2 months ago
நகை கடைகள் சீலை கடைகளுக்கு நல்ல வியாபார உதவிகள் 😂
2 months ago
பாசகார பங்காளி.
2 months ago
உங்களுக்கு எங்கள் திறமையில் பொறாமை. வேலை செய்யாமலே சம்பளம் எடுக்க நினைப்பவர்கள் மத்தியில் குறைய நேரம் வேலை செய்து அதிக சம்பளம் எடுக்க நினைப்பவர்கள் பரவாயில்லை தானே. வாங்கக்கூடிய அளவுக்கு அதிகநேரம் வேலை வாங்கி கொடுக்கக்கூடிய அளவுக்கு மட்டமான அளவு சம்பளத்தை கொடுப்பதில்தான் பெரும்பாலான நிறுவனங்கள் நாட்டம் காட்டுகின்றன.
2 months ago
Best Music memories Back in Time · In 1957, Marilyn Monroe participated in a ceremonial kick-off at a football game in Brazil 🇧🇷"
2 months ago
108 தம்பதியினருக்கு இலவச திருமணம்! adminAugust 25, 2025 யாழ்ப்பாணத்தில் திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலைமை காரணமாக திருமணம் செய்யத முடியாத நிலையில் உள்ள 108 தம்பதியினருக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக சங்க தலைவர் இ ஜெயசேகரம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் சிங்கப்பூரை வதிவிடமாக கொண்ட துரை தம்பதியினரின் , நிதியுதவியில் , 108 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படவுள்ளது . தாலி , கூறை சேலை மற்றும் திருமணத்திற்கான இதர செலவுகளுக்கும் பணம் வழங்கப்பட்டு , 108 தம்பதிகளுக்கும் செல்வ சந்நிதி ஆலயத்தில் எதிர்வரும் 28 ஆம் திகதி திருமணம் நடாத்தி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன இந்த 108 தம்பதியினரையும் , யாழ்ப்பாணத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்கள் ஊடாகவே தெரிவு செய்தோம். அன்றைய திருமண நிகழ்வில் கலந்து கொண்டு 108 தம்பதியினரையும் வாழ்த்தி , அன்று மதியம் ஆலயத்தில் நடைபெறவுள்ள மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார். https://globaltamilnews.net/2025/219610/
2 months ago
ஒன்று அரை வருடங்களுக்கு முன்பு தான் கட்சி ஒன்றை ஆரம்பித்து தமிழ்நாட்டு மக்களை இலகுவாக ஏமாற்றி தான் முதலமைச்சராக தான் வந்துவிடலாம் என்று ஆசைபடுகின்றாரே இந்த விஜய் இவர் தான் பேராசை கொண்ட சுயநலமானவர்
2 months ago
இவர்களுக்கு கட்டளையிட்டவர்கள் யார் என்பதை அறிய ஆவலாகவும் இருக்கலாம். தூக்கவும் சுலபமாக இருக்கும்.
2 months ago
காணமல் ஆக்கப்பட்டவர் சங்கத்தையே வடக்கு கிழக்காக பிரித்துவிட்டீர்கள் ... இனியார் உங்கல் கத்தலைக் கேட்ட்கப் போகின்றான்..
2 months ago
பிள்ளையானை வைத்து அனுர அரசு 5 வருடத்தை கிழக்கில் ஓட்டிவிடும் ....முழுப் பிலாப்பழம் முழுங்கிய கிசிபுல்லா ...நசீர் ...இப்படி பல முதலைகள் இலகுவாக காலத்தை கடத்திவிடும்
2 months ago
இந்த காய் நகர்த்தல் நாம் எதிர்பார்த்ததுதான் ....செம்மணியைவிட ..இது இனி பிரபலமாகும் ...
2 months ago
நாட்டின் புராதன சைவ சமய சின்னங்களை பராமரிக்கவும் அதில் புனரமைப்பு கட்டுமானம் என்பவற்றை மேற்கொள்ளவும் உரிய முறையில் அரச மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் அனுமதிகளை முன்கூட்டியே பெற்றுக்கொண்டு முன்னெச்சரிக்கையுடன் பணிகள் நடைபெற என் வாழ்த்துக்கள்.
2 months ago
எதற்கான நினைவுத்தூண் என்பது தெரியவில்லை யாழில் (ஏதேனும் துயிலுமில்லத்தில் இருந்த சின்னமோ என்பதும் ஐயமே)
2 months ago
????
2 months ago
எதற்கான நினைவுத்தூண் என்று தெரியவில்லை யாழ்ப்பாணத்தில் 1990களின் தொடக்கத்தில்
2 months ago
சிறப்பான செயற்திட்டம் ......மகிழ்ச்சி ...... ! 🙏
2 months ago
பட மூலாதாரம், PMD SRI LANKA கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் உடல்நல குறைவால் கொழும்பு தேசிய மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். ரணில் விக்ரமசிங்கவின் கைதானது, இலங்கை அரசியல் பாரிய மாற்றங்களை கடந்த சில தினங்களில் ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அரசியல் ரீதியில் பிரிந்திருந்த எதிர்கட்சிகள் தற்போது ஓரணியாக திரண்டுள்ளமை, இலங்கை அரசியல் வரலாற்றில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸ மற்றும் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிராக செயற்பட்ட அனைவரும் இன்று அவர்களுடன் இணைந்தவாறே ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்களும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளமை விசேட அம்சமாகும். இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவின் கைது உள்நாட்டில் மாத்திரமன்றி, சர்வதேச ரீதியில் பேசுபொருளாக மாறியுள்ளது. ரணிலின் கைது தொடர்பில் சர்வதேச கவனம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் சர்வதேச நாடுகளின் முக்கியஸ்தர்கள் தமது கவலையை வெளியிட்டு வருகின்றனர். இதன்படி, கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க விரைவில் வீடு திரும்புவார் என மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமது நஷீத் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட தருணத்திலேயே மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதி தனது எக்ஸ் வலைத்தளத்தில் இந்த தகவலை பதிவொன்றாக வெளியிட்டிருந்தார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளமை அரசியல் பழிவாங்கல் என இந்திய காங்கிரஸ் கட்சியின் எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம், SHASHI THAROOR/X படக்குறிப்பு, சசி தரூர் உடன் ரணில் விக்ரமசிங்க தனது எக்ஸ் வலைத்தளத்தில் அவர் இந்த தகவலை வெளியிட்டிருந்தார். பொருத்தமற்ற குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை தெரிவதாகவும் அவர் கூறுகின்றார். சுகயீனமுற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு மனிதாபிமான சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டுக்காக பல பத்தாண்டுகளாக பணியாற்றிய ரணில் விக்ரமசிங்க மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இம்முறை இலங்கை விஜயத்தின் போது தான் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்திருந்ததையும் அவர் இந்த பதிவின் ஊடாக நினைவுப்படுத்தியிருந்தார். பட மூலாதாரம், ERIK SOLHEIM /X படக்குறிப்பு, எரிக் சொல்ஹெய்மின் எக்ஸ் பதிவு இதேவேளை, இலங்கையின் உள்நாட்டு போர் இடம்பெற்ற காலப் பகுதியில் இலங்கைக்கான நோர்வின் சமாதான தூதுவராக செயற்பட்ட எரிக் சொல்ஹெய்ம்மும் தனது எக்ஸ் தள பதிவில் கவலையை வெளியிட்டுள்ளார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையிலும், தெற்காசியாவிலும் உலகம் முழுவதும் உள்ள பல தலைவர்களுடன் இணைந்து இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்குமாறு கோருவதாக அவர் கூறுகின்றார். தடுப்பு காவலில் இருக்கும் அவரின் உடல்நிலைமை தெடர்பில் அனைவரும் கவலையடைவதாகவும் அவர் தெரிவிக்கின்றார். இலங்கை 2022ம் ஆண்டு பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் வீழ்ச்சி கண்ட போது, அதனை மீட்டெடுக்க முன்னின்று செயற்பட்ட தலைவர் ரணில் விக்ரமசிங்க எனவும் அவர் கூறுகின்றார். ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என கூறிய அவர், இந்த குற்றச்சாட்டுக்கள் ஐரோப்பாவில் எந்த குற்றமாகவோ அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கையாகவோ கருத முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஊழலை எதிர்த்து போராடும் முயற்சிக்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ள எரிக் சொல்ஹெய்ம், ஆனால் உண்மையான பிரச்னைகள் குறித்து கவனம் செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளார். ரணில் விக்ரமசிங்க மீது இலங்கையிலுள்ள குற்றச்சாட்டுகள் என்ன? முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பல பத்தாண்டுகளாகவே காணப்பட்டு வருகின்றன. ரணில் விக்ரமசிங்க, இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு நபராக கருதப்படுகின்றார். 1970ம் ஆண்டு காலப் பகுதியில் அரசியல் வாழ்க்கைக்குள் பிரவேசித்த இவர், ஐந்து தடவைகள் பிரதமராகவும் ஒரு தடவை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் கடமையாற்றியுள்ளார். அது தவிர, பல்வேறு சந்தர்ப்பங்களில் நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், எதிர்கட்சி தலைவர் என பல்வேறு பதவிகளை வகித்த பெருமை ரணில் விக்ரமசிங்கவை சாரும். எனினும், 1970ம் ஆண்டு காலப் பகுதி முதல் இன்று வரை ரணில் விக்ரமசிங்க மீது பல்வேறு பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பட மூலாதாரம், PMD SRI LANKA யாழ் நூலகம் எரிப்பு தெற்காசியாவிலேயே மிக பெறுமதி வாய்ந்த பெரிய நூலகமாக கருதப்பட்ட யாழ்ப்பாணம் நூலகம் 1981ம் ஆண்டு தீ வைக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டது. இந்த நூலகத்தில் அந்த சந்தர்ப்பத்தில் மாத்திரம் பெறுமதி வாய்ந்த 97000 புத்தகங்கள் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது. யாழ்ப்பாணம் நூலக எரிப்பானது, இலங்கையின் இனப் பிரச்னையின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்பட்டது. அப்போது ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சியினரின் தலைமையில் தென் பகுதி மக்களை அழைத்து சென்று நூலகத்தை தீக்கிரையாக்கியமாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், யாழ்ப்பாணம் நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்திற்கு ரணில் விக்ரமசிங்க மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு ரணில் விக்ரமசிங்க பகிரங்கமாகவே மன்னிப்பு கோரியிருந்தார். ''எமது ஆட்சிக் காலத்தில் நூலகத்திற்கு தீ வைக்கப்பட்டது. அது தொடர்பில் நாங்கள் கவலையடைகின்றோம். அது தொடர்பில் நான் மன்னிப்பு கோருகின்றேன்'. என 2016ம் ஆண்டு நாடாளுமன்ற அமர்வொன்றில் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார். பட்டலந்தை சித்திரவதை முகாம் பட மூலாதாரம், GOVERNMENT PRESS படக்குறிப்பு, ஆணைக்குழுவின் அறிக்கையின் முதல் பக்கம் இலங்கையில் 1987 முதல் 1989ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் இடம்பெற்ற கிளர்ச்சியின் போது, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கிளர்ச்சியாளர்களை தடுத்து வைப்பதற்கான உருவாக்கப்பட்டதாக கூறப்படும் முகாமே இந்த பட்டலந்தை சித்திரவதை முகாம் என சொல்லப்படுகின்றது. கம்பஹா மாவட்டத்தின் பியகம என்ற பகுதியில் இந்த சித்திரவதை முகாம் அமைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. கிளர்ச்சியில் ஈடுபட்ட மற்றும் அதற்கு ஆதரவு வழங்கியோரை இந்த சித்திரவதை முகாமுக்கு அழைத்துச் சென்று துன்புறுத்தியதாகவும், சிலர் காணாமல் ஆக்கப்பட்டதாகவும், சிலர் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்த பட்டலந்தை சித்திரவதை முகாம் அமைக்கப்பட்டதாக கூறப்படும் சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியே ஆட்சியில் இருந்தது. பட மூலாதாரம், BATALANDA COMMISSION REPORT படக்குறிப்பு, வீட்டுத் திட்ட வளாகத்தின் வரைபடம் அரச உரக் கூட்டுத்தாபனத்தின் வீட்டுத் திட்டத்திலேயே இந்த சித்திரவதை முகாம் அடையாளம் காணப்பட்ட நிலையில், அப்போதைய வீடமைப்புத்துறை அமைச்சராக ரணில் விக்ரமசிங்க பதவி வகித்திருந்தார். இந்த பின்னணியில், இந்த சித்திரவதை முகாமிற்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இந்த விடயம் தொடர்பில் ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் அறிக்கைகள் இலங்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் கூட விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன. பட மூலாதாரம், GOVERNMENT PRESS படக்குறிப்பு, ஆணைக்குழு உறுப்பினர்கள் மத்திய வங்கி பிணைமுறி ஊழல் இலங்கையின் 2015ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும், ரணில் விக்ரமசிங்க பிரதமராகவும் பதவியை வகித்து வந்திருந்தனர். இந்த காலப் பகுதியில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக சிங்கப்பூர் பிரஜையான அர்ஜீன் மகேந்திரன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், 2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் மத்திய வங்கி பிணைமுறி விநியோகத்தில் 11,450 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜீன் மகேந்திரன், தனது உறவினருக்கு மோசடியாக முறையில் இந்த பிணைமுறி விநியோகத்தை மேற்கொண்டதாக கூறப்பட்டது. அதையடுத்து, இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அர்ஜீன் மகேந்திரன் நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளார். இந்த விவகாரத்திலும் ரணில் விக்ரமசிங்க மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனினும், இந்த குற்றச்சாட்டுகளை ரணில் விக்ரமசிங்க தொடர்ச்சியாக மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ரணில் விக்ரமசிங்க மீதான வழக்கு - நாளை விசாரணை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க உடல்நிலை முடியாமை காரணமாக தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நாளைய தினம் (26) நடைபெறவுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அழைத்து வருவது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என கொழும்பு மருத்துவமனையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. உடல்நிலை தொடர்பில் கவனம் செலுத்தி, விசேட மருத்துவர்களின் தீர்மானத்திற்கு அமையயே இறுதி முடிவு எடுக்கப்படும் என கொழும்பு தேசிய மருத்துவமனையின் பதில் பணிப்பாளர் டொக்டர் பிரதீப் விஜேசிங்க ஊடகங்களுக்கு இன்று தெரிவித்திருந்தார். இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பில் நாளைய தினம் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியை நடாத்த எதிர்கட்சிகள் முயற்சித்து வருகின்றன. ''வைராக்கியம் மிக்க அரசியலுக்கு எதிராக குரல் எழுப்புவோம். 26ம் தேதி கொழும்பிற்கு வாருங்கள்'' என தெரிவிக்கும் வகையிலான சமூக வலைத்தள பதிவொன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c6261xep83yo
2 months ago
குருக்கள்மடம் மனிதப் புதை குழியை தோண்டுவதற்கு நீதிமன்றம் உத்தரவு Published By: VISHNU 25 AUG, 2025 | 07:15 PM 1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்துக் கொண்டு கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த அப்பாவி முஸ்லிம்கள் ஆயுத தாரிகளால் இடைமறிக்கப்பட்டு கடத்தப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது சம்பந்தமாக, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம் சார்பாக AMM.ரவூப் என்பவரால் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை, திங்கட்கிழமை (25) களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ள படி உரிய இடத்தில் புதைக்கப்பட்டுள்ள மனித எச்சங்களை தோண்டி எடுப்பதற்கான கட்டளையை நீதிவான் நீதிமன்ற நீதிபதியால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலதிக நடவடிக்கைகளை களுவாஞ்சிக்குடி பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். முறைப்பாட்டாளர் சார்பாக குரல்கள் இயக்க சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. பின்னர் சம்பவ இடமான குருக்கள்மடம் கடற்கரை வீதியின் , கடற்கரை எல்லைப்பிரதேசத்திற்கு விஜயம் செய்த களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தின் கௌரவ நீதவான் நீதிபதி ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் சம்பவ இடத்தினை சந்தேகிக்கப்படும் இடமாக அடையாளப்படுத்தியதுடன் , பாதுகாப்பு வலயமாகவும் பிரகடனப்படுத்தி இதற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு கட்டளை இட்டார். இவ் வழக்கு திங்கட்கிழமை (25) காலை 9.30 மணிக்கு மீள் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223356
2 months ago
இந்தக் கருத்து ஓரளவுக்குச் சரியாகத் தான் படுகிறது. தலைமுறைகள் ஒவ்வொன்றிலும் ஒரு தனித்துவமான போக்கு இருக்கும். எங்கள் Gen X என்ற தலைமுறை (தற்போது ஓய்வு நோக்கிப் போகும் 50+ தலைமுறை) வேலை வேலை என்று இருந்த/இருக்கும் தலைமுறையாக உள்ளது. அடுத்து வந்த மிலெனியல்கள் என்ற Gen Y , தற்போது இந்த 4 நாட்கள் வேலையை நாடும் தலைமுறையாக தெரிகிறது. Gen Y இன் ஒரு தனித்துவ இயல்பு செல்வத்தை விட, "அனுபவங்களைச்" சேகரிப்பதில் இருக்கும் ஆர்வம் என்கிறார்கள். இதனால், வேலையை விட்டு விட்டு, சேர்த்த காசை எடுத்துக் கொண்டு உலகத்தைச் சுற்றும் இவர்கள் பலருக்கு சொந்தமாக வீடு வாசல் கூட இல்லையாம். வீடு இல்லையெனில், திருமணமும் இல்லை, பிள்ளைகளும் இல்லை. உலகின் சனத்தொகை குறைந்து வர இவர்கள் ஒரு காரணமாக இருக்கலாம். இறுதியாக வந்த Gen Z இன் நிலை பரிதாபகரமாகத் தான் இருக்கும் போல தெரிகிறது. ஒரு உதாரணமாக கனடாவில் இந்தத் தலைமுறையின் பொருளாதார நிலையைக் காட்டும் கட்டுரையை இணைத்திருக்கிறேன் கீழே: CBCGen Z is facing the worst youth unemployment rate in deca...Canada's youngest workers are being hit by a perfect storm of economic conditions: an inflation crisis, a surge in population, and a country teetering closer to recession as the U.S. trade war wreaksவேலையின்மை மிக உயர்வாக இருக்கிறது. வேலை அனுபவமின்மை இதன் ஒரு காரணமாக இருக்கிறது என்கிறார்கள். படிக்கும் காலத்தில் உரிய துறை/ஆர்வப் பரப்பில் தேடிப் போய் உள்ளகப் பயிற்சிகளைப் பெறாமையால் இந்த நிலையா என்று யோசிக்கிறேன். Gen Z இன் இளைய மட்டமான 2010 இல் பிறந்த குழந்தைகளின் பெற்றோராக இருப்போர், சுதாரித்துக் கொண்டு தங்கள் குழந்தைகளை ஒரு குறிப்பிட்ட துறை நோக்கி வழி நடந்த வேண்டியது முக்கியம்.
2 months ago
25 AUG, 2025 | 04:48 PM (எம்.நியூட்டன்) சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி, எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள வடக்கு - கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம், அதனை வலுப்படுத்த பேதங்களற்ற வகையில் அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை (25) நடத்திய ஊடக சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் ஐ.நா பிரதிநிதி யாழ்ப்பாணத்துக்கு வந்து செம்மணியின் தடயங்களை பார்வையிட்டார். அவரது இந்த செயலால், நீதிக்கான சமிக்ஞை கிடைக்கும் என நம்பினோம். ஆனால் அத்தனையும் கலைந்துவிட்டது. ஐ.நாவின் பிரதிநிதி உள்ளக பொறிமுறையை எம்மிடம் திணித்துச் சென்றதைப் போன்று அவரது கருத்து இருக்கிறது. நாம் சர்வதேச விசாரணையையே கோருகின்றோம். அதனையே இன்றும் வலியுறுத்துகின்றோம். எனவே, எமக்கு உள்ளக பொறிமுறை வேண்டாம். அதில் எமக்கு நம்பிக்கை இல்லை. எனவே, எதிர்வரும் 30ஆம் திகதி செம்மணியில் போராட்டம் ஒன்றை வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ளோம். அந்தப் போராட்டத்துக்கு மதத் தலைவர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர், பாடசாலை மாணவர்கள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என அனைவரும் பேதங்களற்ற வகையில் ஒன்றுதிரண்டு போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்கள். https://www.virakesari.lk/article/223336
2 months ago
ராமநாதபுரம்: 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறு அமைக்க அனுமதி அளித்தது யார்? அடுத்தது என்ன? படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 25 ஆகஸ்ட் 2025, 03:18 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் ராமநாதபுரம் மாவட்டத்தின் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைப்பதற்கு ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. அடுத்தக்கட்டமாக, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்து, இந்த ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கப்பட்டால், அந்த மாவட்டமே 'மொத்தமாக அழிந்துவிடும்' என கவலையை வெளிப்படுத்துகின்றன, விவசாய, மீனவ மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள். ஆனால், மாநிலத்தின் எந்தவொரு பகுதியிலும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி அளித்துள்ளார். ஹைட்ரோகார்பன் சோதனை கிணறு - என்ன நடந்தது? ராமநாதபுரம் மாவட்டத்தின் காவிரி படுகையில் உள்ள 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகளை அமைக்க திட்டமிட்டுள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனம், அதற்கு அனுமதி வழங்குமாறு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் 31.10.2023 அன்று விண்ணப்பித்தது. அப்போதே தமிழ்நாடு அரசு உடனடியாக நிராகரிக்க வேண்டும் என அரசியல் மட்டங்கள் உட்பட பல தரப்புகளிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. படக்குறிப்பு, இத்திட்டம் அமைந்தால் விவசாயம் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர் (சித்தரிப்புப்படம்) மத்திய அரசு செயல்படுத்தி வரும் புதிய எண்ணெய் எடுப்புக் கொள்கையின் (HELP - Hydrocarbon Exploration Licensing Policy) அடிப்படையில், கடந்த 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மூன்றாவது சுற்று திறந்தவெளி ஏலத்தின் போது (OALP) ஓ.என்.ஜி.சி நிறுவனம் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட பகுதிகளை உள்ளடக்கி 1,403 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி பெற்றிருந்தது. எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணியின் முதல்கட்டமாக சுமார் 2,000 முதல் 3,000 மீட்டர் ஆழத்தில் 20 சோதனை ஹைட்ரோகார்பன் கிணறுகளை, கிணறு ஒன்றுக்கு உத்தேசமாக ரூபாய் 33.75 கோடி செலவில் ரூபாய் 675 கோடி ரூபாய் செலவில் தோண்ட திட்டமிட்டு சோதனை கிணறுக்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓஎன்ஜிசி நிறுவனம் கடந்த 31.10.2023 அன்று விண்ணப்பித்திருந்து. மத்திய அரசு, சுற்றுச்சூழல் சட்டத்தில் மாற்றம் செய்து கடந்த 16, ஜனவரி 2020ல் வெளியிட்ட அரசாணையின் படி, முன்னர் எண்ணெய் மற்றும் எரிவாயு "ஆய்வு" கிணறுகளுக்கு, சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு விண்ணப்பித்த முறையை மாற்றி, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பிக்கும் வகையில் திருத்தம் செய்தது. அதன்படி, பொதுமக்களிடம் கருத்து கேட்பதில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டது. அதாவது, கடலுக்குள் அல்லது கடலுக்கு வெளியே அமைக்கப்படும் இத்தகைய சோதனை ஆய்வு கிணறுகள் B2 பிரிவின் கீழ் வருகிறது, இத்தகைய B2 பிரிவு திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்து கேட்பு தேவையில்லை என்பது தான் அந்த திருத்தம். ஓஎன்ஜிசியின் விண்ணப்பத்தை ஆய்வு செய்த மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், 20 இடங்களில் சோதனை கிணறு அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனிச்சியம், பேய்குளம், கீழசெல்வனூர், கே.வேப்பங்குளம், பூக்குளம், சடயநேரி, கீழச்சிறுபோது, வல்லக்குளம், பனையடிஏந்தல், காடம்பாடி, நல்லிருக்கை, அரியக்குடி, காவனூர், காமன்கோட்டை, சிறுவயல், ஆழமலந்தல், சீனங்குடி அழகர்தேவன் கோட்டை, அடந்தனார் கோட்டை, ஏ.மணக்குடி ஆகிய 20 இடங்களில் ஆய்வு கிணறுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் 35 எரிவாயு கிணறுகள் தோண்டப்பட்டு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகின்றன. அதில் தற்போது 28 கிணறுகளில் இருந்து எரிவாயு எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான், ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 20 இடங்களில் 2,000-3,000 மீட்டர் ஆழத்தில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகளை அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. பட மூலாதாரம், GETTY IMAGES மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் என்பது மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னிச்சையான அமைப்பாகும். 'B' பிரிவு திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் அதிகாரம் பெற்ற அமைப்பாக இது உள்ளது. ஆணைய உத்தரவில் கூறப்பட்டுள்ளது என்ன? ஓஎன்ஜிசியின் முன்மொழிவு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையத்தின் முன்வைக்கப்பட்டது. ஆனால் அப்போது ஓஎன்ஜிசி தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதைத் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெற மாநில வல்லுநர் மதிப்பீட்டு குழுவின் முன் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. இந்த கிணறு துளையிடும் பணிக்கான அனுமதி என்பது தற்காலிகமானது தான் என்றும் எண்ணெய் அல்லது வாயு கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் கிணறுகள் மூடப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உருவாகும் எச்சங்களும் கழிவுநீரும் முறையாக சுத்திகரிக்கப்பட வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி எண்ணெய் வளம் உள்ளதா என்று தேடுவதற்கு மட்டுமே, வணிக ரீதியிலான பணிகளுக்கு தனியாக சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தது என்ன? மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதி கிடைத்துவிட்ட நிலையில், அடுத்ததாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்க வேண்டும். அப்படி, அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் அந்த 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கப்படும். 'கடல்வளம் அழியும்' ஆனால், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் கடல்வளம் அழிந்துபோகும் என்கிறார், தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பின் தலைவர் நல்லதம்பி. இந்த ஹைட்ரோகார்பன் கிணறுகளில் சில பாக் நீரிணை, மன்னார் வளைகுடா கடற்கரையிலும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மன்னார் வளைகுடா பாதுகாக்கப்பட்ட உயிர்க்கோள காப்பகமாக (Biosphere Reserve) உள்ளது. "இத்திட்டத்தின்படி, தொண்டி முதல் ஏர்வாடி வரையில் 20 கிணறுகள் வரவுள்ளன. நிலையான மீன்வளத்துக்கான தீர்வுகளை ஆராய்ந்து வரும் சூழலில் அதற்காக நடவடிக்கை எடுக்காமல் கடல் வளம், மீன்வளத்தை அழிக்கும் வகையில் ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்றார். படக்குறிப்பு, ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகள் அமைக்கப்படவிருக்கும் இடங்கள் மன்னார் வளைகுடா பகுதியில் மீன் வளம் குறைந்து போயுள்ளதால், எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்படும் சூழலில் இது பிரச்னைகளை மேலும் அதிகரிப்பதாக அவர் கூறுகிறார். "மீன்கள் உற்பத்தி மூலம் வேலைவாய்ப்பு, அந்நிய செலாவணி ஆகியவற்றை ராமநாதபுரம் மாவட்டம் அளிக்கிறது. அப்படியான சூழலில் கடல் வளத்தை பாதிக்கும் இதுபோன்ற திட்டங்கள் எங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். நிலத்தில் ஒரு பிரச்னை என்றால் அது ஒருசில பகுதிகளுக்கு தான் இருக்கும், கடலில் பாதிப்பு என்றால் பல நூறு கிலோமீட்டருக்கு பாதிப்பு ஏற்படும்." என நல்லதம்பி கூறுகிறார். கடலில் வாழும் ஃபைட்டோபிளாங்டன் எனும் நுண்ணிய தாவரம் உலகுக்கு ஆக்சிஜனை வழங்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால், ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்கும் செயல்முறையில் இந்த ஃபைட்டோபிளாங்டன் பாதிக்கப்பட்டு, அப்பகுதியில் ஆக்சிஜன் குறையும் என்று சூழலியல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 'விவசாயம் பாதிக்கப்படும்' இத்திட்டத்தால் விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள் என்கிறார், காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் மலைச்சாமி. "ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்படவுள்ள பகுதிகள் வைகை ஆற்றின் கடைமடை பகுதிகள். இயற்கை வழித்தடமாக இருந்த சித்தார்கோட்டை கால்வாய் என்ற பகுதிக்குள் உள்ள ஒரு ஊரும் இதன்கீழ் வருகிறது. வைகை ஆற்றை ஒட்டி இருக்கும் இந்த கிரமாங்களில் 80,000 ஏக்கர் பாசனப்பரப்பு இருக்கிறது. புன்செய் நிலங்கள் 1.5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இத்திட்டத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் வேளாண்மை, ஆற்றின் வளம் பாதிக்கப்படும். குறிப்பாக வைகை, தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய கண்மாய்களில் ஒன்றான ஆர்.எஸ்.மங்கலம் கண்மாயின் வழித்தடங்கள் பாதிக்கப்படும்." என்றார். "நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு" இத்திட்டத்தால் நிலத்தடி நீர் மிகுந்த பாதிப்படையும் என்கிறார், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன். "இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறையும். ரசாயனங்கள் நிலத்தடி நீரில் கலந்து மாசுபடும். தனிச்சியம், பேய்குளம், கீழசெல்வனூர், கே.வேப்பங்குளம் போன்ற இடங்களில் இந்த கிணறுகள் அமைந்தால் அதன் நிலவளமும் நிலத்தடி நீரும் பாதிக்கப்படும். " என தெரிவிக்கிறார், பேராசிரியர் ஜெயராமன். பட மூலாதாரம், PROFEESOR JAYARAMAN படக்குறிப்பு, 'இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் ரசாயனங்கள் நிலத்தடி நீரில் கலந்து மாசுபடும்' - பேரா. ஜெயராமன் இத்திட்டத்துக்கு எதிராக மக்கள், விவசாயிகளை அணிதிரட்டி பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காக ஏல அறிவிக்கை வெளியான போது, அதை திரும்பப் பெறக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோதிக்கு கடிதம் எழுதியிருந்தார். கடந்த 2020ம் ஆண்டில் அப்போதைய அதிமுக அரசு, காவிரி டெல்டா பகுதிகளில் இதுபோன்ற திட்டங்களை அமைக்க முடியாத வகையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்றியது. அந்தச் சட்டத்தை பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தும் வகையில் திருத்த வேண்டும் என்பது 'பூவுலகின் நண்பர்கள்' போன்ற சூழலியல் அமைப்புகளின் கோரிக்கையாக உள்ளது. தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம், THANGAM THENNARASU FB படக்குறிப்பு, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அளித்துள்ள அனுமதியை உடனே திருமப் பெற அரசு அறிவுறுத்தியுள்ளது - அமைச்சர் தங்கம் தென்னரசு மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (ஆக. 24) வெளியிட்ட அறிக்கையில், "ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கிய செய்தி தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து, ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அளித்துள்ள அனுமதியை உடனே திரும்பப் பெற அரசு அறிவுறுத்தியுள்ளது." என தெரிவித்தார். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதியிலும் ஹைட்ரோகார்பன் தொடர்பான எந்தவொரு திட்டத்தையும் அனுமதிக்க முடியாது என்பதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திடமான கொள்கை முடிவு என்றும் மாநிலத்தின் எந்தவொரு பகுதியிலும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மாநில அரசு இத்தகைய உறுதியை தெரிவித்துள்ள நிலையில், இத்திட்டத்துக்கு மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்கிறார், பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த பிரபாகரன் வீர அரசு. பிரதமர் மோதி 2021ல் கிளாஸ்கோவில் நடைபெற்ற காலநிலை மாற்ற மாநாட்டில் புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை இந்தியா குறைக்கும் என கூறியிருந்தார். உலக நாடுகள் புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை குறைத்துவரும் வேளையில், இத்திட்டத்தை செயல்படுத்துவது சரியான முடிவு அல்ல என்கிறார் பிரபாகரன் வீர அரசு. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c78zyj33j9do
Checked
Sun, 10/26/2025 - 01:41
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed