற்படுத்தும்” என்கிறார்.
‘இதை ஒரு மின்னஞ்சலாக அனுப்பியிருக்கலாம்’ என்பது போன்ற உணர்வு இது என்கிறார், ஸ்கின்னர்.
“நேரம் குறித்த சிந்தனை அதிகரித்திருப்பதால், ஒருவர் போனில் அழைக்கும்போது மறுமுனையில் இருப்பவர் அந்நாளை நிறுத்திவிட்டு, அந்த உரையாடலில் கவனம் செலுத்த வேண்டும், இது பல வேலைகளை செய்ய வேண்டியுள்ளவர்களுக்கு கடினமாக இருக்கிறது.” என்கிறார் அவர்.
64 வயதான தொழிலதிபர் ஜேம்ஸ் ஹோல்டன், தன்னுடைய இளம்வயது பணியாளர்கள் அரிதாகவே போன் அழைப்புகளை ஏற்பதாக கூறுகிறார். “அதற்கு பதிலாக அவர்கள் தாங்கள் வேலையில் இருப்பதாக வழக்கமான மெசேஜ்களை அனுப்புவார்கள். அல்லது என்னுடைய அழைப்பை வேறு அழைப்புக்கு (call divert) மாற்றிவிடுவார்கள், அதனால் அவர்களை அழைக்கவே முடியாது”.
“அவர்களிடம் தப்பிப்பதற்கான காரணங்கள் எப்போதும் இருக்கும். என்னுடைய செல்போன் சைலண்டில் இருந்ததால் பார்க்கவில்லை அல்லது பின்னர் அழைக்க மறந்துவிட்டேன் என கூறுவார்கள்.”
தொடர்புகொள்வதில் தெளிவான இடைவெளி இருப்பதாலும், பணியாளர்கள் மெசேஜ்கள் அனுப்புவதில் சௌகரியமாக இருந்தால் அவர்களுடைய விருப்பத்தை நாம் மதிக்க வேண்டும் என்பதாலும் அவற்றிற்கு தகவமைத்துக்கொள்ள நினைப்பதாக அவர் கூறினார்.
ஆனால், பேசாமல் இருப்பது மற்றும் வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கு விருப்பம் கொள்வதன் மூலம், திட்டமிடப்படாத மற்றும் அதிகாரபூர்வமற்ற உரையாடல்களை மேற்கொள்வதற்கான திறனை நாம் இழக்கிறோமா?
இதே போக்கு தொடர்ந்தால், “நெருக்கம் அல்லது தொடர்பை நாம் இழந்துவிடுவோம்” என்கிறார் ஸ்கின்னர்.
“நாம் பேச்சின் மூலம் தொடர்புகொள்ளும்போது உணர்வுரீதியாகவும் தொழில் அல்லது தனிப்பட்ட ரீதியாகவும் அதிக ஒழுங்குடன் இருக்கிறோம்” என்கிறார் அவர். “இந்த இணைப்பு, குறிப்பாக பணியிடங்களில் அதிக நிறைவை தரும்.”
25 வயதான பல்பொருள் அங்காடியின் பகுதி மேலாளரான சியாரா பிராடி, “பணியில் என்னுடைய மூத்த அதிகாரிகள் என்னை போனில் அழைத்தால் அது எனக்குப் பிடிக்கும், அதை நான் ஊக்குவிக்கிறேன்” என்கிறார்.
“அது மிகவும் சிந்திக்கும்விதத்தில் இருக்கும். ஏனெனில், அதற்கு நிறைய முயற்சி எடுக்க வேண்டும். அதன்மூலம், உங்களின் மேலாளர் உங்களின் வேலையை மதிக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும்.” என்கிறார் அவர்
வீட்டிலிருந்து வேலை பார்க்கும் நாட்களில் தன் சக பணியாளர்களுடன் போனில் பேசுவதை அவர் விரும்புகிறார். “அச்சமயங்களில் தனிமையாக இருக்கும், அதனால் தொடர்பில் இருப்பது நன்றாக இருக்கும்.”
இந்த புதிய போக்கு, இந்த தலைமுறையினர் கடந்த தலைமுறையை போல் அல்லாமல் எல்லாவற்றுக்கும் எளிதில் வருத்தம் கொள்வதாக கூறப்படுவதற்கு மேலும் ஓர் உதாரணமாக இருப்பதாக சிலர் கூறுகின்றனர்.
ஆனால், ஒன்றுக்கு தகவமைத்துக் கொள்வதில்தான் இது இருக்கிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் ஃபேக்ஸிலிருந்து மின்னஞ்சலுக்கு மாறினர். அதன்மூலம், தொடர்புகொள்வது இன்னும் எளிதானது.
இப்போது மெசேஜ் அனுப்புவதன் வலிமையை நாம் அங்கீகரித்து, 1990களில் எப்படி ஃபேக்ஸ் இயந்திரங்களை கைவிட்டோமோ, அதேபோன்று 2024-ல் நாம் போன் அழைப்புகளை கைவிட வேண்டிய நேரமிது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
உறவுகள் தொடர்கதை
“அது உன்டை அப்பாவுக்கு முறைக்கு அக்காவும் அத்தானும் கீழ போய் ஆசீர்வாதம் வாங்கு” எண்டு மேடையில சொல்லி மாமி அனுப்ப சிவாவும் மேடையால கீழ இறங்கிப் போய் குனிய, சிவான்டை மனிசி குனியேலாமக் குனிய, “நல்லா இரு அப்பு, நல்லா இரு மோனை“ எண்டு ஆசீர்வதிச்சிட்டு, பொம்பிளையின்டை கையில envelope ஐ திணிச்சிட்டு, இனி எப்பிடி ஏறி சாப்பிடப் போறது எண்டு ரெண்டு பேரும் யோசிக்கத் தொடங்கிச்சினம். ஒரு காலம் இவை இல்லாம நல்லது கெட்டது ஒண்டும் நடக்காது ஆனா இப்ப அவை ரெண்டுபேரும் வேற ஆற்றையும் உதவி இல்லாம வீட்டை விட்டு வெளீல போய் வரக்கூட ஏலாது .
“வாருமன் சாப்பிடுவம்” எண்டு அவர் சொல்ல, “கொஞ்சம் பொறுங்கோ என்ன இளந்தாரியே ஏறிப்போக” எண்டு சொல்லி அவ உதவிக்கு ஆரும் இருக்கினமா எண்டு பாக்கத்தொடங்கினா. வயசு போகப் போக அப்பாக்கள் அமைதியாவதும் அம்மாக்களின் புறுபுறுப்பது கூடுவதும் இயற்கை. ஒரு வயதுக்கு (முதிர்ச்சிக்கு) அப்பால் ஆண்களின் தேவைகள் குறைவடையத் தொடங்கி விடும் . அவன் ஞானத்திற்கு முன்னைய பற்றற்ற நிலைக்கு வந்து விடுவான். மனைவிக்கு இன்னும் கூடப் பணிந்து போவான், எங்கயாவது எருமைக் கடா வந்தால் எமனுடன் ஏறிப் போக யோசிக்க மாட்டான் . ஆனால் பெண்கள் அப்படி இல்லை. பெண்கள் சந்தர்ப்பம் பாத்து சாதிப்பதில் வல்லவர்கள் . அப்பாமார் அடங்கத் தொடங்க அம்மாமார் ஆட்சியை கைப்பற்றி அந்தாள் தனக்கு முந்தி செய்த பழி பாவங்களை மறக்காமல் இப்பிறப்பிலேயே தண்டனை வழங்குவார்கள் .அரசன் அன்றும் ,தெய்வம் நின்றும் , மனிசி இருந்தும் செய்வார்கள்.
“ அவருக்கு இப்ப மறதி வந்திட்டு , மருந்து போட்டது கூட ஞாபகம் இருக்காது“ எண்டுதான் ஆரும் வந்தால் அவரைப்பபத்தி அறிமுகம் தொடங்கும் . பிறந்த நாளில இருந்து அடக்கப்பட்டதன் தாக்கமும் , விரும்பினதை செய்ய முடியாமப் போன ஏக்கமும், வந்த இடத்தில இருக்கிற அடக்குமுறையும் சேந்து பொம்பிளைகளில அப்பப்ப வெளிப்படும். பொம்பிளைகளுக்கு அதிலேம் அம்மாக்களிற்கு அதிகாரம் செய்ய விருப்பம் . பெண்கள் நல்ல நிர்வாகிகள் ஆனால் என்ன தங்களுக்கு தேவையான எல்லாத்தையும் மட்டுமே ,அதுவும் , அதிகார நிர்வாகமே செய்வார்கள்.
இது எல்லாம் வீட்டுக்குள்ள தான், வெளீல வந்தால் அந்தாளை கவனமாக் கையை பிடிச்சி கூட்டிக்கொண்டு போவினம். என்ன அடிக்கடி தாங்கள் தான் சரி நீர் பிழை எண்ட நச்சரிப்பும் இருக்கும்.
கடைசிக் காலத்தில பெத்தவைக்கு பெரிய பிரச்சினை சொத்துப் பிரச்சினை. சரி வயசு போட்டுது பிள்ளைகளுக்கு இருக்கிறதை குடுப்பம் எண்டா, சொத்தைப் பிரிச்சுக்குடுக்கிறதுக்கு அம்மாமருக்கு விருப்பம் இருக்காது. கடைசிவரை அதைத் தாங்கள் தான் ஆளோணும் எண்ட ஆசை இருக்கும். அதோட சிலவேளை ஒரு வியாக்கியானம் வைச்சு ஏற்றத்தாழ்வோட பிரிச்சுக் குடுப்பினம், “ஏனப்பா எல்லாத்துக்கும் சமனா இப்பவே குடுமன்” எண்டு அப்பாமார் சொன்னாலும்,“உங்களுக்கு ஒண்டும் விளங்காது சும்மா இருங்கோ” எண்டு அதட்ட அவையும் அடங்கீடுவினம்.
இன்றி அமையாத எங்கடை கூட்டு வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமா இல்லாமல் போக, இப்ப என்னெண்டால் மகள் கலியாணம் கட்டி மாப்பிளையோட வீட்ட வந்து இருக்க , தனிக்குடித்ததனம் போக விரும்புவது அநேகம் பெற்றோர் ஆகத் தான் இருக்கும் . சீதனம் குடுத்திட்டம் எண்டதால , கொஞ்சம் உரிமையில்லாத் தன்மையை உணருவது தான் காரணமோ தெரியேல்லை .
எங்கடை சனத்தில கட்டினாப் பிறகு வாற சண்டையில அடிக்கடி வாறது மகள் மாருக்கு அம்மாமாரோட வாற சண்டை தான். மாமி-மருமகள் இப்படித்தான் எண்டு முதலே முடிவெடுக்கிறதால அது பெரிய சண்டையா இருக்காது. அதோட எல்லாரும் வீட்டோட மாப்பிளை எண்டதால மாமியார்-மருமோள் நேரடிச் சண்டை இருக்காது.
மாமியார் மருமோள் சண்டை நேர நடக்காட்டியும் நாசூக்கா சொல்லிற கதைகளில மாட்டுப்படிறது மனிசன்மார் தான். கண்டோன்ன ரெண்டு பேரும் கதைக்கிறதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். ஆனாலும்
அடுத்த மாசம் கோல் ஒண்டு வரும்;
“ என்ன மாதிரி அரிசி மா அனுப்பவே”
“ வேணாம் மாமி”
“ஏன் போன கிழமை ரெண்டு கிலோ தானே அனுப்பினான், எங்களுக்கு ரெண்டு பேருக்கே கிழமைக்கு 4 கிலோ வேணும்”
“அதே அப்பிடியே கிடக்கு”
ஆஆஆஆஆஆ…..
“அவன் சரியா மெலிஞ்சு போனான் வடிவாச் சமைச்சுக்குடும்” எண்ட இழுவையோட கோல் முடியும்.
உடன மகனுக்கு கோல்;
“என்னடா வடிவாச் சாப்பிடிறியோ, உடம்பு கவனம், கண்டபடி வெளீல சாப்பிடாத”
எல்லாத்துக்கும் ஓமெண்டப் பழகின மகன் இதுக்கும் ஓம் எண்டு போனை வைக்க;
மனிசீன்டை கோல்;
“என்ன உங்கடை அம்மா உளவு பாக்கிறாவே, நான் எவ்வளவு சமைக்கிறன் எண்டு”, நான் ரெண்டையும் class க்கு ஏத்தி இறக்கவே நேரம் இல்லை இதுக்குள்ள அரிசி மா ஏன் முடியேல்லை, மிளகாய்த்தூள் எவ்வளவு இருக்கு எண்ட கேள்வி வேற, டொக்டர் உம்மை உடம்பைக் குறைக்கச் சொல்லிறார் ஆனா உம்மடை அம்மா என்னெண்டால் நான் சாப்பாடு தராம் நீர் மெலிஞ்சுட்டீராம்”எண்டு சொல்லீட்டு விடை எதிர்பார்க்காமலே கோல் cut ஆகீடும். இதை எல்லாம் கேட்டும் கேக்காத மாதிரி இருக்கிறது தான் அப்பாக்களின் சா(சோ)தனை.
வீட்டை பொம்பிளை பிள்ளைகள் இருக்கும் வரை அப்பாக்கள் அதிகாரம் செய்வதே மகள் எண்ட ஐ.நா சபையை நம்பித்தான் . சண்டை வரேக்க அப்பாவின்டை பக்கம் கொஞ்சம் கூட support இருக்கும். மகள்மாரைக் கட்டிக்குடுத்த உடனயே அம்மா மார் மீண்டும் இழந்த ஆட்சியை பிடிச்சிடிவினம் . இதுவரை எல்லாம் தெரிந்திருந்த அப்பா இப்ப அம்மான்டை கணக்குப்படி ஒண்டும் தெரியாதவர்.
கட்ட முதல் பொம்பிளைப்பிள்ளைகள் அப்பாமாரோடேம் ஆம்பிளைப்பிள்ளைகள் அம்மாமாரோடேம் ஒட்டி இருந்தாலும். கட்டிப் போனாப்பிறகு அப்பாமாருக்கு மகனோட இருக்கிறது தான் comfortable. மகன் மார் கேக்காமலே பாத்துச் செய்வாங்கள், அதோட மருமோள்மாருக்கு மாமாமாரோட ஒத்துப் போகும். மனிசனிட்டைப் போய் ”உங்கடை அப்பா பாவம், அம்மா என்ன சொன்னாலும் பேசாமக் கேப்பார், அம்மா தான் அவரைப் போட்டு பாடுபடுத்திறா” எண்டு சொல்லித் தன்ரை புருசனுக்கு பாடம் எடுப்பினம்.
மகனோடயோ இல்லாட்டி மகளோடயோ இருக்கப் போகேக்கேம் சம்மந்திமார் இருக்கினமா எண்டு பாத்துத்தான் போறது. சம்மந்திமாரை சபைசந்தீல சந்திக்கேக்க சந்தோசமாக் கதைச்சாலும் ஆனால் ஓரே வீட்டை இருந்தால் சண்டை தான்.
வளக்கும் வரை மூத்த ஆம்பிளைப் பிள்ளையும் கட்டிக் குடுத்தாப்பிறகு “ அவன் பாவம்” எண்டு கடைசி ஆம்பிளைப்பிள்ளையிலேம் தான் அம்மாமாருக்கு விருப்பம். ஆனாலும் மனிசன் மார் இருக்கும் வரைதான் அம்மாமார் மகனுடன் இருப்பினம் அவருக்கு ஏதும்மெண்டால் அதுக்குப்பிறகு கூப்பிடாமலே மகளிட்டைப் போயிடுவினம்.
ஊர் தாண்டி, கடல் தாண்டிக் கட்டிக்குடுத்திட்டு “ அய்யோ நான் பிள்ளையோட போய் இருக்கப்போறன்” எண்டு அம்மா தொடங்கி அந்தாள் ஏதும் சொல்லமுதல் ஓடிப்போய் அங்க இருந்து பாத்திட்டு கடைசீல சுடலை ஞானம் வர “கோம்பையன்மணலில தான் வேகவேணும்” எண்டு ஊரோட வந்திடிவினம். பெத்ததெல்லாம் கட்டிப் போய் தாங்கள் பெத்ததைப் பாக்கத் தொடங்க, வீடு வெளிச்சிப் போய் தனிச்சு இருக்கிறாக்களுக்கு வரும் ஒரு பயம் ஏதும் ஆருக்கும் நடந்தா எண்டு. இப்பவும் புறுபுறுக்கிற அம்மா “ எனக்கு ஏதும் நடந்தால் இந்தாள் பாவம் தனிய இருக்காது, என்னை மாதிரி ஒருத்தரும் பாக்க மாட்டினம்” எண்டு கவலை வர திருப்பி ஒருக்காப் பிள்ளைகளிட்டைத் திருப்பிப் போவமோ எண்டு யோசிக்கத் தொடங்குவா ஆனாலும் போமாட்டினம். ஏனெண்டால் இவை இப்பதான் தங்களுக்கு எண்டு வாழுவினம், பிள்ளைகளோட போய் இருந்தா அது இருக்காது.
அப்பாவும் அம்மாவும் சண்டை பிடிக்கிறது பெரிசா பிள்ளைகளுக்கு தெரியாது, தெரிஞ்சாலும் கணக்கெடுக்காதுகள். தனிய இருக்கேக்க சண்டைதான் பொழுதுபோக்கா மாறீடும்.ஆனால் அம்மாமாருக்கு மாத்திரம் அந்தக்காலத்தில இருந்து நடந்தது எல்லாம் பொருள், இடம், காலத்தோட ஞாபகம் இருக்கும் . தேவை வரேக்க deep memoryஐ கிண்டி எடுப்பினம். தேவேல்லாத ஒண்டுக்குச் சண்டை பிடிச்சு காகம் இருக்கத்தான் பனம்பழம் விழுந்ததெண்டு தொடங்கி, முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப் போட்டுக் கதைசொல்ல அந்தாள் அதுக்கு ஒண்டும் சொல்லாமல் இருக்கும். அதுக்கும் “ உங்கடை ஆக்கள் எண்டால் ஒண்டும் சொல்லாதேங்கோ” எண்டு பேசீட்டுக் கொஞ்சம் மூக்கைச் சிந்த , ஆனாலும் மாட்டிறது வீட்டுக்கு எப்போதாவது வாற ஒரு சொந்தம். வந்தவரை இருத்தி வைச்சு “கொஞ்சம் பொறு கோப்பி தாறன்” எண்டு சொல்லிப்போட்டு ,” எனக்கு பொன்னம்பலத்தார்டை மகனை பேசினது நான் தெரியாம இந்தாளைக்கட்டினது” எண்டு தொடங்குவா , இதுவரை சும்மா இருந்த அந்தாள் “நீதான் எண்டு தெரிஞ்சிருந்தா நானும் கட்டி இருக்க மாட்டன், லீவில வந்து நிக்கேக்க குஞ்சிஆச்சி சொன்னதுக்கு ஆரெண்டு பாக்காமல் நான் கட்டீட்டன்” எண்டு விட மாட்டார். வந்த ஆள் தான் பாவம் தலைப்பில்லா விவாதத்தை தனி ஆளா நிண்டு கேக்கவேணும். வந்த ஆள் ஏன் வந்தனான் எண்டதை மறந்து, கடைசீல தீர்ப்பில்லாச் சண்டையின்டை கதையைக்கேட்டுக் கொண்டிருந்திட்டு தாங்கேலாமல் ஒரு போன் கோல் வந்தமாதிரி எழும்பித் தப்பி ஓட வெளிக்கிட “இந்தா” எண்டு ஒரு வாழைப்பழச் சீப்பைக் குடுத்திட்டு, “ சரி போட்டு வா, அடுத்த முறை வரேக்க நாங்கள் இருப்பமோ தெரியாது” எண்டு ஒரு sentiment வசனமும் சொல்லி விடுவினம்.
அந்தாள் இருக்கேக்க ராங்கியா தனக்கெண்டு ஒண்டும் பிள்ளைகளின்டை இதுவரை கேக்காத அம்மா கடைசிக்காலங்களில “ எனக்கு ஏதும் நடந்தா அப்பாவைக் கவனமாப் பாக்கோணும்”எண்டதை மட்டும் சொல்லுவா. தான் இருக்கும் வரை தனக்கு மட்டும் தான் உரிமை எண்ட அகங்காரம், இல்லாத நேரத்தில தன்னை மாதிரி அவரைப் பாப்பினமோ, அவர் தனியச் சமாளிக்கமாட்டார் பாவம் எண்டு மனிசி கவலைப்படுறதெல்லாம் எல்லாருக்கும் விளங்கத் தொடங்கும். மனிசன்மாருக்கு தங்கடை மனிசிமார் வருத்தம் எண்டு சொன்னால் பயம் அதால வருத்தம் சொல்லாமலே, அடிக்கடி டொக்டிரட்டை கொண்டேக்காட்டுவினம். ரெண்டு பேருக்கும் பிறப்பால் வராமல் பிணைந்ததால் வாழ்க்கையில் வந்த இந்த உறவு தொடரும் கதையாக இருக்கவேண்டும் எண்டதுதான் எல்லாரின்டை ஆசையும்.
Dr. T. கோபிசங்கர்
யாழ்ப்பாணம்
வாழையடி வாழை
- சுப.சோமசுந்தரம்
தமிழ் நிலத்தின் சிறந்த எழுத்தாளராக, திரைப்பட இயக்குனராக பரிமளித்திருக்கும் திரு. மாரி செல்வராஜ் அவர்களின் 'வாழை' திரைப்படம் தொடர்பாக சிறிது எழுத வந்தேன். நல்ல படங்களைப் பற்றித் தெரிய வரும்போது OTT தளத்தில் வரும் வரை பொறுப்பதில்லை; திரையரங்கிலேயே பார்த்து விட வேண்டும் எனும் முனைப்பு உள்ளவன்தான் நானும். இருப்பினும் படம் வந்து ஐந்தாறு நாட்கள் கழித்து மிதமான கூட்டத்தில் பார்ப்பதிலேயே அலாதி இன்பம் காண்பவன் நான். காரணங்கள் சில உண்டு. ஒரு நல்ல திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் (ஒவ்வொரு frame ஐயும் என்று சொல்வார்களே, அது அதேதான் !) சலனமில்லாமல் ரசித்துப் பார்க்க முடிகிறது. ஒரு சிறுபிள்ளைத்தனமான காரணம் கூட உண்டு. திரையரங்கின் கேன்டீனில், "வள்ளிசா சீனி இல்லாத டீயா ? அரைச் சீனி போட்டுத் தரட்டுமாய்யா ?" என்று வாஞ்சையுடன் தாயினும் சாலப் பரிந்த பரிவு கூட்டத்தில் கிடைப்பதில்லை. கூட்டம் அதிகம் உள்ள எந்த சமூகத்திலும் மானுட மதிப்பீடு குறைவு என்று எங்கோ வாசித்த நினைவு. நிற்க.
'வாழை' திரைப்படம் குறித்த விமர்சனம் செய்ய வரவில்லை. நான் நிதானமாக ஒரு வாரம் கழித்துப் பார்த்ததால், படம் ஏற்கனவே ஊடகங்களில் திரைத்துறையின் துறை போகியவர்களால் ஆய்ந்து அலசிப் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது; மக்களால் கொண்டாடப்பட்டுள்ளது. எனவே அது பற்றிப் புதிதாக நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. பின் என்னதான் எழுத நினைத்தேன் ? நான் 'வாழை' பார்க்கும் முன்பே எழுத்தாளர் சோ. தர்மன் அவர்கள் ஏதோ சொல்லப் போக, சமூக வலைத்தளங்களில் ஏற்பட்ட சிறிய சலசலப்பின் பின்னணியில் ஏதோ எழுத நினைத்தேன். அவர் சுமார் பத்து வருடங்களுக்கு முன்பே தாம் எழுதிய 'வாழையடி' என்ற சிறுகதையைக் குறிப்பிட்டு அந்த 'வாழையடி'தான் இந்த 'வாழை' என்ற தொனியில் பேசி இருந்தார். எதையும் சாதியக் கண்ணோட்டத்துடனேயே பார்க்கும் ஆதிக்க சக்திகள், "கிடைத்ததடா வாய்ப்பு - மாரி செல்வராஜை அடிக்க !" என்ற அளவில் ஆரவாரம் செய்ய ஆரம்பித்திருந்தார்கள். மறுநாளே மாரி செல்வராஜ், "வாழைக்காய் சுமக்கும் தொழிலாளர்களைப் பற்றி எழுத்தாளர் சோ. தர்மன் அவர்கள் எழுதிய வாழையடி என்ற சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். நல்ல கதை. அனைவரும் வாசிக்கவும். எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களுக்கு நன்றி" என்று சுருக்கமாக, தெளிவாக, தமக்கே உரிய சான்றாண்மையுடன் தமது 'X' தளத்தில் பதிவிட்டிருந்தார். 'வாழையடி' கதையின் இணைப்பையும் தந்திருந்தார். நான் படம் பார்ப்பதற்கு முன் 'வாழையடி' கதையை வாசித்து விட்டேன். படம் பார்க்கும்போது அக்கதையைப் படத்துடன் மனதளவில் ஒப்பிடத் தவறவில்லை.
திருவைகுண்டம் பகுதியில் வாழை விவசாயத்தைக் கூர்ந்து கவனித்துப் பதிவு செய்ய விழைவோர் யாரும் அந்தக் கங்காணிகளைக் குறிக்காமல், அக்காலத்தில் வாழைத்தார் ஒன்றுக்குச் சுமை கூலி ஒரு ரூபாயிலிருந்து இரண்டு ரூபாயாக ஏற்ற தொழிலாளர்கள் வைத்த கோரிக்கையைக் குறிக்காமல், தொழிலாளர் ஆடையில் வாழைக் கறையைக் குறிக்காமல், வரப்பில் குத்தும் முள்ளைக் குறிக்காமல், கால் தடுமாறி நீரில் விழுவதைக் குறிக்காமல் எழுத முடியாது. இப்படி எல்லோருக்கும் தோன்றும் துணுக்குகளை ஒரு சிறுகதையாய்ப் பதிவு செய்துவிட்டு, தொழிலாளர்களின் வாழ்வை ஓவியமாய்த் தீட்டிய ஒரு திரைக்காவியத்தை மலினப்படுத்துவதைப் போல அல்லது குறைத்து மதிப்பிடுவதைப் போல சோ.தர்மன் அதன் கதைக்குச் சொந்தம் கொண்டாடியது சரிதானா ? அந்தக் கதைதான் இந்தக் கதை என்று உணர்வதற்கு ஒரு ஞானக்கண் வேண்டுமோ ! "எனக்குத் தெரிந்தவரை வாழைத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை முதலில் பதிவு செய்தவன் நான்தான்" என்று சொல்வது வரை சோ. தர்மனுக்கு அவரது உரிமையின் எல்லை.
ஜெர்மனியில் நாஜிக்கள் நிகழ்த்திய யூத இன அழிப்பு (The Holocaust) பற்றிய பல கதைகளும் புதினங்களும் எழுதப்பட்டன; எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. திரைப்படங்களும் வெளிவந்தன. அவையனைத்திலும் வதை முகாம்கள் (concentration camps), யூதர்களும் அரசியல் எதிரிகளும் முதலில் தங்க வைக்கப்பட்ட 'கெட்டோக்கள்' (ghettos), கொலைவாயு அறைகள் (gas chambers), கொலை செய்யப்பட்ட சிறுவர், சிறுமியர், முதியோர் என அனைத்து விஷயங்களும் உண்டு. இவற்றுள் எல்லி வீஸல் (Elie Wiesel) எனும் எழுத்தாளர் தாம் நேச நாடுகள் படையால் புச்சென்வால்ட் (Buchenwald) வதை முகாமிலிருந்து விடுவிக்கப்படும் வரை உள்ள தமது சோக அனுபவங்களைப் பகிர்ந்த 'Night' எனும் புதினம் இலக்கிய உலகில் பரவலாகப் பேசப்படுவது. அவர் ஒரு எழுத்தாளர், பேராசிரியர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர். தமது சமூகச் செயல்பாடுகளால் 1986 இல் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர். அவரது புதினம் 'Night' இல் ஹிட்லரின் யூத இன அழிப்பு பற்றிய முந்தைய புதினங்களில் உள்ளவைதாம் இருக்கின்றன என்று யாரேனும் குற்றம் சாட்டினால், இலக்கிய உலகம் அதனை எப்படிப் பார்க்கும் ? இது பற்றிய ஏனைய பெரும்பாலான படைப்புகள் வதை முகாம்களில் இருந்து மீண்டவர்களின் அனுபவங்களைக் கேட்டு எழுதப்பட்டவை; எல்லி வீஸலைப் பொறுத்தவரை அவரே ஒரு எழுத்தாளர், அறிஞர் என்பதால் அவர்தம் சொந்த அனுபவத்தைப் பதிவு செய்தது ஏனைய படைப்புகளில் இருந்து சிறந்து விளங்குதல் இயற்கையே ! அது போலவே கரிசல் காட்டில் இருந்து மருத நிலத்திற்குக் குறுகிய காலத்திற்கு வந்த சோ. தர்மன் வாழை விவசாயிகளின் துயரங்களைப் பதிவு செய்ததை விட வாழையில் வாழ்ந்த மாரி செல்வராஜின் பதிவு நிவந்து நிற்பது இயற்கையே - அது எழுத்து ஊடகம், இது காட்சி ஊடகம் என்று இருந்தாலும் கூட ! மேலும் முன்னரே குறிப்பிட்டது போல் சோ. தர்மன் ஒரு சிறுகதையாக எழுதியவை, எல்லோருக்கும் தெரியும் துணுக்குச் செய்திகள். மாரி செல்வராஜ் பதிவு செய்தவை அவர் வாழ்ந்து காட்டியவை. இவற்றிற்கு அப்பாற்பட்டு, எழுத்து ஊடகத்தில் கூட சோ. தர்மனை விட மாரி செல்வராஜ் ஒரு படி உயர்ந்து நிற்கிறார் என்பது இருவரது எழுத்துக்களையும் வாசித்த என் கருத்து. சோ. தர்மன் எண்ணிக்கையில் அதிகப் படைப்புகளைத் தந்திருக்கிறார், சாகித்ய அகாடமி விருதாளர் என்பதெல்லாம் ஒரு புறம். இத்தகைய ஒப்பீடு பொதுவாகத் தேவையில்லைதான். சோ.தர்மன் நம்மை சந்திக்கு இழுத்தால் வேறு என்ன செய்வது ?
"படம் பார்த்தீர்களே, எப்படி இருக்கிறது ?" என்று நிருபர் கேட்டதற்கு, பெரும் பாராட்டைப் பெற்ற படத்தின் தரத்தைப் பற்றி எதுவும் பேசாமல், "நான் அச்சு ஊடகத்தில் பதிவு செய்தேன்; அவர் (மாரி செல்வராஜ்) காட்சி ஊடகமாக மாற்றி இருக்கிறார்; அவ்வளவுதான். வேறெதுவும் இல்லை" என்று சாதாரணமாக சோ. தர்மன் சொல்லிச் செல்வது முதிர்ச்சியின்மையா அல்லது அடாவடித்தனமா என்பது நமக்குப் புரியவில்லை. 'கற்றாரைக் கற்றாரே காமுறுவர்' எனும் அடிப்படைப் பண்பே சோ. தர்மனுக்குத் தெரியாதோ என்று எண்ண வைக்கிறார். "கதைக்காக மாரி செல்வராஜ் என்னிடம் உரிமை கோரவும் இல்லை; அதை நான் பெரிதாக்கவும் இல்லை" என்று சோ. தர்மன் சொல்வது வேடிக்கை. "அது நம்ம கதைதான் என்று சொல்ல முடியாது" என்றும் பேட்டியின் ஊடாகச் சொல்லிக் கொள்கிறார் சோ. தர்மன். அவ்வாறெனில் மாரி செல்வராஜ் அவரிடம் ஏன் உரிமை கோர வேண்டும் ? ஒரு இலக்கியவாதி இவ்வளவு குழப்பவாதியாகவா இருப்பது ? ஊடகங்களில் இவ்வளவு சொல்லிவிட்டு, "அதை நான் பெரிதாக்கவில்லை" என்ற பம்மாத்துப் பெருந்தன்மை எதற்கு ? வாசகர்களில் சிலர் அல்லது பலர் அரைகுறை வாசிப்பு அல்லது மேம்போக்கான வாசிப்பு உள்ளவர்களாகவும் இருப்பார்கள். அப்படியானவர்கள், "உங்கள் கதைதான் வந்திருக்கிறது" என்று உளறினால் அந்த உளறல்களையெல்லாம் பொதுவெளிக்குக் கொண்டு வருவது சான்றாண்மைக்கு அழகா ?
சமூகத்தில் சில சாதி வெறியர்கள் மாரி செல்வராஜ் மீது கொண்ட வன்மத்தால் சமூக வலைத்தளங்களில் ஓரிரு நாட்கள் இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டு ஆடினார்களே தவிர, அறிவுலகம் சோ. தர்மனின் வெற்றுரையைக் கண்டுகொள்ளாமல் புறந்தள்ளியது அவ்வுலகின் சான்றாண்மைக்கான சான்று. பின் ஏன் இது பற்றி நான் இத்துணை எழுத வேண்டும் ? ஒருவர் தாம் கற்றுணர்ந்தார் என்ற போர்வையில் இளையோரின் திறமையைக் குறைத்து மதிப்பிடுவதைக் கண்டுகொள்ளாமல் விடுவதையும் தாண்டி, கண்டனக் குரலைப் பதிவு செய்வது ஓரளவு கற்றலும் கற்ற வழி நிற்றலும் உடையோர் தம் கடமை.
மகாபாரதக் கதையில் கர்ணன் தோற்று தருமன் வென்றிருக்கலாம். 'வாழையடி'யை வாசித்து 'வாழை'யைப் பார்த்தால் தெரியும் - அந்த 'தர்மன்' தோற்று இந்த 'கர்ணன்' வெல்வது.
https://www.facebook.com/share/p/2shRFgGaBPcoGhvN/?mibextid=oFDknk