புதிய பதிவுகள்2
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
மழை பெய்வதால் விளையாட்டு 20ஓவர் என அறிவித்து இருக்கினம் சிலது இன்னும் குறைக்க கூடும்😉...............
யாழில் மாடியில் இருந்து குதித்த பாடசாலை மாணவி!
அந்த மாணவி கொஞ்சம் அவசரப்பட்டு விட்டாற்போல் இருக்கிறது ......... இதற்காக அவரை ஒதுக்கி வைத்த மாணவிகள் தான் வெட்கப்பட வேண்டும் . .........!
தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி
இவர் சங்கி என்று எந்த தகவலும் எனக்கு கிடைக்கவில்லை. அபத்தமாக கதைக்க கூடாது. ஶ்ரீதர் வேம்பு ஒரு பிராமணர் எனவே புறக்கணிக்க வேண்டும் என நான் எழுதினேனா? இல்லை. பிராமணர் எல்லோரும் சங்கிகள் இல்லை, சங்கிகள் எல்லோரும் பிராமணரும் இல்லை. தட்டுமுட்டு சாமான் என் அதிகார எல்லைக்கு அப்பால் பட்டது 🤣. நான் சொல்வது படங்கள், கிரிகெட், வாகனங்கள், விடுமுறை, தொழில்நுட்பம்.
தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி
முடிந்த அளவு எண்டால் அது எந்த அளவு? 😂 உங்கட வீட்டு சாவியை ஒருக்கால் தரமுடியுமா? ஒருக்கால் வீட்டுக்குள்ள இருக்கிற தட்டுமுட்டு சாமான்களை செக் பண்ணி பார்க்க வேணும். 🤣
தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி
BBC News தமிழ்அரவிந்த் ஸ்ரீனிவாஸ்: பெர்ப்ளெக்சிட்டியை நிறுவிய சென்னை த...கூகுள் நிறுவனத்தின் குரோமை விலைக்கு கேட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சென்னையைச் சேர்ந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ். பெர்ப்ளெக்சிட்டி நிறுவனர்களில் ஒருவரான இவர், தொழில்நுட்ப உலகில் சாதித்தது எனகூகுள் குரோமை விலைக்கு கேட்ட சென்னை தமிழர் - 31 வயதில் கோடீஸ்வரரான இவர் யார்? மகாகவி பாரதியாரும் சங்கி என்று புறக்கணிப்பீர்களா?
பெரியாருடன் சுய மரியாதை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்ற தலைவர்கள் யார் யார்?
பட மூலாதாரம், Facebook/DravidarKazhagam கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் சுயமரியாதை இயக்கத்தைத் துவங்கியது பெரியார் என்றாலும் அந்த இயக்கத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதிலும் அதன் சித்தாந்தங்களைத் தொடர்ந்து வடிவமைப்பதிலும் ஆண்களும் பெண்களுமாக பல்வேறு தலைவர்கள் தொடர்ந்து செயல்பட்டனர். அவர்களைப் பற்றி அறிமுகப்படுத்தும் ஒரு தொகுப்பு. (சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை முன்னிட்டு பிபிசி தமிழ் வெளியிடும் சிறப்புத் தொடரின் மூன்றாவது கட்டுரை இது.) 1925ஆம் ஆண்டில் காங்கிரசில் இருந்து வெளியேறியதும் சுயமரியாதை இயக்கத்தை பெரியார் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் நீதிக் கட்சியினருடன் இணைந்து செயல்பட்டார் பெரியார். பல தருணங்களில் அவர்களுடன் கூட்டங்களில் பங்கேற்றார். அதே தருணத்தில் 1927வரை மகாத்மா காந்தி தொடர்பாக ஆதரவான நிலைப்பாடுகளையே அவர் மேற்கொண்டார். சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு 1929 பிப்ரவரியில் நடந்தபோது நீதிக்கட்சியின் பல தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். அந்த மாநாட்டில்தான் சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படைக் கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. அடுத்த மாநாடு நடக்கும்வரை இயக்கத்தின் தலைவராக டபிள்யு. பி.ஏ. சௌந்தரபாண்டியன் இருப்பார் என்றும் துணைத் தலைவர்களாக பெரியாரும் சர் ஏ.டி. பன்னீர்செல்வமும் இருப்பார்கள் என்றும் முடிவுசெய்யப்பட்டது. இந்த மாநாட்டில் நாகம்மை, பட்டுக்கோட்டை அழகிரிசாமி, மூவலூர் ராமாமிர்தத்தம்மாள், எஸ்.வி. லிங்கம், கோவை அ. அய்யாமுத்து, எஸ். குருசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்கடுத்த காலகட்டங்களில் தொடர்ந்து கி.ஆ.பெ. விஸ்வநாதம், எஸ் குருசாமி, குஞ்சிதம் குருசாமி, ஜே.எஸ். கண்ணப்பர், ப. ஜீவானந்தம், பாரதிதாசன், சாத்தான்குளம் ராகவன் உள்ளிட்டோரும் இயக்க நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்க ஆரம்பித்தனர். 1. டபிள்யு.பி.ஏ. சவுந்தரபாண்டியன் படக்குறிப்பு, 1928 நவம்பர் 4ஆம் தேதியிட்ட குடி அரசு இதழில் டபிள்யு.பி.ஏ. சவுந்தரபாண்டின் சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாட்டில் தலைவராக நியமிக்கப்பட்ட டபிள்யு.பி.ஏ. சவுந்தரபாண்டியனைப் பொறுத்தவரை, அவருடைய அரசியல் செயல்பாடுகள் 1916ல் ஆரம்பிக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கத்திலிருந்துதான் துவங்கியது. 1920ல் அக்கட்சியின் சார்பில் சென்னை மாகாண சட்டமன்றத்திற்கும் தேர்வுசெய்யப்பட்டார். ஆனால், பெரியாருடன் தொடர்ந்து நெருக்கமாக இருந்தவந்த நிலையில், சுயமரியாதை இயக்க ஆதரவாளராகவும் அவர் உருவெடுத்தார். இதன் தொடர்ச்சியாகத்தான் சுயமரியாதை இயக்கத்தின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார் டபிள்யு.பி.ஏ. சவுந்தரபாண்டியன். பிறகு சென்னை மாகாணம் முழுவதும் நடைபெற்ற பல்வேறு மாநாடுகள், கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்றார் இவர். கணவரை இழந்த பெண்களுக்கு மறுமணம் செய்துவைப்பது, சுயமரியாதைத் திருமணங்களைச் செய்துவைப்பது ஆகிவற்றிலும் தீவிர கவனம் செலுத்தினார் டபிள்யு.பி.ஏ. சவுந்தரபாண்டியன். ராமநாதபுரம் நகராட்சிக் கழகத்தின் தலைவராக இருந்தபோது, அந்த மாவட்டத்தில் ஓடிய சில பேருந்துகளில் பட்டியல் பிரிவினர் ஏறுவதற்கு தடை என பயணச் சீட்டுகளிலேயே குறிப்பிடப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி, அதனை உடனடியாக நீக்க வேண்டுமென்றும் இல்லாவிட்டால் அந்த பேருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் கூறி நடவடிக்கைகளை மேற்கொண்டதாக 'சுயமரியாதைச் சுடரொளிகள்' நூல் குறிப்பிடுகிறது. அதேபோல, முதலாவது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது, அந்தப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்தார் சவுந்தரபாண்டியன். சுயமரியாதை இயக்கத்துடன் தொடர்பு நீடித்தாலும், நீதிக்கட்சியின் சார்பிலும் சில செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டுவந்தார் சவுந்தரபாண்டியன். ஆனால், பிற்காலத்தில் இயக்கம் சார்ந்த பணிகளில் இருந்து விலகியே இருந்தார் அவர். 2. எஸ்.ஆர். கண்ணம்மாள் படக்குறிப்பு, எஸ்.ஆர். கண்ணம்மாள், 1933 டிசம்பர் 24, புரட்சி இதழ் சுயமரியாதை இயக்கத்தில் ஆண்களைப் போலவே பெண்களும் ஈடுபட்டனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் எஸ்.ஆர். கண்ணம்மாள். இவர் பெரியாருடன் இணைந்து 'குடி அரசு' இதழின் பதிப்பாளராக இருந்துவந்தார். அந்த இதழில் 1933-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளிவந்த இதழில் "இன்றைய ஆட்சிமுறை ஏன் ஒழிய வேண்டும்?" என்ற ஒரு கட்டுரையை எழுதியதால், அவர் மீது ராஜ நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு 1933-ஆம் ஆண்டு டிசம்பர் மாதப் பிற்பகுதியில் பெரியாருடன் சேர்த்து கைதுசெய்யப்பட்டு அவருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. "1933-ஆம் ஆண்டிற்கு முன்பாக, எந்தப் பெண்ணும் பத்திரிகை நடத்தி சிறை தண்டனை பெறவில்லை. ஆங்கில அரசை எதிர்த்து தலையங்கம் வெளியிட்டதற்காக கைதுசெய்யப்பட்ட முதல் பெண் பத்திரிகையாளர் எஸ்.ஆர். கண்ணம்மாள்" என தனது திராவிடப் போராளிகள் நூலில் குறிப்பிடுகிறார் வழக்கறிஞர் அருள்மொழி. பெரியாரின் இளைய சகோதரியான எஸ்.ஆர். கண்ணம்மாள் தனது அண்ணனின் கொள்கைகளில் முழுமையாக ஈடுபாடு கொண்டு அவரது செயல்பாடுகளுக்கு துணையாக இருந்தவர். பெரியார் காங்கிரஸில் இருந்த காலத்தில் காந்தியின் கொள்கைகளை ஏற்று, கள்ளுக்கடை போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் எஸ்.ஆர். கண்ணம்மாளும் ஒருவர். பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய பிறகு, தொடர்ந்து பல கூட்டங்களில் மூட நம்பிக்கையை எதிர்த்துப் பேசிவந்தார் கண்ணம்மாள். ஈரோடு நகரசபையின் கவுன்சிலராக இருந்தபோது, பெண்கள் நலனை முன்னிறுத்தி பல தீர்மானங்களை அவர் கொண்டுவந்தார். சீர்திருத்தத் திருமணங்களை நடத்துவதிலும் இவர் மிகுந்த ஆர்வம்காட்டினார். படக்குறிப்பு, சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு 1929 பிப்ரவரியில் நடந்தபோது நீதிக்கட்சியின் பல தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். 3. ஏ.டி. பன்னீர்செல்வம் டபிள்யு.பி.ஏ. சவுந்தரபாண்டியனைப் போலவே, துவக்கத்தில் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு, பிறகு சுயமரியாதை இயக்கத்தோடு நெருக்கமானவர்களில் ஒருவர் ஏ.டி. பன்னீர்செல்வம். இதன் காரணமாக, செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை இயக்க முதல் மாநாட்டில் துணைத் தலைவராக ஏ.டி. பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்குப் பிறகு சுயமரியாதை இயக்க மாநாடுகள், நிகழ்ச்சிகளில் உரையாற்றிவந்தார் ஏ.டி. பன்னீர்செல்வம். தொடர்ந்து பிராமணரல்லாத மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் கவனம் செலுத்திய அவர், சுயமரியாதை இயக்கத்தினரின் வழக்குகளிலும் பங்கேற்றார். 1930களின் இறுதியில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் பொருளாதார ரீதியாகவும் செயல்பாடு ரீதியாகவும் இவரது பங்கு தீவிரமானதாக இருந்தது. 4. பட்டுக்கோட்டை அழகிரிசாமி சுயமரியாதை இயக்கத்தின் பல தலைவர்கள் செல்வந்த குடும்பத்திலிருந்து வந்தவர்களாக இருந்தாலும், மிக சாதாரண பின்னணியில் இருந்து சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டு, அதன் கொள்கைகளைப் பரப்பியவர்களும் நிறையப் பேர் இருந்தனர். அப்படியான தலைவர்களில் ஒருவர்தான் பட்டுக்கோட்டை அழகிரிசாமி. இவர் ஆரம்பத்தில் காந்தி மீதும் காங்கிரசின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். ஆனால் விரைவிலேயே சுயமரியாதை இயக்கத்தின் பக்கம் திரும்பினார் அழகிரி. சுயமரியாதை இயக்கத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே அதில் ஈடுபாடு கொண்டிருந்த அழகிரி, தனது மேடைப் பிரச்சாரத்திற்காக பெரிதும் அறியப்பட்டவராக இருந்தார். அதேபோல, சுயமரியாதை இயக்கக் கருத்துகளை முன்வைத்து தீவிரமாக எழுதியும் வந்தார். முதலாம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தபோது, திருச்சியிலிருந்து சென்னை வரை சுமார் ஒன்றரை மாத காலம் நடைபயணம் மேற்கொண்டார் அழகிரி. இரண்டாம் உலகப் போரின்போது மாவட்ட போர் பிரசார அதிகாரியாக இருந்தபோது, போர் பிரச்சாரத்தின் நடுவே சுயமரியாதை இயக்கக் கருத்துகளையும் பேசியதாக சுயமரியாதை இயக்கச் சுடரொளிகள் நூல் குறிப்பிடுகிறது. சுயமரியாதை இயக்கத்தின் தீவிரத் தொண்டராக இருந்த அழகிரி, 1949-லேயே எலும்புருக்கி நோயால் காலமானார். 5. சாமி சிதரம்பரனார் சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்ட மற்றும் ஒரு சித்தாந்தி, சாமி சிதம்பரனார். சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்ட காலத்தில் குடி அரசு இதழில் தொடர்ந்து எழுதிவந்தார். பெரியார் சுற்றுப் பயணங்களை மேற்கொள்ளும்போது, அந்த இதழின் ஆசிரியராகவும் செயல்பட்டார் சாமி சிதம்பரனார். பெரியார் முன்வைத்த கணவரை இழந்த பெண்களின் மறுமணம் என்ற கொள்கையில் தீவிரமாக இருந்த சாமி சிதம்பரனார், அதைப் போலவே ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். சிறையிலிருந்த காலத்தில் ஒரே மாதத்தில் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதி முடித்தார். பெரியார் தானே தன் வாழ்க்கை வரலாற்றை எழுதாத நிலையில், அந்தப் பணியை தான் செய்ய வேண்டியிருந்ததாக குறிப்பிடுகிறார் சாமி சிதம்பரனார். சுயமரியாதை இயக்க, திராவிட இயக்கத்தின் பல இதழ்களுக்கு ஆசிரியராகவும் அவர் பணியாற்றினார். பெரியார் நீதிக் கட்சியை தீவிரமாக ஆதரிக்க ஆரம்பித்த போது, இயக்கத்திலேயே பலர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், பெரியாருக்கு ஆதரவாக தொடர்ந்து வாதாடியவர் சாமி சிதம்பரனார். சாதி ஒழிப்பு, புரோகித மறுப்பு, சாதி மறுப்புத் திருமணம், சீர்திருத்தத் திருமணம் போன்ற கொள்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்தியவராக இருந்தார் சாமி சிதம்பரனார். 6. மூவலூர் ராமாமிர்தத்தம்மாள் பட மூலாதாரம், Dravidian Stock படக்குறிப்பு, மூவலூர் ராமாமிர்தத்தம்மாள் எழுதிய 'தாசிகள் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர்'. சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாக பங்கெடுத்த மற்றொரு பெண் தலைவர் மூவலூர் ராமாமிருதத்தம்மாள். இசை வேளாளர் குடும்பத்தில் பிறந்த ராமாமிர்தத்தம்மாளின் இளம் பருவம் வறுமை மிக்கதாக, பெற்றோரால் கைவிடப்பட்டதாக இருந்தாலும், இந்தத் துயர்களைத் தாண்டி மற்றவர்களுக்காகப் போராடும் மன உறுதியைப் பெற்றிருந்தார் அவர். துவக்க காலத்தில் காங்கிரஸ் மீது பற்றுக் கொண்டிருந்த ராமாமிர்தத்தம்மாள், பிற்காலத்தில் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு காட்ட ஆரம்பித்தார். செங்கல்பட்டில் சுயமரியாதை இயக்க முதல் மாநாடு நடந்தபோது, 'தேவதாசிகள்' என அந்தக் காலகட்டத்தில் அழைக்கப்பட்ட பெண்களை அந்த மாநாட்டின் பார்வையாளர்களாக கொண்டுவந்தார். சுயமரியாதை இயக்க இரண்டாவது மாநாட்டில் உரை நிகழ்த்தும் வாய்ப்பு இவருக்கு வழங்கப்பட்டது. முதலாவது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது திருச்சி முதல் சென்னை வரை சுயமரியாதை இயக்கத்தினர் மேற்கொண்ட நடைபயணத்திலும் இவர் கலந்துகொண்டார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. குடி அரசில் தொடர்ந்து எழுதிவந்த ராமாமிர்தத்தம்மையார் தேவதாசிகள் குறித்து தான் அறிந்தவற்றை வைத்து எழுதிய 'தாசிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்' என்ற நூலை எழுதினார். 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கால இலக்கியத்தில் இந்த நூல், மிகுந்த முக்கியத்துவம் பெற்ற நூல். பல சுயமரியாதைத் திருமணங்களையும் இவர் நடத்திவைத்தார். இந்தத் தலைவர்கள் தவிர, பெரியாரின் முதல் மனைவியான நாகம்மை, மீனாம்பாள் சிவராஜ், குத்தூசி குருசாமி, கோவை அய்யாமுத்து, கி.ஆ.பெ. விஸ்வநாதம், என். சிவராஜ், சிவகங்கை ராமச்சந்திரன், செ.தெ. நாயகம் உள்ளிட்ட தலைவர்களும் சுயமரியாதை இயக்கச் செயல்பாடுகளில் தீவிரம் காட்டினர். இந்தத் தலைவர்களில் சிலர், பிற்காலத்தில் வேறு அரசியல் சித்தாந்தங்களைத் தேர்வுசெய்தாலும், சுயமரியாதை இயக்கத்தின் ஆரம்பகாலச் செயல்பாடுகளில் இவர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cj6xg0xer38o
யாழ். இளைஞர்களை நேர்மை மற்றும் ஒழுக்கமிக்க நிலைமைக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது ; ஸ்ரீ பவானந்தராஜா
04 Oct, 2025 | 11:38 AM கல்வி, ஒழுக்கம், நேர்மை, கண்ணியம், உழைப்பு போன்றவற்றிற்கு யாழ்ப்பாண மக்கள் ஒரு காலத்தில் பெயர் போனவர்கள். ஆனால் கடந்த ஆட்சிகளில் ஏற்பட்ட போதைப்பழக்கம், தொலைபேசி பாவனை காரணமாக இளைஞர்கள் திசைமாறி சீரழிந்து கொண்டிருக்கின்றது. எனவே அவர்களை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது என்ன நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - சங்கானை வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (03) நடைபெற்ற நடைபெற்ற நல்லொழுக்க தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், சமூக மாற்றங்கள் எவ்வாறு ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்று அனைவருக்கும் தெரியும். ஒழுக்கமின்மையே இதற்கெல்லாம் காரணம். ஒழுக்கமானது குடும்பத்தில் ஆரம்பித்து, பின்னர் கிராமத்திற்கு பரப்பப்பட்டு, அது நாடு நோக்கி நகர வேண்டும். பழைய அரசாங்கங்களின் செயற்பாடுகளால் அவை தலை மாறி போயிருக்கின்றன. கடந்த கால அரசாங்கத்தில் மதுபானசாலை அனுமதி பத்திரங்களை அரசியல்வாதிகள் பெற்று கிளிநொச்சியிலும் சரி யாழ்ப்பாணத்திலும் சரி மதுபானசாலைகளை திறந்து இருக்கின்றார்கள். சாப்பாட்டுக் கடைகளை விட மதுபானசாலைகளே அதிகமாக இருக்கின்றன. பெரிய ஒரு அரசியல் கட்சியின் ஆதாரவாளர்கள் ஒரு போதைப்பொருள் தொழிற்சாலையையே உருவாக்கும் அளவிற்கு போதைப் பொருட்களை கொண்டு வந்து தெற்கில் வைத்திருக்கின்றார்கள். இதனைக் கடந்த அரசாங்கங்கள் கண்டும் காணாமல் தான் விட்டிருந்தன. ஆனால் எமது ஜனாதிபதி இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து அனைவரையும் கைது செய்துள்ளார். இவ்வாறானவர்கள் உண்மையிலேயே 15-20 வருடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு கைது செய்யாமையால்தான் அவர்கள் போதைப் பொருட்களை வீடு வீடாக விநியோகிக்கும் அளவிற்கு திறமை பெற்றிருக்கின்றார்கள். ஒரு அரசாங்கத்திற்கு நிழல் அரசாங்கமாக செயல்படும் அளவிற்கு அவர்கள் போதைப்பொருள் வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்தார்கள். எனவே அவர்களை அடக்குவது எமது அரசாங்கத்தின் கடமை. அதனை நாங்கள் செய்வோம் என்றார். https://www.virakesari.lk/article/226863
யாழில் மாடியில் இருந்து குதித்த பாடசாலை மாணவி!
இதன் வேர் சாதி என்று நான் நினைக்கிறேன். மாணவ மாணவிகள் விளையாட்டின் ஊடாக மனவுறுதி மற்றும் வெற்றி தோல்வியை ஏற்கும் மனப்பக்குவம் பெறுவார்கள். ஆசிரியர்கள் மாணவர்களை அரவணைத்து ஊக்குவிப்பவர்களாக இருக்கவேண்டும்.
இரசித்த.... புகைப்படங்கள்.
’நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக உள்ளோம்’ - சி.வி.கே.சிவஞானம்
சிவஞானம் யாரைப்பார்த்து இந்தக்கேள்வியை கேட்கிறார்? யாரிடம் கேட்க வேண்டிய கேள்வியிது? கேட்க வேண்டிய இடத்தில் கேட்பதற்கு பயப்படுகிறாரோ? நீங்கள் அப்படி நினைக்கிறீர்கள். தமிழரை பிரித்தாளுவதே இந்தியாவும் இலங்கையுந்தானே. அவர்களுக்கு தெரியும் யாரைபிரித்தால் தீர்வை கிடைக்காமல் செய்ய முடியும் என்பது. முடிந்தால் இந்தியாவிடம் நேராக இந்த விளக்கத்தை சொல்லலாம் சிவஞானம் அவர்கள்.
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 30 B பகுதி: 30 B / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'புத்த சமயவாதிகள் புத்தரின் நான்கு பேருண்மைகளை சரியாக உணர்ந்தார்களா?' [தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது] எனவே சுருக்கமாக ஆதார பூர்வமாக சொல்வதென்றால், விஜயன் என்று ஒரு புராண கதாநாயகன், அவனது பண்பற்ற கொடிய செயல்களால், நாடு கடத்தப்பட்டு வந்தேறு குடியாக, அகதியாக 700 தோழர்களுடன் இலங்கை தீவிற்கு வரும் முன்பே, சிவ வழிபாடும் தமிழும் அங்கு இருந்துள்ளது. விஜயன் வந்து 250 ~ 300 ஆண்டுகளின் பின்பு தான் புத்த மதம் இலங்கைக்கு வந்தது. மேலும் விஜயன் வந்து 1000 ஆண்டுகளிற்கு பின்புதான் சிங்களம் என்ற இனமோ அல்லது மொழியோ ஒரு கட்டுக் கோப்பிற்குள் உருவாக தொடங்கின. அது மட்டும் அல்ல, மகாவம்சம் / விஜயனின் பட்டாபிஷேகம் [CHAPTER VII /THE CONSECRATING OF VIJAYA] 46 - 50 இல். அங்கு பல குடியிருப்புகளை ஏற்படுத்திய பிறகு விஜயனுடைய மந்திரிகள் அவனிடம் ஒன்றாக வந்து ‘ஐயனே ! தாங்கள் முடி சூட்டிக் கொள்ள இசைய வேண்டும்" என்கிறார்கள். ஆனால், அவர்கள் வேண்டியும் அவன் மறுத்தான். 'உயர் குல மங்கை ஒருத்தியை', அதே சமயத்தில் அவளை ராணியாகக் கொண்ட பிறகே, பட்டாபிஷேகம் செய்து கொள்ள முடியும்’ என்று கூறி வேண்டு கோளை ஏற்க மறுத்தான். தங்கள் எஜமானனுக்குப் பட்டாபிஷேகம் செய்வதில் ஆர்வம் கொண்டவர்களாக, மந்திரிகள் அதற்கு வழிசெய்வது கஷ்டமாக இருந்த போதிலும், அவ்வகையில் ஏற்பட்ட பயத்தை ஒழித்தவர்களாக, விலையுயர்ந்த பரிசுப் பொருள்கள், ஆபரணங்கள், முத்துக்களுடன் சிலரை தென்னிந்தியாவிலுள்ள மதுரை மாநகருக்கு அனுப்பி வைத்தனர்' என்கிறது. [When they had founded settlements in the land the ministers all came together and spoke thus to the prince : Sire, consent to be consecrated as king But, in spite of their demand, the prince refused the consecration, unless a maiden of a noble house were consecrated as queen (at the same time). But the ministers, whose minds were eagerly bent upon the consecrating of their lord, and who, although the means were difficult, had overcome all anxious fears about the matter, sent people, entrusted with many precious gifts, jewels, pearls, and so forth, to the city of Madhurai in southern (India), to woo the daughter of the Pandu king for their lord,]. இது அன்று, அதாவது கி மு 6ஆம், 5ஆம் நூறாண்டில், தமிழருக்கு உள்ள மதிப்பை பறைசாற்றுகிறது, சிங்கள இனத்தின் முதல் மூதாதையான விஜயன் வாயினூடாகவே 'உயர் குல மங்கை' என மதுரை தமிழ் இளவரிசையை கூற வைத்ததிற்கு, நாம் மகாவம்ச கதையின் நூலாசிரியருக்கு கட்டாயம் நன்றி செலுத்த வேண்டும். இலங்கையில் கண்டுபிடிக்கப் பட்ட கிருஸ்துக்கு முற்பட்ட கல்வெட்டுகளில், 50 மேற்படட இடத்தில் முக்கிய இடத்தை வகுத்த சொல் 'பருமக' [parumaka] ஆகும். இது தென் இந்தியாவில் காணப்பட்ட, தமிழ் சொல் பருமகன் அல்லது பெருமகன் [perumakan] உடன் ஒன்றிப் போவதாக, ராசநாயகம், சி பத்மநாதன், ப புஸ்பரத்தினம் போன்ற அறிஞர்கள் அடையாளம் கண்டுள்ளார்கள். இதற்கு ராசநாயகம் , தலைவன், கோமான், மன்னன் [chief, lord, and king] மற்றும் பரணவிதான [Paranavitana] இதற்கு அதே பொருள் பட, ஆனால் பொதுப் படையாக இல்லாமல், இந்தோ ஆரியன் தலைவர்கள் [Indo-Aryan chieftains] என விளக்கி உள்ளார். ஆனால் கிருஸ்துக்கு பின் இந்த பெயர் மாற்றப் பட்டு அது மாபருமக [maparumaka / பெரும் பெருமகன்] என பிரதியீடு செய்யப் பட்டுள்ளது. அப்படியான கல்வெட்டு ஒன்று மட்டக்களப்பு, வெல்லாவெளி - தளவாய் என்ற இடத்தில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது [Vellaveli Brahmi Inscription / photo attached. The rough translation says “Ship caption Shamathaya, who has the title Parumaka, given this rock”. The word Parumaka literally means lord, and the word Naavika could be a sailboat as per use of Sangam literature’s wording.]. இந்த பிராமிச் சாசனம் 'பருமக நாவிக ஷமதய லெணே' என்பதாகும். இதை 'பருமக' [பெருமகன்] என்ற பட்டத்திற்குரிய கப்பல் தலைவன் ஷமதய என்பவன் கொடுத்த குகை என பொருள் படுத்தப் படுகிறது. எனவே இந்த இடத்தில் கிருஸ்த்துக்கு முன், தமிழ் மொழியையும் அல்லது வேறு மொழியையும் [பரணவிதான கூறியது போல் இந்தோ ஆரியன்] பேசியோர் வாழ்ந்து உள்ளனர் என்பது உறுதிப் படுத்தப் படுகிறது. எனவே விஜயன் வரும் பொழுது அவனுக்கும் அவன் தோழர்களுக்கு அடைக்கலம் கொடுத்த பூர்வீக குடிமக்களில் இவர்களும் ஒருவராகும், எனவே இவர்களை நீங்கள் ஒதுக்க முடியாது ,இவர்களும் இம் மண்ணின் மைந்தர்களே !! சக்கரவர்த்தி அசோகன் செய்த தவறா, இல்லை புத்தரின் போதனைகளை பரப்பி தம் கட்டுப் பாட்டில் வைத்திருந்த, வைத்துக் கொண்டிருக்கிற துறவிகள் செய்த தவறா நான் அறியேன் ? ஏன் என்றால் புத்தர் மிக தெளிவாகச் சொல்கிறார்: 'கடவுளை மையமாகக் கொண்ட சமயங்களில் எது சரியானது, எது தவறானது, என்பதை அறிய அச்சமயவாதிகள் சொல்வதை நாம் செய்ய வேண்டும். ஆனால் மனிதனை மையமாகக் கொண்ட பௌத்த சமயத்தில் எது சரி, எது தவறு என்பதை அறிய நம்மை முழுமையாகப் புரிந்து கொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் வேண்டும். இவ்வாறு நம்மை உணர்ந்து கொள்வதால் எழும் நன்னெறி ஒரு கட்டளையினால் உருவாக்கப்படும் நன்னெறியை விட உறுதியானவையாகவும் பலம் வாய்ந்தவையாகவும் இருக்கும்' என்று அவர் போதித்ததுடன், மற்றவர்களுக்கு உதாரணமாக அவர் நான்கு அடிப்படை பேருண்மைகளையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டினார். இன்று பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் புத்த சமயவாதிகள் என்ன செய்கிறார்கள் ?, எது செய்யப் போகிறார்கள் ? என்ற தவிப்பில், பயத்தில் மற்ற இனம் வாழும் நாடாக இவை மாறுகிறது? காரணம் அந்த புத்தரின் புனிதமான நான்கு பேருண்மைகளை சரியாக உணராமையும் கடைப் பிடிக்காததும் ஆகும். அப்படியான நடவடிக்கைகளுக்கு சார்பான, சாதகமான வழி அமைத்து கொடுத்தது தான் இந்த மகாவம்சம் என்று சொல்லலாமோ என்று எனக்கும் தோன்றுகிறது ? நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 31 தொடரும் / Will follow "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 30 B https://www.facebook.com/groups/978753388866632/posts/31627963990185503/?
யாழில் மாடியில் இருந்து குதித்த பாடசாலை மாணவி!
இந்த கெட்ட பழக்கம் புலம்பெயர் தேசம்களிலும் தொடர்வது எமது இனத்தின் சாபகேடு .
கருத்து படங்கள்
சிந்திக்க வைக்கும், அருமையான கருத்தோவியம். 😂
எங்கள் அன்பு மகன் கலாநிதி பிரணவனுக்கு' / 'To Our Dear Son, Dr Piranavan [16/09/2025]
மிக்க நன்றி
மஹிந்தவின் குண்டு துளைக்காத வாகனம் ஒப்படைப்பு! மஹிந்தவின் குண்டு துளைக்காத வாகனம் ஒப்படைப்பு!
மஹிந்தவின் குண்டு துளைக்காத வாகனம் ஒப்படைப்பு! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே, நேற்று (3) சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மூலம் வாகனத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குதல் சட்டம் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அனைத்து உத்தியோகபூர்வ வாகனங்களும் உத்தியோகபூர்வ இல்லமும் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி செயலாளர் செப்டம்பர் 24 அன்று தெரிவித்ததாகவும் கமகே மேலும் குறிப்பிட்டார். மேலும், முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட பயணிகள் வாகனமும் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார். இந்த நிலைமை மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். https://athavannews.com/2025/1449531
IDAIKKADU - OUR MOTHER LAND
IDAIKKADU - OUR MOTHER LAND / Part 03 https://www.facebook.com/groups/978753388866632/posts/31627270690254833/?
இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 37 பில்லியன் டொலர்கள்!
இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 37 பில்லியன் டொலர்கள்! இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் தொகையானது 37 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரியவந்துள்ளது. அரசாங்க நிதி பற்றிய குழு (COPF) அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் கூடியபோது இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது. இலங்கை பெற்ற கடன்கள் குறித்து குழு விசாரித்தபோது, கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட பொதுக் கடன் மேலாண்மை அலுவலக அதிகாரிகள், 37 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அதாவது 19.6 டிரில்லியன் ரூபாய் வெளிநாட்டுக் கடன்கள் பெறப்பட்டுள்ளதாகக் கூறினர். அனைத்து கடன் வாங்கும் செயல்முறைகளும் தற்போது அரச கடன் மேலாண்மை அலுவலகத்தால் மட்டுமே நிர்வகிக்கப்படுகின்றன. நாட்டின் கடன் மேலாண்மை நடவடிக்கைகளை வலுப்படுத்த திறமையான அதிகாரிகளை நியமிப்பதன் முக்கியத்துவத்தையும் கோப் குழுத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இதன்போது எடுத்துரைத்தார். https://athavannews.com/2025/1449528
17 ஆண்டு கால ஆராய்ச்சியின் விளைவாக புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்து கண்டுபிடிப்பு!
me இலங்கை 17 ஆண்டு கால ஆராய்ச்சியின் விளைவாக புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்து கண்டுபிடிப்பு! சுமார் 17 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. இந்த ஊட்டச்சத்து மருந்து, மூலக்கூறு உயிரியல் மற்றும் நெட்வொர்க் மருந்தியல் போன்ற நவீன அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி 05 மருத்துவ தாவரங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வெர்னோனியா ஜெய்லானிகா, ( Vernonia zeylanica) நிஜெல்லா சாடிவா, (Nigella sativa) ஹெமிடெஸ்மஸ் இண்டிகஸ், (Hemidesmus indicus) லூகாஸ் ஜெய்லானிகா (Leucas zeylanica) மற்றும் ஸ்மைலாக்ஸ் கிளாப்ரா (Smilax glabra) ஆகிய தாவரங்களிலிருந்து பெறப்பட்ட மருந்துகளின் கலவையானது புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடும் என்று பேராசிரியர் சமீரா ஆர். சமரக்கோன் உள்ளிட்ட ஆய்வில் ஈடுபட்டுள்ள குழுவினர் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1449481
காசாவில் குண்டுவெடிப்பை உடனடியாக நிறுத்துமாறு டிரம்ப் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டார்
ஆக மொத்தத்தில் நெத்தன்யாஹுவும், ஹமாஸும்.... ட்ரம்பின் ஆசையில் மண் அள்ளிப் போடப் போகிறார்கள் போலுள்ளது. 😂 அப்படி நோபல் பரிசு ட்ரம்பிற்கு கிடைக்காமல் போனால், ட்ரம்ப் தன்னிச்சையாக சில நாடுகளை சேர்த்துக் கொண்டு அமெரிக்க மேற்பார்வையில் (தற்போது ஐ.நா. சபை ஒப்புக்கு சப்பாணியாக உள்ளது போன்று) நோபல் பரிசிற்கு இணையான ஒரு சர்வதேச நிறுவனத்தை ஆரம்பித்து... தனக்கு சமாதானத்துக்குரிய 🥇 பரிசை பெற்றுக் கொண்டாலும் ஆச்சரியம் இல்லை. 🎖️ 🙂 ஏனென்றால்... இது ட்ரம்பின் தனிப்பட்ட தன்மானப் பிரச்சினை. "தனது தோல்வியை... இலகுவில் ஜீரணிக்க முடியாத ட்ரம்ப்... "பேட்டை ரவுடி" மாதிரி எந்த அடி மட்டத்திற்கும் இறங்கி, "நாத்தல்" வேலை செய்யக் கூடியவர்தான் ட்ரம்ப்". 🤣
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed