புதிய பதிவுகள்2

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

3 weeks ago
இது நான் முன்பும் படித்தது தான் ஆனாலும் மறந்து விட்டேன் ...என்ன இதே நினைப்பில் இருக்க முடியுமா???? ...🤣 இவ்வளவு ஞாபகத்தில் வைத்து அறியத் தந்ததிற்க்கு மிக்க நன்றிகள் தமிழ் சிறி. ஐயா

ஹொங்கொங், தெற்கு சீனாவை நோக்கி நகரும் ரகசா புயல்!

3 weeks ago
தாய்வானை கடுமையாக தாக்கியது ரகாசா சூறாவளி – 14 பேர் உயிரிழப்பு September 24, 2025 10:48 am இந்த ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த சூறாவளியாக கருதப்படும் ரகாசா தாய்வானை கடுமையாக தாக்கிய நிலையில், சீனாவின் தென் கடல் பகுதியை ஊடறுத்து ஹொங்கொங்கை தாக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இந்த சூறாவளி காரணமாக தாய்வானில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்து வருவதுடன் வௌ்ள நிலையும் ஏற்பட்டுள்ளது. தாய்வானின் கிழக்கு ஹுவாலியனில் உள்ள ஒரு ஏரியில் ஏற்பட்ட வௌ்ளத்தினால் 14 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், இந்த அனர்த்தத்தில் 120க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தாய்வானின் தீயணைப்பு படை அறிவித்துள்ளது. அதேநேரம், இந்த சூறாவளி காரணமாக தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்திலிருந்து சுமார் 370,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனிடையே ஹொங்கொங் தமது எச்சரிக்கையை 10ஆம் நிலைக்கு உயர்த்தியுள்ளது, இது உச்சபட்ச எச்சரிக்கையாகும். இதன்காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அத்துடன், ரகாசா சூறாவளி ஹொங்கொங்கை தாக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹொங்கொங் விமான நிலையம் 36 மணிநேரம் மூடப்பட்டுள்ளது. தெற்கு சீன பகுதியில் அடுத்த சில மணி நேரங்களுக்குள் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் காரணமாக பாரிய மண்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்கூறப்பட்டுள்ளது. https://oruvan.com/typhoon-ragasa-hits-taiwan-hard-14-dead/

இலங்கை - இந்திய வௌிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

3 weeks ago
இலங்கை - இந்திய வௌிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை அமெரிக்காவில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அமெரிக்காவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக குறித்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான நட்புறவையும் நெருங்கிய ஒத்துழைப்பையும் மீண்டும் உறுதிப்படுத்த இந்திய வெளியுறவு அமைச்சரைச் சந்தித்ததாக அமைச்சர் விஜித ஹேரத் தமது எக்ஸ் கணக்கில் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் அமைச்சர் விஜித ஹேரத்தும் அமெரிக்கா சென்றுள்ளார். அதன்படி, இன்று (24) அமெரிக்க நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரையாற்ற உள்ளார். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார். இதேவேளை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி வெளியுறவுச் செயலாளர் எலிசன் ஹூக்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பொதுவான முன்னுரிமைகள் குறித்து இதன்போது விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmfxgot3u00mpo29n2uhbmlnw

செம்மணி வளைவில் சர்வதேசத்திடம் நீதிகோரி உணவுத் தவிர்ப்புப் போர்;

3 weeks ago
செம்மணி வளைவில் சர்வதேசத்திடம் நீதிகோரி உணவுத் தவிர்ப்புப் போர்; நாளை முதல் செப்ரெம்பர் 29 வரை ஐந்து தினங்கள் நடைபெறும்! தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி, நாளை முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை சுழற்சிமுறையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தற்போது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விவாதிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறானதொரு பின்னணியில், இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின் போதும், அதற்கு முன்னரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரியும், தமிழர்களுக்கான தீர்வை வலியுறுத்தியும் சுழற்சி முறையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடத்தீர்மானித்துள்ளோம். எதிர்வரும் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் இரவு - பகலாக எதிர்வரும் 29ஆம் திகதி மாலை 4 மணிவரை இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது. எனவே, தமிழ் மக்கள் பெருவாரியாக இந்த உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் - என்றனர். https://newuthayan.com/article/செம்மணி_வளைவில்_சர்வதேசத்திடம்_நீதிகோரி_உணவுத்_தவிர்ப்புப்_போர்;

எங்கள் மக்களின் சம்மதம் இல்லாமல் ஒரு புதிய அரசியலமைப்பை கொண்டு வர முடியாது! - எம்.கே.சிவாஜிலிங்கம்

3 weeks ago
எங்கள் மக்களின் சம்மதம் இல்லாமல் ஒரு புதிய அரசியலமைப்பை கொண்டு வர முடியாது! adminSeptember 24, 2025 எங்கள் மக்களின் சம்மதம் இல்லாமல் ஒரு புதிய அரசியலமைப்பை கொண்டு வர முடியாது. நாங்கள் எல்லாவற்றையும் செய்வோம் என்ற மமதையை விட்டு முழுமையான தீர்வுக்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 2009 இறுதி யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்பு 16 ஆண்டுகளாக நீதிக்காக தமிழினம் ஏங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில் தமிழர் தரப்பிலேயே பலரை குழப்பம் செய்யும் விதத்தில் சிலரின் நடவடிக்கை காணப்படுகிறது. சர்வதேசம் எதையுமே செய்யாது என்ற விசம பிரசாரத்தின் மூலம் அழுத்தம் இல்லாத சூழலை உருவாக்க முயற்சிக்கின்றனர். நான் 15 தடவைக்கு மேல் ஜெனிவா கூட்டத்தொடருக்கு சென்றவன் என்ற அடிப்படையில், நாட்டிலிருந்து கோரிக்கை வர வேண்டும். உள் நாட்டு மக்கள் போதிய அளவு அக்கறை காட்டாவில்லை. புலம்பெயர் நாடுகளில் இருந்து வரும் அழுத்தம் மட்டும் போதாது என்ற கருத்துப்பட சொல்லி இருந்தார்கள். நடைபெற்றது இனப்படுகொலை என்று சொல்வதற்கு போர் முடிவடைந்து ஏறக்கூடிய ஏழு ஆண்டுகள் எடுத்தன. 2009 இல் போர் முடிவடைந்து 11 வருடங்கள் கடந்தே 3 பிரதான கட்சிகள் இணைந்து இனப்படுகொலை என கையெழுத்திட்டு ஐநாவுக்கு கடிதம் அனுப்பின. 2015ல் வடக்கு மாகாண சபை இனப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றிய போதும் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் வடக்கு மாகாண சபை இருந்த போதும் அந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளாத நிலையில் இருந்தது. இனப்படுகொலையை நிரூபிக்க முடியாது என சொன்னவர்கள் தற்போது செம்மணிக்கு பிறகு இனப்படுகொலை நிருபிக்கப்படலாம் என்ற கருத்தை எங்கள் தரப்பில் இருந்து சொல்கிறார்கள். நாங்கள் போராடுவதால் அழுத்தம் கொடுப்பதால் எதுவும் ஆகாது என்று இல்லை. எங்களுக்கு அதிர்ஷ்டம் இருப்பது போல செம்மணி மனித புதைகுழி தோண்டும் போது இருநூறுக்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் இன்று வெளிவந்துள்ளது. இதை குழப்புவதற்கு பலர் செயற்பட்டாலும் நாங்கள் அதனை வெளிப்படுத்த தயாராக இருக்க வேண்டும். இனிமேல் இனப்படுகொலை நடைபெறாது என்பதை உறுதிப்படுத்தக்கூடிய விதத்தில் ரோம் உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும். வடக்கு கிழக்கு பிராந்தியங்களை ஏற்று ஐநாவின் பொறிமுறை ஊடாக எமக்கான பரிகாரநீதி வழங்கப்பட வேண்டும். சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் எமக்கு தீர்வு வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது. எங்கள் மக்களின் சம்மதம் இல்லாமல் ஒரு புதிய அரசியலமைப்பை கொண்டு வர முடியாது. நாங்கள் எல்லாவற்றையும் செய்வோம் என்ற மமதையை விட்டு முழுமையான தீர்வுக்கு அரசாங்கம் முன்வர வேண்டும். சர்வதேசத்திடம் நீதியை கேட்கவும் தொடர்ந்து போராடவும் தமிழ் மக்கள் தொடர்ந்து பயணிக்க வேண்டும் – என்றார். https://globaltamilnews.net/2025/220728/

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

3 weeks ago
கருணாநிதி.... நாடகங்களில் நடித்துக் கொண்டு இருந்த ராஜாத்தியுடன் கள்ளத் தொடர்பை ஏற்படுத்தும் போது, ராஜாத்தி... (மேலே படத்தில் உள்ள) செந்தாமரை என்பவரின் மனைவி. ராஜாத்தி தனது கையை விட்டுப் போனதை.... தாங்க முடியாமல் மீண்டும் இணைந்து வாழ செந்தாமரை எவ்வளவோ முயற்சித்தும்.... கருணாநிதி தனது ரவுடியிச செல்வாக்கை வைத்து... ராஜாத்தியை நிரந்தரமாக தனதாக்கிக் கொண்டார். ராஜாத்தியின் மகள் தான்... கனிமொழி. கோசான்..... நாங்கள் எல்லாம், கருணாநிதியின் வாழ்க்கை சரித்திரத்தை கரைத்து குடித்து விட்டுத்தான்... யாழ்.களத்திலேயே இணைந்தனாங்கள். இராஜாத்தி... இன்னொருத்தரின் மனைவி அல்ல என்று கருணாநிதிக்கு வெள்ளை அடிக்கிற கதை, கம்பி கட்டுற கதை போன்ற பொய் செய்தி எல்லாத்தையும் @Kandiah57 அண்ணை போன்ற ஆட்களுக்கு சொன்னால் அவர்கள் நம்பலாம். ஆனால் எங்களிடம் உங்கள் பருப்பு வேகவே, வேகாது. 😂 செந்தாமரை... பின்னாளில், தமிழ் திரையுலகத்தில் பிரபலமாக பேசப் பட்ட குணசித்திர நடிகர் ஆவார். ஸ்ராலின் அவர்கள்... தனது தந்தை செய்த அருவருப்பான செயலுக்கு பிராயச்சித்தம் செய்யும் விதமாக... தனது மகளுக்கு செந்தாமரை என பெயர் சூட்டியுள்ளார் என்றே கருத இடம் உள்ளது. ஆக.... கருணாநிதியின் குடும்பத்தில்... உதயநிதியின் சகோதரியாக இப்போதும் செந்தாமரை வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார். 🙂

வோல்கர் டர்குடன் அநுரகுமார திசாநாயக்க சந்திப்பு!

3 weeks ago
வோல்கர் டர்குடன் அநுரகுமார திசாநாயக்க சந்திப்பு! adminSeptember 24, 2025 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் செயலகத்தில் உள்ள மனித உரிமைகள் பேரவை அறையில் இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச் சந்திப்பின்போது, மனித உரிமைகள் தொடர்பான இலங்கையின் ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பில் ஜனாதிபதியுடன், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/220737/

இலங்கையின் ஏற்றுமதி 6.61% அதிகரிப்பு!

3 weeks ago
இலங்கையின் ஏற்றுமதி 6.61% அதிகரிப்பு! 2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை தொடர்ந்து மீள்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியைக் காட்டியது. அதன்படி, குறிப்பிட்ட காலப் பகுதியில் மொத்த வருவாய் 11,554.32 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் (EDB) தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது 6.61% வலுவான அதிகரிப்பை பிரதிபலிக்கிறது என்று EDB ஒரு அறிக்கையை வெளியிட்டு கூறுகிறது. 2025 ஆகஸ்ட் மாதம் மாத்திரம் மொத்த வணிகப் பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டையும் உள்ளடக்கிய மொத்த ஏற்றுமதிகள் 1,607.58 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியது. இது 2024 ஆகஸ்ட் மாதத்தை விட ஆண்டுக்கு ஆண்டு 2.57% வளர்ச்சியைப் பதிவு செய்தது. இந்த செயல்திறன் இலங்கையின் ஏற்றுமதித் துறையின் வலிமையையும், சந்தை அணுகலை விரிவுபடுத்துவதற்கும் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும் செயல்படுத்தப்பட்ட உத்திகளின் செயல்திறனையும் எடுத்துக்காட்டுகிறது. https://athavannews.com/2025/1448332

கெஹெல்பத்தர பத்மே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

3 weeks ago
கெஹெல்பத்தர பத்மே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக் காவலில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கெஹெல்பத்தர பத்மே, கொழும்பு துறைமுகப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது, கணேமுல்ல சஞ்சீவ் மற்றும் கம்பஹா பஸ் பொட்டா ஆகியோரைக் கொலை செய்ய தானே திட்டமிட்டதாக பத்மே ஒப்புக்கொண்டார். அத்துடன் கம்பஹா ஒஸ்மன் மீதான கொலை முயற்சியில் நேரடி தொடர்பு இல்லையெனவும், தம்மிட்ட அவிஷ்க மற்றும் கமாண்டோ சலிந்த ஆகியோரின் கோரிக்கையின் பேரில் அதற்கு ஒத்துழைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கொக்கேய்ன், ஹெரோயின், ஐஸ், குஷ் மற்றும் கேரள கஞ்சா போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்ததாகவும், தமது கைபேசியில், “கொக்கேய்னை ஐ என்ற குறியீட்டு பெயராக பயன்படுத்தியதையும், அவர் உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன், தன்னிடம் இருந்த அனைத்து துப்பாக்கிகளையும் பொலிஸார் ஏற்கனவே மீட்டுள்ளதாகவும், தற்போது தன்னிடம் இன்னும் ஒரு துப்பாக்கி மட்டுமே மீதமுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், அவர் கூறியுள்ளார். https://athavannews.com/2025/1448286

மற்றுமோர் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிப்பு!

3 weeks ago
தங்காலை போதைப்பொருள் விவகாரம்; காணி உரிமையாளரை கண்டறிய விசேட பொலிஸ் குழு! தங்காலையில் அண்மையில் ஒரு தொகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட காணிகளின் உரிமையாளரை கண்டறிய விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது. தங்காலை பகுதியில் ஏற்பட்ட சந்தேகத்துக்கிடமான மரண சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, 705 கிலோ கிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த போதைப்பொருள்கள் காணப்பட்ட காணிகளின் உரிமையாளரை கண்டறிய ஒரு விசேட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். இதேவ‍ேளை, தங்காலை சீனிமோதர பகுதியில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் மர்மமான முறையில் இறந்த மூன்று பேரின் உடல்களின் பிரேத பரிசோதனையில், அவர்கள் ஹெரோயின் மற்றும் பீர் கலவையை அதிகமாக உட்கொண்டதால் இறந்ததாக தெரியவந்துள்ளது. அவர்களின் உடல்கள் தொடர்பான பிரேதப் பரிசோதனையில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனைகளை தங்காலை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ருவன் நாணயக்கார நடத்தினார். இறந்தவர் ஹெரோயின் மற்றும் பீர் கலவையை அதிகமாக உட்கொண்டதால் இறந்ததாக இதன்போது தெரியவந்துள்ளது. https://athavannews.com/2025/1448304

ஹொங்கொங், தெற்கு சீனாவை நோக்கி நகரும் ரகசா புயல்!

3 weeks ago
ரகசா புயலின் கோரத்தாண்டவம்; தாய்வானில் 14 பேர் உயிரிழப்பு! இந்த ஆண்டின் உலகின் மிக சக்திவாய்ந்த வெப்பமண்டல சூறாவளியான ரகசா, புதன்கிழமை (24) ஹொங்கொங்கை வலிமையான காற்று மற்றும் பலத்த மழையால் தாக்கியது. அதேநேரத்தில், தயாவானலில் உள்ள ஏரி ஒன்றின் தடுப்பு சுவர் உடைந்ததால் குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர். மேலும், 124 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ரகசா என்ற சூப்பர் சூறாவளி தீவை பலத்த மழையுடன் தாக்கி கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் பரவலான சேதத்தை ஏற்படுத்தியதை அடுத்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ரகசா சூறாவளி திங்கள்கிழமை முதல் தாய்வானை நோக்கி நகர்ந்து தெற்கு சீன கடற்கரையை நோக்கி நகர்கிறது. ரகசா புயல் பலத்த காற்று மற்றும் மழையுடன் நெருங்கி வருவதால், ஹொங்கொங் மற்றும் தெற்கு சீனாவின் சில பகுதிகள் புதன்கிழமை (24) மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தன. இதனால் சீன அதிகாரிகள் குறைந்தது 10 நகரங்களில் பாடசாலைகள் மற்றும் வணிகங்களை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குப் பின்னர் ஹொங்கொங்கிலிருந்து எந்த விமானங்களும் புறப்படவில்லை என்று விமான நிலையத்தின் வலைத்தளம் தெரிவித்துள்ளது. கேத்தே பசிபிக் முன்னதாக அதன் 500க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்தது. உள்ளூர் நேரப்படி புதன்கிழமை அதிகாலை 2.40 மணிக்கு ஹொங்கொங், ஆய்வகம் அதன் மிக உயர்ந்த புயல் எச்சரிக்கையான T10 ஐ வெளியிட்டது. புயல் நகரும்போது குறிப்பிடத்தக்க அளவு வீக்கம் மற்றும் புயல் எழுச்சி ஏற்படும் என்றும், சில பகுதிகளில் இயல்பை விட நான்கு முதல் ஐந்து மீட்டர் வரை நீர் மட்டம் உயரக்கூடும் என்றும் எச்சரித்தது. https://athavannews.com/2025/1448326

கொஞ்சம் ரசிக்க

3 weeks ago
சொல்வபவர்களெல்லாம், தாங்கள் சுகபோகமாக வாழ்ந்து, மாளும்போதே எதையோ சொல்லிவிட்டுப்போகிறார்கள். பிழைத்துக்கொண்டால் அவர்களும் சொன்னவற்றை மீளப்பெறுவார்கள். நாம் நாமாக, இருப்பதைக்கொண்டு, நிறைவு கண்டால் போதும். வேறொருவரின் ஆலோசனையும் தேவையில்லை.

யாழில் வாள்வெட்டுச் சம்பவங்கள் ; நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கட்டுநாயக்கவில் கைது

3 weeks ago
இவர் நிலமையை பார்த்த பின்னராவது ஊரில் வாள் வெட்டு வித்தை காட்டும் நபர்கள் திருந்த வேண்டும். ஊரில் வாள்வெட்டு வித்தை காட்டிவிட்டு வெளிநாட்டில் செட்டில் ஆகும் கனவுடன் வாழும் நபர்களின் செவிகளில் இந்த நபரின் கைது பற்றிய செய்தி சென்றடைய வேண்டும்.
Checked
Wed, 10/15/2025 - 18:19
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed