புதிய பதிவுகள்2

செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி

1 month 1 week ago
மாற்றிப் பாருங்கள். முன்னர் நான் மாற்றிய ஞாபகம். இதிலே சுமந்திரன் ஏன் கலந்து கொள்ளவில்லை? முன்னமே தெரிந்துவிட்டதோ?

ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் யாழ்ப்பாணத்திற்கு வருகை

1 month 1 week ago
Published By: VISHNU 25 JUN, 2025 | 07:05 PM இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் புதன்கிழமை (25) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். உலங்குவானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை (25) மாலை வந்திறங்கிய ஆணையாளர், முன்னதாககோவில் வீதியில் அமைந்துள்ள IOM அலுவகத்திற்கு சென்றிருந்தார். அதனை தொடர்ந்து செம்மணி புதைகுழி காணப்படும் சிந்துபாத்தி இந்து மயானத்திற்கு சென்று புதைகுழிகளை நேரில் பார்வையிட்டார். அதன் போது, அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் போது, களத்தில் நின்ற சட்டத்தரணிகள், மனித புதைகுழி அப்பகுதியில் காணப்படுவதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தவர்கள் உள்ளிட்ட தரப்பினர்களிடம் புதைகுழிகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். அதனை தொடர்ந்து செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி யாழ். வளைவுக்கு அருகில் கடந்த மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் " அணையா விளக்கு" போராட்ட களத்திற்கு நேரில் சென்று, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டார். அத்துடன் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக ஏற்றப்பட்ட "அணையா தீபத்திற்கு" முன்பாக மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். https://www.virakesari.lk/article/218465

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
கடஞ்சா, சைனா மத்திய கிழக்கில் நடக்கும் சண்டைகள் என்று மட்டும் இல்லை, எந்தச் சண்டைகளிலுமே பங்குபற்றுவதில்லை. உலகில் இரு நாடுகளைத் தவிர வேறு எந்த நாடுகளுமே தங்கள் மேல் தீவிரமாக, தவிர்க்க முடியாமல் ஒரு சண்டை திணிக்கப்பட்டாலே அன்றி சண்டைகளில் ஈடுபடுவதில்லை. இன்றைய காலத்தில் ஒரு பத்து நாட்கள் நடக்கும் யுத்தமே ஒரு நாட்டை மிக இலகுவாக சில வருடங்கள் பின்னோக்கி கொண்டு சென்று விடும் என்ற தெளிவு எல்லா நாடுகளிடமுமே இருக்கின்றது. மிக அண்மையில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் பார்த்தோம். ஒருவரின் வான்வெளிக்குள் அடுத்தவரின் யுத்த விமானங்களே பறக்கவில்லை. தங்கள் தங்கள் வான்வெளிகளிலேயே இரண்டு நாட்கள் சுற்றிப் பறந்து விட்டு இறங்கினார்கள். பின்னர் சமாதானம் என்றார்கள். அமெரிக்காவும் இஸ்ரேலும் மட்டுமே தொடர்ச்சியாக உலகெங்கும் சண்டைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இஸ்ரேல் அதன் இருப்பிற்காக அங்கு பலருடன் போராடுகின்றது. அமெரிக்கா அதன் மதிப்பிற்காகவும், அதற்கு பொறுப்புகள் இருக்கின்றது என்றும் பல இடங்களுக்கும் போய் வருகின்றது. அமெரிக்கா வல்லரசே இல்லை, அமெரிக்காவிற்கு கேந்திர முக்கியத்துவமே கிடையாது என்று 25 வருடங்களாக வாசித்துக் கொண்டேயிருக்கின்றேன். அமெரிக்க டாலரே மூழ்கிவிட்டது என்பதையும் பல வருடங்களாக வாசித்துக் கொண்டேயிருக்கின்றேன். சீனா முன்னே போய்விட்டது என்றும் தான். கோவிட் காலத்தில் அமெரிக்க வல்லமை அற்றது என்று வந்த செய்திகள் ஏராளம். அடுத்த 25 வருடங்களுக்கும் இதே செய்திகள் வரும். ஆனால் அமெரிக்கா இருக்கும் இடத்திலேயே இருக்கும், அமெரிக்க டாலரும் அங்கேயே இருக்கும். அப்படியே நான் போய்ச் சேர்ந்து விடுவேன்............ வேற யாராவது வந்து இதைப் போல யாழில் எழுதுவார்கள்....................🤣.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
ஒரு காலத்தில் இலங்கையில் உள்ள யூதர்களை வெளியேற்ற போராட்டங்கள் நடந்தாலும் நடக்கலாம். கிழக்கு மாகாணத்தில் அறுகம்பே என்ற இடத்தில் சுற்றுலா விசாவில் வரும் இஸ்ரேல்காரர்கள் கோவில் குளம் எல்லாம் கட்டி நீண்டகால இருப்புக்கு ஆயத்தமாகிறார்கள். இஸ்ரேலிய புலனாய்வுப்பிரிவே கூடுதலாக இங்கே வந்து தங்குவதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் கூறுகின்றன.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
ayatollah ali khameneiக்கு சிறுவ‌ர்க‌ள் சிறுமிக‌ள் மீது அதிக‌ பாச‌ம்.................எப்ப‌டி எங்க‌ட‌ த‌லைவ‌ர் செஞ்சோலை பிள்ளைக‌ளை நேசித்தாரோ அதே போல் தான் khameneiயும் ஈரான் நாட்டு பிள்ளைக‌ள் மீது அதிக‌ பாச‌ம் , இவ‌ரின் உட‌ம்பை தொட்டு ஊன‌முற்ற‌ வ‌ய‌தான‌ பாட்டி இவ‌ர் கை கொடுத்த‌ பிற‌க்கும் இவ‌ரின் தோல‌ தொட்ட‌ கைய‌ த‌ன் வாயாலையே த‌ன் கைய‌ முத்த‌ம் இட்டா🙏👍............................

செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி

1 month 1 week ago
பொதுமக்களால் ஓட ஓட கலைக்கப்பட்ட தமிழரசு கட்சியின் சீ.வி.கே சிவஞானம்! யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெற்று வரும் அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற வடமாகாண சபை அவைத்தலைவரும், தமிழரசு கட்சியின் பதில் தலைவருமான சீ.வி.கே சிவஞானம் போராட்ட களத்தில் நின்ற மக்களால் அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளார். செம்மணியில் நடைபெற்று வரும் அணையா விளக்கு போராட்டம் இன்று (25) 3ஆவது நாளாக தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்நிலையில் மதியம் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற சீ.வி.கே சிவஞானத்தை அங்கிருந்த மக்கள் வெளியேறுமாறு கோஷங்களை எழுப்பி போராட்ட களத்தில் இருந்து வெளியேற்றி இருந்தனர். யாழ்ப்பாணத்தில் பலர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என பகிரங்கமாக குற்றச்சாட்டப்பட்டு வரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினருடன் கூட்டு சேர்ந்து யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபைகளில் தமிழரசு கட்சி ஆட்சி அமைத்துள்ளதாகவும், அவ்வாறானவர்களுடன் கூட்டு சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள தகுதியற்றவர்கள் என கூறியே போராட்டக்களத்தில் இருந்து சீ.வி.கே சிவஞானத்தை அப்புறப்படுத்தியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. Vaanam.lk

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
ayatollah ali khamenei நீ இருக்கும் இட‌ம் தெரியும் என‌ ர‌ம்ப் வாயால் வ‌டை சுட்டார் , அதே போல் தான் இங்கை ஒரு த‌ர் மோதிர‌த்தை வைத்து மொசாட்டை இழுக்கிறார்..................நினைவில் வைத்து இருக்க‌வும் மொசாட்டால் khameneiயின் கால் முடிய‌ கூட‌ தொட‌ முடியாது , khameneiயின் மெய்பாதுகாவலர்க‌ள் அவ‌ரின் பாதுகாப்பில் எப்ப‌டி எல்லாம் செய‌ல் ப‌டுகின‌ம் என‌ காணொளியில் பார்த்தேன் , khamenei எப்ப‌வும் அவ‌ருக்கு ந‌ம்பிக்கையான‌வ‌ர்க‌ளை தான் அருகில் வைத்து இருப்பார் என‌ வ‌ர‌லாற்றில் தெரிந்து கொண்டேன்.........................எதிரின்ட‌ கையால் அவ‌ர் சாக‌ போவ‌து கிடையாது , இப்போது 86வ‌ய‌து , 94வ‌ய‌து வ‌ரை வாழுவார் , இது என‌து ந‌ம்பிக்கை..........................ஈரானில் மொசாட் இவ‌ள‌வு கொடுமைக‌ளை செய்த‌ பின்பும் , இனி khamenei கிட்ட‌ யாரையும் நெருங்க‌ விட‌ மாட்டின‌ம்....................அவ‌ரின் ஆலோச‌க‌ர்க‌ள் ந‌ம்ம‌ல‌ மாதிரி கூ முட்டைக‌ள் கிடையாது , மொசாட்டின் இந்த‌ செய‌லுக்கு பின் விழித்து விட்டின‌ம் , ப‌ழைய‌ ப‌டி ஈரான் ப‌ழைய‌ நிலைக்கு திரும்பி விட்ட‌து , ஈரான் த‌லை ந‌க‌ர‌த்தில் நேற்று ஒரே கொண்டாட்ட‌ம்......................இந்த‌ போரில் அவ‌மான‌ ப‌ட்ட‌து இஸ்ரேலும் அமெரிக்காவும் தான் , ஈரான்ட‌ காலில‌ விழுந்து போரை நிறுத்துங்கோ என‌ பெரிய‌ அண்ண‌ன் அமெரிக்கா கெஞ்சின‌து ஹா ஹா.....................

செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி

1 month 1 week ago
மாறாத ஒன்று புலத்தமிழர்கள் சிலரின் "போர்க்குணம்"😎 தான்! சிங்கார சுவிசில் இருந்து ஐரோப்பா முழுவதும் வகேஷன் போய் வரும் முகநூல் ஊடகவியலாளர் "இணுவையூர்"😂 மயூரன் விடு பட்ட செருப்புகளை பெருமையோடு பகிர்ந்திருக்கிறார். இது போன்ற விசிலடிச்சான் குஞ்சுகளின் முகநூல் போர்க்குணத்தால் மட்டும் தான் "விடுதலைப் போராட்டம் இன்று விருட்சமாக வளர்ந்து நிற்கிறது" விளங்குதோ??😎

செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி

1 month 1 week ago
செம்மணிப் படுகொலையின் சூத்திரதாரிகள். “அம்மணியும், அல்லக்கையும்." Rj Prasath Santhulaki
Checked
Thu, 08/07/2025 - 18:38
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed