புதிய பதிவுகள்2
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
தாய் சொல்லைத் தட்டாதே
நூற்றுக்கு நூறு உண்மைதான் ........ எனக்கும் எங்கேயோ இடிக்குது . ....... ! 😇
மன்னாரின் கனிய மணலகழ்வு...எங்கள் மக்களைச் சூழவுள்ள பேராபத்து.-நாகமுத்து பிரதீபராஜா
Published By: RAJEEBAN 09 AUG, 2025 | 12:38 PM மன்னார் மாவட்டம் அண்மைய நாட்களில் பேசு பொருளாக மாறி இருக்கின்றது. மன்னாரில் மேற்கொள்ள இருக்கின்ற பல்வேறு செயற்பாடுகள் மன்னார் மக்கள் மத்தியில் கொதிநிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. ஏற்கனவே சில பகுதிகளில் அமைக்கப்பட்டு மீளவும் சில இடங்களில் அமைக்கப்பட இருக்கின்ற காற்றாலை மின்சார திட்டமும் எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருக்கின்ற கனியமணல் அகழ்வுச் செயற்பாடும் மன்னார் மாவட்ட மக்களிடையே மிகப்பெரிய பீதியை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கையினுடைய ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடுகின்ற பொழுது மன்னார் தீவு தனித்துவமான புவியியல் அமைப்பை கொண்டிருக்கின்ற பிரதேசமாகும். இதிகாச அடிப்படையில் இராமாயணத்தில் கூறப்படுகின்ற ராமர் பாலத்தினுடைய தொடர்ச்சியாக மன்னார் தீவு காணப்படுகின்ற அதே வேளை இராமர் பாலத்தில் ஊடாக இலங்கைக்கு வந்த இராம சேனை மன்னார் தீவினூடாகவே முதன் முதலில் இலங்கைக்கு வந்தது இந்துக்களிடையே உள்ள மிகப்பெரிய நம்பிக்கையாகும். புவியியல் அடிப்படையில் மிகவும் தனித்துவமான அமைவிடத்தினை மன்னார் தீவு கொண்டிருக்கின்றது. இந்தியாவிற்கு மிக அண்மித்து இலங்கையில் உள்ள பகுதியாக மன்னார் காணப்படுகின்றது. மன்னார் தீவு அமைந்திருக்கின்ற புவியியல் மற்றும் புவிச்சரிதவியல் நிலைமைகள் என்பது மிகவும் சிறப்பு தன்மை வாய்ந்தது. மன்னார் தீவினுடைய தாய்ப்பாறை கடல் மட்டத்திலிருந்து மிக ஆழத்தில் காணப்படுகின்றது. இந்த தாய்ப்பாறை அமைந்துள்ள புவிச்சரிதவியலை காவேரி வடிநிலம் (C1) என அழைக்கப்படும். ஆனால் இதன் தடிப்பு இதனைச் சூழ உள்ள பல பகுதிகளுடன் ஒப்பிடும்போது குறைவாகும். இது 12- 35 கி.மீ. தடிப்பிலேயே காணப்படுகின்றது. இதற்கு மேலாக மயோசின் காலச்சுண்ணக்கற் படிவகள் காணப்படுகின்றன. இதற்கு மேல் அண்மைக்கால மணற் படிவுகள் உள்ளன. இவை அலைகளால் கொண்டு வந்து படிய விடப்பட்டுள்ளன. இவ்வாறு கொண்டு வரப்பட்டு படிய விடப்பட்ட மணல் படிவுகளே இன்று மன்னார் மாவட்டத்தின் இருப்பிற்கே சவால் விடுகின்ற அளவுக்கு மாறியுள்ளது. மன்னாரில் இயல்பாகவே கடலலைகளினால் கொண்டுவரப்பட்டு படிய விடப்பட்டிருக்கின்ற இல்மனைற் மணற்படிவுகள் பற்றிய ஆய்வுகள் 2004ம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் கூட 2009 ஆம் ஆண்டிலிருந்து அதாவது குறிப்பாக யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அதாவது 2009 இல் இருந்து 2014 வரையிலான காலப்பகுதியிலேயே மிக ஆழமான ஆராய்ச்சிகள் ஊடாக மன்னார் மாவட்டத்தில் பொருளாதார பெறுமதி மிக்க இல்மனைற் படிவுகள் இருப்பது அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. இந்த இல்மனைற் படிவுகள் இலங்கையின் பல பகுதிகளில் காணப்பட்டாலும் மொத்த பார உலோகங்களின் சதவீதம் கூடிய, சுத்திகரிப்பு செலவு குறைந்த குறிப்பாக இல்மனைற் செறிவு கூடிய கனிய மணற்படிவுகள், மிகப் பெரிய அளவில் மன்னாரில் அமைவு பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. தென்னாசியாவில் மிகப்பெரிய அளவிலான செறிவு மிக்க இல்மனைற் படிவுகளுடன் கூடிய மணற்படிவுகள் மன்னரில் அமைவு பெற்றுள்ளது. பொருளாதார அடிப்படையில் மிக பெறுமதியான மணற்படிவுகள் மன்னாரில் உள்ளமை பெருமையும் மகிழ்ச்சியும் தரக்கூடியது. ஆனால் மறு வகையில் மன்னாரின் அழிவுக்கும் அதுவே காரணமாக அமையக்கூடும் என்பது துன்பமானது. மன்னாரில் காணப்படும் கனிய மணலில் Ilmenite (இல்மனைற், Leucoxene: (லியூகோக்சீன்), Zirconium: (சிர்க்கோனியம்), Rutile (ரூடைல்),Titanium oxide(டைட்டானியம் ஒக்சைடு),Granite (கருங்கல்),Sillimanite (சிலிமனைட்) மற்றும் Orthoclase(ஓர்த்தோகிளாஸ்) போன்ற கனிமங்கள் உள்ளன. அதனால் தான் மன்னாரில் உள்ள கனிய மணல் பொருளாதார பெறுமதிமிக்கதாக உள்ளது. மன்னார் தீவு 26 கிலோ மீற்றர் நீளமும் 6 கிலோமீற்றர் அகலமும் கொண்ட 140 சதுர கிலோமீற்றர் பரப்பைக் கொண்ட ஒரு தீவாகும். இந்த தீவினுடைய சராசரி உயரமாக 7.8 மீற்றர் காணப்படுகின்றது. இருந்தாலும் இந்த சராசரி உயரம் என்பது எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியானதாக இல்லை. சில பிரதேசங்களில் மிகக் குறைவான உயரமும் கொண்டதாக அதாவது கடல் மட்டத்தை விட உயரம் குறைந்ததாகவே காணப்படுகின்றது. தாழ்வுப்பாடு எழுத்தூர், சவுத் பார், தோட்ட வெளி, எருக்கலம்பிட்டி, கொன்னையன் குடியிருப்பு, தாராபுரம், செல்வா நகர் போன்ற பிரதேசங்களின் சராசரி உயரம் கடல் மட்டத்தை விட குறைவாக அல்லது அதற்கு அண்மித்ததாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை சில பிரதேசங்களில் கடல் மட்டத்தை விட 12 மீட்டர் உயரம் கொண்டதாகவும் காணப்படுகின்றது. மிக சிறப்பான பொருளாதார பெறுமதிமிக்க இந்த இல்மனைற் மணல் அகழ்வினை மேற்கொள்வதற்காக இலங்கையில் ஐந்து நிறுவனங்கள்( உள்ளூர் நிறுவனங்களின் பெயரில் வெளிநாட்டு நிறுவனங்கள்) விண்ணப்பித்து ஐந்து நிறுவனங்களுக்குமே மன்னார் தீவின் கனியமணல் அகழ்வுக்கான அனுமதியினை கடந்த கால அரசாங்கங்களின் ஆட்சிக் காலத்தில் தேசிய கனிய வளங்கள் ஆய்வு மற்றும் மற்றும் சுரங்கமறுத்தல் பிரிவு (NGSMB) அனுமதியை வழங்கி இருக்கின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த அனுமதி தொடர்பாக மன்னாரில் அமைந்துள்ள தேசிய கனிய வளங்கள் மற்றும் சுரங்கமறுத்தல் பிராந்திய காரியலத்திலிருந்து ஒப்புக்காகவேனும் தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை. இந்த அனுமதி பெற்ற நிறுவனங்களில் நிறுவனங்களில் கில்சித் எக்ஸ்ப்ளோரேஷன் (Kilsythe Exploration) (செப்டம்பர் 2015 இல் 1 அனுமதிப்பத்திரம்), ஹேமர்ஸ்மித் சிலோன் (Hammersmith Ceylon)(செப்டம்பர் 2015 இல் 2 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன), சுப்ரீம் சொல்யூஷன் (Supreme Solution) (நவம்பர் 2015 இல் 2 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன), சனூர் மினரல்ஸ் (Sanur Minerals) (செப்டம்பர் 2015 இல் 2 உரிமங்கள் வழங்கப்பட்டன) மற்றும் ஓரியன் மினரல்ஸ் (Orion Minerals) (ஜூலை 2015 இல் 2 உரிமங்கள் வழங்கப்பட்டன) ஆகியவை அடங்கும். அனுமதி வழங்கப்பட்ட இந்த ஐந்து நிறுவனங்களில் மூன்று நிறுவனங்கள் மணல் அகழ்வுக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்தி வருகின்றன. அவர்கள் இந்த கனிய மணலை அகழ்ந்து, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, யப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவுள்ளன. மன்னாரின் கனிய மணல் அகழ்விற்காக விண்ணப்பித்திருக்கின்ற அனைத்து நிறுவனங்களுமே கடல் மட்டத்திலிருந்து 12 மீற்றர் ஆழம் வரைக்கும் மணல் அகழ்வை மேற்கொள்ளவுள்ளதாகவும் அகழப்பட்ட மணலில் கனிமங்கள் மட்டும் தனித்து பிரித்தெடுக்கப்பட்டு பின்னர் மிஞ்சிய மணல்கள் மீண்டும் அகழப்பட்ட இடத்திலே கொட்டப்படும் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆனால் மன்னார் தீவினுடைய சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 7.8 மீற்றர். ஆனால் 12 மீற்றர் அகழப்பட்டால் அது அகழப்படும் இடம் முழுவதும் கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 10 அடி ஆழத்தில் தோண்டியதற்கு சமமாகவே அமையும். அகழ்வுக்காக முன்மொழியப்பட்ட மூன்று பிரதானமான இடங்களிலும் பல சதுர கிலோமீற்றர் பரப்பிற்கு 10 அடி ஆழத்திற்கு தோண்டியதற்கு சமனாகும். இந்த 10 அடி ஆழத்திற்கும் கடல்நீர் உள்வந்து நிறைந்து விடும். இதனை சாதாரண மக்களும் விளங்கும் வகையில் சொல்வதானால் மணல் அகழப்படும் இடங்கள் முழுவதும் 10 அடி ஆழ கடலாக மாறிவிடும். பொதுவாக ஒரு இடத்தில் இயற்கையாக படிந்த மணலை அல்லது மண்ணை அகழ்ந்து அதே மண்/ மணல் முழுவதையும் மீண்டும் அதே இடத்தில் கொட்டினால் கூட அந்த பிரதேசம் ஒரு குறிப்பிட்ட நாட்களின் பின்னர் பள்ளமாகவே மாறிவிடும். ஆகவே அனுமதி பெற்ற நிறுவனங்கள் குறிப்பிடுவது போல அந்த பிரதேசத்தில் அகழப்பட்ட மண்ணைக் கொண்டே அந்த அகழ்வுக் குழி மூடப்படும் என்பது மக்களை ஏமாற்றும் தந்திரம். சில நாட்களில் அந்த இடம் மீண்டும் பள்ளமாகும். இந்த கனிய மணல் அகழ்விற்காக அனுமதி பெற்ற நிறுவனங்கள் அகழ்வுச் செயற்பாட்டுக்காக பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன. பல வழிகளிலும் முயன்று வருகின்றனர். இந்த நிறுவனங்களில் சில உள்ளூர் மக்களிடம் காணிகளைக் கொள்வனவும் செய்துள்ளார்கள். உள்ளூரின் சந்தைப்பெறுமதியை விட பல மடங்கு விலை கொடுத்து காணிகளை வாங்கியுள்ளார்கள். எடுத்துக்காட்டாக 10000/- பெறுமதியான காணி ஒன்றை அந்த நிறுவனங்கள் 100000/- கொடுத்து வாங்குகிறார்கள் எனில் அகழ்விற்கு பின்னாலுள்ள பொருளாதாரப் பெறுமதி எத்தகையது என்பது நோக்கற்பாலது. மன்னார் தீவின் கனிய மணல் அகழ்வினை மேற்கொள்வதற்கு பல மட்டங்களில், பல தரப்புக்களினாலும், பல வகைகளான தந்திரங்களும் பாவிக்கப்படும் என அறியக் கிடைக்கின்றது. ஆனால் மன்னார் தீவில் கனிய மணலகழ்வு என்பது; 1. மன்னார் தீவு முழுவதும் 10 அடி பள்ளமாக மாறி கடல் நீரால் நிரப்பப்படும். 2. அகழ்வுக்காக மன்னார் தீவிலுள்ள பனை வளங்களில் குறைந்து 10000 பனைகளாவது அழிக்கப்படும். 3. தரைக்கீழ் நீர்வளம் முழுமையாக பாதிக்கப்படும். 4. மன்னார் தீவின் உருவவியல் மாறிவிடும். எனவே என் அன்புக்குரிய மன்னார் உறவுகளே............ நீங்கள் இப்பொழுது விழித்துக் கொள்ளாவிட்டால் இனி எப்போதும் மன்னார் தீவைக் காப்பற்ற முடியாது. அகழ்வை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு மன்னார் ஒரு கனிய மணல் அகழ்வு மையம். ஆனால் எங்களுக்கு மன்னார் எங்கள் தாய் நிலம். அன்புக்குரிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்களே, இது மன்னார் தீவுக்கு மட்டுமேயுரித்தான பிரச்சினையல்ல. எங்கள் எல்லோருக்கும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினை. https://www.virakesari.lk/article/222153
தாய் சொல்லைத் தட்டாதே
எனக்குப் பதினைந்து வயது இருக்கும்போது, நான் கல்லூரியில் கணிதம் / கணினியியல் / அறிவியல் படிக்க வேண்டும் என என் அம்மா ஆசைப்பட்டார். எனக்கு இலக்கியத்தைத் தவிர எதிலும் நாட்டமில்லை. கல்வி மகிழ்ச்சியானதாக, என் இலக்குடன் தொடர்புள்ளதாக இருக்க வேண்டும் என நினைத்தேன். அம்மா என்னென்னமோ காரணம் சொல்லி என்னை ஏற்க வைக்க முயன்றார். படிக்கவே வைக்க மாட்டேன் என்று மிரட்டினார். வயதுக்கே உரிய பிடிவாதத்தால் நான் ஏற்கவில்லை. கல்லூரியில் இலக்கியம் கற்றேன். ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு கணத்தையும் ரசித்து பங்குபெற்றேன். இளங்கலையிலும், முதுகலையிலும் முதலாவது மதிப்பெண் பெற்றேன். தங்கப்பதக்கம் வென்றேன். அப்போது எனக்கு நான் எடுத்தது மிகச்சிறந்த முடிவு எனத் தோன்றியது. அதன்பிறகு நான் ஆய்வுக் கட்டுரைகளைத் திருத்துவது, தொழில்நுட்பக் கட்டுரைகளை எழுதுவது போன்ற பணிகளைச் செய்தபோதும், கல்லூரி ஆசிரியர் ஆனபோதும் என் முடிவு மிகவும் சரியானது என்றே நினைத்தேன் - ஏனென்றால் மொழிசார்ந்த பணிகள் எவையும் சிரமமாக இருக்கவில்லை. நான் ஏற்கனவே கற்றிருந்தவையே போதுமானதாக இருந்தது - புதிதாக மெனெக்கெட்டுக் கற்று என்னை வேலையிடத்தில் நிரூபிக்கத் தேவையிருக்கவில்லை. சுலபமாக வேலையில் ஜொலிக்கவும் நற்பெயர் வாங்கவும் முடிந்தது. முனைவர் பட்ட ஆய்வு கூட ஒரு புத்தகம் எழுதுவதைப் போலத்தான் இருந்தது. இப்படி என் பட்டப்படிப்புக்குப் பின் முதல் 10-15 ஆண்டுகள் ‘துளிகூட வியர்க்காமல்’ கழிந்தது. நான் மென்பொருளோ மருத்துவமோ கற்றிருந்தால் பிடிக்காத வேலையைச் செய்து மனம் ஒப்பாமல் நாளைக் கழித்து நிம்மதியற்று இருந்திருப்பேன் என ஒவ்வொரு நாளும் எனக்குச் சொல்லிக்கொண்டேன். ஆனால் கடந்த அரைப்பத்தாண்டுகளில் கல்விப்புலத்தில் தனியார்மயமாக்கல் உச்சம் பெற்றது; ஆசிரியப் பணியென்றால் ஆவணமாக்கல், தேர்வுத்தாள் திருத்துதல், மீண்டும் மீண்டும் தோல்வியுறும் மாணவர்களுக்கு மீண்டும் மீண்டும் மதிப்பெண்களை அளித்தல், சிவாலய ஓட்டம் போலத் தொடரும் எண்ணற்ற கூட்டங்களில் கலந்துகொள்ளுதல் மட்டுமே, கல்வி கற்பித்தம் கட்டக்கடைசியாகச் செய்ய வேண்டியது எனும் நம்பிக்கை வேரூன்றிவிட்டது. குமாஸ்தா பணி! பெரும்பாலான தனியார் உயர்கல்வி ஆசிரியர்கள் கற்பித்தலுக்கும் ஆய்வுக்கும் தொடர்பற்ற பணிகளிலே 90% நேரத்தைச் செலவிட வேண்டிய அழுத்தம் உள்ளது (பள்ளி ஆசிரியர்களின் நிலையும் இதுதான்). இன்னொரு பிரச்சினை ஊதியமும் வேலையுயர்வும் - ஒரு கட்டத்திற்கு மேல் இரண்டுமே சாத்தியமில்லை என்றாகிறது. தொழில்நுட்பக் கல்வியில் இளங்கலைக் கற்றவருக்கு உள்ள வாய்ப்புகளில் 1% கூட முனைவர் பட்டம் முடித்தவருக்கு இருக்காது. ஒரு பள்ளிக்கும் இன்னொரு பள்ளிக்கும், ஒரு கல்லூரிக்கும் இன்னொரு கல்லூரிக்கும் வித்தியாசம் இல்லாதபடி கல்வி நிறுவன நிர்வாகமும் அதன் மொழியும் நகலெடுக்கப்படுகிறது. எங்கு போனாலும் ஒரே இடத்தில் இருப்பதாகவே தோன்றும். இப்போதுதான் எனக்கு வேலையென்பது விரும்பிச் செய்வது அல்ல, சம்பாதிக்கவும் வளரவும் செய்வது எனும் தெளிவு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் நாம் என்னதான் விரும்பிச் செய்தாலும் சூழல் மாறிவிட்டால் டைட்டானிக் கப்பல் மூழ்கும்போது இரண்டு இசைக்கலைஞர்கள் வாசித்துக்கொண்டிருப்பார்களே அப்படித்தான் இருக்க வேண்டும். மரியாதை, அங்கீகாரம், கண்ணியம் எதுவும் கிடைக்காது. மேலும் கணிதமோ மென்பொருளோ கொஞ்சம் பிரயத்தனம் பண்ணியிருந்தால் என்னால் கற்றிருக்க முடியும், நான் பெரிய போராட்டமின்றி படிப்பை முடித்து நல்லவேலையில் அமர்ந்திருக்க முடியும் என இப்போது தோன்றுகிறது. அப்போதிருந்த பிடிவாதம் என் மனதை மூடிவிட்டிருந்ததால் நிறைய விசயங்கள் புரியவில்லை. என் தொழில்வாழ்வு ரெண்டாயிரத்தில் ஆரம்பித்திருந்தால் பல்வேறு வாய்ப்புகளைப் பெற்றிருப்பேன், பொருள் வாழ்வில் சிரமங்கள் இன்றி இருந்திருப்பேன். என்னுடன் முதுகலையில் ஒரு நண்பர் படித்தார். அவர் இளங்கலை ஆங்கில இலக்கியம் முடித்துவிட்டு பி.பி.ஓவில் சில ஆண்டுகள் பணியாற்றிவிட்டு முதுகலை படிக்க எங்களுடன் இணைந்தார். அவர் படிப்பில் சுத்தமாக ஆர்வம் காட்ட மாட்டார். நான் ஒருநாளில் 18 மணிநேரமும் படித்துக்கொண்டிருப்பேன். அவர் ஜெயிக்கும் அளவுக்கு மட்டுமே படித்து பட்டம் பெற்றபின்னர் ஒரு பிரசித்தமான வங்கியில் சேர்ந்தார். நான் அவரைப் படிப்பில் ஆர்வமற்ற தெளிவற்றவர் என நினைத்தேன். ஆனால் அவர் இப்போது அந்த வங்கியில் வி.பியாக இருக்கிறார். இன்னொரு சகமாணவர் பிரமாதமான கிரிக்கெட் வீரர். அவரும் படிப்பில் சரியாக கவனம் செலுத்த மாட்டார். முழுநேரமும் மைதானத்திலே இருப்பார். நான் படிப்பை முடித்து வேலையில் சேர்ந்தபோது அவர் எந்த கிரிக்கெட் கிளப்பிலும் நிலைக்க முடியாமல் ஊருக்குப் போய்விட்டதாக நண்பர்கள் சொன்னார்கள். வருத்தமாக இருந்தது. அதன்பிறகு அவர் என்ன செய்தார் என்பதை நான் சில ஆண்டுகளுக்குப் பின்பே தெரிந்துகொண்டேன் - அவர் கடற்பொறியியல் படிக்க அமெரிக்கா சென்றார். அப்படியே அங்கு கப்பற்படையில் வேலை பெற்று, பின்னர் தனியார் கப்பல்களில் சேர்ந்து பணிபுரிந்து பல நாடுகளில் சுற்றித்திரிந்து அமெரிக்கப் பெண்ணொருத்தியை மணமுடித்து செட்டில் ஆகிவிட்டார். இரண்டு பேரும் என் புரிதலில் ஆரம்பத்தில் தோல்வியுற்றவர்கள், ஆனால் நிஜத்தில் அவர்களே வென்றவர்கள். நாம் தீவிரமான நேசிக்கும் ஒன்றையோ திறமையுள்ள ஒன்றையோ அல்ல, சம்பாதிக்க வாய்ப்பைத் தரும் ஒன்றையே கற்றுக்கொள்ள வேண்டும், வேலையாக செய்ய வேண்டும் என்று இளமையிலேயே புரிந்துகொண்டவர்கள். இலக்கியம் கற்றாலும் அதன் பொறியில் சிக்கி அழியாதவர்கள். மேலும் இரு நண்பர்களையும் குறிப்பிட வேண்டும். அவர்களும் என்னைப் போலத்தான் - வகுப்பில் ஜொலித்தவர்கள், ஆனால் பின்னர் சாதாரண வேலைகளில் சிக்கி அலைகழிபவர்கள். அன்று என்னிடம் கேட்டிருந்தால் அவர்கள் மிக உயர்ந்த நிலையை எட்டுவார்கள் என்று சொல்லியிருப்பேன். ஆனால் அப்படி நடக்கவில்லை. அதுவே எதார்த்தம். அதனாலே passionஐப் பின் தொடர்ந்துப் போகப் போகிறேன் என்று சொல்லும் இளைஞர்களை நான் இப்போதெல்லாம் ஊக்கப்படுத்துவதில்லை. நமது கனவைப் பின் தொடர்வது அல்ல அக்கனவு நம்மை எங்கு கொண்டு போய் சேர்க்கும் என்பதே முக்கியம். போகாத வழியைக் கனவு காண்பதால் பயனில்லை. என் அம்மா அதிகமாகப் படித்தவர் அல்லர். நான் என் பதின்வயதை எட்டியபோது நான் அவரைவிட பலமடங்கு அதிகமாகக் கற்றிருந்தேன். அதனாலே அவரால் என்னிடம் வாதிட்டு என்னை ஏற்றுக்கொள்ள வைக்க இயலவில்லை. என்னளவுக்கு ஆயிரக்கணக்கான நூல்களை வாசிக்காத ஒருவருடைய சொல்லை நான் ஏன் கேட்க வேண்டும் என்னுடைய ஈகோவும் அவரைப் பொருட்படுத்த என்னை அனுமதிக்கவில்லை. என்ன வேண்டுமானாலும் பண்ணிக் கொள் எனும் மனநிலை கொண்டவர் என் அப்பா. இப்போதுள்ள முதிர்ச்சி அப்போதிருந்தால் அதிகம் படிக்காத என் அம்மா சொல்வதையே கேட்டிருப்பேன். கொஞ்சம் மனம் வைத்துப் படித்தால் சுலபத்தில் எந்த பட்டப்படிப்பையும் என்னால் முடித்திருக்கவும் எந்த வேலையிலும் சிறந்திருக்க முடியும். முனைவர் பட்டம் முடித்து ஆசிரியராகி - ஆசிரியப் பணிக்குச் சம்மந்தமில்லாமல் - குமாஸ்தா வேலையைப் பன்ணிக்கொண்டிருக்க மாட்டேன். எந்த சக-ஆசிரியரிடம் பேசினாலும் அவர்களும் என்னைப் போன்றே புலம்புவதைக் கேட்டுக்கொண்டிருக்க மாட்டேன். படிப்பு, வேலை விசயத்தில் மட்டுமல்ல உறவுகள் விசயத்திலும்கூட என் அம்மா தந்த அறிவுரைகள் எவ்வளவு சிறப்பானவை என்பதையும் நான் தாமதமாகவே ஒவ்வொரு முறையும் புரிந்துகொள்கிறேன். தாய் சொல்லைத் தட்டாதே! Posted 14 hours ago by ஆர். அபிலாஷ் https://thiruttusavi.blogspot.com/2025/08/blog-post_8.html
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தெய்வ மலரோடு வைத்த மனம் நறுமணம் ....... ! 😍
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் .......... ! ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல ஆண் : வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன் பொன்னம்மா சின்னக் கண்ணம்மா ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல பெண் : விவரம் இல்லாமலே பூக்களும் வாசம் வீசுது உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது ஆண் : எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது பெண் : ஓடை நீரோடை இந்த உலகம் அது போல ஆண் : ஓடும் அது ஓடும் இந்தக் காலம் அது போல பெண் : நிலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே ஆண் : ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது நேசம் பிறந்தாலே உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது பெண் : ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது அலையும் அலை போலே அழகெல்லாம் கோலம் போடுது ஆண் : குயிலே குயிலினமே அந்த இசையா கூவுதம்மா பெண் : கிளியே கிளியினமே அதைக் கதையாப் பேசுதம்மா ஆண் : கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான் ........ ! --- தென்றல் வந்து தீண்டும் போது ---
குடியுரிமை இல்லை! சூரியாவின் மேடையில் கண்கலங்கிய ஈழத்து பெண்ணின் சாதனை
உண்மை, சிவாகுமாரவர்களது முயற்சியால் அகரம் நிறுவனம் பல ஏழை மாணவர்களுக்கு உதவி வருகிறது. அவர்களது முயற்சி நீடித்து நிலைக்க வேண்டும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
இஸ்ரேலிற்கான ஆயுத ஏற்றுமதியை நிறுத்தியது ஜேர்மனி
யேர்மனி ஏதோ கிட்லரின் இன அழிப்பை ஆற்றுவதாக எண்ணி, இன்னொரு இனத்தின் அழிவுக்கு உதவுகிறது. அதைவிட யேர்மனியில் ஏற்பட்டுவரும் பொருண்மியத் தாக்கமும், எண்ணிக்கை அளவில் பெருகிவரும் முஸ்லிம்களின் சனத்தொகையால் தமது வாக்குப்பலத்துக்கு ஆபத்தாகிவிட்டால் என்ற அச்சம் போன்ற பல்வேறு காரணியங்களால் இந்த முடிவை எடுத்திருக்கலாம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
இஸ்ரேலிற்கான ஆயத ஏற்றுமதியை நிறுத்தியது ஜேர்மனி
யேர்மனி ஏதோ கிட்லரின் இன அழிப்பை ஆற்றுவதாக எண்ணி, இன்னொரு இனத்தின் அழிவுக்கு உதவுகிறது. அதைவிட யேர்மனியில் ஏற்பட்டுவரும் பொருண்மியத் தாக்கமும், எண்ணிக்கை அளவில் பெருகிவரும் முஸ்லிம்களின் சனத்தொகையால் தமது வாக்குப்பலத்துக்கு ஆபத்தாகிவிட்டால் என்ற அச்சம் போன்ற பல்வேறு காரணியங்களால் இந்த முடிவை எடுத்திருக்கலாம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
காசா நகரை கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்
உலகிலே அமெரிக்காவோ,ரஸ்யாவோ,சீனாவோ, ஐரோப்பாவோ வல்லரசுகளல்ல என்பதை இஸ்ரேல் நிரூபித்து வருகிறதா? மாற்றங்கள் எப்போதும் என்நேரமும் நிகழ்வது. ஆனால், இஸ்ரேலைப் பாதுகாக்கும் உரிமை உண்டென்று உலக நாடுகள் தடவிக் கொடுத்ததன் விளைவாக, அதனைப் பலஸ்தீனர்களை அழிப்பதற்கான முன்மொழிவாக இஸ்ரேல் பயன்படுத்துகிறது. தற்போது உலகம் ஆப்பிழுத்த குரங்கின் நிலைக்கொப்பாகியுள்ளது. அழிவுகரமான ஆயுதங்களை மக்கள்மேல் கொட்டிக் கொடிகட்டிப் பறக்கும் உலக நாடுகள் இருக்கும்வரை போரழிவுகளும் தொடரவே செய்யும். காலத்துக்குக் காலம் இனங்களின் பேரழிவு தொடர்கிறது. முள்ளிவாய்காலில் தமிழின அழிவுக்கு வித்திட்ட உலகுக்கு மனித உரிமை என்று பேசும் தகமை இல்லை. ஐ.நா என்பதெல்லாம் வெற்றுக்காகிதங்களே. ஒரு பயனும் கிடையாது. ஈழத் தமிழினமும் இறுதி நம்பிக்கையாக ஐ.நாவைப் பார்க்கிறது. ஆனால், ஐ.நாவால் வெளித்தெரியும் பலஸ்தீனப் பேரழிவையே தடுக்க முடியவில்லை. வெளியே முழுமையாகத் தெரியாத ஈழத் தமிழினத்தின் இன அழிப்பை எப்படிக் கையாளும்? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
குட்டிக் கதைகள்.
💐💐💐பிரியாத உறவு நம் நட்பு🥰❤🥰 Best Friends For Ever💐💐💐 Dharma Lingam ·ontdeSrposcftmh7654al4ct59 g1m2334uhiiag16t6fn04ci3hai6cafa6 · ஒரு தெருநாயை சிறுத்தைப்புலி ஒன்று வேட்டையாட துரத்தி வந்துள்ளது . அந்த நாய் மக்கள் வசிக்கும் தெருவில் புகுந்து ஒரு வீட்டின் கழிவறைக்குள் சென்றுவிட்டது . பின்னாலே துரத்தி வந்த சிறுத்தைப்புலியும் கழிவறைக்குள் புகுந்து விட , அப்போது வீட்டு உரிமையாளர் சிறுத்தைப்புலியின் வாலைப் பார்த்துவிட்டார் . கழிவறைக் கதவை வெளியே இருந்து பூட்டி விட்டு வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளார் . வனத்துறையினர் வந்து கழிவறை கூரையை தகர்த்து , சிறுத்தைப்புலிக்கு மயக்கமருந்து செலுத்தி அதை மீட்க ஏறத்தாழ 7 மணிநேரம் ஆகியது . அதாவது நாயும் சிறுத்தைப்புலியும் மிகச்சிறிய இடத்தில் ஆறுமணி நேரத்திற்கு மேல் ஒன்றாக இருந்துள்ளன. வேட்டையாட வந்த சிறுத்தைப்புலி நாயை எதுவும் செய்யவில்லை . காரணம் அது தனது சுதந்திரத்தை இழந்து விட்டது. அதனால் ஏற்பட்ட அழுத்தம் . அது உணவு எடுத்து கொள்ளவில்லை( பசி மறந்து போனது) . வனவிலங்குகளுக்கு அது உயிரோடு இருக்கும் போது இழக்கும் கடைசி விசயம் அதன் சுதந்திரம். இப்போது நாம் , மனிதர்கள் . நாம் எடுத்தவுடன் நம் தேவையை பூர்த்தி செய்ய இழக்க நினைக்கும் முதல் விசயம் நம் சுதந்திரம் . வசதியான வாழ்க்கைக்காக விலை உயர்ந்த பொருட்களை வாங்கி கடனில் மூழ்கி அதை அடைக்க பணத்தேவையை தீர்க்க சுதந்திரத்தை இழந்து வேலை . வசதியான/ சொகுசான வாழ்க்கைக்கான விலை சுதந்திரம் . ஒரு உறவு நீடிக்க , அவர்களின் அன்பு வேண்டும் என்று வேறொருவர் நாம் உடுத்தும் உடை வரை தேர்வு செய்ய விட்டுவிடுவோம் . அடுத்தவரின் அன்பு, அக்கறை வாங்க நாம் தரும் விலை சுதந்திரம் . நம் அன்பை புரியவைக்க கூட சில இடங்களில் நம் சுதந்திரத்தை அடகு வைக்கிறோம் . இந்த மாதிரி பல சூழல்களில் நாம் ஒன்றை நிரூபிக்க / பெற நம் சுதந்திரம் தான் மனிதர்கள் தரும் முதல் விலை . ஆனால் சுதந்திரம் மனிதனுக்கு மிகவும் அவசியம். தெளிவான சிந்தனை மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அதுதான் தேவை . நிம்மதி கிடைக்கும். தங்கச்சிறையானாலும் சிறைதான், மூன்று வேளையும் அறுசுவை உணவு என்றாலும் சிறைஉணவு தான். அதனால் எந்த காரணத்திற்காகவும் சுதந்திரத்தை இழக்காதீர்கள்....... !
சிரிக்கவும் சிந்திக்கவும் .
குடியுரிமை இல்லை! சூரியாவின் மேடையில் கண்கலங்கிய ஈழத்து பெண்ணின் சாதனை
ஆதரவற்றோரை ஆதரித்து அவர்க்கு அன்னமும் அளித்து கல்வியும் தந்துதவும் அகரம் பவுண்டேசன் ஞான்றும் ஞாலத்தில் காலங்கள் கடந்தும் வாழியவே ....... ! 🙏
இஸ்ரேலிற்கான ஆயுத ஏற்றுமதியை நிறுத்தியது ஜேர்மனி
பாதி காசாவை காலியாக்கியாச்சுது மீதி காசாவாவது மிஞ்சட்டும் ...... !
இஸ்ரேலிற்கான ஆயத ஏற்றுமதியை நிறுத்தியது ஜேர்மனி
பாதி காசாவை காலியாக்கியாச்சுது மீதி காசாவாவது மிஞ்சட்டும் ...... !
இரசித்த.... புகைப்படங்கள்.
மழைத்துளி போகாத எருமைத் தோலுக்குள் பாசமழை ஊடுருவி நேசம் நிறைந்திடுமே ......... ! ❣️
இஸ்ரேலிற்கான ஆயுத ஏற்றுமதியை நிறுத்தியது ஜேர்மனி
யேர்மனியின் காலம் கடந்த ஞானோதயம்.
இஸ்ரேலிற்கான ஆயத ஏற்றுமதியை நிறுத்தியது ஜேர்மனி
யேர்மனியின் காலம் கடந்த ஞானோதயம்.
இஸ்ரேலிற்கான ஆயுத ஏற்றுமதியை நிறுத்தியது ஜேர்மனி
09 AUG, 2025 | 11:33 AM ஜேர்மனி இஸ்ரேலிற்கான அனைத்து ஆயத ஏற்றுமதியையும் நிறுத்தியுள்ளது. காசா நகரை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி வழங்கியதை தொடர்ந்தே ஜேர்மனி இது குறித்து அறிவித்துள்ளது. இந்த சூழ்நிலைகளின் கீழ் காசா பள்ளத்தாக்கில் எதிர்காலத்தில் பயன்படுத்தக்கூடிய எந்த இராணுவ ஏற்றுமதிக்கும் ஜேர்மனி அனுமதியளிக்காது என ஜேர்மன் சான்சிலர் பிரெட்ரிச் மேர்ஸ் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிற்கு தன்னைபாதுகாப்பதற்கான உரிமையை ஆதரிப்பதாக தெரிவித்துள்ள அவர் ஹமாஸ் தனது பிடியில் உள்ள பணயக்கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்களின் உயிரிழப்புகள் அதிகரிப்பதை இதற்கு மேலும் ஜேர்மனியால் சகித்துக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள ஜேர்மனியின் சான்சிலர் காசா பள்ளத்தாக்கில் மேலும் கடுமையான நடவடிக்கைகளிற்காக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி காரணமாக இந்த இலக்குகள் எப்படி நிறைவேறப்போகின்றன என்பது தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/222147
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed