1 month 1 week ago
என்ர வண்டி இன்னும் 5வருடம் ஓடுமோ தெரியாது , நீங்கள் 25வருடத்துக்கு போய் விட்டிங்கள் அப்ப உங்களுக்கு 81வயது ஆகி விடும் , புகை பிடிக்காம மது அருந்தாம கிமிக்கள் சாப்பாடுகளை தவிர்த்தால் உங்கட விருப்பம் நிறைவேறும்............................இன்னும் 25வருடம் கழித்து யாழ்களத்தில் யாரும் எழுதுவினமான்னா சந்தேகம் தான் குரு , தின்ட சோறு செமிக்க இதுக்கை இருந்து குப்பைய கொட்டுகிறோம் லொள்😁😛......................... புரியுது👍................
1 month 1 week ago
பையன் சார், தமிழ்நாட்டை பற்றிய உங்களின் ஆதங்கம் புரிகின்றது. ஆனால் நான் இங்கே சொல்ல விரும்பிய விடயம் இதுவல்ல. இன்று இணையத்தில் உலாவும் காணொளிகள் எவ்வளவு போலியானவை, திட்டமிட்டு சோடிக்கப்பட்டு தயாரிக்கப்படுபவை என்றே சொல்ல நினைத்தேன். அதனால் இவற்றை மட்டும் ஆதாரங்களாகக் கொண்டு எதையும் நிறுவ முயலாமல் அல்லது புரிந்து கொள்ள முயலாமல், பல்வேறு தரப்புகளையும் நிகழ்வுகளையும் ஒன்றாகத் தொகுத்து ஒரு முடிவுக்கு வருவதே ஓரளவாவது சரியாக இருக்கும் என்று சொல்லவே வந்தேன். தமிழ்நாட்டு டாஸ்மாஸ்க் விடயம் ஒரு உதாரணம் மட்டுமே...................🤝.
1 month 1 week ago
கட்சிப் பதவிகளைத் துறந்தார் ரவிகரன் எம்.பி. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள உள்ளூர் அதிகாரசபைகளுக்கான இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட அதிருப்தியினால் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கட்சிப் பதவிகளிலிருந்து விலகியுள்ளதாக அறியமுடிகின்றது. அந்த வகையில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்டக் கிளைச் செயலாளர் மற்றும், கரைதுறைப்பற்று பிரதேசக் கிளைத் தலைவர் ஆகிய பதவிகளிலிருந்தே பாராளுமன்ற உறுப்பினர் து. ரவிகரன் இவ்வாறு பதவி விலகியுள்ளதாக அறியமுடிகின்றது. அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தாம் கட்சிப்பதவிகளிலிருந்து விலகும் இந்த முடிவை கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், கட்சியின் நிர்வாகச் செயலாளர் சேவியர் குலநாயகம் ஆகியோருக்கு நேற்று (24) கடிதத்தின் மூலம் அறிவித்திருப்பதாகவும் மேலும் அறியக்கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.thamilan.lk/articles/u74RKtGpHlBqFIXlbMAK
1 month 1 week ago
பெரும்தலைவர் தமிழ் நாட்டு முதலமைச்சரா இருந்த போது அங்கு எல்லாம் நல்ல நிலையில் தான் இருந்தது அந்த மனுசன் ஊழல் செய்ய வில்லை , பல ஆயிரம் பள்ளிகளை கட்டி பிள்ளைகளை படிக்க வைச்சார் , திராவிடம் பிள்ளைகளை குடிக்க வைச்சது இது மறுப்பதுக்கு இல்லை அண்ணா................... நான் தமிழ்சினிமா 18வயதோட பார்க்காம விட்டு விட்டேன் , X இன்று தளத்தில் ஒரு காணொளி பார்த்தேன் யாரோ நடிகர் போதை பொருள் பாவித்ததாக , பள்ளி மாணவர்களே டாஸ்மார்க்கில் வேண்டி குடிக்கினம்😮👎....................
1 month 1 week ago
முதலீடுகள் இரண்டு வழிகளில் மட்டுமே வரும். ஒன்று சேமிப்பு. இரண்டாவது, போதிய சேமிப்பு இல்லாவிட்டால், கடன். அபிவிருத்தி அடைந்த நாடுகளில் மிகக் குறைவாக சேமிப்பவர்கள் அமெரிக்கர்கள். சேமிப்பே கிடையாது. பிறகு முதலீடுகளுக்கு எங்கே போவது............. ஆனால் உலகமே அமெரிக்காவில் முதலிடுகின்றது. அமெரிக்காவிற்கு ஒவ்வொரு நாட்டுடனும் வர்த்தகப் பற்றாக்குறை உள்ளது. இலங்கையுடன் கூட. அது இலங்கை அமெரிக்காவில் இடும் முதலீடு. சீனா முதலிடுகின்றது, மெக்சிக்கோ முதலிடுகின்றது............. எல்லாமே கடன்களாக இந்த நாட்டுக்குள் வருகின்றன. அதுவே கட்டிடங்களாக, தொழில்நுட்பங்களாக, ஐபிஓக்களாக, எலான் மஸ்க்குகளாக மாறுகின்றன. இதை ஏன் வேறு ஒரு நாட்டில் உலகம் முதலிட முடியாதுள்ளது............ ரஷ்யாவில் முதலிட முடியாதா, சைனாவில் முதலிட முடியாதா.............. முடியாது என்பதே இன்றைய நிலவரம். இத்தனைக்கும் சைனாவிலோ அல்லது ரஷ்யாவிலோ அதன் தலைவர்கள் இறக்கும் வரை மாறுவதில்லை, அவர்களின் கொள்கைகளில் மாற்றம் இல்லை, அரச நிர்வாகத்தில் தனித்தனியான சுதந்திரம் உள்ள அமைப்புகளினால் ஏற்படும் கட்டுப்பாடுகள் அங்கு இல்லை. ஆனாலும் முதலிடுபவர்கள் எதிர்பார்க்கும் ஒரு நம்பகத்தன்மையும், வெளிப்படையும், சுதந்திரமான நிர்வாக அமைப்புகளும் அங்கு இல்லை. இந்த காரணங்களுக்காகவே டாலர் பெறுமதியாக இருக்கின்றது, அமெரிக்காவிற்கு கடன்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அமெரிக்கா எறியும் காசு அவர்களுடையது அல்ல. ஆனாலும் மற்றவர்களுக்கு அதை கொடுப்பதற்கு வேறு இடமும் இல்லை. அமெரிக்காவின் பிரச்சனை திருப்பிச் செலுத்தும் வட்டியின் அளவு. இது இப்படியே போய்க் கொண்டிருக்க முடியாது என்று சிந்திக்க ஆரம்பித்து இருக்கின்றார்கள். அதனால் அரசாங்கம் இனி சேமிக்கப் போகின்றார்களாம்.
1 month 1 week ago
அவுஸ்ரேலி வெஸ்சின்டீஸ் டெஸ்ட் விளையாட்டு படு கேவலம் , ஒரே நாளில் இரண்டு அணிகளும் batபன்னினம்....................
1 month 1 week ago
சரியான செயல். படங்களை பார்க்க சிரிப்பாக உள்ளது. 😂
1 month 1 week ago
தெரிந்து கொள்ள கேட்கிறேன்... செம்மணி படுகொலைகள், புதைகுழிகள் பொய்யானவை என்று இவரோ இவர் சார்ந்த கட்சியோ கூறிய கருத்தை எங்கே தேடலாம்?
1 month 1 week ago
மற்றதுக்கு பின்பு. அனால், அமெரிக்காவின் இவ்வளவு 'வளத்தின்' காரணம் என்ன? மிக முக்கியமானது கடன் வாங்கும் தகமை. அதனால் தான் அமெரிக்கா எதுக்கும் காசை எறியக் கூடிய நிலையில் இருப்பது. (சீன கடன் வழங்குவது - அதனால் அதுக்கு ரேட்டிங் அவ்வளவு தாக்கம் இல்லை, ஆயினும் உயர்வதை விரும்பும். இதவும் ஒரு காரணம் அமெரிக்கா சீனாவின் சர்வதேச வர்த்தகத்தை குழப்ப எத்தனிப்பது வரியால் மற்ற நாடுகளுக்கும் சேர்த்து, வரி குறைப்பின் ஒரு பேரம் சீனவியுடன் வர்த்தகத்தை குறைப்பது. சீனாவை தனிமைப்படுத்துவது. ஏனெனில், சீனாவின் அமெரிக்காவுக்கான வர்த்தக தொகையான 500 பில்லியன் கொடுக்கும் 'முழு பொருளாதார' நன்மையையும் எடுத்தால், புறக்கணிக்க தக்க தொகை. அதாவது TRump இன் வரியின் நோக்கம் வேறு.) அத்துடன் போக்கையும் - அதாவது இது இன்னும் மோசமாகும் நிலைட்டே காணப்படுவதுஎன்பதை rating agencies சொல்வது. காரணம் உள்ளமைப்பு பிரச்சனைகளும். அமெரிக்காவின் ஒவ்வொரு தொழில்நுட்ப மேலாண்மையும் பார்த்தல் - எவ்வளவு காசு எறியப்பட்டு உள்ளதோ அவ்வளவு மேலாண்மை. அதுக்காக அமெரிக்காவிடம் தொழில்நுடப்பா திறமை இல்லை என்று சொல்லவில்லை, ஏனெனில் தொழில்ட்பம் முதலில் idea. ஆனால் ஐடியா வேறு, அதை யதார்த்தத்தில் கொண்டுவருவது வேறு. இதையும் உள்ளடக்கி பணம், கடன் வாங்கும் தகமை மிக முக்கியம். பொருளாதாரம் அப்படி இயங்குவத்தால், அதாவது வெளியார் கடனில். முதலில் வேறு திரியில் சொல்லி இருக்கிறேன் gdp - வெலிக்கடன் அமெரிக்கா 36 - 26 சீனா 19 - 2.5 (3) அமெரிக்கா பொருளாதார நிபுணர்கள் சொல்வது 26 ஐ வாங்கி , 36 ஐ உடற்பதி செய்து, 10 நிகர லாபம் எனது கடன் வாங்கும் தகைமையையில் மிக கூட தங்கி இருப்பது. சீனாவுக்கு சொல்ல தேவை இல்லை, ஏனெனில் அது வர்த்தகத்தில் பணம் பெறுவது,
1 month 1 week ago
நேற்று இரவு தமிழ்நாட்டு செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென்று ஒரு செய்தி பெரிய அதிர்ச்சியாக இருந்தது. நான் கேட்பது சரிதானா என்று மிகவும் உன்னிப்பாகக் கேட்டேன். என் காதில் செய்தி சரியாகவே விழுந்து கொண்டிருந்தது. அங்கு ஒரு ஊரில் அங்கிருக்கும் டாஸ்மாஸ்க் கடையை அகற்ற வேண்டாம் என்று சில பெண்கள் கூட்டமாக நின்று கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்!! அதைத் தொடர்ந்து வந்த அடுத்த செய்தியில் இன்னொரு ஊரில் அங்கிருக்கும் டாஸ்மாஸ்க் கடையை அகற்றும் படி பெண்கள் கூட்டமாக நின்று கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். இதில் எது உண்மை, எது சோடிக்கப்பட்ட ஒரு நாடகம், களநிலை எது, தேவையானது எது என்பதை இந்த இரண்டு செய்தித் துண்டுகளில் இருந்தோ அல்லது இவற்றை துண்டு துண்டாக கொண்டு வரப் போகின்ற யூடியூப் காணொளிகளில் இருந்தோ மட்டும் சொல்லிவிடமுடியாது. தமிழ்நாட்டுக் கிராமங்களின் நிலை மற்றும் டாஸ்மாஸ்க் பற்றிய புரிதல் ஏற்கனவே இருந்தால் மட்டுமே இவற்றின் பின்புலங்கள் என்னவென்று தர்க்கரீதியாக சிந்திக்கமுடியும். அப்படியான புரிதல்கள் இல்லாவிட்டால், டாஸ்மாஸ்க் கடைகளுக்கு குடும்பப் பெண்களே ஆதரவு கொடுக்கின்றார்கள் என்ற செய்தியும் சரியென்றே தோன்றும்.
1 month 1 week ago
கொழும்பு மைதானம் பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம்......................
1 month 1 week ago
புலம்பெயர்ந்து இருப்பவர்களை விட தாயகத்தில் இருப்பவர்களுக்குத்தான் உள் விடயங்கள் பல தெரியும். அடித்து கலைத்ததில் நியாயம் இருப்பதாகவே எனக்கு தெரிகின்றது. அவனவன் வலி அவனவனுக்கு மட்டுமே தெரியும்.
1 month 1 week ago
கமல்ஹாசனின் மருதநாயகம் திரைப்படம் மாதிரி "இந்தா வருகுது வருகுது" என்று எத்தனை வருடங்களாக இந்த பிரிக்ஸ் இன்னும் வந்து கொண்டிருக்குது😂? இந்த "பல்துருவ" உலகை நாடும் எழுத்தாளர்களும் அதை ஒரு காரணியாக எடுத்துக் கதை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
1 month 1 week ago
இது சிந்தனையில்லாத பேச்சு! நீங்கள் கடலுக்கடியில் தேடாமல் இணையத்தில் தேடி தகவல் சரி பார்க்கிறீர்கள்! இது இங்கே செல்லாது☺️!
1 month 1 week ago
தெய்வமே, நீங்கள் கட்சி மாறி விட்டியள் போல இருக்கே😂? அல்லது சில யாழ் கள மெம்பர்சிடமிருந்து flip-flop-itis வியாதி உங்களுக்கும் மெய்நிகர் வழியாகத் தொற்றி விட்டதா😂?
1 month 1 week ago
இந்த இரண்டு நாடுகளினதும் இன்றைய கிரெடிட் ரேட்டிங் என்னதான் என்று தேடிப் பார்த்தால் ஆச்சரியம் தான் மிஞ்சுகின்றது. AAA ரேட்டிங்கிலிருந்து அமெரிக்காவின் ரேட்டிங் AA1 ஆகியுள்ளது. AA1 என்பது Stable Outlook. சீனாவின் ரேட்டிங் A1 என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. A1 என்றால் Negative Outlook.
1 month 1 week ago
கலந்து கொள்ளாத சுமந்திரனை நானும் கண்டிக்கின்றேன் 😂 கலந்து கொண்டதிற்காக சாணக்கியன் சிவஞானத்திற்கு எனது கண்டணங்கள்
1 month 1 week ago
எதை வைத்து புளகாங்கிதம் அடைவது ? முல்லாக்களுக்காக இவ்வளவு பிரசாரம் செய்வது எதற்காக 🤣 அண்ணா அமெரிககா ஒரு காகித புலி எல்லோ
1 month 1 week ago
'கிரெடிட் ரேட்டிங்' விழுந்தது அதிபட் ட்ரம்ப் அவர்களின் நிலையற்ற பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் அதன் பொருட்டான அவசர நடவடிக்கைகளால். அமெரிக்க - சீன போட்டியால் அல்ல. இந்த அரிதான உலோகங்கள் மீதான சீனாவின் அதிகாரம் என்பது மிகவும் சமீபமாக நடந்த ஒரு நிகழ்வு. அதற்கு பல வருடங்கள் முன்னரேயே அமெரிக்கவும் சீனாவும் ஒன்றும் இரண்டும் என்று உலகில் போட்டாபோட்டியில் இருக்கின்றன. இதன் அடிப்படையே ரஷ்யாவோ அல்லது வேறு எவருமோ அருகில் கூட இல்லை என்பதே. இன்று சீனாவிடம் அரிதான உலோகங்களின் மீதான அதிகாரம் இருக்கலாம். ஆனால் இன்னும் பல தொழில்நுட்பங்கள் அமெரிக்காவின் கைகளிலேயே இருக்கின்றது. ஒரு சாதாரண பயணிகள் விமானத்தை கூட சீனா பாதுகாப்பாக செய்து விற்க, அதை உலக நாடுகள் வாங்கும் நிலை இன்னும் வரவில்லை. நாங்களும் சீனா செய்யப் போகும் விமானங்களில் பயணிக்கும் நிலையிலும் இல்லை. இது ஒரு உதாரணம் மட்டுமே. இதுவே தான் மைக்ரோ பிராசசர் தொழில்நுட்பத்திலும். இந்த இருவரும் தொழில்நுட்பத்தில் உலகெங்கும் போட்டி போடுவார்கள். ஆனால் இராணுவ ரீதியாக இன்னொரு கண்டம் போய், இன்னொரு நாடு போய், அங்கே நின்று போரிடுவது என்பது இன்றைய காலகட்டத்தில் அமெரிக்காவால் மட்டுமே முடியும். வேறு எவரிடமும் அந்த வளங்களும், திறமைகளும் இல்லை.
1 month 1 week ago
Checked
Thu, 08/07/2025 - 18:38
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed