Aggregator

சர்வதேச நீதிமன்ற விவகாரம் நுட்பமாக கையாளும் இலங்கை

3 months 2 weeks ago
சர்வதேச நீதிமன்ற விவகாரம் நுட்பமாக கையாளும் இலங்கை

சர்வதேச நீதி என்பது உலக நாடுகளின் புவிசார் அரசியல் நலன்களில் தங்கியுள்ளது. ரோஹிகின்ய முஸ்லிம்களுக்கு நடப்பது இன அழிப்பு என்பதை ஏற்கும் பிரித்தானியா, காசாவில் நடப்பது இன அழிப்பு என்பதை ஏற்கத் தயங்கும் காரணம் என்ன என்பதைப் புரிந்துகொண்டு சர்வதேச அரசியலை இலங்கை நன்கு கையாளுகின்றது, காய் நகர்த்துகின்றது. ஆனால் தமிழ்த்தரப்பு?

அ.நிக்ஸன்

காசாவில் நடப்பது இன அழிப்பு என்று தென்னாபிரிக்க அரசு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்குதல் செய்துள்ளதை அமெரிக்கா கண்டித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் அமைதியாக இருக்கின்றன. ஆனாலும் அமெரிக்காவை விடவும் ஐரோப்பிய நாடுகள் காசாவில் நடக்கும் மனிதப்படுகொலைகளை கண்டிப்பதுடன் இஸ்ரேல் அரசு மீதும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. காசாவில் தொடரும் உயிரிழப்புகள் ஏற்க முடியாதவை என நியூயோர்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டத்தில் இந்தியா அறிவித்துள்ளது.

பலஸ்தீன காசா பகுதியில் நிலவும் சூழல் குறித்து இந்தியாவின் தற்போதைய நிலைப்பாட்டை தெரிவித்து உரையாற்றும் போது இந்தியாவின் ஐ.நாவுக்கான நிரந்தரப் பிரதிநிதி ருசிரா கம்போஜ் இவ்வாறு கூறியிருக்கிறார்.

ஆனாலும் இஸ்ரேல் அரசுடன் இந்திய மத்திய அரசு கொள்கையளவில் கைகோர்த்திருக்கிறது. தென்னாபிரிக்க அரசு இன அழிப்பு என்று வழக்குத் தாக்கதல் செய்திருப்பதை இந்திய மத்திய அரசு இதுவரையும் பகிரங்கமாக வரவேற்கவில்லை. மதில்போல் பூனை போன்று உள்ளது.

ஆகவே அமெரிக்க – இந்திய அரசுகள் இஸ்ரேலுடன் நிற்பதை அறிந்தே தென்னாபிரிக்கா தாக்கல் செய்த வழக்கை தமிழ்த்தேசிய அரசியலில் ஈடுபடும் தமிழ்க் கட்சிகளும் பகிரங்கமாக வரவேற்கவில்லை என்பது தெரிகிறது. தமிழ் சிவில் சமூக அமைப்புகளும் பாராட்டவில்லை.

இஸ்ரேலுடன் இணைந்து கமாஸ் இயக்கத்தை அழிக்க வேண்டும் என்பதில் அமெரிக்க இந்திய அரசுகள் ஓரணியில் நிற்கின்றன. தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் வல்லரசுகளிடையே எழுந்துள்ள அரசியல் போட்டியில் தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா முற்று முழுதாக மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப்பாளனாக மாறியிருக்கிறார்.

அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளின் எதிராலியாக தென்னாபிரிக்கா, சர்வதேச நீதிமன்றத்தில் பலஸ்தீன மக்கள் சார்பில் காசாவில் நடப்பது இன அழிப்பு என்று பகிரங்கப்படுத்தி வழக்கும் தாக்கதல் செய்திருந்தாலும் அதனை பலஸ்த்தீன புலம்பெயா் அமைப்புகள் நன்கு பயன்படுத்தி வருகின்றன.

சென்ற வியாழக்கிழமை ஆரம்பித்த முதல் நாள் விசாரணையில் தனது தரப்பு வாதங்களை தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளது. காசாவில் போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் தென்னாபிரிக்கா வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க மாநில அரசுகளின் உறுப்பினர்கள் இருநூறு பேர் காசாவில் போர் போர்நிறுத்தம் செய்ய வலியுறுத்தி ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

சென்ற ஒக்ரோபர் ஏழாம் திகதி போர் ஆரம்பிக்கப்பட்ட நான்கு மாதங்களுக்கும் குறைவான நிலையில் காசாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தையும் கடந்துள்ளதாகவும் இதனால் போரை நிறுத்துமாறும் அமெரிக்க உள்ளூர் பொது அமைப்புகளும் ஜோ பைடனுக்கு கடிதம் எழுதியிருக்கின்றன.

சர்வதேச நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்க எழுநூறு இஸ்ரேல் மக்கள் விரும்பம் தெரிவித்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்களே செய்தி வெளியிட்டிருக்கின்றன. இஸ்ரேலிய மக்களின் எழுபத்து ஐந்து சதவீதமான மக்கள் காசாவில் போர் நடப்பதை விரும்புகின்றனர் என்றும் இந்த நிலையில் எழுநூறு பொது மக்கள் பலஸ்தீன மக்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்கத் தயாராக இருப்பதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் கூறுகின்றன.

இன அழிப்பு என்று தென்னாபிரிக்கா வழக்குத் தாக்கதல் செய்துள்ளதால் கணிசமான அளவு இஸ்ரேலிய மக்களுக்கு அச்சம் ஏற்பட்டு விட்டதாக அரபு ஊடகமான நியுஅரப் (newarab) என்ற ஆங்கில செய்தி இணையத்தளம் கூறுகின்றது.

மியன்மாரில் ரோகின்கிய முஸ்லிம் மக்களுக்கு நடப்பது இன அழிப்பு என்று சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வழக்கு விசாரணைக்கு முழுமையான ஆதரவு வழங்கி வரும் பிரித்தானியா, காசாவில் நடப்பது இன அழிப்பு என்று தென்னாபிரிக்கா தாக்கல் செய்துள்ள வழக்குத் தொடர்பாக அமைதியாக இருக்கின்றது.

சட்ட ஆதாரங்களை தேட வேண்டும் என்று மாத்திரம் பிரித்தானியா கூறியிருக்கிறது. அதேபோன்று கனடாவும் கூறுகின்றது. காசாவில் நடப்பது இன அழிப்புத் தொடர்பான சா்வதேசச் சட்டங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கனடா வலியுறுத்தியிருக்கிறது.

தென்னாபிரிக்க அரசு மேற்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது என்பதால், பிரித்தானிய, கனடா போன்ற நாடுகள் தென்னாபிரிக்க அரசு சர்வதேச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குக்கு ஆதரவு வழங்கத் தயங்குகின்றன.

ஆகவே ரசிய – உக்ரெயன் போர்ச் சூழலில் குழப்பியிருந்த உலக அரசியல் ஒழுங்கு தற்போது இஸ்ரேல் – கமாஸ் போர் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து மேலும் குழப்பமடைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

தென்னாபிரிக்கா வழக்குத் தாக்கல் செய்த பின்னர் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளிடையேயான உலக அரசியல் அணுகுமுறையில் முன்னுக்குப் பின்ன முரணான வாதங்கள் எழுந்துள்ளதையும் அவதானிக்க முடியும்.

இந்த அரசியல் சூழ்நிலையை இலங்கை நன்கு பயன்படுத்துகிறது குறிப்பாக முள்ளிவாய்க்கால் போரில் சுமார் நாற்பதாயிரம் மக்கள் கொல்லப்பட்டும் ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் காணாமல் போயிருப்பதாகவும் 2010 இல் வெளியான ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

ஆனாலும் இன அழிப்பு என்று எந்த ஒரு நாடும் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முன்வரவில்லை. இதற்கு அப்போது ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச இந்தியாவைக் கையாண்ட அணுகுமுறையே காரணம் என்பது வெளிப்படை.

நான்கு மாதங்களில் 23 ஆயிரும் மக்கள் கொல்லப்பட்ட பின்னர் காசாவில் நடப்பது இன அழிப்பு என்று தென்னாபிரிக்கா வழக்குத் தாக்கல் செய்ததை உணர்ந்தும் அச்சமடைந்த நிலையிலும் தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. சர்வதேசத்தை நுட்பமாகக் கையாள ஆரம்பித்திருக்கிறார்.

spacer.png

தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதை மத்திய கிழக்கு நாடுகள் வரவேற்றுள்ளன. இப் பின்னணியில் மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்களுடன் ரணில் விக்கிரமசிங்க சென்ற புதன்கிழமை பேச்சு நடத்தியிருக்கிறார். தூதுவர்களுடன் பேசப்பட்ட விடயங்கள் எதுவும் ஊடகங்களில் வெளிவரவில்லை.

ஆனால் மத்திய கிழக்கு பிராந்தியம் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கைகள் தொடர்பாக ரணில் தூதுவர்களிடம் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேவேளை, ஏனைய கொழும்பில் உள்ள மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் அல்லாத நாடுகளின் தூதுவர்களையும் ரணில் சந்தித்துக் கலந்துரையாடுவார் என்று கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

ஏனெனில் குழப்பியுள்ள உலக அரசியல் ஒழுங்குச் சூழலில் எந்த ஒரு சிறி நாடுகளின் ஒத்துழைப்புகளும் அமெரிக்கா போன்ற வல்லரசுகளுக்கு தேவைப்படுகின்றன. அதேபோன்று சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் ஏதாவதொரு சிறிய நாடுகளைப் பயன்படுத்தக் கூடும் என்ற அச்ச நிலை இலங்கைக்குத் தற்போது உருவாகியுள்ளது.

குறிப்பாக கனடா, இலங்கைத்தீவில் ஈழத்தமிழர்களுக்கு நடந்தது இன அழிப்பு என்று கூறி வருகின்றது. அதுவும் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் ஏட்டிக்குப் போட்டியாக கனடா புலம்பெயர் தமிழர்களின் வாக்குகளை மையமாகக் கொண்டு பேசி வருகின்றன.

சில சமயங்களில் கனடாவின் வெளியுறவுக் கொள்கையில் தமிழ் இனஅழிப்பு என்பது இணைக்கப்பட்டால் அதனை மையமாகக் கொண்டு வேறு சில சிறிய நாடுகளைப் புலம்பெயர் தமிழர்கள் பயன்படுத்துவார்கள் என்று கருதியே அதனைத் தடுக்கும் முன்னேற்பாடுகளில் இலங்கையின் வெளியுலக இராஜதந்திர சேவை அதிகளவு கவனம் செலுத்துகின்றது.

மத்திய கிழக்கு நாடுகளைச் சந்தித்து பலஸ்தீன மக்களுக்கு இலங்கை முழு ஆதரவு என்று ரணில் உறுதியளித்திருந்தாலும், அமெரிக்க – இந்திய அரசுகளைப் பகைத்துகொள்ளாத முறையில் இஸ்ரேல் அரசுடன் இலங்கை முழு அளவில் மறைமுகமாகக் கைகோர்த்திருக்கிறது என்பதுதான் உண்மை.

1983 இல் ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் வடக்குக் கிழக்கில் சிங்கள குடியேற்றங்களை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்து இஸ்ரேல் ஆலோசனை வழங்கியிருந்தமையும் தற்போது ஆதரவு வழங்கக் காரணம்.

இலங்கையைப் பொறுத்தவரை தற்போதைக்குச் சீனாவை ஓரளவுக்குத் தூரத் தள்ளிவைப்பது போன்றதொரு தோற்றத்தைக் காண்பித்தாலும், சீனாவுக்குத் தாக்கம் எழாத முறையில் அமெரிக்க – இந்திய அரசுகளை இலங்கை அரவனைத்துக் கொண்டிருக்கிறது.

அதற்கான காரண – காரியம் என்பது குழப்பியுள்ள உலக அரசியல் ஒழுங்கு நிலைமைக்குள் கனடா ஊடாக வேறு சிறிய நாடுகளை புலம்பெயர் தமிழர்கள் நாடிவிடக் கூடும் என்ற அச்சமே.

இலங்கையும் முற்று முழுதாகச் சீனாவின் பக்கம் செல்வதைத் தடுக்கும் நோக்கிலேயே ஈழத்தமிழர்களுக்கு நடந்தது இன அழிப்பு என்பதைக் கனடாவின் பிரதான அரசியல் கட்சிகள் மூலமாக அமெரிக்கா சொல்ல வைக்கிறது என்ற அவதானிப்புகளும் இல்லாமில்லை.

அதேநேரம் காம்பியா என்ற ஆபிரிக்காவின் சிறிய நாடு ஒன்றுதான் ரோஹின்கிய முஸ்லிம் மக்களுக்கு நடப்பது இனஅழிப்பு என்று சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருக்கிறது. இதனை பிரித்தானியா முழுமையாக ஆதரித்து வருகின்றது.

ஆகவே இவ்வாறான ஒரு பின்னணி புலம்பெயர் அமைப்புகளுக்கு வந்துவிடும் என்ற அச்சம் மற்றும் எதிர்வுகூறல் இலங்கைக்கு உண்டு. இதற்கு ஏற்ப பல அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் இலங்கைத்தீவுக்குள்ளும் வெளியுலகத்திலும் ஆரம்பிக்கப்பட்டு அரங்கேறி வருகின்றன.

இலங்கையின் இத் திட்டத்திற்கு ஜேர்மன், சுவிஸ்லாந்து போன்ற நாடுகளும் ஒத்துழைகை்கின்றன.

ஆனால் தமிழ்த்தரப்பில் இந்த உத்திகள் எதுவுமே இல்லை. தமிழரசுக் கட்சியின் தலைவர் போட்டி, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்துவது மற்றும் போலித் துவாரகா பற்றிய ஆய்வுகளையே தமிழ்த்தரப்பு செய்து கொண்டிருக்கிறது. பல தமிழ் ஊடகங்களும் இதற்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுக்கின்றன.

குறைந்தபட்சம் தென்னாபிரிக்க அரசைப் பாராட்டி ஜனாதிபதி சிறில் ரமபோசாவுக்குக் தமிழ்த்தேசியக் கட்சிகள் கடிதம் எழுதியிருக்கலாம். இன அழிப்பு என்று கூறிவரும் கனடாவின் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளான கென்சர்வேற்டீவ், லிபரல் கட்சி ஆகியவற்றின் தலைவர்களுக்குக் கடிதத்தின் மூலம் பாராட்டிருயிருக்கலாம்.

ஆகவே அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாகவும் இந்தியாவின் வஞ்சக அரசியல் செயற்பாட்டுக்குள்ளும் தமிழ்த்தேசியக் கட்சிகள் முடங்கியுள்ளன என்பதையே இது பகிரங்கப்படுத்துகின்றது.

2006 இல் விடுதலைப் புலிகளைத் தடை செய்த கென்சர்வேற்றீவ் கட்சி ஈழத்தமிழர்களுக்கு நடந்தது இன அழிப்புத்தான் என்று கூறுவதுடன், பதவிக்கு வந்தால் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆகவே பலஸ்த்தீன மக்களை ஆதரிப்பதாகக் காண்பித்துக் கொண்டு இஸ்ரேல் அரசின் பக்கம் இலங்கை நிற்பது போன்று அமெரிக்க இந்திய அரசுகளுக்குக் இரட்டை வேடம்போடுகின்றது. ஆனால் அரசு அற்ற சமூகமாகக் கடந்த எண்பது வருடங்கள் அரசியல் போராட்டம் நடத்தி வரும் ஈழத்தமிழ்த் தரப்பு, 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் ஏன் அமெரிக்க – இந்திய அரசுகளுக்கு மாத்திரம் விசுவாசமாக இருக்கின்றன?

2014 வரையும் தென்னாபிரிக்க அரசு ஈழுத்தமிழர் பக்கம் நின்றது. ஆனால் அதனைத் தமிழர் தரப்பு உரிய முறையில் கையாளவில்லை. பிரதிதி ஜனாதிபதியாக இருந்த சிறில் ரமபோசா 2020 இல் தென்னாபிரிக்க ஜனாதிபதியாக வரக்கூடும் என்று கணித்து அப்போது ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச சிறிரமபோசவை இலங்கைக்குப் பல தடவைகள் அழைத்துப் பேசியிருக்கிறார்.

ஈழத்தமிழர் பிரச்சினை 2009 இல் முடிவடைந்து விட்டது என்றும் இலங்கையில் இன நல்லிணக்கமே அவசியம் என்றும் போதித்திருக்கிறார். இன்று இமாலயப் பிரகடனத்துக்கு தென்னாபிரிக்கா முழு ஆதரவு வழங்குவதுடன் ஈழத்தமிழர்கள் இலங்கையர்களாக வாழ முடியும் என்றும் கூற ஆரம்பித்துள்ளது.

ஆகவே உல அரசியல் விவகாரங்களை அறிந்து நுட்பமாகக் கையாள்வதற்குரிய புதிய இளம் தலைமை ஒன்று ஆங்கில அறிவுடன் உருவாக வேண்டும்.

இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் வல்லரசாகத் தன்னைக் காணிப்பிக்க முற்படும் இந்தியா, சர்வதேச விவாகாரங்களில் இரட்டை வெளியுறவுக் கொள்கைகளோடு எவ்வாறு பயணிக்கிறது என்பதற்கும், சிறிய நாடான இலங்கை ஈழத்தமிழர் விவகாரத்தைச் சர்வதேச அரங்கில் இருந்து முற்றாக நீக்கம் செய்ய, மேற்கு மற்றும் ஐரேப்பிய நாடுகளையும் இந்தியாவையும் அதேநேரம் பொருளாதார உதவிகளைப் பெற சீனாவையும் எவ்வாறு நுட்பமாகக் கையாள்கின்றது என்பதற்கும் கண்முன்னே பல உதாரணங்கள், படிப்பினைகள் உண்டு.

சர்வதேச நீதி என்பது உலக நாடுகளின் புவிசார் அரசியல் நலன்களில் தங்கியுள்ளது. ரோஹிகின்ய முஸ்லிம்களுக்கு நடப்பது இன அழிப்பு என்பதை ஏற்றுக்கொள்ளும் பிரித்தானியா, காசாவில் நடப்பது இன அழிப்பு என்பதை ஏற்கத் தயங்கும் காரணம் என்ன என்பதைப் புரிந்துகொண்டு சர்வதேச அரசியலை இலங்கை நன்கு கையாளுகின்றது, காய் நகர்த்துகின்றது.

ஆனால் தமிழ்த்தரப்பு?

http://www.samakalam.com/சர்வதேச-நீதிமன்ற-விவகாரம/

முக்கிய நகரை கைப்பற்றியதாகக் கூறும் மியான்மர் கிளர்ச்சியாளர்கள்

3 months 2 weeks ago
இந்திய எல்லைக்கு அருகே உள்ள மியான்மர் நகரை கைப்பற்றியதாகக் கூறும் கிளர்ச்சியாளர்கள் – இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அரக்கன் ஆர்மியின் தளபதியாக தவண் ம்ராட் நயிங் செயல்பட்டு வருகிறார். கட்டுரை தகவல் எழுதியவர், ஜானதன் ஹெட் மற்றும் ஆலிவர் ஸ்லௌ பதவி, பாங்காக் மற்றும் லண்டனில் இருந்து 16 ஜனவரி 2024 மேற்கு மியான்மரில் செயல்பட்டுவரும் கிளர்ச்சியாளர்கள், ராணுவத்திடம் இருந்து முக்கிய நகரமான பலேத்வாவை (Paletwa) கைப்பற்றியதாக அறிவித்துள்ளனர். இந்தியா-மியான்மர் நாடுகளுக்கு இடையே செல்லும் முக்கியமான சாலை ஒன்றில் இருக்கும் இந்த நகரம் இந்திய எல்லைக்கு அருகில் உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மியான்மரில் ராணுவத்துக்கு எதிரான இனக் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அரக்கான் ராணுவம் என்பது ஏ.ஏ. (AA - Arakan Army) கிளர்ச்சியாளர்களின் மூன்று குழுக்களில் ஒன்றாகும். இந்த குழு சின் மாநிலத்தின்பலேத்வா நகரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக கூறுகிறது. தனது டெலிகிராம் குழுவில் இந்த அமைப்பு, முழு பலேத்வா நகரத்திலும் ஒரு ராணுவ கவுன்சில் முகாம் கூட இல்லை எனத்தெரிவித்துள்ளது. இந்தக் கூற்று தொடர்பாக மியான்மர் ராணுவம் இதுவரை எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை. பிப்ரவரி 2021-இல், மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அகற்றிவிட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போதிருந்து, மியான்மரில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மியான்மரின் சிட்வே துறைமுகம் அமைந்துள்ள பகுதியில் இருந்து மியான்மர் முழுவதும் சாலை வழியாகப் பயணிக்கமுடியும். இந்திய எல்லைக்கு அருகில் உள்ள பலேத்வா பலேத்வா நகரம் இந்தியா மற்றும் வங்கதேச எல்லைக்கு அருகில் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், இந்தியாவும் இந்த புதிய கிளர்ச்சி இயக்கத்தின் மீது ஒரு கண் வைத்திருக்கவேண்டிய தேவை எழுந்துள்ளது. இந்தியாவின் உதவியுடன் இந்த நகரத்தில் கோடிக்கணக்கான டாலர்கள் மதிப்பிலான வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், தொலைதூர பகுதிகளுக்கான இணைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. மே 2023-இல், இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் மற்றும் மியான்மரின் துணைப் பிரதமர் அட்மிரல் டின் ஆங் சான் ஆகியோர் இணைந்து கலடன் திட்டத்தின் கீழ் ஒரு புதிய சிட்வே துறைமுகத்தைத் திறந்து வைத்தனர். கொல்கத்தாவின் சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் இருந்து பயணத்தைத் தொடங்கிய முதல் இந்திய சரக்குக் கப்பலை சர்பானந்தா சோனோவால் வரவேற்றார். கலடன் மல்டிமோடல் திட்டம் (Kaladan Multimodal Project) கொல்கத்தா துறைமுகத்தை மியான்மரின் சிட்வே துறைமுகத்தை கடல் வழியாக இணைக்கிறது. இதன் நன்மை என்னவென்றால், இது சிட்வே துறைமுகத்தை கலடனுடனும், பலேத்வா நதி வழியாக பலேத்வாவை இந்திய எல்லையுடனும், மியான்மரை லாங்ட்லாய், மிசோராமிலிருந்து சாலை வழியாகவும் இணைக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராக்கைன் மாநிலத்தில் முகாம்களில் ரோஹிஞ்சா அகதிகள் வசித்து வருகின்றனர். வலுவடையும் கிளர்ச்சியாளர்களின் பிடி தற்போது பலேத்வாவைக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ள குழு, ஏஏ (AA) கிளர்ச்சியாளர்களின் புதிய குழுவாகும். இக்குழுவிடம் ஏராளமான ஆயுதங்களும் உள்ளன. மியான்மரில் பல ஆயுதமேந்திய இனக்குழுக்கள் ராணுவத்துடன் சண்டையிட்டு வருகின்றன. இந்த குழுக்கள் ராக்கைன் மற்றும் சின் போன்ற மாநிலங்களிலும் தங்கள் பிடியை வலுப்படுத்தி வருகின்றன. 2021-இல் ராணுவம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, ஏஏ (AA) போராளிகள் ராக்கைனில் தங்கள் நிலையை பலப்படுத்தியிருந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்த குழுக்கள் மாநிலத்தின் 60% தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறின. 2021-இல் ஆட்சிக்கவிழ்ப்பின் போது போர்நிறுத்தம் ஏற்பட்டது என்பதுடன் ராணுவம் இந்த கிளர்ச்சியாளர்களுடன் மோதுவதைத் தவிர்த்து வந்தது. இதனால் சதிப்புரட்சியை எதிர்ப்பவர்கள் மீது தனது கவனத்தை செலுத்த முடியும். இருப்பினும், கடந்த ஆண்டு அக்டோபரில், சகோதரத்துவக் கூட்டணியின் கீழ் ராணுவத்திற்கு எதிரான போராட்டத்தில் இணைவதாக ஏ.ஏ. அறிவித்தது. இதற்குப் பிறகு, இந்த ஏ.ஏ.க்கள் ராணுவத்தின் மீது பல தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தினர். கடந்த 11 வாரங்களில், கிளர்ச்சியாளர்களின் இந்தக் கூட்டணிக்கு எதிராக சீன எல்லைக்கு அருகே மியான்மர் ராணுவம் அவமானகரமான தோல்வியைச் சந்தித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வங்கதேசத்தின் காக்ஸ் பஜாரில் உள்ள முகாமிலும் மியான்மரில் இருந்து வந்த பல லட்சக்கணக்கான அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 2020-இல் நடந்த 42 நாட்கள் போர் கடந்த சனிக்கிழமை, பலேத்வா நகரின் கடைசி ராணுவச் சாவடியான மிவாவையும் ஏ.ஏ. தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. 2020-ஆம் ஆண்டிலும், ஏ.ஏ. அத்தகைய முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் 42 நாட்கள் சண்டையிட்ட பிறகு, இந்த இடத்தை அடைய முடியவில்லை. இந்த நகரத்தின் கட்டுப்பாட்டைப் பெற்றதன் மூலம், கிளர்ச்சியாளர்கள் இப்போது கலடனையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதன் காரணமாக, இந்த கிளர்ச்சியாளர்கள் இப்போது இந்திய எல்லை வரை சாலை மற்றும் நீர் போக்குவரத்தை கட்டுப்படுத்தியுள்ளனர் என்று கூறமுடியும். இந்த கிளர்ச்சியாளர்கள் இப்போது தங்களுக்கென சொந்த தளத்தைக் கொண்டுள்ளனர். அங்கிருந்து அவர்கள் ராக்கைன் மாநிலத்தில் தாக்குதல்களை நடத்தத் திட்டமிடலாம். ரக்கைன் மாநிலத்தில் இனி எந்த நகரங்களையும் இழப்பது மியான்மர் ராணுவத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும். இந்த கிளர்ச்சியாளர்களை சமாளிக்க ராணுவம் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கியோக்த்வாவின் கட்டுப்பாட்டை ஏஏ பெறுவதைத் தடுக்க ராணுவம் முயற்சிக்கும். ஏனெனில் இது ராக்கைனின் தலைநகரான சிட்வே மியான்மர் முழுவதையும் இணைக்கும் பிரதான சாலையில் உள்ளது. இருப்பினும், ஏ.ஏ.வின் அடுத்த கட்டம் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஏஏ தனது முன்னணியைத் தக்க வைத்துக் கொள்ளவும் மேலும் இழப்புகளைக் குறைக்கவும் முயற்சிக்கும் என்று நம்பப்படுகிறது. கூட்டாட்சிக் கட்டமைப்பிற்குள் ஒருவித சுயாட்சி அல்லது சுதந்திரத்தை அடைவதே கிளர்ச்சியாளர்களின் குறிப்பிடப்படாத குறிக்கோளாக இருக்கும். ஆனால், இதை ராணுவ ஆட்சியை விட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியில் நடத்த வேண்டும் என கிளர்ச்சி தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. கிளர்ச்சியாளர்கள் பலேத்வாவைக் கைப்பற்றிய பிறகு, மியான்மர் ராணுவம் தனது மன உறுதியை மீட்டெடுக்கவும், எதிர்ப்பை எதிர்த்துப் போராடுவதற்கு வீரர்களை ஊக்குவிக்கவும் முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிப்ரவரி 2021 இல், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை அகற்றிவிட்டு மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போதிருந்து, மியான்மரில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது, இந்தியாவுக்கு என்ன கவலை? கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்ட நகரம் இந்தியாவிற்கு அருகில் உள்ளது. இந்தியாவின் மிசோரம் மாகாணத்திற்கும் மியான்மரின் சின் மாகாணத்திற்கும் இடையே 510 கி.மீ. நீள எல்லை உள்ளது. இருப்பினும், இருபுறமும் உள்ளவர்கள் எளிதாக அங்கும் இங்கும் செல்ல முடியும். இரு திசைகளிலும் 25 கி.மீ. வரை பயணிக்க எந்தத் தடையும் இல்லை. கடந்த ஆண்டு நவம்பரில், இந்தியா-மியான்மர் எல்லைக்கு அருகே மியான்மர் ராணுவம் மற்றும் ராணுவ ஆட்சியை எதிர்க்கும் படைகளுக்கு இடையே நடந்த தீவிர மோதல்களுக்கு மத்தியில் மியான்மரில் இருந்து இடம்பெயர்ந்த சுமார் 5,000 பேர் மிசோரம் மாநிலத்தை அடைந்தனர். 45 மியான்மர் ராணுவ வீரர்களும் மிசோரம் போலீசாரிடம் சரணடைந்தனர். மியான்மரில் ராணுவப் புரட்சிக்குப் பிறகு ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த வன்முறையில் சிக்கிய ஏராளமானோர் இந்தியா வந்தடைந்தனர். மார்ச் 2022 வரையிலான தரவுகளின்படி, மியான்மரில் இருந்து சுமார் 31,500 அகதிகள் மிசோரம் தலைநகர் ஐஸ்வால் மற்றும் பிற மாவட்டங்களுக்கு வந்து வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் சின் மாகாணத்தில் இருந்து வந்தவர்கள். இப்போது கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்ட பலேத்வா நகரம் இந்த சின் மாகாணத்தைச் சேர்ந்தது. https://www.bbc.com/tamil/articles/c51znvx9zgwo

நாட்டின் பல பகுதிகளிலும் காற்றின் தரம் குறைந்தது!

3 months 2 weeks ago
இந்தியாவிலிருந்து வரும் மாசடைந்த காற்று நாட்டின் சில பகுதிகளில் மூடுபனி போன்று காணப்படும் ; வளிமண்டலவியல் திணைக்களம் Published By: DIGITAL DESK 3 17 JAN, 2024 | 11:16 AM இந்தியாவில் இருந்து வரும் மாசு அடைந்த காற்று இலங்கையின் சில பகுதிகளில் மூடுபனியை போன்று காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து வரும் மாசு அடைந்த காற்றானது, பண்டாரவளை மற்றும் பதுளை போன்ற பகுதிகளில் மூடுபனியை ஏற்படுத்தியுள்ளது என திணைக்களம் தெரிவித்துள்ளது. “புது டெல்லியில் இருந்து காற்று நீரோட்டங்கள் ஒரு வட்ட இயக்கத்தில் இயங்கி வருகிறது. அது டெல்லியில் இருந்து வங்காள விரிகுடாவை நோக்கி பயணிக்கிறது. வங்காள விரிகுடாவில் இருந்து வளைந்து செல்லும் இந்த காற்று கிழக்கிலிருந்து இலங்கைக்குள் நுழைகிறது. இது இலங்கையைப் பாதிக்கிறது” என தெரிவித்துள்ளது. "விரைவில் காற்றுடன் சிறிது ஈரப்பதம் வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், இதன் விளைவாக சிறிதளவில் மழை பெய்யும். இதனால் மூடுபனி குறையும். இருப்பினும் இந்த மாத இறுதிக்குள் இந்தியாவில் இருந்து மேலும் காற்று நீரோட்டங்கள் வரும் என்று தெரிகிறது. தற்போது இலங்கைக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை” என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் நுவரெலியாவில் வெப்பநிலை வீழ்ச்சியடையும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மாகாண மாவட்டத்தில் நேற்று மாலை நிலவரப்படி வெப்பநிலை 6 பாகை செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில், கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், மன்னாரில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாகவும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/174120

குரங்குகளைக் குறிவைக்கும் அரசாங்கம்!

3 months 2 weeks ago
குரங்குகளைக் குறிவைக்கும் அரசாங்கம்! ”மாத்தளை மாவட்டத்தில் ஆண் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக” நாடாளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” மாத்தளை மாவட்டத்தில் உள்ள குரங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக அப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். குரங்குகளின் அதிகரிப்பால் பயிர்ச் செய்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே இதனைக் கருத்தில் கொண்டு இலங்கையில் முதன் முறையாக ஆண் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் திட்டத்தை மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1366228

குரங்குகளைக் குறிவைக்கும் அரசாங்கம்!

3 months 2 weeks ago
Monkey-900.jpg?resize=750,375&ssl=1 குரங்குகளைக் குறிவைக்கும் அரசாங்கம்!

”மாத்தளை மாவட்டத்தில் ஆண் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக” நாடாளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்  போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”  மாத்தளை மாவட்டத்தில் உள்ள குரங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இதன் காரணமாக அப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். குரங்குகளின் அதிகரிப்பால் பயிர்ச் செய்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே இதனைக் கருத்தில் கொண்டு இலங்கையில் முதன் முறையாக ஆண் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும்  திட்டத்தை மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1366228

டாடோ என்கின்ற டாலிபோ

3 months 2 weeks ago
கோரோனாவின் பின்னர் விலைவாசிகள் ஏறிக் கொண்டே இருந்தன. கூடவே பல பொருட்களுக்குத் தட்டுப்பாடுகளும் இருந்தன. அதிலும் முக்கியமாக கட்டிடப் பொருட்களை பெரும் விலைகள் கொடுத்தே வாங்க வேண்டிய நிலை உருவாகி இருந்தது. இந்த நிலையால் பெரிய பெரிய நிறுவனங்களே ஆட்டம் காணத் தொடங்கிய போது, சின்னச் சின்ன நிறுவனங்கள் தள்ளாடி விழுந்து கொண்டிருந்ததில் ஒன்றும் ஆச்சரியமில்லை. டாடோவினால் ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைத்துக் கட்ட முடியாத நிலை உருவாகி இருந்தது. அவனுடன் ஒப்பந்தம் செய்தவர்கள் “வீட்டு வேலை எப்போது முடியும்?” என்று அவனை நெருக்க ஆரம்பித்தார்கள். தனியாக இருந்து தவிப்பதை விட வேறு சில கட்டிட ஒப்பந்தக்காரர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டால், இந்தக் குழிக்குள் இருந்து வெளியே வந்து விடலாம் என்று டாடோ கணக்குப் போட்டுக் கொண்டான். பலரைத் தொடர்பு கொண்ட போது பேர்லின், பிராண்டன்பூர்க் நகரத்தில் இருந்து சேர்பியா நாட்டைச் சேர்ந்த முகமுது(28), டாடோவுடன் துணை ஒப்பந்தக்காரராக இணைய விருப்பம் தெரிவித்தான். இங்கேதான் தவறு நடக்கப் போகிறது. அது தனது வாழ்க்கையையே புரட்டிப் போடப் போகிறது என்பதை டாடோ அப்பொழுது அறிந்திருக்கவில்லை. அப்பொழுதே தனது நிறுவனம் திவால் ஆகிப் போய்விட்டது என்று டாடோ அறிவித்திருந்தால் தப்பித்திருப்பான். கொரோனா காலம் முடிந்ததன் பின்னர் பல நிறுவனங்கள் தாங்கள் திவாலாகிவிட்டன என்று சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டு, அரச உதவிகளையும் பெற்றுக் கொண்டன. ஆனால் ஏனோ டாடோ அதைப் பற்றி அப்பொழுது சிந்திக்கவில்லை. புதிதாக இணைந்த துணை ஒப்பந்தக்காரன் முகமதுவின் உதவியுடன் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கும் டாடோ ஒப்பந்தங்கள் செய்ய ஆரம்பித்தான். புத்துணர்ச்சி வந்ததால் பழைய, புதிய ஒப்பந்தங்களுக்கான கட்டிட வேலைகள் இரண்டையும் ஒரே நேரத்தில் முடுக்கி விட்டான். வரும் பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காது இரண்டு குதிரைகளில் ஒரே நேரத்தில் பயணிக்கத் தொடங்கினான். டாடோ கேட்கும் பொழுதெல்லாம் முகமது பணம் கொடுத்துக் கொண்டிருந்தான். அப்படி முகமது, தனது பங்குக்காக, டாடோவிடம் கொடுத்த பணம் இப்பொழுது இரு நூறு ஆயிரங்களைத் தாண்டி விட்டிருந்தது. ஆனால் இலாபத்தின் பங்கோ அல்லது கொடுத்த பணத்துக்கான கணக்கோ முகமதுவுக்குக் கிடைக்கவில்லை. பல தடவைகள் நச்சரித்தும் வெறும் பத்தாயிரம் யூரோக்கள் மட்டுமே டாடோவிடம் இருந்து முகமதுவுக்கு திரும்பக் கிடைத்திருந்தது. அதே நேரம் டாடோவிடம் முதலீடு செய்யவென கடனாகப் பெற்ற பணத்தை, திருப்பிக் கொடுக்க வேண்டிய கட்டாயமும் முகமதுவுக்கு வந்திருந்தது. முகமதுவுக்கு பணம் தந்தவன் குர்தீஸ் இனத்தைச் சேர்ந்தவன். ஒரு மாபியா குழுவாக பேர்லீனில் செயற்பட்டுக் கொண்டிருப்பவன். தமிழ்ச்சினிமாவில் வரும் கந்து வட்டி வில்லன்களை இப்பொழுது கற்பனை செய்து பார்த்தீர்களானால் குர்தீஸ் இன மாபியாவை ஓரளவுக்கு நீங்கள் வடிவமைத்துக் கொள்வீர்கள். பணக் கொடுக்கல் வாங்கல்களினால், 18.03.2023 இல் பேர்லின் வீதியில் இரு குழுக்களுக்கிடையே ஒரு கை கலப்பு நடந்திருக்கிறது. அந்தக் கைகலப்பில் ஈடுபட்டவர்கள் பொருட்களைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கியும் இருக்கிறார்கள். இந்தக் கைகலப்பில், துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடனும் அடிபட்ட காயங்களுடனும் 26 மற்றும் 28 வயதுடைய இருவரை பொலிஸார் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். கைகலப்பில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அந்தக் கைகலப்பில் முகமதுவும் இருந்திருக்கிறான் என்பதை விசாரணையில் பொலிஸார் தெரிந்து கொண்டார்கள். முகமது ஒரு நிறுவனத்தின் சொந்தக்காரனாக இருந்து கொண்டு யேர்மன் நாட்டின் கராட்டி சம்பியனாகவும் இருந்தவன். ஆகவே அவனுக்கும் அடிதடி கைவந்திருந்தது. இன்னும் பணம் இருந்தால்தான் டாடோவினால் தனது கட்டிட வேலைகளைத் தொடர முடியும் என்ற நிலை உருவாகி விட்டிருந்தது. மேற்கொண்டு பணம் வரும் வழிகள் எதுவும் இனி இல்லை என்று டாடோவுக்குத் தெரியத் தொடங்கியது. ஒரு பக்கம் கொடுத்த பணத்தை முகமது திருப்பிக் கேட்டு அவசரப் படுத்திக் கொண்டிருந்தான். மறு பக்கம் “வீடு எப்போ முடியும்?” என ஒப்பந்தக்காரர்கள் நெருக்க ஆரம்பித்திருந்தார்கள். டாடோ பயணித்த இரு குதிரைகளும் ஒன்றாகத் தரையில் வீழ்ந்திருந்தன. வேறு வழியில்லை எனத் தீர்மானித்த டாடோ, தான் திவாலாகி விட்டதாக அரசாங்கத்துக்கு அறிவித்து விட்டான். விடயத்தை அறிந்து தொலைபேசியில் அழைத்து தான் கொடுத்த பணத்தை முகமது கேட்ட போது அரசாங்கத்துக்கு அறிவித்த ‘திவால்’ என்ற வார்த்தையையே டாடோ, முகமதுவுக்கும் சொன்னான். பணத்தைக் கொடுத்து ஏமாந்து விட்ட மனவுளைச்சல், பணத்தைக் கடனாகத் தந்தவனிடம் இருந்து வந்த அச்சுறுத்தல் இரண்டுக்கும் நடுவே மாட்டிக் கொண்ட முகமது தூக்கம் இன்றித் தவித்தான். முகமதுவால் ஓடி ஒளிய முடியாது. காரணம் அவனது தாயும் சகோதரியும் பேர்லினில்தான் வசிக்கிறார்கள். தன்னால் அவர்களுக்கு பிரச்சனைகள் வந்துவிடுமோ என்ற அச்சம் அவனை ஒரு புறம் பயமுறுத்தியது. முகமது தனது வேலையாளான லூக்காவை தொலைபேசியில் அழைத்தான். “காரை எடுத்துக் கொண்டு வா ஸ்வேபிஸ்ஹாலுக்குப் போகவேணும்” என்றான். லூக்காவும் வேலை நிமித்தம் சேர்பியாவில் இருந்து யேர்மனிக்கு வந்தவன்தான். லூக்கா, முதலாளி முகமதுவுக்கு மிகவும் பிடித்தவன், நம்பிக்கையானவன். சாலை விதிகளைச் சரியாகக் கடைப் பிடிக்காமல் தனது சாரதி பத்திரத்தை இழந்திருந்த முகமதுவுக்கு லூக்காதான் இப்பொழுது சாரதி. VW UP காரில் பேர்லினில் இருந்து இருவரும் அதிகாலை புறப்பட்டு மதியம் ஸ்வேபிஸ்ஹாலை வந்தடைந்தார்கள். டாடோ வீட்டில் ஒன்று கூடிப் பேசினார்கள். இனிமையாக, கோபமாக, அதட்டி என்று எந்தவகையில் கேட்டாலும், டாடோ திரும்பத் திரும்பச் சொன்னது ,”என்னிடம் பணம் இல்லை. நான் திவாலாகிப் போயிட்டன்” என்பதுதான். முகமது பொறுமை இழந்து கொண்டிருந்தான். அவன் பழகிய கராத்தே வெளியேவரத் தொடங்கியது. வன்முறைக்கும் டாடோ அசைந்து கொடுக்கவில்லை. டாடோவை இழுத்துக் கொண்டு வந்து காருக்குள் ஏற்றிக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள். நடந்ததை அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்த டாடோவின் மனைவிக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. நான்கு வருடங்களுக்கு முன்னர்தான் குறேஸியாவில் இருந்து யேர்மனிக்கு வந்தவள். மொழி அவளுக்கு இன்னும் பரிட்சயம் ஆகவில்லை. திகைத்துப் போய் பல்கணியில் அவள் நின்றாலும் தனது கணவனை ஏற்றிக் கொண்டு அவர்கள் புறப்பட்ட வாகனத்தின் இலக்கத்தை எழுதி வைத்துக் கொண்டாள். காரின் வலது பக்க இருக்கையில் டாடோ இருந்தான். பின் இருக்கையில் முகமது இருந்தான். அவன் கையில் ஒரு சுத்தியல் இருந்தது. வாகனத்தில் பயணிக்கும் போது முன் இருக்கை இரண்டுக்கும் இடையே இருந்த இடத்தைக் காட்டி “இங்கே உன் வலது கையை வை” என்று டாடோவிடம் முகமது சொல்ல அவனும் அந்த இடத்தில் கையை வைத்தான். முகமதுவின் கையில் இருந்த சுத்தியல் வேகமாக டாடோவின் கையில் இறங்கியது. டாடோ அலற ஆரம்பித்தான். சிறிது நேரப் பயணத்துக்குப்பின், “டாடோ உன் இடது கையை வை” என முகமது திரும்பவும் கட்டளையிட்டான். முகமதுவின் கையில் இருக்கும் சுத்தியல் தன் தலையில் இறங்கினால்..? டாடோவுக்குப் பயம் பிடித்துக் கொண்டது. காரை ஓட்டிக் கொண்டிருந்த லூக்காவும் இடையிடையே டாடோவுக்கு ஏதாவது செய்து கொண்டிருந்தான். தலைக்கு வர இருப்பது கையோடு போகட்டும் என்று டாடோ இடது கையை வைத்தான். மீண்டும் சுத்தியலால் முகமது டாடோவின் கையில் அடித்தான். பேர்லினுக்கான பயணம் ஆறு மணித்தியாலங்கள் நீடித்தது. அந்த ஆறு மணித்தியாலங்களும் தமக்குக் கோபம் வரும் பொழுதெல்லாம் டாடோவை சுத்தியலாலும் கைகளாலும் முகமதுவும் லூக்காவும் தாக்கிக் கொண்டே பயணித்தார்கள். பயணத்தின் போது தனது இன்னுமொரு வேலையாளான எல்விஸ்ஸை முகமது அலைபேசியில் அழைத்து, சில வேலைகளைச் செய்யும்படி சொன்னான். எல்விஸ்ம் சேர்பிய நாட்டைச் சேர்ந்தவன் . அவனது அடுத்த தொலைபேசி டாடோவின் வீட்டுக்குப் போனது. வீட்டுத் தொலைபேசி அழைப்பை டாடோவின் மனைவியே எடுத்தாள். “உன்னுடைய புருசன் உனக்குத் திரும்பத் தேவை என்றால், முதற்கட்டமாக இருபத்தைந்தாயிரம் யூரோக்களை தருவதற்கு ஏற்பாடு செய்” முகமதுவின் குரல் அவளுக்கு எச்சரித்தது. “ஹலோ” சொல்லிவிட்டு புன்னகையுடன் டாடோவின் மனைவியைப் பார்த்த வங்கி ஊழியர் என்ன வேண்டும் என்ற பார்வையுடன் நின்றார். “பணம். இருபத்தையாயிரம்” “இருபத்தையாயிரம்?” கேட்டு விட்டு டாடோவின் மனைவியைப் பார்த்தார் வங்கி ஊழியர். “அவ்வளவு பணத் தேவையா? தனியாகவா வந்தீர்கள்?” கேட்டுக் கொண்டே பணம் எடுப்பதற்கான படிவத்தை நிரப்பித் தரும்படி அவளிடம் கொடுத்தார். யேர்மனியில் சில காலமாக தனியாக இருப்பவர்களை வயது போனவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் வேலைகள் நடந்து கொண்டிருப்பதால், வங்கிகளில் அதிகமாகப் பணத்தை எடுக்கும் போது இப்படியான கேள்விகள் கேட்பது வழக்கம். இன்றும் வங்கி ஊழியர் டாடோவின் மனைவியிடம் அப்படித்தான் கேட்டார். அது பலனைத் தந்தது. பொலிஸாரின் கேள்விகளுக்கு டாடோவின் மனைவி பதில் சொல்ல, அவளுக்கு அப்பொழுது மொழி பிரச்சனையாக இருக்கவில்லை. அவளது இரண்டு மகள்மாரும் பாடசாலை முடித்து வீடு திரும்பி இருந்ததால், தாயின் பதிலை அவர்கள் மொழிபெயர்த்தார்கள். ஒரு குற்றம் நடந்த இடத்தில் அதைச் செய்தவன் பதட்டத்தில் ஏதாவது சிறிய தடயத்தையாவது விட்டுச் செல்வான் என்று சொல்வார்கள். முகமது தனது சொந்தக் காரில் வந்து பெரிய தடயத்தையே விட்டுச் சென்றிருந்தான். பொலிஸாருக்கு அதிக பிரச்சனைகள் இருக்கவில்லை. வாகன இலக்கத்தை வைத்தே ஆளை அடையாளம் கண்டு விட்டார்கள். ஸ்வேபிஸ்ஹால் பொலிஸாரிடம் இருந்து பேர்லின் பொலிஸாருக்கு தகவல்கள் போனாலும் அவர்கள் நிதானமாகவே நடவடிக்கை எடுத்தார்கள். முகமதுவின் நடவடிக்கைகளை அவர்கள் ஏற்கனவே அவதானித்து இருந்ததால், சிறப்பு அதிரடிப்படையை வரவழைத்தார்கள்.

போர் முழக்கம் - சுப.சோமசுந்தரம்

3 months 2 weeks ago
போர் முழக்கம் - சுப.சோமசுந்தரம் நியூசிலாந்து பாராளுமன்ற வரலாற்றில் மிகவும் வயது குறைந்த (21) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 'ஹனா ரஹிதி மெய்பி கிளார்க்' என்ற பெண் அந்நாட்டின் தொல்பழங்குடி இனமான 'மவுரி' இனத்தைச் சார்ந்தவர். பழங்குடியினருக்கான சமூகச் செயற்பாட்டாளர். தம் இனத்தின் போர் முழக்கப் பாடலைப் பாடி பாராளுமன்றத்தில் தமது உரையைத் தொடங்கினார். அவருடன் இணைந்து வேறு சிலரும் முழக்கத்தில் பங்கெடுத்தது சிறப்பு. தலைவிரி கோலத்தில், "இளங்கோவடிகளின் சிலம்பு எடுத்தியம்பும் கொற்றவையோ, தோழர் சு.வெங்கடேசனின் வேள்பாரிக் கொற்றவையோ, உலகில் தீமையை அழிக்கும் கூற்றமோ !" என்று வியக்க வைக்கிறார் மெய்பி கிளார்க். "இன்னுயிர் ஈந்தும் உங்களது உரிமைகளை மீட்டெடுக்க முயல்வேன்" என்று தமது உரையில் நாட்டின் பூர்வகுடிகளுக்கு மேலும் உறுதி கூறினார். அப்போர் முழக்கமும் அவரது உரையும் இணைய தளங்களில் உலகெங்கும் பரவின. வரலாறு அறிந்த நாள் முதல் நமது தமிழ்க்குடி தொன்மையான நாகரிகத்தில் வகைப்படுத்தப்பட்டதால், பழங்குடிப் பாடல் என்று தமிழுக்கு ஏதும் அமையவில்லை. தமிழ் நிலத்தில் வாழும் காணி, தோடர் போன்ற தொல்குடிகளுக்கு இருக்கலாம். போரில் வெற்றி பெற்றவரைப் பாடுவது பரணி எனும் சிற்றிலக்கியமாய்த் தமிழில் வகைப்படுத்தப்பட்டது. பரணியில் போர் மேற்கொண்டு செல்லுகையில் போர் முழக்கமும் உண்டு. நமக்கான முதல் பரணி இலக்கியமான கலிங்கத்துப்பரணியே கி.பி 12-ம் நூற்றாண்டை சார்ந்ததுதான். காலத்தால் அவ்வளவு சமீபத்தியது. முதலாம் குலோத்துங்க சோழனின் படைத் தளபதியான கருணாகர தொண்டைமான் தலைமையில் சோழர் படை அனந்தவர்மன் எனும் கலிங்க மன்னனின் படையை வெற்றி கொண்டதை செயங்கொண்டார் எனும் புலவர் பாடுவது கலிங்கத்துப் பரணி. இதில் போர் முழக்கம் உண்டு. நியூசிலாந்தின் மெய்பி கிளார்க் எழுப்பும் போர் முழக்கத்திற்கும் நமது செயங்கொண்டாரின் போர் முழக்கத்திற்கும் வேறுபாடு உண்டு. முன்னது தம் இன உரிமைக்கான முழக்கம்; பின்னது திறை செலுத்தத் தவறிய கலிங்க மன்னன் மீது படை எடுத்துச் சென்ற சோழனின் ஏகாதிபத்திய முழக்கம். முன்னது பெருமையுடன் பாட வல்லது; பின்னது தற்போதைய பண்பட்ட உலகத்தில் சிறுமை உணர்வு கொண்டது. உள்ளத்தை உறுத்தும் இப்பொருள் வேறுபாட்டைச் சற்றே மறந்து, இலக்கியம் என்ற வகையில் கலிங்கத்துப்பரணியின் போருக்கான அறைகூவலை மெய்பி கிளார்க்கின் உணர்வோடும் முகபாவனைகளுடனும் கற்பனை செய்வது ஓர் இலக்கியப் பார்வை. அவ்வளவே ! அப்பார்வை செல்லும் பாதையில் கலிங்கத்துப்பரணி பாடி சிறிது பயணித்துப் பார்ப்போமே ! "எடுமெடு மெடுமென வெடுத்ததோர் இகலொலி கடலொலி யிகக்கவே விடுவிடு விடுபரி கரிக்குழாம் விடும்விடு மெனுமொலி மிகைக்கவே" - பாடல் 404. பொருள் : '(படைக் கருவிகளை) எடும் எடும்' என விடுத்த மாறுபட்ட ஒலியானது (இகல் ஒலி) பொங்கியெழும் கடல் எழுப்பும் ஒலியை விட மிகுதியாகக் (இகக்க) கேட்பதாக ! குதிரை (பரி), யானைக் (கரி) கூட்டத்தினைக் (குழாம்) கட்டவிழ்த்து 'விடும் விடும்' என்று மிகுதியாய் ஒலிப்பதாக ! "வெருவர வரிசிலை தெறித்தநாண் விசைபடு திசைமுகம் வெடிக்கவே செருவிடை யவரவர் தெழித்ததோர் தெழியுல குகள்செவி டெடுக்கவே" - பாடல் 405. பொருள் : நன்கு கட்டமைக்கப்பட்ட வில்லில் (வரிசிலை) அச்சம் கொள்ளும் வகையில் (வெருவர) நாணிலிருந்து தெறித்த (தெறித்த நாண்) அம்பு சென்ற (விசைபடு) திசையே (திசைமுகம்) வெடிக்கட்டும் ! போரிடுவோர் (செருவிடை அவரவர்; செருதல் - போரிடுதல்) அதட்டும் ஒலியினால் (தெழி) உலகம் செவிடாகட்டும் (உலகுகள் செவிடெடுக்கவே) ! "எறிகட லொடுகடல் கிடைத்தபோல் இருபடை களுமெதிர் கிடைக்கவே மறிதிரை யொடுதிரை மலைத்தபோல் வருபரி யொடுபரி மலைக்கவே" - பாடல் 406. பொருள் : ஆர்ப்பரிக்கும் கடலோடு (எறி கடலொடு) கடல் மோதியது போல் (கிடைத்த போல்) இருதரப்புப் படைகளும் ஒன்றையொன்று எதிர்கொள்வதாக (எதிர் கிடைக்கவே) ! மடங்கி வரும் அலையோடு (மறி திரையொடு) அலை மோதியது போல், வருகின்ற குதிரைப்படையோடு (வரு பரியொடு) இங்கிருக்கும் குதிரைப்படை மோதுவதாக ! "கனவரை யொடுவரை முனைத்தபோற் கடகரி யொடுகரி முனைக்கவே இனமுகின் முகிலொடு மெதிர்த்தபோல் இரதமொ டிரதமு மெதிர்க்கவே" - பாடல் 407. பொருள் : பருத்த மலையோடு (கன வரையொடு; வரை - மலை) மலை போரிட்டதைப் போல் மதம் பொழியும் யானைகளோடு (கட கரியொடு) யானைகள் போரிடுவதாக ! திரளான மேகங்களோடு (இன முகின்) மேகங்கள் (முகில்) எதிர்ப்பது போல் தேர்ப்படையினைத் தேர்ப்படை (இரதமொடு இரதம்) எதிர்ப்பதாக ! "பொருபுலி புலியொடு சிலைத்தபோற் பொருபட ரொடுபடர் சிலைக்கவே அரியினொ டரியின மடர்ப்பபோல் அரசரு மரசரு மடர்க்கவே" - பாடல் 408. பொருள் : போரிடும் புலி (பொரு புலி; பொருதல் - போரிடுதல்) புலியோடு சினம் கொள்வது போல் (சிலைத்த போல்; சிலைத்தல் - இசைச் சொல் - ஓசைப் பொருண்மையுடைய சொல்) போர் வீரரோடு (பொரு படரொடு) போர் வீரர் சினம் கொள்வதாக ! சிங்கத்தோடு சிங்கம் (அரியினொடு அரியினம்) மோதிக் கடுமையாகத் தாக்குவது போல் (அடர்ப்ப போல்) படைத்தளபதிகளோடு தளபதிகள் தாக்குவதாக (அரசரும் அரசரும் அடர்க்கவே) !

போர் முழக்கம் - சுப.சோமசுந்தரம்

3 months 2 weeks ago

போர் முழக்கம்
            - சுப.சோமசுந்தரம்

               நியூசிலாந்து பாராளுமன்ற வரலாற்றில் மிகவும் வயது குறைந்த (21) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 'ஹனா ரஹிதி மெய்பி கிளார்க்' என்ற பெண் அந்நாட்டின் தொல்பழங்குடி இனமான 'மவுரி' இனத்தைச் சார்ந்தவர்.  பழங்குடியினருக்கான சமூகச் செயற்பாட்டாளர். தம் இனத்தின் போர் முழக்கப் பாடலைப் பாடி பாராளுமன்றத்தில் தமது கன்னிப் பேச்சைத் தொடங்கினார். அவருடன் இணைந்து வேறு சிலரும் முழக்கத்தில் பங்கெடுத்தது சிறப்பு. தலைவிரி கோலத்தில், "இளங்கோவடிகளின் சிலம்பு எடுத்தியம்பும் கொற்றவையோ, தோழர் சு.வெங்கடேசனின் வேள்பாரிக் கொற்றவையோ,  உலகில் தீமையை அழிக்கும் கூற்றமோ !" என்று வியக்க வைக்கிறார் மெய்பி கிளார்க். "இன்னுயிர் ஈந்தும் உங்களது உரிமைகளை மீட்டெடுக்க முயல்வேன்" என்று தமது உரையில் நாட்டின் பூர்வகுடிகளுக்கு மேலும் உறுதி கூறினார். அப்போர் முழக்கமும் அவரது உரையும் இணைய தளங்களில் உலகெங்கும் பரவின.
                 வரலாறு அறிந்த நாள் முதல் நமது தமிழ்க்குடி தொன்மையான நாகரிகத்தில் வகைப்படுத்தப்பட்டதால், பழங்குடிப் பாடல் என்று தமிழுக்கு ஏதும் அமையவில்லை. தமிழ் நிலத்தில் வாழும் காணி, தோடர் போன்ற தொல்குடிகளுக்கு இருக்கலாம். போரில் வெற்றி பெற்றவரைப் பாடுவது பரணி எனும் சிற்றிலக்கியமாய்த் தமிழில் வகைப்படுத்தப்பட்டது. பரணியில் போர் மேற்கொண்டு செல்லுகையில் போர் முழக்கமும் உண்டு. நமக்கான முதல் பரணி இலக்கியமான கலிங்கத்துப்பரணியே கி.பி 12-ம் நூற்றாண்டைச் சார்ந்ததுதான். காலத்தால் அவ்வளவு சமீபத்தியது. முதலாம் குலோத்துங்க சோழனின் படைத் தளபதியான கருணாகர தொண்டைமான் தலைமையில் சோழர் படை அனந்தவர்மன் எனும் கலிங்க மன்னனின் படையை வெற்றி கொண்டதை செயங்கொண்டார் எனும் புலவர் பாடுவது கலிங்கத்துப் பரணி. இதில் போர் முழக்கம் உண்டு. நியூசிலாந்தின் மெய்பி கிளார்க் எழுப்பும் போர் முழக்கத்திற்கும் நமது செயங்கொண்டாரின் போர் முழக்கத்திற்கும் வேறுபாடு உண்டு. முன்னது தம் இன உரிமைக்கான முழக்கம்; பின்னது திறை செலுத்தத் தவறிய கலிங்க மன்னன் மீது படை எடுத்துச் சென்ற சோழனின் ஏகாதிபத்திய முழக்கம். முன்னது பெருமையுடன் பாட வல்லது; பின்னது தற்போதைய பண்பட்ட உலகத்தில் சிறுமை உணர்வு கொண்டது. உள்ளத்தை உறுத்தும் இப்பொருள் வேறுபாட்டைச் சற்றே மறந்து, இலக்கியம் என்ற வகையில் கலிங்கத்துப்பரணியின் போருக்கான அறைகூவலை மெய்பி கிளார்க்கின் உணர்வோடும் முகபாவனைகளுடனும் கற்பனை செய்வது ஓர் இலக்கியப் பார்வை. அவ்வளவே ! அப்பார்வை செல்லும் பாதையில் கலிங்கத்துப்பரணி பாடி சிறிது பயணித்துப் பார்ப்போமே !

"எடுமெடு மெடுமென வெடுத்ததோர் இகலொலி கடலொலி யிகக்கவே
விடுவிடு விடுபரி கரிக்குழாம் விடும்விடு மெனுமொலி மிகைக்கவே"
                       - பாடல் 404.
பொருள் : '(படைக் கருவிகளை) எடும் எடும்' என விடுத்த மாறுபட்ட ஒலியானது (இகல் ஒலி) பொங்கியெழும் கடல் எழுப்பும் ஒலியை விட மிகுதியாகக் (இகக்க) கேட்பதாக ! குதிரை (பரி), யானைக் (கரி) கூட்டத்தினைக் (குழாம்) கட்டவிழ்த்து 'விடும் விடும்' என்று மிகுதியாய் ஒலிப்பதாக !

"வெருவர வரிசிலை தெறித்தநாண் விசைபடு திசைமுகம் வெடிக்கவே
செருவிடை யவரவர் தெழித்ததோர் தெழியுல குகள்செவி டெடுக்கவே"
                        - பாடல் 405.
பொருள் : நன்கு கட்டமைக்கப்பட்ட வில்லில் (வரிசிலை) அச்சம் கொள்ளும் வகையில் (வெருவர) நாணிலிருந்து தெறித்த (தெறித்த நாண்) அம்பு சென்ற (விசைபடு) திசையே (திசைமுகம்) வெடிக்கட்டும் ! போரிடுவோர் (செருவிடை அவரவர்; செருதல் - போரிடுதல்) அதட்டும் ஒலியினால் (தெழி) உலகம் செவிடாகட்டும் (உலகுகள் செவிடெடுக்கவே) !

"எறிகட லொடுகடல் கிடைத்தபோல் இருபடை களுமெதிர் கிடைக்கவே
மறிதிரை யொடுதிரை மலைத்தபோல் வருபரி யொடுபரி மலைக்கவே"
                        - பாடல் 406.
பொருள் : ஆர்ப்பரிக்கும் கடலோடு (எறி கடலொடு) கடல் மோதியது போல் (கிடைத்த போல்) இருதரப்புப் படைகளும் ஒன்றையொன்று எதிர்கொள்வதாக (எதிர் கிடைக்கவே) ! மடங்கி வரும் அலையோடு (மறி திரையொடு) அலை மோதியது போல், வருகின்ற குதிரைப்படையோடு (வரு பரியொடு) இங்கிருக்கும் குதிரைப்படை மோதுவதாக !

"கனவரை யொடுவரை முனைத்தபோற் கடகரி யொடுகரி முனைக்கவே
இனமுகின் முகிலொடு மெதிர்த்தபோல் இரதமொ டிரதமு மெதிர்க்கவே"
                      - பாடல் 407.
பொருள் : பருத்த மலையோடு (கன வரையொடு; வரை - மலை) மலை போரிட்டதைப் போல் மதம் பொழியும் யானைகளோடு (கட கரியொடு) யானைகள் போரிடுவதாக ! திரளான மேகங்களோடு (இன முகின்) மேகங்கள் (முகில்) எதிர்ப்பது போல் தேர்ப்படையினைத் தேர்ப்படை (இரதமொடு இரதம்) எதிர்ப்பதாக !

"பொருபுலி புலியொடு சிலைத்தபோற் பொருபட ரொடுபடர் சிலைக்கவே
அரியினொ டரியின மடர்ப்பபோல் அரசரு மரசரு மடர்க்கவே"
                      - பாடல் 408.
பொருள் : போரிடும் புலி (பொரு புலி; பொருதல் - போரிடுதல்) புலியோடு சினம் கொள்வது போல் (சிலைத்த போல்; சிலைத்தல் - இசைச் சொல் - ஓசைப் பொருண்மையுடைய சொல்) போர் வீரரோடு (பொரு படரொடு) போர் வீரர் சினம் கொள்வதாக ! சிங்கத்தோடு சிங்கம் (அரியினொடு அரியினம்) மோதிக் கடுமையாகத் தாக்குவது போல் (அடர்ப்ப போல்) படைத்தளபதிகளோடு தளபதிகள் தாக்குவதாக (அரசரும் அரசரும் அடர்க்கவே) !

 

 

ஸ்ரீலங்கா டெலிகொமில் முதலீடு செய்வது குறித்து முகேஸ் அம்பானி ஆர்வம் - இந்திய ஊடகம்

3 months 2 weeks ago
இது இந்திய பாதுகாப்பு, மற்றும் உளவு சம்பந்தப்பட்ட விவகாரமாக இருக்க வாய்ப்பிருக்கும் என கருதுகிறேன், இலங்கை அரசின் தகவல் பரிமாற்றம் ஒரு நெருக்கடிக்குள் தள்ளப்படலாம், சில தேசிய நிறுவனங்களை வெளியாருக்கு விற்க கூடாது, எனது கருத்து தவறாக இருக்கலாம்.

ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்

3 months 2 weeks ago
https://en.wikipedia.org/wiki/1953_Iranian_coup_d'état 1953 இல் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரச தலைவரை தூக்கியெறிந்துவிட்டு மன்னர் ஷாவினை தொடர்ந்தும் ஆட்சிப்பொறுப்லிறுத்தியதற்கான காரணமாக BP எரிபொருள் நிறுவனம் தனது ஈரானிய எரிபொருளிற்கான கொடுப்பனவை சரியாக செய்கிறதா என பரிசோதிப்பதற்கான அனுமதியின மறுத்ததில் இருந்து ஆரம்பமாகிய விவகாரம், பின்னர் பிரித்தானிய அரசு, ஈரானிற்கெதிராக உலக பொருளாதார புறக்கணிப்பு, அதன் தொடர்ச்சியாக அந்த மக்களாட்சி அரசு தூக்கியெறியப்படும் நிலை என உருவாகியுள்ளதாகவும், இந்த சதிப்புரட்சியின் பிண்ணனியில் அமெரிக்க வகிபாகத்தினை 2013 இல் அமெரிக்கா வெளியிட்டதாக இந்த விக்கி இணைப்பில் கூறப்பட்டுள்ளது. தேசிய மயப்படுத்தல் எனும் வார்த்தை பிரயோகம் அந்தந்த நாட்டு மக்களை கவரலாம், ஆனால் அதனை நடைமுறைப்படுத்த முடியாது, அமெரிக்காவாகட்டும் பிரித்தானியாவாகட்டும் அந்த நாடுகளின் வெளிவிவகார கொள்கையினை முதலாளிகள்தான் தீர்மானிக்கிறார்கள் என்பது எனது தனிப்பட்ட அவதானிப்பு.

பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்

3 months 2 weeks ago
சென்னை விமானநிலையத்தில் குண்டு வெடித்தாலும் அல்லது கட்டுநாயக்கா விமானநிலையத்தில் குண்டு வெடித்தாலும் பாதிக்கப்படுவதென்னவோ சாதாரண மக்கள் என்ற அடிப்படை அறிவில்லாத செயல்.

கொழும்பில் உள்ள 500 கட்டடங்களை அகற்ற தீர்மானம்

3 months 2 weeks ago
எங்களின் அறிவை பற்றி சிந்தித்துக்கொண்டு பறவைகள் விலங்குகளை பார்க்கும்போது எவ்வளவு பக்குவமாக வாழ்கிறார்கள் என்று ஆச்சரியமாக பார்க்க வேண்டி இருக்கிறது பணம் பணம் என்று தப்பு மேலே தப்பை கட்டிக்கொண்டு இருக்கிறோம் எவ்வளவு வெள்ள அழிவு வந்தாலும் தமிழ்நாடு திருந்துகிற எண்ணமே இல்லை மேலும் கழிவுநீர் அகற்ற என்று ஊழல்தான் செய்கிறார்கள்