2 months 2 weeks ago
திசைகள் : தமிழின் மற்றொரு சிறப்பு .......... ! 👍
2 months 2 weeks ago
2 months 2 weeks ago
குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித் திரிந்தோமே ........ ! 😀
2 months 2 weeks ago
2 months 2 weeks ago
இப்ப என்ன சொல்ல வாறியல் 😡
2 months 2 weeks ago
வணக்கம் வாத்தியார் ........ ! ஆண் : ஆத்தா உன் சேலைஆகாயம் போல ஆத்தா உன் சேலை ஆகாயம் போல ஆத்தா உன் சேலை ஆகாயம் போல ஆண் : தொட்டி கட்டி தூங்க தூளி கட்டி ஆட ஆத்துல மீன் பிடிக்க அப்பனுக்கு தலை தொவட்ட தொட்டில் கட்டி தூங்க தூளி கட்டி ஆட ஆத்துல மீன் பிடிக்க அப்பனுக்கு தலை தொவட்ட ஆண் : பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும்.. நான் செத்தாலும் என்ன போத்த வேணும்…. பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும்.. செத்தாலும் என்ன போத்த வேணும்…. ஆண் : தொட்டிக்குள்ள நடிச்சா அது அழகு முத்து மாலை காயம் பட்ட வெரலுக்கு கட்டு போடும் உன் சேலை ஆண் : நீ கட்டியிருக்கும் சேலை அது கண்ணீரில் மணக்கும் உன் சேலை கட்டி எறச்சா தண்ணி சக்கரையா இனிக்கும் ஆண் : என் உசுருகுள்ள சேலை அது மயில் இறகா விரியும் உன் வெளுத்த சேலை திரி போட்டா வெளக்கு நல்லா எரியும் உன் சேலை தானே பூஞ்சோலை தானே ஆண் : அக்கா கட்டி பழக நான் ஆடு கட்டி மேய்க்க ஓட்டை குடிசை வெயிலுக்கு ஒட்டு போட்டு மறைக்க என் கண்ணில் ஒரு தூசு பட்டா ஒத்தடமும் கொடுக்கும் ஆண் : அட கஞ்சி கொண்டு போனா சேலை சும்மாடாக இருக்கும் நான் தூங்கும்போது கூட அது தலையணையா பேசும் ஆண் : அட வெக்கை வரும் நேரம் ஒரு விசிறி போல வீசும் உன் சேலை தானே பூஞ்சோலை தானே .......... ! --- ஆத்தா உன் சேலை ஆகாயம் போல ---
2 months 2 weeks ago
பாட்டு ஒரு பாட்டு ......... ! 😍
2 months 2 weeks ago
சீனாவில் தலைகீழாக மாறிய நிலைமை: குழந்தை பெற்றால் பணம் கொடுப்பதாகக் கூறும் அரசு பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பு அதன் சர்ச்சைக்குரிய 'ஒரு குழந்தை கொள்கையை' ஒழித்த பிறகும், நாட்டின் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. கட்டுரை தகவல் ஆஸ்மண்ட் சியா வணிக செய்தியாளர், பிபிசி செய்திகள் பிரிவு 29 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவில் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்காக அரசு அறிவித்த முதல் நாடு தழுவிய மானியத்தின் கீழ், மூன்று வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு 3,600 யுவான்( 500 டாலர்) பெற்றோருக்கு வழங்கப்படுகிறது. சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பு, அதன் சர்ச்சைக்குரிய 'ஒரு குழந்தை கொள்கையை' கைவிட்ட பிறகும், நாட்டின் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த மானியங்கள் சுமார் 20 மில்லியன் குடும்பங்களுக்கு குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவுகளை ஈடுசெய்ய உதவும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் சீனா, மக்கள் தொகை நெருக்கடியை எதிர்கொள்கிறது. இதனால், மக்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள ஊக்குவிக்க, பல மாகாணங்கள் முன்னோட்டமாக சில மானியங்களை வழங்கி வருகின்றன. திங்களன்று அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், பெற்றோருக்கு ஒரு குழந்தைக்கு மொத்தம் 10,800 யுவான் வரை வழங்கும். இந்தக் கொள்கை, 2025 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே அமல்படுத்தப்படும் என சீனாவின் அரசு ஊடகமான சிசிடிவி தெரிவித்துள்ளது. 2022 மற்றும் 2024 க்கு இடையில் பிறந்த குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களும் பகுதி மானியங்களைப் பெற விண்ணப்பிக்கலாம். சீனாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க உள்ளூர் அரசாங்கங்கள் மேற்கொண்ட முயற்சிகளைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம், XIQING WANG/BBC மார்ச் மாதத்தில், சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஹோஹோட் நகரம், குறைந்தது மூன்று குழந்தைகளைக் கொண்ட தம்பதிகளுக்கு ஒரு குழந்தைக்கு 100,000 யுவான் வரை வழங்கத் தொடங்கியது. பெய்ஜிங்கின் வடகிழக்கில் உள்ள ஷென்யாங் நகரம், மூன்று வயதுக்குட்பட்ட மூன்றாவது குழந்தையைக் கொண்ட உள்ளூர் குடும்பங்களுக்கு மாதத்திற்கு 500 யுவான் வழங்குகிறது. கடந்த வாரம், உள்ளூர் அரசாங்கங்களை இலவச மழலையர் கல்வி திட்டங்களை உருவாக்குமாறு சீனா வலியுறுத்தியது. சீனாவைத் தளமாகக் கொண்ட யுவா மக்கள்தொகை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வின்படி, குழந்தைகளை வளர்ப்பதற்கு அதிக செலவாகும் நாடுகளில் சீனாவும் ஒன்று. சீனாவில், ஒரு குழந்தையை 17 வயது வரை வளர்ப்பதற்கு சராசரியாக 75,700 டாலர் வரை செலவாகும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், சீனாவின் மக்கள்தொகை மூன்றாவது ஆண்டாக தொடர்ச்சியாக குறைந்துள்ளது என்று அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. தேசிய புள்ளிவிவர பணியகத்தின் தகவல்படி, 2024 ஆம் ஆண்டில் சீனாவில் 9.54 மில்லியன் குழந்தைகள் பிறந்துள்ளனர். இது முந்தைய ஆண்டை விட சற்று அதிகம்தான், ஆனால் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள்தொகை தொடர்ந்து சுருங்கிக்கொண்டே வருகிறது. அதேபோல், சீனாவின் 140 கோடி மக்கள் தொகையும் வேகமாக முதுமை அடைந்து வருகிறது. இது அந்நாட்டின் மக்கள்தொகை குறித்த கவலைகளை மேலும் அதிகரிக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c39dlg3l4leo
2 months 2 weeks ago
அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தவுமில்லை, மோசடி செய்யவுமில்லை - நாமல் ராஜபக்ஷ Published By: VISHNU 30 JUL, 2025 | 02:16 AM (இராஜதுரை ஹஷான்) அரச சொத்துக்களை நாங்கள் முறைகேடாக பயன்படுத்தவுமில்லை, மோசடி செய்யவுமில்லை. நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. நீதித்துறையின் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. எமது தரப்பு நியாயத்தை குறிப்பிட்டு நீதியை பெற்றுக்கொள்வோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (29) முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவதற்கு நல்லாட்சி அரசாங்கம் எடுத்த தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியில் இறங்கி போராடினோம். எம்முடன் மக்கள் விடுதலை முன்னணியினரும் அன்று வீதியில் இறங்கி போராடினார்கள். இந்த போராட்டத்தின் போது நாங்கள் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றோம். அந்த வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகாத காரணத்தால் தான் அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் என்னை கைது செய்வதற்கு திங்கட்கிழமை (28) பிடியாணை பிறப்பித்தது. செவ்வாயக்கிழமை (29) நீதிமன்றத்தின் முன்னிலையாகி அந்த பிடியாணையை நீக்கிக் கொண்டேன். நீதிமன்ற கட்டமைப்பை அரசியல்மயப்படுத்த இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது. எம்மை கைது செய்வதால் நடைமுறையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது. போராட்டங்களினால் நாட்டை அபிவிருத்தியடைய செய்ய முடியாது என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார். கடந்த 75 ஆண்டுகாலமாக யார் போராட்டங்கள் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டது. மக்கள் விடுதலை முன்னணி கடந்த 75 வருட காலமாக ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்கள் முன்னெடுத்த அபிவிருத்தி எதிராகவே போராடியது. அன்று போராடியது. இன்று ஏதும் தெரியாமல் தள்ளாடுகிறது. எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 1 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதுவரையில் தொழிற்றுறையை விருத்தி செய்யும் எவ்வித திட்டங்களும் செயற்படுத்தப்படவில்லை. இவ்வாறான நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கிடப்பட்ட பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு அடைய முடியும் என்றார். https://www.virakesari.lk/article/221323
2 months 2 weeks ago
இந்தியப் பெருங்கடலுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை Published By: DIGITAL DESK 3 30 JUL, 2025 | 08:54 AM ரஷ்யாவின் தூர கிழக்கு பிராந்தியமான கம்சட்காவில் 8.8 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளை சுனாமி தாக்கலாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதேவேளை, இந்திய பெருங்கடலுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என இந்தோனேசியாவில் உள்ள அதன் சுனாமி சேவை வழங்குநர் (InaTEWS-BMKG) ஊடாக இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மற்றும் தணிப்பு அமைப்பு (IOTWS) உறுதிப்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/221332
2 months 2 weeks ago
Published By: VISHNU 29 JUL, 2025 | 10:47 PM யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்களில் 9 பிரதேச செயலகங்களில் மட்டும் நிரந்தர நிர்வாக உத்தியோத்தர் (AO) காணப்படுகின்ற நிலையில் ஏனைய 6 பிரதேச செயலகங்களிலும் நிரந்த உத்தியோகத்தர் இன்றி பதில் கடமை உத்தியோகத்தர்களே கடமையில் உள்ளமை தகவல் அறியும் சட்ட மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் உள்ள பிரதேச செயல்களான யாழ்ப்பாணம், நல்லூர், சங்கானை, உடுவில், சாவகச்சேரி, கரவெட்டி, பருத்தித்துறை மற்றும் மருதங்கேணி ஆகிய பிரதேச செயலகங்களில் கடமையில் உள்ள நிர்வாக உத்தியோத்தர்கள் அனேகமாக 2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்றவர்களாக காணப்படுகின்றனர். இந்நிலையில் கோப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றம் நிர்வாக உத்தியோத்தர் மட்டும் 2011 இருந்து இன்று வரை இடமாற்றம் ஏதும் இன்றி கோப்பாய் பிரதேச செயலகத்தில் 14 வருடங்களாக தொடர்ந்து கடமையில் உள்ளார். ஏனைய பிரதேச செயலகங்களான வேலனை, நெடுந்தீவு ஊர்காவற்துறை, காரைநகர், தெல்லிப்பழை மற்றும் சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலகங்களில் நிர்வாக உத்தியோத்தர் நிரந்தரமாக நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/221319
2 months 2 weeks ago
பிரச்சனை இல்லையாம், எதற்கும் கவனமாக இருங்கள்.
2 months 2 weeks ago
கடைசி டெஸ்டிற்கான பிட்ச் எப்படி இருக்கும்? பார்வையிட்ட கம்பீர் மைதான ஊழியருடன் வாக்குவாதம் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கட்டுரை தகவல் ஃபியோன் வின் பிபிசி விளையாட்டு செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ள ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பான பயிற்சியின் போது சர்ரே மைதான பணியாளருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சர்ரே மைதானத்தின் தலைமை பணியாளர் லீ ஃபோர்டில் உடன் விரலை நீட்டி கம்பீர் பேசியது வலைப் பயிற்சி காணொளியில் பதிவாகியுள்ளது. அந்தக் காணொளியில் கம்பீர், "நாங்கள் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் கூற முடியாது" மற்றும் "நீங்கள் ஒரு களப் பணியாளர் மட்டுமே, அதற்கு மேல் எதுவும் இல்லை" என உரக்க கூறியதை கேட்க முடிந்தது. சம்பவம் நடந்த போது அங்கிருந்த இந்தியாவின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக், அதன் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது "டெஸ்ட் போட்டிகாக விக்கெட்டை (ஆடுகளத்தை) பார்வையிட பயிற்சியாளர்கள் சென்ற போது விலகிச் செல்லுமாறு கூறப்பட்டனர்" எனத் தெரிவித்தார். "நாங்கள் விக்கெட் மீது நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்த போது, மைதான பணியாளர்களில் ஒருவர் வந்து அங்கிருந்து இரண்டரை மீட்டர் தள்ளி நிற்குமாறு கூறினார். என்னுடைய கிரிக்கெட் கரியரில் யாரும் அப்படிச் சொல்லி நான் பார்த்ததில்லை" என கோடக் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சர்ரே மைதானப் பணியாளர்கள் ஆடுகளத்தை பார்வையிட இடையூறாக இருந்ததாகக் கூறுகிறார் கோடக். "அவர் தலைமை பயிற்சியாளரிடம் கயிற்றுக்கு வெளியே நின்று விக்கெட்டை(ஆடுகளத்தை) பாருங்கள் எனக் கூறினார். அவ்வாறு நின்று எப்படிப் பார்க்க முடியும் என எனக்குத் தெரியவில்லை." "ஒருவர் அவருடைய ஷூக்களை தேய்த்ததாகவோ அல்லது விக்கெட்டில் ஏதேனும் போட முயற்சித்தாகவோ அல்லது ஸ்பைக் அணிந்திருந்தாகவோ பொறுப்பாளர்கள் உணர்ந்தால் அவ்வாறு சொல்வதில் அர்த்தம் உள்ளது. ஆனால் அதைச் சொன்ன விதம் விசித்திரமானது" என்றார் கோடக். "மைதானத்தில் குறிப்பாக, ஸ்கொயர் மீது பொறுப்பாளர்கள் சற்று கூடுதல் கவனமாக இருப்பார்கள். தங்களிடம் பேசுகிறவர்கள் மிகவும் திறன்மிக்க, புத்திசாலியான நபர்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார். மேலும் அவர், "நீங்கள் மிகவும் புத்திசாலியான, அதிக திறன் மிக்க நபர்களுடன் வேலை செய்கிற போது, ஒருவர் ஆணவமாகப் பேசினால், நீங்கள் பதிலளிக்கலாம். ஆனால் இறுதியில் அது ஒரு கிரிக்கெட் மைதானமே. அது நீங்கள் தொடக் கூடாத, உடைந்துவிடக்கூடிய 200 ஆண்டுகள் பழைய கலைப்பொருள் அல்ல" எனத் தெரிவித்தார். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, பயிற்சியில் இந்திய அணி (கோப்புப்படம்) பயிற்சிக்கென குறிப்பாக எந்த வெளிப்புற களமும் இல்லாத நிலையில், அடுத்த டெஸ்டுக்கான ஆடுகளத்திற்கு அருகே வலை அமைக்கப்பட்ட 3 ஆடுகளங்களை இந்தியா பயிற்சிக்குப் பயன்படுத்தியது. இது தான் வழக்கமான நடைமுறைதான். பிபிசி ஸ்போர்ட் இதுகுறித்து சர்ரே நிர்வாகத்திடம் கருத்து பெற முயன்றபோது அவர்கள் மறுத்துவிட்டனர். பின்னர் ஒரு காணொளி மூலம் இந்திய ஊடகங்களுக்குப் பதிலளித்த ஃபோர்டிஸ், "இதில் பேசுவதற்கு எதுவும் இல்லை. இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை" எனத் தெரிவித்தார். இரு அணிகளுக்கும் இடையே காரசாரமான மற்றும் போட்டி மிகுந்த இந்தத் தொடரில் நிகழ்ந்த சம்பவங்களில் சமீபத்திய நிகழ்வு இது. ஓல்ட் ட்ராஃபோர்டில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் சதமடிக்க வேண்டும் என்பதற்காகவே போட்டியை முன்கூட்டியே டிரா செய்ய இந்தியா மறுத்துவிட்டது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லும் இங்கிலாந்து வீரர்கள் "கிரிக்கெட்டின் மாண்புக்கு எதிராக நடந்து கொள்கிறார்கள்" எனத் விமர்சித்திருந்தார். லார்ட்ஸில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து நேரத்தைக் கடத்தும் உத்திகளில் ஈடுபட்டதாக அவர் ஏற்கெனவே கூறியிருந்தார். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, நான்காவது டெஸ்டில் டிரா செய்வதில் சர்ச்சை ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 2-1 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. மான்செஸ்டர் போட்டியைத் தொடர்ந்து அடுத்த போட்டிக்கு மூன்று நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ள நிலையில் இங்கிலாந்து தனது பந்துவீச்சில் மாற்றங்களை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டோக்ஸ் பல்வேறு காயங்களுடன் அவதிப்படுகிறார். ஜேமி ஓவர்டன், அட்கின்சன் மற்றும் ஜோஷ் டங் மாற்று வேகப்பந்து வீச்சாளர்களாக அணியில் உள்ளனர். கிறிஸ் வோக்ஸ், ப்ரைடன் கார்ஸ் இதுவரையிலான நான்கு போட்டிகளிலும் விளையாடி உள்ளனர். ஜோப்ரா ஆர்ச்சர் நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு அணிக்கு திரும்பி, அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடியுள்ளார். மறுபக்கம் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியிலிருந்து விலகியுள்ளார். இந்திய அணி ஜஸ்ப்ரித் பும்ரா அடுத்த டெஸ்டில் ஆடுவாரா என்பது பற்றியும் முடிவெடுக்க வேண்டியுள்ளது. தொடருக்கு முன்பே அறிவிக்கப்பட்ட அதிகபட்சம் மூன்று போட்டிகளில் அவர் விளையாடிவிட்டார். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, கவுதம் கம்பீர் சர்ரே மைதான பணியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. "ஓவல் டெஸ்டு முன்பே அழுத்தம் அதிகரித்துள்ளது" பிபிசி ஸ்போர்ட்ஸின் தலைமை கிரிக்கெட் செய்தியாளர் ஸ்டீபன் ஷெமில்டின் பகுப்பாய்வு கீழே தரப்பட்டுள்ளது. கவுதம் கம்பீர் மற்றும் லீ ஃபோர்டிஸ் இருவருமே வெளிப்படையான நபர்கள். எந்தவொரு கருத்து வேறுபாட்டிலும் இருவருமே விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இந்தத் தொடரின் அதீத உணர்வுகளுக்கு இது மற்றுமொரு உதாரணம். முதலில் லார்ட்ஸில் நிகழ்ந்த எரிச்சலூட்டும் நிகழ்வுகள், அடுத்து ஓல்ட் ட்ராஃபோர்டில் நிகழ்ந்த கைகுலுக்கல் சர்ச்சை, தற்போது இந்த சர்ச்சை நிகழ்வு. ஓவலில் நடைபெறவுள்ள கடைசி டெஸ்டுக்கு முன்பே அழுத்தம் அதிகரித்துள்ளது. இது உச்சபட்ச விளையாட்டு. இங்கு ஒவ்வொரு முடிவும் முக்கியம். சம்மந்தப்பட்டவர்கள் அதன்மீது அக்கறையுடன் இருப்பார்கள். இதனால் சில சந்தப்ப்பங்களில் நிலைமை கைமீறிச் செல்வது ஒன்றும் புதிதல்ல. தற்போது இருந்து ஓவல் பிட்ச் (ஆடுகளம்) வெளிச்சத்திலே இருக்கும். வரலாற்று ரீதியாக இந்த மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு உகந்ததாக இருந்து வந்துள்ளது. தற்போது நிலைமை அவ்வாறு இல்லை. அடுத்த டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியில் லியம் டாவ்சன் இடம் பெற மாட்டார் என்ற ஊகங்கள் உள்ளன. பென் ஸ்டோக்ஸ் தலைமையேற்ற பிறகு சுழற்பந்து வீச்சு ஸ்பெஷலிஸ்ட் இல்லாமல் இங்கிலாந்து அணி ஒரே ஒரு டெஸ்டில் மட்டுமே விளையாடியுள்ளது. இதன் மூலம் சுழற்பந்து வீச்சுக்கு அவர் தரும் முக்கியத்துவம் புரிய வரும். ஆனால், அது ஸ்டோக்ஸின் முடிவைப் பொருத்தது. ஓல்ட் ட்ராஃபோர்ட் டெஸ்டில் அதிக ஓவர்களை வீசி ஓய்ந்து போயுள்ள அவர் கடைசி டெஸ்டில் என்ன மாதிரியான பங்கு வகிப்பார் என்பது பற்றி கேள்விகள் உள்ளன. ஸ்டோக்ஸ் 4 வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருப்பார் என்றால் டாவ்சன் அணியில் இடம்பெறுவார். ஸ்டோக்ஸ் பந்துவீசுவதில் சிரமம் இருந்தால், இங்கிலாந்து அணிக்கு கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் தேவைப்படும் நிலை வரலாம். அவ்வாறான பட்சத்தில் டாவ்சன் அணியில் இடம் பெறுவது கடினம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj0yjmper0go
2 months 2 weeks ago
இலங்கைக்கு என்ன மாதிரி மீண்டும் வந்தால் இன்னும் இழக்கப்போவது நாம் தான்
2 months 2 weeks ago
2 months 2 weeks ago
2 months 2 weeks ago
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம். அன்பார்ந்த தமிழீழ மக்களே! சிறிலங்காப் பேரினவாத அரசு தமிழீழ மண்ணையும் மக்களையும் அடக்குமுறைக்குள்ளாக்கி, தமிழின அழிப்பைத் தொடர்ந்தமையால், அதற்கெதிராக வீறுகொண்டெழுந்த எரிமலை வெடிப்பே தமிழீழ விடுதலைப்போராட்டமாகும். உலகின் அசைவியக்கத்தில் சுயமாக உருவாகிய எதனையும் எவரும் அழித்ததாக வரலாறுகள் கிடையாது. ஒரு இனத்தின் விடுதலைக்காக ஆயிரம் ஆண்டுகள் தன்னுள்ளே அடக்கி வைத்திருந்த பேராண்மையை, தமிழன்னை ஓரிடத்தில் இறக்கினாள். தமிழ்த்தாயின் ஆற்றல்கள் அத்தனையையும் தன்னுள்ளே உள்வாங்கிய தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள், இயல்பாகவே உருவாகிய தலைவர்! இவர், உருவாக்கப்பட்டவர் அல்ல! தமிழினத்தின் வழிகாட்டியும் தமிழீழக் கோட்பாட்டின் சிந்தனைச் சிற்பியும் இவரே. இந்த ஒப்புவமையற்ற எமது தேசியத்தலைவரை வீரச்சாவு என அறிவித்து, விளக்கேற்றி, தமிழீழக் கோட்பாட்டிற்குச் சாவுமணி அடிக்கவேண்டுமென்ற அறிவிப்பின் ஊடாக, தமிழீழ விடுதலையை நோக்கித் தமிழர்களை வழிநடாத்தும் தன்னிகரில்லாத் தலைமையை, தமிழினம் இழந்துவிட்டது என தமிழ்மக்களின் ஆழ்மனங்களில் பேரிடியாக இறக்கி, அவர்களின் உளவுரணைச் சிதைத்தழிக்க வேண்டுமென்பதே எதிரிகளின் திட்டமாகும். இதற்குச் செயல்வடிவம் கொடுக்கச் சில குழுக்கள் களமிறக்கப்பட்டு, மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி, எதிரிகளின் நிகழ்ச்சிநிரலை முன்னெடுப்பதற்கான நாளாக ஆகஸ்து 2 இனை, தெரிவுசெய்து அறிவிப்புச்செய்துள்ளனர். தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களினால் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம்இ உருவாக்கப்பட்ட காலம் தொடக்கம் இன்றுவரை சிறிலங்காவும் எம்மை அழிக்க நினைக்கும் வல்லரசுகளும் பலவிதமானப் புலனாய்வுச்சதிவலைப்பின்னல்களை உருவாக்கியே வந்திருக்கிறார்கள். ஆனால், தேசியத்தலைவரின் தீர்க்கதரிசனத்தின் முன்னே அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. துரோகத்தனங்கள் யாவும் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டன. எமது தலைமையின் நிதானமான துணிச்சலான போராட்ட நகர்வுகள், எதிரிகளையும் துரோகிகளையும் ஏகாதிபத்தியவாதிகளையும் திக்கித் திணறவைத்திருந்தன. 2009 மே 18 உடன், விடுதலைப்புலிகளின் சரித்திரம் முடிந்துவிட்டது என சிறிலங்காவும் பிராந்திய வல்லரசும் ஏகாதிபத்தியமும் பகற்கனவுகள் கண்டன. ஆனால், முள்ளிவாய்க்கால் ஆயுத மெளனிப்பிற்குப் பின்னரும் தமிழீழம் என்ற கோட்பாட்டை இவர்களால் சிதைக்க முடியவில்லை. தொடர்ந்தும், தமிழர்கள் எவ்வாறு பலமாக ஒருங்கிணைந்து போராடுகிறார்கள், இவர்களின் பலம் எது எனப் பகுப்பாய்வு செய்தபோது, மேதகு வே.பிரபாகரன் என்னும் ஒற்றைச் சொல்தான் தமிழர்களின் மாபெரும் உந்துசக்தி என இவர்கள் உணர்ந்துகொள்கிறார்கள். எனவே, தமிழீழம் என்ற கோட்பாட்டைச் சிதைத்து அழிக்கவேண்டுமாயின்இ எங்கள் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் என்னும் தமிழீழ விடுதலைக்கவசத்தை முதலில் அழிக்கவேண்டும். மேதகு வே.பிரபாகரன் என்னும் மாபெரும் பலம், மக்கள் மனதிலிருந்து அகற்றப்பட்டால், தமிழீழம் என்னும் இலக்கு நோக்கிய பயணம் தகர்ந்துவிடும். இதுவே, தமிழீழ விடுதலைப்போராட்டத்தை அழிக்க அவர்கள் தீட்டிய திட்டமாகும். இதன்படியே, கடந்த மூன்று ஆண்டுகளாக எதிரும்புதிருமாக இரு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றன. • ஒன்று தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருக்கின்றார். • இரண்டாவது, அவர் 2009 மே 17, 18,19 ஆகிய நாட்களில் வீரச்சாவடைந்துவிட்டார் என்ற அறிவித்தல்கள் வெளியிடப்படுகின்றன. இதில் வேதனையான விடயம் என்னவென்றால், யாரை எதிர்த்து நாம் போரிட்டோமோ, அந்த சிங்கள இராணுவத்தளபதிகளை மேற்கோள்காட்டி, இன அழிப்புக் குற்றவாளிகளின் தகவல்களை ஆதாரமாகக் கொண்டு, எமது தேசியத்தலைவருக்கு "விளக்கேற்றி", வீரவணக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. அதில், மே 17, 18, 19 என தெளிவில்லாமல் சிறு குழுக்களால் வீரச்சாவு நாட்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால், ஆகஸ்து 2ம் நாள்தான் வணக்க நிகழ்வு என அறிவித்துள்ளார்கள். ஆனால், சிங்கள இராணுவத்தளபதி கமால் குணரட்ணவின் " Road to nanthikkadal " என்னும் நூலினை ஆதாரமாக வைத்து, மே 18 என முடிவு எடுத்துள்ளனர். இதற்கு, தேசியத்தலைவர் உயிரோடு இருக்கிறார் என்னும் பொய்ப்பரப்புரையை நிறுத்த வேண்டுமாயின் வீரவணக்க நிகழ்வைச் செய்தேயாக வேண்டுமெனவும் இதன் ஏற்பாட்டாளர்கள் நியாயப்படுத்துவதானது அர்த்தமற்றதாகும். அன்பிற்குரிய தமிழீழ மக்களே! இரு குழல் துப்பாக்கியின் இலக்கு ஒன்றுதான். தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைதான், 2009 மே 18 ஆயுத மெளனிப்பிற்குப் பின்னரும் தமிழீழத் தாயகத்தை மீட்டெடுக்கும் போராட்டத்தை வழிநடாத்துகின்றது, என்பதை எதிரிகள் நன்றாகப் புரிந்துகொண்டுள்ளார்கள். எனவே, தமிழர்களின் மனங்களிலிருந்து, அந்த வாழும் தமிழீழ விடுதலைச் சித்தாந்தத்தைத் துடைத்து அழிக்கவேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு, தேசியத்தலைவர் இருக்கிறார், அவர் இல்லை என்ற இரண்டு நாசகார நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. "விழிப்பே விடுதலையின் முதற்படி" என்னும் தேசியத்தலைவரின் சிந்தனையின் வழியில், தமிழினம் இவ்விரு சவால்களையும் எதிர்கொண்டு, மாவீரர்களின் சக்தியின் துணைகொண்டு மீண்டுவரும். எமது தேசியத்தலைவரின் சிந்தனையானது எமைத்தொடர்ந்தும் வழிநடத்தும். எனவே, தமிழின விடுதலைச் சிந்தனையினைக் குழிதோண்டிப் புதைக்கநினைக்கும் நாசகாரச் சக்திகளினால், ஆகஸ்து 2ஆம் நாளில் சுவிற்சர்லாந்தில் திட்டமிடப்பட்டுள்ள "விளக்கேற்றல்" நிகழ்வினை உறுதியோடு புறக்கணிப்போம். பேரன்புமிக்க எமது மக்களே! காலத்திற்குக் காலம் எதிரிகளால் திட்டமிட்டு உருவாக்கப்படும் பொய்ப்பரப்புரைகளை, நாம் கண்டறிந்துஇ முறியடித்து வருகின்றோம். எனவே, தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்படும் உண்மைக்குப் புறம்பான கதையாடல்களைப் புறந்தள்ளி, விழிப்புடன் இருக்குமாறு அன்புரிமையுடன் வேண்டிக்கொள்கின்றோம். தமிழீழத் தேசியத்தலைவர் என்னும் பேராளுமைச் சிந்தனையின் வழிகாட்டலில், தமிழீழ விடுதலையை நோக்கித் தொடர்ந்தும் பயணிப்போம். அது, எந்நிலையிலும் எதிரிகளின் சதிவலைப்பின்னல்களில் அகப்படமாட்டாது. எனவே, தமிழினத்தை அழிப்பதற்கான எதிரிகளின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுக்காமல், மாவீரர்கள் காட்டிய வழித்தடத்தில், தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் ஒளிரும் சிந்தனைப் பாதையில் உறுதியுடன் வழிநடந்து, தமிழீழ விடுதலை நோக்கித் தொடர்ந்தும் போராடுவோமென உறுதியெடுத்துக் கொள்வோமாக! "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள். https://www.thaarakam.com/news/f0f42314-88cc-4b93-946b-a623da5dec8a
2 months 2 weeks ago
பட மூலாதாரம், REUTERS 30 ஜூலை 2025, 02:28 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து ஃபுகுஷிமா டாய்ச்சி மற்றும் ஃபுகுஷிமா அணுமின் நிலையங்களில் இருந்த ஊழியர்கள் பாதுகாப்பான, உயரமான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டிருப்பதாக டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி (டெப்கோ) கூறியுள்ளது. இவற்றுள், ஃபுகுஷிமா டாய்ச்சி என்பது 2011ஆம் ஆண்டு ஜப்பானை தாக்கிய 9.0 அளவு நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட அணுமின் நிலையமாகும். ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ள இரு அணுமின் நிலையங்களிலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அங்கே எந்தவொரு அசாதாரண சூழலும் இல்லை என்றும் டெப்கோ கூறியுள்ளது. ஆனாலும் நிலைமையை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபுகுஷிமா டாய்ச்சி அணுமின் நிலையத்தில் சேதமடைந்த எரிபொருள் சிதைவுகளை முழுமையாக அப்புறப்படுத்தும் பணி 12 முதல் 15 ஆண்டுகள் தாமதமாகும் என்று டெப்போ இந்த வார தொடக்கத்தில் அறிவித்திருந்தது. அந்த அணுமின் நிலையத்திற்குள் கதிர்வீச்சு அளவு குறைவதற்கு போதுமான கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்பதே இதற்குக் காரணம் என்று அந்நிறுவனம் தெரிவித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்யாவின் காம்ச்சாட்கா பிராந்திய கடற்கரை முன்னதாக, ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் 8.8 என்கிற அளவுக்கு மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் பெட்ரோபாவ்லாவ்ஸ்க் - காம்ச்சாட்ஸ்கி என்ற இடத்தில் இருந்து 126 கிலோமீட்டர் தொலைவில் 18 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் அளவை முதலில் 8.7 புள்ளிகளாக கணித்திருந்த அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் பின்னர் தனது கணிப்பை 8.8 என்பதாக திருத்தியது. "கடந்த பல தசாப்தங்களில் கண்டிராதது" இந்த நிலநடுக்கத்தால் காம்ச்சாட்கா பகுதியில் 3 முதல் 4 மீட்டர் வரை சுனாமி அலைகள் எழுந்ததாக அந்த பிராந்திய அமைச்சர் செர்கெய் லெபெடெவ் தெரிவித்துள்ளார். இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் ஒரு குழந்தைகள் பள்ளி சேதடைந்தது என்று அவர் கூறியுள்ளார். "இன்றைய நிலநடுக்கம் மிகத் தீவிரமானது மற்றும் கடந்த பல தசாப்தங்களில் கண்டிராதது" என்று காம்ச்சாட்கா ஆளுநர் விளாடிமிர் சோலோடோவ் தனது டெலிகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த வீடியோவில் தெரிவித்திருந்தார். ஜப்பானில் மக்களுக்கு எச்சரிக்கை ஜப்பானில் சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என்று கருதப்பட்ட பல நூறு கிலோமீட்டர் நீண்ட கடற்கரைப் பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். "பாதுகாப்பான, மேடான இடங்களுக்குச் செல்லுங்கள். சுனாமி அலைகள் விரைவிலோ அல்லது சற்று நேரத்திற்குப் பிறகோ தாக்கக் கூடும். எச்சரிக்கை அமலில் இருக்கும் வரை பாதுகாப்பான இடங்களில் தொடர்ந்து இருங்கள்" என்று ஜப்பானின் அந்த எச்சரிக்கை அறிவிப்பு கூறுகிறது. சுனாமி அலைகள் 3 அல்லது 4 மீட்டர் வரை எழக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம், REUTERS படக்குறிப்பு, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள் ஜப்பான்: ஹொக்கைடோ முதல் கியூஷு வரையிலான கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, அதேநேரத்தில் ஜப்பானின் பிற பகுதிகளில் குறைந்த அளவிலான எச்சரிக்கைகள் அமலில் உள்ளன அமெரிக்காவின் மேற்கு கடற்கரை முழுவதும் அலாஸ்காவின் தொலைதூர அலூடியன் தீவுகள் ஹவாய் குவாம் ஈக்வெடார் நாட்டையும் 10 அடி உயர சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என்று அமெரிக்கா சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. பசிபிக் பெருங்கடலின் கரையோர நாடுகள் பலவற்றிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g62665l9do
2 months 2 weeks ago
பொரளை பகுதியில் விபத்தை ஏற்படுத்திய கனரக வாகன சாரதிக்கு விளக்கமறியல்! பொரளை பகுதியில் நேற்று (28) இடம்பெற்ற விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கனரக வாகன சாரதியை எதிர்வரும் ஒகஸ்ட் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு போக்குவரத்து நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, வாகன உரிமையாளரை 500,000 ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கவும் நீதவான் உத்தரவிட்டார். பொரளை பொலிஸார் முன்வைத்த வாதங்களைப் பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று காலை பொரளை, மயான சந்தியில் கனரக வாகனம் ஒன்று பல வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 7பேர் காயமடைந்ததுடன் ஒருவர் உயிரிழந்தார். இதேவேளை, விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கிரேன் லொறியின் சாரதி கஞ்சா உட்கொண்டிருப்பதும் நேற்றைய சோதனையில் உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று குறித்த நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். https://athavannews.com/2025/1441081 #################### ######################### பொரளை கோர விபத்து – கஞ்சா பாவனையில் கிரேன் சாரதி! பொரளை, கனத்தை சந்தியில் இன்று (28) காலை ஏற்பட்ட விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கிரேன் லொறியின் சாரதி கஞ்சா உட்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது இது தெரியவந்தது. பொரளை கனத்த சந்தியில் இன்று (28) காலை ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த ஏழு பேர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போதே உயிரிழந்ததாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லனா தெரிவித்தார். காயமடைந்தவர்களில் இருவர் பெண்கள் என்றும், மீதமுள்ள ஐந்து பேர் ஆண்கள் என்றும் மருத்துவர் கூறினார். இன்று காலை, ராஜகிரியவிலிருந்து பௌத்தலோக மாவத்தை நோக்கிச் சென்ற கிரேன் லொறி ஒன்று, கனத்தை சுற்றுவட்டத்தில் உள்ள போக்குவரத்து சமிக்ஞைகளுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3 கார்களுடன் மோதி விபத்தினை ஏற்படுத்தியது. விபத்தில் உயிரிழந்தவர் அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்துக்கு காரணமான கிரேன் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கிரேன் பிரேக்குகள் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எவ்வாறெனினும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1440915
2 months 2 weeks ago
யாழ்.செம்மணியில் இன்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் ! யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் (29) புதிதாக 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த 09 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில், 34 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 24 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது. இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி கடந்த 09 ஆவது நாட்களாக முன்னெடுக்கப்படும் நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை 34 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 33 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 03 எலும்பு கூட்டு தொகுதியுடனுமாக 99 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 111 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441104
Checked
Sat, 10/18/2025 - 00:33
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed