3 months 1 week ago
'தித்வா' சூறாவளி பேரனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 2.3 மில்லியன் மக்களில் 522,000 சிறுவர்களும் 263,000 முதியோர்களும் 21,200 கர்ப்பிணித்தாய்மார்களும் ஆவர் Published By: Vishnu 26 Dec, 2025 | 05:17 AM (நா.தனுஜா) 'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 2.3 மில்லியன் மக்களில் 522,000 சிறுவர்களும் 263,000 முதியோர்களும் 21,200 கர்ப்பிணித்தாய்மார்களும் ஆவர். அதுமாத்திரமன்றி இவ்வனர்த்தத்தினால் அதிக போசணை தேவைப்படும் நலிவுற்ற நிலையிலுள்ள ஐந்து வயதுக்குக் குறைந்த 281,830 சிறுவர்களும் 19,021 கர்ப்பணித்தாய்மாரும் 96,637 பாலூட்டும் தாய்மாரும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கிப் பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பேரனர்த்தத்தினால் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் இலங்கை அனர்த்த முகாமைத்துவ ஆசிய, பசுபிக் கூட்டிணைவு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான முகவரகம், ஆசிய அனர்த்த முகாமைத்துவ தயார்நிலை நிலையம் ஆகிய 3 அமைப்புக்கள் இணைந்து மேற்கொண்ட மதிப்பீட்டில் கண்டறியப்பட்ட விடயங்கள் அடங்கிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு: பாதிக்கப்பட்டோர் அவ்வறிக்கையிலுள்ள தரவுகளின் பிரகாரம் 'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தமே கடந்த இரு தசாப்த காலங்களில் இலங்கையில் பதிவான மிகமோசமான மனிதாபிமான நெருக்கடியாகும். இவ்வனர்த்தம் காரணமாக நாட்டின் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 522,000 சிறுவர்கள், 263,000 முதியோர்கள் மற்றும் 21,200 கர்ப்பிணித்தாய்மார் உள்ளடங்கலாக சுமார் 2.3 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகள் அதேபோன்று இப்பேரனர்த்தத்தினால் மேல்மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களும் வடக்கு மாகாணத்தில் மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களும் மத்திய மலைநாட்டில் கண்டி, நுவரெலியா மாவட்டங்களும் மிகமோசமானப் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. உட்கட்டமைப்பு சேதம் அதேவேளை 16,000 கிலோமீற்றருக்கு மேற்பட்ட வீதிகள், 278 கிலோமீற்றருக்கு மேற்பட்ட புகையிரதப்பாதைகள் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் சேதமடைந்திருப்பதுடன், அதன்விளைவாக மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு கண்டி, கேகாலை, புத்தளம், கம்பஹா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையான வீடுகள் முழுமையாகவும், பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. வீடுகள் சேதமடைந்ததன் காரணமாக பெரும் எண்ணிக்கையானோர் இடம்பெயர்ந்து தற்காலிக பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ளனர். அங்கும் தனியுரிமை, இருபாலாருக்கும் அவசியமான வசதிகள், சிறுவர்நேய சூழல் உள்ளிட்ட பாதுகாப்புசார் கரிசனைகள் நிலவுகின்ற அதேவேளை, மீண்டும் வீடுகளுக்குத் திரும்பியவர்கள், சேதமடைந்த வீடுகளை மீளப்புனரமைக்கவேண்டிய நெருக்கடிக்கு நிலைக்கு முகங்கொடுத்துள்ளனர். கல்வி 1339 பாடசாலைகளும், 2720 முன்பள்ளிகளும் சேதமடைந்திருப்பதன் விளைவாக நாடளாவிய ரீதியில் சுமார் 458,600 பாடசாலை மாணவர்கள் மற்றும் 68,000 முன்பள்ளி மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளன. உணவுப்பாதுகாப்பு பேரனர்த்தத்தினால் விவசாயம், மீன்பிடி மற்றும் ஏனைய வாழ்வாதாரத்துறைகள் சீர்குலைவடைந்திருக்கின்றன. அத்தோடு வாழ்வாதார தொழிலுக்கு அவசியமான உபகரணங்கள் சேதமடைந்தமை, தற்காலிக இடப்பெயர்வு மற்றும் சந்தை அடைவில் பாதிப்பு போன்ற காரணங்களால் 39 சதவீதமான குடும்பங்களுக்கு நாளாந்தம் போதியளவு உணவு கிடைக்கப்பெறவில்லை என மதிப்பிடப்பட்டுள்ளது. பயிர்ச்செய்கை நிலங்கள் சேதம் மற்றும் மீன்பிடித்துறை பாதிப்பு போன்ற காரணங்களால் பெருந்தொகை வருமான இழப்பு ஏற்பட்டிருப்பதுடன், அதனை முறையாகக் கையாள்வதற்கு உடனடி உணவு மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்படவேண்டும். போசணை மட்டம் அனர்த்தத்தின் விளைவாக ஐந்து வயதுக்குக் குறைந்த 281,830 சிறுவர்கள், 19,021 கர்ப்பணித்தாய்மார், 96,637 பாலூட்டும் தாய்மார் உள்ளடங்கலாக அதிக போசணை தேவைப்படும் நலிவுற்ற நிலையிலுள்ள தரப்பினர் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக புத்தளம், நுவரெலியா, கண்டி, கொழும்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இளம் சிறுவர்களின் எண்ணிக்கையும், அவர்கள் மந்தபோசணைக்கு முகங்கொடுக்கக்கூடிய வாய்ப்பும் உயர்வாகக் காணப்படுகின்றது. எனவே ஐந்து வயதுக்குக் குறைந்த சிறுவர்கள், கர்ப்பிணித்தாய்மார் மற்றும் பாலூட்டும் தாய்மாரை இலக்காகக்கொண்ட போசணைசார் உதவி வழங்கல் செயற்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும். https://www.virakesari.lk/article/234431
3 months 1 week ago
நைஜீரியாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதல் - ஐஎஸ் இலக்குகள் குறி வைக்கப்பட்டதாக டிரம்ப் அறிவிப்பு பட மூலாதாரம்,US Department of Defense படக்குறிப்பு,அமெரிக்க பாதுகாப்புத் துறை வெளியிட்ட காணொளியில், ஒரு ராணுவக் கப்பலில் இருந்து ஏவுகணை ஏவப்படுவதை காண முடிகிறது. கட்டுரை தகவல் ஜாரோஸ்லாவ் லுகிவ் 26 டிசம்பர் 2025, 01:58 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வடமேற்கு நைஜீரியாவில் உள்ள இஸ்லாமிக் ஸ்டேட் (ஐஎஸ்) குழுவிற்கு எதிராக அமெரிக்கா 'சக்திவாய்ந்த தாக்குதலை' நடத்தியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட அவர், ஐஎஸ் குழுவை 'பயங்கரவாதக் கழிவுகள்' என்று விவரித்தார், 'முக்கியமாக அவர்கள் அப்பாவி கிறிஸ்தவர்களைக் குறிவைத்து கொடூரமாகக் கொல்வதாகவும்' குற்றம் சாட்டினார். அமெரிக்க ராணுவம் "பல கச்சிதமான தாக்குதல்களை நடத்தியதாக" டிரம்ப் கூறினார், ஆனால் கூடுதல் விவரங்கள் எதையும் அவர் வழங்கவில்லை. இதற்கிடையில், அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத், "நைஜீரிய அரசாங்கத்தின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்கு நன்றி. மெர்ரி கிறிஸ்மஸ்!" என்று கூறியுள்ளார். அதே சமயம், யூஎஸ்-ஆப்ரிக்கா கமாண்ட் (Africom), இந்தத் தாக்குதல் வியாழக்கிழமை (டிசம்பர் 25) அன்று சொகோட்டோ மாநிலத்தில் நைஜீரியாவுடன் இணைந்து நடத்தப்பட்டதாக அறிவித்தது. நைஜீரிய வெளியுறவு அமைச்சர் யூசுப் மைதாமா துகர் பிபிசியிடம், "இது பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கை" என்றும், "இதற்கு ஒரு குறிப்பிட்ட மதத்துடன் எந்த தொடர்பும் இல்லை" என்றும் கூறினார். பட மூலாதாரம்,AFP via Getty Images நைஜீரிய கிறிஸ்தவர்கள் குறிவைக்கப்படுகிறார்களா? டிரம்ப் வியாழக்கிழமை இரவு (டிசம்பர் 25) வெளியிட்ட தனது பதிவில், "எனது தலைமையிலான அமெரிக்கா, இஸ்லாமிய பயங்கரவாதம் செழிக்க அனுமதிக்காது" என்று கூறினார். நவம்பரில் விடுத்த எச்சரிக்கையில், எந்தக் கொலைகளைக் குறிப்பிடுகிறார் என்பதை டிரம்ப் கூறவில்லை. ஆனால் நைஜீரிய கிறிஸ்தவர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடப்பதாகச் சில அமெரிக்க வலதுசாரி வட்டாரங்களில் கடந்த சில மாதங்களாகத் தகவல்கள் பரவி வருகின்றன. வன்முறையைக் கண்காணிக்கும் குழுக்கள், நைஜீரியாவில் முஸ்லிம்களை விட கிறிஸ்தவர்கள் அதிகமாகக் கொல்லப்படுவதற்கான ஆதாரங்கள் இல்லை என்று கூறுகின்றன. நைஜீரியாவில் இந்த இரு மதங்களைப் பின்பற்றுபவர்களும் ஏறக்குறைய சமமான எண்ணிக்கையில் உள்ளனர். நைஜீரிய அதிபர் போலா டினுபுவின் ஆலோசகர் ஒருவர் அப்போது பிபிசியிடம் பேசுகையில், "ஜிஹாதி குழுக்களுக்கு எதிரான எந்தவொரு ராணுவ நடவடிக்கையும் கூட்டாக மேற்கொள்ளப்பட வேண்டும்" என்று கூறினார். "இஸ்லாமியவாத கிளர்ச்சியாளர்களைக் கையாள்வதில் அமெரிக்காவின் உதவியை நைஜீரியா வரவேற்கும்" என்று டேனியல் பவாலா கூறினார், அதேசமயம் "நைஜீரியா 'இறையாண்மை' கொண்ட ஒரு நாடு" என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் ஜிஹாதிகள் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் குறிவைக்கவில்லை என்றும், அவர்கள் அனைத்து மதங்களையும் அல்லது எந்த மதத்தையும் சாராத மக்களையும் கொன்றுள்ளதாகவும் அவர் கூறினார். நாட்டில் மத சகிப்புத்தன்மை இருப்பதாக அதிபர் டினுபு வலியுறுத்தியுள்ளார். "பாதுகாப்பு தொடர்பான சவால்கள் மதங்கள் மற்றும் பிராந்தியங்களைக் கடந்து மக்களைப் பாதிப்பதாக" அவர் கூறினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் முன்னதாக, "நைஜீரியாவில் கிறிஸ்தவ மக்களின் 'இருப்புக்கே ஆபத்து' இருப்பதாகக்" கூறிய டிரம்ப், நைஜீரியாவை 'சிறப்பு கவனம் அளிக்கப்பட வேண்டிய கவலைக்குரிய நாடு' என்று அறிவித்தார். எந்த ஆதாரமும் வழங்காமல், "ஆயிரக்கணக்கானோர் அங்கு கொல்லப்பட்டதாகவும்" அவர் கூறினார். இது அமெரிக்க வெளியுறவுத் துறையால் பயன்படுத்தப்படும் ஒரு வகைப்படுத்தல் முறை. 'மத சுதந்திரத்தை கடுமையாக மீறும்' நாடுகளுக்கு எதிராகத் தடைகளை விதிக்க இது வழிவகை செய்கிறது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அனைத்து மதச் சமூகங்களையும் பாதுகாக்க அமெரிக்கா மற்றும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயல்படத் தனது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக டினுபு கூறினார். நைஜீரியாவில் தொடரும் மோதல்கள் போகோ ஹராம் மற்றும் 'இஸ்லாமிக் ஸ்டேட் மேற்கு ஆப்பிரிக்க மாகாணம்' போன்ற குழுக்கள் வடகிழக்கு நைஜீரியாவில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அழிவை ஏற்படுத்தி, ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றுள்ளன - இருப்பினும் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் என்று உலகம் முழுவதும் நடைபெறும் அரசியல் வன்முறைகளை ஆய்வு செய்யும் குழுவான அக்லெட் (Acled) தெரிவிக்கிறது. மத்திய நைஜீரியாவில், நீர் மற்றும் மேய்ச்சல் நிலங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக முஸ்லிம் மேய்ப்பர்களுக்கும், பெரும்பாலும் கிறிஸ்தவர்களாக இருக்கும் விவசாயக் குழுக்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுகின்றன. பழிக்குப் பழி வாங்கும் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர் - ஆனால் இரு தரப்பினரும் குற்றங்களைச் செய்துள்ளனர். 'கிறிஸ்தவர்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை' என்று மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. கடந்த வாரம், சிரியாவில் ஐஎஸ் குழுவுக்கு எதிராக அமெரிக்கா 'பெரிய அளவிலான தாக்குதலை' நடத்தியதாகக் கூறியிருந்தது. அமெரிக்க மத்திய கட்டளையகம் (Centcom), "போர் விமானங்கள், தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் பீரங்கிகள் 'மத்திய சிரியா முழுவதும் பல இடங்களில் 70-க்கும் மேற்பட்ட இலக்குகளைத்' தாக்கின" என்று தெரிவித்தது. இதில் ஜோர்டானின் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpvdgjn98n7o
3 months 1 week ago
தையிட்டி திஸ்ஸ விகாரை போலியானது - வட இலங்கையின் சங்க நாயக்க தேரர் Published By: Vishnu 26 Dec, 2025 | 01:18 AM ‘ராஜமகா விகாரை’ என பெயர்ப்பலகைகளை காட்சிப்படுத்தி, இராணுவத்தின் பங்களிப்புடன் காங்கேசன்துறை தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரை போலியானது என வடக்கின் பிரதம சங்க நாயக்க தேரர் தெரிவித்துள்ளார். விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ள காணியின் உண்மையான உரிமையாளர்கள் அப்பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களே என்பதை ஏற்றுக்கொண்ட வட மாகாண பிரதம சங்கநாயக்க தேரர், அந்த உரிமையை உறுதிப்படுத்துவதற்கு ஜனாதிபதி தலையிடாவிட்டால், இனங்களுக்கு இடையில் மோதல்கள் வெடிக்கும் அபாயம் குறித்து எச்சரித்துள்ளார். தமிழ் மக்களுக்கு உறுதிப்பத்திரம் உள்ள காணிகளை யுத்தத்தின் மூலம் கையகப்படுத்தி நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரை, உண்மையான திஸ்ஸ விகாரை அல்ல என நாகதீப புராண ரஜமகா விகாராதிபதியும் வட இலங்கையின் பிரதம சங்கநாயக்க தேரருமான நவதகல பதுமகித்தி திஸ்ஸ தேரர் கூறுகிறார். “உண்மையான திஸ்ஸ விகாரை தற்போது உள்ள போலியான திஸ்ஸ விகாரைக்கு அருகிலேயே அமைந்துள்ளது. அந்த திஸ்ஸ விகாரை நாகதீப விகாரைக்குச் சொந்தமானது. அதன் உரிமை நாகதீப விகாரையிடமே உள்ளது. ஆனால், இப்போது திஸ்ஸ விகாரை என அழைக்கப்படும் பகுதி காங்கேசன்துறை தையிட்டி பகுதியில் வசிக்கும் குடிமக்களுக்குச் சொந்தமானது. யுத்த காலத்தில் குடிமக்களின் காணிகளைக் கையகப்படுத்தி, சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்ட ஒரு இடத்தையே திஸ்ஸ விகாரை என்ற பெயரில் போலியான திஸ்ஸ விகாரையாக ஆரம்பித்துள்ளனர்.” ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வரும் தன்னைப்போன்று வேறு எந்த பௌத்தரும் இவ்விடயம் குறித்து அறிந்திருக்க மாட்டார்கள் என பதுமகித்தி திஸ்ஸ நாயக்க தேரர் ஒரு காணொளி உரையின் மூலம் தெரிவித்துள்ளார். இராணுவப் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம், காங்கேசன்துறை திஸ்ஸ ராஜமகா விகாரையின் விகாராதிபதி சத்தர்மகீர்த்தி சங்கைக்குரிய கிந்தோட்டை நந்தாராம தேரருக்கு, அமரபுர ஸ்ரீ கல்யாணவம்ச நிகாயவின் வட இலங்கையின் உப பிரதம சங்கநாயக்க பதவிக்கான ‘ஸ்ரீ சன்னஸ் பத்ர’ மற்றும் ‘விஜினி பத’ ஆகியவை புத்தசாசன, சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் தலைமையில் கொழும்பில் வழங்கி வைக்கப்பட்டதன் பின்னர், அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “53 வருடங்களாக நான் இந்த நாகதீப விகாரையில் இப்பிரதேசத்தின் தமிழ் மக்களுடனேயே வாழ்ந்து வருகிறேன். இந்தப் பிரதேசத்தில் உள்ள எமது சகோதர மக்கள் அனைவரும் நாகதீப விகாரையின் தேரர் யார் என்பதை அறிவார்கள். நாம் இதுவரை காலமும் ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் வாழ்ந்து வந்தோம்.” தற்போது வடபுலத்துக்கு வெளியே இருந்து வரும் தேரர்கள் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து விகாரைகளை நிர்மாணித்து வருவதை ஏற்றுக்கொண்ட வட இலங்கையின் பிரதம சங்கநாயக்க நவதகல பதுமகித்தி திஸ்ஸ நாயக்க தேரர், அந்த ‘செய்யத்தகாத வேலை’ தொடர்பில் பதற்றமடைய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். “தற்போது உண்மையில் தேரர்கள் வந்து தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து விகாரைகளை நிர்மாணித்து வருகின்றனர். எனவே, அதனை உண்மையில் செய்யத்தகாத ஒரு வேலையாகவே நாம் பார்க்கிறோம். அதனால் மக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம். இந்த இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் நிதானமாகச் செயற்பட வேண்டிய தேவை உள்ளது. எனவே, அரசாங்கம் இதில் தலையிட்டுச் செயற்பட்டால் நல்லது என்பதுதான் எனது கருத்தாகும்.” உண்மையைக் கண்டறிந்து, திஸ்ஸ விகாரையின் காணிப் பிரச்சினையை சுமூகமான முறையில் கலந்துரையாடல் மூலம் தீர்த்துக் கொள்வது தொடர்பாக இதுவரையில் எந்தவொரு தேரரோ அல்லது அரசாங்கமோ நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் நாகதீப புராண ராஜமகா விகாராதிபதி நவதகல பதுமகித்தி திஸ்ஸ நாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார். “அதேபோன்றுதான், நாகதீப விகாரையின் தேரராகிய என்னுடன் இது தொடர்பாகக் கலந்துரையாடினால், ஒரு முடிவுக்கு வந்து இது ஒரு போலியான இடமா? அல்லது உண்மையான இடமா என்பதை எம்மால் நிரூபிக்க முடியும். அரசாங்கமோ அல்லது எமது தேரர்களோ ஒருபோதும் அவ்வாறு என்னுடன் தொடர்பு கொண்டு செயற்படவில்லை. எனவே, அனைவரும் ஒன்றிணைந்து இதற்கு ஒரு தீர்வை காண்பதே எனது அடிப்படை நோக்கமாக உள்ளது. அப்போதுதான் எமது மக்களுடனும், இங்கு வாழும் சகோதர தமிழ் மக்களுடனும் எம்மால் இலகுவாக வாழ முடியும்.” திஸ்ஸ விகாரையின் காணிப் பிரச்சினையை துரிதமாகத் தீர்க்காவிட்டால், அது அப்பிரதேசத்திலுள்ள ஏனைய பௌத்த விகாரைகளிலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் தேரர் எச்சரிக்கிறார். “இப்படியே போனால் இந்த விகாரையை முன்னிலைப்படுத்தி இப்பிரதேசத்தில் உள்ள ஏனைய தேரர்களுக்கும், அதேபோல் இப்பகுதியில் உள்ள விகாரைகளுக்கும் ஒருபோதும் நிம்மதியாக இருக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, இந்தப் பிரச்சினையை நாம் சுமூகமான முறையில் தீர்ப்பதற்கு அரசாங்கத் தரப்பினரையும்— எமது ஜனாதிபதி அவர்களிடம் நான் வேண்டிக்கொள்வது, ஜனாதிபதி அவர்கள் இதில் முன்னின்று நாகதீப விகாரையின் தேரரையும், அதேபோன்று தையிட்டி பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களையும், காணி உரிமையாளர்களையும் அவர்களது உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன் அழைத்து வரச் செய்ய வேண்டும். அவர்களால் அதனை நிரூபிக்க முடியும், எனக்கும் உண்மையான திஸ்ஸ விகாரை எங்குள்ளது என்பதை நிரூபிக்க முடியும்.” இந்தக் காணிப் பிரச்சினை எதிர்காலத்தில் ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுப்பதற்கு முன்னதாக பேச்சுவார்த்தை மூலம் இதனைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேரர் இதன்போது மீண்டும் மீண்டும் ஜனாதிபதிக்கு அறிவுரை வழங்கியிருந்தார். “குறிப்பாக நான் ஜனாதிபதியிடம் மீண்டும் வேண்டிக்கொள்வது என்னவென்றால், இது குறித்து கலந்துரையாடித் தீர்வு காணுங்கள். இல்லையென்றால் எதிர்காலத்தில் இதைவிடப் பெரிய பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.” திஸ்ஸ விகாரையில் தமிழ் மக்கள் உரிமை கோரும் காணியை அவர்களுக்கு விடுவித்துக் கொடுப்பதே விகாராதிபதிக்கு ஒரு உண்மையான கௌரவமாக அமையுமென, திஸ்ஸ விகாரையின் விகாராதிபதிக்கு அமரபுர ஸ்ரீ கல்யாணவம்ச நிகாயவின் வட இலங்கையின் உப பிரதம சங்கநாயக்க பதவிக்கான பட்டயப்பத்திரம் மற்றும் கைவிசிறி ஆகியவற்றை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட சங்கைக்குரிய பலபிட்டியே சிறி சீவலி தேரர் பௌத்த அலுவல்கள் அமைச்சரும் பங்கேற்ற அந்த நிகழ்வில் (2025 டிசம்பர் 21) உரையாற்றுகையில் வலியுறுத்தியுள்ளார். “மீண்டும் மாதத்துக்கொரு தடவை அதுபோன்ற காணொளிகள் வெளிவராத வகையில், திஸ்ஸ விகாரைப் பிரச்சினையை— எமது அமைச்சரும் இங்கே இருக்கிறார்— எம்மால் தீர்க்க முடிந்தால் மிகவும் நல்லது. எந்தவொரு பிரச்சினைக்கும் இரண்டு பக்கங்கள் உள்ளன. எனவே, எம்மால் அந்த இரு தரப்பினருடனும் பேசி, எமது விகாரைக்குத் தேவையான போதுமான காணியை வைத்துக்கொண்டு ஏனையவற்றை விட்டுக்கொடுக்கலாம். தானம் வழங்கல் என்பது எமது பௌத்த தத்துவத்தில் உள்ள ஒரு விடயமாகும். அவ்வாறு எம்மால் விட்டுக்கொடுக்கக்கூடிய பகுதி ஏதேனும் இருந்தால், அதைக் கோரும் அந்தத் தமிழ் மக்களுக்கு ஒப்படைத்துவிட்டு, இந்தப் பிரச்சினையை எம்மால் தீர்க்க முடிந்தால், தேரர் நாயக்க பதவியை ஏற்ற நாளில் அது ஒரு பெரிய கௌரவமாக அமையும்.” திஸ்ஸ ராஜமகா விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி 2023 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் விகாரைக்கு அருகில் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் மக்கள், சுமார் 14 தமிழ் குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார் 100 பரப்பு (6.2 ஏக்கர்) நிலத்தை இராணுவம் பலவந்தமாகக் கையகப்படுத்தி திஸ்ஸ விகாரையை நிர்மாணித்துள்ளதாகக் குற்றம் சுமத்துகின்றனர். “கி.மு. 3 ஆம் நூற்றாண்டு வரையிலான வரலாற்றைக் கொண்ட இந்த விகாரை, தேவநம்பிய திஸ்ஸ மன்னனால் நிர்மாணிக்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்பு உள்ளது” என இராணுவம் தெரிவிக்கிறது. “காங்கேசன்துறை வரலாற்றுச் சிறப்புமிக்க திஸ்ஸ விகாரையின் புனரமைக்கப்பட்ட விகாரையின் தூபியை வைக்கும் புண்ணிய உற்சவம்” 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி நடைபெற்றதாக, 2023 ஏப்ரல் 29 ஆம் திகதி இலங்கை இராணுவம் தனது உத்தியோகபூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/234424
3 months 1 week ago
ஆல்கஹால் இல்லாத பியர், வைன் போன்ற பானங்கள் உடலுக்கு நல்லதா? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் கேடி ஜோன்ஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் சமீப ஆண்டுகளில் மது அல்லாத பானங்கள் மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. வைன், ஸ்பிரிட்ஸ், பியர் மற்றும் சிடர் எனப் பல வகையான பானங்கள் சந்தையில் உள்ளன. யூகவ் நடத்திய ஆய்வில் பிரிட்டனில் மது அருந்துபவர்களில் 38% பேர் குறைவான மது அளவு அல்லது மது இல்லாத பானங்களை விரும்புவதாக தெரியவந்துள்ளது. 2022-இல் இது 29% ஆக இருந்தது. மது அல்லாத பானங்கள் பிரபலமடைவது பலருக்கும் அதன் சுவை மீதான ஆர்வத்தினால் தானே தவிர மது அருந்த வேண்டும் என்கிற ஆசையால் அல்ல. அதில் பலரும் மது பானங்களை விட மது அல்லாத பானங்கள் ஆரோக்கியமானது எனக் கருதுவதாலும் வாங்குகின்றனர். மின்டெல் மேற்கோண்ட ஆய்வில் மது நுகர்வோரில் 15 முதல் 20% பேர் மது அல்லாத பானங்களை வாங்குவதில் கூடுதல் சுகாதாரப் பலன்கள் இருப்பதாக கருதுகின்றனர். மது அல்லாத பானங்கள் அதிகாலை தலைவலியிலிருந்து உங்களை காப்பதோடு கூடுதல் சுகாதார நன்மைகளுடன் வருகிறதா என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது. மது அல்லாத பானங்கள் பிரபலமடைவதற்கான காரணம் என்ன? அல்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் உணவியல் துறையில் மூத்த விரிவுரையாளரான மருத்துவர் காம்ஹியான் லோக், மது இல்லாமல் இரவைக் கழிப்பது தொடர்பான அணுகுமுறையில் கலாச்சார மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக நம்புகிறார். "மதுபான நுகர்வு மற்றும் அதன் சாத்தியமான விளைவுகள் பற்றிய அதிக தகவல்கள் கிடைப்பதால் மக்கள் மது அல்லாத பானங்களை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டனர். இதனால் எழுந்துள்ள தேவைகளை மதுபான நிறுவனங்கள் மூலதனமாக்குகின்றன," என்றார். எப்போதுமே சமூகத்தில் பழக விரும்புபவர்களுக்கு ஆல்கஹால் இல்லாத பானத்திற்கான தேவை இருந்ததாகக் கூறுகிறார் உணவியல் நிபுணரும் பிரிட்டிஷ் டயடிக் அமைப்பின் செய்தித் தொடர்பாளருமான டுவெய்ன் மெல்லோர். "முன்னர் அத்தகைய பானங்கள் சிறப்பானதாக இல்லை என்பது தான் பிரச்னையாக இருந்தது. ஆனால் மதுவிற்கு பின்பற்றப்படும் அதே குறைவான அழுத்தம் கொண்ட தயாரிக்கும் முறைகளால் தற்போது சிறந்த பியர் அல்லது வைன் தயாரிக்க முடியும்." என்று கூறுகிறார் டுவெய்ன். மது அல்லாத பானங்கள் தொடர்பாக முன்வைக்கப்படும் ஆரோக்கியம் தொடர்பான தகவல்கள் பற்றிய கட்டுக்கதைகளுக்கு வல்லுநர்கள் விளக்கம் அளிக்கின்றனர். மது அல்லாத பானங்களில் முற்றிலும் மது இருக்காதா? பட மூலாதாரம்,Getty Images "ஆல்கஹால் அல்லாத பானங்கள் என விளம்பரப்படுத்தப்படும் பானங்கள் அனைத்திலும் ஆல்கஹால் இல்லை என நாம் அனுமானிக்கக்கூடாது. ஏனெனில் அரசாங்கத்தின் பரிந்துரைகள் அவற்றை அனுமதிக்கின்றன," எனக் குறிப்பிடுகிறார் லோக். 'ஆல்கஹால் அல்லாத' பானம் எனக் குறிப்பிடப்படும் பானங்களில் 0.5% வரை ஆல்கஹால் இருக்கலாம் என ட்ரிங்க்அவேர் தெரிவிக்கிறது. அதே வேளையில் குறைந்த அளவில் ஆல்கஹால் கொண்ட பானங்களில் 1.2% வரை ஆல்கஹால் இருக்கலாம். மது அல்லாத பானங்களில் கலோரிகள் குறைவாக உள்ளனவா? "ஆல்கஹாலில் கலோரிகள் உள்ளன, எனவே மதுபானத்தோடு ஒப்பிடுகையில் மது அல்லாத பானங்களில் குறைந்த அளவிலே கலோரிகள் உள்ளன," என்கிறார் பிரிட்டிஷ் நியூட்ரிஷன் ஃபவுண்டேஷனின் ஊட்டச்சத்து விஞ்ஞானியான ப்ரட்ஜெட் பெனலெம். "ஆல்கஹாலில் ஒவ்வொரு கிராமில் ஏழு கலோரிக்கள்" இருப்பதாக மெல்லோர் குறிப்பிடுகிறார். எனினும் மது அல்லாத பானங்களில் கலோரிக்கள் இல்லாமல் இல்லை என்பதை நினைவில் கொள்வது முக்கியம் என்கிறார் பெனலெம். "அவற்றில் கலோரிக்கள் உள்ளன, அவை எந்த வகை பானம் என்பதைப் பொருத்து சர்க்கரை நிறைந்ததாகவும் உள்ளன. அந்த பானங்களை இனிப்பானதாக ஆக்க தேவையான அளவு சக்கரை அதில் இருக்கும்," என விளக்கினார். மது அல்லாத பானங்கள் கல்லீரலுக்கு நல்லதா? பட மூலாதாரம்,Getty Images "நீண்ட கால நோக்கில் அதிக அளவில் மது எடுத்துக் கொள்வது கல்லீரலை பாதிக்கும்," எனக் குறிப்பிடுகிறார் லோக். "இதிலிருந்து மதுவை நீக்கினால் அந்த தாக்கம் இருக்காது." என்றும் தெரிவித்தார். அதே வேளையில் சர்க்கரையின் அதிகப்படியான நுகர்வு மீது கவனம் செலுத்துகிறார் லோக். இது உணவு அல்லது பானங்கள், சிரப்களில் சேர்க்கப்படும் கூடுதல் சர்க்கரை, தேன், பழச்சாறு, காய்கறி சாறு மற்றும் ஸ்மூத்திகளில் உள்ள சர்க்கரைகளை உள்ளடக்கும். மது அல்லாத பானங்கள் மூலம் கூடுதல் அளவிலான சர்க்கரை நுகரப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக அவர் தெரிவித்தார். "அவற்றை கூடுதலாக எடுத்துக் கொண்டால் கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படலாம்." என்றார். மது அல்லாத பானங்கள் நமது பொது ஆரோக்கியத்திற்கு நல்லதா? ரெட் வைன் போன்ற ஆல்கஹால் குறைக்கப்பட்ட பானங்கள் இதய நோய் ஆபத்து போன்ற பிரச்னைகளை உருவாக்குவதற்கான சாத்தியங்களையும் நாம் பார்க்க வேண்டும் என்கிறார் லோக். சில மது அல்லாத பியர்களில் பி வைட்டமின்கள் இருக்கலாம் எனக் பெனலெம் கூறுகிறார். "பியர் போன்ற தயாரிப்புகளில் கவனத்தை ஈர்க்கக்கூடிய சில உள்ளீடுகள் இருக்கலாம்," என மெல்லோர் குறிப்பிடுகிறார். எனினும் ஆல்கஹால் அல்லாத பானங்கள் ஊட்டச்சத்துக்களின் முதன்மை ஆதாரமாக கருதப்படாது என்கிறார் பெனலெம். "உணவில் ஊட்டச்சத்து என நாம் பார்க்கிறபோது அவை ஆரோக்கியமான மற்றும் சமநிலைப்படுத்தப்பட்ட உணவு வகைகளைத் தான் குறிக்கும்." என்று அவர் தெரிவித்தார். அதிகப்படியான திரவம், சர்க்கரை மற்றும் அசிடிக் பானங்களால் பல் எனாமல்களில் ஏற்படும் ஆபத்துகளையும் மெல்லோர் சுட்டிக்காட்டுகிறார். சொந்தமாக தயாரிக்க முடியுமா? பட மூலாதாரம்,Getty Images சந்தைகளில் கிடைக்கும் மது அல்லாத பானங்கள் உங்களை கவரவில்லை என்றால் நீங்கள் சொந்தமாகவே ஒன்றை தயாரிக்கலாம். "மது பானங்களில் காட்டும் அக்கறை மற்றும் கவனத்தை மது அல்லாத பானங்களின் மீதும் காட்ட வேண்டும்," என்கிறார் காக்டெய்ல் நிபுணரான ப்ரிதேஷ் மோடி. "ஆப்பிள் சாறு, எலுமிச்சை மற்றும் இஞ்சி பியர் ஒரு சுவையான பானம் ஆகும்" என்கிறார் ப்ரிதேஷ். மேலும் அவர் கொம்புசா மற்றும் விர்ஜின் எஸ்ப்ரெஸோ மார்டினியைக் குறிப்பிடுகிறார். சைடர் வினிகர், ஆப்பிள் சாறு மற்றும் சோடாவை ஒரு மாற்றாகப் பயன்படுத்தலாம் என்றும் அவர் பரிந்துரைக்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz685wqv821o
3 months 1 week ago
சுனாமி ஆழிப்பேரலை நினைவுகூரல் இன்று நாடளாவிய ரீதியில் விசேட நிகழ்வுகளுக்கு ஏற்பாடு Published By: Vishnu 26 Dec, 2025 | 01:15 AM (இராஜதுரை ஹஷான்) சுனாமி பேரழிவு மற்றும் பிற பேரிடர்களில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில், காலை 9.25 மணி முதல் காலை 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட வேண்டும்.காலியில் உள்ள 'பேரலிய சுனாமி நினைவிடத்தில்' நடைபெறும். காலை 8.30 மணி முதல் காலை 10 மணி வரை இந்த நிகழ்வை 11 மணி வரை விசேட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவில், நாட்டில் 35,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5000 க்கும் மேற்பட்டோர் காணாமல் போனார்கள்.பல பில்லியன் கணக்கான மதிப்புள்ள சொத்துக்களும் அழிவடைந்தன. 2005 முதல், டிசம்பர் 26 ஒவ்வொரு ஆண்டும் 'தேசிய பாதுகாப்பு தினம்' என்று அறிவிக்கப்பட்டு, அன்றிலிருந்து நாட்டில் சுனாமி பேரழிவிலும் பல்வேறு பேரழிவுகளிலும் இறந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில், தேசிய பாதுகாப்பு தின நினைவு நாள் பொதுமக்களின் பங்களிப்புடன் அனுஸ்டிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, 'தேசிய பாதுகாப்பு' தின நிகழ்ச்சிக்காக, தித்வா சூறாவளி காரணமாக நாட்டில் நிலவும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, மாவட்ட அளவில் அனைத்து மத நிகழ்ச்சிகளையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்று டிசம்பர் 26 'தேசிய பாதுகாப்பு தினத்தின்' முக்கிய நினைவு நாள் காலியில் உள்ள 'பேரலிய சுனாமி நினைவிடத்தில்' நடைபெறும். காலை 8.30 மணி முதல் காலை 10 மணி வரை இந்த நிகழ்வை 11 மணி வரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 'தேசிய பாதுகாப்பு தினத்தை' முன்னிட்டு, சுனாமி பேரழிவு மற்றும் பிற பேரிடர்களில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில், தீவு முழுவதும் காலை 9.25 மணி முதல் காலை 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட வேண்டும். எனவே, தேசிய பாதுகாப்பு தினமான 2025 டிசம்பர் 26 ஆம் தேதி காலை 9.25 மணி முதல் காலை 9.27 மணி வரை, தீவு முழுவதும் சுனாமி பேரழிவு மற்றும் பல்வேறு பேரிடர்களில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துவதன் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணர்த்துமாறும், அன்றைய தினம் நடைபெறும் முக்கிய நினைவு விழா மற்றும் மாவட்ட செயலகங்களால் நடத்தப்படும். https://www.virakesari.lk/article/234423
3 months 1 week ago
ஆழிப்பேரலையின் நினைவலைகள்: 2004 சுனாமி தாக்கத்தை உணர்த்தும் புகைப்படத் தொகுப்பு பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சுனாமி காரணமாக மெரீனா கடற்கரையிலிருந்து பல மீட்டர் தூரத்திற்கு கடல்நீர் உட்புகுந்த காட்சி. ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 26 டிசம்பர் 2004 அன்று இந்தோனீசியாவின் சுமத்ரா தீவு அருகே ஆழ்கடலில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக எழுந்த பேரலைகள் தாய்லாந்து, இந்தோனீசியா, மலேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தின. 'சுனாமி' - 2004ஆம் ஆண்டிற்கு முன்பு தமிழக மக்களிடம் இது பிரபலமான வார்த்தை இல்லை. ஆனால், 2004ஆம் ஆண்டிற்கு பிறகு சுனாமி என்ற வார்த்தை தெரியாமல் காதில்பட்டாலும்கூட உள்ளூர ஏதோ ஒரு அச்சத்தை ஏற்படுத்தும், குறிப்பாக கடலோர பகுதிகளில் வசித்தவர்களுக்கும் வசிப்பவர்களுக்கும். சுனாமி தாக்கி இன்றோடு 21 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. தமிழ்நாடு மற்றும் பிற பகுதிகளில் சுனாமி தாக்கிய போதும், அதற்குப் பின்னர் ஏற்பட்ட சேதங்களையும் விளக்குகிறது இந்த புகைப்படத் தொகுப்பு. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,26 டிசம்பர் 2004, தாய்லாந்தில் சுனாமி அலைகள் கரையை நோக்கி வருவதைக் கண்டு வெளியேறும் சுற்றுலாப் பயணிகள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,தமிழக கடலோர பகுதிகளில் மீன்பிடிக்க உதவும் சிறிய படகுகள் முதல் கப்பல்கள் வரை அனைத்தும் கடுமையாக சேதமடைந்திருந்தன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,தமிழகத்தை பொறுத்தவரையில் சுனாமி காரணமாக நாகப்பட்டினம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பட மூலாதாரம்,MCT / Contributor படக்குறிப்பு,சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பெண்மணி பட மூலாதாரம்,PRAKASH SINGH / Stringer படக்குறிப்பு,2004 சுனாமியால் தங்கள் வீடுகளை இழந்து தவித்த அக்கரப்பட்டி மீனவர் குடியிருப்பைச் சேர்ந்த மக்கள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2004 சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கை பட மூலாதாரம்,Paula Bronstein / Staff படக்குறிப்பு,இலங்கையில் ஏற்பட்ட ஆழிப்பேரலையில் தனது மூன்று சகோதரர்களைப் பறிகொடுத்த 12 வயது பாத்திமா நுஸ்ரத் பட மூலாதாரம்,Paula Bronstein / Staff படக்குறிப்பு,26 டிசம்பர் 2004 இல் ஏற்பட்ட சுனாமியில் தனது வீட்டையும் குடும்பத்தையும் இழந்த இலங்கை பெண்மணி பட மூலாதாரம்,U.S. Navy / Handout படக்குறிப்பு,இந்தோனீசியாவில் சுனாமியில் சேதமடைந்த பகுதிகளை அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டரிலிருந்து பார்வையிட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் பட மூலாதாரம்,STR / Stringer படக்குறிப்பு,தங்கள் குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்ததால், வீட்டை விட்டு வெளியேறும் இந்தோனீசிய கிராம மக்கள். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஆண்டு தோறும் டிசம்பர் 26 ஆம் தேதி சுனாமியில் உயிரிழந்தோரை அவர்களுடைய உறவினர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjrjwlv2n4wo
3 months 1 week ago
தையிட்டியில் காணிகளை இழந்தவர்களுக்கு மாற்றுக்காணி அல்லது இழப்பீடு - அமைச்சர் சந்திரசேகரன் 26 Dec, 2025 | 10:41 AM தையிட்டி திஸ்ஸ விகாரையால் காணிகளை இழந்த பொது மக்களுக்கு மாற்றுக்காணிகளை பெற்றுக் கொடுப்பது அல்லது இழப்பீடுகளை பெற்றுக் கொடுப்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு என கடத்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். அவரை தொடர்புகொண்டு வினவியவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தையிட்டி திஸ்ஸ விகாரை தனியார் காணிகளில் அமைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் ஏற்கிறோம். ஆனால் குறித்த விகாரை எமது ஆட்சிக்காலத்தில் அமைக்கப்படவில்லை என்பதும் அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனால் அரசாங்கம் என்ற வகையில் குறித்த பிரச்சினையை நீடிக்காமல் முடிறுத்தவே எதிர்பார்க்கின்ற நிலையில் விகாரைக்காக காணிகளை இழந்த மக்களுக்கு உரிய மாற்றுக்காணிகளை வழங்குவது அல்லது தற்போதைய சூழ்நிலைக் கேற்ற அவர்களுக்கான இழப்பீடுகளை பெற்றுக் கொடுப்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு. இழப்பீடு அல்லது மாற்றுக்காணிகளை வழங்குவதற்கு கூட எத்தனை பேரிடம் ஆவணங்கள் சரியாக இருக்கிறது என்பது ஒருபுறம் இருக்க குறித்த பிரச்சனையை அரசியல் ரீதியாக மாற்றிக்கொண்டு செல்கிறார்கள். நாட்டின் மூவினங்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எமது அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் மதம் மற்றும் இனங்களுக்கு இடையில் மோதல்களை உருவாக்க முயற்சிக்கக் கூடாது. ஆகவே அரசாங்கம் திடமான ஒரு நிலைப்பாட்டில் இருக்கிறது. தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக காணிகளை இழந்த மக்களுக்கு இழப்பீடு அல்லது மாற்றுக்காணியே என்றார். https://www.virakesari.lk/article/234447
3 months 1 week ago
3 months 1 week ago
இதில் இணையமெங்கும் உள்ளவற்றை எடுத்து என்னால் முடிந்தளவு ஒரு முன்னோட்ட ஆய்வாக செய்துள்ளேன். ஆயினும் யாழ் பல்கலைக்கழகம் அல்லது மட்டு. பல்கலைக்கழகம் நித்திரையிலிருந்து எழுந்து எமது தீவிலுள்ள தமிழரின் கடற்கலங்கள் தொடர்பில் சிரத்தை எடுத்து ஆவணப்படுத்த வேண்டும். சரியான பெயர்கள், கலங்களின் காலம், கலங்களின் படிமங்கள் மற்றும் பாவிக்கப்பட்ட இடங்கள் என்பன சரியாக ஆவணப்படுத்தப்பட வேண்டும். "வரலாறு எனது வழிகாட்டி" என்பது தேசியத் தலைவரின் கூற்றாகும். அதற்கு இணங்கு நாம் எமது வரலாற்றை பாதுகாக்க வேண்டும். வரலாற்றை சரியாக ஆவணப்படுத்த தவறின் வரலாற்றை இழந்துவிடுவோம். ஆயுதவழிப் போர் முடிந்து இத்தனை ஆண்டுகளிற்குப் பிறகும் எமது தீவிலிருந்து கடற்கலங்கள் தொடர்பில் சரியான ஆய்வு வரலாறு வெளிவராமை கண்டிக்கத்தக்கதாகும். "எங்களின் தாயவள் சிந்திடும் நீரெல்லாம் தீயென மூழுமடா - வரும் சந்ததி இங்கினி தலைகுனியாமலே சரித்திரம் எழுதுமடா" இஃது முடிவுரை அல்ல... மேலும் தகவல் கிடைக்கும் போது இது நீட்டிக்கப்படும். அதுவரையில் உங்களிடமிருந்து விடைபெறுவது நன்னிச் சோழன். இடிகள் முழங்க, வெடிகள் முழங்க வருவேன் வருவேன் நானும்....
3 months 1 week ago
வள்ளம் தலைநகர் திருகோணமலை, தமிழீழம் படிமக்காலம்: ஆங்கிலேயர் காலம் "கோணமலையாள வேண்டும். - அந்தக் கோட்டை கொடியேற வேண்டும்."
3 months 1 week ago
வள்ளம் தலைநகர் திருகோணமலை, தமிழீழம் படிமக்காலம்: ஆங்கிலேயர் காலம் "திருமலை பகலினில் ஓரழகு இரவினி லேயிது பேரழகு அலைதரும் நீரழகு - இது தமிழரின் விடுதலைத் தலைநகரு!"
3 months 1 week ago
ஆஞ்செல்கை அ சங்கடம் மன்னார் வளைகுடா
3 months 1 week ago
கட்டுத்தோணி ஈழத்தீவு
3 months 1 week ago
பிளாவு திருகோணமலையில் பாவிக்கப்பட்ட பிளாவின் ஒரு விருத்தாகும்.
3 months 1 week ago
பிளாவு இது யாழில் பாவிக்கப்பட்ட பிளாவின் விருத்தாகும் (version). இவை தோணியின் கால்களாக (தொடுவை வள்ளம்) பாவிக்கப்பட்டதாக ஜேம்ஸ் இஃகோர்னெல் குறித்துள்ளார்.
3 months 1 week ago
பிளாவு சிங்களவருக்கும் தமிழருக்கும் பொதுவான கடற்கலம் இதுவாகும். தமிழர் பகுதிகளில் இதைக் கூடுதலாக மட்டு-அம்பாறையில் பாவிப்பவர்.
3 months 1 week ago
பட்டை மாரவில, புத்தளம் இதை சிங்களத்தில் மா-தெல் பருவா என்பர். இது சிங்களவருக்கும் தமிழருக்கும் பொதுவான கடற்கலமென்றாலும் இதை அதிகம் பாவிப்பது சிங்களவரே. காலி பேருவளையில் கிடைத்த மற்றொரு படிமம். இதில் இருப்பது சோனகர்கள்/ சிங்களவராவர். .
3 months 1 week ago
ஈழத்தீவில் பாவிக்கப்பட்ட வள்ளம் ஒன்று
3 months 1 week ago
வகை பெயர் தெரியவில்லை சிங்களவருக்கும் தமிழருக்கும் பொதுவான கடற்கலம் இதுவாகும். தனியாள் ஓட்டிச்செல்லும் ஒற்றை மரத்தண்டாலான கலம்.
3 months 1 week ago
வீர வணக்கங்கள்.
Checked
Wed, 04/08/2026 - 22:24
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed