6 days 11 hours ago
அஞ்சலித் தாக்குதல் தமிழில் சுரணை உள்ள எழுத்தாளர்களின் ஒரே வேண்டுகோள் தாம் இறந்து ஜெயமோகன் அஞ்சலிக் கட்டுரை எழுதும் நிலை வரக்கூடாது என்பதே. ரமேஷுக்கு அவர் எழுதிய அஞ்சலி அப்படியான மாபெரும் அவலம். அதில் ரமேஷின் படைப்பாற்றலைவிட உடல் நோய்மையைப் பற்றியே 99% எழுதியிருக்கிறார் - முழுக்க முழுக்க தன்னிடம் இரந்து பெற்ற ஒரு கலைஞனாகச் சித்தரிக்கிறார். தான் ஒருவருக்கு அளித்த தொண்டைக் கூட அவர் சொல்லலாம். அது அவரது தேர்வு. ஆனால் அந்த அஞ்சலிக் குறிப்பு முழுக்க ரமேஷ் ஜெயமோகனை விட ஒரு படி கீழாகவே வைக்கப்பட்டிருக்கிறார். ஒருவித படிநிலை முழுக்க உள்ளோடுகிறது. இது ஜெயமோகனுடைய மிகப்பெரிய ஆளுவை வழு - அவரால் பிறரை தனக்கு இணையாகக் காணவே முடிவதில்லை. அவர் ரமேஷுக்கு உதவியபின்னர் அவரிடம் "நான் உன் உடலுக்காக நிதியளிக்கவில்லை, உனக்குள் இருக்கும் கலைஞனுக்கே நிதியளிக்கிறேன்" என்றிருக்கிறார். அது ரமேஷை சீற்றமடைய வைக்கிறது. அதில் எந்த ஆச்சிரியமும் இல்லை. நீங்கள் ஒருவரை அப்படி உடலென்றும் கலைஞனென்றும் பிரிக்க இயலாது. அது ஒருவரைக் கடுமையாக அவமதிக்கும் செயல். என்னிடம் யாராவது வந்து "நான் உன் உடலுக்காக, உன் குடலுக்காக, உன் மொட்டைத் தலைக்காக நிதியளிக்கவில்லை, உன் படைப்பாற்றலுக்காகவே தருகிறேன்" என்றால் நான் அவரைச் செருப்பைக் கழற்றி அடிப்பேன். ஏனென்றால் படைப்பாக்கம் நமது உடலின், மனத்தின், ஆளுமையின் நீட்சி. ஒரு கலைஞனாக நாம் பெருமை கொள்கிறோம், ஆனால் வாழும் உடலாகவும் சுயமாகவுமே நாம் நம்மை அடையாளப்படுத்துகிறோம். பின்னது பொருட்படுத்தத்தகாதது என்பது ஒருவரை வாழ்த்துவது அல்ல, தாழ்த்துவது ஆகும். அது ஏனோ ஜெயமோகனுக்கு விளங்குவதில்லை - அவரிடம் ஏதோ தன் உடல், சுயம் குறித்து தாழ்வுணர்ச்சி அடியாழத்தில் இருக்கிறது என நினைக்கிறேன், அதை அமுக்கி வைத்துவிட்டு பிறரிடம் அதைக் காண்கிறார், தன்னைத் தானல்லாமல் ஒரு படைப்பாற்றலாகக் காண்பதைப் போல பிறரையும் பார்க்கிறார் என நினைக்கிறேன். அவர் உணர்ச்சிவயப்பட்டு ரமேஷுக்கு உதவ முடிவெடுத்தது, அதில் திடமாக இருந்தது நல்ல விசயம். ஆனால் அவர் ரமேஷைக் குறித்து தனக்குள் கொண்டுள்ள சித்திரம் அசமத்துவத்தின் மீது உருவானது. அது தொடர்ந்து ரமேஷைக் காயப்படுத்திக் கொண்டே இருந்திருந்திருக்கும் என நினைக்கிறேன். தானம் அளிப்பதை விட சிறப்பானது சமமாக நடத்துவது. கொடுக்கும் போது நாம் தாழ வேண்டும், உயரக் கூடாது. தாழ்வதே மகத்தானது. ஒருவருக்கு கொடுக்கும்போது அது தனக்கு வாய்த்த அதிர்ஷ்டம் என் நினைக்க வேண்டும். ஜெயமோகனுக்கு அது ஒருநாளாவது தன் வாழ்வில் சாத்தியப்பட வேண்டும். ராஜமார்த்தாண்டனுக்கு அவர் எழுதிய அஞ்சலிக் கட்டுரையும் இப்படித்தான் இருந்தது. நோய்வாய்ப்பட்டவர்களை தன் "ஏழாம் உலகம்" நாவலில் வரும் குறைபட்ட உருப்படிகளாக அவர் கருதுவதும், அந்த உருப்படிகளை வைத்து வியாபாரம் செய்யும் பண்டாரமே தானெனெக் கருதுவதுமே அவரது பிரச்சினை. இதுவே பணமும் அரசியல் அல்லது சமூக அதிகாரமும் படைத்தவர்கள் இறந்தால் இவ்வாறு எழுத மாட்டார் - சட்டென கைகூப்பி வணங்கி எழுதுவார். இன்று நான் பார்க்கும் இளைஞர்களில் 90% பல்வேறு நோய்களைத் தாங்கியவர்களே - நடந்தால் மூச்சு வாங்குவோர், ஏகப்பட்ட ஒவ்வாமைகள் கொண்டவர்கள், கொஞ்சம் தூசு பட்டால் தாளாமல் இருமுகிறவர்கள், மூச்சிரைக்கிறவர்கள், சிறுசொல்லுக்கு பதற்றமாகி மயங்கிவிழுவோர். இவர்களையெல்லாம் ஜெயமோகன் பார்த்தால் என்ன சொல்வார் எனப் பயமாக இருக்கிறது. நோயென்பது இன்று இயல்பாகிவிட்டது. ஆரோக்கியம்தான் இன்று இயல்புமீறல். இவர்களிடம் போய் உங்கள் நோயைக் கடந்து வாருங்கள் என்று சொன்னால் கொலைவெறியாகிவிடுவார்கள். ஏனென்றால் தம் உடல் குறித்து அவர்களுக்கு எந்த தாழ்வுணர்ச்சியும் இல்லை. அதை ஒருவர் தம் மீது சுமத்துவதை ஏற்க மாட்டார்கள். ஜெயமோகனே தன்னிடம் வருகிறவர்களிடம் அதையே விதைத்து பெருஞ்ச் சொற்குவியலக்ளாக அறுவடை பண்ணுகிறார். இனிமேல் படைப்பாளிகள் இறப்பதாக முடிவெடுத்தால் ஏதாவது வேற்றுகிரகத்துக்குச் சென்று மறைந்துவிட வேண்டும். அங்கிருந்து இறந்தால் அது பூமிக்கு வர ஒளிக்காலத்தில் பல ஆண்டுகள் ஆகும் என்பதால் ஜெயமோகனின் அஞ்சலியில் இருந்து தப்பித்து விட முடியும். அல்லாவிட்டால் நாம் சாகும் நிலை வரும்போது தலைமறைவாகிவிட வேண்டும். மற்றபடி ஜெயமோகனின் கொரில்லா அஞ்சலித் தாக்குதலில் இருந்து தப்பிக்க எழுத்தாளர்களுக்கு வேறுவழியே இல்லை. நான் ஜெயமோகனைப் படித்து எதிர்வினையாற்றக் கூடாது என்பதை ஒரு தீர்மானமாகவே கடைபிடித்து வந்தேன். ரமேஷுக்கு அவர் எழுதிய அஞ்சலியைப் படித்து என் கட்டுப்பாட்டை இழந்துவிட்டேன். Posted 14 hours ago by ஆர். அபிலாஷ் https://thiruttusavi.blogspot.com/2025/10/blog-post.html
6 days 11 hours ago
Published By: Digital Desk 3 06 Oct, 2025 | 02:28 PM பௌர்ணமி தினமான இன்று திங்கட்கிழமை (06) வானில் சூப்பர் மூன் (Supermoon) தென்படும். இது வழமையாக தென்படும் முழு சந்திரனை விட சுமார் 7 சதவீதம் பெரியதாக தென்படும் என ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனம் (ACCIMT) தெரிவித்துள்ளது. பௌர்ணமி தினங்களில் வழக்கமாக தென்படும் ஏனைய முழு சந்திரன்களுடன் ஒப்பிடும்போது, இன்றிரவு முழு சந்திரன் பெரியதாகவும் பிரகாசமாக தென்பட இருப்பதால் சூப்பர் மூன் என அழைக்கப்படுகிறது. சந்திரன் அதன் நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமிக்கு அருகில் நகரும்போது, சூப்பர் மூன்கள் வருடத்திற்கு பல முறை நிகழ்கின்றன. இந்த நிகழ்வு முழு சந்திரன் மற்றும் பௌர்ணமி ஆகிய இரண்டு கட்டங்களிலும் நிகழலாம் என ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனத்தின் நிபுணர்கள் குறிப்பிட்டனர். கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் வழக்கத்தை விட சற்று அதிக அலை எழுச்சியை சந்திக்க நேரலாம். மேலும், இன்றிரவு பிரகாசமான முழு நிலவுக்கு அருகில் சனி கிரகம் நிலைநிறுத்தப்படுவதைக் காண வானியலாளர்களுக்கு அரிய வாய்ப்பு கிடைக்கக்கூடும். பௌர்ணமி தினத்தைக் குறிக்கும் போது வானியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஒரு அற்புதமான இயற்கை நிகழ்வைக் காண சூப்பர் மூன் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. https://www.virakesari.lk/article/227019
6 days 11 hours ago
பெண்கள் உலகக் கோப்பை; பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி பிரமாண்ட வெற்றி பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பாகிஸ்தான் அணிக்கு 248 ரன்கள் இலக்கு 5 அக்டோபர் 2025 ஐசிசி மகளிர் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி நிதானமாக விளையாடி 247 ரன்களை சேர்த்தது. பாகிஸ்தான் அணிக்கு 159 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனதால் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பிரமாண்ட வெற்றி பெற்றது. முன்னதாக, டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆண்களுக்கான ஆசிய கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டியின்போது இரு அணிகளின் கேப்டன்களும் கைகுலுக்காதது சர்ச்சையானதை அடுத்து இன்றைய போட்டியிலும் இது பிரதிபலிக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதேநிலை மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டிலும் நீடித்தது. ஆண்கள் அணியைப்போலவே பெண்கள் அணிகளின் கேப்டன்களும் டாஸ்-க்கு பிறகு கைகுலுக்கிக் கொள்ளவில்லை. ஹர்மன்ப்ரீத் கவுர் இந்தியாவுக்கும், பாத்திமா சனா பாகிஸ்தானுக்கும் கேப்டனாக உள்ளனர். 100 ரன்களை கடந்த இந்தியா: பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கேப்டன் ஹர்மன்ப்ரீத் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா 32 பந்துகளில் 4 பவுண்டரிகளை விளாசி 23 ரன்களில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனாவின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவருக்குப் பிறகு, பேட்டிங் செய்ய வந்த பிரதிகா ராவல், 37 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்த நிலையில் 22 ஓவர் முடிவில் இந்திய அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களை எட்டியது. அதன்பின் அணிக்கு பலம் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் ஹர்லீன் தியோல், ஜெமிமா களத்தில் நிலையாக ஆட்டத்தை வெளிப்படுத்து வந்தனர். அதன்பின் 30 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 136 ரன்களை எடுத்திருந்தது இந்திய அணி. அதன்பிறகு விக்கெட் இழப்பின்றி ஆடி வந்தது. ஹர்லீன் தியோல் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகள் அடித்து நம்பிக்கையூட்டி வந்தார். இந்த நிலையில் 33வது ஓவரின் முதல் பந்தில் அவரும் விக்கெட்டை பறிகொடுத்தார். 65 பந்துகளில் 46 ரன்களை சேர்த்திருந்தார். ரமீன் ஷமாம் வீசிய பந்தை அடிக்க முயன்றபோது நஷ்ரா சாந்து கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். இந்த கட்டத்தில இந்திய அணி 154 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து இருந்தது. இடையில் நிறுத்தப்பட்ட போட்டி: பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மைதானத்தில் பூச்சிகள் பறந்ததால் போட்டி பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் மைதானத்தில் வீரர்களின் தலைகளுக்கு மேலே அதிகளவில் பூச்சிகள் பறந்து கொண்டே இருந்ததால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கும் இடையூறு ஏற்பட்டது. இதனால் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட பிறகு மீண்டும் தொடங்கியது. அதன்பின் களமிறங்கிய வீரர்கள் மைதானத்திற்கு திரும்பி ஆட்டத்தை தொடர்ந்தனர். ஜெமிமா, தீப்தி சர்மா பார்னர்ஷிப்பில் இந்திய அணி விளையாடி வந்த நிலையில், ஜமிமா 32 ரன்களில் ஆட்டமிழந்தார். நஷ்ரா சந்து வீசிய பந்தில் LBW முறையில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இவருக்கு பதிலாக வளது கை பேட்டர் சினே ராணா களத்திற்கு வந்தார். 35வது ஓவர் சற்று இந்திய அணிக்கு சற்று சவாலானதாகவே அமைந்தது. ரமாம் வீசிய இந்த ஓவரில் இந்திய அணி 1 ரன் மட்டுமே எடுத்தது. 36வது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் என்ற நிலையில் இருந்தது இந்திய அணி. இதனைத் தொடர்ந்து சினே ராணா, தீப்தி சர்மா இணைந்து அணிக்காக ரன்களை சேர்க்கத் தொடங்கினர். இருவரும் போராடி 43வது ஓவரில் 190 ரன்களை கடக்க உதவினர். இதற்கிடையில் கிரீஸ் கோட்டிற்குள் செல்ல முயன்ற ராணாவிற்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு பிசியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. 200 ரன்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தீப்தி சர்மா 25 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சினே ராணா, தீப்தி சர்மா நிதானமாக விளையாடி வந்த நிலையில் 44.1வது ஓவரில் ராணா அவுட்டானார். 33 பந்துகளில் 20 ரன்கள் விளாசிய நிலையில் ஃபாத்திமா சனா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். பின் அவருக்கு பதிலாக ரிச்சா கோஷ் களமிறங்கினார். அந்த சமயத்தில் களத்திற்கு ஏற்றவாறு தன்னை ஈடுபடுத்தி கொண்ட தீப்தி சர்மாவும் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். டையானா வீசிய பந்தை அடிக்க முயன்றபோது சித்ரா நவாஸ் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். எனினும் இந்திய அணி 46 ஓவர்களில் 200 ரன்களை கடந்திருந்தது. 7 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. பரபரப்பான இறுதிகட்டம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ரிச்சா கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 35 ரன்களை சேர்த்தார். பின் ரிச்சா கோஷ் சிக்ஸர், பவுண்டரிகள் என விளாச ஆட்டம் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியது. இந்த நிலையில் ஸ்ரீ சரணி அவுட்டாக அவருக்கு பதிலாக கிராந்தி கவுட் களமிறங்கினார். தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே பவுண்டரியை விளாசினார். பின் இன்னிங்ஸின் இறுதியில் ரிச்சாவும் பவுண்டரி விளாச, இவர்களின் பாட்னர்ஷிப் நன்றாகவே அமைந்தது. கடைசி ஓவரை வீச பாகிஸ்தான் அணியில் இருந்து பெய்க் வந்தார். அவர் வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கி அனுப்பினார் ரிச்சா. அவர் வீசிய 2வது பந்தை ரிச்சா தூக்கி அடித்தபோது விக்கெட்டுக்கான வாய்ப்பு தென்பட்டது. கேட்சாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரு பாகிஸ்தான்ல வீரங்கனைகள் மோதி கேட்சை தவறவிட்டனர். இதனால் ரிச்சாவின் விக்கெட் காப்பாற்றப்பட்டது. ஆனால் இந்த சந்தோஷனம் அதிக நேரம் நீடிக்கவில்லை. அதற்கடுத்த சில பந்துகளிலேயே கிராந்தி அவுட்டாக, அதன்பின் வந்த ரேணுகா சிங்கும் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இறுதியாக 50 ஓவர் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 247 ரன்களை சேர்த்தது. ரிச்சா கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 35 ரன்களை சேர்த்திருந்தார். 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய பாகிஸ்தானுக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. 12 ஓவரில் 3 விக்கெட்டுகளை மலமலவென இழந்தது. 50 ஓவர்களில் 278 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில், 17 ஓவர் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 38 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதன்பிறகு 17.3வது ஒவரில் சித்ரா அமின் சிக்ஸர் அடித்தார். 12 போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அடித்த முதல் சிக்ஸர் இது என கிரிக்பஸ் குறிப்பிட்டுள்ளது. இது பாகிஸ்தான் அணிக்கு சற்று ஆறுதலாக இருந்தாலும், அதன்பின் அதிக ரன்கள் சேர்க்கவில்லை. 20 ஓவர்கள் முடிவில் 57 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்திருந்தது பாகிஸ்தான். 2 விக்கெட்டுகளை இந்திய வீராங்கனை கிராந்தி கைப்பற்றினார். அதன்பிறகு சித்ரா, நடாலியா பாட்னர்ஷிப் நிதானமாக விளையாடி வந்தனர். அதற்குள் 27.1 ஓவரில் மீண்டும் ஒரு விக்கெட் விழுந்தது. 33 ரன்கள் எடுத்திருந்த நடாலியா, கிராந்தி வீசிய பந்தில் அவுட்டானார். 30 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 100 ரன்களை கடந்தது. 4 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்திருந்தது. அதே சமயம் இந்திய அணி 22 ஓவர் முடிவில் 100 ரன்களை கடந்திருந்தது. இதற்கிடையில் மீண்டும் 30.5வது ஓவரில் மற்றொரு விக்கெட் பறிபோனது. தீப்தி சர்மா வீசிய பந்தில் ஃபாத்திமா சனா அவுட்டானார். சித்ரா அமின் 84 பந்துகளில் அரைசதம் விளாசினார். தொடர்ந்து அணிக்காக போராடி பவுண்டரிகளை விளாசினார். இதன் பின்னர் ஆட்டம் படிப்படியாக இந்திய அணி பக்கம் திரும்பியது. 43 ஓவர்களிலேயே 159 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்தது. ப்ளேயிங் XI பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 50 ஓவர் முடிவில் இந்திய அணி 247 ரன்களை சேர்த்தது. இந்திய அணி: ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), சினே ராணா, கிராந்தி கவுட், ஸ்ரீ சரணி, ரேணுகா சிங் பாகிஸ்தான் அணி: முனீபா அலி, சதாப் ஷம்ஸ், சித்ரா அமீன், அலியா ரியாஸ், நடாலியா பர்வேஸ், பாத்திமா சனா (கேப்டன்), ரமீன் ஷமிம், டயானா பெய்க், சித்ரா நவாஸ் (விக்கெட் கீப்பர்), நஷ்ரா சந்து, சாடியா இக்பால் -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62qeejmmlmo
6 days 11 hours ago
6 days 11 hours ago
எல்லாம் ஓகேதான். ஆனால் கதையோட கதையாய் ஒண்டு சொல்லுறன். சீமானால் இப்ப நிம்மதியாய் இருக்கிற மனிசன் ஆர் எண்டால் இவர்தான்.....😂 இல்லாட்டி ஜோசப்பு விஜய் படுற அவஸ்தையை இவரும் பட்டிருப்பார். தலையில இருக்கிற மிச்ச சொச்சமும் போயிருக்கும்.🤣 இல்லையோ ஓமோ? 😎
6 days 12 hours ago
நல்ல முடிவு இளம் வீரர்களுக்கு வழி விடுவது..................இந்தியா அணியில் லேட்டா இடம் பிடித்தாலும் 500 டெஸ்ட் விக்கேட் எடுத்தது பாராட்ட தக்கது......................... நல்ல முடிவு இளம் வீரர்களுக்கு வழி விடுவது..................இந்தியா அணியில் லேட்டா இடம் பிடித்தாலும் 500 டெஸ்ட் விக்கேட் எடுத்தது பாராட்ட தக்கது...........................
6 days 12 hours ago
கடந்த காலங்களோட ஒப்பிடும் போது இப்போது அதிகமான போட்டிகள் நடக்குது................20ஓவர் விளையாட்டு வரவேற்ற்ப்பு பெற்ற பின் அளவுக்கு அதிகமா போட்டிகள் இந்தியாவில் நடக்குது.......................
6 days 12 hours ago
பாக்கிஸ்தானின் தோல்விக்கு பாக்கிஸ்தானின் வேக பந்து வீச்சாளர் ஹரிஷ் ராவ் தான் காரனம்................ இவரை தெரிவு செய்ததும் பார்க்க முகமட் அமிர தெரிவு செய்து இருக்கலாம்...............................
6 days 12 hours ago
அன்மைக் காலமாய் வெஸ்சின்டீஸ் அணியின் டெஸ்ட் விளையாட்டு பாராட்டும் படி இல்லை , பழை வெஸ்சுன்டீஸ் ஜாம்பவாங்கள் இப்ப இருக்கும் அணிய பார்த்து வேதனை படக் கூடும்............. டரன் சாமி கப்டனாய் இருந்த போது அணிய சரியா வழி நடத்தினார்..................இந்தியா இரண்டாவது இனிங் ஆடாமலே வென்று விட்டினம்..........................
6 days 12 hours ago
“On Sri Lanka’s Coastal ‘Highway’: Grandpa Kandiah Thillai with His Grandchildren” / Part 01 [Original in Tamil 'கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்'] Part 01 – From Ottawa to Jaffna The very first “beachcombers” were none other than early humans in Africa. Wandering along the coasts and living off the sea’s abundance, they slowly spread from Africa into Asia, Australia, and eventually the rest of the world. Thus, history remembers the seashore as humanity’s first great “highway.” Perhaps it was for this very reason that Grandpa chose to begin a grand tour of Sri Lanka with his Canadian-born and -raised grandchildren in August 2025, following that ancient, glorious “highway.” On August 11, 2025, three little explorers—Grandpa Kandiah Thillai’s grandchildren, Jaya, Kalai, and Isai—boarded a plane in Ottawa, Canada. Flying through Germany, they finally landed with their grandfather on the soil of Sri Lanka. “Ah! It’s so hot here, Grandpa!” exclaimed Jaya, fanning her face the moment they stepped outside Bandaranaike International Airport. “That’s because this is the tropics, my dear. The sun here is a little more mischievous than in Canada,” Grandpa laughed. Among the world’s most captivating sights is the seashore. No one is untouched by its charm—children and adults alike love the beach. And so, with a hired van and a friendly driver, they decided to spend their first two days in Colombo, the seaside capital. Their hotel faced Galle Face Green, which had been laid out in 1859 by Sir Henry George Ward (1797–1860), then Governor of British Ceylon. The cool sea breeze, the gentle waves, the playful cries of seabirds, and the soothing rhythm of the ocean washed away their jetlag and fatigue, while giving the children a joyful welcome. Grandpa had chosen the place with care. On August 13, they set off again in the same van, heading toward Jaffna by way of Dambulla. When the children saw the glittering golden statues of the cave temples, they gasped in awe. “This feels like a storybook cave!” Kalai exclaimed breathlessly. But as they passed Dambulla, Grandpa’s face grew somber. Jaya noticed and tugged at him. “What’s wrong, Grandpa?” she asked. He explained gently: “For many years, the only Tamil Hindu temple along the Kandy–Jaffna A9 highway stood here in Dambulla—the Badrakali Amman Temple. It was attacked multiple times under the leadership of Buddhist monks, and finally, on October 28, 2013, it was demolished completely. Yet, within the ancient Dambulla Golden Cave Temple, four sacred statues remain—even two Hindu deities, Vishnu and Vinayagar. That is a historical truth.” She listened carefully. Grandpa added that this place was once called Thampalai and was ruled in the 10th–11th centuries by the great Chola emperors, Rajaraja Chola and Rajendra Chola. That night, they finally reached the coastal city of Jaffna—Grandpa’s own childhood and youth’s home. They stayed at a hotel near Athiady, his birthplace. Behind that very station lay Athiady, the neighborhood where Grandpa, his mother, and his siblings were born and raised with pride. It reminded him of a song by poet Sathees: Though we leave our homeland to live afar, The fragrance of Jaffna soil never leaves our hearts. Come, let us board the Yaal Devi train, And speak in the language of our souls. For the people of Jaffna, the sounds and bustle of the Yaal Devi train were woven into daily life—there was hardly a day without them. Nearby also stood the home of Arumuga Navalar — praised as the giver of Tamil and Saiva tradition. Today it is known as the Navalar Mandapam. Grandpa pointed it out fondly—it lay just half a mile from their hotel, behind the site of his old family home, where he had once played as a boy. Jaffna town itself spread around the fort, the market, the hospital, the bus and railway stations, and the main roads. In North American terms, one could call it the “downtown” of Jaffna. Amidst the taller buildings, palmyra palms stood proud and scattered everywhere. That night, Jaya and Kalai marveled at the city glowing under the lamps, while little Isai had already fallen asleep in Grandpa’s lap. Pulling Jaya and Kalai close, Grandpa explained: “The palmyra tree sways fiercely in the storm, but unlike the reed, it does not bend to escape. It prefers to break rather than bow. In the same way, when hardship and suffering come, the people of Jaffna take the palmyra as their example—facing adversity with courage, resilience, and unyielding determination.” And so, in his heart, verses bloomed like the Jaffna sun: Golden sun in the open sky, Palmyra’s lullaby swaying high, Parrots singing sweet delight, Jaffna’s music fills the night. It clings to every soul and ear, Sprouting love and culture dear. Step outside and you will find, Goats and cattle by the roadside, Children’s laughter, Tamil’s song, Palmyras rising proud and strong. Memories that touch the heart, Never from our lives depart. Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna Part 02 will follow “On Sri Lanka’s Coastal ‘Highway’: Grandpa Kandiah Thillai with His Grandchildren” / Part 01 [Original in Tamil 'கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' ] https://www.facebook.com/groups/978753388866632/posts/31664470166534885/?
6 days 12 hours ago
இதை நான் எங்கும் வெள்ளை அடிக்கவில்லை. உங்களை போலவே விமர்சித்துள்ளேன்.
6 days 13 hours ago
எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கி 1,000 பேர் தவிப்பு: சீன மீட்புப் படையினர் தீவிரம்! 06 OCT, 2025 | 12:29 PM உலகின் மிக உயரமான மலைப்பகுதியான எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்கே அமைந்துள்ள திபெத் பிராந்தியத்தில் கடும் பனிப்புயல் நிலவி வருவதால், மலையேற்ற வீரர்கள் உட்பட சுமார் 1,000 பேர் மலையில் இருந்து இறங்க முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். மலைச்சரிவுகளில் தற்காலிக முகாம்கள் அமைத்து மலையேறும் பணியில் ஈடுபட்டிருந்த வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோரே இவ்வாறு சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பனிப்புயலில் சிக்கியுள்ள இந்த ஆயிரம் பேரையும் மீட்கும் பணியில் சீன மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/227015
6 days 14 hours ago
மீண்டும் உங்களை இந்த திரியில் கண்டது மகிழ்ச்சி வசி அண்ணா..............நீங்கள் எழுதுவதை பார்க்க விளையாட்டுக்களை பார்க்க நேரம் இல்லை போல் தெரியுது...............நானும் அவுஸ்ரேலியா இந்தியா விளையாட்டை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்...................நான் அந்தக் காலம் தொட்டு மகளிர் கிரிக்கேட் பார்க்கிறேன் அதனால் அந்த ஆர்வம் இப்பவும் என்னை விட்டு போகல அண்ணா......................என்ன இந்த உலக கோப்பையில் அதிக மழை மற்றம் படி விளையாட்டுக்கள் பார்த்து ரசிக்கும் படி இருக்கு.......................
6 days 14 hours ago
www.freehit.eu இதுக்கை போனால் பார்க்கலாம் தலைவரே..................... நான் கைபேசியில் இருந்து வேறு ஆப் மூலம் பார்க்கிர நான்...............இணையத்தில் பார்ப்பது மிக குறைவு............ நான் தந்த லிங்கை அமத்துங்கோ வேலை செய்யும்.........................
6 days 14 hours ago
சுமத்திரன் தானாக பதவிவிலக வேண்டும். தமிழரசுக்கட்சியில' இருந்து சுமத்தரனால் நீக்கப்பட்டவர்கள் மீண்டும் இணைக்கப்பட்டு புதிய நிர்வாகம் தெpரிவு செய்யப்பட வேண்டும். சுமத்திரன் விலக மறுத்தால் தமிழ்மக்கள் வெகுஜனப்புரட்சி செய்து சுமத்தரனை ஓட ஓட விரட்ட வேண்டும். கோத்தபாயவைப் போல் பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்று அரசியலை விட்டே அவர் ஒதுங்க வேண்டும்.
6 days 15 hours ago
ஹமாஸ் அமைப்பினருடன் இஸ்ரேல் இன்று பேச்சு : கெய்ரோவில் முக்கிய சந்திப்பு 06 Oct, 2025 | 11:24 AM பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நீடித்து வரும் இரண்டு ஆண்டு போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முக்கியப் பேச்சுவார்த்தை இன்று திங்கட்கிழமை( 6) எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்த 20 அம்ச அமைதித் திட்டத்தை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்தே இந்த அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கான முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த 20 அம்சத் திட்டம், காசாவை ஒரு பயங்கரவாதமற்ற, அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் இல்லாத அமைதிப் பூங்காவாக மாற்றுவதை முக்கிய அம்சமாக கொண்டுள்ளது. கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், இந்தத் திட்டத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சம்மதம் தெரிவித்தார். ஹமாஸ் அமைப்பினருக்கு ஒப்பந்தத்தை ஏற்க 72 மணிநேரக் கெடு விதிக்கப்பட்டது. கெடு முடிந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினர் 20 அம்சத் திட்டத்தை ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளதுடன், இதுகுறித்து விரிவாகப் பேச மத்தியஸ்த நாடுகளில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து, காசாவில் உள்ள சில பகுதிகளில் இருந்து படைகளைத் திரும்பப் பெறுவதாக நெதன்யாகு அறிவித்தார். டிரம்பின் அமைதித் திட்டத்தைச் செயல்படுத்தத் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்ததையடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நெதன்யாகுவின் இந்த நடவடிக்கையை ஜனாதிபதி டிரம்ப் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இஸ்ரேல் தனது படைகளை வெளியேற்ற ஒப்புக்கொண்டுள்ளது. இதனை ஹமாஸ் அமைப்பினரிடம் பகிர்ந்துள்ளோம். ஹமாஸ் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியதும், போர் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வரும். பணய கைதிகள் பரிமாற்றம் தொடங்கும். அமைதி நிலவும். 3 ஆயிரம் ஆண்டு பேரழிவின் முடிவு நெருங்குகிறது. அனைவருக்கும் நன்றி. நல்ல செய்திக்காகக் காத்திருங்கள்” என்று கூறியுள்ளார். அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் ஒப்புக்கொண்டதையடுத்து, அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்த டிரம்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று கெய்ரோவில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் 20 அம்சத் திட்டம் குறித்து விரிவாகப் பேசப்பட இருக்கிறது. https://www.virakesari.lk/article/227008
6 days 15 hours ago
நேரமுகாமைத்துவத்தில் கடற்புலிகளின் தளபதி சூசை எமக்கு முன்னோடி - துரைராசா ரவிகரன் 06 Oct, 2025 | 10:34 AM நேரமுகாமைத்துவத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின், கடற்புலிகளின் தளபதியாக இருந்த சூசை தமக்கு முன்னோடி எனத் தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், அதனால் தற்போதும் தம்மால் சிறப்பாக நேரமுகாமைத்துவத்தைப் பின்பற்ற முடிவதாகவும் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு - மாமடு கற்பகா அறநெறிப்பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்ற சிறுவர்தினம் மற்றும் முதியோர்தினநிகழ்வுடன், சாதனையாளர் மதிப்பளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், சிறார்களுக்கு நேரமுகாமைத்துவம் தொடர்பில் ஆலோசனை வழங்கும் வகையில் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், சர்வதேச ரீதியாக சிறுவர்தினம் மற்றும் முதியோர்தினம் என உருவாக்கப்பட்டு கொண்டாடப்பட்டுவருகின்றது. இந்நிலையில் குறித்த நிகழ்வுகளை இந்தக் கிராமத்தில் ஒழுங்குசெய்து சிறார்கள் மற்றும் முதியவர்களை அழைத்து மதிப்பளிப்பது உண்மையிலே ஒரு சிறப்பான விடயம். அதேவேளை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த சாதனையாளர்களும் மதிக்களிக்கப்படுகின்றனர். அந்தவகையிலே எமது வாழ்வில் நேர முகாமைத்துவம் என்பது மிக மிக முக்கியமானது என்பதை சிறார்கள் அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும். முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்றொழிலாளர் சமாசத்தின் தலைவராக நான் பத்துவருடங்கள் இருந்தேன். அந்தக் காலப்பகுதியில் கடற்புலிகளின் தளபதி சூசை அவர்கள் எமக்கு நேரமுகாமைத்துவத்தில் முன்னோடியாக இருந்தார். அந்தவகையில் தற்போதும் எம்மால் மிகச் சிறப்பாக பின்பற்ற முடிகின்றது. இவ்வாறாக நேரமுகாமைத்துவம் உட்பட அனைத்துப் பண்புகளையும் பின்பற்றிக்கொண்டு சிறார்கள் அனைவரும் எதிர்காலத்தில் உயர்ந்தநிலையை அடையவேண்டும். எமது பிள்ளைகள் அனைவரும் சிறப்பான முறையில் கற்றல்செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும். தற்போது எமது மாவட்டம் கல்வியில் 25ஆவது மாவட்டமாகக் காணப்படுகின்றது. ஆனால் வறுமையில் முதல்நிலையிலுள்ள மாவட்டமாக எமது முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது. இந்த விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றிலும் சுட்டிக்காட்டியிருக்கின்றேன். எமது மாவட்டங்களுக்கு கல்விக்கான வளப்பற்றாக்குறைகளைப் பூர்த்திசெய்யுமாறு உரியவர்களைக் கோரியிருக்கின்றேன். இதுதவிர முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மாத்திரம்தான் குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்து சேவை இல்லாத நிலை காணப்படுகின்றது. எனவே குறித்த குளிரூட்ட சொகுசு பேருந்து சேவையை விரைந்து ஆரம்பிக்குமாறு உரிய அமைச்சிடம் கோரியிருக்கின்றேன். இன்னும் ஓரிரு மாதங்களுக்கு சொகுசுப் பேருந்து சேவை ஆரம்பிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதேபோல் வட்டுவாகல் பாலத்தினை அமைக்குமாறு தொடர்ச்சியாக கோரியதற்கு அமைவாக அந்தப் பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக கொக்கிளாய் - புல்மோட்டை இணைப்புப் பாலத்தினை அமைத்துத்தருமாறு ஜனாதிபதியிடம் கோரியிருந்தேன். எதிர்வரும் 2026ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் கொக்கிளாய் - புல்மோட்டை இணைப்புப்பாலத்தினை அமைத்துத்தருவதாக ஜனாதிபதி என்னிடம் உறுதியாகத் தெரிவித்திருந்தார். இவ்வாறாக எமது மக்களின் கோரிக்கைகளையே நாம் உரிய இடங்களுக்குக் கொண்டுசென்று நிறைவேற்றுக்கின்ற செயற்பாட்டையே மேற்கொண்டுவருகின்றோம். இந்நிலையில் பின்தங்கியுள்ள எமது முல்லைத்தீவு மாவட்டத்தை கல்வியால் மாத்திரமே நாம் முன்கொண்டுசெல்லமுடியும். எனவே சிறுவர்கள் அனைவரும் நல் ஒழுக்கமுள்ள பிள்ளைகளாக கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும். தற்போது எமது சமூகங்களில் பல்வேறு சமூகச் சீர்கேடுகள் இடம்பெற்றுவருகின்றன. குறிப்பாக போதைப்பொருள் ஊடுருவல்களும் அவற்றால் ஏற்படும் சீர்கேடுகளும் மிகப் பாரிய அளவில் அதிகரித்திருக்கின்றன. இவ்வாறான சீர்கேடுகளைக் கட்டுப்படுத்துமாறு தொடர்சியாகக் கோரிவருகின்றோம். அந்தவகையில் அனைத்து வகையான சீர்கேடுகளும் கட்டுப்படுத்தப்படுமென உரியவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். இந்நிலையில் இவ்வாறான சமூகச்சீர்கேடுகளைக் கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமென நம்புகின்றோம். அத்தோடு நிச்சயமாக எமது மாவட்டத்தை கல்வியால் மாத்திரமே உயர்த்த முடியும். நாம் தற்போது வெளிமாவட்டங்களிலிருந்து உத்தியோகத்தரை எதிர்பார்த்துக் காத்திருக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது. இந்தநிலை மாறவேண்டும். முல்லைத்தீவை முல்லைத்தீவு பிள்ளைகள் ஆட்சிசெய்யவேண்டும். வவுனியாவினை வவுனியாபிள்ளைகள் ஆட்சிசெய்யவேண்டும். மன்னாரிலும் அந்த நிலை ஏற்படுத்தப்படவேண்டும். ஆட்சிசெய்வதென்றால் அரசியல் ரீதியாக ஆட்சிசெய்வதை நான் இங்கு குறிப்பிடவில்லை. சிறார்கள் அனைவரும் நல்லமுறையில் கல்விகற்று அந்தந்த மாவட்டங்களில் திணைக்களங்களிலுள்ள வெற்றிடங்களை தாமே நிரப்பக்கூடிய நிலையை ஏற்படுத்தவேண்டுமென்பதையே தெரிவிக்கின்றேன். இந்தநிலை ஏற்பட்டால் வன்னியும், முல்லைத்தீவும் தன்னிறைவுபெறும் என்றார். https://www.virakesari.lk/article/226999
6 days 15 hours ago
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கை மீதான புதிய பிரேரணை இன்று நிறைவேறும் ! 06 Oct, 2025 | 10:41 AM இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இறுதியாக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை இன்று 6 ஆம் திகதி திங்கட்கிழமை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஏற்கனவே கடந்த மாத ஆரம்பத்தில் இந்தப் பிரேரணையின் முதலாவது வரைபு சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் அதில் பல திருத்தங்கள் செய்யப்பட்டன. அந்தவகையில் திருத்தப்பட்ட இறுதி வரைபு இன்று சமர்ப்பிக்கப்பட்டு, இன்றைய தினமே நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை மீதான மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் அதிகாரத்தை நீடிக்கும் தீர்மானத்திற்கு, அதனை இன்று திங்கட்கிழமை முன்வைக்கும் பிரதான 5 நாடுகளுக்கும் மேலாக மேலும் 22 நாடுகள் இணை அனுசரணை வழங்குகின்றன. பிரிட்டன் தலைமையில், கனடா, மாலாவி, மொன்டினீக்ரோ மற்றும் வட மசிடோனியா ஆகிய இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்ட இந்தப் புதிய பிரரேணையின் முதலாவது வரைபு கடந்த செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி வெளியிடப்பட்டது. இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இந்தப் பிரரேணை நிறைவேற்றப்படும் போது இலங்கை அரசாங்கம் வாக்கெடுப்பைக் கோராமல் இருக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரியவருகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமானது. இந்நிலையில், நாளை மறுதினம் ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதியுடன் கூட்டத்தொடர் நிறைவடைகின்றது. அதற்கு முன்னதாக இன்றையதினம் பிரேரணை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/227005
6 days 15 hours ago
சுமந்திரன்… இதுவரை தமிழ் மக்களுக்கு, ஒரு ஆணியும் புடுங்கவில்லை. அவர் புடுங்கின ஆணி முழுக்க சிங்களவருக்குத்தான். ஆன படியால் சிங்கள சம்பந்தி சுமன்…. கண்டி, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை போன்ற சிங்களப் பகுதிகளில் போட்டியிட்டு… அவரின் “பாராளுமன்ற கனவை” நிறைவேற்றும் படி… வேண்டிக் கொள்கின்றோம். 😂 தமிழ் பகுதிகளில் நின்றால்… மீண்டும், மீண்டும் மண் கவ்வுவது நிச்சயம். 🤣
6 days 15 hours ago
சுமந்திரன்.... தமிழருக்கு துரோகம் செய்து, சிங்கள அரசியல்வாதிகளை போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து காப்பாற்றி விட்ட நன்றிக் கடனுக்கு... சென்ற பாராளுமன்ற தேர்தலில் தோல்வியுற்ற சுமந்திரனை... தமது கட்சியின் சார்பில் சிங்களப் பகுதிகளில் போட்டியிட வைத்திருந்தால்... சிங்கள மக்கள் சுமந்திரனை, அமோக வெற்றி பெற வைத்திருப்பார்கள். ஏனென்றால்.... சுமந்திரன், தமிழ் மக்களுக்கு ஆற்றிய சேவையை விட சிங்கள இனத்துக்கும், சிங்கள மக்களுக்கும் ஆற்றிய சேவை அதிகம். சிங்களவர்கள் உண்மையான இனப்பற்று உள்ளவர்களாக இருந்திருந்தால், அடுத்த தேர்தலில்.... மகிந்த, ரணில், சஜித், விமல் வீரவன்ச போன்றோர்... சுத்துமாத்து சுமந்திரனை தத்து எடுத்து தமது கட்சி சார்பில் போட்டியிட வைக்க வேண்டும். வெற்றி நிச்சயம். 😂
Checked
Sun, 10/12/2025 - 21:02
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed