ஊர்ப்புதினம்

சுதந்திரபுரத்தில் அகழ்வு பணி முன்னெடுப்பு

1 hour 47 minutes ago
சுதந்திரபுரத்தில் அகழ்வு பணி முன்னெடுப்பு

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் காணியொன்றில், மனித எச்சங்கள் இனங்காணப்பட்டதை அடுத்து, நாளை (07) நீதிமன்றத்தின் அனுமதியுடன், அப்பகுதியில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

நாற்பது ஏக்கர் கொண்ட இக்காணியை, நேற்று (04) கனரக இயந்திரத்தைக் கொண்டு துப்புரவு செய்யும் போது, நிலத்துக்கடியில், மனித எச்சங்கள் இனங்காணப்பட்டுள்ளன.

 

http://www.tamilmirror.lk/வன்னி/சதநதரபரததல-அகழவ-பண-மனனடபப/72-252865

 

பாலியல் சேட்டை புரிய முயன்ற நபருக்கு தர்ம அடி கொடுத்த பெண்!

1 hour 51 minutes ago
பாலியல் சேட்டை புரிய முயன்ற நபருக்கு தர்ம அடி கொடுத்த பெண்!

201912271234282124_real-estate-owner-attack_SECVPF.jpg?189db0&189db0

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வைத்து இளம் பெண் ஒருவரிடம் ரேட் எவ்வளவு என்று கேட்டு தரக்குறைவாக நடந்து கொண்ட நபரை அந்த பெண்ணே இழுத்துப் போட்டு உதைத்த்துள்ளார்.

இன்று (06) பிற்பகல் 2.15 மணியளவில் யாழ் பிராதான பஸ் நிலையத்திற்கு அருகில் இச் சம்பவம் இடம்பெற்றது.

யாழ்.பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் நடமாடித்திரிந்து அதிஸ்ரலாப சீட்டு விற்பனை செய்யும் நபர் ஒருவர் அங்கு வந்த இளம் பெண் ஒருவரிடம் ரேட் எவ்வளவு என்று கேட்டுள்ளார்.

தரக்குறைவான வார்த்தை பிரயோகம் செய்த அந்த நபரை முறைத்துப் பார்த்த அந்த பெண் விடயத்தை பெரிது படுத்தாமல் அங்கிருந்து சென்றுள்ளார்.

அங்குள்ள வியாபார நிலையம் ஒன்றில் பெருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் அவ்வழியாக வந்த அந்த பெண்ணை கண்ட குறித்த அதிஸ்ரலாபச் சீட்டுக்கள் விற்பனை செய்யும் நபர் மீண்டும் ரேட் எவ்வளவு என்று கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் தன்னிடம் தரக்குறைவாக பேசியவரை இழுத்துப் போட்டு உதைத்துள்ளார். உதைத்ததுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாத அப்பெண் அவரை பொலிஸ் நிலையம் வருமாறு இழுத்துச் சென்றுள்ளார்.

இதன்போது அந்த நபர் பெண்ணின் காலில் விழுந்து தன்னை மன்னித்து விடுமாறு கதறியதை அடுத்து அவரை பிழைத்து போகுமாறு சொல்லிய அந்த பெண் இனி இவ்வாறு பெண்களிடம் தரக்குறைவாக நடந்தால் நிலமை மோசமாகும் என்று எச்சரித்துச் சென்றுள்ளார்.

 

https://newuthayan.com/பாலியல்-சேட்டை-புரிய-ம/

 

ᐈ Hand clap clip art stock pictures, Royalty Free clap cliparts ...

தலைவர் வழிகாட்டலில் முப்படைகளையே கலங்க வைத்த எம்மின பெண்களிடம் வாலை கொஞ்சம் சுருட்டி வைத்துக்கொள்ளுங்கள் 

நாட்டின் பிரதான குற்றவாளிகளும் ஊழல்வாதிகளும் ஆட்சி அதிகாரத்தில்…!

1 hour 57 minutes ago
நாட்டின் பிரதான குற்றவாளிகளும் ஊழல்வாதிகளும் ஆட்சி அதிகாரத்தில்…!

FONSEKA_28001f.jpg?189db0&189db0

கருணா இராணுவத்தை கொன்றதும், உலகக்கிண்ண கிரிகெட் போட்டியில் ஊழல் இடம்பெற்றதாக கூறுவதும் தவறில்லை, ஆனால் நாம் அரசியல் செய்வது சர்வதேச சதியென கூறுகின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், நாட்டின் பிரதான குற்றவாளிகளும் ஊழல்வாதிகளுமே இன்று ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

தேசிய மற்றும் சர்வதேச சதிகள் நாட்டிற்கு எதிராக இடம்பெறுவதாக கூறி நாட்டினை சர்வதேசத்திற்கு விற்கும் நடவடிக்கையை ராஜபக்ஷக்கள் முன்னெடுத்து வருகின்றனர் என்றும் சரத் பொன்சேகா குற்றம் சாட்டினார்.

 

https://newuthayan.com/நாட்டின்-பிரதான-குற்றவாள/

 
 

யானையை சீண்டி பார்க்காதீர்கள்; அடக்கினாலும் அடங்காது – ஆனந்தகுமார்

2 hours 1 minute ago
யானையை சீண்டி பார்க்காதீர்கள்; அடக்கினாலும் அடங்காது – ஆனந்தகுமார்

 

IMG-20200706-WA0011-960x720.jpg?189db0&189db0

ஐக்கிய தேசிய கட்சி நடமாடும் பிணமாய் அலையும் இறந்த கட்சியாகும் என அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். அவர், எங்கிருந்து வந்தார் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்று இரத்தினபுரி மாவட்ட ஐதேக வேட்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்தார்.

இறக்குவானை ஸ்ரீமுத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் இன்று (06) வழிபட்ட பின்னர் இதனைக் தெரிவித்தார். மேலும்,

“ஒருபோதும் பதவிக்காக யானை சோரம்போனதில்லை. எதிர்காலத்திலும் போகாது. ஆனால், பவித்ரா வன்னியாரச்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கையை காட்டிக்கொடுத்துவிட்டு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டுக்கு முட்டுக்கொடுத்து கொண்டிருக்கின்றார்.

ஐ.தே.வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார திட்டத்தினால்தான், ஓரளவுக்கு நாடு நிமிர்ந்து நிற்கிறது. இல்லையேல், கொரோனாவின் தாக்கத்தில், ஒருவேளை உணவை உண்பதற்கு கூட வக்கில்லாது. பட்டியினால் செத்து மடிந்து வீதியோரங்களில் பல பிணங்கள் கிடந்திருக்கும். ஒவ்வொரு வீட்டு சமையலறைகளிலும் அடுப்பு எரிகிறது என்றால், அது தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தயவால் தான்.

யானையின் பலம் யாருக்கும் தெரியாது. சீண்டிவிட்டால் அங்குசத்துக்கு கூட அடங்காது. இரத்தினபுரியில் காட்டு யானைகள் இல்லை. அதனால், யானையின் பலம் எல்லோருக்கும் தெரியாது. இரத்தினபுரி மாவட்டத்தில் சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெற்று, குறிப்பாக, தோட்டத் தொழிலாளர்கள், முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்று, நாடாளுமன்றத்துக்குச் சென்று, எம்மக்களை மறந்தவர்களே இங்கிருக்கின்றனர்.

எங்களுடைய மக்களுக்கு அவர்கள் மட்டுமல்ல. மலையகத்தில் பழம் தின்னும் கொட்டை போட்டதாகக் கூறப்படும் மலையக அரசியல்வாதிகள் கூட, இரத்தினபுரி மக்களை மறந்தே விட்டனர். இங்குவாழும் சிறுபான்மை மக்களின் மீது கையை வைத்து சீண்டும் போதெல்லாம். அதற்கெதிராக நாமே குரல் கொடுத்தோம் என்பதை இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் மத்தியில் முடியுமானால் பெருமளவான வாக்குகளை பெற்று காட்டுமாறு பவித்ரா வன்னியாராட்ச்சிக்கு பகிரங்க சவால் விடுக்கிறேன்” – என்றார்.

 

https://newuthayan.com/யானையை-சீண்டி-பார்க்காத/

ஆயுதம் ஏந்திப் போராடி மக்களின் உரிமைகளை வென்று தருவதாக நான் உறுதியளிக்கப்போவதில்லை – சுமந்திரன்

10 hours 9 minutes ago
M.A.Sumanthiran.jpg ஆயுதம் ஏந்திப் போராடி மக்களின் உரிமைகளை வென்று தருவதாக நான் உறுதியளிக்கப்போவதில்லை – சுமந்திரன்

ஆயுதம் ஏந்திப் போராடி தமிழ் மக்களின் உரிமைகளை வென்று தருவேன் என வாக்குத் தரவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்த அவர், அஹிம்சை வழியில், இராஜதந்திரமாக, பேச்சுவார்த்தை மூலம் எவை எல்லாவற்றையும் பெறமுடியுமோ அவை எல்லாவற்றையும் பெற அயராது உழைப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

தொடர்ச்சியாக சமஷ்டியை எதிர்த்தவர்களும் கேலி செய்தவர்களும் இன்று அதை பெற்றுத்தருவதாக கூறுகின்றார்கள் என குறிப்பிட்ட சுமந்திரன், அவ்வாறு கூறியவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றிற்கு கணிசமான சிங்கள மக்களது ஆதரவைப் பெற வேண்டியதன் அவசியம் குறித்து கருத்து தெரிவித்த அவர் பிரிக்கமுடியாத நாட்டுக்குள்ளேயே தீர்வை கோருவதாகவும் அவர் கூறினார்.

https://athavannews.com/ஆயுதம்-ஏந்திப்-போராடி-மக/

காலிமுகத்திடலில் துன்புறுத்தப்பட்ட ரஷ்ய பெண் : ரவி கருணாநாயக்க, அமைச்சர் பிரசன்ன கருத்து

10 hours 11 minutes ago
Russian-national-harrassed-Galle-Face.jpg காலிமுகத்திடலில் துன்புறுத்தப்பட்ட ரஷ்ய பெண் : ரவி கருணாநாயக்க, அமைச்சர் பிரசன்ன கருத்து

காலிமுகத்திடலில் அடையாளம் தெரியாத சிலரால் தான் துன்புறுத்தப்பட்டதாக ரஷ்ய நாட்டுப் பெண்ணொருவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

தானும் நண்பரும் தாக்கப்பட்டமை தொடர்பாக முகநூலில் அவர் இது தொடர்பான வீடியோவொன்றையும் வெளியிட்டுள்ளார்.

காலிமுகத்திடலில் நேற்று மாலை மூன்று நண்பர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தவேளை பத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தன்னை துன்புறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

மதுபோதையிலிருந்த ஒருவர் தகாதவார்த்தை பிரயோகங்களில் ஈடுபட்டதுடன் தனது நண்பரை தாக்கினார். அந்த சம்பவத்தை தான் படம்பிடிக்க ஆரம்பித்த பின்னரே அவர்கள் அங்கிருந்து சென்றனர் என அந்த பெண் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் சம்பவம் நடந்து 20 நிமிடங்களுக்கு பின்னரே பொலிஸார் அங்கு வந்தனர் என்றும் இது குறித்து அவர்களிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

துன்புறுத்தலில் ஈடுபட்ட முக்கிய நபரின் படத்தை வெளியிட்டுள்ள அந்த பெண் அவரை கைதுசெய்வதற்கு பொதுமக்கள் உதவவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை சுற்றுலாப் பயணிகள் துன்புறுத்தப்படுவதை சகித்துக்கொள்ளப் போவதில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

விசாரணைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் கிடைத்துள்ள தகவல்கள் உண்யைமானவை என்பது உறுதியானவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொழும்பு காலிமுகத்திடலில் வெளிநாட்டு பெண்ணொருவரை துன்புறுத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என முன்னாள் அமைச்சர் ரவி கருணநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், “வெளிநாட்டு உள்நாட்டு பெண்களை இலங்கையில் துஸ்பிரயோகம் செய்வது பரந்துபட்ட அளவில் கண்டிக்கப்படவேண்டிய விடயம்.

காலிமுகத்திடலில் வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிகளை துன்புறுத்தியவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்குமாறு நான் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/காலிமுகத்திடலில்-துன்பு/

யாழில் இளம் பெண்ணிடம் “என்ன விலை” எனக் கேட்ட நபர்! கடும் தாக்குதல் நடத்திய பெண்!!

12 hours 42 minutes ago

யாழ்.நகர் பகுதியில் நின்றிருந்த இளம் பெண் ஒருவரை தவறாக அணுக முற்பட்ட அதிஸ்டஇலாபச் சீட்டு விற்பனை செய்யும் நபர் ஒருவரை குறித்த பெண் சரமாரியாகத் தாக்கி நையப்புடைத்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

25 வயது மதிக்கத் தக்க இளம் பெண் ஒருவர் யாழ்.பேருந்து நிலையத்திற்கு அண்மையில் உறவினர் வருகைக்காக காத்திருந்திருக்கின்றார்.

அவ்வேளை அவரை அணுகிய குறித்த நபர் அந்தப் பெண்ணின் விலை என்ன? என்று கேட்டதாகவும் முதல் தடவை தான் அதனை கண்டுகொள்ளாமல் விட்டிருந்த நிலையில் மீளவும் தன்னை அணுகி தனது விலை என்ன? என்று கேட்டதாகவும் சம்பவத்தின் பின்னர் குறித்த பெண் அங்கிருந்த மக்களுக்கு தெரிவித்திருக்கின்றார்.

குறித்த நபரின் சேட்டைப் பிடித்து கடுமையாகத் தாக்கிய குறித்த பெண் அவரை கீழே விழுத்தியும் தாக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலின் போது அந்தப்பகுதியில் பெருமளவான மக்கள் கூடியிருக்கின்றனர். தாக்கிய பெண் அந்த நபரை பொலிஸ் நிலையம் செல்ல வருமாறு இழுத்தபோது மக்கள் தடுத்து சமரசம் செய்து அனுப்பிவைத்ததாக சம்பவத்தினை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.yarloli.com/2020/07/blog-post_79.html

வாக்களிக்கும் நேரம் அதிகரிப்பு!

13 hours 30 minutes ago
வாக்களிக்கும் நேரம் அதிகரிப்பு!

ELECTION.jpg?189db0&189db0

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்க முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு இன்று (06) சற்றுமுன் அறிவித்துள்ளது.

https://newuthayan.com/வாக்களிக்கும்-நேரம்-அதிக/

 
 

சாக்கடை அரசியலை சுத்தப்படுத்த இளைஞர்கள் களத்துக்கு வர வேண்டும் – ஜீவன்

14 hours 14 minutes ago
சாக்கடை அரசியலை சுத்தப்படுத்த இளைஞர்கள் களத்துக்கு வர வேண்டும் – ஜீவன்

jeevan-thondaman-1-720x450-1.jpg?189db0&189db0

மலையகத்தில் குறைகூறும் அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைக்க வேண்டும். சாக்கடை அரசியலை சுத்தப்படுத்த இளைஞர்கள் களத்தில் இறங்க வேண்டும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பூண்டுலோயா பேர்லேன்ட்ஸ் தோட்டத்தில் இன்று (06) நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்தார். மேலும்,

“கடந்த நான்கு வருடங்களாக ஆயிரம் ரூபா பற்றி மட்டுமே கதைத்தார்கள். இவ்வாறு கதைத்து ஏனைய பிரச்சினைகளை மூடிமறைத்துவிட்டனர். ஆயிரம் ரூபாவைத்தவிர எமக்கு வேறு பிரச்சினைகள் இல்லையா? இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு இருக்கின்றதா? இல்லை. கேட்டால் வீடு கட்டிக்கொடுத்தோம் என்கின்றனர். வேலையின்மை பிரச்சினைக்கும், வீட்டுப்பிரச்சினைக்கு இருக்கும் தொடர்புதான் என்ன?

நீ பெரியவனா, நான் பெரியவனா என்று குறைகூறும் அரசியல் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதனை நாம் மாற்றியமைக்க வேண்டும். அப்பா உயிருடன் இருக்கும்போது அவரின் பெயரைப்பயன்படுத்தியே அரசியல் செய்தனர். அவர் பாவம். இரண்டு மாதங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். ஆனால், இன்னும் அவரை வைத்து அரசியல் செய்ய பார்க்கின்றனர். அப்பா மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் போலியானவை என்பது உறுதியாகிவிட்ட நிலையில், இப்போது என்னை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர்.

மலையகத்துக்கு பல்கலைக்கழகம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். எமது பிள்ளைகள் பாடசாலைக்கே செல்வதில்லை, பல்கலைக்கழகத்தை வைத்து என்ன செய்வது என சில அரசியல்வாதிகள் கேட்கின்றனர். அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது சிறப்பாக இருந்த திட்டங்களை மக்களுக்காக நாம் முன்னெடுக்கும்போது விமர்சிக்கின்றனர்.

மலையக அரசியல்வாதிகள் என்று ஒன்றிணைந்து செயற்படுகின்றார்களோ அன்றுதான் மலையகம் முன்னேறும். இதுதான் உண்மையான விடயம்.” – என்றார்.

 

https://newuthayan.com/சாக்கடை-அரசியலை-சுத்தப்ப/

ஆறு இலங்கை மீனவர்கள் மீட்பு!

14 hours 23 minutes ago
ஆறு இலங்கை மீனவர்கள் மீட்பு!

Fishing-Boat2.jpg?189db0&189db0

இந்திய கடற்பரப்பில் விபத்துக்கு உள்ளாகி கடலில் தத்தளித்த மீன்பிடி படகொன்றில் இருந்த 6 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர பாதுகாப்புப் படையினர் காப்பாற்றியுள்ளனர்.

தமிழகத்தின் சென்னையில் இருந்து 170 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ள கடற்பரப்பில் வைத்து இந்த மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

 

https://newuthayan.com/ஆறு-இலங்கை-மீனவர்கள்-மீட/

 
 

ஐவருக்கு மாத்திரமே அனுமதி

14 hours 32 minutes ago
ஐவருக்கு மாத்திரமே அனுமதி

image_3ff16a641a.jpg

இனிவரும் காலங்களில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், பயணியொருவரை வழியனுப்புவதற்கு 5 பேர் மாத்திரமே, விமான நிலையத்தின் பயணிகளை வழி அனுப்பி வைக்கும் பகுதிக்குள் உட்பிரவேசிக்க அனுமதிக்கப்படுவரென, விமான நிலைய ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

 

அத்துடன், விமான நிலையத்துக்கு வரும் பயணிகள், சுகாதார அமைச்சின் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுமாறும், அவர் கூறினார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/ஐவரகக-மததரம-அனமத/175-252859

ஒட்டுசுட்டடான் தான்தோன்றிஸ்வரர் ஆலய பூங்காவனம்

15 hours 7 minutes ago
ஒட்டுசுட்டடான் தான்தோன்றிஸ்வரர் ஆலய பூங்காவனம்

IMG-20200706-WA0010-960x540.jpg?189db0&189db0

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டடான் தான்தோன்றிஸ்வரர் ஆலய வருடாந்த திருவிழாவின் இறுதி உற்சவமான பூங்காவனப் பூசைகள் நேற்று (05) இரவு மிகவும் எளிமையான முறையில் இடம்பெற்றது.

இதன்போது பறவைகாவடிகள், பாற்செம்பு காவடி என்பன இடம்பெற்றது.

  • IMG-20200706-WA0009-1024x576.jpg?189db0&
  • IMG-20200706-WA0008-576x1024.jpg?189db0&
  • IMG-20200706-WA0007-1024x576.jpg?189db0&
  • IMG-20200706-WA0006-768x1024.jpg?189db0&
  • IMG-20200706-WA0005-1024x768.jpg?189db0&
  • IMG-20200706-WA0004-1024x768.jpg?189db0&
 
 

 

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்க ஐ.தே.க.வினால் மாத்திரமே முடியும் – ரணில

15 hours 37 minutes ago
வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்க ஐ.தே.க.வினால் மாத்திரமே முடியும் – ரணில

 

Ranil.jpg

    by : Yuganthini

 

சரிந்துக் கொண்டுச் செல்லும் இலங்கைப் பொருளாதாரத்தை மீட்க ஐக்கிய தேசியக்கட்சியால் மட்டுமே முடியும் என்று அந்தக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிலியந்தலையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார். ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளதாவது,  “மக்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய இந்தக் காலக்கட்டத்தில், இந்த அரசாங்கமானது மக்களிடமிருந்து பணத்தை பெற்றுக் கொள்கிறது.

ஜப்பானின் ஜைக்கா நிறுவனம்,  நிதியமைச்சுக்கு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையின் சமகால அரசாங்கத்தின் நிதிக் கொள்கைகள் தொடர்பாக அவதானத்துடன் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கம் என்ன சொல்கிறது? சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று கடன் கோரியுள்ளது.

இந்த நிதியமானது பாகிஸ்தான், நேபாளம், பங்காளாதேஸ், மாலைத்தீவுக்கு கடன் வழங்கியுள்ளது.

ஆனால், இலங்கைக்கு மட்டும் கடன் கிடைக்கவில்லை. 800 டொலர் மில்லியனை இதன் ஊடாக பெற்றுக் கொண்டிருக்க முடியும்.

இந்த அரசாங்கத்துக்கு இதனை தேடிக்கொள்ள முடியாது. இதிலிருந்து மீண்டு மக்களுக்கு நிவாரணமளிக்ககூடிய ஒரே ஒரு கட்சி ஐக்கிய தேசியக் கட்சி என்பதை நான் இவ்வேளையில் கூறிக்கொள்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/வீழ்ச்சியடைந்துள்ள-பொர-3/

போராட்டத்தை காட்டிக்கொடுத்தவர்கள் வழிகாட்டியாக செயற்பட முடியாது – கலையரசன்

15 hours 39 minutes ago
போராட்டத்தை காட்டிக்கொடுத்தவர்கள் வழிகாட்டியாக செயற்பட முடியாது – கலையரசன்

  

IMG_20200705_181710-720x450.jpg

by : Vithushagan

 

எமது போராட்டத்தை நலிவுற செய்தவர்கள் எமக்கு ஒரு போதும் வழிகாட்டியாக செயற்பட முடியாது   என முன்னாள் கிழக்கு  மாகாணசபை உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தவராசா கலையரசன்  தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம்  மத்திய முகாம் பிரதேசத்தில் மாலை இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “ சிங்கள பேரினவாத அரசு ஒப்பந்த அடிப்படையில் சில அரசியல் வாதிகளை அம்பாறை மாவட்டத்தில் களமிறக்கியிருக்கின்றது . இவர்களால் தமிழர்களுக்கு என்ன நடக்க போகின்றது எமது முதுநிலை தமிழர்கள் சொல்லியிருப்பார்கள்.

ஒப்பந்த அடிப்படையில் கடந்த காலத்தை சிதைத்த  சில அரசியல்வாதிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை கீழ்த்தரமாக விமர்சித்து வருகின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர வேறு விடயங்களைச் சொல்லி மக்களை அணிதிரட்ட முடியாதா என்ற கேள்வியை நாங்கள் எழுப்பவேண்டும் நாங்கள் யாரையும் விமர்சனம் பண்ணவில்லை நாங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் அரசியல் பயணத்தில் பல ஏமாற்றங்களை பின்னடைவை சந்தித்தாலும் எமது தமிழ் மக்களைப் பொறுத்தளவில் சிறந்த அரசியல் முன்னகர்வு செய்து கொண்டிருக்கின்றோம்.

நாங்கள் பொய்யை மெய்யாக்கி மெய்யை பொய்யாக்கி அரசியல் செய்தவர்கள் அல்ல. இலங்கையிலே மிக வறுமையான மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் விளங்குகின்றது அங்கு பல அபிவிருத்திப் பணிகள் செய்ய வேண்டி இருக்கும் போது பெரும்பான்மை  தமிழர்கள் வாழும் மட்டு மாவட்டத்தில் அங்கே மக்களால் போட்டியிட  முடியாமல்   விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றார்.

ஒரு தவிசாளர் விடுமுறையில் சென்ற காலத்தில் அதற்கு அடுத்த படியாக இருக்கும் பிரதி தவிசாளர் அதன் பணிகளை மேற்கொள்வார் ஆனால் அதற்காக அவர் தவிசாளர் ஆக  முடியாது.

25 க்கும் மேற்பட்ட தவிசாளர்கள் இந்த  நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கியிருக்கிறார்கள் அவர்களுக்கு பதிலாக பிரதி தவிசாளர் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் என்ன நடக்கின்றது என்பதை அறிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன். வெல்லாவெளி கிராம் தொல்பொருளுக்காக அடையாளம் காணப்பட்டு முடிந்தால் வீரம் பேசும் பிரதியமைச்சர் அதை தடுத்து நிறுத்த முடியுமா? இதனை கூட தடுப்பதற்கான ஒரே ஒரு சக்தி நாங்கள்தான்.

நாங்கள் உரிமையோடு நிலையான அபிவிருத்தியை மேற்கொள்ள பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். யாருக்கும் சோரம் போக மாட்டோம் .எங்களது மக்களின் இலட்சிய சிந்தனையில் பயணித்து கொண்டிருக்கும் எங்களை திட்டமிட்டு சிதைப்பதற்கு பேரினவாதம் கங்கணம் கட்டி செயற்படுகிறது.

எமது போராட்டத்தை நலிவுற செய்தவர்கள் எமக்கு ஒரு போதும் வழிகாட்டியாக செயற்பட முடியாது.அவரது சுயநலன்களை பூர்த்தி செய்ய அரசாங்கம் செல்ல பிள்ளையாக செயற்படுகிறது என தெரிவித்தார்.

https://athavannews.com/போராட்டத்தை-காட்டிக்கொட/

கொடுங்கோல் அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு ஏதேச்சதிகார பாதையை நோக்கியே பயணிக்கும்

15 hours 43 minutes ago

கொடுங்கோல் அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு ஏதேச்சதிகார பாதையை நோக்கியே பயணிக்கும்

கொடுங்கோல் அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு ஏதேச்சதிகார பாதையை நோக்கியே பயணிக்கும்

 

 
 
எதிரணி அரசியல்வாதிகளுக்கு எதிராக பழிவாங்கும் படலத்தை கட்டவிழ்த்துவிட்ட அரசாங்கம் இன்று தேசிய விளையாட்டு வீரர்களையும் வேட்டையாட தொடங்கியுள்ளது. எனவே, இந்த கொடுங்கோல் அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு ஏதேச்சதிகார பாதையை நோக்கியே பயணிக்கும். இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.

கண்டி, குண்டசாலை தேர்தல் தொகுதியில் நேற்று மாலை (05) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய வேலுகுமார் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

இனவாதம் பேசி, மதவாதத்தை தூண்டி குறுக்கு வழியிலாவது ஆட்சியை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்காக ஒருபுறத்தில் பாடுபடும் அரசாங்கம், மறுபுறத்தில் எதிர்காலத்தில் தமக்கு அச்சுறுத்தலாக மாறுவார்கள் எனக் கருதப்படும் நபர்களை வேட்டையாடிவருகின்றது. நாம் எதையும் செய்வோம். அதற்கு எதிராக வாய் திறந்தால் கழுத்துக்கு கத்திவரும் என்ற எச்சரிக்கையை விடுக்கும் வகையிலேயே ஆளுங்கட்சியின் அணுகுமுறைகள் அமைந்துள்ளன. சங்கா, மஹேல போன்றவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டதுகூட இதன்ஓர் அங்கமாகும்.

இலங்கை நாட்டுக்கு பெருமை சேர்ந்த சங்கக்கார, மஹேல ஜயவர்தன போன்றவர்கள் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் தம்மால் முடிந்த சமுகசேவைகளை செய்து வருகின்றனர். நாட்டுக்கு எதிரான திட்டங்களை விமர்சிக்கின்றனர்.

சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைமைப்பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்துக்கு தெரிவாவதற்கான அனைத்து தகுதிகளும் சங்கக்காரவுக்கு இருக்கின்றது. எனவே, சங்கக்காரவின் பெயரை எவரும் பரிந்துரைக்காமல் இருப்பதற்கான சூழ்ச்சித்திட்டமா இந்த விசாரணை என்ற சந்தேகமும் எமக்கு எழுகின்றது.

ஆட்டநிர்ணய சதி தொடர்பான விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான தகவல்களை இல்லை என பொலிஸார் கூறியுள்ளனர். 2019 ஆம் ஆண்டு விளையாட்டு சட்டத்தின் பிரகாரம், ஆட்டநிர்ணய சதி தொடர்பில் தவறான தகவலை வெளியிட்டால் அந்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, ஆட்ட நிர்ணய சதி தொடர்பான தகவலை வெளியிட்ட அரசியல்வாதிக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கை என்ன? என்றார்.

புலிகளின் மேடையில் தான் பேசியதாக இருக்கும் காணொளிகளை முடிந்தால் வெளியிடுங்கள் – கருணாவிற்கு சிவாஜி சவால்

15 hours 45 minutes ago
புலிகளின் மேடையில் தான் பேசியதாக இருக்கும் காணொளிகளை முடிந்தால் வெளியிடுங்கள் – கருணாவிற்கு சிவாஜி சவால்

 

sivaji-lingam.jpg

  by : Jeyachandran Vithushan

 

விடுதலைப்புலிகளின் மேடையில் தான் பேசியதாக இருக்கும் ஆதாரங்களை வெளியிடுமாறும் கருணா அம்மானிடம் சவால் விடுவதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே இந்த பகிரங்க சவாலினை விடுத்தார்.

செல்வம் அடைக்கலநாதனும் சிவாஜிலிங்கமும் விடுதலைப்புலிகளின் மேடையிலும் அவர்களுக்கு ஆதரவாக பேசிய காணொளிகளும் தன்னிடம் இருப்பதாகவும் அந்த காணொளிகளை வெளியிட்டால் இவர்களின் நிலை தெரியும் என கூறியிருந்தார்.

அவ்வாறு பேசியிருந்தால் நாம் அவற்றினை ஏற்றுக்கொள்வோம் என தெரிவித்திருந்த சிவாஜிலிங்கம், உண்மையை கூறுவதற்கு தான் ஒருபோதும் பயப்பட போவதில்லை என்றும் கூறினார்.

மக்களின் நலனுக்காகவும் அவர்களின் விடுதலைக்காகவும் எந்த நேரத்திலும் சாவினை தழுவிக்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

https://athavannews.com/புலிகளின்-மேடையில்-தான்/

சம்பவத் வங்கியில் முதலீடு செய்ய வேண்டாமென உலமா சபை மக்களை வலியுறுத்துகிறது- ரத்தன தேரர்

15 hours 47 minutes ago
சம்பவத் வங்கியில் முதலீடு செய்ய வேண்டாமென உலமா சபை மக்களை வலியுறுத்துகிறது- ரத்தன தேரர்

 

rathana-thero.jpg

     by : Yuganthini

 

சம்பத் வங்கியில் முதலீடு செய்துள்ள பணத்தை எடுத்து அமானா வங்கியில் முதலீடு செய்யுமாறு  முஸ்லிம் மக்களிடம் ஜமியதுல் உலமா சபை கோருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  அதுரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

கம்பஹா பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் அதுரலிய ரத்தன தேரர் மேலும் தெரிவித்துள்ளதாவது,  “ஸ்ரீபாத மலையை சுற்றி காணப்படுகின்ற பெரும்பாலான நிலங்களை, முஸ்லிம் மதத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை சஹ்ரான் தலைமையிலான குழுவினர் நாட்டில் குண்டை வெடிக்கச் செய்தனர். இதனால் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்தோம்.

இத்தகைய சம்பவம் மீண்டும் நாட்டில் நடைபெறாது என யாராலும் கூற முடியுமா?

அண்மையில் தெஹிவல பகுதியிலுள்ள சம்பவத் வங்கிக்கு வருகை தந்த முஸ்லிம் பெண்ணொருவரின் புர்காவை அகற்றுமாறு  பாதுகாப்புப்  பணியாளர்கள் குறிப்பிட்டனர்.

இதற்காக, அனைத்து முஸ்லிம்களையும், தங்களது சம்பத் வங்கியின் கணக்குகளை இரத்து செய்யுமாறும் ஜமியதுல் உலமா சபை, கோரிக்கை விடுத்திருந்தது.

ஆகவே, இத்தகையான  இயக்கங்கள் புறக்கணிக்கப்பட வேண்டும். இவைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/சம்பவத்-வங்கியில்-முதலீட/

சாக்கடை அரசியலை சுத்தப்படுத்துவதற்காக இளைஞர்கள் களத்தில் இறங்கவேண்டும் – ஜீவன்

15 hours 48 minutes ago
சாக்கடை அரசியலை சுத்தப்படுத்துவதற்காக இளைஞர்கள் களத்தில் இறங்கவேண்டும் – ஜீவன்

 

jeevan-thondaman-1-720x450.jpg

   by : Vithushagan

 

மலையகத்தில் குறைகூறும் அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைக்க வேண்டும். சாக்கடை அரசியலை சுத்தப்படுத்துவதற்காக இளைஞர்கள் களத்தில் இறங்கவேண்டும் – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பூண்டுலோயா பேர்லேன்ட்ஸ் தோட்டத்தில்   இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, ”  கடந்த நான்கு வருடங்களாக ஆயிரம் ரூபா பற்றி மட்டுமே கதைத்தார்கள். இவ்வாறு கதைத்து ஏனைய பிரச்சினைகளை மூடிமறைத்துவிட்டனர். ஆயிரம் ரூபாவைத்தவிர எமக்கு வேறு பிரச்சினைகள் இல்லையா?  இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு இருக்கின்றதா?இல்லை. கேட்டால் வீடு கட்டிக்கொடுத்தோம் என்கின்றனர். வேலையிண்மை பிரச்சினைக்கும், வீட்டுப்பிரச்சினைக்கு இருக்கும் தொடர்புதான் என்ன?

நீ பெரியவனா, நான் பெரியவனா என்ற குறைகூறும் அரசியல் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதனை நாம் மாற்றியமைக்கவேண்டும். அப்பா உயிருடன் இருக்கும்போது அவரின் பெயரைப்பயன்படுத்தியே அரசியல் செய்தனர். அவர் பாவம். இரண்டு மாதங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். ஆனால், இன்னும் அவரை வைத்து அரசியல் செய்ய பார்க்கின்றனர். அப்பாமீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் போலியானவை என்பது உறுதியாகிவிட்ட நிலையில், இப்போது என்னை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர்.

தேர்தல் காலத்தில் மட்டும் அல்ல அதற்கு முன்னர் களத்துக்குசென்று நான் மக்களுக்கு சேவைசெய்துள்ளேன். மண்சரிவு இடம்பெறும்போது உடனே சென்றுள்ளேன். ஆனால், அதனையும் வாய்கூசாமல் விமர்சிக்கின்றனர். தீ விபத்து இடம்பெற்ற ஒரு பகுதிக்கு சென்றால், ஜீவன் தொண்டமான்தான் தீ வைத்துள்ளார் என கூறுமளவுக்கு கீழ்த்தரமாக அரசியல் நடத்துகின்றனர். இப்படியான கருத்துகளை பார்த்துவிட்டு வெளிமாவட்டங்களில் இருப்பவர்கள் சிரிக்கின்றனர். தற்போதுள்ள அரசியல் சாக்கடையென விமர்சிக்கின்றனர். அதனை  சுத்தப்பட்டுத்துவதற்கு இளைஞர்கள் முன்வரவேண்டும்.

மலையகத்துக்கு பல்கலைக்கழகம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். எமது பிள்ளைகள் பாடசாலைக்கே செல்வதில்லை, பல்கலைக்கழகத்தை வைத்து என்ன செய்வது என சில அரசியல்வாதிகள் கேட்கின்றனர்.  அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது சிறப்பாக இருந்த திட்டங்களை மக்களுக்காக நாம் முன்னெடுக்கும்போது விமர்சிக்கின்றனர்.

மலையக அரசியல்வாதிகள் என்று ஒன்றிணைந்து செயற்படுகின்றார்களோ அன்றுதான் மலையகம் முன்னேறும். இதுதான் உண்மையான விடயம்.”  என்றார்

https://athavannews.com/சாக்கடை-அரசியலை-சுத்தப்ப/

வடக்கு மக்கள் எமக்கு வாக்களிக்காவிட்டாலும் அப்பகுதிகளுக்கும் அபிவிருத்திகளை தொடருவோம்- மஹிந்த

15 hours 50 minutes ago
வடக்கு மக்கள் எமக்கு வாக்களிக்காவிட்டாலும் அப்பகுதிகளுக்கும் அபிவிருத்திகளை தொடருவோம்- மஹிந்த

 

 

MAHINDHA-2-720x450.jpg

by : Yuganthini

 

வடக்கு மாகாண மக்கள் தாமரை மொட்டுக்கு வாக்களிக்காவிட்டாலும் கூட, அரசாங்கம் அந்த மாகாணத்திற்கான அபிவிருத்திப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது,  “ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிளவடைந்துள்ளது. இனிமேல் அந்தக்கட்சி ஒன்று சேர்வதற்கான வாய்ப்பே கிடையாது.

யாராவது இந்தக் கட்சி இணையும் என்று நினைத்தால், அது நிச்சயமாக பகல் கனவாகத்தான் முடியும்.

இன்று அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள போட்டியானது, எம்மை வீழ்த்த அல்ல. மாறாக, சிறிகொத்தவை யார் கைப்பற்றுவது என்பதே அவர்களின் பிரதான பிரச்சினையாக இருக்கிறது.

பிரேமதாச தரப்பா அல்லது ரணில் தரப்பா என்பதுதான் இங்கு உள்ள போட்டியாகும். ஒருவர் சிறிகொத்தவை பாதுகாக்க போராடுகிறார். இன்னொருவர் அதனைக் கைப்பற்ற போராடுகிறார்.

இதற்காகத் தான் இவர்கள் போட்டி போடுகிறார்கள். இந்த பிரச்சினைக்காக மக்கள் இவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமா?

அந்தப் பிரச்சினையை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும். நாம் நாட்டை பற்றித்தான் சிந்திக்க வேண்டும்.

வடக்காகட்டு, கிழக்காகட்டும், மலையகமாகட்டும், இந்த நாட்டின் அனைத்து பகுதிகளும் அபிவிருத்தி அடைய வேண்டும். இதற்காகத் தான் நாம் களமிறங்கியுள்ளோம்.  இதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களும் ஒத்துழைக்க வேண்டும்.

வடக்கிலிருந்து எமக்கு வாக்கு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நாம் அந்த மாகாணத்தை நிச்சயமாக அபிவிருத்தி செய்தே தீருவோம். அது எமது பொறுப்பாகும்.

ஜனாதிபதியும் பிரதமரும் இரண்டு பக்கத்திலிருந்தால், எந்த வேலையும் நடக்காது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/வடக்கு-மக்கள்-எமக்கு-வாக/

பல தலைவர்களினால் உருவான வீடு - சுமந்திரனால் இடிக்கப்படுகிறது?

15 hours 52 minutes ago

பல தலைவர்களினால் உருவான வீடு - சுமந்திரனால் இடிக்கப்படுகிறது?

பல தலைவர்களினால் உருவான வீடு - சுமந்திரனால் இடிக்கப்படுகிறது?

 

வாக்குகளைச் சிதறடித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்கும், வீட்டுச் சின்னத்தை இல்லாமல் ஆக்குவதற்குமே மாற்று அணி என்று சொல்லிக் கொள்பவர்களும் பல சுயேச்சைக் குழுவினர்களும் பாராளுமன்றத் தேர்தலில் இறக்கிவிடப் பட்டுள்ளார்கள் என்று கூட்டமைப்பு வேட்பாளர்கள் தேர்தல் கூட்டங்களில் பேசிவருகிறார்கள் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பை மற்றவர்கள் அல்ல, அவர்களே சிதைத்து வருகிறார்கள். தந்தை செல்வநாயகம், வன்னியசிங்கம், நாகநாதன், அழகக்கோன், இராஜவரோதயம், இராசமாணிக்கம், அமிர்தலிங்கம் போன்ற பல தலைவர்களின் உழைப்பால் உருவான வீடு, எம்.ஏ. சுமந்திரனால் இன்று இடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் பாராளுமன்றத் தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிடுகின்றது. இதன் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று (05) கோண்டாவிலில் இடம்பெற்றபோதே முதன்மை வேட்பாளரான பொ. ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஜனநாயக வழியில் முன்னெடுத்துச் செல்லும் நோக்குடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் தான், தங்களை உருவாக்கியதாக கூட்டமைப்பினரே சொல்லி வருகிறார்கள். ஆனால் விடுதலைப் புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டதும் கூட்டமைப்பு படிப்படியாகத் தன்னைப் புலி ஆதரவு நீக்கம் செய்ததோடு, தமிழ்த் தேசிய நீக்கத்தையும் செய்துவருகிறது.

முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது தமிழினப் படுகொலையே என்று உலக நாடுகளின் பல தலைவர்களும் கூறிவரும் நிலையில், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் இனப்படுகொலை நடைபெறவில்லை அதற்கான ஆதாரங்கள் இல்லை என்று சொல்லி இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாக்கும் விதமாகவே செயற்பட்டார்.

இவர்களே போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையையே இல்லாமல் செய்கின்ற அரசாங்கத்தின் சூழ்ச்சி நிரலுக்கு அமைவாகத் தமிழ் மக்களின் உணர்வுகளைப் புறந்தள்ளிக் கால நீடிப்பைப் பெற்றுக் கொடுத்து அரசாங்கத்தைப் பிணை எடுத்தார்கள். இவையே கூட்டமைப்பின் கூடாரம் இன்று காலியாகிக் கொண்டிருப்பதற்கான காரணங்கள் ஆகும்.

இப்போது தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளைத் தொடர்வதற்கு மீண்டும் தங்களுக்கு ஆணை வழங்குமாறு, கடந்த தேர்தல்களின் போது பாடிய அதே பல்லவியை மீண்டும் பாட ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்கள் ஆணை கேட்பது காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்காகவோ அரசியல் கைதிகளை விடுவிப்பதற்காகவேர் அல்ல. நல்லாட்சி அரசாங்கத்தில் வகித்து வந்த நிழல் அமைச்சர்கள் பதவிகளை மீண்டும் பெறுவதற்காகவே ஆணை கோரி நிற்கிறார்கள். தமிழ் மக்கள் இந்தப் போலித்தேசியவாதிகள் குறித்து விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

-யாழ். நிருபர் பிரதீபன்-

http://tamil.adaderana.lk/news.php?nid=130580

Checked
Tue, 07/07/2020 - 01:56
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr