1 week 1 day ago
நேட்டோவில் இருந்து அமெரிக்காவை துரத்தி போட்டு… ஈரானை உள்ளே எடுக்க வேண்டும்😂 சும்மா சோபிளாங்கி இராணுவத்துக்கெல்லாம் நேட்டோவில் இடம் இல்லை😂
1 week 1 day ago
அருச்சுனனிற்கு கிளியின் கழுத்து மட்டுமே புலப்படும்😂.
1 week 2 days ago
அண்ணாமார், அது Ai படம் என்று போட்டிருக்கே?!
1 week 2 days ago
இந்தியாவில் இன்று ஆரம்பமாகும் உலகின் மிகப்பெரிய சனத்தொகை கணக்கெடுப்பு: 30 இலட்சம் அதிகாரிகள் களத்தில் Published By: Digital Desk 3 01 Apr, 2026 | 10:51 AM உலகின் அதிக சனத்தொகை கொண்ட நாடான இந்தியாவில், தசாப்தத்திற்கு ஒருமுறை நடத்தப்படும் மிகப்பெரிய சனத்தொகைகணக்கெடுப்பு இன்று புதன்கிழமை (ஏப் 01) முதல் ஆரம்பமாகிறது. கொரோனா பெருந்தொற்றினால் 2021 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த இத்திட்டம் தாமதமடைந்த நிலையில், தற்போது டிஜிட்டல் முறையில் முன்னெடுக்கப்படவுள்ளது. சுமார் 30 இலட்சம் அரச அதிகாரிகள் இந்த ஒரு வருட காலப்பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். ஆரம்பத்தில் பொதுமக்கள் இணையவழியில் தாமாகவே முன்வந்து விபரங்களைப் பதிவு செய்ய குறுகிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று இரு கட்டங்களாக விபரங்களைச் சேகரிப்பார்கள்: முதற்கட்டம்: வீடுகள் மற்றும் வீட்டு வசதிகள் குறித்த விபரங்கள். இரண்டாம்கட்டம்: தனிநபர்கள், அவர்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைகள் குறித்த விபரங்கள். இம்முறை கணக்கெடுப்பில் சாதி குறித்த விபரங்களும் சேகரிக்கப்படவுள்ளதாக கணக்கெடுப்பு ஆணையாளர் மிருத்யுஞ்சய் குமார் நாராயண் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்குவதற்குத் தேவையான துல்லியமான தரவுகளைப் பெற இது உதவும் என ஆதரவாளர்கள் கருதுகின்றனர். கடைசியாக 2011 இல் சாதி விபரங்கள் சேகரிக்கப்பட்ட போதிலும், தரவுத் துல்லியம் குறித்த அச்சம் காரணமாக அவை முழுமையாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2023 ஆம் ஆண்டில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா உலகின் அதிக சனத்தொகை கொண்ட நாடாக உருவெடுத்தது. இந்தியாவின் பெரும்பான்மையான இளையோர் சக்தி, உலகளாவிய ரீதியில் வளர்ந்த நாடுகள் முதியோர் தொகை அதிகரிப்பால் திணறும் வேளையில், இந்தியாவிற்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது. இந்தக் கணக்கெடுப்புப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ளன. முதன்முறையாக டிஜிட்டல் முறையில் விபரங்கள் சேகரிக்கப்படுவதால், முடிவுகள் மிக விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/242464
1 week 2 days ago
பொலிசாரைத் துரத்தித் துரத்தி கொட்டிய குளவிகள்! கொத்மலை ரம்பொட வெதமுல்ல தோட்ட பகுதியில் உள்ள கசிப்பு தயாரிப்பு நிலையத்தை சுற்றிவளைக்க சென்ற 7 பொலிஸ் அதிகாரிகள் குளவி தாக்குதலுக்குள்ளாகிய சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. ரம்பொட வெதமுல்ல தோட்டப் பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி செய்து வருவதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய அவர்கள் அங்கு சென்ற போதே திடீரென குளவி தாக்குதலுக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்கப்பட்ட அதிகாரிகளின் 2 பேர் கொத்மலை வைத்திய சாலையிலும் மேலும் ஆபத்தான நிலையிலுள்ள 5 பேர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் 03 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2026/1470666
1 week 2 days ago
நேட்டோவை விட்டு விலகும் அமெரிக்காவின் அதிரடிப் பரிசீலனை. அமெரிக்கா நேட்டோ அமைப்பிலிருந்து வெளியேறுவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நேட்டோ கூட்டணியை ஒரு காகிதப்புலி என்று சாடிய ட்ரம்ப், பிரித்தானியாவிடம் ஒரு கடற்படை கூட இல்லை என்றும் விமர்சித்துள்ளார். மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல்களுக்குப் பிறகு, இந்த அமைப்பில் அமெரிக்கா உறுப்பினராக நீடிப்பது குறித்து மீண்டும் பரிசீலிப்பீர்களா எனக் வினவிய நிலையில், ஆம், அது மறுபரிசீலனைக்கும் அப்பாற்பட்டது என்று தாம் கருதுவதாக கூறினார். நான் ஒருபோதும் நேட்டோவால் ஈர்க்கப்படவில்லை. அவர்கள் ஒரு காகிதப்புலி என்பது எனக்கு எப்போதோ தெரியும், அது ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கும் நன்கு தெரியும் என விமர்சித்துள்ளார். பிரித்தானியாவிடம் கடற்படை கூட இல்லை. நீங்கள் மிகவும் பழமையாகிவிட்டீர்கள், என கடுமையாக ட்ரம்ப் விமர்சித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரான் தொடர்ந்தும் ஹோர்முஸ் நீரிணையை மூடி உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த நீரிணையை திறப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி நேட்டோ நாடுகளின் உதவியை கோரியிருந்தார். இந்நிலையில் அவரது அழைப்பு நேரடியாகவே நேட்டோ நாடுகள் நிராகரித்த நிலையில், ட்ரம்ப் நேட்டோ நாடுகளை இவ்வாறு விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1470675
1 week 2 days ago
தவெக தலைவர் விஜய்யின் பாதுகாப்பில் தமிழக காவல்துறை அலட்சியமாக செயல்படுவதாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். ஆனால், அந்த கடிதத்தில் உள்துறை செயலாளரின் பெயரை குறிப்பிடாமல் மணிப்பூர் ஆளுநரின் பெயரை குறிப்பிட்டிருப்பது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடிதம் கடந்த மார்ச் 30 ஆம் தேதி விஜய் பெரம்பூரில் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு பிரசாரத்தை தொடங்கியிருந்தார். இந்த பிரசாரத்தில் கொளத்தூரில் விஜய்க்கு காவல்துறை முறையான பாதுகாப்பு கொடுக்கவில்லை என தவெகவினர் குற்றஞ்சாட்டுகின்றனர். அதுசம்பந்தமாக தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து ஆதவ் அர்ஜூனாவும் ஆனந்தும் புகார் மனுவை அளித்திருந்தனர். தவெகவின் துணைப் பொதுச்செயலாளரான சி.டி.ஆர் நிர்மல் குமார் கட்சி சார்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். இதை ஊடகங்களுக்கு தவெக தரப்பிலிருந்தே அனுப்பவும் செய்திருந்தனர். அந்த கடிதத்தில் Y பிரிவு பாதுகாப்பில் இருக்கும் விஜய் பிரசாரம் செய்கையில் தமிழக காவல்துறை முறையாக பாதுகாப்பு அளிப்பதில்லை எனக் கூறப்பட்டிருக்கிறது. ஆதவ், ஆனந்த் ஆனால், கடிதத்தில் பெறுநர் இடத்தில் உள்துறை செயலாளர் கோவிந் மோகனின் பெயரை குறிப்பிடாமல், மணிப்பூர் ஆளுநர் அஜய் பல்லாவின் பெயரை குறிப்பிட்டிருக்கின்றனர். அஜய் பல்லா உள்துறைச் செயலாளராக இருந்து கடந்த 2024 ஆம் ஆண்டே ஓய்வு பெற்றுவிட்டனர். இப்போது அவர் மணிப்பூரின் ஆளுநராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உள்துறைச் செயலாளரின் பெயரை கூட சரியாக குறிப்பிடத் தெரியாதா என தவெகவை சமூகவலைதளங்களில் ஜாலியாக கலாய்த்து வருகின்றனர். தினமும் யாருக்காவது கடிதமாகவே எழுதிக் கொண்டிருப்பதால் குழம்பி விட்டார்கள் போல! 'உள்துறை செயலாளருக்கு பதில் மணிப்பூர் கவர்னருக்கு கடிதம் எழுதிய விஜய்யின் தவெக!' |“Vijay’s TVK Sparks Debate: Letter Sent to Manipur Governor Instead of Home Secretary – What’s Behind It?” - Vikatan
1 week 2 days ago
மறியலில்... உள்ள பொலிஸ்காரர் நன்றாக கவனித்து, நல்ல சாப்பாடு வாங்கிக் கொடுக்கிறார்கள் போலுள்ளது. 😂
1 week 2 days ago
கைது செய்யும்போதும் கேக் வெட்டும்போதும் அணிந்திருக்கும் ஒரே சட்டையையும் சிரிப்பையும் பார்த்தால் இது செவ்வந்தி கைது செய்யப்பட்டுச் சிறைக்கு அழைத்து வரும்போது ஏற்பாடு செய்த விழாவில் கேக் வெட்டியது போலல்லவா உள்ளது. 🤣
1 week 2 days ago
கோயில் கட்டுவதும் அரசியலில் குதிப்பதும் பணம் புகழ் சம்பாதிப்பதற்கே. நல்லகண்ணு மாதிரி ஓரிருவர் விதிவிலக்கக இருக்கலாம். அரசியல்வாதிகள் சம்பளத்துக்கு வேலை செய்யும் நிலை வர வேண்டும். மக்கள் ஏமாளிகளாக இருக்கும்வரை ஊழலின் எல்லை அதிகமாகிக் கொண்டே போகும். ஐரோப்பிய நாடுகள் போல் அரசியல்வாதி ஒருவர் செய்யும் சிறிய ஊழலைக் கூட பல ஆண்டுகள் ஆனாலும் அவர் முன்னாள் ஜனாதிபதியானாலும் துரத்திச் சென்று தண்டனை வழங்கும் சட்டத்துறையை இயக்கும் மக்கள் உருவாக வேண்டும். விஜயின் ஆதரவாளர்கள் அவரது இரசிகர்களாக உள்ளவரை விஜயும் ஊழல் கலாச்சாரத்துக்குள்தான் செல்வார். ஒருவரின் சொத்து விபரங்களை அவரே வெளியிடமுன் அரசாங்கத்துக்கு அவரின் சொத்து விபரங்களின் பெரும் பகுதி தெரிந்திருக்க வேண்டும். கார் வாங்கினால் வரி செலுத்தும்போதும் வீடு காணி வாங்கினால் அரசாங்க எழுத்துப் பதிவு மூலமாகவும் விஜய் எவ்வளவு வீடு காணிகள் வாகனங்கள் வைத்துள்ளார் என்பது தெரிந்திருக்க வேண்டும். அவற்றை அரசாங்கம் வெளியிடாது என்ற தைரியம்தான் எல்லா அரசியல்வாதிகளையும் பொய்யான சொத்து விபரங்களை வெளியிடத் தூண்டுகிறது.
1 week 2 days ago
ரசோதரன், நீங்கள் குறிப்பிடுவதை நானும் ஒத்துக் கொள்கிறேன். ஆனாலும் யோக்கியன் என்பவன் எங்கே இருக்கிறான் என்பதே தெரியவில்லையே. தமிழ்நாட்டு அரசியலில் ஊழல், லஞ்சம், லாவண்யம் இவை மூன்றும் புதிய கண்டுபிடிப்புகள் இல்லை. தொண்டு தொட்டு வரும் பழைய பாரம்பரியம் போல்த்தான் இவை மூன்றும் என் பார்வையில் தெரிகின்றன. இவை திராவிடக் கட்சிகளுக்கு மட்டும் சொந்தம் என்று சொல்லிவிட முடியாது. பின்னால் வருபவர்களும் தொடரலாம். 1954-ல் வெளியான மலைக்கள்ளன் படத்திலேயே கவிஞர் தஞ்சை என். ராமையாதாஸ் எழுதிய பாடல் ஒன்றின் வரிகள் இப்படி இருக்கின்றன, “சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார் சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார் பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி பாமர மக்களை வலையினில் மாட்டி எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே நம் நாட்டிலே…” அந்தக் காலம் காங்கிரஸ் ஆட்சி. அப்படியானால், அன்றும் ஏதோ நடந்திருக்கின்றது. அறிஞர் அண்ணா மிகக் குறுகிய காலமே ஆட்சி செய்தார். அவர் நீண்ட நாள் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யாருக்கும் தெரியாது. அரசியலில் சிலருக்கு நல்ல பெயர் கிடைப்பதற்கு, அவர்கள் தவறு செய்ய நேரம் கிடைக்காமல் போவதும் ஒரு காரணமாக இருக்கலாம். எம்.ஜி.ஆர் கூட நீண்ட காலம் முழுமையாக அதிகாரத்தில் இருந்திருந்தால், அவருடைய பெயரும் விமர்சனங்களில் சிக்கியிருக்கும் வாய்ப்பு இருந்திருக்கும். ஆனாலும் எம்.ஜி.ஆர், தானே ஒருமுறை கறுப்புப் பணம் வாங்கியதை வெளிப்படையாக மேடையில் ஒப்புக் கொண்டவர். ஒரு தடவை, “இந்திரா அரசு, டெல்லியில் இருந்து படையை அனுப்பினால் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்” என முழங்க, அடுத்தநாள் அவரது இராமவரம் தோட்டத்துக்கு வருமானவரி அதிகாரிகளை இந்திராகாந்தி அனுப்பிவைத்தார். அடங்கிப் போனார். திமுக குறித்து பேசும்போது, அது ஒரு குடும்ப அரசியலாக மாறிவிட்டது என்பது பலரின் கருத்து. கருணாநிதி, முத்து, அழகிரி என்று தனது முதல் இரண்டு வாரிசுகளை வைத்து முயற்சித்தார். இறுதியில் ஸ்டாலின் தான் சரியாக வந்தார். இப்போது வாரிசு பாதையில் உதயநிதி… இன்பநிதி.. என்று மக்கள் ஏற்கனவே கணக்குப் போடத் தொடங்கி விட்டார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அதிகார வெற்றிடமும், பணமும், பாரம்பரிய அமைப்பு என்ற பெயரும் சேர்ந்து ஸ்ராலினின் கையில் ஆட்சியைக் கொண்டுபோய்ச் சேர்த்தது. இந்தத் தேர்தல் ஸ்ராலினுக்கு புதிய களம். அவருக்கு முன்னால் நிற்பது இன்னுமொரு தளபதி. கோசான்ஜி குறிப்பிடுவதுபோல், “ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே” என்ற நிலைதான் இப்போது உள்ள கேள்வி என்னவென்றால்,“ஊழலை முழுக்க ஒழிக்க முடியுமா?” நேர்மையாகச் சொல்வதாக இருந்தால், “முடியாது”. ஆனால், “குடும்ப ஆட்சியை ஒழிக்க முடியுமா?” என்று கேட்டால், பதில்,”முடியும்”. இந்த இடத்தில்தான் விஜய் போன்ற புதிய வரவுக்கு வாய்ப்புக் கிடைக்கிறது. அவர் இன்னும் ஆட்சிக்கு வரவில்லை. ஆகவே ஊழல் பட்டியலில் இப்போதைக்கு அவர் பெயர் இல்லை. குறைந்தது குடும்ப ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரவாவது அவர் பயன்படலாம். இளைஞர்களின் ஆதரவு விஜய்க்கு இருப்பது கண்கூடு. அந்த ஆதரவு ஒரு குடும்பத்தில் இரண்டு முதல் மூன்று வாக்குகளை அவருக்கு கொண்டு வந்து சேர்க்கலாம். திமுக, அதிமுக இரண்டு பெரிய கட்சிகளும் விஜய்யின் வருகையால், (வெளியே சொல்லாவிட்டாலும்) ஆட்டம் காண்கின்றன என்பது உண்மை. விஜயை பொதுவெளியில் வரவிடாமல் செய்ய திமுக எடுக்கும் சில தகிடு தத்தங்கள் புஸ் வானமாகிப் போயிருக்கின்றன. திமுக இதையே தொடர்ந்தால் விஜய்க்கு அனுதாப வாக்குகள் கூட கிடைக்க வாய்ப்பிருக்கின்றது. நேற்றுக் கூட, மத்திய அமைச்சர் ஒருவர் தேர்தலுக்குப் பிறகு விஜயையுடன் பேசுவோம் என்று சொல்லியிருக்கிறார். விஜயைப் பார்க்கும் போது, அவரது காய் நகர்த்தல்கள் சரியாகவே எனக்குத் தெரிகிறது. நிச்சயமாக இன்னும் பல தடைகளைத் தாண்டி அவர் ஓட வேண்டி இருக்கும். ஆனாலும் கூட, நிழலியின் மதிப்பீட்டில் இப்பொழுதும் நான் உடன்படவில்லை.
1 week 2 days ago
செவ்வந்தி பூ பூசணிகாயாய் மாறிவிட்டது❣️
1 week 2 days ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
1 week 2 days ago
1 week 2 days ago
சிறீலங்காவில் அப்பாவித் தமிழ்மக்களை அழிப்பதற்கும் ஆதரவுகொடுத்த அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டு அழிவுக்கு உள்ளாகவேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.🙏
1 week 2 days ago
ஆபிராஹாமிய மதங்களின் மீட்ப்பர், அல்லது இந்து மதத்தின் கல்கி பகவான் வரும் வரை இப்படி ஒரு தலைவர் வருவது சாத்தியமில்லை😂. மீண்டும் சொல்கிறேன். அனைவரும் ஊழல் விடயத்தில் ஒன்றேதான் என்ற நிலைப்பாடு - உண்மையானதல்ல. அது ஊழலில் ஊறி பெருத்த திமுக போன்ற கட்சிகளை, கிடைத்த சின்ன வாய்ப்பிலேயே ஊழல் பண்ணும் சீமான் போன்றவகளை, விஜை போன்றவர்களுடன் சமப்படுத்தி காப்பாற்றும் முயற்சி. ஊழல் விடயத்தில்… உள்ளதில் நல்ல கள்ளன் எவன் என்பதுதான் அங்கே கேள்வி, தவிர 100% கைசுத்தமானவர் யார் என்பதல்ல. ஏன் என்றால் அங்கு அரசியல்வாதி மட்டும் அல்ல, வாக்காளரே ஊழல்வாதிகள்தான்😂. கிட்னியை திருடி விற்பவர்கள் மத்தியில் வரி கட்டாதவந்தான் உத்தமன்😂.
1 week 2 days ago
உண்மை கசக்கும்.
1 week 2 days ago
🤣 தமிழர்களின் ஏப்பிரல் பூல் இது வேறு பிரச்சனை டிரம்ப் கிறிஸ்தவ பண்டிகையான Ester க்கு யுத்த நிறுத்தம் செய்வதாக ஈரானிய இராணுவ செய்தி அறிவிப்பாளர் இப்ராஹிம் ஸோல்பகாரி அறிவித்துள்ளதாக சொல்கின்றார்கள்
1 week 2 days ago
சமஷ்டிக் கொள்கையிலிருந்து தமிழரசு ஒருபோதும் விலகாது – யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் திட்டவட்டமான உறுதி April 1, 2026 11:10 am “சமஷ்டிக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி, அன்று முதல் இன்று வரை அதே கொள்கைப் பாதையிலேயே உறுதியாகப் பயணித்து வருகின்றது” என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தந்தை செல்வாவின் ஜனன தின நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சமஷ்டியை அடிப்படையாக வைத்தே தந்தை செல்வா தமிழரசுக் கட்சியை உருவாக்கினார். அந்தச் சமஷ்டிக் கோட்பாட்டை முன்வைத்த காரணத்தினாலேயே தமிழரசுக் கட்சி ‘சமஷ்டிக் கட்சி’ என்று அழைக்கப்படுகின்றது. அன்று முதல் இன்று வரை அந்த அடிப்படை மாறாமல் தமிழர்களின் உரிமைகளுக்காக இக்கட்சி பயணித்து வருகின்றது. அத்தகைய உன்னத கொள்கையை எமக்குத் தந்த பெருந்தகையை இன்று நாம் உணர்வுபூர்வமாக நினைவு கூருகின்றோம். தந்தை செல்வாவின் பிறந்த தினம் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், தந்தை செல்வா அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இம்மாதம் 26 ஆம் திகதி தந்தை செல்வாவின் நினைவு தினமும் அனுஷ்டிக்கப்படவுள்ளது. நினைவு தின நிகழ்வின் ஓர் அங்கமாக, ‘இலங்கை அரசமைப்பு சீர்திருத்தம் சமஷ்டி வழியில்’ என்ற தலைப்பில் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் விசேட சொற்பொழிவை ஆற்றவுள்ளார். சமஷ்டியை அடிப்படையாகக் கொண்டே தந்தை செல்வா அரசியலை முன்னெடுத்தார் என்பதால், அந்தத் தலைப்பில் உரையாற்றுவது மிகவும் பொருத்தமானதாகும்.” – என்றார். https://oruvan.com/the-tamil-nadu-government-will-never-deviate-from-the-federal-policy-sumanthirans-firm-determination-in-jaffna/
1 week 2 days ago
இயக்கச்சி இராணுவ முகாம் முன் பாரிய போராட்டம் புதன், 01 ஏப்ரல் 2026 05:52 AM கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் இராணுவ தேவைக்காக 25ஏக்கர் காணியை சுவீகரிக்கும் முயற்சிக்கு எதிராக நாளைய தினம் வியாழக்கிழமை எதிர்ப்பு போராட்டத்திற்கு அனைவரையும் அணி திரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இயக்கச்சி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான 25ஏக்கர் காணியை இராணுவ முகாமினை அமைக்கும் நோக்குடன் நிரந்தரமாக சுவீகரிக்கும் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காணி சுவீகரிப்பின் முதல்கட்டமாக காணியினை அளவீடு செய்யும் பணிகள் நிலஅளவை திணைக்களத்தால் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிலையில் தனியார் காணிகளை இராணுவ தேவைக்கு சுவீகரிப்பதற்கு எதிராக இயக்கச்சி பகுதியில் பாரிய போராட்டம் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் , குறித்த போராட்டத்திற்கு வேறுபாடுகள் இன்றி அனைத்து தரப்பினரும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. https://jaffnazone.com/news/55972
Checked
Fri, 04/10/2026 - 13:35
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed