1 month 1 week ago
      இந்த தளம் பாதுகாப்பானதா என முதலில் சொல்லுங்கள். இணைப்பை சொடுக்குவதால் பின்விளைவு ஒன்றும் இல்லைத்தானே. மேல் படத்தில் உள்ளவரை பார்த்தால் கிட்டார் அடிப்பவர் போல தோன்றுகின்றது. பிளேனும் ஓடுகின்றாரோ?
  
      
    
  
            
      
            1 month 1 week ago
      பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் 20 செப்டெம்பர் 2025, 01:53 GMT இந்தியாவின் நகர்ப்புற குடும்பங்களில் 56% பேர் கேக், பிஸ்கட், சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவற்றை மாதத்திற்கு 3 அல்லது அதற்கு மேற்பட்ட முறை உட்கொள்கிறார்கள், இதில் 18% பேர் தினமும் அவற்றை உட்கொள்கிறார்கள் என ஒரு ஆய்வு கூறுகிறது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த ஆய்வில் பங்கேற்ற கணிசமானோர் (55%) இனிப்புகளைத் தவிர்க்க முடியாது என்றும் ஆனால் அதில் சர்க்கரை அளவு குறைவாக இருக்கவேண்டுமென விரும்புவதாகவும் கூறியுள்ளனர். இப்போதெல்லாம், எந்த உணவுப் பொருளை எடுத்தாலும் அதில் எவ்வளவு சர்க்கரை அளவு உள்ளது என தெரிந்துகொள்ள நாம் ஆர்வமாக இருக்கிறோம். 'அதிக சர்க்கரை' உடலுக்கு கேடு என்பதை பலரும் உணரத் தொடங்கியுள்ளனர். வெள்ளை சர்க்கரை சிறந்ததா அல்லது நாட்டுச் சர்க்கரை சிறந்ததா என்பதைக் கடந்து, அனைத்து வகையான சர்க்கரை கலந்த உணவுப் பொருட்களையும் குறிப்பிட்ட நாட்களுக்கு தவிர்ப்பதே சர்க்கரையை தவிர்க்கும் சவால் (Sugar cut challenge) ஆகும். 'சர்க்கரையை 10 நாட்கள் தவிர்த்ததால் முகம் பொலிவு பெறுகிறது', 'எடை குறைந்துவிட்டது' என இணையத்தில் பலரும் இதுகுறித்து பதிவிடுவதைப் பார்க்க முடிகிறது. இந்த 'சர்க்கரையை முழுமையாகத் தவிர்ப்பது' குறித்த 6 கேள்வி- பதில்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். நாம் ஏன் சர்க்கரையை குறைக்க அல்லது தவிர்க்க வேண்டும்?  பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சேர்க்கப்பட்ட சர்க்கரையை அதிகமாக உட்கொள்வது தான் ஆபத்து என பல ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இந்தக் கேள்விக்கான விடையை தெரிந்துகொள்ளும் முன், இருவகையான சர்க்கரைகள் குறித்து அறிந்துகொள்ள வேண்டும். முதலில், சேர்க்கப்பட்ட சர்க்கரை (Added sugars) என்பது உணவுகள் அல்லது பானங்கள் தயாரிக்கப்படும் போது அல்லது பதப்படுத்தப்படும் போது சேர்க்கப்படும் எந்த வகையான சர்க்கரை அல்லது இனிப்பூட்டியையும் குறிக்கிறது. வெள்ளைச் சர்க்கரை, நாட்டுச் சர்க்கரை, தேன், வெல்லம், கருப்பட்டி, அதன் மூலம் செய்யப்படும் பிஸ்கட், கேக், குளிர்பானங்கள் என அனைத்தும் இந்த வகையில் வரும். இதில் தேன் போன்றவை இயற்கையாக உருவானாலும் கூட, அவை சேர்க்கப்பட்ட சர்க்கரைகள் தான். இந்த சேர்க்கப்பட்ட சர்க்கரையை அதிகமாக உட்கொள்வது தான் ஆபத்து என பல ஆய்வுகள் எச்சரிக்கின்றன. மற்றொன்று, பால், பழங்கள் மற்றும் காய்கறிகளில் இயற்கையாகக் காணப்படும் சர்க்கரை. 'இவை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது' என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.  பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தியாவில் 101 மில்லியன் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2023ஆம் ஆண்டில், 'லான்செட்' வெளியிட்ட ஒரு ஆய்வின்படி, இந்தியாவில் 101 மில்லியன் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும், கோவா (26.4%), புதுச்சேரி (26.3%) மற்றும் கேரளா (25.5%) ஆகிய மாநிலங்களில் நீரிழிவு நோய் அதிகமாக உள்ளது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. "நீரிழிவு நோய் மட்டுமல்ல, சேர்க்கப்பட்ட சர்க்கரை கலந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது என்பது பல வழிகளில் மனித உடலுக்கு ஆபத்தானது" என்கிறார் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் மற்றும் நீரிழிவு நோய் நிபுணர் சிந்தியா தினேஷ். டைப்-2 நீரிழிவு நோய் மற்றும் இன்சுலின் எதிர்ப்பு, உடல் பருமன் (குறிப்பாக இடுப்பைச் சுற்றி), ஆல்கஹால் அல்லாத ஃபேட்டி லிவர் நோய், இதய நோய், பற் சொத்தை போன்ற பல விளைவுகள் இதனால் ஏற்படும் என்றும் அவர் எச்சரிக்கிறார். 2. நம் உடலுக்கு உண்மையில் சர்க்கரை தேவையா? "நம் உடலுக்கு குளுக்கோஸ் எனப்படும் ஒரு வகை சர்க்கரை நிச்சயம் தேவைப்படுகிறது. குளுக்கோஸ் என்பது மூளையின் இயக்கத்திற்கு மிகவும் அவசியமாகும். இது முழு உடலுக்கும் ஒரு முக்கிய ஆற்றல் மூலமாகும்" என அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் (National Institutes of Health) தெரிவிக்கிறது. 'ஆனால் உங்கள் உணவில் குளுக்கோஸை தனியாக சேர்க்க வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் உங்கள் உடல் கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் கொழுப்புகள் போன்ற உணவு மூலக்கூறுகளை உடைப்பதன் மூலம் அதற்குத் தேவையான குளுக்கோஸை பெற்றுக் கொள்ளும்' என்றும் அந்நிறுவனம் கூறுகிறது. 3. பழங்களில் இருக்கும் சர்க்கரையையும் தவிர்க்க வேண்டுமா?  பட மூலாதாரம், Getty Images "பழங்கள் மற்றும் காய்கறிகள், தானியங்கள் மற்றும் பால் பொருட்கள் போன்ற கார்போஹைட்ரேட்டுகள் உள்ள அனைத்து உணவுகளிலும் சர்க்கரை என்பது இயற்கையாகவே காணப்படுகிறது. இயற்கை சர்க்கரை உள்ள முழு உணவுகளை உட்கொள்வது ஆபத்தில்லை" என ஹார்வர்ட் மருத்துவப்பள்ளியின் கட்டுரை ஒன்று கூறுகிறது. மேலும், "தாவர உணவுகளிலும் அதிக அளவு நார்ச்சத்து, அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. பால் உணவுகளில் புரதம் மற்றும் கால்சியம் உள்ளன." "மனித உடல் இந்த உணவுகளை மெதுவாக ஜீரணிப்பதால், அவற்றில் உள்ள சர்க்கரை நமது செல்களுக்கு நிலையான ஆற்றலை வழங்குகிறது. பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை அதிகமாக உட்கொள்வது நீரிழிவு, இதய நோய் மற்றும் சில நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைப்பதாகவும் காட்டப்பட்டுள்ளது." என்றும் அந்தக் கட்டுரை கூறுகிறது. உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிடும்போது, இயற்கை சர்க்கரைகளுடன் சேர்த்து நிறைய ஊட்டச்சத்துகளையும் நார்ச்சத்தையும் பெறுகிறீர்கள். 4. சர்க்கரையை தவிர்க்கத் தொடங்கிய முதல் சில நாட்களில் என்ன நடக்கும்?  பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 'சேர்க்கப்பட்ட சர்க்கரைகளை தவிர்ப்பது என்பது பெரும்பாலானோருக்கு சிரமமான ஒன்றாக இருக்காது' "சேர்க்கப்பட்ட சர்க்கரையைக் குறைப்பது பல வெளிப்படையான நன்மைகளை அளிக்கிறது. உதாரணத்திற்கு, பற்களின் ஆரோக்கியம் மேம்படுவது மற்றும் கலோரி நுகர்வு குறைவதால் உடல் எடை குறைவது போன்றவை. ஆனால் தொடக்கத்தில் சேர்க்கப்பட்ட சர்க்கரையை தவிர்க்கும்போது, சிலருக்கு தலைவலி, சோர்வு அல்லது மனநிலை மாற்றங்கள் போன்ற சில அறிகுறிகள் தென்படலாம்" என்று கூறுகிறார் மருத்துவர் சிந்தியா. அதே சமயம், "அத்தகைய விளைவுகள் சிலருக்கு வர காரணம் அவர்கள் அதற்கு முன் அதிக சர்க்கரையை உணவில் சேர்த்திருப்பார்கள். உதாரணத்திற்கு ஒரு கப் காபியில் 4 முதல் 6 ஸ்பூன் வெள்ளைச் சர்க்கரையை சேர்ப்பவர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு இத்தகைய சிக்கல்கள் ஏற்படலாம். மற்றபடி, சேர்க்கப்பட்ட சர்க்கரைகளை தவிர்ப்பது என்பது பெரும்பாலானோருக்கு சிரமமான ஒன்றாக இருக்காது" என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன். 5. உடலில் எவ்வளவு விரைவாக நன்மைகளை உணரலாம்?  பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 'சேர்க்கப்பட்ட சர்க்கரையைத் தவிர்ப்பதால், 5 முதல் 6 நாட்களில் நம் செரிமான அமைப்பின் ஆரோக்கியம் மேம்படும்' அமெரிக்காவில் உடல் பருமன் கொண்ட குழந்தைகளிடையே நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் (2015), 10 நாட்களுக்கு சேர்க்கப்பட்ட சர்க்கரையைத் அறவே தவிர்ப்பது, உடல் எடையில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் கூட, கொழுப்பு மற்றும் ரத்த அழுத்த அளவுகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என கண்டறியப்பட்டது. "சேர்க்கப்பட்ட சர்க்கரையைத் தவிர்ப்பதால், 5 முதல் 6 நாட்களில் நம் செரிமான அமைப்பின் ஆரோக்கியம் மேம்படும். 7 முதல் 8 நாட்களில், மனநிலையில் நல்ல மாற்றங்கள் வரும். 9 முதல் 10 நாட்களில் சருமம் பொலிவடையத் தொடங்கும்." என்கிறார் மருத்துவர் சிந்தியா. அதுவே நீரிழிவு நோயாளிகளுக்கு 3 முதல் 5 நாட்களிலேயே ரத்த சர்க்கரை அளவுகளில் நல்ல மாற்றங்கள் இருக்கும் என்றும் அவர் கூறுகிறார். "உடல் எடையில் மாற்றங்கள் தெரிய குறைந்தது ஒரு மாதமாவது சேர்க்கப்பட்ட சர்க்கரையைத் தவிர்க்க வேண்டும். அதனுடன் சேர்த்து ஆரோக்கியமான உணவு முறையும் இருக்க வேண்டும். ஆனால், அதை உணவியல் நிபுணர் ஒருவரின் ஆலோசனையுடன் பின்பற்றுவது சிறந்தது" என்று கூறுகிறார் சிந்தியா. 6. தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது?  பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பெரியவர்கள் ஒரு நாளைக்கு 30 கிராமுக்கு மேல் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளை உட்கொள்ளக்கூடாது. "ஒரு நாளைக்கு நீங்கள் எடுத்துக்கொள்ளும் கலோரிகளில், இந்த சேர்க்கப்பட்ட சர்க்கரைகள் என்பதன் அளவு 10% மேல் இருக்கக்கூடாது. அதை இன்னும் 5% என குறைப்பது கூடுதல் நன்மைகளை அளிக்கும்" என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை (National Health service) பின்வருமாறு பரிந்துரைக்கிறது, பெரியவர்கள் ஒரு நாளைக்கு 30 கிராமுக்கு மேல் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளை உட்கொள்ளக்கூடாது. 7 முதல் 10 வயது வரையிலான குழந்தைகள் ஒரு நாளைக்கு 24 கிராமுக்கு மேல் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளை உட்கொள்ளக்கூடாது. 4 முதல் 6 வயது வரையிலான குழந்தைகள் ஒரு நாளைக்கு 19 கிராமுக்கு மேல் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளை உட்கொள்ளக்கூடாது. 2 முதல் 3 வயது வரையிலான குழந்தைகள் ஒரு நாளைக்கு 14 கிராமுக்கு மேல் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளை உட்கொள்ளக்கூடாது. "ஆரோக்கியமான அளவு என்பது 25 கிராம் சேர்க்கப்பட்ட சர்க்கரை, அதாவது 6 ஸ்பூன் சர்க்கரை. இதுமட்டுமின்றி, சேர்க்கப்பட்ட சர்க்கரை கலந்த பிஸ்கட், கேக், குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்." என்கிறார் சிந்தியா தினேஷ். அதிலும், நீரிழிவு நோயாளிகள் சேர்க்கப்பட்ட சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பது நல்லது என்று கூறும் சிந்தியா, "ஆப்பிள், கொய்யாக்காய், பால், கேரட் போன்றவற்றை அவர்கள் குறிப்பிட்ட அளவு எடுத்துக்கொள்ளலாம், குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகளுக்கு முன்னுரிமை அளிக்கலாம்" என்கிறார். "சேர்க்கப்பட்ட சர்க்கரையைக் குறைப்பது அல்லது தவிர்ப்பதை 10 நாட்கள் அல்லது 30 நாட்கள் என ஒரு இணைய ட்ரெண்டிற்காக பின்பற்றாமல், அதை வாழ்க்கை முழுக்க பின்பற்றுவதே சிறந்த முறையாக இருக்கும்." என்று கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cp8jzjm82k7o
  
      
    
  
            
      
            1 month 1 week ago
      20 Sep, 2025 | 06:14 PM  தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நாகப்பட்டினத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது, ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது தமிழர்களின் கடமை என வலியுறுத்திப் பேசினார். கடலில் மீன்பிடிக்கும் போது பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தமிழக மீனவர்களுக்காகக் குரல் கொடுப்பது அவசியம் என்று குறிப்பிட்ட விஜய், "மீனவர்களின் உயிர்கள் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களின் வாழ்க்கையும், கனவுகளும் மிக மிக முக்கியம்" என்றார். இலங்கை உட்பட உலகின் எந்த மூலையில் இருந்தாலும், ஈழத்தமிழர்கள் "தாய்ப்பாசம் காட்டிய தலைவனை இழந்து தவிக்கும்" நிலையில், அவர்களுக்காகக் குரல் கொடுப்பதும், துணை நிற்பதும் நமது கடமை அல்லவா என்று அவர் கேள்வி எழுப்பினார். இந்த உரை, தமிழக அரசியல் மற்றும் சமூக அரங்கில் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்த விவாதத்தை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/225604
  
      
    
  
            
      
            1 month 1 week ago
      திலீபன் நினைவு ஊர்தி முல்லைத்தீவு நோக்கி புறப்பட்டது 20 Sep, 2025 | 05:40 PM  தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஸ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நினைவு ஊர்திப் பயணமானது வெள்ளிக்கிழமை (19) இரவு வவுனியாவை அடைந்தது.  இந்நிலையில் சனிக்கிழமை (20) காலை வவுனியா மாநகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்கு தமிழ் நினைவு தூபியடியில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் பொதுமக்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர். இதைவேளை குறித்த ஊர்தி பவனியானது இன்றையதினம் முல்லைத்தீவு நோக்கி புறப்பட்டுச்சென்றது. https://www.virakesari.lk/article/225599
  
      
    
  
            
      
            1 month 1 week ago
      மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார் கோட்டாபய ராஜபக்ஷ 20 Sep, 2025 | 11:42 AM  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் செப்டெம்பர் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட்டதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் தங்கியுள்ள கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச வாசஸ்தலத்திலிருந்து செப்டெம்பர் 11 ஆம் திகதி வெளியேறி, அம்பாந்தோட்டை - தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்திற்கு குடிபெயர்ந்தார். தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்திற்கு குடிபெயர்ந்ததையடுத்து மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்காக பல அரசியல்வாதிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கால்டன் இல்லத்திற்கு சென்றிருந்தனர். இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் ஒன்றுதிரண்டு கார்ல்டன் இல்லத்திற்கு சென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து அவரை வாழ்த்தி தங்களது அன்பை வெளிப்பிடுத்தியிருந்தனர். https://www.virakesari.lk/article/225572
  
      
    
  
            
      
            1 month 1 week ago
      மரபணு நோய்களை தடுப்பதில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளதா என விவரிக்கிறது இந்த காணொளி.
  
      
    
  
            
      
            1 month 1 week ago
      தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட் 05 மீனவர்களையும தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவு Published By: Vishnu 20 Sep, 2025 | 02:47 AM  இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப் பட்டிருந்த 5 இந்திய மீனவர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் வெள்ளிக்கிழமை [19] வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.   கடந்த ஜூன் மாதம் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இந்திய இழுவைப் படகுகளையும் ஒன்றையும் அதிலிருந்து 5 இந்திய மீனவர்களையும் கைது செய்தனர். பின்னர் குறித்த மீனவர்களையும்,இலுவைப் படகுகளையும் கடற்படையினர் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். திணைக்கள அதிகாரிகள் விசாரனைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் குறித்த மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணை மீண்டும் வெள்ளிக்கிழமை (19) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 5 மீனவர்களையும் இம் மாதம் 26 ஆம் திகதி  வரை மீண்டும் விளக்க மறியலில் வைக்க  உத்தரவிட்டார். https://www.virakesari.lk/article/225556
  
      
    
  
            
      
            1 month 1 week ago
      🤣................. நக்கீரர் வழி வந்தவர் எங்கள் அல்வாயன்..................... விபரமாகவே பின்னர் எழுதப் போகின்றேன் அல்வாயன்...........👍.
  
      
    
  
            
      
            1 month 1 week ago
      தமிழ்நாட்டில் வெகு சில அரசியல் தலைவர்களுக்கே நீங்கள் சொல்லியிருக்கும் பேதங்கள் கடந்த ஆதரவு உள்ளது. இந்த தலைவர்கள் ஒரு அடையாளத்துக்குள் உட்படாதவர்கள். விஜய்யும் அவர்களில் ஒருவர் என்று நீங்கள் சொல்லியிருப்பது சரியே. விஜய்யிற்கு நல்லவர் என்ற பிம்பமும் உள்ளது. ஆனால் தமிழக மக்கள் தலைவர்கள் கொஞ்சம் அப்படி இப்படி என்றாலும் ஏற்றுக் கொள்வார்கள், அவர்களுக்கு பிடித்து இருந்தால். உதாரணமாக, திரிஷாவுடன் உண்மையிலேயே ஏதாவது தொடர்புகள் இருந்தால் கூட..................🤣. ஜெயலலிதா மிகக் குறுகிய காலத்தில் மக்கள் மனதில் உண்டாக்கிய மாற்றம் ஆச்சரியமானது. அவர் இருக்கும் போது அவரின் மீது சில விமர்சனங்கள் எனக்கு இருந்தன. இப்பொழுது அவர் இல்லாத போது, அவர் இப்பவும் இருந்திருக்கலாமே என்று தோன்றுகின்றது..................😔.
  
      
    
  
            
      
            1 month 1 week ago
      இது தொடர்பாக ஒன்றையும் ஓரளவு விபரங்களுடன் எழுதலாம் என்று இருக்கின்றேன், அண்ணா. அதனாலேயே சில விபரங்களை இப்பொழுது தவிர்த்திருக்கின்றேன். அங்கு குடியேறிய, குடியேறிக் கொண்டிருக்கும் மக்களிடையே இருக்கும் நம்பிக்கையின்மைகளை, சந்தேகங்களை என் பார்வையில் எழுதலாம் என்று நினைத்துள்ளேன். அவுஸ்திரேலியாவில் மட்டுமே தான் இது காணப்படுகின்றது என்றில்லை. எல்லா மேற்கு நாடுகளிலும் புலம் பெயர்ந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களிடையே இந்தப் போக்கு உள்ளது. அமெரிக்காவில் அதிகமாகவே உள்ளது.
  
      
    
  
            
      
            1 month 1 week ago
      வணக்கம் வாத்தியார் . .........!  ஆண் : { என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்சபோது } (2) பெண் : { சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன் நான் சொக்க தங்கம் கிட்டியதா துள்ளி குதிச்சேன் } (2) குற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன் எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன் ஆண் : நான் தர சிற்பம் உன்னோட வெப்பம் நான் தொட்டு பாக்குறப்போ என்ன நெனச்ச பெண் : தீக்குச்சி வந்து தீக்குச்சி கிட்ட சௌக்கியம் கேக்குதுன்னு நானும் நெனச்சேன் ஆண் : உன் கன்னக்குழி முத்தம் வச்சேன் என்ன நெனச்ச பெண் : என் நெஞ்சுக்குழி மீதும் ஒன்னு கேக்க நெனச்சேன் ஆண் : என் பேராசை நூறாசை கேட்கையில் அடி தேன் மல்லி நீ என்ன நெனச்சடி பெண் : ஆறேழு கட்டிலுக்கும் அஞ்சாறு தொட்டிலுக்கும் சொல்ல நெனச்சேன் நான் சொல்ல நெனச்சேன் உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன் அள்ள நெனச்சேன் நான் அள்ள நெனச்சேன் உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன் ஆண் : மெத்தைக்கு மேல உன்னோட சேல என் கையில் சிக்கும் வேளை என்ன நெனச்ச பெண் : எப்போதும் போல உன்னோட வேலை ஆரம்பம் ஆச்சுதுன்னு நானும் நெனச்சேன் ஆண் : நீ உள்காயத்தை பாக்குறப்போ என்ன நெனச்ச பெண் : நீ நகம் வெட்ட வேணுமுன்னு சொல்ல நெனச்சேன் ஆண் : நாம் ஒன்னோடு ஒன்னாகும் நேரத்தில் உன் பூந்தேகம் தாங்குமான்னு நெனச்சயா பெண் : கல்யாண சொர்கத்துல கச்சேரி நேரமுன்னு கட்டி புடிச்சேன் நான் கட்டி புடிச்சேன் என் வெட்கம் விட்டு மூச்சு முட்ட கட்டி புடிச்சேன் ஆண் : { சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன் நான் சொர்க்கத்தையே எட்டியதா துள்ளி குதிச்சேன் } (2) பெண் : குற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன் எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன் .......!  --- என்ன நினைச்சே என்ன நினைச்சே ---
  
      
    
  
            
      
            1 month 1 week ago
      திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் ........!  😍
  
      
    
  
            
      
            1 month 1 week ago
      உத்தரவை செய்ய மறுத்தால் கைது செய்வார்கள் தானே? அனுதாபங்கள்.
  
      
    
  
            
      
            1 month 1 week ago
      சீமானுக்கான பஸ் போயே விட்டது. சீமானை போல் நாளொருவேடம் போட்ட அரசியல் வாதிகள், சாக்கடையான தமிழக அரசியலில் கூட அரிதிலும் அரிது. சீமான் ரஜனிக்கு சொன்னதுதான் இப்போ சீமானுக்கும். வெற்றிடம் சுடுகாட்டிலும்தான் இருக்கிறது. நாங்கள் அனைவரும் எம்ஜிஆர் என்ற ஒருவரை மட்டும் வைத்து தமிழக அரசியலை எடை போடுகிறோம். எம் ஜி ஆர், திக, திமுகவில் இருந்து அதன் பின் அதிமுக வை தோற்றுவித்தார் மறுக்கவில்லை. ஆனால் ஜெ? எம் ஜி ஆர் காலத்தில் வெறும் பதுமையாக பல வருடம் கழித்தவர். பலவருட சினிமா அஞ்ஞாதவாசத்தின் பின், தமிழாராய்சி மாநாட்டில் நடனமாடி, எம் ஜி ஆரை மீள நெருங்கி, அரசியலுக்கு வந்து சத்துணவு திட்டம், கொபசெ, ராஜ்யசபா என சொற்பகாலம், அதற்குள் எம் ஜி ஆருக்கு தெரியாமல் அல்லது சொல்லாமல் டெல்லியில் லாபி செய்ததால் - முழுவதுமாக ஓரங்கட்டப்பட்டார். எம் ஜி ஆர் சாகும் போது கட்சி ஆர் எம் வி, ஜானகி பக்கம்தான் பெரும் அளவில் இருந்தது. ஆனால் தேர்தல் முடிவில், மக்கள் ஜெ அணியை ஆதரிக்க, அரசியலில் கொட்டை போட்ட ஆர் எம் வி, நெடுஞ்செழியன், அறந்தாங்கியில் அசைக்க முடியாத திருநாவுக்கரசர், அடிதடி மன்னன் தாமரைக்கனி அனைவரும் ஜெக்கு பின் அணி திரள வேண்டியதாயிற்று. ஒரு திராவிட கட்சியை, ஒரு பிராமண பெண், நடிகை, சில வருட அரசியல் அனுபவம் மட்டும் இருந்த, நுனிநாக்கு ஆங்கில நடிகை, அண்ணா கால அரசியல்வாதிகளை எல்லாம் பின்னே தள்ளிவிட்டு, எம்ஜிஆரின் மனைவியை தள்ளி விட்டு, வெற்றிகரமாக வழிநடத்தவில்லையா? இதே போலத்தான் விஜயகாந்தும். நோய் வாய்ப்படாவிடின், மனைவியை மச்சானை தட்டி வைத்திருப்பின், அவன் முதல்வராக கூட ஆகி இருப்பார். எம் ஜி ஆர்…. ஜெ…. விஜயகாந்த்…. வேறுபட்ட அரசியல் அனுபங்களோடு, தமிழக அரசியல் ஒவ்வொரு படிநிலையில் சாதித்த ஆளுமைகள். விஜை? காலம் நிச்சயம் பதில் சொல்லும். ஆனால் விஜையிடம் தமிழகத்துக்கு தேவையான கொள்கை தெளிவு உள்ளது. பெரியார், அம்பேத்கர், அண்ணா என ஆதரவு வட்டத்தை பெருப்பிக்கும், சிந்தனை தெளிவு இருக்கிறது. நிச்சயமாக அதிமுக+பிஜேபி கூட்டணியில் சிவப்பு கம்பளம் வைத்து வரவேற்க்க தயார். ஆனால் பிஜேபியை கொள்கை எதிரி என கூறும் தெளிவு இருக்கிறது. சீமானிடம், அன்புமணியிடம், திருமாவிடம் இல்லாத, எம்ஜிஆர், ஜெ, விஜயகாந்த் இடம் இருந்த 2 விடயங்கள் விஜையிடமும் உள்ளன. மக்கள் இவன் நல்லவன் என நம்புவது சாதி மதம் கடந்து உயர் நிலையில் செயல்படுவது. இந்த இரெண்டும் இல்லாமல் தமிழ்நாட்டு அரசியல் முதல்வராக முடியாது. இவை இரெண்டரையும் சீமான் பாழாக்கி பல வருடங்கள் ஆகிவிட்டன.
  
      
    
  
            
      
            1 month 1 week ago
      ஏற்கனவே அவர் இருக்கும் இடத்தில் அளவுக்கதிகமாக இந்தியர்கள் இருக்கிறார்கள். இப்படி கதைகள் எழுதுவார் என்று தெரிந்தால் ரசோதரனைக் கடத்தி கோடாம்பாக்கம் கொண்டுபோய் வலுக்கட்டாயமாக கதை எழுத வைத்துவிடுவார்கள்.
  
      
    
  
            
      
            1 month 1 week ago
      எஜமானின் நலன் விசாரிக்க யாழ். மருத்துவமனை விரைந்த அழையா விருந்தாளி 20 September 2025  மனிதர்களைக் கடந்து ஐந்தறிவு ஜீவன்களுக்கும் கருணை உண்டு என்பதை நிருபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று யாழ். மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது. மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளைப் பார்வையிட அவர்களது உறவினர்கள், நண்பர்கள் என பலரும் சென்று பார்வையிடுவது வழக்கமானதொன்றாகும். அந்த வரிசையில் தனது எஜமானை பார்க்க நாய் ஒன்று சென்றுள்ள சம்பவம் பலரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது. யாழ். மருத்துவமனையின் 24 ஆம் இலக்க விடுதியில் இந்த நெகிழ்ச்சி சம்பவம் பதிவானதாக எமக்குக் கிடைத்த தகவல்களின் மூலம் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. மருத்துவமனைக்குள் எவ்வித குழப்பமும் விளைவிக்காமல் குறித்த நாய் தனது எஜமானை பார்வையிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் யாழ். மருத்துவமனையின் வரலாற்றில் ஒரு தனிச்சிறப்பான நிகழ்வாகப் பதிவாகியுள்ளது. https://hirunews.lk/tm/421236/an-uninvited-guest-rushed-to-the-jaffna-hospital-to-inquire-about-the-well-being-of-his-master
  
      
    
  
            
      
            1 month 1 week ago
      கொஞ்சம் கொஞ்சமாக மாறும் கொடூரமான முகம் முருகானந்தம் தவம் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகரவுக்கு எதிராகப் பிரதான எதிர்க்கட்சியினால்  கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்க முடியாதென சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நிராகரித்ததன் மூலமும், அதன் பின்னர் சபையில் அரச தரப்பினர் நடந்து கொண்ட முறை மூலமும் நாட்டின் உயர் பீடமும் சட்டவாக்க சபையுமான பாராளுமன்றத்தில்  ஜே.வி.பி. -தேசிய மக்கள் சக்தி  அரசின் சர்வாதிகாரத்தனம் தலைவிரித்தாடுகின்றதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. முன்னர் ஆட்சி  புரிந்த அரசுகள் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்குள்ள உரிமைகளை அங்கீகரித்தன. எதிர்க்கட்சி  தலைவர்களுக்கான கௌரவத்தை வழங்கின. எதிர்க்கட்சிகளின்   கருத்துக்களைச் செவிமடுத்தன. பேச்சு, கருத்து சுதந்திரம் கொடுத்தன. சிறப்புரிமைகளை அங்கீகரித்தன. ஆனால், தற்போதைய  அனுரகுமார அரசு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சர்வாதிகாரத்தையும் அடக்கி ஆளுகைகளையும் முன்னெடுத்து தமது இயலாமைகளையும் ஆட்சியின் அவலட்சணத்தையும்   மூடி மறைக்க முற்படுகின்றது என்றவாறாக  கடும் விமர்சனங்கள் வெளிக் கிளம்பியுள்ளன. கட்சிக்குள் பிளவுகள், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் பின்னடைவு, மக்கள் ஆதரவில் வீழ்ச்சி, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாமை, எதிர்க்கட்சிகளின் பிரசாரங்கள், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பிலுள்ள அரச வாசஸ்தலத்திலிருந்து வெளியேற்றியமை  போன்றவற்றால் அரசுக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்பாளிகள், மீண்டெழும் ராஜபக்ஷக்கள், ஊடகங்களின் கடும் விமர்சனம் வரவுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல் என பலமுனை பிரச்சினைகளிலும் சிக்கல்களிலும், நெருக்கடிகளிலும்  சிக்கித் தவிக்கும் அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி.- தேசிய மக்கள்  சக்தி அரசு இவற்றை எதிர்கொண்டு சமாளிக்கவே   தற்போது  ‘சர்வாதிகாரம்’ என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது. இவ்வாறான நிலையில்தான் எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு எதிராக ஏற்கெனவே சில தடவைகள் அரசின் சர்வாதிகாரம் பாய்ந்த நிலையில், அவர்களின் குரல் ஒடுக்கப்பட்டு அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், தற்போது பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப்  பிரேரணையில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சி மீதும் அரசின் சர்வாதிகாரம் பாய்ந்துள்ளது. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் பாதுகாப்பு பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிரான எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கடந்த ஒகஸ்ட் மாதம் 12ஆம் திகதி சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி, நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த தனது முடிவை எதிர்காலத்தில் அறிவிப்பதாக சபாநாயகர் கடந்த ஒகஸ்ட் மாதம் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த 10ஆம் திகதி புதன்கிழமை  காலை 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் சபை கூடிய நிலையில், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான தனது அறிவிப்பை விடுத்தார். அதில்,  “அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் கொண்டு வரப்படலாம் என்பதை அரசியலமைப்பு தெளிவாக அங்கீகரிக்கிறது. அதேநேரத்தில், பிரதமர் அல்லது ஒரு தனிப்பட்ட அமைச்சரவை அமைச்சர் மற்றும்  எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை முன்னுதாரணமாக அங்கீகரிக்கிறது. ஆனால், பிரதி அமைச்சருக்கு எதிராக அத்தகைய தீர்மானத்திற்கு எந்த ஏற்பாடும் இல்லை. எனவே, இன்று அத்தகைய தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால்,  அது அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற  முன்னுதாரணங்களுக்கு முரணான ஒரு விரும்பத்தகாத முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்.  எனவே, பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒழுங்கற்றது. அதன் தற்போதைய வடிவத்தில் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இந்த சபைக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்” என்றார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கு  எதிராக  எதிர்க்கட்சி  கொண்டுவந்த  நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகரிப்பதற்குக் காரணமாக சபாநாயகர் எடுத்துக்   கொண்ட சட்டமா அதிபரின் அறிக்கை மற்றும் பாராளுமன்ற செயலாளரின்  பணியாற்தொகுதியின் அறிக்கையைச் சபைக்குச் சமர்ப்பிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள்  வலியுறுத்தியபோதும் அவற்றைச் சமர்ப்பிக்காது சந்தித்தன முறையிலேயே நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசு நிராகரித்ததுடன்  சபையில் சபாநாயகர், சபைமுதல்வர் ஆகியோர் நடந்து கொண்ட முறைதான் நாட்டின் உயர் பீடமான பாராளுமன்றத்தின் சுயாதீனத்தைக் கேள்விக்குட்படுத்தியுள்ளதுடன், அரசின் சர்வாதிகாரத்தனத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. பிரதி அமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப்  பிரேரணை கொண்டுவரும் முறை ஒன்று நிலையியற் கட்டளையில் இல்லை என்று தெரிவித்தே அரசு அதனை நிராகரித்தது. அதேவேளை, நம்பிக்கையில்லாப்  பிரேரணையை  யாருக்குக் கொண்டுவர முடியும் யாருக்குக் கொண்டுவர முடியாது எனவும்  நிலையியற் கட்டளையில் இல்லை. அதேபோன்று, பாதுகாப்பு அமைச்சர் இல்லாத சந்தர்ப்பங்களில் பதில் பாதுகாப்பு அமைச்சராகச் செயற்படும் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப்  பிரேரணை கொண்டுவர முடியாது என தெரிவிப்பதில் எந்த நியாயமும் இல்லையென்பதே எதிர்க்கட்சிகளின் வாதமாக இருந்தபோதும், சபை முதல்வரே  சபைக்கு உதவாத வார்த்தைப் பிரயோகங்களை  மேற்கொண்டு எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்குவதில் தீவிரமாகவும் சண்டித்தனப் போக்குடனும் நடந்து கொண்டார். சபை முதல்வர்  எதிர்க் கட்சிகளை கடுமையாக சாடியும் கிண்டலடித்தும் எச்சரித்தும் ஒரு கட்டத்தில் உங்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையை எமது மேல் மாகாண எம்.பிக்களை  மட்டும் வைத்தே எம்மால் தோற்கடிக்க முடியும் எனக்கூறியதுடன் எமது பக்கத்துக்கு எம்.பிக்களையும்  எழுந்து நிற்க வைக்கவா?. உங்களால் மட்டுமல்ல எங்களினாலும்  முடியும் என மிரட்டும் தொனியிலும் பேசினார். அதுமட்டுமன்றி, இவர்களின் கூச்சலுக்கு செவி சாய்க்காமல் சபையை முன்னெடுத்துச் செல்லவேண்டும் சபாநாயகரை எச்சரிக்கும் தொனியில் அறிவுறுத்தியதுடன், எதிர்க்கட்சி எம்.பிக்களை  பார்த்து சபைக்கு உதவாத  வார்த்தைகளையும்  பயன்படுத்தினார். எதிர்க்கட்சி எம்.பிக்கள்  அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் சபைக்கு உதவாத வார்த்தையை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்குமாறு சபாநாயகரை வலியுறுத்தி   சபைக்கு  நடுவுக்கு வந்த நிலையில்,   சபை முதல்வருக்கு அவரின் கூற்றை வாபஸ் பெறுமாறு முதலில் கூற   தடுமாறிய சபாநாயகர் பின்னர்  சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை பார்த்து,  குறித்த  தகாத வார்த்தையை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு  கூறியபோதும் சபைமுதல்வரான பிமல், அது தொடர்பில் காதில் வாங்காது சபாநாயகருக்கு உத்தரவிடும்வகையில் சில கருத்துக்களைக்கூறினார் , சபாநாயகருக்கு சபையை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்பது போன்று வகுப்பெடுத்து சர்வாதிகாரிபோன்றே  செயற்பட்டார். இறுதிவரை அந்த சபைக்குதவாத வார்த்தையை   சபைமுதல்வரான  அமைச்சர் பிமல் ரத்நாயக்க வாபஸ் பெறவில்லை, எனினும், எதிர்க்கட்சிகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அதனை வாபஸ் பெறவேண்டும். அந்த வார்த்தை ஹன்ஸாட்டிலிருந்து நீக்கப்பட வேண்டும் என விடாப்பிடியாக நின்றதால்  சபையைக் கொண்டு நடத்தமுடியாத நிலையில்,   இறுதியாகச் சபாநாயகர் அந்த வார்த்தையை ஹன்ஸாட்டிலிருந்து நீக்குமாறு உத்தரவிட நேரிட்டது. அந்தளவுக்கு சபாநாயகரைக்கூட ஒரு பொருட்டாக மதிக்காத  நிலையில், சபை முதல்வர் சபையில் செயற்பட்டதுடன், சர்வாதிகாரத்தனத்துடன், நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிராகரித்தமையும்  கடும் விமர்சனங்களை  ஏற்படுத்தியுள்ளது . மாற்றம், மக்களாட்சி, ஜனநாயகம், இன, மத, நல்லிணக்கம், சுதந்திரம் என்ற கோஷங்களோடு மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு ஆட்சி பீடம் ஏறியவர்கள் ஒரு வருடத்திற்குள்ளேயே  ஆட்டம் காணத் தொடங்கியதனால் நிறைவேற்றதிகாரம், சர்வாதிகாரம், இன, மத நல்லிணக்க  விரோதம் என்ற ஜனநாயக ஆட்சிக்கு  முரணான புதிய திசையில்  பயணிக்கத் தொடங்கியுள்ளனர். முன்னைய அரசுகளும் இந்த வழியில் பயணித்தாலும் கூட நாட்டின் உயர் பீடமான பாராளுமன்றத்தில் சர்வாதிகாரத்தைப் பயன்படுத்த வில்லை. ஆனால், மாற்றம் என வந்தவர்கள் அதிலும் மாற்றம் செய்து நாட்டின் உயர் பீடமான பாராளுமன்றத்திலும்  சர்வாதிகாரத்தை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு ஆட்சி பீடம் ஏறிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி. - தேசிய மக்கள் சக்தி அரசு தான் தற்போது  பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட பெரும்பான்மை உள்ளது என்ற தலைக்கனத்தில் நாட்டிலும்    சட்டங்களை இயற்றும்  உயர் பீடமான பாராளுமன்றத்திலும் சர்வாதிகார ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது. அதாவது,  தேசிய மக்கள் சக்தி என்ற முகமூடியோடு உள்ள ஜே.வி.பி. தனது ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து தப்பிக்கச் சிறிது சிறிதாகத் தனது கொடூரமான பழைய முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொஞ்சம்-கொஞ்சமாக-மாறும்-கொடூரமான-முகம்/91-364872
  
      
    
  
            
      
            1 month 1 week ago
      "மூன்று கவிதைகள் / 09"    முன்னழகும் பின்னழகும் கண்ணிலே நிற்குதே  முடியழகும் இடையழகும் மனதைக் கலக்குதே   உன்னழகு ஈடில்லா தனியழகு அல்லவா   மன்னவனின் சன்னிதியில் என்னையே மறந்தேனே!    சிங்கார புன்முறுவல் சிரிப்பை உதிர்த்தவளே  சிவப்புநிற பட்டாடை தக்கபடி உடுத்தவளே பூமாலை சூடிய அலங்காரக் காந்தையே  கண்திறந்து பார்க்காயோ அன்பு காட்டாயோ !!    ...........................................   தீ குச்சிகளை தேடிக்கொண்டிருக்காதீர்கள் அவளிடம் கேளுங்கள் சிரிப்பில் இருந்து நெருப்பை உண்டாக்குவது எப்படி என்று? என் கல்லறைக்கு வரும் போதாவது அவளை பார்த்து யாராவது கேளுங்கள் அந்த புன்னகைக்கு என்ன அர்த்தம் என்று?   .........................................................   மஞ்சள் வெயில் பூத்த வானமும்   பனை மரங்களின் இனிய தாலாட்டும்   பச்சை கிளிகளின் கொஞ்சும் சங்கீதமும் யாழ் தொட்டால் காதுகளுக்கு எட்டிவிடும் எல்லோர் மன தோடும் ஒட்டிவிடும் அன்பும் பண்பும் துளிர்த்துவிடும்!   வீட்டை விட்டு எட்டி நடந்தால் வானம் பாடிகளின் ஆட்டமும்   வீதியோர பசுக்களின் கூட்டமும்   காதுகளில் ஒலிக்கும் செந்தமிழும்  வானுயர நிமிர்ந்த பனைமரமும் மனதைத் தொடும் நினைவுகளே!    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]    "மூன்று கவிதைகள் / 09" https://www.facebook.com/groups/978753388866632/posts/31395276500120921/?
  
      
    
  
            
      
            1 month 1 week ago
      மந்திரிமனை  ஐரோப்பிய திராவிட சிற்ப கலையை உபயோகித்து கட்டப்பட்டது.  Mantri Manai Article Talk Language Watch Edit Mantri Manai or Manthiri Manai (pronounced[mən̪d̪ɪɾɪˑmənəj]; literally Abode of Minister) is a historic palace situated in Nallur, Jaffna, Sri Lanka. It is one of the archaeological protected monuments in Jaffna District and was listed by the Sri Lankan government in 2007.[2] Mantri Manai மந்திரி மனை  Mantri Manai   Location in greater Jaffna General information Status Good Town or city Jaffna Country Sri Lanka Coordinates 9°40′38.9″N80°02′09.3″E Owner Sri Lankan government Landlord S. Thambipillai[1] Height Architectural European and Dravidian Technical details Material Brick, lime plaster, wood, tile Designations Archaeological protected monument (23 February 2007) Known for Jaffna kingdom The palace is associated with the Jaffna kingdom. It is believed to be one of the palaces or residences of a minister of Cankili, king of Jaffna, before the fall of the Jaffna kingdom to the Portuguese.[3] The building is surrounded by other historical remains of the Jaffna kingdom such as the Sattanathar temple, which was one of the city temples of the kingdom; Yamuna Eri and Cankilian Thoppu are also located nearby. However, much of the architectural style belongs to the post-Jaffna kingdom era.[4] https://en.m.wikipedia.org/wiki/Mantri_Manai
  
      
    
  
            
      
            1 month 1 week ago
      இராணுவம் – கடற்படை அதிகளவான நீரை எடுத்து செல்வதனால் உவராகும் குடிநீர் கிணறுகள் written by admin September 20, 2025  மக்களின் குடிநீர் கிணறுகளில் இருந்து கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் பெருமளவான நீரை தினமும் எடுத்து செல்வதால் , அப்பகுதி கிணற்று நீர் உவராகியுள்ளது. அதானல் மக்கள் தாம் குடிப்பதற்கு பணம் கொடுத்து நீரை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் எனவும் , அதனால் மக்களின் குடிநீர் கிணறுகளில் இருந்து இராணுவத்தினர் நீரினை பெறுவதை தடை செய்ய வேண்டும் என வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஐ.நாகரஞ்சினி தெரிவித்துள்ளார். வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை தவிசாளர் ச.ஜயந்தன் தலைமையில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.   மேலும் தெரிவிக்கையில்,  வலிகாமம் மேற்கு பிரதேசத்துக்கே தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினை காணப்படுகின்றது. பிரதேச சபையினால் மக்களுக்கு கொடுப்பதற்கே தண்ணீர் போதாமல் இருக்கிறது. இவ்வாறான சூழ்நிலையில் கடற்படையினர் ஊருக்குள் வந்து தினமும் 10 ஆயிரம் லீற்றர் களுக்கும் அதிகமான தண்ணீரை எடுத்துச் செல்கின்றனர். இவ்வாறு தினமும் அதிகளவான தண்ணீரை எடுத்து செல்வதால் நீர்வளம் பாதிக்கப்படுகிறது. அந்த தண்ணீரை இனிமேல் கடற்படையினர் எடுப்பதற்கு அனுமதிக்க கூடாது. இந்த விடயம் குறித்து உரிய கடற்படை முகாமுக்கு பொறுப்பான அதிகாரிக்கு பிரதேச சபையினால் கடிதம் அனுப்ப வேண்டும். இதேவேளை அராலி ஆலடி பகுதியில் உள்ள வயற்காணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து அராலித்துறை இராணுவ முகாமுக்கு தினமும் மூன்று தடவைகள் 30 ஆயிரம் லீட்டர்களுக்கும் அதிகமான தண்ணீர் எடுக்கப்படுகிறது. முன்னர் அந்த வயற்கிணற்றில் இருந்து எடுக்கும் தண்ணீரையே மக்கள் குடிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர். இராணுவத்தினர் இவ்வாறு தினமும் தண்ணீர் எடுப்பதால் அந்த கிணற்று நீர் உவர் நீராக மாறியுள்ளது. இப்போது அப்பகுதி மக்கள் கட்டணம் செலுத்தி பிரதேச சபையிடமிருந்தே தண்ணீரை பெறுகின்றனர். இருப்பினும் பிரதேச சபையினாலும் மக்களுக்கான தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது. இவ்வாறு தினமும் தண்ணீரை எடுப்பதால் அந்த கிணற்றில் மாத்திரமல்லாது அயலில் உள்ள கிணற்று தண்ணீரும் மாற்றமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகளது விவசாயமும் பாதிப்படையக்கூடிய அபாயம் காணப்படுகிறது.எனவே இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் மக்களின் குடிநீர் கிணறுகளில் இருந்து நீரை பெறுவதனை தடை செய்ய வேண்டும் என்றார்.  https://globaltamilnews.net/2025/220590/
  
    Checked
              Tue, 11/04/2025 - 02:45
           
கருத்துக்களம் - All Activity
  
  Subscribe to புதிய பதிவுகள்2 feed