2 months 1 week ago
முதலில் இராணுவ முகாம்களை கிளீன் பண்ணுங்கப்பா.
2 months 1 week ago
மாட்டுவண்டி ஊர்போய் சேருவது மாத்திரமல்ல இடைஇடை கள்ளுக்கடையிலும் நிற்கும்.
2 months 1 week ago
இணைப்புக்கு நன்றி சுவி. சிறிய வயதாக இருந்தபோது எப்போதும் கொத்தமல்லி அவித்து குடிக்கவென்றே ஒரு சட்டி இருக்கும். இதை வாசிக்கும் போது அந்த ஞாபகம் தான் வந்தது.
2 months 1 week ago
இலங்கைத்தீவிலேயே முதன் முதல் தமிழரை அழித்தது முஸ்லிம்கள் தான், சிங்களவர் அல்ல. அது நடந்தது இந்த வீரமுனையில் தான்; 1954ம் ஆண்டு நடந்தது. இது தொடர்பில் தமிழர்களால் "தீயுண்ட வீரமுனை" என்ற நூல் 1956 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அன்று தொடக்கம் முஸ்லிம்களுக்கு வீரமுனை மீது கண்தான். பல தாக்குதல்கள் 1990 முன்னர் நிகழ்ந்தன. இது தெரியாத வட தமிழீழ தமிழர்கள் தென் தமிழீழத்தில் தமிழர் தான் முதன் முதலில் முஸ்லிமை தாக்கினர் என்று சொந்த இனம் மீது தமது பிரதேசவாத கண்ணால் பார்த்து பழி சுமத்தும் நிலை, குறிப்பாக புலம்பெயர்ந்தவர்களால், வன்மையாக கண்டிக்கத்தக்கது.
2 months 1 week ago
வளர்ந்த நாடுகளில் காற்றாலை அமைக்கும் போது அண்மையில் குடியிருப்புக்கள் இல்லாத காற்று விழக் கூடிய இடங்களில் பாதுகாப்பான வேலிகள் போட்டு அமைக்கிறார்கள். மன்னாரில் எப்படியான இடங்களில் இந்த காற்றாலைகள் அமைக்கப் போகிறார்கள் என்று யாருக்காவது தெரியுமா?
2 months 1 week ago
என்ன கஞ்சலனாக இருக்கிறான். டேய் இவ்வளவும் செய்து கடைசியில் சாராயமா ஊத்தப் போகிறாய்? கனவு காணும்போது விஸ்கி பிரண்டி ஞாபகமாவது வராதா?
2 months 1 week ago
நமக்கு தெரிந்ததெல்லாம் மாடப்புறாவும் மணிப்புறாவும் தான்.
2 months 1 week ago
மிகவும் துணிச்சலான பெண். காதலன் துரிககெதியில் செயல்பட்டு காதலியை கரம்பிடிக்க வேண்டும்.
2 months 1 week ago
நாம் நமது காதலி அல்லது மனைவி மற்றும் அக்கா தங்கைகள் கூட இவ்வாறு விசா இல்லாமல் பல எல்லைகளை கடந்து வந்து இங்கே திருமணம் செய்து வாழ்வோரே. அப்படியானால் அவர்களின் படங்களை இவ்வாறு உலகம் முழுவதும் பிரசுரித்தால் எப்படி இருக்கும் எமக்கு?????
2 months 1 week ago
கவலை வேண்டாம் திரு . பாஞ்ச் அவர்களே . ........ கருத்திடும் கனவான் புறாக்கள் யாவும் இனிமேல்தான் இங்கு மையம் கொள்ளும் .......... ! 😀
2 months 1 week ago
பாஞ்ச் அண்ணை, சம்பந்தன்... தமிழருக்கு செய்த அநியாயம் ஒன்று, இரண்டு என்றால் நினைவில் வைத்திருக்கலாம். இது, வாழ்க்கை முழுக்க நயவஞ்சக வேலை செய்து விட்டு செத்துப் போனால் .. எதை என்று நினைவில் வைத்திருப்பது.
2 months 1 week ago
சுமந்திரனை தமிழரசுக் கட்சிக்குள் கொண்டு வந்ததை ஏன் மறந்தீர்கள் தம்பி.?
2 months 1 week ago
அந்தப் பெண் அதுவும் 25வயது இளம்பெண் எந்தப் பாதிப்புச் செய்திகளும் இன்றி முகமில் ஒப்படைக்கப்பட்ட செய்தி மகிழ்வைத் தருகிறது.😍 அவர் தன் காதலனை மணந்து இன்புற்று வாழ வாழ்த்துக்கள்!!🙌
2 months 1 week ago
வணக்கம் சுவி அவர்களே! நாங்கள் பாவிக்கும் எங்கள் “தமிழதாய் நாட்காட்டி” யில் நேற்றைய நாளில் புறாக்களைப் பற்றிய செய்தி ஒன்று பார்த்தேன். அது என்னைக் கவர்ந்ததால் புறாக்கள்பற்றிய தரவுகளத் தேடி அறிந்து யாழ்கள உறவுகளும் அறியத்தர விளைந்தேன். அது கைகூடவில்லை என்ற தரவை களம் எனக்கு அறியத்தந்தது, அதனால் கவலை கொண்டிருந்தேன். ஆனாலும் களம் என் பதிவை எப்படியோ ஏற்றுப் பதிந்துவிட்டது கண்டு ஆச்சரியமாக உள்ளது.🤔 உங்கள் பாராட்டுக்கும் நன்றி!🤩
2 months 1 week ago
இல்லை சாத்தான். நான் ஊருக்குப் போனால்... அங்குள்ள மக்களாகவே மாறி விடுவேன். சாரம், வேட்டி, பாட்டா செருப்பு, ஒரு மஞ்சள் பை... போன்றவை தான் எனது சீருடை. 😂
2 months 1 week ago
அட நான்தான் முன்பு விடயம் தெரியாமல் பஸ்ஸிலும் சைக்கிளிலும் பிரயாணங்கள் செய்திட்டு வந்திருக்கிறான் . ........ ! 😀
2 months 1 week ago
இது என்ன சொந்த அனுபவமோ சிறியர்?
2 months 1 week ago
கடவுள் என்னும் முதலாளி ....... ! 😍
2 months 1 week ago
Published By: RAJEEBAN 13 AUG, 2025 | 11:10 AM முத்தையன்கட்டு குளத்தில் கபில்ராஜ் என்ற இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளமைக்கும் இராணுவத்திற்கும் தொடர்புள்ளதாக தெரிவிக்கப்படுவதை இராணுவ பேச்சாளர் வருணகமகே நிராகரித்துள்ளார். ஐலண்ட் நாளிதழிற்கு இதனை அவர் தெரிவித்துள்ளார். ஒட்டிசுட்டான் முத்தையன்கட்டு வீதியில் உள்ள முகாமில் உள்ள படையினர் ஆகஸ்ட் ஏழாம் திகதி இரவு நபர்கள் சிலர் முகாமிற்குள் நுழைய முற்பட்டதை தடுத்து நிறுத்தினார்கள் என இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். படையினர் அவர்களில் ஒருவரை கைதுசெய்தனர், ஏனையவர்கள் தப்பியோடிவிட்டனர். நாங்கள் அவர்களை துரத்திச்செல்லவில்லை என இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். இராணுவ தலைமையகத்தின் உத்தரவின் பேரில் குறிப்பிட்ட இராணுவ முகாமை சேர்ந்தவர்கள் பொலிஸாருக்கு உரிய ஒத்துழைப்பை வழங்கினார்கள் என அவர் தெரிவித்துள்ளார். மூன்று படையினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர், எவரும் கபில்ராஜின் உடல் மீட்கப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். சிங்க ரெஜிமன்டின் 12வது பட்டாலியனின் முகாம் அது 2025 ஆகஸ்ட் ஏழாம் திகதி இரவு கைது செய்யப்பட்டவரை பின்னர் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்துவிட்டோம், என தெரிவித்துள்ள இராணுவ பேச்சாளர் பல உள்நோக்கம் கொண்ட சக்திகள் இந்த விடயத்தை பயன்படுத்த முயல்கின்றன, ஆனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அந்த முகாமை சேர்ந்தவர்களுடன் சிறந்த உறவை பேணுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தினரால் கைவிடப்பட்ட பொருட்களை எடுத்துச்செல்வதற்காக சிலரை அழைத்த பின்னர் இராணுவத்தினர் அவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டார்கள் என தெரிவிக்கப்படுவதை மறுத்துள்ள இராணுவ பேச்சாளர் இது முற்றிலும் பொய் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/222466
2 months 1 week ago
35 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட வீரமுனைப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு 13 AUG, 2025 | 11:27 AM வீரமுனைப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு 35 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை (12) மாலை ஆலய பூசையுடன் ஆரம்பமானது. அம்பாறை மாவட்டத்தில் 35 ஆண்டுகளுக்கு முன் நடந்தேறிய வீரமுனைப் படுகொலை நினைவேந்தலானது வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து மங்கள விளக்கேற்றல் ஏற்றி வைக்கப்பட்டு 2 நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் படுகொலை செய்யப்பட்டவர்கள் ஞாபகார்த்த தூபியில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து ஆலய வளாகத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. வீரமுனைப் படுகொலை 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை என்னும் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். குறித்த படுகொலை செய்யப்பட்ட நாளின் 35 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த இன வன்செயல் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை, அம்பாறை பகுதிகளைச்சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருட்டிண மிசன் பாடசாலை வளவினுள்ளும் 1990 தஞ்சம் புகுந்திருந்தனர். இக்காலகட்டத்தில், ஆகஸ்ட் 12 ம் நாளன்று முஸ்லிம் ஊர்காவல்படையினர் இராணுவத்தின் துணையுடன் இந்த படுகொலைகள் நிகழ்த்தப்பட்டதாக பதிவுகள் பல உள்ளன. இதன்போது 400க்கும் அதிகமான தமிழ் மக்களை சுட்டும் வெட்டியும் தாக்கினர். இவர்களில் பெண்கள் குழந்தைகள் உட்பட 55 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். அதிகமானோர் படுகாயமுற்றனர். அவ்வேளையில் கடத்தப்பட்டோர் பற்றி எவ்விதத் தகவலும் இதுவரையில் இல்லை. இவ்வாறு படுகொலை நடந்து அதில் படுகாயமடைந்தவர்கள் அம்பாறை உட்பட பல வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டபோதும் அவர்களும் அங்கிருந்து கொண்டுசெல்லப்பட்டு படுகொலைசெய்யப்பட்டனர். 1990ஆம் ஆண்டு வீரமுனை மக்கள் முற்றாக அங்கிருந்து துரத்தப்பட்டு அக்கிராமத்தினை அபகரிக்க மேற்கொண்ட முயற்சி அன்றைய பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கோவிந்தன் கருணாகரத்தின் முயற்சியினால் தடுத்து நிறுத்தப்பட்டு வீரமுனை மக்கள் மீள குடியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்ப பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இளையதம்பி சிறிநாத் ,ஞானமுத்து சிறிநேசன் ,மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன், நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் செயலாளரும் கல்முனை தொகுதி இணைப்பாளருமான அருள். நிதான்சன், சிவில் சமூக செயற்பாட்டாளரும் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க ஆலோசகருமான தாமோதரம் பிரதீபன், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு செயலாளர் காந்தன் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் உட்பட ஆலய நிர்வாக குழுவினர் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் பொதுமக்கள் படுகொலையானவர்களின் உறவுகள் என பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/222465
Checked
Wed, 10/22/2025 - 01:09
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed