புதிய பதிவுகள்2

கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் பிரிகேடியர் சங்கர் எ சூசை

2 months ago
->Kotravan Karikaalan தமிழீழக்கடற்படையின் சிறப்புத்தளபதி சங்கர்_சூசை. (16_10_1963) வடமராட்சி பொலிகண்டி எனும் நெய்தல்நிலப்பிரதேசத்தில் தில்லையம்பலம் ஐயாவிற்கு ஒரு மகனுக்குப்பிறகு பதின்மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு 1963_ம் ஆண்டு ஒக்ரோபர்மாதம் 16_ம்நாள் இரண்டாவது மகனாக அவதரித்தவர்தான் சிவநேசன் என்ற இயற்பெயரையும் காந்தி என்ற செல்லப்பெயரையும்கொண்டு பின்னாளில் தமிழீழக்கடற்புலிகளின் சிறப்புத்தளபதியுமகவிளங்கிய திரு சூசை அவர்கள். இயக்கத்தில் திறீ சீறோ (3.0) என்ற என்ற சங்கேதக்குறியீட்டில் அழைக்கப்பட்டவர் எஸ் ஓ (S.O) என்ற குறியீட்டுப்பெயரில் அமைப்பிலும் மக்கள்மத்தியிலும் பிரபல்யம் பெற்றிருந்தவர். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் முதுநிலைத்தளபதிகள் பலர் இருந்தபோதிலும் கடுமை, கண்டிப்பு, நிர்வாகத்திறன் முதலான குணாதிசயங்கள், ஆளுமைகள் என்பன இவரின் அடையாளங்ஙள். இயக்கத்தில் சூசையண்ணையின் ஆளுகையின்கிழ் கடமையாற்றியவர்கள் அமைப்பில் ஏனைய தளபதிகளின்கீழ் கடமையாற்றுவது சுலபம். எந்தளவிற்கு அவர் கண்டிப்பானவராக இருந்தாரோ அவ்வளவிற்கு அவரிடம் கருணையும் இருந்தது. விடுதலைப்போராட்டத்திற்கு மக்களது பங்கு எத்தகைய வகிபாகத்தை வகிக்கின்றது என்பதை விளக்குகின்ற தெளிவான அரசியல்க்கருத்துக்களும் அவரது ஜனரஞ்சகமான பேச்சுக்களும் மக்களை பெரிதும் கவர்ந்தன. சில சந்தர்ப்பங்களில் பொறுப்பாளர்கள் அவர்கள் வகித்த பொறுப்புக்களிலிருந்து இறக்கப்பட்டாலும் (காத்து இறக்கப்பட்டால்) சிறிதுகாலத்தின்பின்னர் மீண்டும் அவரது தகுதிநிலைகளுக்கேற்றவாறு கடமைகளை வழங்கி தட்டிக்கொடுத்து வளர்த்துவிடுவதில் அவருக்குநிகர் அவர்தான். சிலசமயங்களில் கடமைகளில் ஏற்படும் தவறுகள், தாமதங்களால் அவரிடம் கடுமையான பேச்சுக்களும் திட்டுக்களும் வாங்குவோம். ஆனாலும் அடுத்தடுத்தநாட்களில் அவராகவே அழைத்து வலுகூலாக கதைத்து குழையடித்து மேன்மேலும் உற்சாகமாக கடமைகளை முன்னெடுப்பதற்கு உந்துசக்தியளிப்பார். பொதுமக்களிடத்திலிருந்தும் போராளிகளிடமிருந்தும் நாளாந்தம் பல கடிதங்கள் வந்துகொண்டேயிருக்கும். ஒவ்வாருநாட்களும் காலையில் துயிலெழுந்து முதல்வேலையாக அந்தக்கடிதங்களை ஒவ்வொன்றாக வாசித்து அதற்கான நடவடிக்கைகளை கடித உறைகளில் எழுதிவைப்பார். (பின்னர் அது சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களுக்கு அனுப்பிவைக்கப்படும்) அதன்பின்னரே அவர் காலை உடற்பயிற்சியில் ஈடுபடுவார். சிலசமயங்களில் துயிலெழுவதற்கு தாமதமானாலும் உடற்பயிற்சியை முடித்துக்கொண்டு கடிதங்களை வாசிப்பது வழக்கமானது. காலையில் 5.30 இற்கு ஒலிபரப்பாகும் IBC வானொலி செய்தியறிக்கைமுதல் இரவு 8.30 இற்கு ஒலிபரப்பாகின்ற புலிகளின்குரல் செய்தியறிக்கைவரை சூரியன் FM செய்திகள் உள்ளிட்ட அனைத்து வானொலிச்செய்திகளும் கசற்றில் ஒலிப்பதிவு செய்யப்படும். அதனை அவரது மெய்பாதுகாவலர்களில் ஒருவர் செய்வார். சூசையண்ணை தனது கடமைகள் சந்திப்புக்களை முடித்துக்கொண்டு இரவு எத்தனைமணியானாலும் அவர் நித்திரைக்குச்செல்லும்பொழுது ஒலிப்பதிவு செய்யப்பட்ட அனைத்து வானொலிச்செய்திகளையும் செவிமடுத்துக்கேட்டுவிட்டுத்தான் துயில்கொள்வது வழக்கம். கடற்புலி போராளிகள் மாவீரர்கள் குடும்பங்களில் மிகவும் வறுமைப்பட்ட குடும்பங்களுக்கு கடற்புலிகளின் வருமான நிதியிலிருந்து கடற்புலிகளின் நிதிப்பிரிவிற்கு ஊடாக மாதாந்த கொடுப்பனவுத்தொகைகளை வழங்கிவந்தார். கடற்தொழிலாளர்களின் சமூகக்கட்டமைப்பான கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்கங்களின் சமாசங்களின் வளர்ச்சியிலும் அவரது வகிபாகம் காத்திரமானது. ஒருகாலப்பகுதியில் முல்லைமாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசமும் வடமராட்சிக்கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்கங்களின் சமாசமும் பெரும்நிதிநெருக்கடியை சந்தித்தபொழுது கடற்புலிகளின் நிதியிலிருந்து பல இலட்சம்ரூபா நிதியினை குறித்த இரு சமாசங்களுக்கும் கடனாக வழங்கி அந்த நிறுவனங்கள் பலமான கட்டமைப்பாக வளர்ச்சியடைவதற்கு முதன்மையானவராகத்திகழ்ந்தார். (அந்த கடன் நிதி பின்னர் கட்டம்கட்டமாக மீளச்செலுத்தப்பட்டுவிட்டது) இவ்வாறு அவரைப்பற்றி கூறிக்கொண்டேபோகலாம். எனது ஒரு தசாப்தகால போராட்டவளர்ச்சியில் அவரது வழிகாட்டல் நிறையவே உண்டு. குறிப்பிட்டகாலமாவது அவருக்குகீழ் செயற்பட்டிருக்கின்றேன் என்பதில் நான் பெருமைகொள்கின்றேன். அவரது இளையமகன் சங்கர் 2007_ம் ஆண்டு எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தொன்றில் சாவைத்தழுவிக்கொண்டார். அதன்பின்னர் சூசையண்ணை தனது பெயரை சங்கர்_ சூசை என பதிவாக்கிக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. 58_வது அகவைநாள்காணும் தமிழீழக்கடற்படையின் முதன்மைத்தளபதிக்கு உளம்நிறைந்த அகவைநாள் நல்வாழ்த்துக்கள்.

போர்க்காலச் செய்தியாளர்களில் ஒருவரான சகிலா

2 months ago
"யாரோ ஒரு இயக்க டொக்கராம், அவர் தானாம் நிறையபேரை காப்பாற்றினாராம். எனக்கு பேர் மறந்துபோச்சுதடா. அவரும் இன்னொரு டொக்கரும் தான் அந்தப்பிள்ளையை காப்பாற்றினவ. உனக்கு அவரை தெரியுமோடா” ----செய்தியாளர் சகிலா போர்முடிவுற்று ஒன்பது ஆண்டுகளாகிறது. மெல்ல மெல்ல ஒவ்வொருவரும் பேசுகிறார்கள். மனம் பதறும் சம்பவங்களை வேதனையுடன் பகிர்கிறார்கள். இறுதியுத்தகாலப்பகுதியில் செய்தியாளராக கடமையாற்றியவர் சகிலா. செய்தியாளராக பணியாற்றியவர்களில் ஒரே பெண் செய்தியாளரும் இவரே. குடும்பத்தில் இருவர் மாவீரர்கள். யுத்தத்தின் பின் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை. சிறையில் இருந்து விடுதலையாகியதும் அவளுக்கு கிடைத்த சமூகப்புறக்கணிப்பு. பல துயரங்களை சுமந்த ஒரு பெண்ணாகி என்னுடன் பேசும் போது “ ஒருதரும் என்னோடு பேசுவதில்லை, எனக்கு காசு ஒன்றும் வேண்டாம். நீ அடிக்கடி பேசிறியடா” என்று அப்பாவிதனமாக கேட்கும் சகிலாவின் துணிச்சல் மிக்க ஊடகப்பணிக்காகவே அவர் மதிக்கப்படவேண்டியவர். அதிகாலை நேரம், அனேகமான மக்கள் நித்திரையில் இருக்க, அனேகமான மக்கள் அங்கயும் இங்கயும் என்று மாறி மாறி ஓடிக்கொண்டிருந்த நேரமது. எறிகணைகள் வீழ்ந்து படுகாயமடைந்துகொண்டிருப்பார்கள். குண்டுசத்தங்கள் கேட்கும் திசையை நோக்கி சகிலாவின் கமரா விரைந்து செல்லும். 24.03.2009 அன்று காலை 5 மணி புதுமாத்தளன் நீர்ப்பரப்பினை தாண்டி படையினரின் நிலைகளில் இருந்து ஏவப்பட்ட ஆர்.பி.ஜி உந்துகணை ஒன்று வைத்தியசாலையின் பின்புறத்தில் வசித்த பெண் ஒருவரின் கால்கள் துளைத்துக்கொண்டு வெடிக்காத நிலையில் இருந்துள்ளது. யுத்த காலத்தில் வெளியான நிழற்படங்களில் இதைப் பார்த்திருப்பீர்கள். சத்தம் கேட்கும் திசையை நோக்கி ஓடிச்சென்ற உறவினர்கள் வெடிக்காத நிலையில் இருந்த உந்துகணையோடு காயமடைந்த பெண்ணை வைத்தியசாலைக்குக் கொண்டு வந்திருந்தனர். அங்கு கடமையிலிருந்த மருத்துவர்கள் உடனடியாக செயற்பட்டு அப்பெண்ணைக் காப்பாற்றியிருந்தனர். இது எவ்வளவு பெரிய சவால் நிறைந்தது என்று அனைவருக்கும் தெரியும். அன்று அந்த உந்துகணை வெடித்திருந்தால் வைத்தியசாலையில் வைத்தியர்கள் உட்பட பலர் இறந்திருப்பார்கள். “அக்கா நீங்கள் எப்படி பயமில்லாமல் அதில நிண்டீங்கள்? “ என்று கேட்க! “உனக்கு தெரியாதடா, நான் விடியப்பறமே எழும்பிடுவன், பகலில் சனம் என்று, அதில ஒரு கிணற்றடியில குளிக்கபோறனான். வழமையாக வெள்ளனவே நான் வைத்தியசாலைக்கு போடுவன். அன்றும் அப்படிதான் போனன். நான் பயப்பிடேல. எப்படியாவது அந்தப்பிள்ளையை தூக்கிகொண்டு வரவேணும் என்று அதில் கிடந்த துணியில கிடத்தி தான் தூக்கிகொண்டு வந்தது. வைத்தியசாலைக்கு கொண்டுவந்தவுடன்; அதில் இருந்த எல்லாரும் ஓடிட்டினம். யாரோ ஒரு இயக்க டொக்கராம், அவர் தானாம் நிறையபேரை காப்பாற்றினாராம். எனக்கு பேர் மறந்துபோச்சுதடா. அவரும் இன்னொரு டொக்கரும் தான் அந்தப்பிள்ளையை காப்பாற்றினவ. உனக்கு அவரை தெரியுமோடா” இன்றும் அதே வழமையான பாணியில் எல்லாரையும் அன்பாக கேட்டார். சகிலா அக்கா ஊடகத்துறையினை விட்டு விலகியிருந்தாலும் அவர் நிச்சயம் மதிக்கப்படவேண்டிய ஒருவர். இணையங்களில் நீங்கள் பார்க்கின்ற இறுதியுத்தகால புகைப்படங்களை பலவற்றினை சகிலாவே எடுத்திருந்தார். நான், ஏன் சகிலா அக்காவை மதிப்புகுரியவராக பார்க்கிறேன். என்பதையும் சொல்கிறேன். பழைய மாத்தளன், புதுமாத்தளன், இடைக்காடு, அம்பலவன்பொக்கணை(பொக்கணை என்று அழைப்பது வழமை), வலைஞர்மடம், களுவாவாடி, இரட்டைவாய்க்கால், தனிப்பனையடி, முள்ளிவாய்க்கால் மேற்கு, முள்ளிவாய்க்கால் கிழக்கு,வட்டுவாகல் மேற்கு ஆகிய பிரதேசங்களே இறுதி யுத்தகாலப்பிரதேசங்களாகும். இதில் வட்டுவாகல் மேற்கு மட்டும் இறுதி நாட்களிலேயே மக்கள் அதிகளவு ஒதுங்கிகொண்ட பிரதேசமாகும். இப்பிரதேசங்களை நான்; நான்காக பிரிக்கின்றேன். 01)பழைய மாத்தளன், புதுமாத்தளன், இடைக்காடு, அம்பலவன்பொக்கனை 02)வலைஞர்மடம்,களுவாவாடி,இரட்டைவாய்கால் 03)தனிப்பனையடி,முள்ளிவாய்க்கால் மேற்கு,முள்ளிவாய்க்கால் கிழக்கு 04)வட்டுவாகல் மேற்கு இப்பிரதேசங்களில் முதல் பிரிவில் உள்ள பிரதேசங்கள் 2009 ஏப்பிரல் 20,21 ஆகிய நாட்களில் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் செல்கிறது. அத்துடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் படையினரின் பகுதிக்கு சென்று விட்டார்கள். இதில் அம்பலவன்பொக்கணைப்பிரதேசத்திலேயே சகிலா அக்காவும் அவரது தாயாரும் வசித்து வந்திருந்தனர். சிறிலங்கா படையினர் அம்பலவன்பொக்கணையை அண்மித்துக்கொண்டு இருக்கும் பொழுது தமிழீழ விடுதலைப்புலிகளின் காவலரண்கள் வலைஞர்மடம் பகுதியினை அண்மித்து அமைக்கப்பட்டிருந்தது. வலைஞர்மடத்தினை தாண்டி முள்ளிவாய்க்காலுக்கு எவரும் அன்றையநாளில் வரமுடியாதநிலை, அம்பலவண்பொக்கணையில் இருந்த பெரும்பாலானவர்கள் படையினரின் பக்கமும் முள்ளிவாய்க்கால் பக்கமும் முதல்நாள் சென்று விட்டனர். அதற்குள் அகப்பட்டிருந்த சகிலா அக்காவும் தாயாரும் உண்மையிலே படையினரின் பக்கமே செல்லவேண்டும். முள்ளிவாய்க்கால் வருவதற்கு வழியேதும் இல்லை. வருவதென்றால் விடுதலைப்புலிகளின் காவலரண்களைத்தாண்டித்தான் வரவேண்டும். அது கடினமான காரியம். இந்த நேரத்தில் தான் தற்துணிவோடு வலைஞர்மடம் கடற்பகுதிக்கு சென்று கடலுக்குள் இறங்கி கழுத்தளவு தண்ணியால் தனது தயாரையும் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு அழைத்துச்சென்றமையானது. சகிலா அக்கா ஊடகப்பணி மீது வைத்த அதீத அக்கறை தான் காரணம். இறுக்கமான சூழல், சாப்பாடு பிரச்சினை, வயதான பெற்றோர்களை பராமரிப்பதில் சிரமம். குழந்தைப்பிள்ளைகளுக்கான உணவுப்பொருட்கள் இல்லை. காயமடைந்தவர்கள் மீண்டும் மீண்டும் காயமடைகிறார்கள். இந்த நெருக்கடி நிலையில் தான் அப்பகுதியில் வசித்த பல ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் படையினர் பக்கம் சென்றிருந்தனர். படையினரின் பக்கம் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தும் அங்கே செல்லாமல் இறுதிநாள் வரைக்கும் அந்தப்பணியை செய்திருந்தார். இன்றுவரைக்கும் அனைவரும் இறுதியுத்தகால படங்களை பார்க்கின்றீர்கள் என்றால் அதற்கு சகிலா அக்காவின் உழைப்பும் அதில் நிறையவே இருக்கின்றது. (சகிலா அக்கா பற்றிய விரிவான பகுதி நூலில் வெளிவரும்) -->சுரேன் கார்திகேசு

போர்க்காலச் செதியாளர்களில் ஒருவரான சகிலா

மே 16 2009. ஓமந்தையில் விசாரிக்கப்பட போது

2 months ago
முதல்நாள் மாலை முள்ளிவாய்க்கால் வைத்தியசாலை பகுதியை ராணுவத்தினர் கைப்பற்ற அங்கிருந்து சுமார் 3 மைல் தொலைவில் உள்ள இரட்டைவாய்க்கால் ராணுவ சோதனை நிலையத்தை நடந்து வந்தடைந்தோம். அங்கு விசேடமாக விசாரிக்கப்பட்டு பின்னர் ராணுவ பஸ் வண்டியின் ஊடாக ஓமந்தை நோக்கி வந்தோம். வரும் வழி எங்கும் புதுக்குடியிருப்பு விசுவமடு தர்மபுரம் பரந்தன் கிளிநொச்சி போன்ற நகரங்கள் போரினால் சின்னாபின்னப்பட்டு கிடந்ததை காணக்கூடியதாக இருந்தது. நூற்றுக்கணக்கானவர்கள் மிக நெரிசலாக ஏற்றப்பட்டு பயணிக்கும்போது ஒரு சிலரை தவிர அனைவரும் சுவாசிப்பதற்கு சிரமப்பட்டு பயணிக்க வேண்டிய தாயிற்று. பஸ் கனகராயன்குளம் பகுதியை அண்மித்த போது சிறுபிள்ளைகள் தண்ணீர் வேண்டும் என அழுதார்கள். காலை 4 மணியளவில் பஸ் வண்டி ஓமந்தை சோதனை சாவடி வந்தடைந்தது. ஆயிரக்கணக்கான மக்களினால் அப்பகுதி நிரம்பி காணப்பட்டது. ராணுவ அதிகாரி ஒருவரிடம் நாங்கள் வைத்தியர்கள் எனக் கூறினோம். நித்திரை இன்றி உங்கள் வரவுக்காக காத்திருக்கிறேன் என கூறினார். எங்களை ஒரு மரத்தடியில் இருக்கும்படி கூறினார். அங்கே சிதறிக்கிடந்த பிஸ்கட் பெட்டிகளை எடுத்து விரித்து படுத்து உறங்கினோம். அன்று பகல் முழுவதும் பலர் எங்களை விசாரித்தார்கள் மிரட்டினார்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்டார்கள். அங்கு செய்தவற்றை கூற முயற்சித்தோம். அப்படி கூறும் போது அவர்கள் கடுமையாக கோபப்பட்டார்கள். உங்கள் கதையை முடித்து விடுவோம் என சிலர் கூறினார்கள். என்ன கூற வேண்டும் எனக்கு தெரியவில்லை. அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு சில பதிலைக் கூறினேன். சந்தோசப்பட்டார்கள். விசாரணை செய்பவர் ஒரு கதிரையை தூக்கிக்கொண்டு ஒரு பகுதிக்கு செல்லுவர். அவர் கதிரையில் இருக்கும் போது அவரின் முன்னால் சிறு பிள்ளை போன்று கைகளை கட்டிய வண்ணம் இருந்து பதில் அளிக்க வேண்டி இருந்தது. மாலை வரை பல தடவைகள் விசாரிக்கப்பட்டு பின்னர் போலீஸ் வாகனம் ஒன்றில் வவுனியா நோக்கி அனுப்பி வைக்கப்பட்டோம்... --> Thangamuthu Sathiyamoorthy

மே 16 2009. ஓமந்தை...

கற்க கசறும்

2 months ago
இக்காலத்தில் திரையில், கணணித்திரையில் விளையாட்டும் , சேர்ந்து சத்தமிட்டு , பொழுது போக்கும் காலத்திலும் ,அதற்கே அடிமையாகும் சிறார்கள் மத்தியில் இசையில் கவனம்செலுத்தி (ஏதோஒன்றைக் கற்று இருப்பார் ) மிகவும் பாராடட படத் தக்கது . அது இன்னொரு இசைக் கருவியை இயக்க சார்ந்ததாக இருக்கும்.

கற்க கசறும்

2 months ago
கற்க கசறும் ------------------ எல்லா மனிதர்களிடமும் ஏதோ ஒரு திறமையாவது இருக்கும் என்கின்றார்கள். ஆனாலும் அது என்ன திறமை எங்களிடம் வந்து இருக்கின்றது என்று பலராலும் கடைசிவரை கண்டுபிடிக்க முடியாமலேயே போய் விடுகின்றது. நாங்கள் சரியான திசையில் தேடுவதில்லை போல. ஒருவேளை இந்த அடிப்படையே பிழையாகவும் இருக்கலாம். திறமை என்று ஒன்று கட்டாயம் அமைவதும் இல்லை போலும். ஒரு வயதுக்குப் பின் ஒழுங்காக நித்திரை கொண்டு எழும்பினாலே, அதுவே பெரிய திறமை என்றாகி விடுகின்றது. ஆகவே இந்த திறமையை துப்பறியும் வேலையை இளமைக் காலத்தில் செய்தால் தான் அதைக் கண்டறியும் சாத்தியம் அதிகம் உண்டு. மேற்கத்தைய நாடுகளில் பாடசாலைகள், கல்லூரிகள், சூழல் என்பன ஒவ்வொருவரிடமும் இருக்கும் தனித்திறமைகளை கண்டறிய கொஞ்சம் அதிகமாகவே பிரயத்தனம் செய்கின்றார்கள். கீழைத்தேய நாடுகளில் சமூகங்களால் அங்கீகரிக்கப்பட்ட திறமைகளே ஒரு ஐந்து அல்லது ஆறு தான் இருக்கும். மற்றவை எல்லாமே உருப்படாத விசயங்கள். ஆகவே அங்கே யாராவது தன்னிடம் என்ன இருக்கின்றது என்று கண்டறிந்தாலும், அது அநேகமாக உருப்படாத ஒரு விசயமாகவே அங்கே கருதப்படவும் கூடும். மேற்கத்தைய நாடுகளுக்கு குடிபுகுந்த நாங்கள் எங்களின் வளரும் காலத்தில் தவறவிட்டவற்றை பிள்ளைகளின் மூலமாக இன்று இங்கே பிடித்து விடலாம் என்று நினைப்பதும் உண்டு போல. ஒரு எண்ணை ஒரு தாளில் எழுதி, அதை ஒருவரின் தலைக்கு பின்னால் பிடித்தால், அவர் கண்ணை மூடிக் கொண்டே அந்த எண்ணை சரியாக சொல்லும் ஒரு திறமை இருக்கின்றது என்கின்றார்கள். முதலில் இந்த விடயத்தை, திறமையை ஒரு கோர்வையாக புரிந்து கொள்ளவே எனக்கு நேரம் எடுத்தது. ஆனால் இதற்கு ஒரு ஆசிரியரும், குரு என்பதே சரியான பதம், மாணவர்களும் இருக்கின்றனர். இந்த திறமையில் அடுத்த அடுத்த படிகள் கூட இருக்கின்றன என்று ஒருவர் சொன்னார். இதனால் உருப்படியில்லாத விசயங்கள் என்று அன்று அங்கே சமூகம் பல திறமைகளை வகைப்படுத்திய விதத்தை முற்று முழுதாக தவறு என்றும் சொல்ல முடியவில்லை. இங்கு ஆரம்ப பள்ளிக்கூடத்திலேயே குழந்தைகளிடம் இருக்கும் இசைத் திறமையையும் கண்டுபிடித்து விட முயல்கின்றார்கள். இது அன்று அங்கே இருந்த சங்கீதப் பாடம் போல அல்ல. சித்திர ஆசிரியர் அடிக்கின்றாரே என்று சங்கீத ஆசிரியையிடம் ஓடிப் போகும் நிலை அல்ல இது. ஒரு தடவை ஒரு பாடசாலையில் சித்திரத்திற்கும் போகாமல், சங்கீதத்திற்கும் போகாமல் வகுப்பில் பதுங்கியிருந்த சிலரை சித்திர ஆசிரியர் அடித்து பிக்காசோவின் கிறுக்கு சித்திரங்கள் போல ஆக்கினார். பின்னர் அதே ஆசிரியர் கலப்பையை கீறு என்று ஒரு நாள் சொல்லும் போது, எம்ஜிஆரை மட்டும் பார்த்துக் கொண்டிருந்ததில், எம்ஜிஆர் படங்களில் தூக்கிக் கொண்டு திரிந்த கலப்பையை சரியாக பார்க்கவில்லை என்ற உண்மை புரிந்தது. புல்லாங்குழல் தான் வாசிக்கப் போகின்றேன் என்றார் மகள். 'புல்லாங்குழல் கொஞ்சம் கஷ்டம் என்கின்றார்களே, புல்லாங்குழல் போல இருக்கும் வேறு ஏதாவது ஒன்றில் ஆரம்பிக்கலாமே.....................' என்று பணிவாக கேட்டுப் பார்த்தோம். ம்ஹூம்........... புல்லாங்குழல் தான் என்று ஒற்றைக் காலில் நின்றார். அவர் ஒற்றைக் காலில் நிற்கும் போதே அவரிடம் என்ன திறமை இருக்கின்றது எனறு நாங்கள் ஊகித்திருக்கவேண்டும். புல்லாங்குழல் விற்கும் கடைக்கு போனோம். அங்கு எல்லா கருவிகளும், வாத்தியங்களும் விற்பார்கள். 'நீங்கள் உடனடியாக வாங்க வேண்டும் என்றில்லை. ஒரு மாதத்திற்கு வாடகைக்கு எடுத்துக் கொண்டு போங்கள்.......... சரியாக வராவிட்டால் திருப்பிக் கொடுத்து விடுங்கள்................' என்றார் கடைக்காரர். பலத்த அனுபவசாலி என்று தெரிந்தது. எழுவாய்கள் இல்லாமலேயே, எவரையும் எதையும் குறிப்பிடாமலேயே, சில வசனங்களை மென்மையாகச் சொன்னார். ஒருவரை ஒருவர் பார்த்தோம். ஒன்றை வாங்குவது என்று முடிவெடுத்தோம். பலதை எடுத்து ஒவ்வொன்றாக விளக்கினார் கடைக்காரர். நீண்டு பெரிதாக, பளபளவென்று இருந்த ஒன்றை வாங்கினோம். இது தலைமுறை தாண்டியும் உழைக்கும் என்றார் கடைக்காரர். சில தீர்க்கதரிசனங்களை அவை சொல்லப்படும் போது நாங்கள், அதாவது உலகம், சரியாகக் காது கொடுத்துக் கேட்பதில்லை. புல்லாங்குழல் பாடசாலை போய் வர ஆரம்பித்தது. சில இரவுகளில் அதை வீட்டில் கழட்டி, பொருத்துவதும் தெரிந்தது. எங்கள் வீட்டில் இசை அருவியோ அல்லது வெள்ளமோ இன்னும் பாய ஆரம்பித்திருக்கவில்லை. திடீரென்று ஒரு நாள் மாலை நேரம் பக்கத்து வீட்டில் இருந்து 'கடார்.........படார்..............' என்று தகரக் கூரையில் தடியால் விடாமல் அடிப்பது போல சத்தம் வந்தது. பக்கத்து வீட்டின் பின் வளவுப் பக்கத்தில் இருந்தே சத்தம் வந்து கொண்டிருந்தது. அக்கம் பக்கம் சுவருக்கு மேலால் எட்டிப் பார்க்கவும் முடியாத அதி உயர் நாகரிகம் கொண்ட நாடுகள் இவை. ஒரு தடவை அயலவர் ஒருவர் இறந்து போய் ஆறு மாதங்களின் பின்னேயே அவர் இறந்து போனார் என்ற தகவல் தெரிய வந்தது. அந்த வீட்டில் சத்தமே வராமல் அழுதிருப்பார்கள் போல. சில நாட்கள் தொடர்ந்து மாலை வேளைகளில் அடிக்கும் சத்தம் வந்து கொண்டேயிருந்தது. பின்னர் ஒரு நாள் அந்த வீட்டுக்காரர் வந்து கதவைத் தட்டினார். தங்களின் பிள்ளை பாடசாலையில் ட்ரம்ப் பழகுவதாகச் சொன்னார். சில நாட்கள் சமாளித்துக் கொள்ளும்படி கேட்டார். வாத்தியக் கருவியை ஒரு மாதம் வாடகைக்கு எடுத்தார்களா, அல்லது சொந்தமாகவே வாங்கினார்களா என்று நான் கேட்கவில்லை . ஆனால் அவர் சில நாட்கள் என்று சொன்னதால் அவர்கள் என்ன செய்திருக்கின்றார்கள் என்று ஓரளவுக்கு புரிந்தது. பதக்கங்கள், வெற்றிக் கிண்ணங்கள், கேடயங்களை பிள்ளைகளுக்கு வழங்குவதற்கு கொஞ்சமும் தயங்காத நாடுகள் மேற்கு நாடுகள். இங்கு ஒவ்வொரு பிள்ளையும் தன்னுடைய பாடசாலைப் பருவத்தில் நூற்றுக் கணக்கான பதக்கங்கள் கூட பெற்றுவிடுவார்கள். ஒரு போட்டி என்று சொல்லுவார்கள், ஆனால் அதில் பங்குபற்றும் எல்லோருக்கும் இங்கு பதக்கங்கள் கொடுப்பார்கள். இந்த நடைமுறைக்கு பின்னால் சில உளவியல் ஆராய்ச்சி முடிவுகள் இருக்கக்கூடும். பிள்ளைகளுக்கு முதல் ஒன்று இரண்டு பதக்கங்கள் கிடைக்கும் போது பெரும் பெருமைப்படும் பெற்றோர்கள், பின்னர் சில வருடங்களிலேயே ஒரு பெட்டியில் எல்லாவற்றையும் போட்டு மூடி, வீட்டின் கண்காணாத ஒரு இடத்தில் தள்ளி விடுவார்கள். புல்லாங்குழலுக்கும் கொடுத்தார்கள். பக்கத்து வீட்டு ட்ரம்பிற்கும் கொடுத்திருப்பார்கள். எதற்கும் தயங்கி நில்லாமல் சூரியனை சுற்றிக் கொண்டே விடாமல் சுழலுகின்றது பூமி. அதனால் அடுத்த வகுப்பும் வந்தது. ஒரு நூல் பிடித்தது போல வாழ்க்கை ஒரு கோட்டில் அசையாமல் போய்க் கொண்டிருந்தது. ஒரு நாள் வேலைக்கு போகும் பெருந்தெருவில், அங்கே காலை நேரங்களில் அசைய முடியாத வாகன நெரிசல் இருக்கும், எதேச்சையாக பக்கத்து வாகனத்தைப் பார்த்தேன். அங்கே ஒருவர் சாப்பிட்டுக் கொண்டே வாகனத்தை நெரிசலில் செலுத்த முயன்று கொண்டிருந்தார். பின்னர் ஒவ்வொரு நாளும் பார்க்க ஆரம்பித்தேன். அதே பெருந்தெருவில், அதே மனிதர்கள், அதே வேலைகளையே ஒவ்வொரு காலையிலும் செய்து கொண்டிருந்தார்கள். நானும் தான். அடுத்த வருட வகுப்புகள் ஆரம்பித்ததில் இருந்து பக்கத்து வீட்டில் இருந்து சத்தம் வருவதில்லையே என்ற எண்ணம் ஒரு நாள் வந்தது. புல்லாங்குழலையும் அந்த வருடம் காணவில்லை என்றும் தோன்றியது. அடுத்த நாள் விடிந்தது. புல்லாங்குழல் பள்ளிக்கூடம் போகவில்லை. 'ஏன்........ புல்லாங்குழல் தேவையில்லையா..........' என்றேன். 'இல்லை........... இந்த வருடம் வேறு வகுப்புகள்........ புல்லாங்குழல் இல்லை.........' என்றார். சங்கீதம் வராவிட்டால் சித்திரம் போல. அடுத்த தலைமுறைக்காக காத்துக் கொண்டிருக்கின்றது ஒரு புல்லாங்குழல்.

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials

2 months ago
ஓயாத அலைகள் இரண்டு வெற்றி நினைவுத்தூண் கிளிநொச்சி ஒட்டிசுட்டான் வீதியில் உள்ள காக்கா கடைச் சந்தி (கிளிநொச்சி குளச்சந்தி) 2004 நவம் 27 திறக்கப்பட்டது

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials

2 months ago
லெப்.-Lt. செந்தூரன் அவர்களின் சிலை, செந்தூரன் சிலையடி, இரணப்பாலை, முல்லை 'சிங்களவன் தமிழீழ மண்ணை ஆக்கிரமித்த போது, 2009இல்' இந்த சிலைக்குப் பின்னால் எமது மக்களின் போராட்ட பற்றின் வீரியம் இருப்பது பலரறியாதது. இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு பகுதிக் கட்டளையாளராய் இருந்து பின்னர் ஈழ மண்ணிற்கு வந்த இந்தியக் காவாலிகளின் சுற்றிவழைப்பின் போது குப்பி கடித்து வீரச்சாவடைந்தார். அவரின் நினைவாய் இரணைப்பாலை மக்கள் தாமாகவே அவரிற்கான திருவுருவச் சிலையினை நிறுவினர். இதுதான் மக்களின் பேராதரவு என்பது. கதை இப்படி இருக்க.. இந்தச் சிலைக்கு சிங்கள ஆக்கிரமிப்படையின் ஓட்டை ஊடகங்கள் 2009 ஆம் ஆண்டு ஒரு கதை எழுதின. ஆம், ஒரு திரிபுக் கதை. அது முதலில் சிங்கள பாதுகாப்பு அமைச்சின் வலைத்தளத்தில்(Defence.lk) வெளியாக அதை தென்னிலங்கை ஊடகங்கள் சத்தியெடுத்தன. கதை யாதெனில், இந்த சிலையானது தலைவர் மாமாவின் சிலையெனவும் அவர் உயிரோடு இருக்கும்போதே தவிபுவினர் அவருக்கு சிலை வைத்துவிட்டனர் எனவும் ஒரு நாள் முழுக்க பொங்கின. அதன் பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை, அந்த செய்தி அப்படியே நூந்துபோய்விட்டது.

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials

2 months ago
ஆனையிறவில் அமைக்கப்பட்டிருந்த சின்னம் பளையில் இருந்த ஆட்டிவத்த என்ற சேணேவித்தளம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவடைந்த 2 தரைக்கரும்புலிகளின் நினைவாக அச்சேணேவித்தளம் இருந்தவிடத்தில் எழுப்பப்பட்ட நினைவுக்கல். இஃது அவர்களின் பெற்றோரால் 28/03/2003 அன்று திரைநீக்கம் செய்யப்பட்டது.

வேலை நிறுத்த போராட்டத்தினால் ஸ்தம்பிதமடைந்த தபால் பரிமாற்ற சேவைகள்

2 months ago
தபால் தொழிற்சங்க வேலை நிறுத்தத்தால் 100 மில்லியன் நஷ்டம்; பணிக்கு திரும்பாவிட்டால் சட்ட நடவடிக்கை - தபால் திணைக்களம் 21 AUG, 2025 | 04:53 PM (எம்.மனோசித்ரா) தபால் தொழிற்சங்கங்களினால் 6 நாட்களாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் வேலை நிறுத்த போராட்டத்தினால் நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் பெறும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். தபால் உத்தியோகத்தர்களின் சகல விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. மேலதிக வேலை நேர கொடுப்பனவு மற்றும் கைவிரல் ரேகைப் பதிவு உள்ளிட்ட 19 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இவ்வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஐக்கிய தேசிய தபால் சேவை சங்கம், இலங்கை சுதந்திர தபால் மற்றும் தொலை தொடர்பாடல் சேவை சங்கம், ஐக்கிய தபால் மற்றும் மின் தபால் பரிமாற்ற சேவை சங்கம், ஸ்ரீலங்கா சுதந்திர தபால் சேவை சங்கம், ஸ்ரீலங்கா தபால் சேவை முன்னணி உள்ளிட்ட 23 தொழிற்சங்கங்கள் இவ்வாறு தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் நேற்றைய தினமும் மத்திய தபால் பரிமாற்ற சேவை மூடப்பட்டிருந்தது. பதுளை, காலி, அநுராதபுரம், குருணாகல் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரதான தபாலகங்களின் செயற்பாடுகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்தன. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதி தபால் மா அதிபர் சமிஷா டி சில்வா, இந்த வேலை நிறுத்தம் காரணமாக பொது மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். பொது மக்கள் மாத்திரமின்றி முழு தபால் சேவையும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. எனவே இதுவரை பணிக்கு சமூகமளிக்காதோர் இன்றாவது பணிக்கு திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அவ்வாறில்லை எனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த நாட்களில் சுமார் 100 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட கடிதங்கள், பொதிகளும் தேங்கியுள்ளன. அவை தற்போது பொறுப்பேற்கப்பட்டுள்ள போதிலும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமலுள்ளது எனவே கூடிய விரைவில் பணிக்கு திரும்புமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என்றார். எவ்வாறிருப்பினும் தம்மால் முன்வைக்கப்பட்டுள்ள நியாயமான கோரிக்கைகளை மறைத்து கைவிரல் ரேகைப் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மேலதிக வேலை நேர கொடுப்பனவுக்காகவும் மாத்திரமே நாம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அரசாங்கம் மக்கள் மத்தியில் தவறான கருத்தினைப் பரப்புவதாக தொழிற்சங்கங்கள் குற்றஞ்சுமத்தியுள்ளன. எவ்வாறிருப்பினும் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வேலை நிறுத்தத்தைக் கைவிடப் போவதில்லை தொழிற்சங்கங்களும் ஸ்திரமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223034
Checked
Sat, 10/25/2025 - 07:36
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed