புதிய பதிவுகள்2

கொவிட் பரவல் கட்டுப்பாட்டில் இருந்தாலும் சுவாச நோய்கள் அதிகரிப்பு – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

1 month 3 weeks ago
Published By: DIGITAL DESK 2 13 JUN, 2025 | 11:07 AM நாட்டில் கடந்த சில வாரங்களில் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற சுவாச நோய்கள் அதிகரித்து வந்தாலும், கொவிட்-19 நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இது தொடர்பாக தொற்றுநோயியலின் விஞ்ஞானப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அதுல லியனபத்திரண கருத்து தெரிவிக்கையில், “கொவிட்-19 இப்போது பல்வேறு சுவாச நோய்களில் ஒன்றாகவே கண்காணிக்கப்படுகிறது. தற்போதைய நிலவரத்தின்படி, கொவிட் நோயாளிகள் தொடர்பான தனித் தரவுகள் சேகரிக்கப்படுவதில்லை. எனினும், நிலைமையின் மீது எங்களது தீவிர கண்காணிப்பு தொடர்ந்தும் காணப்படுகிறது” என்றார். மேலும், இந்நேரத்தில் இன்புளுவென்சா மற்றும் பிற சுவாச நோய்களின் பரவல் அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டு, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சுவாச நோய்கள் தொடர்பான கண்காணிப்பு மற்றும் மீள்பார்வை நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தற்போதைய சுவாச நோய்கள் அதிகரித்திருக்கும் சூழ்நிலையில், மக்கள் சுவாச நிலையை சீராக வைத்திருக்க ஒழுங்குமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதாவது, இருமல், தும்மலின்போது தொற்றுக்களைத் தடுக்கும் முறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும். காய்ச்சல், இருமல் அல்லது மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் தோன்றும் தருணங்களில், உடனடியாக மருத்துவ உதவியை பெற வேண்டும். இந்த நோய்கள் அதிகமாக பாதிக்கக்கூடியவர்களான வயதானோர், குழந்தைகள் மற்றும் நீண்டநாள் நோயாளிகள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். அத்துடன், மருத்துவ ஆலோசனையை தவிர்க்காமல் பெறுவது, நோய் பரவலையும் அதனால் ஏற்படும் சிக்கல்களையும் தடுக்கும் முக்கியமான வழி என அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். https://www.virakesari.lk/article/217335

வடக்கு மக்கள் பிரதிநிதியின் பொறுப்பற்ற உரையாடல்

1 month 3 weeks ago
ஏன் என்னைக் கேட்கின்றீர்கள்? நான் எந்த கொலையையாவது சரியென்று நான் இங்கு கொண்டாடினேனா? அது சரி நீங்கள் ஏன் அர்சனாவின் இந்த கேடு கெட்ட கேவலமான செயலுக்கு வக்காலத்து வாங்குகின்றீர்கள்? இலங்கை அரசியலில் அரசியல் கொலைகளை செய்து விட்டு அதை மறைத்து நல்லவர்களாக நடிபவர்கள் பலர் எல்லா இனத்திலும் உள்ளார்கள். அதை உதாரணம் காட்டி குடும்பதகராறுக்காக மனைவியின் தலையை வெட்டிய கொலையும் அதுவும் ஒன்றென எனக்கு கல்வி கற்பித்த எந்த வாத்தியாரும் கற்பிக்காது எனது அதிஷரம்.

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு ; விகாரையை சூழவுள்ள காணிகள் விடுவிக்கப்படும் - இராமலிங்கம் சந்திரசேகர்

1 month 3 weeks ago
நாட்டாமை அமைச்சர்...வெருட்டு வெட்டு..

திரு. கந்தையா ஈஸ்வரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு கூறலும் "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" யும்

1 month 3 weeks ago
திரு. கந்தையா ஈஸ்வரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு கூறலும் "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" யும் முடிக்கப்படாத வரலாற்றுப் புத்தகமான "இலங்கை வரலாறு" எனது மறைந்த நண்பரும், அர்ப்பணிப்புள்ள சுயாதீன ஆராய்ச்சியாளரும் மற்றும் கட்டிட பொறியியலாளருமான திரு. கந்தையா ஈஸ்வரனின் வாழ்நாள் படைப்பாகும். அவர் இதற்காக பல நாட்களையும் மணித்தியாலங்களையும் செலவழித்து, உலகம் முழுவதும் இருந்து அரிய நூல்கள், ஆவணங்கள், சான்றுகள் என்பவற்றைச் சேகரித்து, 10–12 ஆண்டுகள் மிகுந்த ஈடுபாட்டுடன் இதை எழுதியவர் ஆவார். நாங்கள் இருவரும் யாழ்ப்பாண மத்திய கல்லூரியிலும் பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்திலும் இணைந்து கல்வி பயின்றோம். புராணக் கதைகள் மற்றும் இதிகாசங்களின் வரலாறுகளின் கண்ணோட்டத்தைத் தவிர்த்து, வரலாற்று உண்மை, தொல்லியல், அறிவியல் ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கையின் உண்மையான வரலாற்றை வெளிக்கொணர்தலே அவரது மூல நோக்கமாக இருந்தது. 2024ம் ஆண்டு ஜூன் 15ம் நாள், கனடா ஸ்கார்பரோவில் அவர் திடீரென இயற்கை எய்தியபோது, ஏற்கனவே ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். அதில் 110 பக்கங்களைக் கொண்ட அத்தியாயம் 2: “இலங்கை நாளாகமம்” மிக முக்கியமானதாகும். இந்த அத்தியாயத்தில், தீபவம்சம், மகாவம்சம், மற்றும் இராசவலிய ஆகியவற்றின் உண்மை மற்றும் பிழைகள், நேர்த்தியான ஒப்பீடு, மற்றும் வரலாற்று அடித்தளங்களை வைத்து ஆராயப்படுகிறது. அவரது கருத்து மற்றும் எழுத்து பாணியை முழுமையாக தமிழில் அப்படியே கொண்டு வருவதுடன், மேலும் பல தரவுகளைச் அல்லது விளக்கங்களைச் சேர்த்து விரிவுபடுத்திய தமிழாக்கத்தை அவரது முதல் ஆண்டு நினைவு நாளில் (15.06.2025) இருந்து, அவருக்கான பணிவான அஞ்சலியாக, 120 க்கு மேற்பட்ட பாகங்களில், ஒழுங்கான கால இடைவெளியில், பதிவிட உள்ளேன். இந்த பணிவான முயற்சி, இலங்கையின் சிக்கலான, பல்லின வரலாற்றை நேர்மையுடனும் துணிச்சலுடனும் வெளிச்சம் போட்டுக் காட்ட பாடுபட்ட ஒரு அர்ப்பணிப்புள்ள அறிஞரான எனது மறைந்த நண்பருக்கு ஒரு உண்மையான அஞ்சலியாக அமையும் என்று நம்புகிறேன். 🔹 2025ம் ஆண்டு ஜூன் 15ம் தேதியிலிருந்து, திரு. கந்தையா ஈஸ்வரனின் அத்தியாயம் 2: “இலங்கை நாளாகமம்” எனும் விரிவாக்கப்பட்ட தமிழ் மொழிபெயர்ப்பு ஒரு தொடராக வெளியிடப்படும். வெளியீடுகள் பின்வரும் தளங்களிலும் மற்றும் சிலவற்றிலும் தொடர்ச்சியாக வெளியிடப்படும் In Loving Memory of Civil Engineer, Mr. Kandiah Easwaran (15.06.2025) & "A look at 'Lanka chronicles' from a scientific perspective" The unfinished historical book "History of Sri Lanka" was the life’s work of my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer by profession and a dedicated independent researcher. He spent nearly 10 to 12 years compiling this comprehensive work, drawing from numerous rare references gathered from both Sri Lanka and across the world. Mr. Easwaran and I were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. His aim was to write a historically accurate account of Sri Lanka — not through the lens of mythical puranas and epics, but through real historical facts and critical inquiry. By the time of his sudden passing on 15th June 2024, in Scarborough, Canada, he had completed seven chapters of the book. His analysis challenged long-held beliefs based on Sinhala Buddhist chronicles such as the Dipavamsa, Mahavamsa, Culavamsa, and Rajavaliya — evaluating them against archaeological, historical, and scientific evidence. As a tribute on his first death anniversary (15th June 2025), I have translated Chapter 2 of his manuscript, which consists of 110 pages, titled “Ceylon Chronicle”, into Tamil. The chapter examines the truth and falsity of these chronicles by comparing their narratives, internal inconsistencies, and factual basis. The focus is especially on the period from the mythical arrival of Vijaya up to King Mahasena, as described in Dipavamsa, Mahavamsa, and Rajavaliya. While preserving Mr. Kandiah Easwaran’s original writing, I have also expanded it with additional verified facts and references, resulting in more than 120 parts, which will begin to be posted as a humble tribute to him starting on his first anniversary (15.06.2025) I hope this humble effort stands as a sincere tribute to my late friend — a committed scholar who strove to illuminate the complex, multi-ethnic history of Sri Lanka with integrity and courage. 🔹 From 15th June 2025 onwards, the expanded Tamil translation of Mr. Kandiah Easwaran’s Chapter 02: Ceylon Chronicle — likely in over 120 parts — will be published periodically on the following platforms & few more platforms: என் வலைப்பதிவு / My blog: "A DROP IN THE OCEAN/கடலில் ஒரு துளி" By Kandiah Thillaivinayagalingam – https://www.facebook.com/groups/978753388866632/ எனது தனிப்பட்ட முகநூல் / My Facebook [Kandiah Thillaivinayagalingam] பக்கம்: https://www.facebook.com/kandiah.thillaivinayagalingam அறிவார்ந்த தேடல் குழு / Arivaarndha Thedal Group: https://www.facebook.com/groups/266620958015518/ யாழ் இணையம் / Yarl Inayam Website: https://yarl.com "தேடலின் தீபம் நீயே!" ஒருஆண்டு கடந்தாலும் இன்னும் வாழ்கிறீர்கள் ஒவ்வொருபக்கமும் பொழியும் சிந்தனைத் துளிகளில்! கட்டிடக் கலைஞனாக அறிஞரின் ஒளியாக இருட்டுக்கு அப்பால் உண்மையைத் தேடினீர்களே! புராண மறைக்கும் பொய்கள் மறைய கட்டுக்கதைகளை உதைத்து தள்ளினீர்கள்! புகழுரை தவிர்த்து உரிமையை உயர்த்த கடந்த காலத்தை தெளிவாக மாற்றினீர்களே! புத்தகம் ஓயவில்லை குரல் மடியவில்லை உங்கள் வரிகளில் நீங்கள் வாழ்கிறீர்கள்! சிதறிய துளிகளிலிருந்து கடல் அகலம் வரை உங்கள் உண்மையை எடுத்துச் செல்வோமே! நீங்கள் மறைந்த முதல் ஆண்டில் உங்கள் பார்வை வலிமைபெற்று நடக்கட்டும்! A year has passed, yet you remain, In every page, in thought and name. A civil hand, a scholar’s light, You sought the truth, beyond the night. With ancient scrolls and reason’s fire, You questioned myths, climbed ever higher. Not for fame, but for the right, To make the past more clear, more bright. Your chapters paused, your voice is still, But in your work, you live and will. From scattered drops to ocean wide, We carry forth your truth with pride. On this first year since you have gone, Your vision, strong, still marches on. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

1 month 3 weeks ago
எத்தனை வருட காத்திருப்பு. அவங்களுக்கும் எந்த ஒரு உலகக் கிண்ணத்துக்கும் எட்டாப் பொருத்தம். என்ன வாய்க்கால் தகறாரோ.... எப்பவும் ஏதோ ஒன்று வந்து அவங்களுக்கு மண் அள்ளிப் போடும். பாவப் பட்ட ஜென்மங்கள். எப்போதுமே சிறந்த அணியாகத்தான் இருப்பார்கள். ஆனால் உச்சத்தைத் தொட மாட்டார்கள். இம்முறை, அவ்வாறில்லை என்றுதான் படுகிறது. எல்லாம் ஒரே கோட்டில் வந்திருக்கின்றன.

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

1 month 3 weeks ago
இப்ப தென்னாபிரிக்கா அவசரமாக சரித்திரம் படைக்க வேண்டும் என்றும் இல்லை............ அடுத்தடுத்த உலக டெஸ்ட் சாம்பியன் போட்டிகளில் படைக்கட்டுமே............. ஆஸ்திரேலியா இந்த தடவையும் வெல்லட்டுமே..........😜.

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

1 month 3 weeks ago
முதல் நாள் அவுஸ்ரேலியா 20 ஓட்டங்களுக்கு கடைசி 6 விக்கட்டுகளை இழந்தது. இரண்டாம் நாள், தென்னாபிரிக்கா 12 ஓட்டங்களுக்கு கடைசி 5 விக்கட்டுகளை இழந்தது. மீண்டும், அவுஸ்ரேலியா 45 ஓட்டங்களுக்கு முதல் 7 விக்கட்டுகளை இழந்தது. மைதானம் மிதி வெடி மாதிரித்தான் இருக்குது போல. தெம்பாவும் தாவிதுவும்தான் தென்னாபிரிக்காவை கரை சேர்க்க வேண்டும். இருவரும் மிக இலகுவாக ஆடினார்கள். அருமையான இணைப்பாட்டம் முதலாவது இன்னிங்சில். அதே மாதிரி மீண்டும் ஆடினார்கள் என்றால், தென்னாபிரிக்கா சரித்திரம் படைக்கும்.

ஜனாதிபதி அநுர ஜேர்மனியை சென்றடைந்தார்

1 month 3 weeks ago
மேலே உள்ள படத்தில் இடது பக்கம் நீல ரவுசருடன் காலுக்கு மேல் கால் போட்டு கொண்டு முகம் வராமல் மறைத்து கொண்டு கடைசியாக இருப்பவர் தான் நீங்கள் தேடும் யாழ்கள உறவாக இருக்க வேண்டும்

எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது உறுதி

1 month 3 weeks ago
எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது உறுதி செய்திகள் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய வருகையைத் தடுக்க இலங்கை அரசும், மீன்பிடி அமைச்சும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கடற்படையும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இலங்கை கடல் எல்லையை கடற்படை மூலம் தீவிரமாகக் கண்காணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, அத்துமீறி வரும் இந்திய மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மீன்பிடி அமைச்சர் உறுதியளித்துள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (12) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்: நேற்று (11) மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மீன்பிடி அமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினோம். இந்தச் சந்திப்பு, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் தமிழக மீனவர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய வருகை மற்றும் இதுதொடர்பாக அரசு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காகவும், வடபகுதி மீனவர்கள் எதிர்கொள்ளவுள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தச் சந்திப்பில் மீன்பிடி அமைச்சின் செயலாளரும் கலந்துகொண்டார். தமிழக மீனவர்களின் 60 நாள் மீன்பிடித் தடைக் காலம் இம்மாதம் 15 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. அதற்குப் பின்னர், அவர்களின் எல்லை தாண்டிய வருகை எமது கடல் பகுதியில் நிச்சயமாக இடம்பெற வாய்ப்புள்ளது. இதனை அரசும், மீன்பிடி அமைச்சும் எவ்வாறு தடுக்கத் திட்டமிட்டுள்ளன என்பது குறித்தும், வடபகுதி மீனவர்கள் இதனை எவ்வாறு எதிர்கொள்ளவுள்ளனர் என்பது குறித்தும் நாங்கள் ஆழமாக கலந்துரையாடினோம். இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய வருகையையும், சட்டவிரோத மீன்பிடித்தலையும் தடுப்பதற்காக நாங்கள் நீண்ட காலமாகப் போராடி வருகிறோம். பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளோம். தமிழக மற்றும் இந்திய மட்டங்களில் இதுகுறித்து பேசியுள்ளோம். பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வந்துள்ளோம். வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் 2004 ஆம் ஆண்டு முதல் இவ்விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. நெப்சோ (NEPSO) நிறுவனமும் தன்னால் இயன்ற உதவிகளை வழங்கி வருகிறது. எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையைத் தடுப்பதற்கான திட்டம் குறித்து மீன்பிடி அமைச்சருடன் கலந்துரையாடினோம். இவ்விடயம் தொடர்பாக வடபகுதி மீனவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தோம். இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய வருகையைத் தடுக்க இலங்கை அரசும், மீன்பிடி அமைச்சும் தீவிரமாக செயல்படுகின்றன. கடற்படையும் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. எனவே, எதிர்காலத்தில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இலங்கை கடல் எல்லையை கடற்படை மூலம் தீவிரமாகக் கண்காணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, அத்துமீறி வரும் இந்திய மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும். வடபகுதி மீனவர்கள் அச்சப்படத் தேவையில்லை. அரசு தனது செயல்பாடுகளில் உறுதியாக உள்ளது என்று மீன்பிடி அமைச்சர் உறுதியாகத் தெரிவித்தார். அரசாங்கம் அத்துமீறிய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தீவிரமாக உள்ளது என்பதை நாங்கள் அறிகிறோம். இருப்பினும், கடற்படை மற்றும் அரசு இவ்விடயத்தில் கவனக்குறைவாக இருந்தால், எமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்ற அச்சம் மீனவர்களிடையே உள்ளது என்பதை மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். https://adaderanatamil.lk/news/cmbtkjp4g01s8qpbs4sakqw11

ஜனாதிபதி அநுர ஜேர்மனியை சென்றடைந்தார்

1 month 3 weeks ago
@தமிழ் சிறி யரை கொஞ்ச நாட்களாக காணவில்லை. ஜனாதிபதியை வருவது தெரிஞ்சதும் இவர் ஒளிந்துவிட்டாரோ. சிறியர் இவ்வளவு பயந்தாங்கொள்ளி என நான் எதிர்பார்க்கவில்லை.

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

1 month 3 weeks ago
லோர்ட்ஸ் மைதானத்தில் முதல் இரு நாட்களிலும், கடைசி இரு நாட்களிலும் ஆடுவது சிரமம். மூன்றாம் நாள் வெயில் வேறு அதிகமாக உள்ளதால் தென்னாபிரிக்கா துடுப்பாட்டத்தை விரைவில் ஆரம்பித்தால் வெல்ல வாய்ப்பு உள்ளது. தென்னாபிரிக்கா வென்றால்தான் எனக்கு இனி புள்ளிகள் வரும்! வரத்தானே வேணும்😃 அவுஸ் வெல்லும் என்றது நாளைய காலநிலையை ஆராயாமல் சொன்னது! தென்னாபிரிக்கா வெல்லும் என்று சொல்வது கிரிக்கெட் ஜாம்பாவான்களின் கருத்தைக் கேட்டபின்!🤪

இந்திய விமானம் விபத்துக்குள்ளானது

1 month 3 weeks ago
விமானத்தில் இருந்தோரில் ஒருவர் நீங்கலாக ஏனையோர் பலி. தப்பியவரின் சகோதரரும் பலி. கீழே கட்டிடத்தில் இருந்தோரில் பலர் காயங்களுடன் தப்பியுள்ளனர். ஆழ்ந்த அஞ்சலிகள்.
Checked
Thu, 08/07/2025 - 00:30
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed