ஊர்ப்புதினம்

மின் கட்டணம் 33 சதவீதத்தால் குறைப்பு - முழுமையான விபரம் இதோ!

3 months 1 week ago
வீட்டு மின்பாவனையின் ஆரம்ப கட்டணம் 33 சதவீதத்தால் குறைப்பு - முழுமையான விபரம் இதோ!
04 MAR, 2024 | 07:53 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மின்கட்டணத்தை இன்று திங்கட்கிழமை (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 21.9 சதவீதத்தால் குறைக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை மின்சார சபை  முன்வைத்த யோசனை மற்றும் செலவுகளுக்கு அமைய 2009 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க மின்சாரத்துறை சட்டத்தின் 30 ஆவது பிரிவு மற்றும் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மானியங்களுக்கு அமைவாக கண்காணிப்பு மற்றும் மீள்பரிசீலனைகளுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை கடந்த ஜனவரி மாதம் நூற்றுக்கு 3.34 சதவீதத்தாலும் பின்னர் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி சமர்ப்பித்த மின்கட்டண திருத்த யோசனையின் பிரகாரம் நூற்றுக்கு 14 சதவீதத்தால் மின்கட்டணத்தை குறைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட செலவினங்கள் தொடர்பான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட மீளாய்வு மற்றும் பொதுமக்களின் கருத்துக்கோரலின் போது கிடைக்கப்பெற்ற யோசனைகளை கருத்திற் கொண்டு மொத்த மின்கட்டணத்தை 21.9 சதவீதத்தினால் குறைப்பதற்கு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டிருக்கும் இத்திருத்தம் சகல மின்நுகர்வு கட்டங்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

வீட்டு பாவனையில் 30 அலகுக்கு குறைவான மின்னலகை பாவிக்கும் மின்பாவனையாளர்களின் மின்னலகுக்கான கட்டணம் நூற்றுக்கு 33 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.

31 முதல் 60 அலகுகளுக்கான மின்கட்டணம் 28 சதவீதத்தால் முழுமையாக குறைக்கப்பட்டுள்ளது.61-90 வரையான அலகுக்கான கட்டணம் 30 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 90 அலகுக்கு மேற்பட்டதும் 180 இற்கும் குறைந்ததுமான மின்னலகுக்கான கட்டணம் 24 சதவீதத்தாலும் 180 அலகுகளுக்கு மேற்பட்ட பாவனைகளுக்கான கட்டணம் 18 சதவீதத்தாலும் குறைக்கப்பட்டுள்ளது.

மத தலங்களுக்கான மின்கட்டணம் 33 சதவீதத்தாலும் பொது பாவனைகளுக்கான மின்கட்டணம் 23 சதவீதத்தாலும், அரச நிறுவனங்களுக்கான கட்டணம் 22 சதவீதத்தாலும் குறைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஹோட்டல் மற்றும் கைத்தொழில் துறைகளுக்கான கட்டணம் 18 சதவீதத்தாலும், வீதி மின்விளக்குகளுக்கான கட்டணம் 20 சதவீததத்தாலும் குறைக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டண திருத்தத்துக்கு அமைய 30 அலகுகளுக்கு குறைவான மின்னலகை பாவிக்கும் நுகர்வோருக்கான மாதாந்த மின்கட்டணம் 180 ரூபாவில் இருந்து 150 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு அலகுக்கு அவர்கள் செலுத்தும் கட்டணம் 12 ரூபாவில் இருந்து 08 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

31 - 60 அலகுகளுக்காக அறவிடப்பட்ட 360 ரூபா மின்கட்டணம் 300 ரூபாவாகவும் ஒரு அலகுக்கான கட்டணம் 30 ரூபாவில் இருந்து 20 ரூபாவாகவும் குறைக்கப்பட்டதுள்ளது.

https://www.virakesari.lk/article/177909

இலங்கை மீண்டும் பழைய தவறுகளை செய்கின்றது - மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்

3 months 1 week ago
இலங்கை மீண்டும் பழைய தவறுகளை செய்கின்றது - மானியங்கள் தேவையில்லை - மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்
04 MAR, 2024 | 11:59 AM
image

இலங்கை மீண்டும் பழைய தவறுகளை செய்கின்றது என மத்தியவங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித்குமாரசுவாமி கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கை மானியங்களை வழங்கும் பழைய நிலைக்கு திரும்பக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள், மின்சாரம், உரம் போன்றவைகளை மீண்டும் மானிய அடிப்படையில் வழங்குவது இலங்கையை பின்னோக்கி இழுக்கும் ஒரு நடவடிக்கை என தெரிவித்துள்ள அவர் இது ஒரு நீடித்து நிலைக்க முடியாத செயற்பாடு எனவும் தெரிவித்துள்ளார்.

மானியங்களை வழங்குவது தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நடவடிக்கை என குறிப்பிட்டுள்ள அவர் அதற்கான நிதி எங்களிடம் இல்லை என தெரிவித்துள்ளதுடன் வெளிநாட்டிலிருந்து பணத்தை பெற்று மானியங்களை வழங்குவது மீண்டும் கடன்நெருக்கடிக்குள் சிக்கவைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஏனென்றால் கடனை திருப்பி செலுத்துவதற்கான அந்திய செலாவணியை பெற்றுக்கொள்வதற்கான திறமை எங்களிடம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அஸ்வசுமா போன்றவற்றை குறுகிய கால நன்மைக்காக பயன்படுத்தலாம். அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில் இவ்வாறான திட்டங்கள் உதவக்கூடும், சீர்திருத்தங்களிற்கான ஆதரவை பெற உதவக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/177856

சாந்தனின் இறுதி நிகழ்வு இன்று

3 months 1 week ago
சாந்தனின் இறுதி நிகழ்வு இன்று!

Published By: DIGITAL DESK 3  04 MAR, 2024 | 10:44 AM

image

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 33 ஆண்டுகள் சிறைத்  தண்டனை அனுபவித்து அதிலிருந்து விடுதலையாகி ஒன்றரை ஆண்டுகள் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த சாந்தன் அவர்களுடைய உடலைச் சுமந்த ஊர்தி நேற்று ஞாயிற்றுக்கிழமை (03)வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று பிற்பகல் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்ட நிலையில் மக்கள் அஞ்சலிக்காக குமரப்பா நினைவு சதுக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் தலைவர்கள், பொது அமைப்பு பிரதிநிதிகள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர். 

அஞ்சலி  நிகழ்வுகளில் அவருடன் கூட இருந்து அவரது வழக்குகள் உட்பட பல்வேறு உதவிகளை புரிந்த தமிழக சட்டத்தரணி புகழேந்தி, மக்கள் அஞ்சலி நிகழ்வுகளை ஒருங்கிணைத்து குரலற்றோர் குரல் அமைப்பு தலைவர் கோமகன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க பிரதிநிதி, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்க ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள், உட்பட பலரும் அஞ்சலி உரைகளை நிகழ்த்தினர்.

இதில் நூற்றுக்கணக்கான மக்கள் சாந்தனின் புகழுடலுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து சாந்தனின் இல்லத்தில் சடலம் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று திங்கட்கிழமை (04) காலை 10 மணியளவில் இறுதி கிரிகைகள் மேற்கொள்ளப்பட்டு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இதேவேளை சாந்தனின் புகழுடல் நீர்கொழும்பிலிருந்து எடுத்துவரும் போது வவுனியாவிலிருந்து மக்கள் வீதி எங்கும் அவரது உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

யாழ்ப்பாணத்தில் மாலிசந்தி, நெல்லியடி, உடுப்பிட்டி ஊடாக தீருவில் வரை சென்ற புகழுடலுக்கு மக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தியதுடன் வீதி எங்கும் அவரது நினைவு பதாதைகளை கட்டியுள்ளனர்.

மேலும் வல்வெட்டியில் இடம் பெற்ற அஞ்சலி நிகழ்வில் ஜேவீபி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் சாந்தனின் புகளுடலிற்கு அஞ்சலி செலுத்தியதோடு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் சாந்தனின் புகழுடலிற்க்கு சிவப்பு மஞ்சள் கொடி போர்த்தி மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

உண்மையில் வடமராட்சி ஒரு சோகமான நிலையிலேயே சாந்தன் அவர்களது மறைவிற்கு பின்னர் காட்சியளிக்கிறது.

https://www.virakesari.lk/article/177841

வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே முறுகல்; பொலிசாருடனும் முரண்பாடு

3 months 1 week ago

Published By: VISHNU   04 MAR, 2024 | 01:25 AM

image
 

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே ஞாயிற்றுக்கிழமை (02) முறுகல் நிலை ஏற்பட்டது.

IMG-20240303-WA0278.jpg

வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் சங்கத்திற்குட்பட்ட கடல் பகுதியில் உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்கு குறித்த சங்கத்தால் தடை விதிக்கப்பட்டது.

IMG-20240303-WA0277.jpg

உடனடியாக உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதை நிறுத்துமாறு வெற்றிலைக்கேணி மீனவர்களின் கையொப்பத்துடன் வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் சங்கத்தினரால் கரைவலை தொழில் சம்மாட்டியிடம் கடிதம் கையளிக்கப்பட்டது.

IMG-20240303-WA0273.jpg

எனினும் தமது அறிவுறுத்தலைப் பொருட்படுத்தாது தொடர்ச்சியாக உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்துவருவதால் நேற்று காலை குறித்த கரைவலை வாடி மீனவர்களால் முற்றுகையிடப்பட்டு உழவு இயந்திரம் மூலம் கரைவலை இழுப்பது நிறுத்தப்பட்டது.

IMG-20240303-WA0271.jpg

சம்பவ இடத்தில் அதிகளவான மீனவர்கள் ஒன்று கூடியதால் சிறிது நேரம் பதட்டம் நிலவியதுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருதங்கேணி பொலிசாருடனும் மீனவர்கள் முறுகலில் ஈடுபட்டனர்.

உடனடியாக உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதை நிறுத்தாவிடில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடப்போவதாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/177833

யாழ் மக்களை திரும்பி பார்க்க வைத்த வெளிநாட்டவர்கள்...! குவியும் பாராட்டுக்கள்

3 months 1 week ago
யாழ் மக்களை திரும்பி பார்க்க வைத்த வெளிநாட்டவர்கள்...! குவியும் பாராட்டுக்கள்

1709350973-IMG-20240301-WA0052.jpg

 

யாழ். மானிப்பாய் வைத்தியசாலையின் வளர்ச்சிக்காக வெளிநாட்டவர்களால் துவிச்சக்கரவண்டி பயணம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்த 30 இற்கும் மேற்பட்டோர்,  துவிச்சக்கர வண்டிப் பயணம் மூலம் நிதி சேகரித்து அதனை யாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள வைத்தியசாலைக்கு வழங்கி அதனை சகல வசதிகளுடன் கூடிய வைத்தியசாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதற்கான துவிச்சக்சகர வண்டிப் பயணமானது, கண்டியில் கடந்த புதன்கிழமை ஆரம்பமாகி அங்கிருந்து மாத்தளை ஊடாக தம்புள்ளை வந்து, அங்கிருந்து நேற்றையதினம்(01) வவுனியாவை அடைந்தனர். 

அதன்பின்னர் யாழ்ப்பாணம் நோக்கி  துவிச்சக்கரவண்டி பயணம் ஆரம்பமாகியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வந்த ஆண், பெண் எனப் பலரும் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர்.
 
இதேவேளை வெளிநாட்டவர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் துவிச்சக்கரவண்டி பயணத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

17093509730.png17093509731.png17093509732.png17093509733.png17093509734.png17093509735.png

https://samugammedia.com/foreigners-made-jaffna-people-look-back-accumulating-praises-1709350973

மனித உரிமைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் - ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை

3 months 2 weeks ago
'அரசியல்மயப்படுத்தப்பட்ட மனித உரிமைகளுக்கு' துணைபோகும் இரட்டை நிலைப்பாடுகளை ஏற்கோம் - காஸா மக்கள் தொடர்பான தீர்மானங்கள் எங்கே என ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை கேள்வி
03 MAR, 2024 | 04:11 PM
image

(நா.தனுஜா)

தேசிய பாதுகாப்புக் கரிசனைகளைக் கவனத்திற்கொள்ளும் அதேவேளை, சர்வதேச நியமங்களுக்கு அமைவாக மனித உரிமைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் கடப்பாட்டைத் தாம் கொண்டிருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அறிவித்திருக்கும் இலங்கை, இருப்பினும் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நிவாரணங்களை வழங்குவதைவிடுத்து, அரசியல்மயப்படுத்தப்பட்ட மனித உரிமைகளுக்குத் துணைபோகும் சில தரப்பினரின் 'இரட்டை நிலைப்பாடுகளை' தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளது. 

அதுமாத்திரமன்றி காஸாவிலுள்ள மக்களின் நிலைவரம் மோசமடைந்திருக்கும் நிலையில், அதுபற்றிய தீர்மானங்களும் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளும் எங்கே? எனவும் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை கேள்வி எழுப்பியுள்ளது. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி 26ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. அதன்படி நாளை திங்கட்கிழமை (4) இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரம் குறித்து ஆராயப்படவுள்ள நிலையில், நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் நேற்று முன்தினம் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கினால் வாய்மொழி மூல அறிக்கை வெளியிடப்பட்டது. 

உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான சட்டவரைபை அரசாங்கம் வெளியிட்டிருப்பினும், நம்பத்தகுந்த உண்மையைக் கண்டறியும் செயன்முறைக்கு ஏதுவான சூழல் இலங்கையில் இல்லை எனவும், ஒடுக்குமுறைச்சட்டங்கள் மற்றும் எதேச்சதிகாரப்போக்கிலான நடவடிக்கைகள் மூலம் நிலையான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை அடைந்துகொள்ளமுடியாது எனவும் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.

அதனையடுத்து அவரது அறிக்கை தொடர்பில் கரிசனையை வெளிப்படுத்தியும், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள முன்னேற்றகரமான நடவடிக்கைகள் குறித்துத் தெளிவுபடுத்தியும் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணாதிலகவினால் சுட்டிக்காட்டப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு:

அண்மைய காலங்களில் முகங்கொடுத்திருக்கும் சவால்களிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் நோக்கில், நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் மற்றும் ஜனநாயகக் கட்டமைப்பக்களின் நிலையான தன்மையைப் பேணும் அதேவேளை, பொருளாதார மீட்சி மற்றும் நல்லிணக்கம் சார்ந்த இலக்குகளில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. 

அதேவேளை பொருளாதார நெருக்கடியினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள வறிய மற்றும் நலிவுற்ற மக்களுக்கு உதவும் நோக்கில் சமூகப்பாதுகாப்பு செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. 

அதன்படி, சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரத்துறை சார்ந்த விடயங்களில் வழமையான நிலையை அடைந்துகொள்வதில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது என்பதை மறுக்கமுடியாது. 

அதேபோன்று மிகத் தீவிர மட்டுப்பாடுகள் இருப்பினும், தேசிய ஒருமைப்பாடு, போரின் பின்னரான நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கான எமது முயற்சிகள் மாற்றமின்றித் தொடர்கின்றன. 

அத்தோடு ஏற்கனவே நிறுவப்பட்ட உள்ளகப் பொறிமுறைகளின் ஊடாக இவ்விடயத்தில் முன்னேற்றத்தை எட்டுவதில் இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.

அதன்படி, உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டவரைபு தொடர்பான கலந்துரையாடல்கள் அரசாங்கம், சிவில் சமூகம், சர்வ மதத்தலைவர்கள் மற்றும் சட்ட நிபுணர்கள் உள்ளிட்ட சகல தரப்பினரின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அதேபோன்று காணாமல்போனோர் அலுவலகத்துக்கு முதற்கட்டமாகக் கிடைக்கப்பெற்ற 6,025 முறைப்பாடுகளில் 5,221 முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

1,313 குடும்பங்களுக்கு காணாமல்போனமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதுடன் அது செல்லுபடியாகும் காலத்தை எதிர்வரும் 2028ஆம் ஆண்டு வரை நீடிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக கடந்த ஆண்டு நாடு முகங்கொடுத்திருந்த நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் ஊடாக காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு 42 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகமானது பாராளுமன்றத்தின் நிறைவேற்றப்பட்ட பிரத்யேக சட்டத்தின் ஊடாக மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. 

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் சார்ந்த விவகாரங்களைக் கையாள்வதற்கும், தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்குமென ஜனாதிபதி செயலகத்தின்கீழ் விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் ஆதாரங்களை திரட்டுவதற்கான வெளியகப் பொறிமுறையை முன்மொழிந்திருக்கும் 46/1 மற்றும் 51/1 ஆகிய இரண்டு தீர்மானங்களையும் நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். 

ஐக்கிய நாடுகள் சபையானது நிதிநெருக்கடி மற்றும் மனிதவளப்பற்றாக்குறைக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் இத்தகைய பயனற்ற பொறிமுறைக்கு உறுப்புநாடுகளின் நிதியைப் பயன்படுத்துவது பேரவையின் கோட்பாடுகளுக்கு முரணானதாகும். 

அதன் நோக்கம் சில நபர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதேயன்றி, அதனூடாக இலங்கை மக்களுக்கு எந்தவொரு நன்மையும் கிட்டாது.

அடுத்ததாக தற்போது கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் சில உள்நாட்டு சட்டங்கள் தொடர்பில் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

நிகழ்நிலை காப்பு சட்டத்தைப் பொறுத்தமட்டில், சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட சகல தரப்பினரிடமிருந்தும் ஆலோசனைகளை பெற்று அதனைத் திருத்தியமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலித்த உயர்நீதிமன்றம், இச்சட்டமூலம் குறித்த தமது நிலைப்பாட்டை அறிவித்திருக்கிறது. 

அடுத்ததாக, அரச சார்பற்ற அமைப்புக்கள் குறித்த சட்டமூலம் தொடர்பில் சிவில் சமூக அமைப்புக்களுடன் 6 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. இவையனைத்தும் இலங்கையில் முன்மொழியப்படும் எந்தவொரு சட்டமூலத்தையும் சவாலுக்குட்படுத்தும் சுதந்திரம் பொதுமக்களுக்கு உண்டு என்பதையே காண்பிக்கிறது. 

மேலும், தேசிய பாதுகாப்புக் கரிசனைகளைக் கவனத்திற்கொள்ளும் அதேவேளை, சர்வதேச நியமங்களுக்கு அமைவாக மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யவேண்டியது அவசியம் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். எமது அண்மையகால நடவடிக்கைகளே அதற்கு சான்றாகும். 

அதேபோன்று பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நிவாரணங்களை வழங்குவதை விடுத்து, அரசியல்மயப்படுத்தப்பட்ட மனித உரிமைகளுக்கு துணைபோகும் சில தரப்பினரின் 'இரட்டை நிலைப்பாடுகளை' எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. காஸாவில் உள்ள மக்கள் தீவிர அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ளனர். அவ்வாறிருக்கையில் அது பற்றிய தீர்மானங்களும் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளும் எங்கே? என்று கேள்வி எழுப்பினார்.

https://www.virakesari.lk/article/177811

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை தொடரும் - ஐரோப்பிய ஒன்றியம்

3 months 2 weeks ago
பயங்கரவாத தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதில் முன்னேற்றம் அவசியம் : வலியுறுத்துகிறது ஐரோப்பிய ஒன்றியம் 
03 MAR, 2024 | 03:55 PM
image

(நா.தனுஜா)

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையைத் தொடர்ந்து வழங்குவது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தினால் அளிக்கப்பட்ட உத்தரவாதத்துக்கு இலங்கை நன்றி தெரிவித்திருக்கும் அதேவேளை, பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பதிலீடு செய்யும் விடயத்தில் மேலும் முன்னேற்றம் எட்டப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 26ஆவது கூட்டம் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார சேவைப்பிரிவின் ஆசிய, பசுபிக் பிராந்திய பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் பயோலா பம்பலோனி ஆகியோர் தலைமையில் கடந்த மாதம் 22ஆம் திகதி ப்ருஸேல்ஸில் நடைபெற்றது. 

இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை உள்ளடக்கியதாக இரு தரப்பினரும் இணைந்து கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி இக்கூட்டத்தின்போது பொருளாதார பாதுகாப்புக் கொள்கை, செயற்கை நுண்ணறிவுசார் கொள்கை, வர்த்தக மற்றும் மனித உரிமைகள் நிலைப்பாடு, சூழலியல் பாதுகாப்பு, உலகளாவிய இணைப்பு உத்தி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்திய - பசுபிக் உத்தி என்பன உள்ளடங்கலாக கடந்த சில வருடங்களில் தாம் பின்பற்றிவந்த முக்கிய கொள்கைகள் மற்றும் சட்டதிட்டங்கள் தொடர்பில் இலங்கை பிரதிநிதிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் விளக்கமளித்தனர். 

அதேவேளை பொருளாதார உறுதிப்பாடு மற்றும் மீட்சி ஆகியவற்றில் கடந்த ஆண்டு எட்டப்பட்ட முன்னேற்றம் தொடர்பில் இலங்கை பிரதிநிதிகள் விளக்கமளித்தனர். 

அதன்படி, நிலையான பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கும், நலிவடைந்த நிலையில் உள்ளோருக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குமான நகர்வுகள் இலங்கையால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஏற்றுக்கொண்ட ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், இலங்கையின் விரைவான பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சி என்பன தொடர்பில் தமது வாழ்த்தினைத் தெரிவித்தனர்.

அதேபோன்று காலநிலை மாற்ற சவால்களைக் கையாளல், சூழல் நேய சக்திவலு உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப நிலை மாற்றத்துக்கு நிதியளித்தல், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைதல், உள்நாட்டுக் கடன் நெருக்கடியைக் குறைத்தல், பயங்கரவாத குற்றங்கள், தவறான அல்லது போலித்தகவல் அச்சுறுத்தல்கள் என்பன உள்ளடங்கலாக சமகாலத்தில் உலகளாவிய ரீதியில் நாடுகள் முகங்கொடுத்துவரும் சவால்கள் தொடர்பில் இக்கூட்டத்தின்போது கலந்துரையாடப்பட்டது. 

அதுமாத்திரமன்றி சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் சர்வதேச சட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பிலும் இங்கு விசேடமாக குறித்துரைக்கப்பட்டது.

அடுத்ததாக இவ்வாண்டு நாட்டில் நடைபெறவிருக்கும் தேர்தல்கள் தொடர்பில் இலங்கை பிரதிநிதிகள் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தனர். 

குறிப்பாக அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள ஆணைக்கு அமைவாக ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமென அவர்கள் உறுதியளித்தனர். அதற்குப் பதிலளித்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், இலங்கை அழைப்பு விடுக்கும் பட்சத்தில் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவொன்றை அனுப்பிவைப்பதற்குத் தயாராக இருப்பதாகக் கூறினர்.

மேலும், கடந்த மாதம் 6ஆம் திகதி நிகழ்நிலை முறைமையில் நடைபெற்ற வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை பணிக்குழு கூட்டம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. 

அதன்படி, ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் குறித்து மீளாய்வு செய்வதற்கான நடைமுறை தொடர்பில் விளக்கமளித்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், புதிய நடைமுறை அமுலுக்கு வந்தவுடன் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மூலம் பயனடையும் இலங்கை உள்ளிட்ட நாடுகள் அதனைத் தொடர்ந்து பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுவதாக சுட்டிக்காட்டினர். அதற்குப் பதிலளித்த இலங்கை பிரதிநிதிகள், இரு தரப்பினருக்கும் இடையிலான பரஸ்பர வர்த்தகத் தொடர்புகளை நினைவுகூர்ந்ததுடன் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைத் தொடர்ந்து வழங்குவது குறித்து அளிக்கப்பட்ட உத்தரவாததத்துக்கு நன்றி தெரிவித்தனர். 

அதேவேளை ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவதற்குரிய கடப்பாடுகள் உரியவாறு பூர்த்திசெய்யப்படுகின்றனவா என ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து கண்காணிக்கும் என அத்தரப்பு பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

அதேவேளை பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்தின் ஊடாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பதிலீடு செய்வதற்கும், அச்சட்ட வரைபை சர்வதேச தராதரங்களுக்கு அமைவாகத் தயாரிப்பதற்கும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் பற்றி இலங்கை பிரதிநிதிகள் விளக்கமளித்தனர். 

அதனை செவிமடுத்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், இருப்பினும் இவ்விவகாரத்தில் மேலும் முன்னேற்றம் எட்டப்படவேண்டும் என வலியுறுத்தினர்.

அத்தோடு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்போரின் விடுவிக்கப்பட்டோர் தொடர்பான விபரங்கள், சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சமவாயச் சட்டத்தின் பிரயோகம், காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் போன்ற உள்ளக சுயாதீனக் கட்டமைப்புக்களின் இயக்கம், பயங்கரவாதத்தை முறியடிப்பதில் ஒத்துழைப்புடன் செயலாற்றல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/177810

யாழில் நடுக்கடலில் கறுப்புக்கொடி ஏந்தி கடற்றொழிலாளர்கள் போராட்டம்

3 months 2 weeks ago
03 MAR, 2024 | 02:48 PM
image

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து இலங்கை கடல் எல்லையில் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்களால் கறுப்புக் கொடி ஏந்தி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (03) எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை கடல் பகுதிக்குள் அத்துமீறி மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயற்பாட்டை தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் இந்திய இழுவை மடி படகுகளை எதிர்த்து கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செய்வதற்கே யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாச பிரதிநிதிகளால் அழைப்பு விடுக்கப்பட்டது.

அந்த வகையில், யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருந்து புறப்பட்ட படகுகள் இலங்கையின் கடல் எல்லையில் நின்று போராடினர்.

இதேவேளை கடற்றொழிலாளர்களின் போராட்டம் சர்வதேச கடற்பரப்பில் செல்லக்கூடாது என இலங்கை கடற்படை எச்சரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

3__2_.jpg

3__1_.jpg

3__5_.jpg

3__3_.jpg

https://www.virakesari.lk/article/177804

சிறைக் கைதிகளின் உழைப்பால் 253 மில்லியன் ரூபாய் வருமானம்

3 months 2 weeks ago
IMG_9213-150x150-1.jpg IMG_0995-150x150-1.jpg IMG_0577-150x150-1.jpg 81-150x150-1.jpg

2023 ஆம் ஆண்டில் கைதிகள் விவசாய நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வசதியளித்ததன் மூலம் சிறைச்சாலைகள் திணைக்களம் 253 மில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது.

கைதிகளை விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்ததன் மூலம் 2023ஆம் ஆண்டு 90 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

சிறைக் கைதிகள் பயிர்களை வளர்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் ஊக்குவிப்பதுடன், சிறைக் கைதிகள் சிறைச்சாலைக்குள் சாதாரண வாழ்க்கை முறைக்கு பழகுவதற்கு உதவுவதாகவும், சிறைக் கைதிகள் தண்டனைக்காலத்தின் பின் சமூகத்துடன் இணைக்கப்படும்போது அவர்களுக்கு நன்மை பயக்கும் என்றும் உபுல்தெனிய மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 7 கைதிகளில் ஒருவர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் அல்லது மருத்துவ மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது, எனவே கைதிகளை விவசாய நடவடிக்கையில் ஈடுபடுத்துவதும் அவர்களது மனோநிலை மேம்பாட்டுக்கு உதவுகிறது.

“கைதிகள் கைவிடப்பட்டதாக உணர்கிறார்கள், அவர்கள் தனியுரிமை உணர்வை இழக்கிறார்கள் மற்றும் அர்த்தமுள்ள செயல்பாடுகள் இல்லை, அத்துடன் அவர்கள் சிறையில் இருக்கும் போது சமூக தொடர்புகளை இழக்கிறார்கள். எனவே அவர்கள் விடுவிக்கப்படும் போது சமூகத்துடன் மீண்டும் அனுசரித்து செல்வது கடினமாக உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளைத் தடுக்க அவர்களை தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகிறோம்” என்றார்.

https://thinakkural.lk/article/294121

2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை கால அட்டவணையில் மாற்றம்!

3 months 2 weeks ago

2024 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட பாடசாலை கால அட்டவணை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமான முதல் பாடசாலை தவணையின் முதல் கட்டம் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

முதல் தவணையின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 24 ஆம் திகதி முதல் மே 03 ஆம் திகதிவரை நடத்தப்படும் மற்றும் மூன்றாம் கட்ட முதல் பள்ளி தவணை மே 20 ஆம் திகதி முதல் மே 31 ஆம் திகதி வரை நடைபெறும்.

இரண்டாவது பாடசாலை தவணை ஜூன் 3 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 16 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் மூன்றாம் பள்ளித் தவணையின் முதல் கட்டம் ஆகஸ்ட் 26 ஆம் திகதி முதல் நவம்பர் 22 ஆம் திகதி வரை நடைபெறும் மற்றும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் உயர்தரப் பரீட்சைக்குப் பிறகு 2025 ஜனவரி 02 ஆம் திகதி தொடங்கப்படும்.

2024 ஆம் ஆண்டின் மூன்றாம் பாடசாலை தவணை 2025 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி முடிவடைய உள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/294116

அவசர சிகிச்சைப்பிரிவில் எம்.கே. சிவாஜிலிங்கம்!

3 months 2 weeks ago

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று (02) ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவால் சென்னை வடபழனி விஜயா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவருக்கு எதிரான வழக்கொன்றிற்காக நேற்று முன்தினம் கொழும்புக்கு வருகை தந்த நிலையில் வழக்கு முடிவடைந்தும் அவர் நேற்று காலை சென்னைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://thinakkural.lk/article/294096

“அன்னம்” சின்னத்தில் களம் இறங்க ரணில் திட்டம்? கட்சி சாா்பற்ற வேட்பாளராக போட்டி

3 months 2 weeks ago
“அன்னம்” சின்னத்தில் களம் இறங்க ரணில் திட்டம்? கட்சி சாா்பற்ற வேட்பாளராக போட்டி
March 3, 2024
 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுக் கூட்டணியில் ‘அன்னம்’ சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் தனது நட்புக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேசிய வேட்பாளராக போட்டியிடுவதே ரணில் விக்கிரமசிங்கவின் விருப்பமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரணில் விக்கிரமசிங்க சார்ந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி தற்போது நிமல் லான்சா குழு மற்றும் பொதுஜன பெரமுன கட்சியைச் சிரேஷ்டர்கள் குழுவின் தலைமையிலான பல சிறு கட்சிகளின் ஆதரவைப் பெற திட்டமிட்டுள்ளது.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் போன்றவர்கள் ஏற்கனவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நெருங்கிய தொடர்புள்ள பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினா்கள் சிலரையும் தனது பக்கத்துக்குக் கொண்டுவரும் முயற்சியிலும் ரணில் தரப்பினா் ஈடுபட்ள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் மூலமாக கட்சி சாா்பற்ற ஒரு வேட்பாளராககக் களமிறங்குவதற்குத்தான் அவா் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகின்றது.
 

https://www.ilakku.org/அன்னம்-சின்னத்தில்-களம/

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைகளை தீர்க்க மீண்டும் பேச்சு

3 months 2 weeks ago
இலங்கை - இந்திய பிரச்சினைகளை தீர்க்க மீண்டும் பேச்சு
03 MAR, 2024 | 10:42 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினை ஏற்படுத்தும் வகையில் இரு நாடுகளுக்கு இடையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான மீன்பிடி உபகரணங்ளை பயன்படுத்தியும், இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தும் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர். இதனால் இலங்கையின் வட பகுதி மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராக வடக்கு மீனவர்கள் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர்.

இவ்வாறனதொரு நிலையில் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுப்பட்ட இந்திய மீனவர்கள் 170 பேர் உள்நாட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அந்த மீனவர்களுக்கு எதிராக உள்ளக நீதிமன்ற தீர்ப்புகளை எதிர்த்து இந்திய மீனவர்கள் போராட்டத்திலும் ஈடுப்பட்டு வருகின்றனர்.

பேச்சுவார்த்தைகள் ஊடாக இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தற்காலிக தீர்வு காணப்பட்ட போதிலும், தொடர்ந்தும் அத்துமீறிய மீன்பிடிப்புகள் இடம்பெறுகின்றமையினால் இருதரப்பு மீனவர்களின் பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமடைந்தே வருகின்றன. எனவே நீண்டகால நிலையான தீர்வை நோக்கி பயணிக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியிருந்தார்.

இதனடிப்படையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையிலான பேச்சு வார்த்தையின் போது நீண்டகால தீர்வு திட்டம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிக்க இருதரப்புகளுக்கும் இடையில் இதன் போது இணக்கப்பாடு எட்டப்பட்டன.

https://www.virakesari.lk/article/177777

இந்தியாவின் ஒத்துழைப்புடன் வடக்கில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்மொழிவு

3 months 2 weeks ago
இந்தியாவின் ஒத்துழைப்புடன் வடக்கில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்மொழிவு : ஜனாதிபதி ரணிலுக்கு முன்னாள் ஆளுநர் ஜீவன் தியாகராஜா அனுப்பிவைப்பு
02 MAR, 2024 | 11:46 PM
image

ஆர்.ராம்

இந்தியாவின் ஒத்துழைப்புடன் வட மாகாணத்தில் பல வருட பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் முன்மொழிவுகளை முன்னாள் ஆளுநர் ஜீவன் தியாராஜா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

வட மாகாணத்தில் முன்னெடுக்கும் குறித்த செயற்றிட்டத்தினை ஏனைய மாகாணங்களிலும் முன்னெடுப்பதன் ஊடாக சமாந்தரமான வளர்ச்சிகள் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், அவர் அனுப்பி வைத்துள்ள முன்மொழிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்தியா இலங்கையில் இருந்து 23 கடல் மைல் தொலைவில் உள்ளது. அத்துடன் இந்தியா உலகப் பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்திலிருக்கும் ஜேர்மனை விஞ்சுவதற்கான பயணத்தில் வேமாக ஈடுபட்டுள்ளது.

இந்தியாவின் சந்தையில் பிரவேசிக்கும் வகையில் இந்திய மத்திய அரசுடனான உறவுகள், இந்திய மாநிலங்களுடனான உறவுகள், இந்திய வணிகத்துறையினருடான உறவுகள் தொழில்நுட்பம் உட்பட பல்வேறுபட்ட பரந்துபட்ட துறைகளில் நிதியுதவி உள்ளிட்ட ஒத்துழைப்புக்களை பெறுவது நோக்கமாக உள்ளது. இதன் மூலமாக வடக்கு மாகாணத்தின் வளர்ச்சி தூண்டப்பட்டு அது பொருளாதார ரீதியான எழுச்சியை அடைவதற்கு வழிசமைக்கும்.

அதேநேரம் ஒரே நேரத்தில் வட மாகாணத்தில் சிறப்புப் பொருளாதார வலயங்களை ஸ்தாபிக்கும் பணிகளை முன்னெடுக்க முடியும்.

அதேநேரம், வடக்கு மாகாண பொருளதாரத்தினை மேம்படுத்துவதை அடிப்படையான இலக்காகக் கொண்டு, தமிழ்நாடு கடந்த ஆண்டு செய்தது போன்று இலங்கை, இந்தியா மற்றும் பிற கண்டங்களைச் சேர்ந்த வளவாளர்களை ஒருங்கிணைத்து ‘கற்பனை வட மாகாணம்’ என்றொரு அமர்வை நடத்துவதைப் பற்றி பரிசீலிக்க வேண்டும்.

அந்த மாநாட்டை வட மாகாணத்தில் அல்லது இந்தியாவில் நடத்தலாமா என்பது குறித்து சிந்திக்கும் அதேநேரம், பல்வேறு துறை சார்ந்த நிபுணத்துவ மூலங்களில் இருந்து பல ஆண்டுகள் மேம்பாட்டு ஒத்துழைப்பை அமைப்பது தொடர்பாக மாநாட்டில் கலந்துரையாடி வழிவரைபடத்தினை தயாரிக்கலாம்.

அத்துடன், மேற்கூறிய செயற்பாடுகள் அனைத்தும் கடல், வான்வழி இணைப்புத் திட்டங்கள், கிழக்கு மாகாணத்தில் எண்ணெய் தாங்கிகள், சுற்றுலாத்துறை, விமான நிலையங்களுடனான இணைப்புகள், கொழும்பில் துறைமுக மேம்பாடு சுற்றுலா மற்றும் திறந்த பொருளாதார உடன்பாட்டுக்கான பேச்சுவார்த்தைகள் உள்ளிட்டவை பாராட்டத்தக்கவை.

அந்த வகையில், இந்த ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துவதில் மாகாண நிருவாகக் கட்டமைப்புக்களுக்கு வழங்கப்படுவதோடு தேவைப்பட்டால் நாடளாவிய ரீதியில் உள்ள ஏனைய மாகாணங்களுக்கும் இம்முறையைப் பாயன்படுத்துவதன் ஊடாக அந்தந்த மாகாணங்களின் வளர்ச்சிகளும் தூண்டப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/177765

வடக்கில் சத்தமின்றி நடக்கும் ஒரு அழிப்பு

3 months 2 weeks ago

Courtesy: Nada. Jathu

 

உலகம் முழுவதுமே மனிதனின் தன்னிச்சையான செயற்பாடுகளால் தனது இயற்கையை இழந்து சமநிலையைத் தக்க வைக்க முடியாத சூழலை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பது இன்றைய யதார்த்தமாகின்றது. 

இவற்றை தடுப்பது என்பது ஒரு முரண்நிலை விவாதமாகும் இவற்றை முகாமைத்துவம் செய்வது என்பது மட்டுமே சாத்தியமானதும், சாதகமானதும் எதிர்கால உலக இயக்கத்திற்கு சாதுரியமானதும் ஒரு செயற்பாடாகும் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

இந்த வள அழிப்புக்கள் அமேசனில் தொடங்கி புன்னாலைக்கட்டுவன் வரைக்கும் மாப்பியாக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதில் ஆச்சரியமான விடயம் யாதெனில் மூன்றாம் உலக நாடுகளில் இவற்றை முகாமை செய்ய வேண்டிய அரசுக்கள் மற்றும் பொறுப்புடைய அரச நிறுவனங்களே இந்த இயற்கை வளச்சுரண்டல் தொழிலில் பின்னணியாக செயற்பட்டு வருகின்றன.

வடக்கில் சத்தமின்றி நடக்கும் ஒரு அழிப்பு | A Silent Destruction In The North

ஒரு சில அரசியல்வாதிகள் ஒரு சில தனவந்தர்கள் ஒரு சில அரச அதிகாரிகள் (இராணுவம் மற்றும் பொலிஸார் உட்பட்டவர்கள்) தங்களது பணப்பைகளை இச்செயற்பாடுகளில் நிரப்பி வருவது உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது. 

முதலாவதாக வடக்கு மாகாணத்தில் இடம்பெற்று வரும் மணல் வியாபாரம். இது ஒரு இயற்கை வளமாகும். இதற்குரிய வழங்கலானது பாரபட்சமின்றி கிரமப்படுத்தப்பட வேண்டுமே அன்றி வியாபாரமாக்க முடியாது. 

மணல் விநியோகம்

இச்சுரண்டலால் மிகவும் பாரதூரமாக பாதிக்கபடும் மாவட்டம் கிளிநொச்சி மாவட்டம் ஆகும். இங்கே வடபகுதி மணல் விநியோகத்தினை ஒரு வரைபடத்திற்குள் அமைப்பீர்களாக இருந்தால் மணல் விநியோக அனுமதிகள் அனைத்தும் யாழ்.மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கே வழங்கப்படுகின்றது.காரணம் அங்கேயே வழங்கலுக்கு உரித்தான வகையில் மணல்கள் உரிய தரத்துடன் காணப்படுகின்றன.

மணல் நுகர்வு 90 சதவீதமானது யாழ்.மாவட்டத்திலேயே காணப்படுகின்றது. இதுவே இக்கொள்ளைச் சம்பவத்திற்கு மிகப் பிரதானமானதொரு காரணியாக அமைகின்றது.

தற்சமயம் கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டரீதியான மணல் அகழ்விற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு அகழ்வு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

மணல் அகழ்வு மற்றும் விற்பனை அனுமதி வேறாகவும், வழித்தட அனுமதி வேறாகவும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற நிலையிலேயே பேணப்படுவது திருட்டுக்கு மிகவும் சௌகரியமாக இருக்கின்றது. 

மணல் கொள்ளை 

இம்மணல் வியாபாரத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வசிக்கும் 22 வயதுடைய ஒரு ரிப்பர் உரிமையாளரும், சாரதியுமான ஒருவர் பின்வருமாறு இத்தொழில் முறையை விளக்குகின்றார்.

ஒரு லோட் 3 கியுப் மணலை அனுமதி வழங்கப்பட்ட மணல் யாட்டில் இருந்து தன்னால் ரூபா 22,500.00 க்கு கொள்வனவு செய்யப்படுவதாகவும், இம் மணலை யாழ்ப்பாணம் கொண்டு சென்று ரூபா 62,000.00 – 65,000.00 வரைக்கும் மாசி மாத இறுதிவார நிலவரத்தின்படி விற்பனை செய்வதாகவும் தெரிவிக்கின்றார்.

இச்செயற்பாடு காலை 7.00 க்கு முல்லைத்தீவில் ஆரம்பித்து அண்ணளவாக 11.00 மணிக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் முடிவடைந்துவிடுவதாகவும் தெரிவிக்கின்றார். 

இவ் வழித்தடத்தில் பயணிக்கும்போது எழுதுமட்டுவாள் பொலிஸ் காவலரணில் தொடங்கி யாழ்ப்பாணம் வரைக்குமான மணலைப் பறிக்கும் இடங்களுக்கு இடையே சராசரி 15 இடங்களில் பொலிஸாருக்கு ரூபா 300.00 – 500.00 வரைக்கும் இலஞ்சம் வழங்குவதாக தெரிவிக்கின்றார்.

இதில் பெருந்தெருக்களுக்கான போக்குவரத்து பொலிஸார், கொடிகாமம் மற்றும் சாவகச்சேரி பொலிஸ் நிலையங்களை சேர்ந்தவர்களாக போக்குவரத்து பொலிஸார், கொடிகாமம் மற்றும் சாவகச்சேரி பொலிஸார் (சீருடை தரிக்காது ரீசேட்டுடன் முச்சக்கரவண்டியில் யுக்திய நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள்), இவற்றுக்கு மேலாக பாடசாலைகளின் அணுகுதலுக்கான கடமைகளுக்காக மிருசுவில், கொடிகாமம், மீசாலை, சங்கத்தானை, நுணாவில் மற்றும் மாகாண சபையின் விசேட தேவைகளுக்காக கைதடியில் கடமைசெய்யும் பொலிஸார் இவர்கள் அனைவரும் அடங்குகின்றார்கள்.

வடக்கில் சத்தமின்றி நடக்கும் ஒரு அழிப்பு | A Silent Destruction In The North

இவ் ரூபா 300.00 - 500.00 க்கான பிரதி உபகாரம் யாதெனில் வழங்கப்பட்ட வழித்தட அனுமதிப்பத்திரத்தினை செல்லுபடியற்றதாக்காது விடுவிப்பது. பகல் 11.00 மணிக்கு பின்னரே திருட்டு மணல் ஏற்றம் ஆரம்பிக்கின்றது.

இம்மணலானது மணல் தேவை இருக்கும் யாழ்பாணத்திற்கு குறுகிய நேரத்தில் வழங்கத்தக்கதாகவும், ஏற்கனவே இலஞ்சம் பெற்றுக்கொள்ளும் பொலிஸார் உள்ள இடத்திலும் அமைவது வாகனத்திற்கும் சாரதிக்கும் பாதுகாப்பானது எனக் கருதிக்கொண்டு மிக அதிகமாக கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக அகழப்படுகின்றது. இதனாலேயே கிளிநொச்சி அதிகம் பாதிக்கப்படுகின்றது.

இந்த அகழ்வு இடங்களுக்கு பொறுப்பான பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு பணம், சாராயம், கசிப்பு முதற்கொண்டு பல்வேறு வகையான பொருட்கள் சிறப்பாக விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கின்றார்.

மேலதிகமான இன்னும் ஒரு தகவலையும் தெரிவித்தார் வட பகுதியில் அதிஉச்ச மதுபான வியாபாரம் உள்ளதான ஏ9 சாவகச்சேரியில் உள்ளதொரு மதுபானசாலையை சொல்கின்றார். 

முறைகேடான நடவடிக்கை

மணல் கொண்டுவரும் அனைத்து டிப்பர்களும் முறைகேடான நடவடிக்கைகளுக்கான மதுபானங்களை சாவகச்சேரியிலே கொள்வனவு செய்து தினமும் ஆயிரக்கணக்கான மதுபானப் போத்தல்கள் டிப்பர் சாரதிகளால் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் சலுகைகளுக்காக கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு எடுத்து செல்லப்படுகின்றதாம்.

இத் தகவலை வேறு ஒரு முறையிலும் உறுதிசெய்ய முடிந்தது. யாழ்ப்பாண பிராந்திய இறைவரித் திணைக்களத்தில் வருமான வரி செலுத்தும் மதுபானச் சாலைகளில் சாவகச்சேரி மதுபான விற்பனை நிலையமே முன்னிலை வகிக்கின்றது.

இது தனது பிரதேசத்தில் இருக்கும் சனச் செறிவுடன் ஒப்பிடுகையில் குறைந்தபட்சம் 6 ஆவது அல்லது 7 ஆவது மதுபான விற்பனை நிலையமாக திகழ வேண்டும் என்பது தரவுகளின் அடிப்படையான முடிவாகும் இருப்பினும் முதன்நிலை வகிப்பது மேற்குறித்த டிப்பர் சாரதியின் கூற்றை உண்மையாக்கும் வகையில் கருதமுடிகின்றது.

முதலாவது லோட் மட்டும் சட்டபடியானது இரண்டாவதும் மூன்றாவதும் சட்டமுரணானது. மணல் திருடிய இடத்தில் இருந்து ஏ9 வரைக்குமான இடத்தில் பொலிஸ் பிடித்தால் தான் பிரச்சினை என்றும் ஏ9ல் ஏறிவிட்டால் தங்களிடம் வழித்தட அனுமதி இருப்பதாகவும், தங்களது பொலிஸார் தான் வீதிக்கடமையில் இருப்பதாலும் தனக்கு பயம் இல்லை என்றும், மணல் திருடும் இடத்தில் விசேட அதிரடிப்படையில் மாட்டினால் மாத்திரமே வழக்காக மாறும் எனவும் வெகு இலாவகமாக கருத்து தெரிவிக்கின்றார்.

ஏன் இந்த தொழிலை தான் தெரிவுசெய்தார் என்பதற்கான நியாயப்படுத்தலாக இருபத்தியைந்து இலட்சத்திற்கு உள்ளாக ஒரு வளமான டிப்பரை காசுக்க கொள்வனவு செய்ய முடிவதாகவும் நெருக்கடி இருப்பின் இதில் ஒரு தொகையை லீசாக பெறலாம் என்றும் சராசரி 03 லோட் (அவருடைய மொழியில் 01 ஜெனுவின் 02 கள்ளம்) ஏற்றினால் சாராசரி தனக்கு ரூபா 50,000.00 - 60,000.00 வரைக்கும் ஒரு நாளில் இலாபம் ஈட்ட முடிவதாகவும் கூறுகின்றார்.

இந்த கள்ள தொழிலுக்கு சாரதியை நியமிக்க கூடாது எனவும் ஏன் என்றால் இங்கே எதுவுமே நேர்மை இல்லாத இடத்தில் தனக்குப் பணியாற்றும் ஒரு சாரதிமட்டும் தனக்கு எப்படி நேர்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பார் என்ற அடிப்படையில் தானே நேரடியாக இதனை செய்வதாகவும் தன்னுடைய சினேகிதர்கள் 25 பேர் அளவில் தங்களது குழுவில் இருப்பதாகவும் தெரிவிக்கின்றார்.

 பல மடங்கு இலஞ்சம்

மேலும் இதுபோல 05 அல்லது 06 குழுக்கள் செயற்பாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கின்றார். இங்கே அரச செயலக அதிகாரிகளின் செயற்பாடுகள் மாத்திரமே மிகவும் பலவீனமாக இருப்பதால் மணல் முதலாளிகள், டிப்பர் மாபியாக்கள், குறித்த பகுதிப் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அதீதமாக சம்பளங்களுக்கு மேலாக பலமடங்கு இலஞ்சங்களை பெற்றுக்கொள்கின்றார்கள்.

வடக்கில் சத்தமின்றி நடக்கும் ஒரு அழிப்பு | A Silent Destruction In The North

யாழ்.மாவட்டத்தில் கொடிகாமம், சாவகச்சேரி, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையங்களில் கடமையாற்ற பொலிஸார் பெரு விருப்புடன் வருவதாக அறிய முடியகின்றது காரணம் மூன்று மடங்கு சம்பளம் பெற்றுக்கொள்ள முடியுமாம்.

ஒன்றும் அகப்படாவிட்டாலும் வேகமானியுடன் வீதியில் இறங்கினால் போதுமாம் சாரதியின் வேகத்தினை அளவிட்டு அவர்களுக்கு காண்பித்து அக்குற்றத்தினை நிரூபித்து அதற்காக இலஞ்சம் தாங்களே பெற்றுக்கொண்டு விடுவிக்கின்றார்கள்.

குறித்த சாதனங்களில் பதிவு செய்யப்பட்டவைகளை மீளாய்வுக்கு உட்படுத்தி அதில் தவறு காண்பிக்கப்பட்ட வாகனங்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராய்ந்தால் 5 சதவீதம் கூட சட்டத்திற்குள் அடங்கியிருக்காது. 

இயற்கை வளமானதொரு விடயத்தினை வினைத்திறனாக முகமைசெய்து அகழ்வதனையும் விநியோகத்தினையும் மேற்கொள்ள முடியாததொரு நிலையிலேயே அண்ணளவாக ரூபா 2,50,000.00 மேற்பட்ட மாதாந்த வேதனத்தினையும் இதர பல சலுகைகளையும் பெற்றுக்கொண்டு ஒவ்வொரு மாவட்ட செயலருக்கும் கதிரைக்கு பாரமாக இருக்கின்றார்கள்.

கடந்த கால எரிபொருள் பங்கீடு தொடர்பில் அரசாங்கத்தினால் கியு ஆர் முறமை நடைமுறைப்படுத்த இருக்கும் விடயமே தெரியாமல் அந் நடைமுறை அறிவிப்பு வருவதற்கு சரியாக இருநாட்களுக்கு முன்னர்தான் மாவட்ட செயலகங்கள் எரிபொருள் பங்கீட்டு அட்டை அச்சிட்டு அதனை கிராம சேவகர் தொடக்கம் மாவட்ட செயலர்கள் வரை ஒப்பமிட்டு யுஎன்டீபியின் நிதி அனுசரணையில் மில்லியன் கணக்கில் அவசர கொள்வனவாக கொள்வனவு செய்து நடைமுறைபடுத்த முனைந்தார்கள்.

குறைந்தபட்சம் இவ்வாறு செலவு செய்த மில்லியன் கணக்கான யுஎன்டீபியின் பணம், மக்களின் அலைச்சல் ஆகியவற்றின் பிரதியுபகாரமாக ஒரு நாள் ஆகிலும் அவ் அட்டைகளுக்கு எரிபொருள் பங்கிடப்படவில்லை. இதுவே ஒரு மிகச் சிறந்த உதாரணமாகும். 

இதில் குறித்த அலுவலகங்களின் அவசர கொள்வனவுகள் காரணமாக கொள்வனவு உத்தியோகத்தர்களும் கணக்காளர்களும் அச்சகங்களில் அடித்ததைத் தவிர ஒரு துளி பெற்றோலும் அடிக்கப்படவில்லை. 

வினைத்திறனாக மணலை பகிரந்தளிக்க ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் ஒவ்வொரு நிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும், நியாய விலையில் இயற்கைவளம் அனைவருக்கும் கிடைக்கத்தக்க வகையில் விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும். 

மணல் அகழும் உரிமம் பெற்றவர்கள் சட்ட ரீதியான போக்குவரத்துடன் மணலை இந் நிலையங்களுக்கு விநியோகிக்க வேண்டும். இச் செயற்பாடுகளை தொழில்நுட்பத்தால் முகமை செய்யவேண்டும். 

இயற்கை வளமும் பாதுகாக்கப்பட வேண்டும், செயற்கை முறைச் சந்தைச் சூழல் தவிர்க்கப்பட்டு ஒரு சமனிலையை உருவாக்கப்பட வேண்டும். இயற்கை வளத்தினை ஒரு சட்ட திட்டத்திற்கு அமைவாக பகிரவேண்டும்.

இவற்றை செய்வதற்கு கையறுந்த அறிவுடைய அரச நிறுவனங்களும் அதன் பிரதானிகளும் இப்போது இருக்கும் நடைமுறைகளை திருத்த முன்வராது சிறப்பான திட்டங்களை முன்மொழியாது தங்களது கடமைக்காக கடமையாற்றுவது இன்னும் இன்னும் அரச உத்தியோகம் புருசலட்சணம் என்ற வடபகுதிக் கோட்பாட்டுக்கே பொருத்தமானதாகும். 

சுண்ணாம்புக் கற்கொள்ளை வடக்கே இருந்த காங்கேசன் சீமெந்து தொழிற்சாலையை மீள இயங்கவைத்தால் அதன் மூலப்பொருளாக யாழ்ப்பாணத்தில் சுண்ணக்கல் அகழ முடியாது என்றும் இதனால் இங்கே மீள அமைப்பது பொருத்தமான என்றதொரு சூழலியலாளர்களின் ஆர்வம் மிக்க கருத்தும் இத் தொழிற்சாலையின் மீள்நிர்மாணத்தில் பாரிய தாக்கத்தினை செலுத்துகின்றன.

இச் சூழ்நிலையில் திருகோணமலையில் இயங்கிவரும் பிரபல சீமெந்து தொழிற்சாலைக்கு யாழ்பாணத்து சுண்ணாம்புக்கற்கள் தான் மூலப்பொருட்களாக கடந்த 04 வருடங்களாக அனுப்பட்டுவருவது ஏனோ இச் சூழலியலாளர்களுக்கும், சுற்றாடல் அதிகார சபைக்கும், மாவட்ட மற்றும் சம்பந்தப்பட்ட அகழ்வுக்குரிய பிரதேச செயலர்களுக்கும் தெரியவில்லை என்பது மிகப்பெரிய மர்மமாக இருக்கின்றது.

மண்ணையும் மக்களையும் காப்போம் என திடசங்கற்பம் கொண்ட தமிழ் தேசிய வாதிகளுக்கும் தமிழ்ப்பற்று அரசியல் வாதிகளுக்கும் இச் சுரண்டல்கள் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

வடக்கில் சத்தமின்றி நடக்கும் ஒரு அழிப்பு | A Silent Destruction In The North

பூமிக்கு மேலே இருக்கும் கற்பாறையை உடைப்பதையும் பூமிக்கு கீழே இருக்கும் கல்லை அகழ்வதற்கும் இருக்கும் வேறுயாடுகள், அபாயங்கள் முதலியவற்றையும் அதற்குரித்தான சட்ட ஏற்பாடுகளையும் பின்பற்றாது அல்லது நடைமுறைப்படுத்தாது இவ் விடயம் தொடர்வது யாழ்ப்பாணம் என்றதொரு நிலத்தினை இல்லாமல் செய்வதற்கான செயற்பாடுகள் ஆகும். 

யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு பிரபல வர்த்தகர் உட்பட்ட இரு தரப்பினரால் தினமும் 15 க்கு மேற்பட்ட 8 கியுப் காவுதிறன் கொண்ட பாரஊர்திகளில் மிகவும் இலாவகமாக மூடப்பட்டு அனுப்படுவதாக அவற்றில் பணியாற்றும் ஒரு சாரதி தெரிவிக்கின்றார். தான் தென்பகுதியை சேர்ந்தவர் எனவும் கடந்த 04 வருடங்களாக இப் பணியை செய்பவராகவும் தெரிவிக்கின்றார்.

இவ் வகையான மிகக் கூடியகாவுதிறனுக்கு அப்பாற்பட்ட அளவில் ஏற்றிச் செல்வதற்கு பொலிஸார் அனுமதிப்பார்களா என வினவியதற்கு தங்களது நிறுவனத்தில் பொலிஸாரின் விடயங்களை கையாள்வதற்கு ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார் என்றும் எங்கேனும் சிக்கல் இருப்பின் அவர் உடனடியாக தொடர்பு கொள்வார் என்றும் சம்பந்தபட்ட பொலிஸாருக்கு யாழ்ப்பாணம் பெரிய இடத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வரும் என்றும் அதனால் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் மிகக் கௌரவமாக தெரிவிக்கின்றார்.

இவற்றை எங்கே ஏற்றுவீர்கள் என வினவியதற்கு எங்களுக்கு எங்களுடைய வாகன தரிப்பிடத்தில் பெரிய லோடரால் லோட் செய்யப்பட்டு வெளியே தெரியாதவகையில் தறப்பாளிடப்பட்டு கையளிக்கப்படும் எனவும், தங்களது மிகவும் பாதுகாப்பாக வெளித்தெரியாதவாறு முடக்கப்பட்ட வாகனத் தரிப்பிடமும் கல் ஏற்றுமிடமும் தங்களது நிறுவனத்தால் யாழ். புறநகர் பகுதியில் பேணப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கின்றார்.

வளக்கொள்வனவு

அனுமதிக்கு புறம்பாக அகழப்படுகின்றது, அனுமதியற்று மாகாணத்திற்கு வெளியே கொண்டு செல்லப்படுகின்றது, சூழல் நேயம் மிக்க சீமெந்து உற்பத்தி தொழிற்சாலையாக அறியப்பெற்ற இலங்கை மற்றும் சர்வதேச தர நியமங்கள் பெற்ற சட்டரீதியான உற்பத்தி நிறுவனம் முறைகேடாக ஒரு வளக்கொள்வனவை மேற்கொண்டு மூலப்பொருளை உள்வாங்குகின்றது.

இதனை முகமை செய்யவேண்டிய அரசுநிறுவனங்கள் அதிகார சபைகள், உத்தியோகத்தர்கள் என்போர் உறங்குநிலை போன்று உறங்குகின்றார்கள். 

சூழல் நலன் சார்ந்து சிந்திக்காத எந்தவொரு மனிதனும் வாழத் தகுதியற்றவன் என்பதை வாழ்வின் இறுதிக்காலத்தில் மட்டுமே உணர்வான் இப்போது வாழும் வரைக்கும் மண்ணை விற்றென்ன கல்லை விற்றென்ன வாழ்ந்தால் போதுமே என்ற நிலைதான் இருக்கின்றது. 

இருக்கவேண்டியவர் இருந்தால் இன்று இப்படியெல்லாம் நடக்குமா என்ற முதியவர் ஒருவரது முனுகலுடன் மணல் டிப்பரையும்  லொறியையும் கடந்து செல்லவேண்டியுள்ளது.

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 01 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

பிரச்சினையின் பின்னணியில் சுமந்திரன்: அவருக்கு அவரே வெட்டிக் கொள்ளும் புதைகுழி - கம்பவாரிதி ஜெயராஜ்

3 months 2 weeks ago

பிரச்சினையின் பின்னணியில் இருந்து சுமந்திரன் செயற்பட்டுவிட்டு பின்னர் கட்சிக்காக வழக்காடுவேன் என்று சொல்வது உண்மையானால் அது அவருக்கு அவரே வெட்டிக் கொள்ளும் புதைகுழியாய்ப் போகப்போகிறது என பேச்சாளரான கம்பவாரிதி ஜெயராஜ் தெரிவித்துள்ளார். 

தனது தளத்தின் உரையாடல் பகுதியொன்றில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

அதில் மேலும்,

1. உரலார் கேள்வி :- தமிழரசுக் கட்சியின் பதவி தேர்வுகளை ஆட்சேபித்து நீதிமன்றில் வழக்குத் தொடுத்தவர்கள் சுமந்திரனதும், சாணக்கியனதும் ஆதரவாளர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் சுமந்திரனோ தான் கட்சிக்காக நீதிமன்றில் வழக்காடுவேன் என்று அறிக்கை விடுத்துள்ளார். அங்கு என்ன நடக்கிறதென்று உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?

 

 

உலக்கையார் பதில் :- இடியப்ப சிக்கல் தான். இடியப் போகிற வீட்டில் முதலில் அங்காங்கு வெடிப்புகள் தோன்றும். தமிழரசுக் கட்சியிலும் அதுதான் நடக்கிறது. வரவர அங்கு வெடிப்புகள் பெரிதாகிக் கொண்டே போகின்றன. இப்படியே போனால் ‘வீடு’ விழப்போகும் நாள் அதிக தூரத்தில் இல்லை என்று தோன்றுகிறது.

சுமந்திரன், “பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார்” என்கிறார்கள். அதுபற்றிய உண்மை ஏதும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று, சுமந்திரன் அப்படிச் செய்கிறார் என்றால் அவர் பெரிய தவறு செய்கிறார் என்பதில் ஐயத்திற்கு இடமில்லை.

பிரச்சினையின் பின்னணியில் சுமந்திரன்: அவருக்கு அவரே வெட்டிக் கொள்ளும் புதைகுழி - கம்பவாரிதி ஜெயராஜ் | Sri Lankan Jayaraj Kambavarithi Srilanka Political

 

பகையை வெளிப்படையாய்க் கையாளாமல் தந்திரமாய்க் கையாள்பவர்களை மக்கள் மதிக்க மாட்டார்கள். ஒரு அரசியல் தலைவருக்கு புத்திசாலித்தனம் அவசியம் தான்!. ஆனால் தந்திரம் மிக்க அதிபுத்திசாலித்தனம் மக்கள் மத்தியில் எதிர்ப்புணர்ச்சியைத் தான் தோற்றுவிக்கும்.

முன்பு தமிழ்நாட்டின் முதலமைச்சராய் இருந்த மூதறிஞர் ராஜாஜியைப்பற்றி சிலர், “ராஜாஜிக்கு உடம்பெல்லாம் மூளை. மூளையெல்லாம் சிந்தனை. சிந்தனையெல்லாம் வஞ்சனை” என்று கிண்டலாய்ச் சொல்வார்கள். அவரது அந்த அதிபுத்திசாலித்தனமும் பின்னாளில் மக்களால் ரசிக்கப்படாமல் போயிற்று.

நம் நாட்டு மூத்த தமிழ்த் தலைவர்களான தந்தை செல்வா, ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஆகிய இருவரிலும் ஜீ.ஜீ.பொன்னம்பலம் செல்வாவை விட அதி புத்திசாலியாய் இருந்தார். ஆனால் அந்தப் புத்திசாலிதனத்துக்கும் தமிழ் மக்கள் மத்தியில் பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.

ஜீ.ஜீ. அவர்கள் தேர்தல் பரப்புரைக்காகச் செல்லும் போது, ஒரு வீட்டினுள் புகுந்து தனக்கான ஆதரவைக் கேட்பாராம். அத்தோடு அந்த வீட்டுக்காரரிடம் அடுத்த வீட்டில் இருப்பவர்கள் பற்றிய விபரங்கள் முழுவதையும் கேட்டறிந்து கொள்வாராம். பின்னர் அடுத்த வீட்டிற்குள் நுழையும் போதே, தான் அவர்களுக்கு நெருக்கமானவர் என நினைக்கச் செய்ய, அவர்களை உரிமையாய் பெயர் சொல்லி அழைத்து கொண்டே உள் நுழைவாராம்.

 

 

 

அது மட்டுமல்லாமல் அவர்களது பிள்ளைகளின் படிப்பு, தொழில் முதலியவை பற்றியெல்லாம் அக்கறையுடன் விசாரிப்பாராம். அந்த வீட்டுக்காரர்கள், ஐயா! எங்களைப் பற்றியெல்லாம் முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கிறாரே என மயங்கிப் போவார்களாம். சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் அந்த அதி புத்திசாலித்தனம் நம் மக்களாலும் பெரியளவில் விரும்பப்படவில்லை.

மென்மையாகவும், எளிமையாகவும், இயல்பாகவும் இருந்த தந்தை செல்வாவை தான் மக்களுக்கு அதிகம் பிடித்தது. இவையெல்லாம் வஞ்சனையாய் செயற்படும் அதி புத்திசாலிகளை மக்கள் விரும்ப மாட்டார்கள் என்பதற்கான முன் உதாரணங்கள்.

பிரச்சினைகள் வரும்போது தந்திரங்கள் செய்யாமல், நேர்மையாக அவற்றை கையாள்வதுதான் மக்கள் மனதை வெல்வதற்கான சுலபமான வழி என்று நினைக்கிறேன். நீங்கள் சொன்ன பிரச்சினையில் சுமந்திரன் பின்னணியில் இருந்து செயற்பட்டுவிட்டு பின்னர் கட்சிக்காக வழக்காடுவேன் என்று சொல்வது உண்மையானால் அது அவருக்கு அவரே வெட்டிக் கொள்ளும் புதைகுழியாய்ப் போகப்போகிறது.   

பிரச்சினையின் பின்னணியில் சுமந்திரன்: அவருக்கு அவரே வெட்டிக் கொள்ளும் புதைகுழி - கம்பவாரிதி ஜெயராஜ் | Sri Lankan Jayaraj Kambavarithi Srilanka Political

2. உரலார் கேள்வி :- இந்தியாவை மெல்ல மெல்ல இந்து நாடாக ஆக்க முயல்வது சரிதானா?

உலக்கையார் பதில் :- அதில் தவறென்ன இருக்கிறது? இந்தியாவைப் புதிதாக யாரும் இந்து நாடாக ஆக்க வேண்டிய அவசியமில்லை. அது ஏற்கனவே இந்துநாடாகத் தான் இருக்கிறது.

இந்தியா இந்து சமயத்தின் தளமாக இருக்கும் ஒரு நாடு என்பதை எவர் மறுக்க முடியும்? வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே அங்கிருந்த இந்து மத அடையாளங்களை எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். வடக்கிலும் சரி, தெற்கிலும் சரி, கிழக்கு மேற்குகளிலும் சரி அங்கு எல்லா இடங்களிலும் வரலாற்றுத் தொன்மைமிக்க இந்து மதக் கோவில்கள் நிரம்பிக் கிடக்கின்றன.

 

 

அடியார்கள், ஆழ்வார்கள் எனத் தமிழ் நாட்டில் இந்துமதத்தை வளர்த்த பெரியவர்களைப் போன்ற பலர் இந்தியா முழுவதிலும் விரவி இருந்திருக்கிறார்கள். அங்குள்ள புனித நதிகள், மலைகள் எல்லாம் கூட இந்து மத வரலாற்றில் பதிவாகி இருக்கின்றன. அங்குள்ள விலங்குகள், பறவைகள் மட்டுமன்றி மரங்களும், கற்களும் கூட இந்து சமய வரலாற்றோடு தொடர்புள்ளவையாய்ப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வேதம், ஆகமம், புராணம், இதிகாசம், தர்மசாஸ்திரம் என இந்து மதத்தின் அடிப்படை நூல்கள் எல்லாம் அங்குதான் தோன்றி வளர்ந்து நிலைத்திருக்கின்றன. பண்டைய காலந்தொட்டு அங்குள்ள மக்களில் பெரும்பான்மையோர் இந்துசமய வழிபாட்டு முறையையும், ஆசாரங்களையும், சீலத்தையும்தான் தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள்.

இவையெல்லாம் இன்று நேற்றுப் பதிவான விடயங்கள் இல்லை. தொன்றுதொட்டு வரும் விடயங்கள். அப்படியிருக்க இந்தியாவை இந்து நாடு எனச் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?

மத்திய கிழக்கு நாடுகள் தம்மை இஸ்லாமிய நாடுகள் எனப் பகிரங்கமாக அறிவிக்கின்றன. மேற்கு நாடுகள் தம்மைக் கிறிஸ்தவ நாடுகளாகத் துணிந்து வெளிப்படுத்துகின்றன. நம் நாடு தன்னைப் பௌத்த நாடு எனப் பகிரங்கப் படுத்தியிருக்கிறது. மேற் சொன்ன நாடுகளில் பல தம் நாட்டில் மற்றைய சமயங்களின் வழிபாட்டிற்கே தடை விதித்திருக்கின்றன. இவற்றை யாரும் பிழை சொல்வதில்லை. இந்தியாவை இந்து நாடு என்று சொன்னால் மட்டும் ஏனோ சிலர் குற்றம் சாட்டப் பாய்ந்து வருகிறார்கள்.

பிரச்சினையின் பின்னணியில் சுமந்திரன்: அவருக்கு அவரே வெட்டிக் கொள்ளும் புதைகுழி - கம்பவாரிதி ஜெயராஜ் | Sri Lankan Jayaraj Kambavarithi Srilanka Political

சிறுபான்மையினருக்கு உரிமையும், மதிப்பும் கொடுக்கத் தான் வேண்டும். அதற்காக பெரும்பான்மையினரின் உரிமையை மறுப்பதென்பது ஏற்க முடியாததொன்று என்றே கருதுகிறேன். சல்லடையார் சலிப்பு - கள்ளமில்லாத வெளிப்படையான உறுதியான பதில். வாரிதியாரின் துணிவு பாரட்டத்தக்கது. 

3. உரலார் கேள்வி :- இந்த நூற்றாண்டின் ஆச்சரியப்படத்தக்க புதுமையாக எது இருக்கப் போகிறது?

உலக்கையார் பதில் :- ‘ஏலியன்ஸ்’ என்று சொல்லப்படுகின்ற வெளிக்கிரக வாசிகளின் வருகை தான் அத்தகைய புதுமையாக இருக்குமென நான் உறுதியாக நம்புகிறேன். இந்த நூற்றாண்டின் ‘ஐன்ஸ்ரீன்’ என்று சொல்லப்பட்ட மறைந்த விஞ்ஞானி ‘ஸ்டீபன் ஹக்’ இது பற்றி ஏற்கனவே சொல்லி விட்டுப் போய் விட்டார். ‘ஏலியன்ஸ்களாலும், செயற்கை அறிவூட்டலினாலும் பூமிக்குப் பேராபத்து நிகழ இருக்கிறது என்று அவர் சொன்ன கூற்று உண்மையென்றே நான் கருதுகிறேன். அவர் சொன்ன இரண்டில் ஒன்று மிக விரைவில் நடக்கப் போவதாய் எனது உள் மனம் சொல்கிறது. 

 

 

ஆய்வாளர்கள் ஏற்கனவே ஏலியன்ஸ்கள் பூமிக்கு வரத் தொடங்கிவிட்டார்கள் என்கிறார்கள். அடிக்கடி பலநாடுகளிலும் பறக்கும் தட்டுக்கள் இனங்காணப்பட்டுள்ளன. அமெரிக்க விமானப்படை, கடற்படை ஊழியர்கள் கூட அதனை உறுதி செய்திருக்கிறார்கள்.

பிரச்சினையின் பின்னணியில் சுமந்திரன்: அவருக்கு அவரே வெட்டிக் கொள்ளும் புதைகுழி - கம்பவாரிதி ஜெயராஜ் | Sri Lankan Jayaraj Kambavarithi Srilanka Political

சொன்னால் நம்பமாட்டீர்கள், 1993 அல்லது 1994 என்று நினைக்கிறேன் யாழில் போர் கடுமையாக நடந்து கொண்டிருந்த காலம் அது. அக்காலத்தில் ஒருநாள் இரவு, நாம் ஓர் ஆலயத்தில் பட்டிமண்டபம் நடத்திக் கொண்டிருந்தோம். கிட்டத்தட்ட நடுச் சாமநேரம். திடீரென பட்டிமண்டபத்தைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் எல்லோரும் வானத்தை அண்ணாந்து பார்த்தார்கள். அவர்கள் எதைப் பார்க்கிறார்கள் என்று அறிய நானும் அண்ணாந்து பார்த்தேன். அப்போது வானத்தில் ஐந்து ஒளிர் பொருட்கள் கிடையாக ஒன்றன் பின் ஒன்றாகப் பறந்து போனதைக் கண்டு வியந்து போனேன்.

எரிகற்களாக இருந்தால் அவை செங்குத்தாகத் தான் பயணித்திருக்கும். நாம் கண்ட ஒளிப் பொருள்களின் கிடைக்கோட்டுப் பயணமும், அவற்றின் பயணவேகத்தில் இருந்த நிதானமும் அவற்றைப் பறக்கும் தட்டுகளாய்த்; தெளிவாய் இனங்காட்டின.

இதையெல்லாம் நீங்கள் நம்பவா போகிறீர்கள்? முக்கியமான ஒன்றை மட்டும் சொல்லி விடுகிறேன். கடல் பயணங்கள் செம்மையாவதற்கு முன்பு, கடல் தாண்டி இன்னொரு நிலப் பரப்பு இருப்பதையும், அங்கு மக்கள் வாழ்வதையும் யாரும் நம்பியிருக்கவில்லை. பின்னர் துணிந்த சிலர் கடல் பயணம் செய்து பிற கண்டங்களைக் கண்டு பிடித்தார்கள்.

அதன் பின்பு அவர்கள் படைபலத்தோடு அங்கு சென்று அங்குள்ளவர்களை அழித்து அல்லது அடக்கி அந்தப் பிரதேசத்தைத் தமக்காக்கிக் கொண்டார்கள். இது நாம் அறிய நடந்த வரலாறு.

அது போலத்தான் ஆகாய வழியாகச் சென்று மக்கள் வாழும் இன்னொரு கிரகத்தைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் இன்று முயன்று வருகிறார்கள். இக் காரியத்தை நாம் மட்டுமல்ல வேற்றுக் கிரகவாசிகளும் செய்வார்கள் என்பது திண்ணம். அவர்கள் நம்மை விட அறிவாளிகளாகவும், பலசாலிகளாகவும் இருக்கும் பட்சத்தில் எமது பூமியை அழித்தோ, அடிமையாக்கியோ கைப்பற்றுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதுபற்றித்தான் இன்றைய வல்லரசுகள் பயப்படுகின்றன.

அப்போதாவது நம் மக்கள் மத்தியில் இருக்கும் இன, மத, ஜாதிச் சண்டைகள் முடிகிறதா என்று பார்ப்போம்.    

https://tamilwin.com/article/sri-lankan-jayaraj-kambavarithi-srilanka-political-1709348032

சாந்தனின் பூதவுடல் நாளை மக்கள் அஞ்சலிக்கு!

3 months 2 weeks ago
சாந்தனின் பூதவுடல் நாளை மக்கள் அஞ்சலிக்கு! - நாளைய தினத்தை தமிழ் தேசிய துக்க தினமாக அறிவிக்க பொது அமைப்புகள் வேண்டுகோள்
02 MAR, 2024 | 06:58 PM
image

சாந்தன் புகழுடல் நாளை (03) மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ள நிலையில் நாளைய தினமான ஞாயிற்றுக்கிழமையினை தமிழ் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க பொது அமைப்புக்கள் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளன.

நாளைய தினத்தை தமிழ் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க பொது அமைப்புக்கள் இன்று சனிக்கிழமை ஒன்று கூடி தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் முருகையா கோமகன், துக்க தினமான நாளை தேவையற்ற களியாட்ட நிகழ்வுக்களை தவிர்த்து சாந்தனுக்கு அனைவரும் திரண்டுவந்து அஞ்சலி செலுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தில் நோய்வாய்ப்பட்டு உயிர் துறந்த அரசியல் கைதி தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் (சாந்தன்)  புகழுடல் நாளை மக்கள் அஞ்சலி செலுத்த ஏதுவாக அவரது தாய்மண்ணுக்கு எடுத்துவரப்படவுள்ளது.

நாளை காலை 8 மணிக்கு வவுனியாவில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் சாந்தனின் புகழுடல், மாங்குளம் பகுதிக்கு 9.00 மணிக்கு எடுத்துவரப்படவுள்ளது.

தொடர்ந்து காலை 10.30 மணிக்கு கிளிநொச்சியில் மக்கள் அஞ்சலியின் பின்னராக யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டிக்கு எடுத்துவரப்பட்டு வல்வெட்டித்துறை தீருவிலில் பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணிவரை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.

மாலை அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்படும் புகழுடல் அடுத்த தினமான திங்கட்கிழமை அவரது குடும்ப மயானமான எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

வவுனியா, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ள அஞ்சலி நிகழ்வுகளில் வேறுபாடுகளை களைந்து அனைவரையும் அணி திரண்டு அஞ்சலி செலுத்த அழைப்பு விடுத்துள்ள பொது அமைப்புக்கள் அனைத்து இடங்களிலும் நீதி கோரியும் துக்கதினத்தை நினைவு கூரும் வகையில் கறுப்பு கொடிகளை தொங்கவிடவும் கோரிக்கை விடுத்துள்ளன.

பொது அமைப்புக்கள் இறுதிக்கிரியைகள் நடைபெறும் திங்கட்கிழமை குடும்பத்தவர்கள் மற்றும் ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தவும் ஒத்துழைக்க கோரிக்கை விடுத்துள்ளன.

பொது அமைப்புக்கள் இறுதிக்கிரியைகள் நடைபெறும் திங்கட்கிழமை குடும்பத்தவர்கள் மற்றும் ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தவும் ஒத்துழைக்க கோரிக்கை விடுத்துள்ளன.

https://www.virakesari.lk/article/177766

யாழ். இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு மார்ச் 5இல் போராட்டம் - கடற்தொழிலாளர் இணையம்

3 months 2 weeks ago
யாழ். இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு மார்ச் 5இல் போராட்டம் - எம்.வி.சுப்பிரமணியம் 
02 MAR, 2024 | 04:27 PM
image

வடக்கில் உள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகை இடுவதற்கான போராட்டம் 5ஆம் திகதி கச்சேரியில் இருந்து ஆரம்பமாகி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வரை நடைபெறும் என இணையத்தின் தலைவர் எம்.வி. சுப்பிரமணியம்  தெரிவித்துள்ளார்.

இன்று (02) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 23ஆம் திகதி வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் பொது சபை கூட்டமானது முல்லைத்தீவிலே நடைபெற்றது. 

அந்த கூட்டத்தில் 5ஆம் திகதி நாங்கள் வடக்கில் உள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகை இடுவதற்கான போராட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தோம்.

அந்த வகையில் இந்த போராட்டமானது 5ஆம் திகதி கச்சேரியில் இருந்து ஆரம்பமாகி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வரை நடைபெறும்.

இந்த போராட்டத்தை ஆக்கபூர்வமான, ஒரு உணர்ச்சிபூர்வமான போராட்டமாக மாற்ற வேண்டுமாக இருந்தால், இங்கே உள்ள பல அமைப்புகள், அனைத்து கடல் தொழிலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் அதில் முழுமையாக பங்குபற்றி வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

இந்தியாவிலிருந்து வருகின்ற படகுகளை நிறுத்துவதற்கு எமது அரசாங்கத்தால் முடியாது. அரசாங்கம் ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. இந்திய அரசாங்கம் நடித்துக்கொண்டு ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. அது எங்களுக்கு தெரிந்த விடயம்.

வட புலத்திலே வாழ்கின்ற மீனவர்கள் தொடர்ச்சியாகவே துன்பத்தையே தமது வாழ்க்கையாக வாழ்ந்து, பல சவால்கள் மத்தியிலே உயிர்களை தக்கவைத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலைமைக்கு நாங்கள் தள்ளப்பட்டமைக்கு முக்கியமான காரணம் போராக இருந்தாலும், அடுத்ததாக இங்கே பூதாகரமாக புரையோடிக் கிடக்கின்ற இந்த இந்திய இழுவை படகினுடைய அத்துமீறிய வருகையும், அவர்களுடைய அடாவடித்தனமான சட்ட விரோதமான தொழில்முறையுமே காரணமாக இருக்கின்றது.

இதன் மூலமாக அவர்கள் எங்களுடைய கடல் வளங்களை அழித்துச் செல்கின்றார்கள். வாழ்வாதாரத்தை சூறையாடி செல்கின்றார்கள். கடற்தொழில் உபகரணங்களை அடுத்து நாசமாக்கிவிட்டு செல்கின்றார்கள்.

அன்று நடந்த பேச்சுவார்த்தையில் 'நீங்கள் உங்களது எல்லைக்குள் மீன் பிடிக்காமல் ஏன் எங்களது எல்லைக்குள் வருகின்றீர்கள்' என கேட்டபோது 'எங்களது எல்லையில் மீன்கள் இல்லை, வளங்கள் அழிந்துவிட்டன. ஆகையால் தான் இங்கே வருகின்றோம்' என சொல்கின்றார்கள். ஆனால் அன்னியச் செலாவணியை ஈட்டுவதற்காக சென்னை பட்டினத்தில் இருந்து வெளிநாட்டுக்கு மீன்களை அனுப்புகின்றார்கள். அது எங்கே பிடிக்கப்பட்ட மீன்?

எங்களுடைய வளங்களை அள்ளிக்கொண்டு போய் நீங்கள் வெளிநாடுகளுக்கு விற்றுவிட்டு, அங்கிருந்து வருகின்ற அந்நியச் செலாவணியை எடுத்து உங்களுக்கு மட்டுமல்ல. நாடு முழுவதற்கும் கொடுத்துவிட்டு இப்பொழுது நாங்கள் எங்களுடைய வலைகள் அறுந்துவிட்டன என்று ஆதங்கப்பட்டு 'இப்படி செய்தவர்களது படகுகளை எரிக்க வேண்டும், இப்படி செய்தவர்களை அடித்து துரத்த வேண்டும்' என்ற ஆதங்கத்தில் பேசினால் நீங்கள் கோபப்படுகிறீரகள். அறுக்கப்பட்டவர்கள் அழுகின்றோம். காரணம் இருக்கிறது. அறுத்துப்போட்டுப் போன நீங்கள் கோபப்படுவதற்கு என்ன நியாயம் இருக்கிறது?

ஒரு நாளைக்கு மூன்று தடவை உங்களது படகுகள் வந்து எங்களது வளங்களை அள்ளிச் செல்கின்றன. சாதாரணமாக ஒரு பத்தாயிரம் அல்லது முப்பதாயிரம் இந்திய ரூபாய்க்கு ஒரு படகில் வந்து மீனை பிடிக்கின்றீர்கள். இந்த முப்பதாயிரம் ரூபா இலங்கை காசுக்கு ஏறக்குறைய ஒன்றேகால் இலட்சத்துக்கு மேலே வரும்.

அந்த வகையில் ஒரு படகு ஒரு வருஷத்துக்கு 60 கோடிக்கு அதிகமான மீனை பிடித்துக்கொண்டு போகின்றது. இதை உங்களது 2500 படகினால் பெருக்கிப் பாருங்கள். எத்தனை ஆயிரம் கோடியை நீங்கள் கொண்டு போகிறீர்கள் என்று. 

ஏறக்குறைய 1987ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தத்துக்கு பிறகு 40 வருட காலமாக எங்களது கடலை வாரிச் செல்கின்றீர்கள். எத்தனை ஆயிரம் கோடிகளை கொண்டு போய்விட்டீர்கள். ஆனால் எமது அகதிகளுக்கு வரிப்பணத்தில் கொடுப்பதாக கொக்கரிக்கின்றீர்கள். எங்களது கடலை எங்களிடம் விடுங்கள். நாங்கள் எங்களுக்கு கிடைக்கின்ற வருவாயில் அகதிகளுக்கு காசு அனுப்புகிறோம் என்றார்.

https://www.virakesari.lk/article/177749

வடக்குக்கு செல்கிறார் அநுரகுமார : தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுடன் விசேட சந்திப்பு

3 months 2 weeks ago
02 MAR, 2024 | 05:56 PM
image

(ஆர்.ராம்)

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க வடக்குக்கு விஜயம் செய்யவுள்ளார்.

எதிர்வரும் 16ஆம் திகதி கிளிநொச்சிக்கு முதலில் விஜயம் செய்யும் அவர் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் மக்கள் சந்திப்பில் பங்கேற்கவுள்ளதோடு, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் பிற்பகலுக்குப் பின்னர் வவுனியாவில் நடைபெறும் மக்கள் சந்திப்பில் அவர் பங்கேற்கவுள்ளதோடு அங்கும் பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை மேற்கொள்வுள்ளார்.

இதனையடுத்து எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள அவர், இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருப்பதோடு பொதுமக்கள் சந்திப்பில் பங்கேற்று, தொடர்ந்து தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

குறிப்பாக, இலங்கை தமிழ் அரசு கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திப்பதற்கு தற்போது ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, கடந்த மாதத்தின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த அக்கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சிகளான தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறீகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்து உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/177761

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் மகா சிவராத்திரியினை தடுத்து நிறுத்த சதித்திட்டம்!

3 months 2 weeks ago
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் மகா சிவராத்திரியினை தடுத்து நிறுத்த சதித்திட்டம்! 9-1.jpg

வடக்கில் வவுனியா மாவட்டத்தில் உள்ள வெடுக்கு நாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் 8 ஆம் திகதி மகா சிவராத்திரி வழிபாட்டில் சைவ மக்கள் ஈடுபடவுள்ளார்கள் இதனை தடுத்து நிறுத்தும் நோக்கில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பௌத்த பீடம் ஒன்று பிக்கு மார்கள் இணைந்து செயற்படவுள்ளதாக அவர்களின் முகநூலில் பதிவுகளை செய்து வருகின்றார்கள் என்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தி.தவபாலன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டதில் நேற்றையதினம்(1) நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் தீர்வு

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் தமிழர்களின் நில ஆக்கிரமிப்புக்களில் குருந்தூர் மலையாக இருக்கலாம் வெடுக்குநாறி மலையாக இருக்கலாம் எந்த விடயங்களாக இருந்தாலும் தமிழர் தேசத்தில் நாங்கள் போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

மேலும் சிங்கள பௌத்த மனநிலை உள்ள தலைவர்கள் தமிழர்களின் தீர்வினை தாம்பாளத்தில் வைத்து தரமாட்டார்கள் என்று எங்கள் தலைவர்கள் சொல்லி இருக்கின்றார்கள் அதை காலம் உணர்த்திக்கொண்டிருக்கின்றது.

ஆகவே எவராக இருந்தாலும் தமிழர்களின் தீர்வினை தருகின்ற மனநிலையில் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

 

https://akkinikkunchu.com/?p=270032

Checked
Mon, 06/17/2024 - 13:19
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr