புதிய பதிவுகள்2

பொலிஸாருடன் முரண்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா!

2 weeks 6 days ago
பொது ஊடகங்களில் நடுநிலமை இல்லாமல் போகும் போதுதான் அவரவர்கள் தனித்தனியே தனிக்குரலாக உரக்க கூற ஆரம்பித்துள்ளார்கள்.

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

2 weeks 6 days ago
விஜையின் கொள்கை என்ன?அரசியல் எதிரிகள் எதற்காக திமுகவைக் குறிப்பிடுகிறார்.(காங்கிரசைக்குறிப்பிடவில்லை).அரசியல் எதிரிக்கும் கொள்கை எதிரிக்கும் உரிய வரை விலக்கணம் என்ன?.திமுகவுடன் கூட்டு வைக்கலாம் என்றால் திமுக அலருடைய கொள்கை எதிரியான பாஜகவுடன் கூட்டு வைத்த தீட்டு அழிந்து விட்டதா? இனியும் கூட்டு வைக்க மாட்டார்கள் என்பதற்கு ஏதாவது உத்தரவாதம் இருக்கிறதா?பெரியாரைக் கொள்கைத் தலைவராக ஏற்றுக் கொண்டு வேலைத்தூக்குவதெல்லாம் என்ன மாதிரியான கொள்கை.

ஒரு பயணமும் சில கதைகளும்

2 weeks 6 days ago
🤣............... பலரும் வசதியாகவும், பாதுகாப்பாகவும் ஒரு இடத்தில் தமது வாழ்க்கைகளை அமைத்தவுடன், அங்கே புதியவர்கள் வந்து சேருவதை விரும்புகின்றார்கள் இல்லை போல............ எந்த ஒரு மக்கள் திரளின் மீதும் அவர்களின் அடையாளத்துடன் ஊடாக சந்தேகங்களை விதைப்பதும், குற்றங்களை சுமத்துவதும் சரியான ஒரு விடயமும் இல்லை என்றும் தோன்றுகின்றது.

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 

2 weeks 6 days ago
ஆட்டை வளர்த்தவர்களே பணத்திற்காக விற்று விட்டு போகும் போது..... அறிமுகம் இல்லாதவர்கள் அந்த ஆட்டை வெட்டுவதில் என்ன தவறு? அது கடவுள் பலிக்காக இருந்தாலும் சரி. இறைச்சி கடையில் வெட்டுவதாக இருந்தாலும் சரி. அது இறுதியாக மனிதர்களின் உணவாகத்தான் போகின்றது.😎

தமிழ் மக்கள் சார்ந்த மரபுரிமை சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை தொல்லியல் திணைக்களத்திற்கு இல்லை - பன்னீர்செல்வம் சிறீகாந்த்

2 weeks 6 days ago
தமிழ்மண் பாதுகாக்க போராடிய தலைவனையும் போராளிகளையும் மண்கவ்வ வைப்பதில் சிங்களத்துடன் முனைப்புடன் செயல்பட்ட ஒரு கட்சியின் ஊடகப் பேச்சாளரின் நாடகம் அரங்கேற முயல்கிறது.🤔

கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி தற்கொலை: சட்ட ஆலோசனை கோரி சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிக்கை அனுப்பி வைப்பு

2 weeks 6 days ago
24 Sep, 2025 | 05:16 PM ( எம்.ஆர்.எம்.வசீம் ,இராஜதுரை ஹஷான்) கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி தற்கொலை தொடர்பான விசாரணையில் சிவானந்தராஜா என்பவருக்கோ அல்லது ஏனைய பொறுப்புக் கூற வேண்டிய தரப்பினக்கு எதிராகவோ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இயலுமை உள்ளதா என்பது தொடர்பில் சட்ட ஆலோசனை கோரி சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) நடைபெற்ற தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தின் போது ஒழுங்குப்பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தனது உரையில் தேசிய மக்கள் சக்தியின் மேலதிக வகுப்பு ஆசிரியர் என்று குறிப்பிட்டார். வெளிப்படையாக பேச வேண்டும். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்துக்கு ' பி' அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் புதுக்கடை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன், சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை பெற்றுக்கொண்டுள்ளேன்.அந்த அறிக்கையில் இறுதி பந்தியை வாசிக்கிறேன். '1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க தண்டனைச் சட்டக்கோவையின் திருத்தச் சட்டத்தின் 308 ஆம் உறுப்புரை மற்றும் சாட்சி தண்டனைச் சட்டத்தின் 33 ஆம் பிரிவின் பிரகாரம் சிவானந்தராஜா என்பவருக்கோ அல்லது ஏனைய பொறுப்புக் கூற வேண்டிய தரப்பினருக்கோ எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இயலுமை உள்ளதா என்பது தொடர்பில் சட்ட ஆலோசனை கோரி சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.இங்கு இவர்கள் தேசிய மக்கள் சக்தியின் மேலதிக வகுப்பு ஆசிரியர் என்று குறிப்பிடுகிறார்கள்.இது தவறானதொரு எடுத்துக்காட்டு என்றார். கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி தற்கொலை: சட்ட ஆலோசனை கோரி சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிக்கை அனுப்பி வைப்பு | Virakesari.lk

சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம்

2 weeks 6 days ago
புதுடெல்லி: பாலியல் புகார் தொடர்பான வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், நடிகை விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோரி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு எதிராக வளசரவாக்கம் போலீஸில் கடந்த 2011-ம் ஆண்டு புகார் அளி்த்திருந்தார். அந்தப் புகாரின்பேரில் சீமான் மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயலட்சுமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஷாதான் ஃபராஸத், ‘இது தொடர்பாக சீமான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் எங்கும் மன்னிப்பு கோரவில்லை’ என்றார். அதற்கு, சீமான் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், ‘கடந்த முறை உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்பும்கூட சீமானுக்கு எதிராக விஜயலட்சுமி தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக உச்ச நீதிமன்றத்தில் சீமான் என்ன செய்ய வேண்டும் என்றும் பேசியுள்ளார்’ என்றார். அதையடுத்து நீதிபதிகள், ‘இருவரும் தங்களது குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற்று பரஸ்பரம் மன்னிப்புக் கோரி இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ எனக் கூறி விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சீமானும், விஜயலட்சுமியும் ஊடகங்களிலோ அல்லது சமூக வலைதளங்களிலோ எந்தப் பேட்டியும் தரக்கூடாது என்றும், இந்த உத்தரவை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர். சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம் | Seeman and Vijayalakshmi should Apologize to Each Other - Supreme Court - hindutamil.in

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!

2 weeks 6 days ago
உண்மையிலேயே இந்தப் பாட்டை இப்பொழுதுதான் கேட்கிறேன். எம்ஜிஆர் கால் முறிந்து ஏறக்குறைய ஒரு வருடம் ஓய்வில் இருந்த போது சரோஜாதேவி எல்லோருடனும் சேர்ந்து நடித்தார் என்ற செய்தி இருக்கிறது. அந்தக் காலகட்டத்தில் வந்த படமாக இருக்கும். பாலாஜியுடன் அவரது ஆட்டம் நன்றாக இருக்கிறது. நீண்ட நாட்களாகிவிட்டது இந்தப் பாடலைக் கேட்டு. எஸ்.சி. கிருண்ணன் பாடியது. மருதகாசியின் அற்புதமான பாடல் வரிகள். கவலையோடு இருக்கும் போது மனதுக்கு ஒத்தடம் தரும் பாடல். நன்றி Newbalance

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

2 weeks 6 days ago
ராசாத்தி அம்மாள், கவிஞர் வாலியுடன் நாடகங்களில் நடித்தவர். நடிகர் செந்தாமரையின் மனைவி கௌசல்யா எம்ஜிஆரின் நாடகக்குழுவில் இருந்தவர். எம்ஜிஆர் படங்களிலும் அவ்வப்போது தலை காட்டுவார். நடிகர் செந்தாமரை கலைஞருடன் நல்ல உறவில் இருந்தவர். செந்தாமரையின் மனைவி கௌசல்யா வழங்கிய பேட்டி ஒன்று இங்கே இருக்கின்றது. மீண்டும் கோசான் வீட்டைச் சுத்தி அடை மழை😊

AI தொழில்நுட்பத்தால் பெண்களின் வேலைவாய்ப்பு அதிகம் பாதிப்படையும் : ஐ.நா.ஆய்வில் தகவல் !

2 weeks 6 days ago
23 Sep, 2025 | 05:11 PM உலக அளவில் அதிகரித்து வரும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) தொழில்நுட்பத்தின் தாக்கம், ஆண்களை விட பெண்களின் வேலைவாய்ப்பை அதிகமாகப் பாதிக்கும் என ஐக்கிய நாடுகள் சபை நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின்படி, உலகளவில் பணியாற்றும் ஆண்களில் 21 வீதம் பேரின் வேலைவாய்ப்பு ஏஐ தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படும். ஆனால், பெண்களைப் பொறுத்தவரை, இந்த பாதிப்பு விகிதம் 28 வீதமாக இருக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மாற்றம் பெண்களின் பொருளாதார சுதந்திரம் மற்றும் சமூகத்தில் அவர்களின் பங்கு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வு குறிப்பிடுகிறது. பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துவரும் சூழலில், இந்த ஆய்வறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. நிறுவனங்கள் ஏஐ காரணமாகப் பணிநீக்கம் செய்யவில்லை என்று கூறினாலும், மறைமுகமாக ஏஐ-யின் பயன்பாடு ஒரு முதன்மையான காரணமாகக் கருதப்படுகிறது. ஏஐ தொழில்நுட்பம், குறிப்பாக மீண்டும் மீண்டும் செய்யப்படும் பணிகளைச் செய்யும் வேலைகளை தானியங்கிமயமாக்குவதால், இத்தகைய வேலைகளில் அதிக எண்ணிக்கையில் உள்ள பெண்களுக்குப் பாதிப்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/225880

நோர்வேயில் குண்டு வெடிப்பு

2 weeks 6 days ago
Published By: Digital Desk 3 24 Sep, 2025 | 02:51 PM நோர்வேயின் தலைநகர் மத்திய ஒஸ்லோவில் செவ்வாய்க்கிழமை (23) குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அத்தோடு, அதே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது வெடிகுண்டு கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெடிக்கச் செய்ததாகவும், சந்தேக நபர் ஒருவர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நோர்வே பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகிலும், அரச அரண்மனை மற்றும் இஸ்ரேலிய தூதரகத்திலிருந்து சுமார் 500 மீட்டர் (546 கெஜம்) தொலைவிலும், அந்த இடத்தில் காயங்கள் ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. ஒஸ்லோ மற்றும் கோபன்ஹேகனின் விமான நிலையங்களுக்கு அருகில் ட்ரோன்கள் தென்பட்டு ஒரு நாளுக்குப் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/225948

பொலிஸாருடன் முரண்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா!

2 weeks 6 days ago
அர்ச்சனா அவர்களின் யூரியூப் தளத்தில் பல விடயங்களை பார்க்க முடிகின்றது. அவர் கூறுபவை எல்லாம் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியனவா என்பதற்கு அப்பால் அவரது சொந்த கருத்துக்களை அவரது வாயாலேயே கேட்கும்போது அவர் சம்மந்தப்பட்ட விடயங்களில் தெளிவு ஏற்படலாம்.

ஜனாதிபதி அநுரகுமார - தென்னாப்பிரிக்க ஜனாதிபதி இடையில் சந்திப்பு

2 weeks 6 days ago
24 Sep, 2025 | 05:24 PM ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவுக்கு (Cyril Ramaphosa) இடையிலான சந்திப்பு நியூயோர்க் நகரில் ONE Plaza வில் செவ்வாய்க்கிழமை (23) பிற்பகல் (அமெரிக்க நேரப்படி ) இடம்பெற்றது. இங்கு, தென்னாபிரிக்க ஜனாதிபதியினால், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அமோகமாக வரவேற்பளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் ஆரம்பமானதோடு இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, முன்னாள் பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜெயசூரிய மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் இணைந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/225980

தமிழ் மக்கள் சார்ந்த மரபுரிமை சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை தொல்லியல் திணைக்களத்திற்கு இல்லை - பன்னீர்செல்வம் சிறீகாந்த்

2 weeks 6 days ago
24 Sep, 2025 | 05:09 PM தொல்லியல் திணைக்கள ஆளணி நிரப்பப்படும் போது திட்டமிட்ட முறையில் தமிழ் பேசுவோர் புறக்கணிக்கப்படுகின்ற அதேவேளை தொல்லியல் திணைக்களம், தமிழ் மக்கள் சார்ந்த மரபுரிமை சின்னங்களை பாதுகாப்பதில் போதிய அக்கறை செலுத்துவதில்லை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் பன்னீர்செல்வம் சிறீகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எமது பாரம்பரியங்களையும் தொன்மையையும் பாதுகாப்பதற்கு மரபுரிமை சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும். அதனை பாதுகாக்க வேண்டிய கடப்பாடினை உடைய தொல்லியல் திணைக்களம், தமிழ் மக்கள் சார்ந்த மரபுரிமை சின்னங்களை பாதுகாப்பதில் போதிய அக்கறை செலுத்துவதில்லை கடந்த காலங்களில் ஆட்சியில் பங்களித்து எமது மக்களின் அபிலாசைகளுக்காக மானசீகமாக உழைக்கின்ற தரப்பு என்ற அடிப்படையில் எமக்கும் தொல்லியல் திணைக்களம் தொடர்பாக விமர்சனங்கள் இருக்கின்றன. தொல்லியல் திணைக்கள ஆளணி நிரப்பப்படும் போது திட்டமிட்ட முறையில் தமிழ் பேசுவோர் புறக்கணிக்கப்படுகின்றனர். இதுதொடர்பாக கடந்த காலங்களில் எமது செயலாளர் நாயகம் சம்மந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்ற சந்தர்ப்பங்களில் எதிர்காலத்தில் தவறு நிவர்த்திக்கப்படும் என்று உறுதியளிக்கின்ற போதிலும், இதுவரை தவறுகள் நிவர்த்திக்கப்படவில்லை. இவை, தொல்லியல் திணைக்களத்தில் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் இருப்பதனையே வெளிப்படுத்துகின்றது. இவ்வாறான சூழலில், எமது தாயக பிரதேசத்தில் தமிழ் மக்களின் பூர்வீகத்தை பேணிப் பாதுகாக்கும் வகையில், சிதைவடைந்த சங்கிலியன் சிலை புனரமைக்கப்பட்டதுடன், யாழ் மணிக்கூட்டு கோபுரத்தினை சுற்றி தமிழ் மன்னர் களின் சிலைகள், தனிநாயகம் அடிகளாருக்கு சிலை, யாழ் பண்ணையில் தமிழ் மங்கையின் சிலை என்று பல உருவாக்கப்பட்டுள்ளன. அதேவேளை, எமது மரபுரிமை சின்னங்களை அழிப்பதில் சில கோடாரிக் காம்புகளும் பின்னணியில் செயற்படுகின்றன என்பதுதான வேதனையான விடயம். குறிப்பாக, இந்தப் பிரதேசத்தில் மாறி மாறி அதிகாரத்திற்கு வருகின்ற தரப்புக்களுடன் தனக்கு உறவு இருப்பதாக வெளிப்படுத்தி தன்னுடைய வர்த்தகத்தினை வளப்படுத்துவதில் விண்ணாதி விண்ணனான ஒரு வர்த்தகர், மந்திரிமனை அழிவிற்கும் காரணமாக இருக்கின்றார். மந்திரிமனை வளாகத்தில் நீண்டகாலமாக காணப்படுகின்ற குறித்த வர்த்தகரின் வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டுள்ள கனரக வாகனங்களினால் ஏற்படும் அதிர்வுகளும் மந்திரிமனை அழிவிற்கு காரணமாக இருக்கின்றது என்று பல வருடங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றது. வடக்கு மாகாண சபையிலும் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. எனினும் சம்மந்தப்பட்ட தரப்புக்கள் உள்நோக்கம் காரணமாக இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, ஊழல் அற்ற ஆட்சி, அனைவருக்கும் சமத்துவமான எதிர்காலம் போன்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்ற தற்போதைய அரசாங்கம், தமிழ் மக்கள் சார்ந்த மரபுரிமை சின்னங்களை பாதுகாப்பதற்கு, காணப்படும் தடைகள் மற்றும் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் தொடர்பாக அவதானம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/225975

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

2 weeks 6 days ago
இது உங்களுடைய tunnel vision பார்வை, இதில் அதிசயம் ஒன்றுமில்லை. "ஈழத்தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும்" என்று இலங்கையிலோ தமிழகத்திலோ வாக்களிக்கக் கூடிய எல்லோரும் பிரபாகரனுக்கே அந்த வாக்கை வழங்குகின்றனர் என்பது உங்களது தவறான பார்வை. ஈழத்தமிழர்களின் சுதந்திரத்திற்கான போரை பிரபாகரன் தலைமை தாங்கி நடத்தினார் என்பது உண்மை, ஆனால் ஈழத்தமிழர்களின் சுதந்திரம் என்ற நோக்கத்தை அவருக்கு முன்னரும் பின்னரும் பலர் ஆதரித்திருக்கின்றனர், இனியும் ஆதரிப்பர்!

சீனாவின் புதிய விமானந்தாங்கி கப்பல் 'புஜியான்' : கடற்படையில் புதிய புரட்சி

2 weeks 6 days ago
24 Sep, 2025 | 09:55 AM (இணையத்தள செய்திப் பிரிவு) சீன கடற்படையின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதலாவது மின்காந்த உந்துகணை தொழில்நுட்பம் கொண்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘புஜியான்’ (CNS Fujian), வெற்றிகரமாக உந்துகணை மூலம் விமானங்களை ஏவி, தரையிறக்கும் திறனைப் பரிசோதனை செய்துள்ளது. இது சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல்களின் வளர்ச்சியில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், சீனாவின் உள்நாட்டு தயாரிப்பான முதல் மின்காந்த உந்துகணை தொழில்நுட்பம் கொண்ட விமானம் தாங்கிக் கப்பலான ‘புஜியான்’ (Fujian), J-15T, J-35 மற்றும் KJ-600 ஆகிய மூன்று வகையான போர் விமானங்களை வெற்றிகரமாக ஏவி, தரையிறக்கும் பயிற்சியை மேற்கொண்டதாக சீன மக்கள் விடுதலை இராணுவக் கடற்படை அறிவித்துள்ளது. இந்த வெற்றிகரமான பயிற்சி, சீனாவின் உள்நாட்டு மின்காந்த உந்துகணை மற்றும் விமான நிறுத்த அமைப்புகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்துள்ளது. இந்த தொழில்நுட்பம் பல்வேறு வகையான விமானங்களுடன் இணக்கமாகச் செயல்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றி, 'புஜியான்' கப்பல் முழுமையாகத் தனது செயல்பாடுகளை ஆரம்பிப்பதற்கு வழி வகுக்கிறது. இதன் மூலம், பல வகையான விமானங்களை இந்த கப்பலுடன் ஒருங்கிணைத்து, முழுமையான ஒரு கடற்படை அணியை உருவாக்க முடியும். சீன விமானப் போக்குவரத்து மற்றும் கடற்படைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹான் வெய், இந்த வெற்றி சீன கடற்படையின் மூலோபாய மாற்றத்திற்கு முக்கிய ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார். இது சீன கடற்படையை, கடலோரப் பாதுகாப்பிலிருந்து ஆழ்கடல் பாதுகாப்பு நோக்கி நகர்த்தும் ஒரு முக்கிய படியாகும். செப்டம்பர் 3 ஆம் திகதியன்று, சீன மக்கள் எதிர்ப்புப் போரின் 80 வது ஆண்டு நிறைவையொட்டி இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பில்,J-15T, J-35 மற்றும் KongJing-600 ஆகிய விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. சீனாவின் முதல் கப்பல் அடிப்படையிலான, நிலையான இறக்கைகள் கொண்ட இந்த ஆரம்ப எச்சரிக்கை விமானம், கண்காணிப்பு மற்றும் வான்வெளிப் பாதுகாப்பின் வரம்பை கணிசமாக விரிவாக்கும். ஐந்தாம் தலைமுறை மறைந்து தாக்கும் விமானமான J-35, எதிரிகளின் பாதுகாப்பு வளையத்தை ஊடுருவும் திறனைக் கொண்டுள்ளது. அதேசமயம் J-15T, கடல் மற்றும் நிலப்பரப்பு இலக்குகளைத் தாக்கும் வலுவான திறனைக் கொண்டுள்ளது. மின்காந்த உந்துகணைகள் இந்த விமானங்களை முழு எரிபொருள் மற்றும் ஆயுதங்களுடன் மிக வேகமாக ஏவவும், தரையிறக்கவும் உதவுவதால், கப்பலின் போர் திறன் வெகுவாக அதிகரிக்கும் என பேராசிரியர் ஹான் வெய் விளக்கினார். 'புஜியான்' கப்பல், சீனாவின் மூன்றாவது விமானம் தாங்கிக் கப்பலாகும். இது ஜூன் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. சீனாவின் முதல் இரண்டு கப்பல்களான 'லியாவோனிங்' மற்றும் 'ஷாண்டோங்' ஆகியவற்றுக்கு மாறாக, 'புஜியான்' கப்பல் ஒரு தட்டையான விமான ஓடுதளத்தைக் கொண்டுள்ளது. அதன் மொத்த எடை 80,000 தொன்களுக்கு அதிகமாகும். மே 2024 இல் தனது முதல் கடல் சோதனைகளைத் தொடங்கியதில் இருந்து, 'புஜியான்' கப்பல் திட்டமிட்டபடி பல சோதனைகளை நடத்தி வருகிறது. https://www.virakesari.lk/article/225921

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் - 2025

2 weeks 6 days ago
பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த இலங்கையின் ஆசிய கிண்ண இறுதி ஆட்ட வாய்ப்பு நழுவியது 24 Sep, 2025 | 05:59 AM (நெவில் அன்தனி) இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் அபுதாபி ஸய்யத் கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை இரவு மின்னோளியில் நடைபெற்ற சுப்பர் 4 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்களால் பாகிஸ்தான் வெற்றியீட்டியது. இந்த முடிவை அடுத்து ஆசிய கிண்ண கிரிக்கெட்டிலிருந்து வெளியேறும் துர்பாக்கிய நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற நோக்கத்துடன் இரண்டு மாற்றங்களுடன் இலங்கை அணி களம் இறங்கியது. காமில் மிஷார, துனித் வெல்லாலகே ஆகிய இருவரும் நீக்கப்பட்டு சாமிக்க கருணாரட்ன, மஹீஷ் தீக்ஷன ஆகியோருக்கு அணியில் இடம் வழங்கப்பட்டது. இலங்கையைப் போன்றே பாகிஸ்தானுக்கும் இந்தப் போட்டி தீர்மானம் மிக்கதாக இருந்தது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை முதலில் தெரிவு செய்தது. இதற்கு அமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மிகவும் சிரமத்திற்கு மத்தியில் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. குசல் மெண்டிஸ் (0), பெத்தும் நிஸ்ஸன்க (8) ஆகிய இருவரும் ஷஹீன் ஷா அப்றிடியின் பந்துவீச்சிலும் குசல் ஜனித் பெரேரா (15) ஹரிஸ் ரவூப்பின் பந்துவீச்சிலும் ஆட்டம் இழந்தனர். (43 - 3 விக்.) மொத்த எண்ணிக்கை 58 ஓட்டங்களாக இருந்தபோது சரித் அசலன்க (20), தசுன் ஷானக்க (0) ஆகிய இருவரும் ஹுசெய்ன் தலாத்தின் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழந்தனர். தொடர்ந்து வனிந்து ஹசரங்க 15 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க இலங்கை அணி நெருக்கடியை எதிர்கொண்டது. (80 - 6 விக்.) இந் நிலையில் கமிந்து மெண்டிஸ், சாமிக்க கருணாரட்ன ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். கமிந்து மெண்டிஸ் 50 ஓட்டங்களைப் பெற்றதுடன் சாமிக்க கருணாரட்ன 17 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்றிடி 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹுசெய்ன் தலாத் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹரிஸ் ரவூப் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். 134 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்று மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. ஷிப்ஸதா பர்ஹான் (24), பக்கார் ஸமான் (17) ஆகிய இருவரும் 45 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். எனினும், 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முதல் 5 விக்கெட்கள் வீழ்ந்ததால் பாகிஸ்தான் நெருக்கடியை எதிர்கொண்டது. சய்ம் அயூப் (2), அணித் தலைவர் சல்மான் அகா (5), மொஹம்மத் ஹரிஸ் (13) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர். ஆனால், ஹுசெய்ன் தலாத், மொஹம்மத் நவாஸ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க ?? ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானுக்கு மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர். மொஹம்மத் நவாஸ் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 38 ஓட்டங்களுடனும் ஹுசெய்ன் தலாத் 32 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். துஷ்மன்த சமீர வீசிய 18ஆவது ஓவரில் மொஹம்மத் நவாஸ் 3 சிக்ஸ்களை விளாசியமை குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/225906
Checked
Wed, 10/15/2025 - 09:19
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed