1 month 2 weeks ago
யாழ்ப்பாணம் 1 மணி நேரம் முன் குடத்தனையில் திடீரெனப் பெய்த மழை; வெங்காயச் செய்கை அழிவு வடமராட்சி கிழக்கு குடத்தனையில் கடந்த தினங்களில் கொட்டித்தீர்த்த கன மழை காரணமாக, அறுவடைசெய்யப்பட்டு, வயல்களில் உலரவிடப்பட்டிருந்த வெங்காயங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளிலும் வெங்காயச்செய்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அந்தப் பகுதிகளில் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குடத்தனைப் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட வெங்காயங்கள், வயல்களில் உலரவிடப்பட்டிருந்தன. கடந்த சில தினங்களாக கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, வயல்களில் வெள்ளம் தேங்கி நிற்பதால், வெங்காயங்களை உலரவிட முடியாது விவசாயிகள் பெரும் துன்பத்தை எதிர்நோக்கியுள்ளனர். இதேவேளை, கடந்த ஆறுவருடங்களுக்கு முன்னரும் இவ்வாறு அறுவடை நேரத்தில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக, அறுவடை செய்யப்பட்ட வெங்காயங்களை விவசாயிகள் படகின்மூலம் ஏற்றிச் சென்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குடத்தனையில் திடீரெனப் பெய்த மழை; வெங்காயச் செய்கை அழிவு
1 month 2 weeks ago
16 Sep, 2025 | 11:15 AM முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாக, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிகள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முறையீடு செய்துள்ளனர். அந்தவகையில் முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளின் முறைப்பாட்டையடுத்து நேற்று திங்கட்கிழமை (15) இரவு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உடனடியாக கடற்றொழிலாளர்களுடன் கடலுக்குள் சென்று முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதை நேரடியாகப்பார்வையிட்டதுடன், அவ்வாறு சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடும் பலரையும் கடுமையாக எச்சரித்துமிருந்தார். குறிப்பாக கொக்கிளாய் முகத்துவாரம் மற்றும் நாயாறு உள்ளிட்ட பகுதிகளில் அத்துமீறித் தங்கியுள்ள நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம் மீனவர்களாலும், திருகோணமலைப் பகுதி மீனவர்களாலுமே இவ்வாறு மிக அதிகளவில் வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல் மற்றும் சுருக்குவலை உள்ளிட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அந்தவகையில் கடலில் இருந்து பார்வையிடும் கரையில்தெரியும் வெளிச்சத்தைவிடவும் சட்டவிரோத வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல் செயற்பாட்டில் ஈடுபடுபடும் படகுகளின் வெளிச்சம் அதிகமாக தென்படுகின்றது. அந்த அளவிற்கு மிக அதிகளவில் சட்டவிரோத வெளிச்சம்பாச்சி மீன்பிடித்தல் செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. இந்நிலையில் இந்தநிலமைகளை வன்னிமாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்குநேரடியாக காண்பித்த முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், இவ்வாறான அதிகரித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் முல்லைத்தீவில் சட்டத்திற்குட்பட்டு கடற்றொழிலில் ஈடுபட்டுவரும் மீனவர்களால் கடற்றொழிலில் ஈடுபடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தனர். குறித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கு எதிராக பாராளுமன்றிலும், கடற்றொழில் அமைச்சின் ஆலோசனைக்குழுக்கூட்டத்திலும், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம், கடற்றொழிலாளர் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களிலும் தொடர்சியாக குரல் எழுப்பிவருவதை இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார். அத்தோடு இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறுவதை அனுமதிக்கமுடியாதெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது தெரிவித்தார். எனவே நேரடி களவிஜயத்தின்போது சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் இடம்பெறுவதை ஆதாரப்படுத்தும்வகையில் சேகரிக்கப்பட்ட விடயங்களை உரிய இடங்களுக்கு கொண்டுசென்று இந்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை நிறுத்துவதற்குரிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுமெனத் தெரிவித்தார். முல்லை கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாக மீனவர்கள் முறையீடு | Virakesari.lk
1 month 2 weeks ago
எங்கள் அன்பு மகன் கலாநிதி பிரணவனுக்கு' / 'To Our Dear Son, Dr Piranavan [16/09/2025] யாழ் மண்ணிலும் லண்டன் வானிலும் நம்பிக்கைக் கனவில் உறுதியாக நீந்தி இழப்புகள் தாண்டி உயர்ந்த மகனே கலங்கரை விளக்காய் வாழ்க வாழ்கவே! அறிவியலில் மனதைப் பறி கொடுத்து பொறியியலில் வாழ்வை திறம்பட அமைத்து மகன் மகளென இரு குழந்தைகளுடன் மகிழ்வாக வாழ்பவனே வாழ்க வாழ்கவே! விண்ணில் இருந்து அம்மா வாழ்த்த மண்ணில் இருந்தது நாம் வாழ்த்த எண்ணம் என்றும் உயர்வாக அமைந்து வண்ண மயமாக வாழ்வு ஒளிரட்டும்! ஆரோக்கியம், அமைதி வாழ்வை நிறைக்க அன்பு ஆசிகள் உனைச் சுற்றிக்கொள்ள பூச்சொரிந்து தீபம் ஏற்றி வாழ்த்துகிறோம் அன்புடன் உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! [அப்பா, கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] From Jaffna’s soil to London’s skies, A journey of hope, where your spirit flies. Through trials and loss, you stood so tall, A guiding light, admired by all. A healer’s heart, both kind and true, The world is brighter because of you. A son, an Engineer and a matured father, Each year you grow, we hold you near. Though your mother now rests above, She sends her blessings, her endless love. From heaven’s gate she smiles today, “Happy Birthday, my son,” she’ll say. May health and peace forever stay, Happy Birthday, my son, on this special day. [Appa, Kandiah Thillaivinayagalingam] எங்கள் அன்பு மகன் கலாநிதி பிரணவனுக்கு' / 'To Our Dear Son, Dr Piranavan [16/09/2025] https://www.facebook.com/groups/978753388866632/posts/31335919739389931/?
1 month 2 weeks ago
16 Sep, 2025 | 11:56 AM 2025 ஆம் ஆண்டின் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 16 இலட்சத்து 41 ஆயிரத்து 881 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, செப்டெம்பர் மாதத்தின் முதல் 14 நாட்களில் 75,358 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 346,984 ஆகும். அத்துடன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 156,855 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 120,314 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 102,461 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 95,119 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 85,667 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு! | Virakesari.lk
1 month 2 weeks ago
16 Sep, 2025 | 03:24 PM கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகில் ட்ரோன் கமராவை பறக்க விட்ட சீன பிரஜை ஒருவர் தலதா மாளிகை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சீன பிரஜை ட்ரோன் கமரா மற்றும் அதனை பறக்க விட பயன்படுத்திய பொருட்களுடன் கண்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரான சீன பிரஜை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகில் அமைந்துள்ள தியவடன நிலமேவின் வீட்டை அண்டிய பகுதியில் ட்ரோன் கமராவை பறக்க விட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகில் ட்ரோன் கமராவை பறக்க விட்ட சீன பிரஜை கைது! | Virakesari.lk
1 month 2 weeks ago
16 Sep, 2025 | 04:30 PM புற்றுநோய் சிகிச்சைக்காக லீனியர் ஆக்சிலேட்டர் (Linear Accelerator) கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரங்களை கொள்வனவு செய்யும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் செயற்படாமல் இருப்பதால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகுவதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். அநுராதபுரம், பதுளை, குருநாகல், அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளுக்கு ஐந்து லீனியர் ஆக்சிலேட்டர் கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரங்களை கொள்வனவு செய்ய சுகாதார அமைச்சு 2013ஆம் ஆண்டு திட்டமிட்டிருந்தது. ஆனால் கடந்த கால அரசாங்கங்கள் மற்றும் சுகாதார அமைச்சில் உள்ள பிரச்சினைகள் காரணமாக லீனியர் ஆக்சிலேட்டர் கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரங்களை 2024ஆம் ஆண்டு வரை கொள்வனவு செய்ய முடியவில்லை. இருப்பினும், புதிய அரசாங்கத்தின் வருகையின் பின்னர் லீனியர் ஆக்சிலேட்டர் கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரங்களை கொள்வனவு செய்ய 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டது. இந்த திட்டத்தை செயற்படுத்துவதற்காக அரசாங்கம் சுமார் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளது. ஆனால் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் அனுமதி கிடைக்காத காரணத்தினால் இந்த திட்டம் இதுவரை செயற்படுத்தப்படவில்லை. இதனால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர். எனவே, இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம கேட்டுக்கொண்டுள்ளார். புற்றுநோய் சிகிச்சைக்கான லீனியர் ஆக்சிலேட்டர் இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்படாமல் இருப்பதால் நோயாளிகள் கடும் சிரமம்! | Virakesari.lk
1 month 2 weeks ago
16 Sep, 2025 | 06:49 PM (எம்.மனோசித்ரா) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணை சுகாதார விஞ்ஞான பீடத்திற்கு விரிவுரை மண்டபங்கள், ஆய்வகங்கள் மற்றும் கேட்போர் கூடம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய புதிய ஐந்து மாடிக் கட்டிடத்தை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக மதிப்பிடப்பட்ட செலவு 2,234 மில்லியன் ரூபா ஆகும் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார். கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 2006ஆம் ஆண்டு அரச பல்கலைக்கழகங்களில் துணை சுகாதார விஞ்ஞானம் தொடர்பான பட்டப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்படி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானம், மருந்து வேதியியல் மற்றும் தாதியியல் துறைகளில் மூன்று பட்டப்படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. தற்போது, இங்கு மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானம், மருந்து வேதியியல், தாதியியல் மற்றும் உடற்கல்வி ஆகிய நான்கு பாடத்துறைகளில் அனைத்து இனங்களையும் சேர்ந்த 952 மாணவர்கள் கல்வி கற்று வருவதாக அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டார். 2017ஆம் ஆண்டு துணை சுகாதார விஞ்ஞான பீடத்திற்கான கட்டிடத்தை நிர்மாணிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தாலும், நிதி நெருக்கடி காரணமாக அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதன் காரணமாக, பீடத்திற்கு மோசமான உட்கட்டமைப்பு வசதிப் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காக, விரிவுரை மண்டபங்கள், ஆய்வகம், ஆய்வுக்கட்டுரை அறை, பரீட்சை மண்டபம் மற்றும் கேட்போர் கூடம் ஆகிய வசதிகளைக் கொண்ட ஒரு புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்தத் திட்டம் மாணவர்களுக்கு சிறந்த கல்விச் சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். யாழ் பல்கலைக்கு 2,234 மில்லியன் செலவில் புதிய கட்டிடம் : துணை சுகாதார விஞ்ஞான பீடத்திற்கு நவீன வசதிகள் - அரசாங்கம் | Virakesari.lk
1 month 2 weeks ago
நான் இது வரையும் யாரின் காலிலும் விழுந்ததில்லை. அதை ஆதரிப்பவனும் அல்ல. அண்மையில் நடந்த ஒரு நிகழ்வில் பேராசிரியரின் காலில் பல மாணவர்கள் விழுந்து கும்பிட்டு சென்றதை அவதானித்தேன். அதை அந்த பேராசிரியர்களும் ரசித்திருக்க வேண்டும் என்பது என்னுடைய அனுமானம். உண்மையிலயே காலில் விழுதல் என்பது ஒரு பண்பா? ஒருவருக்கு மரியாதையை செலுத்தும் முறையா? எதாவது சங்க இலக்கியங்களில் இது பற்றி கூறப்பட்டிருக்கிறதா?
1 month 2 weeks ago
ஹொங்கொங் அணியை வீழ்த்திய இலங்கை அணி Published By: Vishnu 16 Sep, 2025 | 06:23 AM 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசியக் கிண்ணப் போட்டியில் ஹொங்கொங் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி ஹொங்கொங் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. துபாயில் நடைபெற்ற போட்டியில் நாணயற் சுழட்சியில் வென்ற இலங்கை அணித் தலைவர் சரித் அசலங்க முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஹொங்கொங் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்களை எடுத்தது. பதிலளித்த துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தது. சிறப்பான துடுப்பெடுத்தாட்ட செயல்திறனுடன் களமிறங்கிய பதும் நிஸ்ஸங்க 68 ஓட்டங்களை எடுத்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/225180 விராட் கோஹ்லியின் சாதனையை முறியடித்த பெத்தும் நிஸ்ஸங்க! 16 Sep, 2025 | 12:36 PM ஆசிய கிண்ண இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடர் வரலாற்றில் அதிக அரைச்சதங்கள் (fifties) அடித்த வீரர்களின் பட்டியலில், இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க, இந்திய வீரர் விராட் கோஹ்லியின் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஆசியக் கிண்ணத்தொடரில் இடம்பெற்ற ஹொங்கொங் அணிக்கு எதிராக போட்டியில் அவர் அடித்த அரைசதத்தின் மூலம், ஆசியக் கிண்ண இருபதுக்கு - 20 தொடர்களில் அவர் குவித்த அரைசதங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. இதன் மூலம், விராட் கோஹ்லி அடித்த 8 அரைசதங்கள் என்ற சாதனையை அவர் கடந்துள்ளார். பெத்தும் நிஸ்ஸங்க ஆசிய கிண்ண இருபதுக்கு 20 போட்டிகளில் 9 அரைசதங்கள் பெற்றுள்ளார். விராட் கோஹ்லி ஆசிய கிண்ண இருபதுக்கு - 20 போட்டிகளில் 8 அரைசதங்களைப் பெற்றுள்ளார். இலங்கை அணியின் இளம் வீரரான பெத்தும் நிஸ்ஸங்க, அவரது சிறப்பான ஆட்டத் திறமையால், சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து புதிய சாதனைகளை படைத்து வருகிறார். விராட் கோஹ்லி போன்ற அனுபவம் வாய்ந்த வீரரின் சாதனையை முறியடித்ததன் மூலம், அவர் தனது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார். https://www.virakesari.lk/article/225224
1 month 2 weeks ago
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வாக்களிக்கும் வகையில் சட்டங்களைத் திருத்துவதற்கு பல அமைச்சுக்களின் அதிகாரிகளைக் கொண்ட குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 3 ஆவது உறுப்புரைக்கமைய, மக்கள் மீதான மக்கள் இறைமை அதிகாரம் மக்களால் 4 ஆவது உறுப்புரையின் ஏற்பாட்டின் பிரகாரம் தேர்தலின் போது நடைமுறைப்படுத்தப்படும். வாக்கு அதிகாரம், தேர்தல் சட்டத்திற்கமைய இலங்கையில் வசிக்கின்ற மற்றும் தேருநர் இடாப்பில் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ள பிரஜைகளுக்கு மாத்திரமே உண்டு. சமகால தேர்தல் சட்டங்களின் கீழ் வெளிநாடுகளிலுள்ள இலங்கைப் பிரஜைகளுக்கு வாக்களிப்பதற்கான முறைகளோ அல்லது சட்டங்கள் தயாரிக்கப்படவில்லை. ஆயினும், இந்தியா, பங்களாதேசம், பிலிப்பைன்ஸ் போன்ற பல ஆசிய நாடுகள் தமது வெளிநாட்டிலுள்ள பிரஜைகளுக்கு வாக்களிக்கக்கூடிய வகையில் சட்டரீதியான மூலோபாயங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையிலும் அவ்வாறான சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, வெளிநாட்டிலுள்ள பிரஜைகளின் வாக்குரிமையைப் பாதுகாப்பதற்காக தற்போதுள்ள சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு அல்லது புதிய சட்டத்தைத் தயாரிப்பதற்கான விடயங்களை ஆராய்வதற்காக தேர்தல் ஆணைக்குழு, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, பொதுநிர்வாக, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சு மற்றும் ஏனைய ஏற்புடைய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் அலுவலர்களுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்காக பொதுநிர்வாக, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmfmak1yi00fxqplpalcpcg9z
1 month 2 weeks ago
சீன விஞ்ஞானிகள் ஏற்படுத்தியுள்ள புதிய புரட்சி 'Bone-02' 15 Sep, 2025 | 03:17 PM உடைந்த எலும்புகளைச் சரிசெய்ய சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள புதிய 'எலும்புப் பிசின்' (bone glue), எலும்பியல் சிகிச்சையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 'போன்-02' (Bone-02) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருத்துவப் பசையானது, எலும்பு முறிவுகளை மூன்று நிமிடங்களுக்குள் சரிசெய்யும் ஆற்றல் கொண்டது. கிழக்கு சீனாவின் செஜியாங் மாகாணத்தில் உள்ள ஒரு ஆய்வுக் குழுவினர் இந்தப் பசையை உருவாக்கியுள்ளனர். இந்த ஆய்வுக் குழுவின் தலைவர் மற்றும் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான லின் சியான்ஃபெங், கடலுக்கு அடியில் உள்ள பாலத்தில் சிப்பிகள் எப்படி உறுதியாக ஒட்டிக்கொண்டிருக்கின்றன என்பதைக் கவனித்து இந்த பிசினை உருவாக்க உத்வேகம் பெற்றதாகக் கூறுகிறார். இரத்தம் நிறைந்த சூழலிலும், இந்த பிசின் இரண்டு முதல் மூன்று நிமிடங்களில் எலும்பை துல்லியமாக ஒட்டி உறுதிப்படுத்தும் தன்மை கொண்டது. இதன் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், எலும்பு குணமடைந்த பிறகு, இந்த பிசின் இயற்கையாகவே உடலால் உறிஞ்சப்பட்டுவிடும். இதனால், இரும்புத் தகடுகள் அல்லது தழும்புகளை அகற்றுவதற்காக இரண்டாவது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வழக்கமான அறுவை சிகிச்சை முறைகளுக்குப் பதிலாக, இந்த பிசினைப் பயன்படுத்தும்போது, எலும்பு முறிவுகளை மிகக் குறைந்த நேரத்தில் சரிசெய்ய முடியும். இதுவரையில் 150-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இது வெற்றிகரமாகச் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த பிசினால் ஒட்டப்பட்ட எலும்புகள் அதிகமான பிணைப்பு சக்தியைக் கொண்டிருப்பது ஆய்வக சோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது பாரம்பரிய உலோக உள்வைப்புகளுக்கு மாற்றாக இருக்கலாம் எனவும் இந்த பிசின் தொற்று மற்றும் ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய கண்டுபிடிப்பு, எலும்பியல் துறையில் ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/225149
1 month 2 weeks ago
லண்டனில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான பேரணி : இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை 15 Sep, 2025 | 02:02 PM இங்கிலாந்தில் வெளிநாட்டிலிருந்து குடியேறுபவர்களுக்கு எதிராக, தீவிர வலதுசாரி ஆர்வலர் டாமி ரொபின்சன் தலைமையில் லண்டனில் ஒரு பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பேரணியின் போது, போராட்டக்காரர்களுக்கும், பொலிசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 26 பொலிஸார் காயமடைந்தனர். போராட்டக்காரர்கள் அமைதியாகப் பேரணியை நடத்தாமல் வன்முறையில் ஈடுபட்டதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், போராட்டக்காரர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். "மக்களுக்கு அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை உள்ளது. ஆனால், இங்கிலாந்து சகிப்புத்தன்மை, பன்முகத்தன்மை மற்றும் மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு நாடு என்பதை மறந்துவிடக் கூடாது. நமது நாட்டின் கொடி நமது பன்முகத்தன்மையைக் குறிக்கிறது. அதை மதிக்காமல், இன ரீதியான மிரட்டலை நாங்கள் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டோம். ஏனையவர்களை அச்சுறுத்துவதன் மூலமாகவோ அல்லது பணியில் இருக்கும் அதிகாரிகளைத் தாக்குவதன் மூலமாகவோ அவர்கள் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது," என்று அவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் இடம்பெற்ற போராட்டத்தால் புலம்பெயர்ந்தோர் தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்து வருவதை எடுத்துக்காட்டுகிறது. https://www.virakesari.lk/article/225137
1 month 2 weeks ago
அவருடைய வீட்டில் வருடத்தில் 365. நாளும் மழை தான் வீட்டை பாலைவனத்தில் வேண்டினால் கூட. மழைக்கு குறை இருக்காது அங்கேயும். தினமும் பெய்யும் 🤣
1 month 2 weeks ago
அததெரண கருத்துப் படங்கள்.
1 month 2 weeks ago
”பருத்தித்துறை துறைமுகம் எமக்கு வேண்டாம்” யாழ்ப்பாணம், பருத்தித்துறை சுப்பர்மடம் மக்கள் சார்பில் மீனவர் சங்க பிரதிநிதிகள், பருத்தித்துறை நகர பிதா மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஆகியோரை நேரில் சந்தித்து பருத்தித்துறை துறைமுகம் அமையும் பட்சத்தில் ஏற்படும் பிரச்சினைகளை எடுத்துக் கூறி மகஜர்களையும் கையளித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் பருத்தித்துறை – சுப்பர்மடம் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் நேற்று யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் ஊடக சந்திப்பு ஒன்றையும் நடத்தியிருந்தனர். இதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில், பருத்தித்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்வதால் எமது கிராமமே அழிவடைந்து போகும் அபாயம் உள்ளது. துறைமுகம் அமைக்கப்படும் போது அதற்கு மேற்கு பக்கமாக ஏற்படும் கடலரிப்பிற்கு முகம்கொடுத்து அழிவை சந்திக்கும் முதல் கிராமமாக எமது சுப்பர்மடம் மீனவ கிராமமே காணப்படுகிறது. 1000 கோடி ரூபா செலவில் இந்திய அரசாங்கம் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவதற்காக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். 2018 ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய முற்பட்ட போது எமது சங்கம் உள்ளிட்ட பல சமூக மட்ட அமைப்புக்களின் குறிப்பாக பருத்தித்துறை துறைமுக சூழலில் காணப்படும் பிரபல பாடசாலைகளின் எதிர்ப்புக் காரணமாக கைவிடப்பட்டது. மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டத்தை தாம் ஒருபோதும் நடைமுறப்படுத்த மாட்டோம் என ஆசிய அபிவிருத்தி வங்கி சார்பில் கலந்துரையாடிய அதிகாரிகள் உறுதிபடத் தெரிவித்திருந்தனர். அவ்வாறு மக்கள், சமூக மட்ட அமைப்புகள், பாடசாலை சமூகம் என்பவற்றின் எதிர்ப்பினால் கைவிடப்பட்ட துறைமுக திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த இந்திய அரசு முயல்கிறது. அருகில் உள்ள மீனவ கிராமங்கள் மற்றும் சமூகமட்ட அமைப்புகளுடன் கலந்துரையாடவில்லை, எமக்கு எவருக்குமே அறிவிக்காது தன்னிச்சையாக கூட்டம் கூடி முடிவுகளை எடுத்துவிட்டு அபிவிருத்திக்காக கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்செயற்பாடு எமக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த நடவடிக்கையை நாம் எதிர்க்கிறோம் என்றனர் https://www.samakalam.com/பருத்தித்துறை-துறைமுகம/
1 month 2 weeks ago
உலக வங்கியின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல் adminSeptember 16, 2025 உலக வங்கி குழுமத்தின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் ஜோஹன்னஸ் ஸட் உள்ளிட்ட உலக வங்கியின் பிரதிநிதிளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கை சென்றுள்ள உலக வங்கியின் குழு நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இலங்கையின் தற்போதைய பொருளாதாரத் திட்டங்களுக்கு பாராட்டு தெரிவித்த உலக வங்கி பிரதிநிதிகள், பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பரிந்துரைத்துள்ளனர். டிஜிட்டல் மயமாக்கல், சுற்றுலா, விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பு, வடக்கு மற்றும் கிழக்கின் வளர்ச்சி உள்ளிட்ட குறுகிய காலத்தில் பயனடையக்கூடிய பகுதிகளை அடையாளம் கண்டு ஊக்குவிப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதுடன் அரசாங்கத்தால் உலக வங்கிக்கு சமர்ப்பிக்கப்பட்ட திட்டத்திற்கான உதவியை இலங்கை அரசாங்கம் அங்கீகரித்துள்ளமையும் தெரியவந்துள்ளது. நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்குத் தேவையான சட்ட கட்டமைப்பைத் தயாரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் அதற்கான அரசாங்கத்தின் கொள்கைத் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இலங்கையின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தவும் பொருளாதார வளர்ச்சியை அடையவும் அரசாங்கம் பாடுபடுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சர்வதேச அளவில் ஊழல் நிறைந்த நாடாக முத்திரை குத்தப்பட்ட இலங்கை, தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் வெளிப்படையான திட்டத்தின் காரணமாக படிப்படியாக பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் நிலையானதாக மாறி வருவதாக கூறியுள்ளார். https://globaltamilnews.net/2025/220402/
1 month 2 weeks ago
சங்கரித்த கூட்டணியும் சூத்து மாத்தின தமிழரசும் உருப்படாது கொல் எனும் சொல் ..
1 month 2 weeks ago
கடந்த சில நாட்களாக ரஸ்யா நேட்டோ நாடுகளைச் சோதிப்பதற்காகச் சீண்டிப் பார்த்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் 19 ட்ரோன்களை போலந்து மேல் ஏவியிருந்தது. முதலில் ரஸ்யா இதனை மறுத்து பின்னர் தவறுதலாக ஏவப்பட்டதாகத் தெரிவித்தது. இரண்டு நாட்களின் பின்னர் ரூமேனியா மீது ஏவியுள்ளது. ட்ரோன்களைத் தவறுதாலாக ஏவ முடியாது, அதுவும் இத்தனை ட்ரோன்கள். ரஸ்யாவின் இன்றைய பொருளாதாரம் போரை நிறுத்த அனுமதிக்காது. போரை விரிவு படுத்துவதே தற்போது ரஸ்யாவுக்கான முதன்மையான தெரிவு.
1 month 2 weeks ago
1 month 2 weeks ago
நிஜமான சோலார் அடுப்பு ........! 👍
Checked
Sun, 11/02/2025 - 23:39
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed