புதிய பதிவுகள்2

மார்ச் மாதம் தொடங்கிக் கொண்டிருந்த புத்தாண்டை ஜூலியஸ் சீசர் ஜனவரியாக மாற்றியது ஏன்?

3 months 1 week ago
மார்ச் மாதம் தொடங்கிக் கொண்டிருந்த புத்தாண்டை ஜூலியஸ் சீசர் ஜனவரியாக மாற்றியது ஏன்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜூலியஸ் சீசர் ரோமானிய நாட்காட்டியில் இருந்த குழப்பங்களைத் தீர்க்க சீர்திருத்தங்களை மேற்கொண்டார் கட்டுரை தகவல் க.சுபகுணம் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஜனவரி 1, இன்று உலகம் முழுவதும் மக்கள் புத்தாண்டை வரவேற்கின்றனர். இது இப்போதைய காலகட்டத்தில் இயல்பான ஒன்றாகத் தோன்றினாலும், எப்போதுமே இப்படி இருந்ததில்லை. உண்மையில், நவீன கால நாட்காட்டிகளின் மூலமாக இருக்கக்கூடிய பண்டைய ரோம் அதன் கால அளவுகோல்களில் ஆண்டின் முதல் மாதமாக ஜனவரியை கருதவில்லை. ஆம், அப்போது மார்ச் மாதம்தான் ஆண்டின் முதல் மாதமாகக் கணக்கிடப்பட்டது. ஆண்டின் தொடக்கம் மார்ச் மாதத்தில் இருந்து ஜனவரி மாதத்திற்கு மாறியதன் பின்னணியில் நாட்காட்டி குழப்பங்கள், அரசியல் தேவைகள், வானியல் திருத்தங்கள் எனப் பல காரணிகள் பங்கு வகிக்கின்றன. ஜனவரி எப்போது, எப்படி ஆண்டின் முதல் மாதமாக மாறியது என்பதைப் புரிந்துகொள்ள, ரோமானிய நாட்காட்டி அடைந்த பரிணாம வளர்ச்சிகளை நாம் அறிய வேண்டும். அதில் அடுத்தடுத்து நிகழ்ந்த தவறுகள் எப்படி பெரிய சீர்திருத்தங்களைச் செய்வதற்கான உந்துதலாக அமைந்தது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். மார்ச் முதல் தொடங்கிய ரோமானிய ஆண்டுகள் ஆரம்பக் கால ரோமானிய நாட்காட்டி சந்திரனின் சுழற்சிகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்பட்டதாக 'அவர் காலண்டர்: தி ஜூலியன் காலண்டர் அண்ட் இட்ஸ் எரர்ஸ்' என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. இந்த நாட்காட்டியை நவீன கண்ணோட்டத்தில் பார்க்கும்போது உங்களுக்கு வினோதமாகத் தெரியலாம். அந்த நாட்காட்டியின்படி, மார்ச் மாதத்தில் இருந்து ஆண்டு தொடங்குகிறது. அதோடு, ஓர் ஆண்டுக்கு வெறும் 10 மாதங்கள் மட்டுமே இருந்தன. அந்தப் பத்து மாதங்களில், ஆறு 30 நாட்களுடனும் நான்கு 31 நாட்களுடனும் இருந்துள்ளன. ஆண்டின் கடைசி மாதமாக டிசம்பர் இருந்துள்ளது. மேக்ரோபியஸ், சென்சோரினஸ் போன்ற பண்டைய ரோமானிய தத்துவஞானிகளின் கூற்றுப்படி, ஓர் ஆண்டுக்கு பத்து மாதங்களும் 304 நாட்களும் மட்டுமே இருந்தன. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது சவப்பெட்டியில் மண்ணுக்குள் புதைந்த நிலையில் 61 நாட்கள் இவர் தாக்குப்பிடித்தது எப்படி? வங்கதேசத்தில் ஜெய்சங்கர் - இந்தியாவின் நகர்வு உணர்த்துவது என்ன? சௌதி அரேபியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரிப்பது ஏன்? தமிழ்நாடு - உத்தரபிரதேசம்: கடன் சுமை எந்த மாநிலத்திற்கு அதிகம்? உண்மை உரைக்கும் புள்ளி விவரம் End of அதிகம் படிக்கப்பட்டது பட மூலாதாரம்,Getty Images ரோமானிய நாட்காட்டியின்படி, மார்ச், மே, குயின்டிலிஸ், அக்டோபர் மாதங்கள் 31 நாட்களைக் கொண்டிருந்தன. ஏப்ரல், ஜூன், செக்ஸ்டிலிஸ், செப்டம்பர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் 30 நாட்களைக் கொண்டிருந்தன. இந்த வரிசையில், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகியவை முறையே ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது மாதங்களாகக் கணக்கிடப்பட்டன. அதில் மொத்தம் 304 நாட்கள் இருந்தன. மேலும் வரலாற்றுப் பதிவுகளின்படி, அப்போது ஜனவரி, பிப்ரவரி என்ற மாதங்களே இருந்திருக்கவில்லை. அப்படியெனில் மீதி நாட்கள் என்னவாயின? அந்த நாட்காட்டியில் குளிர்காலம் கணக்கிடப்படவில்லை. ஆண்டின் அந்த இரு மாதங்களுக்கு விவசாயமே நடக்காது என்பதால், அந்த நாட்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. சூரியன் உதித்தது, மறைந்தது. ஆனால், ஆரம்பக்கால நாட்காட்டியின்படி, அதிகாரபூர்வமாக ஒரு நாள்கூட கடக்கவில்லை. இந்தச் சிக்கலை, நாட்காட்டியில் நிலவிய குழப்பத்தை ரோமின் இரண்டாவது மன்னரான நூமா போம்பிலியஸ் நிவர்த்தி செய்ய முயன்றார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜூலியஸ் சீசர் ஜனவரி மாதத்தை மீண்டும் ஆண்டின் முதல் மாதமாக கி.மு.45 முதல் கொண்டு வந்தார் ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் சேர்க்கப்பட்டது எப்படி? ரோமானிய நாட்காட்டியில் நிலவிய இந்தக் குழப்பத்தைச் சரிசெய்ய, நூமா போம்பிலியஸ்தான் ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களைச் சேர்த்தார். கடந்த 1921ஆம் ஆண்டு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக பதிப்பகம் வெளியிட்ட 'தி காலண்டர்: இட்ஸ் ஹிஸ்டரி, ந்ச்சர் அண்ட் இம்ப்ரூவ்மென்ட்' என்ற நூல் இதுகுறித்துப் பேசுகிறது. அதன்படி, "நூமா கூடுதலாக 50 நாட்களைச் சேர்த்து, ஆண்டின் நாள் கணக்கை 354 நாட்களாக உயர்த்தியதாகக் கூறுகிறது. ஆனால், ரோமானியர்கள் இரட்டைப்படை எண்களை துரதிர்ஷ்டமானவை என்று நம்பினர். இதற்காக அவர் பல மாதங்களின் மொத்த நாள் கணக்கை 30இல் இருந்து 29 ஆகக் குறைத்து, கூடுதலாக 50 நாட்களைச் சேர்த்து 12 மாதங்கள் கொண்ட நாட்காட்டியை உருவாக்கினார்." ஜனவரி மாதத்தில் இரட்டைப்படை எண்ணிக்கையில் நாட்கள் இருந்ததால் கூடுதலாக ஒரு நாள் சேர்க்கப்பட்டது. பிப்ரவரி மாதம், பாதாள தெய்வங்களுடன் தொடர்புடையதாக இருந்ததால், அதற்கு இரட்டைப்படை எண்ணிக்கையில் நாட்கள் ஒதுக்கப்பட்டன. இந்தச் சீர்திருத்தத்தை செய்ததன் மூலம் போம்பிலியஸ் ஆண்டின் நாள் கணக்கை 355 ஆக உயர்த்தினார்." கி.மு.700ஆம் ஆண்டு வாக்கில், நூமா போம்பிலியஸ் ஆட்சியின்போது ரோமானிய ஆண்டில் ஜனவரி, பிப்ரவரி ஆகிய இரண்டு புதிய மாதங்கள் சேர்க்கப்பட்டன. ஜனவரி ஆண்டின் தொடக்கத்திலும், பிப்ரவரி ஆண்டின் இறுதியிலும் சேர்க்கப்பட்டன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரோமானிய நாட்காட்டியில் சூரிய ஆண்டைவிட 10 நாட்கள் குறைவாக இருந்ததால், பருவங்களின் காலம் மாறிக்கொண்டே இருந்தது குழப்பத்தில் தத்தளித்த ரோமானிய நாட்காட்டி ஒரு நாட்காட்டி சரியாகச் செயல்படுவதற்கு, சிவில் ஆண்டுக் கணக்கு சூரிய ஆண்டுடன் பொருந்தி வரவேண்டும். அப்போதுதான் ஒவ்வோர் ஆண்டிலும் பருவ காலங்கள் ஒரே நேரத்தில் திரும்ப வரும். சிவில் ஆண்டு நீளமாக இருந்தால், பருவகாலங்கள் மெதுவாகப் பின்னோக்கி நகரும். அதுவே மிகக் குறுகியதாக இருந்தால், பருவகாலங்கள் வேகமாக முன்னோக்கி நகரும். 'அவர் காலண்டர்: தி ஜூலியன் காலண்டர் அண்ட் இட்ஸ் எரர்ஸ்' நூலின்படி, "பண்டைய எகிப்தியர்கள் ஆண்டுக்கு 12 மாதங்களையும், மாதத்திற்கு 30 நாட்களையும் கொண்ட எளிய முறையைப் பயன்படுத்தினர். அதோடு, ஆண்டின் இறுதியில் கூடுதலாக ஐந்து நாட்களைச் சேர்த்தனர். ஆனால் அவர்கள் மிகுநாளாண்டு (Leap year) முறையைப் பின்பற்றாத காரணத்தால், ஒவ்வோர் ஆண்டும் கால் பங்கு நாளின் கணக்கு தவறியது. இதன் விளைவாக எகிப்திய புத்தாண்டு ஒவ்வோர் ஆண்டும் வெவ்வேறு நாட்களில் வந்தது. இதனால் எகிப்திய நாட்காட்டி நிலையற்றதாக இருந்தது." இதுவே ரோமானிய நாட்காட்டியை எடுத்துக்கொண்டால், வேறொரு பிரச்னை நிலவியது. நூமா மாதங்களை பன்னிரண்டாக மாற்றி, ஆண்டுக்கு 355 நாட்கள் கொண்ட நாட்காட்டியை கொண்டு வந்தார். இருந்தாலும், இதன்படியான ஆண்டுக் கணக்கு சூரிய ஆண்டைவிட சுமார் 10 நாட்கள் குறைவாக இருந்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஆரம்பக்கால ரோமானிய நாட்காட்டியில் பத்து மாதங்களே இருந்ததாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன இதைச் சரிசெய்யவில்லை என்றால் ஒவ்வோர் ஆண்டும் பருவங்களின் காலம் மாறிக்கொண்டே இருக்கும். இதற்கு நூமா ஒரு தீர்வைக் கொண்டு வந்தார். அதாவது மற்றுமொரு புதிய மாதத்தை இடைச்செருகலாக சேர்த்தார். இந்தப் புதிய மாதம், பிப்ரவரி 23 மற்றும் 24ஆம் தேதிக்கு இடையே சேர்க்கப்பட நூமா உத்தரவிட்டார். இந்த இடைச்செருகல் மாதத்தில் ஓர் ஆண்டில் 22 நாட்கள், மற்றோர் ஆண்டில் 23 நாட்கள் என மாறி மாறி இருந்து வந்தது. இதனால், நான்கு ஆண்டுகளில் 1420 நாட்களுக்குப் பதிலாக மொத்தம் 1,465 நாட்கள் உருவாயின. அதாவது, சராசரி ஆண்டின் நாட்கள் எண்ணிக்கையை 366¼ நாட்கள் என்றானது. இதன் விளைவாக, சூரிய ஆண்டைவிட ஒரு நாள் கூடுதலாகக் கணக்கிடப்படும் நிலை உருவானது. பின்னர், இந்தப் புதிய பிழையைச் சரிசெய்ய, ஒவ்வொரு மூன்றாவது எட்டு ஆண்டு காலத்திலும் நான்கு இடைச்செருகல் மாதங்களுக்குப் பதிலாகத் தலா 22 நாட்களைக் கொண்ட மூன்று இடைச்செருகல் மாதங்கள் மட்டுமே இருக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. இது 24 ஆண்டுகளில் 24 நாட்களைக் குறைத்து, சராசரி ஆண்டை 365¼ நாட்களாகக் குறைத்து, நாட்காட்டி கணக்கீட்டை சூரிய ஆண்டுக்கு மிக நெருக்கமாகக் கொண்டு வந்தது. கோட்பாட்டின்படி, இந்த அமைப்பு நன்றாகச் செயல்பட்டிருக்க முடியும். ஆனால் நடைமுறையில் இந்த இடைச்செருகல்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் மதகுருமார்களிடம் இருந்தது. அவர்கள் அரசியல் காரணங்களுக்காக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினர். ஒரு நீதிபதியின் பதவிக்காலத்தை நீட்டிக்க ஆண்டில் ஓர் ஆண்டின் காலகட்டத்தை நீட்டிப்பது, தேர்தல்களை விரைவுபடுத்த ஆண்டை சுருக்குவது போன்றவற்றில் ஈடுபட்டனர். இத்தகைய தந்திரங்களின் விளைவாக, ரோமானிய நாட்காட்டி பெரும் குழப்பத்தில் சிக்கித் தத்தளித்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரோமின் இரண்டாவது மன்னர் நூமா போம்பிலியஸ், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களை ரோமானிய நாட்காட்டியில் சேர்த்தார் மீண்டும் மார்ச் மாதமாக மாறிய ஆண்டு தொடக்கம் "ஓவிட் என்ற ரோமக் கவிஞரின் கூற்றுப்படி, நூமா போம்பிலியஸ் கொண்டு வந்த நாட்காட்டி முறை கி.மு.452 வரை பயன்பாட்டில் இருந்தது" என்று தி காலண்டர்: இட்ஸ் ஹிஸ்டரி, ஸ்டிரக்ச்சர் அண்ட் இம்ப்ரூவ்மென்ட் என்ற புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. பின்னர், "டிசெம்வீர் என்று அழைக்கப்படும் பத்து ரோமானிய நீதிபதிகள் அடங்கிய குழு மீண்டும் மாதங்களின் வரிசையை மாற்றி மார்ச் மாதத்தையே முதல் மாதமாக நிர்ணயித்தது." இதன் மூலம் நூமாவுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்த பழைய மரபுக்கே ரோம் திரும்பியது. ஆனால், இந்தத் திருத்தங்களும்கூட நாட்காட்டியில் நிலவிய ஆழமான சிக்கலைத் தீர்க்கவில்லை, குழப்பம் தொடர்ந்தது. ஜூலியஸ் சீசரின் காலப்பகுதியில், சூரிய ஆண்டுக்கும் ரோமானிய நாட்காட்டி படியான ஆண்டுக்கும் இடையே சுமார் மூன்று மாதங்கள் வேறுபாடு இருந்தது. குளிர்காலம் இலையுதிர் காலத்திலும், இலையுதிர் காலம் கோடைக்காலத்திலும் வந்தன. இப்படியாக வளர்ந்து வந்த குழப்பம், நாட்காட்டியை முற்றிலுமாகச் சீர்திருத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியது. ஜூலியஸ் சீசர் கொண்டு வந்த சீர்திருத்தம் இவ்வளவு குழப்பங்கள் நிறைந்த கால அளவீடுகளைப் பார்த்த ஜூலியஸ் சீசர், கி.மு. 46இல் சோசிஜெனெஸ் என்ற அலெக்சாண்டிரிய வானியலாளரின் உதவியுடன், ரோமானிய நாட்காட்டியில் ஒரு பெரிய சீர்திருத்தத்தை செய்தார். ரோமானிய பண்டிகைகள் அனைத்தும் பருவ காலங்களைச் சார்ந்தே இருந்ததால், நாட்காட்டியிலுள்ள குழப்பங்களைச் சரி செய்வதை அவசியமானதாகக் கருதினார் சீசர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜூலியஸ் சீசர் நாட்காட்டியில் சீர்திருத்தங்களை மேற்கொண்ட கி.மு.46ஆம் ஆண்டு மொத்தம் 445 நாட்களைக் கொண்டிருந்தது அதுவரைக்கும் சந்திரனை அடிப்படையாகக் கொண்டு அளவிடப்பட்டு வந்த முறையை முற்றிலுமாகக் கைவிட முடிவு செய்தார் ஜூலியஸ் சீசர். மேலும், சூரியனை அடிப்படையாகக் கொண்ட, 365 நாட்கள் மற்றும் 6 மணிநேரங்களைக் கொண்ட ஆண்டு நாட்காட்டியை ஏற்றுக்கொள்வது அவரது முக்கிய முடிவாக இருந்தது. ஆனால், இதற்காக அவர் கி.மு.46 என்ற ஒரு குறிப்பிட்ட ஆண்டில் மட்டும் பற்பல மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. இதனால் அந்த ஆண்டு வரலாற்றில் 'குழப்பமான ஆண்டு (The Year of Confusion)' என்ற பெயரையும் பெற்றது. கி.மு.46இல், பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு, சீசர் வழக்கம் போல 23 நாட்களைக் கொண்ட இடைச்செருகல் மாதம் ஒன்றைச் சேர்த்தார். இதன் மூலம், ஜனவரியில் 29 நாட்கள், பிப்ரவரியில் 28 நாட்கள் மற்றும் இடைச்செருகல் மாதத்தில் 23 நாட்கள் என மொத்தம் 80 நாட்கள் ஆனது. பின்னர், அதே ஆண்டின் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையிலும் முறையே 34 மற்றும் 34 நாட்களைக் கொண்ட இரு மாதங்களைக் கூடுதலாகச் சேர்த்தார். இதன் மூலம் கி.மு.46 மொத்தமாக 445 நாட்களைக் கொண்ட ஆண்டாக அமைந்தது. அதோடு, ரோமானிய நாட்காட்டியில் நிலவிவந்த குழப்பங்களும் சரி செய்யப்பட்டன. ஜூலியஸ் சீசர் பல்வேறு மாற்றங்களைப் புகுத்தி, நாட்காட்டியில் நிலவி வந்த குழப்பங்களுக்குத் தீர்வு கண்ட கி.மு.46-ஐ "கடைசி குழப்பமான ஆண்டு" என்று ரோம தத்துவஞானி மேக்ரோபியஸ் விவரித்துள்ளார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கி.மு. 8இல் அகஸ்டஸ் சீசரின் பெயரால், 'செக்ஸ்டிலிஸ்' என்ற மாதம் ஆகஸ்ட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது ஜூலியன் சீர்திருத்தத்திற்குப் பிறகு... ஜூலியஸ் சீசர் உருவாக்கிய புதிய கால அளவுகோலின்படி, ஓர் ஆண்டுக்கு 365 நாட்கள் இருந்தன. ஒவ்வொரு நான்காவது ஆண்டும் ஒரு கூடுதல் நாள் சேர்க்கப்பட்டு, அது மிகுநாளாண்டாக (Leap Year) கணக்கில் கொள்ளப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகின்ற மிகுநாள், பிப்ரவரி மாதத்தில் சேர்க்கப்பட்டது. கி.மு.45 சீசரால் சீர்திருத்தப்பட்ட முதல் ஆண்டாக இருந்தது. 'அவர் காலண்டர்: தி ஜூலியன் காலண்டர் அண்ட் இட்ஸ் எரர்ஸ்' நூலிலுள்ள தகவலின்படி, கி.மு.45ஆம் ஆண்டின் முதல் மாதமாக ஜனவரி மீண்டும் முன்னுக்கு கொண்டுவரப்பட்டது. கி.மு.44ஆம் ஆண்டு, சீசரின் நினைவாக 'குயின்டிலிஸ்' என்ற மாதம் ஜூலை எனப் பெயர் மாற்றப்பட்டது. கி.மு.8ஆம் ஆண்டு, அகஸ்டஸ் சீசரின் பெயரால், 'செக்ஸ்டிலிஸ்' என்ற மாதம் ஆகஸ்ட் என்று மாற்றப்பட்டது. இதற்குப் பிறகும்கூட, ரோமானிய மதகுருமார்கள் மிகுநாளாண்டு விதியைத் தவறாகப் புரிந்துகொண்டு, நான்கு ஆண்டுகளுக்குப் பதிலாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மிகுநாளைச் சேர்த்தனர். இதனால் 36 ஆண்டுகளுக்கு நீடித்த இந்தச் சிக்கல், கி.மு.9 மற்றும் கி.பி.3ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் சரிசெய்யப்பட்டது. அதன் பிறகு ஜூலியன் காலண்டர் சரியாகச் செயல்பட்டது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,போப் 13ஆம் கிரிகோரி ஜூலியன் நாட்காட்டியில் இருந்த சிறு பிழை சீசர் ஒரு சூரிய ஆண்டு 365 நாட்கள் மற்றும் 6 மணிநேரம் நீளம் கொண்டது எனக் கருதினார். ஆனால் உண்மையில் அதன் நீளம், 365 நாட்கள், 5 மணிநேரம், 48 நிமிடம் மற்றும் 46 விநாடிகளாக இருந்தது. அதாவது, ஜூலியன் நாட்காட்டியில், ஓராண்டுக்கான கால அளவு 11 நிமிடங்கள், 14 விநாடிகள் நீளமாக இருந்தது. இந்தப் பிசிறு ஆரம்பத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், அடுத்தடுத்து வந்த நூற்றாண்டுகளில் வானியல் கணக்குகளில் சில குழப்பங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக, ஈஸ்டர் நாள் கடைபிடிக்கப்பட்டபோதுதான், இந்தப் பிசிறு பெரும்பான்மையாக கவனத்தை ஈர்த்தது. உதாரணமாக, கி.பி.325இல், வசந்தகாலத்தில் மார்ச் 24ஆம் தேதி வரவேண்டிய சம இரவு நாள் (spring equinox), மார்ச் 21இல் வந்தது. காலம் நகர்ந்து கொண்டேயிருக்க, அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் வசந்தகால சம இரவு நாளும் மேலும் மேலும் முன்கூட்டியே வந்து கொண்டிருந்தது. இதன் நீட்சியாக, 1545ஆம் ஆண்டளவில், சமஇரவு நாள் மார்ச் 11க்கு சரிந்திருந்தது. "ஒவ்வோர் ஆண்டும் வசந்தகால சம இரவு பகல் (Vernal Equinox) நாளுக்குப் பிறகு தோன்றும் முதல் முழு நிலவு நாளை அடிப்படையாக வைத்து பண்டிகை கொண்டாடப்பட்டதாகவும் அதைச் சரியாகக் கணக்கிடுவதில் ஜூலியன் நாட்காட்டி குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும்" 'தி கேலண்டர்: இட்ஸ் ஹிஸ்டரி, ஸ்டிரக்ச்சர் அண்ட் இம்ப்ரூவ்மென்ட்' நூலில் அதன் ஆசிரியர் அலெக்சாண்டர் பிலிப் குறிப்பிட்டுள்ளார். "ஜூலியன் நாட்காட்டியின்படி, ஒராண்டுக்கு 365.25 நாட்கள். ஆனால், உண்மையில் ஓராண்டுக்கு 365.24219 நாட்கள். இதனால், ஒவ்வோர் ஆண்டிலும் சிற்சில நிமிடங்கள் என்ற அளவில் உண்மையான கால அளவு மாறிக் கொண்டே வந்தது. அதாவது 128 ஆண்டுகளுக்கு ஒரு நாள் என்ற கணக்கில் வானியல் நிகழ்வுகள் முன்னதாகவே நிகழ்ந்துகொண்டிருந்தன," என்று எட்வர்ட் கிரஹாம் ரிச்சர்ட்ஸ் தனது மேப்பிங் டைம்: தி காலண்டர் அண்ட் இட்ஸ் ஹிஸ்டரி என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இறுதியில், இந்தப் பிரச்னைக்கு 1572ஆம் ஆண்டில் 13ஆம் கிரிகோரி போப் ஆனபோது தீர்வு கிடைத்தது. வானியலாளரும் காலக்கணிப்பு வல்லுநருமான அலோய்சியஸ் லிலியஸ் இதற்குத் தீர்வாக ஒரு திட்டத்தை முன்வைத்தார். அதற்கு, 1582 பிப்ரவரி 24ஆம் தேதியன்று போப் 13ஆம் கிரிகோரி ஒப்புதல் வழங்கினார். அந்த ஒப்புதல் படிவத்தின்படி, நாட்காட்டியை சரி செய்வதற்காக பத்து நாட்கள் நீக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 1582ஆம் ஆண்டில் அக்டோபர் 4ஆம் தேதிக்குப் பிறகு வந்த நாள் 15ஆம் தேதியாகக் குறிப்பிடப்பட்டது என்று அலெக்சாண்டர் பிலிப் தனது நூலில் எழுதியுள்ளார். இப்படியாக, ஆரம்பக்கால ரோமில் மார்ச் மாதத்தில் தொடங்கிய புத்தாண்டு, நூமா, சீசர், 13ஆம் கிரிகோரி ஆகியோரின் காலத்தில் ஜனவரிக்கு மாற்றப்பட்டு, இன்றளவும் ஜனவரியே புத்தாண்டு மாதமாக நீடித்து வருகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2x9x9gkv7o

தலைவர்களின் 2026 புத்தாண்டு வாழ்த்து செய்திகள்

3 months 1 week ago
மறுசீரமைப்பு, மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியை தோள்மேல் சுமந்த நிலையில் நாம் புத்தாண்டில் கால்பதிக்கிறோம் - வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி Published By: Digital Desk 3 31 Dec, 2025 | 07:30 PM மிகப்பெரிய மறுசீரமைப்புச் செயல்முறையையும், மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியையும் தோள்மேல் சுமந்த நாடென்ற வகையில் நாம் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டில் கால்பதிக்கிறோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், கடந்த 2025 ஆம் ஆண்டு தேசிய அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்ட நிலையான அபிவிருத்திக்காக அடித்தளமிடப்பட்ட ஆண்டாக அமைந்தது. 1977 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையைப் பதிவு செய்தல், 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் கூடுதலான அரச வருவாயை ஈட்டுதல், வரலாற்றில் முதல் முறையாக முதன்மை கணக்கு மிகையை பெற்றமை , பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி வருவாயை சுமார் 17 பில்லியன் டொலர்களாக அதிகரித்தமை , எமது நாட்டு வரலாற்றில் அரச வருவாய் இலக்குகளை விஞ்சும் ஒரே ஆண்டாக 2025 ஆம் ஆண்டை மாற்றியமை மற்றும் அண்மைக் காலத்தில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் நாட்டிற்கு வருகை தந்த வருடமாக பதிவானமை போன்றன 2025 ஆம் ஆண்டில் அடையப்பட்ட குறிப்பிடத்தக்க பொருளாதார சாதனைகளாகும். இலங்கை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்த ஊழல் நிறைந்த அரசியல் முறைமைக்கு பதிலாக பொதுமக்களுக்கு நேர்மையாக சேவை செய்யும் ஒரு சிறந்த அரசியல் கலாச்சாரத்தை நாட்டில் உருவாக்கவும் எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து விடுவிப்பதற்கான ' முழு நாடுமே ஒன்றாக ' தேசிய செயற்பாட்டைப் போன்ற திட்டங்களை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு இவை 2025 ஆம் ஆண்டு நாட்டின் அரசியல் மற்றும் சமூக மாற்றத்தில் ஒரு திருப்புமுனையான ஆண்டாக பதியப்படுகிறது. அண்மைக் காலங்களில் நாடு எதிர்கொண்ட மிகப்பெரிய இயற்கை பேரழிவின் சவாலை கடந்த ஆண்டு நாங்கள் ஒன்றாக எதிர்கொண்டோம். நமது மக்களிடையே உள்ள மனிதநேயப் பண்பானது எந்த பேரழிவினாலும் பறிக்க முடியாத ஒரு சிறந்த குணம் என்பதை தெளிவாக நிரூபித்ததோடு நாடு முழுவதும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்ட சகோதர மக்களின் துயரத்தில் கைகோர்த்தார்கள். இந்தச் சவாலை எதிர்கொள்வதில் எங்களுக்கு ஆதரவளித்த வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கும், மீளெழுச்சிக்கு நட்புறவின் பலத்தை வழங்கிய உலகெங்கிலும் உள்ள அனைத்து நட்பு நாடுகளுக்கும், அனர்த்த நிலையில் அயராது உழைத்த பொலிஸார் மற்றும் முப்படைகளுக்கும், இந்த நாட்டின் அரச உத்தியோகஸ்தர் களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் ஒன்றாக, இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. உலக வரலாற்றில் வீழ்ச்சியடைந்த ஒவ்வொரு நாட்டையும் கட்டியெழுப்புவதில் அந்த மக்களின் இலட்சியமும் தைரியமும் பக்கபலமாக இருந்தது. நமது அன்பான பிரஜைகளின் அசைக்க முடியாத தைரியத்தின் பலனால், நாம் முன்பு இருந்ததை விட சிறந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று உறுதியாக நம்புகிறோம். புத்தாண்டு வருகை கடந்த ஆண்டின் அனுபவங்களை மீள்பரிசீலனை செய்வதற்கு வாய்ப்பு அளிப்பதோடு, புத்தாண்டு தொடர்பில் சாதகமான மனப்பாங்குகளுடன் மீள திட்டமிடுவதற்கும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குகிறது. நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான திட்டத்தில் அசைக்க முடியாத உறுதியுடனும் நம்பிக்கையுடனும் சகோதரத்துவத்துடன் கைகோர்க்க அனைவரையும் நான் அழைப்பு விடுகிறேன். மலர்ந்த 2026 புத்தாண்டு உங்கள் அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான புத்தாண்டாக அமைய வாழ்த்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/234842

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்

3 months 1 week ago
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணம் 2026: இலங்கை குழாம்த்தில் யாழ். வீரர்கள் இருவர் 01 Jan, 2026 | 01:11 PM (நெவில் அன்தனி) ஸிம்பாப்வேயிலும் நமிபியாவிலும் கூட்டாக இந்த வருடம் நடைபெறவுள்ள 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியில் பெயரிடப்பட்டுள்ள 15 வீரர்களில் யாழ். வீரர்கள் இருவர் இடம்பெறுகின்றனர். பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் முன்னாள் வீரரும் தற்போது மருதானை புனித சூசையப்பர் கல்லூரியில் இணைந்துள்ளவருமான விக்னேஸ்வரன் ஆகாஷ், யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி வீரர் குகதாஸ் மாதுளன் ஆகிய இருவரே 19 வயதுக்குட்பட்ட இலங்கை குழாத்தில் இடம்பெறும் யாழ். வீரர்களாவர். துபாயில் கடந்த வருடம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியில் இடம்பெற்ற 11 வீரர்கள், உலகக் கிண்ண குழாத்திலும் பெயரிடப்பட்டுள்ளனர். நால்வர் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இதேவேளை திரித்துவ கல்லூரி விக்கெட் காப்பாளர் ஆதம் ஹில்மி, வெஸ்லி கல்லூரி வீரர் ஜீவகன் ஸ்ரீராம் ஆகியோரும் குழாத்தில் இடம்பெறுகின்றனர். 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைவராக றோயல் கல்லூரி வீரர் விமத் தின்சார தொடர்ந்தும் செயற்படவுள்ளார். பதினாறு அணிகள் 4 குழுக்களில் பங்குபற்றும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஜனவரி 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, அயர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் ஏ குழுவில் இலங்கை இடம்பெறுகின்றது. இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் ஜப்பான் அணியை ஜனவரி 17ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது. தொடர்ந்து 19ஆம் திகதி அயர்லாந்தையும் 23ஆம் திகதி அவுஸ்திரேலியாவையும் இலங்கை சந்திக்கும். இலங்கையின் குழு நிலைப் போட்டிகள் யாவும் நமிபியாவில் விண்ட்ஹோக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். 19 வயதின்கீழ் இலங்கை குழாம் விமத் தின்சார (அணித் தலைவர் - றோயல் கல்லூரி), கவிஜ கமகே (உதவித் தலைவர் - கிங்ஸ்வூட் கல்லூரி), திமன்த மஹாவித்தான, ஆதம் ஹில்மி, செத்மிக்க செனவிரட்ன (மூவரும் திரித்துவ கல்லூரி), விரான் சமுதித்த, சமரிந்து நெத்சார (இருவரும் மாத்தறை சென். சேவேஷியஸ் கல்லூரி), துல்னித் சிகேரா, சாமிக்க ஹீனட்டிகல (இருவரும் மஹாநாம கல்லூரி), குகதாஸ் மாதுளன் (யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி), ரசித் நிம்சார (வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை), விக்னேஸ்வரன் ஆகாஷ், சேனுஜ வேக்குனாகொட (இருவரும் மருதானை புனித சூசையப்பர் கல்லூரி), ஜீவகன் ஸ்ரீராம் (வெஸ்லி கல்லூரி), மலின்த சில்வா (மொறட்டுவை புனித செபஸ்தியார் கல்லூரி) https://www.virakesari.lk/article/234928 நம்ம ஊர்ப்பையனும் விளையாடப்போகிறார். வாழ்த்துகள் ஜீவகன் ஸ்ரீராம்.

வடக்கு, தெற்கில் 3 வகையான வீட்டுத்திட்டங்களுக்கான இந்திய நிதி உதவி இருமடங்காக அதிகரிப்பு

3 months 1 week ago
வடக்கு, தெற்கில் 3 வீட்டுத்திட்டங்களுக்கான இந்திய நிதி உதவி இருமடங்காக அதிகரிப்பு 31 Dec, 2025 | 04:23 PM (எம்.மனோசித்ரா) இலங்கையில் இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் உயர்தாக்க சமூக மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ், வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் கிராம சக்தி வடக்கு, கிராம சக்தி தெற்கு-ஐ மற்றும் கிராம சக்தி தெற்கு-ஐஐ ஆகிய மூன்று வீட்டுத்திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 2017 ஒக்டோபர் மற்றும் 2018 ஒக்டோபர் மாதங்களில் கையெழுத்திடப்பட்டன. இந்த ஒப்பந்தங்களின்படி, இலங்கை அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், சுயமாக வீடுகளை அமைக்கும் திட்டத்தின் கீழ் ஒரு வீட்டுக்கு 500,000 இலங்கை ரூபாவை இந்திய அரசாங்கம் வழங்கி வந்தது. கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் அதன் பின்னரான விலை உயர்வு, அத்துடன் 2022 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சவால்கள் காரணமாக, ஒதுக்கப்பட்ட நிதியுதவியுடன் வீடுகளைக் கட்டி முடிப்பதில் பயனாளிகள் சிரமங்களை எதிர்கொண்டனர். இதற்கமைய, இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒரு வீட்டுக்கான நிதியுதவியை 1,000,000 இலங்கை ரூபாவாக இருமடங்காக அதிகரிக்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த மாற்றியமைக்கப்பட்ட நிதியுதவியை அமுல்படுத்துவதற்கான இராஜதந்திர கடிதங்கள், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் எல்.பி. குமுது லால் ஆகியோரால் நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது பரிமாறிக்கொள்ளப்பட்டன. இந்த மூன்று திட்டங்களின் கீழ் 1550-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த அதிகரித்த நிதியுதவியால் பயனடையவுள்ளன. இலங்கையில் மக்களின் அன்றாட வாழ்வில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தியாவின் மக்கள் நலன்சார் அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டங்களில் 'வீடமைப்பு' முக்கிய இடம் வகிக்கின்றது. இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் இந்தியாவின் பிரதான வீட்டுத்திட்டத்தின் கீழ் சுமார் 50,000 வீடுகள் கட்டப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ் மேலும் 10,000 வீடுகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் நிதியுதவி அதிகரிக்கப்பட்ட 3 கிராம சக்தி திட்டங்களுக்கு மேலதிகமாக, இலங்கையில் இந்தத் துறையில் ஏனைய உயர்தாக்க சமூக மேம்பாட்டுத் திட்டங்களையும் இந்தியா முன்னெடுத்து வருகின்றது. நாட்டின் 25 மாவட்டங்களிலும் தலா 24 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீடமைப்பு வசதிகளை வழங்கும் நாடளாவிய மாதிரி கிராமத் திட்டம்; மன்னார் மடுத் திருத்தலத்திற்கு வரும் யாத்திரிகர்களுக்கான இடைத்தங்கல் விடுதிகள்; மற்றும் அனுராதபுரத்தில் அண்மையில் நிறைவடைந்த சோபித நஹிமிகம திட்டம் ஆகியவை இதில் அடங்கும். அத்துடன், தித்வா புயலைத் தொடர்ந்து இந்திய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 450 மில்லியன் டொலர் புனரமைப்பு மற்றும் மீட்புப் பொதியின் கீழ், முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளைக் கட்டுவதற்கான உதவிகளும் முன்மொழியப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/234856

2026 புத்தாண்டு நிகழ்வுகள்

3 months 1 week ago
2026 புத்தாண்டை வரவேற்க உலகெங்கிலும் கொண்டாட்டங்கள் - கண்கவர் படங்கள் பட மூலாதாரம்,Christophe Petit-Tesson/EPA படக்குறிப்பு,பாரிஸ், பிரான்ஸ் 1 ஜனவரி 2026, 01:40 GMT புதுப்பிக்கப்பட்டது 26 நிமிடங்களுக்கு முன்னர் 2026 புத்தாண்டு உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய நகரங்கள் மற்றும் உலக நாடுகளில் புத்தாண்டை வாணவேடிக்கைகளுடன் மக்கள் வரவேற்ற கண்கவர் புகைப்படங்கள்: படக்குறிப்பு,லண்டனில் 12,000 வாணவேடிக்கைகளுடன் தொடங்கிய புத்தாண்டு பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் குழுமியிருந்த மக்கள் மீது சிறு வண்ணத் தாள்கள் தூவப்பட்டன. பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,துபை பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,புத்தாண்டு பிறந்ததை ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மக்கள் கொண்டாடிய போது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வாணவேடிக்கைகளை மக்கள் ஆர்வத்துடன் தங்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்தனர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சிட்னியின் ஹார்பர் பாலத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் திரண்டு புத்தாண்டை வரவேற்றனர் பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,தென் கொரியாவில் அதன் மிக உயரமான கோபுரமான லோட்டே வார்ல்ட் டவரில் வாணவேடிக்கைகளுடன் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,ரஷ்யாவின் தாக்குதலைத் தொடர்ந்து அமலில் உள்ள ஊரடங்குக்கு முன்பாக யுக்ரேனில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,நியூஸிலாந்தின் ஆக்லாண்டில் புத்தாண்டு கொண்டாடப்பட்டபோது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சீன தலைநகர் பெய்ஜிங்கில் புத்தாண்டை வரவேற்க மக்கள் காத்திருந்தபோது பட மூலாதாரம்,Hannibal Hanschke/EPA படக்குறிப்பு,பெர்லின், ஜெர்மனி பட மூலாதாரம்,Bruna Casas/Reuters படக்குறிப்பு,பார்சிலோனா, ஸ்பெயின் பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,மும்பை நகரில் மக்கள் தெருக்களில் குழுமி புத்தாண்டை கொண்டாடினர். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,சென்னை மெரினாவில் புத்தாண்டு கொண்டாடப்பட்டபோது இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2glz3lvpdo

இலங்கையில் 2026 புத்தாண்டு நிகழ்வுகள்

3 months 1 week ago
மட்டக்களப்பில் கோலாகலமாக வரவேற்கப்பட்ட புத்தாண்டு! Jan 1, 2026 - 08:01 AM 2026ஆம் ஆண்டுப் பிறப்பினை வரவேற்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று நள்ளிரவு விசேட நிகழ்வுகள் நடைபெற்றன. மட்டக்களப்பு நகரில் நள்ளிரவு 12.00 மணிக்கு பட்டாசுகள் கொளுத்தப்பட்டு, இளைஞர்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மாவட்டத்தின் பல்வேறு பாகங்களிலிருந்தும் பெருமளவான பொதுமக்கள் இன, மத வேறுபாடுகளின்றி மட்டக்களப்பு நகரில் ஒன்றுகூடியதைக் காணமுடிந்தது. சமீபத்தில் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாகப் பலர் உயிரிழந்தும், சொத்துகளை இழந்தும் தவிக்கும் நிலையில், இம்முறை புத்தாண்டை அமைதியான முறையில் கொண்டாடுமாறு மாநகர முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். முதல்வரின் அந்த வேண்டுகோளுக்கு மதிப்பளிக்கும் வகையில், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நகருக்குள் ஒன்றுகூடி மிகவும் அமைதியான முறையிலும், அதேநேரம் உற்சாகத்துடனும் புத்தாண்டை வரவேற்றனர். மட்டக்களப்பில் தற்போது சீரற்ற காலநிலை நிலவுகின்ற போதிலும், மழையைப் பொருட்படுத்தாது மக்கள் திரண்டு வந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. -மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்- https://adaderanatamil.lk/news/cmjutx13503dco29njyexr9wm

அர்ச்சுனா எம்.பியுடன் செல்ஃபி எடுக்க முண்டியடித்த அரச ஊழியர்கள்!

3 months 1 week ago
அர்ச்சுனா எம்.பியுடன் செல்ஃபி எடுக்க முண்டியடித்த அரச ஊழியர்கள்! Dec 31, 2025 - 04:23 PM காரைநகர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுடன் செல்ஃபி எடுக்க முண்டியடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று (30) காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும் கலந்துகொண்டிருந்தார். கூட்டம் நடைபெற்றுக்கொண்டு இருந்தவேளை பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் கருத்துக்களுக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இடையிடையே கைதட்டி ஆரவாரம் செய்த சம்பவம் இடம்பெற்றது. கூட்டம் முடிவடைந்த பின்னர் சில உத்தியோகத்தர்கள் முண்டியடித்தவாறு அர்ச்சுனாவுடன் செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் எடுத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. -யாழ். நிருபர் கஜிந்தன்- https://adaderanatamil.lk/news/cmjtwe9d603cho29n77ao984w

யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!

3 months 1 week ago
உங்கள் நம்பிக்கைக்கு நன்றி அண்ணா. பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்பி ஒவ்வொரு கட்ட பணி முடிவடையும்போதும் அவர்கள் பணத்தை மீளப்பெற்று பயன்படுத்தும்படியும் செய்யலாம். (அரசின் வீட்டுத் திட்ட நிதி தொழிநுட்ப உத்தியோகத்தரின் சிபார்சின் பின்னரே வங்கியில் இருந்து மீளப்பெற முடியும்.) அல்லது பகுதி பகுதியாக ஒப்பந்தகாரர் கட்ட கட்ட அவருக்கு பணம் அனுப்பலாம். எல்லோருடைய கருத்துகளையும் பெற்று செயற்படுத்துவோம்.

யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!

3 months 1 week ago
சாதரண மலசல கூடத்திற்கு 200000 ரூபாவும் வெஸ்ரேன் மலசலகூடத்திற்கு 275000 ரூபா வரையும் சராசரியாக தேவை என சில தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் தெரியப்படுத்தி உள்ளனர். காரைநகரில் உள்ள சில ஒப்பந்தகாரரிடம் விலை மனுக்கோரி உள்ளேன். அராலியில் பிற் வெட்டுவதற்கே 75000 - 100000 ரூபா வரை பக்கோ கூலி கேட்கிறார்களாம்! கடும் கற்பாறையாக உள்ளதாம்.

யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!

3 months 1 week ago
அண்ணை, கொமட் 35000 - 70000 ரூபா வரை உள்ளது. நாங்கள் 50000 ரூபா என்று சராசரி விலை குறித்து வைப்போம். கைகளால் பிடித்து நகர வெள்ளிரும்பு பைப் 15000 ரூபா(ஏற்கனவே இரும்பு பைப் போட்டு உக்கிவிட்டது) 2 லான்ட் மாஸ்ரர் மண் 24000 ரூபா 2 லான்ட் மாஸ்ரர் சல்லி 15000 ரூபா 8 பைக்கற் சீமந்து 20000 ரூபா 20 (3/8) கம்பி 20000 ரூபா 1 கிலோ கட்டுக்கம்பி 4000 ரூபா பொருட்கள் கொண்டுவர கூலி 1000 ரூபா மேசன், பிளம்பிங் கூலி 35000 ரூபா மொத்தச் செலவு 184000 ரூபா(கொஞ்சம் கூடிக் குறையலாம்) எனக்கு அறிமுகமான எலக்ரீசியன் தம்பி நேரில் சென்று பார்த்து தந்த விபரங்கள்.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

3 months 1 week ago
Afghanistan: Rashid Khan (C), Noor Ahmad, Abdullah Ahmadzai, Sediqullah Atal, Fazalhaq Farooqi, Rahmanullah Gurbaz, Naveen Ul Haq, Mohammad Ishaq, Shahidullah Kamal, Mohammad Nabi, Gulbadin Naib, Azmatullah Omarzai, Mujeeb Ur Rahman, Darwish Rasooli, Ibrahim Zadran. Reserves: AM Ghazanfar, Ijaz Ahmadzai and Zia Ur Rahman Sharifi

பொலிசாரிடம் வேலன் சுவாமிகளின் ஆபத்தான திக்.. திக்.. நிமிடங்கள் - முதன் முறையாக அம்பலமாகும் உண்மைகள்!

3 months 1 week ago
அடுத்தவர் நிலத்தை அடாத்தாக அபகரித்து அனுமதியின்றி விகாரை கட்டுவது, அந்த மக்களை சீண்டுவது மதத்தொண்டு. அபகரித்தவர்களிடம் காணியை திருப்பி கேட்டால், அதற்கு துணை நின்றால் அது அரசியல், இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் கெடுகிறது. என்ன மாதிரியான தத்துவமப்பா!

உதவி தேவை: இந்தியக் கடற்படையால் குருநகர் "துறைமுகம்" தாக்கப்பட்டதா?

3 months 1 week ago
எங்கள் கிராமமே பயங்கரத்தில் உறைந்திருந்த காலமது, இந்திய அதனுடன் ஒட்டியிருந்த குழுக்களாலும் எமது உறவினர், குடும்ப அங்கத்தினர், நண்பர்கள் என பலரை காரணமின்றி பறிகொடுத்தோம். ஒட்டுக்குழுக்கள் ஓணான் குழுக்களால் கைது செய்யப்பட்ட குடும்ப உறுப்பினர்களை விடுவிக்க போராட வேண்டியிருந்தது, சமயத்தில் இடம்பெயர்ந்து உறவினர் வீடுகளிலும் தங்க நேரிட்டது, அதனால் மற்றைய இடங்களில் நடந்த பயங்கரங்கள், தாக்குதல்களில் கவனம் செலுத்த முடியாமற் போய்விட்டது.

வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளும் இந்தியாவும் — வீரகத்தி தனபாலசிங்கம் — 

3 months 1 week ago
இது ஒரு இரு வேறுபட்ட காலகட்டங்களையும் கட்டுரையாளர் ஒரே நோக்கில் பார்க்கும் நிலை. போராட்ட காலகட்டம் இரு காலகட்டத்தினையும் தற்போதய காலகட்டம் இன்னொரு புதிய காலகட்டத்திலும் உள்ளது. போராட்ட காலகட்ட ஆரம்பம் பனிபோர் காலம் (இரு துருவ உலக ஒழுங்கு கொண்ட காலகட்டம்). போராட்ட இறுதி காலகட்டம் ஒரு துருவ அமெரிக்க எதேச்சாதிகார உலக ஒழுங்கு கொண்ட காலகட்டம் (இந்த காலகட்டத்தில் அனைத்து தரப்பும் ஒரே நேர்கோட்டில் இலங்கையிற்கு உதவி செய்த காலகட்டம்). தற்போதய கால காட்டம் பல துருவ உலக் ஒழுங்கின் ஆரம்ப காலகட்டம். உலக ஒழுங்கு என்பது ஒரு சக்தியாக உலக வெளிவிவகாரங்களில் ஆதிக்க சக்தியாக நிலவுகிறது, இறந்த கால கட்ட கொள்கை விளைவுகளை வைத்து நிகழ்கால கட்ட முடிவு எடுப்பது தவறாக இருக்கலாம். இந்திய வெளிவிவகார கொள்கையின் தொடர்ச்சியான தோல்விகள் தற்போதய காலகட்ட நகர்வுகளில் இந்திய வெளியுறவுக்கொள்கையின் அகலமான இடைவெளியின் வெளிப்பாடாக இருக்கிறது. சீன கொள்கைகள் அடிப்படை பொருளாதார அடிப்படை மட்டுமே அதன் வழங்கல்களை காப்பதற்காக முத்து மாலை திட்டத்தில் அதன் வழங்கல் பாதையினை மையமாக வைத்து இலாங்கை உள்ளடங்கலாக அதன் பிரசன்னத்தினை உறுதிப்படுத்துகிறது. கம்பாந்தோட்டை துறைமுகத்தினை ஒரு நீண்ட குத்தகைக்கு எடுத்ததன் மூலம் இலங்கையில் சீனா தனது இருப்பை ஏற்கனவே உறுதிப்படுத்திவிட்டது, சீனா ஒரே வழித்தடத்துடனான வழங்கல் பாதுகாப்பினை விரும்பவில்லை மாறாக பல வழித்தடங்கல் கொண்ட வழங்கல் பாதுகாப்பு பொறிமுறையினை பின்பற்றுகிறது. 2013 பாகிஸ்தானில் ஆரம்பிக்கப்பட்ட CPEC சீனாவிற்கு மத்திய கிழக்கிற்கான தரை வழி வழங்கல் பாதையினை திறந்துள்ளது, அது இலங்கையின் முக்கியத்துவத்தினை இப்பிராந்தியத்தில் பெருமளவில் குறைத்துள்ளது. அமெரிக்க பாகிஸ்தான் உறவுகள் மேம்படுதலின் பின்னணியில் இந்த விடயம் இருக்க கூடும் அதே நேரத்தில் அமெரிக்க இலங்கை உறவின் பின்னணியில் சீன வழங்கல் பாதை தாக்கதினை செலுத்தலாம் (இரஸ்சியாவுடனான அமெரிக்க உறவிற்கும் இதே காரணம் பொருந்தும்). சீனாவிற்கு ஒரு பலச்சமனிலையாக அமெரிக்க கருத வேண்டிய இந்தியாவுடன் ஒரு பல பிரயோகத்தில் அது ஒரு எல்லை ரீதியாகவும் (வட கிழக்கு இந்தியா), ஆட்சி மாற்ற (ஜோர்ஜ் சோரோஸின் 1 பில்லியன் முதலீடு) ரீதியாகவும். தற்போது இலங்கை இந்தியாவிடையேயான உறவு நிலை என்பது இலங்கையில் ஆதிக்கம் செலுத்து தரப்புகளான சீனா மற்றும் அமெரிக்காவுடனான கையறு நிலை, இதில் இலங்கையின் தயவிலேயே இந்தியா இருக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது.

உதவி தேவை: இந்தியக் கடற்படையால் குருநகர் "துறைமுகம்" தாக்கப்பட்டதா?

3 months 1 week ago
இதைத்தான். நானும் சொல்கிறேன். 1984. வரை. அங்கு. இருந்தேன். அச்சமயம். தாக்கப்படவில்லை. அதன். பின்னும். தாக்கப்பட்டதாக. கேள்விப்படவில்லை. ஆனால். புலிகள். தாக்கியதாக. வாசித்த. நாபகமுண்டு. அது. இந்தியன் ஆமிக்காலமா. அல்லதுஇலங்கை. இராணுவத்துடான. என்பது. தெரியாது.

தையிட்டியில் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படவுள்ள காணிகள்!

3 months 1 week ago
தனியார் காணிகளில் அடாத்தாக இருப்பவர்களை அகற்ற அரசியல் செய்யும் நிலையில் இலங்கையில் நீதித்துறை உள்ள கொடுமை.☹️
Checked
Sun, 04/12/2026 - 19:48
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed