புதிய பதிவுகள்2

ரணிலை விடுதலை செய்யுமாறு எரிக் சொல்ஹெய்ம் கோரிக்கை

2 months ago
ஏன் இந்த எலி, நரிக்காக அம்மனமாக ஓடுது. இந்த எலி இதேபோன்ற குற்றச்சாட்டுக்காக ஐநாவில் இருந்து பதவி பறிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும் .

வித்தியா கொலை குற்றவாளிகளின் மேன்முறையீடு - விசாரணை திகதி அறிவிப்பு

2 months ago
வித்தியா கொலை குற்றவாளிகளின் மேன்முறையீடு - விசாரணை திகதி அறிவிப்பு 2015ஆம் ஆண்டு புங்குடுத்தீவில் மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. குறித்த மனுக்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர் நீதிமன்றம் இன்று (25) அறிவித்துள்ளது. இந்த மேன்முறையீட்டு மனுக்கள் பிரீத்தி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அடங்கிய அமர்வின் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டது. இதன்போது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்திரணி, நீதிமன்றத்தின் முன் சாட்சியங்களை முன்வைத்ததுடன், வழக்கின் தமிழ் மொழி பெயர்ப்புகளைப் பெற நான்கரை ஆண்டுகள் வரை சென்றதாக சுட்டிக்காட்டினார். எனவே, மேன்முறையீட்டு விசாரணைக்கு, குறுகியகால திகதி ஒன்றை வழங்குமாறு பிரதிவாதி சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரினார். அதற்கமைய, பிரதிவாதிகளின் மேன்முறையீடு தொடர்பான மனுவை எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதியரசர்கள் அறிவித்துள்ளனர். 2015 மார்ச் 3 ஆம் திகதி பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில் புங்குடுத் தீவைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்யா என்ற 18 வயது பாடசாலை மாணவி கடத்தி, கூட்டு பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிரதான குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட 7 பிரதிவாதிகளுக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் 2017 ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விதம் சட்டத்திற்கு முரணானது என்றும், எனவே தங்களை இந்த வழக்கில் குற்றமற்றவர்கள் எனக் கருதி விடுவிக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, சட்டத்தரணிகள் ஊடாக பிரதிவாதிகள் உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmeqvvwij0001qpfibjgjfyxv

அம்மாவாகும் ரோபோக்கள்

2 months ago
அம்மாவாகும் ரோபோக்கள் 2025 ஓகஸ்ட் 25 , பி.ப. 02:39 வாடகைத் தாய்க்கு பதிலாக, கர்ப்ப காலங்களில் ரோபோக்களை உருவாக்கி மனித குழந்தைகளைப் பெற்றெடுக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். குறித்த ரோபோக்களில் செயற்கை கருப்பையைப் பொருத்தி, ஒரு குழாய் மூலம் ஊட்டச்சத்துக்கள் செலுத்தப்படும் எனசீன விஞ்ஞானி ஜாங் கியூ இஃபெங் தெரிவித்துள்ளார். இருப்பினும் குறித்த தொழில்நுட்பம் மீது பல்வேறு நெறிமுறை சார்ந்த கேள்விகளும் எழுந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் குறித்த திட்டத்தை எதிர்வரும் 2026ஆம் ஆண்டுக்குள் அறிமுகப்படுத்த சீனா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகின்றது. https://www.tamilmirror.lk/science-tech/அம்மாவாகும்-ரோபோக்கள்/57-363457

வட்டுக்கோட்டையில் புதுப்பொலிவு பெறும் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம்!

2 months ago
வட்டுக்கோட்டையில் புதுப்பொலிவு பெறும் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம்! adminAugust 25, 2025 மிகத் தொன்மையான வழிப்பாட்டுத் தலமான வட்டுக்கோட்டை துணைவி சிவன் ஆலயம் பல ஆண்டு காலம் கவனிப்பார் இன்றிக் காணப்பட்ட நிலையில் அதனை மீள் உருவாக்கம் செய்வதற்குரிய பணிகள் யாழ்ப்பாணம் மரவுரிமை அமையத்தினால் கடந்த பெப்ரவரி மாதம் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்களின் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டடது. குறித்த பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தினை அடைந்து இருக்கும் நிலையில் மிக விரைவில் கும்பாவிஷேகம் நடாத்தி மக்களின் வழிபாட்டுத் தலாமாக்கப்படவுள்ளது. அமெரிக்காவில் வசிக்கின்ற கைதடியினைச் சேர்ந்த கலாநிதி சிவயோகநாதனின் மகளும் Meta நிறுவனத்தில் பணிபுரிகின்ற வருபவரான பாலயோகஸ்தினி சிவயோகநாதன் இவ்வாலயத்தை பழைய நிலைக்கு மீள் உருவாக்கம் செய்வதற்குரிய நிதியுதவியினை வழங்கியிருந்த நிலையில் குறித்த ஆலயம் மீள் எழுச்சி கண்டுள்ளது. குறித்த ஆலயத்தில் விக்கிரகங்கள் பிரதிஸ்ட்டை செய்தல், எண்னைக் காப்பு சாத்தல், கும்பாவிஷேகம் தொடர்பான விபரங்கள் யாழ்ப்பாண மரவுரிமை மையத்தினரால் விரைவில் அறிவிக்கப்படும். எமது மரவுரிரைச் சின்னங்களினை பாதுகாத்து அதனை அடுத்த தலைமுறை தலைமுறை தலைமுறையாக கடந்த வேண்டும் என்ற எண்ணப்பாட்டுடன் 2021 ஆம் ஆண்டு அப்போதையை யாழ்.மாநகரசபை முதல்வர் மணிவண்ணன் காலத்தில் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மரவுரிமை அமையமானது, நல்லூர் இராஜதானியின் தோரண வாசல் மீள் உருவாக்கம், ஆனைக்கோட்டை அகழ்வாராய்ட்சி, போன்றவற்றினை நிறைவேற்றிய நிலையில் 400 வருடங்கள் பழமை வாய்ந்த வட்டுக்கோட்டை துணைவி சிவன் ஆலயத்தின் மீள்உருவாக்கப் பணி யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் 3ஆவது செயற்றிட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/219590/

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

2 months ago
இந்தாள் ஏன் குறுக்கால ஓடுது என்று பார்த்தால்… செய்தி: நோர்வேயைச் சேர்ந்த எரிக் சொல்ஹைம் UNEP-க்கான நிர்வாக இயக்குநராக இருந்தபோது அரசுப் பணத்தை பயணச் செலவாக மிக அதிகமாக, அதுவும் அனுகூலமற்ற வகையில் செலவிட்டார் என்று உட்புற ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் காரணமாக அவர் 2018-ஆம் ஆண்டில் தனது பதவியை விலக்கிவிட்டார். Inuvaijur Mayuran

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

2 months ago
ரணிலுக்கு நன்றாகத் தெரியும் எதிர்க்கட்சிகள் எல்லாம் கூடிக்கதைப்பதும் கொந்தளிப்பதும் குதிப்பதும் ரணில்மீது கொண்ட அன்பால் அல்ல "ரணிலுக்கே இந்த நிலை என்றால் நமக்கெல்லாம் என்னவாகும் என்ற பயத்தால்" என்று... யாழ்ப்பாணம்.com

தவெகவின் 2ஆவது மாநில மாநாடு: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா விஜய்..?

2 months ago
விஜய் தனது தொகுதிகளில் வெல்வாரோ இல்லையோ அடுத்த தேர்தலில் விஜய் சொன்ன சொல் தவறாமல் தேர்தலில் நிற்பாராக இருந்தால் வழமையான வாக்கு வீதங்கள் சிதறடிக்கப்பட வாய்ப்புளது. சென்னை மாநாட்டில் விஜய் தனது ஆதரவாளார்கள் ம்லுன்னிலையில் தனது கட்சியின் ஒரே கொள்கை எதிரி பாஜக தான், ஒரே அரசியல் எதிரி திமுக தான் என்று முழங்கியது ஆறுதலான செய்தி. இனிமேல் விஜய் பாஜக வுடன் கூட்டுச் சேர மாட்டார் என்பது உறுதியாகிறது. திமுக தமிழகத்தில் ஆலமரம் போல் வேரூன்றியுள்ளது. அதனைத் தாங்கி நிற்பவர்கள் அரசியல், கல்வி, நிதி, நீதித்துறை, நிர்வாகக் கட்டமைப்பு போன்ற பல துறைகளிலும் அனுபவமுடைய பல தலைவர்கள். விஜய் அதிமுக விலிருந்து தலைவர்களைத் தனது கட்சிக்கு வரவைப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.

இரண்டு புதிய வான் பாதுகாப்பு ஏவுகணைகளை சோதனை செய்தது வட கொரியா

2 months ago
இது ஏன் செய்தி? ஈரானுக்கு பின், ஒப்பந்தம் (treaty ஆக இருந்தாலும்) போட்டாலும், சகுனி ஆட்டம் மேற்கு ஆடாது எனபதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இரானுங் ஒப்பந்தம் செய்து பாதுகாப்பு சபை, நிரந்தர அங்கத்தவரால் தனித்தனியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட JCPOA ஐ முறித்த அமெரிக்கா, அதை தொடர்ந்து பிரித்தானிய பிரான்ஸ். (ஈரான் 1 வருடத்துக்கு மேலாக காத்து இருந்தது, இந்த அடாவடிக் கூட்டங்கள் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவர்ட்கள் என்று) இப்போது , ஓர் பக்கத்தால் தாக்குதல், இன்னொரு பக்கத்தால் JCPOA இல் உள்ள snapback தடையை பிரித்தானிய, பிரான்ஸ் கொண்டுவர முனைகின்றன, அதை ருசியா, சீன மறுத்து விட்டன. ஆயினும், சர்வதேச சட்டத்தையும் மீறி தடையை கொண்டுவர பிரித்தானிய, பிரான்ஸ் வாலுகள் முயற்சிக்கின்றன. எனவே, நாடுகள் பலத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலை. இதில் குறிப்பாக, ஈரானை இங்குள்ள சிலர் பேயர் ஆக்குவது - ஈரானுக்கு என் அணுத்துறை என்று - அப்போது எண்ணையில் குளிக்கும் அமெரிகாவுக்கு, ருசியா போன்றவைக்கு ஏன் அணுத்துறை? ஈரான் வெளியில் இருந்து அணுத்துறையை பெறலாம் - ஈரான் என்ன பேயனா?, 1ம் முறை நம்பி இருக்கலாம், அணுத்துறை முழுவதும் அகற்றி விட்டு பின் ஒன்றுமே கொடுக்கப்படாது, மற்றும் இரான் மரபுவழி ஆயுதங்களை வாங்க, உற்பத்தி செய்ய முனையும் போது தாக்குவது. இதில் முக்கியமா, இரான் அதன் அணுத்துறையை அதுவாக கட்டி எழுப்பியது (வெளியில் இருந்து அறிவு, உதவிகள் பெற்று இருக்கலாம்). திருடி இருந்தால் , இரான் மீள கட்டி எழுப்ப முடியாது இப்போதைய தாக்குதலில் முழுமைக்காயாக அழிக்கப்பட்டு இருந்தால். அனால், மேற்கே சொல்கிறது இரானிடம் கட்டி எழுப்புவதற்கு அறிவுமும், கட்டுமானமும் இருக்கிறது என்று, இதானால் தான் இரான் விஞ்ஞானிகளை, மேற்கு, இஸ்ரேல் உடன் சேர்ந்து போட்டு தள்ளுவது. அதன் பல்துறை தொழிற்சாலைகளை குறிவைப்பது. அதெ போலவே, இரானின் ஏவுகணை தொழில்நுட்பமும். (இதையும் விட வேண்டும் என்கிறது மேற்கு) (இதுவே, ஈரானுக்கும், அந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கும் வேறுபாடு. மற்ற நாடுகள் தொழில்நுட்பம் / விஞ்ஞானத்தை முழுமையாக வெளியில் இருந்து பெறுவது. ) இங்கு சிலர் அரைகுறையாக, மேற்கின் பிரச்சாரத்தை ஒப்புவிப்பது, எந்த வித தேடுதல், சரி பார்த்தால் இல்லாமல். அல்லது மேற்கு சொல்வதை வேதவாக்காக எடுப்பது. அப்படி மேற்கை விட வேறு எவரும் பொதுவாக தொழில்நுட்ப / பவிஞ்ஞான துறையில் முன்னேற கூடாது, அப்படி முன்னேறினாலும் மேற்றகில் தங்கி இருக்க வேண்டும், அப்படி தங்கி இருக்க வைக்க வேண்டும் என்பதற்கே மேற்கு பகீரத பிரயத்தனம் செய்கிறது. இந்த பாதி எரிந்த பிரேதே சிந்தனையால், மேற்கு அதன் அந்திசாயும் காலத்தை, எல்லோருக்கும் அந்திம கிரியை தகனக் காலமாக மாற்றுவதற்கு முயற்சிக்கிறது. (இஸ்ரேல் க்கு கூட இதை US செய்தது, இஸ்ரேல் 1980 களின் முற்பகுதியில், அகதிர் என்ற பெயரில்அன்றைய தொழிநுட்ப போர் விமானத்தை வடிவமைத்து, உடற்பதி செய்ய முயல, அமெரிக்கா தடுத்து விட்டது. சில வருங்குகள் பின் சீன அதை வாங்கி, அதையும் கொன்டு வடிவமைது, உற்பத்தி செய்து, இப்போதைய தொழில் நுட்பத்துக்கு தரமுயர்த்தியதே, அண்மையில் பாவிக்கப்பட்ட ஜே -10 ம் அதன் அடிப்படை வடிவமைப்பு, உற்பத்தியும். அனால், இஸ்ரேலுக்கு அமெரிக்கா கேட்டதை பொதுவாக கொடுக்கும். அப்படி இஸ்ரேல் கேட்ட ரேடார் தொழில்நுட்பத்தை (அந்த நேர (Synthetic) Aperture Radar தொழில்நுட்பம்) அமெரிக்கா கொடுக்காமல், இஸ்ரேல் திருட முயன்று, இஸ்ரேல் இன் உளவாளி பிடிக்கப்பட்டு, அமெரிக்காவில் சிறை கண்ட வரலாறும் இருக்கிறது)

"நீதியின் ஓலம்" கையொப்பப் போராட்டம் செம்மணியில் ஆரம்பம்!

2 months ago
செம்மணி புதைகுழி விடயத்தில் தாயகத்திலுள்ள மனித உரிமை, சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் பாராட்டுதலுக்குரியவை. வெளிநாடுகளில் பயனற்ற விடயங்களுக்குப் போராட்டங்கள் நடத்துபவர்கள் இந்த முக்கியமான போராட்டத்தில் தாயகத்துக்கு உறுதுணையாக எதுவும் செய்யவில்லையா அல்லது இது தொடர்பான செய்திகளை நான் பார்க்கவில்லையா ? செம்மணி விவகாரத்தை சரியாகப் பயன்படுத்தினால் இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றது என்பதைப் பதிவு செய்ய முயற்சிக்கலாம்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

2 months ago
லண்டனில் இரண்டு நாள் தங்கிய மனைவிக்கு சமையல் செய்ய ஒழுங்கு செய்த சமையல்காரரின் ஒரு நாள் சம்பளம் நாலு லட்சம் ரூபா. அப்படி என்ன சாப்பாட்டை அந்த சமையல்காரர் சமைத்துக் கொடுத்தார் என்று கேட்டால், றோயல் கல்லூரிக்கு ஒரு பழைய வீடும் நிறைய நூல்களும் ரணில் வழங்கியுள்ளார் என்கிறார்கள். சிரிச்சிகிட்டே அடுத்த கேள்விய கேற்க பெட்ரோல் இல்லாத நேரம் அவர் கார்ல இருந்த பெட்ரோல உருவி முழு நாட்டுக்கும் குடுத்த வள்ளல் என்று சொல்கின்றனர் 😄. உண்மை உரைகல்

காசாவில் பஞ்சம்: 5 லட்சம் பேர் பரிதவிப்பு

2 months ago
காஸாவில் பசி, பட்டினி அதிகரிக்க இஸ்ரேலின் நடவடிக்கை காரணமானது எப்படி? பட மூலாதாரம், REUTERS படக்குறிப்பு, காஸாவில் பஞ்சம் மோசமாக பரவி வருகிறது கட்டுரை தகவல் எமிர் நாடர் பிபிசி செய்திகள் 24 ஆகஸ்ட் 2025 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் உணவுப் பஞ்சம் மோசமாக பரவி வருகிறது. எல்லைக்கு வெளியே நூற்றுக்கணக்கான உதவி லாரிகள் நின்றுகொண்டிருக்கின்றன, ஆனால் அவை உள்ளே செல்ல முடியாமல் சிக்கியுள்ளன. இந்த நிலை உருவானது எப்படி? உலகளவில் பசியை கண்காணிக்கும் முக்கிய அமைப்பான ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்ட வகைப்பாடு (IPC), ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் செயல்படுகிறது. அந்த அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சிகரமான தகவலின்படி, காஸாவில் உள்ள பாலத்தீனர்களில் நான்கில் ஒருவர், அதாவது சுமார் 5 லட்சம் பேர், கடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறியப்படுகிறது. இந்த தகவல் பல காரணங்களால் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதிலும் முக்கியமாக, இந்த சூழல் "முழுவதும் மனிதர்களால் உருவாக்கப்பட்டது" என்று அந்த அறிக்கை தெளிவாகக் கூறுகிறது. காஸாவுக்குள் உணவுப் பொருட்கள் செல்லும் வழியை இஸ்ரேல் "திட்டமிட்டு தடுக்கிறது" என்று தற்போது பல்வேறு உதவி அமைப்புகளும் குற்றம் சாட்டுகின்றன. காஸா நகரப் பகுதியில் வாழும் மக்கள் தற்போது "பட்டினி, வறுமை, மரணம்" போன்ற கடுமையான பஞ்சநிலையை எதிர்கொள்கிறார்கள் என்று ஐபிசி அறிக்கை கூறுகிறது. பசியும், பட்டினியும் வேகமாகப் பரவி வருகிறது, தற்போதைய நிலை தொடர்ந்தால் செப்டம்பரில் காஸாவின் பல பகுதிகளிலும் பஞ்சம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் எனவும் அது எச்சரிக்கிறது. இந்த அறிக்கை மூன்று முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது: பட்டினி: குறைந்தது 5 வீடுகளில் 1 வீடு உணவுக்கே கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. ஊட்டச்சத்து குறைபாடு: சுமார் 3 குழந்தைகளில் 1 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு விகிதம்: ஒவ்வொரு 10,000 பேரில் குறைந்தது 2 பேர் தினமும் நேரடி பட்டினி அல்லது ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோயால் உயிரிழக்கின்றனர். பொதுவாக இந்த மூன்று "வரம்புகளில்" இரண்டு எட்டப்பட்டால் பஞ்சம் நிலவுகிறது என ஐபிசி அறிவிக்கிறது. ஆனால் காஸாவில் மூன்றும் எட்டப்பட்டுவிட்டதாக அது மதிப்பீடு செய்துள்ளது. "இறப்புக்கான" காரணி தற்போதைய தரவுகளில் தெளிவாகத் தெரியவில்லை, ஏனெனில் கண்காணிப்பு அமைப்புகள் செயலிழந்துள்ளன. பல மரணங்கள் பதிவு செய்யப்படாமல் போயிருக்கலாம் என்றும் ஐபிசி நம்புகிறது. இருந்தாலும் கிடைத்துள்ள சான்றுகள் மற்றும் நிபுணர்களின் மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு "இறப்பு" காரணியும் பஞ்ச நிலையை உறுதிப்படுத்துவதாக ஐபிசி முடிவுக்கு வந்துள்ளது. இந்த அறிக்கை வெளியான சமயத்தில், ஹமாஸ் நிர்வகிக்கும் காஸா சுகாதார அமைச்சகம், ஊட்டச்சத்து குறைபாட்டால் மேலும் இரண்டு மரணங்களைப் பதிவு செய்தது. இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 112 குழந்தைகள் உட்பட 273 ஆக உயர்ந்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசாவில் பஞ்சம் நிலவுகிறது என்ற குற்றச்சாட்டை பலமுறை மறுத்துள்ளார். பசி ஏற்பட்டதற்கு உதவி அமைப்புகளும் ஹமாஸும் தான் காரணம் என அவர் கூறியுள்ளார். காஸா எல்லையில் நூற்றுக்கணக்கான உதவி லாரிகள் நின்றுகொண்டிருக்க, அவற்றை எடுத்துச் செல்ல ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புகள் முன்வரவில்லை என இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. 'முற்றிலும் மனிதனால் உருவாக்கப்பட்டது' பட மூலாதாரம், REUTERS படக்குறிப்பு, ஆகஸ்ட் 7 ஆம் தேதி காசா நகரில் உள்ள அல்-ரான்டிசி மருத்துவமனையில் ஒரு குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதா என பரிசோதிக்கப்படுகிறது. பல வாரங்களாக, வயிறு வீங்கியும் எலும்புகள் தெரியும் அளவுக்கும் பட்டினியால் வாடும் குழந்தைகளின் படங்களை உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. இதனால் பஞ்சம் வரும் எச்சரிக்கை அறிகுறிகள் நீண்ட நாட்களாகவே இருந்தன என பலர் கூறுகின்றனர். கடந்த இரண்டரை ஆண்டுகளாக காஸாவில் நடந்துவரும் போர், பாலத்தீனர்களுக்கு உணவு கிடைப்பதை மிகவும் சிக்கலாக்கியுள்ளது. இஸ்ரேல் காஸாவிற்குள் செல்லும் பொருட்களுக்கு நீண்ட காலமாகவே கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் இஸ்ரேலில் நடத்திய கொடிய தாக்குதலுக்குப் பிறகு, அந்தக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையானது. ஆனால் 2025ம் ஆண்டு மார்ச் மாதத்தில், இஸ்ரேல் காஸாவிற்குள் பொருட்கள் செல்லும் வழியை மூன்று மாதங்களுக்கு முற்றிலும் தடை செய்தபின் நிலைமை வேகமாக மோசமடைந்தது. சர்வதேச அழுத்தம் அதிகரித்த பின், மே மாத இறுதியில் சில பொருட்களை மீண்டும் அனுமதிக்கத் தொடங்கியது. அதே சமயம், ஐ.நா. தலைமையிலான பழைய உணவு விநியோக முறைக்குப் பதிலாக காஸா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) என்ற அமெரிக்க அமைப்பு தலைமையிலான புதிய விநியோக முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் கீழ், ராணுவம் கண்காணிக்கும் பகுதிகளில் நான்கு விநியோக மையங்கள் மட்டுமே உள்ளன. அங்கு செல்ல பாலத்தீனர்கள் நீண்ட தூரம் நடக்க வேண்டியுள்ளது. அந்தப் பயணம் உயிருக்கு ஆபத்தானதாகவும் இருக்கிறது. இதனால், முன்பு ஐ.நா. இயக்கிய 400 சமூக மையங்கள் இப்போது நீக்கப்பட்டுள்ளன. உணவைப் பெறுவது பாலத்தீனர்களுக்கு உயிருக்கு ஆபத்தான ஒன்றாகிவிட்டது. பட்டினி அல்லது மரணம் ஆகிய இரண்டிற்கும் இடையே ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது என அவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஏனெனில், காஸா மனிதாபிமான அறக்கட்டளை மையங்களில் உதவி பெற முயற்சிக்கும் போது, மக்கள் சுட்டுக் கொல்லப்படும் சம்பவங்களும் நடக்கின்றன. மே மாத இறுதியில் இருந்து காஸா மனிதாபிமான அறக்கட்டளை மையங்களுக்கு அருகில் குறைந்தது 994 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. பதிவு செய்துள்ளது. இஸ்ரேலிய படைகள் பெரும்பாலானோரைக் சுட்டுக் கொன்றதாக ஐ.நா. கூறுகிறது. இது நேரில் கண்ட சாட்சிகளாலும், காஸா மருத்துவர்களாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இஸ்ரேல் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. இஸ்ரேல் கண்காணிக்கும் இந்த புதிய முறையின் கீழ், காஸாவில் பஞ்சம் மேலும் மோசமாக பரவியுள்ளது. பட மூலாதாரம், REUTERS படக்குறிப்பு, இந்தோனேசிய ஹெர்குலஸ் விமானம் காஸா பகுதியின் மீது மனிதாபிமான உதவிப் பொருட்களை வீசுகிறது. அதிக உணவுப் பொருட்களை அனுமதிக்க வேண்டும் என்று அழுத்தம் அதிகரித்ததால், ஜூலை மாத இறுதியில் தினமும் உதவிப் பொருட்கள் கொண்டு வந்த அதிகமான லாரிகளை இஸ்ரேல் காஸாவிற்குள் அனுமதிக்கத் தொடங்கியது. சண்டையை தற்காலிகமாக நிறுத்தும் "தந்திரோபாய இடைவெளிகளை" அறிவித்து, உதவி லாரிகள் அந்தப் பகுதியை எளிதாக கடக்க அனுமதித்தது. சமீப வாரங்களில் அதிக உதவி பொருட்கள் வந்ததால், சந்தைகளில் சில பொருட்களின் விலை ஓரளவு குறைந்தது. இருந்தாலும் பல பாலத்தீனர்களுக்கு அவை இன்னும் மிக உயர்ந்த உயர்ந்தவையாகவே உள்ளன. சில சமயங்களில் ஒரு கிலோ மாவு 85 டாலரைத் தாண்டியது, ஆனால் அந்த விலை இப்போது குறையத் தொடங்கியுள்ளது. இஸ்ரேல், காஸாவுக்குள் உணவுப் பொருட்கள் செல்ல சில கட்டுப்பாடுகளை தளர்த்தியிருந்தாலும், அவற்றை சேகரித்து விநியோகிப்பதில் இன்னும் பல தடைகள் உள்ளன என்று ஐ.நா.வும் மனிதாபிமான அமைப்புகளும் கூறுகின்றன. மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய தினமும் 600 லாரிகள் காஸாவிற்குள் நுழைய வேண்டும், ஆனால் தற்போது அதில் பாதிக்கும் குறைவானவை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இஸ்ரேல் விமானம் மூலம் உதவிகளை வீச அனுமதிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால் பெரிதும் பலனளிக்காத, ஆபத்தான அந்த முறை, உண்மையான தீர்விலிருந்து கவனத்தை சிதறடிக்கிறது என மனிதாபிமான அமைப்புகள் விமர்சிக்கின்றன. அதேபோல, பசி நெருக்கடிக்கு ஹமாஸ் தான் காரணம் என இஸ்ரேல் கூறிய குற்றச்சாட்டும் விமர்சிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் உள்துறை அறிக்கை உட்பட பல்வேறு ஆய்வுகள், ஹமாஸ் உதவிகளை திட்டமிட்டு திருப்பி அனுப்பியதாக எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளன. காஸாவிற்குள் வரும் உதவி லாரிகள் சில நேரங்களில் கொள்ளையடிக்கப்படுவது உண்மைதான். ஆனால், இந்தக் கொள்ளைகள் பெரும்பாலும் உணவுக்காக தவிக்கும் பொதுமக்களாலும், பின்னர் லாபம் நோக்கி மறுவிற்பனை செய்ய முயலும் சில குழுக்களாலும் தான் நடைபெறுகின்றன என மனிதாபிமான அமைப்புகள் கூறுகின்றன. காஸாவில் பசி மற்றும் பஞ்சம் அதிகரிக்காமல் இருக்க, சாலை வழியாக அதிக அளவிலான உதவிப் பொருட்கள் தொடர்ந்து நுழைய அனுமதிக்க வேண்டும் என்ற ஒரே கோரிக்கையைத் தான் பல மாதங்களாக, உதவி அமைப்புகள் முன்வைத்து வருகின்றன. ஆனால் இஸ்ரேல் இன்னும் அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இஸ்ரேலின் பதில் தற்போது பல இஸ்ரேல் அரச அதிகாரிகள் ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்ட வகைப்பாடு (IPC) வெளியிட்ட அறிக்கையை நிராகரித்துள்ளனர். "ஹமாஸின் போலி பிரசாரத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட கற்பனையான அறிக்கையை" ஐபிசி வெளியிட்டதாக இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. காஸா எல்லையை நிர்வகிக்கும் இஸ்ரேலிய ராணுவ அமைப்பான 'கோகாட்', இந்த அறிக்கையை "ஹமாஸ் பயங்கரவாத அமைப்பிலிருந்து வந்த பாதி தரவுகளின் அடிப்படையில் உருவான, தவறான மற்றும் ஒரு பக்க சார்புடைய அறிக்கை" எனக் கூறியுள்ளது. "ஐபிசி தன் சொந்த உலகளாவிய தரநிலையை மாற்றியுள்ளது எனவும், பஞ்சத்தை எதிர்கொள்பவர்களின் அளவை 30% இலிருந்து 15% ஆக குறைத்துள்ளது எனவும், இறப்பு விகிதம் என்ற இரண்டாவது அளவுகோலை முற்றிலுமாக புறக்கணித்துள்ளது" என்றும் இஸ்ரேல் கூறுகிறது. ஐபிசி இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, முன்னர் பயன்படுத்தப்பட்ட, நிலையான தரநிலைகளையே இப்போது பயன்படுத்துகிறோம் என விளக்கியது. ஐபிசி "ஹமாஸின் தரவை" பயன்படுத்தியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டுவது, காஸாவில் ஊட்டச்சத்து குறைபாடு பற்றிய சில செய்திகள் ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகத்திலிருந்து வருவதைக் குறிக்கிறது. ஆனால், போர் முழுவதும் அந்த அமைச்சகத்தின் இறப்பு மற்றும் காயம் தொடர்பான தரவுகள் நம்பகமானதாக இருப்பதாக பல தரப்புகளும் கருதுகின்றன. இந்த அறிக்கைக்கு ஐ.நா. நிறுவனங்களும் சர்வதேச தலைவர்களும் வலுவான பதில்களை அளித்துள்ளனர். "ஆக்கிரமிப்பு சக்தியாக இருக்கும் இஸ்ரேல், சர்வதேச சட்டத்தின் கீழ் தெளிவான பொறுப்புகளை வகிக்கிறது. அதில் மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்கும் கடமையும் அடங்கும். இந்த நிலைமை தண்டனையின்றி தொடர்வதை நாம் அனுமதிக்க முடியாது"என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டெரெஸ் கூறினார். காஸாவிற்குள் உதவிகள் நுழைவதை இஸ்ரேல் "திட்டமிட்டு தடுத்ததே, பஞ்சத்தின் நேரடி காரணம் என்று ஐ.நா.வின் மனிதாபிமானத் தலைவர் டாம் பிளெட்சர் குறிப்பிட்டார். "காஸாவிற்கு தேவையான அளவு உதவியை அனுமதிக்க இஸ்ரேல் அரசு மறுத்ததே, இந்த மனிதனால் உண்டாக்கப்பட்ட பேரழிவுக்குக் காரணம். இது ஒரு தார்மீக விதிமீறல்" என பிரிட்டனின் வெளியுறவு செயலாளர் டேவிட் லாமி தெரிவித்தார். "பசியை போரில் ஓர் ஆயுதமாகக் பயன்படுத்துவது ஒரு போர்க்குற்றம். அதன் விளைவாக நிகழும் மரணங்கள் கூட, திட்டமிட்ட கொலை என்ற போர்க்குற்றத்தின் கீழ் வரக்கூடும்"என வெள்ளிக்கிழமை, ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் குறிப்பிட்டார். காஸா நகர் மீது இஸ்ரேல் படையெடுப்பு ஐபிசி பஞ்சம் நிலவுகிறது என அறிவித்துள்ள காஸா நகரத்தின் மீது சர்ச்சைக்குரிய படையெடுப்பும் ஆக்கிரமிப்பும் நடத்துவதற்காக, இந்த வாரம் பத்தாயிரக்கணக்கான ரிசர்வ் படையினரை வரவழைப்பதற்கு இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது. ஹமாஸை தோற்கடிக்கவும், போரை முடிவுக்கு கொண்டு வரவும், காஸாவில் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை மீட்கவும், காஸா நகரத்தை கைப்பற்றுவது தான் சிறந்த வழி என்று நெதன்யாகு கூறுகிறார். இந்த படையெடுப்பால், காஸா நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் சுமார் 10 லட்சம் பாலத்தீனர்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும். அந்தப் பகுதியை காலி செய்யத் தேவையான திட்டங்களை தயாரிக்குமாறு, மருத்துவர்கள் மற்றும் உதவி அமைப்புகளுக்கு, இஸ்ரேல் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. யுனிசெஃப், உலக உணவுத் திட்டம், உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட ஐ.நா. அமைப்புகள் ஒன்றாக வெளியிட்ட அறிக்கையில், "இந்த தாக்குதல், ஏற்கனவே பஞ்சம் பாதித்துள்ள பொதுமக்களுக்கு மேலும் பேரழிவை ஏற்படுத்தும்" எனக் கூறப்பட்டுள்ளது. "நோய்வாய்ப்பட்ட குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்கள், வயதானவர்கள் மற்றும் உடல் குறைபாடுகள் உள்ளவர்கள் போன்ற பலரும் வெளியேற முடியாமல் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது" என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1kz2ywdrp7o

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

2 months ago
ரணில் விக்கிரமசிங்க கைது: நோர்வே முன்னாள் தூதுவர் அதிருப்தி. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமைக்கு முன்னாள் இலங்கைக்கான நோர்வேயின் அமைதித் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் (Erik Solheim) அதிருப்தி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ரணில் விக்கிரமசிங்க உடல்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள அவர், ரணிலை உடனடியாக விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறும், வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் 2022ஆம் ஆண்டில் இலங்கை நாட்டை பொருளாதார மற்றும் அரசியல் குழப்பத்திலிருந்து காப்பாற்ற முன்வந்த ரணிலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தகுதியற்றவை என்றும், ஐரோப்பாவில் அவை குற்றமாக கருதப்படமாட்டாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் ஊழலுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளைத் தாம் ஆதரிப்பதாகவும், ஆனால் உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1444455

ரணிலை விடுதலை செய்யுமாறு எரிக் சொல்ஹெய்ம் கோரிக்கை

2 months ago
Published By: DIGITAL DESK 3 25 AUG, 2025 | 01:59 PM (எம்.மனோசித்ரா) இலங்கைக்கான முன்னாள் நோர்வே சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தடுப்புக்காவலில் உள்ள அவரது உடல்நிலை குறித்து ஆழ்ந்த கவலையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 2022-இல் நாடு மிக மோசமான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தபோது இலங்கையைக் காப்பாற்ற முன்வந்த தலைவர் விக்கிரமசிங்க என்று சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மீதான குற்றச்சாட்டுகள் 'ஆதாரமற்றவை' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவை நிரூபிக்கப்பட்டாலும், ஐரோப்பிய தரங்களின்படி அவை குற்றவியல் அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். 'இலங்கை அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு நான் முழு ஆதரவு அளிக்கிறேன், ஆனால் அது உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்,' என்று குறிப்பிட்டுள்ள சொல்ஹெய்ம், ரணில் விக்கிரமசிங்கவை விடுதலை செய்யுமாறு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவரது சர்வதேச காலநிலை ஆலோசகராகவும் இருந்த சொல்ஹெய்ம், முன்னாள் ஜனாதிபதியின் கைது குறித்து கவலை தெரிவித்த பல இலங்கை மற்றும் தெற்காசிய அரசியல்வாதிகளுடன் இணைந்துள்ளார். https://www.virakesari.lk/article/223313

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக தலைமன்னார் வந்த குடும்பஸ்தர் மீது கடற்படையினர் கொடூர தாக்குதல் - யாழ். வைத்தியசாலையில் அனுமதி

2 months ago
Published By: DIGITAL DESK 3 25 AUG, 2025 | 01:55 PM இந்தியாவில் இருந்து கடந்த 18 வருடங்களின் பின்னர் கடல் மார்க்கமாக தலைமன்னார் பகுதிக்கு படகில் வருகை தந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது கடற்படையினர் கடுமையாக தாக்கிய நிலையில் குறித்த குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், முல்லைத்தீவு உடையார் கட்டு பகுதியைச் சேர்ந்த தங்கையா டேவிட் பாலேந்திரன் என்ற இளம் குடும்பஸ்தர் 2007 ஆம் ஆண்டில் தனது 18 வது வயதில் கடல் மார்க்கமாக இந்தியா சென்றுள்ளார்.பின்னர் கடந்த 18 வருடங்களாக இந்தியாவில் வசித்து வந்த நிலையில் மீண்டும் தாயகம் திரும்ப முயற்சித்துள்ளார். இந்நிலையில் கடந்த 22 ஆம் திகதி இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக படகு ஒன்றில் தலைமன்னார் பகுதியை நோக்கி வந்துள்ளார். இதன்போது தலைமன்னார் கடற்படையினரால் குறித்த குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டார். 40 வயதுடைய குறித்த குடும்பஸ்தருக்கு இதய நோய் காணப்படுகின்ற நிலையில் அதற்கான மருத்துவ அறிக்கைகளையும் தன் வசம் எடுத்து வந்துள்ளார். எனினும் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்ற கடற்படையினர் நோயாளியான குறித்த குடும்பஸ்தரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளர். பின்னர் குறித்த நபரை கடற்படையினர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். தலைமன்னார் பொலிஸார் குறித்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்தனர். பின்னர் குறித்த நபரை வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்ட பதில் நீதவான் சந்தேகநபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். இந்நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் யாழ். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதய நோயாளியான குறித்த குடும்பஸ்தர் தனக்கான அனைத்து மருத்துவ அறிக்கைகளையும் காண்பித்த போதும் கடற்படையினர் கடுமையாக தாக்கியதாக குறித்த குடும்பஸ்தர் உறவினர்கள் மற்றும் வைத்தியர்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223311
Checked
Sat, 10/25/2025 - 22:40
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed