புதிய பதிவுகள்2

ஜூலை மாதத்தில் இந்தியா உக்ரைனின் முன்னணி டீசல் சப்ளையராக மாறியது

1 month 3 weeks ago
உக்கிரேனின் முக்கிய எண்ணெய் வழ்ங்குனர்களான கிரீஸ் மற்றும் துருக்கியினையும் விட ஸ்லோவாக்கியாவின் உக்கிரேனிற்கான எண்ணெய் வழங்கல் அதிகம், அண்மையில் ட்ருஸ்பா குழாயினை உக்கிரேன் தாக்கி அழித்தது அது கங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியாவிற்கு இரஸ்சியாவில் இருந்து எண்ணெயினை எடுத்து செல்கிறது. இந்த தாக்குதல் மூலம் உக்கிரேனும் பாதிப்புள்ளாகின்றது எனும் நிலையில் இந்த தாக்குதலின் பின்னணியில் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளதானது எனும் எனது சந்தேகம் வலுக்கிறது என கருதுகிறேன். இந்தியாவும் இன்னபிற நாடுகளும் தமது இரஸ்சிய எண்ணெயினை உக்கிரேன் வாங்குவதனை கூறுவதில்லை, ஆனால் தமக்கு எதிராக களம் திரும்பும் போது உண்மைகளை வெளியே கூறுகிறார்கள், ஒவ்வொரு விடயங்களிலும் ஒன்று அல்ல பல பக்கங்கள் உள்ளது, ஆனால் எழுத்து சுதந்திரம் உள்ளதாக கூறப்படும் இக்கால கட்டத்திலேயே பல உண்மைகள் தெரிவதில்லை, கட்டமைக்கப்படும் பொய்களே வரலாறாகின்றன, அல்லது வரலாற்றின் பக்கத்திலிருந்து சில பக்கங்கள் இல்லாமலாக்கப்படுகின்றன. இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் ஜேர்மன் ஜப்பான் தமது சொந்த இராணுவத்தினை கட்டியமைப்பது தமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என கூறிய நாடுகளே தற்போது உக்கிரேனை இராணுவ ரீதியாக பெரிய இராணுவமாக கட்டமைப்பதற்கு இரஸ்சியாவிடம் அனுமதி ஏன் எதிர்பார்க்கவேண்டும் என கூறுகிறார்கள். உலகின் ஒரு பெரிய போரினை ஆரம்பிப்பதற்காக அது நிகழ்த்தப்படுகின்றது, இது ஒரு முட்டாள்த்தனம்.

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!

1 month 3 weeks ago
"ஆடவாங்க அண்ணாச்சி..." "ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா?..." இவற்றைப் போன்ற பாடல்களில் அரசு படங்களில் ஆட்டம் போட்ட எம்ஜிஆரை,ஒரு மேற்கத்திய நடனத்தில் ஆடவைத்த பாட்டு இது. ஆரம்பத்தில் மேற்கத்திய நடனத்தில் ஆடத் தயங்கிய எம்ஜிஆருக்கு உற்சாகம் கொடுத்து, தன்னம்பிக்கையுடன் நடனமாடச் செய்தவர் இயக்குனர் டி.ஆர். ராமண்ணா. எம்ஜிஆரின் பல சமூகப் படங்களின் வெற்றிக்கு காரணமானவர் ராமண்ணாதான். அவர் இயக்கிய "பெரிய இடத்துப் பெண்" படத்தில் வரும் எல்லா பாடல்களும் இன்று வரையிலும் ரசிக்கத்தக்கவையாகவே உள்ளன. குறிப்பாக, மேற்கூறிய பாடல் அதிகம் புகழ்பெற்றது. பாடல்கள் மட்டுமன்றி "பெரிய இடத்துப் பெண்" திரைப்படம் முழுமையாகவே ஒரு பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்தப் படத்தை உல்டா செய்து எஸ்.பி. முத்துராமன் விண்வெளி நாயகனை வைத்து இயக்கிய படம்தான் சகலகலாவல்லவன்.

மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு

1 month 3 weeks ago
புரட்சிகர அம்சங்கள் பதாகை பிடித்தல் கொடி பிடித்தலோடு தற்போது தலையில் ஒரு சிவப்பு துணியும் கட்டி முழுமையான புரட்சிகர மக்களாகவே மன்னார் மக்கள் மாறிவிட்டனர்

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

1 month 3 weeks ago
அண்ணை, எனக்கு மனதில் படுவது ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ள ஒருவர் தனது இறுதி முடிவை உணர்ந்து அமர்ந்து தியானம் செய்ய உயிரோடு சமாதி புதைத்துவிட்டார்கள்.! மரணித்த ஒருவரின் கால்களை இவ்வாறு மடக்கி உட்கார வைக்க முடியாது என நினைக்கிறேன்.
Checked
Wed, 10/29/2025 - 23:17
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed