1 month 3 weeks ago
கச்சத்தீவு: இந்திரா காந்தி தாரை வார்த்த போது கருணாநிதி என்ன செய்தார்? இன்று வரை பிரச்னை ஏன்? இராமநாதபுரம் அரசருக்கு சொந்தமாக இருந்த கச்சத்தீவை 1974 ஆம் ஆண்டு இலங்கைக்கு இந்தியா ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக் கொடுத்தது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் வருவதை அடுத்து இத்தீவு பற்றிய உரிமை தமிழக அரசியலில் முக்கிய அங்கம் வகிக்கிறது. கச்சத்தீவை மீட்டு இந்தியாவின் பகுதியாக உரிமை நிலைநாட்டிட ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தியாவுடன் இணைக்க வழியுறுத்தி பல்வேறு கட்சித் தலைவர்கள் அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். இந்திய அரசு உச்சநீதி மனறத்தில் கச்சத் தீவை இலங்கை அரசுக்கு தாரை வார்த்து தரவில்லை என உறுதிமொழி வழங்கியுள்ளது.[1] தற்போதைய முதல்வர் செ. செயலலிதா அவர்கள் கச்சத்தீவை இலங்கைக்கு "தாரைவார்த்தது" சட்டப்படி தவறு என்று உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தார். அதனை ஏற்றுக்கொண்ட அறமன்றம் இந்திய ஒன்றிய அரசிற்கு தாக்கீது அனுப்பியது. தற்போது திமுக தலைவர் கருணாநிதி டெசோ அமைப்பின் தீர்மானப்படி கச்சத்தீவை இந்தியா இலங்கை ஒப்பந்தத்தின் படி விட்டுக் கொடுத்ததை ரத்து செய்து இந்தியா திரும்ப்ப் பெறவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதனை ஏற்றுக் கொண்ட அறமன்றம் மத்திய, மாநில அரசு, மற்றும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.[2] இதனையடுத்து முதல்வர் செல்வி செயலலிதா அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கருணாநிதியை கடுமையாக சாடியுள்ளார். அதில் "தனது ஆட்சிக் காலத்தில் தடுத்து நிறுத்தாமல் இருந்துவிட்டு தற்போது தனக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கும் நேரத்தில் அரசியல் ஆதாயத்திற்காக வழக்கு தொடுத்துள்ளார்" என்று குற்றம் சாட்டியுள்ளார்.[3] சட்டமன்றத்தில் தீர்மானம் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் கச்சத்தீவு தொடர்பான வழக்கில் தமிழ்நாடு வருவாய்த்துறையையும் சேர்க்கவேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் சூன் 13, 2011 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.[4] தன் மீது விமர்சனக்கணைகளை வீசத்தான் இந்த தீர்மானம் என்று கருணாநிதி அறிக்கை வெளியிட்டார்.[5] மேற்கண்ட தீர்மானத்தில் பேசிய எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்து "வழக்கிற்கு பயந்தே கச்சத்தீவை தாரை வார்த்தார் கருணாநிதி" என்று சட்டமன்றத்தில் பேசினார்.[6] இன்னொரு தீர்மானம், தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் செயலலிதாவால் மே 3, 2013 அன்று கச்சத்தீவை மீட்க இந்திய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி கொண்டுவரப்பட்டது.[7] அத்தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா, முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி மீது சரமாரியாக குற்றம் சாட்டினார்.
1 month 3 weeks ago
வணக்கம், உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
1 month 3 weeks ago
Published By: Vishnu 05 Sep, 2025 | 07:25 PM செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளின் போது வியாழக்கிழமை (4) குவியலாக எட்டு மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் போது, வெள்ளிக்கிழமை அவற்றுள் ஒரு மனித என்பு கூட்டு தொகுதி கால்கள் மடிக்கப்பட்டு இருந்த (சப்பாணி) நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 227 இலக்கமிடப்பட்டிருந்த என்பு கூட்டு தொகுதியே இருந்த நிலையில் காணப்படுகிறது. செம்மணியில் இதுவரையில், கட்டம் கட்டமாக 43 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றுள் 235 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/224332
1 month 3 weeks ago
Published By: Vishnu 05 Sep, 2025 | 07:25 PM செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளின் போது வியாழக்கிழமை (4) குவியலாக எட்டு மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் போது, வெள்ளிக்கிழமை அவற்றுள் ஒரு மனித என்பு கூட்டு தொகுதி கால்கள் மடிக்கப்பட்டு இருந்த (சப்பாணி) நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 227 இலக்கமிடப்பட்டிருந்த என்பு கூட்டு தொகுதியே இருந்த நிலையில் காணப்படுகிறது. செம்மணியில் இதுவரையில், கட்டம் கட்டமாக 43 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றுள் 235 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/224332
1 month 3 weeks ago
05 Sep, 2025 | 05:27 PM மன்னார் தீவு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்கள் தொடர்பாக குறித்த பகுதி மக்களுடன் கலந்துரையாட எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (5) காலை மன்னாரிற்கு வருகை தந்தனர். மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் சௌத்பார் பகுதியில் 2 காற்றாலை கோபுரங்களும்,தாழ்வு பாட்டில் 2 காற்றாலை கோபுரங்களும், தோட்டவெளியில் 2 காற்றாலை கோபுரங்களும் அமைக்கப்படவுள்ளது. குறித்த 5 காற்றாலை கோபுரங்களும் 20 மெகா வாட் கொண்டதாக அமைக்கப்படவுள்ளது.மேலும் ஓலைத்தொடுவாய் பகுதியில் 06 காற்றாலை மின் கோபுரங்களும்,பேசாலை மேற்கில் 2 காற்றாலை மின் கோபுரங்களும் அமைக்கப்படவுள்ளது.குறித்த 8 காற்றாலை மின் கோபுரங்களும் 50 மெகா வாட் கொண்டதாக அமைக்க படவுள்ளது. இந்த நிலையில் குறித்த 5 கிராமங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பது குறித்து கிராம மக்களின் கருத்துக்களை கேட்டறிய எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தலைமையிலான குழுவினர் மன்னாரிற்கு விஜயம் செய்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் முதலாவது கலந்துரையாடல் மன்னார் சாந்திபுரம் ,சௌத்பார் கிராமங்களை உள்ளடக்கி சாந்திபுரம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது அமைச்சருடன் அதிகாரிகள் வருகை தந்தனர். மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், து.ரவிகரன்,ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டதோடு, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்,உதவி அரசாங்க அதிபர் எம்.பிரதீப்,மன்னார் நகர பிரதேச செயலாளர் கா.காந்தீபன்,மன்னார் நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன்,அழைக்கப்பட்ட திணைக்கள பிரதி நிதிகள்,கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர். இதன்போது அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் மக்களுடன் கலந்துரையாடிய போதும் மக்கள் தமது கிராமங்களுக்குள் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்கள் தேவை இல்லை எனவும் குறித்த காற்றாலை மின் கோபுரங்களை அமைக்க தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிவித்தனர். மேலும் மன்னார் தீவில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 30 காற்றாலை மின் கோபுரங்களால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும்,மீனவர்கள் தொழிலை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர். மேலும் தமது கிராம மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமாக இருந்தால் காற்றாலை கோபுரங்களை மன்னார் தீவில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்ததோடு,எமது பகுதிக்குள் காற்றாலை அமைக்க ஒரு போதும் அனுமதி வழங்க மாட்டோம் என தெரிவித்தனர். எனினும் அமைச்சர் தலைமையிலான குழுவினர் மக்களுடன் கலந்துரையாடி தமக்கு சாதகமான பதிலை எதிர்பார்க்க முயற்சி செய்த போதும் கலந்து கொண்ட அனைத்து மக்களும் தமது பகுதிக்குள் காற்றாலை வேண்டாம். அமைக்க அனுமதி வழங்க மாட்டோம் என ஒருமித்து தெரிவித்தனர். இந்த நிலையில் அமைச்சர் தலைமையிலான குழுவினர் அங்கிருந்து வெளியேறினர்.குறித்த கலந்துரையாடல் குறித்து ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கருத்து கேட்ட போதும் எவ்வித பதிலும் வழங்காது அங்கிருந்து வெளியேறினர். https://www.virakesari.lk/article/224316
1 month 3 weeks ago
நன்றி 🙏 முயற்சிக்கிறேன்
1 month 3 weeks ago
செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு Published By: Vishnu 05 Sep, 2025 | 07:08 PM செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் வெள்ளிக்கிழமை (5) மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 235 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - செம்மணி - அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 44வது நாளாக இன்று யாழ்ப்பாண மாவட்ட மேலதிக நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224331
1 month 3 weeks ago
வணக்கம் வாருங்கள்
1 month 3 weeks ago
மன்னாரில் சிவப்பு நிற தலைப்பட்டியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் - நாளுக்கு நாள் வலுவடையும் காற்றாலைக்கு எதிரான போராட்டம் 05 Sep, 2025 | 05:29 PM மன்னார் தீவில் காற்றாலை அமைக்கப்படவுள்ள பகுதிகளை சேர்ந்த மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட எரிசக்தி அமைச்சர் தலைமையிலான குழு மன்னார் மாவட்டத்திற்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (05) வருகை தந்துள்ள நிலையில் மன்னார் மாவட்ட மக்கள் 35 ஆவது நாளாகவும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய தினம் மன்னார் பிரதான சுற்று வட்ட பகுதியில் ஒன்று திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள் காற்றாலை, கணிய மணல் போன்ற அழிவு திட்டங்கள் மன்னார் மாவட்டத்தில் இனியும் வேண்டாம் என்று ஒருமித்த குரலுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய தினம் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் மன்னார் யோசேவாஸ் கிராமத்தை சேர்ந்த மக்களும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர் . போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் சிவப்பு நிற தலைப்பட்டிகளை அணிந்து, பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் மக்களின் விருப்பத்திற்கு மாறாக திணிக்கப்படும் குறித்த செயல் திட்டங்களுக்கு எதிராக தமது அதிருப்தியை வெளிப்படுத்தி யிருந்தனர். அதே நேரம் இன்றைய தினம் மன்னார் மாவட்ட மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக வவுனியா வேப்பங்குளம் கிராம மக்களும் அவர்களுடன் வெப்பங்குளம் பங்குதந்தை, அருட்சகோதிரிகள் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224317
1 month 3 weeks ago
எல்ல - வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானம்.! Published By: Digital Desk 1 05 Sep, 2025 | 04:52 PM எல்ல - வெல்லவாய பகுதியில் நேற்று வியாழக்கிழமை (04) இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/224311
1 month 3 weeks ago
சந்நிதியான் ஆலயத்திற்கு அண்மையில் உள்ள மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு நிலையத்தில் பகல் கொள்ளை! 05 Sep, 2025 | 05:32 PM தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் வருடாந்த மகோற்சவப் பெருவிழா இடம்பெற்று வருவதோடு இன்று மாலை சப்பறத் திருவிழாவும், நாளை காலை தேர்த்திருவிழாவும், நாளை மறுதினம் காலை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும் நிலையில் தொண்டமனாறு தண்ணீர் தாங்கி அருகே உள்ள மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு நிலையத்தில் தலைக்கவசம் (ஹெல்மெட்) ஒன்றை பாதுகாப்பதற்கு 50 ரூபாய் அறவிடப்படுவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர். கட்டணம் அதிகம் தொடர்பில் பொதுமக்கள் மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு நிலைய ஊழியரிடம் வினவிய போது அவர் வல்வெட்டித்துறை நகரசபையினர் தான் 50 ரூபாய் அறவிட சொன்னதாக குறிப்பிட்டு பொதுமக்களிடம் முரண்பட்டிருந்தார். இது தொடர்பில் வல்வெட்டித்துறை நகரசபை உப தவிசாளரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர் குறித்த பாதுகாப்பு நிலையம் தொடர்பில் ஏற்கனவே ஐந்தாறு முறைப்பாடுகள் கிடைத்து தங்களது வருமான வரி உத்தியோகத்தர் தலையிட்டு ரிக்கெட்டுக்களை பறிமுதல் செய்து எச்சரித்ததாகவும் குறிப்பிட்டார். வாகனப் பாதுகாப்பு நிலையத்துக்கு நகரசபை சார்பில் ஒரு மோட்டார் சைக்கிளுக்கு 40 ரூபாயும், ஒரு ஹெல்மெட்டுக்கு 20 ரூபாய் அறவிடுமாறு உத்தரவிட்டதாகவும் குறிப்பிட்டார். இப்போது கிடைத்துள்ள முறைப்பாடு தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்ட அவர் குறிக்கப்பட்ட தொகையை தாண்டி பொதுமக்களிடம் கட்டணங்கள் அறவிட்டால் ஆலயத்தின் முன்னுள்ள வல்வெட்டித்துறை நகரசபையின் உற்சவகால பணிமனையில் முறையிடுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், இவ்வாறு மோசடி இடம்பெற்றது குறித்து கேள்வி கேட்ட ஊடகவியலாளரை குறித்த பாதுகாப்பு நிலைத்தில் கடமையில் இருந்தவர் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224315
1 month 3 weeks ago
நுகர்வோர் விவகார அதிகாரசபையால், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை முன்னெடுத்த சோதனைகள் ஊடாக நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மூலம் 211 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட மொத்த சோதனைகளின் எண்ணிக்கை 14,682 ஆகும். அதன்படி, அரிசி சந்தைகளில் 2,800 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், அவற்றில் அதிக விலைக்கு அரிசி விற்பனை தொடர்பான 915 சோதனைகளும் அடங்கும். இந்த அரிசி சோதனைகள் தொடர்பாக நீதிமன்றங்களால் 95 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிக விலைக்கு அரிசி விற்பது நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் ஒரு கடுமையான குற்றமாவதுடன், குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சம் 100,000 ரூபாய் முதல் 500,000 ரூபாய் வரை அபராதம் அல்லது ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச அபராதம் 500,000 ரூபாய் ஆவதுடன், நீதிமன்றங்களால் 5 மில்லியன் ரூபாய் வரை அபராதம் விதிக்க அதிகாரம் உள்ளது. அரிசி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினர்களும் சட்டத்திற்கு இணங்கி வர்த்தமானி விலைகளைப் பராமரிக்க பொறுப்புடன் செயல்படுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை கோரியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmf69bfd6008qo29nwtlioy5c
1 month 3 weeks ago
மாதுளைச் சாற்றுக்குப் பின் வயாகரா சாப்பிட்டவர் பட்ட பாடு: மருந்துகள் மீது உணவு ஏற்படுத்தும் விளைவுகள் பட மூலாதாரம், Serenity Strull/ BBC கட்டுரை தகவல் சோபியா குவாக்லியா 5 செப்டெம்பர் 2025, 04:03 GMT மருந்துகளின் செயல் முறையில் நாம் சாப்பிடும் உணவு சில நேரங்களில் தலையிடலாம். இதுகுறித்து விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விளைவை நேர்மறையாக பயன்படுத்தி மருந்துகளின் செயல்பாட்டை மேம்படுத்தும் இந்த ஆய்வுகள் நடக்கின்றன. ஐந்து மணி நேரமாக நீடித்த ஆணுறுப்பு விரைப்புத் தன்மை, அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் பிரச்னையாக இருந்திருக்கும். அவரை சோதித்த மருத்துவர்கள் முதலில் குழப்பமடைந்தனர். தமிழ்நாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு வந்த 46 வயது ஆண் ஒருவருக்கு ஏற்பட்ட பிரச்னை மருத்துவ பணியாளர்களை திகைக்க வைத்தது. அவர் தனது மனைவியுடன் உடலுறவு கொள்ளும் முன், விரைப்பு தன்மையை அதிகரிக்க (erectile dysfunction) பொதுவாக வயாகரா என்று அழைக்கப்படும் சில்டெனஃபில் என்ற மருந்தை பரிந்துரைக்கப்பட்ட அளவுக்குள் உட்கொண்டார். விசாரணையில், அந்த நபர் முன்னதாக அதிகளவு மாதுளை பழச்சாறு குடித்திருந்தது தெரியவந்தது. மருத்துவர்கள் எதிர்விளைவை தடுக்கும் ஊசியை கொடுத்து, இனி மாதுளை ஜூஸை தவிர்க்குமாறு அறிவுறுத்தினர். அந்த நபர் குடித்த மாதுளை பழச்சாறு, வயாகரா மாத்திரையின் செயல்பாட்டை அதிகரித்து விட்டதாக மருத்துவர்கள் முடிவுக்கு வந்தனர். உணவு - மருந்து இடையிலான தொடர்புகள் இந்தச் சம்பவம், நாம் சாப்பிடும் உணவுகள் எதிர்பாராத முறையில் மருந்துகளுடன் வினைபுரியக் கூடும் என்பதற்கான ஒர் எடுத்துக்காட்டு. உணவு மருந்துகளுடன் சேர்ந்து ஏற்படுத்திய பல விசித்திரமான, சில நேரங்களில் கவலைக்கிடமான பக்கவிளைவுகளை மருத்துவ இதழ்கள் பதிவு செய்துள்ளன. இப்போது உணவு, பானங்கள், மூலிகைகள் மனித உடலின் உள்ளே செலுத்தப்படும் மருந்துகளுடன் எவ்வாறு வினைபுரிகின்றன என்பதைக் அறியும் ஆராய்ச்சிகள் அதிகரித்து வருகின்றன. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மருந்துடன் பம்பளிமாஸ் பழம் அல்லது பழச்சாறை எடுத்துக்கொள்ளும் போது, மருந்தின் செயல்திறன் பல நேரங்களில் அதிகரித்த சம்பவங்கள் நடந்துள்ளன. உதாரணமாக, சாத்துக்குடி பழத்தை ஒத்திருக்கும் பம்பளிமாஸ்(Grapefruit) என்று அழைக்கப்படும் பழம் இது போன்ற விளைவுகளை பல தருணங்களில் ஏற்படுத்தி இருக்கிறது. மருந்துடன் இந்த பழம் அல்லது பழச்சாறை எடுத்துக்கொள்ளும் போது, மருந்தின் செயல்திறன் பல நேரங்களில் அதிகரித்த சம்பவங்கள் நடந்துள்ளன. ஒரு சில நபர்களுக்கு எதிர்மறை பக்கவிளைவுகளை ஏற்படுத்தி, நஞ்சாகவும் இது மாறியிருக்கிறது. மறுபுறம் நார்ச்சத்து மிகுந்த உணவுகள், மருந்தின் செயல்பாட்டையும் குறைத்துள்ளன. மருந்துகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அவை பல தசாப்தங்களுக்கு மேல் ஆராய்ச்சி மற்றும் சோதனைகளை கடந்து வருகின்றன. ஆயினும் சந்தையில் ஆயிரக்கணக்கான மருந்துகளும், அவற்றுடன் சேர்ந்து சேர்ந்து எதிர்வினையை ஏற்படுத்த வாய்ப்புள்ள கோடிக்கணக்கான உணவு கலவைகளும் உள்ளன. பாதுகாப்பான மற்றும் பயனுள்ள சிகிச்சைக்கு பெரிய அச்சுறுத்தலாக இத்தகைய மருந்து - உணவு கலவைகள் இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. பரிசோதனைகள் மற்றும் வரம்புகள் நிபுணர்கள் இப்போது இந்த தொடர்புகளை முறையாக கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர். மேலும் சிலர் இந்த வினையினால் மருந்துகள் தனித்து செயல்படுவதை விடச் சிறப்பாக செயல்படுவதாக நம்பிக்கை வைத்துள்ளனர். "பெரும்பாலான மருந்துகள் உணவால் பாதிக்கப்படுவதில்லை," என்கிறார் கலிபோர்னியாவைச் சேர்ந்த மருந்தியல் பேராசிரியர் பேட்ரிக் சான். "சில குறிப்பிட்ட மருந்துகள் மட்டுமே உணவால் பாதிக்கப்படுகின்றன, அவற்றை நாம் கவனிக்க வேண்டும்." அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) மற்றும் ஐரோப்பிய மருந்து நிறுவனம் (EMA) ஆகிய இரண்டும் மருந்துகளில் உணவினால் ஏற்படும் தாக்கத்தை சோதிக்கின்றன. அதிக கொழுப்பு மற்றும் கலோரி கொண்ட உணவை எடுத்துக் கொண்ட நபர்களிடமும், எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றுடன் இருக்கும் நபர்களிடமும் இந்த சோதனைகள் எடுக்கப்பட்டுகின்றன. அதில் வெற்றியடையும் மருந்துகளை மட்டுமே இவை பரிந்துரைக்கின்றன. ஆனால் அனைத்து விதமான உணவு கலவைகளுடன் மருந்துகளை சோதிப்பது சாத்தியமற்றது. மனித உடலின் வளர்சிதை மாற்ற செயல்முறை (மெட்டபாலிஸம்) சிக்கலானது எனக் கூறும் செர்பியாவின் நியூட்ரிஷன் மற்றும் மெட்டபாலிசம் ஆராய்ச்சி மையத்தில் (Nutrition and Metabolism Center of Research Excellence) பணிபுரியும் ஆராய்ச்சியாளர் ஜெலேனா மிலேஷெவிச், "இது ஒரு சிறிய தொழிற்சாலை மாதிரி. அதற்கு பல உள்ளீடுகளும், பல வெளியீடுகளும் உண்டு," என்று விவரிக்கிறார். உடலின் நடக்கும் வேதியியல் வினைகளின் பலனாக உணவும், மருந்தும் ஒன்றாக கலந்துவிட்டால், "அதனை பிரித்து காட்டுவது மிகவும் கடினம்," என்று கூறுகிறார் மிலேஷெவிச். வைட்டமின் டி மருந்துகளின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்து வருகிறார். உணவு நாம் எடுக்கும் மருந்துகளை இரண்டு விதமாக பாதிக்க முடியும்: அது மருந்தின் மூலப்பொருட்களுடன் தொடர்பு கொள்ளலாம் அல்லது நமது உடல் மருந்துக்கு எப்படி எதிர்வினையாற்றும் என்பதை மாற்றக்கூடும். பிரபலமான உதாரணங்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, வயகரா மாத்திரை எடுத்த பிறகு மாதுளை ஜூஸை தவிர்ப்பது நல்லது. 1980களிலிருந்தே சில உணவு–மருந்து கலவைகள் குறித்து தெரியவந்துள்ளது. அதில் மிகவும் அறியப்பட்ட எடுத்துக்காட்டு பம்பளிமாஸ் மற்றும் அதன் பழச்சாறு. இது கொழுப்பை குறைக்க பயன்படும் statin மருந்து, உயர் ரத்த அழுத்த மருந்தான nifedipine, felodipine ஆகியவற்றுடன் அதிகளவில் வினைபுரிகின்றன.. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு உடலில் பொருத்தப்பட்ட புதிய உறுப்புகளை நோய் எதிர்ப்பு அமைப்பு ஏற்க மறுக்கும் போது வழங்கப்படும் cyclosporine போன்ற மருந்தும் பம்பளிமாஸ் உடன் வினையாற்றுகிறது. சில மலேரியா எதிர்ப்பு மருந்துகள் (artemether, praziquantel) மற்றும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை (saquinavir) உட்கொள்ளும் போதும் இந்த பழத்தினால் ரத்த ஓட்டத்தில் தாக்கம் ஏற்படுகிறது. வயாகரா என்று பரவலாக அழைக்கப்படும் சில்டெனஃபில் மருந்துடன் சேரும் போது இந்த பழச்சாறு உடலில் நச்சுத்தன்மையை உருவாக்கிறது. குருதிநெல்லி பழத்தினால் ஏற்படும் விளைவுகள் அதேபோல் கிரான்பெரி என்று அழைக்கப்படும் குருதிநெல்லி பழச்சாறு, ரத்த உறைதலை சீராக்கும் warfarin உடன் சேரும் போது உடலில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. தினமும் கிரான்பெரி ஜூஸ் குடித்தவர்கள் அல்லது கிரான்பெரி சாஸ் உடன் உணவை எடுத்துக் கொண்ட நபருக்கு warfarin மருந்து எடுத்துக் கொண்ட பிறகு ரத்த உறைதலைத் தடுக்கும் அதன் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் மருத்துவ சோதனைகள், மதிப்பீடுகள் இந்த ஜூஸை எவ்வளவு குடித்தால் இத்தகை நேர்மறை விளைவுகள் உடலில் ஏற்படும் என்பதை விளக்கும் வகையில் முழுமையாக ஆய்வு ஏதுமில்லை. இதுகுறித்து அதிகமாக பகிரப்படும் ஓர் ஆய்வறிக்கையும், கிரான்பெரி ஜூஸ் தயாரிப்பாளரால் நிதியளிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. warfarin மருந்து உட்கொள்ளும் நூற்றுக்கணக்கானவர்களை வைத்து கிரான்பெரி ஜூஸ் தொடர்பான இத்தகைய ஆய்வுகள் முறையாக செய்யப்பட வேண்டும், என்கிறார் மெக்மாஸ்டர் பல்கலைக்கழக மருந்தியல் துறை இயக்குநரான ஆன்னே ஹால்ப்ரூக். 2011-இல், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், warfarin மருந்து வழிகாட்டுதல்களில் இருந்து கிரான்பெரி எச்சரிக்கையை நீக்கியது. ஆனால் இங்கிலாந்தின் NHS, நோயாளிகள் warfarin எடுத்துக்கொள்ளும் போது கிரான்பெரி ஜூஸ் குடிக்க வேண்டாம் என்று இன்றும் எச்சரிக்கிறது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நாம் சாப்பிடும் உணவுகள் எதிர்பாராத முறையில் மருந்துகளுடன் வினைபுரியக் கூடும். மூலிகை மருந்துகள் 2017-இல், டா கிராசா காம்போஸ் இன்னொரு விசித்திரமான சம்பவத்தை கண்டறிந்தார். மூட்டு வாதநோய்க்காக மருந்து எடுத்திருந்த நோயாளி, கைகளில் வலி மற்றும் ரத்த சோகை பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் ஆர்டிச்சோக் எனப்படும் மூலிகை செடியில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட திரவத்தை குடித்திருந்தார். அது மூட்டுவாத நோய்க்காக பயன்படும் colchicine என்ற மருந்துடன் வினையாற்றி அவரது கல்லீரிலில் நச்சுச் தன்மையை சேர்த்தது. அவரது ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கான மருந்துடனும் அந்த உணவு வினையாற்றியது. "இது மிகவும் மோசமாக இருந்தது. ஆரம்பத்தில் அவருக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை தேவைப்படும் என்று நினைத்தோம். ஆனால் அவர் தானாகவே முழுமையாக குணமடைந்தார்," என்கிறார் காம்போஸ். ஆர்டிச்சோக் போன்ற மூலிகை பானங்கள் பாரம்பரிய மருத்துவங்களில் பயன்படுத்தப்படுகின்றன என்கிறார் காம்போஸ். அதேபோல், மஞ்சள் மற்றும் chlorella algae மூலம் தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்து பானங்கள், புற்றுநோய் மருந்துகளுடன் தொடர்பு கொண்டு, கல்லீரலில் கடுமையான நச்சுத்தன்மையை ஏற்படுத்தியதாகக் காம்போஸ் ஆய்வு செய்துள்ளார். ரத்த உறைதலை தடுக்கும் மருந்து மற்றும் நீரிழிவு மருந்துகளின் விளைவுகளை அதிகரிக்க மஞ்சள் பரவலாக பயன்படுகிறது. St John's Wort என்ற மலர் சாறு, மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வு மருந்துகள் சில புற்றுநோய் மருந்துகளுடன் தொடர்பு கொள்கிறது. பால், தயிரால் என்ன பாதிப்பு? பட மூலாதாரம், Getty Images பால், தயிர், சீஸ் போன்றவை, சில ஆன்டிபயாட்டிக் மருந்துகள் (ciprofloxacin, norfloxacin) குடலால் உறிஞ்சப்படுவதை மாற்றுகின்றன, இதை ஆராய்ச்சியாளர்கள் 'cheese effect' என்று அழைக்கிறார்கள். நார்ச்சத்து அதிகம் உள்ள முழு தானிய உணவுகளும் இதேபோல் செயல்படுகின்றன. பால் பொருட்களின் மூலக்கூறுகள், மருந்து மூலக்கூறுகளை குடலில் "அணைத்துக் கொள்வதால்" அவை ரத்தத்தில் நுழையாமல் தடுக்கின்றன என்று பேட்ரிக் சான் கூறுகிறார். "மருந்து உங்கள் ரத்தத்தில் கூட சேராது, ஏனெனில் குடலில் பால் பொருட்கள் மருந்துகளுடன் இணைவதால், அவை குடலில் சிக்கிக் கொள்கின்றன," என்கிறார் சான். இதற்கான தீர்வு எளிது எனக்கூறும் பேட்ரிக் சான், நோயாளிகள் மருந்து எடுத்துக்கொள்வதற்கு முன் அல்லது பின் இரண்டு முதல் நான்கு மணி நேரத்திற்குள் பால் சார்ந்த பொருட்களை தவிர்க்க வேண்டும். "பால், சீஸ் என அனைத்தையும் சாப்பிடலாம். ஆனால் மருந்துடன் ஒரே நேரத்தில் எடுக்க வேண்டாம்," என்று அவர் கூறுகிறார். சிகிச்சைக்கு எப்படி உதவுகின்றன? இந்த தொடர்புகள் சற்று பயமுறுத்துவதாகத் தோன்றினாலும், எல்லாமே எதிர்மறையாக இல்லை. சில ஆராய்ச்சியாளர்கள், உணவு–மருந்து தொடர்புகளை பயன்படுத்தி சிகிச்சையின் விளைவுகளை மேம்படுத்த முடியும் என்று நம்புகிறார்கள். உதாரணமாக, சில புற்றுநோய் மருத்துவர்கள், உணவு குறிப்பிட்ட மருந்துகளுடன் தொடர்பு கொண்டு சிகிச்சையை வலுப்படுத்துகின்றனவா என்று ஆராய்கிறார்கள். "மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இறைச்சி மற்றும் சமைக்காத காய்கறிகளை சாப்பிட்டு வந்தனர். அது உணவுக்குப் பின் குளுக்கோஸ் விரைவாக அதிகரிக்க வைக்காது," என்கிறார் ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூல் உயிரியல் விஞ்ஞானி லூயிஸ் கான்ட்லி. "அப்போது மரணத்திற்கு காரணமாக புற்றுநோய் அரிதான ஒன்றாகவே இருந்திருக்கும். கடந்த ஐம்பது ஆண்டுகளில் புற்றுநோய் அதிகரித்திருப்பது, விரைவாகக் கரையக்கூடிய கார்போஹைட்ரேட் உணவின் அதிகரிப்புடன் தொடர்புடையது," என அவர் கூறுகிறார். 2018-இல் எலிகளுக்கு கீட்டோஜெனிக் டயட் (குறைந்த கார்போ, அதிக இறைச்சி மற்றும் காய்கறி) கொடுத்து நடத்திய கான்ட்லியின் பரிசோதனைகள், புற்றுநோய் மருந்துகள் டயட் எடுத்த எலிகளில் அதிக விளைவுடன் செயல்பட்டதை காட்டின. இதன் அடிப்படையில், அவர் தொடங்கிய Faeth Therapeutics நிறுவனம், மனிதர்களிடையே சோதனை செய்கிறது. இதனை அவர் "மரபணுவை அடிப்படையாகக் கொண்ட புற்றுநோய் அறிவியலை மறுபரிசீலனை செய்வது" என்று அழைக்கிறார். நியூயார்க் மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் புற்றுநோய் மையமும், கருப்பை புற்றுநோய் கொண்ட பெண்களிடம் இதேபோல் சோதனைகள் நடத்துகிறது. ஆனால் உணவு–மருந்து இடையேயான தொடர்புகளின் எண்ணிக்கை மில்லியன்கணக்கில் உள்ள நிலையில் இதை ஆய்வு செய்வது சவாலானது. அதனால், மிலேஷெவிச் கணினி உயிரியலாளர்களுடன் சேர்ந்து, அறிவியல் இதழ்களில் கிடைக்கும் உணவு–மருந்து தொடர்பான தரவுகளை ஒருங்கிணைத்து, ஒரு புதிய தரவுத்தளத்தை உருவாக்க முயற்சி செய்கிறார். "இது எளிதாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் அது அப்படியில்லை," என்கிறார் ஸ்பெயின் IMDEA Food Institute-இன் கணினி உயிரியலாளர் என்ரிக் காரிலோ டி சான்டா. சில தரவுத்தளங்கள் மட்டுமே கிடைத்தன, ஆனால் அவை ஒத்துப்போகவில்லை. இறுதியில், கோடிக்கணக்கான உணவு–மருந்து தொடர்புகளை ஒருங்கிணைத்து, மருத்துவர்கள் பயன்படுத்தக்கூடிய புதிய தளத்தை உருவாக்கினர். இது இன்னும் சிக்கலானது, முழுமையாகத் தீர்க்கப்படவில்லை. ஆனால் எதிர்காலத்தில், மருத்துவர்கள் மருந்து சிகிச்சையுடன் பொருந்தும் உணவு திட்டத்தை பரிந்துரைக்கக்கூடும். அதுவரை, வயாகரா மாத்திரை எடுத்த பிறகு மாதுளை ஜூஸை தவிர்ப்பது நல்லது. எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுத் தகவல்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. உங்கள் தனிப்பட்ட மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் மருத்துவ ஆலோசனைகளுக்கான மாற்றாக இவற்றை கருதக்கூடாது. இந்தத் தளத்தின் உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பயனர் மேற்கொள்ளும் எந்தவொரு சிகிச்சைக்கும் பொறுப்பேற்காது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வெளிப்புற இணையதளங்களின் உள்ளடக்கங்களுக்கும் பிபிசி பொறுப்பல்ல; அவற்றில் பரிந்துரைக்கப்பட்ட அல்லது குறிப்பிடப்பட்ட எந்தவொரு வணிகப் பொருள் அல்லது சேவையையும் பிபிசி ஆதரிக்கவில்லை. உங்கள் உடல்நலனைப் பற்றிய எவ்விதக் கவலையாயினும், எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gzlyzq1p3o
1 month 3 weeks ago
1 month 3 weeks ago
@Newbalance உங்கள் இணைப்புகளை ஏன் நேரடியாக இணைக்க முடியவில்லை? கணனியில் காணொளியை ஓடவிட்டு மேலே வரும் முகவரியை வெட்டி ஒட்டுவது தான் எல்லோரும் செய்யும் முறை. அடுத்த முறை ;- காணொளியை ஓடவிட்டு Share என்று உள்ளதை அழுத்தி அங்கே காட்டும் சுட்டியை வெட்டி ஒட்டுங்கள்.
1 month 3 weeks ago
1949 – 1968: ஈழத்தமிழரின் தேசிய அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் – பகுதி 4 September 3, 2025 | Ezhuna 1833 முதல் 1921 வரை நீடித்த ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் முதலாவது காலகட்டத்தில், தமிழர்கள் அரசியல்ரீதியில் ‘இலங்கையர்’ என்றும், பண்பாட்டுரீதியில் ‘தமிழர்’ என்றும் அடையாளம் கொண்டிருந்தனர். 1921 ஆகஸ்ட் 15 அன்று சேர்.பொன். அருணாசலம் தேசிய காங்கிரஸில் இருந்து விலகி தமிழர் மகாசபையைத் தொடங்கியதுடன், இரண்டாவது காலகட்டம் ஆரம்பமானது. இது 1949 டிசம்பரில் தந்தை செல்வா அகில இலங்கை தமிழரசுக் கட்சியைத் தொடங்கும் வரை நீடித்தது. 1949 முதல் 1968 வரை நீடித்த மூன்றாவது காலகட்டத்தில், வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என வரையறுக்கப்பட்டு, சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 1968 இல் ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்துடன் தொடங்கி, 2009 இல் ஆயுதப்போர் முடிவடையும் வரை நீடித்த நான்காவது காலகட்டத்தில், தனிநாட்டுக் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. ‘ஈழத்தமிழர் அரசியல் வரலாறு’ எனும் இத்தொடர், இந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்த முக்கிய நகர்வுகளைத் தொகுத்து வழங்குகிறது; அதன்மூலம், இன்னும் முழுமையடையாத ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றுக்கு ஓர் அடித்தளம் அமைக்க முயற்சிக்கின்றது தமிழரசுக்கட்சி தடை செய்யப்படுதலும் அதன் தலைவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படலும் தமிழரசுக்கட்சி தடை செய்யப்பட்டதுடன் கே.எம்.பி. ராஜரட்னாவின் இயக்கமும் தடை செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் பிரசார ஏடான ‘சுதந்திரன்’ பத்திரிகையும் தடை செய்யப்பட்டது. 1958 யூன் 05 ஆம் திகதி கட்சியின் தலைவர்களும் மத்திய குழு உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர். பெரும்பாலானோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட, அமிர்தலிங்கம், வன்னியசிங்கம், இராசவரோதயம், செ. இராசதுரை, வி.என். நவரத்தினம், வி. நவரத்தினம், செனட்டர் நடராசா என்போர் கொழும்பில் ஒரு வீட்டில் காவலில் வைக்கப்பட்டனர். மூன்று மாதங்களின் பின்னர் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் சுதந்திரன் பத்திரிகைக்கான தடை நீங்க மேலும் பல மாதங்கள் சென்றன. தடை நீங்கிய பின் செயற்குழுக் கூட்டம் 02.11.1958 இல் நடைபெற்றது. இதில், தொடர்ச்சியாக சாத்வீக வழியில் போராடுதல் என முடிவெடுக்கப்பட்டதுடன் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் யாழ் நகரத்திலுள்ள தேனீர்க் கடைகளில் சாதி அடிப்படையில் பாரபட்சம் காட்டப்படுவதை ஒழிக்கும் பொருட்டு யாழ் நகரத் தேநீர்ச் சாலை உரிமையாளர்களின் மாநாடொன்றை நடாத்துவதென்றும், 24.11.58 தொடக்கம் ஒரு வாரம் தீண்டாமை ஒழிப்பு வாரமாக அனுஷ்டிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அ. அமிர்தலிங்கம், கு. வன்னியசிங்கம், சு. நடராசா என்போர் இவ்வேலைக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டனர். வன்னியசிங்கத்தின் அழைப்பின் பேரில் கூட்டப்பட்ட தேநீர்ச்சாலை உரிமையாளர்களின் மாநாட்டில் யாழ் நகர உணவு விடுதிகளில் சாதி பேதம் பார்க்கப்படுவதில்லை என ஏகமானதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரசாரம், சமபந்திப் போசனம் என்பனவும் மேற்கொள்ளப்பட்டது. மலைநாட்டுக் குழந்தைகளின் கல்வி உயர்கல்விக்கு வசதியற்ற மலைநாட்டுத் தமிழ்ப் பிள்ளைகள் 25 பேருக்கு உபகாரச் சம்பளம் பெற்றுக்கொடுக்கப்பட்டு, யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் சேர்க்கப்பட்டனர். விடுதி வசதி, இலவசப் புத்தகங்கள் என்பன அவர்களுக்கு வழங்கப்பட்டன. இப்பணிகளில் கட்சியின் சார்பில் கு. வன்னியசிங்கம் ஈடுபட்டார். 1959 செப்டெம்பர் 17 இல் கு. வன்னியசிங்கம் மரணமடைந்தார். இதே மாதம் பண்டாரநாயக்காவும் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆளும் கட்சிக்குள் ஏற்பட்ட குழப்ப நிலையால் பொதுத் தேர்தல் ஏற்படும் சூழ்நிலையும் உருவாகியது. 1960 மார்ச் தேர்தலும் சிம்மாசனப் பிரசங்கத்தில் அரசாங்கம் தோற்கடிக்கப்படலும் 1959 புதிய தேர்தல் தொகுதிகள் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 101 இலிருந்து 157 ஆக அதிகரிக்கப்பட்டது. இதன் கீழ் 1960 மார்ச் இல் தேர்தல் நடைபெற்றது. அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்கு – கிழக்கில் 19 தொகுதிகளில் போட்டியிட்டு 176, 492 வாக்குகளைப் பெற்று 15 தொகுதிகளில் வெற்றியீட்டியது. இதைவிட கட்சியின் ஆதரவினைப் பெற்ற இரு சுயேட்சை வேட்பாளர்கள் நிந்தவூர், பொத்துவில் தொகுதிகளில் வெற்றி பெற்றனர். ஐக்கிய தேசிய கட்சியும் 50 இடங்களையும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 46 இடங்களையும் கைப்பற்றியது. டட்லி ஆட்சியை அமைத்ததும் பாராளுமன்றத்தில் ஆதரவை நாடினார். தமிழரசுக்கட்சி இரு பெரும் கட்சிகளிடமும் நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தது. அவையாவன: பண்டா – செல்வா உடன்படிக்கையில் கூறப்பட்டதன் பிரகாரம் பிரதேச சபைகள் நிறுவப்படல் வேண்டும். அதற்கிடையில் தமிழ்ப்பிரதேசத்தில் அத்துமீறிய குடியேற்றம் நிறுத்தப்படல் வேண்டும். பண்டா – செல்வா ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உரிமைகள் யாவும் தமிழ்மொழிக்குச் சட்டபூர்வமாக வழங்கப்பட வேண்டும். இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டத்தில் குறிப்பிட்ட திகதி என்பது நீக்கப்பட்டு இரண்டு தலைமுறைக்கு இந்நாட்டில் பிறந்தோர் அனைவருக்கும் குடியுரிமை வழங்குவதன் மூலம் ‘நாடற்ற தமிழர்’ என்ற நிலை நாளடைவில் மாற வேண்டும். குடியுரிமைப் பிரச்சினை தீரும் வரை 06 நியமனப் பிரதிநிதிகளில் 04 பேர் மலைநாட்டுத் தமிழ்மக்களின் பிரதிநிதித்துவம் வாய்ந்த ஸ்தாபனமான இலங்கை ஜனநாயக காங்கிரசினால் நியமிக்கப்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். இதையொட்டிய விபரங்கள் ஆளும் கட்சிக்கும் தமிழரசுக்கட்சிக்கும் இடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படல் வேண்டும். அத்துடன் ஏற்றுக்கொண்ட விடயங்கள் சிம்மாசனப் பிரசங்கத்தில் இடம்பெற வேண்டும் எனக் கூறப்பட்டது. இக்கோரிக்கைகளை எழுத்தில் பெற்ற டட்லி அதனை நிராகரித்தார். அதேவேளை சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்ட சீ.பி.டி. சில்வா, ஏ.பி. ஜெயசூரிய, மைத்திரிபால சேனநாயக்க, பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க என்போர், கோரிக்கைகள் பண்டாரநாயக்காவின் கொள்கைகளுக்கு ஏற்ப இருப்பதால் அதனைத் தாம் ஏற்பதாகக் கூறினர். சிறீலங்கா சுதந்திரக் கட்சி உடனான உடன்பாட்டின்படி 1960 ஏப்ரல் 22 ஆம் திகதி சிம்மாசனப் பிரசங்க வாக்கெடுப்பில் தமிழரசுக்கட்சி எதிர்த்து வாக்களித்தமையினால் அரசாங்கம் பதவி விலகியது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க முற்பட்ட போது தமிழரசுக்கட்சியும் அதற்கு ஆதரவை வழங்கியது. இது தொடர்பான கடிதம் செல்வநாயகம், என்.எம். பெரேரா, எஸ்.ஏ. விக்கிரமசிங்க, சி.பி.டி. சில்வா என்போர் சார்பில் கையொப்பமிட்டு மகாதேசாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் மகாதேசாதிபதி இதனைக் கருத்திற் கொள்ளாமல் மரபை மீறி பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலுக்கு ஏற்பாடு செய்தார். 1960 யூலை தேர்தலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வாக்குறுதிகளை மீறுதலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையினை சிறிமாவோ பண்டாரநாயக்கா ஏற்றார். இருப்பினும் 1960 யூலை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தமிழர்கள் தம்மைத் தோற்கடித்தார்கள் என இனவாதப் பிரசாரத்தினை மேற்கொண்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை ஸ்ரீலங்கா சமஷ்டிக் கட்சி எனக் கேலி செய்தது. எனினும் ஐக்கிய தேசியக் கட்சி 30 ஆசனங்களை மட்டும் பெற்றுத் தோல்வியடைந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 75 ஆசனங்களைப் பெற்று தனியாக ஆட்சி பெறக்கூடிய நிலையை எய்தியது. தமிழரசுக் கட்சி 21 தொகுதிகளில் போட்டியிட்டு 218, 753 வாக்குகளைப் பெற்று 16 இடங்களைக் கைப்பற்றியது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியை அமைத்துக்கொண்டு தமிழரசுக் கட்சியுடனான உடன்பாட்டை நிறைவேற்றப்போவதாகக் காட்டிக்கொண்டது. 1957 ஆம் ஆண்டு தனிச் சிங்களத்தில் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிம்மாசனப் பிரசங்கத்தை பகிஷ்கரித்து வந்த தமிழரசுக்கட்சி இத்தடவை தமிழ் மொழிபெயர்ப்பும் உடன் வாசிக்கப்பட்டதால் பிரசங்கத்தில் கலந்துகொண்டது. எனினும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது நடுநிலை வகித்தது. தொண்டமான் நியமனப் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டார். உடன்பட்ட விடயங்களை அமுல்படுத்துவது பற்றி பிரதமர் தலைமையில் அமைச்சர் குழுவுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையே அலரி மாளிகையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே எவ்வித முன்னறிவிப்புமின்றி சிங்களத்தை நாடு முழுவதும் நீதிமன்ற மொழியாக்கும் சட்டத்தை நீதியமைச்சர் சாம்.பி.சி. பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதனால் அரசிற்கும் தமிழரசுக் கட்சியிற்கும் இடையிலான உறவு சிதைவடைந்தது. சட்டமூலத்திற்கு தமிழரசுக்கட்சி பலமான எதிர்ப்பைத் தெரிவித்த போதும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதே சமயம் தமிழ்மொழி உபயோகச் சட்டத்தின் கீழ் மிகக்குறைந்த உரிமைகள் வழங்கும் சட்டத்தையும் நீதிமந்திரி சமர்ப்பித்தார். இருப்பினும் தமிழரசுக்கட்சியின் எதிர்ப்பினால் அது கைவிடப்பட்டது. இரண்டாவது தடவையும் சிங்களத் தலைமைகள் வாக்குறுதிகளை கைவிட்டமையால் தமிழரசுக்கட்சி போராட்டத்திற்குத் தயாராகியது. 1961 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி தொடக்கம் வடக்கு – கிழக்கு உட்பட நாடு முழுவதும் தனிச் சிங்களச்சட்டம் பூரணமாக அமுல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது. இதனால் சிங்கள உத்தியோகத்தர்களும் தமிழ்ப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். தமிழரசுக்கட்சி நடாத்த இருந்த போராட்டத்தின் முதற்படியாக செல்வநாயகம் தலைமையில் மக்கள் ஊர்வலமாக யாழ் கச்சேரிக்குச் சென்று தமிழில் நிர்வாகம் நடாத்தப்படல் வேண்டும் என்று மனுச் சமர்ப்பித்தனர். தமிழரசுக்கட்சியின் ஏழாவது மாநில மாநாடு (1961 ஜனவரி, யாழ்ப்பாணம்) 1961 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வன்னியசிங்கம் அரங்கில் மாநாடு நடைபெற்றது. பட்டிருப்புத் தொகுதியைச் சேர்ந்த சி.மு. இராசமாணிக்கம் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்த்து நேரடி நடவடிக்கைகளில் இறங்குவது என்றும், பெப்ரவரி 20 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் போராட்டத்தை ஆரம்பிப்பது என்றும், தொடர்ந்து மற்றைய மாவட்டங்களுக்கு விஸ்தரிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. சத்தியாக்கிரகப் போராட்டம் (1961) சத்தியாக்கிரகத்தை ஒரு நாளைக்கு ஒரு தொகுதியின் மக்களினால் அத்தொகுதி உறுப்பினர் தலைமையில் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது (பொலிசார் கைது செய்யலாம் எனக் கருதியே இவ்வாறு ஒழுங்கு செய்யப்பட்டது). 1961 பெப்ரவரி 20 ஆம் திகதி செல்வநாயகம் தலைமையில் காங்கேசன்துறை தொகுதி மக்கள் சத்தியாக்கிரகத்தில் பங்குபற்றினர். ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களும் வெளியில் உதவிக்கு நின்றனர். முதலாம் நாள் திட்டமிட்டபடி யாழ் அரசாங்கச் செயலக வாசலில் எவரும் உள்ளே செல்லவிடாது தடுத்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர். பொலிஸார் பிரதான வாயில் ஊடாக அலுவலர்கள் உள்ளே செல்வதற்கு பாதை அமைக்க முற்பட்ட போது எல்லாப் பாராளுமன்ற உறுப்பினர்களும், மக்களும் அவ்விடத்துக்குச் சென்று பாதைக்குக் குறுக்கே படுத்துக்கொண்டனர். பொலிஸார் பலாத்காரமாக சத்தியாக்கிரகிகளை தூக்கி அப்புறப்படுத்த முற்பட்டு மிருகத்தனமாகத் தூக்கி வீசினர். இதனைப் பார்த்துக்கொண்டு வெளியில் நின்ற மக்களும் நூற்றுக்கணக்கில் சத்தியாக்கிரகிகளோடு சேர்ந்தமையினால் பொலிஸாரின் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. அன்று பகல் 11 மணிக்கு மேல் நீதிமன்றத் திறப்புவிழா இடம்பெற்றது. அதற்குரிய ஆணையை அரசாங்கத்தின் சார்பில் அரசாங்க அதிபர் நீதியரசரிடம் கொடுப்பதற்குச் செல்ல வேண்டியிருந்தது. இதனால் அரசாங்க அதிபரின் வாசஸ்தலம் அமைந்திருந்த பழைய பூங்கா வாயிலிலும் சத்தியாக்கிரகவாசிகளினால் மறியல் போராட்டம் செய்யப்பட்டது. குண்டாந்தடிகளினால் சத்தியாக்கிரகிகளைத் தாக்கி அவர்களுக்கு ஊடாக அரசாங்க அதிபரின் வண்டியைக் கொண்டு செல்ல பொலிஸார் முற்பட்டனர். ஈ.எம்.வி. நாகநாதன் உட்பட பல சத்தியாக்கிரகிகள் காயங்களுக்கு உட்பட்டனர். 2 ஆம் நாள் சத்தியாக்கிரகம் வட்டுக்கோட்டைத் தொகுதி மக்களால் அ. அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்றது. முதலாம் நாள் பொலிஸாரின் அட்டூழியத்திற்குப் பலத்த கண்டனம் ஏற்பட்டதால் அவர்களின் அட்டூழியம் சற்றுக் குறைவடைந்தது. எனினும் அரச ஊழியர்களை சத்தியாக்கிரகிகளுக்கூடாக அழைத்துச் செல்ல முற்பட்டனர். இதற்கு அரச ஊழியர்களும் மறுப்புத் தெரிவித்தனர். 3 ஆம் நாள் வி.ஏ. கந்தையா தலைமையில் ஊர்காவற்துறை மக்களும், 4 ஆவது நாள் என். நவரத்தினம் தலைமையில் சாவகச்சேரி மக்களும் கலந்துகொண்டனர். இவ்வாறு தொடர்ந்து 50 நாட்கள் நடைபெற்றமையினால் யாழ் மாவட்ட அரச நிர்வாகம் முழுமையாக ஸ்தம்பிதமடைந்தது. 1961 பெப்ரவரி 27 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சத்தியாக்கிரகம் விஸ்தரிக்கப்படல் 1961 பெப்ரவரி 27 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டமெங்கும் யாழ்ப்பாணத் தாக்குதலுக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் முகமாக ஹர்த்தால் நடைபெற்றது. 1961 பெப்ரவரி 28 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்கச் செயலகத்தின் முன்னாலும் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப்பட்டது. 1961 மார்ச் 4 ஆம் திகதி திருகோணமலையில் அரசாங்கச் செயலகத்தின் முன்னால் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப்பட்டது. பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் 10 பேர் காயமடைந்ததுடன் மூதூரின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் ஏகாம்பரம் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். மார்ச் 22 ஆம் திகதி படுகாயமுற்ற ஏகாம்பரம் மரணமடைந்தார். தொடர்ந்து மன்னார், வவுனியா அரசாங்கச் செயலகங்களுக்கு முன்னாலும் சத்தியாக்கிரகம் விஸ்தரிக்கப்பட்டது. “இரண்டு மாகாணங்களிலும் அரசாங்கமே இல்லை” என பிரதமர் செனற் சபையில் கூறினார். சத்தியாக்கிரகத்தை நிறுத்துவது தொடர்பாக அரசு பேச்சுவார்த்தைக்குத் தயாராகியது. அரசின் சார்பில் நீதி அமைச்சர் பி.எல். பெர்ணான்டோ பங்குபற்றினார். மு. திருச்செல்வத்தின் கொழும்பு இல்லத்தில் 1961 ஏப்ரல் 05 ஆம் திகதி இரவு பேச்சுவார்த்தை நடைபெற்றது. மொழியுரிமை தொடர்பாக மிகக்குறைந்த கோரிக்கைகளில் கூட உடன்பாடு ஏற்படாததால் போராட்டத்தைத் தொடருவது எனத் தீர்மானிக்கப்பட்டது. தமிழ் அரசு தபால் சேவை போராட்டத்தின் தீவிரத்தினால் அரசாங்கம் பங்கீட்டு உணவு வழங்காது மக்களைப் பணியவைக்க முற்பட்டது. இதனால் போராட்டத்தை வேறு துறைகளிலும் விரிவாக்கும் நோக்கத்துடன், அரச தபால் சேவை சட்டத்தை மீறி, தமிழரசு தபால் சேவை ஆரம்பிக்கப்பட்டது. 1961 ஏப்ரல் 14 ஆம் திகதி பகல் 12 மணிக்கு செல்வநாயகம் இதனை ஆரம்பித்து வைத்தார். 10,000 பேர் வரிசையில் நின்று தமிழரசு தபால் தலைகளைப் பெற்றுக்கொண்டனர். தமிழரசு தபால் சேவையின் தபால் மா அதிபராக செனட்டர் நடராசா நியமிக்கப்பட்டார். தமிழரசு தபால் பெட்டிகள் பல இடங்களிலும் வைக்கப்பட்டது. அவசரகால, ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படலும், இராணுவம் தாக்குதல்களை மேற்கொள்ளுதலும் 1961 ஏப்ரல் 17 ஆம் திகதி 12 மணிக்கு அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட அதேவேளை 48 மணிநேர ஊரடங்குச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டது. கச்சேரியின் முன் அமைதியாக இருந்த சத்தியாக்கிரகிகள் இராணுவத்தினால் தாக்கப்பட்டனர். பழனியப்பன் என்ற இளைஞரினது தொடை துளைக்கப்பட, அவர் மயக்க நிலையை எய்தினார். பெண் சத்தியாக்கிரகிகள் இராணுவத்தினால் வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்டு பல மைல்களுக்கு அப்பால் தனிமையான இடத்தில் விடப்பட்டனர். தலைவர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் – இராணுவ முகாம்களுக்கும் கொண்டு செல்லப்பட்டனர். வடக்கு – கிழக்கு இராணுவ ஆட்சியின் கீழ் விடப்பட்டது. திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் உட்பட தலைவர்களும் பிரதான தொண்டர்களுமாக 74 பேர் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு பனாகொடை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர். தமிழரசுக்கட்சி, சுதந்திரன் பத்திரிகை என்பன தடை செய்யப்பட்டதோடு சுதந்திரன் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. பத்திரிகைத் தணிக்கை அமுலுக்கு வந்தது. இரகசிய ஏடுகள் பிரசுரமாதல் ‘சத்தியாக்கிரக’ என்ற ஆங்கில ஏடு மாதம் இருமுறை தட்டச்சில் வெளியாகியது. ‘தமிழன் கண்ணீர்’ என்ற தமிழ் ஏடும் வெளியாகியது. கோவில் பிரார்த்தனைகளை கட்சி ஒழுங்கு செய்தலும், எஞ்சியிருந்த தலைவர்கள் அதில் பேசுதலும் (கூட்டம் நடாத்துவது தடை செய்யப்பட்டிருந்தமையால்) இடம்பெற்றது. சத்தியாக்கிரகிகள் தாக்குதல் தொடர்பில் மலையகத்தில் எழுச்சி சத்தியாக்கிரகம் நடைபெற்ற போது தொண்டமான் நேரடியாகச் சென்று உற்சாகப்படுத்தினார். வவுனியா, மன்னார் பகுதிகளில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் நேரடியாகவே பங்குபற்றினர். வவுனியா இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதி நடேசபிள்ளையும் தலைவர்களுடன் கைது செய்யப்பட்டார். சத்தியாக்கிரகம் நசுக்கப்பட்டதற்கு முதல் நாள், 1961 ஏப்ரல் 24 ஆம் திகதி தோட்டத்தொழிலை அத்தியாவசிய சேவையாக்கும் சட்டவிதிகளை அரசாங்கம் பிரகடனம் செய்தது. எனினும் 1961 ஏப்ரல் 25 ஆம் திகதி 5 லட்சம் தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கினர். அன்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தமிழரசுக் கட்சியின் நான்கு அம்சக் கோரிக்கைகளை அரசுக்குச் சமர்ப்பித்தது. இதேவேளை தோட்டப்பகுதிக்கும் இராணுவம் அனுப்பப்பட்டது. 1961 ஐப்பசியில் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். கட்சியின் தடை நீங்க மேலும் சில மாதங்கள் சென்றன. மீண்டும் சிங்கள ‘ஸ்ரீ’ பஸ்வண்டி 1958 ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து ஸ்ரீ பொறித்த பஸ் வண்டிகள் தமிழ்ப் பிரதேசத்தில் ஓடவிடப்படவில்லை. ஆனாலும் 1961 ஐப்பசியில் சிங்கள ஸ்ரீ பொறித்த பஸ் வண்டிகள் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டது. பஸ்வண்டி வந்து சேர்ந்த மறுநாளே இளைஞர்கள் சிலர் பஸ் நிலையத்திற்குள் நுழைந்து காவலாளிகளையும் சுட்டுக்காயப்படுத்தி பஸ் வண்டியையும் தீக்கிரையாக்கினர். அடுத்த நாள் எஞ்சிய ஸ்ரீ பொறித்த பஸ் வண்டிகள் மீளப் பெறப்பட்டன. தமிழரசுக் கட்சியின் 8 ஆவது மாநில மாநாடு – மன்னார் (1961 ஓகஸ்ட் 31, செப்டெம்பர் 1, 2) தமிழரசுக் கட்சியின் 8 ஆவது மாநில மாநாடானது மன்னாரில் 1961 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 31 மற்றும் செப்டெம்பர் மாதம் 1, 2 ஆம் திகதிகளில் இடம்பெற்றது. சி.மு. இராசமாணிக்கம் கட்சியின் தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். 1963 ஏப்ரல் 17 ஆம் திகதிக்குப் பிந்தாமல் போராட்டத்தை ஆரம்பித்தனர். தோட்டத்தொழிலாளர்களுக்கு என கட்சியின் சார்பில் தொழிற்சங்கம் ஒன்றை அமைப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது. இதன்மூலம் இரண்டு சமூகங்களுக்கிடையேயும் அமைப்பு ரீதியான ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சித்தனர். இதன்படி ‘இலங்கைத் தொழிலாளர் கழகம்’ ஹட்டனில் 22.12.1962 (சனி) அன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைவராக அ. தங்கதுரை தெரிவு செய்யப்பட்டார். இந்தியாவின் மீதான சீனாவின் படையெடுப்பில் இந்தியாவுக்கு ஆதரவு 1961 இறுதியில் சீனா இந்தியாவின் மீது படையெடுத்தது. இவ்விடயத்தில் சீனாவைக் கண்டித்து தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு 18.11.1961 இல் தீர்மானம் நிறைவேற்றியது. தீர்மானத்தின் விபரம்: சர்வதேசக் கண்ணியத்தையும் கௌரவமான நடத்தையை மீறியும் உலகத்திற்குத் தானும் பிரகடனப்படுத்திய பஞ்சசீலக் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டும் கம்யூனிஸ்ட் சீனா, இந்தியா மீது நடத்தும் ஆக்கிரமிப்பை இலங்கைத் தமிழரசுக்கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் கம்யூனிஸ்ட் சீன ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஆசியாக்கண்டத்தில் ஜனநாயகம் நிலைபெறவும், தனது நாட்டையும் தேசிய கௌரவத்தையும் காப்பாற்றவும் நடாத்தப்படும் இப்போரில், இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்களின் சார்பில் இந்திய அரசாங்கத்திற்கும், இந்திய மக்களுக்கும் தனது ஆதரவை அளிப்பதுடன் இந்திய மக்களுடன் இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கிருக்கும் ஐக்கியத்தையும் காட்ட, கட்சி விரும்புகின்றது. ஏகாதிபத்தியச் சீனாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்தும் தனது சுதந்திரத்திற்காகவும், ஜனநாயகத்திற்காகவும் போராடும் இந்தியாவிற்கு ஆதரவு நல்க வேண்டுமென்றும் இலங்கை அரசாங்கத்தை இக்கட்சி கேட்டுக்கொள்கிறது. தனது பாதுகாப்பிற்குப் போதிய ஆட்பலம் இந்தியாவிடம் இருப்பினும், மாண்புமிக்க கொள்கைகளுக்காகவே இந்தியா போரிடுவதால், மனித சுதந்திரத்திற்காக நடத்தப்படும் இப் புனிதப்போரில் ஒரு சிறிதளவேனும் பங்கெடுக்க விரும்புவதனால், இப்போரில் பங்கெடுப்பதற்காக இலங்கைவாழ் தமிழ்பேசும் இளைஞர்களைத் தொண்டர்களாகச் சேரும்படி இக்கட்சி அழைக்கின்றது. மந்திரிமார் வருகைக்கு மீண்டும் எதிர்ப்பு தமிழரசுக்கட்சியை மீண்டும் போராட்டத்திற்கு தயார்ப்படுத்தும் வகையில், 24.02.1963 இல் கட்சிச் செயற்குழு மந்திரிகள், அரச பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு – கிழக்கிற்கு வரும்போது, வருகையை எதிர்ப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது. அவர்கள் வடக்கு – கிழக்கிற்கு கோலாகல விஜயங்கள் செய்யின் கட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடாத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி யாழ்ப்பாணத்திற்கும் பருத்தித்துறைக்கும் அமைச்சர் ரி.பி. இலங்கரத்தின வருகைதந்த போது கறுப்புக்கொடி காட்டினர். நூற்றுக்கணக்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பருத்தித்துறை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத் திறப்புவிழாவிலும் அணிவகுத்து நின்று கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தினை நடாத்தினர். இவ்வார்ப்பாட்டத்தின் போது ஊர்காவற்துறை பாராளுமன்ற உறுப்பினர் வி.ஏ. கந்தையா உட்பட பல ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரால் தாக்கப்பட்டனர். தாக்குதலினால் பாதிக்கப்பட்ட வி.ஏ. கந்தையா 4.06.1963 இல் மரணமடைந்தார். தொடர்ந்து வ. நவரத்தினம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ‘எல்லாம் தமிழ் இயக்கம்’ உருவாதல் சிங்களத் திணிப்பை எதிர்ப்பதற்கும், தமிழ் மக்களை அரசுடனான தம் கருமங்களைத் தமிழில் ஆற்றத் தூண்டுவதற்குமாக எல்லாம் தமிழ் இயக்கத்தை 1963 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 8 ஆம் திகதியில் உருவாக்கினர். இதன்படி தமிழ்ப் பிரதேசங்களில் உள்ள தபால் நிலையங்கள், வேறு அரசாங்க அலுவலகங்கள் ஆகியவற்றின் முன் போராட்டக்காரர்கள் விண்ணப்பங்கள், தந்திகள், முகவரிகள் என்பவற்றை தமிழில் எழுதுமாறு தூண்டினர். தேவையானவர்களுக்கு தாமே எழுதிக்கொடுத்தனர். அரசாங்கம் 1964 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி சத்தியாக்கிரகத்தால் கைவிடப்பட்ட தனிச்சிங்கள சட்டத்தை வடக்கு – கிழக்கில் அமுல்படுத்தப்போவதாக அறிவித்தது. தமிழரசுக் கட்சி முழுச் சக்தியையும் திரட்டி இதனை எதிர்ப்பது என 30.6.1963 இல் கொழும்பில் தீர்மானித்தது. அரசாங்கம் தீர்மானித்தபடியே சிங்கள அரசாங்க ஊழியர்களை வடக்குக்கு அனுப்ப முயற்சி செய்யப்பட்டது. அதேவேளை தமிழ்ப் பாடசாலைகளில் சிங்களத்தைத் திணிக்கும் நோக்கில் 2000 சிங்கள ஆசிரியர்களையும் வடக்கு – கிழக்கிற்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்டது. தமிழரசுக் கட்சி இதனைப் பகிஷ்கரிப்பது என்றும் இப்போராட்டத்தில் மாணவர்கள், பெற்றோர்களை இணைப்பது என்றும் தீர்மானித்தது. தமிழரசுக் கட்சியின் போராட்ட அச்சத்தினால் சிங்கள ஊழியர்கள், ஆசிரியர்கள் வடக்கு – கிழக்குக்குச் செல்ல மறுத்தனர். இதனையொட்டி, அரசு 01.01.1964 அன்று அறிவித்தமைக்கு எதிரான மாபெரும் கண்டன ஊர்வலங்களை யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார், வவுனியா என்பவற்றில் நடாத்தியது. அவ்வவ் மாவட்டக் கச்சேரிகளுக்கு முன்னால் தனிச்சிங்களச் சட்டப்பிரதிகளையும் எரித்தது. பாதயாத்திரை சாதி பேதத்தை ஒழிக்கவும் கட்சியின் இலட்சியங்களை மக்கள் முன் பிரசாரம் செய்யவும் என பாதயாத்திரை நடாத்தப்பட்டது. செல்வநாயகம் தலைமையில் காங்கேசன்துறை தொகுதியிலிருந்து பாதயாத்திரை ஆரம்பமானது. பலவாரங்களாக நடைபெற்ற பாதயாத்திரையின் போது தங்கிநிற்கின்ற இடங்களில் தீண்டாமை ஒழிப்பின் அவசியம் பற்றியும், தமிழ் மக்களின் அரசியல் நிலை பற்றியும் கருத்தரங்குகளை நடாத்தினர். அரசு மீண்டும் சமரசப்பேச்சுக்கு வருதல் இடதுசாரி ஐக்கிய முன்னணியின் தலைமையில் தொழிற்சங்கங்கள் 21 கோரிக்கைகளை சமர்ப்பித்து பெரிய போராட்டத்துக்கு ஆயத்தங்களைச் செய்தன. இந்நேரம் தமிழரசுக்கட்சியின் ஆதரவை அரசாங்கம் வேண்டி பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. சிறீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கம் இடதுசாரி ஐக்கிய முன்னணியின் பிரதான அமைப்பான லங்கா சமசமாஜக் கட்சியை தன்னுடன் இணைப்பதில் வெற்றி கண்டது. இதன்பின்னர் தொழிற்சங்கப் போராட்டமும் நின்றுபோனது. தமிழரசுக் கட்சியுடனான பேச்சுவார்த்தையும் நின்றுபோனது. தமிழரசுக் கட்சியின் ஒன்பதாவது மாநில மாநாடு தமிழரசுக் கட்சியின் ஒன்பதாவது மாநில மாநாடு 1964 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 21, 22, 23 ஆம் திகதிகளில் திருகோணமலை இடம்பெற்றது. இம்மாநாட்டில் செல்வநாயகம் கட்சியின் தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். இதன்போது தொடர் போராட்டம் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் சிறீமா – சாஸ்திரி ஒப்பந்தம் 1964 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 30 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. இலங்கையின் சார்பில் அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவும், இந்தியாவின் சார்பில் அப்போதைய இந்தியப் பிரதமர் லாவ்பகதூர் சாஸ்திரியும் கையொப்பமிட்டனர். இலங்கையில் வாழ்ந்த மலையகத் தமிழர்கள் 975,000 பேரில் 525,000 பேரை இந்தியா ஏற்றுக்கொள்வதென்றும் 300,000 பேரை இலங்கை ஏற்றுக்கொள்வதென்றும் முடிவிற்கு வந்தனர். மீதி 15,000 பேர் பற்றி பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் உடன்பாட்டிற்கு வந்தனர். 1967 இல் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்த அமுலாக்கச் சட்டத்தின் மூலம் இது நடைமுறைக்கு வந்தது. திருப்பி அனுப்பப்படும் செயன்முறை 15 வருட காலத்திற்குள் இடம்பெற வேண்டும் எனத் தீமானிக்கப்பட்டது. மலையக மக்கள் மத்தியில் பலம் வாய்ந்த அமைப்பாக விளங்கிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடன் எந்தவிதக் கலந்தாலோசனையும் மேற்கொள்ளாமலே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதன் தலைவர் தொண்டமான் நியமன உறுப்பினராக இருந்தபோதும் அவருடன் எந்தக் கலந்துரையாடலையும் மேற்கொள்ளாது விட்டனர். தமிழரசுக் கட்சி இதனைக் காரசாரமாக எதிர்த்தது. இந்தியா தன்னுடைய நலன்களுக்காக மலையக மக்களை விலையாகக் கொடுத்த நிகழ்வாக இது இருந்தது. மலையக மக்களின் அரசியல் பலம் பலவீனமடைந்தது. இது பற்றி மனோகணேசன் கூறும் போது “இந்தியா முழு மலையக மக்களையும் இந்தியாவிற்கு அழைத்திருக்க வேண்டும் அல்லது முழுப்பேரையும் இலங்கையில் விட்டிருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார். அரசாங்கம் கவிழ்தல் அரசாங்கம் ஏரிக்கரை பத்திரிகையை தேசியமயமாக்கும் மசோதாவைக் கொண்டுவந்தது. அரசாங்கக் கட்சியின் சபை முதல்வர் சி.பி.டி. சில்வா தலைமையில் பல உறுப்பினர்கள் இதனை எதிர்த்து எதிர்க்கட்சிக்கு மாறினர். இந்நிலையில் அமைச்சர்கள் பலர் தமிழரசுக்கட்சியின் உதவியை நாடினர். ஆனால் முன்னைய அனுபவத்தினால் அதனை கட்சி நிராகரித்தது. மசோதா வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது தமிழரசுக்கட்சி எதிர்த்து வாக்களித்தது. இதனால் அரசாங்கம் கவிழ்ந்தது. 1965 மார்ச் பொதுத்தேர்தல் இத்தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டு 217,986 வாக்குகளைப் பெற்று 14 ஆசனங்களைக் கைப்பற்றினர். ஐக்கிய தேசியக் கட்சி 66 இடங்களையும் சிறீலங்கா சுதந்திரக்கட்சி 41 இடங்களையும் கைப்பற்றியது. ஐக்கிய தேசிய கட்சியினர் தமிழரசுக்கட்சியின் ஆதரவை நாடினர். இதனைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சி அரசில் சேர்ந்தது. டட்லி – செல்வா ஒப்பந்தம் 1965 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி டட்லி – செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தமிழ்மொழியில் நிர்வாகம் நடத்துவதற்கும், தமிழிலேயே பதிவதற்கும், தமிழ் பேசும் மக்கள் நாடு முழுவதிலும் அரச கருமங்கள் விடயத்தில் தமிழில் தொடர்பு கொள்வதற்கும், வடக்கு – கிழக்கிலுள்ள நீதிமன்ற அலுவல்களைத் தமிழில் நடாத்தவும் ஏற்றவகையில் தமிழ்மொழி உபயோகச் சட்டத்தைக் கொண்டு வந்தனர். அதிகாரப் பகிர்வை வழங்கும் வகையில் மாவட்ட சபைகளை உருவாக்குதல், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் குடியேற்றத்திட்டங்கள் உருவாக்கப்படும் போது; முதலில் வடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள காணியற்றவர்களுக்கு வழங்குதல், இரண்டாவதாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்பேசும் மக்களுக்கு வழங்குதல், மூன்றாவதாக இலங்கையின் ஏனைய பகுதிகளிலுள்ள தமிழ்பேசும் இனத்தவர்களுக்கு முதலிடம் கொடுத்த பின்னர் ஏனையவர்களுக்கு வழங்குதல் என்பன ஒப்பந்தத்தில் உள்ளடங்கியிருந்தன. இவ் ஒப்பந்தத்தின் பின்னர் தமிழரசுக்கட்சி அரசாங்கத்தில் சேந்தது. இதில் திரு.மு. திருச்செல்வம் உள்ளூராட்சி அமைச்சராகப் பொறுப்பேற்றார். தமிழரசுக்கட்சியின் போராட்டங்கள் முடிவுக்கு வந்தன. அதன் வரலாற்றுப் பாத்திரமும் முடிவு பெற்றது. தமிழரசுக்கட்சி அரசில் சேர்ந்ததினால் அரச ஊழியர்களில் பழையவர்களுக்கு சிங்களத் தேர்ச்சியின்றி, சம்பள உயர்வு, பதவி உயர்வு என்பன வழங்கப்பட்டன. புதிய ஊழியரின் சிங்களத் தேர்ச்சி 8 ஆம் தரமாக்கப்பட்டது. ஆனால் திறைசேரி அதிகாரிகள் 9 ஆம் தரச் சோதனையை 8 ஆம் தரம் என நடத்திச் சலுகையை முறியடித்தனர். நிதியமைச்சர் வன்னி நாயக்கா, பிரதமரோடு தமிழரசுக் கட்சி நடாத்திய மாநாட்டில் இதனை ஒத்துக்கொண்டார். தமிழ்மொழி உபயோகச் சட்டவிதிகள் மசோதா – 1966 ஜனவரி 08 1958 இல் பண்டாரநாயக்காவினால் கொண்டுவரப்பட்ட தமிழ்மொழி உபயோகச்சட்டத்தின் கீழ் அதன் இயங்கு விதிகள் தொடர்பான சட்ட மூலம் தமிழரசுக்கட்சியின் நிர்ப்பந்தத்தின் கீழ் 1966 ஜனவரி 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதன்படி வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழையும் நிர்வாக மொழியாகவும், நாடு முழுவதிலும் தமிழ்பேசும் மக்கள் தமிழில் அரசாங்கத்தோடு கருமமாற்றவும் ஒழுங்கு செய்யப்பட்டது. இதனை சிறீலங்கா சுதந்திரக்கட்சி, இடதுசாரிக் கட்சிகள் உட்பட சிங்கள எதிர்க்கட்சிகள் யாவும் காரசாரமாக எதிர்த்தன. இச்சட்டவிதிகள் மூலச்சட்டத்தின் எல்லையை மீறியுள்ளன எனக் கூறப்பட்டது. அரச தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதோடு எதிர்க்கட்சிகள், கொழும்பு விகாரமாதேவி பூங்காவிலிருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலத்தையும் நடத்தியது. ஊர்வலம் கட்டுக்கடங்காமல் சென்றதால் பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். ரத்தினசாரதேரோ என்ற பௌத்தபிக்கு சூடுபட்டு மரணமடைந்தார். எனினும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் நடைமுறையில் பெரிதாகச் செயற்படவில்லை. இடதுசாரிக் கட்சிகள் இதன்மூலம் தமது இனவாதப் போக்கினை வெளிக்காட்டின. மாவட்ட சபை தொடர்பான வெள்ளை அறிக்கை தமிழ்ப் பிரதேசங்களுக்கு ஓரளவு அதிகாரம் பகிரக்கூடிய சட்டமூலத்திற்காக வெள்ளை அறிக்கை மு. திருச்செல்வத்தினால் தயாரிக்கப்பட்டது. பல மாதங்கள் பிரதமரினாலும் அமைச்சர்களினாலும் கட்சித் தலைவர்களினாலும் ஆராயப்பட்ட வெள்ளை அறிக்கை பராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டது. அரசாங்கக் கட்சி உறுப்பினர்கள், பௌத்த பிக்குகள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தனர். இவ்வெதிர்ப்புக்கு அஞ்சிய பிரதமர் டட்லி சேனநாயக்க “மாவட்ட சபை மசோதவை தாம் பராளுமன்றத்தில் நிறைவேற்ற மாட்டோம்” எனக் கூறினார். தமிழரசுக்கட்சியின் பத்தாவது மாநில மாநாடு (1966 யூன் 23, 24, 25 – கல்முனை) தமிழரசுக் கட்சியின் 10 ஆவது மாநில மாநாடானது 1966 ஆம் ஆண்டு யூன் மாதம் 23, 24, 25 ஆம் திகதிகளில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கட்சியின் தலைவராக ஈ.எம்.வி. நாகநாதன் தெரிவு செய்யப்பட்டார். முதன்முறையாக பிரதமர் டட்லி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். “இலகுவில் வாக்குக்கொடுக்க மாட்டேன், கொடுத்தால் நிறைவேற்றத் தவறமாட்டேன்” என டட்லி மாநாட்டில் உறுதிமொழி அளித்தார். சிறிமா – சாஸ்திரி ஒப்பந்த அமுலாக்கச் சட்டம் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்த அமுலாக்கச் சட்டத்தை அரசாங்கம் இயற்ற முற்பட்ட போது தமிழரசுக் கட்சியினதும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசினதும் முயற்சியினால் ஆட்சேபத்திற்குரிய அம்சங்கள் நீக்கப்பட்டது. விருப்பத்திற்கு மாறாக யாரையும் இந்தியப் பிரஜையாகப் பதிவு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தியா திரும்பியோரின் வீதத்திற்கே இலங்கைப் பிரஜையாகப் பதிவு செய்யும் திட்டம், இலங்கைப் பிரஜைகளாகப் பதிவு செய்தோரை தனிவாக்காளர் இடாப்பில் அடக்கும் அம்சம் என்பனவே நீக்கப்பட்டன. ஆட்களைப் பதிவு செய்து அடையாள அட்டை வழங்குவதற்கான சட்டமும் மாற்றப்பட்டது. பிரஜை, நாடற்றவர் என்ற பேதமின்றி இந்நாட்டில் சட்டபூர்வமாக வாழும் 18 வயதிற்கு மேற்பட்டோர் எல்லோரையும் பதிந்து அடையாள அட்டை வழங்குவதற்கு சட்டமியற்றப்பட்டது. இச்சட்டங்களை தமிழரசுக்கட்சியின் ஊர்காவற்துறை பாராளுமன்ற உறுப்பினர்கள் வ. நவரத்தினம் ஏற்றுக்கொள்ளவில்லை; எதிர்த்து வாக்களித்தார். இதனால் 24.04.1968 இல் கூடிய கட்சியின் பொதுச்சபை வ. நவரத்தினம் அவர்களைக் கட்சியிலிருந்து ஏகமனதாக வெளியேற்றியது. இதன்பின்னர் வ. நவரத்தினம் ‘தமிழர் சுயாட்சிக் கழகம்’ எனும் புதிய கட்சியை உருவாக்கினார். மு. திருச்செல்வம் அமைச்சர் பதவியைத் துறத்தல் திருகோணமலை கோணேசர் கோவிலைச் சார்ந்த பிரதேசத்தை புனித பிரதேசமாக்க மு. திருச்செல்வம் முயற்சித்தார். இதற்காக தமிழர், சிங்களவர், பறங்கியர் என மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. சேருவல பௌத்த ஆலயத் தலைமைப் பிக்கு இதை எதிர்த்தார். பிரதமர் டட்லி சேனநாயக்க மு. திருச்செல்வத்துடன் கலந்தாலோசிக்கமாலே குழுவை நிறுத்தி வைத்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 1968 புரட்டாதி மாதம் 16 ஆம் திகதி மு. திருச்செல்வம் அமைச்சர் பதவியை இராஜனாமாச் செய்தார். இதன் பின்னரும் தமிழரசுக் கட்சி சில மாதங்கள் அரசாங்கத்தில் நீடித்தது. 1968 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தமிழரசுக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகியது. https://www.ezhunaonline.com/1949-1968-national-political-transformation-and-resistance-struggles-of-eelam-tamils-part-4/
1 month 3 weeks ago
காற்றாலைகளுக்கு ஏன் எதிர்ப்பு புரிந்து கொள்ளும் முயற்சியில், 2021 இல் இருந்து இயங்கி வரும் முதலாம் கட்ட மன்னார் காற்றாலையின் சூழல் பாதிப்பு அறிக்கையைத் தேடிப் பார்த்தேன். விரிவாக இந்த இணைப்பில், பல பின்னிணைப்புகளோடு சூழல் பாதிப்பு, ஒலி மாசு, காட்டுயிர்களின் பல்லினத்தன்மை, பறவைகள் இறப்பு என ஆய்ந்து தான் தொடர்கிறார்கள் எனப் புரிகிறது. அடிப்படைகள் எதுவும் இல்லாமல், பதாகையும், கொடியும் பிடிக்கும் மக்கள் கூட்டமாக நாம் மாறி விட்டோம் போல தெரிகிறது. Asian Development BankWind Power Generation Project: Environmental Monitoring R...Environmental monitoring reports describe the environmental issues or mitigation measures of a project. This document dated July 2024 is provided for the ADB project 49345-002 in Sri Lanka.
1 month 3 weeks ago
கீழே உள்ள செய்தியையும் பாருங்கள் ஈழப்பிரியன். எவ்வளவு அநியாயம் எல்லாம் செய்திருக்கிறார்கள். ☹️ செம்மணியில் 2 எலும்புக்கூட்டுக்கு குறுக்காக மற்றொரு எலும்புக்கூடு!! மொத்த என்புக்கூடுகளின் எண்ணிக்கை 231!! Newtamils.com
1 month 3 weeks ago
1949 – 1968: ஈழத்தமிழரின் தேசிய அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் – பகுதி 3 August 5, 2025 | Ezhuna 1833 முதல் 1921 வரை நீடித்த ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் முதலாவது காலகட்டத்தில், தமிழர்கள் அரசியல்ரீதியில் ‘இலங்கையர்’ என்றும், பண்பாட்டுரீதியில் ‘தமிழர்’ என்றும் அடையாளம் கொண்டிருந்தனர். 1921 ஆகஸ்ட் 15 அன்று சேர்.பொன். அருணாசலம் தேசிய காங்கிரஸில் இருந்து விலகி தமிழர் மகாசபையைத் தொடங்கியதுடன், இரண்டாவது காலகட்டம் ஆரம்பமானது. இது 1949 டிசம்பரில் தந்தை செல்வா அகில இலங்கை தமிழரசுக் கட்சியைத் தொடங்கும் வரை நீடித்தது. 1949 முதல் 1968 வரை நீடித்த மூன்றாவது காலகட்டத்தில், வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என வரையறுக்கப்பட்டு, சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 1968 இல் ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்துடன் தொடங்கி, 2009 இல் ஆயுதப்போர் முடிவடையும் வரை நீடித்த நான்காவது காலகட்டத்தில், தனிநாட்டுக் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. ‘ஈழத்தமிழர் அரசியல் வரலாறு’ எனும் இத்தொடர், இந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்த முக்கிய நகர்வுகளைத் தொகுத்து வழங்குகிறது; அதன்மூலம், இன்னும் முழுமையடையாத ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றுக்கு ஓர் அடித்தளம் அமைக்க முயற்சிக்கின்றது உதவி : ஜீவராசா டிலக்ஷனா சிங்கள மொழியின் தோற்றம் – 1956 தமிழ் மக்கள் தேசிய இனமாக இருப்பதை அழிப்பதில் இரண்டாவது திட்டமாக மொழி விவகாரம் இலக்காக்கப்பட்டது. ஐ.நா அறிக்கை ஓர் இனத்தை வேண்டுமென்றே பலவீனப்படுத்தக் கூடியவகையில் நிலத்தைப்பறித்தல், மொழியைப் புறக்கணித்தல், பொருளாதாரத்தைச் சிதைத்தல், கலாசாரத்தை அழித்தல் இன அழிப்பாகக் கொள்ளப்படும் என்று கூறுகின்றது. இலங்கையில் 1956 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சிங்களம் அரசகரும மொழிச்சட்டம் ஒரே நேரத்தில் இன அழிப்பாகவும், அரச அதிகாரக் கட்டமைப்பைச் சிங்கள மயமாக்குவதாகவும் இருந்தது. இதனை தந்தை செல்வா 1949 ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தானிய பிரஜாவுரிமைச் சட்டத்தின் போதே எதிர்வு கூறினார். “இன்று இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு நடப்பது நாளை மொழிப்பிரச்சினை வரும்போது ஈழத்தமிழர்களுக்கும் நடக்கும்” எனக் கூறினார். இலங்கையில் பிரித்தானியர் ஆட்சிக்காலத்திலேயே மொழிப்பிரச்சினை கிளப்பப்பட்டது. டொனமூர் யாப்பு நடைமுறையிலிருந்த காலப்பகுதியில் அரசகரும மொழியாக ஆங்கிலத்தின் இடத்திற்கு சுதேச மொழிகள் இருக்க வேண்டுமென்ற கோரிக்கை மேலெழுந்தது. 1944 ஆம் ஆண்டு அரசாங்க சபையின் உறுப்பினராக இருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனா சிங்கள மொழி அரசகரும மொழியாக இருக்க வேண்டும் என்ற பிரேரணையைக் கொண்டு வந்தார். மட்டக்களப்புத் தொகுதியின் அரசாங்க சபை உறுப்பினராக இருந்த நல்லையா ‘சிங்களமும் தமிழும்’ அரசகரும மொழிகளாக இருக்க வேண்டும் என ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் பிரேரணைக்கு ஒரு திருத்தத்தை முன்மொழிந்தார். அத்திருத்தம் அரசாங்க சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் டொனமூர் காலம் முழுவதும் ‘சிங்களமும் தமிழும்’ அரசகரும மொழி என்ற தீர்மானம் நடைமுறைக்கு வரவில்லை. 1951 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த டி.எஸ். சேனநாயக்கா மரணமடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட தலைமைத்துவப் போட்டியின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவராக இருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கா கட்சியிலிருந்து வெளியேறினார். அவர் 1951 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி சிறீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கினார். அதன்போது கட்சியின் கொள்கைத்திட்டத்தில் ‘சிங்களமும் தமிழும் அரசகரும மொழிகளாக இருக்கவேண்டும்’ என்றே கூறப்பட்டது. 1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழரசுக்கட்சி தமிழ்மொழிக்கு அரசகரும மொழி அந்தஸ்துக் கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை தொடர்ச்சியாக முன்வைத்தது. 1953 ஆம் ஆண்டு ஹர்த்தாலைத் தொடர்ந்து பிரதமராக இருந்த டட்லி சேனநாயக்கா பதவிவிலக, சேர்.ஜோன். கொத்தலாவல பிரதமராகப் பதவியேற்றார். 1954 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் எலிசபெத் மகாராணியார் இலங்கைக்கு வருகை தந்தார். அவரது வரவேற்பு நிகழ்வில் நிதி அமைச்சரும் சபை முதல்வருமான ஜே.ஆர். ஜெயவர்த்தனா ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் பேசினார். அப்பேச்சில் தமிழ் மொழிபெயர்ப்புக்கூட இடம்பெறவில்லை. இதனை எதிர்க்கும் முகமாக பிரதமர் கொத்தலாவலை யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வப் பயணத்தை மேற்கொண்ட போது தமிழரசுக்கட்சி கறுப்புக்கொடிப் போராட்டத்தை நடாத்தியது. யாழ் நகர மண்டப மேடையில் பிரதமர் ஏறியதும் தமிழரசுக்கட்சி வாலிப முன்னணியைச் சேர்ந்தவர்கள் மேடைக்கு அருகே சென்று கறுப்புக்கொடியைக் காட்டி “பிரதமரே திரும்பிப் போ” எனக்கோசம் எழுப்பினர். பொலிசார் குண்டாந்தடி நடாத்தி ஆர்ப்பாட்டத்தைக் கலைத்தனர். பிரதமர் கொத்தலாவலை கொக்குவிலில் நடந்த வரவேற்பு நிகழ்வில் கொக்குவில் இந்துக்கல்லூரியின் அதிபர் ஹண்டி பேரின்பநாயகத்தின் வேண்டுகோளுக்கிணங்க சிங்களம், தமிழ் இரண்டையும் அரசகரும மொழிகளாக்கும் வகையில் அரசியல் யாப்பு மாற்றப்படும் எனக் குறிப்பிட்டார். பிரதமரின் இந்தக்கருத்துக்குத் தீவிர சிங்கள இனவாத அமைப்புகளான ‘திரி சிங்கள பெரமுனை’, தகநாயக்காவின் ‘பாஸா பெரமுனை’ என்பன கடும் எதிர்பைத் தெரிவித்தன. இதனால் பிரதமர் கொழும்பு திரும்பியதும் அடுத்த நாளே தான் தெரிவித்த கருத்தை மறுத்து மறுப்பறிக்கை வெளியிட்டார். 1954 ஆம் ஆண்டிலிருந்து ‘சிங்களம் மட்டும் அரச கரும மொழி’ என்ற கோரிக்கை வலுப்பெறத் தொடங்கியது. லங்கா சமசமாஜக்கட்சி ஆரம்பகாலம் தொடக்கமே ‘சிங்களமும் தமிழும்’ அரசகரும மொழி என்பதில் உறுதியாக நின்றது. 1954 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் கொழும்பு நகர மண்டபத்தில் ‘சிங்களமும் தமிழும்’ அரசகரும மொழி என்பதை வலியுறுத்தும் வகையில் ஒரு கூட்டத்தை நடாத்தியது. இக்கட்சியிலிருந்து விலகி புரட்சிகர லங்கா சமசமாஜக் கட்சியை உருவாக்கிய பிலிப் குணவர்த்தனா தலைமையிலான குழுவினர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டனர். இத்தாக்குதலில் பலர் காயமடைந்தனர். 1955 ஆம் ஆண்டு சிங்களமும் தமிழும் அரசகரும மொழிகளாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் டாக்டர்.என்.எம். பெரேரா பாராளுமன்றத்தின் ஒரு பிரேரணையைக் கொண்டு வந்தாார். பண்டாரநாயக்கா அதனை எதிர்த்து “சிங்களமும் மட்டும் அரசகரும மொழியாக இருக்க வேண்டும்” என வாதிட்டார். இரண்டையும் அரசகரும மொழியாக்கினால் தவிர்க்க முடியாத வகையில் சிங்கள மொழி அருகிச் சுருங்கிவிடும் என்ற பயம் சிங்கள மக்கள் மத்தியில் இருப்பதாகக் குறிப்பிட்டார். அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் சிங்கள மொழியை அரசகரும மொழியாக்கும் வகையில் சிங்கள மொழி ஆணைக்குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை டி.எஸ். சேனநாயக்கா காலத்திலேயே முன்வைத்தது. டி.எஸ். சேனநாயக்கா அதனை ஏற்கவில்லை. இதனால் உத்தியோகப் பற்றற்ற ஆணைக்குழுவை அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் 1954 இல் உருவாக்கியது. இவ் ஆணைக்குழு இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று மக்கள் அபிப்பிராயத்தைக் கேட்டறிந்தது. முடிவில் 1956 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி, இலங்கையின் 8 ஆவது சுதந்திர தினத்தின்போது தனது 124 பக்க அறிக்கையை ஆங்கிலத்தில் வெளியிட்டது. அறிக்கையின் தலைப்பு ‘பௌத்தத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம்’ என்பதே. கிறிஸ்தவர்களின் மதமாற்றம், சிங்கள மொழிக்குரிய இடம் அளிக்கப்படாமை, தமிழர்களின் செல்வாக்குப் போன்றவற்றை அறிக்கை குறிப்பிட்டது. ஆணைக்குழுவின் தலைவராக இருந்து ஓய்வுபெற்ற பிரதமர் நீதியரசர் ‘ஆதர் விஜயவர்த்தனா’, அறிக்கையின் இறுதியில் ‘சிங்களம் மட்டும்’ அரசகரும மொழியாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். 1955 ஆம் ஆண்டு டிசம்பரில் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் வருடாந்த மாநாடு இடம்பெற்றது. அதில் ‘சிங்களம் மட்டும் அரசகரும மொழி’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. “நான் பதவிக்கு வந்ததும் சிங்களம் மட்டும் அரசகரும மொழி சட்டத்தை நிறைவேற்றுவேன்” என பண்டாரநாயக்கா அறிவித்தார். இம்மாநாட்டில் சிறீலங்கா சுதந்திரக்கட்சி நிறைவேற்றிய மொழிக்கொள்கை இரண்டு அம்சங்களை உள்ளடக்கியிருந்தது. சிங்களம் மட்டும் அரசகரும மொழியாக இருக்கும்; தமிழ்மொழிக்கு நியாயமான அளவு உபயோக அந்தஸ்து வழங்கப்படும் என்பதே அவை இரண்டுமாகும். தமிழ்மொழியின் உபயோகம் தொடர்பாக பண்டாரநாயக்கா பின்வருமாறு விளக்கம் கொடுத்தார். “பாராளுமன்றத்தில் சிங்களமும் தமிழும் சம அந்தஸ்தைக் கொண்டவையாக இருக்கும். விவாதம், சட்டம் இயற்றுதல் என்பன இரு மொழிகளிலும் இடம்பெறும். ஆனால் அரச நிர்வாகம் சிங்கள மொழியில் மட்டுமே இடம்பெறும். நீதிமன்றங்கள் சிங்களத்திலும், தமிழ்மொழியிலும் கடமையாற்றலாம். கல்வி மொழியாக சிங்களவர்களுக்குச் சிங்கள மொழியும், தமிழர்களுக்குத் தமிழ்மொழியும் இருக்கும்.” இத்தீர்மானத்தை எதிர்த்து சிறீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து தமிழர்கள் வெளியேறினார். 1956 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் களனி மாநாடு இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிறீலங்கா சுதந்திரக்கட்சியைப் போன்று ‘சிங்களம் மட்டும் அரசகரும மொழி’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து ஐக்கிய தேசியக்கட்சியில் அங்கம் வகித்த தமிழர்கள் தமது பதவிகளை இராஜினாமாச் செய்து வெளியேறினர். அவர்களில் ஒருவர்தான் தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் பட்டிருப்புத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த இராஜமாணிக்கம். இவர் தற்போது மட்டக்களப்புப் பாராளுமன்ற உறுப்பினரான சாணக்கியனின் தாத்தா ஆவார். ஐக்கிய தேசியக் கட்சியின் இத்தீர்மானத்தை எதிர்த்து 1956 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி தமிழ்ப்பிரதேசம் எங்கும் ஹர்த்தால் போராட்டம் தமிழரசுக்கட்சி தலைமையில் நடாத்தப்பட்டது. தமிழ்ப்பிரதேசத்தில் இடம்பெற்ற முதலாவது ஹர்த்தால் போராட்டம் இதுதான். போராட்டம் பெரு வெற்றியீட்டியது. ஐக்கிய தேசியக் கட்சியின் களனி மாநாட்டுத் தீர்மானத்தைத் தொடர்ந்து சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரான பண்டாரநாயக்கா தான் ஆட்சிக்கு வந்ததால் 24 மணித்தியாலத்திற்குள் தனிச்சிங்களச் சட்டத்தைக் கொண்டு வருவேன் என அறைகூவல் விடுத்தார். பிக்கு எக்ஸத் பெரமுனை உட்பட பல பௌத்த நிறுவனங்கள் பண்டாரநாயக்காவிற்கு ஆதரவளிக்க முற்பட்டன. 1956 ஆம் ஆண்டு தேர்தலின் போது சிறீலங்கா சுதந்திரக்கட்சி, பிலிப் குணவர்த்தனா தலைமையிலான புரட்சிவாத சமசமாஜக்கட்சி, டபிள்யூ. தகநாயக்கா தலைமையிலான பாஸா பெரமுனை, சி.பி.டி. சில்வா தலைமையிலான குழு என்பன பண்டாரநாயக்கா தலைமையில் ‘மக்கள் ஐக்கிய முன்னணி’ என்ற கூட்டமைப்பை உருவாக்கிப் போட்டியிட்டன. பண்டாரநாயக்கா ‘பஞ்ச பல வேகய’ என அழைக்கப்படுகின்ற ஐம்பெரும் சக்திகளை அணிதிரட்டினார். சிங்கள ஆசிரியர்கள், சிங்களத் தொழிலாளர்கள், சிங்கள விவசாயிகள், சிங்கள ஆயுர்வேத வைத்தியர்கள், பௌத்த மதகுருமார்கள் என்போரே அவ் ஐம்பெரும் சக்திகளாவார். இடதுசாரிக் கட்சிகளுடன் போட்டித் தவிர்ப்பு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது. தேர்தலில் மக்கள் ஐக்கிய முன்னணி பெரு வெற்றியீட்டியது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு 8 ஆசனங்கள் மட்டுமே கிடைத்தன. எதிர்க்கட்சிப் பதவிகூட அதற்கு கிடைக்கவில்லை. சமசமாஜக் கட்சியின் தலைவரான என்.எம். பெரேரா எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றார். மக்கள் ஐக்கிய முன்னணி 60 இடங்களில் போட்டியிட்டு, 51 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது. பண்டாரநாயக்கா பிரதமராகப் பதவியேற்றார். தமிழரசுக் கட்சிக்கு முதன்முதலாக 10 ஆசனங்கள் கிடைத்தது. சிங்களப் பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் செல்வாக்குச் சிதைந்ததைப்போல தமிழ்ப்பிரதேசத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்குச் சிதைந்தது. இதன்பின்னர் தமிழ் காங்கிரஸ் கட்சியினால் மேலெழவே முடியவில்லை. பண்டாரநாயக்கா 1956 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி அரசாங்கத்தை அமைத்ததைத் தொடர்ந்து இடம்பெற்ற சிம்மாசனப் பிரசங்கத்தில், மகாதேசாதிபதி ஒலிவர் குணதிலக, புதிய அரசாங்கம் சிங்களம் மட்டும் சட்டத்தை உருவாக்குவதற்கு முன்னுரிமை வழங்கும் எனக் குறிப்பிட்டார். இதற்கேற்ப பிரதமர் பண்டாரநாயக்கா 1956 ஆம் ஆண்டு மே மாதம் முதல் வாதத்தில் சட்ட வரைஞரை அழைத்து சிங்களம் மட்டும் அரசகரும மொழிச்சட்டத்தை தயாரிக்குமாறு கட்டளையிட்டார். அச்சட்டத்தில் தமிழ்மொழி உபயோகம் பற்றிய ஏற்பாடுகளையும் சேர்க்குமாறு குறிப்பிட்டார். தமிழ்மொழிக்கு உபயோக அந்தஸ்து வழங்குவதை மக்கள் ஐக்கிய முன்னணியில் அங்கம் வகித்த பாஸா பெரமுனை கட்சியினர் விரும்பவில்லை. இக்கட்சியின் தலைவர்களில் ஒருவராக விளங்கிய பேராசிரியர் எவ்.ஆர். ஜெயசூரியா தமிழ்மொழியின் உபயோக அந்தஸ்தை எதிர்த்துப் பாராளுமன்றப் படிகளில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்தார். இறுதியில் தமிழ்மொழிக்கு உபயோக அந்தஸ்து வழங்கும் யோசனை கைவிடப்பட்டது. 1956 ஆம் ஆண்டு யூன் மாதம் 5 ஆம் திகதி சிங்களம் மட்டும் மசோதா பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 1956 ஆனி 5 – தனிச்சிங்களச் சட்டமும் சத்தியாக்கிரகப் போராட்டமும் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பண்டாரநாயக்கா அரசாங்கம் சிங்கள மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிப்படி, தனிச்சிங்களச் சட்டத்தை 1956 ஆனி 5 இல் பாராளுமன்றத்துக்குக் கொண்டு வந்தது. இதன்போது தமிழரசுக் கட்சி தமிழ்பேசும் மக்களின் எதிர்ப்பைக்காட்ட பாராளுமன்ற வாசலில் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது. இரவோடு இரவாக பாராளுமன்றத்தைச் சுற்றி முள்வேலிகள் அமைக்கப்பட்டன. ஆயுதம் தாங்கிய பொலிஸாரும் சுற்றி நிறுத்தப்பட்டனர். பண்டாரநாயக்காவினால், சிங்கள இனவாதிகள் ‘எல்லாள – துட்டகைமுனு யுத்தம்’ என்ற கோசத்தோடு காலி முகத்திடலுக்குக் கொண்டுவரப்பட்டனர். அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி சத்தியாக்கிரகத்தின் நோக்கத்தை விளக்கி, சிங்களத்தில் துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டது. அப்பிரசுரங்களை விநியோகிக்கச் சென்ற தொண்டர்கள் காடையர்களால் தாக்கப்பட்டனர். தாக்குதலையும் பொருட்படுத்தாது தமிழரசுக் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் காலி முகத்திடலின் தென்பகுதியிலிருந்து பாராளுமன்றத்தை நோக்கி நடந்தனர். சிறிது தூரம் செல்வதற்கிடையில் சிங்கக்கொடி தாங்கிய காடையர் கூட்டம் அவர்கள் மீது பாய்ந்து தடிகளாலும், கைகளாலும், கால்களாலும் தாக்குதலை நடாத்தினர். கு. வன்னியசிங்கத்தின் சட்டை கிழிக்கப்பட்டுத் தாக்கப்பட, அவர் மூக்கிலிருந்து இரத்தம் வடிந்தது. ஈ.எம்.வி. நாகநாதனும் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டார். தாக்கிய தடி முறிவடைந்ததனால் இரும்பு மனிதன் எனப் பெயர்பெற்றார். செல்வநாயகத்துக்கு முன்னால் அவரது இரு மகன்களும் தாக்கப்பட்டனர். தொண்டர் நா. செல்லையாவின் காது கடித்துக் கிழிக்கப்பட்டது. திடீரென்று பெருமழை பெய்ய காடையர் கூட்டம் கலைந்து ஓடியது. இக்கட்டத்தில் திருகோணமலை, மட்டக்களப்பிலிருந்து வந்த தொண்டர்களும் கலந்துகொண்டனர். சத்தியாக்கிரகிகள் தொடர்ந்து அவர்களையும் அழைத்துக்கொண்டு செல்லும்போது ஒரு கட்டத்தில் பொலிஸார் அவர்களைத் தடுத்து நிறுத்த, சத்தியாக்கிரகிகள் அனைவரும் புற்தரையில் அமர்ந்து போராட்டத்தை நடத்தினர். இந்நிலையில் காடையர் கூட்டம் ஆயிரக்கணக்கில் அதிகரித்து சத்தியாக்கிரகிகளைச் சுற்றி வளைத்து, பொலிஸார் பார்த்துக்கொண்டிருக்கக் கூடியதாகவே அவர்களை நோக்கி கற்களை வீசியது. இக்கல்வீச்சினால் வி.என். நவரத்தினம் காயமுற்று ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அமிர்தலிங்கமும் கல்வீச்சுக்கு உள்ளாகினார். அவரின் நெற்றி பிளக்கப்பட்டது. இதன்போது தலைவர்களைவிட சத்தியாக்கிரகிகளும் பலர் காயமுற்றனர். பகல் 1 மணிக்கு தலைவர்கள் ஆலோசனை செய்து சத்தியாக்கிரகத்தை நிறுத்தி சத்தியாக்கிரகிகளை திருப்பி அனுப்பினார்கள். இத்தினத்தில் காலி முகத்திடலில் மாத்திரமல்ல, கொழும்பில் பல இடங்களிலும்கூட தமிழ் மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகினர். அம்பாறைக் கலவரம் காலி முகத்திடல் சத்தியாக்கிரகத் தாக்குதலைத் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்கள் கொழும்புக்கு வெளியிலும் பரவியது. அம்பாறை சிங்களக் குடியேற்றப் பகுதிகளில் தமிழர்கள் திட்டமிட்டுத் தாக்கப்பட்டனர். கல்லோயா அபிவிருத்திச் சபையின் கீழ் பணியாற்றிய தமிழ் ஊழியர்களும் அவர்களது குடும்பங்களும் மோசமாகத் தாக்கப்பட்டனர். இதனால் கோபமுற்ற தழிழ் மக்கள் துறைநீலாவணையில், படையினரின் ஜீப் வண்டியைத் தாக்கி எரியூட்டினர். இவ்வனர்த்தங்கள் நடைபெற்றதன் பின்னரே அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனம் செய்து, ஒழுங்கை நிலைநாட்ட அரசு முன்வந்தது. திருகோணமலை யாத்திரை 1956 யூன் 15 இல் தனிச்சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அகில இலங்கைத் தமிழரசுக்கட்சி இதனை எதிர்த்துத் திருகோணமலை யாத்திரையை ஒழுங்கு செய்தது. ஊர்காவற்துறை, பருத்தித்துறை, மன்னார், திருக்கோவில் என்பவற்றிலிருந்து தலைவர்களும் தொண்டர்களும் கால்நடையாகத் திருகோணமலையை நோக்கிப் பயணம் செய்தனர். பண்டாரநாயக்கா அரசாங்கம் முதலில் இதனைத் தடைசெய்யப் போவதாக அறிவித்தாலும் பின்னர் பணிந்து பாதுகாப்புக் கொடுத்தது. “திருமலைக்குச் செல்லுவோம், சிறுமை அடிமை வெல்லுவோம்” என்ற பண்டிதர் இளமுருகனாரின் பாடலை இசைத்தபடி யாத்திரை சென்றனர். பத்து நாட்கள் நடந்து ஆவணி 16 ஆம் திகதி திருகோணமலையை அடைந்தனர். தமிழரசுக் கட்சியின் நான்காவது மாநாடு 1956 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 16, 17, 18 ஆம் திகதிகளில் திருகோணமலை மாநாட்டில் வன்னியசிங்கமே மீண்டும் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார். இதன்போது நான்கு அம்சக் கோரிக்கையைத் தீர்மானமாக எடுத்தனர். தமிழ்பேசும் மக்கள் வாழும் இடங்களில் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதோ மொழிவாரிச் சமஸ்டி அரசுகளை உருவாக்குதல். தமிழ்மொழியையும் ஆட்சி மொழியாக்கி, சிங்களமொழிக்குச் சமமான நிலையில் அதனை வைத்தல். தற்போதைய குடியுரிமைச் சட்டங்கள் நீக்கப்பட்டு, இலங்கையில் வாழும் அனைவருக்கும் குறுகிய வதிவிடக் காலத்தைத் தகுதியாகக்கொண்டு குடியுரிமை வழங்குதல். பாரம்பரியத் தமிழ்ப் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை உடன் நிறுத்துதல். முஸ்லீம் உறுப்பினர்களின் வேண்டுகோளின் பின்னர் ஒரு சுயாட்சித் தமிழரசு என்ற கட்சியின் நோக்கத்தை மாற்றி, சுயாட்சித் தமிழரசும் சுயாட்சி முஸ்லீம் அரசும் எனத் தீர்மானம் எடுக்கப்பட்டது. இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, அரசிற்கு 1957 ஓகஸ்ட் 20 ஆம் திகதி வரையான கால எல்லை அவகாசமாகக் கொடுக்கப்பட்டது. கோடீஸ்வரன் வழக்கு 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டத்திற்கு எதிராக அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தைச் சேர்ந்த கேகாலை கச்சேரியில் பணிபுரிந்த செ. கோடீஸ்வரன் கேகாலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதற்கு அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆதரவு கொடுத்தது. அக்கட்சியைச் சேர்ந்த மு. திருச்செல்வம் வழக்காளி சார்பில் ஆஜரானார். கேகாலை மாவட்ட நீதிபதி ஒ.எஸ்.டி கிரெஸ்டர், “தனிச்சிங்களச் சட்டம் அரசியல் யாப்பின் 29 ஆவது பிரிவிற்கு முரணாகவுள்ளதால் செல்லாது” எனத் தீர்ப்பளித்தார். சிங்கள மொழித் தேர்ச்சியின்மையைக் காரணம்காட்டி அரச ஊழியரை தண்டிக்க முடியாதென்றும் கூறினார். இத்தீர்ப்பை எதிர்த்து அரசாங்கம் இலங்கை உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தது. உயர் நீதிமன்றம் அரசாங்க ஊழியர் ஒருவருக்கு அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடுக்கும் உரிமை இல்லை எனக்கூறி மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தள்ளுபடி செய்தது. அரசாங்க எழுதுவினைஞர் சங்கம் இலங்கை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பிரித்தானியாவின் உயர் நீதிமன்றமான கோமறைக் கழகத்திற்கு மேன்முறையீடு செய்தது. தமிழரசுக் கட்சி இக்காலத்தில் (1965-1970) ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தில் இணைந்திருந்தது. மு. திருச்செல்வம் உள்ளூராட்சி அமைச்சராகப் பதவி ஏற்றிருந்தார். “அரசாங்கம் மாவட்ட சபை தரப்போகின்றது. வழக்கை வாபஸ் பெறுங்கள்” எனத் தமிழரசுக் கட்சியும், திருச்செல்வமும் அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தை நிர்ப்பந்தித்தனர். மு. திருச்செல்வம் ஒருபடி மேலே சென்று, வழக்கைத் தொடர்ந்து கொண்டு சென்றால் எமது சட்ட ஆலோசனைகள் அரசாங்கத்திற்கு வழங்கப்படும் என எச்சரித்தார். எனினும் அரசாங்க எழுதுவினைஞர் சங்கம் இவ்வச்சுறுத்தலுக்குப் பணியாது ச. இரங்கநாதன், சேர்டிங்கிள் புட் Q.C இன் தலைமையில் மூத்த சட்டத்தரணிகள் க. சர்வானந்தா, எம்.ஏ.டி. வில்லியம், மாணிக்க வாசகர் அண்டவூட், குரோசட் தம்பையா ஆகியோரின் வழிகாட்டலுடன், லூசியன் சிறில் பெரேரா வழக்கைக் கொண்டு நடாத்தினார். கோமறைக்கழகத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது ஆங்கிலச் சட்டமேதை சேர்டிங்கிள் புட் Q.C எதுவிதக் கட்டணங்களும் பெறாது தமிழர்களுக்காக வாதாடினார். கோமறைக்கழகம், “அரச ஊழியர் அரசாங்கத்திற்கு எதிராக வழக்காட முடியாது” என்ற இலங்கை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தள்ளுபடி செய்தது. தனிச்சிங்களச் சட்டத்தின் செல்லுபடியாகாத தன்மையை ஆராய்ந்து தீர்ப்பளிக்கும்படி இலங்கை உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிடப்பட்டது. 1972 ஆம் ஆண்டு புதிய யாப்பு வந்ததும் கோமறைக் கழகத்திற்கு அதிகாரம் இல்லாததினால் இவ்வழக்கு கைவிடப்பட்டது. சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம் அரசு, மோட்டார் வாகனங்களின் இலக்கத் தகடுகளில் ஆங்கில எழுத்துகளுக்குப் பதிலாக சிங்கள ‘ஸ்ரீ’ எழுத்தைப் பிரயோகிக்கும் சட்டத்தை 1957 ஜனவரியில் கொண்டு வந்தது. அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி இதனை எதிர்த்து சட்ட மறுப்புப் போராட்டத்தை 1957 ஜனவரி 19 இல் ஆரம்பித்தது. யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா, மட்டக்களப்பு, மன்னார் என்பவற்றில் போராட்டம் நடைபெற்றது. முதலில் ஒருநாள் சட்டமறுப்பாக தமிழ் எழுத்துகளைப் பொறித்து வாகனங்கள் செல்லவிடப்பட்டன. பின்னர் இரண்டாம் கட்டமாக நிரந்தரமாகவே தமிழ் எழுத்தினைப் பொறித்தனர். 3 ஆவது கட்டமாக எல்லா மோட்டார் வண்டிச் சொந்தக்காரர்களையும் தமிழ் எழுத்தை பொறிக்கும்படி வேண்டிக் கொள்ளப்பட்டது. தமிழ் எழுத்துப் பொறித்த தகடுகளை தொண்டர்கள் தாங்களே மாட்டிக்கொண்டனர். இப்போராட்டத்துக்கு எதிராக அரசாங்கம் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தியாகி நடராசன் கொலை (1957 பெப்ரவரி 4) சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை துக்கதினமாகக் கொண்டாடும்படியும் கடைகளை அடைத்துக் கறுப்புக் கொடிகளைப் பறக்கவிடும்படியும் அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி கோரிக்கை விட்டது. தமிழரசு வாலிப முன்னணி இதில் தீவிரமாகச் செயற்பட்டது. பெண் தொண்டர்கள் திருமதி. கோமதி வன்னியசிங்கம் தலைமையில் திறக்கப்பட்ட கடைகளின் முன்னால் சத்தியாக்கிரகம் செய்தனர். காரைநகரில் திருமதி. நாகம்மா வேலுப்பிள்ளை தலைமையில் பஸ் வண்டிகளின் முன் படுத்து சத்தியாக்கிரகம் செய்தனர். திருகோணமலையில் சிங்களவரின் ஆதிக்கத்திலிருந்த மரக்கறிக் கடைக்கருகில் உள்ள கம்பத்தில் கறுப்புக்கொடி கட்ட நடராசன் என்ற இளைஞன் ஏறியபோது, மறைந்து நின்ற சிங்களவர் ஒருவர் துப்பாக்கியால் சுட இளைஞன் வீழ்ந்து இறந்தார். அமைச்சர்கள் வருகையும், கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டமும், பகிஸ்கரிப்பும் தனிச்சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாள் முதல் அரசாங்க அமைச்சர்கள் வடக்கு – கிழக்கிற்குச் செல்லத் தயாராகினர். உதவி அமைச்சர் எம்.பி.டி. சொய்ஸா யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் வருடாந்த மாநாட்டுக்கு வர ஆயத்தமானார். தனிச்சிங்களக் கொள்கையை தமிழ் மக்களுக்கு விளக்கப்போவதாகவும் அறிக்கை விட்டார். அவர் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் வந்திறங்கிய போது அவருடைய மோட்டார் வண்டியை நகரவிடாது தொண்டர்கள் அவரது வண்டியின் முன் படுத்துக்கொண்டனர். பொலிஸார் தொண்டர்களை தாக்கியும் தூக்கியும் அப்புறப்படுத்தினர். மாநாடு நடைபெறவிருந்த நகர மண்டபமானது உதவி அமைச்சரின் வரவை எதிர்க்கும் மக்களால் நிரப்பப்பட்டு காணப்பட்டது. மாநாட்டில் அமைச்சர் பேசமாட்டார் என உறுதியளித்த பின்னரே மக்கள் விலகிக்கொண்டனர். அமைச்சர் நண்பகல் புகை வண்டியிலேயே கொழும்பு திரும்பினார். கிழக்கு மாகாணம் சென்ற கல்வி அமைச்சர் தகநாயக்கவுக்கும் பலத்த எதிர்ப்புக் கிடைத்தது. மருதமுனையில் அவரின் காருக்கு செருப்பு வீசப்பட்டது. மந்திரியின் கார் வந்தபோதும் கறுப்புக்கொடி காட்டப்பட்டது. நிதி அமைச்சர் ஸ்டான்லி டீ செய்ஸா உட்பட ஆறு அமைச்சர்கள் மன்னாருக்கு சென்றபோது அங்கு கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பண்டா – செல்வா ஒப்பந்தம் (1957 யூலை 26) முன்னர் தீர்மானித்தது போலவே 1957 ஓகஸ்ட் 20 அகில இலங்கைத் தமிழரசுக்கட்சி போராட்டத்துக்காக ஆயத்தமாகியது. தமிழ்பேசும் மக்களின் பலத்த எதிர்ப்பைக் கண்ட பண்டாரநாயக்கா தமிழரசுக் கட்சியுடன சமரசத்துக்கு வர முயற்சி செய்தார். பல இரவுகள் இரு தரப்புக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்ற பின்னர் 1957 யூலை 26 ஆம் திகதி நள்ளிரவு பண்டா – செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. 1957 ஓகஸ்ட் 20 ஆம் திகதி சத்தியாக்கிரகத்தைத் தடுக்கும் முகமாகவே ஒப்பந்தம் செய்ய பண்டாரநாயக்கா இணங்கினார். தமிழ்மொழியை இலங்கையின் சிறுபான்மையோரின் மொழியாக அங்கீகரிப்பது என்றும், சிங்களம் அரசகரும மொழி என்பதைப் பாதிக்காத வகையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நிர்வாக மொழியாக தமிழ்மொழி ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசுவோரல்லாத சிறுபான்மையோருக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்படுமென்றும், பிரதேச சபைகளினை உருவாக்கி அதற்கு அதிகாரம் வழங்கப்படுமென்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது. குறிப்பாக விவசாயம், கூட்டுறவு, குடியேற்றம், கல்வி, சுகாதாரம், கைத்தொழில், மீன்பிடி சமூகசேவை, மின்சாரம், நெடுஞ்சாலைகள் தொடர்பான அதிகாரங்கள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. மேலும் இரண்டு பிரதேச சபைகள் இணைந்து செயற்படுவதற்கும் இடமளிக்கப்படும் எனக் கூறப்பட்டது. குடியேற்றங்கள் தொடர்பான அதிகாரங்கள் பிரதேச சபையிடம் இருக்கும் எனவும் கூறப்பட்டது. தமிழரசுக் கட்சி சிறப்பு மாநாடு – மட்டக்களப்பு (1957 யூலை 27, 28) திருமலைத் தீர்மானத்தின் போராட்டம் தொடர்பான இறுதிப் பிரகடனத்தை விடுப்பதற்காக மட்டக்களப்பில் 1957 யூலை 27, 28 திகதிகளில் சிறப்பு மாநாடு கூட்டப்பட்டது. மாநாடு ஆரம்பிப்பதற்கு முதல்நாள் இரவு ஒப்பந்தம் கைச்சாத்தானதால் போராட்டப் பிரகடனத்துக்கான மாநாடு, ஒப்பந்தத்தை பரிசீலிக்கும் மாநாடாக மாறியது. ஒப்பந்தம் தொடர்பாக காரசாரமான விவாதம் நடைபெற்றபோதும் ஒப்பந்தத்தை ஏற்பதென ஏகமானதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்வரும் காரணங்களுக்காக ஒப்பந்தத்தை ஏற்பதென முடிவு எடுக்கப்பட்டது. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அரசாங்க உதவியுடன் நடைபெற்ற சிங்களக் குடியேற்றம் ஒப்பந்தத்தினால் உடனடியாக நிறுத்தப்படும். தேசிய சிறுபான்மையோரின் மொழியாக ‘தமிழ்’ உத்தியோக அங்கீகாரம் பெறும். தமிழே வடக்கு – கிழக்கு மாகாண நிர்வாக மொழியாக இருக்கும். நாட்டின் எப்பாகத்திலும் தமிழ் மக்கள் தம் கருமங்களை அரசாங்கத்தோடு தமிழில் ஆற்றவும், தம் பிள்ளைகளுக்குத் தமிழ்மொழியில் கல்வியூட்டி தமிழ்ப் பண்பாட்டில் வளர்க்கவும் உள்ள உரிமை பாதுகாக்கப்படும். பிரதேச சபைகள் சட்டத்தின் மூலம் பெருமளவு பிரதேச சுயாட்சி மக்களுக்கு வழங்கப்படும். ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட பின்னரும், இணைப்பாட்சிக்கு உட்பட்ட மொழிவாரிச் சுயாட்சித் தமிழ் அரசு அல்லது அரசுகளை நிறுவுவது, நாடு முழுவதிலும் சிங்களம் மற்றும் தமிழுக்கு சமமான அந்தஸ்தை வழங்குவது, அனைவருக்கும் குடியுரிமையை உறுதி செய்வது போன்ற கோரிக்கைகளை கட்சி தொடர்ந்து வலியுறுத்தியது. இது இடைக்கால தீர்வேயொழிய இறுதித் தீர்வு அல்ல எனவும் கூறப்பட்டது. ஐக்கியதேசியக் கட்சி ஒப்பந்தத்தைக் காரசாரமாக எதிர்த்தது. ‘முதல் அடி’ என்ற தலையங்கத்தில் துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டது. அதில் “பண்டாரநாயக்கா வடக்கு – கிழக்கைத் தமிழர்களுக்கு விற்றுவிட்டார்” எனப் பிரசாரம் செய்யப்பட்டது. ஜே.ஆர். ஜெயவர்த்தனா கண்டி யாத்திரை செல்லும் போது இம்புல் கொடையில் அரச சக்திகளினால் அவ் யாத்திரை முறியடிக்கப்பட்டது. எஸ்.டி. பண்டாரநாயக்காவே இதில் முன்னணி வகித்தார். ஒப்பந்தத்தை அமுலாக்க அரசு எந்த முயற்சியும் செய்யாமலிருந்தது (எட்டு மாதங்களாக). மறுபக்கத்தில் சிங்கள ஸ்ரீ பதித்த இலக்கத் தகடுகள் உள்ள பஸ்களை அரசாங்கம் வடக்கு – கிழக்குக்கு அனுப்ப முயற்சி செய்த வேளை அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டத்தை மீளவும் ஆரம்பித்தது. வடக்கு – கிழக்கில் உள்ள பஸ் வண்டிகளில் உள்ள இலக்கத் தகடுகள் தொண்டர்களால் தமிழ் ‘ஸ்ரீ’யாக மாற்றப்பட்டது. முதல் இலக்கத் தகட்டை மாற்றும் போராட்டத்தை செல்வநாயகம் தானே ஆரம்பித்து வைத்தார். இதனை எதிர்க்கும் வகையில் சிங்களத் தீவிரவாதிகள் தென்னிலங்கையில் தமிழ்ப்பெயர்களை தார்பூசி அழித்தனர். 1958 ஏப்ரல் 8 இல் பிக்கு எக்ஸத் பெரமுனவின் சார்பில், பண்டாரநாயக்காவின் வீட்டுக்கு முன் ஒப்பந்தத்தைக் கிழித்தெறியுமாறு பௌத்தப் பிக்குகள் சத்தியாக்கிரகம் இருத்தனர். சுகாதார மந்திரி விமலா விஜயவர்தன இதற்கு நேரடி ஆதரவு வழங்கினார். பண்டாரநாயக்கா அவர்களின் முன்னாலேயே ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தார். அன்றைய தினமே பாராளுமன்றத்திலும் அதனை அறிவித்தார். சிங்கள ‘ஸ்ரீ’ பொறித்த பஸ் வண்டிகள் மீண்டும் தமிழ்ப் பிரதேசத்தில் ஓடுமென்றும், அவற்றை மாற்ற முற்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் மலைநாட்டில் சிங்களத் தீவிரவாதிகள் தமிழ் எழுத்துகளைத் தார்பூசி அழித்ததை தமிழ்த் தொழிலாளர்கள் எதிர்த்தனர். இப்போராட்டத்தின் போது பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் பொகவந்தலாவையைச் சேர்ந்த பிரான்சிஸ், ஐயாவு என்ற இரு தொழிலாளர்கள் மரணமடைந்தனர். கொலையுண்டவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் 1958 ஏப்ரல் 05 சனிக்கிழமை வடக்கு – கிழக்கு எங்கும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. செனற் சபைக்கு தமிழரசுக் கட்சியின் சார்பில் ஜி. நல்லையா என்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டார். 1958 ஏப்ரல் 10 இல் சிங்கள ‘ஸ்ரீ’ பொறித்த பஸ் வண்டிகள் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஓடத் தொடங்கும் போது தொண்டர்கள் தமிழ் ‘ஸ்ரீ’யை மாற்றும் முயற்சியைத் தொடர்ந்தனர். பொலிஸாருக்கு அறிவித்தபின் யாழ் பஸ் நிலையத்தில் ஜி. நல்லையா, சிறிதரன், அமிர்தலிங்கம் ஆகியோர் தமிழ் ‘ஸ்ரீ’யை எழுதியபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். அவர்களுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பண்டாரநாயக்காவின் தேசியமயக் கொள்கை பண்டாரநாயக்கா தனியார் நிறுவனங்கள் பலவற்றைத் தேசிய மயமாக்கினார். பஸ் போக்குவரத்து, காப்புறுதி, பொற்றோலியம் என்பன தேசியமயமாக்கப்பட்ட போது தமிழரசுக்கட்சி அவற்றினை ஆதரித்தது. அதேவேளை நெற்காணிச் சட்டம், பாடசாலைகள் தேசியமயம், அந்நியப் படைத்தளங்கள் தேசியமயம் என்பவற்றை எதிர்த்தது. தேசியமயம் என்ற பெயரில் சிங்களமயமாக்கல் இடம்பெற்றமையே எதிர்ப்பிற்கான காரணமாகும். தமிழரசுக் கட்சியின் 6 ஆவது மாநில மாநாடு 1958 ஆம் ஆண்டு மே மாதம் 23, 24, 25 ஆம் திகதிகளில் ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டு தொண்டர்கள் கைது, சிங்களவரின் தமிழ் அழிப்பு இயக்கம் வளர்ச்சியடைதல், பலாத்காரச் சம்பவங்கள் வளர்ச்சி போன்ற கொந்தளிப்பு நிலையிலேயே மாநாடு கூட்டப்பட்டது. இராசவரோதயம் மாநாட்டின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். இவ்வேளையில் மட்டக்களப்பிலிருந்து மாநாட்டுக்கு வந்த பிரதிநிதிகள் பொலநறுவையில் தாக்கப்பட்டனர். மட்டக்களப்பில் இருந்து வந்த புகைவண்டியும், சதியினால் தடம்புரளச் செய்யப்பட்டது. இதனால் ஒரு தமிழ்ப் பொலிஸ் உத்தியோகத்தரும் பொது தமிழ் மகன் ஒருவரும் மரணமடைந்தனர். போராட்டத்தை 1958 ஓகஸ்ட் 20 இல் மீண்டும் ஆரம்பிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. இராசவரோதயம், செல்வநாயகம், வன்னியசிங்கம், செ. இராசதுரை, அமிர்தலிங்கம் என்போர் தலைமையில் போராட்டக் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது. அரசியல் அமைப்புப் பற்றிய பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழரசுக் கட்சி பங்குபற்றுவதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டது. 1958 இனக்கலவரம் வவுனியா மாநாடு முடிகின்ற தறுவாயில் நாடெங்கிலும் தமிழர்களுக்கு எதிரான கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. வடக்கு – கிழக்குக்கு வெளியே இருந்த தமிழர்கள் பாதுகாப்போடு தமிழ்ப் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டனர். தமிழ்ப் பிரதேசங்களில் இருந்த சிங்களவர்களும் ஆத்திரமடைந்த மக்களால் தாக்கப்பட்டனர். அரசு காலம் கடந்து அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனம் செய்து இராணுவத்தை சேவைக்கு அழைத்துக் கலவரத்தை நிறுத்தியது. https://www.ezhunaonline.com/1949-1968-national-political-transformation-and-resistance-struggles-of-eelam-tamils-part-3/
1 month 3 weeks ago
இருக்கவிட்டு உயிரோடு புதைத்திருப்பார்களோ? நான் இந்த செய்திகளை இப்போது அதிகம் பார்ப்பதில்லை.
Checked
Wed, 10/29/2025 - 23:17
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed