புதிய பதிவுகள்2

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானா‌ர்!

1 month 2 weeks ago
ரோபோ சங்கர் மறைவுக்கு பிரபலங்கள் உருக்கமான இரங்கல் - முதலமைச்சர் கூறியது என்ன? பட மூலாதாரம், @aishu_dil 19 செப்டெம்பர் 2025, 02:21 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் மதுரையைச் சேர்ந்தவரான ரோபோ சங்கர் முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர். உடற்கட்டு பயிற்சியிலும் ஆர்வம் கொண்ட இவர், இதற்கான போட்டிகளிலும் பங்கெடுத்ததாக அவரது நண்பர்கள் கூறுகின்றனர். உடலில் பெயிண்ட் பூசிக் கொண்டு ரோபோ போன்று நடனமாடியதால் சங்கர் என்ற பெயருடன் ரோபோ என்ற பட்டம் இணைந்து கொண்டது. பிரபல தனியார் தொலைக்காட்சியில் இடம் பெற்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். பிரபல நடிகர்கள் போன்று பேசி மிமிக்ரி செய்ததால் பிரபலமடைந்த இவர், இதனைத் தொடர்ந்து சினிமா படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். 2005ம் ஆண்டு கற்க கசடற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இதன் பின்னர் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்தாலும், விஜய் சேதுபதியின் 'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' திரைப்படம் இவருக்கு நல்ல அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தது. இதன் பின்னர் தனுஷூடன் இவர் நடித்த மாரி திரைப்படத்திலும், இவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. இதன் பின்னர் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தார். ரோபோ சங்கர் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் "திரைக்கலைஞர் ரோபோ சங்கர் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமுற்றேன். மேடைகளில் துவங்கி, சின்னத்திரை - வண்ணத்திரை என விரிந்து, தமிழ்நாட்டு மக்களை மகிழ்வித்தவர் ரோபோ சங்கர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் - கலையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். சென்னையில் படப்பிடிப்பின் போது திடீரென மயங்கி விழுந்த ரோபோ சங்கர் பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் வியாழக்கிழமை மாலை உயிரிழந்தார். வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம், Facebook தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நடிகர் தனுஷ் இரவு, அவரது வீட்டுக்கு நேரில் சென்று ரோபோ சங்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். நடிகர் தனுஷின் 'மாரி' திரைப்படத்தில் ரோபோ சங்கர் நடித்த காட்சிகள் கவனத்தை ஈர்த்தன. பட மூலாதாரம், Facebook நேரில் சென்ற பிரபலங்கள் ரோபோ சங்கருடன் தொலைக்காட்சி முதல் இணைந்து பயணித்தவரான நடிகர் சிவகார்த்திகேயன், நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவித்தார். படக்குறிப்பு, நேரில் சென்று ரோபோ சங்கர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த சிவகார்த்திகேயன் நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல் ஹாசனும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் ரோபோ சங்கருக்காக சிறு கவிதை ஒன்று எழுதி தனது அஞ்சலியை செலுத்தியிருந்தார். "ரோபோ புனைப்பெயர் தான் என் அகராதியில் நீ மனிதன் ஆதலால் என் தம்பி போதலால் மட்டும் எனை விட்டு நீங்கி விடுவாயா நீ?" என்று பதிவிட்டுள்ளார். ரோபோ சங்கரின் பேரக் குழந்தைக்கு அவர் பெயர் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம், X/@ikamalhaasan நடிகை ராதிகா சரத்குமார், "எப்போதும் அனைவரையும் சிரிக்க வைக்கும் நபர், கடுமையாக உழைப்பவர், அவர் மறைந்தது பெரும் இழப்பு" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நடிகை சிம்ரன், "லட்சக்கணக்கான பேரிடம் சிரிப்பை வரவழைத்தவர். அவரது மறைவு மிகுந்த துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று தெரிவித்திருந்தார். பட மூலாதாரம், X/@realradikaa நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமார் அவரது மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுருந்தார். அவருடன் ஞாயிற்றுக்கிழமை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், ஆனால் இப்போது அவர் இல்லை என்பது சோகமாகவும் அதிர்ச்சியாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார். பட மூலாதாரம், X/@varusarath5 ரோபோ சங்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த நடிகர் கார்த்தி, "நாம் எடுக்கும் மோசமான முடிவுகள் காலப்போக்கில் நமது உடல்நலத்தை எப்படி பாதிக்கிறது என்று பார்க்கும் போது மனம் வலிக்கிறது. நல்ல திறமையை விரைவில் இழந்துவிட்டோம்" என்று பதிவிட்டுள்ளார். பட மூலாதாரம், X/@Karthi_Offl தனது 'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்' என்ற திரைப்படத்தில் ரோபோ சங்கர் பேசிய பிரபலமான வசனத்தை குறிப்பிட்டு, அவர் நினைவில் கொள்வதாக நடிகர் விஷ்ணு விஷால் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம், X/@TheVishnuVishal நடிகர் சிம்பு, நடிகரும் இயக்குநருமான வெங்கட் பிரபு உள்ளிட்ட திரைத்துறையினர் பலரும், அவருடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உடன் பணியாற்றிய கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் அவருடன் இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு சுந்தரும் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார். நடிகர்கள் ராகவா லாரன்ஸ், கவின், சாந்தனு, அருண் விஜய், மஹத் ராகவேந்திரா, விமல், ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் பாலாஜி மோகன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crkjz01645yo

பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?

1 month 2 weeks ago
ஓம், பல சமயங்களில் வலி தரும் யதார்த்தத்தில் இருந்து தப்பி ஒரு "குமிழிக்குள்" வாழவும் கற்பனை உதவுகிறது😂!

ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு மக்களின் சொத்துகளை சூறையாடிய அரசியல்வாதிகளுக்கு மன்னிப்பே கிடையாது - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

1 month 2 weeks ago
19 Sep, 2025 | 06:19 PM ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு இந்நாட்டு மக்களின் சொத்துகளை சூறையாடிய அரசியல்வாதிகளுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது. சட்டத்தின் பிடிக்குள் இருந்து அவர்கள் தப்பவே முடியாது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ். கொழும்புத்துறை இறங்குதுறையின் புனரமைப்பு பணிகள் இன்று (18) ஆரம்பமாகியது. இதற்குரிய ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பங்கேற்றிருந்தனர். அத்துடன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கோலித்த கமல் ஜினதாச, தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். கொழும்புத்துறை இறங்குதுறையை புனரமைக்குமாறு பல தரப்பினரும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பில் அமைச்சரவையில் எடுத்துரைக்கப்பட்டதோடு, இதற்கு அரசாங்கமும் உடனடியாக இணங்கியது. இதன் பணிக்காக 140 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல உதயபுரம் வீதி புனரமைப்பு பணியும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்காக 65 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு: "நாட்டை அபிவிருத்தி செய்யும் அதேவேளை யாழ். மாவட்டத்தையும் கட்டியெழுப்புவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இங்கு வாழும் மக்களுக்கு வருமானம் கிடைக்ககூடிய வழிமுறைகள் உருவாக்கப்படும். குறிப்பாக யாழ். மாவட்டத்தில் ஒதுக்கப்பட்டிருந்த பகுதிகளும் கட்டியெழுப்பட்டு வருகின்றன. கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலின் போது தமிழ் மக்கள் எமக்கு பேராதரவை வழங்கினர். உள்ளுராட்சி சபைத் தேர்தலின்போதும் உரிய அங்கீகாரம் கிடைக்கப்பெற்றது என்றே சொல்ல வேண்டும். இப்பிரதேசம் எமக்கு முக்கியம். அதனை மேம்படுத்த நடவடிக்கை எடுப்போம். நாம் இவ்வாறு அபிவிருத்தி நோக்கி பயணித்துக்கொண்டிருக்கையில் ஒரு சில அரசியல் பூச்சாண்டிகள், விசர் பிடித்து, விசமத்தனமான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். இந்நாட்டில் இலஞ்ச, ஊழல், மோசடிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். இதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை. இதனால் ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட நபர்களுக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நாட்டு மக்களின் சொத்துகளை சூறையாடிய, வளங்களை கொள்ளையடித்த நபர்களுக்கு மன்னிப்பு கிடையாது. சட்டம் தனக்குரிய கடமையை சரிசர நிறைவேற்றும். அதற்குரிய முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. எவ்வித அரசியல் தலையீடுகளும் நீதித்துறையில் மேற்கொள்ளப்படுவதில்லை. யாழில். கடவுச்சீட்டு அலுவலகம் அமைந்துவிட்டது. சர்வதேச விமான நிலையம் உள்ளது. சர்வதேச விளையாட்டு மைதானமும் வரப்போகின்றது. இறங்குத்துறைகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும்" என்றார். https://www.virakesari.lk/article/225545

யாழில். டிஜிட்டல் பணம் செலுத்தும் செயலி அறிமுக நிகழ்வு!

1 month 2 weeks ago
யாழில். டிஜிட்டல் பணம் செலுத்தும் செயலி அறிமுக நிகழ்வு! adminSeptember 19, 2025 ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் எண்ணக்கருவிற்கு இணங்க GovPay என்ற அரசின் டிஜிட்டல் பணம் செலுத்தும் செயலி அறிமுக நிகழ்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வு துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையிலும் பாராளுமன்ற உறுப்பினரான வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோரது பங்கேற்புடன் நடைபெற்றது. நாட்டை டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வழியாக சாதாரண மக்களுக்கு எளிதில் அணுகக்கூடிய வெளிப்படையானதும் சிக்கனமானதுமான மற்றும் நம்பிக்கையை மேம்படுத்தும் அரச திட்டங்களுக்கு வழிகாட்டும் பெரும் முயற்சியின் ஒரு பகுதியாகும். மேலும் GovPay செயலியின் மூலம், மக்கள் அரசு சேவைகளை பாதுகாப்பாகவும் சுலபமாகவும் நம்பகத்தன்மையாகவும் பயன்படுத்த முடியும். மேலும் இது அழுத்தங்களை குறைப்பதோடு மட்டுமில்லாது அரசுத் துறைகளில் நம்பிக்கையை உயர்த்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாகும். இதன் இறுதி இலக்காக இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு டிஜிட்டல் சேவையின் மூலம் பாதுகாப்பும்,நம்பிக்கையும் வழங்குவதுடன், அனைவரும் பங்கு பெறக்கூடிய ஒருங்கிணைந்த டிஜிட்டல் எதிர்காலத்தை கட்டமைப்பதே இதன் நோக்கமாகும். இந் நிகழ்வில் லங்கா பே (Lanka pay) துணை தலைமை அதிகாரி, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ,பிரதம கணக்காளர் ,பிரதேச செயலாளர்கள் மற்றும் ஏனைய பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டாரகள். டிஜிட்டல் பணம் https://globaltamilnews.net/2025/220550/

நுண்கடன் காரணமாக மண்முனை பகுதியில் 22 பேர் தற்கொலை!

1 month 2 weeks ago
நுண்கடன் காரணமாக மண்முனை பகுதியில் 22 பேர் தற்கொலை! நுண்கடன் காரணமாக மண்முனை தென் எருவில்பற்று பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் 22 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் அனுமதியின்றி செயற்பட்ட நுண்கடன் நிதி நிறுவனங்களை மூடும் செயற்பாடுகள் பிரதேசசபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜினால் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு,மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்குட்பட்ட களுவாஞ்சிகுடி, ஓந்தாச்சிமடம், கோட்டைக்கல்லாறு ஆகிய பகுதிகளில் தவிசாளரினால் நேற்றையதினம் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது பிரதேசசபையின் வியாபார பதிவுச்சான்றிதழ்பெறாத நுண்கடன் நிறுவனங்களை முடிய தவிசாளர் பிரதேசசபையின் அனுமதியைப்பெற்ற பின்னரே நிறுவனங்களை திறக்கமுடியும் என தெரிவித்தார். அத்துடன் நிதி நிறுவனங்களை அழைத்து சில விதிமுறைகளை வழங்கியதாகவும் அந்த விதிமுறைகளை மீறிய வகையில் செயற்படும் நிதி நிறுவனங்களையும் மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தவிசாளர் தெரிவித்தார். https://athavannews.com/2025/1447771

ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை

1 month 2 weeks ago
ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை. ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் அங்கு பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் கல்வி கற்பதற்கும் தடை விதித்துள்ளனர். இந்நிலையில் அங்கு பெண் உரிமை, பாலினம் உள்ளிட்டவை குறித்து பெண்கள் எழுதிய புத்தகங்கள், பல்கலைக்கழக பாடங்களில் இடம்பெற்றிருந்த நிலையில் அவை நீக்கப்பட்டுள்ளன. அங்குள்ள புதிய கல்விச்சட்டத்தின்படி தலிபான்கள் கொள்கைகள் மற்றும் ஷரியா சட்டத்திற்கு எதிராக இருப்பதால் பெண்கள் எழுதிய 140 புத்தகங்கள், ஈரானிய எழுத்தாளர்களின் 310 புத்தகங்கள் என 680 புத்தங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஷரியா சட்டத்துடன் முரண்படுவதாகக்கூறி ஆப்கானிஸ்தான் பல்கலை. பாடங்களில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் சுமார் 6 மாகாணங்களில் பைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு தலிபான் அரசு சமீபத்தில் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1447794

தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது!

1 month 2 weeks ago
அந்தக் கட்டடம் உடைந்து விழும் நிலையில் காணப்பட்ட நிலையில் அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நடப்பட்டிருந்தன. அந்த கம்பிகள் அண்மையில் திருட்டு போன நிலையில் , குறித்த பகுதி இடிந்து விழுந்துள்ளது. கம்பித் திருடர்களைக் கண்டுபிடித்து மின்சாரக் கம்பத்தில் கட்டித் தூக்கவேண்டும். இலங்கையில் பாரம்பரியங்களை பாதுகாக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சை அரசு உருவாக்கவேண்டும்.

நாமலின் 100 மில்லியன் வீடு - கார் இல்லாத மகிந்த! வெளிவராத அதிர்ச்சி இரகசியங்கள்..

1 month 2 weeks ago
நாமல், நூறு மில்லியன் சொத்து காட்டியுள்ளார். காட்டாதது, மறைத்தது, பதுக்கியது எவ்வளவோ? அவர் என்ன தொழில் செய்தார்? பதிலில் உண்மையில்லை சொதப்புகிறார். மனைவியின் சொத்து, அதை பிரித்து அறியதெரியாதவர்கள் குற்றம் சுமத்துகிறார்கள் என்கிறார். தன் பெயரில் உள்ள சொத்து என தானே அறிவித்துவிட்டு, பிரித்தறியதெரியாதவர்கள் என்கிறார். இப்போ மனைவியின் சொத்து விசாரணை செய்துவிட்டால் தெரிந்து விடும். நாமலே மனைவியின் சொத்தை பிரித்தறிய அழைப்பு விடுகிறார். இது இருக்க, அவரின் தம்பி புலம்புகிறார், மற்றவர் நினைப்பதுபோல் மஹிந்த குடும்பத்திடம் ஒன்றுமில்லையாம். மற்றவர், இவர்களிடம் இருப்பது எது என்று சொன்னார்களா? அவர்களுக்கு வீடு வழங்க வேண்டுமென்றுதான் நினைக்கிறார்கள். இவர், கார் இல்லையாம், வீடு இல்லையாம், அரசாங்க கார் அல்லது வேறு யாரிடமாவது தானாம் இரவல் கார் வாங்குவார்களாம். அம்மா மோசடி செய்து நிலங்களை கொள்வனவு செய்து இப்போ முழிக்கிறார். தனது தந்தை எப்போதும் சொல்வாராம், பிறர் உழைப்பில் நாம் வாழக்கூடாது, உழைத்து வாழ வேண்டுமென்று. அப்போ, காலம் பூராவும் மக்கள் பணத்தில் சுகபோகம் வாழவேண்டுமென்று அடம்பிடிப்பதும் கோரிக்கை வைப்பதுமேன்? தனக்கு வாழ வழியில்லையாம், படிப்பு சொல்லிக்கொடுக்கிறாராம் அதுவும் சும்மாவாம். எந்தப்பாடசாலையில் என்று சொல்லவில்லை. வாழ வழியில்லாதவர் சும்மா கற்பிக்கிறாராம். பகிடியாய் இல்லை? இவர்கள் வங்கிக்கணக்கில் எவ்வளவு கோடி, எவ்வளவு கோடி சொத்து, எத்தனை கோடி மதிப்புள்ள கார்கள் வெளிவராமலா போகும்? அப்போ என்ன சொல்லப்போகிறார் இவர்? இவர்களை வெளியில் விட்டு வைத்தால் யாரையும் விட்டு வைக்க மாட்டார்கள். இவர்களின் பேச்சை இன்னுமா மக்கள் நம்புகிறார்கள்? தானாக வந்து பொறியில் தலை மாட்டும்வரை அனுரா பொறுத்திருக்கிறாரா அல்லது பொறி வைத்து காத்திருக்கிறாரா? ஏதோ ஒன்று வெகு சீக்கிரம் நடைபெற போகிறது. மின்சார சபை ஊழியரை யாரோ இயக்குகிறார்கள். அந்த இயக்குனரை கைது செய்தால், பின்னால் இயங்குபவர்கள் வெளியில் வருவார்கள். மக்களுக்கு இவர்களின் சொத்துக்களையும் பினாமிகளையும் விரைவில் வெளியிடுங்கள். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் அவர்கள் சாதகமாக்கிக்கொள்வார்கள்.

பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?

1 month 2 weeks ago
தலைவர் சூரியதேவன். இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன். சூரியன் உள்ளவரை இந்தப் பூமியில் இருப்பார். கற்பனை என்பது மனதில் புதிய கருத்துக்கள், பொருள்கள், உருவங்களை உருவாக்கும் திறன் கொண்டது. இது கதைகளை உயிர்ப்பிக்கவும், உணர்ச்சிகளைத் தூண்டவும், படிப்பவர்களை ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்த்தவும் உதவுகிறது.😌

சுய மரியாதை இயக்கம் தமிழ்நாட்டின் அரசியல், மொழி, பண்பாட்டுத் தளத்தில் ஏற்படுத்திய மாற்றம் என்ன?

1 month 2 weeks ago
அந்த மண்ணில் பிறந்ததால் தவறுகளை சுட்டிக்காட்ட கூடாது என்று சொல்கின்றீர்களா? அல்லது வசதி இருந்தால் மட்டுமே சுற்றாடலையும் கழிவறையையும் சுத்தமாக வைத்திருக்க முடியும் என்று கூற வருகின்றீர்களா? கழிவறையை சுத்தமாக வைத்திருப்பது அவ்வளவு செலவு கூடிய செயற்பாடா? அல்லது எமது மண்வாசனை என்பது இப்படி நாற்றம் பிடித்த வாசனையுடன் கழிவறையை வைத்திருப்பது தான் என்பதால் அதில் குறை காண்பது அபத்தம் என்று கூற வருகின்றீர்களா?

நாமலின் 100 மில்லியன் வீடு - கார் இல்லாத மகிந்த! வெளிவராத அதிர்ச்சி இரகசியங்கள்..

1 month 2 weeks ago
ஒரு கள்ளனை கைது செய்தால், பல கள்ளர் பதறியடித்துக்கொண்டு தெருவில் இறங்கி கதறுகிறார்கள், வாழ வழியில்லை என்று பிச்சைப்பாட்டு பாடுகிறார்கள், மக்களை கூட்டுகிறார்கள், சட்டத்தை நீதிமன்றத்தை விமர்ச்சிக்கிறார்கள் ஏன்? ஒரு கள்ளனுக்கு பின்னால் பல கள்ளர் மறைந்திருக்கிறார்கள். அந்தக் கள்ளனை பாதுகாத்தால் தாம் அகப்படப்போவதில்லை பாதுகாப்பாக இருக்கலாமென நினைக்கிறார்கள். சூழ்ச்சி செய்து அரசை கவிழ்க்க முயற்சிப்பார்கள். முடியாவிட்டால், தாம் அரச சாட்சிகளாக மாறி ஒப்புதல் வாக்குமூலம் அளித்து தம்மை காப்பாற்றிக்கொள்வார்கள். கள்ளரின் தலைவன் நிலை என்ன?

இந்தியாவின் 15 ஆவது துணை ஜனாதிபதியாகிறார் சி.பி. ராதாகிருஷ்ணன் !

1 month 2 weeks ago
இந்திய பி ஜே பி ஆதரவாளர்கள், பிரதமர் மோதிக்கெதிராக அமெரிக்க உளவுத்துறை மற்றும் டீப் ஸ்ரேர் இயங்குவதாகவும் 12 மாதகால திட்டத்துடன் ஒரு தலமை மாற்றத்தினை கட்சிக்குள் ஏற்படுத்துதல் அல்லது ஆட்சிமாற்றத்தினை நோக்காக கொண்டு ஆழும் எதிர்கட்சிகளினூடாக அதனை செயற்படுத்தவுள்ளதாகவும் கூறுகிறார்கள் (ஆதாரமற்ற). நேப்பாளத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் அமெரிக்கா உள்ளதாக குற்றம் சாட்டுபவர்கள் அதன் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் 2022 ஆரம்பிக்கப்பட்டதாக கூறுகிறார்க்கள், இவை எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை ஆனால் பல அமைதியின்மை இந்திய உபகண்டத்தில் அதிகரித்துள்ளது, ஆனால் இந்த அமைதியின்மையின் விளைவாக ஏற்படும் ஆட்சி மாற்றத்தின் போது உயிரழப்புக்களை தவிர்ப்பதற்காக தாமாகவே பதவி விலகினால் இலகுவாக முடிந்துவிடும், அது இந்தியாவில் நிகழ வாய்ப்பிருக்குமா என தெரியவில்லை. அத்தோடு கனடாவிலும் அமெரிக்காவிலும் உளவு சார் சட்ட விரோத கொலைகளிலும், கொலை முயற்சியிலும் ஈடுபடும் இந்திய உளவுத்துறையினரை மீறி ஒரு அட்சி மாற்ற சதி எனும் புகாரே நம்பிக்கை தன்மை குறிவாக இருக்கின்றது.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 month 2 weeks ago
1) மகளிர் உலக கிண்ணப்போட்டியில் போட்டியிடும் அணிகளில் எந்த அணிக்கு உங்களது ஆதரவு ? அவுஸ்திரேலியா 2)இலங்கை - இந்தியா 3) அவுஸ்திரேலியா - நியூசிலாந்து 4)பாகிஸ்தான் - வங்காளதேசம் 5)இங்கிலாந்து - தென்னாபிரிக்கா 6)அவுஸ்திரேலியா - இலங்கை 7)இந்தியா - பாகிஸ்தான் 8)நியூசிலாந்து - தென்னாபிரிக்கா 9)இங்கிலாந்து - வங்காளதேசம் 10)அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் 11)இந்தியா - தென்னாபிரிக்கா 12)நியூசிலாந்து - வங்காளதேசம் 13)இலங்கை - இங்கிலாந்து 14)அவுஸ்திரேலியா - இந்தியா 15)தென்னாபிரிக்கா - வங்காளதேசம் 16)இலங்கை - நியூசிலாந்து 17)பாகிஸ்தான் - இங்கிலாந்து 18)அவுஸ்திரேலியா - வங்காளதேசம் 19)இலங்கை - தென்னாபிரிக்கா 20)நியூசிலாந்து - பாகிஸ்தான் 21)இங்கிலாந்து - இந்தியா 22)இலங்கை - வங்களாதேசம் 23)பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா 24)அவுஸ்திரேலியா - இங்கிலாந்து 25)இந்தியா - நியூசிலாந்து 26)இலங்கை - பாகிஸ்தான் 27)அவுஸ்திரேலியா - தென்னாபிரிக்கா 28)இங்கிலாந்து - நியூசிலாந்து 29)இந்தியா - வங்காளதேசம் 30) ஆரம்ப சுற்று போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?அவுஸ்திரேலியா 31) ஆரம்ப சுற்று போட்டியில் இறுதி இடம் பிடிக்கும் அணி எது?வங்காளதேசம் 32) அரை இறுதிக்கு தெரிவாகும் 4 அணிகள் எவை? ( சரியாக பதில் அளிக்கும் ஒவ்வொரு அணிக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். மொத்த புள்ளிகள் 4 ) அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, இலங்கை 33) இறுதி போட்டிக்கு தெரிவாகும் அணிகள் எவை? ( சரியான விடைகளுக்கு தலா 3 புள்ளிகள், மொத்த புள்ளிகள் 6) அவுஸ்திரேலியா, இந்தியா 34)இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி எது? ( 5 புள்ளிகள்)அவுஸ்திரேலியா 41 , 42 கேள்விகளை தவிர இனி வரும் எல்லா கேள்விகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். 41,42 வது கேள்விகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்படும். போட்டிகள் கொழும்பு, மும்பை( Mumbai), இந்தோர்( Indore), விசாகப்பட்டினம், கௌகாத்தி( Guwahati) ஆகிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. 35) எந்த மைதானத்தில் அதிக ஓட்டங்கள் ஒரு அணி பெறும்?மும்பை 36) எந்த மைதானத்தில் குறைந்த ஓட்டங்கள் பெறப்படும்?கொழும்பு 37) இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது?வங்காளதேசம் 38)இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது?வங்காளதேசம் 39) ஏதாவது போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது?அவுஸ்திரேலியா 40) ஏதாவது போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது?வங்காளதேசம் 41) இம்முறை ஏதாவது ஒரு அணி 200 ஓட்டங்கள் பெறுமா?இல்லை 42) யாராவது ஒரு வீரங்கனை ஏதாவது போட்டியில் 100 ஓட்டங்கள் பெறுவாரா?இல்லை 43) போட்டி தொடரில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதினை பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்?அவுஸ்திரேலியா 44) ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்?அவுஸ்திரேலியா 45) ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்?அவுஸ்திரேலியா 46)இத்தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்?அவுஸ்திரேலியா 47)இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்?அவுஸ்திரேலியா

தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது!

1 month 2 weeks ago
இலங்கையில் காணப்படும் பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான யாழ்ப்பாணம் நல்லூர் மந்திரிமனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இடிந்த யாழ் மந்திரிமனையை பார்வையிட்டார் அமைச்சர் பிமல் ரத்நாயக்க - ஜே.வி.பி நியூஸ்

"போர்க்களத்தில் வெற்றி பெற எங்களுக்கு ஒரு வாய்ப்பு இருந்தது, இன்னும் அது இருக்கிறது." ரஷ்யர்களை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து ஜெனரல் முஷென்கோ.

1 month 2 weeks ago
உக்கிரேனிய முன்னால் தளபதி உக்கிரேனின் தோல்விக்கான காரணங்கள் பலவற்றை கூறுகிறார், இவை எத்தனை சதவிகிதம் உண்மை என தெரியவில்லை, குறிப்பாக உளவுத்தகவலற்ற நிலையில் எதிர்த்தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக குற்றம் சாட்டுகிறார். ஆனாலும் சில நிர்வாக ரீதியான தவறுகளை சுட்டிக்காட்டுகிறார், பயிற்சியில் தகமைகளினடிப்படையில் (கற்கை ரீதியானதல்ல) வேலை வழங்கப்படவேண்டும், மற்றும் ஒரு குறித்த நாட்டுப்படையினருக்குள் வெவ்வேறு அதிகாரிகளின் சகாக்கள் அடிப்படையில் தரங்கள் வழங்கப்படக்க்கூடாது. அரசியல்வாதிகளினது தலையீடுகள், போருக்கான மூலோபாயத்தினடிப்படையில் இலக்குகள் தீர்மானிக்கப்படவேண்டும், வேலையின் ஆபத்தினடிப்படையில் ஊதியம், ஆட்பிரச்சினைகள், கல்வித்தகமையினடிப்படையினால் தெரிந்தெடுக்கப்படும் தரமற்ற அதிகாரிகளும் பட்டறிவு கொண்ட வீரர்கள் அதிகாரிகள் நிலை புறக்கணிப்பு, பூகோள சாதகங்களை விரயமாக்குதல், மேலிருந்து கீழான கட்டளை அமைப்புக்கள், தற்காப்பு பொறிமுறையற்ற படை முயற்சிகள், தற்காப்பு போருக்கான தேவையான கட்டமைப்புகளில் கவனம் செலுத்தாமை என பல காரணங்களை கூறுகிறார். ஒரு தசாப்பத்திற்கு மேலாக மேற்கினால் தயார்ப்படுத்தப்பட்ட உக்கிரேனின் பல குளறுபடிகளிற்கு வெறுமனே உக்கிரனை குற்றம் சாட்டும் வழமையான ஒரு பேட்டியாக இருப்பதோடு, முற்று முழுதான மேற்கின் தவறான திட்டமிடல், குறுகிய பயிற்சி (10 நாள்கள்) என பெரும் தொகையான உக்கிரேனியர்களின் உயிர்களை காவு வாங்கிய, வாங்குகின்ற போரினை தொடருவதன் மூலம் வெற்றியடையலாம் என உக்கிரேனிலும் உதவி வழங்கும் நாடுகளின் மக்களிடமும் நம்பிக்கையினை ஊட்டுவதன் நோக்கமாகவும் இந்த கட்டுரை உள்ளது, ஒட்டு மொத்த உக்கிரேனியர்களையும் போரின் ஏதோ ஒரு வகை பங்கு தாரர்களாக்கும் திட்டங்களையும் கூறுகிறார். இந்த போரில் இரஸ்சியா வென்றாலும் அரசியல், பொருளாதாரம், வெளியுறவு என பல மட்டங்களில் நிச்சயமாக தோல்வியுறும், மறுவளமாக உக்கிரேன் போரை நிறுத்துவதற்கு கூட பணம் கொடுத்தாலே போர் நிறுத்தம் சாத்தியமாகுமோ என அண்மையில் உக்கிரேன் அதிபரி கருத்துள்ளது. கீழே உள்ள செய்தியில் செலன்ஸ்கியின் கருத்து! ஜெலென்ஸ்கி: ஒரு வருடப் போருக்கு கிட்டத்தட்ட 120 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும், பாதியை வேறு எங்காவது கண்டுபிடிக்க வேண்டும். Tetyana Oliynyk — புதன், 17 செப்டம்பர் 2025, 19:17 14850 பற்றி பத்திரிகையாளர் சந்திப்பு. புகைப்படம்: உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம் 2026 ஆம் ஆண்டில் போருக்கு 120 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட வேண்டியிருக்கும் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். மூலம்: ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் ராபர்ட்டா மெட்சோலாவுடன் செய்தியாளர் சந்திப்பின் போது ஜெலென்ஸ்கி மேற்கோள்: "இந்தப் போரின் தற்போதைய செலவு எங்களுக்கு ஒரு சவாலாக உள்ளது. ஒரு வருடத்திற்கான விலை [USD] 120 பில்லியன். அறுபது பில்லியன் உக்ரைனிய பட்ஜெட்டில் இருந்து வருகிறது. அடுத்த வருடத்திற்கு நான் 60 [பில்லியன்] கண்டுபிடிக்க வேண்டும்." விவரங்கள்: போரை முடிவுக்குக் கொண்டுவருவது உக்ரைனின் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என்று ஜெலென்ஸ்கி மேலும் கூறினார். மேற்கோள்: "எப்படியிருந்தாலும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதே திட்டம் A, திட்டம் B 120 பில்லியன். இது ஒரு பெரிய சவால். அமைதிக் காலத்தில் நமக்கு [இவ்வளவு பணம்] தேவைப்படும் என்று நான் கூறவில்லை - போர் நிறுத்தம் அல்லது பாதுகாப்பு உத்தரவாதங்களின் கீழ் - 10 ஆண்டுகளுக்கு இவ்வளவு பெரிய தொகைகள் நமக்குத் தேவைப்படும். ஆனால் எப்படியிருந்தாலும், இந்தப் பிரச்சினையின் அளவை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்."

நாளை சுற்றுப்பாதையில் ஏவப்படவுள்ள இலங்கையின் மூன்றாவது செயற்கைக்கோள்!

1 month 2 weeks ago
இலங்கையின் மூன்றாவது நனோ செயற்கைக்கோள் இன்று சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்! இலங்கையின் மூன்றாவது நனோ செயற்கைக்கோள் இன்று சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சியில் மற்றொரு மைல்கல்லைக் குறிப்பதாக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது. விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் செயற்படும் மொரட்டுவையில் உள்ள ஆர்தர் சி. கிளார்க் இன்ஸ்டிடியூட் ஃபார் மொடர்ன் டெக்னாலஜிஸின் (Arthur C. Clarke Institute for Modern Technologies) வழிகாட்டுதலின் கீழ் இலங்கை பொறியியலாளர்கள் குழுவால் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. ‘BIRDS-X DRAGONFLY’ என பெயரிடப்பட்ட இந்த நனோ செயற்கைக்கோள், ஆகஸ்ட் 24 ஆம் திகதியன்று நாசாவினால், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தநிலையில் இந்த செயற்கைக்கோள் இன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 2:15 மணிக்கு ISS இலிருந்து சுற்றுப்பாதையில் செலுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு ஆர்தர் சி. கிளார்க் நிறுவனத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இலங்கை 2019 இல் அதன் முதல் நனோ செயற்கைக்கோளான ராவணா-1 யும் இரண்டாவது செயற்கைக்கோளான KITSUNE 2022 இலும் ஏவியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1447717
Checked
Mon, 11/03/2025 - 20:43
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed