புதிய பதிவுகள்2

அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் !

2 months 1 week ago
அமெரிக்க ஜனாதிபதிக்கு நோபல் பரிசு வழங்க மேலும் சில நாடுகள் பரிந்துரை! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப்க்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என மேலும் சில உலக நாடுகள் பரிந்துரை செய்து வருகின்றன. அதன்படி, புதிதாக, அசர்பைஜான் மற்றும் ஆர்மீனியா ஆகிய நாடுகள் நோபல் பரிசுக்காக ட்ரம்பை பரிந்துரைத்துள்ளன. முன்பதாக, பாகிஸ்தான், இஸ்ரேல், கம்போடியா ஆகிய நாடுகள் அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பை பரிந்துரைத்த நிலையில் தற்போது புதிய சில நாடுகளும் பரிந்துரைத்துள்ளது. எனினும், பல்வேறு நாடுகளுக்கு இடையே நடந்த போரை நிறுத்திய தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க மாட்டார்கள் என ட்ரம்ப் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1442401

ஈழச்சொந்தங்களை இழிவுப்படுத்தும் கிங்டம் திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிடுவதை நிறுத்தாவிட்டால் திரையரங்கை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம் - சீமான்

2 months 1 week ago
கிங்டம் படத்தைத்தை தமிழ்நாட்டில் திரையிடுவதை தடுத்து நிறுத்துவோம் என்ற செய்தியை நான் யாழ்களத்தில் படித்துவிட்டு அந்த கிங்டம் என்ற படத்தை பற்றி தமிழ்பட அறிஞர்கள் சிலரிடம் விசாரணை நடத்தி பார்த்தால் அவர்களுக்கு அப்படி ஒன்றே தெரியாது. வியாழகிழமை 14 ம் திகதி கூலி என்று ஒரு படம் ரஜனி காந்தின் படம் வருகின்றது பார்க்கின்ற மகிழ்ச்சியில் அவர்கள் இருக்கின்றனர் கிங்டம் படத்தைத்தை தமிழ்நாட்டில் நன்றாக விளம்படுத்தி அதை வெற்றிகரமான படமாக்க தான் இப்படி எல்லாம் அங்கே செய்கின்றார்களோ 🤔

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்

2 months 1 week ago
இங்கே அரசியல் செய்து வெற்றி அடைய வேண்டும் என்றால் வழமை போல மக்களை பாதிக்கின்ற செயற்பாடுகளே பயன் தரும் என்ற முடிவுக்கு சுமந்திரன் வந்திருக்கின்றார் போல தெரிகின்றது 😒 வெள்ளிக்கிழமை ஹர்த்தாலை ஆதரிக்கிறோம் - மனோ கணேசன் ஜீவன் தொண்டமான் முழுமையான ஆதரவு.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்

2 months 1 week ago
எதிர்ப்பை வெளிப்படுத்த கதவடைப்பு வினைத்திறனான பொறிமுறையா என்பதுதான் எனது வினா.

இந்தோனீசியா வரை கடல் கடந்து வென்று ஆசியாவின் மிகப்பெரிய ராணுவ சக்தியாக உயர்ந்த 'ராஜேந்திர சோழன்'

2 months 1 week ago
இன்றும் தொடர்கிறது அன்று சோழர்கள் இன்று சிங்களவர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர் அன்று அதிகாரத்தில் உள்ள சோழர்கள் செய்தனர் இன்று அதிகாரத்தில் உள்ள சிங்கள இராணுவம் செய்கின்றது அன்றைய சோழ எகாதிபத்தியவாதிகள் இன்றைய அமெரிக்கா எகாதிபத்தியவாதிகள் போல நட்ந்து கொண்டனர்🤣 😅🤣

போர் முயற்சிகளுக்கான உக்ரைன் மக்களின் ஆதரவு சரிந்தது

2 months 1 week ago
தற்போது நடக்கும் உக்ரேன் போர் ஐரோப்பிய யூனியனின் தன்மான பிரச்சனையாக மாறிவிட்டது. எங்கேயோ ஆரம்பித்து வேறு எதையோ நோக்கி போய்க்கொண்டிருக்கின்றது. நேட்டோ எனும் திருகுதாள இராணுவ அமைப்பு எதற்காக உருவாக்கப்பட்டதோ அதை இன்றுவரை செய்யவில்லை. மாறாக அரபு நாடுகள் மீது குண்டுகளை வீசி அழித்ததுதான் மிச்சம்.

பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள 135 வைத்தியசாலைகள் மூடப்படக் கூடிய அபாயம் ; பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் திங்கள் முதல் தொடர் வேலை நிறுத்தம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

2 months 1 week ago
இதெல்லாம் சிலோனுக்கு கடன் குடுக்கிற உலக வங்கியின்ர நிகழ்ச்சி நிரல் எண்டு நான் நினைக்கிறன்.😎

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்

2 months 1 week ago
எம்பியாக இருக்கும் போது ஒரு கொள்கை... வேலை வெட்டியில்லாமல் இருக்கும் போது இன்னொரு வகையான கொள்கை... இதெல்லாம் தமிழ் அரசியல்வாதிகளுக்கு கை வந்த கலை...

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா 2025!

2 months 1 week ago
இப்பவும் யாழ்ப்பாண மக்கள் புத்தகங்களை வாசிக்கின்றனரா?குறிப்பாக மாணவர்கள் வாசிக்கின்றனரா? நான் நினக்கின்றேன் சர்வதேச யூ டியுப்,சர்வதேச டிக்டொக்,சர்வதேச வட்சப் ,சர்வதேச முகப்புத்தக திருவிழா என திருவிழா நடத்தினால் மக்கள் அலை அலையாக வந்து கல்ந்து கொள்வார்கள்...🤣

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்

2 months 1 week ago
சுமத்திரன்2010 இல் இருந்து அரசியலில இருக்கிறார். தமிழரசுக்கட்சியின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முடிவுகளை எடுக்கக் கூடிய நிலையிலும் இருந்திருக்கிறார்.மைத்திரி ஜனாதிபதியாக இருந்த காலத்தில்வரலாற்றில் முன்எப்போதும் இல்லாத வகையில் இரு பிரதான கட்சிகளும் இணைந்து கூட்டரசாங்கம் அமைத்த வேளையில் ஒருங்கிணைந்த கூட்டரசாங்கத்துக்கு முழு ஆதரவளித்த எதிர்க்கட்சியில் இருந்திருக்கிறார். அப்பொழுதெல்லாம். இராணுவ பிரசன்னத்தைக் குறைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி இராணுவ பிரசன்னத்தைக் குறைக்குமாறு கோரவில்லை.ரணில் அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் பல முறை தமிழத்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாலேயே தப்பிப் பிழைத்தது.அப்பொழுதெல்லாம் இதனை ஒரு துருப்புச்சீட்டாகாப் பாவித்து ஏன் பேரம் பேசவில்லை. மாறாக அதே இராணுவ பாதுகாப்புடனேயேதமிழ்ப்பிரதேங்களில் உலாவித் திரிந்தார்.இப்பொழுது மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில் வடமாகாண முதலமைச்சர் கனவில் பம்மாத்து அரசியல் செய்கிறார். இது ஒரேநாளில் நெல் முளைத்த வயலை ஊழுது விதைத்து அறுவடை செய்து நெருப்பில்லாம் பொங்கல் பொங்கி படம்காட்டிய நடிப்பு அரசியல் போலத்தான் இ.ருக்கப் போகிறது.நல்லூர்த்திருவிழா காலத்தில் யாழ்நகர்பகுதியில் சனநடமாட்டம் அதிகரித்த வேளையில் வர்த்தகர்களின் வணிகத்துக்கு ஆப்பு வைக்க நினைக்கிறார். நல்லூர்த்திருவிழாவையே நம்பி வாழும்கடலை கச்சான்,தும்புமிட்டாயக் கடைகளையும் சாத்த வேண்டும் என்று சொல்கிறாரோ?

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்

2 months 1 week ago
நாங்கள் பாடசாலைக்கு செல்ல முதலிருந்து பொலிசும் ,இராணுவமும் அட்டுழியங்களை செய்கின்றனர்...பெரிய இனப்ப்டுகொலை நடந்த பின்பும் அட்டுழிய்ங்களை செய்கின்றனர் ... அவர்கள் நியாயமாக நடந்தால் மக்கள் அநியாயமாக நடக்க மாட்டார்கள் ... 😆

பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள 135 வைத்தியசாலைகள் மூடப்படக் கூடிய அபாயம் ; பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் திங்கள் முதல் தொடர் வேலை நிறுத்தம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

2 months 1 week ago
இடதுசாரிகள் நாட்டை கியுபா போல மாற்ற வேணுமென்றும் வலதுசாரிகள் நாட்டை சிங்கபூராகவும் மாற்ற வேணுமென்று கனவு காண்கின்றனர் ஆனால் சிறிலங்கா மக்களும்,அமைச்சர்களும் சிறிலங்கா போல த்தான் இருப்போம் என அடம் பிடிக்கின்றனர்.

போர் முயற்சிகளுக்கான உக்ரைன் மக்களின் ஆதரவு சரிந்தது

2 months 1 week ago
ஆரம்பத்தில் உக்கிரேஎன் நேட்டோவில் அங்கம் பெறவேண்டும் எனும் முனைப்புடன் போரில் ஈடுபட்டது ஆனால் நேட்டோ கனவு கலைந்து போனாலும் தொடர்ந்தும் போரிடுகிறது. உக்கிரேனின் அடுத்த குறி ஐரோப்பிய ஒன்றிய இணைவு, அது ஓரளவிற்கு சாத்தியப்படலாம் எனும் நிலையில் அண்மையில் தன்னிச்சையாக செயல்படும் ஊழல் ஒழிப்பு பிரிவினை செலன்ஸ்கி தனது கட்டுப்பாட்டில் எடுக்கும் சட்டம் இயற்றியவுடன் அதற்கெதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள், இந்த ஆர்பாட்டம் 2014 மேடான் ஆர்ப்பாட்டம் போன்றது என கூறினார்கள். எவ்வாறு குறுகிய காலப்பகுதியில் இவ்வார்ப்பாட்டம் உருவானது என்பது தொடர்பில் ஆச்சரியம் தெரிவிக்கப்பட்டது, இதனிடையே உடனடியாக செலன்ஸ்கி அவசர அவசரமாக அந்த சட்டத்தினை நீக்கிவிட்டார். இதன் பின்னணியில் ஐரோப்பிய ஒன்றியம் செலன்ஸ்கியிற்கு மாற்றீடாக சலூஸ்னியினை ஆட்சி பீட ஏற்ற முனைகிறதாக கூறப்படுகிறது, இவர் முற்று முழுதான இராணுவ பின்னணி கொண்டவர், தொடர்ந்து போரினை சிறப்பாக நடத்த இராணுவ பின்னணி கொண்ட ஒரு தலைமைபீடம் அவசியம் என ஐரோப்பிய ஒன்றியம் கருதலாம். மேற்கின் அறிவுரையின்படி இஸ்தான்புல் உடன்படிக்கையினை ஏற்க மறுத்து தொடர்ந்து போரிட முடிவு செய்த செலன்ஸ்கி அதே ஆண்டு ஒக்ரோபர் மாதம் செலன்ஸ்கி புதிய ஒரு சட்டத்தினை இயற்றினார், அதன் மூலம் எந்த ஒரு உக்கிரேன் அரச அதிகாரிகளும் உக்கிரேன் சார்பாக இரஸ்சியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் அது சட்டவிரோதம் எனும் சட்டம். போரிற்கான தேவைகள் வலிந்து உருவாக்கப்படுகின்றன, புதிதாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களை இராணுவத்தில் இணைப்பதற்கான புதிய சட்டத்தினையும் உருவாக்கியுள்ளார் செலன்ஸ்கி. ஆனால் எதற்காக யுத்தத்தில் ஈடுபடுகிறார்கள் (செலன்ஸ்கி ஐரோப்பாவிற்காகவும் போராடுகிறோம் என கூறினார்) எனும் தெளிவு உக்கிரேனியர்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் இல்லை, நேட்டோவில் இணையமாட்டோம் என கூறினால் போர் முடிந்துவிடும், அதே நேரம் உக்கிரேனை நேட்டோவில் இணைக்க நேட்டோ நாடுகளும் விரும்பவில்லை ஆனாலும் போர் தொடர்கிறது. எந்த போராட்டத்திற்கும் ஒரு கொள்கை வேண்டும் அது தவறானதாக இருந்தாலும் அதனை விரும்புபவர்கள் அதனை பின்பற்றுவார்கள், ஆனால் வெறும் அதிகாரம், பணம் என்பவற்றிற்காக மற்றவர்களின் கருத்தினடிப்படையில் செயல்படமுடியாது.
Checked
Tue, 10/21/2025 - 22:08
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed