2 months ago
அரசியல் வாதிகள் செய்யும் சிறிய குற்றங்களுக்காக அவர்களை சிறையில் அடைப்பது தவறு - மகிந்த சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பார்வையிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்றிருந்தார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட மகிந்த ராஜபக்ஷ சிறிய குற்றங்களுக்காக அரசியல் தலைவர்களை சிறையில் அடைப்பது குறித்து வருத்தப்படுவதாகவும், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு நல்ல புரிதல் இருப்பதாகவும், இதுபோன்ற செயல்கள் பழிவாங்கும் நடவடிக்கையே தவிர வேறில்லை என்றும் கூறிய மஹிந்த ராஜபக்ஷ, மக்கள் இன்னும் தன்னை நேசிக்கிறார்கள் என்றும் கூறினார். "நாங்கள் மக்களை நேசிக்கிறோம். அதனால், மக்கள் நம்மை நேசிக்கிறார்கள்... என கூறினார். நம்ம யாழ்ப்பாணம்
2 months ago
2 months ago
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் ரணில்! சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பரிந்திரைக்கப்பட்டுள்ளது. அவரது நோய் நிலையை பரிசோதித்த சிறைச்சாலை வைத்தியர்கள் வழங்கிய பரிந்துரைக்கு அமைய அவர் மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2025/1444376
2 months ago
இதுதான் அரசியல் என்பது. அரபுநாடுகள் செல்வத்தில் கொழித்து என்ன பயன்? நிலம் முழுக்க எண்ணை வளம் இருந்து என்ன பயன்?
2 months ago
உந்தக்கார் இஞ்சை ஜேர்மனியிலையே நாய் பேய் விலை.அதுசரி கொள்ளை அடிச்ச காசு இருக்க பயமேன்.😂
2 months ago
ரணிலை சந்தித்த சஜித் ஊடகங்களுக்கு கருது தெரிவித்தார்! சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வருகை தந்திருந்த நிலையில் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பில் மூன்றாம் தரப்பினர் ஒருவர் முன்கூட்டியே கணித்திருக்கின்றமை நாட்டின் ஜனநாயகத்தையும் நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக சமூக ஊடகங்களில் ஒருவர் கணிப்புகளை வெளியிட்டு நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளார். இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை, ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றால், சட்டத்தை அமுல்படுத்தும் முறை சரியானது என்று நாட்டு மக்கள் நம்ப வேண்டும். சட்டத்தை அமுல்படுத்துவதும், அது குறித்து மக்கள் கொண்டுள்ள புரிதலும் மிகவும் முக்கியம். சமூக ஊடகங்களில் ஒருவர் கணிப்புகளை வெளியிடுவதால் குறித்த செயல்பாட்டில் ஒரு தீவிரமான சூழ்நிலை உருவாகியுள்ளது. நாட்டின் சட்டத்தை அமுல்படுத்துவது வெளிப்படையானதாகவும், அரசியல் சாராததாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும், அது அதே முறையில் செய்யப்பட வேண்டும். இல்லையெனில், மூன்றாம் தரப்பினர் வெளியே வந்து இதுதான் நடக்கிறது என்று கூறுவது உண்மையில் சட்டவிரோதமானது. அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பது முக்கியம். நான் அவரைச் சந்தித்தேன். அவர் நலமாக இருக்கிறார். மேலும், அவரது உடல்நிலை பாதுகாக்கப்பட வேண்டும். மருந்துகள் வழங்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்று காலை 9.30 மணியளவில், சஜித் பிரேமதாசவுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோர் வெலிக்கடை மெகசின் சிறைச்சாலைக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1444350
2 months ago
2 months ago
2 months ago
ரணிலை சந்திக்க வருகை தந்த மஹிந்த ராஜபக்ஷ! சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவு சற்று முன்னர் சிறைச்சாலைக்கு வருகை தந்துள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேற்றையதினம் (22) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மருத்துவ ஆலோசனைக்கு அமைய சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பல முக்கிய அரசியல் பிரமுகர்களும் சிறைச்சாலைக்கு சென்று அவரை சந்தித்து வருகின்றனர். https://athavannews.com/2025/1444344
2 months ago
2 months ago
ஊழலை ஒழிக்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், ரணிலைவிடப் பெரும் ஊழல்வாதிகள் சுனாமி நிதியிலிருந்து போர்விமானக் கொள்வனவு என்று இதனைச் சுட்டிய ஊடகவியலாளர் ல.விக்ரமதுங்க போன்றவர்களையே கொலைசெய்தவர்களெனப் பலர் வெளியே. தையிட்டி முதல் மட்டக்களப்பு மேய்சல்தரை வரையான பல்கிப்பெருகியதும் அவசரமாகத் தீர்வுகாண வேண்டிய விடயங்கள் குறித்து அனுர அரசுக்கு அக்கறையில்லை. ரணிலின் கைதுசெய்து அதனை ஒரு பேசுபொருளாக்கி உலகிடம் தானொரு உழலற்ற அரசை நடாத்துவதாகப் படம் காட்டும் அடையாள நடவடிக்கைகள். அனுர அரசிடம் நேர்மையிருந்தால் செம்மணியை அனைத்துலக நிபுணர்களை அழைத்து விசாரணை செய்துகாட்ட முடியுமா? எனவே, சிங்கள அரசியல்வதிகள் தமக்கிடையே குத்துப்பட்டாலும் இனமென்று வந்தால் ஒன்றாகி நிற்பவர்கள். தமிழினத்தை அழிப்பதில் மாற்றுக்கருத்தற்றோர். இந்தக் கைதால் தமிழருக்கு எந்த நன்மையாவது உண்டா? இனப்படுகொலையின் பங்காளிகள் ஒருவன் ஊழலுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளான். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
2 months ago
ஒருவாய் மீனுக்கு ஒரு பறவை உட்க்கார்த்திருப்பதைப் பாருங்கள் . .........! 😂
2 months ago
ஜே. ஆர். ஜெயவர்தனவின் மருமகனும், கை சுத்தமானவர் என்று போலி பிம்பத்துடன் வலம் வந்த ரணிலை கையில் விலங்கிட்டு கைது செய்ததன் மூலம்... முன்னாள் அதி உத்தம ஜனாதிபதியை சிறைக் கட்டிலில் படுக்க வைத்ததை அனுரா அரசு தனது சாதனையாக கருதலாம். இந்தச் சம்பவம் இலங்கை வரலாற்றில் என்றும் நினைவில் கொள்ளக் கூடிய சம்பவமாகவே இருக்கும். ரணிலின் வாழ்க்கையில் பல வெற்றிகள், பதவிகள் போன்றவவை அவர் எதிர்பார்க்காத அளவிற்கு ஆச்சரியமூட்டும் வகையிலேயே அமைந்து இருந்தது. அதே போல் இந்தக் கைதும்.. அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அனுரா... இந்தக் கைதின் மூலம் நடைபெற இருக்கும் மாகாண சபைத் தேர்தல் வெற்றிக்கு (வாக்கு) மூலதனம் இட்டுள்ளார் என்றே நான் நினைக்கின்றேன்.
2 months ago
ஆம்.... மகிந்த, கோத்தா எல்லாம் பேட்டை ரவுடிகள். அவர்களில் கை வைப்பது.... சொந்த செலவில் சூனியம் வைப்பதற்கு சமன் என்று அனுரா தரப்பு ஏற்கெனவே கணக்குப் போட்டு வைத்திருக்கும் என்றே நினைக்கின்றேன். ஆக மிஞ்சினால் ... மைத்திரியையும் ஈஸ்ட்டர் தாக்குதல் சம்பந்தமாக உள்ளே தூக்கி வைத்து.... அந்தப் பயத்தில் மகிந்த, கோத்தாவை நுனிக் கதிரையில் உட்கார வைக்கலாம்.
2 months ago
சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்ள ரணிலை சந்திக்க சஜித் வருகை! சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வருகை தந்துள்ளார். இதேவேளை, இன்று (23) காலை 9.30 மணியளவில், சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோர் மெகசின் சிறைச்சாலைக்கு வந்திருந்தனமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, நேற்று (22) இரவு முன்னாள் அமைச்சர்கள் துமிந்த திசாநாயக்க, பிரசன்ன ரணதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் உள்ளிட்டோர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க மகசின் சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் சிறைச்சாலையை அடைந்த போதிலும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (22) உத்தரவிட்டது. அதன்படி, விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மருத்துவ ஆலோசனைக்கு அமைய சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Athavan Newsசிறைச்சாலை வைத்தியசாலையில் உள்ள ரணிலை சந்திக்க சஜித் வருகை!சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வருகை தந்துள்ளார்.
இதேவேளை, இன்று (23) காலை 9.30 மணியளவில், சஜ
2 months ago
2 months ago
2 months ago
விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி! எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்ததன் காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டுப் பயணத்தின் போது அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (22) மதியம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அவர் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டபோது இவ்வாறு கைது செய்யப்பட்டார். அதன்படி, ரணில் விக்ரமசிங்க நேற்றையதினம் பிற்பகல் 03.00 மணியளவில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவிக் காலத்தில், 2023 செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயோர்க்கிற்குச் சென்றிருந்த நிலையில் சுற்றுப்பயணத்தை முடித்து நாட்டிற்குத் திரும்புவதற்கு முன்பு, முன்னாள் ஜனாதிபதி தனது மனைவி மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள இங்கிலாந்து சென்றிருந்தார். இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜான் ராஃப்டர், லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் மூலம் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவிக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பிதழ் வழங்கியிருந்தார். இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட சுற்றுப்பயணத்தின் போது அரசாங்க நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி ஒரு நபர் சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, விசாரணை தொடங்கப்பட்டு, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட உதவியாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்து சமீபத்தில் அந்தத் திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து, விக்ரமசிங்கவை நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நேற்று காலை 9.00 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார். சுமார் 4 மணி நேரம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி பிற்பகல் 1.15 மணியளவில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று (22) இரவு முன்னாள் அமைச்சர்கள் துமிந்த திசாநாயக்க, பிரசன்ன ரணதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் உள்ளிட்டோர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க மகசின் சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் சிறைச்சாலையை அடைந்த போதிலும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இலங்கை வரலாற்றில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1444334
2 months ago
காசாவில் பஞ்சம்: 5 லட்சம் பேர் பரிதவிப்பு August 23, 2025 7:43 am மேற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக பாலஸ்தீனத்தின் காசாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என ஐ.நா அறிவித்துள்ளது. சுமார் 5 லட்சம் பேர் அங்கு உணவு தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா அமைப்பின் வல்லுநர்கள் கூறியுள்ளனர். ” காசாவில் நிலவும் உணவு பஞ்சம் நிச்சயம் தடுக்கக்கூடிய ஒன்றுதான். இஸ்ரேலின் தடை உத்தரவு காரணமாக பாலஸ்தீனத்தின் அந்த பகுதிக்கு உணவு கொண்ட செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.” என்று ஐ.நா நிவாரண உதவி பிரிவின் தலைமை பொறுப்பில் உள்ள தாமஸ் தெரிவித்துள்ளார். இதை இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், காசாவில் உணவு பஞ்சம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளது. காசாவில் பஞ்சம் என்பது ஹமாஸ் அமைப்பால் பரப்பப்பட்ட பொய்யின் அடிப்படையிலானது என பதிலடி கொடுத்துள்ளது. கடந்த 15-ம் திகதி நிலவரப்படி காசா நகரில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது ஆதாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாத இறுதியில் காசா முனையின் டெய்ர்-எல்-பலாஹ் மற்றும் கான் யூனிஸ் பகுதியிலும் இந்த நிலை ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. காசாவில் தினசரி ஐந்தில் ஒரு வீட்டிலும், மூன்றில் ஒரு குழந்தையிடமும், ஒவ்வொரு பத்தாயிரம் பேரில் இருவர் என பசி காரணமாகவும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் உயிரிழந்து வருகின்றனர் என ஐபிசி கூறியுள்ளது. கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலால் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புக்கு இடையிலான மோதலை மிக தீவிரமாக்கியது. அதற்கடுத்த இந்த 22 மாதத்தில் மட்டும் இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை காரணமாக பாலஸ்தீனத்தை சேர்ந்த சுமார் 62 ஆயிரத்து 192 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பொது மக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://oruvan.com/famine-in-gaza-500000-people-in-need/
2 months ago
ரணில் ஏன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்? விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிகரித்த சர்க்கரை அளவு காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் நேற்று (22) இரவு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விளக்கமறியலைத் தொடர்ந்து, நேற்று (22) இரவு பல அரசியல்வாதிகள் சிறைச்சாலைக்குச் சென்றனர். முன்னாள் அமைச்சர்கள் துமிந்த திசாநாயக்க மற்றும் பிரசன்ன ரணதுங்க, பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் உள்ளிட்டோர் ஆதரவாளர்கள் குழுவுடன் சிறைச்சாலைக்கு வந்தனர். இருப்பினும், அவர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை, பின்னர் வெளியே காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. https://www.tamilmirror.lk/செய்திகள்/ரணில்-ஏன்-வைத்தியசாலையில்-அனுமதிக்கப்பட்டார்/175-363333
Checked
Sat, 10/25/2025 - 10:38
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed