புதிய பதிவுகள்2

இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!

5 days 21 hours ago
விஜையால் எப்படி பார்த்தாலும் பாதிப்பு திமுகவுக்கே என்பதில் உடன்பாடுதான் ஐயா. ஆனால் எடப்பாடி, விஜை எம் ஜி ஆர் போல அல்ல. அதே போல் அன்றைய காங்கிரஸ் போல் லோக்சபா தேர்தலில் 50:50 விட்டு தந்தால் சட்டசபையை முழுவதுமாக மாநில கட்சிக்கு தாரைவார்க்கும் கட்சி அல்ல இன்றைய பிஜேபி. இப்போ இருக்கும் நிலையில் அதிமுக+விஜை+பிஜேபி ஒரே அணியில் வரின் 2026 இல் தமிழ் நாட்டில் பிஜேபி அமைச்சர்கள் இருப்பார்கள். அப்போ அரசின் கொள்கை முதல் செயல்திட்டம் வரை கொஞ்சம், கொஞ்சமாக காவி மயமாகும். இது வரலாற்றில் முதன் முறை நிகழும் நிகழ்வாக இருக்கும். அடுத்தடுத்த தேர்தல்களில் அதிமுக, விஜையை முடக்கி தமிழ் நாட்டில் பிஜேபி vs திமுக என்பதே அரசியல் என்ற நிலை உருவாகி விடும். இதைதான் மஹாரஸ்டிராவில் சிவசேனா, பீஹாரில் நிதீஸ், பீஜேபி கூட்டில் அனுபவித்தனர். மேற்கு வங்கத்தில் கயூனிஸ்டை, ஒரிசாவில் பட்நாயக்கை தள்ளி விட்டு (கூட்டு வைக்காமல்) இரெண்டாம் பெரிய கட்சியாக இப்படித்தான் பாஜக வளர்ந்தது. இப்படி ஒரு நிலை வருவதை விரைவு படுத்துவதுதான் விஜையின் வேலை என்றால் - அவர் வராமலே இருந்திருக்கலாம் என்பதே என் நிலைப்பாடு. பிஜேபி புகுந்து விடும் என்பது சீமான் பொய்யாக சொல்வது போல் வெறும் வெத்து மிரட்டல் அல்ல. அது ஒரு நியாயமான பயம்.

நிறைவேறவுள்ள ஜெனீவா தீர்மானம் மிக மோசமானது; சுமந்திரனுக்கு இதில் பங்குண்டு; கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

5 days 21 hours ago
இலங்கை தொடர்பில் 2012 இல் இருந்து இதுவரை நிறைவேற்றப்பட்ட ஜெனிவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏமாற்றமாக அமைந்திருந்தும் கூட இந்த வருடம் நிறைவேறவுள்ள தீர்மானம் அவை அனைத்தையும் விட மிகவும் மோசமான, பலவீனமான ஒரு தீர்மானம் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். ஜெனீவா தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து ஜெனிவா அமர்வுகளில் நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்களும் எடுக்கின்ற நடவடிக்கைகளும் மோசமான ஏமாற்றமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைந்திருந்தும்கூட இந்த வருடம் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானம் 2012 இல் இருந்து இதுவரை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விட மிகவும் பலவீனமான ஒரு தீர்மானம். ஒரு வருடத்தை கடந்த தேசிய மக்கள் சக்தி அரசு பொறுப்பு கூறல் சம்பந்தமாகவும் தமிழ் மக்களின் இன பிரச்சினை சம்பந்தமாகவும் எந்த விதத்திலும் ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்தாமல் மாறாக இதற்கு முதல் ஆட்சியில் இருந்த இனவாத அரசாங்கங்கள் செயல்பட்டதை போன்றே அதே நிலைப்பாடுகளையும் நடவடிக்கைகளையும் தொடர்கின்றதாகத் தான் இருக்கிறது. அப்படி இருக்கின்ற நிலையிலும் ஜெனீவாத் தீர்மானம் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்படுவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்கின்ற அடிப்படை துரோகம். முழுக்க முழுக்க தங்களுடைய நலன்கள் சார்ந்த முடிவுகளாக இந்த நாடுகள் எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த விதத்திலும் நன்மை கொடுக்காத,மாறாக நிரந்தரமாகவே பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய வகையிலே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதை உண்மையில் நாம் கண்டிக்கிறோம். அந்த வகையில் செம்மணியிலே சுழற்சி முறையில் போராடிக் கொண்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய குடும்பங்கள் இந்த வருட ஐ.நா.வின் அறிக்கையை எரித்தார்கள். 2009 ஆம் ஆண்டில் இருந்து பொறுப்புக்கூறலுக்கு அரசாங்கத்தை வலியுறுத்தி உள்ளக ரீதியாக செய்ய வேண்டும் எனக் கேட்டும் அந்த கோரிக்கையை முன் வைக்கின்ற வகையிலும் சர்வதேச கோணத்தில் எந்த விதமான பொறுப்பு கூறலும் வலியுறுத்தாமல் இருப்பது இந்த தீர்மானம் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றுகிறது. இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ள சுமந்திரன் தலைமையிலான செயற்பாடுகளை கண்டறிய வேண்டும். சுமந்திரன் தமிழ் அரசுக் கட்சியின் செயலாளராக பதவி ஏற்ற பின்னர் பிரித்தானியாவிற்கு இரகசியமாக சென்று இந்த வரைவை தயாரிப்பதில் பணியாற்றினார். பாதிக்கப்பட்ட தரப்பிற்கு சார்பான ஒரு வரைவை உருவாக்குவதற்கான முயற்சியை நிராகரித்து தமிழ் அரசுக் கட்சியின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர் குழுவை விலத்தி வைத்திருந்து தீர்மானத்தின் இறுதி வடிவங்களை வரைந்திருந்த சூழலில் அவர் அந்த தீர்மானத்தை ஆதரித்து நிறைவேற வேண்டும் என்ற கருத்துக்களையும் கூறி பச்சைக் கொடி காட்டுகின்றார். மக்களால் நிராகரிக்கப்பட்ட நபர் தன்னுடைய செல்வாக்கை கட்சிக்குள் பயன்படுத்தி மக்களால் தெரிவு செய்யப்பட்ட தரப்புகளுடைய செல்வாக்கை தன்னுடைய தோல்வி அடைந்த போக்குக்கு பயன்படுத்துகின்ற அவல நிலையை நாங்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படையாக சுமந்திரன், சிவஞானம் போன்றவர்களின் படுமோசமான செயற்பாடுகளை விளங்கிக்கொண்டு மக்கள் நிராகரிக்கின்ற தரப்புகளை கட்சிக்குள் எதிர்ப்பதற்கு முன்வர வேண்டும். அல்லது அவர்களும் சேர்ந்து இந்த படுமோசமான செயற்பாடுகளை தமிழ் மக்களுக்கு எதிராக செயலாற்றுகிறார்கள் என்ற முடிவுக்கு நாங்கள் வர வேண்டி இருக்கும் என்றார். https://akkinikkunchu.com/?p=343593

விஜயின் அரசியல் எதிர்காலத்தை கரூர் அனர்த்தம் தீர்மானிக்குமா?

5 days 21 hours ago
அரசியல் முதிர்ச்சியின் இலக்கணமாகும் முதல்வர் ஸ்டாலினும், திராவிட எதிர்ப்பாளர்களின் சதி லீலைகளும்! 6 Oct 2025, 8:08 AM ராஜன் குறை கரூரில் நிகழ்ந்த பெரும் துயரச் சம்பவத்தை, கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை மிகச் சிறப்பாக, பொறுப்புடன் கையாண்டுள்ளார் தமிழ்நாட்டு முதல்வர். அரசியல் முதிர்ச்சி என்றால் என்ன என்று அனைவருக்கும் இலக்கணம் வகுக்கும் விதமாக அவர் செயல்பாடு அமைந்துள்ளது. செய்தி அறிந்ததும் உள்ளூர் சட்ட மன்ற உறுப்பினரை, அருகமை மாவட்ட அமைச்சரை நேரில் சென்று மீட்பு நடவடிக்கைகளை, சிகிச்சைகளை மேற்பார்வையிடச் சொன்னார். சுகாதாரத் துறை அமைச்சரையும் விரையச் சொன்னார். நிலைமையின் தீவிரம் தெரிந்ததும் தானே நள்ளிரவில் விரைந்து சென்றார். அஞ்சலி செலுத்தினார்; ஆறுதல் கூறினார். விபத்திற்குக் காரணமான தவெக தலைவர் நடிகர் விஜய், அவரைக் காண வந்து பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று பார்க்க முயலாமல், விமானத்தில் சென்னை வந்து சேர்ந்தபோது, முதல்வர் கரூர் செல்ல விமானம் ஏறினார். முதல்வர் ஒரு வார்த்தை கூட மக்கள் கூடக் காரணமான, விபத்திற்குப் பிறகு களத்தில் நிற்காத தமிழக வெற்றிக் கழகம், அதன் தலைவர் விஜய் குறித்து எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை. உடனடியாக மேனாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைத்தார். அதன் அறிக்கை கிடைத்த பிறகு தேவையான நடவடிக்கை எடுப்போம் என்றார். திராவிட இயக்க எதிரிகள் உடனே சதிக் கோட்பாடுகளைப் புனைந்தனர். சற்றுக் கூட கூச்சமே இல்லாமல் தி.மு.க கலவரத்தைத் தூண்டியது என்றனர். காவல்துறை வேண்டுமென்றே கூட்டம் நடந்த இடத்தைக் கொடுத்தது, விபத்தைத் தடுக்கவில்லை என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி கூறினர். ஆனால் முதல்வர் அதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தவில்லை. பதிலுக்கு பிறரைக் குற்றம் சாட்டவில்லை. மாறாக எந்த தலைவரும் மக்கள் இப்படி பாதிக்கப்படுவதை விரும்ப மாட்டார் என்று ஒட்டுமொத்தமாக அனைத்து அரசியல் தலைவர்களையும் மரியாதைப் படுத்தினார். சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளால் பதட்டம் உருவாகக் கூடாது என்ற வகையில் காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும், அரசு செய்தித் தொடர்பாளர் அமுதா அவர்களும் செய்தியாளர் சந்திப்பில் பல விவரங்களை, காணொளிகளைப் பகிர்ந்து கொண்டார்கள். விஜய் கடுமையாக விமர்சித்த கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜியும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து யதார்த்தமாக நடந்தவற்றை விளக்கினார். விஜய் தன்னைப் பற்றி பேசும் முன்பே கூட்ட த்தில் பல அசம்பாவிதங்கள் நிகழ்ந்ததை காணொலிகள் மூலம் விளக்கினார். கூட்ட த்தில் நெரிபட்ட தொண்டர்களே விஜய் மற்றும் அவருடன் இருந்தவர்கள் கவனத்தைக் கவர செருப்புகளை வீசியதை விளக்கினார். அவருக்கு எந்த பதட்டமும், குழப்பமும் இல்லை. உணர்ச்சி வசப்படவில்லை. மிகுந்த பொறுப்புடன் பேசினார். இவ்வளவு பெரிய அசம்பாவிதத்திற்கு நிகழ்ச்சி அமைப்பாளர்கள் நிச்சயம் பொறுப்பேற்கத்தான் வேண்டும் என்பதால் உள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டார்கள். கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீதும், நிர்மல் குமார் மீதும் முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டன. அவர்கள் இருவரும் முன் ஜாமீன் கோரிய வழக்குகள், பொதுநல வழக்குகள் விசாரிக்கப்பட்டன. உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கவில்லை ஆதலால் அவர்கள் தலைமறைவாகவே உள்ளனர். அவர்களாக முன்வந்து வழக்கிற்கு ஒத்துழைக்கவில்லை. நடிகர் விஜய் சென்னையில் கூட பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை. இரண்டு தினங்கள் கழித்து சில நிமிடங்கள் பேசி ஒரு காணொளி மட்டும் வெளியிட்டார். அதில் அவர் சமூக நாகரீகம் கருதி ஒரு மன்னிப்பு கூடக் கேட்கவில்லை. தனக்குள்ள பொறுப்பை ஏற்கவில்லை. முதல்வரை விளித்து பழிவாங்க வேண்டுமென்றால் என்னைக் கைது செய்யுங்கள் என்று சிறுபிள்ளைத்தனமாக சவால் விடுத்தார். இத்தனை உயிரிழப்பிற்கு அவர் நடவடிக்கைகள் முக்கிய காரணம் என்பதால் அவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும்; அவர் கைது செய்யப்பட வேண்டும் என்று பலர் கூறினர். கைது செய்யாததற்காக முதல்வரைக் கண்டித்தனர். ஆனாலும் முதல்வர் அத்தகைய நடவடிக்கைகளில் இறங்கவில்லை. ஆணையத்தின் அறிக்கை விஜய் பொறுப்பாளி என்று கூறினால் பிறகு வழக்குத் தொடர்ந்தால் போதும் என்ற நிலையில் அவரைக் கைது செய்து பிறகு விசாரிக்க வேண்டிய அவசியமில்லை; அதனால் இந்த துயர நிகழ்வு அரசியல் மயமாவது தேவையில்லை என்று அமைதி காத்தார். ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டாமல், மீண்டும் இதுபோன்ற நிகழ்வு ஏற்படாமல் தடுப்பதே முக்கியம் என்று அறிவித்து தன் தலைமையின் மாண்பினை, அரசியல் முரண்களுக்கு அப்பாற்பட்ட தன் பதவியின் கெளரவத்தை வெளிப்படுத்திக் காட்டினார். தமிழக வெற்றிக் கழகமும், நடிகர் விஜயும் இந்த சிக்கலை எளிதில் கடந்திருக்க முடியும். இந்த நிகழ்விற்காக வருந்துகிறோம். பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்கிறோம். விரைந்து நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு நன்றி என்று கூறிவிட்டு, காவல்துறை ஒத்துழைப்புடன் பாதிக்கப் பட்டவர்களை சென்று பார்த்திருந்தால், அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கியிருந்தால், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்திருந்தால் அவர்கள் இப்படி முடங்கியிருக்கத் தேவையில்லை. ஆனால் அவர்கள் நோக்கமே எப்ப டியாவது அரசின் மீதும், ஆளும் கட்சி மீதும் பழி சுமத்த வேண்டும் என்பதாகவே இருந்ததால் அவர்களால் முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள முடியவில்லை. நீதி மன்றத்திலும், பொது மன்றத்திலும் கடுமையான விமர்சனத்தைச் சந்தித்து அம்பலப்பட்டு நிற்க நேர்ந்திருக்கிறது. தொடர்ந்து சமூக ஊடகங்களில் பரவும் காணொளிகள், நேரலையில் தொலைகாட்சி சேனல்கள் ஒளிபரப்பிய காட்சிகள் யாவும் விபத்து எப்படி நடந்தது என்பதை புரிந்துகொள்ளும் விதமாகத்தான் உள்ளன. ஆம்புலன்ஸ் சதி, மின்சார துண்டிப்பு சதி, தடியடி, செருப்பு வீச்சு சதி என அனைத்துக் கற்பிதங்களையும் காணொளிக் காட்சிகள் பொய்யாக்குகின்றன. விஜய் தாமதமாக வந்தது, தன் வாகனத்திற்குப் பின்னால் ஒரு மக்கள் திரளைத் திரட்டி தன்னை சந்திக்கக் காத்திருந்தவர்களுடன் கலக்க விட்டு நெரிசலை ஏற்படுத்தியது ஆகியவையே இந்த விபத்து நிகழ முக்கியக் காரணங்கள் என்பதைக் காணொளிகளைப் பார்த்து அறிய முடிகிறது. இதை ஏற்றுக் கொண்டு வருத்தம் தெரிவித்துக் கடப்பதுதான் நேர்மை என்பதைவிட அதுவே சுலபமானதும் கூட. ஆனால் அதற்குப் பதிலாக அரசை, ஆளும் கட்சியை குறை கூறி தன்னை பாதுகாத்துக் கொள்ள நினைப்பது சிறுபிள்ளைத்தனம். பாரதீய ஜனதா கட்சியின் தொடரும் சதி லீலைகள் முதல்வர் ஸ்டாலினின் அரசியல் முதிர்ச்சி இப்போதுதான் வெளிப்பட்டது என்பதல்ல. தி.மு.க 2016 தேர்தலில் குறைந்த எண்ணிக்கையிலேயே சட்டமன்றப் பெரும்பான்மையை தவற விட்டது. அடுத்த ஆண்டே ஜெயலலிதா அவர்கள் மறைந்தபோது ஸ்டாலின் கட்சித்தாவல்களை ஊக்குவித்து ஆட்சியமைக்க முயற்சிக்கவில்லை. என்றைக்கு இருந்தாலும் தேர்தலில் பெரும்பான்மை பெற்றுதான் ஆட்சியமைப்பேன் எனத் தெளிவுடன் இருந்தார். ஜெயலலிதா நோயுற்றபோதே முதல்வர் பொறுப்பை வகித்து வந்த, அவர் மறைந்தவுடன் முறையாகப் பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வமும் சரி, பின்னர் அவர்கள் அனைவரும் ஒருமனதாகத் தேர்ந்தெடுத்த சசிகலா அம்மையாரும் சரி, பாரதீய ஜனதா கட்சியுடன் ஒத்துழைக்கத் தயாராகத்தான் இருந்தனர். அரை நூற்றாண்டு வரலாற்றில், தி.மு.க மாநில அடையாளத்தில், அதன் சுயாட்சியில் மையம் கொண்டும், அ.இ.அ.தி.மு.க அகில இந்திய அடையாளத்தை அதிகம் அனுசரித்தும், ஒன்றியத்துடன் ஒத்துழைப்பதாகவும் விளங்கி வந்துள்ளதை கவனமாக ஆராய்ந்து அறியலாம். இப்படியெல்லாம் இருந்தும் அ.இ.அ.தி.மு.க கட்சியைப் பிளக்க முனைந்தது பாஜக. ஓ.பன்னீர்செல்வத்தை தர்மயுத்தம் துவங்கும்படி நான்தான் கூறினேன் என்று பகிரங்கமாகவே அறிவித்தார் பாஜக-வின் முக்கிய ஆலோசகர் குருமூர்த்தி. ஒன்றியத்தில் ஆட்சி செய்த பாஜகவும் ஒத்துழைத்தது. சசிகலா பதவியேற்பதைத் தாமதப்படுத்தியது. ஆனால் தினகரனும், சசிகலாவும் கூவாத்தூரில் சட்டமன்ற உறுப்பினர்களை பாதுகாத்து ஒ.பி.எஸ் கலகத்தை முறியடித்தனர். உச்சநீதிமன்றத்தில் உறங்கிக் கிடந்த தீர்ப்பு அந்த நேரம் வெளியாக, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிவிட்டுச் சிறை சென்றார் சசிகலா. அடுத்த காட்சி ஆர்.கே.நகர் தேர்தல். அதில் டி.டி.வி.தினகரன் போட்டியிட, வெற்றிபெற்றால் அவர் முதல்வராகும் வாய்ப்பு தெரிந்தது. அதை பாஜக விரும்பவில்லை என்பதால் தேர்தல் நிறுத்திவைக்கப் பட்டது. அப்படியும் அவர் வென்றுவிட அவர் ஆதரவாளர்களான 18 ச.ம.உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர, அவர்கள் தடாலடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர். ஓ.பி.எஸ்ஸின் 11 ச.ம.உறுப்பினர்களை எடப்பாடி பழனிசாமியுடன் இணைத்து, தினகரனை வெளியேற்றி புதிய ஏற்பாட்டைச் செய்தது பாஜக. இதையும் ஓ.பன்னீர்செல்வமே பகிரங்கமாகக் கூறினார். பிரதமர் கூறித்தான் நான் இணைந்தேன் என்றார். இதில் முக்கியமானது என்னவென்றால் இத்தனை குழப்பத்திலும், ஒரு பிரிவு அ.இ.அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை ஈர்த்துத் தான் ஆட்சியமைக்கலாம் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் முயலவேயில்லை. அமைதி காத்தார். கலைஞர் மறைந்து அவர் தலைமைப் பொறுப்பேற்றதும், பாஜக-வை எதிர்த்து திராவிட சித்தாந்தத்தை நிலைநிறுத்துவதுதான் தன் அரசியல் என்று அறிவித்தார். இன்று வரை அந்தக் கொள்கையில் திடமாக இருக்கிறார். “ தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” என்று முழுங்கினால் யாரை எதிர்த்து போராடும் என்று கேட்ட ஆளுனருக்கு, அருமையான பதிலைக் கொடுத்துள்ளார். எதையெல்லாம் எதிர்த்து போராடும் என்ற பட்டியலில் கல்வியில் மூட நம்பிக்கைகளை புகுத்தி நூறாண்டுகள் பின்னே செல்ல சதி செய்யும் பாஜக-வை எதிர்த்து போராடும் என்று தெளிவாக பிரகடனம் செய்துள்ளார். மதவாத, பிற்போக்குவாத அரசியல் எதிர்ப்பு என்ற அடிப்படையில் அவர் உருவாக்கிய கூட்டணி இரண்டு மக்களவை தேர்தல்களிலும், ஒரு சட்டமன்ற தேர்தலிலும், உள்ளூராட்சி தேர்தல்களிலும் பெருவெற்றி பெற்றுள்ளது. பெரியார், அண்ணா, கலைஞர் உருவாக்கிக் கட்டிக்காத்த திராவிட தமிழர் என்ற மக்கள் தொகுதியின் தன்னுணர்வை தன் தலைமையில் பன்மடங்கு வளப்படுத்தி, திராவிட மாடல் வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற ஒரு கருத்தியலை நிலைநிறுத்தியுள்ளார். எதிர்முனையில் அ.இ.அ.தி.மு.க-வை எவ்வளவு பிளந்தாலும் தாங்கள் அதன் இட த்தைப் பிடிக்க முடியாது என்று உணர்ந்த பாஜக இப்போது நடிகர் விஜயை தங்கள் கூட்டணிக்கு இழுக்க விரும்புகிறது. கரூர் துயரச் சம்பவம் நிகழ்ந்து கண்ணீரின் ஈரம் காயும் முன்னரே, விஜய் தேசிய ஜன நாயக க் கூட்டணிக்கு வரவேண்டும், அவருக்கு வேறு வழியில்லை என்று பாஜக ஊடகப் புலிகள் முழங்கத் துவங்கிவிட்டனர். அது மட்டும் நடந்துவிட்டால் திமுகவை வீழ்த்திவிடலாம் என்ற கற்பனை அவர்களை பரவசப்படுத்துகிறது. உடனே தேசியத் தலைமையும் முன்னாள் நடிகர் ஹேமாமாலினி தலைமையில் அனுராக் தாகூர் என்ற டில்லி கலவர புகழ் அமைச்சரை உள்ளடக்கி உண்மையைப் புனைந்து கூற கரூருக்கு அனுப்பியது. அவர்கள் என்ன முயன்றும் பெரிதாக எதுவும் கதைகட்ட முடியவில்லை. ஆனாலும் பாஜக பேச்சாளர்கள், முன்னாள் நடிகை குஷ்பு போன்றவர்கள், தொடர்ந்து ஏதேனும் அபாண்டமான குற்றச்சாட்டுகளை, சதிக்கோட்பாடுகளைப் பேசி வருகிறார்கள். தமிழ்நாட்டு அரசியல் சூழ்நிலை மிகவும் வினோதமாக இருக்கிறது. ஒருபுறம் பிளவு வேலைகள், சூழ்ச்சிகள் எதையும் செய்யாமல் தன் கொள்கைப் பற்றின் அடிப்படையில் கூட்டணி அமைத்து, திறன் மிக்க நல்லாட்சியால் மக்கள் மதிப்பைப் பெற்று நேர்வழியில் அரசியல் செய்யும் முதல்வர் ஸ்டாலின். மறுபுறம், அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் தன் விருப்பம் போலச் செயல்பட்டு உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்படும் ஆளுனர், தொடர்ந்து நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை செய்து முடக்கப்பார்க்கும் ஒன்றிய அரசு, எப்படியாவது புதிய தேசிய கல்விக்கொள்கையை திணிக்க நினைக்கும், மும்மொழிக் கொள்கையை புகுத்தத் துடிக்கும் அரசியல் மேலாதிக்க வெறி என்று இயங்கும் பாஜக. இத்தனை செய்தும் மக்கள் மனதில் இடம்பிடிக்க முடியாமல் அ,இ.அ.தி.மு.க-வை வெட்டி, ஒட்டி, வளைத்து விளையாடியது போதாமல், இப்போது புதிதாக அந்த ஒட்டுவேலையில் நடிகர் விஜயை இணைக்கப் பார்க்கிறது பாஜக. இதில் என்ன வேடிக்கை என்றால் இப்படி பலபடி வளைத்ததில் அவர்கள் கட்சியிலேயே பலவித குழப்பங்கள், குழுக்கள். அண்ணாமலை கட்சியை பெரிதாக வளர்த்துவிட்டார், பெரும் ஆளுமை மிக்க தலைவர் என்று வரலாறு காணாத பிம்பத்தை உருவாக்கியவர்கள், திடீரென அவரை நீக்கிவிட்டு நயினார் நாகேந்திரனை தலைவராக்கி விட்டார்கள். இப்போது ஸ்டியரிங்க் யார் கையில், பிரேக் யார் கையில் என்று தெரியாமல் வண்டி தடுமாறுகிறது. பாஜக நிலையும் சிக்கல்தான். அவர்கள் கொள்கையான இந்துத்துவம் பேசி ஒருபோதும் திராவிட கருத்தியலை வெல்ல முடியாது என்பதால், இதுபோல வளைத்தல், உடைத்தல், ஒட்டல் என திருகு வேலைகளைத்தான் செய்ய முடிகிறது. யார் டில்லிக்கு போகிறார்கள், யார் டில்லியிலிருந்து வருகிறார்கள் என்று ஊடகங்கள் மீனம்பாக்கம் விமான நிலையத்திலேயே குடியிருக்க வேண்டியிருக்கிறது. அ.இ.அ.தி.மு.க அணிகள் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வம். டி.டி.வி.தினகரன்; பாஜக அணிகள் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை என ஆறேழு பேர் தவிர இப்போது புதிதாக த.வெ.க விஜய் என பாஜக பொம்மலாட்டம் களை கட்டுகிறது. எதிரணியில் சுயமரியாதைப் பதாகையின் கீழ் அணிவகுத்து நிற்கிறது கொள்கைக் கூட்டணி. இப்படியொரு சமனற்ற தேர்தல் களம் சமீப காலங்களில் உருவானதே இல்லை என்றுதான் கூற வேண்டும். ஆனாலும் ஊடகங்கள் காட்சி மயக்கங்களை உருவாக்கத்தான் செய்யும். கட்டுரையாளர் குறிப்பு: ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. https://minnambalam.com/chief-minister-stalin-and-his-political-maturity/#google_vignette

இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!

5 days 21 hours ago
உங்களுக்கு விசயம் தெரியாதே… அஜித் அரசியலுக்கு வராமைக்கும், அப்பத்துக்கு வச்ச மா புளித்தமைக்கும்… ஆறு மணிக்கு முன் வானம் வெளிக்கவும் கூட…. சீமான் தான் காரணமாக🤣. பிகு ஏனையோரை போல ரஜனியிம் சீமானின் காட்டு கத்தலை லெட்ப்ட் ஹாண்டில்தான் டீல் பண்ணினா. ரஜனி அரசியலுக்கு வராது போக முக்கிய காரணம்கள் தன் மீதே நம்பிக்கை இன்மை / அல்லது சரியான சுய மதிப்பீடு தொடை நடுங்கிதனம் சினிமா பணம், புகழை ரிஸ்க் எடுக்க விரும்பாமை மகள்கள் அட்வைஸ் கொவிட் கொவிட் வந்து மக்களை சந்திப்பது உயிராபத்தாக முடியலாம் என்ற அச்சம் ஏற்பட்டிராவிடின் வந்தே இருப்பார். வந்து விட்டேன் என்று அறிவிப்பே விட்டார். இந்த பனம் பழம் வீழ்ந்ததில் இந்த அண்டங்காக்காவுக்கு ஒரு சம்பந்தமுமில்லை.

யாழில் காணி உறுதிப்பத்திரம் தொடர்பான முறைப்பாட்டின் கீழ் பெண் சட்டத்தரணி கைது

5 days 21 hours ago
இப்படியான பெண் சட்டத்தரணிக்கு ஆதரவாக பின்கதவு புகழ் சுமத்திரன் ஆஜராகினார் என்று யுடுப் களில் சொல்கிறார்கள் . பாவம் இப்ப அனுரா வந்தது தொடக்கம் பின்கதவுக்கு உழைப்பு இல்லை போல் உள்ளது .

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

5 days 21 hours ago
15 பேரில் ஒரு 10 பேர்கள் வரை, நான் உட்பட, சும்மாதான் கிறுக்கியிருக்கின்றோம் போல...... ஏதோ இப்போதைக்கு காற்று என் பக்கம் வீசுது..............🤣. அதுவே தான்....... கடந்த ஐபிஎல் அது ஒரு சரித்திரம், பையன் சார்............. அதில் 5, 6, 7 என்று தொடராக முட்டைகள் வாங்கியவர்கள் பலர்................ ஆனால் நந்தனும், புலவரும் அப்படியே ஒன்று, இரண்டாகவே நின்றார்கள்................

விஜயின் அரசியல் எதிர்காலத்தை கரூர் அனர்த்தம் தீர்மானிக்குமா?

5 days 21 hours ago
இதன் அடிப்படையில் விஜய் தனது நேர ஒழுங்கமைப்பில் கவனம் செலுத்தவில்லை என்பது தெரிகின்றது விஜயிடம் எந்தவிதமான ஒழுங்கமைப்புக்களும் இருக்காது என்பது உளவுத்துறைக்குத் தெரிந்தும் வேண்டுமென்றே பாராபட்சமாக இருந்ததா? அவர் வரும் வரை மக்கள் கூட்டத்தை நெருக்கமான கூட்டமாக மாறுவதை காவல்துறை அவதானித்து தகுந்த நடவடிக்கை எடுத்திருக்கலாம் அல்லவா ? விஜயின் அரசியலை அவரால் தான் தீர்மானிக்க முடியும் அவரின் ஆதரவை எந்த விலை கொடுத்தாவது நாங்கள் வாங்கி விட வேண்டும் என பல கட்சிகளும் போடும் போட்டி அவருடைய வாக்கு வங்கியை அறை கூவுகின்றது எதுவுமே எளிதில் அனுமானிக்க முடியாது விஜய் + இந்திரா காங்கிரஸ் + எடப்பாடி என்ற கூட்டணி மட்டும் இன்னும் வெளியே தெரியவில்லை வந்தால் எப்படி இருக்கும் என்பதே எனது கேள்வி

யாழில் காணி உறுதிப்பத்திரம் தொடர்பான முறைப்பாட்டின் கீழ் பெண் சட்டத்தரணி கைது

5 days 22 hours ago
இதில் ஒரு சிலர் அரசியல் கட்சிகளில் பதவிகளில் இருப்பவர்கள் எனவும் அரசல் புரசலாகப் பேசப்படுகின்றது

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

5 days 22 hours ago
அப்படி நினைத்தே நாங்களும் குண்டக்க மண்டைக்கா தெரிவு செய்திருந்தோம் நமக்கு மட்டும் சரியா அமையுதில்லை இருந்தாலும் எங்களையும் இரண்டு பேர் தாங்கிப் பிடிப்பதை பார்க்க ஒரு ஆறுதல் 😂

விஜயின் அரசியல் எதிர்காலத்தை கரூர் அனர்த்தம் தீர்மானிக்குமா?

5 days 22 hours ago
கரூர் கூட்ட நெரிசலில் 41 மரணங்களுக்கு யார் பொறுப்பு? வழக்கறிஞர் எம். எல். இரவி கரூரில் நடந்துள்ள பெருந் துயரத்தில் விஜய்க்கு எதிரான கருத்துருவாக்கங்கள் ஆளும் கட்சியாலும், அவர்கள் ஆதரவாளர்களாலும் தீவிரமாக பரப்பப்படுகின்றன. இந்த சம்பவத்தில் விடை தெரியாத மர்மங்கள் உள்ளன. உண்மைகள் வெளிவர தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத விசாரணை அமைப்பின் தேவையை விவரிக்கிறார் வழக்கறிஞர் எம்.எல்.ரவி. த.வெ.க தலைவர் விஜய் திமுகவை கடுமையாக சாடி வரும் நிலையில் – இருதரப்புக்கும் ஒருவருக்கொருவர் பகைமை முற்றியுள்ள அரசியல் சூழலில் – விஜய் பேசும் கூட்டத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகளை – குற்றம் சாட்டப்படும் திமுக அரசின் காவல் துறையே எப்படி விசாரிக்க முடியும்…? என்பது ஒரு புறமிருக்க, விஜய் தரப்பிலும் பல குறைபாடுகள் இருக்கிறது. அவரை ஆதரிக்கும் நோக்கிலும் நாம் இந்த சம்பவத்தை பார்க்கவில்லை. அதே சமயம் இந்த சம்பவத்தில் மறைக்கப்பட்ட பல விஷயங்களை வெளிக் கொணர வேண்டியுள்ளது. த.வெ.க கட்சி தலைவர் விஜய் செப்டம்பர்- 27, அன்று கரூர் மாவட்டத்தில், அரசியல் பரப்புரை கூட்டம் நடத்த காவல் துறை முந்தின நாள் இரவு வரை இழுத்தடித்து, 21 கட்டளைகளுடன், மதியம் 3 மணியிலிருந்து 10 மணி வரை கூட்டம் நடத்த வேலுசாமிபுரத்தில் அனுமதித்தது. அதன் அடிப்படையில் விஜய் பகல் 12 மணிக்கு வருவதாக X தளத்தில் பதிவிட்டிருந்தாலும், காலதாமதமாக இரவு 7 மணிவாக்கில் அவர் உரையாற்ற வந்தார். பத்தாயிரம் பேர் வருவார் என்று சொல்லிய நிலையில், முப்பதாயிரம் பேர் கூடியது, குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டது. காலை 11 மணியிலிருந்து கூடிய கூட்டம் உணவு, குடிநீரின்றி தவித்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கிய நிலை..ஆகிய காரணங்களால் இந்த பெருந்துயரம் நடந்துள்ளது என காவல்துறை தெரிவிக்கிறது. இந்த சம்பவம் குறித்து அறிய நாங்கள் ஒரு வழக்கறிஞர் குழுவாக நேரடியாக கரூர் களத்திற்கே சென்று மக்களிடம் பேசினோம். அங்கே மக்கள் பல வலுவான கேள்விகளை எழுப்பினர். மக்கள் எழுப்பிய சந்தேகங்கள் விஜய்யின் வீதிக் கூட்டங்கள் ஏற்கனவே நான்கு மாவட்டங்களில் நடந்துள்ள வகையில், அவரது கூட்டத்திற்கு கட்டுக்கடங்கா கூட்டம் வருவதை காவல்துறை கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தவறியதும், குறுகலான சாலை வழங்கப்பட்டதும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்தக் கட்டுக்கடங்காத கூட்டத்தின் இடையில் வலிந்து ஆம்புலன்ஸ் வாகனம் செலுத்தப்பட்டு, அது கூட்ட நெரிசலில் புகுந்த வகையில் 9 குழந்தைகள் 13 ஆண்கள் 18 பெண்கள் என்று மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர், பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் பெற்றனர். விஜய் கூட்டம் நடந்த இடத்தை சுற்றிலும் இரு சக்கர வாகனங்கள் ரோட்டில் நிறுத்தப்பட்டு இருந்ததில், அந்த வாகனங்களில் விழுந்தும், அந்த வாகனங்கள் மக்கள் மீது விழுந்தும் பலர் படுகாயமுற்றனர். கூட்டம் நடைபெறும் இடத்தில் வாகனங்களை அனுமதித்துள்ளது காவலர்களின் அலட்சியத்தை காட்டுகிறது. சம்பவ இடத்தில் 500 காவலர்கள் பாதுகாப்புக்கு போடப்பட்டதாக சொல்வதை அங்குள்ள மக்கள் மறுக்கிறார்கள். மிகக் குறைவான காவலர்களே களத்தில் இருந்ததாக மக்கள் கூறுகின்றனர். காட்சிப் பதிவுகளும் இதையே சொல்கின்றன. சம்பவ இடத்தில் சில உயர்தர தனியார் மருத்துவமனைகள் இருக்கும் போது சுவாசிக்க முடியாமல் உயிருக்கு போராடுபவர்களை உடனே முதலுதவி தர அவற்றை பயன்படுத்திக் கொள்ளாமல், தூர இருக்கும் அரசு மருத்துவமனைக்கு அனைவரையுமே தூக்கி செல்ல யார் கட்டளையிட்டார்கள்? இது போன்ற எண்ணற்ற கேள்விகள், சந்தேகங்கள் உள்ளன. குற்றம் சாட்டப்பட்ட அமைப்பே விசாரணை செய்ய முடியாது இதையொட்டி கரூர் டவுன் காவல் நிலையம் ஆய்வாளர் அவர்கள் தன்னிச்சையாக, முதல் தகவல் அறிக்கை (FIR), பதிவு செய்துள்ளார். அவர் செய்த தவறை அவரே விசாரிப்பாரா? முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அவர்கள் நிர்வாகத்தை முடுக்கி விட்டும், இரவு 10.30 மணி அளவில் அவசரமாக தலைமை செயலகம் சென்று இதை விசாரிக்க முன்னால் நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்களை, தனி நபர் ஆணையமாக, நியமித்து உத்தரவிட்டுள்ளார். இறந்தவர்களுடைய சடலங்கள் இரவோடு இரவாக உடற் கூறாய்வு செய்து அவர்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்துவதற்காக இவ்வாறு செய்யப்பட்டதா? சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் நான் லஞ்சம், ஊழல், காவல்துறை அத்துமீறல்கள் போன்ற பல்வேறு அநீதிகளை எதிர்த்து கட்சி பாகுபாடின்றி நீதி மன்றத்தை நாடி வழக்கு தொடுத்துள்ளவன் என்ற நிலையில், இந்த கரூர் மரணங்கள் குறித்து, ஊடகங்கள், வலைதளங்களில் பல்வேறு விதமான செய்திகள் நிலவி வருவதால், உண்மைத் தன்மையுடன் நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்பதால், முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறை விசாரிப்பது சரியல்ல, சிபிஐ விசாரிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தேன். நீதி வழங்கப்படுவது மட்டுமல்லாமல், அது வழங்கப்படும் விதமும் வெளிப்படையாக காணத் தக்கதாக வேண்டும்” (Justice must not only be done but must also be seen to be done) என்னும் தத்துவத்தின் அடிப்படையில், கூட்டத்திற்கான இடத்தை தேர்வு செய்ததும், அனுமதி வழங்கியதும் காவல்துறை. எந்த ஒரு கூட்டத்திற்கும் அனுமதி வழங்கிய பின் பாதுகாப்பு அளிக்க வேண்டியது காவல் துறை. அவ்வாறு இருக்க இந்த மரணங்கள் ஏற்பட காவல் துறையின் குறைபாடுகளும் ஒரு காரணம். அனுமதி வாங்கிய இடம் நேரான ஒரு சாலை, இது போன்ற சூழலில் மக்கள் சிதறி ஓட வாய்ப்பில்லை (ஜாலின்வாலா பாக் நினைவுக்கு வருகிறது) என்பதாலும், காவல் துறையின் குறைபாடுகளை, அவர்களே விசாரிப்பது சரியல்ல. கரூர் நெரிசல் பலியை விசாரிக்கவுள்ள சிறப்பு விசாரணை குழு தலைவர் அஸ்ரா கர்க், ஐ.ஜி அவ்வாறு இருக்க காவல்துறையே வழக்கு பதிவு செய்து காவல்துறையே தன் மீதான விசாரணையை நடத்த முடியுமா, முடியாது. மேலும், த.வெ.க கட்சி விஜய், ஆளும் திமுக கட்சியை கடுமையாக சாடி வருவதால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஏதேனும் சூழ்ச்சிகளால் தவறுகள் நடந்துள்ளதா?, என்பதையெல்லாம் விசாரிக்க வேண்டிய கடமை உள்ளது. கூட்டம் நடைபெற்ற இடத்தில் மூடபடாமல் கால்வாய் இருந்துள்ளது, அதில் விழுந்தும் நிறைய பேர் இறந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இதை எல்லாம் கருத்தில் கொண்டு காவல்துறை விசாரித்தால் நேர்மையும் உண்மையும் வெளிப்படுமா? என்கின்ற ஒரு கேள்விக் குறி மக்கள் மனதில் இருக்கிறது. ஆகவே தான், நான் தேசிய மக்கள் சக்தி இயக்கம் சார்பில், சிபி ஐ விசாரணை தேவை என்று ( WP (MD) No 27563/2025) வழக்கு தொடர்ந்தேன்.. இதில் இரண்டு நிதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்ச் விசாரணையில், காவல்துறை இன்னும் விசாரணையை முடுக்கி விடவில்லை அதற்குள் அவர்கள் மீது சந்தேகப்பட்டு நீங்கள் வேறு விசாரணை குழுவுக்கு மாற்ற வேண்டுமென்றால், எவ்வாறு சரியாக இருக்கும், அதனால் நாங்கள் இந்த வழக்கை ஏற்க வில்லை நிராகரிக்கிறோம் என்று டிஸ்மிஸ் செய்தனர். அவசர கதியில் அரசு நியமித்த ஒரு நபர் ஆணையம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்ட துப்பாக்கி சூடு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையில் 17 காவல்துறை அதிகாரிகள் மீது குற்ற அறிக்கை சமர்ப்பித்து நடவடிக்கை கோரியும் இது வரை இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கான செலவு 5.6 கோடி ரூபாயாகும். ஆனால், பயனற்றுப் போனது. அது போல தற்போதைய அறிக்கையும் இந்த அரசால் கிடப்பில் போடப்படாது என்பதற்கு உத்திரவாதமில்லை. மேலும், அருணா ஜெகதீசன் ஒரு மாதத்திற்கு முன்பு தான் குண்டர் தடுப்பு சட்டம், தென் மண்டல ஆலோசனைக் குழு உறுப்பினராக இந்த அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு இருக்க மீண்டும் அவருக்கே இன்னொரு பதவியா?, தனி நபர் ஆணையம், அதுவும் அவசர கதியாக இரவு 10.30 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. அவருக்கான அலுவலகம் எங்கு உள்ளது?, தொலைபேசி எண்கள் என்ன? உதவியாளர்கள் தரப்பட்டார்களா? என்று எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை. இவ்வாறு அவசரகதியாக நியமித்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. முன்னாள் நீதிபதிகள் பலர் இருக்க, இவரை மட்டுமே அரசு மீண்டும், மீண்டும் தேர்ந்தெடுப்பது ஏன்? இதுபோக மதுரை கிளை உயர்நீதிமன்றம் இரண்டு நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்ச் காவல்துறை இன்னும் விசாரணை முடுக்கிவிடவில்லை என்று குறிப்பிடுகிறது. நீதிபதியின் வரம்பு மீறிய பேச்சு; அதே சமயம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி செந்தில்குமார் அவர்கள் வேறு ஒரு வழக்கை விசாரிக்கும் போது, த.வெ.க கட்சியை மிகவும் கடுமையாகச் சாடி, காவல் துறை விசாரணையை மெத்தனமாக, சரியாக நடத்தவில்லை. அதனால் சிறப்பு விசாரணை குழு அமைக்கபடுவதாக உத்திரவு பிறப்பிக்கிறார். அந்தக் விசாரணைக் குழுவின் உறுப்பினர் பெயர்களை அறிவித்து உடனடியாக விசாரணையை மாற்றவும் உத்தரவிடுகிறர். நீதிபதி செந்தில்குமார் தெரிவித்துள்ள ஒரு சார்பான கருத்துக்கள் விசாரணையின் போக்கை பாதிக்கும் என்ற கவலையும் ஏற்படுகிறது. மேலும் தனி நீதிபதி செந்தில்குமார் அவர்களுடைய தாயார் ஒரு முன்னாள் திமுக எம்.எல்.ஏ என்றும் மேலும் அவரது மகள் திருமணத்தில் மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்ட வீடியோ பல்வேறு ஊடகங்களிலும் வலை தளங்களிலும் செய்தி பரவி வருகிறது. இது மேலும் மக்களுக்கு உண்மை தன்மையும் நீதித் துறையின் மாண்பையும் கேள்விக் குறியாக்கி உள்ளது. இது போன்ற விசாரணைகளில் அரசு வழக்கறிஞரிடம், அதிகாரிகளின் பெயர் பட்டியலை பெற்று அதிலிருந்து தான் நீதிபதிகள் விசாரணை குழுவை தேர்தெடுப்பது வழக்கம். ஆனால், இங்கு நீதிபதி உடனடியாக பெயர்களை அறிவித்துள்ளது அவர் யாரோ எழுதிக் கொடுத்து அதை வாசிப்பது போல் உள்ளது. பெருந்திரளான பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், பல்வேறு அறிஞர்கள் த.வெ.க மீது குற்றம் சாட்டி கையெழுத்திட்ட கடிதம் வெளியிட்டுள்ளது மேலும் திமுக அரசின் மீது சந்தேகத்தை வலுவடைய செய்கிறது. இவ்வாறான சூழலில், தமிழக அரசின் நடவடிக்கையை பார்க்கையில் நேர்மையும், உண்மையுமான விசாரணை நடைபெறுமா? என்னும் சந்தேகம் வலுவடைகிறது. அதனால் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரித்தாலே நீதி வழங்கப்படுவதை காண முடியும் என வலியுறுத்தி நான் உச்ச நீதிமன்றம் செல்ல உள்ளேன். கட்டுரையாளர்; எம். எல். இரவி மூத்த வழக்கறிஞர் தலைவர், தேசிய மக்கள் சக்தி இயக்கம் https://aramonline.in/22944/karur-deaths-wnat-cpi-investigation/

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

5 days 23 hours ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 31 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 31 / முடிவுரை / 'விஜயன் உண்மையான நபரா?' தீபவம்சத்தின் 9 ஆம் அத்தியாயத்தின் 1 ஆம் வசனம் இலங்கைத் தீவு சிங்கத்தின் பெயரால் சிஹல [Sihala] எனக் அழைக்கப்பட்டது என்று கூறுகிறது. எனவே சிங்கள மொழிக்கும் அந்த மொழி பேசுபவர்களுக்கும் சிஹலவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றே பொருள் படுகிறது. இந்த அத்தியாயத்தின்படி, வங்க மன்னனின் மகள் சுப்பதேவி [Suppadevi] ஒரு சிங்கத்துடன் இணைந்து வாழ்ந்து இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்: அவர்கள் சிங்கபாகு மற்றும் சிங்கசீவலி [Sinhabahu and his sister Sinhasivali ] ஆகும். வாலிப பருவத்தை அடைந்த சிங்கபாகு தன்னுடைய தாய், தங்கை சகிதமாக குகையை விட்டு நாட்டுக்குள் நுழைந்தான். பின், அரச பாரம்பரியங்களுக்கு இணங்கி சுப்பதேவி தன் அத்தை மகனை மணம் கொண்டாள். அதன் பின், சிங்கபாகு, தனது தந்தையான சிங்கத்தைக் கொன்று, தனது சகோதரியான சிங்கசீவலியை மணம்புரிந்துக் கொண்டு அரசை தன் தாயின் கணவன் கைகளில் ஒப்புக்கொடுத்து விட்டு, நாட்டை விட்டு வெளியேறினான். தான் பிறந்த கானகத்தை அடைந்து அங்கு தனக்கென ஒரு நகரை அமைத்துக் கொண்டான். அதனை சுற்றிலும் கிராமங்களை அமைத்து சிங்கபுரம் என்ற அரசை நிறுவினான். தன்னுடைய தங்கை சிங்கசீவலியை அரசியாக்கி தன் நாட்டை ஆளத்தொடங்கினான். இவர்களுக்கு பிறந்தவன் தான் விஜயன். ஆனால், உங்களில் பலர் அடிப்படை உயிரியல் கட்டாயம் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒரு ஆண் சிங்கமும் ஒரு மனித பெண்ணும் புணர்ந்து சந்ததி உண்டாக்கும் என்பது நடைமுறை சாத்தியம் இல்லை. உதாரணமாக, சிங்கம் 38 குரோமோசோம்கள் / உடல் அணுக்களில் காணப்படும் மரபுத்திரிகள் கொண்டு உள்ளது , அதேவேளை மனிதன் 46 குரோமோசோம்கள் [Horses have 64 chromosomes, donkeys have 62, humans have 46, and lions have 38.] வைத்திருக்கிறான். அத்துடன் அவைகளின் வகைகளும் முக்கியம் [the types of chromosomes are also important.] ஆகும். உதாரணமாக, மனித-விலங்கு கலப்பினங்கள் நீண்ட காலமாக சமூக கலாச்சாரங்கள் முழுவதும் (குறிப்பாக புராணங்களின் அடிப்படையில்) இருந்து வருகின்றன, பல கண்டங்களில் பண்டைய கதைகளின் ஒரு பகுதியாக இருக்கின்றன, மேலும் சமீபத்திய காலங்களில் நகைச்சுவை அல்லது கேலிச்சித்திர புத்தகங்கள், திரைப்படங்கள், வீடியோ விளையாட்டுகள் மற்றும் பிற தொடர்புடைய வெகுஜன ஊடகங்களிலும் காணப்படுகின்றன. மற்றும் படி உண்மையில் அப்படி ஒன்றும் இல்லை, இருக்கவும் வாய்ப்பு இல்லை. எனினும், சிங்கப்புலி அல்லது லைகர் (Liger) என்பது ஆண் சிங்கம் (Panthera leo) மற்றும் பெண் புலி (Panthera tigris) இவைகளுக்கிடையே ஒரு கலப்பினச் சேர்க்கை மூலம் உருவாகிய கலப்பு உயிரினமாகும். இதற்கு காரணம் இந்த இரு இனத்தின் பெற்றோர்கள் பந்தேரா எனும் ஒரே பேரினத்தைச் சேர்ந்தவை என்பதால், மற்றும் அவைகளின் குரோமோசோம்கள் மிகவும் ஒத்த தன்மையாக இருப்பதால் ஆகும், அப்படியே புலிச்சிங்கம் அல்லது வேயரிமா (Tigon) ஆகும். அத்துடன் இவை பெருபாலும் மலட்டுவாகவும் [sterile] இருக்கின்றன. இன்னும் ஒரு உதாரணமாக, குதிரையையும், கழுதையையும் எடுத்தால், அவை முறையே 64, 62 குரோமோசோம்கள் கொண்டுள்ளன. அவைகள் புணர்ந்து கோவேறு கழுதை [mules] பிறக்கிறது. அது எப்பொழுதும் மலடும் ஆகும். சிங்கத்தையும், மனிதனையும் இனி கருத்தில் கொண்டால், இங்கு குரோமோசோம்கள் வேறுபாடு எட்டு ஆகும். எனவே எந்த சந்தர்ப்பத்திலும் சந்ததி உண்டாகாது. அப்படி என்றால், விஜயன் என்று உண்மையான ஒருவர் இருக்க முடியாது? இது நான் சொல்லவில்லை. அறிவியல் சொல்லுகிறது! கழுதையும் குதிரையும் ஒரே பேரினம் [genus], ஆனால் வெவ்வேறு இனங்கள். குரோமோசோம்கள் சொற்ப வித்தியாசம். எனவே தான் கோவேறு கழுதை முற்றிலும் மலடாகவே பிறக்கிறது. மனிதனும் சிங்கமும் ஒரே பேரினமும் இல்லை [do not even belong to same genus] . எனவே, சிங்கம் இளவரசியை உண்பதுதான் இறுதியாக நடந்து இருக்கும்! Genus மற்றும் Species அல்லது ஏதேனும் உயிரியல் பாடப்புத்தகத்தின் அர்த்தத்திற்காக, 'The Great Human Diaspora: The History of Diversity and Evolution By Luigi Luca Cavalli-Sforsa and Francesco Cavalli-Sforsa, 1995, translated from Italian to English'' என்ற புத்தகத்தின் பக்கம் 39 ஐப் பார்க்கவும். இலங்கையில் வாழ்ந்து பூர்வீக மக்களிடம் இருந்து நிலத்தை பறிக்க மகாநாம தேரரின் கட்டுக்கதை என்றே தோன்றுகிறது. ஒன்று மட்டும் உண்மை, அவர் தொடங்கி வைத்த நிலம் பறிப்பு, இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்னும் தொடர்வது கண்கூடு! அறிவு வளர்ந்து, மக்கள் நாகரிகம் அடைந்தாலும், பிற்போக்கு மத குருக்களும், அரசியல்வாதிகளும் இன்னும் அநாகரிகமாகவே இருப்பது ஆச்சரியமே, ஆனால் உண்மை!! விஜயனுக்குப் பிறகு அடுத்த அரசர் பண்டுவாசுதேவன் அல்லது பண்டுவாசுதேவ ஆவார், அவர் மகாவம்சத்தின்படி விஜயனின் தம்பி சுமித்தவின் [Sumitta] இளையகுமாரன் ஆகும். ஆனால் நாம் முன்பு அறிவியல் ரீதியாக கூறியது போல, விஜயன் உண்மையான ஆள் இல்லை. அதனால் அவனது தம்பி சுமித்தவும் உண்மையான ஆள் இல்லை. அப்படி என்றால், சுமித்தவின் மகன் பண்டுவாசுதேவனும் உண்மையான நபர் அல்ல. அடுத்த மன்னன் அபயன் அல்லது அபய, பண்டுவாசுதேவனின் மகன், எனவே அவன் ஒரு கற்பனை மனிதனின் மகனாக இருப்பதால் உண்மையான மனிதனாக இருக்க முடியாது? அடுத்த மன்னன் பண்டுகாபய அல்லது பண்டுகாபயன், அபயனின் சகோதரியின் மகன் என்பதால், உண்மையான மனிதனாக மீண்டும் இருக்க முடியாது? மூன்று நபர்களின் பிறந்த ஆண்டுகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன அல்லது நாளாகமங்களில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அவர்களின் பிறந்த ஆண்டுகள் கணக்கிடப்படலாம்? அவர்கள் பண்டுகாபய, மகிந்த தேரர் மற்றும் தேரி சங்கமித்தை (Sanghamitta, பாளி: சங்கமித்தா] ஆகும். என்றாலும், முன்பு கூறிய காரணங்களால், இந்த மூவரும் அதிகமாக உண்மையான நபர்களாக இருக்க முடியாது? எது என்னவென்றாலும், மகிந்த தேரரும், தேரி சங்கமித்தாவும் இலங்கையின் ஆட்சியாளர்கள் அல்ல, எனவே, அது இலங்கையின் வரலாற்றிற்கு முக்கியமும் இல்லை. மேலும், பண்டுகாபய முதல் துட்டைகைமுனு அல்லது துட்டகாமினி வரையிலான மன்னர்களின் ஆட்சியின் நீளம் மற்றும் அவர்கள் வாழ்ந்த மிகவும் சாத்தியமான வயது ஆகியவற்றில் முரண்பாடுகளைக் கொண்டுள்ளதால், வழக்கத்திற்கு மாறான அல்லது விதிமுறையிலிருந்து அவை மிகவும் வேறுபாடாகத் தோன்றுவதால், அவை உண்மையாக இருக்கும் எந்த சந்தர்ப்பம் இல்லை. நாம் முன்னரே குறிப்பிட்ட நான்கு அரசர்களைத் தவிர, உத்திய, மகாசிவன், சுரதிஸ்ஸ அல்லது சுரதிசா ஆகியவரும் இதேபோன்ற பழுத்த வயது மட்டும் வாழ்ந்திருக்க வேண்டும். எனவே, மூன்று தலைமுறைகளில் ஏழு மன்னர்கள் 107 வயது முதல் 189 வயது வரை வாழ்வது உண்மையாக இருக்க முடியுமா?, வாழ்வது மட்டும் அல்ல, அந்த வயது மட்டும் மன்னராக ஆட்சியும் செய்துள்ளார்கள் என்பதையும் நோக்குக. மகாவம்ச ஆசிரியர், இலங்கையில் புத்த சமயத்திற்கு ஒரு கவர்ச்சியை கொடுக்க, புத்தர் தனது கொள்கையை பரப்ப, தேர்ந்து எடுத்த மக்களாக சிங்களவர்களையும், தேர்ந்து எடுத்த நாடாக இலங்கையையும் தனது கதையில் வெளிக் காட்டி, அதற்கு மகுடம் வைத்தாற் போல், விஜயனினதும் அவனது தோழர்களினதும் இலங்கை வருகை நாளை செயற்கையாக, புத்தரின் மரண நாளுடன் ஒத்து போக செய்தது வெளிப்படையாக எந்த நடுநிலையாளருக்கும் கட்டாயம் தெரியும் [The author of Mahavamsa, artificially fixed the arrival of Vijaya and his compatriots to coincide with the passing away of Buddha in 543 BCE.]. அதற்கான அறிவியல் காரணங்கள் ஏற்கனவே விரிவாக அலசப் பட்டுள்ளது. அதே நேரத்தில் பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் உண்மையான ஆண்டு கிமு 483 என்று ஒப்புக்கொள்கிறார்கள். இருப்பினும், சரியான தேதி பற்றி பல்வேறு கோட்பாடுகள் உள்ளன. உதாரணமாக, சில வரலாற்றாசிரியர்கள் புத்தரின் மரணம் கிமு 410 இல் நிகழ்ந்ததாக நம்புகிறார்கள். எவ்வாறாயினும் கி மு 543 யைக் கருத்தில் கொண்டு, விஜயனுக்குப் பிறகு ஆட்சி செய்த சில மன்னர்களின் ஆட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது. ஒரு எடுத்துக்காட்டாக, அபயாவின் மருமகனான பாண்டுகபயா, கிமு 377 முதல் கிமு 307 வரை 70 ஆண்டுகள் ஆட்சி செய்ததாக நம்பப்படுகிறது. அவருடைய மகன் மூத்தசிவன் கிமு 307 முதல் கிமு 247 வரை 60 ஆண்டுகள் ஆட்சி செய்தார் எனவும் நம்பப்படுகிறது. அதாவது தந்தையும் மகனும் மொத்தம் 130 ஆண்டுகள் செய்தனர் என்றாகிறது! Part: 31 / Conclusion / Is Vijaya a real person? The Verse 1 of Chapter 9 of Dipavamsa says the Island of Lanka was called Sihala after lion. Sihala has therefore nothing to do with the Sinhala language or with those who are speaking that language. As per this Chapter, the daughter of Vanga king, Suppadevi, cohabited with a lion and gave birth to two children: Sihabahu and Sivali. Sihabahu married his sister Sivali. Vijaya was born to them. A male lion and a female human to have offspring is a biological impossibility. Humans and Lions are two different species, and would never have off springs. Lions have 36 chromosomes and humans have 46 chromosomes. Not only the number of chromosomes, but also the types of chromosomes are also important. A Lion and a Tigress may produce Ligers, and Tiger and Lioness may produce Tions, as their chromosomes are very much similar. In this case, they are mostly, but not always, sterile. Horses and donkeys have 38 and 36 chromosomes respectively. They mate to produce mules, but mules are always sterile. The difference of only two chromosomes makes the mule sterile. Humans have 46 chromosomes and the lions have 36 chromosomes, and mating of these two will never result in off spring. Therefore, Vijaya cannot be a real person. He is a concocted personality to steal the land from the original people of Lanka. See the page 39 of the Reference 'The Great Human Diaspora: The History of Diversity and Evolution By Luigi Luca Cavalli-Sforsa and Francesco Cavalli-Sforsa, 1995, translated from Italian to English' for the meaning of Genus and Species or any biology textbook. A group of similar speices belong to same Genus. Donkeys and horses belong to a same genus, but not to same species. All the donkeys belong to one species and they mate, male and female donkeys, to produce offspring. However, the hybrids between a horse and a donkey, mules or hinnies, are always sterile. Mules have relatively high load carrying capacity. Lions and Humans do not even belong to same genus. The only eventuality is for the lion to eat the adventurous woman. The next king after Vijaya is Panduvasudeva and he is, as per the Mahavamsa, the son of Sumita, the younger brother of Vijaya. Vijaya is not a real person and therefore his brother Sumita is also not a real person. Sumita’s son Panduvasudeva is also not a real person. The next king Abhaya is the son of Panduvasudeva, and therefore he, being a son of an imaginary person, could not be a real person. The next king Pandukabhaya, being the son of Abhaya’s sister, could not be a real person. The birth years of only three persons are given or could be calculated based on the information available in the chronicles. Pandukabhaya, Thera Mahinda and Theri Sanghamitta are those three. These three should be, most probably, not real persons. Thera Mahinda and Theri Sanghamitta are not rulers of Lanka and it is irrelevant to the history of Lanka. Also, The rules from Pandukabhaya to Dutthagamani have anomalies with respect to the lengths of their reigns and the most probable ages to which they lived. Other than the four kings we mentioned earlier, Uttiya, Mahasiva and Suratissa must also have lived to the similar ripe ages. Therefore, Seven kings of just three generations living to the age from 107 years to 189 years is really an absurdity. It looks like that the author of the Mahavamsa artificially fixed the arrival of Vijaya and his compatriots to coincide with the passing away of the Buddha in 543 BCE, while most historians now agree that the actual year was 483 BCE. However, there are different theories about the exact date. For example, Some historians believe the Buddha's death occurred around 410 BC, somewhere between the earlier and later dates. With this in mind, it is evident that the reigns of some of the kings who ruled after Vijaya were extended, particularly as father and son were said to have ruled for a total of 130 years. For example, King Pandukabhaya, the nephew of Abhaya, is believed to have ruled from 377 BCE to 307 BCE, a span of 70 years. His son, Muttasiva, ruled for 60 years, from 307 BCE to 247 BCE. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 32 தொடரும் / Will follow "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 31 https://www.facebook.com/groups/978753388866632/posts/31672899879025247/?

விஜயின் அரசியல் எதிர்காலத்தை கரூர் அனர்த்தம் தீர்மானிக்குமா?

5 days 23 hours ago
விஜயின் அரசியல் எதிர்காலத்தை கரூர் அனர்த்தம் தீர்மானிக்குமா? October 6, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இந்தியாவில் கோவில் திருவிழாக்கள், மத ஒன்றுகூடல்கள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ரயில் நிலையங்களில் சன நெரிசலும் உயிரிழப்புகளும் ஒன்றும் புதியவையல்ல. அவை பெரும்பாலும் அடிக்கடி நிகழ்கின்ற அனர்த்தங்கள் என்று கூறலாம். விளையாட்டுப்போட்டிகள், சில திரைப்பட வெளியீட்டு நிகழ்வுகளிலும் கூட நெரிசலில் மக்கள் மரணமடைந்திருக்கிறார்கள். ஆனால், அரசியல் பொதுக்கூட்டங்களில் மிகவும் அரிதாகவே நெரிசல் மரணங்கள் ஏற்பட்டதாகவும் தமிழ்நாட்டில் கரூரில் நடிகர் ஜோசப் விஜய் சந்திரசேகரின் தமிழக வெற்றிக்கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் செப்டெம்பர் 27 சனிக்கிழமை இரவு பெண்கள், குழந்தைகள், உட்பட 41 பேர் பலியான சம்பவமே அரசியல் பொதுக்கூட்டம் ஒன்றில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் மரணமடைந்த முதல் சம்பவம் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவில் முதன் முதலாக ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக ஆட்சிக்கு வந்த சினிமா நடிகர் என்று வரலாறு படைத்த எம்.ஜி. இராமச்சந்திரனுக்காக மக்கள் மணிக்கணக்காக அல்ல, நாட்கணக்காக இரவுபகலாக காத்திருந்த காலம் ஒன்று இருந்தது. அப்போது கடந்தவாரம் விஜயின் கூட்டத்தில் இடம்பெற்றதைப் போன்ற எந்தவொரு அனர்த்தமும் ஏற்பட்டதில்லை என்று சுட்டிக்காட்டும் இந்திய ஊடகங்கள் எம்.ஜி.ஆரின் கட்சி அமைப்புரீதியாக வலிமையாக இருந்ததும் கிராமங்கள் வரையில் அரசியல் அனுபவமுடைய கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் இருந்ததுமே அதற்கு காரணம் என்று கூறியிருக்கின்றன. விஜயின் தமிழக வெற்றிக்கழகம் அவரது சினிமாச் செல்வாக்கில் மாத்திரம் நம்பிக்கை வைத்து தொடங்கப்பட்ட கட்சி என்றும் அவருக்கு எந்த அரசியல் சிந்தனையோ அல்லது கோட்பாடோ கிடையாது என்றும் மற்றைய அரசியல் கட்சிகள் செய்துவந்த விமர்சனத்தை கரூர் சம்பவம் நிரூபித்திருக்கிறது என்றும் ஊடகங்கள் மாத்திரமல்ல, பல அரசியல் அவதானிகளும் கூறுகிறார்கள். பெருமளவில் மக்கள் கலந்துகொள்ளும் அரசியல் கூட்டங்களை பாதுகாப்பான முறையில் ஒழுங்குபடுத்தக்கூடிய அனுபவமும் ஆற்றலும் விஜயின் கட்சியினரிடம் இல்லாததையும் தனது இரசிகர்களை கட்டுப்பாடான கட்சித் தொண்டர்களாக மாற்றுவதில் அவர் அக்கறை காண்பிக்காததையுமே மக்கள் பலியானதற்கு பிரதான காரணம் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னமும் ஏழு மாதங்கள் இருக்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மகாநாடுகளிலும் விஜயின் பிரசாரக் கூட்டங்களிலும் ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கேற்றுவந்தது மற்றைய கட்சிகளுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. அவரைப் பார்ப்பதற்காக திரளும் மக்கள் கூட்டம் தேர்தலில் வாக்குகளாக மாறப்போவதில்லை என்று வெளிப்படையாகவே அரசியல்வாதிகள் கூறிவந்தார்கள். கூட்டணி அமைப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் விஜய் விடுத்த அழைப்பை எந்த அரசியல் கட்சியுமே பொருட்படுத்தவில்லை. அதனால், அவர் தனது பிரசாரக் கூட்டங்களுக்கு பெருமளவில் மக்களை அணிதிரட்டி தனது செல்வாக்கை நிரூபிப்பதில் தீவிர கவனத்தைச் செலுத்தினார் என்று தெரிகிறது. ஆயிரக் கணக்கில் மக்கள் கூடும் வரை பிரசாரக் கூட்ட அரங்குகளுக்கு வருவதை தாமதிக்கும் ஒரு யுக்தியை அவர் கடைப்பிடித்தார் என்பது வெளிப்படையானது. அனர்த்தத்தில் முடிந்துபோன கரூர் கூட்டத்துக்கு முன்னதாக அவரின் சில பிரசாரக் கூட்டங்களில் நினைத்துப் பார்க்க முடியாதளவு மக்கள் திரண்டதால் சனநெரிசல் ஏற்பட்டு குழப்பநிலை ஏற்பட்டதற்கு பின்னரும் கூட அத்தகைய ஆபத்தான நிலைவரம் மீண்டும் தோன்றுவதை தடுப்பதற்கு தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் உகந்த முன்னேற்பாடுகளைச் செய்வதில் கவனம் செலுத்தவில்லை என்றும் குற்றச்சாட்டப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, கரூரில் அனர்த்தம் நிகழ்ந்த மறுகணமே விஜய் தனது பிரசார வாகனத்தில் இருந்து இறங்கி தனது தனிப்பட்ட விமானத்தில் சென்னைக்கு திருப்பி விட்டார். இறந்தவர்களின் குடும்பத்தவர்களைச் சந்தித்து அவரோ அல்லது அவரது கட்சி முக்கியஸ்தர்களோ ஆறுதல் கூறவில்லை என்பது மாத்திரமல்ல காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளுக்கு சென்று பார்வையிடவுமில்லை. நான்கு மணித்தியாலங்களுக்கு பிறகு சமூக ஊடகத்தில் தனது அனுதாபத்தை தெரிவித்த விஜயின் செயல் அவர் இன்னமும் ஒரு சினிமா நடிகராக இருக்கிறாரே தவிர மக்களின் நலன்களில் அக்கறைகொண்ட அரசியல் தலைவராக தன்னை மாற்றிக் கொள்ளவில்லை என்பதை வெளிக்காட்டியது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவரது அமைச்சர்கள் மற்றைய கட்சிகளின் தலைவர்கள் உடனடியாகவே வைத்தியசாலைகளுக்கு சென்று காயமடைந்தவர்களை பார்வையிட்ட அதேவேளை, விஜய் தனது பிரசாரங்களை இரு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தாரே தவிர, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவில்லை. மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா இழப்பீட்டை முதலமைச்சர் அறிவித்த பிறகு 20 இலட்சம் ரூபா இழப்பீட்டு அறிவிப்பு விஜயிடமிருந்து வந்தது. கரூரில் அவரைப் பார்ப்பதற்காக பகல் பூராவும் உணவோ தண்ணீரோ இன்றி சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருந்த மக்களுக்கு நேர்ந்த அனர்த்ததுக்கு பின்னர் விஜய் நடந்து கொண்ட முறை அவரது அரசியல் தலைமைத்துவ ஆற்றல் எதிர்நோக்கிய முதல் பரீட்சையிலேயே அவர் தோல்வி கண்டுவிட்டார் என்பதை நிரூபித்திருக்கிறது. தன்னில் தவறு இருப்பதாக அவர் இன்னமும் வெளிப்படையாக ஒத்துக் கொள்ளவில்லை. மக்களிடம் மன்னிப்பும் கேட்கவில்லை. தன்னைப் பார்க்க வந்த மக்கள் வீதிகளில் மயங்கி வீழ்ந்து கொண்டிருந்த வேளையில் சினிமா படப்பிடிப்பு ஒன்றை இடையில் நிறுத்திவிட்டு வீடு திரும்புபவர் போல அவர் நடந்துகொண்டது பாரதூரமான நிலைவரங்களை கையாளுவதிலும் முதிர்ச்சியான தீர்மானங்களை எடுப்பதிலும் அவரின் அனுபவமின்மையை வெளிக்காட்டியது. விவேகமும் மக்களின் நலன்களில் அக்கறையும் கொண்ட ஒரு அரசியல்வாதியாக இருந்திருந்தால், தான் நடந்துகொண்ட விதத்துக்கு முற்றிலும் மாறாகவே விஜய் நிச்சயமாக நடந்து கொண்டிருப்பார். அனர்த்தம் நிகழ்ந்த இடத்தில் குழப்பநிலையை கட்டுப்படுத்துவதற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கும் தனது கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து விஜய் முயற்சி செய்திருக்க வேண்டும். சம்பவத்துக்கு பிறகு புத்திசாலிகளாக பேசுவது சுலபம். அரசியல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் மக்கள் பாதிக்கப்படாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து தற்போது அரசியல்வாதிகளும் ஊடகங்களும் அறிவுரை கூறிவருகிறார்கள். கரூரில் இடம்பெற்றதைப் போன்று பொது நிகழ்வுகளில் சனநெரிசல் ஏற்படாதிருப்பதை உறுதிசெய்வதற்கு விதிமுறைகளை வகுக்க அரசியல் கட்சிகளுடனும் பொது அமைப்புக்களுடனும் கலந்தாலோசனை நடத்தவிருப்பதாக அறிவித்திருக்கும் முதலமைச்சர் ஸ்ராலின் கரூர் அனர்த்தம் குறித்து விசாரண செய்வதற்கு ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி ஒருவரைக் கொண்ட தனிநபர் ஆணையம் ஒன்றை நியமித்திருக்கிறார். அந்த ஆணையம் கையளிக்கும் அறிக்கையின் பிரகாரம் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார். ஏற்கெனவே ஐந்து மாவட்டங்களில் தனது கட்சி பிரசாரக் கூட்டங்களை நடத்தியபோது நிகழாத அசம்பாவிதங்கள் கரூரில் மாத்திரம் எவ்வாறு நேர்ந்தது என்று கேள்வி எழுப்பியிருக்கும் விஜய், சதி ஒன்று இடம்பெற்றிருக்கிறது என்பது போன்று சந்தேகத்தைக் கிளப்புகிறார். விஜயின் கட்சி தங்களுக்கு ஒரு பெரிய சவாலாக அமையாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கு ஆளும் திராவிட முன்னேற்றக் கழகமும் ஏனைய கட்சிகளும் கரூர் அனர்த்தத்தை தங்களால் இயன்ற அளவுக்கு பயன்படுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை. தனக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை விஜய் எவ்வாறு கையாளப் போகிறார் என்பதிலும் அவரது அரசியல் எதிரிகள் அனர்த்தத்தை எவ்வாறு தங்களது அரசியல் அனுகூலத்துக்காக பயன்படுத்தப் போகிறார்கள் என்பதிலுமே அவரின் எதிர்கால வாய்ப்புக்கள் தங்கியிருக்கின்றன. குழப்பகரமான அரசியல் நிலைப்பாடு: நெருக்கடியான சூழ்நிலைகளை கையாளுவதில் விஜயின் அனுபவமின்மையும் பொறுப்புணர்வின்மையும் ஒருபுறமிருக்க, அவர் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய நாட்களில் (2024 பெப்ரவரி) இருந்து தனது அரசியல் கொள்கையை பொறுத்தவரையிலும் கூட குழப்பகரமான கருத்துக்களையே கூறிவருகிறார். மத்தியில் பாரதிய ஜனதாவும் மாநிலத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் தனது அரசியல் எதிரிகள் என்று கூறிய அவர், தனது கோட்பாட்டு வழிகாட்டிகளில் ஒருவராக பெரியார் ஈ.வெ. இராமசாமியை குறிப்பிட்டார். அம்பேத்காரின் கொள்கைகளையும் புகழ்ந்து பேசும் விஜய் திராவிட முன்னேற்றக்கழகத்தின் நீண்டகால நேசக்கட்சியான காங்கிரஸிடமிருந்து தூரவிலகியிருந்தாலும், காமராஜரின் இலட்சியங்களை பின்பற்றுவதாக உறுதியளித்தார். 2025 ஆகஸ்ட் 21 ஆம் திகதி மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் மகாநாட்டு அரங்கை முன்னாள் முதலமைச்சர்களான அண்ணாத்துரையினதும் எம்.ஜி.ஆரினதும் பிரமாண்டமான ‘கட் அவுட்கள்’ அலங்கரித்தன. திராவிட கட்சிகள் பாதைமாறிப் போய்விட்டதால் தமிழ்நாட்டுக்கு புதியதொரு பாதையை காட்டப்போவதாக அவர் கூறுகிறார். காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து அண்ணாத்துரை தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் 1967 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததையும் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்கடித்து எம்ஜி.ஆர். 1977 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததையும் உதாரணங்களாக சுட்டிக்காட்டும் விஜய், அதேபோன்று 2026 சட்டசபை தேர்தலிலும் வரலாறு திரும்பப் போகிறது என்று பேசுகிறார். நீண்டகால அரசியல் போராட்டங்கள் மற்றும் அனுபவங்களுக்கு பிறகு முதலமைச்சர்களாக பதவிக்குவந்து அண்ணாத்துரையும் எம்.ஜி. ஆரும் படைத்த சாதனையை தன்னாலும் நிகழ்த்திக்காட்ட முடியும் என்று ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அரசியலில் பிரவேசித்த விஜய் கூறுவது மிகவும் நகைப்புக்கிடமானதாக இருக்கிறது. வெறுமனே அரசியல் சுலோகங்கள் வரலாற்றைத் திருப்பி எழுதுவதில்லை. தனது கட்சியிடம் தெளிவான அரசியல் நிகழ்ச்சி நிரலோ அல்லது மாற்றுத்திட்டமோ இல்லாமல் இன்னும் ஏழு மாதங்களில் முதலமைச்சராக வருவதற்கு அவர் கனவு காண்கிறார். தமிழ்நாட்டு மக்கள் சினிமா நட்சத்திரங்கள் மீது கொண்டிருக்கும் வெறித்தனமான பக்தியின் விளைவாக மாநில அரசியலில் ஆழமாக வேரூன்றிவிட்ட ஆரோக்கியமற்ற ஒரு கலாசாரத்தையும் கரூர் அனர்த்தம் மீண்டும் அம்பலப்படுத்தியிருக்கிறது. பொருளாதாரத்திலும் கல்வி மற்றும் சமூகநீதியிலும் பாரிய முன்னேற்றங்களை கண்டிருப்பதாக பெருமை பேசுகின்ற ஒரு மாநிலத்தில் சினிமா கவர்ச்சி தொடர்ந்தும் அரசியலைத் தீர்மானிக்கின்ற போக்கு துரதிராஷ்டவசமானது. எவரும் அரசியலில் பிரவேசிக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் மாத்திரமே திரைப்படங்களில் மக்களைப் பாதுகாப்பவர்களாகவும் நீதிக்காக உயிரைக் கொடுத்துப் போராடுபவர்களாகவும் வேடங்களில் நடிப்பவர்கள் அரசியலில் பிரவேசிப்பதற்கும் முதலமைச்சராக வருவதற்கும் தங்களுக்கு உரிமையும் அருகதையும் இருப்பதாக நினைக்கிறார்கள். https://arangamnews.com/?p=12369

என்.பி.பி அரசாங்கம் ஆயிரம் மடங்கு சிறந்தது – ராஜபக்சர்களை குற்றம் சாட்டுகின்றார் சரத் பொன்சேகா

5 days 23 hours ago
என்.பி.பி அரசாங்கம் ஆயிரம் மடங்கு சிறந்தது – ராஜபக்சர்களை குற்றம் சாட்டுகின்றார் சரத் பொன்சேகா October 6, 2025 12:41 pm கடந்த கால அரசாங்கங்களை விட தற்போதை அரசாஙம் ஆயிரம் மடங்கு சிறந்தது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஊழல் செய்பவர்களைப் பாதுகாக்காமல் இருக்க தற்போதைய அரசாங்கம் முதுகெலும்பாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ராஜபக்சக்கள் ஊழல் வலையமைப்பை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்று கட்டுப்படுத்தி வருவதாகவும், இதன் விளைவாக, நாட்டில் ஊழல் எல்லைகளை உடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சிறிய குறைபாடுகள் இருந்தபோதிலும், இந்த அரசாங்கம் முந்தைய அரசாங்கங்களை விட ஆயிரம் மடங்கு சிறந்தது என்று நான் முழு மனதுடன் கூறுகிறேன். ஊழல் செய்பவர்களைப் பாதுகாக்காமல் இருக்க இந்த அரசாங்கம் முதுகெலும்பாக இருப்பதால், முந்தைய எந்தவொரு அரசாங்கத்தையும் விட தற்போதைய அரசாங்கம் சிறந்தது. ஒரு திருடன் கடந்த காலத்தில் ஏதேனும் குற்றம் செய்திருந்தால், அவனிடம் பணம் இருந்தால், அவனிடம் குண்டர் சக்தி இருந்தால், பின் கதவு வழியாக அதிலிருந்து தப்பிக்க முடியும். எந்தவொரு மோசடியிலிருந்தும் அவன் தப்பிக்க முடியும். எனினும், மோசடி செய்பவர்கள் பின் கதவு வழியாக தப்பிக்கும் வாய்ப்பை இந்த அரசாங்கம் குறைந்தபட்சம் தடுத்து நிறுத்தியுள்ளது. சட்டத்தை செயல்படுத்தவும் தற்போதைய அரசாங்கம் முயற்சிக்கின்றது. இது நூறு வீதம் வெற்றிபெறவில்லை என்றாலும், முந்தைய அரசாங்கங்களை விட ஆயிரம் மடங்கு சிறந்தது என்று நான் அச்சமின்றி சொல்ல முடியும். இந்த ஊழல் வலையமைப்பை இந்த நாட்டில் ராஜபக்சேக்கள் சர்வதேச அளவில் முன்னெடுத்துச் சென்று கட்டுப்படுத்தி வருகின்றனர். சகோதரர்கள், சகோதரிகள், தந்தைகள், மாமாக்கள் மற்றும் மகன்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த ஊழல் வலையமைப்பை முழுமையாகக் கட்டுப்படுத்துகிறார்கள். அதனால்தான் இந்த நாட்டில் ஊழல் வேலிகளை உடைத்தெறிந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://oruvan.com/the-npp-government-is-a-thousand-times-better-sarath-fonseka-accuses-the-rajapaksas/

இந்த ஆண்டிற்கான "நோபல் பரிசு" பெற்றவர்கள்.

5 days 23 hours ago
ட்ரம்ப் அவர்களுக்கு முப்பத்திரண்டும் விழ்ந்து முடிந்ததும் அவருக்கு “நோ பல்” பரிசு வழங்கி அவரையும், பாகிஸ்தான் தலைவர் அவர்களையும் மகிழ்விக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.🥱

யாழில் காணி உறுதிப்பத்திரம் தொடர்பான முறைப்பாட்டின் கீழ் பெண் சட்டத்தரணி கைது

5 days 23 hours ago
வாட்ஸப்பில் இருந்து.. மேற்படி விடயங்கள் தொடர்பில் பல ஊகங்கள் விளக்கங்கள் வெளிவருகின்றன. மேற்படி உறுதி ஒப்புவ தொடர்பான சம்பவங்கள் பல ரணிலின் காலத்தில் இனம் காணப்பட்டதாகவும் சட்டத்தரணிகள் குழு ரணிலைச் சந்தித்து அந்த விசாரணைகளை நிறுத்தியதாகவும் அறியப்படுகின்றது. தற்போது AKD அரசு அவற்றை விசாரிக்க ஆரம்பித்ததாகவும் அதனை எதிர்த்தே நாளைய பணி பகிஷ்கரிப்பு எனவும் சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால் விடயமறிந்த சில வட்டாரங்கள் கைது செய்யப்பட்ட முறை தவறானதால் ( பெண் பொலிசார் பங்கு பெறவில்லை. நீதிமன்ற அனுமதியில்லாமல் சட்டத்தரணியின் அலுவலகம் சல்லடையிடப்பட்டமை என ...) பணி பகிஷ்கரிப்பு எனவும் தெரிவிக்கின்றனர். வேறு சிலர் பொலிசார் மேற்படி முறைப்பாட்டை பல காலத்தின் முன் கிடைத்தவுடன் AG க்கு அனுப்பி ஆலோசனை பெற்ற பின்பே கைது செய்ததாகவும் பொலிசார் கூறுகின்றனர். எது எப்படியிருப்பினும் பொது மக்கள் நீதி அனைவருக்கும் பொதுவானதே என வாதிடுகின்றனர். சம்பந்தப்பட்ட சட்டத்தரணி மிகவும் இளம் பெண் சட்டத்தரணி எனவும் சிரேஷ்ட நிலதாரியின் கீழ் வேலை புரிவதாகவும் தவறுதலாக POWER OF Attorney ஒன்றை கையாண்டதாகவும் ஊர்ஜித மற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!

5 days 23 hours ago
இவர் எப்பொழுதும் நழுவுகிற மீன். இவருடைய ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு தமிழர் கொடுக்க அவர்களுக்கு “இதோ வருகிறேன் அதோ வருகிறேன் “என்று சொல்லி கடைசியில் தமிழருக்கு ஏதும் செய்யாமல் போனவர். ஆனாலும் சீமான் சமீபத்தில் இவரிடமும் போய் வந்து வாயாறப் புகழ்ந்து தள்ளியிருந்தார்.

இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!

5 days 23 hours ago
கவலைப்படாதே சகோதரா. புலி ஒன்று பதுங்கியிருக்கிறது. அதனால் எப்போதும் பதுங்கியிருக்க முடியாது. வெளியே வரும். உங்களுக்குத் தெரியாததல்ல. ஆனாலும் சொல்கிறேன். மீஸா சட்டத்தில் பல திமுக ஆட்களை இந்திரா உள்ளே அள்ளிப் போட்டார். சுடலையையும் அவர் விட்டு வைக்கவில்லை.சிறையில் நல்ல சாப்பாடு போட்டு, சுடலையை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டு அனுப்பியிருந்தார்கள். ஆனால் அதன் பிறகு எம்ஜிஆரை வீழ்த்த இந்திராவோடு கருணாநிதி கூட்டுச் சேரவில்லையா? கை கோக்கவில்லையா? அதுதானே அரசியல். தேர்தல் கூட்டு களநிலவரத்தை வைத்து மாறும். அதிமுக வும் அடுத்த கரையில் தூண்டில் போட்டு காத்து நிற்கிறது. தனித்தா? கூட்டா? எதுவானாலும் பாதிப்பு திமுகவுக்கே. இந்த இடைவெளியில் அண்ணன் கடலில் படகில் போய் ஏதோ செய்யப் போகிறாராமே. அதைப் பாருங்கள். கருர் சோகத்தில் இருந்து மீள அண்ணனின் நகைச்சுவையும் தேவைதானே?
Checked
Sun, 10/12/2025 - 18:00
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed