2 months 1 week ago
11 Aug, 2025 | 04:38 PM முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தலைமறைவாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஓபிபிபி கட்சியின் பொதுச்செயலாளர் வெதினிகம விமலதிஸ்ஸ தேரர் 2020 இல் கடத்தப்பட்டமை தொடர்பிலான வழக்கில் அத்துரலிய ரத்ன தேரரை தேடி வரும் பொலிஸார் அவர் தலைமறைவாகியுள்ளார் என தெரிவித்துள்ளனர். அத்துரலிய ரத்ன தேரரின் ராஜகிரிய ஆலயம்,தியான நிலையங்கள் உட்பட பல இடங்களிற்கு அவரை தேடிச்சென்றதாக தெரிவித்துள்ள கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் அவரை எங்கும் கண்டுபிடிக்கமுடியவில்லை என குறிப்பிட்டுள்ளனர். அத்துரலிய ரத்ன தேரரை அவரது தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார் அவர் நாட்டிலிருந்து தப்பியோடுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவ்வேளை மேல்மாகாணத்திற்கான சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபராக விளங்கிய தேசபந்து தென்னக்கோன் ஆகியோருடன் தொடர்புபட்ட சம்பவம் தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அத்துரலிய ரத்னதேரரை தேடுவதாக தெரிவித்துள்ள பொலிஸார் இருவரையும் விசாரணை செய்யவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் தேசிய பட்டியல் ஆசனத்தை பெறுவதற்கான கையெழுத்தை பெறுவதற்கு அத்துரலிய ரத்ன தேரர் ஓபிபிபி கட்சியின் பொதுச்செயலாளர் வெதினிகம விமலதிஸ்ஸ கடத்தினார் என்ற குற்றச்சாட்டு உள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் அந்த ஆவணத்தில் கையெழுத்திடாவிட்டால் தன்னை கொலை செய்யப்போவதாக வெதினிகம விமலதிஸ்ஸ தேரர் தெரிவித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளனர். அத்துரலிய ரத்ன தேரர் தலைமறைவு - தேசிய பட்டியல் ஆசனத்திற்காக பௌத்தமதகுருவை கடத்திய குற்றச்சாட்டின் கீழ் தேடும் பொலிஸார் - கோட்டா - தேசபந்துவிற்கும் தொடர்பு | Virakesari.lk
2 months 1 week ago
11 Aug, 2025 | 05:16 PM கச்சதீவை இலங்கைக்குத் தாரை வார்த்தது மிக பெரிய வரலாற்றுத் தவறென குறிப்பிடுவது தொடர்பாக நாம் அலட்டிக்கொள்ள தோவையில்லை என தெரிவித்து யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்திய அரசியலில் அதிலும் குறிப்பாகத் தமிழக அரசியலில் அடிக்கடி கச்சதீவு விவகாரம் சூடு பிடிப்பது வழமை. தேர்தல் காலங்களிலும் மற்றும் எல்லைதாண்டி இலங்கைகடற்பரப்பில் இந்திய மீனவர்கள் வந்து இலங்கை மீனவர்களது வளங்களை சூறையாடி, வலைகளைச்சேதமாக்கும் போதும் இலங்கைக்கடற்படையால் அவர்கள் கைதுசெய்யப்பட்டு, அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்படும் போதும் தமிழக முதல்வர் கச்சதீவை இலங்கைக்கு வழங்கியது போல திரும்பப்பெறுவதுதான் தமிழக மீனவர்களது பிரச்சினைக்குத்தீர்வு என்று கோஷமிடுவது சர்வசாதாரணம். இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி சில நாட்களுக்கு முன் கச்சதீவை காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது இலங்கைக்குத்தாரை வார்த்தது மிக பெரிய வரலாற்றுத்தவறு என்று குறிப்பிட்டிருந்தார். வட பகுதிக்கு அல்லது முன்னர் வடக்கில் இருந்த யாழ்ப்பாண இராச்சியத்திற்குச் சிறப்பைக் கொடுப்பதற்கு தீவுகள் முக்கியமானதொரு காரணமாகும். மன்னார் துவங்கி காரைதீவு (காரைநகர்), வரையுள்ள இரணைதீவு, பாலைதீவு, நெடுந்தீவு, கச்சதீவு, புங்குடுதீவு, கற்கடதீவு, எழுவைதீவு, நயினாதீவு. மண்டைதீவு, ஆகியவை இவை. இவற்றுள் மன்னார், ஊர்காவற்துறை, மண்டைதீவு, புங்குடுதீவு, காரைநகர் ஆகியவை தரைவழிப்பாதையால் இலங்கைப்பிரதான நிலப்பரப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் எல்லாத்தீவுகளிலும் மக்கள் வசிப்பதில்லை. குறிப்பாக நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கச்சதீவில் மக்கள் வசிப்பத்தில்லை. வருடத்தில் ஒரு முறை மட்டும் இடம் பெறும் கத்தோலிக்க மக்களின் புனித அந்தோனியார் திருநாளுக்கு மட்டும் மக்கள் இலங்கையின் குறிப்பாக வட மாகாணத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் போவார்கள். வடக்கில் பெரும்பான்மையினராக இருக்கும் இந்து மத சகோதரர்களும் கணிசமானளவு தொகையினர் இங்கு வருவதுண்டு. இந்தியாவிலிருந்தும் ஆயிரக்கணக்கில் மக்கள் வருவார்கள் திருநாட் காலங்களில் மக்கள் போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் முக்கிய ஏற்பாடுகளுக்கு இலங்கைக் கடற்படையினர் பொறுப்பாயிருப்பார்கள். கச்சதீவுத் திருநாளுக்கு சில வாரங்குளுக்கு முன் யாழ்ப்பாணச் செயலகத்தில் அரச அதிகாரிகள் பாதுகாப்புத்தரப்பினர் யாழ் மறைமாவட்ட ஆயரின் பிரதிநிதிகள் கூடி திருநாளுக்கான சகல ஏற்பாடுகளையும் செய்து வருவது வழக்கம். திருநாள் இல்லாத மற்ற நாட்களில் இலங்கையிலிருந்து மட்டுமல்ல இந்தியாவிலிருந்தும் கடற்தொழில் செய்பவர்கள் சற்று ஓய்வெடுக்க அல்லது வலைகளைக் காயப்போட இங்கு வந்து போவார்கள். இந்தியக் கடற்தொழிலாளர் பெரும் எண்ணிக்கையில் இங்கு வந்து போவதாலும் சிறிதாக ஆரம்பிக்கப்பட்ட அந்தோனியார் கோயிலுக்கு இவர்களும் வந்து வழிபட்டுச்செல்வார்கள். நேர்த்திக்கடன் போன்ற கடன்கள் செய்வதற்கும் சில சந்தர்ப்பங்களில் நன்கொடைகள் வழங்குவதற்கும் வருவார்கள். இந்தப் பின்ணனியிலும் கணிசமானளவு இந்தியக் கடற்தொழிலாளர்கள் வருவதாலும் கச்சதீவு இந்தியாவுக்கா இலங்கைக்கா சொந்தம் என்ற ஒரு மயக்கம் உருவானது ஆயினும் 1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைவதற்கு பல தசாப்தங்களுக்கு முன்னிருந்தே கச்சதீவில் புனித அந்தோனியார் சிற்றாலயம் ஒன்றிருந்தது. இவ்வாலயம் யாழ்ப்பாணக் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் கீழ் உள்ள நெடுந்தீவுப் பங்கின் கீழ் இருந்தது. நெடுந்தீவுப் பங்கில் உள்ள பங்குத் தந்தைதான் இவ்வாலயத்திற்கு நேரடிப் பொறுப்பாயிருந்து வந்துள்ளார். கச்சதீவு திருநாளுக்குச் சில நாட்களுக்கு முன் நெடுந்தீவுப் பக்கத்திலிருந்து பங்குத்தந்தையின் பணிப்புரையில் கச்சதீவு மூப்பர்' என்றழைக்கப்பட்ட (மூப்பர் அல்லது கணக்குப்பிள்ளை என்னும் கத்தோலிக்க ஆலய நிர்வாக முறை 16ம் நூற்றாண்டில் புனித சவேரியார் காலத்திலிருந்து ஒரு ஆலயத்தில் குரு நிரந்தரமாத் தங்குவதில்லை யென்றால் அவ்விடங்களில் ஆலயப்பராமரிப்பு, மக்களின் ஆன்மீக நலன் சம்பந்தமான விடயங்களுக்கு இந்த மூப்பரே பொறுப்பாயிருப்பார். பங்குத்தந்தை வரும் போது இவரே அனைத்துக்கும் பொறுப்பு கூறுபவராக இருப்பார். இப்போது அனேகமான ஆலயங்களில் வதிவிடப்பங்குத்தந்தை இருப்பதால் பெரும்பாலும் இந்த மூப்பர் முறை நடைமுறையில் இல்லை.) அல்லது வழிபாடுகளுக்கு ஆயத்தம் செய்பவர் யாத்திரிகளது தேவைகளையும் கவனிப்பார். சில உதவியாளர்களுடன் சென்று அங்குள்ள சிற்றாலயம், அதன் சுற்றுப்புறம் ஆகியவற்றைச் சுத்தம் செய்வார். பங்குத்தந்தையும் சில நாட்களுக்கு முன் சென்று இப்பணிகளை மேற்பார்வை செய்வார். இவ்வாறு செய்த பழைய மூப்பர்களின் வாரிசுகள் இப்போதும் நெடுந்தீவில் உள்ளனர். அண்மைக்காலங்களில் கடற்படையினர் உணவு, குடிநீர் ஏற்பாடுகள் பலவற்றை கடற்படையினர் செய்துவருகின்றனர். யுத்தகாலத்தில் கச்சதீவு திருநாள் ஒழுங்காக இடம் பெற்றிருக்கவில்லை. இங்கு ஒரு தற்காலிக கடற்படை முகாமும் இருந்தது. யுத்தம் முடிவடைந்தபின் யாத்திரைகள் கிரமாக இந்திய இலங்கை யாத்திரிகாகளுடைய பங்குபற்றுதலுடன் இடம் பெற்று வருகின்றன. யாழ்மறை மாவட்ட ஆயரின் பணிப்புரையில் நெடுந்தீவுப் பங்குத்தந்தையே வழிபாட்டுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கின்றார். யாழ் ஆயரின் அழைப்பின்பேரில் தான் இந்தியாவின் தங்கச்சி மடம் பங்குத்தந்தையும் வேறு சில குருக்களும் துறவிகளும் வருகின்றனர். இந்திய யாத்திரிகளது எண்ணிக்கை போன்ற ஏற்பாடுகள் எல்லாம் யாழ் கச்சேரியில் நடக்கும் கூட்டங்களில் முடிவு செய்யப்படுகின்றது. இந்திய யாத்திரிகள் கணிசமானளவு வருகின்றமையால் இந்திய குருக்களுக்கும் கூட்டுத்திருப்பலி மற்றும் வழிபாடுகளில் கணிசமான பங்கு வழங்கப்படுகின்றது. கச்சதீவுப்பெருநாள் ஏற்பாடுகளும், வழிபாட்டு ஒழுங்கமைப்பும் இலங்கை அரசினதும், யாழ் கத்தோலிக்க மறைமாவட்ட ஆயரின் பணிப்புரையிலேயே நடைபெற்றுவருகின்றது. நிறைவாக கச்சதீவு கடந்த பல தசாப்தங்களாக (யுத்தகாலம் நீங்கலாக) இந்திய இலங்கை யாத்திரிகள் ஏறக்குறைய சரிக்குச்சரி எண்ணிக்கையில் வந்துபோனமையாலும், திருநாள் இல்லாத வருடத்தின் எஞ்சிய நாட்களின் இரு நாட்டுக்கடற்தொழிலாளரும் கச்சதீவுக்குச் சர்வசாதாரணமாக வந்து ஓய்வெடுத்து இங்கிருந்த அந்தோனியார் சிற்றாலயத்தில் வணங்கிச் சென்றதாலும் அரசியல், புவியியல் ரீதியில் கச்சதீவு யாருக்குச் சொந்தம் என்ற கேள்வி குறிப்பாக இந்திய தரப்பில் கேட்கப்பட்டுவந்தது. இப்பகுதியில் இலங்கைக் கடலில் அத்துமீறி வந்து மீன்பிடிப்பதில் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படுவது போன்ற நிகழ்வுகள் இடம்பெறுவதால் கச்சதீவை இலங்கைக்கு வழங்கியது தவறு என்று தமிழக அரசியல் தரப்பிலும் இந்திய மத்தி அரசிலும் கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. உண்மையில் 1974ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இந்திரா காந்தி அம்மையார் பிரதமராக இருந்தபோது ஆணித்தரமாக கச்சதீவு இலங்கைக்கே சொந்தம் அதில் இந்தியா உரிமை கொண்டாடப் போவதில்லை என்று அறிவித்தமை கச்சதீவை இலங்கைக்குத்தாரை வார்த்து கொடுத்தமையாகாது. ஏனெனில் கச்சதீவு ஒருபோதும் இந்தியாவின் ஆட்சிக்கும் நிர்வாகத்திற்கும் கீழ் இருந்ததில்லை. இந்த பின்னியில் கச்சதீவை இலங்கைக்கு தாரைவார்த்து கொடுப்பது அல்லது மிளப்பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. இதனை அப்போதே யாழ் ஆயராக இருந்த கலாநிதி. ณ. தியோகுப்பிள்ளை ஆண்டகை யாழ் ஆயரில்ல ஆவணங்களிலிருந்தும் யாழ் ஆயரின் நிர்வாகத்தின் கீழ் நெடுந்தீவுப் பங்குப் பதிவேடுகள் அங்குள்ளவர்களின் வாய்மொழி பாரம் யபரியங்களிலிருந்தும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். எனவே ய இந்தியப் பிரதமரின் கூற்றாகிய 1974 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியிலிருந்த போதுதான் கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. அப்போது தமிழ் நாட்டில் தி.மு.க கட்சியும் காங்கிரஸ் ஆட்சியின் பங்காளியாக இருந்தது என்பது பற்றியெல்லாம் நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. புதிய, 2016ம் ஆண்டு தற்போதைய ஆயர் கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை பொறுப்பேற்றபின் பல வருடங்களாக குறிப்பாக போர்க்காலத்தில் கவனிப்பாரற்று சிதைவடைந்த நிலையில் ஒரு பல்லாயிரக்கணக்கான யாத்திரிகள் கலந்துகொள்ளும்படியான ஒரு ஆலயம் கட்டவேண்டிய தேவையை உணர்ந்து கடற்படையினரிடம் அனுசரணையைக் கோரியபோது. அவர்களது அனுசரணையில் ஒரு புதிய அழகிய ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இந்திய யாத்திரிகர்களும் வருகின்றனர் மற்றும் கடற்தொழிலாளரும் இங்கு மற்ற நாட்களில் வந்து ஓய்வெடுக்கவும் தமது வலைகளைக் காயப்போடவும் அவர்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட அனுமதி தொடர்ந்து பேணப்படுகின்றது என்றுள்ளது. கச்சதீவு தொடர்பில் இந்தியாவின் கருத்துக்களை நாம் அலட்டிக்கொள்ள தோவையில்லை - யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு அறிக்கை | Virakesari.lk
2 months 1 week ago
மன்னாரைக் காக்க மாபெரும் மக்கள் போராட்டம் - வலுச்சேர்த்த தமிழ் தேசியப் பேரவை பதிவேற்றுனர்: அன்பரசி திகதி: 11 Aug, 2025 மன்னார் நகரத்தின் சுற்றுச் சூழலுக்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள சர்ச்சைக்குரிய காற்றாலைத் திட்டம் மற்றும் மன்னார் தீவையே முற்றாக அழிக்கக்கூடிய கனியமண் அகழ்வுத் திட்டம் ஆகியவற்றை உடனடியாகக் கைவிடக்கோரி, இன்று மன்னாரில் மக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து மாபெரும் கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். போராட்டத்திற்கான அவசியம் என்ன? மன்னார் பகுதியில் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலைத் திட்டமானது, அப்பகுதியின் சூழலியல் சமநிலையை முற்றாகப் பாதிக்கும் வகையிலும், அங்குள்ள மக்களின் மீன்பிடி மற்றும் விவசாயம் சார்ந்த வாழ்வாதாரங்களை அழிக்கும் வகையிலும் அமைந்துள்ளதாகப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். அதேபோல, மன்னார் தீவில் முன்னெடுக்கப்படவுள்ள கனியமண் அகழ்வானது, ஒரு வளமான நிலப்பரப்பை முற்றிலுமாக அழித்து, எதிர்காலத்தில் மன்னார் தீவு என்ற ஒன்றே இல்லாத நிலையை உருவாக்கும் ஒரு பாரிய அழிவுத் திட்டம் என அவர்கள் குற்றம் சாட்டினர். இந்த அழிவுத் திட்டங்களுக்கு எதிராகவே மக்கள் தன்னெழுச்சியாக வீதியில் இறங்கிப் போராடி வருவதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர். வலுச்சேர்த்த தமிழ் தேசியப் பேரவை மக்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்கும் வகையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் தேசியப் பேரவையின் தலைவர்கள் நேரடியாகக் கலந்துகொண்டு தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இந்தப் போராட்டத்தில், தமிழ் தேசியப் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், மன்னார் மாவட்ட அமைப்பாளர் துரைராஜா ஜோன்சன் மற்றும் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு, மக்களின் கோரிக்கைகளுக்கு வலுச்சேர்த்தனர். தமது அரசியல் நோக்கங்களுக்கு அப்பால், மக்களின் வாழ்வுரிமையையும், மண்ணின் வளத்தையும் பாதுகாப்பதே தமது முதன்மையான கடமை எனத் தெரிவித்த அரசியல் தலைவர்கள், இந்த அழிவுத் திட்டங்களை அரசு கைவிடும் வரை தமது போராட்டம் தொடரும் எனவும் சூளுரைத்தனர். மன்னாரைக் காக்க மாபெரும் மக்கள் போராட்டம் - வலுச்சேர்த்த...மன்னார் நகரத்தின் சுற்றுச் சூழலுக்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள சர்ச்சைக்குரிய காற்றாலைத் திட்டம் மற்றும் மன்னார் தீவையே முற்றாக அழிக்கக்கூடிய கனியமண் அகழ்வுத் திட
2 months 1 week ago
நியூசிலாந்தில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் வெளியீட்டு விழா ——————————— நியூசிலாந்து, ஓக்லாண்ட்(Auckland) மாநகரில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் வெளியிடப்பட உள்ளது. “தேசிய சுய நிர்ணயமும் ஐரோப்பிய சிறுபான்மை இனங்களும்”, “இலத்தீன் அமெரிக்காவில் தேசிய இன முரண்பாடுகள்”, “ஆபிரிக்க தேசிய இனங்களும் சுயநிர்ணய விடுதலையும்”, “முரண்பாடுகள் முற்றிய அரபுலகின் தேசிய இனங்கள்”“தென்கிழக்காசிய விடுதலைப் போராட்டங்கள்”, “இந்தியாவில் தேசிய இன எழுச்சியும் வீழ்ச்சியும்” ஆகிய ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் வெளியீடு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. நியூசிலாந்து, ஓக்லாண்ட் மாநகரில் உள்ள மவுண்ட் ரோஸ்கில் போர் நினைவு மண்டபம், 13 வது மே சாலை, மவுண்ட் ரோஸ்கில், ஓக்லாந்து 1041 எனும் முகவரியில் உள்ள மண்டபத்தில் மாலை 1800 முதல் 2030 மணி வரை இவ் வெளியீட்டு நிகழ்வு நடைபெற உள்ளது. (Mt Roskill War Memorial Hall, 13 May Road, Mt Roskill, Auckland 1041, New Zealand) இந்நிகழ்வு திரு. சண் வேலுப்பிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்நூல் வெளியீட்டு விழாவில் அறிமுக உரையை திரு. மேவின் கொன்ஸ்ரன்ரைன் அவர்கள் உரையாற்றுவார். அத்துடன் நூல்களின் ஆய்வுரைகளை திரு. சிவசரவணபன் சர்வேஸ்வரன், திரு. பூபாலசிங்கம் பிரதீபன், திரு. கௌரிசங்கர் சுதந்திரபாலன், திரு. பிரேம்குமார் கந்தசாமி, திருமதி. வித்தியா நந்தகுமார் மற்றும் திருமதி. தமிழினி வாமதேவன் ஆகியோர் வழங்குவார்கள். ஓக்லாண்ட் மாநகரில் நிகழும் இந்நூல் வெளியீட்டின் ஏற்புரையை திரு. ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்கள் நிகழ்த்துவார். யாழ்க்கள உறவுகளே, வட்ஸ்அப்பில் படித்ததைப் பகிர்ந்துள்ளேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
2 months 1 week ago
அந்த ஒன்று எது என்பதுதான் கேள்வி இப்போது . ........ ! 😇
2 months 1 week ago
2 months 1 week ago
2 months 1 week ago
கொல்லப்பட்ட அல்ஜசீரா ஊடகவியலாளர் ஹமாஸ் உறுப்பினர் - இஸ்ரேலிய இராணுவம் குற்றச்சாட்டு 11 AUG, 2025 | 02:04 PM அல்ஜசீரா ஊடகவியலாளர் அனாஸ் அல் ஷரிவை இலக்குவைத்து தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் ஹமாஸ் உறுப்பினர் என தெரிவித்துள்ளது. அனாஸ் அல் ஷரிவ் ஹமாசின் உறுப்பினர் என்பதற்கான அனைத்து ஆவணங்களும் ஆதாரங்களும் உள்ளன என தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம் அவர் பெற்ற பயிற்சி விபரங்கள், சம்பள பட்டியல்கள் போன்றவை அந்த ஆவணத்தில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அவருக்கு பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்புள்ளதை இந்த ஆவணங்கள் மீண்டும் உறுதி செய்கின்றன என இஸ்ரேலிய இராணுவம் ஹமாஸ் இந்த விடயத்திலிருந்து தன்னை விலக்கிக்கொள்ள முயல்கின்றது என குறிப்பிட்டுள்ளது. கொல்லப்பட்ட ஊடகவியலாளர் 2013 இல் ஹமாஸ் அமைப்பில் இணைந்தார் என தெரிவித்துள்ள இஸ்ரேலியஇராhணுவம் இஸ்ரேலியர்களிற்கு எதிராக ரொக்கட் தாக்குதலை மேற்கொண்ட ஹமாஸ் குழுவின் தலைவர் இவர் எனவும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/222310
2 months 1 week ago
சம்பந்தன் மட்டும் அல்ல. எனக்கும் உங்களுக்கும் கருத்து எழுத கூட இதுதான் பயன்படுகிறது🤣
2 months 1 week ago
உலகத்தில் மக்கள் எப்போதாவது போரை விரும்பி இருப்பார்களா 🤣. போரை விரும்பாதபடியால்தான் வசியால் அவுசுக்கும், கு சா அண்ணையால் ஜேர்மனிக்கும் ஓடிப்போக முடிந்தது. இதே போலத்தான் நானும். இப்படித்தான் பல ஈழத்தமிழர்களும் போரை விரும்பவில்லை. இந்த அடிப்படையில் பார்த்தால் - சிங்களவன் வெல்ல முடியாத எதிரி, எனவே ஈழ விடுதலை போராட்டமே தவறு என்றல்லா ஆகி விடும் 🤣.
2 months 1 week ago
2 months 1 week ago
2 months 1 week ago
2 months 1 week ago
2 months 1 week ago
Published By: RAJEEBAN 11 AUG, 2025 | 12:07 PM ஹமாஸ் அமைப்பு பாலஸ்தீன அரசின் நிர்வாகத்தில் பங்கேற்ககூடாது என்ற நிபந்தனையுடன் ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் எதிர்கால அமர்வில் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கவுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் இதனை உறுதி செய்துள்ளதுடன் இரண்டு தேசக்கொள்கை மத்திய கிழக்கில் வன்முறையை நிறுத்துவதற்கு மனித குலத்திற்கான சிறந்த நம்பிக்கை என தெரிவித்துள்ளார். பாலஸ்தீன இஸ்ரேலிய தேசங்களை உருவாக்குவதற்கான 181 வது தீர்மானத்திற்கு ஆதரவாக முதலில் கையை உயர்த்திய நாடு அவுஸ்திரேலியா என அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார். 77வருடங்களின் பின்னர் இந்த தீர்மானம் குறித்து சில தரப்பினர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்காக உலகத்தினால் இனிமேலும் காத்திருக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். இராணுவகளைவு, பொதுத்தேர்தல்களை நடத்துதல், இஸ்ரேலின் இருப்பை அங்கீகரித்தல் போன்ற வாக்குறுதிகளை பாலஸ்தீன அதிகார சபை வழங்கியுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் உள்ள யூதசமூகத்தினர் உடனடியாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த முடிவை கண்டித்துள்ளனர், பாலியல் வன்முறை மற்றும் கொலைகளில் ஈடுபட்டவர்களிற்கு தொழில்கட்சி அரசாங்கம் வெகுமதி வழங்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/222300
2 months 1 week ago
11 AUG, 2025 | 11:22 AM காசா நகரத்தின் அல்சிபா மருத்துவமனைக்கு அருகில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அல்ஜசீராவின் ஐந்து ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மருத்துவமனையின் முன்வாயில் தாக்கப்பட்டபோது அந்த பகுதியில் கூடாரத்திலிருந்த அனஸ் அல்-ஷரீப் மற்றும் முகமது க்ரீகே, கேமராமேன்கள் இப்ராஹிம் ஜாஹர், முகமது நௌஃபல் மற்றும் மோமன் அலிவாஆகியோர் கொல்லப்பட்டனர் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது. இந்த "இலக்கு வைக்கப்பட்ட படுகொலை" ஊடக சுதந்திரத்தின் மீதான மற்றுமொரு அப்பட்டமான மற்றும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதல் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டனர் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/222297
2 months 1 week ago
ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் 20இற்கு முன்னர் வெளிப்படும் - பரீட்சைகள் திணைக்களம் Published By: VISHNU 11 AUG, 2025 | 02:04 AM (இராஜதுரை ஹஷான்) ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் செம்டெம்பர் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும். விடைத்தாள் திருத்தும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (10) முதல் ஆரம்பிக்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சை 2025.11.10 ஆம் திகதி முதல் 2025.12.05 ஆம் திகதி வரையும், 2025 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை 2026.02.17 ஆம் திகதி முதல் 2026.02.26 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார். இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை திட்டமிட்ட வகையில் சிறந்த முறையில் நிறைவடைந்துள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிகளை இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கவுள்ளோம். இதற்கமைய பரீட்சை பெறுபேறுகள் 2025.09.20 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும். 2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலவகாசம் நாளையுடன் (12) நிறைவடைகிறது.ஆகவே தாமதமில்லாமல் விண்ணப்பிக்குமாறு விண்ணப்பதாரிகளிடம் கேட்டுக்கொள்கிறோம். 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுதராதர உயர்தரப் பரீட்சை 2025.11.10 ஆம் திகதி முதல் 2025.12.05 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் 2025 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை 2026.02.17 ஆம் திகதி முதல் 2026.02.26 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/222284
2 months 1 week ago
Published By: VISHNU 10 AUG, 2025 | 10:50 PM (இராஜதுரை ஹஷான்) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் தொடர்ச்சியாக குடிக்கொண்டுள்ளமை அதனால் ஏற்படும் பாதிப்பை மிக வன்மையாக கண்டிக்கிறோம். இராணுவ பிரசன்னத்துக்கு பாரியதொரு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(15) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஹர்த்தாலினால் முழுமையாக முடங்க வேண்டும். எமது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் அநீதிகளை கருத்திற் கொண்டு வர்த்தகர்கள் அன்றைய தினம் கடையடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். முத்தையன்கட்டு இளைஞன் கொலை வன்மையாக கண்டித்தக்கது. பொலிஸார் எவ்வித தலையீடுகளுமின்றி முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இராணுவத்தினர் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுகிறார்கள். செம்மணி இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு எனவும் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (10) ஊடக சந்திப்பொன்றை நடத்தி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் சனிக்கிழமை (09) அதிகாலை இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 2025.08.08 ஆம் திகதியன்று நான்கு அல்லது ஐந்து பேர் முல்லைத்தீவு இராணுவ முகாமுக்கு இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். நால்வர் முகாமில் இருந்து தப்பித்துச் சென்றுள்ளார்கள். ஒருவர் காணாமல் போனதாகவும் குறிப்பிடப்பட்டு, காணாமல் போனவரின் உடல் தான் குளத்தில் இருந்து பின்னர் மீட்கப்பட்டுள்ளது. முகாமுக்குள் வைத்து இராணுவத்தினர் தம்மை மிக மோசமாக தாக்கியதாக தப்பித்து வந்தவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இராணுவத்தினரால் தாக்கப்பட்டு அடித்துக் கொல்லப்பட்ட இளைஞரின் சடலம் குளத்தில் வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் உடன் விசாரணை செய்யப்பட வேண்டும். பொறுப்பானவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தோம். இவ்வாறான நிலையில் நேற்று முன்தினம் மாலை முல்லைத்தீவு பொலிஸாரினால் ஒருசில இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதில் மூவர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் எவ்வித தலையீடுகளுமின்றி முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். பிரதான விடயம் யாதெனில் ஒரு சம்பவம் இடம்பெற்றதன் பின்னர் அது தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொல்லுவது பிரயோசனமற்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் அப்பிரதேச மக்களுக்கு எதிராக செயற்படுகிறார்கள். மக்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விடுகிறார்கள். இதற்கு செம்மணி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சித்துப்பாத்தி செம்மணி பகுதியில் குறுகிய காலத்துக்குள் 147 இற்கும் அதிகமான மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. பல வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்கள் என்பது தற்போது தெரியவருகிறது. இவ்வாறான பின்னணியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் தொடர்ச்சியாக குடிக்கொண்டுள்ளதாகலும் அதனால் ஏற்படும் பாதிப்பை மிக வன்மையாக கண்டிக்கிறோம். அதேவேளை இராணுவ பிரசன்னத்துக்கு பாரியதொரு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் முழுமையான ஹர்த்தாலில் ஈடுபடுமாறு சகல தரப்பினரிடமும் கோருகிறோம். எமது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் அநீதிகளை கருத்திற் கொண்டு வர்த்தகர்கள் அன்றைய தினம் கடையடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். சகல நடவடிக்கைகளையும் கைவிட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுமையாக முடங்க வேண்டும். இதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் கோருகிறோம். ஏனைய அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்கள், மக்கள் அமைப்புக்கள், வர்த்தகர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன் என்றார். https://www.virakesari.lk/article/222278
2 months 1 week ago
இராணுவத்தினரின் அடக்குமுறை முத்து ஐயன்கட்டு குளத்தடி சம்பவம் ஊடாக வெளிப்பட்டுள்ளது - கோமகன் சுட்டிக்காட்டு 10 AUG, 2025 | 05:25 PM முத்து ஐயன்கட்டு குளப்பகுதியில் இடம்பெற்ற படுகொலை மூலம் மீண்டும் இராணுவத்தினரின் அராஜகம் வெளிபட்டிருப்பதாக குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயல்பாட்டாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (10) யாழ்ப்பாணம் - அராலியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர் தாயகப் பகுதிகளில் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. யுத்த காலத்தில் எவ்வாறு இராணுவ மயமாக்கப்பட்டிருந்ததோ அதே இராணுவ மயமாக்கல் தொடர்ச்சியாக தாயக பிரதேசங்களில் நிலவுகிறது. தென்பகுதியில் இவ்வாறான இராணுவ எண்ணிக்கையோ அல்லது இராணுவ செயல்பாடுகளோ காணப்படுவதில்லை. ஆனால் எமது பிரதேசங்களிலேயே இது காணப்படுகின்றது. எனவே உடனடியாக இந்த இராணுவமயமாக்கலை நிறுத்த வேண்டும். தமிழர் தாயகங்களில் உள்ள இராணுவத்தினரை தென்பகுதிகளுக்கு அனுப்பினால் தமிழர் தாயகங்களில் உள்ள இராணுவ மயமாக்கலை குறைக்கலாம். மீண்டும் இராணுவத்தினருடைய அடக்குமுறையானது முத்து ஐயன்கட்டு குளத்தடியில் மேற்கொள்ளப்பட்ட குடும்பஸ்தரின் படுகொலை மூலம் வெளிப்பட்டு நிற்கின்றது. எனவே இராணுவத்தினரின் இவ்வாறான அராஜகங்கள் உடனடியாக கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/222262
2 months 1 week ago
11 AUG, 2025 | 09:40 AM யாழ்ப்பாணம் - கண்டி ஏ9 வீதியில், கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஒருவர் அமர்ந்திருந்தபோது, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது, உயிரிழந்தவர் மிருசுவில் கரம்பஹம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிள் தனது வாகனத்தின் மீது மோதுவதைத் தடுக்க டிப்பர் வாகன சாரதி பிரேக் போட்டபோது, அதே திசையில் இருந்து வந்த கூலர் லொரியானது டிப்பர் வாகனத்தின் பின்புறத்தில் மோதியுள்ளது. அதன் தாக்கத்தில் டிப்பர் வாகனம், நிருத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதோடு, கூலர் லொறி எதிரே வந்த கார் ஒன்றுடன் மோதியுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் கடுமையாக காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். அத்தோடு, டிப்பர் வாகன சாரதி, கூலர் லொரி வாகன சாரதி, வாகனத்தின் ஓட்டுநர், காரின் சாரதி மற்றும் அவரது மகன் ஆகியோர் காயமடைந்து யாழ். வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/222289
Checked
Tue, 10/21/2025 - 19:08
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed