புதிய பதிவுகள்2

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

2 weeks 5 days ago
இத் திரியில் எனது கவனக் குறைவால் ஏற்பட்ட தவறுதலாலேயே சில பதிவுகள் தணிக்கை செய்யப்படவில்லை. வாசகர்களுக்கும் கருத்துப் பகிர்பவர்களுக்கும் அதுவே அவதூறுத் தகவல்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும் என நம்புகிறேன்.

ஜனாதிபதியாக ஒரு வருடத்தை நிறைவு செய்யும் அநுர குமார திசநாயக்க

2 weeks 5 days ago
பெரும்பான்மைச் சமூகத்தின் மனநிலையை மாற்றுவது இனப்பிரச்சனையை தீர்க்க மிகவும் முக்கியமானதாகும். ஆனால் NDP எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, மேலும் அதைச் செய்யத் தயாராகவும் இல்லை. இனப்பிரச்சினையைத் தீர்க்காமல், பொருளாதார பிரச்சினையும் தீர்க்கவே முடியாது.

கொஞ்சம் கொஞ்சமாக மாறும் கொடூரமான முகம்

2 weeks 5 days ago
உயர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்தது நல்லாட்சி காலத்தில். அப்போது அப்போதைய பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. அதன்பின் கோத்தா ஜனாதிபதியாக வந்தபோதும் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது மட்டுமேன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கிறார்கள் எதிர்க்கட்சிகள். ஒன்றுமே விளங்கவில்லை.

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மல்லாகம் நீதவான் தனது பதவியை துறந்தார்!

2 weeks 5 days ago
இவர் நீதிபதியாக கடமையாற்றியது மல்லாகத்தில். அதுவும் ஒரு பெண்மணி. தலைக்கனமாய் இருக்கும்.

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோசி குற்றவாளி என நிரூபிப்பு!

2 weeks 5 days ago
பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோசி குற்றவாளி என நிரூபிப்பு! பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி ஒரு முக்கிய ஊழல் விசாரணையில் குற்றவியல் சதித்திட்டத்தில் குற்றவாளி என வியாழக்கிழமை (25) நிரூபிக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதியளிப்பதற்காக லிபிய சர்வாதிகாரி முஅம்மர் கடாபியிடமிருந்து மில்லியன் கணக்கான பணத்தைப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களே நிரூபிக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை பிற்பகுதியில் தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அதேநேரம், பாரிஸ் குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள், 2007 முதல் 2012 வரை ஜனாதிபதியாக இருந்த வலதுசாரி அரசியல்வாதியை, சட்டவிரோத பிரச்சார நிதி மற்றும் மோசடி போன்ற பல கடுமையான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்தனர். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சர்கோசிக்கு உரிமை உண்டு. மேலும் இந்த வழக்கில் எந்த தவறும் செய்யவில்லை என்று அவர் மறுத்துள்ளார். வழக்குரைஞர்களுக்கும் மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு. https://athavannews.com/2025/1448540

சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம்

2 weeks 5 days ago
அது தான் தீரப்பு,..சிறந்த நீநியான. சட்டப்படியான தீர்ப்பு ஆனால் இங்கே சீமான் வழக்கில் வழங்கும் தீர்ப்பென்பது சீமான் எந்தவொரு பெண்ணையும். அவரது விருப்பம் போல் கசக்கி பிழியாலாம் என்ற சட்டத்தின்படி வழங்கப்படுகிறது .....இப்படி ஒரு சட்டம் இருக்கிறதா இந்தியாவில் என்ற ஐயப்பாட்டை. எனக்கு எற்படுத்துகிறது ......ஒரு வழக்கின் தீர்ப்பை அது சரியான தீர்ப்பு தானா என்று 7. பேர்கள் கொண்ட குழு ஆராய்ந்து 4. பேருக்கு மேல் ஒத்துக்கொண்டால் தான் அது செல்லுபடியாகும் அதாவது சரியான தீர்ப்பு ஆகும் இலங்கையில் இப்படி இருந்தது, .இந்தியாவில் இப்படி இல்லையா?????

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

2 weeks 5 days ago
நீங்களும் தவறான பொய்யான தகவல்களை யாழ் களத்தில் பரப்புவதை அனுமதிக்க கூடாது. நான் 90 வீதமான தமிழர்கள் தகவல்களை யாழ் களத்தில் படித்து தான் அறிந்து கொள்கிறேன்.

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

2 weeks 5 days ago
தகவலுக்கு நன்றிகள் பல. எனக்கு இது தெரியாது அவர் தான் இணைத்தது உண்மை என்றும் இணைத்து இருக்க வாய்ப்புகள் உண்டு .....ஆனால் இப்போது பொய் என்று தெரிந்த பின்னர் அதை அது பொய் என்று எற்றுக்கொண்டு வாபஸ் பெற வேண்டும் இது யாழ் களத்தின். வளர்ச்சிக்கும். அவரது வளர்ச்சிகும். அவசியமாகும் 🙏

சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம்

2 weeks 5 days ago
ஓம்…மத்திய அரசின் கீழ் இருந்தாலும் தமிழ் நாட்டு நீதிபதிகள் முற்போக்கானவர்கள்… வடக்கே போக, போக கோமிய பாவனை காரணமாக மூளை மாட்டு மூளை போல் மாறிவிடும். நீதிபதிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. மத்திய பாடத்திட்டத்தில் இப்போ புட்பகவிமானம், அனுமன் சஞ்சீவியை தூக்கியதை எல்லாம் வரலாறு என சேர்க்கப்போகிறார்களாம். வரும் காலத்தில் மாட்டு மூளை, அமிபா மூளையாக வாய்புண்டு.

ஒரு பயணமும் சில கதைகளும்

2 weeks 5 days ago
ரசோதரன் கதை. உறவுகள் ஆகா ஓகோ என்று அடித்துப் பிடித்து ரசிக்கிறார்கள். நானும் ரசிப்போமே என்று கதையைப் பார்த்தேன், அம்மாடியோ கதை அப்படி நீளம். அளந்து பார்த்து இறங்கிப் போவதற்குள் சிட்னியில் இருந்து லொஸ்சேஞ்சல் போய்விடலாம் என்று தோன்றியது. என்றாலும் ஆவல் விடவில்லை, கோழிப் பொரியல் வாங்கி துண்டு துண்டாக தக்காழிக் குழம்பில் தொட்டு உண்பதுபோல் உறவுகளின் ஊட்டத்தையும் தொட்டுத் தொட்டு கதையை உண்டேன். ஆனந்தம் ஆனந்தம், அதுவே சுவையை அப்படி ஊட்டியது. “டேய் கஞ்சப் பயலே வறுத்த முழுக் கோழியை வாங்கித்தாடா” நாக்கு வாட்டி எடுத்தது. தாள் சில்லறையாகி சில்லறையும் தீர்ந்தது, முழுக்கோழி வாங்க நான் எங்கே போவேன்? பணிசெய்து பணம் உழைக்க முதுமை விடுமா???🥵

சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம்

2 weeks 5 days ago
இனி வேலைக்கு என்ன செய்யலாம்? ஏதாவது கட்சி தொடங்கி, புலம்பெயர் முட்டகோசுகளிடம் திரள்நிதி திரட்டலாம் என யோசிக்கிறேன்😂 பிகு விஜி அண்ணிக்குத்தான் வாய்பூட்டு 😂. சீமானை தொடர்ந்தும் செ.சை என அடையாளப்படுத்த தடை ஏதும் இல்லை.

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

2 weeks 5 days ago
ஊகங்களுக்கும் கிசு கிசு களுக்கும் உலக சினிமாவும், உலக அரசியலும் கூட விதிவிலக்கல்ல. அண்மையில் பிரெஞ் அதிபர் தன் மனைவி(அவரின் முன்னாள் ஆசிரியை) ஒரு ஆணாக இருந்து மாறிய பெண் அல்ல என அமெரிக்க நீதிமன்றில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்தார். இதே போல் மிஷேல் ஒரு ஆண், ஒபாமா ஓரினசேர்க்கையாளர், ஹிலரி கிளிண்டன் ஏலியன் என பல பக்கோடாக்கள் இன்றளவும் விற்பனையில் உண்டு. ஆனால் இவற்றை எண்ணத்தில் சிறியோர் பேசி/எழுதி இன்புற்றாலும், எண்ணத்தில் பெரியோர் வெறும் ஊகங்கள் என கடந்து போவதே வழமை. இதுவும் ஒரு வயது முதிர்ந்த மூதாட்டியை பற்றி, அவரின் தனிமனித ஒழுக்கம் பற்றி அவதூறு எழுதலும் ஒன்றல்ல. பிகு நீங்கள் கூட ஸ்டாலின்- செய்தி வாசிப்பாளர் என்ற கதையை காவி திரிகிறீர்கள். குறிப்பிட்ட செய்தி வாசிப்பாளர், ஜெயிற்கு நெருக்கமானவர், பகிரங்கமாக இப்படி எதுவும் நடக்கவில்லை என மறுத்த போதும்.

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

2 weeks 5 days ago
சீமான் தான் கூறிய கிலோ கணக்கான போய்களை அவை படு பொய்கள் என்று ஆதாரபூர்வமாக நிருபிக்கப்பட்ட பின்பு கூட வருத்தம் தெரிவிப்பதில்லை அதற்கு பதில் கூட கருத்தியல் ரீதியாக தெரிவிப்பதில்லை. நைசாக நழுவி விடுவார். பின்னர் சில காலத்தின் பின்னர் அதே பொய்யை மீண்டும் வெட்கமில்லாமல் மீண்டும் கூறுவார். அண்ணன் எவ்வழி தம்பி அதே வழி. இருந்து பாருங்கள், இதே பொய்யை தமிழ் சிறீ சில காலத்தின் பின்னர் மீண்டும் வெட்கமில்லாமல் இணைப்பார். தமிழ் சிறி பொய்செய்திகளை பரப்புவது இது முதல் முறையுமல்ல.
Checked
Wed, 10/15/2025 - 06:18
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed