2 months ago
இதைத் தான் நானும் எண்ணினேன். நுhல் விட்டுப் பார்க்கிறார்களோ? சாதனை செய்வதில் ரணில் வல்லவர்.
2 months ago
மன்னாரில் 20வது நாளாக தொடரும் போராட்டம் - ஜும்ஆ தொழுகையின் பின்னர் போராட்டத்தில் பங்கேற்ற முஸ்லிம் வர்த்தகர்கள் 22 AUG, 2025 | 04:53 PM மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிம மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக தொடர்ந்து வரும் கவனயீர்ப்பு போராட்டம் 20ஆவது நாளாக இன்றும் (22) சுழற்சி முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னார் பஜார் பகுதியில் உள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் ஜும்ஆ தொழுகையின் பின்னர் ஒன்றுதிரண்டு ஆதரவு வழங்கியுள்ளனர். அவர்கள் இன்று பகல் நடைபெற்ற ஜும்ஆ தொழுகையின் பின்னர், மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம்பெற்று வருகின்ற போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் வருகை தந்து கலந்துகொண்டு தமது எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர். மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்ற இந்தப் போராட்டம் இன்று 20ஆவது நாளாகவும் தொடர்கிறது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் காலத்தின் தேவை கருதி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இதன் உண்மை நிலையை அறிந்துகொண்டு தாம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும், தொடர்ந்தும் தமது ஆதரவு இப்போராட்டக் குழுவுக்கு கிடைக்கும் என அவர்கள் தெரிவித்தனர். மன்னார் மக்கள் இன, மத வேற்றுமையின்றி ஒற்றுமையாக போராடும் பட்சத்தில் எமது இலக்கை அடைய முடியும் என போராட்டத்தில் கலந்துகொண்ட மன்னார் பஜார் பகுதியில் உள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/223122
2 months ago
பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்ப் மீண்டும் அதிபராக பதவியேற்கும் முன்பு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்தியாவின் தரப்பை ஆக்ரோஷமாக முன்வைத்து வந்தார். கட்டுரை தகவல் ரஜ்னீஷ் குமார் பிபிசி செய்தியாளர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் அலாஸ்காவில் அதிபர் புதினுக்கும் டிரம்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், இந்தியா மீது கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படலாம் என்று ஆகஸ்ட் 13 அன்று அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் கூறியிருந்தார். உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தை உன்னிப்பாகக் கவனிக்கும் பிரான்சின் அர்னாட் பெர்ட்ராண்ட், இந்த செய்தியை எக்ஸ் தளத்தில் மறுபதிவு செய்து , "இது இந்தியாவின் பல-சீரமைப்பு ராஜ்ஜீய உத்தியின் தோல்வி என்பது தெளிவாகிறது. இந்த உத்தி இந்தியாவை அனைவருக்கும் முக்கியமானதாக மாற்றுவதாக இருந்தது, ஆனால் அது அனைவருக்கும் தேவையற்றதாகிவிட்டது" என்று பதிவிட்டு இருந்தார். "வேறு சொற்களில் சொல்வதானால், இந்தியா தன்னை எந்த ஆபத்தும் இல்லாமல் எளிதில் தாக்கக்கூடிய நிலைக்கு கொண்டு வந்துள்ளது. சீனாவுடன் நேரடியாக மோதாமல், பொருளாதாரத் தடைகள் மூலம் ஒரு வலுவான செய்தியை அனுப்ப வேண்டிய நேரத்தில், டிரம்ப் இந்தியாவை அச்சுறுத்துகிறார். ஏனெனில், இந்தியா முக்கியத்துவம் வாய்ந்த பெரிய நாடாக இருந்தாலும், பதிலடி கொடுக்கும் அளவுக்கு வலிமையான நாடாக இல்லை." "எல்லோருக்கும் நண்பராக இருக்க முயற்சிக்கும்போது, நீங்கள் அனைவருக்கும் ஒரு அழுத்தத்தை வெளியிடும் குழாயாக (pressure valve) மாறுகிறீர்கள். குறிப்பாக, உங்கள் சொந்த நிலைப்பாட்டை வலியுறுத்தும் திறன் இல்லாதபோது, அந்த சூழல் மேலும் சிக்கலாகிறது"என்று அர்னாட் பெர்ட்ராண்ட் பதிவிட்டார். 'பன்முகக் கூட்டணி கொள்கை' என்பதற்கு , இந்தியா அனைத்து முக்கிய நாடுகளுடனும் நட்புறவைப் பேண முயற்சி செய்வது எனப் பொருள். இது நேருவின் 'அணிசேராமை' கொள்கையிலிருந்து வேறுபட்டதாகக் கருதப்படுகிறது. ஆனால், 'எல்லோருடனும் இருப்பது' என்ற நிலைப்பாடு, இறுதியில் 'யாருடனும் இல்லை' என்ற நிலையை உருவாக்கும் என்பதால், இது வெறும் சொற்களின் வேறுபாடு மட்டுமே என்று பலரும் நம்புகிறார்கள். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, ஆகஸ்ட் 15 அன்று, அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் புதினுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் இடையே இணக்கமான சூழல் நிலவியது. 'பன்முகக் கூட்டணி' கொள்கை தோல்வியடைகிறதா? ஆறு நாட்களுக்கு முன் இந்தியாவைப் பற்றிய விமர்சனங்கள் எழுதிய அர்னாட் பெர்ட்ராண்ட், ஆகஸ்ட் 19 அன்று தனது நிலைப்பாட்டை மாற்றியதுபோல் தோன்றுகிறது. அந்த நாளில் தான், பிரதமர் மோதி சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயுடன் சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டார். "இந்தியாவைப் பற்றி நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் ஐரோப்பாவிடம் இல்லாத அரசியல் துணிச்சல் மோதியிடம் இருக்கிறது. ஐரோப்பா ரஷ்யாவுடன் இதேபோல் நேரடியாக செயல்பட்டிருந்தால், டிரம்பிற்கு இவ்வளவு வாய்ப்புகள் கிடைத்திருக்காது. ஐரோப்பாவிற்கு டிரம்பின் மத்தியஸ்தம் தேவைப்பட்டிருக்காது"என அதே பதிவை மறுபதிவு செய்து , அர்னாட் குறிப்பிட்டிருந்தார். " டிரம்ப், ஐரோப்பியத் தலைவர்களை பள்ளிக் குழந்தைகளைப் போல நடத்தி, பொருளாதார ரீதியாக சேதம் ஏற்படுத்தியதைக் குறித்து நான் பேசவே இல்லை. தற்போதைய சூழ்நிலை, ஐரோப்பா எல்லா வகையிலும் பாதிக்கப்படும் அளவுக்கு மோசமாக உள்ளது. ஒருபுறம், அமெரிக்காவின் கைக்கூலியாக அவமானப்படுத்தப்படுகிறது. மறுபுறம், டிரம்ப் இந்த நிலையை பொருளாதார ரீதியாகப் பயன்படுத்திக் கொள்கிறார். ஐரோப்பா ஒரு மறைமுகப் போருக்கான விலையைச் செலுத்துகிறது, அதேசமயம் அண்டை நாட்டின் விரோதத்தையும் எதிர்கொள்கிறது. இதற்கிடையில், டிரம்ப் ரஷ்யாவுடனான உறவுகளை மேம்படுத்தி வருகிறார்." "சீனா மீது இந்தியர்கள் கொண்டுள்ள விரோதம், ஐரோப்பாவில் ரஷ்யா மீது இல்லை. அதாவது, இந்தியா இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க அரசியல் ரீதியாக மிகவும் கடினமான சூழ்நிலை இருந்தது. உத்தி சார்ந்த சுயாட்சி மீது ஆசியத் தலைவர்கள் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பு, ஐரோப்பாவில் காணப்படுவதில்லை"என்றும் அர்னாடின் பதிவு கூறுகிறது. "நாடுகள் நீண்ட காலத்திற்கு சிந்திக்கின்றன. ஆய்வாளர்கள் குறுகிய காலத்திற்கு சிந்திக்கின்றனர்"என மாற்றம் அடைந்த அர்னாட்டின் நிலைப்பாடு குறித்து, 'தி இந்து' செய்தித்தாளின் சர்வதேச ஆசிரியர் ஸ்டான்லி ஜானி கூறுகிறார். பிரான்சுக்கான முன்னாள் இந்தியத் தூதர் ஜாவேத் அஷ்ரஃப்பிடம், மோதி அரசாங்கத்தின் 'பன்முகக் கூட்டணி கொள்கை' உண்மையில் தோல்வியடைகிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. "நான் அப்படி நம்பவில்லை. நரேந்திர மோதி எஸ்சிஓ மாநாட்டிற்குச் செல்கிறார் என்றால், அவர் அமெரிக்காவிற்கு எதிராகப் போகிறார் என்று அர்த்தமல்ல. டிரம்ப் பதவிக்கு வருவதற்கு முன்பே, சீனாவுடனான உறவுகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டன. அமெரிக்காவுடன் வர்த்தக ரீதியில் சில பிரச்னைகள் இருந்தாலும், மற்ற உறவுகள் நிலைத்திருக்கின்றன." என்று ஜாவேத் அஷ்ரஃப் பதில் அளித்தார். தொடர்ந்து பேசிய அவர், "இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே எந்த உடன்பாடும் இல்லாததற்கான காரணம், இந்தியா தனது தேசிய நலன்களில் எந்தவித சமரசமும் செய்யவில்லை என்பது தான். இந்தியா அமெரிக்காவுடன் உத்தி சார்ந்த சுயாட்சியுடன் பேசுகிறது. சீனாவும் ரஷ்யாவும் அதிக சக்தி வாய்ந்த நாடுகள், எனவே அவர்கள் அமெரிக்காவிற்கு அதன் சொந்த மொழியில் பதிலளிக்கிறார்கள். நமக்கும் அந்த சக்தி இருந்திருந்தால், நாமும் அதேபோல் பதிலளித்திருப்போம். இதுதான் ஒரே வித்தியாசம்"என்றார். மோதியின் சீனப் பயணம் டிரம்பின் நிலைப்பாட்டுடன் தொடர்புடையதாக இருக்கலாம். ஆனால், சீனாவுடன் உறவுகளை மேம்படுத்தும் முயற்சி திடீரென்று தொடங்கியதல்ல என்று சிந்தனைக் குழுவான ப்ரூக்கிங்ஸ் நிறுவனத்தின் மூத்த உறுப்பினரான தன்வி மதன் கருதுகிறார். "கடந்த ஆண்டு, ரஷ்யாவின் கசானில் பிரதமர் மோதி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். எல்லையில் பதற்றம் அதிகரிக்காமல் இருக்கவும், இந்தியாவின் உத்தி சார்ந்த மற்றும் பொருளாதார பரப்பை விரிவுபடுத்தவும், சீனாவுடன் உறவுகளை மேம்படுத்த இந்தியா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது," என அவர் ப்ளூம்பெர்க்கிடம் தெரிவித்தார். "ஆனால் முக்கியமான கேள்வி என்னவென்றால், சீனா இந்த உறுதிமொழிகளை நிறைவேற்றுமா? என்பது தான். எல்லைப் பிரச்னைகள் காரணமாக, பல பேச்சுவார்த்தைகள் முழுமையடையாமல் முடிந்ததை நாம் பார்த்துள்ளோம். சீனா இந்தியாவை பலவீனமாகக் கருதினால், எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் மேலும் அதிகரிக்கலாம்." பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, ஆகஸ்ட் 19 அன்று, பிரதமர் நரேந்திர மோதி சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை சந்தித்தார். பிரதமர் மோதியின் சீனப் பயணம் சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகஸ்ட் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இந்தியாவிற்குப் பயணம் செய்தார். இதன் பின்னர், ஆகஸ்ட் 21 அன்று அவர் பாகிஸ்தானை அடைந்தார். இந்தியாவிற்குப் பிறகு, பாகிஸ்தானுக்குச் சென்ற வாங் யியின் பயணத்திலிருந்து பல அர்த்தங்கள் பெறப்படுகின்றன. "இந்தியா சீனாவுடனான உறவை மேம்படுத்த விரும்பினால், சீனா அதை வரவேற்கும். ஆனால் இந்தியாவுக்கு எந்த சலுகைகளும் கிடைக்காது. சீனா தனது நலன்களில் எந்தவித சமரசமும் செய்யாது, பாகிஸ்தானுக்கு ஆதரவு தருவதையும் நிறுத்தாது"என்று நியூயார்க் டைம்ஸிடம் கூறியுள்ளார் ஷாங்காயின் ஃபுடான் பல்கலைக்கழகத்தில் தெற்காசியாவுடனான சீனாவின் உறவுகள் குறித்த நிபுணரான லின் மின்வாங். அமெரிக்கா இந்தியா மீது 50 சதவீத வரி விதித்துள்ளது. இந்த 50 சதவீத வரி ஆகஸ்ட் 27 முதல் இந்தியா மீது அமல்படுத்தப்பட்டால், அமெரிக்காவுடன் வணிகம் செய்வது கடினமாகிவிடும். கடந்த நான்கு ஆண்டுகளாக அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இருந்து வருகிறது. 2024-25 ஆம் ஆண்டில் அமெரிக்காவுடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம் 131.84 பில்லியன் டாலராக இருந்தது. அமெரிக்காவுடனான இவ்வளவு பெரிய வர்த்தகம் தடைபட்டால், இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படுவது, தவிர்க்க முடியாதது. இத்தகைய சூழ்நிலையில், அமெரிக்காவுடனான உறவுகளை மேம்படுத்த வேண்டும் அல்லது புதிய சந்தைகளைத் தேட வேண்டும் என்ற அழுத்தம் இந்தியா மீது உள்ளது. "இந்தியா, வெளியுறவுக் கொள்கைகளுக்கு ஈடாக அமெரிக்காவிற்கு அடிபணிய மறுத்தால், அதனால் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியையும் உலகின் மிகப்பெரிய நுகர்வோர் சந்தையையும் இழக்க நேரிடும். சீனாவுடனான நட்பை அதிகரிப்பது அல்லது நாட்டில் பொருளாதார சீர்திருத்தங்கள் போன்ற நடவடிக்கைகளை எடுப்பது நல்லது தான் , ஆனால் அவற்றால் அமெரிக்காவின் இடத்தை ஈடுசெய்ய முடியாது" என்று ப்ளூம்பெர்க் தனது செய்தியில் கூறியுள்ளது. அமெரிக்கா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாகவும், சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவும் வளர்ந்து வரும் பொருளாதார நாடு தான், எனவே அமெரிக்காவுடனும் சீனாவுடனும் மோசமான உறவுகளைப் பேணுவதன் மூலம், இந்தியா அதன் சிக்கல்களை அதிகரிக்க விரும்பவில்லை. அதேசமயம் இந்த இரு நாடுகளுடனான உறவுகளும் இணக்கமாக இல்லை என்பது உண்மைதான். சீனா இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளது. 2024-25 ஆம் ஆண்டில் சீனாவுடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம் 127.7 பில்லியன் டாலராக இருந்தது. ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை தியான்ஜினில் நடைபெறும் எஸ்சிஓ (ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு) மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோதி சீனா செல்கிறார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மோதி சீனா செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நரேந்திர மோதி சீனாவுக்குச் செல்கிறார். இந்தியாவும் சீனாவும் இணக்கமாக இருப்பதன் முக்கியத்துவம் கிழக்கு லடாக்கில் ஏப்ரல் 2020க்கு முந்தைய நிலை இன்னும் திரும்பாத நேரத்தில், பிரதமர் மோதி சீனாவுக்குச் செல்ல உள்ளார். 2020 க்குப் பிறகு சீனா அருணாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகளை மாண்டரின் மொழியில் பல முறை மறுபெயரிட்டுள்ளது. சீனா அருணாச்சலப் பிரதேசத்தை 'தெற்கு திபெத்' என அழைக்கிறது. திபெத் மற்றும் தைவான் ஆகிய இரண்டும் சீனாவின் ஒரு பகுதியாகும் எனக் கூறும் 'ஒரே சீனா' கொள்கையில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது என்பது வேறு விஷயம். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள, பிரதமர் மோதி சீனா செல்ல உள்ளார் என்பது எதிர்பாராத முடிவு அல்ல. இந்தியா, 2023 ஆம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு முன்னிலை வகித்து, இந்த மாநாட்டை மெய்நிகர் முறையில் ஏற்பாடு செய்தது. இவ்வாறு இந்த மாநாட்டை , இந்தியா மெய்நிகர் முறையில் நடத்தியது, சீனாவின் ஆதிக்கத்தில் உள்ள குழுக்கள் மீது இந்தியா அதிக ஆர்வம் காட்டவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில், 2022 ஆம் ஆண்டு ஜி-20 உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெற்றது, சீன அதிபர் ஜி ஜின்பிங் அதில் கலந்து கொள்ளவில்லை. இந்தச் சூழலில், மோதியின் சீனப் பயணம், இந்தியா-அமெரிக்க உறவுகள் மோசமடைவதோடு தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. 'கலிங்கா இந்தோ-பசிபிக் ஆய்வுகள் நிறுவனத்தின்' நிறுவனர் பேராசிரியர் சிந்தாமணி மகாபத்ரா, அமெரிக்காவுடனான உறவு முறிந்ததன் காரணமாக இந்தியா சீனாவிற்கு தூது அனுப்புகிறது என்று கருதவில்லை. "அமெரிக்காவுடனான உறவில் முறிவு ஏற்படவில்லை, சீனாவிற்கு புதிய உறவுக்கான தூதும் அனுப்பப்படவில்லை. டிரம்ப் சில முடிவுகளை எடுத்துள்ளார், அவை இந்தியா மீது மட்டுமல்ல, உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதனால் இந்தியாவின் ஒவ்வொரு முடிவையும் டிரம்புடன் இணைக்க முடியாது. பதற்றமான நாட்களிலும் சீனாவுடனான நமது வர்த்தகம் அதிகரித்துள்ளது" என்று பேராசிரியர் மகாபத்ரா விளக்குகிறார். இந்திய தொழில்துறை, சீனாவின் தொழில்நுட்பத்தை அதிகமாக சார்ந்துள்ளது. ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி , 2024 ஆம் ஆண்டில் இந்தியா சீனாவிலிருந்து 48 பில்லியன் டாலர் மதிப்புள்ள மின்னணுவியல் மற்றும் மின் உபகரணங்களை இறக்குமதி செய்தது. இந்தியாவின் தொலைத்தொடர்பு வலையமைப்பு, ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்களுக்கு சீன தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. இது தவிர, இந்தியாவின் மருந்துத் துறையும் சீனாவிலிருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்கிறது. இந்தியாவும் அரிய மண் தாதுக்களுக்கு சீனாவையே சார்ந்துள்ளது. அது இல்லாமல், மின்சார வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நுகர்வோர் மின்னணு துறைகளின் இலக்குகளை, இந்தியாவால் அடைய முடியாது. சமீபத்தில், சீனா தனது இறக்குமதியைக் கட்டுப்படுத்தியபோது, இந்தியாவின் பல தொழில்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டன. குறிப்பாக ஆட்டோமொபைல் துறை மிகவும் பாதிக்கப்பட்டது. மறுபுறம், சீனாவிற்கும் இந்தியா தேவை. இந்தியா ஒரு பெரிய சந்தையாக இருப்பதால், சீனா தனது பொருட்களை விற்பனை செய்ய இந்தியாவில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0l6e3g9n9do
2 months ago
யாழில் T56 துப்பாக்கிகள் மற்றும் 5,000 தோட்டாக்கள் மீட்பு யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் அருள்ராஜசிங்கம் அங்கஜன் என்பவரின் வீட்டில் மலசலகூடத்திற்கான குழி வெட்டுவதற்காக முற்பட்டபோது, சந்தேகத்திற்கிடமான பொருள் காணப்பட்டதை அடுத்து, பொலிஸார் ஊடாக நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து, இன்று (22) யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணியின்போது, 30 T-56 ரக துப்பாக்கிகளும், அவற்றிற்கு பயன்படுத்தப்படும் 5,000 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த ஆயுதங்கள் பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://adaderanatamil.lk/news/cmemolwju0011qpu7dlpfp0ob
2 months ago
இலங்கையில் கோட்டாபய ராஜபக்ஷ காலத்தில்தான் அதிகமாக மனித உரிமைகள் மீறப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றில் இன்று (22) உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், https://adaderanatamil.lk/news/cmemsee2i0015qpu7mprjjq6q
2 months ago
உக்கிரமான தாக்குதல்; ஒரே இரவில் 574 ட்ரோன்கள், 40 ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்பிய ரஷ்யா! 22 AUG, 2025 | 01:06 PM உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் நேற்று (21) உக்கிர நிலையை அடைந்தது. நேற்றிரவு ரஷ்யா 574 ட்ரோன்கள், 40 ஏவுகணைகளை அனுப்பி உக்ரைனில் பெரும் தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் 15க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அண்ட்ரி சிபிஹா (Andrii Sybiha) குறிப்பிட்டுள்ளார். உக்ரைனின் லிவிவ், முகாசெவோ, டிரான்ஸ்கார்பதியா ஆகிய நகரங்களில் உள்ள பல்வேறு கட்டடங்கள், தொழிற்சாலைகள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும், இதுவரை நடத்தப்பட்ட உக்ரைன் - ரஷ்யா தாக்குதல்களில் இதுவே பாரிய தாக்குதல் என உக்ரைன் தெரிவித்துள்ளது. உலகில் இயங்கிவரும் இராணுவக் கூட்டமைப்புகளில், மிகவும் பலம் பொருந்தியதும் பழைமையானதுமான இராணுவக் கூட்டமைப்பான “நேட்டோ”வில் இணைவதற்காக உக்ரைன் முயற்சித்து வருகிறது. உக்ரைனின் இந்த முயற்சிக்கு ரஷ்யா ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன் விளைவாக, 2022இல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு மேல் இந்த யுத்தம் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் - ரஷ்யா இடையே நிலவி வரும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்களுடனும் ஏனைய ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடனும் அலாஸ்காவில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். எனினும், அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து, உக்ரைன் மீது ரஷ்யா கொடூரத் தாக்குதல்களை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாகவே நேற்றைய தினம், ஒரே இரவில் 574 டிரோன்கள், 40 ஏவுகணைகளை உக்ரைனுக்கு ரஷ்யா அனுப்பி, மிகப் பெரிய தாக்குதலை நடத்தியிருக்கிறது. ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கும், அதனால் விளைந்த அழிவுகளுக்கும் உக்ரைன் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/223085
2 months ago
யாழ். கொட்டடி தனியார் காணியில் ஏராளமான வெடிபொருட்கள், ஆயுதங்கள் கண்டுபிடிப்பு! 22 AUG, 2025 | 03:50 PM யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டடி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் ஏராளமான வெடிபொருட்கள், ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தத் தனியார் காணியில் வெடிபொருட்கள் அவதானிக்கப்பட்டு, யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, இது தொடர்பாக பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுசென்றுள்ளனர். அதன் பின்னர், இன்றைய தினம் (22) வெடிபொருட்களை கண்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது. யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் செயற்படுத்தப்படும் இந்த ஆயுத மீட்புப் பணியில் யாழ்ப்பாண பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், தடயவியல் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/223116
2 months ago
அடிப்படையில் ரணில் ஊழல்வாதியல்ல என்பதை எவரும் அறிந்திருந்தபோதும் பழக்கப்பட்ட ஒரு துஷ்பிரயோகத்துக்கு அவரும் பங்காளியாகியிருக்கிறார். ரணிலை விட பல மடங்கு துஷ்பிரயோகம் செய்திருக்கும் ஒருவரை கைது செய்வதற்கான ஒரு ஆரம்ப எச்சரிக்கையாக இதனை எடுத்துக் கொள்ளலாம் என்றே தோன்றுகிறது. நாளைக்கு பிக்குமார்களையும், முன்னாள் இராணுவத்தினரையும், இனவாத சக்திகளையும் திரட்டிக்கொண்டு அக்கைதுக்கு எதிராக ராஜபக்சவினர் கிளர்வதாயின் அதற்கான மனப்பக்குவத்துக்கு தயார்படுத்த ரணிலின் இந்த கைது கணிசமான அளவு உதவும். 1815ல் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்க 2025ல் ரணில் விக்கிரமசிங்க இலங்கையை ஆட்சி செய்த அதியுயர் பதவியில் இருந்தவர்களில் 1815ல் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் ஆங்கிலேயரால் சிறைப்பிடிக்கப்பட்ட பின், 2025ல் சுமார் 210 ஆண்டுகளுக்கு பின்னராக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைதாகியுள்ளார். இடைப்பட்ட காலத்தில் பிரித்தானிய தேசாதிபதிகளும், 1948 சுதந்திரத்தின்பின் பிரதமர்களும், 1978 அரசியலமைப்பின்பின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளும் இலங்கை ஆட்சிக்கு தலைமைவகித்தபோதிலும் எவரும் எக்காரணத்துக்காகவும் கைது செய்யப்பட்டிருக்கவில்லை. ரணில் கைது செய்யப்பட்டமை இலங்கையின் மன்னராட்சி காலத்துக்கு பின்னரான - மக்களாட்சி காலத்தின் முதலாவது அரச தலைவர் கைது என்பது ஓர் வரலாறு. இனித்தான் சட்டப்புத்தகங்களும், அரசியலமைப்பின் பக்கங்களும் தீவிரமாக ஆராயப்படப் போகின்றன. குறிப்பாக அரசியலமைப்பின் 35வது சரத்து. பிரதி வட்சப்பில் வந்தது.
2 months ago
சத்துருக்கொண்டான் படுகொலை : மட்டக்களப்பு மாநகர சபை அமர்வில் மௌன அஞ்சலி ; புதைகுழி தோண்டக் கோரி பிரேரணை நிறைவேற்றம் 22 AUG, 2025 | 03:37 PM மட்டக்களப்பு மாநகர சபை அமர்வில் சத்துருக்கொண்டான் தமிழினப் படுகொலை புதைகுழி தோண்டப்பட வேண்டும் என பிரேரணை கொண்டுவரப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் இந்த படுகொலையின் 35வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மசாந்தி வேண்டி சபையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மட்டக்களப்பு மாநகர சபையின் 3வது மாதாந்த அமர்வு நேற்று வியாழக்கிழமை (21) மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது இலங்கை தமிழ் அரசு கட்சி உறுப்பினர் தயாளன் கௌரி, சத்துருக்கொண்டான் படுகொலைக்கு நீதி கோரி, புதைகுழி தோண்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரேரணை ஒன்றை கொண்டுவந்து முன்வைத்தார். அந்த பிரேரணையின்படி, 1990.9.9 அன்று இடம்பெற்ற சத்துருக்கொண்டான் படுகொலை என்பது இந்த மாவட்டத்தில் பாரிய தமிழினப் படுகொலை நடந்தேறியது. குறிப்பாக யுத்த காலப்பகுதிகளிலே எங்களுடைய மாவட்டத்தில் அப்போது இராணுவ முகாம் அமைக்கப்பட்டது. அந்த பகுதியில் பனிச்சையடி, திராய்மடு, பிள்ளையாரடி, கொக்குவில் சத்துருக்கொண்டான் கிராமங்களின் மக்கள் இடம்பெயர்ந்து நகரில் தஞ்சமடைந்து முகாம்களில் தங்கியிருந்தனர். இவர்கள் பகலில் தமது கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு சென்று வந்த நிலையில், 1990-9-9 அன்று மாலை 5.30 மணியளவில் இராணுவத்தினர் சுற்றிவளைத்து அங்கிருந்த சிறியோர் தொடக்கம் முதியோர் வரை 186 பேரை ஒன்றுகூடல் என தெரிவித்து சத்துருக்கொண்டான் இராணுவ முகாமிற்கு அழைத்துச் சென்று, அங்கே, இராணுவத்தினருடன் ஊர்காவல் படையினர் இணைந்து இராணுவ முகாமின் தளபதி வர்ணகுலசூரிய என்பவரின் தலைமையில் துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்தனர். இந்த படுகொலையின் பின்னர் ஆட்சிக்கு வந்த சந்திரிகா அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் பாலகிட்ணன் தலைமையில் ஆணைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணை குழுவிற்கு தப்பி வந்தவர் உட்பட உயிரிழந்தவர்களின் உறவுகள் பலர் சாட்சியங்கள் அளித்து, இந்த படுகொலை நிரூபிக்கப்பட்ட படுகொலையாக காணப்பட்டது. இந்த படுகொலை இடம்பெற்று, எதிர்வரும் மாதம் 9ஆம் திகதி 35 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், இந்த படுகொலைக்கான நீதி இதுவரை மறுக்கப்பட்டது. இருந்தபோதும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் ஒவ்வொரு வருடமும் நினைவேந்தலை அனுஷ்டிக்க அமைக்கப்பட்ட நினைவேந்தல் தூபிக்கு வரும்போது பொலிஸார், இராணுவத்தினர் சுற்றிவளைத்து அச்சுறுத்தல் விடுக்கின்றனர். அந்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது. இருந்தபோதும் இப்போது ஆட்சிக்கு வந்திருக்கும் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி தற்போது செம்மணி புதைகுழி மற்றும் ஊழல் மோசடிகளை அழிப்பதற்கு அனுமதி கொடுத்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம் அதேபோல் ஜ.நா மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு வந்து செம்மணிக்குச் சென்று இந்த படுகொலைகளுக்கு உள்நாட்டுப் பொறிமுறைக்குள் தீர்மானிக்கப்பட வேண்டும் என அறிக்கை விடுத்தார். ஆட்சிக்கு வந்துள்ள ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பல விடயங்களை செய்வதாக தெரிவித்தார். இருந்தபோதும் இந்த படுகொலையில் நானும் இறந்திருக்க வேண்டியவள். அப்போது எனக்கு 4 வயது. அன்றைய தினம் எனது பெற்றோர் சுற்றிவளைப்பில் முதல் ஒருசில மணித்தியாலத்துக்கு முன்னர் நாங்கள் அங்கிருந்து வெளியேறி நகரிலுள்ள நலன்புரி முகாமிற்கு சென்றுவிட்டதால் தப்பிக்கொண்டேன். எனவே, உண்மை ஒருநாளும் உறங்காது. செம்மணி புதைகுழி இன்று தோண்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுபோல் சத்துருக்கொண்டான் படுகொலை செய்யப்பட்ட அப்போதைய இராணுவ முகாம் இருந்த இடம் தோண்டப்பட வேண்டும் என்ற இந்த தீர்மானம் எமது உறுப்பினர்களின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்டு இந்த தீர்மானத்தை ஜனாதிபதி, பிரதமர், ஜ.நா மனித உரிமை ஆணையம், அனுப்பப்பட்டு நீதி கிடைக்க வேண்டும் என பிரேரணையை முன்வைத்தார். இந்த பிரேரணைக்கு சபையில் இருந்த முழு உறுப்பினரது ஆதரவு வழங்கப்பட்டு, சத்துருக்கொண்டான் படுகொலை 35ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அனைவரும் எழுந்து நின்று, இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தினர். https://www.virakesari.lk/article/223114
2 months ago
மேர்சிக்கு மட்டும் ஏன் பையன் இல்லை? இது இவர்களது பையன்களா?
2 months ago
இதற்குப் பதிலாக இதைஒத்த சட்டத்தை அமுல்படுத்தாவிட்டால் சரி.
2 months ago
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது - இலங்கை வரலாற்றில் முதன்முறை; என்ன காரணம்? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க (கோப்புப்படம்) 22 ஆகஸ்ட் 2025, 09:00 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் (இது, சமீபத்திய செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது.) குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். எனினும், முன்னாள் ஜனாதிபதி அரச நிதியை தவறாகப் பயன்படுத்தவில்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், ரணில் விக்ரமசிங்க விசாரணைகளுக்காக இன்று அழைக்கப்பட்டிருந்தார். இதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பில் உள்ளகுற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முற்பகல் ஆஜராகியிருந்தார். ரணில் விக்ரமசிங்கவிடம் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப் பகுதியில் அரச நிதியை பயன்படுத்தி தனிப்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணத்தை மேற்கொண்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. தனது மனைவியான மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவிற்காக லண்டனுக்கு , அரச நிதியை பயன்படுத்தி விஜயம் மேற்கொண்டதாக கூறப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி நீதிமன்றத்திற்கு விடயங்களை அறிவித்திருந்தது. இதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக செயலாளர் சென்ரா பெரேரா மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரிடம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை நடத்தியிருந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்துக்கொள்வதற்காக ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று காலை 09 மணிக்கு அழைக்கப்பட்டிருந்தார். இதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் அவர் முன்னிலையாகியதை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்றைய தினம் கோட்டை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. முதல் சந்தர்ப்பம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக முன்னான் ஜனாதிபதி ஒருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் 1978ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டமே தற்போது நாட்டில் அமலில் உள்ளது. இந்த அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதி ஒருவருக்கு அதிவுயர் அதிகாரமான நிறைவேற்று அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 1978ம் ஆண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை கொண்டு வரப்பட்டதன் பின்னர், ஜே.ஆர்.ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாஸ, டி.பி.விஜேதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஸ, ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஜனாதிபதிகளாக பதவி வகித்திருந்தனர். ரணில் விக்ரமசிங்கவிற்கு பின்னர் தற்போது அநுர குமார திஸாநாயக்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்றார். இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளில் பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், அவர்களில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. எனினும், வரலாற்றில் முதல் தடவையாக முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவா, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். பட மூலாதாரம், PRADEEPA MAHANAMAHEWA படக்குறிப்பு, சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவா முன்னாள் ஜனாதிபதியை கைது செய்ய முடியுமா? முன்னாள் ஜனாதிபதி ஒருவரை கைது செய்யும் அதிகாரம், இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் காணப்படுகின்றதா என்பது தொடர்பில் பிபிசி தமிழ், மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சட்டத்தரணியுமான பிரதீபா மஹனாமஹேவாவிடம் வினவியது. ''ஜனாதிபதி ஒருவருக்கு விசேட சிறப்புரிமை உள்ளது என 1978ம் ஆண்டு அரசியலமைப்பின் 7வது சரத்தில் மிகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த சிறப்புரிமையின் பிரகாரம், ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக அவரது பதவி காலத்தில் எந்தவொரு சிவில் அல்லது குற்றவியல் வழக்கொன்றை பதிவு செய்ய முடியாது என 35/1 சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது." என்றார். எனினும், அரசியலமைப்பின் 19வது திருத்தத்திற்கு அமைய, அவரது பதவிக் காலத்திற்குள் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கும் பட்சத்தில், அவருக்கு எதிராக சிவில் அல்லது குற்றவியல் வழக்கொன்று தாக்கல் செய்ய முடியாத பட்சத்திலும் அவருக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்ய முடியும் என அவர் விளக்குகிறார். ''ஜனாதிபதி ஒருவரின் பதவிக் காலத்திற்குள் மாத்திரமே சிவில் அல்லது குற்றவியல் வழக்கொன்றை தாக்கல் செய்ய முடியாது. அவரது பதவியிலிருந்து அவர் விலகியதன் பின்னர் அல்லது ராஜினாமா செய்த பின்னர் அவர் பதவிக் காலத்தில் விடுத்த சிவில் அல்லது குற்றவியல் தவறுகளுக்கு வேறொரு தரப்பினரால் வழக்கு தாக்கல் செய்ய முடியும். அதில் எந்தவித தடங்கல்களும் இல்லை. நீதிமன்றத்தில் பீ (B) அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே முன்னாள் ஜனாதிபதியின் பிரத்யேக செயலாளர் மற்றும் செயலாளர் ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. கோட்டை நீதவானின் அனுமதியுடனேயே முன்னாள் ஜனாதிபதியிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது." என அவர் தெரிவித்தார். அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என்பது தெரியவரும் பட்சத்தில், போலீஸாரினால் அவர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் இந்த சந்தர்ப்பத்தில் போலீஸ் பிணை அவருக்கு வழங்க போலீஸாருக்கு அதிகாரம் கிடையாது என்றும் அவர் கூறுகிறார். "அதனாலேயே நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகின்றார். 1999ம் பிணை சட்டத்திற்கு அமைய அவருக்கு பிணை கோரிக்கை முன்வைக்கப்படும்.'' எனவும் அவர் குறிப்பிடுகின்றார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cqle7lp593lo
2 months ago
கைதாவார்கள் என்று எதிர்பார்த்திருந்த ராஜபக்கச குடும்பம் தப்ப எதிர்பாராமல் ரணில் கைதாகியுள்ளார். அடுத்த தேர்தலில் வெல்ல இது ஒன்றே போதும்.
2 months ago
பழைய இரும்பு விலைக்கு விற்கப்படும்.
2 months ago
இதனைக் கொண்டுபோய் என்ன செய்வினம்....😉
2 months ago
2 months ago
இலங்கையின் வரலாற்றிலேயே... முதன் முதலாக தேசியப்பட்டியல் ஊடாகப் பாராளுமன்ற உறுப்பினராகி, பிரதமராகி, ஜனாதிபதியாகி, பொருளாதார மீட்பராகி, கைதாகி, பிணையாகி.... எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்த எம்பெருமானார். 😂 🤣 Anusha Nadarajah
2 months ago
ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்! குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வாக்குமூலம் அளிப்பதற்காக இன்றைய தினம் முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ரணில் விக்ரமசிங்க, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் முன்நிலைப்படுத்தப்பட்டார். இதனையடுத்து அவருக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் ஜனாதிபதியாக பதவி வகித்த ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1444292
2 months ago
இதை நம்பாதவன்... இரத்தம் கக்கி சாவான். 😂 🤣
2 months ago
பாதுகாப்புப்படையினரின் அத்துமீறல்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திலும், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் மீது தொடர்ச்சியான அத்துமீறல்கள் பாதுகாப்புப்படையினரால் மேற்கொள்ளப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக வடக்கில் இனங்காணப்பட்டுள்ள, மனிதப்புதைகுழிகள் தொடர்பாக, நம்பத்தகுந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, மிகமோசமான குற்றங்களைப் புரிந்தவர்கள் நீதியின்முன் நிறுத்தப்படுவதற்கு அவசியமான அழுத்தத்தை இலங்கைக்கு வழங்கவேண்டுமென சர்வதேச நாடுகளிடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் தேர்தல்காலத்தில் வழங்கப்பட்டிருந்த வாக்குறுதிகளை மீறி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்றதன் பின்னரான, கடந்த ஒரு வருடகாலத்தில் முறையற்ற விதத்தில் பயங்கரவாதத்தடைச்சட்டம் பிரயோகிக்கப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கையில் நீதிக்கான சாத்தியப்பாடுகள் இன்னமும் பின்னடைவான நிலையிலேயே உள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேலும் குறிப்பிட்டுள்ளது, கடந்த சில தசாப்தகாலங்களில் இலங்கையில் சுமார் 20 மனிதப்புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக யுத்தத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் செறிந்துவாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நிர்வாகத்தின் கீழும் இந்த அச்சுறுத்தல்கள், குறையவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. https://athavannews.com/2025/1444285
Checked
Sat, 10/25/2025 - 07:36
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed