"மஞ்சள் ரோசா மனதை இழுக்குது!"
அத்தியடி, யாழ்ப்பாணம்]
மாறுமா?
***********
தேர்தல் திருவிழாக்
காலமிது-தன்
தேவைக்கு வாக்குறுதி
மழை கொட்டும் நேரமிது.
வாசலுக்கு வந்துநிற்கும்
வருங்கால..
தலைவர்களைப் பாருங்கள்
வாக்குறுதிப் பொட்டலத்தை
வாங்கிப்பிரியுங்கள்-உள்ளே
தேன் இருக்கும்
தினைமா இருகும்
தித்திகும் பண்டங்கள்
நிறைந்திருக்கும்-தமிழ்
தேவைகள் அனைத்தும்
நிவர்த்தி செய்வதாய்-பல
திட்டங்கள் எம்முன்னே
கொட்டிக் கிடக்கும்.
வாக்குதனை
வாங்கிப்போனபின்னோ?
உங்களிடம்வெறும் வாய்
மட்டுமேயிருக்கும்.
பசியிருக்கும் கியூவிருக்கும்
பட்டினியே தொடர்திருக்கும்
அரசமரத்தடியில்
புத்தர் சிலையிருக்கும்.
போதையால் அழிக்கும்
போர் இருக்கும்.
அவர்களிடமோ?
சொகுசுக் காரிருக்கும்
மாளிகை வீடிருக்கும்
Fபார் இருக்கும்
அவர்களுக்கு நிறையப்
படியிருக்கும்.
இவ்வளவு காலமாய்
இதுவே!நடந்தது.
இம்முறையாவது மாறுமா?
இல்லையேல் இதுவே
வாழ்க்கையா?
இனங்களின் பிரச்சனை
தீருமா?
இலங்கையும்
உலகோடு உயருமா?
அன்புடன் -பசுவூர்க்கோபி.
"உயர்ந்திடு உயர்த்திடு....!"
"உயர்ந்திடு உயர்த்திடு பணப்பைக் காத்திடு
உள்ளம் பூரிக்கும் செயலைச் செய்திடு
உடமை எல்லாம் பகிர்ந்து கொடுத்திடு
உதவிக்கரம் நீட்டி அன்பைக் காட்டிட்டு!"
"உடன்பட்டு உண்மை அறிந்து ஒற்றுமையாகிடு
உலகம் போற்றும் சமதர்மம் நாட்டிடு
உரிமை கொண்ட சமூகம் அமைத்திடு
உயர்ந்த கொள்கை என்றும் விதைத்திடு!"
"உயிரிலும் மேலாக ஒழுக்கம் வளர்த்திடு
உறவு நிலவும் நட்பைக் கொடுத்திடு
உதிரம் சிந்தா அமைதி வழங்கிடு
உன்னால் முடிந்ததை துணிந்து செய்திடு!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
எச்சரிக்கை!
***************
கடிக்க வந்த
நாய்க்கு கல்லெறிந்தேன்
அது ஓடித் தப்பியது.
தேன் கூட்டுக்கு கல்லெறிந்தேன்
ஒற்றுமையாக துரத்திவந்தது
என்னை ஓடவைத்தது.
இது போன்ற ஒற்ருமையே
தமிழர்க்கும் தேவை
ஒன்றுசேர் இல்லையேல்
தனித் தனியாய் நின்று
அழிந்தே! போவாய்.
அன்புடன் -பசுவூர்க்கோபி.
மாயபிம்பம்
------------------
"அகிம்சையின் பிறப்பிடம் அண்ணலின் இருப்பிடம்"
"அகிம்சையின் பிறப்பிடம் அண்ணலின் இருப்பிடம்
அன்பின் மகிமையை அன்று கண்டோம்!
அமைதியான போரில் சுதந்திரம் பெற்றதும்
அனைவரும் இணைந்து மகிழ்ச்சி அடைந்தோம்!"
"இந்தியா பிரிந்தது பாகிஸ்தான் உடைந்தது
இன்றைய ஆட்சியில் சுதந்திரம் எங்கே ?
இணைந்து வாழ்வது அறவழியின் பெருமை
இருப்பை மதிப்பது மனிதத்துக்கு மதிப்பு!"
"காந்தி பெருந்தகையை மனதாரக் வணங்குகிறேன்
காகிதமடலில் மட்டுமே வருத்தாமை இன்று!
காந்தி ஜெயந்தி அக்டோபர் இரண்டு
காரணம் அறிந்து முழுமையாக பின்பற்றுவோம்!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
ஐந்தாண்டுக்கு ஒருமுறை அரங்கேறும் திருவிழா
அயல் வீடு அறியாதார்..
அத்தனை வீட்டுக்கும் அஞ்சலில் வருவார்
சிரித்தமுகம்..
கூப்பிய கரம்...
வண்ணங்களில் அச்சிட்ட வாக்குறுதிகள்...
ஆம், கெளரவ யாசகர்கள்.
பழையன கழிதலும் புதியன புகுதலும்...
சொல்லப்படும் நியதி
பழையனவே மீண்டும் புகுதல் இங்கு பழகிவிட்ட பண்பாடு..
இனி..
புகுந்தவரின் புழுகலும் புலம்பலும் சட்டமாகும்.
அவர் உறவுகளின் பெயர்ப்பலகை அலங்கரிக்கும்
உயர் நாற்காலிகள்
புள்ளடி இட்டவரின் கட்டைவிரல் மை ஈரம்
காயும் முன் மறந்துவிடும் அவர் வாய் வீரங்கள்
என் சொல்வது ?.
சுதந்திர சேலை சூடிய தேசத்திரௌபதி தன்
துகிலுரியக் காத்திருக்கும் துச்சாதனர்கள்
ஜனனாயக களத்தின் களையாய் வேர்விடும்
சமுதாய சகுனிகள் தம்
காலிக் குவளையோ! மக்கள்
விடமோ.. அமிர்தமோ.. அவரவர் விருப்பங்களை நிரப்பிடவும்
தேவைக்கு அருந்தி .
உடைத்துச் செல்லவும்..
by
Karunya.
ஐந்தாண்டுக்கு ஒருமுறை அரங்கேறும் திருவிழா
அயல் வீடு அறியாதார்..
அத்தனை வீட்டுக்கும் அஞ்சலில் வருவார்
சிரித்தமுகம்..
கூப்பிய கரம்...
வண்ணங்களில் அச்சிட்ட வாக்குறுதிகள்...
ஆம், கெளரவ யாசகர்கள்.
பழையன கழிதலும் புதியன புகுதலும்...
சொல்லப்படும் நியதி
பழையனவே மீண்டும் புகுதல் இங்கு பழகிவிட்ட பண்பாடு..
இனி..
புகுந்தவரின் புழுகலும் புலம்பலும் சட்டமாகும்.
அவர் உறவுகளின் பெயர்ப்பலகை அலங்கரிக்கும்
உயர் நாற்காலிகள்
புள்ளடி இட்டவரின் கட்டைவிரல் மை ஈரம்
காயும் முன் மறந்துவிடும் அவர் வாய் வீரங்கள்
என் சொல்வது ?.
சுதந்திர சேலை சூடிய தேசத்திரௌபதி தன்
துகிலுரியக் காத்திருக்கும் துச்சாதனர்கள்
ஜனனாயக களத்தின் களையாய் வேர்விடும்
சமுதாயச் சகுநிகள் தன்
காலிக் குவளையோ! மக்கள்
விடமோ.. அமிர்தமோ.. அவரவர் விருப்பங்களை நிரப்பிடவும்
தேவைக்கு அருந்தி .
உடைத்துச் செல்லவும்...
கடவுள்
நடுச்சபை தன்னிலே
உடுக்கை இழந்தவள் - இருகை
எடுத்தே அழைத்தாலன்றி
இடுக்கண் களையேன் - என்று
வேடிக்கை பார்த்திருந்த
நீரெல்லாம் என்ன கடவுள்...!
கர்ணனின் கொடையையே
அவன் வினையாக்கி
அவன் வரங்களையே
சாபமாக்கி.
சூழ்ச்சியால் உயிர்பறித்த
நீரெல்லாம் என்ன கடவுள்...!
துரோணரை வீழ்த்திடப்
பொய்யுரைக்க செய்தீர்
ஆயுதம் ஏந்திடாவிடினும்
ஒரு பக்கச் சார்புடையீர்
இப்படி உம் குற்றப்பட்டியல்
கூடிக்கொண்டே போகிறதே
நீரெல்லாம் என்ன கடவுள்...!
அட.....
நான் மறந்து தான் போய்விட்டேன்
நீர் மனிதன் புனைந்த கடவுள் தானே
மனிதர்கள் கடவுள்களை சித்தரிக்கையில்
நரகுலத்துக்கே உரித்தான
நாலைந்து பண்புகளை
ஆங்காங்கே தூவித்தான் விடுகிறார்கள்
அந்தக் கடவுள்களே அறியா வண்ணம்
by
karunya
இலங்கைக்கு சுதந்திரம் எனியாவது கிடைக்கட்டும்!
***************************************************
கத்தும் கடல் நாற்திசையும் கரையமைத்து வேலிதந்து
முத்தும்,மாணிக்கமும்,இரத்தினமும் மண்ணில் உள்ளடக்கி
முல்லையும்,மருதமும்,நெய்தலும்,குறிஞ்சி பாலையென
இயற்கையவள் எமக்களித்த எங்கள் தேசத்தை
போத்துக்கேயன்,ஒல்லாந்தன்,பிரிட்டிஸ் ஆண்டுவிட்டு
போகையிலே உம்மிடத்தில் எம் பொக்கிஷத்தை
மலைகுடைந்து பாதை தந்து வருமான பயிர் நட்டு
வீதி பல அமைத்து வீடுகட்டி கோட்டை தந்தான்.
நீங்களோ…
முட்செடியும்,புதரும்,புற்றும்,கஞ்சாவும்,களவும்,போதையும்
கொலையும்,கொள்ளையும்,இனத் துவேஷமும்-விஷமும்
சுயநலமும்,மதமும்,மதச் சண்டையும்,இனக் கலவரமும்
பெரும்பான்மை,சிறுபான்மையென பேசியே அழித்தீர்கள்.
அன்றே ஒருதாயின் பிள்ளைகளாய் ஒன்றாய் வாழாமல்
சிங்களவன் தமிழன் முஸ்லீம் பறங்கியென பிரித்து
சண்டையிட்டு சவக்கிடங்கில் போட்டு மகிழ்ந்தீர்கள்
சிங்களவன் மேல்லென்று சினமும் கொண்டீர்கள்.
ஒரு தேசம் ஒரேமக்கள் ஒற்றுமையே எம் நாடு என்றிருந்தால்
வடகிழக்கு,தமிழ்,முஸ்லீம்,தமிழீழம் வரைபடமே இருக்காது.
அரசியலில் உங்களிருப்பை தக்கவைக்க அப்பாவிமக்களையே
ஆட்டிப் படைத்து பாராளுமன்றத்தில் பல் இளித்து குதித்தீர்கள்.
சிங்கள தமிழ் முஸ்லீம் மலையக அப்பாவி மக்களுக்கு
அடிமை,வறுமை,அகதி,உயிரிழப்புகள் தவிர என்னதான் தந்தீர்கள்
ஆட்சி செய்த உங்களுக்கோ அரண்மனையும் வீடும் காரும்
சொத்தும் சுகபோகமும் சுறண்டியெடுத்து சுதந்திரமானீர்கள்.
சேர்ப் பட்டம் பெற்ற தமிழர்களும் எம்மை சேற்றிலே தள்ளினார்கள்
அவர்களுக்கு சிலையமைத்து உலக அரங்குக்கு காட்டினீர்கள்
எழுபது ஆண்டாக மக்களை இருளுக்குள் தள்ளிவிட்டு
ஒளிபெற்று நீங்கள் மட்டும் உன்னதமாய் வாழ்ந்தீர்கள்.
எனிக் காணும் இந்த இழிநிலைகள். மக்களை உயிர் வாழ விடுங்கள்
உன்னத சமுதாயம் உருவாக்க இளையோரே ஒன்றுபடுங்கள்-அது
இன மத மொழியின்றி எல்லோரும் சமமென பார்க்கும் “அரசாகட்டும்”
அவரவர் வாழும் மண்ணிலே அவரவர் கலாச்சாரவிழுமியங்கள் மிழிரட்டும்.
இருநாக்கு படைத்த தமிழ் அரசியல் வாதிகளுக்குமிது சமர்ப்பணம்.
அன்புடன் -பசுவூர்க்கோபி.
"என் உயிரும் உனதடி...."
அன்ன நடையில் இதயத்தை அதிர்வித்து
அருகில் நெருங்கி காமத்தை தெளித்தவளே!
அம்புலி நிலவில் மடியில் சாய்ந்து
அமுத மொழியால் மயக்கம் தந்தவளே!"
"கள்ளம் அற்ற காதல் பொழிபவளே
கன்னக் குழியில் வீழ்த்தியது எனோ?
கட்டு உடலால் என்னைக் கட்டியவளே
கடைக் கண்ணால் சாடை எதற்கோ?"
"தேடி உன்னைக் கண்டு பிடித்தேன்
தேய்வு இல்லா அழகு கொண்டவளே!
தேன் ஒழுகும் புன்னகை பூத்தவளே
தேவதையே என் உயிரும் உனதடி!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
தண்டனையே! தரமுயர்த்தும் நாட்டை!
*********************************************
அன்று..
பசியில் பாண் திருடி
தம்பி தங்கைக்கும்
பசியாற்றிய
பாலகிக்கு
திருடியெனும்
பட்டம் கொடுத்து
மரத்தில் கட்டிவைத்த
செய்தி….
இலங்கையின்
இரக்கமற்ற நீதி
இன்றோ..
மக்கள் பணத்தை
கோடி கோடியாக திருடி
கொள்ளையடித்த
வெள்ளை வேட்டி
கள்ளர்களை
விட்டுவைத்த-பழய
அரசர்களையும்
திருடர்களையும்
அதியுச்சத் தண்டனை
கொடுப்பதே!
நாட்டு மக்களுக்கான
இன்றைய
மனுநீதியாகும்.
அன்புடன் -பசுவூர்க்கோபி.