2 months ago
யாழில் இராணுவ முகாமுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் 22 Aug, 2025 | 11:10 AM பருத்தித்துறையில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி பருத்தித்துறை நகர சபை தவிசாளர் தலைமையில் வர்த்தகர்கள் பொதுமக்களை ஒன்றிணைத்து வருமாறு தெரிவித்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபை மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (22) நகர சபை தவிசாளர் டக்ளஸ் போல் தலைமையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் எதிர்வரும் திங்கட்கிழமை (25) காலை 8 மணிக்கு பருத்தித்துறை துறைமுகப்பகுதியில் இருந்து ஆரம்பித்து பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை சென்று மகஜர் வழங்கப்பட உள்ளது. 01) வின்சன்டி போல் டக்ளஸ் போல் நகர பிதா பருத்தித்துறை நகர சபை. 02) தம்பிராசா சந்திரதாஸ் தலைவர் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம். https://www.virakesari.lk/article/223080
2 months ago
சத்தியாகிரகத்தை ஆரம்பித்த தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கத்தினர் சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கொழும்பில் உள்ள மத்திய தபால் பரிமாற்றத்திற்கு முன்பாக இந்த சத்தியாகிரகப் போராட்டத்தை அவர்கள் ஆரம்பித்துள்ளனர். இந்த சத்தியாகிரகத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம், தொழிலாளர் போராட்ட மையம் உள்ளிட்ட பல தொழிற்சங்க பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். தபால் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (22) 5வது நாளாகவும் தொடர்கிறது. இந்த சூழலில் மத்திய தபால் பரிமாற்றத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்வைத்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பணிப்புறக்கணிப்பை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த கலந்துரையாடல்களில் பங்கேற்க மறுப்பதாக தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடும் தபால் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும், கைரேகையை கட்டாயமாக்குதல் மற்றும் மேலதிக நேரம் தொடர்பான தீர்மானம் குறித்த முடிவை திரும்பப் பெற அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று பாராளுமன்றத்தில் மீண்டும் வலியுறுத்தினார். 19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் கடந்த 17ஆம் திகதி நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது. பணிப்புறக்கணிப்பு காரணமாக, கடந்த சில நாட்களாக தபால் சேவைகளைப் பெறச் சென்ற மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmemetnq3001jo2g9mif2ju0x
2 months ago
இது யாழ்ப்பாணத்தினை பொருளாதார ரீதியாக வளர்ச்சிக்குள்ளாக்கும், இதனை வரவேற்கவேண்டும் அத்துடன் காங்கேசந்துறை துறைமுகத்தினையும் விரிவாக்கம் செய்து திட்டமிட்ட சாலை ஒருங்கிணைப்பு செய்தால் ஒரு கைத்தொழில் நகரமாக யாழ்ப்பாணத்தினை மாற்றமுடியும். இதனை ஆங்கிலத்தில் Business plan என கூறுவார்கள், இரண்டுவகையான ஆய்வறிக்கைகள் முதாலந்தர ஆய்வறிக்கை (நேரடி ஆய்வறிக்கை), இரண்டாந்தர ஆய்வறிக்கையினை (நிறுவனங்களின் ஆய்வறிக்கை) மூலம் 2 வருட cash flow எதிர்வு கூறலை உருவாக்குதல் உள்ளடங்கலாக இத்திட்டம் உருவாக்கப்படும். இது சாதார வர்த்தக நிறுவனங்கள் ஆரம்பிப்பதற்காக நடைமுறையில் உள்ள விடயம், சில வருடங்களின் முன்னர் ஒரு வர்த்தக விடயமாக ஒரு நிறுவனத்தின் முகவரை அணுகிய போது அவர் தனது நிறுவனத்தினூடாக ஒரு கிளையினை குறித்த நகரத்தில் ஆரம்பிக்க உள்ளதாக கூறினார், ஒரு ஆர்வகோளாறில் வர்த்தக திட்டம் வைத்திருக்கிறீர்களா என கேட்டேன் அது அவருக்கு தெரிந்திருக்கவில்லை. வங்கிகளில் வேலை செய்பவர்களுக்கே வர்த்தக திட்டம் பற்றி தெரிந்திருப்பதில்லை, ஆனால் இணையத்தில் மாதிரி வர்த்தக திட்டம் மற்றும் வழிகாட்டிகளும் உள்ளது, புதிதாக தொழில் தொடங்குபவர்கள் முயற்சிக்கலாம்.
2 months ago
‘கொப்பி பேஸ்ட்’ மட்டுமே அனுரகுமார அரசின் நடவடிக்கை முருகானந்தன் தவம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி.-தேசிய மக்கள் சக்தி அரசு ‘நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக’ அரசுக்குள் முரண்பாடுகள், அரசு மீதான குற்றச் சாட்டுக்கள், சர்ச்சைகள், விமர்சனங்கள், கிண்டல்கள் என ஏதோவொன்றுக்குள் சிக்கி வருகின்றது. ஒரு சிக்கலுக்குள் இருந்து விடுபடுவதற்குள் இன்னொரு சிக்கலுக்குள் மாட்டுப்பட்டு எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் பிரசாரங்களுக்கும் நன்றாகத் தீனி கொடுப்பதே அரசின் நிலையாகவுள்ளது. அனுரகுமார அரசு ஆட்சி அரியணை ஏறிய நாள் முதல் கலாநிதிப் பட்டம், அரிசி, தேங்காய், குரங்கு, உப்பு, பாதாள உலகம், படுகொலைகள், சர்வாதிகாரம், இந்தியப் பிரதமரின் வருகை, ஜனாதிபதியின் இந்திய, சீன விஜயங்கள், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வாக்கு வீழ்ச்சி, மின்சாரக் கட்டணம், வடக்கு காணி சுவீகரிப்பு, 323 சிவப்பு முத்திரை கொள்கலன்கள் விடுவிப்பு,இஸ்ரேலுக்கான அனுமதிகள், கல்வி மறு சீரமைப்பு என பல சர்ச்சைகளில் சிக்கி இவற்றிலிருந்து இன்னும் மீளாத நிலையில், தற்போது ‘கஞ்சா’ சர்ச்சையில் சிக்கியுள்ளது. இலங்கையில் கடுமையான நிபந்தனைகளின் கீழ், முதன்முறையாக ‘கஞ்சா’ பயிரிடுவதற்கான சட்ட பூர்வ அனுமதி ஏழு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற தகவலை ஆயுர்வேதத் துறையின் முன்னாள் ஆணையாளர் நாயகம் வைத்தியர் தம்மிக அபேகுணவர்தன வெளியிட்டுள்ளதன் மூலமே ‘மாற்றம்’ அரசு தற்போது ‘கஞ்சா’ அரசாக மாறி கடும் விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது. இலங்கையில் கடுமையான நிபந்தனைகளின் கீழ், முதன்முறையாக கஞ்சா (பயிரிடுவதற்கான சட்டப்பூர்வ அனுமதி ஏழு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் இலங்கை முதலீட்டு சபையின் கீழ், செயல்படுத்தப்படவுள்ளது. மொத்தம் 37 விண்ணப்பங்கள் வந்த நிலையில், அவற்றில் இருந்து ஏழு முதலீட்டாளர்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இலங்கை முதலீட்டு சபை அவர்களுக்கு உரிய சட்ட அனுமதியை வழங்கியுள்ளது. முதல் கட்டமாக ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் ஆறு மாதங்களுக்குத் தற்காலிக உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் நடைபெறும் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்து, உரிமம் நீட்டிக்கப்படுமா என்பதைக் குறித்து அரசாங்கம் தீர்மானிக்கும். ஒவ்வொரு முதலீட்டாளரும் 2 மில்லியன் அமெரிக்க டொலர் பத்திரத்தை இலங்கை மத்திய வங்கியில் உத்தரவாதமாக வைப்பிலிட வேண்டும். பயிர்ச்செய்கைத் திட்டத்தை ஆரம்பிக்க குறைந்தபட்சம் 5 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு தேவை. கஞ்சா பயிரிடப்படும் அனைத்து உற்பத்திகளும் முழுமையாக ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். நாட்டிற்குள் எந்த விதத்திலும் பயன்படுத்த முடியாது. ஏற்றுமதி நோக்கங்கள் மருந்து உற்பத்தி மற்றும் சோதனைக்காக மட்டுமே. பயிரிடும் பகுதி பாதுகாப்பான வேலியால் சூழப்பட்டிருக்க வேண்டும். விதைகள், இலைகள், வேர்கள் உள்ளிட்ட எந்தப் பகுதியும் வெளிப்புற சூழலுக்குள் வெளியேறக் கூடாது. வளாகத்தில் சிறப்பு பணிக்குழு மற்றும் பொலிஸ் பாதுகாப்பு கட்டாயம். நில ஒதுக்கீடு மற்றும் கண்காணிப்பு, இலங்கை முதலீட்டு சபையின் கீழ் மீரிகம பகுதியில் 64 ஏக்கர் நிலம் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் நடைமுறையை இலங்கை முதலீட்டு சபை, பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சகம், சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் ஆயுர்வேதத் திணைக்களம் இணைந்து மேற்பார்வையிடுகின்றன. இந்த முயற்சியின் மூலம் இலங்கைக்கு கணிசமான அந்நியச் செலாவணி வருவாய் கிடைக்கும் என அரசாங்கம் நம்புகிறது. ஆயுர்வேதத் துறையின் முன்னாள் ஆணையாளர் நாயகம் வைத்தியர் தம்மிக அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இவ்வாறான இலங்கையில் கஞ்சா பயிரிடும் திட்டத்தை அனுரகுமார அரசு முதன்முதலில் கொண்டுவந்திருந்தால் கூட அது பெரியளவிலான சர்ச்சைகளை, விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்காது. ஆனால், கடந்த அரசில் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சராக இருந்த டயனா கமகே இந்த கஞ்சா பயிரிடும் திட்டத்தைப் பாராளுமன்றத்தில் ஒரு யோசனையாக முன்வைத்தபோது, அதனை வரிந்துகட்டிக்கொண்டு எதிர்த்தவர்கள் தற்போதைய ஜனாதிபதியான அனுரகுமாரவும் பிரதமரான ஹரிணி அமரசூரியவும் அமைச்சரான விஜித ஹேரத்தும் கஞ்சா ஏற்றுமதி செய்யும் வகையில், கஞ்சா செய்கையை முன்னெடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக வகுத்து, அதனை சட்டமாக்குமாறு பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி மூலமாக பாராளுமன்றத்திற்குத் தெரிவாகி, ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கி அமைச்சரான டயனா கமகே இந்த யோசனையை 2021ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் முன்வைத்தார். உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் கஞ்சா செய்கை ஊடாக, பாரிய இலாபத்தை பெற்று வருவதாகவும் அவர் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார். எனினும், கஞ்சா ஏற்றுமதிக்கான பயிர் செய்கையை மேற்கொள்வது சட்டமாக்கப்படுகின்றமை தொடர்பில் விரிவான கலந்துரையாடலொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்த நிலையில், அனுரகுமர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அதனை கடுமையாக எதிர்த்தது. இலங்கையில் கஞ்சா தடை செய்யப்பட்ட ஒன்று என்ற போதிலும், நாட்டிற்குள் இன்றும் கஞ்சா பயன்பாடு காணப்படுவதாகவும் இந்த நிலையில், கஞ்சா செய்கையை அனுமதித்து சட்டமாக்கும் பட்சத்தில், அது நாட்டிற்குள் மேலும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சாத்தியம் உள்ளது எனவும் கஞ்சா ஏற்றுமதிக்கு மாத்திரம் அனுமதி தற்போது கோரப்பட்டாலும், எதிர்காலத்தில் உள்நாட்டு பயன்பாட்டிற்கும் அனுமதி கோரப்படும் சாத்தியம் உள்ளது எனவும் இவர்கள் எதிர்த்து வாதிட்டனர். கஞ்சா என்பது போதைப்பொருள் கிடையாது என்பதுடன், கஞ்சா என்பது தலைசிறந்த மருத்துவ குணம் கொண்ட மூலிகை. உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் கஞ்சாவிற்கு அனுமதி வழங்கியுள்ளதுடன், பல நாடுகள் கஞ்சா செய்கை செய்து வருகின்றன. அத்துடன், பல நாடுகள் கஞ்சாவை ஏற்றுமதி செய்யும் அதேவேளை, மருந்து வகைகளுக்கும் கஞ்சாவை பயன்படுத்தி வருகின்றன. கஞ்சாவிற்கான கேள்வி, நாளுக்கு நாள் அதிகரிக்கும் உலகில் நோய்கள் என்றுமே குறையாது . அதனால், மருத்துவ குணம் கொண்ட இவ்வாறான மூலிகைகள் அத்தியாவசியமானவை. எதிர்வரும் காலப் பகுதியில் பில்லியன் கணக்கான பணத்தை ஈட்டித் தரக்கூடிய ஒரு ஏற்றுமதி பயிர் செய்கை கஞ்சா. நாடு இன்று பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள் குறித்து யோசிக்க வேண்டும். இது பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய போதைப்பொருள் கிடையாது என்பதை உலக சுகாதார நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. நாட்டில் தற்போது பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய, செய்கை முறையிலான கேரளா கஞ்சா பயன்படுத்தப்படுகிறது. அதுவே பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். கஞ்சா என்பது இலங்கையின் கலாசாரத்துடன் இணைந்த ஒன்று. கஞ்சா செய்கையின் ஊடாக நாட்டிற்கு பாரிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்த முடியும், கஞ்சாவின் ஊடாக பெரும்பாலான முக்கிய பொருட்களைத் தயாரிக்க முடியும். அழகு சாதன பொருட்கள், மருத்துவ வகைள் என பல்வேறு பொருட்களைத் தயாரிக்க முடியும் எனவும் டயானா கமகே தெரிவித்திருந்தார். ஆனால், அப்போது டயனா கமகேயை மிக மோசமாக, தரக்குறைவாக, அவரின் நடத்தை தொடர்பில் கூட, விமர்சித்தவர்கள்தான் தற்போது அவர் பாராளுமன்றத்தில் முன்வைத்த ‘கஞ்சா பயிர் செய்கை’ திட்டத்திற்கு தமது அரசில் அனுமதி வழங்கி அதனை நியாயப்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். கஞ்சா செய்கை திட்டம் கடந்த அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட திட்டம். ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட கஞ்சா பயிர்ச் செய்கையானது முதலீட்டு அபிவிருத்தி சபையின் திட்டம். இந்த திட்டத்திற்கு அப்போதைய எதிர்க்கட்சியினரும் ஆதரவு வழங்கியிருந்தனர். தற்போதைய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் அப்போது எதிர்க்கட்சியில் இருந்தனர், இந்த திட்டத்தின் ஆபத்தான விடயங்களை அப்போது அவர்கள் எதிர்த்தனர். தற்பொழுது அந்த ஆபத்துக்களைத் தவிர்க்கும் வகையில் அரசாங்கம் திட்டமிட்டு கஞ்சா செய்கையில் ஈடுபடவுள்ளது என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவிக்கின்றார். ‘புதிய திசை’, ‘மாற்றம்’ என்ற கோஷத்தோடு ஆட்சி பீடம் ஏறிய அனுரகுமார அரசு, எந்த புதிய திசையிலும் பயணிக்க வில்லை. எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. பழைய திசையிலேயே தொடர்ந்தும் பயணிப்பதுடன், பழைய அரசுகள் கொண்டுவந்த போது தங்களினால் கடுமையாக எதிர்க்கப்பட்ட திட்டங்களையே அப்படியே ‘கொப்பியடித்து’ தமது திட்டங்களாக்கி அதனை நியாயப்படுத்தி நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றனர். இதுவே சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்கள் முதல் தற்போதைய ‘கஞ்சா பயிர் செய்கை’ வரை முன்னெடுக்கப்படுகின்றது. எனவே, ‘மாற்றம்’ என்பது அனுரகுமார அரசின் வார்த்தையாகவே மட்டும் உள்ள நிலையில் ‘கொப்பி பேஸ்ட்’ மட்டுமே அனுரகுமார அரசின் நடவடிக்கையாக மாறிப்போயுள்ளது. அதாவது நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை, தமது கொள்கையிலிருந்து, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளிலிருந்து அனுரகுமார அரசுதான் ‘மாற்றம்’ கண்டுள்ளது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொப்பி-பேஸ்ட்-மட்டுமே-அனுரகுமார-அரசின்-நடவடிக்கை/91-363230
2 months ago
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்கப்படாது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்கப்படாது எனத் தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தி, மாதாந்திர சம்பளம் பெற வேண்டுமானால் உடனடியாக கடமைக்குத் திரும்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களுக்கும் எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். வேலைநிறுத்தம் காரணமாக இதுவரை சுமார் 140 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தபால் மா அதிபர் தெரிவித்தார். இருப்பினும், மத்திய தபால் நிலையத்தில் குவிந்து கிடந்த தபால் பைகள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், தபால் மா அதிபர் ருவான் சத்குமார கருத்து தெரிவிக்கையில், “சம்பளம் வழங்குவதற்கு திறைசேரியிலிருந்து நிதி பெறப்பட வேண்டும். வேலைநிறுத்தத்தின்போது சம்பளக் கொடுப்பனவுகளுக்கு நிதி விடுவிக்கப்படாது என எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கடமைக்குத் திரும்பியவர்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்பட வாய்ப்புள்ளது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இன்று கடமைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்,” என்றார். https://www.samakalam.com/வேலைநிறுத்தத்தில்-ஈடுபட/
2 months ago
ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜர்! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியுள்ளார். ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு சென்ற பயணம் தொடர்பான விசாரணைக்காக இவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளராக இருந்த சமன் ஏகநாயக்க மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமும் பொலிஸார் ஏற்கனவே வாக்குமூலம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.samakalam.com/ரணில்-விக்ரமசிங்க-குற்றப/
2 months ago
நல்லூர் தேர்திருவிழாவின் போது நகைகளை திருடிய இளம் யுவதி கைது! adminAugust 22, 2025 நல்லூர் தேர்திருவிழாவின் போது நகைகளை திருடிய இளம் யுவதி ஒருவரை ஆலய சூழலில் கடமையில் சாரணர்கள் பிடித்து காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். நல்லூர் ஆலய தேர் திருவிழா நேற்றைய தினம் (21.08.25) வியாழக்கிழமை இடம்பெற்றது. அதன் போது இளம் யுவதி ஒருவர் , பக்தர்களுக்கு இடையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய வேளை, அதனை அப்பகுதியில் இருந்த சாரணர்கள் அவதானித்து யுவதியை தொடர்ந்து அவதானித்துள்ளனர். அதன் போது குறித்த யுவதி ஒரு பெண்ணிடம் சங்கிலி அறுக்க முற்பட்ட வேளை சாரணர்கள் மடக்கி பிடித்துள்ளனர். பின்னர் அப்பகுதியில் இருந்த காவற்துறையினரிடம் யுவதி ஒப்படைக்கப்பட்ட நிலையில், காவற்துறையினர் யுவதியை அழைத்து சென்று சோதனை செய்த போது அவரது உடைமையில் இருந்து மூன்று தங்க சங்கிலிகள் மீட்கப்பட்டுள்ளன. அதனை அடுத்து யுவதியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை, யுவதி கொச்சிக்கடை பகுதியை சேர்ந்த 24 வயதுடையவர் எனவும், அவருடன் மேலும் சில நபர்கள் நல்லூர் ஆலயத்திற்கு வந்திருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில் யுவதியுடன் வந்த ஏனையவர்கள் தொடர்பிலான விசாரணைகளை காவற்துறையினர் முன்னெடுத்துள்ளனர். அத்துடன் யுவதியின் நடவடிக்கைகளை அவதானித்து , யுவதியை கையும் களவுமாக பிடித்து காவற்துறையினரிடம் ஒப்படைத்த சாரணர்களுக்கும் காவற்துறையினர் தமது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். அதேவேளை தேர் திருவிழாவின் போது , தமது தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளதாக 08 பேர் காவற்துறையினரிடம் முறைப்பாடு அளித்துள்ளனர். https://globaltamilnews.net/2025/219514/
2 months ago
தேசிக்காய் பாணம் என சிற்றிக் அமிலத்தை விற்பனை செய்தவருக்கு தண்டம்! adminAugust 22, 2025 சிற்றிக் அமிலம் கரைசலை தேசிக்காய் கரைசல் என விற்பனை செய்த நிறுவனத்திற்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் பகுதிகளில் உள்ள உணவகங்கள் பழக்கடைகள் என்பவற்றுக்கு , தேசிக்காய் கரைசல் என கூறி , அதற்கான துண்டு சீட்டுக்களும் ஒட்டப்பட்டு , சிற்றிக் அமிலம் கரைசலை 4 லீற்றர் கொள்கலன்களில் நிறுவனம் ஒன்று விற்பனை செய்து வந்துள்ளது. குறித்த நிறுவனத்தின் விற்பனை வாகனத்தை வழிமறித்து சோதனையிட்ட சண்டிலிப்பாய் பொது சுகாதார பரிசோதகர் செபமாலை பிறின்சன் அவற்றில் இருந்து தேசிக்காய் கரைசல் என விற்பனை செய்யப்பட்டு வந்த சிற்றிக் அமிலம் கொள்கலன்களை மீட்டு , நிறுவனத்திற்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார். அதனை அடுத்து தேசிக்காய் கரைசல் என விற்பனை செய்யப்பட்ட சிற்றிக் அமிலம் கொள்கலன்களை , அரச பகுப்பாய்விற்கு அனுப்பி அறிக்கை பெறுமாறு மன்று பணித்தது. பகுப்பாய்வு அறிக்கையில், அவ்கரைசல் தனியே சிற்றிக் அமிலம் என்பதுடன் முழுவதும் கிருமித்தொற்றுடனும் மனித பாவனைக்கு உகந்ததல்லாதகாவும் இருந்தாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, குறித்த நிறுவன உரிமையாளரை கடுமையாக எச்சரித்த மன்று , அவருக்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது. இயற்கை பழச்சாறு என விற்கப்பட்ட பானங்கள் இந்த கரைசலை பயன்படுத்தியே தயாரித்து விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/219516/
2 months ago
வடதுருவ நாடுகளில் தற்போது கோடைகாலம் என கருதுகிறேன், பல உறவுகளை யாழில் காணமுடிவதில்லை, திடீரென உங்களது பதிவுகளும் குறைந்து விட்டது. குழந்தைகளின் திறமை அதன் சூழலில் மட்டுமல்ல அவர்களின் விருப்புகளிலும் தங்கியுள்ளது, அதனை திறமை என கூறமுடியாது எனகருதுகிறேன், ஆர்வம் என கூறலாம் அது தொடர்ந்து ஒரு கலை வடிவம் பெறாமலும் போகலாம் (கலை என்பது கலா எனும் சொற்பதத்திலிருந்து உருவாகியதாகவும் கலா என்றால் தொடர்ந்து வளர்ச்சியடையும் எனும் பொருளாம்). எனது முதலாவது குழந்தை பேச ஆரம்பிக்கும் போது ஒரு மொழியில் பேசினார், அது தமிழும் இல்லை ஆங்கிலமும் இல்லை. எனது மனைவிக்கு ஒரு சந்தேகம் அது முற்பிறவி பற்றியதாக இருந்தது, ஆனால் எனக்கு அந்த மொழி எங்கோ கேட்ட மொழி போன்ற உணர்வு இருந்தது ஆனால் அது என்ன மொழி என புரியவில்லை. அது ஒரு எண்ணிக்கை போல இருந்தது, இணையத்தில் 1, 2, 3 ஸ்பானிஸ் மொழியில் கூறுவது எப்படி என தேடிய போதுதான் புரிந்தது அவர் பேசிய மொழி ஸ்பானிஸ், அவர் ஸ்பானிஸ் பேசுவதற்கு சூத்திரதாரி டோரா எனும் கார்டூன் என கண்டுபிடித்து அந்த வழக்கை வெற்றிகரமாக முடித்துவைத்தேன்🤣.
2 months ago
உக்கிரேன் இரஸ்சிய போர் சமாதானமாக தீர்க்கப்படுவதற்கான சாத்தியகூறுகள் குறைவடைந்து வருவது போல காணப்படுகிறது, அமெரிக்க அதிபரின் அண்மைய கூற்று இதனை பிரதிபலிப்பதாக இருக்கிறது, உக்கிரேன் தற்காப்பு நடவடிக்கை தாக்குதலின் மூலம் எதிராளியினை தோற்கடிக்க முடியாது என கூறிய அவரது கருத்து, எதிர்வரும் காலங்களில் இரஸ்சியாவிற்குள் உக்கிரேன் இராணுவத்தாக்குதலை அதிகரிப்பதற்கான சாத்திய கூறுகள் அதிகமாக காணப்படுகிறது. இது அமெரிக்காவின் பலத்தின் மூலமான சமாதானம் எனும் நியோகொன்னின் அடிப்படையாகும். ஆனால் எங்கோ நிம்மதியாக இருந்த ஒரு தேசத்தினை பாதுகாப்பற்றதாக்கிவிட்டு, அதன் பாதுகாப்பிற்கு போராடுவதாக பிரமையினை உருவாக்கி மற்றவர்கள் அழிவில் குளிர்காய்பவர்கள் சமாதானம் பற்றியும், அதற்கேற்ப சூழ்நிலை பற்றியும் பேசுவது வேடிக்கை. உக்கிரேன் சுதந்திரத்திற்கு முன்னர் ஏற்றுக்கொண்ட எக்காலத்திலும் நடுநிலையான ஒரு தேசமாகவும், அணுஆயுதமற்ற தேசம் எனும் கோட்பாடும், பின்னர் உக்கிரேனில் இருந்த அணு ஆயுதங்களை ஒப்படைக்கும் போது அதற்கு பாதுகாப்பு உறுதி வழங்கப்பட்டிருந்தது, அந்த பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்ப்பட்ட அணியில் அமெரிக்கா, இங்கிலாந்து இரஸ்சியா என்பன இருந்தன, அதே இரஸ்சியாவினால் உக்கிரேனிற்கு பாதுகாப்பிற்கு அச்சுறத்தல் 2014 இல் நடுநிலையான உக்கிரேன் அரசினை மேற்கின் ஆதரவுடன் மேடான் சதிப்புரட்சியால் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் கருங்கடல் ஆதிக்கம் செலுத்தக்கூடிய கிரிமியாவில் இருந்த இரஸ்சிய கடற்படை நிலத்திற்கான குத்தகையினை மேற்கு சார்பு உக்கிரேன் புதிய அரசு இரத்து செய்துவிடலாம் எனும் அச்சத்தில் கிரிமியாவினை கைப்பற்றியதுடன் ஆரம்பமானது. 2014 பின்னர் வெளிப்படையாக இரஸ்சியாவின் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தல் விடுக்கும் வகையில்; உக்கிரேன் படை பல அதிகரிப்பு என ஒரு தொடர்ச்சியான அச்சுறுத்தல் நிலவிய நிலையில் இரஸ்சியா 2021 இறுதிப்பகுதியிலிருந்து உக்கிரேன் போர் தொடங்குவதற்கு முன்னர் வரை இரஸ்சியாவிற்கு நேட்டோவிடமிருந்து பாதுகாப்பு உத்தரவாதம் கோரி வந்தது அது நேட்டோவினால் மறுக்கப்பட்டது, உக்கிரேன் மீதான போருக்கு காரணமாக இருந்தது. போரின் ஆரம்பத்தில் ஏற்படுத்த முயன்ற சமாதான முயற்சிகள் கூட மேற்கினால் திட்டமிட்டு குழப்பப்பட்டு போர் தீவிரப்பட்டது. இந்த போருக்கு அடிப்படைக்காரணம் மேற்கின் இரஸ்சியாவின் இருப்பு தொடர்பான கொள்கை வகுப்பு. உக்கிரேன், இரஸ்சியர்களின் அழிவுகளுக்காக அழுவதெல்லாம் ஆடு நனைகிறதே என அழும் ஒரு ஒநாயின் அழுகுரல். இரஸ்சிய இணைய ஊடுருவிகளால், உக்கிரேன் பாதுகாப்பு துறையில் இருந்த ஆவணங்கள் இணையத்தில் கசிய விடப்பட்டுள்ளது அதன் விபரங்களை பார்க்கவில்லை ஆனால் அந்த எண்ணிக்கை பார்க்கும் போது தமது சுயநலத்திற்காக மற்றவர்களை கோர்த்துவிட்டு பின்னர் சமாதானம் என தம்மை விளம்பரப்படுத்துவது பின்னர் மீண்டும் பலமாக மோதுங்கள் என கூறும் இந்த மனிதரை நம்பி தொடர்ந்தும் முட்டாள்தனமாக இரஸ்சியாவும் உக்கிரேனும் மோதினால் முட்டாள்களுக்குத்தான் நட்டம். இந்த போர் அழிவிகளின் பின்னராவது குரங்கினை அப்பம் பிரிக்க அழைக்காமல் சம்பந்தப்பட்ட இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்விற்கு வரவேண்டும். சம்பந்தப்பட்ட இரு நாடுகளும் இந்த போரினால் பாதிக்கப்படவில்லை, உலகெங்கும் இதன் பாதிப்பு தொடர்ந்து கொண்டுள்ளது உலக மக்கள் அனைவரும் விரும்பும் அமைதிக்கு குறுக்கே நிற்கும் அரசுகளை அங்கு வாழும் மக்கள் புறக்கணிக்கவேண்டும்.
2 months ago
திறமையான படப்பிடிப்பாளர் Ingaran Sivashanthan .👍 படப்பிடிப்பு: Ingaran Sivashanthan
2 months ago
2 months ago
மயிலிட்டி துறைமுகத்தை நவீனமயப்படுத்த நடவடிக்கை! யாழ். மயிலிட்டி துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றியமைப்பதற்குரிய நடவடிக்கை வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, கிழக்கில் வாழைச்சேனை துறைமுகத்தை விஸ்தரிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கொழும்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாறறும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,” எமது அமைச்சின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழ். மாவட்டத்துக்கென ஒரு துறைமுகமொன்று இருக்கவில்லை. எனவே, மயிலிட்டி துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றுவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. வெகுவிரைவில் அதற்குரிய வேலைத்திட்டம் ஆரம்பமாகும். அத்துடன், 165 மில்லியன் ரூபா செலவில் யாழ். கொழும்புத் துறையிலுள்ள துறைமுகத்தையும் நவீன துறைமுகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் நல்லதொரு துறைமுகம் இல்லாத குறைப்பாடு காணப்படுகின்றது. வாழைச்சேனை துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டபோதிலும், மீனவர்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். ஏனெனில் ஒலுவில் துறைமுகம் இன்று செயல் இழந்து காணப்படுகின்றது. விஞ்ஞானப்பூர்வமான ஆய்வின்றி கட்ட வேண்டும் என்பதற்காகவே குறித்த துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதனால் வாழைச்சேனை துறைமுகத்தை நோக்கியே மீனவர்கள் படையெடுத்து வருகின்றனர். எனவே, வாழைச்சேனை துறைமுகத்தை மேலும் விஸ்தரிப்பதற்குரிய நடவடிக்கை அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும். இதற்காக 1, 700 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மன்னார், பேசாலையில் இறங்குத்துறையை அமைப்பதற்குரிய நடவடிக்கையை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பேசாலையில் வாழும் மக்களுடன் பேச்சு நடத்தி அவர்களின் குறைப்பாடுகளை தீர்த்து, பேசாலையிலும் துறைமுகமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். யாழ். குருநகர் பகுதியில் இறங்குத்துறைமுகமொன்றை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கை இடம்பெறுகின்றது. இப்பணி முடிந்த பின்னர் நிதி ஒதுக்கப்படும்” இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1444114
2 months ago
அமரர் அருணாவுடன் லெப். கேணல் விக்ரர்
2 months ago
திரு நெடியவனுடன் தமிழ் இளையோர் அமைப்பின் (TYO) உறுப்பினர்கள். 2004/2005 இவர்கள் யாவரும் வன்னிக்கு கற்கைநெறிக்காக வந்த போது நெடியவன் அவர்களுடன் அமர்ந்திருந்து எடுத்த படங்கள் இவையாகும். இவற்றை தாம் காஸ்ட்ரோ அவர்களின் அலுவலகத்திலிருந்து கைப்பற்றியதாக சிங்களம் கூறி வெளியிட்டது.
2 months ago
லெப். கேணல் எழிலவன் எ ஜீவனின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளின் போது 6/02/2002 இலுப்படிச்சேனை "உச்சிவரை முகர்ந்து உயிர் நனைய உறவாடிய உதயத்தின் காதலருக்காக" அன்னாரின் சிலையை அவரது தாயார் திறந்துவைக்கிறார்
2 months ago
காஸ்ட்ரோ எ மணிவண்ணனுடன் வண. இமானுவேல் வண. இமானுவேல் மீது புலிகளின் சொத்துகளை கொள்ளையடித்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளது.
2 months ago
தேசியத் தலைவர் அவர்களுடன் காஸ்ட்ரோ (மாவீரர்)
2 months ago
திரு. நெடியவன்
2 months ago
சாகசக் கண்காட்சியின் போது நான்காம் ஈழப்போர் இப்படையணியின் பெயர் தெரியவில்லை
Checked
Sat, 10/25/2025 - 07:36
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed