புதிய பதிவுகள்2

மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு

2 months 1 week ago
பசுமை மின்சாரம் = காற்றாலை மின்சாரம் ******************************************************* காற்றாலை மின்சாரத்தை பசுமை மின்சாரம் அல்லது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி எனவும் அழைக்கின்றனர். ஒப்பீட்டு ரீதியில் சுற்றுச் சூழலுக்கு மிகவும் பாதிப்பு குறைந்த ஒரு துறையாகும் இது. ஆனாலும் இதிலும் ஒரு சில பாதிப்புக்கள் உண்டு. இருப்பினும் அந்த பாதிப்பு ஏனைய துறைகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்போடு ஒப்பிடும் போது இந்த காற்றாலையால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பை ஒரு பாதிப்பாக கருத முடியாது என்கின்றனர் சூழலியலாளர்கள். காற்றாலையால் பறவைகள் வனவிலங்களின் வாழ்விடங்களில் மாற்றம். ஒலி மாசுப்படுதல், சூழல் அமைப்பு தோற்றத்தில் மாற்றம் போன்றவற்றை குறிப்பிடலாம் அத்தோடு வலசைப் பறவைகளின் வழிதடங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் இந்த பாதிப்புக்கள் எல்லாம் சுற்றுச்சூழலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது. இந்தியாவில் கர்நாடகாவில் நடந்த ஆய்வில் காற்றாலையால் பறவைகளுக்கு ஏற்பட்டபாதிப்பு 0.1 வீதம் மட்டுமே என தெரியவந்துள்ளது. நீர் மின்சாரம், அனல் மின்நிலையங்கள், அணுமின்நிலையங்கள், சூரிய சக்தி மின்சாரம், காற்றாலை மின்சாரம் போன்ற வழிகளில் மின்சாரம் பெற்றுக்கொள்ளப்படுகிறது. இதில் காற்றாலை மின்சாரமே சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத துறையாகும். உலகில் அபிவிருத்தியில் உச்ச நிலைக்கு சென்ற சென்றுக்கொண்டிருக்கின்ற, அறிவியல்துறையில் வளர்ச்சி அடைந்த நாடுகள் எல்லாம் காற்றாலை மின்சார திட்டத்தையே அதிகம் ஊக்குவித்து வருகின்றன. இந்த திட்டத்தில் உலகில் சீனா முதல் இடத்திலும்,அமெரிக்க இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும், தொடர்ந்து ஜேர்மன், ஸ்பெயின், இங்கிலாந்து, கனடா, அவுஸ்ரேலியா,பிறேசில் என நாடுகள் காணப்படுகின்றன. கடலோர காற்றாலை மின் உற்பத்தியில் பிரிட்டன் முதலிடத்தில் உள்ளது. சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி இப்போது உள்ளது போல ஆண்டுக்கு 20 சதவீத வளர்ச்சியைத் தொடர்ந்து அடைந்து வந்தால் உலக வெப்ப மயமாதலை 1.5 பாகை செல்சியசாக குறைக்கலாம் எனவும் ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே எந்த விடயத்தையும் விஞ்ஞானபூர்வமாக, அறிவுபூர்வமாக ஆராயவேண்டும். அதனை மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் ஆதாரபூர்வமான தெளிவுப்படுத்த வேண்டும். ( விரிவான கட்டுரை ஒன்றில் சந்திப்போம்) Murukaiya Thamilselvan ##################### ######################## ###################### மன்னார் ஒரு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பறவை இடம்பெயர்வு பாதையாக (migratory bird flyway) இருப்பதால், இலங்கை வனவிலங்கு திணைக்களமும் BirdLife International மும் வெளியிட்ட ஆய்வுகளின்படி, திட்டம் நிறுவப்பட்ட பின்பு சில வலசைப் பறவைகளின் பாதைகள் மாறியுள்ளதாகவும், சிலவற்றின் இடம்பெயர்வு பழக்கங்கள் பாதிக்கப்பட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை ஊக்குவிப்பதோடு, அவை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) மற்றும் வனவிலங்கு கண்காணிப்பு திட்டங்கள் போன்றவற்றுடன் இணைந்து செயல்படுத்தப்பட வேண்டும். மன்னார் திட்டத்திற்கான பரிந்துரைகளில் பறவைகள் அதிகம் பறக்கும் காலங்களில் (peak migration season) சில காற்றாலைகளை நிறுத்தி வைக்கும் நடைமுறை மற்றும் பறவைகளின் பறக்கும் உயரத்துக்கு ஏற்ப வடிவமைப்பு மாற்றங்கள் இடம்பெற வேண்டும் . மன்னார் போன்ற உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில், பசுமை சக்தி மற்றும் உயிரியல் பாதுகாப்பு இரண்டும் சமநிலையில் இருக்க வேண்டும். அறிவியல் ஆதாரங்களுடன் கூடிய, வெளிப்படையான திட்ட மேலாண்மை மட்டுமே மக்களின் நம்பிக்கையை உருவாக்கும். Kumanan Kana ·

சர்வதேச யானைகள் தினம் இன்று

2 months 1 week ago
'குட்டியை விடவும் நட்புக்கு முன்னுரிமை' - 55 ஆண்டுகளாக ஒன்றாகவே வலம் வரும் இரு பெண் யானைகளின் கதை பட மூலாதாரம், MUDUMALAI TIGER RESERVE படக்குறிப்பு, இணை பிரியா தோழிகளான பாமா-காமாட்சி கட்டுரை தகவல் நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 12 ஆகஸ்ட் 2025 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் "எங்கு சென்றாலும் ஒன்றாகத்தான் செல்லும். அருகருகே நிற்க வைக்காமல் உணவு கொடுத்தால் பிடிக்காது. 55 ஆண்டுகளுக்கும் மேலாக இரண்டும் இணைபிரியா தோழிகளாக உள்ளன. ஒன்றுக்கொன்று துணையாகவும் வழிகாட்டியாகவும் திகழ்கின்றன." முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக நெருங்கிய தோழிகளாக உள்ள காமாட்சி - பாமா யானைகளின் நட்பு குறித்து இவ்வாறு விவரித்தார், முதுமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநரான சி வித்யா. இரு யானைகளின் நட்பும் பலரையும் ஆச்சர்யப்படுத்துகிறது. சமீபத்தில் தமிழ்நாடு வனத்துறையின் கூடுதல் முதன்மை செயலாளர் இவ்விரு யானைகள் குறித்த காணொளியை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்ததையடுத்து, அந்த யானைகள் குறித்து அறிய வேண்டும் என்ற ஆர்வம் பலருக்கு அதிகரித்தது. நட்பை வெளிப்படுத்தும் அவ்விரு யானைகளின் செயல்கள் பலவும் சுவாரஸ்யத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்துவதாக உள்ளன. உலக யானைகள் தினமான இன்று (ஆக. 12) இந்த யானைகளின் நட்பு குறித்த சுவாரஸ்யமான தகவல்களை அறியலாம். 1960களில் இருந்தே காமாட்சி, பாமா இரு யானைகளும் தெப்பக்காடு யானைகள் முகாமில் இருந்ததை புகழ்பெற்ற கால்நடை மருத்துவரான கிருஷ்ணமூர்த்தி பதிவு செய்திருப்பதாகக் குறிப்பிடுகிறார், வன உயிரின ஆர்வலரான 'ஓசை' காளிதாசன். இவர் 'ஓசை' எனும் பெயரில் சூழலியல் அமைப்பை நடத்திவருகிறார். 1960களில் இருந்தே இரு யானைகளும் முகாமில் இருந்தாலும் அதன் வயது குறித்து மாறுபட்ட தகவல்களே கிடைக்கப் பெறுகின்றன. சுப்ரியா சாஹுவின் பதிவின்படி, பாமாவுக்கு 75 வயது, காமாட்சிக்கு 65 வயது. 'ஒன்றாகவே சாப்பிடும்' பட மூலாதாரம், MUDUMALAI TIGER RESERVE படக்குறிப்பு, 'ஒன்றை விட்டு ஒன்று தனித்து இருக்காது' 1960ம் ஆண்டு வாக்கில் காமாட்சியும் 1963ம் ஆண்டில் பாமாவும் ஆனைமலையிலிருந்து இந்த முகாமுக்கு அழைத்து வரப்பட்டதாகக் கூறுகிறார் 'ஓசை' காளிதாசன். ஆசியாவின் மிகவும் பழமையான யானை முகாம்களுள் ஒன்றான இந்த முகாமில், சுமார் 30 யானைகள் உள்ளன. அவற்றில் தனித்துவமான பாமா-காமாட்சியின் நட்பு குறித்து விளக்கினார், சி வித்யா. "இந்த முகாமில் காலை, மாலை வேலைகளில் யானைகளுக்கு உணவு வழங்கப்படும். பாமா-காமாட்சி யானைகளை அருகருகே நிற்க வைத்தால்தான் இரண்டும் சாப்பிடவே வரும். ஒரு யானையை முகாமுக்கு அழைத்து வராவிட்டாலோ அல்லது கொஞ்சம் தள்ளி நிற்க வைத்தாலோ மற்றொரு யானை சாப்பிட வராது. தன் அருகே தோழி இல்லையென்றால், ஏதேனும் சத்தம் எழுப்புவது அல்லது தலையை மறுப்பது போல அசைப்பது என பல்வேறு சமிக்ஞைகளால் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தும். மற்றபடி இரண்டும் மிகவும் கனிவான யானைகள். பல ஆண்டுகளுக்கு முன்பு உள்ள ஆவணங்களை எடுத்துப் பார்த்தாலும் இந்த யானைகளின் நட்பு இப்படித்தான் இருந்திருக்கிறது." என்கிறார் சி வித்யா. இந்த முகாம்களில் மற்ற யானைகளை போல இந்த இரு யானைகளுக்கு சங்கிலி போடப்படுவதில்லை. எனவே, அவற்றால் தான் விரும்பிய நேரத்துக்கு மேய்ச்சலுக்கு சுதந்திரமாக, ஒன்றாக சுற்றித் திரிய முடியும். "காலை உணவுக்குப் பின் இரண்டும் மேய்ச்சலுக்கு சென்றுவிடும். பின் மீண்டும் இரவு நேரத்தில் காட்டுக்குள் ஒன்றாக திரியும். காமாட்சி யானையின் 3 குட்டிகள் இதே முகாமில் உள்ளன. ஆனால், அவற்றுடன் கூட காமாட்சி யானை அவ்வளவாக நேரம் செலவழிக்காது, பாமாவுடன்தான் இருக்கும்." என்கிறார் வனத்துறை அதிகாரியான வித்யா. சுப்ரியா சாஹுவும் தன் பதிவில், "இரண்டு யானைகளும் ஒன்றாகவே சாப்பிடும், ஒன்றாகத்தான் இருக்கும். கரும்பு கொடுத்தால் கூட இணைந்து சாப்பிடவே இரண்டும் விருப்பப்படும்" என பதிவிட்டுள்ளார். பட மூலாதாரம், SUPRIYA SAHU IAS/X படக்குறிப்பு, அன்பு, விசுவாசம், நீண்ட கால நட்பின் அடையாளமாக திகழ்வதாக தன் பதிவில் கூறியுள்ளார் சுப்ரியா சாஹு தோழிகளானது எப்படி? இந்த பெண் யானைகளிடையே இப்படியொரு பிணைப்பு எப்படி ஏற்பட்டது? இயல்பாகவே பெண் யானைகளுக்குள் பெரும் பிணைப்பு ஏற்படும் என்கிறார், யானைகள் ஆய்வாளரான பி. ராமகிருஷ்ணன். ஊட்டி அரசு கலைக் கல்லூரியில், காட்டுயிர் உயிரியல் துறையில் உதவிப் பேராசிரியராக இருக்கும் பி.ராமகிருஷ்ணன், 20 ஆண்டுகளுக்கும் மேலாக யானைகளைப் பற்றி ஆய்வு செய்து வருகிறார். யானைகளின் வழித்தடங்கள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார் ராமகிருஷ்ணன். "பெண் யானைகளிடையே எப்போதும் நெருக்கமும் பிணைப்பும் அதிகம். ஓர் ஆண் யானை தன் 14-15 வயதில் வயதுவந்த பின்பு, அதன் குடும்பத்தில் உள்ள வயது முதிர்ந்த பாட்டி யானை, அந்த ஆண் யானையை குடும்பத்தை விட்டு வெளியேற்றிவிடும். பெண் யானைகள் குடும்பத்துடனேயே இருக்கும். மனிதர்களிடத்தில் பெரும்பாலான சமூகங்களில் வயதுவந்த பின்பு, திருமண உறவின்போது பெண்கள் தான் வீட்டிலிருந்து வெளியேறுவார்கள். ஆனால், யானைகளிடத்தில் இது வித்தியாசமானது. அதனாலேயே பெண் யானைகள் கூட்டமாகவே இருக்கும்." எனக் கூறுகிறார் பி. ராமகிருஷ்ணன். ஆண் யானைகள் பெண் யானைகளுடன் ஒப்பிடுகையில் தனித்து இருக்கும் என்றும், வேறு கூட்டத்தில் உள்ள ஆண் யானையுடன் சண்டையிட்டுதான் இணையை அடையும் என்றும் கூறுகிறார் அவர். இதே கருத்தை வலியுறுத்தும் 'ஓசை' காளிதாசன், "யானைகள் தாய்வழிச் சமூகத்தைக் கடைபிடிப்பவை. குடும்பத்தை பெண் யானைகள் தான் வழிநடத்தும். எனவே தான் இயல்பாகவே பெண் யானைகளிடையே நட்புறவு ஏற்படுகிறது. பாமா-காமாட்சி யானை சில நாட்களில் மேய்ச்சலுக்கு செல்லும்போது இரு நாட்கள் கழித்துகூட முகாமுக்கு திரும்பி வரும். தும்பிக்கைகள் மூலம் தொட்டு அன்பை வெளிப்படுத்தும். ஆண் யானைகளிடையே பொதுவாக அவ்வளவு பிணைப்பு இருக்காது." என்றார். பட மூலாதாரம், OSAI KALIDASAN/FACEBOOK படக்குறிப்பு, 'பெண் யானைகள் தான் வழிநடத்தும்' - ஓசை காளிதாசன் முதுமலையில் தன்னுடைய ஆய்வு படிப்பின்போது (2000-2007) இதேபோன்று கௌரி - ரதி என இரண்டு யானைகள் இணைபிரியா தோழிகளாக இருந்ததை நினைவுகூர்கிறார் ராமகிருஷ்ணன். பெண் யானைகள் தோழிகளாக இருக்கும்போது, பெரும்பாலும் மனிதர்களின் நடத்தையை போன்றே யானைகளின் செயல்பாடுகளும் இருக்கும் என அவர் விளக்கினார். "மனிதர்களில் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தால், எப்படி வீட்டிலுள்ள மற்ற பெண்கள் குழந்தையை கவனித்துக்கொள்வார்களோ, அதேபோன்று பெண் யானைகள், குறிப்பாக வயதான யானை சேர்ந்து ஒரு குட்டி யானையை பராமரிக்கும். அந்த குட்டி யானையை புலி, சிறுத்தை போன்றவை தாக்காமல் பாதுகாக்கும். குட்டி யானைக்கு உணவளிப்பது மட்டுமே தாய் யானையின் வேலையாக இருக்கும். மற்றபடி, பல இடங்களுக்கு அழைத்துச் செல்வதெல்லாம் மற்ற பெண் யானைகள் தான்." என பெண் யானைகளுக்குள் இயல்பாகவே இருக்கும் பந்தம் குறித்து கூறினார் ராமகிருஷ்ணன். 1960களில் ஓர் ஆண் காட்டு யானையை பிடிக்க, பெண் யானைகள் பயன்படுத்தப்படும் (decoy method) என்றும் அச்சமயத்தில் நிறைய பெண் யானைகள் முதுமலை யானைகள் முகாமுக்கு அழைத்து வரப்பட்டதாகவும் கூறுகிறார் ராமகிருஷ்ணன். அதன் ஒரு பகுதியாகவே பாமாவும் காமாட்சியும் இந்த முகாமுக்கு வந்திருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார். பட மூலாதாரம், SUPRIYA SAHU IAS/X படக்குறிப்பு, "பாமாவுக்கு கண் புரை இருப்பதால், காமாட்சி தான் அதை எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்லும்." "பாமா-காமாட்சி என இரு யானைகளுக்குமே வயது முதிர்வால் ஏற்படும் நோய்கள் உள்ளன. பாமாவுக்கு 70 வயதை கடந்துவிட்டது. காமாட்சி அதைவிட இளையது. பாமாவுக்கு கண் புரை இருப்பதால், காமாட்சி தான் அதை எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்லும். அதனால் தான் இரண்டுக்கும் பிணைப்பு அதிகமாக இருக்கிறது. வயதாக ஆக மனிதர்களுக்கு எப்படி துணை தேவைப்படுகிறதோ, அதேபோன்றுதான் யானைகளுக்கும். இரண்டு யானைகளும் தனித்து எங்கும் செல்லாது," என காமாட்சி-பாமா யானைகள் குறித்து தான் கவனித்ததை சுவாரஸ்யமாக தெரிவித்தார் ராமகிருஷ்ணன். இரண்டு யானைகளுமே மெனோபாஸ் நிலையை அடைந்தவை என்பதால், கண் பார்வை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் இயல்பாகவே உள்ளன. வாசனை மூலமே அடையாளம் கண் பார்வை உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கும் நிலையில், பாமா யானை, காமாட்சியை எப்படி அடையாளம் காண்கிறது? "யானைகளுக்கு அதன் வாசனைதான் தொடர்புக்கான அம்சம். இரவில் இரு யானைகளையும் மேய்ச்சலுக்கு அனுப்பும்போது, ஒன்றையொன்றின் வாசனை மூலமே பின் தொடர்ந்து செல்லும், அதன்மூலமே அடையாளம் கண்டுவிடும். மற்ற விலங்குகளின் ஆபத்து அல்லது தண்ணீர் இருக்கும் இடம் என எங்கெல்லாம் பாதுகாப்பின்மையை உணருகின்றனவோ, அங்கெல்லாம் இரு யானைகளும் இன்னும் நெருக்கத்துடனேயே சுற்றித் திரியும்." என கூறுகிறார் ராமகிருஷ்ணன். யானைகளில் கண்ணுக்கும் காதுக்கும் இடையே டெம்போரல் கிளாண்ட் (temporal gland) எனும் சுரப்பி இருக்கும். அதை நுகர்ந்தே இரு யானைகளும் பார்வைத் திறன் குறைந்திருந்தாலும் ஒன்றையொன்று அடையாளம் கண்டுவிடும் என்கிறார் ராமகிருஷ்ணன். முகாமில் உணவு கொடுத்த பின் ஒரு யானை முன்னே சென்றாலும் மற்றொன்றுக்காக காத்திருக்கும், அதை பார்ப்பதே மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்றும் பகிர்ந்துகொண்டார் அவர். "தங்களின் தும்பிக்கைகளை இணைத்துக்கொண்டே தான் இரண்டும் இருக்கும்." என்கிறார் ராமகிருஷ்ணன். 'வலி கூட புரியும்' இந்த இரு யானைகளும் மகிழ்ச்சியை மட்டுமல்ல, தங்களின் வலியை கூட புரிந்துகொண்டு பயணிப்பதாக கூறுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. "இரண்டில் ஏதேனும் ஒரு யானைக்கு வலி இருந்தால் ஓரிடத்திலேயே நின்றுவிடும் அல்லது மெதுவாக நகரும். அச்சமயங்களில் மற்றொரு யானை அதை தொட்டுப் பார்க்கும். வலியில் இருக்கும் யானையின் ஹார்மோன் மாறுவதால், அதன் வாசனையை நுகர்ந்து மற்றொரு யானை வலியில் இருக்கிறது என்பதை உணரும். மனிதர்களால் கேட்க முடியாத ஒலி அலைகள் மூலமும் யானைகள் தொடர்புகொள்ளும். ஒரு யானை வலியில் இருந்தால், மன அழுத்த ஹார்மோன்கள் வெளிப்படும். அப்போது, அந்த யானையின் சிறுநீரை நுகரும்போது மற்றொரு யானையால் அதை உணர முடிகிறது. யானை ஒரு சமூக விலங்கு என்பதால், மனிதர்களுடன் ஒத்த பண்புகள் அவற்றிடம் அதிகம்." என தெரிவித்தார் ராமகிருஷ்ணன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdxyq2px14ko

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

2 months 1 week ago
வணக்கம் வாத்தியார் .......... ! பெண் : காதல் கண் கட்டுதே கவிதை பேசி கை தட்டுதே ஆசை முள் குத்துதே அருகில் போனால் தேன் சொட்டுதே பெண் : பறவையாய் திாிந்தவள் இறகு போல் தரையிலே விழுகிறேன் இரவிலும் பகலிலும் தொடரும் உன் நினைவிலே கரைகிறேன் காற்று நீயாக வீச என் தேகம் கூச எதை நான் பேச பெண் : கலைந்து போனாயே கனவுகள் உரச பறித்து போனாயே இவளது மனச இருள் போலே இருந்தேனே விளக்காக உணா்ந்தேனே உன்னை நானே ஆண் : பாா்வை கொஞ்சம் பேசுது பருவம் கொஞ்சம் பேசுது பதிலாய் எதை பேசிட தொியாமல் நான் பெண் : கூச்சம் கொஞ்சம் கேக்குது ஏக்கம் கொஞ்சம் கேக்குது உயிரோ உனை கேட்டிட தருவேனே நான் ஆண் : அன்பே அன்பே மழையும் நீ தானே கண்ணே கண்ணே வெயிலும் நீ தானே பெண் : ஒரு வாா்த்தை உன்னை காட்ட மறு வாா்த்தை என்ன மீட்ட விழுந்தேனே கலைந்து போனானே பறித்து போனாயே ......... ! --- காதல் கண் கட்டுதே ---

இலங்கையில் மனிதபுதைகுழிகள் தோண்டப்படும் நிலையில் தமிழ் மக்கள் வெளிநாட்டு உதவியை எதிர்பார்க்கின்றனர்

2 months 1 week ago
Published By: RAJEEBAN 13 AUG, 2025 | 03:40 PM https://www.dw.com Jeevan Ravindran இலங்கையில் மனித புதைகுழியொன்று தோண்டப்படும் ஒவ்வொரு தருணத்திலும் தம்பிராசா செல்வராணி உறக்கமிழந்தவராக காணப்படுகின்றார். "எங்கள் உறவுகளிற்கு என்ன நடந்தது என்பது தெரியாது அவர்கள் தோண்ட ஆரம்பிக்கும்போது நாங்கள் பதற்றமடைகின்றோம்" என அவர் டிடயில்யூவிற்கு(dw) தெரிவித்தார். இலங்கையின் உள்நாட்டு போரின் இறுதி தருணங்களில் இலங்கைஇராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல்போன தனது கணவர் முத்துலிங்கம் ஞானசெல்வத்தை 54வயது செல்வராணி தேடிவருகின்றார். 3 தசாப்தகால மோதலின் பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் யுத்தம் முடிவிற்கு வந்தது. அதன் பின்னர் பல பாரிய மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று மாதகாலமாக தொல்பொருள் ஆய்வாளர்கள் செம்மணியில் உள்ள மனித புதைகுழியை அகழ்ந்துவருகின்றனர், இது இலங்கையின் வடபகுதி தலைநகரமான யாழ்ப்பாணத்தின் புறநகரில் உள்ளது. இதுவரை குழந்தைகளினது எலும்புக்கூடுகள் உட்பட 140க்கும் அதிகமான எலும்புக்கூடுகளை மீட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் ஒரு ஆழமற்ற கல்லறையில் ஒன்றாக புதைக்கப்பட்டுள்ளனர் செம்மணி 1998 முதல் ஒரு மனித குழியாகயிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட பகுதி. பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி பாலியல்வன்முறை கொலை வழக்கில் விசாரணையை எதிர்கொண்டிருந்த முன்னாள் இராணுவ கோப்பிரல், அந்த மாணவியுடன் உடலுடன் நூற்றுக்கணக்கான உடல்கள் புதைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்திருந்தார். செம்மணியை சுற்றியுள்ள பகுதிகளில் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களுடன் 1990ம் ஆண்டு முதல் தான் பணியாற்றுவதற்காக சட்டத்தரணி நிரஞ்சன் டிபில்யூவிற்கு தெரிவித்தார். "இதுவரை உடல்கள் தோண்டப்பட்டதில், உடல்கள் எந்தவித சட்டத்தடைகளும் இல்லாமல், ஆழமற்ற குறிக்கப்படாத புதைகுழியில் புதைக்கப்பட்டுள்ளமை" தெரியவந்துள்ளது என அவர் தெரிவித்தார். நாங்கள் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதுகின்றோம் என தெரிவித்த அவர் ஏற்கனவே இறந்தநிலையில் அவர்கள் புதைக்கப்பட்டிருந்தால் அவர்களின் உடல்கள் வளையாது என குறிப்பிட்டார். சிலரின் கைகால்கள் வளைக்கப்பட்டதாக தோன்றுகின்றது என அவர் குறிப்பிட்டார். அந்த இடத்தில் எலும்புக்கூடுகளுடன் செருப்புகள், ஒரு குழந்தையின் பால்போத்தல், குழந்தையின் பாடசாலை பை உள்ளிட்ட பல பொருட்களை கண்டுபிடித்துள்ளனர். காயங்களை கிளறுதல் செம்மணிக்கு மிகவும் வலிமிகுந்த அதிர்ச்சிகரமான வரலாறு உள்ளது. குறிப்பாக யாழ்ப்பாண மக்களுடன் என யாழ்ப்பாணத்தை தளமாக கொண்ட அடையாளம் ஆய்வு கொள்கை ஆய்வு மையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அனுஷானி அழகராஜா தெரிவித்தார். அந்த காலத்தில் எங்களின் நண்பர்களின் சகோதரர்கள் தந்தைமார் சகோதரிகள் காணாமல்போனார்கள் என குறிப்பிட்டுள்ள அவர் இது நடந்து 25 வருடங்களாகிவிட்டது, இது மிகவும் பழைய காயங்களை கிளறுகின்றது, பாதிக்கப்பட்டவர்களிற்கு மாத்திரமில்லை, முழு சமூகத்திற்கும் முழுயாழ்ப்பாணத்திற்கும், இது உங்களால் உண்மையில் மறக்க முடியாத நினைவுபடுத்தல் என அவர் குறிப்பிட்டார். இலங்கையில் இதுவரை இடம்பெற்ற மனித புதைகுழி விசாரணைகளில் செம்மணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக கவனத்தை ஈர்த்ததாக மாறியுள்ளது. இந்த மனித புதைகுழி அகழ்வு சர்வதேச மேற்பார்வை என்ற கோரிக்கையை கிளறியுள்ளது குறிப்பாக இலங்கையின் தமிழ் சமூகத்திடமிருந்து. ஜூன் மாதம் இந்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேக்கர் "பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை பெற்ற நம்பகதன்மை மிக்க உள்நாட்டு பொறிமுறைகளுடன் முன்னேறிச்செல்வதில் இலங்கை சிரமங்களை எதிர்கொண்டுள்ளது, இதன் காரணமாக இலங்கையர்கள் நாட்டிற்கு வெளியே நீதியை தேடுகின்றனர், சர்வதேச சமூகத்தின் உதவியுடன்" என தெரிவித்தார். அவர்கள் அடுத்தது யாரை கண்டுபிடிக்கப் போகின்றார்கள் என்பது தெரியாது வோல்க்கெர் டேர்க்கின் விஜயத்தின் போது தமிழ் செயற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர், தம்பிராசா செல்வராணி அதில் கலந்து கொண்டு ஐநாவின் மனித உரிமை ஆணையாளரை நேரடியாக சந்தித்தார். இலங்கையின் நீதி பொறிமுறையில் தனக்கு நம்பிக்கை இல்லை என அவர் மனித உரிமை ஆணையாளரிடம் தெரிவித்தார். அம்பாறையின் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்கள் சங்கத்தின் தலைவி செல்வராணி, தனது மாவட்டத்தில் உள்ள மனித புதைகுழிகளையும் அகழவேண்டும் என அவர் தெரிவிக்கின்றார். 'நாங்கள் அச்சமடைந்துள்ளோம், அடுத்தது யாரை கண்டுபிடிக்கப்போகின்றார்கள் என்பது எங்களிற்கு தெரியாது என டிடபில்யூவிடம் தெரிவித்த அவர் நான் இரவும்பகலும் இதனையே நினைத்துக்கொண்டிருக்கின்றேன் என்னால் நிம்மதியாக உறங்கமுடியவில்லை, உண்ணமுடியவில்லை, நான் பெரிதும் குழப்பமடைந்துள்ளேன் என தெரிவித்தார். கடந்த 17 வருடங்களாக, ஜனாதிபதிகள் மாறிக்கொண்டிருக்க நாங்கள் அவர்களிடம் எங்கள் பிள்ளைகள் எங்கள் அன்புக்குரியவர்களிற்கு என்ன நடந்தது என்ற உண்மையை தெரிவிக்கும்படி கேட்டுவருகின்றோம் என அவர் தெரிவித்தார். ஆனால் முன்னேற்றம் என்பது மிகவும் மெதுவானதாக காணப்படுகின்றது. ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளும் வேளை செல்வராணி தற்போதும் சிஐடியினரின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றார். "அவர்கள் நான் அங்கு செல்லக்கூடாது என தெரிவிக்கின்றனர், உங்கள் உறவினர்கள் இறந்துவிட்டனர் நீங்கள் ஏன் அங்கு செல்கின்றீர்கள் என கேட்கின்றனர்" என்கின்றார் செல்வராணி. புதிய அரசாங்கம் பழைய பிரச்சினைகள் இலங்கையின் வழமையான வம்சாவளி அரசியலில் இருந்து விலகி செப்டம்பர் 2024 இல் நாடு இடதுசாரி ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவை தெரிவு செய்தது. எனினும் சட்டத்தரணி நிரஞ்சன் 'சந்தேகம் வெளியிடுகின்றார்' அரசாங்கங்களை நம்பமுடியாது என்பதை வரலாறு எங்களிற்கு தெரிவித்துள்ளது. அவர்கள் சர்வதேச கண்காணிப்பை எதிர்ப்பார்கள் என அவர் குறிப்பிடுகின்றார். அரசாங்கத்திற்கு இனப்பிரச்சினை குறித்த புரிதல் இல்லை அவர்கள் அதனை புரிந்துகொள்ளவில்லை என சட்டத்தரணி நிரஞ்சன் ஊழலை ஒழித்தால் நாடு அமைதியாகயிருக்கும் என அவர்கள் கருதுகின்றனர், ஆனால் "நாடு கடனிற்குள் சிக்கியமைக்கு இனப்பிரச்சினையும் ஒரு காரணம்" என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என குறிப்பிட்டார். மனித உரிமை சட்டத்தரணியும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான அம்பிகா சற்குணநாதனும் தனது நம்பிக்கையின்மையை வெளியிட்டார். "வரலாற்றுரீதியாக, மிக தெளிவாக இலங்கையின் ஒவ்வொரு அரசாங்கமும் பல்வேறு பொறுப்புக்கூறல் செயற்பாடுகளில் சர்வதேச உதவியை நாடுவதற்கு தயங்கியுள்ளன" என அவர் தெரிவித்தார். ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க யுத்தகுற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவது தொடர்பில் தான் சர்வதேச உதவியை பெறப்போவதில்லை என தெரிவித்திருந்தார். அரசாங்கம் நீதியை நிலைநாட்டுவது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளது என்பது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் உள்ள நம்பிக்கையின்மையை அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டினார். அனுரகுமார திசநாயக்க அரசாங்கம் சர்வதேச மேற்பார்வையை கோரும் என தான் கருதவில்லை என அடையாளத்தின் அழகராஜா தெரிவித்தார். முன்னைய அகழ்வுகளில் இருந்து இம்முறை அகழ்வில் வித்தியாசமான எதனையும் பார்க்கவில்லை என அவர் தெரிவித்தார். தங்கள் பிள்ளைகளை செம்மணியில் பார்ப்போம் என எதிர்பாக்கும் குடும்பங்களை நான் சந்தித்தேன், அவர்கள் இந்த செயற்பாடுகள் தங்களிற்கு ஏதோ பதிலை தரப்போகின்றது என நம்பமுயல்கின்றார்கள், ஆனால் அவர்களின் நம்பிக்கைக்கான பதில் மிகவும் ஆபத்தானது என அவர் தெரிவித்தார். நம்பிக்கை என்பது எப்போதும் சிறந்தவிடயமல்ல, ஏனெனில் அது உங்களை மிக மோசமாக ஏமாற்றும் காயப்படுத்தும் குறிப்பாக இலங்கையில் என அழகராஜா தெரிவித்தார். https://www.virakesari.lk/article/222491

சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் கைது!

2 months 1 week ago
சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் கைது! சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்க இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டில், கைதி ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்ற பின்னர், அவர் தொடர்ந்தும் அங்கு தங்கி சிகிச்சைப் பெறுவதற்காக இலஞ்சமாக, 1,500,000 ரூபா கோரப்பட்டதோடு, அதில் 300,000 ரூபாவை அவர் இலஞ்சமாகப் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (13) காலை புறக்கோட்டையில் உள்ள சந்தேக நபரின் வீட்டில் வைத்து, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க கைது செய்யப்பட்டார். https://athavannews.com/2025/1442930

புதிய காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரிய

2 months 1 week ago
புதிய பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்! புதிய பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய உத்தியோகபூர்வமாக இன்று நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை நேற்று அனுமதி வழங்கியுள்ளது. அரசியலமைப்பு சபை நேற்று (12) சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியபோதே மேற்படி அனுமதி வழங்கப்பட்டது. புதிய பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு அவரது பெயரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த வாரம் கூடிய அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1442923

விளையாட்டுகள் பெண் உடலில் தனித்துவமான வகையில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து விஞ்ஞானிகள் குழுக்கள் ஆய்வு

2 months 1 week ago
இது ஒன்றும் தவறோ, புதுமையோ அல்ல. ஆணும் பெண்ணும் இணைந்த ஓர் உருவம் என்பது பெரும்பாலும் அர்த்தநாரீசுவரர் திருவுருவத்தைக் குறிக்கும். இது இந்து மதத்தில் சிவன் பார்வதி இருவரும் பாதியளவு உடலைப் பகிர்ந்து கொண்ட தோற்றத்தைக் குறிக்கிறது. ஒருபுறம் ஆண் உடலாக சிவனும், மறுபுறம் பெண் உடலாக பார்வதியும் இருப்பார்கள். இது ஆண் பெண் சமத்துவத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. மேலும், இது படைப்பின் இருமையையும், ஒன்றிணைப்பையும் குறிக்கிறது. முக்கிய குறிப்பு: இங்கு வன்புணர்வு முற்றாக இல்லாது ஒழியும்.🤩

கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் முதலமைச்சர் ஆள வேண்டும் - ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால்

2 months 1 week ago
அம்பாறை தொகுதியில்.. சிங்களவன் பியசேன என்பனை தமிழரசு கட்சியில் போட்டியிட வைத்து... பாராளுமன்றம் அனுப்ப, அவன் ஓடிப் போய் மகிந்த கட்சியில் இணைந்து... சம்பந்தனுக்கு அல்வா கொடுத்த சம்பவமும் நடந்தது. இப்படி.... சம்பந்தனின் ராஜதந்திரம் எல்லாம் சாயம் வெளுத்த சம்பவங்கள் நிறைய உண்டு. சம்பந்தன், தமிழனை காட்டிக் கொடுத்து.... சாகும் மட்டும்... அரசாங்க மாளிகையில் சொகுசாக இருந்து, அனுபவித்துப் போனது தான், அரசியலில் செய்த சாதனை.

கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் முதலமைச்சர் ஆள வேண்டும் - ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால்

2 months 1 week ago
ஒழுங்காக இருந்த தமிழர்களையும் கருணா பிள்ளையான் அமல் பின்னால ஓடவிட்டுவிட்டு நஸீரோட சேர்ந்து மாட்டு பிரியாணி கிண்டிக்கொண்டிருந்தவர் தான் அந்த கபோதி

ஊருக்கு... "கொலிடே" போறேன்.

2 months 1 week ago
ஊருக்கு நான் கிளம்பீட்டன். போய் கார் ஒன்றை வாடகைக்கு எடுக்கணும் இல்லையோ வானாவது பிடிக்கணும் வாகனம் ஒடியபடி இல்லை வாகனத்தில் இருந்தபடி வீடியோ எடுத்துப் போடணும் போகேக்க விமான நிலையத்திலும் போய் இறங்கி விமான நிலையத்திலும் போற விமானத்திலும் தாற சாப்பாட்டையும் படம் பிடித்து கட்டாயம் போடணும் சொல்லீட்டும் தான் நான் போனாலும் சப்பிரைஸ்சா தான் போறன் என்று சனத்திற்கு நல்லா படம் காட்டணும் ஜட்டியை விட கொஞ்சம் பெருசா காற்சட்டை ஒன்றை கொழுவணும் கண்டதை எல்லாம் வாங்கி தின்னணும் தின்னுறதைவிட படம் பிடிச்சு போடணும் கையில் ஒரு தண்ணிப் போத்தல் கண்ணுக்கு ஒரு கூலிங்கிளாஸ் தலையில ஒரு தொப்பி கட்டாயம் முடிஞ்சால் முதுகில ஒரு சோல்டர் பை முடியாட்டில் இடுப்பிலோ குறைக்காலோ ஒரு காசுப்பையை தொங்க விடணும் கையில கொஞ்ச மோதிரம் கைச் சங்கிலி கழுத்தில வடம்போல சங்கிலிகள் கடைசிவரை பூட்டாத சேட் மேல் பட்டன் கையை அகட்டியபடி ஒரு நடை கையில கட்டுக்காசுக்கு வாங்கிய போன் காலில சேலில வாங்கின செருப்புகள் இடைக்கிடை என்ன வெக்கையப்பா இங்க மனுசர் வாழலாமோ என்றனும் இங்கிலீசிலையும் கொஞ்சம் கதைக்கணும் இடைக்கிடை வெளிநாட்டையும் பீத்தனும் கடை கடையா ஏறி இறங்கணும் காணாததை கண்டவன் போல கண்ணில் கண்டதையும் வாங்கி வைக்கணும் கண்டவைக்கு ஹலோ என்றனும் இங்க கடையில மலியப்போட்ட சாமான்களை கட்டிக்கொண்டுபோயவைக்கு குடுக்கணும் ரிச்சாவுக்கு இயக்கச்சியில் போகணும் உச்சா போறதை தவிர மிச்சமெல்லாம் மிச்சம் விடாமல் படம்பிடிச்சு போடணும் கச்சான் கடலை சாப்பிடணும் நல்லூர் கந்தசாமியாரையும் கட்டாயம் பார்க்கணும் அந்த றீயோவில ஐஸ்கிறீம் நக்கணும் அப்படியே நாலு கடற்கரை போகணும் அதிலும் மீன் சந்தைப்படம் கட்டாயாம் அப்படியே ஏலுமென்றால் சந்தையும் இங்க பாணும் பருப்பும் சாப்பிட்டாலும் அங்க போய் பீசா பர்கர் என்று நிக்கணும் ஊரில இருக்கேக்க போகாத கோயிலுக்கு உதுதான் எங்கட குலதெய்வம் என்று ஊரைக் கூட்டி பொங்கல் வைக்கணும் ஊரில் உள்ள கோயில் எல்லாம் போகணும் உள்ளவனை எல்லாம் கூப்பிட்டு நல்ல ஊர் ஆடு வெட்டி பாட்டி வைக்கணும் ஊத்தி நல்ல சாராயமும் வாக்கணும் வாக்கிற சாரயத்தில வந்தவன் எல்லாம் வாழ்த்தணும் பெரிய வள்ளலென்று எல்லாம் முடிய ஏக்கங்களோட மிளகாய் தூளும் அரிசி, வேற வகை மாக்களோடு கருவாடும் பனங்கட்டியும் மிச்ச சொச்ச சாமானும் கட்டிக்கொண்டு எச்சிலயாவது பூசி அழுகிறமாதிரி நடிச்சு அதையும் வீடியோ எடுத்துப் போட்டிட்டு அப்படியே அழுவார் மாதிரி வந்திடணும் வந்து போன கடனை கட்ட சரியாகீடும். 😂😂😂 உண்மை உரைகல்

கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் முதலமைச்சர் ஆள வேண்டும் - ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால்

2 months 1 week ago
சில காலத்திற்கு முன்பு நடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தல் ஒன்றில்... தமிழர்கள் பெரும்பான்மையாக வந்து, கிழக்கு மாகாண முதமைச்சராக தமிழர் ஒருவர் வரக்கூடிய சந்தர்ப்பம் இருந்தும்... அதனை ஒரு முஸ்லீமுக்கு கொடுத்த... கபோதி தான் சம்பந்தன். அதற்குப் பிறகு கிழக்கு தமிழர்களை சோனகன் அடக்கி ஒடுக்கியதெல்லாம் பெரும் சோகம். சோனகனுக்கு முதமைச்ச ஆசையை தூண்டி விட்டு... சம்பந்தன் கூத்துப் பார்த்ததால், இப்ப அவர்கள் தொடர்ந்தும் முதலமைச்சர் கனவில் மிதக்கின்றார்கள்.

“இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு” யாழ்தேவி ரயில் கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து யாழ் நோக்கி பயணம்

2 months 1 week ago
“இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு” யாழ்தேவி ரயில் கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து யாழ் நோக்கி பயணம். கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக “இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு – ஒற்றுமையின் தூய்மையான பயணம்”எனும் தொனிப்பொருளில் யாழ்தேவி ரயில் இன்று காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பயணத்தினை ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்ட மக்களிடையே கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தினை ஊக்குவிக்கும் வகையில் க்ளீன் ஸ்ரீலங்கா செயலக அலுவலகத்தினால் “இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு – ஒற்றுமையின் தூய்மையான பயணம்”எனும் தொனிப்பொருளில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்த திட்டமானது இன்று முதல் ஒருவார காலத்திற்கு செயற்படுத்தப்படவுள்ளதுடன் இதன் ஆரம்ப நிகழ்வு கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் பொதுச்செயலகத்தின் தலைவர் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ் பீ சுவ}ஸ்வராவின் தலைமையில் இன்று காலை கோட்டை ரயில்நிலைய வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் நிறுவன அதிகாரிகள் மற்றும் ரயில்வே திணைக்களத்தி;ன் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர் ஆரம்ப நிகழ்வையடுத்து இன்று காலை 6.20 க்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தினை வந்தடைந்த யாழ்தேவி ரயில் காலை 6.40க்கு “இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கான பயணமாக கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டது. குறித்த ரயில் இன்று பிற்பகல் 2 மணிக்கு யாழ் ரயில் நிலையத்தினை சென்றடையவுள்ளது இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ் பீ சுவஸ்வர “யாழ்ப்பாண மாவட்ட மக்களிடையே கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தினை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.சுற்றுச்சூழல் சமூக மற்றும் நெறிமுறைகள் மற்றும் தேசியமட்டத்திலான அர்ப்பணிப்புக்கள் மற்றும் முயற்சிகள் மூலம் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதே இதன்நோக்கமாகும்” https://athavannews.com/2025/1442868

புதிய காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரிய

2 months 1 week ago
பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை தொடர்புக் கொள்வதற்கான புதிய WhatsApp தொலைபேசி இலக்கம் அறிமுகம்! பொதுமக்களின் தேவைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தனியுரிமையை பாதுகாப்பதற்காகவும், குற்றங்கள் மற்றும் அவர்கள் முகம்கொடுக்கும் பல்வேறு பிரச்சனைகளின் போது நேரடியாக பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை தொடர்புக் கொள்வதற்காகவும் புதிய WhatsApp தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில், குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக தொடர்புகளை ஏற்படுத்துவதற்காக பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவால் 071-8598888 எனும் புதிய WhatsApp இலக்கம் இன்றிலிருந்து (13) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய WhatsApp தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுமக்கள் பொலிஸ்மா அதிபருக்கு நேரடியாக குறுஞ்செய்திகள் அனுப்புவதற்காகவும், வீடியோ மற்றும் படத்தொகுப்புகளை அனுப்புவதற்கு மாத்திரம் பயன்படுத்த முடியும். அதேபோன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் இவ் இலக்கத்தினூடாக தங்களின் பிரச்சனைகள் மற்றும் தகவல்கள் தொடர்பான தகவல்களையும் வழங்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1442887

கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் முதலமைச்சர் ஆள வேண்டும் - ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால்

2 months 1 week ago
கறையான் புற்றெடுக்கும். பாம்பு குடிகொள்ளும். இது இயற்கையின் நியதி.🫣

தொண்டைமானாறு கடல் நீர் ஏரியிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

2 months 1 week ago
தொண்டைமானாறு கடல் நீர் ஏரியிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு! தொண்டைமானாறு கடல் நீர் ஏரியிலிருந்து நேற்று மாலை (12) பெண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். மீன்படி நடவடிக்கைக்கு வந்த மீனவர்கள் சடலம் ஒன்று மிதந்து இருப்பதைக் கண்டு அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் வழங்கியிருந்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பான தகவல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ராஜலிங்கம் சுபாஷினி எனும் 40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்துள்ள அவர் நேற்று 12காலை செல்வச் சன்னதி ஆலயத்திற்கு சென்று வருவதாக கூறிச் சென்றதாகவும் இரவாகியும் வீடு திரும்பவில்லை எனவும் அவரது தந்தை தெரிவித்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தொண்டைமானாறு செல்வச் சன்னதி ஆலய கடல் நீர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பில் புகைப்படங்கள் செய்திகளில் வெளி வந்திருந்த நிலையில் குறித்த பெண்ணின் தந்தை மகளை அடையாளம் கண்ட நிலையில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார். இதன்படி, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுடன் மீட்கப்பட்ட சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1442905
Checked
Wed, 10/22/2025 - 01:09
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed