1 week 5 days ago
🤣 நல்ல கருத்து.👍 மாற்றங்கள் விரும்பத்தக்கது. காலத்திற்கேற்ப மனிதர்கள் மாறவேண்டும். அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் உடை நாகரீகத்தில் மாற்றம் வேண்டும் என்பவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் இருந்து ஆரம்பிக்க தயாரா என்பதையும் தெரிவித்தால் நல்லது. அதாவது இன்றைய அரைகுறை உடையுடன்......
1 week 5 days ago
எனக்கு டெக்சஸ் போன ஜேசுதாஸ் பற்றி தெரியாது புலம்பெயர் வாழ்வை கொண்ட ஈழ தமிழர்கள் பற்றி அறிந்து கொண்டதை வைத்து சொல்வதானால் டெக்சஸ் ஜேசுதாசும் அமெரிக்காவில் தனது வீட்டவர்கள் விரும்பிய ஆடைகள் அணிந்தாலும் இந்தியாவில் உள்ள பெண்கள் சீலை கட்டி அடக்க ஒடுக்கமாக தான் வெளியே வரவேண்டும் என்று விரும்புபவராக இருப்பார்
1 week 5 days ago
அனுதாபம் எப்படி பெற வேண்டும் என்பதை இனவாத சிங்களத்திற்கு சொல்லிக்கொடுத்ததே இஸ்ரேல் அமைப்பு என்பதை நான் அறிந்துள்ளேன். உதாரணத்திற்கு ஈழத்தில் எமக்கு எதிராக நடந்த கொடுமைகளும் அழிவுகளும் நன்கு தெரியும். அதை யார் செய்தார்கள் என்பதும் நன்றாக எமக்கு தெரியும். ஏனெனில் நாம் அந்த நாட்டவர்கள்.நாம் விடுதலை இயக்கத்தை ஆதரித்தோம்.அதே விடுதலை இயக்கம் சர்வதேசத்தில் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டார்கள்.ஏன் எப்படி எதனால் என நம்மவர்கள் ஆராய தயாரில்லை.செய்யாத குற்றத்திற்கும் தண்டனை அனுபவித்ததுதான் எமது விடுதலைப்போராட்டம். சர்வதேச ரீதியில் எமது விடுதலை போராட்ட இயக்கத்தை முதலில் பிள்ளையார் சுழி போட்டு தடை செய்தது அமெரிக்காதான்.அதே அமெரிக்காவை இன்று இங்கே எல்லோரும் ஆதரிக்கின்றோம். கால சுழற்சி வேகமானது மட்டுமல்ல விசித்திரமானதும் கூட...
1 week 5 days ago
வாழ்த்துகள் ஆதித்யா. பிரான்சில் வாக்களிக்கும் தமிழர்களில் இரண்டு வகையினரை அவதானித்துள்ளேன். முதலாவது தமிழ் வேட்பாளரை நிறுத்தினால் எந்தக் கட்சி என்று பாராமல் அவருக்கு வாக்களிக்கும் தமிழர்கள். மற்றது வெளிநாட்டவர்கள் ஒடுக்கப்பட வேண்டும் என்று தீவிர இனவாத வலதுசாரிகளுக்கு வாக்களிக்கும் தமிழர்கள். இந்த இரு தரப்பினரும் இரு வேறு துருவங்கள் அல்லவா ? ஆனால் இருவரும் (பலர்) தமிழ் தேசிய ஆதரவாளர்கள். தமிழர்கள் ஒரு நாட்டு அரசியலுக்குள் நுளைந்து வளர வேண்டும். அதே வேளை வெளிநாட்டவர்கள் அடக்கப்பட வேண்டும். இதேபோன்றுதான் பிரான்சில் தமிழர்கள் பிரெஞ்சு அரசியலுக்குள் நுளைய வேண்டும் என்பவர்கள் சீமானின் தமிழனைத் தமிழன் ஆள வேண்டும் என்ற கோசத்தை எவ்வாறு ஏற்க முடியும் என்பது புரியவில்லை. (சீமான் பற்றி இத் திரியில் விவாதிக்கப்பட்டதால் உதாரணம் கூற வேண்டி வந்தது)
1 week 5 days ago
ட்ரம்ப் ஈரானுக்கு மூன்று நாள் கெடு விதித்தார், பின் பத்து நாள் என்கிறார். அவ்வளவு வீரமுள்ளவர், நடந்து கொண்டிருக்கும் போர், தானே தன்னிச்சையாக தொடங்கிய போருக்கு, இன்னும் களத்துக்கு வீரரை அனுப்பிக்கொண்டிருப்பவர், சவால் விடுபவர், எதற்காக கெடு விதிக்கிறார், கெடுவை நீட்டிக்கிறார் என்பதற்கு அவர்தான் விளக்கம் கொடுக்க வேண்டும். தன்னிச்சையாக, காரணமின்றி போரை தொடங்கினார், தன்னிச்சையாக பேசுகிறாராம், அதேபோல் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுகிறார். இதென்ன நோய் என்று தெரியவில்லை?
1 week 5 days ago
ஈரானின் நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையே, அதற்கு என ஒரு இறையாண்மை உள்ளது, அது ஏன் அமெரிக்காவுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும்? தேவையில்லாமல் வலுக்கட்டாயமாக அந்த நாட்டுக்குள் போரை திணித்து, அழித்து விட்டு சும்மா தெனாவட்டாக செல்ல முடியுமா? எத்தனை பேரின், எத்தனை கால கனவு, உழைப்பை அழித்திருக்கிறார்கள் தமது வீம்புக்காக. ஆனால் அமெரிக்காவின் நிபந்தனை ஏற்றுக்கொள்ளக்கூடியவையல்ல. அவர்களின் நாட்டில், அவர்களின் வளங்களை எப்படி கையாள வேண்டுமென்று அமெரிக்கா கட்டளையிட முடியாது. அவர்களை கட்டிப்போட்டு சுதந்திரம் என்று சொல்ல முடியுமா? அதைவிட ட்ரம்ப், நேரம் ஒரு மாறாட்டப் பேச்சு பேசுகிறார். ஈரானில் பேசுவதற்கு தகுந்த ஆட்கள் யாருமில்லை எல்லோரையும் அழித்து விட்டோம் யாரோடு பேசுவது என்பதே பிரச்சனை என்றார். அப்படியென்றால் போர் எப்படி தொடர்கிறது? யாரோடு பேசுகிறேன் என்கிறார்? இப்போது தகுந்த நபர்களோடு பேசுகிறோம் என்கிறார். இரான் தனக்கு சிறந்த பரிசு தந்திருக்கிறது என்கிறார். தனக்கு அதியுயர் பதவியை இரான் அளித்ததாகவும் தான் மிக்க நன்றி ஆனால் வேண்டாம் என்றாராம். ஈரானோ இவை எல்லாவற்றையும் மறுக்கிறது. அதுவே உண்மை. போர் தொடர்கிறது, அமெரிக்க படைகள் ஈரானை நோக்கி விரைக்கின்றன. இப்படியான மாறாட்ட நோயாளியை நம்பி தம் பிள்ளைகளை, பிரஜைகளை அமெரிக்கர் பலி கொடுக்கின்றனர், மற்ற நாடுகளையும் அழிக்கின்றனர்.
1 week 5 days ago
2022 ஆம் ஆண்டு உக்ரெய்னின் நான்கு மாகாணங்களைத் தனது நாட்டுடன் ரஸ்யா சேர்த்துக் கொண்டதாக அறிவித்தது. இதில் ஒன்றுதான் டொன்பாஸ். இந்த 4 வருடத்தில் ரஷ்யா குறைந்தபட்சம் டொன்பாசையாவது தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து மட்டுப்படுத்தப்பட்ட போர் நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாமே. ஏன் அப்படிச் செய்யவில்லை ? மாறாக ஏன் உக்ரெய்னிடம் அப் பகுதியைத் தருமாறு அமெரிக்கா மூலமாகக் கேட்கிறது ? ரஸ்யா போர் முடிவுக்கு வருவதை விரும்பவில்லை என்பதே காரணம்.😂
1 week 5 days ago
ஈரானின் இரண்டு அணுமின் நிலையங்கள் இன்று தாக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா இன்னும் இரண்டு வாரங்களில் தனது இலக்கை எட்டும் என்று மார்க்கோ ருபியோ கூறியுள்ளார். பார்க்கலாம்.
1 week 5 days ago
சும்மா ஒரு சம்பிரதாயத்திற்கு கண்ட இடத்தில் அழைப்பு விடுவது வழமை, அதற்காக அதிகார பூர்வ அழைப்பில்லாமல், நாட்டின் இன்றைய இக்கட்டு நிலையை மனதிற் கொள்ளாமல், யாரும் வந்த வழியில் போய் பார்த்துவிட்டு வருவோம் என்று செல்வதற்கு அவர்கள் ஒன்றும் வழிப்போக்கர்கள் அல்ல. இந்தியாவில் பயிற்சியை முடித்துவிட்டு நாடு திரும்பியவர்கள் என்று கூறப்பட்டது பின் அவர்கள் இசைக்கலைஞர்கள் என்கிறார்கள். இப்போ அதுவல்ல பிரச்சினை, இரானே இலங்கையின் மனிதாபிமான செயலை பாராட்டியிருக்கிறது. அனுரா எதை செய்தாலும் அதை அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்து அவரை ஆட்சியிலிருந்து துரத்தியடிப்பதே நாட்டில் இன்றைய பெரும் பிரச்சனை. இல்லையென்றால்; இவர்களது ஊழல்கள் வெளிவரும், மக்களிடம் இவர்களுக்கு இருந்த செல்வாக்கு சரியும், சிறை செல்ல வேண்டி வரும், அரசியல் எதிர்காலம் அஸ்தமிக்கும், சும்மா இருந்து மக்களை வதைத்து நாட்டை சூறையாடும் கலாச்சாரம் மாறும் என்கிற பயப்பீதியில் என்னென்னவோ தந்திரங்கள், குற்றச்சாட்டுக்கள். இவர்களின் எந்த தந்திரமும் பலிக்காது. எல்லோரையும் எல்லாக்காலமும் ஏமாற்ற முடியாது. இவர்கள் எதையெதை நினைத்து பயப்படுகிறார்களோ அதுவெல்லாம் நடந்தேறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகின்றன.
1 week 5 days ago
கதையை மிக விறுவிறுப்பான சம்பவங்களுடன் நகர்த்தியுள்ளீர்கள். இறுதிப் பகுதியை வாசித்துக்கொண்டிருந்தபோது பழிவாங்குதல் சட்டப்படி குற்றம் என்பதை உறுத்தியது. நீங்களும் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சட்டத்திற்கப்பாற்பட்ட தீர்வைக் கொடுத்து அதற்கான தண்டனையக் கதையின் நாயகர்களுக்குக் கொடுக்காமல் அது தவறு, தண்டிக்கப்படலாம் என்ற தொனியில் முடித்தது அருமை. இரண்டாம் பாகத்துக்கான வாடை தெரிகிறது.
1 week 5 days ago
வாழ்த்துக்கள் மகளே. பிரான்ஸில் இந்த ஊராட்சி தேர்தலில் 120 க்கும் மேற்பட்ட இளையோர்கள் வேட்பாளர்களாக பங்கு பற்றி அதில் அநேகமானவர்கள் வென்றிருக்கிறார்கள். இதற்கான அத்திவாரம் தமிழ் தேசியத்திற்காக மட்டுமே கட்டியெழுப்பப்பட்டது. என்றாவது ஒரு நாள் ஒரே புள்ளியில்......
1 week 5 days ago
றியாஸ் குரானாவின் விமர்சனங்களில் எந்த வகையான சமரசமும் என்றும் இருப்பதில்லை. இந்தக் கட்டுரையும் அப்படியான ஒன்றே. ஓரிரு வருடங்களின் முன்னர் இவருடைய இளையராஜாவின் இசை பற்றிய ஒரு விமர்சனத்தை நான் இங்கு களத்தில் பகிர்ந்தேன் என்று நினைக்கின்றேன். விமர்சனம் எவ்வளவு கறாராக எழுதப்பட்டாலும், றியாஸின் மொழியில் இருக்கும் பண்பாடு கவனிக்கத் தக்கதும், மெச்சத் தக்கதும் ஆகும். இவ்வாறான மொழிநடையில் எழுதப்படும் விமர்சனங்கள் தனிநபர் தாக்குதல்கள் இல்லாமல், நையாண்டிகள் இல்லாமல், மேம்போக்கான ஒற்றை வரி நிராகரிப்புகள் இல்லாமல் ஒரு ஆரோக்கியமான விமர்சனப் போக்கை உருவாக்குகின்றன. ஜெயமோகன் இந்துத்வா அமைப்புகளின் ஒற்றைப்படையான அரசியலுக்கு எதிரான கருத்துகளை தொடர்ந்து முன்வைத்தாலும், அவரது ஆக்கங்கள் ஒரு ஒற்றை தன்மையுள்ள சமுதாயத்தை, ஒரே பண்பாட்டையே வலியுறுத்துகின்றன என்பது என் அனுபவமும், விமர்சனமும் ஆகும். இந்தியா, இந்தியர்கள் என்பதை ஒரு அலகாகக் காட்டும் அவரது நிலைப்பாடு அரசியலுக்காகவோ அல்லது ஆன்மீகத்துக்காகவோ அவரை ஒரு முன்னோடியாக கருதும் நோக்கங்களை ஆரம்பத்தில் இருந்தே இல்லாமல் செய்தது. ஆனாலும், இவரது மொழிவளமும், அழகியலும், ஆக்கங்களில் வெளிப்படும் தனிமனித தவிப்புகளும் இவரை எங்கள் தலைமுறையின் மிகச்சிறந்த தமிழ் படைப்பாளிகளில் ஒருவராக்கியது. விக்கி பக்கங்களுக்கு மாற்றாக தமிழ் விக்கி என்னும் ஒன்றை உருவாக்கியுள்ளார். விக்கியில் எவரும், எதுவும் எழுதலாம் என்னும் போக்கால், திட்டமிடப்பட்டே பல மோசடிகள் செய்யப்படுகின்றன என்பதை எதிர்த்தே தமிழ் விக்கி ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை தமிழ் விக்கி சரியான திசையில் செல்வதாகவே எனக்குப்படுகின்றது. ஞானபீடம் விருது போன்றவற்றை வழங்கும் அமைப்புகள் தமிழ் மொழிக்கு நியாயம் செய்யவில்லை என்பதே என் எண்ணமும் ஆகும். தகுதியற்ற வைரமுத்துவிற்கு இந்த விருது வழங்கப்படுவதற்கு முன்னர் பல வருடங்களாக தமிழுக்கு எதுவும் வழங்கப்படவில்லை. சிறந்த தமிழ்ப் படைப்பாளிகளையும், படைப்புகளையும் தமிழர்களும் கண்டு கொள்ளவில்லை, உலகமும் கண்டு கொள்ளவில்லை. நாமே நமக்கு ஒன்றை உருவாக்கிக் கொள்வது சரியான ஒரு மாற்றுவழியாகவே தோன்றுகின்றது. பணத்துக்காக, இலாபங்களுக்காக சமரசம் செய்து கொள்ளும் படைப்பாளிகள் எப்போதும் இருந்து கொண்டேயிருக்கின்றார்கள். அதே போலவே, எந்த சமரசமும் இன்றி, தங்கள் அழகியலை, தங்கள் அரசியலை முன்வைப்பவர்களும் இருந்து கொண்டேயிருக்கின்றார்கள். இன்னொரு புதிய விருதால், அது எவ்வளவு தான் பணப் பெறுமதி வாய்ந்ததாக இருந்தாலும், இலட்சியவாதிகள் மாறப் போவதில்லை. ஈழத்து இன்றைய படைப்பாளிகளான சயந்தனையும், அனோஜனையும், அகரமுதல்வனையும் நான் அறிந்து கொண்டது ஜெயமோகனின் கட்டுரைகளில் இருந்தே. பேராசிரியர் சிவத்தம்பி, மு. தளையசிங்கம் என்று பல முன்னோர்கள் பற்றிக் கூட இவர் எழுதிய கட்டுரைகளே அவர்கள் மேல் பார்வையை திருப்பியது. அது போலவே இந்த விருதும் அமையும் என்று நம்புகின்றேன். ஜெயமோகன் முன்னிறுத்தும் ஒற்றை பண்பாட்டை, ஒரு தேசத்தை, அவரது ஆன்மீகத்தை என்றும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. விதி என்றும், கர்மா என்றும் சமூக ஏற்றத் தாழ்வுகளையும் நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
1 week 5 days ago
எனக்கு அடக்க முடியாமல் ஒண்டுக்கு அடிக்க வருது. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஜிப்பை கழற்றி ஒரு ஓரமாக ஒண்டுக்கு அடிக்க நான் ஏன் கூச்சப்பட வேண்டும்?
1 week 5 days ago
20 வருடங்களுக்கு முன்னர் தாய்லாந்தில் கோயில் ஒன்றைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது நாங்கள் கதைக்கும்போது இடையில் பிரெஞ்சில் ஏதோ கதைத்துவிட்டேன். அங்கிருந்த தாய்லாந்துக்காரர் எம்மருகில் வந்து நீங்கள் பிரான்சிலிருந்து வந்துள்ளீர்களா என்று பேசுக் கொடுத்தார். நாமும் பிரெஞ்சு பேசும் ஒருவரைச் சந்தித்த ஆவலில் அவரிடம் பேசினோம். அப் பிரதேசத்தில் பார்த்து ரசிக்கக் கூடிய இடங்களைப் பற்றிய தகவல்களைக் கூறினார். கடைசியாக, இங்கு கல் பதித்த தங்க நகைகளை மிகவும் மலிவாக ஒரு இடத்தில் வாங்கலாம் என்றார். போதாக்குறைக்கு எமது ஆட்டோ ஓட்டுனரிடம் ஏதோ அவர்கள் மொழியில் கூறி அனுப்பி வைத்தார். நாங்களும் சில இடங்களைப் பார்த்துவிட்டு இறுதியாக ஓட்டுனரிடம் நகைக்கடைக்குப் போகலாம் என்றோம். அது ஒரு ஒதுக்குப் புறமாக இருந்தாலும் மிகப் பெரிய கடை. ஏராளமானவர்கள் நகை வாங்குவதைப் பார்க்க முடிந்தது. நாமும் இரண்டு கல் வைத்த நகைகளை வாங்கிவிட்டு மகிழ்ச்சியுடன் தங்கியிருந்த விடுதிக்கு வந்தோம். அன்று இரவு அடுத்தநாள் உலாத்தலைத் திட்டமிடுவதற்காக வழிகாட்டிப் புத்தகத்தைப் புரட்டியபோது எமக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சற்றும் பிசகாமல் அப்படியே அதில் எழுதப்பட்டிருந்தது. அன்று முழுவதும் நித்திரையில்லை. அடுத்தநாள் முதல் வேலையாகக் காலையில் நகைகளை மதிப்பிடும் அலுவலகம் ஒன்றைக் கண்டு பிடித்து நகைகளைப் பரிசோதித்தோம். நல்ல வேளை அவை உண்மையான தங்கமும் கற்களும் என்று அத்தாட்சிப் பத்திரம் தந்தார்கள். ஆனாலும் எதிர்பார்த்த இலாபம் இல்லை.
1 week 5 days ago
'Based on the memories of a War Child' என்ற வாசகத்துடன் நீளிரா திரைப்படம் வருகிறது. ஈழம் சார்ந்த கதைக்களம். இதனை எழுதி இயக்கியிருப்பவர் சோமிதரன். ஊடகவியலாளர் என்பது அவருடைய தொடக்க கால அடையாளம். யாழ் நூலக எதிர்ப்பு தொடர்பாக 'எரியும் நினைவுகள் - Burning memories' சுவடிப் படத்தினை (Ducumentary film) 2006இல் உருவாக்கியவர். அந்தச் சுவடிபடத்திலேயே அவருடைய கலை நுட்பத்தின் சில அம்சங்களைக் காண முடிந்தது. பாலு மகேந்திராவிடமும் மற்றும் சில தமிழக முன்னணி இயக்குனர்களிடம் திரைக்கலை பயின்றவர். ஒரு நல்ல படைப்பை குறிப்பாக திரைப்படத்தை உருவாக்குவது என்பது மேதமை மிக்க கலைப் பார்வையோடு, திரைத் தொழில்நுட்பம், கதை அறிவு (story knowledge), சமூக-உலக பார்வையையும் கோரிநிற்கிறது என்பது என்னுடைய நம்பிக்கை, அபிப்பிராயம். சோமிதரன் இத்தகைய ஆளுமைகளை தன்னகத்தே கொண்டவர் என்ற மதிப்பீடும் அவதானிப்பும் எனக்குண்டு. நீளிரா முன்னோட்டமும் அந்த நம்பிக்கையைத் தருகின்றது. திரைப்படம் ஏப்ரல் மூன்றாம் திகதியிலிருந்து திரைக்கு வருகிறது. படத்தைப் பார்த்தபின் அதனை விமர்சன பூர்வமாக அணுகலாம். வாழ்த்து சோமிதரன் Somee Tharan & குழுவினர் - ரூபன் சிவராஜா https://www.facebook.com/share/1CParquwWA/
1 week 5 days ago
1 week 5 days ago
குடாரப்புத் தரையிறக்கத்தின் 26 ஆண்டுகள்: ஈரானில் தவிக்கும் அமெரிக்காவிற்கு இன்று ஒரு பால்ராஜ் தேவை Courtesy: Priyangan நவீன இராணுவ வரலாற்றில் தரையிறக்க நடவடிக்கை (Amphibious Operation) என்பது வெற்றியை மட்டுமன்றி மிக ஆபத்தான போரியல் நகர்வையும் நோக்கமாகக் கொண்டதாகும். பிரிகேடியர் பால்ராஜ் தலைமையிலான விடுதலைப் புலிப் போராளிகள் குடாரப்பில் தரையிறங்கி ஆணையிறவில் புலிக்கொடி நாட்டும் வரை இதுவே ஒரு சித்தாந்தமாக இருந்தது. இன்றைக்கு 26 ஆண்டுகளுக்கு முன் கடந்த 2000 ஆம் ஆண்டில் ஈழப்போராளிகள் பற்றிய உலகின் பார்வையை ஒரு கணம் உறைய வைத்த போரியல் அதிசயத்தைப் பிரிகேடியர் பால்ராஜ் நிகழ்த்திக் காட்டினார். அதுவரையிலான ஈழ விடுதலைப் போராட்ட வழித்தடங்களின் போக்கையே மாற்றியமைத்த அந்த மகத்தான போரியல் அதிசயம், இது எப்படிச் சாத்தியமானது ?என்று அமெரிக்கா போன்ற இராணுவ வல்லரசுகளே வியந்து நிற்கும் ஒரு வரலாற்று நிகழ்வாகும். அன்று ஒரு மரபுசாரா படையணியாக விடுதலைப் புலிகள் நிகழ்த்திய உலகத்தரம் வாய்ந்த வியூகம் அதுவென்றால் இன்று பாரசீக வளைகுடா மற்றும் ஈரானிய எல்லைகளில் அமெரிக்கா போன்ற இராணுவ வல்லரசுகளின் படைகள் எதிர்கொள்ளும் தரையிறங்க முடியாத முட்டுக்கட்டை நிலை என்பது நவீன போரியல் வரலாற்றின் ஒரு தந்திரோபாய முரண்நகையாகும். 🛑 குடாரப்பு பால்ராஜின் போரியல் அதிதிறனும் அசாத்திய மனோதிடமும் குடாரப்பு என்பது வெறும் நீண்ட கடற்கரைப் பகுதி அல்ல அது சிறீலங்கா இராணுவத்தின் இதயநாடி போன்ற விநியோக வழித்தடத்தைத் துண்டிப்பதற்காகச் செய்யப்பட்ட ஒரு மின்னல் வேகப் பின்னணித் தாக்குதல் ஆகும். அதில் வெறும் 1200 போராளிகளை மட்டும் வைத்துக்கொண்டு இன்று அமெரிக்கப் படைகளிடம் இருப்பது போன்ற எவ்வித வான்வழிப் பாதுகாப்பும் இன்றி சர்வதேச இராணுவ நிபுணத்துவத்துடன் கட்டமைக்கப்பட்டிருந்த ஆனையிறவு இராணுவத்தளத்தின் பின்புறத்தில் தரையிறங்கியது அன்றைய காலகட்டத்தில் ஒரு அதிசயமாவே பார்க்கப்பட்டது. இங்குதான் பிரிகேடியர் பால்ராஜின் போரியல் பேராற்றல் வெளிப்பட்டது. வெற்றிபெற்றால் அன்றி அந்த 1200 போராளிகளும் விடுதலைப் புலிகளின் உலக இராணுவ நகர்வாளர்களுக்கெல்லாம் மணிமகுடமாக விளங்கிய பால்ராஜும் உயிரோடு திரும்பவே முடியாது என்ற நிலை இருந்தது. எதிரியால் நான்கு புறமும் சூழப்பட்டு, 34 நாட்கள் உணவு மற்றும் ஆயுதத் தட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் அன்று அவர் காட்டிய அசைக்க முடியாத ஓர்மமே அந்த வெற்றியைத் தீர்மானித்தது. தரையிறங்கிய வேகத்தில் முன்னேறுதல் (Deep Penetration) என்ற தத்துவத்தை அவர் கையாண்ட விதமே ஒரு தற்காப்புப் போரை எப்படித் தாக்குதல் போராக மாற்றலாம் என்பதற்கு இன்றும் ஒரு சிறந்த போரியல் பாடத்திட்டமாக உள்ளது. 🛑அமெரிக்காவின் தரையிறங்க முடியாத இயலாமை: நவீன காலச் சிக்கல்கள் மறுபுறத்தில் இன்று உலகின் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் B-1B Lancer மற்றும் F-35 போன்ற போர் விமானங்களைக் கொண்டுள்ள அமெரிக்கப் படைகள், ஈரான் போன்ற ஒரு பிராந்திய வல்லரசுக்கு எதிராக நேரடித் தரையிறக்கத்தை மேற்கொள்ளத் தயங்குவது ஏன்? இதற்கான முக்கியக் காரணம் ஈரானின் A2/AD (Anti-Access/Area Denial) எனப்படும் தற்காப்பு அரண் ஆகும். ஈரானின் பாரசீக வளைகுடாப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான சிறிய ரக ஏவுகணைகள் மற்றும் தற்கொலைத் தாக்குதலுக்கான ஆளில்லா விமானங்கள், அமெரிக்காவின் பிரம்மாண்டமான விமானந்தாங்கிக் கப்பல்களைத் தமது தளத்திற்கு அருகில் நெருங்க விடாமல் தடுக்கின்றன. அன்று பால்ராஜ் குடாரப்புவில் கையாண்ட அதே மறைந்திருந்து தாக்கும் நுட்பத்தை ஈரான் இன்று தனது நவீன தொழில்நுட்பத்தின் மூலமாகத் தனக்கேயான ஒரு தற்காப்பு வேலியாக மாற்றியுள்ளது. இது அமெரிக்காவின் தரைவழித் தாக்குதல், ஈரானுக்குள் ஊடுருவி எண்ணெய் வயல்களைக் கைப்பற்றுவது மற்றும் அணு உற்பத்தித் தளங்களைச் சிதைப்பது போன்ற டொனால்ட் ட்ரம்ப்பின் கனவுகளைச் சிதைப்பதோடு ஒரு இராணுவ வல்லரசின் நகர்வுகளையே கேள்விக்குறியாக்குகிறது. 🛑 தொழில்நுட்ப பலம் மற்றும் கள யதார்த்தம் விடுதலைப் புலிகளின் குடாரப்பு வெற்றி என்பது தொழில்நுட்பத்தை விட ஒரு தேசத்தின் விடுதலை வேட்கை கொண்ட இளைஞர் கூட்டத்தின் தன்னம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பு எத்தகைய மாற்றங்களை உருவாக்கும் என்பதற்குச் சான்றாக அமைந்தது. இன்று அமெரிக்கா போன்ற ஒரு இராணுவ வல்லரசு ஈரானிய எல்லைகளுக்குள் தரையிறங்கத் தவிப்பதற்கு அதன் ஆயுதக் குறைபாடு காரணமல்ல மாறாக எதிரியின் கெரில்லாப் பாணியிலான தற்காப்பு வியூகங்களை முறியடிக்கத் தேவையான துணிச்சலான கள முடிவுகளே இன்றைய தேவையாகும். அதற்கு அமெரிக்காவிற்குப் பால்ராஜைப் போன்ற ஒரு தளபதிதான் தேவைப்படுகிறார். அன்று களத்தில் எதிரியின் மனநிலையைச் சோதித்தது புலிகளின் போராற்றல் மட்டுமல்ல பிரிகேடியர் பால்ராஜ் என்ற பெயரும்தான். பிரபாகரன் வந்திருந்தால் கூட வென்றிருப்போம் ஆனால் வந்தது பால்ராஜ் என்ற சிங்கள இராணுவத் தளபதி ஒருவரின் கூற்றே பால்ராஜ் யார் என்பதை ஆழமாகப் பதிவுசெய்துவிட்டது. வரலாறு கற்பிக்கும் பாடம் ஒன்றுதான், போர்க்களத்தில் வெற்றியைத் தீர்மானிப்பது நவீனக் கருவிகள் மட்டுமல்ல அந்தப் போரை முன்னெடுக்கும் வீரர்களின் நெஞ்சுரமும் மற்றும் தளபதியின் தீர்க்கமான முடிவுகளுமே ஆகும். ஒரு சிறிய படையணி எத்தகைய பெரிய இலக்கையும் வீழ்த்த முடியும் என்பதற்கு குடாரப்பைத் தவிர வேறு உதாரணம் தேவையில்லை. https://ibctamil.com/article/brigadier-balraj-kudarappu-vs-iran-war-strategy-1774482259
1 week 5 days ago
“நான் அமைதியாக செல்ல விரும்புகிறேன்” : கருணைக்கொலை மூலம் மறைந்தார் ஸ்பெயின் இளம்பெண் நோலியா! 27 Mar, 2026 | 02:40 PM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ் (வயது 25) நேற்று வியாழக்கிழமை (26) கருணைக்கொலை மூலம் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பார்சிலோனாவைச் சேர்ந்த நோலியா காஸ்டிலோ 2022இல் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றபோது காயங்களால் பாதிக்கப்பட்டதோடு, அவரது இடுப்புக்கு கீழ்ப் பகுதி முழுவதுமாக செயலிழந்துபோயுள்ளது. அதனையடுத்து, நோலியா காஸ்டிலோவின் கோரிக்கைக்கு அமைய, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம், ஸ்பெயின் அரசியல் சாசன நீதிமன்றம் கருணைக்கொலை மூலம் உயிரிழக்கும் உரிமையை அந்த இளம்பெண்ணுக்கு வழங்கி அனுமதித்தது. நோலியாவின் கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் வழங்கிய அனுமதியின்பேரில், நேற்று மாலை அப்பெண் கருணைக்கொலை மூலம் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. “நான் அமைதியாக விரும்புகிறேன். எனது துன்பத்தை நிறுத்த விரும்புகிறேன்” என தனது தந்தையிடம் கூறிய நோலியாவின் வார்த்தைகள், சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன. தன்னை கருணைக்கொலை செய்யுமாறு நோலியா கோரியபோது, அதை ஏற்க மறுத்த அவரது தந்தைக்கு ஆதரவாக கத்தோலிக்க திருச்சபை மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் முன்வந்தன. “துன்பத்துக்கு மரணம் தீர்வாகாது” என்றும் “அரசு பராமரிக்கத் தவறியதாலேயே அந்தப் பெண்ணுக்கு இந்த நிலை ஏற்பட்டது” என்றும் தெரிவித்து வந்தன. அந்த அமைப்புகளின் ஆதரவுடன், மகளுக்கான கருணைக்கொலைக்கு எதிராக, தந்தை எழுப்பிய சட்ட ரீதியான மறுப்புரைகளால் கருணைக்கொலை நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது. தன் மகளுக்கு ஆளுமைக் குறைபாடு இருந்ததாகவும் அது அவரது முடிவெடுக்கும் திறனைப் பாதித்துள்ளதாகவும் தந்தை வாதிட்டார். “மக்களினது, குறிப்பாக, மிகுந்த பாதிப்புக்குள்ளானவர்களின் உயிர்களை பாதுகாப்பது அரசின் கடமை. மனநலப் பிரச்சினைகள் உள்ள ஓர் இளம்பெண்ணின் விடயத்தில் இது பொருந்தும்” என்றும் அவர் எதிர்வாதத்தை முன்வைத்திருந்தார். அதனையடுத்து, 18 மாதங்களாக பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு நோலியாவும் அவரது தந்தையும் முகங்கொடுத்து வந்த நிலையிலேயே, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் நோலியாவுக்கு கருணைக்கொலையை நிறைவேற்ற இணங்கித் தீர்ப்பளித்தது. ஸ்பெயினில் கருணைக்கொலை சட்டம் 2021இல் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர், முதல் முறையாக ஒரு நீதிபதி, தீர்ப்பளிப்பதற்காகவே ஒரு வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றதென்றால், அது இந்த வழக்காகத்தான் இருக்கமுடியும் எனக் கூறப்படுகிறது. https://www.virakesari.lk/article/242083
1 week 5 days ago
சர்வதேச அரசியலில் ஒரு தரப்பு செய்யும் கொடூரமான குற்றத்தை, தங்களுக்குப் பிடிக்காத மற்றொரு தரப்பு மீது சுமத்தி, அதன் மூலம் அரசியல் மற்றும் நிதி லாபம் அடைவதே 'False Flag Operation' எனப்படும். இதற்குப் பின்னால் பெரும்பாலும் உலகின் சக்திவாய்ந்த உளவு அமைப்புகளே (CIA, Mossad போன்றவை) இருக்கின்றன என்பது பல வரலாற்றுச் சம்பவங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சதித் திட்டங்கள் இன்று நேற்றல்ல, பல தசாப்தங்களாக நடந்து வருகின்றன: The Lavon Affair - 1954 எகிப்தில் இருந்த அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் நூலகங்கள் மீது இஸ்ரேலிய உளவுப்பிரிவு (மொசாட்-ன் முன்னோடி) ரகசியமாகக் குண்டு வீசியது. இந்தத் தாக்குதலை எகிப்திய தீவிரவாதிகள் செய்ததாகக் காட்டி, மேற்கத்திய நாடுகளுக்கும் எகிப்திற்கும் இடையே பிளவை உண்டாக்குவதே நோக்கம். ஆனால், ஒரு குண்டு முன்கூட்டியே வெடித்ததால், இஸ்ரேலிய உளவாளிகள் கையும் களவுமாகப் பிடிபட்டனர். உண்மை அம்பலமானது. Operation Northwoods - 1960 கியூபா மீது போர் தொடுக்கக் காரணத்தைத் தேடிய அமெரிக்க ராணுவம், அமெரிக்காவிற்குள்ளேயே சில தாக்குதல்களைத் தாங்களே நடத்தி, அதை கியூபா மீது சுமத்தத் திட்டமிட்டது. இது ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு சதித் திட்டம். Dancing Israelis 2001 இரட்டை கோபுரத் தாக்குதலின் போது, நியூஜெர்சியில் சில இஸ்ரேலிய இளைஞர்கள் கட்டிடங்கள் விழுவதைக் கண்டு கொண்டாடியதாகவும், அவர்கள் முன்பே கேமராக்களைத் தயார் நிலையில் வைத்திருந்ததாகவும் FBI விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் பின்னாள்களில் மொசாட் நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள் எனச் உறுதிபடுத்த பட்டுள்ளது. தற்சமயம் மார்ச் 23, 2026 அன்று லண்டனின் Golders Green பகுதியில் hatzola யூத அம்புலன்ஸ்கள் தீயிடப்பட்ட சம்பவம் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது. காவல்துறையின் தரவுகளும், சம்பவத்தின் வேகமும் இது ஒரு திட்டமிட்ட 'False Flag' என்பதன் அப்பட்டமாக தெரிகிறது. லண்டனில் அதிகாலை 1:45 மணிக்கு அவசர அழைப்பு செல்கிறது. ஆனால், சரியாக 2:00 மணிக்கு (அதாவது 15 நிமிடங்களில்) நியூயார்க்கில் உள்ள ஒரு யூத செய்தி நிறுவனம் இதை வீடியோ ஆதாரத்துடன் ஒளிபரப்புகிறது. இது எப்படி சாத்தியம்? எரிக்கப்பட்ட அந்த ஆம்புலன்ஸ்கள் ஏற்கனவே பழையவை. அவற்றுக்குப் பதிலாகப் புதிய வாகனங்களை வாங்கும் 'Replacement Project' ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. பழைய வாகனங்களை எரிப்பதன் மூலம் காப்பீட்டுப் பணத்தையும், உலகளாவிய அனுதாபத்தின் மூலம் பெரும் நன்கொடைகளையும் பெற இந்தச் சதி தீட்டப்பட்டுள்ளதா? உலகம் முழுவதும் தற்போது நிலவும் அரசியல் சூழலில், யூத சமூகத்திற்கு எதிராகப் பெருகி வரும் வெறுப்பு மற்றும் போராட்டங்களால் அவர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தத் தீவைப்புச் சம்பவத்தின் பின்னணியில் ஒரு தந்திரமான நோக்கம் உள்ளது தங்களுக்குப் பாதுகாப்பு குறைவாக இருப்பதாகக் காட்டி, அரசாங்கத்தையும் காவல்துறையையும் தங்களின் தெருக்களிலும், நிறுவனங்களிலும் நிரந்தரமாகக் காவல் (Babysitting) இருக்கச் செய்வது. தாங்கள் ஒரு "பாதிக்கப்பட்ட இனம்" (Victim Playing) என்ற பிம்பத்தை மீண்டும் மீண்டும் உருவாக்குவதன் மூலம், சர்வதேச அளவில் தங்களுக்கு எதிரான விமர்சனங்களை மௌனிக்கச் செய்வது. ஒரு சம்பவம் நடந்தவுடன் ஊடகங்கள் காட்டும் குற்றவாளியை அப்படியே நம்பிவிடக் கூடாது. யாருக்கு லாபம்? (புதிய ஆம்புலன்ஸ் நிதி, காப்பீட்டுப் பணம்) யார் பாதுகாப்பைப் பெறுகிறார்கள்? (காவல்துறையைத் தங்கள் பகுதிக்கு வரவழைத்தல்) யார் பழிவாங்கப்படுகிறார்கள்? (ஈரானிய ஆதரவு அமைப்புகள் மீது பழி) இந்த மூன்று கேள்விகளுக்கான விடையும் இஸ்ரேலிய உளவு அமைப்புகளின் 'False Flag' தந்திரத்தையே நோக்கியே செல்கின்றன. உளவு அமைப்புகளும், சில அமைப்புகளும் இணைந்து மக்களை ஏமாற்றத் தீட்டிய இந்தத் திட்டம் இப்போது ஆதாரங்களுடன் அம்பலமாகத் தொடங்கியுள்ளது. ஆதாரங்கள் இன்றி ஈரானிய அமைப்புகள் மீது பழி சுமத்துவது ஒருபுறம் இருக்க, மறுபுறம் எரிக்கப்பட்ட வாகனங்களின் பின்னணியில் இருக்கும் பொருளாதார லாபங்கள் இந்தச் சம்பவத்தை ஒரு அப்பட்டமான 'False Flag' என உறுதிப்படுத்துகின்றன. யூத உளவு அமைப்புகளும், சில தன்னார்வ நிறுவனங்களும் இணைந்து மக்களை ஏமாற்றத் தீட்டிய திட்டமே இது என்பதை இந்தத் தரவுகள் உணர்த்துகின்றன. 1954-ல் லாவோன் விவகாரத்தில் எப்படித் தந்திரங்கள் அம்பலமானதோ, அதேபோல் 2026-ன் இந்த லண்டன் நாடகமும் காலப்போக்கில் முழுமையாக வெளிப்படும். Mukinthan Thurairajasingham's post https://www.facebook.com/story.php?story_fbid=2795081927500823&id=100009971290894&post_id=100009971290894_2795081927500823&rdid=ftQ5Grvo9axmGfNn#
1 week 5 days ago
இளவாலை வைத்தியசாலை சம்பவம்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை! Mar 27, 2026 - 09:16 PM யாழ்ப்பாணம், இளவாலை பிரதேச வைத்தியசாலையில் அவசர சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட மாணவன் அனுமதிக்கப்படாதது மற்றும் அங்கு வைத்தியர்கள் கடமையில் இல்லாதிருந்தது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை இளவாலை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் திடீர் சுகவீனம் காரணமாக மயங்கி விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக அவர் உடனடியாக இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும், அந்த நேரத்தில் வைத்தியசாலையில் வைத்தியர்கள் எவரும் கடமையில் இல்லை எனக் கூறி, மாணவனை அனுமதிக்க வைத்தியசாலை ஊழியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவனுக்கு முதலுதவி வழங்குமாறும், மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி (Ambulance) மூலம் அனுப்பி வைக்குமாறும் மாணவனின் தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். எனினும், "நாங்கள் சிகிச்சை அளித்தால் அதற்கு நாங்களே பொறுப்பேற்க வேண்டும்" எனக் கூறி ஊழியர்கள் முதலுதவி அளிக்க மறுத்துள்ளனர். அத்துடன், வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி வசதி இல்லை எனக் கூறி, தனியார் வாகனம் ஒன்றில் மாணவனை அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து, மயக்கமடைந்த நிலையில் இருந்த மாணவன் முச்சக்கர வண்டி மூலம் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் ஊடகங்களில் வெளியானதை அடுத்து, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் இது குறித்து தானாக முன்வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக இளவாலை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியிடம் முறையான விளக்கம் கோரப்பட்டுள்ளதுடன், வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmn92ox2h0003356p4aineolu
Checked
Wed, 04/08/2026 - 22:24
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed