புதிய பதிவுகள்2

லொறியும்  வானும்  நேருக்கு நேர் மோதி விபத்து – நாலவா் உயிாிழப்பு

2 weeks 6 days ago
புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை முன்பாக பதற்றம் ; பொலிஸார் பாதுகாப்பு கடமையில் 25 Sep, 2025 | 11:41 AM குருணாகல் – அநுராதபுரம் பிரதான வீதியின் தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆடைத்தொழிற்சாலை வேன் ஒன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகிய சம்பவம் ஒன்று இன்று வியாழக்கிழமை (25) இடம்பெற்றுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையின் முன்பாக தற்போது உறவினர்கள் ஒன்று கூடியுள்ளதனால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. குருணாகல் – அநுராதபுரம் பிரதான வீதியின் தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரகொட பகுதியில் இன்றைய தினம் அதிகாலை 04.50 மணியளவில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் இருந்து சென்றதாக கூறப்படும் வேன் ஒன்றே விபத்தில் சிக்கியதாக தெரியவந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையின் முன்பாக உறவினர்கள் தற்போது திரண்டுள்ளனர். குறித்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்த நிலையில், விபத்தில் மேலும், மூவர் காயமடைந்துள்ளனர். அவர்கள் தற்சமயம் சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையின் முன்பாக தற்போது உறவினர்கள் ஒன்று கூடியுள்ள நிலையில் ஆடைத்தொழிற்சாலை பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டு பணியாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். ஆடைத்தொழிற்சாலையின் முன்பாக புதுக்குடியிருப்பு பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது. https://www.virakesari.lk/article/226035

உயர்தரப் பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு பொழுதுபோக்கிற்காக 5000 ரூபாய்!

2 weeks 6 days ago
உயர்தரப் பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு பொழுதுபோக்கிற்காக 5000 ரூபாய்! உயர்தரப் பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு திரைப்படம் பார்ப்பது அல்லது கடற்கரைக்குச் செல்வது போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார். இதேவேளை, மாணவர்கள் திரைப்படங்கள் மற்றும் நாடகங்களைப் பார்க்கவும், நல்ல இசையைக் கேட்கவும், கடற்கரைகளுக்குச் செல்லவும், கலாச்சார நடவடிக்கைகளில் பங்கேற்கவும் ஊக்குவிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இளைய தலைமுறையினர் வயதுக்கு மாறும்போது இது ஒரு முக்கியமான படியாகும் என்பதால், இந்த விஷயத்தைப் பற்றி தான் ஒரு முறை பிரதமருக்கு நினைவூட்டினேன், என்று அவர் கூறினார். இந்த ஒதுக்கீடு கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார். https://athavannews.com/2025/1448480

இஸ்ரேலுக்கும் – இலங்கைக்கும் இடையில் புதிய விமான சேவை

2 weeks 6 days ago
நல்ல முடிவு தொடருங்கள். இனி இஸ்ரேல் இலங்கையை ஆக்கிரமிக்க போகின்றது என்று புரளியை தமிழ் யுரியுப்பர்கள் மூலம் இன்னும் தீவிரமாக தமிழர்களிடம் பரவவிடுவார்கள்.

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மல்லாகம் நீதவான் தனது பதவியை துறந்தார்!

2 weeks 6 days ago
ஹ்ம்ம்... நல்ல ஒரு கண்ணியமான பதவி கிடைத்தும், அதனை காப்பாற்றத் தெரியாத முட்டாள் நீதிபதி. ஆமா.... இவர் தமிழா, சிங்களமா, முஸ்லீமா, பறங்கியா.... 😂 இப்போதான்... பார்த்தேன். தமிழ் பெண்மணியாம்.

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மல்லாகம் நீதவான் தனது பதவியை துறந்தார்!

2 weeks 6 days ago
மல்லாகம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் பதவி நீக்கம் மல்லாகம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் சுபராஜினி ஜெகநாதனுக்கெதிராக மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தினால் நீதிச்சேவை ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணை சமீப காலமாக நடைபெற்று வந்திருந்தது. இந்நிலையில் கடந்த 23 ஆம் திகதி நீதிச்சேவை ஆணைக்குழுவில் இடம்பெற்ற விசாரணையின் பின்னர் குறித்த நீதிவான் ஒருவர் நீதிவான் ஒருவருக்குரிய கண்ணியமான நடத்தையை வெளிப்படுத்தியிருக்காத குற்றச்சாட்டுக்கு ஏதுவான சான்றுகள் முற்படுத்தப்பட்டிருந்தமையைத் தொடர்ந்து குறித்த நீதிவான் அவர்கள் தனது பதவி விலகல் கடிதத்தினை உடனடியாக நீதிச்சேவை ஆணைக்குழுவினால் கடந்த 23 ஆம் திகதி பதவி நீக்கம் செய்யப்பட்டார். நேற்று (24) நீதிச்சேவை ஆணைக்குழுவின் சார்பில் மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவர் மல்லாகம் நீதிமன்றத்திற்கு காலை வேளை பிரசன்னமாகி பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதவானின் சமாதான அறை மற்றும் அதில் உள்ள பொருட்களைப் பொறுப்பேற்று நீதிமன்ற பதிவாளரிடம் கையளித்தார். அதனைத் தொடர்ந்து சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடிய கௌரவ மேல் நீதிமன்ற நீதிபதி அவர்கள் புதிய நீதிவான் ஒருவர் வெகு விரைவில் நியமிக்கப்படுவார் என சட்டத்தரணிகளுக்கு உத்தரவாதம் தெரிவித்திருந்தார். https://adaderanatamil.lk/news/cmfyzur3n00moqplpvvhmpsr9

இரு மகள்களை பாலியல் துஷ்பிரயோகம்: தந்தைக்கு 20 வருட கடூழிய சிறை

2 weeks 6 days ago
இரு மகள்களை பாலியல் துஷ்பிரயோகம்: தந்தைக்கு 20 வருட கடூழிய சிறை Editorial / 2025 செப்டெம்பர் 25 , மு.ப. 10:19 தனது 7 மற்றும் 8 வயது மகள்களை 2016 ஆண்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு இருகுற்றத்துக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை 4 குற்றத்துக்கு 40 ஆயிரம் தண்டப்பணமும்பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் இரண்டு இலட்சம் ரூபாவை வழங்குமாறுமட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் தீர்ப்பளித்தார். மாவட்டத்தில் ஒரு பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய தந்தை உள நலம் பாதிக்கப்பட்ட தனது ஒருமகள் உட்பட 7 மற்றும் 8 வயதுடைய இரு மகள்களையும் கடந்த 2016 அக்டோபர் மாதம் பாலியல்துஷ்பிரயோகம் மேற்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டார் இவ்வாறு கைது செய்யப்பட்டவருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் 4 குற்றச்சாட்டுகளின் கீழ்பொலிஸார் வழக்கு பதிவு செய்து சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார் இதனை தொடர்ந்து வழக்கு விசாரணைகள் இடம் பெற்று வந்துள்ளது. இந்த நிலையில் குறித்த நபருக்கு எதிராக 16 வயதுக்கு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 4 குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சியங்கள், சான்று பொருட்கள் மற்றும் சட்ட வைத்தியர் அறிக்கைமூலம் குற்றவாளியாக கடந்த செப்டம்பர் 27 ம் திகதி இனம் காணப்பட்டார். இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணைக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் முன்னிலையில் கடந்த 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்டபோது 8 வயதுசிறுமிக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்த முதலாவது குற்றத்துக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் ரூபாவும் இரண்டாவது குற்றத்துக்காக 10 ஆயிரம், தண்டப்பணம்செலுத்துமாறும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாய் வழங்குமாறு உத்தரவிட்டார். அடுத்து பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு முதலாவது குற்றத்துக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபாவும், நான்காவது குற்றத்துக்காக 10 ஆயிரம் ரூபாவும் தண்டப்பணமாகசெலுத்துமாறும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாவை வழங்குமாறும் இரு 20 வருட கடூழியசிறைத்தண்டனை சமகாலத்தில் வழங்கப்பட வேண்டும் என நீதிபதி கட்டளை பிறப்பித்ததுதீர்ப்பளித்தார். https://www.tamilmirror.lk/செய்திகள்/இரு-மகள்களை-பாலியல்-துஷ்பிரயோகம்-தந்தைக்கு-20-வருட-கடூழிய-சிறை/175-365258

ஒரு பயணமும் சில கதைகளும்

2 weeks 6 days ago
சுப்பராயிருக்கு ரசோ...கோபிக்கவில்லையென்றால் நான் இதற்கு எடுத்துக்கொண்ட உதாரணம் ஒடியல் கூழ்... அதற்குள் சுவைகூடிய ..கடலுணவுகள் இருக்கும்...எதை ருசித்துச் சாப்பிடுவது என்பது திண்டாட்டமாக இருக்கும்...அதுபோலத்தான் உங்கள் கதைகளும்..எதை ருசிப்பது என்பதில் திண்டாட்டம்.. தொடர்கதையை எதிர்பார்க்கின்றேன் முன்னமே சொல்லியிட்டன் ...லங்காஶ்ரீ ...யாரென்று பெயர் சொல்லாது.... நான் விளங்கினது ...ரசோவுக்குத்தான் ...ஏனென்றால் வல்வட்டித்துரை ..அடையாள அட்டைகாரனுக்கு திருமலையில் இந்தநேரம் என்ன வேலை.... உய்த்தறிதலுக்காக...என்னுடைய அடையாள அட்டையிலும் பிறந்த இடம் பொலிகண்டி... எந்த சோதனைச் சாவாடியிலும் நிற்பாட்டி வைத்து சாத்தலும் விழும் ...சோதனையும் நடக்கும் இதில் விசேச செய்தி என்னவென்றால் ..காதலியும் /மனைவியுமாகியவளீண் ... அடையாள அட்டையில் பிறந்த இடம் பொலிகண்டிதான்...அப்ப பெண்பிரசையுடன் போனால் சோதனை குறைவென்பது...என்னுடைய லைவ்வில் நடக்கவில்லை ...அதுதான் கனடாவருகையின் காரணம்..

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

2 weeks 6 days ago
அண்ணாத்துரை - பான்மதியாள் ராமசந்திரன் - ரேவதியாள் / அம்பிகை & ராதை / முன்னாள் முதல்வரும் அடக்கம் கருணாநிதி - ? உத்தமர் ஸ்டாலின் - செய்தி வாசிப்பாளர் உதயநிதி - நிவேத நடிகை & 9 தார நடிகை கார்த்திக் சிதம்பரம் / சரவணா செல்வரத்னம் - நட்பு (சினேக) நடிகை சீமான் / கன்னட நடிகர் - விசயலட்சுமி விசய் - கீர்த்தனம் & 3 சா நடிகை சி.வி சண்முகம் - அமல மில்க் நடிகை ராஜகண்ணப்பர் - சுகன்யம் நடிகை திருமா / பூவை/புதுவை முதல்வர் - மீனம் .... இதெல்லாம் ஊகங்களே..! இன்னும் பல ஊகங்கள் தியாகராஜபாகவதர் காலத்தில் இருந்தே உண்டு பாகவதரின் அந்தபுரத்தை பற்றி எழுத போக .. உத்தமரான பாகவதர் லட்சுமிகாந்தனின் எழவுக்கு ஏற்பாடு செய்துவிட்டார் என்று தாத்தா காலத்திலேயே கதைப்பார்கள் . சந்தி சிரிக்காத வரைக்கும் எல்லாரும் ராமர்கள்தான் அப்படித்தான் நம்ப வேண்டும். சினிமாவுக்கும் அரசியலுக்கும் பெரிய தொடர்ப்பு உண்டு? அதிகார துஷ்பிரயோகம் ( வருமானவரி தொந்தரவு மற்றும் பல பல ) / காடையர்கள் தொந்தரவில் இருந்து தப்பிக்க ./ சம்பாதித்த சொத்துக்களை பாதுக்காக்க.. டிஸ்கி : பல் ( பணம் ) இருக்குறவன் பக்கோடோ சாப்பிடுறான் .. இல்லாதவன் கோசிப்பு கதைக்குறான் விடுங்கப்பா தான் இன்னாருடைய ஆள் என்று ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்குகிறார்கள் அவ்வளவுதான் ..

சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம்

2 weeks 6 days ago
விஷயலச்சுமிக்கு… சமூக ஊடகத்தில் பேட்டி கொடுக்க, பின்னுக்கு நின்று கதை, வசனம், டைரக்‌ஷன் செய்யிற ஆட்களுக்கும், விசயலச்சுமிக்கு வெள்ளை அடிக்கிற ஆட்களுக்கும்…. வேலையில்லா திண்டாட்டம்தான். அய்யோ பாவம். இனி… மூடிக் கொண்டு இருக்கச் சொல்லி, உச்ச நீதிமன்றம் சொல்லிப் போட்டுது. 😂

இஸ்ரேலுக்கும் – இலங்கைக்கும் இடையில் புதிய விமான சேவை

2 weeks 6 days ago
இனித்தான் இலங்கைக்கு நல்ல காலம் பிறக்கப்போகுது! நான்கால் வகுத்து மூன்றால் பெருகும் மக்கள் கதறும் காட்சியைக் காண அவா!

இஸ்ரேலுக்கும் – இலங்கைக்கும் இடையில் புதிய விமான சேவை

2 weeks 6 days ago
ஆமா…. வருகின்ற வெள்ளிக்கிழமை, “ஜும்மா தொழுகை” முடிந்த பின்…. வீதியில் இறங்கி கதறுவதை பொறுத்துத்தான் ஒரு முடிவுக்கு வர முடியும். 😂

நோர்வேயில் குண்டு வெடிப்பு

2 weeks 6 days ago
அந்தக் கடைசிப் பந்தி அருமை. 👍🏽 வல்லரசுகளுக்கு இது… விளங்க கனகாலம் எடுக்கும் அல்லது கண்ணை மூடிக் கொண்டு, பால் குடித்த பூனையின் நிலைமைதான்.

சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம்

2 weeks 6 days ago
அதை பிறகு பார்ப்போம்,...இந்த தீர்ப்பு சரியா?????????? நீதிபதிமார். எந்த சட்டத்தின் கீழ் இந்த தீர்ப்பை வழங்கினார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா??? குறிப்பு,...இதைவிடவும் கள்ளு கெட்டிலில். வழங்கும் தீர்ப்புகள். சிறந்தது 🤣

ஒரு பயணமும் சில கதைகளும்

2 weeks 6 days ago
7. சிரமத்திற்கு மன்னிக்கவும் -------------------------------------------- சிட்னியிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸீக்கு திரும்பி வரும் விமானத்தின் புறப்படும் நேரம் காலை ஒன்பது மணி என்றிருந்தது. கிட்டத்தட்ட 14 மணி நேரங்கள் பயணம். இதை விட விமானத்தில் பறப்பதற்கு மோசமான ஒரு நேரத்தை கண்டுபிடிப்பது கடினம். காலைத் தூக்கம் முடிந்து, எழும்பி விமான நிலையம் வந்தால், அதற்குப் பின் பறக்கும் நீண்ட பயணத்தில் தூக்கம் எங்கே வரப் போகின்றது. ஆனாலும் விமானத்தில் விளக்குகளை அணைத்து இருட்டாக்கப் போகின்றார்கள். பலரும் கண்ணை ஒரு மறைப்பால் மறைத்து, மெல்லிய மற்றும் சற்றே கடுமையான சத்தங்களுடன் தூங்கப் போகின்றார்கள். விமானப் பணிப்பெண்கள் இடையிடையே வந்து போகப் போகின்றார்கள். நான் முழித்தே இருக்கப் போகின்றேன் என்பதும் விளங்கியது. எத்தனையோ வருடங்களின் முன் எமிரேட்ஸ் விமானத்தில் இலங்கைக்கு போய்க் கொண்டிருக்கும் போது, விமானத்தில் கடைசியாக படம் பார்த்திருக்கின்றேன். அதன் பின்னர், அந்தப் படத்தால், விமானத்தில் படம் பார்ப்பதில் ஒரு பலத்த ஒவ்வாமை ஏற்பட்டு, பயணம் முழுவதும் முன்னால் இருக்கும் கறுப்புத் திரையே பரவாயில்லை என்ற மனநிலைக்கு வந்திருந்தேன். விமானப் பயணத்தில் கடைசியாகப் பார்த்த அந்தப் படம் 'தெறி'. சில நண்பர்கள் ஏற்கனவே அந்தப் படத்தை சிலாகித்து சொல்லியிருந்தார்கள். அந்த நண்பர்களின் வரலாறு தெரிந்த நான் தான் கவனமாக இருந்திருக்கவேண்டும். ஆடம்பரமான ஒரு கடைத் தொகுதிக்கும், மலிவு விலை கடைத் தொகுதிக்கும் இருக்கும் வித்தியாசங்கள் என்று சிலவற்றை சொல்லிக் கொள்ளலாம். பொருட்களின் தரத்தில் இருக்கும் வேறுபாடு என்பது மிகப் பொதுவாக சொல்லப்படும் ஒரு வித்தியாசம். உதாரணமாக, அதிக விலையில் விற்கும் இடங்களில் விற்கப்படுபவை சாயம் போகாத, கசங்காத, நீண்டகாலம் நிற்கும் உடுப்புகள் என்று சொல்வார்கள். இங்கு அமெரிக்காவில் தொழில்நுட்பத்துறையில், வேறு பல துறைகளிலும் கூட, அணியும் ஆடைகளுக்கு எந்த மதிப்புமே கிடையாது. ஏதோ ஒன்றை போட்டுக் கொண்டு அலுவலகம் போனால் போதும். ஆள் நூறு, ஆடை பூச்சியம். சாயம் இருந்தாலும் போடலாம், சாயம் இழந்தாலும் போடலாம். போடும் உடுப்பு சாயம் போய், கசங்கி, அத்துடன் தலையையும் இழுக்காமல் அலுவலகம் போனால், ஆள் ஒரு அறிவுஜீவி போல என்று முதல் தோற்றத்தில் நம்புகின்றவர்களும் உண்டு. ஆனால் எது உண்மையோ, அது போகப் போக வெளியே வந்துவிடும். குறைவாகக் கதைப்பதும், கதைத்துக் கொண்டே நடுநடுவே அடிக்கடி கூரையை நிமிர்ந்து பார்ப்பதும் அறிவுஜீவி என்னும் பிம்பத்தை மேலும் சில காலத்துக்கு நீட்ட உதவலாம். இன்னொரு பெரிய வித்தியாசம் என்று சொல்லப்படுபவது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் இருக்கும் வேறுபாடுகள் என்கின்றனர். மலிவு விலைக் கடைகள் ஒரு அரச திணைக்களம் போல செயல்படுவார்கள். தியானத்தில் இருப்பவர்கள் போலக் கூட அங்கே சிலர் இருப்பார்கள். லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையம் பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கின்றேன். உலகில் உள்ள மோசமான விமான நிலையங்கள் என்ற பட்டியலில் இது இருக்கும் என்றே நினைக்கின்றேன். ஆனாலும் சிட்னி விமான நிலையத்தில் பொதிகளைப் போடும் இடம் 'வேற லெவல்' என்றே சொல்லவேண்டும். சிட்னி விமான நிலையத்தின் அந்தப் பகுதிக்கு அரச திணைக்களங்களே பல மடங்கு பரவாயில்லை என்று சொல்லலாம். வரிசையில் காத்திருக்கும் ஒருவரின் அலுவல்கள் முடிவதற்கே பத்து அல்லது இருபது நிமிடங்கள் போய்விடுகின்றது. ஐந்து அல்லது ஆறு பேர்களே எங்களுக்கு முன்னால் நின்றார்கள். ஆனால் கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் அங்கே போனது. இதுவே வேறொரு விமான நிலையம் என்றால் ஒரு பத்து நிமிடங்களில் முடித்திருப்பார்கள். லாஸ் ஏஞ்சலீஸில் பொதிகளை எங்கள் கண் முன்னாலேயே தூக்கித் தூக்கி எறிந்திருப்பார்கள். பொதியின் உள்ளே இருக்கும் மஞ்சள் தூளும், மிளகாய் தூளும் கலந்து, நல்ல கறித்தூள் கிடைப்பதற்கு கூட சாத்தியங்கள் உண்டு. விமான நிலையத்தில் முற்றிலும் எழுந்தமானமாகவே ஓரிருவரை முழுச் சோதனைக்கு தெரிவு செய்கின்றார்கள் என்கின்றனர். அப்படித் தெரிவு செய்யப்படுபவர்களைப் பார்த்தால் அவர்கள் சொல்லும் எழுந்தமானம் பொய்யென்றே தெரியும். ஒரு கூட்டத்தில் எவர் எவரையெல்லாம் தெரிவு செய்வார்கள் என்றே சொல்லிவிடலாம். என்னைத் தெரிவு செய்தார்கள். காலணியை ஆராய்ந்தார்கள். நான் சிட்னிக்கு ஒரே ஒரு காலணியை மட்டுமே எடுத்துப் போயிருந்தேன். அங்கு வீட்டுக்கு அருகில் இருக்கும் கால்பந்தாட்ட மைதானத்தில் அதே காலணியுடனேயே அநேக நாட்களில் ஓடியும் இருக்கின்றேன். திரும்பி வரும் பயணத்திற்கு முந்திய நாளில் கூட, பெரிய மழை ஒன்றின் பின் வந்த சிறிய மழைக்குள் ஓடியிருந்தேன். காலணி கொஞ்சம் உப்பியே இருந்தது. பின்னர் கைப் பொதியை திறந்து பார்த்தார்கள். 'எல்லாமே சாக்லெட்................' என்றார்கள். 'இங்கிருந்து வேறு என்ன கொண்டு போவது என்று தெரியவில்லை......................' என்றேன். இறுதியாக 'சிரமத்துக்கு மன்னிக்கவும், சுகமாக போய் வீடு சேருங்கள்.............' என்று சொன்னார்கள். எத்தனை தடவை தான் சிரமத்துக்கு மன்னிப்பது. 9/11 அனர்த்தம் நிகழ்ந்த அடுத்த அடுத்த நாட்களில் ஒரு நாள். வேலையில் மதியம் சாப்பிட்டு விட்டு, வழமை போலவே நடந்து கொண்டிருந்தேன். வீதியைக் கடந்து அடுத்த பக்கம் வந்தால் கடற்கரைக்கு செல்லும் ஒரு குறுக்கு வீதி இருக்கின்றது. அந்தக் குறுக்கு வீதியில் கடற்கரைக்கு செல்லும் முன்பே ஒரு சிறிய மேம்பாலம் உள்ளது. மேம்பாலத்தின் கீழே இன்னொரு வீதி கடற்கரையை ஒட்டிச் செல்லுகின்றது. நான் அந்த மேம்பாலத்தில் நடந்து கொண்டிருக்கும் போது, திடீரென்று சில போலீஸ் வாகனங்கள் என்னை மறித்து எல்லாப் பக்கங்களிலும் சூழ்ந்து நின்றன. 'எங்கே போகின்றீகள்...............' 'கடற்கரைக்கு...................' 'ஏன்.........................' 'தினமும் மதியம் போவேன்..............' 'எங்கே வேலை செய்கின்றீர்கள்..............' அங்கிருந்து பார்க்கும் போதே நான் வேலை செய்யும் அந்த உயர்ந்த கட்டிடம் தெரியும். அதைக் காட்டினேன். அடையாள அட்டை ஏதாவது இருக்கின்றதா என்றார்கள். கொடுத்தேன். ஒருவர் அதை எடுத்துக் கொண்டு அவர்களின் ஒரு வாகனத்துக்குப் போனார். சிறிது நேரத்தில் திரும்பி வந்தார். சிரமத்திற்கு மன்னிக்கவும், நீங்கள் போகலாம் என்றார்கள். அங்கே அப்படியே நின்று கொண்டிருந்தேன். முன்னர் சிறிது காலம் திருகோணமலையில் தங்கியிருந்த போது, ஒரு நாள் அங்கே தெருவில் நாங்கள் பலர் நின்று கதைத்துக் கொண்டிருந்தோம். சற்றுத் தள்ளி வேறு சிலரும் கூட்டமாக நின்று கதைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த வழியால் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இராணுவத்தினர் அவர்களின் மோட்டார் சைக்கிளை சடாரென்று நிற்பாட்டி விட்டு, அருகே கதைத்துக் கொண்டு நின்ற ஒருவரை ஏதோ கேட்டு விட்டு, இரு கன்னங்களிலும் அறைந்து விட்டுப் போனார்கள். கையாலாகாத நிலையின் ஒரு உச்சத்தில் நாங்கள் அங்கே நின்று கொண்டிருந்தோம். இங்கு நான் மேம்பாலத்தின் மேல் அப்படியே நிற்பதைப் பார்த்த ஒரு காவலர் திரும்பி வந்தார். 'ஆர் யு ஓகே...............' 'ம்............ ஒன்றுமில்லை.............' 'நான் மிகவும் வருந்துகின்றேன்............' என்றவர், யாரோ ஒருவர் அவர்களின் காவல் நிலையத்திற்கு தொலைபேசியில் அழைத்து, மேம்பாலத்தின் மேலே ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நிற்கின்றார் என்று அவசரத் தகவல் தெரிவித்ததாலேயே தாங்கள் இங்கே வந்ததாகச் சொன்னார். இது என்ன புதிதா எங்களுக்கு. (தொடரும்.......................)

ஒரு பயணமும் சில கதைகளும்

2 weeks 6 days ago
யோகர் சுவாமிகளின் சிந்தனை எட்டி பார்க்கிறது😅 உண்மை... போராட்டங்கள் ,உயிர்பலிகள் ...அந்த வெளிச்சவீடு வாய் இருந்தால் பல கதைகள் சொல்லியிருக்கும்
Checked
Wed, 10/15/2025 - 09:19
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed