2 months ago
20 AUG, 2025 | 04:55 PM 1990 களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உடலங்கள் மண்டைதீவு பகுதி குறிப்பிட்ட சில கிணறுகளில் இருப்பதாகவும் அதற்கான வாழும் சாட்சியங்கள் இருப்பதாகவும் சபையின் உறுப்பினர் பிரகலாதன் கூறியதுடன் இந்த புதைகுழியை அகழ்ந்து உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வேலணை பிரதேச சபையின் இரண்டாவது மாதாந்த கூட்டம் இன்று புதன்கிழமை (20) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் காலை 10.00 மணிக்கு சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே இவ்வாறு வலியுறுத்தினார். மேலும் செம்மணி புதைகுழி விவகாரம் பூதாகரமாக இருக்கும் இன்றைய சூழலில் வேலணை பிரதேசத்தில் 90 ஆம் ஆண்டு நடைபெற்றதாக கூறப்படும் இந்த புதைகுழியையும் அகழ்வதற்கு அப்பிரதேசத்தை உள்ளடக்கிய பிரதேச சபையாக இருப்பதால் அதை வலுயுறுத்தவே இந்த விவகாரம் இங்கு வலியுறுத்தப்படுகின்றது என்றும் கூறினார். இது குறித்து சபையில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் குறித்த மனிதப் புதைகுழி விவகாரம் காலத்துக்கு காலம் தேர்தல் அரசியல் பேசும் பொருளாக இருப்பதால் இது தொடர்பிலான உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும். குற்றவாழிகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதுடன் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தீர்வும் பரிகாரமும் வழங்குவது அவசியம் என்றும் உறுப்பினர்களான அனுசியா ஜெயகாந்த்,பார்த்தீபன், மற்றும் கருணாகரன் நாவலன் ஆகியோர் வலியுறுத்தியிருந்தனர். இன்னிலையில் குறித்த ஆதாரங்களுடன் துறைசார் தரபுக்கு அறிக்கை அனுப்பப்ப சபையில் தீர்மானிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/222963
2 months ago
பட மூலாதாரம், KING’S COLLEGE LONDON படக்குறிப்பு, இந்த தொழில்நுட்பம் இரண்டு ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வரும் என மருத்துவர் ஷெரிஃப் எல்ஷர்காவி நம்புகிறார். கட்டுரை தகவல் ஹேரி லோவ் பிபிசி நியூஸ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் உங்கள் முடியிலிருந்து தயாரிக்கப்படும் டூத்பேஸ்ட் (பற்பசை) பாதிக்கப்பட்ட உங்களின் பற்களை சரிசெய்து பாதுகாக்கலாம் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். முடி, தோல் மற்றும் கம்பளியில் காணப்படும் புரதமான கெரடினால் பல் எனாமலை சரி செய்து பல் சொத்தையாவதை முன்கூட்டியே தடுக்க முடியும் என லண்டன் கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கெரடின் என்பது எச்சிலில் உள்ள தாதுக்களுடன் தொடர்பு கொள்ளும்போது இயற்கையான எனாமல் அமைப்பு மட்டும் செயல்பாட்டை ஒத்த பாதுகாப்பு பூச்சு ஒன்றை தயாரிக்கிறது என இவர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது. "கெரட்டின் என்பது தற்போதைய பல் சிகிச்சைகளுக்கு ஒரு நல்ல மாற்றை வழங்குகிறது" என்கிறார் கிங்ஸ் கல்லூரியின் முனைவர் ஆய்வாளரும் இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியருமான சாரா காமியா. பட மூலாதாரம், KING’S COLLEGE LONDON படக்குறிப்பு, அமிலத்தன்மை கொண்ட உணவு மற்றும் பானங்களால் பற்கள் சொத்தை ஆகலாம். "இந்த தொழில்நுட்பம் உயிரியல் மற்றும் பல் மருத்துவத்துக்கு இடையேயான இடைவெளியை சுருக்கி இயற்கையான நடைமுறையை பிரதிபலிக்கும் சுழலுக்கு உகந்த மாற்றை வழங்குகிறது" என்று தெரிவித்தார். மேலும் அவர், "இது உயிரியல் கழிவு பொருட்களான முடி மற்றும் தோலிலிருந்து சூழலுக்கு உகந்த முறையில் நிலையாக பெறப்படுகிறது. அதோடு இவை பல் மறுசீரமைப்பில் பயன்படுத்தப்படும் நச்சுத்தன்மை கொண்ட பாரம்பரிய பிளாஸ்டிக் ரெசின்களுக்கான தேவையை தவிர்க்கிறது." என்றார். அட்வான்ஸ்ட் ஹெல்த்கேட் மெட்டீரியல்ஸில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வில் விஞ்ஞானிகள் கம்பளியிலிருந்து கெரடினை எடுத்துள்ளனர். படக்குறிப்பு, முடியிலிருந்து பெறப்படும் கெரடின் மூலம் பல் எனாமலை சரி செய்யும் டூத் பேஸ்டை உருவாக்க முடியும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் கெரடினை பற்களில் தேய்கின்றபோது எச்சிலில் உள்ள தாதுக்களில் தொடர்பு ஏற்படுவதன் மூலம் இயற்கை எனாமலின் அமைப்பு மற்றும் செயல்பாட்டை பிரதிபலிக்கிற மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட, படிகம் வடிவிலான சாரம் போன்ற அமைப்பை உருவாக்குகிறது. ஆய்வாளர்களின் கூற்றுப்படி, காலப்போக்கில் இதன் மீது கால்சியம் மற்றும் பாஸ்பேட் ஐயன்கள் தொடர்ந்து படிந்து பற்களைச் சுற்றி எனாமல் பூச்சு போன்ற பாதுகாப்பு அமைப்பு உருவாவதற்கு வழிவகுக்கிறது. அமிலத்தன்மை கொண்ட உணவுகள் மற்றும் பானங்கள், மோசமான வாய் சுகாதாரம் மற்றும் வயதாவது என அனைத்துமே எனாமல் அரித்து பற்சிதைவுக்கு வழிவகுக்கிறது. இதன் மூலம் பல் வலி ஏற்பட்டு ஒருவர் பல்லை இழக்க நேரிடுகிறது. பட மூலாதாரம், KING'S COLLEGE LONDON படக்குறிப்பு, இந்த ஆய்வு முனைவர் மாணவர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது "எலும்பு மற்றும் முடி போல எனாமல் மறு உற்பத்தி செய்துகொள்ளாது. ஒருமுறை இழந்தால் அதன் பிறகு மீண்டும் பெற முடியாது" என்கிறார் மூத்த ஆசிரியரும் கிங்ஸ் கல்லூரியில் ப்ராஸ்தோடாண்டிக்ஸ் துறையின் ஆலோசகருமான ஷெரிஃப் எல்ஷர்காவி "நாம் ஒரு சுவாரஸ்யமான யுகத்தில் நுழைகிறோம். இங்கு உயிரி தொழில்நுட்பம் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பது மட்டுமல்லாது உடலின் சொந்த பொருட்களை பயன்படுத்தி உயிரியல் செயல்பாடுகளை மீட்டெடுக்கிறது" "மேலும் வளர்ச்சி மற்றும் சரியான துறைசார் கூட்டணி மூலம் கூடிய விரையில் நாம் முடிவெட்டுவது போன்ற எளிய விஷயத்திலிருந்து வலுவான, ஆரோக்கியமான புன்னகைகளைப் பார்க்க முடியும்" எனத் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0mlg893y18o
2 months ago
Published By: DIGITAL DESK 3 20 AUG, 2025 | 04:18 PM லங்கா உப்பு நிறுவனம் தனது அயோடின் கலந்த உப்புப் பொருட்களின் விலையைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. இன்று புதன்கிழமை (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது நிறுவனத்தின் தலைவர் நந்தன திலக்க இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். 400 கிராம் அயோடின் கலந்த உப்புத் தூள் பக்கற் ஒன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 1 கிலோ கிராம் பக்கற் ஒன்றின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அடுத்த வாரம் முதல் 400 கிராம் உப்புத் தூள் பக்கற் ஒன்றின் விலை 100 ரூபாவுக்கும், 1 கிலோ கிராம் உப்புத் தூள் பக்கற் ஒன்றின் விலை 200 ரூபாவுக்கும், கிரிஸ்டல் உப்பு பக்கற் ஒன்றின் விலை 150 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக, நிறுவனத்தால் தயாரிக்கப்படும் 400 கிராம் உப்புத் தூள் பக்கற் ஒன்றின் விலை சதோசா விற்பனை நிலையங்களில் 90 ரூபாவுக்கு கிடைக்கும் என நந்தன திலக்க குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக விலைக் குறைப்பு செயல்படுத்தப்பட்டதாக அவர் மேலும் விளக்கமளித்துள்ளார். https://www.virakesari.lk/article/222948
2 months ago
நல்லூர் தேர்த்திருவிழாவினையொட்டி நாளை யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை Published By: DIGITAL DESK 3 20 AUG, 2025 | 01:52 PM வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா பாடசாலை நாளில் இடம்பெறுகின்றமையால், பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களும் குறித்த நிகழ்வில் பங்குபெற வேண்டும் எனும் நோக்கில் யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை நாளை வியாழக்கிழமை (21) வழங்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் ப.பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் இன்று புதன்கிழமை (20) மதியம் பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இதன்பிரகாரம், உடனடியாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு நாளைய தினம் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறையினை அறிவிக்குமாறு பிரதமர் பணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222936
2 months ago
முல்லைத்தீவு இளைஞன் உயிரிழப்பு : கைதான 4 இராணுவ வீரர்களுக்கும் விளக்கமறியல் 20 AUG, 2025 | 02:04 PM முல்லைத்தீவு, முத்தையன்கட்டு குளத்தில் சடலமாக மீட்கப்படட இளைஞனின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு இராணுவ வீரர்களும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (26) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதிபதி முன்னிலையில் குறித்த 4 இராணுவ வீரர்களும் நேற்று ஆஜர்படுத்தப்பட்டபோதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், அடையாள அணிவகுப்பிற்குட்படுத்தப்பட்ட போது, அவர்களில் இருவரை சாட்சிகள் அடையாளம் காட்டியுள்ளனர். முத்தையன்கட்டு இராணுவ முகாமிற்குள் இராணுவத்தினர் சிலர் இளைஞர்களை அழைத்துள்ளதாகவும் பின்னர் அங்கு சில இராணுவத்தினர் அந்த இளைஞர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதாகவும் இதனையடுத்து அங்கிருந்து இளைஞர்கள் தப்பியோடியுள்ளனர். குறித்த சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காணாமல்போன நிலையில், பின்னர் முத்தையன்கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்த சம்பவத்தில் 32 வயதுடைய எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்பவர் உயிரிழந்திருந்தார். குறித்த இளைஞரின் மரணம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், சார்ஜன்ட் உள்ளிட்ட 4 இராணுவத்தினரைக் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222935
2 months ago
எமது போராட்டத்தை அரசாங்கம் தவறாக சித்தரிக்கின்றது - அரைகுறை ஆடையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட தபால் ஊழியர் Published By: DIGITAL DESK 3 20 AUG, 2025 | 01:18 PM அதிகாரிகள், அமைச்சருடன் இணைந்து தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டு பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாக அரைகுறை ஆடையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட தபால் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட குறித்த ஊழியர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், எங்களுக்கு போதுமான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதில் அதிகாரிகள் தவறிவிட்டதாலேயே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுகின்றது. எங்களது சீருடைக்கான கொடுப்பனவை அதிகரிக்கக் கோரியுள்ளோம். சைக்கிள்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரியுள்ளோம். அத்துடன், ஊழியர்களின் ஒப்பந்தங்களை நிரந்தரமாக்குமாறு கோரியுள்ளோம். ஆனால், அதிகாரிகளும், அமைச்சரும் கைரேகை மற்றும் மேலதிக நேரம் பற்றி பேசுகிறார்கள். சீருடைகளைத் தைப்பதற்காக 600 ரூபாவும் சைக்கிள்களுக்கான கொடுப்பனவாக 250 ரூபாவும் வழங்கப்படுகின்றது. அஞ்சல் தொழிற்சங்கங்களால் நடத்தப்படும் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் குறித்து பொதுமக்களிடம் அதிகாரிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர். நாடளாவிய ரீதியில் ஞாயிற்றுக்கிழமை (17) முதல் ஆரம்பித்த தபால் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இதேவேளை, 19 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து செவ்வாய்க்கிழமை (19) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னரும், வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என தபால் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222933
2 months ago
இங்கு எடுத்துக் கொண்ட அனுமதிப் பத்திரத்துக்கு(படத்துடன் சேர்த்து )35 டாலர்கள் கொடுத்தேன். படம் நாம் கொண்டு போனால் 20 டாலர்கள். இலங்கைக்கு மட்டும் போவதாக இருந்தால் இலங்கையில் எடுப்பது மலிவு. பல நாடுகளுக்கு போவதாக இருந்தால் இங்கிருந்து எடுத்துக் கொண்டு போவது சிறந்தது.
2 months ago
2 months ago
2 months ago
வடக்கில் யுத்தம் இடம்பெற்றமையால் மாபியா கும்பல்களால் வடக்கில் கால்பதிக்க முடியவில்லை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தம் நடைபெற்று கொண்டிருந்தமையினால் போதைப்பொருள் மாபியாக்களால் அந்தப் பகுதிகளுக்குள் ஊடுறுவ முடியவில்லை என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாச, மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆட்சிக்காலங்களில் போதைப்பொருள் வர்த்தகம் தீவிரம் அடைந்ததாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தென் மாகாணத்தில் பாதாள உலகக் குழுக்கள் முன்னாள் ஜனாதிபதிகளின் ஒருங்கிணைப்புடன் இயக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக யுத்தம் இடம்பெற்று கொண்டிருந்த காரணத்தால் அங்கு ஒரு பாதாள உலகத்தை உருவாக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். இந்த பாதாள உலகக் குழுக்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டாலும், அவை மிகவும் தீவிரமாக இருக்கவில்லை. இந்தக் குழுக்களைக் கட்டுப்படுத்த ஒரு God father இருந்தமையே இதற்குக் காரணம் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், பாதாள உலகத்திற்குப் பொறுப்பான அந்தந்த அரசாங்கங்களின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் ஈடுபட்டதாக அமைச்சர் கூறினார். பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையே மோதல்கள் ஏற்படும் போது, தொடர்புடைய அரசியல் தலைவர்கள் அல்லது அவர்களின் ஒருங்கிணைப்பாளர்கள் தலையிட்டு பிரச்சினைகளைத் தீர்த்து வைத்துள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தப்பிறகு அவ்வாறு எந்தவொரு பாதாள குழுக்கழுடனும் டீல் அரசியல் செய்யவில்லை இதனால் அவர்களால் எதுவும் செய்யமுடியாத நிலை தற்போது உருவாகியுள்ளது எனவும் தற்போது பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையே தொகுதிகள் பகிரப்பட்டதால் கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரட்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1443954
2 months ago
2 months ago
பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் சிறுநீரக விற்பனை புகாரில் சிக்கிய நாமக்கல் மாவட்டத்தில் கல்லீரல் முறைகேடும் நடைபெற்றிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. தரகர்கள் மூலம் ஒரு கட்டத்தில் கட்டாய கல்லீரல் தானம் செய்ய நேரிட்டதாக பெண் ஒருவர் இதனை பிபிசி தமிழிடம் உறுதி செய்துள்ளார். இதில் சம்பந்தப்பட்ட 2 தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து விரிவாக விசாரிக்க நாமக்கல் மாவட்ட சார்பு ஆட்சியர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் வறுமையினால் கடனைத் தீர்ப்பதற்காக சிறுநீரகத்தை விற்பனை செய்வது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இப்பகுதியில் 5 பேரிடம் முறைகேடாக சிறுநீரகம் எடுக்கப்பட்டதாக சமீபத்தில் எழுந்த புகாரின்பேரில், அரசு சார்பில் சிறப்புக்குழு ஆய்வு செய்து, திருச்சி மற்றும் பெரம்பலுார் நகரங்களில் உள்ள 2 மருத்துவமனைகளின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டது. அத்துடன் சில பரிந்துரைகளையும் அரசுக்கு வழங்கியுள்ளது. இந்நிலையில், தற்போது இதே பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய பெண் ஒருவர், தன்னிடம் விலை பேசி கல்லீரல் தானத்திற்காக கல்லீரலின் ஒரு பகுதி வெட்டி எடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் பற்றி விசாரிக்கப்பட்டு வருவதாகவும், காவல்துறையில் புகார் தரப்பட்டு இருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் சிறுநீரகம் 8 லட்ச ரூபாய்; கல்லீரலுக்கு நாலரை லட்ச ரூபாய்! இதில் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் பிபிசி தமிழ் பேசியது. அந்த பெண்ணின் தனியுரிமை கருதி அவரது அடையாளம் மறைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அவர், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளிபாளையம் பகுதிக்குக் குடிபெயர்ந்துள்ளார். தனது கணவர் தன்னை விட்டுப் பிரிந்து வேறு ஒரு பெண்ணை மணந்து விட்ட காரணத்தால் தன் மகன் மற்றும் மகளுடன் அவர் இங்கு வந்து குடியேறியதாகத் தெரிவித்தார். அதற்குப் பின் ஏற்பட்ட கடன் பிரச்னையில், கடந்த 2022 ஆம் ஆண்டில் வேறு வழியின்றி ஒரு பெண் முகவரிடம் சிக்கி கல்லீரலைக் கொடுத்ததாகவும் அவர் விளக்கினார். ''வீட்டு வாடகை, பிள்ளைகளை வளர்ப்பதற்கு வெவ்வேறு இடங்களில் கடன் வாங்கினேன். வட்டி அதிகமாகி மூன்றரை லட்சம் கடனாகிவிட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டில் எனக்குக் கடன் கொடுத்த ஒருவர் பள்ளிப்பாளையம் பேருந்து நிலையத்தில் வைத்து என்னை கடுமையாகப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கலா என்ற ஒரு பெண் என்னிடம் அறிமுகமானார். உன் கடனைத் தீர்க்க ஒரு ோசனை யோசனை தருகிறேன் என்று அவர்தான் சிறுநீரகத்தைக் கொடுத்தால் 8 லட்ச ரூபாய் வாங்கித்தருவதாகக் கூறினார்.'' என்றார் அப்பெண். அதைப்பற்றி மேலும் விளக்கிய அவர், ''ஈரோடு, சேலம் என சில இடங்களில் எனக்கு மருத்துவப்பரிசோதனை செய்தார்கள். அதன்பின் சென்னைக்கு என்னை அந்தப் பெண் அழைத்துச் சென்றார். அங்கே எனது சிறுநீரகத்தை எடுப்பதாகத்தான் சொல்லியிருந்தார்கள். ஆனால் கடைசி நேரத்தில் என் சிறுநீரகத்தை பெற்றுக்கொள்வதாகக் கூறியவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. அதனால் சிறுநீரகத்தை எடுக்கவில்லை என்று கூறிவிட்டனர். அதனால் நான் நிம்மதியடைந்தேன்.'' என்றார். அதன்பின்பு, வீட்டிற்குச் செல்லலாம் என்று இவர் புறப்பட நினைத்துள்ளார். அப்போது இதுவரை மருத்துவ பரிசோதனைக்கு செலவிட்ட 50 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து விட்டுப் போகச்சொன்னதாக தன்னை அங்கிருந்தவர்கள் மிரட்டியதாகக் கூறும் அந்த பெண், அதனால் சிறுநீரகத்துக்குப் பதிலாக கல்லீரலில் ஒரு பகுதியை மட்டும் எடுப்பதாகவும் அது மீண்டும் வளர்ந்து விடும் என்றும் கூறினர் என்கிறார். ''அங்கே என் பெயரை மாற்றி சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கினார்கள். அந்த மருத்துவமனையில் 3 நாட்கள் இருந்தேன். நான்காம் நாள் எனக்கு ஆபரேஷன் நடந்தது. ஆனால் அப்போதே அந்தப் பெண்ணைக் காணவில்லை. அதன்பின் அந்தப் பெண்ணைப் பார்க்கவே இல்லை. போனிலும் பேசமுடியவில்லை. அங்கே என்னிடம் எந்த ஆவணமும் கொடுக்கவில்லை. எனக்குப் பேசியதைப் போல 8 லட்ச ரூபாய் கொடுக்காமல் நாலரை லட்சம்தான் கொடுத்தார்கள்.'' என்று மேலும் விளக்கினார் அந்தப் பெண். பட மூலாதாரம், GETTY IMAGES நாமக்கல்லில் லட்சங்களில் விற்கப்படும் சிறுநீரகம் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், ஏழை மக்களின் வறுமை சூழ்நிலையைப் பயன்படுத்தி, அவர்கள் சிறுநீரகத்தை முறைகேடாக எடுப்பதாக நீண்ட காலமாக புகார்கள் உள்ளன. சமீபத்தில் இப்பகுதியில் சிறுநீரகத்தை விற்பனை செய்த ஒருவர், தனக்கு 10 லட்ச ரூபாய் கொடுப்பதாகக் கூறி, 5 லட்ச ரூபாய் மட்டுமே கொடுத்ததாகப் பேசிய ஆடியோ வெளியானது. அதைத்தொடர்ந்து, அந்தப் பகுதிகளில் பலரிடம் சிறுநீரகம் முறைகேடாக எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியானதால், அதுபற்றி விசாரிப்பதற்காக தமிழக அரசால் சிறப்புக்குழு உருவாக்கப்பட்டது. இரண்டு மருத்துவமனைகளின் உரிமம் ரத்து தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் வினீத் தலைமையில் அமைக்கப்பட்ட அந்தக் குழு கள விசாரணை நடத்தி, இரண்டு கட்டமாக அறிக்கை அளித்தது. அப்பகுதியில் 5 பேரிடம் சிறுநீரகம் எடுக்கப்பட்டதாகவும், அவர்கள் ஒப்புதலின்பேரில் தரப்பட்டதால் இது சிறுநீரக திருட்டு அல்ல, சிறுநீரக முறைகேடு என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். குழுவின் இறுதி அறிக்கையின்படி, திருச்சி சிதார் மருத்துவமனை மற்றும் பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ஆகிய 2 மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டிருந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தரகர் இருவர் மீது போலீசிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமின்றி, அந்தக் குழு வேறு சில பரிந்துரைகளையும் வழங்கியுள்ளதாக அரசு தெரிவித்தது. இதுதொடர்பான செய்திக்குறிப்பில் ''மனித உறுப்பு மாற்றுச்சட்டம் 1994ன் படி. உரிமம் பெற்ற மருத்துவமனைகளின் ஆவணங்களை அவ்வப்போது ஆய்வு செய்து, முறைகேடு கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ஒப்புதல் வழங்குவதற்கு தற்போது மாவட்ட அளவில் உள்ள 4 அங்கீகாரக்குழுக்கள் மறுசீரமைப்பு செய்யப்படும். மாவட்ட குழுக்களின் பணிகளை மேற்பார்வை செய்யும் அதிகாரத்துடன் புதிதாக மாநில அளவில் குழு அமைக்கவும் ஆணை வெளியிடப்படும்.'' என்றும் கூறப்பட்டிருந்தது. படக்குறிப்பு, கல்லீரல் முறைகேடு தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். கருமுட்டையும் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு இந்த பகுதிகளில் சிறுநீரக விற்பனை முறைகேடு மட்டுமின்றி, கல்லீரல், கருமுட்டை போன்றவையும் முறைகேடாக எடுக்கப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புகார் தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக இந்த கட்சியின் சார்பில் பள்ளிபாளையத்தில் சமீபத்தில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. பிபிசி தமிழிடம் பேசிய சிஐடியு மாவட்டச்செயலாளர் அசோகன், ''நாமக்கல் மாவட்டத்தில் நீண்ட காலமாக சிறுநீரக விற்பனை முறைகேடு நடந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் கல்லீரல், கருமுட்டை விற்பனையும் அதிகளவில் நடக்கிறது. இதைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும்.'' என்று வலியுறுத்தினார். கல்லீரல் முறைகேட்டில் சிக்கிய பெண்ணுக்கு என்ன ஆனது? கல்லீரல் முறைகேட்டில் சிக்கிய பெண்ணுக்கு கல்லீரல் தானம் வழங்கப்பட்ட ஒரு வாரத்தில் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. அப்போது ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 2022 நவம்பர் 16 ஆம் தேதியன்று சிகிச்சைக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், இவருடைய கல்லீரல் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான மருத்துவக் குறிப்பையும் அவர் பிபிசி தமிழிடம் பகிர்ந்தார். ஆனால், கல்லீரல் கொடுத்த மருத்துவமனையின் ஆவணங்கள் எதுவும் தன்னிடம் இல்லை என்றும் அவர் கூறினார். அந்த ஒரே ஒரு முறை மட்டுமே சென்னை சென்றிருப்பதாலும், ஆட்டோவில் தன்னை பல குறுகலான வீதிகள் வழியாக அழைத்துச் சென்றதாலும் அந்த மருத்துவமனை எங்கு இருந்தது என்பதும் நினைவில் இல்லை என்றும் கூறிய அவர், அந்த மருத்துவமனையின் பெயர் 3 ஆங்கில எழுத்துகளில் இருந்தது என்கிறார். ''அந்தத் தொகையை வாங்கிக் கடனைக் கட்டிவிட்டேன். ஆனால் இப்போது என்னால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. சாப்பிடவே முடியவில்லை. சாப்பிட்டாலும் ஜீரணம் ஆவதேயில்லை. கடுமையான வேதனையை அனுபவிக்கிறேன். அதனால் என் மகன் ஏழாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போகிறான். என் மகள் எட்டாம் வகுப்புப் படித்து விட்டு, என்னைப் பார்த்துக் கொள்வதற்காக என்னுடன் வீட்டில் இருக்கிறாள்.'' என்று அந்தப்பெண் கண்ணீருடன் வேதனையைப் பகிர்ந்தார். சார்பு ஆட்சியர் தலைமையில் விசாரணைக் குழு இந்த பெண் தெரிவித்த தகவல், ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, இதுபற்றி விசாரிக்கப்பட்டு வருவதாகவும், காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதுபற்றி நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் ராஜ்மோகனிடம் கேட்டபோது, ''எங்களுக்கு இதுபற்றி எந்தப் புகாரும் வரவில்லை. ஊடகத்தில் பார்த்து விஷயம் தெரிந்ததும், துறை இயக்குநருக்கு முறைப்படி தகவல் தெரிவித்து விட்டோம்.'' என்றார். சம்பந்தப்பட்ட பெண் பிபிசி தமிழிடம், ''செல்போனில் சிலர் என்னை தொடர்பு கொண்டு அதிகாரிகள் என்று கூறி சிலர் பேசினர். சில விபரங்களை என்னிடம் கேட்டனர். நான் இப்போது படுகின்ற வேதனையை வேறு எந்தப் பெண்ணும் அனுபவிக்கக்கூடாது என்றுதான் இப்போது இதை வெளிப்படையாகக் கூறுகிறேன். அரசு எடுக்கும் நடவடிக்கை எனக்கு ஏதாவது ஒரு நிவாரணத்தையும் இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வையும் ஏற்படுத்தினால் நல்லது.'' என்றார். அந்தப் பெண் கூறியுள்ள தகவல் பற்றியும், அமைச்சர் கூறியுள்ள விசாரணை பற்றியும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா தேவியிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ''இந்த கல்லீரல் முறைகேடு புகார் பற்றி சார்பு ஆட்சியர் தலைமையில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு குழுவை நியமித்து விசாரணை நடத்துகிறோம். விசாரணையின் அடிப்படையில் அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். அதன்பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c78zxq2deneo
2 months ago
Published By: DIGITAL DESK 3 20 AUG, 2025 | 04:59 PM உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யா மீது மறைமுக அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியாவின் மீது கடுமையான வரிகளை விதித்ததாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். யுத்தத்தை நிறுத்த மிகப் பெரிய அழுத்தத்தை டிரம்ப் அளித்துள்ளார். இதில் இந்தியா மீதான தடைகள் மற்றும் பிற நடவடிக்கைகளையும் அவர் எடுத்து உள்ளார். ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று டிரம்ப் மிகவும் தெளிவாக கூறி உள்ளார். ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து வழிகளையும் அமெரிக்கா ஆராய்ந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ரஷ்யாவுடன் இராணுவ வர்த்தக உறவுகளை வைத்திருக்கும் நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க தீர்மானித்தோம். ரஷ்யாவிடம் இருந்து S-400 ஏவுகணை அமைப்பை வாங்குவதற்கான இந்தியாவின் முடிவு, இந்தப் போருக்கு மறைமுகமாக ஆதரவளிப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். இந்தியாவுக்கு எதிராக இந்த கூடுதல் வரி விதிப்பு, ரஷ்யாவுடனான அதன் இராணுவ வர்த்தகத்தை நிறுத்துமாறு வலியுறுத்துவதற்கே. ரஷ்யாவும் உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளும் அமெரிக்காவை மீண்டும் மதிக்கின்றன. இது ரஷ்யா- உக்ரைனுடன் முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள 7 மோதல்களை முடிவுக்குக் கொண்டுவந்தது. இந்தியா-பாகிஸ்தான் மோதலை தடுத்து நிறுத்தினோம். இந்த இரு நாடுகளின் மோதலை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் வர்த்தகத்தை மிகவும் சக்திவாய்ந்த முறையில் பயன்படுத்தியுள்ளார் என வெள்ளை மாளிகையின் செய்திதொடர்பாளர் கரோலின் லீவிட் மேலும் தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 25 வீத பரஸ்பர வரி விதிக்கப்பட்ட நிலையில், எச்சரிக்கையை மீறி ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதாக குற்றச்சாட்டை முன்வைத்து வரியை 50 சதவிகிதமாக டிரம்ப் உயர்த்தினார். இதனிடையே, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஜனாதிபதிகளை அடுத்தடுத்து டிரம்ப் சந்தித்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தலைவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எந்த ஒப்பந்தமும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும் முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரிவித்த டிரம்ப், போர் நிறுத்தத்துக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இதேவேளை, ரஷ்யா - உக்ரைன் போரில் நடுநிலையான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறது. பேச்சுவார்த்தைகள் மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. https://www.virakesari.lk/article/222964
2 months ago
Published By: VISHNU 20 AUG, 2025 | 03:17 AM முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இது அரசாங்க நிதி தனியார் வெளிநாட்டு பயணத்திற்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணை ஆகும். இந்தப் பயணம் 2023 ஆண்டு, செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பயணத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பத்து பேர் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறித்த விசாரணை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்ய குற்றப் புலனாய்வுத் துறை முன்னர் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222911
2 months ago
ஆசிய கோப்பை அணியில் ஸ்ரேயாஸ் இடம்பெறாதது குறித்து கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூறுவதென்ன? பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் க.போத்திராஜ் பிபிசி தமிழுக்காக 20 ஆகஸ்ட் 2025, 01:57 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று ( ஆகஸ்ட்19) அறிவிக்கப்பட்டது. இதில் டி20 அணிக்குள் சுப்மன் கில் மீண்டும் துணைக் கேப்டன் அந்தஸ்துடன் வந்துள்ளார். இதற்கு முன் துணைக் கேப்டனாக இருந்த அக்ஸர் படேலிடமிருந்து பதவி பறிக்கப்பட்டு, கில்லிடம் தரப்பட்டுள்ளது. அதிரடி தொடக்க வீரர் ஜெய்ஸ்வால், நடுவரிசைக்கு பலம் சேர்க்கும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை. இதில் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் ஜெய்ஸ்வால் இடம் பெற்ற நிலையில் திறமையான வீரரான ஸ்ரேயாஸுக்கு அதில்கூட இடமில்லை. ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும், 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சாம்பியன் பெற்றுக் கொடுத்து சிறந்த கேப்டனாக வலம்வந்த ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து புறக்கணிப்படுவதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். யாருக்கு வாய்ப்பு மறுக்கப்படும்? தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் தலைமையில் ஆசியக் கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இளம் வீரர்கள், அனுபவம் மிகுந்த வீரர்கள், திறமையான சுழற்பந்து வீச்சாளர்கள், வேகப்பந்து வீச்சாளர்கள், ஆல்ரவுண்டர்கள் இருக்கும் அணியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 15 வீரர்கள் கொண்ட இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டு, துணைக் கேப்டனாக இருந்த அக்ஸர் படேல் நீக்கப்பட்டு, சுப்மன் கில்லிடம் அந்தப் பதவி தரப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட இந்திய அணியில் தொடக்க வீரர்களுக்கான தேர்வாக, அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சஞ்சு சாம்ஸன் ஆகியோர் இருக்கிறார்கள். சுப்மன் கில் வருகையால் டாப் ஆர்டரில் அபிஷேக் அல்லது சாம்ஸன் இருவரில் யாருக்கு வாய்ப்பு மறுக்கப்படும் எனத் தெரியவில்லை. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்த அக்ஸர் படேல் அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு,சுப்மன் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஸ்ரேயாஸ் பற்றிய கேள்விக்கு பதில் என்ன? இந்திய அணியின் தலைமைத் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின் போது ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது ஏன் என்று கேட்டபோது, அதற்கு அகர்கர் " ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது வருத்தம்தான், ஆனால், அவரை சேர்த்தால் யாரை அணியில் இருந்து நீக்குவீர்கள்? அவர் மீதும் தவறு இல்லை, எங்கள் மீதும் தவறு இல்லை. இந்த நேரத்தில் நாங்கள் 15 வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம், ஆதலால் வாய்ப்புக்காக ஸ்ரேயாஸ் காத்திருக்கவேண்டியதுதான்" எனத் தெரிவித்தார். அபிஷேக், ஜெய்ஸ்வால் குறித்து அகர்கர் பேசுகையில் " ஜெய்ஸ்வால் இடம் பெறாதது துரதிர்ஷ்டம்தான். ஆனால், அபிஷேக் கடந்த ஓர் ஆண்டாக சிறப்பாக விளையாடி வருகிறார், சிறிது பந்துவீசும் திறமையுடையவர். அந்த வாய்ப்பு இருப்பதால், 6வது பந்துவீச்சாளராகவும் பயன்படுத்தலாம் என்பதால் அவர் இடம் பெற்றார்" எனத் தெரிவித்தார். கில் இடம் பெற்றது குறித்து கேப்டன் சூர்யகுமார் கூறுகையில் " டி20 உலகக் கோப்பைக்குப்பின் கில்லுக்கு டி20 அணியில் பெரிதாக வாய்ப்புக் கிடைக்கவில்லை. இலங்கைக்கு எதிரான தொடரில்தான் கடைசியாக கில் துணைக் கேப்டன் பொறுப்பில் என்னுடன் ஆடினார். அதன்பின் கில் டெஸ்ட் தொடரிலும், சாம்பியன்ஸ் டிராஃபியிலும் பரபரப்பாக ஈடுபட்டிருந்தார். இதனால் அந்நாட்களில் அவரின் பெயரை பரிசீலிக்க முடியவில்லை. இப்போது அணிக்குள் கில் மீண்டும் வந்தது மகிழ்ச்சிதான்" எனத் தெரிவித்தார். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ், தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் டி20 போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெறுபவர்களின் பட்டியலை மும்பையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தனர். ஸ்ரேயாஸ் குறித்து அஸ்வினின் கணிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் தளத்தில் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி குறித்து ஊகப் பட்டியலை வெளியிட்டிருந்தார். அதில் ஸ்ரேயாஸ் ஐயர் திறமையான வீரராக இருந்தபோதும், ஷிவம் துபே இடம் பெற்றால் ஸ்ரேயாஸுக்கு வாய்ப்புக் கிடைப்பது கடினம் என்று பேசியிருந்தார். அவரின் கணிப்பிலிருந்து சற்றும் மாறாமல் ஃபார்மில் இல்லாத துபே இடம்பெற்றார், வெற்றிக் கேப்டனாக ரசிகர்களால் புகழப்படும் ஸ்ரேயாஸ் கண்டு கொள்ளப்படவில்லை. ஸ்ரேயாஸ் புறக்கணிக்கப்படக்கூடியவரா? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, ஆசிய கோப்பை டி20 போட்டிக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் இடம் பெறவில்லை. ஸ்ரேயாஸ் ஐயர் திறமையான பேட்டர், பீல்டர், கேப்டனாக ஐபிஎல் தொடர்களிலும், இந்திய அணியிலும் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் தன்னை நிரூபித்திருக்கிறார். கடந்த இரு ஐபிஎல் சீசன்களிலும் இரு அணிகளுக்கு கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ், இருமுறை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற வெற்றிகரமான கேப்டன். 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பல ஆட்டங்களில் நடுவரிசையில் சிறப்பான ஆட்டத்தை ஸ்ரேயாஸ் வழங்கியபோதிலும் "அன்சங் ஹீரோவாகவே" வலம்வந்தார். ஸ்ரேயாஸ் இன்னும் எதையெல்லாம் நிரூபித்தால் இந்திய அணிக்குள் அவர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தெரியவில்லை. 2025 ஐபிஎல் சீசனில் ஸ்ரேயாஸ் 17போட்டிகளில் 604 ரன்கள் குவித்து 50 ரன்கள் சராசரியும், 175 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்திருந்தார், இதில் 6 அரை சதங்களும் அடங்கும். கடந்த 2024 சீசனில் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக இருந்து 350க்கும் மேல் ரன்களைக் குவித்தார் ஸ்ரேயாஸ். இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றபின் ஸ்ரேயாஸ் 26 டி20 போட்டிகளில் விளையாடி 949 ரன்கள் குவித்து 179 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். இதில் ஒரு சதம், 7 அரைசதங்களும் அடங்கும். ஸ்ரேயாஸ் தலைமையில் மும்பை அணி சயத் முஸ்தாக் அலி கோப்பையையும் வென்றது. டி20 போட்டிகளில் ஸ்ரேயாஸ் தனது பேட்டிங் திறமையை நிரூபித்த போதிலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இந்திய அணியில் கடைசியாக 2023, டிசம்பர் 3ம் தேதி பெங்களூருவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் ஸ்ரேயாஸ் ஆடினார், 37 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்த ஸ்ரேயாஸ் இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். அதன்பின் ஏறக்குறைய 2 ஆண்டுகளாகியும் அவருக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்புக் கிடைக்கவில்லை. சமூக வலைத்தளத்தில் கொந்தளிப்பு பட மூலாதாரம், GETTY IMAGES மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் தனது எக்ஸ் தளத்தில் "கடந்த ஆண்டில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஸ்ரேயாஸ் ஐயர் அளவுக்கு எந்த வீரரும் சிறப்பாக பேட் செய்யவில்லை. ஆனாலும் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கான இடம் இன்னும் இல்லை. ஸ்ரேயாஸை யாருக்கோ பிடிக்கவில்லை என்பது மட்டும தெரிகிறது" எனத் தெரிவித்திருந்தார். முன்னாள் வீரர் இர்பான் பதான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் " ஸ்ரேயாஸ் டி20 அணியில் இருக்க வேண்டும் என்பதில் என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை, அது மட்டுமல்லாமல் கேப்டனுக்குரிய தகுதிப்பட்டியலிலும் ஸ்ரேயாஸ் இருப்பவர். இந்த நேரத்தில் ஸ்ரேயாஸுக்கு பொறுமைதான் முக்கியமான கருவியாக இருக்கும்" எனத் தெரிவித்திருந்தார். வழக்கமான வீரர்கள் நடுவரிசை மற்றும் கீழ்வரிசை பேட்டிங்கிற்கு கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா ஆகியோர் உள்ளனர். இதில் கடந்த ஐபிஎல் சீசனில் ரிங்கு சிங் ஃபார்மிலேயே இல்லை, ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் சாம்ஸன், ஜிதேஷ் சர்மா என இரு விக்கெட் கீப்பர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் கீழ்வரிசையிலும், நடுவரிசையிலும் ஜிதேஷ் சர்மா சிறப்பாக ஆடக் கூடியவர், நல்ல ஃபினிஷிங் தரக்கூடியவர், சாம்ஸன் தொடக்க வீரராகவும், ஒன்டவுனிலும் சிறப்பாக பேட் செய்யக்கூடியவர். இதில் டாப் ஆர்டரில் அபிஷேக், கில் களமிறங்கினால், சாம்ஸன், ஜிதேஷ் இருவரில் யாரேனும் ஒருவர் வெளியே அமரவைக்கப்படுவார்கள். இதில் யாருக்கு வாய்ப்புக் கிடைக்கப்போகிறது என்பதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஒருவேளை அபிஷேக் சர்மா அமரவைக்கப்பட்டால் சாம்ஸன், கில் கூட்டணி டாப்ஆர்டராக களமிறங்கலாம். ஜிதேஷ் அமரவைக்கப்பட்டு கூடுதலாக பேட்டர் அல்லது பந்துவீச்சாளர் வரலாம். இரு தமிழக வீரர்கள் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, வாஷிங்டன் சுந்தர் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். வேகப்பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர், சுழற்பந்துவீச்சுக்கு குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல் ஆகிய 3 பேரும் இடம் பெற்றுள்ளனர். இதில் ஆல்ரவுண்டர்களாகவும், நடுவரிசை பேட்டிங்கை ஸ்திரப்படுத்த ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேலுக்கு வாய்ப்புக் கிடைத்தால், வேகப்பந்துவீச்சில் ராணா அமரவைக்கப்பட்டு அர்ஷ்தீப், பும்ரா மட்டுமே இடம் பெறக்கூடும். சுழற்பந்துவீச்சுக்கு முக்கியத்தும் அளிக்கும் வகையில் வருண், அக்ஸர், குல்தீப் இடம் பெறலாம். ரிசர்வ் வீரர்களாக 5 பேர் இடம் பெற்றுள்ளனர். ஐபிஎல் சீசனில் சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வாலுக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை, ஆனால், ரிசர்வ் வீரர்கள் பிரிவில் இடம் பெற்றுள்ளனர். இவர் தவிர பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக், துருவ் ஜூரெல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சுப்மன் கில் வருகை ஏன்? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, ஆசிய கோப்பை டி20 போட்டிக்கான இந்திய அணியில் சுப்மன் கில் இடம் பெற்றுள்ளார். சுப்மன் கில் கடைசியாக 2024 ஜூலையில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விளையாடினார் அதன்பின் இந்திய டி20 அணியில் இடம் பெறவில்லை. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் மட்டும் கில்லுக்கு இந்திய அணி நிர்வாகம் முக்கியத்துவம் அளித்தது. இதனால், இங்கிலாந்துக்கு எதிராக உள்நாட்டில் நடந்த டி20 தொடரில்கூட துணைக் கேப்டனாக அக்ஸர் படேல் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், சாம்பியன்ஸ் டிராஃபி, இங்கிலாந்துக்கு எதிரான சச்சின்-ஆன்டர்சன் டெஸ்ட் தொடரை சமன் செய்தது போன்றவற்றில் கில்லின் அற்புதமான ஆட்டம் வெளிப்பட்டதையடுத்து, அவருக்கு மீண்டும் டி20 அணியில் வாய்ப்புக் கிடைத்தது. கடந்த ஐபிஎல் சீசனில்கூட கில் 650 ரன்கள் குவித்து 155 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி விவரம் சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), சுப்மன் கில்(துணைக் கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, அர்ஷ்தீப் சிங், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஷிவம் துபே, அக்ஸர் படேல், ஜிதேஷ் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா, ரிங்கு சிங், சஞ்சு சாம்ஸன் ரிசர்வ் வீரர்கள்( பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக், துருவ் ஜூரெல், யஷஸ்வி ஜெய்ஸ்வால்) 17-வது ஆசியக் கோப்பை 17-வது ஆசியக் கோப்பை டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், அபு தாபி நகரங்களில் செப்டம்பர் 9 முதல் 28ம் தேதி வரை நடக்கிறது. இதில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் முழு உறுப்பு நாடுகளான நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவை தேர்வு பெற்றநிலையில், இந்த முறை 2024 ஆசிய ப்ரீமியர் கோப்பையில் முதல் 3 இடங்களைப் பிடித்த ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங், ஓமன் அணிகளும் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 8 அணிகளும் குரூப் ஏ, குரூப் பி என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான்,ஹாங்காங் அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களின் குரூப்பில் உள்ள அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும், முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்குத் தகுதி பெறும். இந்த சூப்பர் 4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இந்த சுற்றில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு செல்லும். இந்தியா-பாக். போட்டி இந்திய அணி செப்டம்பர் 10ம் தேதி நடக்கும் முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணியையும், 14ம் தேதி துபாயில் நடக்கும் போட்டியில் பாகிஸ்தான் அணியையும் எதிர்கொள்கிறது. 19ம் தேதி நடக்கும் கடைசி லீக்கில் ஓமன் அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0r7jjp1jxro
2 months ago
பட மூலாதாரம், SANSADTV படக்குறிப்பு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, 130ஆவது அரசியலமைப்பு திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார் 20 ஆகஸ்ட் 2025, 14:52 GMT புதுப்பிக்கப்பட்டது 23 நிமிடங்களுக்கு முன்னர் தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ பிரதமர், முதலமைச்சர்கள், மத்திய, மாநில அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார் மசோதாவின் வரைவின்படி, ஓர் அமைச்சர் பதவியில் இருக்கும்போது, ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றச்சாட்டில் தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டால், பிரதமரின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவரால் அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார். இது காவலில் எடுக்கப்பட்ட 31வது நாளில் நடைபெற வேண்டும். அதே போல பிரதமர், முதலமைச்சர்கள், மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அமைச்சர்கள் ஆகியோர் தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ, 31வது நாளில் அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்ற பிரிவு இந்த மசோதாவில் உள்ளது. இந்த மசோதா, பிரதமர் மற்றும் அமைச்சர்களின் நியமனம் மற்றும் பொறுப்புகளைப் பற்றி பேசும் அரசியலமைப்பின் 75வது பிரிவை திருத்துவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த மசோதா நாடாளுமன்றக் கூட்டு குழுவிற்கு (JPC) அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளில் தனது அறிக்கையை நாடாளுமன்றக் கூட்டு குழு சமர்ப்பிக்கும். எதிர்க்கட்சிகள் தங்கள் ஆட்சேபனைகளை நாடாளுமன்றக் கூட்டு குழு முன் பதிவு செய்யலாம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். பட மூலாதாரம், GETTY IMAGES இந்த மசோதா, தமிழ்நாட்டின் திமுக அரசில் அமைச்சராக இருந்த வி. செந்தில் பாலாஜியின் கைது சர்ச்சையைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்டது. பணமோசடி வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட பிறகு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அவரை பதவியில் இருந்து நீக்கினார். உச்சநீதிமன்றம் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய பிறகு, தமிழ்நாடு முதலமைச்சர் அவரை மீண்டும் அமைச்சராக நியமித்தார். பாலாஜியை மீண்டும் அமைச்சராக்கியதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. பின்னர், அமைச்சரவை மாற்றத்தில் அவர் நீக்கப்பட்டார். 130வது அரசியலமைப்பு திருத்த மசோதா 2025, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா 2025, மற்றும் யூனியன் பிரதேச அரசு (திருத்த) மசோதா 2025 ஆகிய மூன்று மசோதாக்கள் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று அமித் ஷா மக்களவை அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை தகவல் அளித்திருந்தார். மசோதாவின் நோக்கம் மற்றும் காரணங்கள் இதுவரை, குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் எந்த அமைச்சரையோ, முதலமைச்சரையோ அல்லது பிரதமரையோ பதவியில் இருந்து நீக்குவதற்கு எந்த விதிமுறையும் இல்லை. இதுவரை, குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுப்பினர் பதவியும், சட்டமன்ற உறுப்பினர்களின் உறுப்பினர் பதவியும் பறிக்கப்படுகிறது. மசோதாவின் நோக்கம் மற்றும் காரணங்கள் குறித்து அமித் ஷா அளித்த தகவல் மக்களவை உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. "தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இந்திய மக்களின் நம்பிக்கைகளையும் விருப்பங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். அவர்கள் அரசியல் நலன்களுக்கு மேல் உயர்ந்து, பொது நலனுக்காக மட்டுமே செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதவியில் இருக்கும் அமைச்சர்களின் நடத்தையும் குணமும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்," என அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், "மோசமான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட ஒரு அமைச்சரால் அரசியலமைப்பு ஒழுக்கத்தையும், நல்லாட்சி கொள்கைகளையும் பாதிக்கலாம். இதனால் அரசு மீதான மக்களின் நம்பிக்கை குறையும்," என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "மோசமான குற்றச்சாட்டுகள் அடிப்படையில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட அமைச்சரை நீக்குவதற்கு அரசியலமைப்பில் எந்த விதிமுறையும் இல்லை. இதைக் கருத்தில் கொண்டு, பிரதமர், முதலமைச்சர்கள், மத்திய மற்றும் மாநில அமைச்சர்களை நீக்குவதற்கு அரசியலமைப்பின் 75, 164 மற்றும் 239ஏஏ பிரிவுகளில் திருத்தம் செய்ய வேண்டியது அவசியம்," என அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. இதுவரை, கைது செய்யப்பட்டோ அல்லது காவலில் வைக்கப்பட்டோ இருந்தாலும் பல அமைச்சர்கள் பதவி விலகுவதில்லை. இது சட்டமானால் இதனை தவறாக பயன்படுத்த முடியும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஹேமந்த் சோரன் ஆகியோர் முதலமைச்சர் பதவியில் இருக்கும்போது கைது செய்யப்பட்டனர். அவர்கள் வேண்டுமென்றே சிக்கவைக்கப்பட்டதாக இவர்களின் கைது குறித்து எதிர்க்கட்சிகள் கூறின. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் பதவியில் இருக்கும்போது கைது செய்யப்பட்டார் அரசின் உத்தி என்ன? "இது எதிர்க்கட்சிகளை குறிவைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. கைதுகளில் எந்தவித விதிமுறைகளும் பின்பற்றப்படுவதில்லை. எதிர்க்கட்சி தலைவர்களின் கைதுகள் அதிகரித்துள்ளன, மேலும் இவற்றில் பல முரண்பாடுகள் உள்ளன. புதிய மசோதா, தற்போது முதலமைச்சரை கைது செய்யப்பட்ட உடனே பதவியிலிருந்து நீக்கிவிடும். எதிர்க்கட்சிகளை நிலைகுலைய வைக்க இதுவே சிறந்த வழி," என இந்த மசோதா குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி குறிப்பிட்டுள்ளார் மழைக்கால கூட்டத் தொடர் ஆகஸ்ட் 21 ஆம் தேதி முடிவடைகிறது, மேலும் அரசுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லை. இந்நிலையில், இந்த மசோதாவை கொண்டுவருவதன் நோக்கம் என்ன? இந்த கேள்விக்கு பதிலளித்த ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்ஸ் இன் அரசியல் ஆசிரியர் வினோத் ஷர்மா, "இந்த மசோதாவை சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஒப்புக்கொள்ளும் என்று நான் நினைக்கவில்லை. நரேந்திர மோதி பிரதமராக இருப்பது தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவால்தான் . இந்த மசோதாவின் நோக்கம், அரசு அரசியல் குற்றமயமாக்கலையும் ஊழலையும் கடுமையாக எதிர்க்கிறது என்ற மனநிலையை உருவாக்குவதற்காக உள்ளது" எனத் தெரிவித்தார். "இந்த மசோதா நிறைவேறிய பின்னர் ஆளுநருக்கு எந்தவொரு முதலமைச்சரையும் நீக்கும் அதிகாரம் கிடைக்கும். ஆனால், ஆளுநர் தனது பதவியை தவறாக பயன்படுத்துவதாகவே அதிக குற்றச்சாட்டுகள் உள்ளன என்பது வேறு விஷயம். இருப்பினும், இந்த சட்டத்தின் அதிகார வரம்பிலிருந்து ஆளுநர் விலக்கி வைக்கப்பட்டுள்ளார்." என்று வினோத் ஷர்மா மேலும் தெரிவித்தார். "குற்றஞ்சாட்டப்பட்டவருக்கும் குற்றவாளிக்கும் இடையேயான வித்தியாசத்தை அழிக்க செய்யப்படும் ஏற்பாடு இது. அரசியல் விளையாட்டின் ஒரு பகுதியாக மாறுவதாக அமலாக்கத்துறையிடம் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. தேர்தலில் வெற்றிபெற முடியாத இடங்களில், எதிர்க்கட்சி ஆட்சிகளை கலைப்பதற்கு இது ஒரு வழியாகும். உள்துறை அமைச்சர் தனது கட்சியில் உள்ள சிலரையே கையாள முயற்சிக்கிறார் என்று எனக்கு தோன்றுகிறது," என இந்த மசோதா குறித்து, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் ஜா கூறினார். சிபிஐஎம்எல் பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, இந்த மசோதாவை விமர்சித்து, இது நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பின் மீது நேரடி தாக்குதல் என்று கூறினார். இந்த மசோதா மூலம், மத்திய அமைப்புகளான இ.டி, சிபிஐ, வருமான வரித்துறை மற்றும் என்ஐஏ ஆகியவற்றின் தவறான பயன்பாடு அதிகரிக்கும் என தீபங்கர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c336jg4d212o
2 months ago
வெளிநாட்டவர்களுக்கான தற்காலிக சாரதி அனுமதிப்பத்திர கட்டணம் அதிகரிக்கப்படும் : பிமல் ரத்நாயக்க 20 AUG, 2025 | 05:59 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான கட்டணம் 2 ஆயிரம் ரூபாவிலிருந்து அதிகரிக்கப்படும் என சபை முதல்வரும் போக்குவரத்து அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) அமைச்சு அறிவிப்பை வெளியிட்டு குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், வெளிநாட்டவர்களுக்கான தற்காலிக வாகன அனுமதிப்பத்திரம் முன்னதாக, பிலியந்தலை-வேரஹெரவிலுள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் காரியாலயத்தில் மட்டுமே வழங்கப்பட்டுவந்தது. இந்த நடவடிக்கையினால் வெளிநாட்டவர்களுக்கு நேர விரயம் உள்ளிட்ட பல சிரமங்கள் ஏற்பட்டிருந்தன. குறித்த தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்துக்காக 2ஆயிரம் ரூபா மட்டுமே கட்டணமாக அறவிடப்படும் நிலையில், உதவி செய்யும் போர்வையில் சில இடைத்தரகர்கள் 60 முதல் 100 அமெரிக்க டொலர் வரை வசூலிக்கும் செயற்பாடுகள் அதிகரித்ததுள்ளன. இது சுற்றுலாத் துறைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன் நாட்டின் நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் விடயமாகும். நாட்டுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளில் அதிகமானவர்கள், எமது நாட்டின் இயற்கையை ரசித்து மகிழ்ச்சியாக அவர்களது விடுமுறை காலத்தை களிக்கவே வருகிறார்கள். இவ்வாறு வரும் சுற்றுவா பயணிகளில் அதிகமானவர்கள் சாதாரண தரத்தில் இருப்பவர்களாகும். அதனால் அவர்கள் தங்களின் கைகளில் இருக்கும் பணத்தை மிகவும் சிக்கனமாக பயன்படுத்தி வருவதால், இடைத்தரகர்களின் செயற்பாடுகள், எதிர்காலத்தில் சுற்றுலாத்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இந்த சுரண்டலைக் குறைப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில்லை என்றார். https://www.virakesari.lk/article/222973
2 months ago
இந்திய வாகனங்கள் பக்கத்து நாடுகளை வெருட்டி விற்பதைவிட உலகில் வேறு எங்காவது விற்கிறார்களா? உலகின் தராதரத்துக்கு அந்த வாகனங்கள் இல்லை.
2 months ago
சமைத்து பொண்டாட்டிக்கு ஊட்டி விடுபவன் இன்னும் உயர்ந்தவன்.
2 months ago
🙄 என்ன செய்ய, எனக்கும் கஸ்டமாத்தான் இருக்கு; முல்லாக்கள் காசாவில் கொள்ளையடித்த நிலங்கள் பறிபோகப் போகுதே என்று இலங்கை சோனகர்கள் கவலைப்படுவதை எண்ணுகையில் 🤪 .... வாழ்த்துங்கள் நெஞ்சங்களே, இஸ்ரவேலை வாழ்த்துங்கள் நெஞ்சங்களே!!😍 🇮🇱 🤝
Checked
Fri, 10/24/2025 - 19:33
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed