Everything posted by satan
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
தெரியாத தேவதையை விட தெரிந்த பேயே பரவாயில்லை என்று நினைத்திருப்பார்களோ என்னவோ? என்ன கந்தையர் தூக்க கலக்கமோ? அனுரா இன்னும் ஜனாதிபதியாகக்கூட பொறுப்பேற்கவில்லை அதற்குள் பாராளுமன்றத்தேர்தல் தேர்தல் பற்றி கவலைப்படுகிறீர்கள். தேர்தலில் நிற்கும் எண்ணம் உண்டோ?
-
தமிழர் பகுதியில் திடீரென போடப்பட்ட இராணுவ வீதி தடை - அச்சத்தில் மக்கள்
இரும்பு பிடித்தவன் கையும் சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா கிடவாது. போர்க்காலத்தில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டவர்கள் விசாரிக்கப்பட்டு நீதிமன்றம் தண்டிக்கும் என்று அனுரா சொன்னதை நம்பி விட்டார்கள் போலுள்ளது. அனுராவுக்கும் தமிழருக்கும் சிண்டு முடியிற வேலை. அனுரா தமிழரின் கடந்த கால அழிவுகளை, காயங்களை கணக்கிலும் எடுக்க மாட்டார். காயங்களுக்கு கட்டு போடவோ, அனுதாபம் தெரிவிக்கவும் மாட்டார். தனது அரசியலை எப்படி வளர்ப்பது கொண்டு செல்வது என்பதே அவரது இலக்கு.
-
இன மதத்தை தூண்டாமல் பெற்ற வெற்றி - அனுரவிற்கு சுமந்திரன் வாழ்த்து
போருக்கான அணிகளை அணியும்போது வீரம் பேசக்கூடாது, அவற்றை களையும் போது மற்றவர்கள் அதை பேசுவார்கள். சர்வாதிகாரி என்கிற பெயரை எடுக்காமல் இருந்தால் சரி.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
ரணிலை மிதப்படுத்தி பேசியதெல்லாம் பொய் என மக்களுக்கு புரியும் என்பது தெரியாமலேயே அவிழ்த்துவிட்டு காத்திருந்தனர். எந்த வைத்தியராலும் அவரை காப்பாற்ற முடியாது, எந்த மருத்துவமனையிலும் அவருக்கு இடமில்லை. ஏற்கெனவே அவர் ஒரு தனிமரம், அது தெரியாமல் தோப்பாக நினைத்தார், தான் இருந்த மரத்திலிருந்தே சறுக்கி விழுந்து விட்டார். இனி ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, மொட்டுக்கட்சி மெல்ல மெல்ல சரியும். நாமல் எக்காலத்திலும் ஜனாதிபதியாக முடியாது!
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
சுமந்திரனின் குலுமாசு: "இலங்கை வாக்காளர், தேர்தல் மேடைகளில் நான் கொடுத்த சைகையை சரியாக பயன்படுத்தி, எனது கருத்துக்களைப் கேட்ட பின்னரே யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானம் செய்ததாக நான் நம்புகிறேன், அதை நீங்களும் முன்னைய தேர்தலில் அவதானித்திருப்பீர்கள், இது எங்களின் ராஜதந்திரம்." "இதை தாங்கள் கவனத்தில் எடுத்து எனக்கு பதவியளித்தால், அதை நீங்கள் எனக்களிக்கும் கெளரவமாகக் கருதுகிறேன்." கண்டிப்பாக இப்பவே வாழ்த்து என்கிற பெயரில் அழைப்பெடுத்து கோரிக்கை விடுத்து காத்திருப்பார்கள், இனி அனுராவை புகழ்ந்தே பேசுவார்கள், ஆனால் இந்த வௌவால் கூட்டத்தை அனுரா சேர்த்துக்கொண்டால் மற்றவர்களைப்போலவே இவரின் ஆட்சியும் குப்பையாக மாறும். இவரின் கொள்கை மாற்றமடையும், இவருக்கு கிடைத்த இந்த அருமையான வாய்ப்பை இவர் தவற விட்டால் இன்னொரு வாய்ப்பு வழங்கப்படாது என்பதை அவர் அறிவார். ஆகவே கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். பின்னர், எங்களின் கொள்கை சரியானது அதை நிறைவேற்ற மக்கள் எங்களுக்கு ஆணை (சந்தர்ப்பம்) தரவில்லை என்று பின்னாளில் புலம்புவதில் பயனில்லை. சொல்லும் செயலும் ஒன்றானதா என்பதை இவர்களின் அமைச்சரவையிலிருந்து புரிந்து கொள்ளலாம். ராஜா பக்க்ஷக்களுக்கு எதிராக தொடங்கிய அரகலியாவை அடக்கி அதை தன் தோளில் சுமந்து அவர்களை காப்பாற்றியவர் ரணில். அதன் எதிரொலிதான் இந்த தேர்தல் பெறுபேறுகள்! அது நாமலின் தவறு.. இவர்கள் வேண்டாமென்றுதானே மக்கள் இவர்களை விரட்டியடித்தாகள், அந்த வெறுப்பு ஆறுமுன், எனக்கு வாக்கு போடுங்கள் என்று வெட்கமில்லாமல் மேடையேறியது யார் தவறு? அந்த இடத்தில் மஹிந்த இருந்திருந்தாலும் இதுதான் நடந்திருக்கும். இது அவருக்கு பெருத்த அவமானமாக இருந்திருக்கும். அவர் தப்பித்துக்கொண்டிருந்தார். தமிழரை அழித்த கையோடு, அதை விழாவாக எடுத்து எக்காளம் ஊதிக்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களிடம், தப்பித்து துயரை தாங்கமுடியாது தவித்தவர்களிடம் வெட்கமேயில்லாமல் வாக்கு கேட்டவரின் புதல்வாராயிற்றே நாமல்! நுணலும் தன் வாயாற் கெடும். இவர்கள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளல்லர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்துடன் இவர்கள் அரசியலில் இருந்து வெளியேறுவது இவர்களுக்கு நல்லது. இல்லையேல், பாராளுமன்றத்தேர்தலில் தகுந்த பாடம் அளிக்கப்படும். இவர்களின் வழமையான போலி வாக்குறுதிகளும் நாடகங்களும் இனியும் எடுபடாது. இவர்கள் தமிழரை வைத்து நகைச்சுவை செய்திருக்கிறார்கள் என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருப்பது எவ்வளவு முட்டாள்தனம். இந்த இனவாத அரசியல் வாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர் மட்டுமல்ல சிங்களவர்களும், நாட்டின் பொருளாதாரமுந்தான் ஏப்பமிடப்படுள்ளது எனும் உண்மையை புரிந்து கொண்டுள்ளார்கள். ஏங்கோ! சிங்களத்துக்கு எழுபத்தைந்து வருடங்களாக வாக்குப்போட்டு நம்பிக்கையோடு இருந்த மூஞ்சிக்கு என்ன நடந்தது? அந்த மூஞ்சியில் கரியைப்பூசி அவர்களை இந்த நிலைக்கு தள்ளியது யார்? இது கூடத் தெரியாதா? சொல்கிறேன் கேளுங்கள்! தமிழர் இனியும் இவர்களை நம்பி இவர்கள் பின்னால் இவர்களுக்கு வாக்களிக்கத் தயாரில்லை என்கிற தரப்புக்குள் வரும்! இனவாதம் பேசுவோரை விரட்டியடிக்க தொடங்கியதோடு புதிய கொள்கைக்கு இடம் கொடுக்க முன்வந்திருக்கிறார்கள். அனுரா அதை சரியாக பயன்படுத்தினால் சரி, இல்லையென்றால் அவருக்கும் இதே கதிதான். இந்த நாட்டை கட்டியெழுப்புவது, ஊழலை ஒழிப்பது சாதாரண விடயமல்ல, விடவும் மாட்டார்கள். அவர்களின் சும்மா இருந்து பணம் உழைக்கும் வழி இது. தமது ஊழலையும் சிறை வாழ்வையும் தக்க வைக்க எந்த நிலைக்கும் போவார்கள். எழுபத்தைந்து வருடங்களாக வாக்குபோட்டுப்பழகிய பழக்க தோஷம், செம்மறிகூட்டங்களாக கேள்வி கேட்காமல் தலையாட்டிய கூட்டம், உடனடியாக புது பாதையை தெரிவது கொஞ்சம் சிரமம். ஆனாலும் முதல் தரத்திலேயே மக்கள் ஏற்றுக்கொண்டது பெரும் சாதகமே! இது தொடர்ந்து மக்களோடு பயணித்தால்; வெற்றியடையலாம். நரி, ஆபத்து நேரமெல்லாம் மஹிந்த கொம்பனிக்கு கை கொடுத்து ஒற்றையாட்சி கொள்கையை காப்பாற்றியதன் விளைவு; தன் வாலை இழந்து நிக்குது. இனி இந்த கிழட்டு நரி அரசியலில் இருந்து ஒதுங்குவது நல்லது. அனுரா கட்சிக்கு அரகலியா ஏற்படுத்திக்கொடுத்த அரிய வரப்பிரசாதம். இது கடைசியும் முதலுமானது, இதை இவர் சரியாக பயன்படுத்திக்கொண்டால் இனவாதிகளையும் அவர்களின் அரசியலையும் முற்றாக ஒழித்து நாட்டை முன்னேற்றலாம். இவர் சரியாக தமிழரை அணுகினால் முதலீடுகளை பெறலாம். இல்லையேல் இந்தக் கட்சிக்காக உயிரை தியாகம் செய்த இளைஞரை அவமதிப்பதோடு எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாக ஒருபோதும் அரசியல் செய்ய இடமளிக்கப்படாது.
-
திருப்பதி கோவில் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் – சதி கொள்கைக்கு அனுமதிய முடியாது என்கிறது காங்கிரஸ்
இன்றைய உலகில், மதத்தை வைத்து பிழைப்பவர்களும் அதை விற்று பிழைப்பவர்களுமுண்டு. மதத்தின் புனிதம், மனித நேயம் எல்லாம் மரணித்து வெகுகாலமாகிவிட்டது. இந்து தமிழர் கட்சி தலைவர், ராம ரவிக்குமார் கிறிஸ்தவர்களை சாடியிருக்கிறார். ஒன்று இவர்களின் லாப நோக்கு அல்லது நிர்வாக திறன் இன்மையே காரணம் என்பதை ஒத்துக்கொள்ள தயாரில்லை. அங்கே முழங்கினால் இங்கே சச்சியர் வீட்டில் அடை மழைபெய்யும். கிறிஸ்தவர்களை வாங்கு வாங்கென்று வாங்குவார். ஆனால் தமிழக அரசு, இது ஒரு ஊர்ஜிதமற்ற குற்றச்சாட்டு என்றும் இவர்கள் கூறும் நிலையத்தில் கோவில் பிரசாதம் (லட்டு) செய்ய பொருட்கள் கொள்வனவு செய்வதில்லையென்றும் ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கிறது.
-
வெளிநாடொன்றில் இலங்கையை சேர்ந்த இளம் தமிழ் பெண் கொடூர கொலை: வெளியாகியுள்ள தகவல்
விசுகரின் காதுக்கு இந்த விஷயம் எட்டவில்லையோ?
-
இரண்டு மணிநேரமாக 20 கிலோ மலைப்பாம்பின் பிடியில் சிக்கியிருந்த தாய்லாந்து பெண் - போராடி மீட்ட பொலிஸார்
தாய்லாந்தில், விசேஷ உணவாக பாம்பு சாப்பிடுவதை வலைத்தளங்களில் பாத்திருக்கிறேன். பாம்பிறைச்சிப்பிரியர்கள் துடிக்கிறார்களோ என்னவோ?
-
இரண்டு மணிநேரமாக 20 கிலோ மலைப்பாம்பின் பிடியில் சிக்கியிருந்த தாய்லாந்து பெண் - போராடி மீட்ட பொலிஸார்
மலைப்பாம்பு, தான் கவ்விய இரையை சுற்றி இறுக்கி எலும்புகளை ஒடித்து கொன்று இலகுவாக விழுங்குவதற்கு ஏற்ப வசதியாக தயார் செய்து விழுங்குமென அறிந்திருந்தேன். இறுக்கியதால் அவர் உடல் கண்டி நீலநிறமாக மாறியிருக்கு என நினைக்கிறன். ஆயினும் அவர் எவ்வளவு பதட்டமடைந்திருப்பார். அவரின் விதி வலியதாக இருந்திருக்கு. தாய்லாந்தில் இப்படி சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன.
-
அமெரிக்கா நோக்கி பறந்தார் பஸில்!
அதிலென்ன சந்தேகம்? நல்லாட்சி அமைந்தபோது ஒளிந்திருந்த மஹிந்த குடும்பத்தை பாதுகாப்பாக அனுப்பியது ரணில், தன்னுடைய பதவிக்காலத்தில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து தண்டிக்காது பாதுகாத்தது ரணில், அநுர வந்தால்; ரணிலுக்கும் ஆப்பு இருக்கு. இன்னும் ஒரு நாளில் தெரிந்து விடும். யார் வந்தாலும் தமிழருக்கு நீதி கிடைக்காது என்பது மட்டும் உண்மை.
-
கருணா அம்மான் கட்சிக்குள் உடைவு; கட்சியிலிருந்து வெளியேறினார் ஜெயா சரவணா
இதுதான் விஷயம். பணம் இல்லையென்றால் இவருக்கும் வேலை இல்லைத்தானே, கிளம்பிவிட்டார். கிளம்பியவர் குற்றச்சாட்டுடன் கிளம்பியிருக்கிறார். தன் சொந்த உழைப்பில் சேவை செய்பவர் ஏன் இவ்வளவுகாலம் பணம் தீரும் வரை அவர்களோடு ஒட்டியிருந்தார் என்பதையும் விளக்கியிருக்கலாம். அவரை குற்றம் சாட்டுவதற்கு முன் அவர் குற்றச்சாட்டை முந்திக்கொண்டு வைத்துவிட்டார். நம்புவது யார்?
-
கருணா அம்மான் கட்சிக்குள் உடைவு; கட்சியிலிருந்து வெளியேறினார் ஜெயா சரவணா
இப்போ ஒரு பண்பு வளருகிறது, எல்லா குற்றங்களையும் தாங்களே செய்வது, பின் அங்கு திருட வழியில்லை, என்கிற வங்குரோத்து நிலை வந்தவுடன், இலகுவாக தங்கள் குற்றங்களை மற்றவர் தலையில் கட்டிவிட்டு தாம் ஏதோ நல்ல மனிதர்போல் அறிக்கை விடுவர். அரசுமுதல் சாதாரண மனிதர் வரை தொடர்கிறது.
-
சஜித்தின் வாக்குகளை சிதறடிக்கவே சுமந்திரனின் ஆதரவு நாடகம் – கஜேந்திரகுமார்!
ஜனநாயகம், ஜனநாயகம் என்று தொண்டை கிழிய கத்துவார்கள். ஆனால் மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிப்பார்கள். கேட்டால்; நாங்கள் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பர். இவர்களாலேயே பல கட்சிகள் உருவாகி மக்களை அங்குமிங்கும் அலைக்கழிக்கிறார்கள். தேர்தல் என்றவுடன், தலைவர்கள், மக்கள் நலன் என்று ஓடோடி வருவார்கள், வாக்குகளை கொள்ளையடித்த கையோடு மக்களை மறந்து, மறைந்து விடுவார்கள். இதுதான் இவர்களின் தலைமைப்பண்பு. மக்களுக்கு என்ன தேவையிருக்கிறது,அவர்களோடு உடனிருக்க வேண்டுமென்பதெல்லாம் அவசியம் என்பதை விட, சிங்களத்துக்கு உடனிருந்து, தோள் கொடுத்து தூக்கி விடுவதே முக்கியம் அவர்களுக்கு.
-
கருணா அம்மான் கட்சிக்குள் உடைவு; கட்சியிலிருந்து வெளியேறினார் ஜெயா சரவணா
இவ்வளவு காலமும் ஒத்தோடினவருக்கு இப்போ சடுதியாக அதுவும் தேர்தல் நேரத்தில் இப்படியொரு அறிவிப்பு. சோழியன் குடுமி சும்மா ஆடாது கண்டியளோ .... பொறுத்திருப்போம்.
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
ஆழ்ந்த அனுதாபங்கள். தந்தையாரின் ஆன்மா அமைதியில் இளைப்பாறுவதாக!
-
சஜித்தின் வாக்குகளை சிதறடிக்கவே சுமந்திரனின் ஆதரவு நாடகம் – கஜேந்திரகுமார்!
தாங்கள் தேர்தலை பகிஷ்கரிப்பது என்றாகிவிட்டது, பின் யார் யாருக்கு வாக்களித்தால் இவருக்கென்ன?ஏன் சஜித்தின் வாக்கு குறைகிறது என அழுகிறார்? அவர் ஒற்றையாட்சி பிரதிநிதி இல்லையா? ஒவ்வொருவரின் கபட நாடகமும் வெளிவருகிறது. அளிக்கப்பட்ட வாக்குகளையே மாற்றி முடிவை வெளியிடுகிறார்கள், இவர் பகிஷ்கரித்தால்; இவரின் வாக்கு பத்திரமாக வெற்றிடமாக அறிவிக்கப்படுமா?
-
மன்னாரில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!
இங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், நீதி கிடைப்பதைவிட வைத்தியர் அர்ஜுனாவுக்கு தண்டனை பெற்றுக்கொடுத்து அவரை இந்த களத்தில் இருந்து அகற்றி விட்டால், தாங்கள் தப்பித்துக்கொள்ளலாம் என சந்திப்புகளை நடத்துவோரும் முறைப்பாடளித்து அவர் குரல்வளையை நசுக்க துடிக்கும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளுமே அதிகம். மக்களைப்பற்றியோ அவர்கள் தேவைகள் கவலைகள் இழப்புகள் பற்றியோ சிந்திப்பவர் எவருமில்லை, சிந்திப்பவர் யாரும் பேசக்கூடாது. இத்தனை அழுத்தங்களுக்கும் மத்தியில் முயன்று சேவையாற்றும் நல்ல வைத்தியர்களுக்கு எனது வாழ்த்துக்குள். என்ன செய்வது? ஒரு முசுறு கடிக்க கூண்டோடு அழிப்பது இயற்கையாகி விட்டது. அதனால் உங்களைப்பற்றி யாரும் கதைக்கப்போவதில்லை என்பது வருத்தமளிக்கிறது. இந்த அசமந்தம் இன்று நேற்றல்ல புலிகளின் காலத்திலும் அவர்களுக்கு தெரியாமல் தெரிவிக்கப்படாமல் இருந்தது ஒரே இரவில் இரண்டு தாய்மார் அதுவும் பலகாலம் தவமிருந்து இனிமேல் கருத்தரிக்க சாத்தியமில்லை எனும் தருவாயில் நடந்த சோகம். அங்கே இருந்த பொறுப்பான தாதி வைத்தியரின் அறிக்கையை சரியாக வாசிக்காமல் அந்த தாயையும் வருத்தி நடந்த துன்பியல். ஆனா அதன் பின்னும் அந்த தாதி அவர்களின் வலியை புரிந்து கொள்ளாமல் வைத்திய சாலை ஊழியர்களுக்கு பணம் கொடுத்து உங்கள் இறந்த குழந்தையை புதைத்து விடுங்கள் என்று அவர்கள் மனதையும் கொன்றார். சம்பந்தப்பட்டவர்கள் ஏழைகள், இடம் பெயர்ந்த நிலை, கையறுநிலையில், எத்தனையோ கனவு ஆசையோடு வந்தவர்கள் மௌனமாக கண்ணீரோடுவைத்தியசாலையை விட்டு வெறுங்கையோடு கிளம்பினார்கள். "மக்கள் பணியே மகேசன் பணியாகும்."
-
மன்னாரில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!
அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளியை பராமரிக்க முடியவில்லை, சிகிச்சையளிக்க முடியவில்லை இதற்குள் இவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தாராம் வைத்தியர் அர்ஜுனா எனும் முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர்கள் கைத்தொலைபேசியில் விளையாடினார்களா உரையாடினார்களா என்பதை அர்ஜுனா கண்டிருப்பார் என பயந்தனரோ தெரியவில்லை. இருக்க, மகப்பேற்று விடுதிக்கு வைத்தியர் அர்ஜுனா செல்லும்போது காணொளி எடுப்போரை வெளியே நிற்கும்படியும் யாரையும் காணொளி எடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தி விட்டே அவர் உட்ச்சென்றார். அப்படியிருக்கும்போது தங்கள் கடமைக்கு இடையூறு விளைவித்தார், காணொளி எடுத்தார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். அவர்கள் தங்கள் கடமையை சரிவர செய்திருந்தால்; அந்தப்பெண் இன்று உயிரோடு இருந்திருப்பார் அர்ஜுனாவும் இரவோடிரவாக மன்னாருக்கு வந்து தடுப்புக்காவலில் இருந்திருக்க வந்திராது. வைத்தியர் அர்ஜுனா சாவகச்சேரி வைத்தியசாலையில் நடந்த மோசடிகளை வெளிக்கொணர்ந்த போது தங்களால் பேச முடியாமல் தவித்த மக்கள் தங்களுக்காக ஒருவர் பேசுகிறார் என அவரோடு அணி திரண்டு நின்றார்கள். அதனால் தங்கள் அரசியல் வாழ்வுக்கு சவாலாக வந்துவிடுவார் என அவரை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டுமென அவருக்கெதிராக அரசியல்வாதிகளும் ஊழல்வாதிகளும் காவற்துறையை பயன்படுத்தி அடக்கப்பார்த்தனர். ஆனால் மக்கள் அரசியல் வாதிகளின் முத்திரையையும் சேர்த்தே கிழித்தெறிந்தனர். சம்பவம் நடந்து, வைத்தியர் அர்ஜுனா வந்து பிரச்சனையை வெளிகொண்டுவரும்வரை எந்த அரசியல்வாதிகளும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை, கேள்வி கேட்கவுமில்லை அவர் வந்ததன் பின் அவர் செயற்பாடுகளை விசாரிக்க போயிருக்கின்றனர். அவர் பிணையில் வெளிவந்து மக்கள் அவரை வரவேற்ற நிகழ்ச்சியை பார்த்து ஒரு அரசியல்வாதி பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார். அப்போ பார்த்துக்கொள்ளுங்களேன் நமது தலைவர்களின் கடமை, பொறுப்பு எந்த நிலையில் இருக்கிறது. பொறுப்பானவர்கள் பொறுப்புடன் நடந்திருந்தால் அர்ஜுனா ஏன் அத்துமீறி நுழையப்போகிறார்?
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
நீங்கள் கட்டிய பார்சலை யாராவது தட்டிக்கொண்டு போயிருந்தால் இப்படி சொல்வீர்களா சார்? எப்படியோ சேதாரம் இல்லாமல் கட்டிய பார்சலை வீட்டுக்கு கொண்டுவந்து சேர்த்துவிட்டதால் இப்படி புகழ்கிறீர்கள், ஆனால் சாமியாருக்கும் ஒரு பாசல் காத்துஇருக்கு என்று சொல்லலையே..... அதுதான் எனது கடுப்பு!
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
உங்கள் சந்திப்பு சுவாரிஸ்சயமாகத்தான் சென்றது. இப்போ அது தனியாக பிரிந்து சேர்ந்தவர்களை காரணம் சொல்லி கழட்டி விட்டிட்டு பாசல் கட்ட வீட்டுக்காரி பேரன் பேத்தியை கூட்டுச் சேர்க்கும்போதுதான், இது என்ன அனிஞாயம்? என தோன்றுகிறது. சாமியார் தானே இந்த வித்தையை உங்களுக்கு கற்றுத்தந்தவர்? நீங்கள் குருவை விஞ்சி விட்டீர்களே!
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
அட கடவுளே.... இது என்ன அனிஞாயமாய் கிடக்கு! போறவாற இடமெல்லாம் பேரன், பேத்திகளை சொல்லி பாசல் கட்டுறது. விருந்தளித்தவர் வீட்டில் மிச்சம் மீதி விட்டிருக்கார்கள் போலிருக்கே. இனி இவர்களுக்கு அழைப்பு விடும்போது யோசிக்க வேண்டி உள்ளது. அது சரி... சாமியாருக்கு பாசல் கொண்டு வரவில்லையா? இனிமேல் உங்களுக்கு அழைப்பு இல்லை சாமியார் போகிற விருந்துகளில்.
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
எண்டாலும் சாமியாரின் பரந்த குணம் யாருக்கும் வராது! ம். சாமியாரின் உறவுகளுக்கு மட்டும் உங்களைத் தெரிந்திருந்ததாக்கும்? தனியாக போய் விருந்துண்டால் ஒட்டுமா உடம்பில?
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
உதுக்குத்தான் சொல்லுறது கிடைச்சதை மூக்கு முட்ட கட்டக்கூடாது என்று. அதுதானேபாத்தேன், அது எப்படி தனக்கு தெரிந்தவர்களை, அழைப்பே இல்லாமல் கூட்டிக்கொண்டுபோய் கச்சிதமாய் பாசல் கட்டிக்கொடுக்க முடிந்ததென்று? இப்பதான் விளங்கிச்சு அதன் ரகசியம்! இருக்காதா என்ன? தனது உறவினர் வைபவத்துக்கு உங்களை அழைத்து வண்டில் கட்டி அனுப்பியவரை உப்பிடி லேசாக அவர்களுக்கு சாமியாரை தெரியாது என்று கைகழுவி விட்டு போகிறீர்களே, ஒருவேளை உங்களை அவரோடு பாத்தால் கெடுபிடி, சோதனை பலமாக இருக்கும் பயத்தில அப்பிடி சொல்கிறீர்களோ?
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
அது என்ன தாலிக்கொடியா சங்கிலியா? பெண்களுக்கு அணிவிப்பதை மறந்து தங்களுக்கு அணிந்து கொள்கிறார்களோ தெரியவில்லை.
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
அட..... இது யாருக்கு இந்த உபதேசம்? தங்களைப்பற்றியே திரி ஓடுது என்று தெரியாமல்.