புதிய பதிவுகள்2

13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்

1 month 1 week ago
20ஓவ‌ர் ம‌க‌ளிர் உல‌க‌ கோப்பையில் கூடுத‌ல் அணிக‌ள் குறைந்த‌து 10 , 12 பேர் க‌ல‌ந்து கொள்ள‌னும் , அப்ப‌டி க‌ல‌ந்துக் காட்டி போட்டிய‌ ந‌ட‌த்தாம‌ விடுவ‌து ந‌ல்ல‌ம்...........................

அதிரடியாக தொடங்கி… அந்தரத்தில் தொங்கும் திரைப்பயணம்… போதை வழக்கில் சிறை… யார் இந்த ஸ்ரீகாந்த்?

1 month 1 week ago
இந்திய சினிமா வட்டாரங்களில் போதைப்பொருள் பாவனை என்பது சர்வசாதாரணம். பல திமிங்கிலங்கள் இருக்க ஸ்ரீகாந்த் மட்டும் ஏன் மாட்டுப்பட்டார்?

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
பையன் சார், நீங்கள் சொன்னது போலவே நடந்தது. இது போலவே உங்களுக்கு வேறு பல உலக விளையாட்டுகளில் இருக்கும் பரிச்சயமும், தெரிந்திருக்கும் தகவல்களும் ஆச்சரியமானவை..........👍. அரசியல் மற்றும் வரலாறு என்று வரும் போது பலரும் ஏற்கனவே ஒரு நிலைப்பாட்டில் இருந்து கொண்டிருப்பார்கள், நான் உட்பட. பார்வைகளும் அவரவர் நிலைப்பாட்டின் வழியே தான் பெரும்பாலும் செல்லும். சிலருக்கு பரந்த வாசிப்பு இருக்கும். சிலரிடம் மிக அதிக ஞாபகசக்தி இருக்கும். இன்னொரு பார்வையில் ஒரு உறுதியான கருத்து சரியான தரவுகளுடன் வரும் போது அதையிட்டு அமைதியில்லாமல் தவிக்க வேண்டிய அளவிற்கு நாங்கள் ஒருவரும் தொழில்முறை அரசியல்வாதிகள் இல்லைத்தானே..................... மாற்றுக் கருத்துகளையும் இலேசாகக் கடந்து போவது தான் சிறப்பு. இதற்காக எங்களின் உடல், மன ஆரோக்கியத்தை இழப்பது தேவையற்றது. சரியான தரவுகளின் பின்புலம் இல்லாமல் வரும் கருத்துகள்/காணொளிகள் அம்புலிமாமா கதைகள் போல, வாசித்தவுடன்/பார்த்தவுடன் மறந்துவிடவேண்டும்................🤣.

13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்

1 month 1 week ago
நீங்களாகவே தெரிவு செய்தபடி, அந்தப் பலரில் நானில்லை என்பதைச் சொல்லிக் கொண்டு. உலகக் கோப்பைக்கு அணிகள் தெரிவாக வேண்டும். எல்லா உலகக் கோப்பையிலும் நடக்கிறதுதான். எட்டு அணிகள்தான் இம்முறையும்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
நான் நாத்த‌த்தை விரும்ப‌ல‌ , க‌ற்பூர‌ வாச‌னைய‌ விரும்புப‌வ‌ன்🙏🥰👍 , சாக்க‌டை அடைப்பு அர‌சிய‌ல் நாத்தாம்😉 , க‌ற்பூர‌ வாச‌னை நான் நேசிக்கும் ப‌ல‌ விளையாட்டுக்க‌ள்🥰..................காலையில் எழுந்த‌தும் விளையாட்டு செய்திக‌ள் விளையாட்டு highlights பார்த்து விட்டு தான் செய்ய‌ வேண்டிய‌தை செய்வேன் , ஏதும் சாக்க‌டை அடைப்பு அர‌சிய‌ல் பூதாக‌ர‌மாய் வெடித்தால் என்ன‌ ந‌ட‌க்குது என்று ப‌ல‌ த‌ள‌ங்க‌ள் போய் பார்ப்ப‌தோடு ச‌ரி , ம‌ற்ற‌ம் ப‌டி சாக்க‌டை அடைப்பு அர‌சிய‌ல் என‌க்கு ச‌ரி வ‌ராது😁😛................................... இர‌ண்டு நாளுக்கு முத‌ல் ர‌ம்ப் த‌ங்க‌ளின் த‌ள‌ங்க‌ளை தொட்டால் ஈரான் பெருத்த‌ அழிவை ச‌ந்திக்கும் என்று சொன்னார் , இன்று அவ‌ரே போரை நிறுத்துங்க‌ள் என்று சொல்லி விட்டார் , ஊட‌க‌ங்க‌ள் கேட்க்க‌ தூச‌ன‌த்தில் ப‌தில் அளித்து போட்டு போகிறார்😁😛..............இது தான் நாத்த‌ம் பிடித்த‌ சாக்க‌டை அடைப்பு அர‌சிய‌ல் 😁😛, இதை பின் தொட‌ர்ந்தால் ம‌னித‌ர்க‌ளுக்கு இருக்கும் நின்ம‌தியே போய் விடும் , இங்க‌த்தை வெள்ளைய‌ல் சாக்க‌டை அடைப்பு அர‌சிய‌லை எட்டியும் பார்க்க‌ மாட்டின‌ம் , கேட்டால் அர‌சிய‌ல் பிடிக்காது என்ர‌ ஒரு வார்த்தையோட‌ முடிப்பின‌ம்👍.....................அதுக‌ளும் என்னை போல் விளையாட்டின் மீது பெரிய‌ ஆர்வ‌ம் , சின்ன‌ நாடு , 58ல‌ச்ச‌ ம‌க்க‌ள் இருந்தாலும் ஒலிம்பிக்கில் 9 , 10 ப‌த‌க்க‌ம் வெல்லுவின‌ம்👍...........................

இலங்கையின் விமானங்கள் வழமைக்குத் திரும்பின

1 month 1 week ago
இலங்கையின் விமானங்கள் வழமைக்குத் திரும்பின General24 June 2025 மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக, நேற்றைய தினம் மாற்று விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்ட அனைத்து ஸ்ரீலங்கன் விமான சேவை விமானங்களும் தற்போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குத் திரும்பியுள்ளன. இந்தநிலையில், இன்று மாலை முதல் இந்த விமானங்கள் மீண்டும் தமது சேவைகளை வழமை போன்று முன்னெடுத்துள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சுனில் ஜெயரத்ன தெரிவித்தார். இதனிடையே, கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 80 சதவீத விமான சேவை நடவடிக்கைகள் தற்போது வழக்கம் போல இடம்பெறுவதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் செயல்பாட்டுக் குழுவின் தலைவர் ரோஷனி மாசகோரல தெரிவித்துள்ளார். எனினும், கட்டார் ஏர்வேஸ் விமானங்கள் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். டோஹா விமான நிலையத்தில் சில கட்டார் ஏர்வேஸ் ஊழியர்கள் மற்றும் தரை செயல்பாட்டு அதிகாரிகள் பணிக்கு திரும்பாதமையால் இந்த தாமதம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார் https://hirunews.lk/tm/408244/sri-lankan-flights-return-to-normal

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்ததை எழுதலாம். ஆனால் தரவுகளையும், வரலாற்றையும், ஏன் நேற்று, போன வாரம், போன மாதம் நடந்த சம்பவங்களைக் கூட அறியாமல் சகட்டு மேனிக்கு எழுதும் கருத்துக்கள் சவாலுக்குள்ளாகும். ஈரான் இஸ்ரேலுக்கு என்ன செய்தது, ஈரானின் கட்டுப்பாட்டில் இருக்கும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்கும், அமெரிக்காவிற்கும், வளைகுடாக் கடலினூடாக உங்கள் நாட்டுக்கு வரும் சிவிலியன் சரக்குக் கப்பல்களுக்கும் என்ன செய்தார்கள்- இந்த தகவல்கள் எவை பற்றியும் அறியாமல் "ஈரானுக்கு நடந்தது அநீதி" என்ற முடிவுக்கு எப்படி வந்தீர்கள் என்று தான் எல்லோரும் கேட்கிறார்கள். உங்களை யாரும் உங்களுக்கு ஆர்வமில்லாத விடயங்களை அறிந்து கொள்ளும் படி வற்புறுத்தவில்லை. ஆனால், அறிந்து கொள்ளாத விடயங்களை வைத்துக் கொண்டு இங்கே போலியான கதையாடல்களையும், தகவல்களையும் எழுதி வாசகர்களின் நேரத்தை வீணாக்காதீர்கள் என்றே கேட்கிறார்கள்.

சிரிக்க மட்டும் வாங்க

1 month 1 week ago
அட ........ குடைக்கம்பியில் பல உபயோகம் உண்டு ......... கொண்டையில் பூ சொருகலாம் ....... அவசரத்துக்கு பூட்டுகளைக் கூட திறக்கலாம் ........ இங்கால எடுத்து அங்கால வைக்கிறதைவிட வீட்டில கொண்டுபோய் வைத்திருந்தால் தொடர்ந்து உபயோகப்படும் ........ பாவம் . ..... ஜப்பானியர்களுக்குத் தெரியாது போல ........ ! 😂

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
ஒவ்வொருத‌ருக்கு ஒவ்வொன்றை தெரிந்து கொள்ள‌ ஆசை , என‌க்கு உல‌க‌ அரைவேக் காட்டு அர‌சிய‌ல் மீது பெரிய‌ ஆர்வ‌ம் இல்லையென‌ ர‌ஞ்சித் அண்ணாவுக்கு எழுதி விட்டேன் , அவ‌ரே சும்மா இருக்க‌ என் க‌ருத்துக்கை சில‌ர் மூக்கை நுழைப்து என‌க்கு பிடிக்க‌ல‌ , என‌க்கு விளையாட்டுக்க‌ள் மீது தான் அதிக‌ ஆர்வ‌ம் , அமெரிக்கா விளையாட்டான‌ NBA விளையாட்டில் நான் ர‌சோத‌ர‌ன் அண்ணாவுக்கு சொன்னேன் மூன்று மாத‌த்துக்கு முத‌ல் OklaHoma City Thunder அணி தான் கோப்பை வெல்லும் என‌ இதுவொன்றும் IPL கிடையாது 10 அணிக‌ள் விளையாட‌ , 30அணிக‌ள் விளையாடும் 8மாத‌ நீண்ட‌ தொட‌ர் , அதில் இந்த‌ அணி தான் வெல்லும் என்று முன் கூட்டி க‌ணிப்ப‌து ஈசிய‌ல்ல‌ , நான் ர‌சோத‌ர‌ன் அண்ணாவுக்கு சொன்ன‌து போல் OklaHoma City Thunder அணி நேற்று கோப்பை வென்று விட்டின‌ம்.................அந்த‌ அணி வீர‌ர்க‌ளின் புள்ளிய‌ பின் தொட‌ர‌னும் ஒவ்வொரு விளையாட்டிலும் எத்த‌னை பொயின்ட் போட்டு இருக்கின‌ம் என்ற‌தை பார்க்க‌னும் , இதில் தான் என‌து நேர‌ங்க‌ள் போகும்.............. விளையாட்டு செய்திக‌ளை அதிக‌ம் விரும்பி வாசிக்கும் என‌க்கு , அர‌சிய‌ல் ஒரு பொருட்டே கிடையாது......................அதில் என‌க்கு ஆர்வ‌மும் கிடையாது , நான் தெரிந்ததை எழுதினேன் , இதுக்கை க‌ருத்து எழுதுப‌வ‌ர்க‌ள் எல்லாத்திலும் நூற்றுக்கு நூறு தெரிந்த‌வ‌ர்க‌ள் கிடையாது , உல‌கில் அர‌சிய‌ல் ம‌ட்டும் செய்தி கிடையாது , அதையும் தான்டி ப‌ல‌ ந‌ல்ல‌ செய்திக‌ள் இருக்கு................... அர‌சிய‌ல் ஒரு சாக்டைஅடைப்பு......................ஈரானுக்கு இழைக்க‌ப் ப‌ட்ட‌து அநீதி அதுக்காக‌ தான் சில‌ க‌ருத்துக்க‌ளை எழுதினேன் இதுக்கை ம‌ற்ற‌ம் ப‌டி இதுக்கை எழுத‌ ம‌ன‌ம் இட‌ம் கொடுக்காது , இதுக்கை எழுதி ர‌த்த‌ கொதிப்பை வ‌ர‌ வைப்ப‌தும் பார்க்க‌😁😛 , விளையாட்டுக்க‌ளை போட்டு விட்டு பார்த்து கொண்டு இருந்தாலே பொழுது ந‌ல்ல‌ மாதிரி போய் விடும்🥰❤️.......................

அமெரிக்காவில் அகோர வெய்யில்.

1 month 1 week ago
அவர் செயற்கை மழைக்கு யூரோப்பில் உலாவும் மேகங்களைத்தான் தள்ளிக்கொண்டு போவார் ...... நீங்கள் ஒரு ஐடியாவும் குடுக்காமல் "கம் " என்று இருக்கவும் . ......... மனுசன் நோபல் பரிசுக்கு வேற அலையுது . .......! ☹️

13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்

1 month 1 week ago
ப‌ல‌ர் ம‌க‌ளிர் கிரிக்கேட் பார்ப்ப‌து இல்லை போல் தெரியுது , நான் 2013க‌ளில் இருந்து ம‌க‌ளிர் கிரிக்கேட் இடை விடாது பார்த்து வ‌ருகிறேன்...................இந்த‌ உல‌க‌ கோப்பை சீக்கிர‌ம் முடிந்து விடும் , வ‌ள‌ந்து வ‌ரும் ப‌ல‌ சின்ன‌ அணிக‌ளை சேர்க்க‌ வில்லை இந்த‌ உல‌க‌ கோப்பையில் , ம‌க‌ளிர் கிரிக்கேட்டும் மெதுமெதுவாய் வ‌ள‌ந்து கொண்டு வ‌ருது , ஆண்க‌ளின் உல‌க‌ கோப்பை என்றால் ம‌க்க‌ள் ம‌த்தியில் வ‌ர‌வேற்ப்பு கூட‌ , அவுஸ்ரேலியா ம‌க‌ளிர‌ இந்தியா ம‌க‌ளிர் இந்த‌ முறையாவ‌து வெல்லுவின‌மானு தெரியாது , இந்தியா ம‌க‌ளிர் இர‌ண்டு வ‌கை உல‌க‌ கோப்பைய‌ இன்னும் வெல்ல‌ வில்லை................சொந்த‌ நாட்டில் ந‌ட‌ப்ப‌தால் இந்தியா ம‌க‌ளிர் சிற‌ப்பாக‌ விளையாட‌க் கூடும்..............................

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

1 month 1 week ago
பின்ன‌னி வீர‌ர்க‌ள் ப‌ல‌ர் பூச்சிய‌த்தில் அவுட் ஆகின‌தால் தோல்வி....................வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர் நிதான‌மாக‌ நின்று விளையாடுவார் , அவ‌ரை விளையாட‌ விட்டு இருக்க‌னும் , பெடிய‌ன் ப‌ந்தும் போடுவார் ம‌ட்டையாலும் அடிப்பார்............................

மொசாட் அமைப்பின் வெற்றிகளும் தோல்விகளும் - வரலாற்றில் இடம்பெற்ற 14 முக்கிய ஆபரேஷன்கள்

1 month 1 week ago
Mossad Operations: போலியாக Resort; பகலில் ஹோட்டல் ஊழியர்கள் வேஷம் ; மொசாத் செய்தது என்ன? இஸ்ரேல் இரான் இடையேயான மோதலில், தலைநகர் டெஹ்ரான் உட்பட இரானின் முக்கிய பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தாக்குதல்கள் வான்வழியாக நடந்திருந்தாலும், இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாத், இலக்குகளைக் கண்டறிந்து தரையிலிருந்து நடவடிக்கைகளை இயக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. உதாரணமாக, மொசாத் உளவாளிகள் இரானின் மீதமுள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைக்க நாட்டிற்குள் கடத்தப்பட்ட டிரோன்களைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது. இஸ்ரேல் மொசாத்தின் செயல்பாடுகள் குறித்து அரிதாகவே பொதுவெளியில் பேசுகிறது. இஸ்ரேலின் உளவு அமைப்பான மோசாத் நிகழ்த்திய முக்கிய ‘ஆப்ரேஷன்கள்’ என்ன? அதனின் வெற்றி, தோல்வ் என்ன? இந்த காணொளியில் பார்க்கலாம். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
Checked
Thu, 08/07/2025 - 00:30
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed