Everything posted by satan
-
மாமியாரின் அன்புப் பரிசு.
அட, நீங்களுமா? அதை கந்தையருக்கு விளக்கமாக சொல்லுங்கோ. பாவம் அவர்! நம்பி காரியத்தில் இறங்கப்போறார். உங்களுக்குள்ளும் இப்படியொரு பேயிருக்கா?
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
அப்போ .... அவர், சுமந்திரன் சொன்னதால் சஜித்திற்கு போடவில்லை என்கிறீர்கள்... காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதைதான்!
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
நிச்சயமாக, சுமந்திரன் சொல்லித்தான் மக்கள் வாக்களித்தனர், வாக்களிக்காமல் விட்டனர் என்பதெல்லாம் தங்களை தாங்களே ஏமாற்றும் செயல் மட்டுமல்ல தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் கூட. சரி, சும் சொல்லித்தான் சஜித்துக்கு போட்டார்கள், அரியத்துக்கு போடவில்லை என்றே வைத்துக்கொள்வோம். அப்படியென்றால், யார் சொல்லி ரணிலுக்கு போட்டார்கள் ? பியதாசாவுக்கு போட்டார்கள்? பியதாசாவுக்கு போட தெரிந்தவர்களுக்கு இவர்கள் கைகாட்டியவர்களுக்கு போடத்தெரியவில்லையா? அது அவரவர் விருப்பம். ஒன்று, வெறுப்பு, ஏமாற்றம், யார் வந்து நமக்கு என்ன ஆகப்போகுது சும்மா போட்டுவிடுவோம் என்கிற மனநிலை. ஏன், ஒருவர் வாக்குசீட்டை கிழித்துப்போட்டார், அதை செய்யச்சொல்லி யார் சொன்னது? சரி... இவர் கைகாட்டின வேட்பாளர் வென்றாரா? எல்லோரும் அவருக்கு வாக்கு போட்டிருந்தால், அனுராவுடன் எந்த மூஞ்சியோடு போய் பேசுவார். அவர் ஒரு வெற்றியாளரை இனங்காண முடியாதவர் மூன்று பேரிடமும் பேசினாராம் ஆனால் சஜித்தை தெரிவு செய்ய முடிவு செய்தாராம். காரணத்தை ஏன் மக்களுக்கு அறிவிக்கவில்லை? மக்களிடம் வாக்கு கேட்பவர் அதற்கான காரணத்தை விளக்காதது ஏன் ?அப்படியென்றால் அவர்கள் அதை அறிவதற்கு தகுதியற்றவர்களா? இந்த வாதம் ஒரு மக்களின் பிரதிநிதிக்கு ஏற்றதா? சர்வாதிகாரம் போல் தெரியவில்லையா? நம்புவதா இல்லையா என்பது மக்களின் பொறுப்பு. விளக்க வேண்டியது இவரின் கடமை. கேள்வி கேட்பது வாக்களிக்கும் மக்களின் உரிமை. நம்ப மாட்டார்கள் என்று எப்படி நீங்கள் முடிவு செய்தீர்கள்? அப்படியானால் உங்களுக்கே தெரியும் தகுந்த காரணமில்லை, அல்லது அந்தகாரணம் மக்களுக்கானதல்ல என்பது. காரணம் சொல்லாமல் கைகாட்டி வாக்கு போட்டு களைத்ததால் தான் மக்கள் தங்கள் முடிவை தாங்களே எடுக்கத் தொடங்கினர். அதற்கு அவர்களை குற்றம் சொல்வதும் சாபமிடுவதும் கேலி பண்ணுவதும் முறையல்ல. நான் ஜனாதிபதியாவேன் என்று அரியம் நினைக்கவில்லை மக்களும் நினைத்துப்போடவில்லை அது நடக்கிற காரியமுமில்லை. நாங்கள் இவர்களுக்கு வாக்களித்துக்கொண்டேயிருக்கிறோம், ஆனால் இவர்கள் எங்களை அந்நியராக நடத்துகின்றனர், நாங்கள் இந்த நாட்டில் வாழ தகுதியற்றவர்கள் என்கின்றனர், இவர்களுக்கு ஏன் நாங்கள் வாக்களிக்க வேண்டும்? எங்களது இந்த முடிவுக்கு காரணம் என்பதை கேளுங்கள்! என்கிற தோற்றப்பாடே, இந்த பொது வேடபாளர். எந்த காரணத்தை வைத்து இது முன்னிறுத்தப்பட்டதோ அதை அனுரா தெளிவாக பத்திரிகை பேட்டியில் சுட்டிக்காட்டியிருந்தார். எங்களது கோரிக்கை போக வேண்டிய இடத்துக்கு போயிருக்கிறது. சர்வதேசம் ஒன்று கூறுமாம், சிங்களம் ஒன்று கூறுமாம். ம்..... நாங்கள் அடித்து விரட்டப்படும்போது இவர்கள் என்ன செய்தார்கள், சொன்னார்கள்? அவர்கள் எதை செய்தாலென்ன, சொன்னாளென அனுபவிப்பது நாமல்லவா? எனது புண்ணுக்கு நான் தான் மருந்து தேட வேண்டும். அவர் வந்த வேலை தமிழ் தேசியத்தை சிதைப்பது. ஆ அது இன்னும் மூச்சிழுக்கிறது என்பதே அவரது ஆதங்கம். இனிமேல், மக்கள் மத்தியில் தன் வார்த்தை எடுபடாது, அதை வைத்து பிழைக்க முடியாது, தான் எடுத்த பணி நிறைவுறாமல் பாதியிலே தேங்கி நிக்கிறதே என்கிற ஏமாற்றம். அவரை பணியிலமர்த்திய நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன, அகற்றப்பட்டுவிட்டதே என்கிற கவலை இப்படியெல்லாம் குற்றம் சாட்ட வைக்கிறது. இவர் சொல்லித்தான் மக்கள் வாக்குப்போட்டனர் என்கிற காரணம் அடுத்த தேர்தலில் நிரூபணமாகும். அதுவரை பொறுத்திருங்கள்.
-
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புவிசார் அரசியல் போட்டியில் சிக்கிக்கொள்வதற்கு இலங்கை விரும்பவில்லை - புதிய ஜனாதிபதி அனுரகுமார
இருவருக்கும் நல்ல ஆப்பு! ஏறச்சொன்னால்; எருதுக்கு கோபம். இறங்கச்சொன்னால்; முடவனுக்கு கோபம். இப்போ யாருக்கும் எதுவும் சொல்லத்தேவையில்லை, யாருக்கும் கோவம் வராது.
-
கலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்
இந்த தேர்தல் வந்ததுதான் வந்தது, கந்தையருக்கு அதைப்பற்றிய சந்தேகங்கள் தொடர்ந்து வருகுது.
-
புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய பதவியேற்பு!
அவரது கடைசி சாதனை, தேர்தலில் மகளுக்காக தனது கடைசி வாக்கை செலுத்திய பின்னரே மூச்சை நிறுத்திக்கொண்டார். இறுதிவரை அரசியல். அவரது காலத்தில் இனப்பிரச்சினையை அருமையாக தீர்த்திருக்கலாம் இந அபிமானம் விடவில்லை. மஹிந்தா தீர்த்திருக்கலாம் சுயநலம் விடவில்லை. இனத்தை வைத்து பிழைத்து நாட்டை அழித்து தொடரவும் செய்தார்கள்.
-
தமிழர்களுக்கான சமஷ்டி தீர்வை வழங்காமல் உண்மையான மாற்றம் சாத்தியமில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புரிந்துகொள்ளவேண்டும் - பா.உ கஜேந்திரகுமார்
இவர் ஒரு அறிக்கை, சுமந்திரன் வேறொரு அறிக்கை. தோற்றது அரியம் என்பது இவர்களின் கனவு. அரிய நேந்திரனுக்கு போதிய கால அவகாசம் இல்லை, அனுரவைப்பற்றி மக்களுக்கு தெரியாது, ரணில் நரியென்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் சஜித்துக்கு போட்டார்களேயொழிய இவர்கள் சொல்லி போட்டிருப்பார்களென நினைக்கவில்லை. இருந்தாலும் அடுத்த தேர்தலில் இவர்களின் வண்டவாளம் தெரியத்தானே போகுது. அப்போ பாப்போம் அதுவரை சிலாகிக்கட்டும்.
-
அநுரவின் அரசிற்கு ஆதரவை வழங்க மறுக்கும் கட்சிகள்
சுமந்திரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார், எல்லா கட்சிகளுடனும் கலந்தாலோசித்து இருக்கிறோம் எல்லோரும் எமது கொள்கைகளை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் வெல்லும் கட்சியுடன் இணைந்து செயற்படுவோம் என்றார். என்ன..... கொஞ்சம் கூட எதிர்பார்ப்பார். எப்போ அனுரா கூப்பிடுவாரென காத்திருக்கிறார்கள், அனுரா கூப்பிடுவாரோ தெரியவில்லை. சஜித், தான் ஒத்துழைப்பு வழங்குவேனென கூறியிருக்கிறார். நாமலும் அதையே கூறியிருக்கிறார். அவர் பெரும் பதவி எதிர்பார்ப்பார். ரணில் தனது குழந்தையை ஒப்படைப்பதாக நாத்தழுதழுத்தார்.. பதுக்கல் பேர்வழிகள் தப்பியோடவும்முடியாது, விசாரணைகளில் இருந்து தப்பவும் முடியாது, தானாகவே விழுவார்கள். இல்லையேல் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விட்டோமே என பின்னாளில் அங்கலாய்ப்பர். சிலர் தலைமைக்கு தெரியாமல் ரகசிய டீலும் போடலாம்.
-
கால மாற்றத்துக்கு ஏற்ப நாமும் மாறாவிடின்..
இந்தியா என்கிற சனியனை தூர வைத்தாலே நம் நாட்டின் பாதிப்பிரச்சனை தீரும். நம்மை பிடித்த சனியன், நமது காலைச்சுத்தின பாம்பு. வெகு சீக்கிரம் நம்மை விட்டு விலகாது. வலிய வழிய மூக்கை நீட்டும்.
-
நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு
ஜனாதிபதி முறையை ஒழிப்போம் என்கிற கோஷத்துடன் கதிரையேறுகிறவர்கள் அதிலே நிலையாய் இருந்ததுதான் வரலாறு. அதற்கு முற்றுப்புள்ளி!
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
பொறுத்திருங்கள், அனுரா யாரை அரவணைக்கிறார்என்பதே கேள்வி. நாடு இக்கட்டில் இருக்கும்போது பதவியை ஏற்கச்சொல்லி அழைப்பு முதலில் சஜித்துக்கே விடுக்கப்பட்டது, அவரோ தயங்கி விட்டார். அதைவிட வடிவேலு நகைச்சுவை வசனத்தில், பகிரங்கமாக, கட்சியின் முடிவுப்பிரகாரம் சஜித்துக்கும், அரியத்துக்கும்,ரணிலுக்கும் குத்தினேன் என்று கூறினார். அதற்கு சிரிக்கலாம் அதேநேரம் சிந்திக்க கூடியது. இவ்வாறு கூறிவிட்டு எந்த மூஞ்சியோடு அனுராவோடு பேச முடியும்? எழுபத்தைந்து ஆண்டுகளாக ஒட்டு மொத்தமாக வாக்குகளை அளித்து என்ன நன்மை பெற்றோம்? ஏமாற்றப்பட்டதே வரலாறு. ஏதோ ஒரு சிங்கள கட்சிக்கு மாறி மாறி வாக்களித்து ஒன்றுக்கும் உதவாதவர்களாகவே கருத்தப்பட்டோம். நம்பிக்கையின் அடிப்படையில் வாக்களிக்கிறோமாம். எந்த நம்பிக்கையில்? காலம் முழுவதும் ஏமாற்றப்பட்ட வரலாறு இருக்கும்போது நம்பிக்கை எங்கிருந்து? யாரிடமிருந்து வந்தது? தலைவர்கள் நம்பிக்கையற்றவர்கள், ஒரு கொள்கை இல்லாதவர்கள், ஒரு தலைவன் இல்லை, கட்சி பிரிந்திருக்கிறது, எல்லோரையும் அணைத்துப்போகதெரியவில்லை, விரட்டுவது, வெருட்டுவது, சவால் விடுவது, கட்சி மக்களுக்காகவா, மக்கள் கட்சிக்காகவா? போன வருடம் தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிடுவது என முடிவெடுத்தவர்கள் பங்காளிக்கட்சிகளுக்கு அந்த முடிவை தெரிவித்தனரா? விளக்கமளித்தனரா? பத்திரிகை வாயிலாக அறிந்த அவர்கள் விளக்கம் கேட்டபோது, ஏதோ சொல்கிறார்கள். ஏன் அதை நேரடியாக சொல்லியிருக்கலாமே? தமிழரசுக்கட்சியின் பெயரை பாவிக்கக்கூடாது என கட்டளையிடுகிறார். அப்போ, அதன் உண்மை நோக்கமென்ன? மாவையர் எல்லாவற்றுக்கும் தலையாட்டுவார், தலைமைத்துவ பண்பு இருக்கிறதா அவருக்கு? அனிஞாயத்தை தட்டிகேட்கும் தைரியம் இருக்கிறதா அவருக்கு? இவர்களை நம்பி மக்கள் இனியும் இவர்களை தொடரலாமா? எழுபத்தைந்து வருடங்களாக வாக்குப்போட்டு ஏமாந்தே, மக்கள் இந்த முடிவுக்கு வந்தனர். அதற்கு இவ்வளவு கோபம், வெறுப்பு. அப்போ, மக்களுக்கு எவ்வளவு வெறுப்பிருக்கும். அதிலும் அவர்கள் தெரிந்த வேட்ப்பாளர் தோல்வியை தழுவியுள்ளார். அவர் வென்றிருந்தாலும் கூட எதுவும் நடவாது. பழைய குருடி கதவைதிறவடி கதைதான். அரியம் முழு நம்பிக்கையுடன், மக்களுக்கு நேர்மையாக நடக்கும் பட்ஷத்தில் நம்மால் சாதிக்க முடியும். ஆனால் இவர்கள் தனி வழியில் செல்வதே தமிழருக்கு செய்யும் உதவி. சிலந்தியும் ஏழு முறை விழுந்து எழுந்துதான் தன் அழகான கூட்டை கட்டுகிறது. யாரும் எடுத்தவுடன் வெற்றி பெறுவதில்லை. தொடர விடாமல் தடுப்பார்கள். நீந்த நினைக்கிறவன் நீரில் இறங்கவேண்டும், மூச்சு பிடித்து தொடரவேண்டும். தாண்டு விடுவேன் என அஞ்சுகிறவன் அடுத்தவர் கதையை கேட்பவன் நீரிலே இறங்கக்கூடாது. கரையிலே நின்று தண்ணீர் ஆழம் அதனால் இறங்கமாட்டேன் என்று முதுகு காட்டி ஓடி விடவேண்டும்.
-
நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு
அவருக்கு தெரியும், தனக்கு எந்த கட்சியும் ஆதரவு கொடுக்காது, ஆனால் தொந்தரவு கொடுத்து விரட்டுவார்கள் என்பது. மக்கள் பலம் உண்டு, ஆதலால் நீதிமன்றத்தின்மூலமே காரியங்களை கையாளும்போது இவர்கள் நொறுங்க, நொறுக்க வாய்ப்பிருக்கிறது. இல்லையேல் அவரும் மாற வாய்ப்பிருக்கிறது பதவியை தக்க வைக்க. அல்லது உதறிவிட்டு வெளியேற வேண்டும். எல்லாம் தெரிந்தே கால் பதித்துள்ளார். ஊழல்வாதிகள் அடங்கியிருக்கிறார்கள், ஆடத் தொடங்குமுதல் அடக்கிவிட வேண்டும். அப்போதே சவாலை சமாளிக்க முடியும் அவரால்.
-
வெளிநாடு செல்வதை தடுக்கும் நடவடிக்கை!
கந்தையர்! இலங்கை அரசியலில் என்றும் இல்லாத வரலாறு காணாத அதிசயம், ஒரு நிகழ்ச்சி, அனுரா கத்தோலிக்க கர்தினாலை முதலில் சந்தித்திருக்கிறார். மஹிந்த கூட்டம் சிறை செல்ல தாயாராக வேண்டும். இங்கே பிக்குகள் குழம்புமென அனுராவுக்கு தெரியாத சிறுகுழந்தையா அவர்? ஆனால் தமிழருக்கு எடுத்த எடுப்பில் தட்டில் வைத்து தருவார் என்று நான் சொல்லவில்லை. எங்கே அடியை ஆரம்பித்தால் மற்றவை தானாக சரியுமென தெரிந்திருக்கிறார். நாங்கள் ஊழல் செய்யவில்லை, முடிந்தால் எந்த நாட்டிலேயும் வழக்கு தொடர்ந்து நிரூபியுங்கள், என்று நாமல் சவால் விட்டார். அதற்கு முதல், இவர்களை எப்படி விசாரணை வலையத்துக்குள் கொண்டு வருவது என்று நிதானித்தே வைக்கிறார் ஆரம்ப அடியை. அரியத்தார் இவருடன் இணைந்து செயற்படுவார் என நினைக்கிறன். நீதிமன்றம் சட்டம் மூலமே தனது நகர்வுகளை செய்வார்.
-
நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு
அவரை அனுரா அழைக்கப்போவதுமில்லை, பேசப்போவதுமில்லை. தன் இனத்தை காட்டிக்கொடுத்து, விற்று வயிறு வளர்க்கும் ஜென்மங்களை அவர் தேடமாட்டார். அப்படியென்றால் தேர்தலுக்கு முன், சும்மா ஒரு மரியாதைக்காக கூட அவரை சந்திக்கவேயில்லை யாழ்ப்பாணம் வந்தபோது. இவருக்கு ஓடி ஒளிக்க நாடுகளுமில்லை இந்தியாவுக்கு போகலாம் .........?
-
வெளிநாடு செல்வதை தடுக்கும் நடவடிக்கை!
இல்லை, பௌத்தத்தை வைத்து அரசியல் செய்ய முடியாது என்பது கடந்த கால மக்களின் சிந்தனை தெளிவுபடுத்தியுள்ளது. மஹிந்த பட்டாளத்துக்கு இந்த நிலை வந்து நாட்டை விட்டு தப்பியோடும் நிலை வருமென்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் அவர்களுடபட. நாடு முன்னேற வேண்டுமென்றிருந்தால்; அதுவும் நடக்கும் காலம் வரும்போது. சும்மா தெண்டத்துக்கு மக்களுக்கு சுமையாயிருந்து அவர்களில் வயிறு வளர்த்து இந்த கூட்டம் பெருகி, நாட்டுக்கும் மக்களுக்கும் பெரிய பிரச்சினை!
-
நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு
திருடர்கள். அவர்களுக்கு பிரபுக்கள் அந்தஸ்து. ஆமாம்... மக்களின் பணத்தில் இவர்கள் பிரபுக்கள். அவசர பயணம், தாங்களாகவே தங்களை காட்டிக்கொடுக்கிறார்கள். அவர்கள் அரசியலில் வென்றபோது இப்படியான கைதுகளின் மூலமே எதிரிகளை காலில் விழ வைத்தனர். இப்போ இவர்கள் மடியில் கனம், அதனால் தப்ப முயற்சிக்கிறார்கள். கடைசி வரை வெல்வோம் என்று காத்திருந்து ஏமாந்தவர்கள் இறுதியில் மாட்டுப்பட்டார்கள். டக்ளஸ் ஹிஹி...... அவரை வளர்த்தவர்களுக்கே இந்த நிலை என்றால்; அவரின் நிலை என்ன என்று சிந்திக்கிறார். முன்பெல்லாம் அரச பதவியேறியவுடன், இவரை அழைத்து பணி கொடுப்பது வழக்கம். இப்போ அந்த அழைப்புக்காக காத்திருக்கிறாரோ என்னவோ, சுமந்திரன் வாழ்த்துச் சொல்லி கேட்கவில்லை. அவரும் தப்பி விட்டாரோ அல்லது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரோ தெரியவில்லை, விசாரித்துப்பாருங்கள்.
-
இணைந்து செயற்படுவதற்கு ஐக்கியதேசிய கட்சி தீர்மானம் - இன்று விசேட கூட்டம்
ம்....... இல்லையேல் தப்பிப்பிழைக்க முடியாதே, இனவாதம் ஊழல் கலாச்சாரம் மறைந்து இவர்களையும் மக்கள் மறந்து விடுவார்கள். அரசியல் ஊழல் இவற்றை நம்பி வாழப்பழகிய கூட்டமல்லவா!
-
வெளிநாடு செல்வதை தடுக்கும் நடவடிக்கை!
இறந்த தம் உறவுகளை அமைதியான வழியில் நினைவுகூர யாருக்கும் ஜனநாயக நாட்டில் உரிமை உள்ளது. அதை தடுக்க, இழப்பை அறியாதவர்களுக்கும் இழப்பை ஏற்படுத்தியவர்களுக்கும் உரிமையில்லை, சமாதானத்துக்கும் நாட்டின் அமைதிக்கும் பங்கம் ஏற்படுத்துபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அறிவித்தால் போதும். தாங்களாகவே தலையைகொடுக்க விரும்ப மாட்டார்கள். மக்களின் பலம், ஊழல் குழப்ப காரருக்கு சாதகமாயில்லை. சரத், தேரர்கள் போட்ட ஓலம், கொழுத்திய தீ பற்றவில்லை கடந்த வருடம். ஓடித்தப்பவும் முடியாது, பொறியில் மாட்டிய மூஞ்சூறு மாதிரி தப்பிக்க வழிதேடுவார்களே ஒழிய இதிலெல்லாம் மினக்கெடாமல். மிக இலகுவாக விசாரணைக்குழு வழியில் இழுக்கப்படுவார்கள். பொறுத்திருந்து பாப்போம். ஊழல்வாதிகளாலும் இனவாதிகளாலும் போற்றி வளர்க்கப்பட்ட பிக்குகள் கொஞ்சம் வீதிக்கிறங்கும். பௌத்தம் இல்லாமல் ஆக்கப்படப்போகிறது, அதற்கான ஒரு பாதுகாப்புமில்லை என்று இவர்கள் எழுப்பிய குற்றச்சாட்டையும் தாண்டியே அனுரா வென்றார். ஆகவே பௌத்தம் வாயை மூடிக்கொண்டிருப்பது நல்லது. இல்லையேல் மகிந்த பட்டாளத்துக்கு ஏற்பட்ட நிலையே பிக்குகளுக்கும் வரும். சும்மா இருந்து சாப்பிட்டு பழகிய அவர்கள் உழைத்துச்சாப்பிட தயாரா?
-
“நான் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.” புதிதாக தெரிவான ஜனாதிபதி அநுரவுக்கு ஜனாதிபதி ரணில் உருக்கம்!
நம்ப வைத்து கழுத்தறுத்த நரியின் கருமவினை அவரை தொடர்ந்து போட்டறுக்குது. மகிந்த பட்டாளத்துக்கு ஒரு கோஷம், "நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்ட கதாநாயகர் நாங்கள்." இவருக்கு ஒரு கோஷம், நாட்டை வரிசை யுகத்திலிருந்து மீட்டேன்." இவரை பொம்மைபோல வைத்து காரியம் சாதிக்க நினைத்த மகிந்த பட்டாளத்துக்கு பெரிய ஏமாற்றம். அவர்களுக்கு ஆபத்தில் கைகொடுக்க இனி யாருமில்லை, கூடியிருந்தவர்களும் ஓட தொடங்கி விட்டனர். போர் வெற்றி பேசிய சரத்தும் மண் கவ்வினார். மக்கள் எதிர்பார்த்தது வேறு. அதை தேடி அனுராவை அண்டியிருக்கின்றனர். பாப்போம் அனுரா எப்படி வெட்டியாளப்போகிறாரென.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
வயிற்றெரிச்சலால் சம்பந்தமில்லாமல் ஏதோ புலம்புகிறார் அவர், அவருக்கு நம் இழப்புகள், தேவைகள் தெரிவதுமில்லை, கவலையுமில்லை, இன உணர்வுமில்லை. விழுந்து போன தன் இனத்தை பார்த்து தோல்வியை எள்ளி நகையாடுபவர் அந்த இனத்துக்கு வேண்டியவருமில்லை. விடுங்கள் அவரை, அவர்பாட்டில் களைத்ததும் ஓய்ந்து விடுவார்.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
அனுரவின் வெற்றி உங்கள் கருத்துக்கு எதிராக இருக்கிறதே. அனுரவின் கட்சி வெல்லும் என கடந்த தேர்தல்களில் யாரும் நினைக்கவில்லை. தமிழரசுக்கட்சியிலுள்ள புல்லுருவிகளை களைந்தால் நமக்கு வெற்றி நிட்சயம். சளைக்க மாட்டோம். தமிழர் எல்லோரும் கடந்த காலத்தில் தமிழரசுக்கட்சிக்கு மட்டுமா வாக்களித்தனர்?
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
பொது வேட்பாளர் என்பது இன்றைய தமிழரின் அபிலாசைகளை கருதி பிறந்த குழந்தை. அது உடனேயே ஓட்டப்போட்டியில் வெற்றி பெறவேண்டுமென நாம் நினைத்தால்; அது நமது தவறு. அதுவும் இரண்டுபட்ட தமிழரசுக்கட்சியை வைத்துக்கொண்டு எதிர்பார்ப்பது நமது அனுபவக்குறைவேயல்லாமல் வேறொன்றுமில்லை. அவர் வெற்றி பெறாததால் ஒன்றும் குடிமுழுக்கப்பபோவதில்லை. எமது தேவைகளை, அபிலாசைகளை முன்னிறுத்தியுள்ளது. அது சிங்களத்துக்கும் புரியும். அனுரா அதை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டுள்ளார். புதிய பாதையில் பயணிப்பது முதலில் சிரமமாகத்தான் இருக்கும், போகப்போக அதன் ஏற்ற இறக்கங்கள் புரியும்.
-
ஜனாதிபதித் தேர்தலின் தோல்வியை ஏற்றுக் கொண்டார் ரணில் விக்ரமசிங்க
இவர்கள் அத்தனைபேரும் இனி அனுராவுக்கு தூது அனுப்புவார்களா அல்லது தொலைபேசி எடுத்து நேரடியாக வாழ்த்து சொல்வார்களா?
-
நாளை அமெரிக்க தூதரகம் மூடப்படும்
ஹிஹி..... அமெரிக்காவுக்கு குடியேற்ற விசா ஏற்க விரும்பவில்லைபோலும். இந்த முறை விசேட அறிவிப்பு. கடந்தகால அனுபவத்தினால்.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
கண்டிப்பாக இல்லை. மஹிந்த குடும்பம் விசாரணைகளை எதிர்கொள்ளும், தமிழருக்கு கொடுமை செய்ததற்காகவல்ல, பதுக்கிய சொத்துக்களை பறிப்பதற்காக. போர்க்குற்றம் தொடர்பாக உள்ளூர் கண்துடைப்பு விசாரணை செய்து, நடந்தது என்னவென்று காட்ட முயற்சிப்பார். அவர் ஏற்கெனவே கூறி விட்டார், அதாவது போரில் என்ன நடந்தது என அறியவே தமிழர் விரும்புகின்றனர், யாரையும் தண்டிக்க அவர்கள் விரும்பவில்லை, அது எனது வேலையுமில்லை, அதை நீதிமன்றம் கையாளும் என்று உறுதிபட கூறிவிட்டார். பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்கிற நிலையில் தமிழர் இப்போ. இந்தியா மூக்கை நுழையா விட்டால் சரி.