புதிய பதிவுகள்2

சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் - நள்ளிரவில் கைது

2 months 1 week ago
நள்ளிரவில் கைது, தள்ளுமுள்ளு - சென்னையில் போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள் எங்கே? பட மூலாதாரம், ANI 14 ஆகஸ்ட் 2025, 02:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் (இந்த சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.) சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகையில் கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று (ஆக. 13) இரவில் அவர்களை காவல்துறையினர் கைது செய்து தென் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் கீழ்கட்டளை, நந்தம்பாக்கம், ஆதம்பாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி, மடுவாங்கரை, பரங்கிமலை என, பல்வேறு பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்களில் அடைக்கப்பட்டனர். ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில், போராட்டக்காரர்களை கைது செய்து பேருந்துகளில் அழைத்துச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. பட மூலாதாரம், UGC படக்குறிப்பு, வேளச்சேரி சமூக நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள போராட்டக்காரர்கள் கைது நடவடிக்கையின்போது இளைஞர்கள் இருவரை பேருந்துக்குள் போலீஸார் தாக்கும் வீடியோவும் வெளியானது. மேலும், பெண் ஒருவர் பேருந்துக்குள் மயங்கி விழுந்திருப்பதையும் அவருக்கு ஆம்புலன்ஸ் வரவழைக்க வேண்டும் என மற்ற தூய்மை பணியாளர்கள் போலீஸாரிடம் கோருவதையும் காண முடிந்தது. எனினும் இந்த காணொளிகளை பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை. வேளச்சேரி சமூக நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சுரேஷ் எனும் தூய்மை பணியாளர் பிபிசியிடம் பேசுகையில், "பெண்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இரண்டு பெண்களுக்கு இதில் காயம் ஏற்பட்டது. எங்கே அழைத்துச் செல்கிறோம் என்பதை கூட போலீஸார் கூறவில்லை. எங்களுக்கு உணவு கொடுப்பதாக கூறினர், ஆனால் நாங்கள் ஏற்க மறுத்துவிட்டோம்" என்றார். பட மூலாதாரம், ANI கைதாக மறுத்து சாலைமறியல் போராட்டம் நடத்தியவர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்யும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன. பின்னர் அவர்களும் கைது செய்யப்பட்டு பேருந்துகளில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டனர். போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டது குறித்து, பிபிசி தமிழிடம் பேசிய உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் பாரதி, "பலரும் போலீஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர், பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்." என்றார். கைது செய்யப்படும்போது போலீஸாருக்கும் போராட்டக்காரர்களும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிலர், குறிப்பாக பெண்கள் மயக்கமடைந்ததை காணொளிகள் வாயிலாக பார்க்க முடிந்தது. நள்ளிரவு 12 மணியளவில் கைது நடவடிக்கை தொடங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். "இரவு நேரத்தில் கைது செய்ய வேண்டும் என காவல்துறை நினைத்ததாக" அவர் கூறினார். தூய்மைப் பணிகளை தனியார் மயத்துக்கு அளிப்பதற்கு எதிராக போராட்டம் தொடரும் என அவர் கூறினார். முன்னதாக, தூய்மை பணியாளர்கள் போராட்டம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது சென்னை மாநகராட்சி, லேபர் யூனியன், ராம்கி நிறுவனம் என 3 தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும் வரும் 31ஆம் தேதி வரை பணியில் வந்து சேரும் தூய்மை பணியாளர்களுக்கு கட்டாய பணி வழங்கப்படும் என நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது ராம்கி நிறுவனம். தூய்மை பணியாளர்கள் அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதால் அவர்களை அந்தப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. தூய்மை பணியாளர்கள் போராட்டம் ஏன்? சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகள் மொத்தம் 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில், 2020ம் ஆண்டில் 10 மண்டலங்களின் தூய்மைப் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள 5 மண்டலங்களில் ராயப்பேட்டை மற்றும் திரு.வி.க. நகர் ஆகியவற்றை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தே தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்திவந்தனர். ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் சென்னை மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகை முன்பு இரவு, பகலாக போராடி வந்தனர். இரு மண்டலங்களை சேர்ந்த சுமார் 2,000 தூய்மை பணியாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சுமார் ரூ.6,000 என இருந்த தங்களின் சம்பளம், கடந்த 10-15 ஆண்டுகளில் படிப்படியாக ரூ. 23,000 என உயர்ந்துள்ளதாகவும் தனியார்வசம் சென்றால் தங்கள் சம்பளம் ரூ. 16 ஆயிரமாக குறைக்கப்படலாம் என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர். "ஆகஸ்ட் 1-ஆம் தேதி வழக்கம்போல பணிக்கு சென்றபோது, 'ஒப்பந்த வேலையில் இருப்பதாக இருந்தால் மட்டுமே வேலை, இல்லையென்றால் வேலை இல்லை' என தங்களிடம் கூறப்பட்டதாக" தூய்மை பணியாளர்கள் கூறுகின்றனர். தூய்மை பணியை தனியார் வசம் ஒப்படைப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், இரு மண்டலங்களும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது, தொழில் தகராறு சட்டம் 1947 பிரிவு 31(1) படி (Industrial disputes act) தண்டனைக்குரிய குற்றம் என்று உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது பணிமறுப்பு, அவுட்சோர்ஸிங் (பணிகளை கையாளும் பொறுப்பை வெளி நிறுவனத்துக்கு அளிப்பது) செய்வது தண்டனைக்குரிய குற்றம்" என்றார். தூய்மை பணியாளர்களின் 3 கோரிக்கைகள் என்ன? தூய்மை பணியாளர்கள் பிரதானமாக 3 கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். தங்களின் பணியை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தங்களின் சம்பளத்தைக் குறைக்கக் கூடாது. போராட்டக்காரர்கள் குறிப்பாக, "தாங்கள் தற்போது பெறும் சம்பளத்தையே கொடுத்தாலும், தனியார் நிறுவனத்திடம் தங்கள் பணிகளை ஒப்படைக்கக் கூடாது " என்பதையே பிரதானமாக வலியுறுத்துகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx27yw684gko

பிள்ளையானின் துப்பாக்கி நண்பர் காத்தான்குடியில் கைது!

2 months 1 week ago
பிள்ளையானின் துப்பாக்கி நண்பர் காத்தான்குடியில் கைது! adminAugust 14, 2025 பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனால் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொலைகளில் முக்கிய துப்பாக்கி சூடு நடாத்திய பிள்ளையானின் சகாவான முகமட் ஷாகித் என்பவரை காத்தான்குடியில் வைத்து குற்றப் புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று புதன்கிழமை (13.08.25) மாலை சந்தேகநபர் அவரின் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்படு காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கடந்த ஏப்பிரல் ஏழாம் திகதி கைது செய்தனர். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையையடுத்து காத்தான்குடியைச் சேர்ந்தவரும் கடந்த காலத்தில் பிள்ளையானுடன் செயற்பட்ட 45 வயதுடைய முகமட் ஷாகித்தை அவரது வீட்டில் வைத்து கொழும்பில் இருந்து nசன்ற அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதேவேளை கைது செய்யப்பட்டவர் கடந்த 2024 ஜூன் 17ஆம் திகதி காத்தான்குடி மீன்பிடி இலாகாவீதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் இருந்த பெணிடம் தங்க ஆபரணங்களை கொள்ளையடிப்பதற்காக கை துப்பாக்கியால் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியிருந்தார். இதனையடுத்து அவரை கைது செய்து மூன்று நாள் காவற்துறை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்த நிலையில் அவரிடமிருந்து அந்த கைதுப்பாக்கியை மீட்க முடியாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2025/219270/

எதிர்த்துப் போராடினாலே வாழ்வு எனகளமுனைக்கு வந்த சிவம் அண்ணர்!

2 months 1 week ago
எதிர்த்துப் போராடினாலே வாழ்வு எனகளமுனைக்கு வந்த சிவம் அண்ணர்! Vhg ஆகஸ்ட் 13, 2025 (-பசீர் காக்கா -) "ஒரு செய்தி நூறு வீதம் உண்மையானது என நீங்கள் நம்பும் வரையில் அதனை ஊடகங்களுக்குச் செய்தியாகவோ கிசுகிசுப்பாகவோ தேவையற்ற சந்தேகங்களை உருவாக்கும் வகையிலோ வெளியிடக் கூடாது." இது தமிழ் ஊடகத்துறையில் ஜாம்பவானாகத் திகழ்ந்த எனது வழிகாட்டி கோபு ஐயா(எஸ் .எம் கோபாலரெத்தினம்) எனக்கு கற்பித்த பால பாடம். இதனைச் சொன்னால் பரபரப்புச் செய்தி அரசியல்தான் வடக்கில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரையே உருவாக்கி விட்டது.இதனையே நாமும் செய்வதில் என்ன தவறு? என இன்றைய youtube காரர்கள் கேட்கக்கூடும். இன்று வரை சிங்களவர்களுக்கு நிகராக இல்லாவிட்டாலும் வட கிழக்கில் தமிழர்கள் தமது உழைப்புக்கு கேற்றவகையில் பெறும் கூலி, காணி உரிமை,பாதுகாப்பு போன்ற விடயங்களில் இருந்து எட்டிய தூரத்திலேயே மலையகத் தமிழர்கள் இருக்கின்றார்கள். இவற்றைக் கருத்திற் கொண்டு சிவம் அண்ணரின் போராட்டப் பங்களிப்புக் குறித்து அவரது இறுதிச் சடங்கு முடியும் வரை அமைதி காப்பதே எமது கடமை என முடிவெடுத்தேன். பொதுவாக 1990 க்குப் பின் பங்களித்தவர்கள் தங்களது ஊகங்கள், சந்தேகங்களை உண்மையானவை என நிறுவ முயன்று வரலாற்றைத் திசைதிருப்ப முயல்கிறார்கள். அவர்களாவது பங்களித்தவர்கள் என்ற வகையில் விடலாமென்றால் போராடத் துணிச்சல் அற்று களத்திலிறங்கத் தயாரில்லாமல் தேவலோக வாழ்க்கை தேடித் திரிந்தவர்களும் சிவமண்ணரின் வரலாற்றில் குழப்பத்தை உருவாக்க முயல்கின்றார்கள். அதனால்தான் 78 ல் இயக்கத்தில் இணைந்து (76 அல்ல ) பின்னர் விலகிய பின் தனிப்பட்ட தகராறில் வெட்டிக் கொல்லப்பட்ட (சாவகச்சேரி பகுதியில் ) சிவம் என்பவரின் வரலாற்றுப் பெட்டியை சிவம் அண்ணர் என்ற போராட்ட இயந்திரத்தில் கொழுவ முனைகிறார்கள். அதேபோல சிவத்தான் என்ற பெயரில் மட்டக்களப்பு அணியிலிருந்து வடக்கில் கணிசமான பங்களிப்பை செய்த பின் கருணா அம்மானுடன் போனவரின் வரலாற்றை இதே இயந்திரத்தில் கொழுவ முனைகிறார்கள் 1990 பின் பங்களித்தவர்கள். தமிழரின் ஆயுதப் போராட்ட வரலாற்றில் தங்களது பங்களிப்பை செய்ய முனைந்தவர்களை அவதானித்தால் அவர்கள் பொதுவாக 17 வயது முடிந்த பின் போராட வேண்டுமென முடிவெடுத்திருப்பார்கள். தாம் எதிர்பார்த்த வகையில் எல்லாம் நடக்கவில்லை என்பதாலோ, வேறு பல்வேறு காரணங்களாலோ 33- 34 வயதில் போரா ட்டத்திலிருந்து விலகி விடுவார்கள். பின்னர் அவர்கள் சொந்த வாழ்க்கையில் கூடிய கவனமெடுப்பர். எங்கள் சிவமண்ணாவோ அந்த 34 வயதில் போராளியானவர். 1983 ல் இந்தியா வழங்கிய இரண்டாவது முகாமில் பயிற்சி பெற்றவர். 1977 ஆம் ஆண்டு இனக்கலவரத்தைக் தொடர்ந்து தமிழர் தாயகமே தமிழர்களுக்குப் பாதுகாப்பு என எண்ணி மலையகம் – பசறையிலிருந்து வடகிழக்குக்கு இடம் பெயர்ந்தோர்களில் இவரும் ஒருவர். இவர் குடியேறிய இடம் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான புல்லுமலை. எப்போதுமே நாம் ஓடிக்கொண்டிருக்கமால் எதிர்த்து நின்று போராட வேண்டும் என்ற தீர்மானத்தை செயற்படுத்த அவர் தேர்ந்தெடுத்த இயக்கம் தான் தமிழீழ விடுதலைப்புலிகள். சிறையிலிருந்து தப்பிப்பது என்பது வேறு சிறையை உடைத்து அங்கிருந்து கைதியை விடுவிப்பது என்பது வேறு. வெலிக்கடைப் படுகொலையைத் தொடர்ந்து மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிர்மலாவை மீட்டெடுத்ததையே சிறையுடைப்பு என்று சொல்லலாம். 1.துவிச்சக்கர வண்டியில் சென்று மேற்கொள்ளப்பட்ட சிறையுடைப்பு என்ற நடவடிக்கை என்று உலகில் வேறுறெதனையையும் சுட்டிகாட்ட இயலாது. 2. இரண்டே இரண்டு கைத்துப்பாக்கிகளுடன் சென்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இது. 3.மீட்கப்பட்டவரை துவிச்சக்கர வண்டியிலேயே கொண்டு சென்றமை என்ற வரலாறு இந்த நடவடிக்கைக்கு உண்டு. மட்டக்களப்பு சிறைக்குள் சென்ற நாலு போராளிகளில் ஒருவரான சிவமண்ணார் தனது பலத்தை திரட்டி காலாலேயே உதைத்து இக் கதவை உடைத்து நிர்மலா வெளியில் வர உதவினார். நிர்மலா எந்த அறையில் இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த போது தன்னை அடையாளம் காட்டும் வகையிலான நடவடிக்கையை நிர்மலா மேற்கொண்டார். இந் நடவடிக்கைக்காகத் திட்டமிடும்போது சிறைக்காவலருக்கான சீருடை அணிவதற்குப் பொருத்தமான உடற்கட்டுடையவராகவும், சிங்களம் தெரிந்தவராகவும் இருந்ததனால் இவரையே முதன்மையானவராக கொண்டு திட்டமிடப்பட்டது சிறைக் கதவைத் திறக்க முன்னர் அதிலுள்ள சிறு ஓட்டைவழியாக உள்ளிருந்து வெளியே பார்ப்பார்கள்.அவ்வேளை வேறு சிறையிலிருந்து கைதிகளைக் கொண்டு வருபவர் போல ஒருவர் தோற்றமளிக்க வேண்டும். தனக்கான பணியை இவர் மிடுக்குடன் மேற்கொண்டார். கதவு திறக்கும் வேளையில்தான் நிலைமையின் விபரீதத்தை புரிந்துகொண்டு கதவைமூட முயன்றனர் சிறைக்காவலர்கள்.எனினும் அந்த போராட்டத்திலும் சிவமண்ணன் தனது பங்கை காத்திரமாக வெளிப்படுத்தினார். இவ் வேளையில் தான் சிறையிலிருக்கும் நிர்மலாவை மீட்க்கத்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்பதை உணர்ந்த கடமையிலிருந்த பொறுப்பதிகாரி நிர்மலாவின் அறைக்கதவின் திறப்பை எடுத்துக்கொண்டு ஓடி ஒளிந்து கொண்டார். சிவமண்ணர் உட்பட உள்ளே சென்ற நால்வரும் உடனடியாக செயலில் இறங்கினர்.பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் அறிவிக்க எடுத்த முயற்சி முடியடிக்கப்பட்டது. தொடர்ந்து சிவமண்ணரின் உதையின் வேகம் ,பலம் என்பன வெளிப்பட காரியம் கை கூடியது. தொடர்ந்து பின்னாளில் நடைபெற்ற களுவாஞ்சிக்குடி மற்றும் ஏறாவூர் பொலிஸ் நிலையத் தாக்குதல்களிலும் தனது காத்திரமான பங்களிப்பை வெளிப்படுத்தினார் சிவம் அண்ணர். மட்டக்களப்பு - அம்பாறைமாவட்டப் போராளிகள் இவர் மீது மிகவும் மதிப்பு வைத்திருந்தனர். தன்னை விட மிகக் குறைந்த வயதினையும் அனுபவத்தையும் உடைய போராளிகளையும் மதித்தே நடந்து கொண்டார். பல்வேறு துறை நடவடிக்கைகளிலும் இவர் பங்களித்தார் . வாழ்வில் எல்லோருக்கும் ஏற்றம் இறக்கம் உண்டுதானே. எக்காலத்திலும் திமிராகவோ, துவண்டுபோகாமலோ பணியாற்றியவர் என்றால் இவரையே உதாரணம் காட்டலாம் . பிற்காலத்தில் கோப்பாவெளி கிராமத்தில் வாழ்ந்த போது கிராம அபிவிருத்திச் சங்கம், ஆலய நிர்வாகம் போன்றவற்றில் தலைவராக விளங்கினார் என்றால் இவரது கடந்த கால வரலாறு பற்றி மக்கள் இவர் மீது கொண்ட பெரும் மதிப்புதான் காரணமாகும். தனது போராட்ட வரலாறு பற்றி இவர் வெளியில் சொல்லிக்கொள்வதில்லை. ஆனால் அவரின் பங்களிப்பு பல்வேறு துறைகளிலும் இருந்தது. என்பதை நாம் சுட்டிக் காட்ட வேண்டுமல்லவா? பெறுமதியான எடுத்துக் காட்டான வாழ்வல்லவா அவருடைய வரலாறு. https://www.battinatham.com/2025/08/blog-post_76.html

இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் பா.ஜ.க. இணைந்து தேர்தலில் “மிகப்பெரிய கிரிமினல் மோசடி” ”போலி வாக்காளர்கள், முகவரிகள், புகைப்படங்கள்: வாக்குத் திருட்டு புகார் குறித்து ஆதாரங்களுடன் ராகுல் விளக்கம்

2 months 1 week ago
இறந்துபோன’ வாக்காளர்கள் உடன் தேநீர் விருந்து: தேர்தல் ஆணையத்துக்கு நன்றி என ராகுல் காந்தி பதிவு 14 AUG, 2025 | 09:54 AM புதுடெல்லி: இறந்தவர்கள் என காரணம் காட்டி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பிஹார் மாநிலத்தை சேர்ந்த வாக்காளர்களுடன் தேநீர் பருகினார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி-யுமான ராகுல் காந்தி. இந்த தனித்துவ அனுபவத்தை தனக்கு கொடுத்த தேர்தல் ஆணையத்துக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். பிஹாரை சேர்ந்த ஏழு பேர் குழு புதன்கிழமை அன்று ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது இறந்தவர்கள் என காரணம் காட்டி வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையத்தால் தங்கள் பெயர் நீக்கப்பட்டதாக ராகுல் காந்தியிடம் அவர்கள் தெரிவித்தனர். பிஹாரில் அண்மையில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை அடுத்து வெளியான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. அதில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயரில் தங்களது பெயரும் இருப்பதாக இறந்தவர்கள் என காரணம் காட்டி நீக்கப்பட்ட 7 வாக்காளர்கள், ராகுல் உடனான சந்திப்பில் அவரிடம் தெரிவித்துள்ளனர். மேலும், தேர்தல் வாக்கு அளிக்கும் தங்களது உரிமையை திரும்ப பெற உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். “வாழ்வில் எண்ணற்ற சுவாரஸ்ய அனுபவங்களை பெற்றது உணவு. ஆனால், இறந்து போனவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு எனக்கு ஒருபோதும் கிடைக்கவில்லை. இந்த தனித்துவமான அனுபவத்தை அளித்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி!” என்று எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். அதோடு அவர்களுடன் உரையாடிய வீடியோவையும் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார். இதை காங்கிரஸ் கட்சியும் கண்டித்துள்ளது. நீக்கப்பட்ட இந்த ஏழு பேரும் தேஜஸ்வி யாதவின் சட்டப்பேரவை தொகுதியை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. “இது தேர்தல் ஆணைய அதிகாரிகளின் பிழை அல்ல. திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட வாக்குரிமை பறிப்பு செயல். வாக்கு திருட்டு அம்பலமான நிலையில், தற்போது பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியின் முடிவு தெரியவந்துள்ளது. இறந்தவர்கள் என காரணம் காட்டி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் வாக்காளர்கள் அல்ல அது ஜனநாயகத்துக்கு கொடுக்கப்பட்ட இறப்பு சான்று” என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் பேர் நீக்கம்: பிஹார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என கடந்த ஜூன் 24-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலுக்கு குறைவான அவகாசமே உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த உத்தரவை எதிர்த்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) உட்பட பல்வேறு தரப்பினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் முடிந்து, வரைவு பட்டியலை கடந்த 1-ம் தேதி ஆணையம் வெளியிட்டது. அதில், சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/222543

டான்பாஸ் பகுதியை விட்டுக்கொடுக்க மறுக்கும் உக்ரேன் ஜனாதிபதி!

2 months 1 week ago
இந்த போரில் உக்கிரேன் வெறுமனே ஒரு இரு முக்கிய எதிரெதிர் தரப்புக்களிற்கிடையேயான போர்க்களமாக பயன்படுத்தப்படுகின்றது என்பதனை உறுதிப்படுத்தும் விதமாக சம்பதப்பட்ட தரப்புக்கள் மட்டுமே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதுடன் தமக்கிடையே தீர்வுகளையும் எட்ட முனைகின்றனர். தெருத்தேங்காயை எடுத்து ஊர்ப்பிள்ளையாருக்கு உடைப்பதனை போல தமது சொந்த இடம் போல உக்கிரேனை கொடுக்க முனைகிறார்கள், ஆனால் போரினை நிறுத்தாவிட்டாலும் அந்த பகுதியினை அவர்கள் போர் மூலம் எடுத்து கொண்டுவிடுவார்கள்தான். இதனைதான் ஊரில் கூறுவார்கள் சும்மா பொல்லைக்கொடுத்து அடிவாங்குவது என, உக்கிரேனை உசுப்பேற்றி ஒரு பேரழிவிற்குள் தள்ளி தற்போது தாங்கள் நல்லவர்கள் போல உக்கிரேனே சமாதானத்திற்கு இடையூறாக நிற்கிறது என நிறுவ முயல்கிறார்கள், இதில் பாவப்பட்டவர்கள் சாதாரண உக்கிரேனிய மக்கள்தான், அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் நன்றாக சூழலை தமக்கு சாதகமாக பயன்படுத்துகிறார்கள்.

முத்தையன்கட்டு சம்பவம் - கைதுசெய்யப்பட்ட நபரை அன்றிரவே பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டோம் - இராணுவ பேச்சாளர்

2 months 1 week ago
இவர்கள் இதுவரையில் தாம் செய்தவற்றில் எதைத்தான் ஏற்றுக்கொண்டார்கள்? இதைமட்டும் மறுப்பதற்கு. அன்று மறுத்ததை இன்று ஏற்றுக்கொண்டு கைது செய்யப்பட்டுள்ளனரே. இந்த சம்பவத்தையும் இன்னொரு காலம் விசாரணையில் ஏற்றுக்கொள்வார்களாக்கும்.

போர் முயற்சிகளுக்கான உக்ரைன் மக்களின் ஆதரவு சரிந்தது

2 months 1 week ago
இரஸ்சியாவின் போர் தேய்மான போர் முறை, அதற்கேற்ப இரஸ்சியாவிடம் படை பலம் உள்ளது, உக்கிரேன் நாட்டு படை ஒப்பீட்டளவில் சிறிய படை என கருதுகிறேன். இந்த போரை இப்படியே உக்கிரேன் தொடருமானால் பெரிய பேரழிவினை சந்தித்து மீள முடியாத தோல்விக்கு ஆளாகலாம் என கருதப்படுகிறது. உக்கிரேன் தனது நிலைகளை பின்னகர்த்தி குறைந்த இடத்தினை கண்காணிக்க கூடியவகையில் தற்காப்பு அரணை அமைத்து தடுப்பு போர் நிகழ்த்தாவிட்டால் உக்கிரேன் இராணுவ ரீதியாக மீள முடியாமல் தோற்கடிக்கப்படும் என கருதுகிறேன், ஒரு சிறிய நாட்டினால் அதன் வளத்திற்கேற்பவே போர் புரிய முயற்சிக்க வேண்டும், அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளின் ஈகோவிற்காக போரிட முடியாது என கருதுகிறேன். கேர்க்ஸ் பிராந்தியத்தில் ஒரு களத்தினை திறந்து உக்கிரேனை இராணுவ ரீதியாக பலமிழக்க செய்தது உக்கிரேனிய அதிகார வர்க்கம், தற்போதும் ஒரே நேரத்தில் பல போர் முனைகளை வீம்பிற்காக பாதகமான சூழலிலும் போரிட வைத்து அழிவினை ஏற்படுத்துவது உக்கிரேனிய அதிகார வர்க்கமே. மேலும் உக்கிரேனிய படை நடவடிக்கை முறைமகளில் கூறப்படும் குறைபாடாக ஒரு முழுமையான படைப்பிரிவினை சிறு பகுதியாக்கி வேறு ஒரு குறைந்த அனுபவமும் பயிற்சி அற்ற பெரும் பகுதியில் இணைப்பதன் மூலம் அதன் தாக்கத்தினை இல்லாமல் செய்யப்படுவதாக கூறுகிறார்கள். இளநிலை அதிகாரிகளுக்கும், களநிலை அதிகாரிகளுக்கும் போர்திட்டம் பற்றிய சரியான புரிதல்கள் இருப்பதில்லை என கூறுகிறார்கள். அனுபவமும் சரியான பயிற்சியுமற்ற ஒரு இராணுவம் இதுவரையும் சிறப்பாக சண்டையிட்டு வந்துள்ளது (உக்கிரேன்), இரஸ்சிய படைகள் தம்மை சூழலுக்கு ஏற்ப தகவமைத்து கொண்டுள்ளார்கள். நான் முன்பு கேள்விப்பட்ட சம்பவம் ஒன்று, 90 களில் புலிகள் ஒரு இராணுவ முகாமை தாக்க வெளி மாகாணத்தில் இருந்து போராளிகளை வரவழைத்து தாக்குதலில் ஈடுபட்டார்களாம், தாக்குதலுக்கு ஒரு நீரிணையினை கடந்து சென்று தாக்குதல் நடத்த வேண்டியிருந்ததாம், தாக்குதல் வேவின் போது இருந்த நீர் மட்டம் தாக்குதல் தினத்தின் போது உயர்ந்திருந்ததாம், அதனூடாக அணியினரும் அவர்களது ஆயுதங்களையும் அந்த நீரிணையில் கால் நடையில் கடந்து செல்ல வேண்டியிருந்ததாம். குறிதத அணி ஒன்று வழங்கப்பட்ட இலக்கினை பலவீனப்படுத்த துப்பாக்கியிலிருந்து காற்றழுத்தத்தின் மூலம் ஏவப்படும் 10 எறிகணைகள் வழங்கப்பட்டிருந்தனவாம், அந்த அணியினது புரிதல் 10 எறிகனைகளையும் பாவிக்கலாம் என்பதாக இருந்தது. 10 எறிகனையில் 2 மட்டும் வெடித்த நிலையில் எதிர்பார்க்கப்பட்ட தாக்கம் ஏற்படவில்லை பதில் தாக்குதல் பலமாக இருக்க என்ன செய்வது என தெரியாமல் அந்த நிலையிலேயே இருந்துவிட்டார்கள், தமது நிலை தொடர்பில் எந்த தகவல் தொடர்பிலும் ஈடுபடவில்லை காலை விடிந்தால் விமானப்படை மற்றும் துப்பரவு அணிகளை எதிர்கொள்ளவேண்டும் என்பதனை உணராமல். உக்கிரேன் படை அணி எதிர்கொள்ளும் பிரச்சினை இரண்டு வெவ்வேறு இராணுவ கட்டமைப்புகளாக இயங்குவதுதான், திட்டமிடல் நேட்டோ, அதனை நிறைவேற்றுவது உக்கிரேன்.

மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு

2 months 1 week ago
ஆமா 10 நாளா சனம் கத்துது...இந்த முல்லா தொப்பி ,முட்டாக்கு போட்ட சனத்தையோ காணவில்லை..அவை மதில்மேல் பூனைகளோ....அல்லது இந்த காத்தாடி மூலம் அவையின் வீட்டுப் பான் தேவை நிறைவு செய்யப்படுமோ....

நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் - பொலிஸார் எச்சரிக்கை

2 months 1 week ago
ஆமா ..சுவிஸ் முருகன் கோவிலில் இரண்டு யாழ்ப்பாண இளம் பெண்கள்..சங்கிலித் திருட்டில் ஈடுபட்டதாக ரீல் ஒன்றில் அவர்களை தேடுவதாகவும் கூறப்பட்டதே...அப்ப நீங்க சொல்வது சரி

"மூன்று கவிதைகள் / 02"

2 months 1 week ago
"மூன்று கவிதைகள் / 03" 'தர்மத்தின் தலைவர்' தர்மத்தின் தலைவர் குமாரசாமி காமராசரே நேர்மை, எளிமை, சேவை மூன்றையும் நேர்வழியில் செய்து எடுத்து காட்டியவரே மார்பினில் உன்னைத் தினம் வணங்குகிறேன்! குலதெய்வம் காமாட்சி பெயர் சூடியவனே நிலத்தின் உரிமைக்காக சிறை சென்றவனே சிலருக்காக வாழாமல் பலருக்காக வாழ்ந்தவனே ஆலமரத்தின் தத்துவம் உன்னில் அறிந்தேனே! சமஉரிமை வேண்டும் ஈழத் தமிழனுக்கு சத்தியம் வென்று உண்மை நிலைப்பெற சங்கு எடுத்து அறிவுரை சொல்லாயோ சலனம் அற்ற வலிமை கொடுக்காயோ! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ..................................................... 'சந்தேகமேகத்திலே காதல் வெண்மதி மறைந்திடுமா' சந்தேகமேகத்திலே காதல் வெண்மதி மறைந்திடுமா குந்தகம் விளைவிக்கும் ஐயப்பாடுதான் எதற்கோ முந்தானை முடிச்சுலே அவிழாது இருப்பவனை நிந்தனை செய்யலாமா நிம்மதியைக் கெடுக்கலாமா சிந்தனை செய்யாயோ கருணை காட்டாயோ? அழகு கொட்டும் வண்ண மயிலே அணைத்து எனக்கு இன்பம் ஊட்டியவளே அன்பு என்பதற்கு இலக்கணம் சொன்னவளே அழவைத்து தள்ளிப் போவது நியாயமா அடுத்தவன் பேச்சை நம்புவது எனோ? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ....................................................................................... 'மருந்தே உணவாக ?' மருந்தே உணவாக உணவே மருந்தென மனதில் பதித்து செயலில் காட்டினால், மகிழ்ச்சி பொங்கும் வாழ்வு அமையுமே மங்காத உடல்நலம் உன்னைச் சூழுமே! அளவாக எடுத்து அமிர்தமாக அருந்தி அயராது உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருந்தால், அழகான வாழ்வு உன்னை அடையுமே அதிசயம் காண்பாயே பலன்களை உணர்வாயே! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்

பாலஸ்தீனர்கள் கொல்லப்படுவதை இந்தியா வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடு: பிரியங்கா காந்தி

2 months 1 week ago
இப்போதைய எக்ஸ் அப்போதைய டுவிட்டர் 2009 இலும் இயங்கியது. பிரியங்கா அம்மையார் அயல்நாட்டில் இதே விடயங்கள் நடைபெற்றபோது இந்திய அரசிற்கு என்ன கூறினார்?

காதலுக்காக இலங்கையில் இருந்து சென்ற பெண் – அகதி முகாமில் தடுத்து வைப்பு

2 months 1 week ago
அடி, நுனி தெரியாமல் கருத்து கூறுவது கடினம். ஆனாலும் இந்த பெண் இவ்வளவு ஆபத்துடன் பயணிக்க அவர் காதலன் அனுமதி கொடுத்தாரா? அவர் ஏன் இலங்கை செல்லவில்லை? அவருக்கு இலங்கை செல்ல முடியாத நிலமை உள்ளதா? அவருக்கு உண்மையில் இந்தப்பெண்ணில் அன்பு உள்ளதா? அவர் அங்கு யாருடன் மேய்ந்துகொண்டு உள்ளாரோ யாருக்கு தெரியும்.

பழனி காதலனுக்காக கள்ளப்படகில் ராமேஸ்வரம் வந்த இலங்கை இளம்பெண்.. மண்டபத்தில் காத்திருந்த ட்விஸ்ட்!

2 months 1 week ago
இந்தியர்கள் மற்றும் தமிழர்களில் இப்படி பிரித்துவிடும் மோசமானவர்கள் உள்ளனர் 😒

மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு

2 months 1 week ago
எனவே எந்த விடயத்தையும் விஞ்ஞானபூர்வமாக, அறிவுபூர்வமாக ஆராயவேண்டும். அதனை மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் ஆதாரபூர்வமான தெளிவுப்படுத்த வேண்டும். ] அப்படி எல்லாம் செய்ய வேண்டிய தேவை இல்லை செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்கள் பொய்களை அடித்துவிட்டால் போதும் காற்றாலை மின் உற்பத்தி கழுத்திற்கு தூக்கு என்று தங்கள் கழுத்தில் தூக்கு கயிறை மாட்டிக் கொண்டும் எங்கள் ஆணி வேர் அழிக்கபடுகின்றது காற்றாலை மின் உற்பத்தி எங்கள் உயிரை குடிப்பது மீண்டும் ஒரு மனித புதை குழி வேண்டாம் 🙄 என்று சொல்லி கொடுத்ததை திரும்ப சொல்லி கொண்டு ஆர்பாட்டம் ஊர்வலம் போகிறார்கள்

நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் - பொலிஸார் எச்சரிக்கை

2 months 1 week ago
நான் ஊரு போனநேரம்....கண்ட சிலபேர் ...கேட்டது...என்ன தம்பி கையிலை ..கழுத்திலை ஒண்டையும் காணவில்லை ...எந்த நாடு....ஆ ஆ... கனடாவே ...அப்ப சரி.....இதுக்கு என்ன சொல்லப் போறீயள்... பிரியன் ....35 வருடம் மாடாய் உழைத்தும் கனடாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்திவிட்டேன்......என்னுடைய கையில் திருமண மோதிரம் தவிர வேறு இல்லை...மனைவியின் ஆக்கினைக்கு சிலவேளை..ஒரு சின்ன சங்கிலி போடுவதுண்டு..
Checked
Wed, 10/22/2025 - 10:11
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed