Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. ஹாஹா...... மோதிரம் போடவா கழற்றவா கடத்தல்? இன்றிலிருந்து இவர்கள் மூவருக்கும் எங்கும் எதிலும் அழைப்போ, அனுமதியோ இல்லையாம். யாரையாவது இவர்கள் சந்திக்க உள்ளே வந்தாலும் உள்ளே அழைத்து தனிப்பட்ட வழியில் பலத்த சோதனையும் கேள்விகளுமாம், ரகசிய கமரா வேறயாம். இதையெல்லாம் தாண்டவேண்டுமென்றால் இவர்கள் கர்ப்பிணிப்பெண் வேடந்தான் போடவேண்டும். இருந்தாலும் இவர்களின் முழிக்கிற முழி காட்டிக்கொடுத்துவிடுமே சம்பந்தப்பட்டவர்களுக்கு.
  2. பார்சல் கட்டத்தான் அனுமதியில்லை, சட்டியோட கொண்டுபோனால்....? என்ன.... வாகனம் ஒன்று பெரிசா வேணும் அவ்வளவுதானே.. ஒன்பது வடை போன பானைக்கு இது எம்மாத்திரம்? இதுக்கெல்லாம் மினைக்கெடுவது சுத்த வேஸ்ரூ மூவருக்கும்!
  3. ருசி கண்ட மனம் அழைப்பு தேடுது....? அவரின் தொழில் ரகசியத்தை பயன்படுத்தி கட்டிக்கொண்டு போக. சாமியார் உஷாராகிவிட்டார். இப்படியான ஆட்களை கூப்பிட வேண்டாம் என்று வீட்டில கண்டிப்பான உத்தரவால். அவர்கள் வயிற்றில் அடிக்கிறாராம். இருந்தாலும், ஒவ்வொருவரும் தங்கள் அனுபவங்களையும் உங்கள் மூவரின் தலையில் கட்டி பகிர்ந்தும் அதற்கு ஒரு சந்தர்ப்பத்தை அமைத்து கொடுத்ததற்கும் மூவருக்கும் நன்றிகள். எத்தனைபேர் தங்களுக்கு அழைப்பு வந்தா கட்டிக்கொண்டு போகலாமென காத்திருக்கிறார்களோ? எல்லோரின் ஆவலையும் எதிர்பார்ப்பையும் தூண்டி விட்டதோடு சாமியாருக்கு ஒரு காவலாளியும் ஏற்பாடாம் அவர் பங்கு பற்றும் கொண்டாட்டங்களில்!
  4. மருந்தேதும் ஏற்றாமலேயே சிகிச்சை அளித்திருக்கிறார்கள். பலரை கொல்லும்போது மரண பயம் தெரிவதில்லை, அப்பாவிகளை சிறைக்கு அனுப்பும்போது அவர்களின் நோய்கள், கவலைகள், நிஞாயங்கள் புரிவதில்லை. தமக்கென்று வரும்போது அத்தனையும் வந்துவிடும் அரசியல்வாதிகளுக்கு. என்ன...... இத்தனை வாதிப்பிரதிவாதங்கள் நடந்து அவர்களை சிறைக்கு அனுப்பினாலும் நாளைக்கு எதுவும் நடவாததுபோல் நாட்டுக்காக சிறை சென்ற வீரர்களாக வரவேற்கப்பட்டு இன்னொரு அமைச்சு கொடுக்கப்பட்டு இன்று இழந்ததை நாளை மீட்டுக்கொள்வார்கள். நாட்டிலே அனர்த்தம், தட்டுப்பாடு, போராட்டம் இப்படி ஏதும் நடந்தாலே அரசியல் வாதிகளின் வங்கிக் கணக்குகளில் பணமழை பொழியும். இவருக்குப்பின்னால் மறைந்திருக்கும் முதலைகள் அகப்படுவார்களா அல்லது வெறும் நாடகந்தானா? இல்லை ..... இப்படி எத்தனையோ கொலை வழக்குகள் பிரபல்யமாக நடந்து தண்டனை அறிவித்து இன்று பதவி சுகத்தோடு இருக்கிறார்கள். வெறும் காலம் சக்தி பண வாத விரையம்!
  5. அட இவ்வளவுதானா தமிழ் படுகிற பாடு காணாதென்று எதிர்காலத்திலுமா? எனது பேரப்பிள்ளைகளும் உங்கள் பேரப்பிள்ளைகளும் பெயருக்காக அடிபட வேண்டி வந்தால்?
  6. உந்தகுசும்புதானே கூடாது சாமியார். அவர்தானே நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு படித்தது என்று ஒத்துக்கொண்டுள்ளார். இப்போ, எண்களும் சுயம் மாறி வேலை செய்யுமோ இல்லையோ? இனி, தாங்கள் தடக்கி விழுந்தாலும் சோதிடம் கேட்டு சோதிடப்பிரியர்களின் தொல்லை தொடரப்போகுது கந்தையாப்பாவுக்கு! தெரியாமல் வாயை கொடுத்து விட்டார் பாவம். தொடரட்டும் உங்கள் பணி சிறக்கட்டும் தொடருவோரின் வாழ்வு!
  7. பாவம் சிறியர்! அவர்கள் பெயர் வைப்பதில் முந்திவிட்டார்கள். பரவாயில்லை, நீங்கள் தெரித்தெடுத்த பெயரை எனக்கு அறிவியுங்கள், எனக்கு பேரப்பிள்ளை கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அவருக்கு அந்தப்பெயரை சூட்டி மகிழ்கிறேன். களமே உற்சாகத்திலும் மகிழ்ச்சியிலும் மிதக்குது, வாழ்த்துகிறது.! எனது வாழ்த்துக்களும்! ஆனால் பெயர் திகதி பார்ப்பது சும்மா எதிர்காலத்தை கணிப்பதற்காகதானே?
  8. அவரது அடுத்த பயணம் வரை இந்தப்பயணம் தொடரும் காத்திருங்கள், பொறுத்திருங்கள், அஞ்சாதீர்கள் வாசிப்பதற்கு. அப்படித்தான் எனக்கு சிறியரும் சுவியரும் ஆலோசனை தந்து ஊக்கப்படுத்தினார்கள், அதை உங்களுடன் பகிர்கிறேன். பயப்படாதீர்கள் வந்துகொண்டே இருப்பார். கண்டிப்பாக இவர் பார்க்க வேண்டியவர் பாதிக்கால் மருத்துவரை.
  9. சும்மா.... சாரை குஷிப்படுத்துவோம் என்றால்; உங்களுக்கேன் இவ்வளவு பொறாமை? இப்படி ஏற்றி விட்டு, அடுத்தமுறை மிளகாய்தூளுக்கு சொல்லி பாருங்கள்... எவ்வளவு என்கிற கேள்வியே இல்லாமலே சொந்தச் செலவிலேயே கொண்டுவந்து தருவார். உங்களுக்கும் குஷி வரும்!
  10. அட ...நான் யாரோ வெள்ளைக்காரனின் கையென்றெல்லா நினைத்திருந்தேன்! இத்தனை காலமாக இங்கு நின்று களமாடும், கொழுத்தாடும் எனக்கு, யாரோடு எதை எப்போது எப்படி எடுக்க வேண்டும் என்று நன்றாகவே தெரியும். நீங்கள் பகிடிக்குத்தான் எழுதினீர்கள் என்பது தெரிந்தும், நான் பொதுவாக எச்சரிக்கையாகவே எழுதினேன். இங்கு நானும் நீங்களும் மாத்திரம் உரையாடுவதுமில்லை, வாசிப்பதுமில்லை. பொருத்தமானவர்கள் பொருத்தமான கருத்தை எடுத்துக்கொள்ளலாம். முன்பொருமுறை எதேச்சையாக எழுதிய கருத்துக்கு நான் தன்னை உளவு பார்ப்பதாக கள உறவொன்று குற்றஞ்சாட்டியிருந்தார். அதனாற்தான் அப்படி எழுதி, குறிப்பிட்டவர்கள் என்னோடு தொடர்பாடலை தவிர்த்துக்கொள்ளலாம் என குறிப்பிட்டேன். நன்றி!
  11. அட தெய்வமே! நீங்கள் இன்னுமா நிக்கிறீர்கள்? ம்ம்..... சும்மாவே சாத்தான் எத்தனை பக்கங்கள் எழுதுகிறார், எத்தனை பேர் பச்சை குத்துகிறார்கள்? என்று என்னை பின்தொடர்வது தாங்கள், அதில் என்னை கொழுவி வலிய இழுப்பது. களத்தில் நாங்கள் அறிமுகமானோம், அங்கேயே உரையாடலும் உறவும் கொள்ளுப்பாடும் அதோடு முடிந்துவிடும். அதை வெளியில் கொண்டு போவது, தேடுவது எனது குணமல்ல. இதை நீங்கள் நம்பலாம். இல்லையேல் என்னோடு உரையாடுவதை தவிர்க்கலாம். முப்பத்தாறு டொலர்கள் இலங்கை மதிப்பில் எத்தனை ரூபாய்கள்? சும்மா தெரிந்து கொள்வதற்காக கேக்கிறேன், வேறு ஒன்றுமில்லை ... நான் கேக்க நினைத்ததை, நீங்கள் கேட்டுவிட்டீர்கள்!
  12. ஏழைகள்; இப்படிதான் இருக்க வேண்டும், இப்படித்தான் உடுத்தவேண்டும், இந்தக்கடைகளிற்தான் உடை வாங்கவேண்டும், ஏழைகள் ஏழைகளாகவே இருக்க வேண்டும் எனும் உங்கள் எதிர்பார்ப்பு விளங்குகிறது. ஏழைகள்; நல்ல நாளும் அதுவுமா வருடத்தில் ஒரு நாள் நல்ல உடை, பெரிய கடைகளில் விலை கொடுத்து வாங்கி உடுத்தினா போதுமே, உங்கள் மனது பொறுக்காது, அதை படம் போட்டு ஏழைகள் எப்படி இந்தப்பெரிய கடைகளில் உடை எடுக்கலாம்? என்று புலம்ப ஆரம்பித்து விடுவீர்களே! நீங்கள் எப்போதும் செய்பவையை அவர்கள் வருடத்தில் ஒருநாள் அனுபவிக்கட்டுமேன்? அங்கே, வார இறுதியில் வரிசையில் காத்திருந்து பணம் செலுத்துவோரை பணக்காரர் என்கிறீர்கள். அதை நான் கேட்டா, இரண்டும் இருந்தாலும் வார இறுதியில் பொருட்களை கொள்வனவு செய்யும் கடையில் ஆட்கள் கூடினா வரிசையிலேதான் நிற்கவேணும் என்று குதர்க்கம் பண்ணுகிறீர்கள். உங்கள் வாதம் எனக்கு புரியவில்லை...... எப்படி இந்த புலனாய்வு வேலையெல்லாம் செய்ய உங்களால் மட்டும் முடிகிறது? அந்த ரகசியத்தை எங்களுக்கும் சொல்லித்தரலாமே? அப்படி நானிருந்தால்; ஏழைகளைப்பற்றிய என் எண்ணங்களும், எதிர்பார்ப்புகளும் உங்களுடையதை போல் இருந்திருக்குமோ என்னமோ? சரி, பத்து பக்கங்கள் வந்து விட்டன. வாசக உறவுகளுக்கு எரிச்சலையும், வசிக்கு மன அழுத்தத்தையும் கொடுக்காமல் நீண்ட உரையாடலுடன் முடிவுக்கு வரலாமென நினைக்கிறன். உரையாடலுக்கு நன்றி. எங்கே சிறியர் சுவியரை காணோம்? பக்கங்கள் நிறைவு செய்ய கங்கணம் கட்டி என்னை அழைத்து விட்டு, அவர்கள் காணாமற் போய் விட்டார்கள்.....
  13. மொத்தத்தில்,, ஏழைகள் புது உடுப்பு உடுத்தக்கூடாது, புது வருடம் கொண்டாடக்கூடாது, கந்தலும் கவலையும் கலைந்த தலையுமாய் திரிய வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்? வாழ்க உங்கள் நினைப்பு! காசும் நேரமும் இருப்பவர்கள் வார, வருட கடைசிவரை கால்கடுக்க ஏன் நிற்க வேண்டும்? தலை நகரில் வேலை செய்வோர் தங்களுக்கு விடுமுறை கிடைத்ததும் தம் உறவுகளுக்கு வேண்டிய உடை, உணவுப்பண்டங்களை வாங்கிக்கொண்டு எதிர்பார்த்திருக்கும் உறவுகளை சென்றடைய நிரையில் கால் கடுக்க நின்று, வாகனத்தின் மிதிப்பலகையில் பயணம் செய்து, தங்கள் விடுமுறையின் பாதி காலத்தை வரிசைகளில் தொலைப்பது உங்களுக்கு எங்கே புரியப்போகிறது? வாரம் முழுக்க வேலை செய்தாற்தான் வார இறுதியில் தங்களுக்கு தேவையானவற்றை கொள்வனவு செய்ய முடியும். ஐயா சிறியர்! விரைவாக வந்து பக்கத்தை நிறைவு செய்து விடுங்கள். இதுக்கு மேலேயும் தாக்குப்பிடிக்க முடியாது என்னால்.
  14. இப்போ நகரங்களில் உள்ள பெரிய கடைகள் எல்லாம் வார இறுதியிலா திறக்கிறார்கள்? வாரச் சம்பளம் பெறுபவர்களாக இருக்கும். கடை திறக்க வேணும், காசும் நேரமும் உள்ள நேரந்தானே வாங்கலாம். இரக்கப்போனாலும் சிறக்கப் போ என பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். வறுமை என்னோட கூடப்பிறந்தது. மறக்க வழியேயில்லை ......
  15. ஏன் சிறியர்.... மூக்கு வேர்க்கிறது என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறேன். கண் வேர்க்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சுவியர் ஏதோ, யாருக்கோ பயத்தில உளறுகிற மாதிரி இருக்கு. பாவம் நீங்கள்! ஆளைப்புரியாமல் கருத்தை விட்டிட்டியள். உங்களின் வெள்ளாந்தி மனம் புரியுது. இனி, கருத்து இணைக்கும் ஆளைப்பாத்து, பதிவிடுங்கோ!
  16. ம் .... நானும் பாத்தேன். வயது போனால் எதுக்கு அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேணும்? அடுத்த பிறந்த நாள் கொண்டாட்டத்துடன் ஓய்வு பெற இருக்கிறேன் என்று அறிவித்திருக்கலாமே? அது தானே வயது போவதை குறிக்கிறது. எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள். விதைத்ததை அறுக்காமல் மண்ணுக்குள்ள போக விடக்கூடாது இவரை. நானும் நீங்களுந்தான் நிறைவு செய்யப்போகிறோம் என நினைக்கிறன். சுவி, நல்ல ஒரு பிள்ளை. கடைசி நேரத்தில எங்களோடு வந்து நின்று நிறைவு செய்ய களமாடுகிறார் பாவம் அவர். பக்கங்கள் நீழுவதால், வசியின் நெஞ்சு பக்கு........ பக்கு..... என அடிப்பது எனக்கு கேட்கிறது!
  17. வாசகர்களை ஏமாற்றக்கூடாதேயென்று நாங்கள் கண்விழித்து எழுதிக்கொண்டிருக்கிறோம், எங்கள் தவிப்பு இவர்களுக்கு எங்கே புரியப்போகிறது?
  18. சிறியர்! இந்த தலைப்பை பார்த்ததும் ஒன்று ஞாபகத்துக்கு வந்து தொலைகிறது.முந்தா நாள் ஒரு செய்தி வந்தது. இந்த வார்த்தையை முன்பு சொல்லி அனுப்பிய புள்ளி ஒன்று அடுத்த தேர்தலோடு தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக செய்தி ஒன்று வந்தது. தான் தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய நினைத்தாராம் ஆனால் மக்கள் ஆணை கொடுக்க வில்லையாம், அதனால் விலக இருக்கிறாராம். விலக இருப்பவர் ஏன் தேர்தல் வரை காத்திருக்க வேண்டும்? சட்டுப்புட்டென்று விலக வேண்டியானே. என்னடா.... எனக்கு வாக்களித்தால் தமிழருக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்திருப்பேன் என்று கண்ட இடமெல்லாம் புலம்புகிறவர் என்று யோசித்தேன், கருணாநிதி மாதிரி நான் தேர்தலில் பங்கெடுப்பது இதுதான் கடைசி முறை என்று கூறி மக்களிடம் அனுதாப வாக்கு சேகரிக்கிற தந்திரம் என்று பிறகு வந்து பாத்தா விளங்கிச்சு. அந்த செய்தி வாபசோ தெரியவில்லை, செய்தியை காண முடியவில்லை. நீங்களெல்லாம் வாசிக்க காத்திருக்கும் போது அதுக்கு மேல போனாலும் பரவாயில்லை. உங்களை ஏமாற்ற வேண்டாமேயென்று நீண்டு கொண்டே செல்கிறது.
  19. இது, வீட்டுக்காரிக்கு தெரியுமோ? இல்ல..... வீட்டுக்கும் இல்லாம, பக்கத்துக்கு வீட்டுக்கும் இல்லாம மிளகாய்த்தூள் குப்பையிலே போய் விழுந்திடுமோ என பயமாய் இருக்கு. பிறகு, சுமந்து கொண்டு வந்து கொடுக்கிறவைக்கும் மிளகாய்த்தூளால் அர்ச்சனை நடக்கலாம். சீ சீ ...... சிறியர் மருத்துவமையிலேயே ரொம்ப நல்ல பிள்ளையாய் கண்ணை மூடிக்கொண்டு இருந்த ஆளாச்சே!
  20. வருடத்தில் ஒருநாள் உடுப்பு எடுப்பவர்களை உங்களுடன் ஒப்பிட்டு நீங்கள் எங்கோ போய் விடடீர்கள் தலைவா! உங்களுக்கு ஒவ்வொருநாளும் புத்தாண்டு, கொண்டாட்டம். அவர்களுக்கு வருடத்தில் ஒருநாள்... புத்தாண்டு! அதற்காக வருடம் முழுவதும் காத்திருந்து, வந்து கால் கடுக்க நிக்கிறார்கள். அதை படம் பிடித்து போட்டு உங்களை நிஞாயப்படுத்துகிறீங்களோ எண்டொரு சந்தேகம் எனக்குண்டு.
  21. அட... அதை நான் கவனிக்கவேயில்லை. இப்ப தான், நீங்கள் சொல்கிறீர்களே, எனக்கும் யாரோ நாலுபேர் குத்தியிருக்கிறார்களேயென்று போய்ப்பார்த்தா.... ஒன்று குறைகிறது. நீங்கள் பார்க்கும் போது இருந்த ஒரு பச்சை குறைகிறதே, அதற்கு என்ன நடந்தது? எண்ணுதலில் தவறோ? பி. கு, நான் பச்சை எதிர்பார்த்து எழுதுவதில்லை. எனக்கு தெரிந்ததை எழுதிவிட்டு போய்விடுவேன், யாராவது பச்சை குத்தினார்களா என பார்ப்பதில்லை எண்ணுவதுமில்லை. கேள்வி கேட்டு எழுதியிருந்தால் பதிலளிப்பேன். எனக்காக எண்ணி அறியத்தந்ததற்கு நன்றி கோசான்!
  22. அப்பாடா... நல்ல வேளை, நான் தப்பிச்சேன்! உதல்லாம் தற்கொலையாகாது சிறியர். தமன்னாவை பாத்திட்டு தற்கொலையா? ஒருவேளை அவாவோட போக முடியலை எண்ட கவலையால் வந்த விரக்தியாய் இருக்குமோ? உங்களுக்கு ஏற்றாற்போல் படங்களும் செய்தியும் வாய்த்து விடுகிறது, யாரும் ஏமாறாவிடாலும் எல்லோரையும் சிரிக்க வைத்து விடுவீர்கள். கண்டிப்பாக பனைமரம் வெட்டிய செய்தி உங்களுக்கு கோபத்தை உண்டுபண்ணும் என எதிர்பார்த்தேன். புதினம் பார்க்கிறவர்களுக்கு மாத்திரமல்ல, பனைக்கு கீழிருந்து பால் குடிக்கிறவர்கள், பட்டம் விடுகிறவர்கள் எல்லாம் பனைமரத்தின் அருமையை நினைத்து கவலையும் கோபமும் கொண்டிருப்பார்கள். அந்த பனைமரத்தின் அருமை அவர்களுக்குத்தான் புரியும்.
  23. தாமரை கோபுரம் எப்படி இருக்கும் என்று அறியாதவர்களும் செய்திகளில் படித்தறிந்தவர்களும் யாரோ இணைத்த படத்தை பார்த்து இதெல்லாம் நமக்கு தேவையா? நம்மால் பார்க்க முடியவில்லையே என்று ஏங்குபவர்களும் உண்டு. வெளிநாட்டில் இருந்து வந்து பார்த்து, அனுபவித்து, ரசிப்பவர்களும் உண்டு. பெரிய வீடுகளுக்கு பின்னால் மறைந்திருக்கும் குடிசைகள் யார் கண்ணிலும் படுவதில்லை, பார்க்க விரும்புவதுமில்லை. உண்மையில் நான் சொன்னவை நான்கண்டு அனுபவித்தவையே, பச்சை மிளகாய் ஒன்று, நூறு கிராம் மரக்கறி என்று வாங்குவோரும் உண்டு. அதையே கவிஞரும் பாடினார், "மாடி வீட்டு யன்னல் கூட சட்டை போட்டிருக்கு, சேரிக்குள்ளே சின்னப்ப பிள்ளை அம்மணமாய் நிண்டிருச்சு." பார்த்த இடமெல்லாம் ஸ்கூட்டியும் மொடல் கைபேசிகளுமாக இளந்தலை முறை ஒன்று அலையும் அதேநேரம் கால்நடையா அலைவோரும் உண்டு. அவர்களை ஸ்கூட்டியில் போவோர் வினோதமாக பார்க்கிறார்கள். இது சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகள். கோசான் சொன்னவைகளில் சில உண்மைகளுமுண்டு, அதற்காக எல்லாமும் உண்மையில்லை. அவையெல்லாம் அரசாங்கத்தின் சாதனையுமல்ல. அரச உத்தியோகத்தர், ஓய்வூதியக்காரருக்கு எந்த சலுகைகளுமில்லை சமுதாயத்தில் அவர்களுக்கு அனுதாபமுமில்லை. இந்த தாமரை கோபுரத்திலிருந்து அதிக தூரத்திலில்லை அரக்கலியா போராட்டம் நடந்த இடம் அதைப்பற்றி யாரும் கதைப்பதில்லை இப்போ. காப்பற் வீதிகளை பற்றி வியந்து பேசுவோர் அதற்குள் மறைந்து, மறைக்கப்பட்ட உடல்களையும் எலும்புகளையும் நினைப்பதில்லை. இராணுவத்தினரின் உல்லாச விடுதிகளில் தங்கி ரசித்து ருசிப்போர் அது அமைந்த இடத்தின் உரிமையாளர் யார் என கேட்பதுமில்லை அவர்களால் காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளை ஆண்டுக்கணக்காய் தேடி தெருவில் அலைவோரை பார்த்து ஆறுதல் சொல்வாருமில்லை. இவையெல்லாம் பார்க்கப்படாத மறைக்கப்பட்ட உண்மையின் மறுபக்கங்கள். நாட்டில் பாதுகாப்பில்லை என்று ஓடியோர் சொர்க்கபுரியாக வர்ணிக்கும் நாள் அதிக தூரமில்லை. இது சிங்களத்தின் ஒரு வெற்றியே. அது எங்கிருந்து இந்தப்பணத்தை பெற்று ஏன் இப்படி அலங்கரிக்கிறது என்று யாரும் சிந்திக்கபோவதுமில்லை. எனது இந்த கருத்துக்கு நூறு எதிர்கருத்துகள் வரலாம் ஆனால் அவர்கள் பார்க்காத கதைக்க விரும்பாத உண்மைகள் இவை.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.