3 months ago
இவ்வளவு புத்தகங்களையும் எழுதியவர்கள், சேகரித்தவர். பாதுகாப்பவர்,போற்றப்படவேண்டியவர்கள்.அழியாதசெல்வம் கல்வி. நூலகம் ஒரு அறிவுப்பெட்டகம்
3 months ago
அமெரிக்கனும் புத்திசாலி தான் அதே நேரம் அமெரிக்காவில் குடியேறிய ஈழ தமிழர்களும் ரஷ்யாவில் சீனாவில் குடியேறாது தவிர்த்து கொண்ட ஈழதமிழர்களும் எப்பவுமே புத்திசாலிகள் தான். இதை புரிந்து கொண்டவன் பிஸ்தா
3 months ago
இப்ப ஆடுமாடுகள் எல்லாம் கள்ளுக் குடிச்சுப்போட்டு கவுண்டு கிடப்பதாகக் கேள்வி!
3 months ago
3 months ago
குழந்தைக் குட்டி உள்ள குட்டிக் கதையாகினும் நகைச்சுவை நன்றாக இருந்தது . ........ ! 😂
3 months ago
அமெரிக்கன் எப்பவும் புத்திசாலிதான் 🤣
3 months ago
11 JUL, 2025 | 07:07 PM மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்தின் பன்னாட்டு மாநாடு வெள்ளிக்கிழமை (11) காலை 8.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் ஆரம்பமானது. குறித்த மாநாடு விடத்தல் தீவு கிராமத்தைச் சேர்ந்த துறைசார் வல்லுனர்கள். கல்விமான்கள் மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக பணியாற்றும் நபர்கள் ஒன்று சேரும் ஒரு அரிய சந்திப்பாக குறித்த நிகழ்வு வெள்ளிக்கிழமை (11) காலை ஆரம்பமானது. குறித்த நிகழ்வு 2 வது நாளாக சனிக்கிழமையும் (12) இடம்பெற உள்ளது. மேலும் இம் மாநாடு பொருளாதாரம் ,கல்வி, சுற்றுச்சூழல், சமயம், கலாச்சாரம், பண்பாடு மற்றும் விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் நடைபெறும் நிகழ்வுகளை ஆய்வு செய்து ஆவணப் படுத்துவதோடு இவ்விடயங்களில் பரஸ்பர புரிதலை ஏற்படுத்தி மக்களின் வாழ்வியலை மேம்படுத்தும் ஒரு முக்கிய அமர்வாக இடம்பெற்று வருகின்றது. மன்னாரில் அமைந்துள்ள விடத்தல்தீவு கிராமத்தின் சிறப்பும், பண்பாடும் மற்றும் கலை கலாசார பாரம்பரியமும் இம்மாநாட்டின் 2ஆம் நாள் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளது. போரின் அனர்த்தங்களினால் உருக்குலைந்து போன விடத்தல் தீவு போன்ற கிராமங்களின் பொருளாதார, சமூக கலாசார அம்சங்களை மீள்கட்டியெழுப்புவதற்கும் ஆவணப்படுத்துவதற்குமான இம் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை (11) காலை 8.30 மணியளவில் முதல் நாள் நிகழ்வுகள் ஆரம்பமானது. இதன் போது விருந்தினர்கள் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து மாலை அணிவிக்கப் பட்டு வாத்திய இசையுடன் நகரசபை மண்டபம் நோக்கி அழைத்து வரப்பட்டனர். குறித்த முதல் நாள் நிகழ்வில் விருந்தினர்களாக வவுனியா பல்கலைக்கழக உப வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் அருளம்பலம் அற்புதராஜா, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், உள்ளடங்களாக அழைக்கப்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/219757
3 months ago
11 JUL, 2025 | 04:28 PM மக்கள் சுதேச மருத்துவத்தை ஆர்வத்துடன் தேடிச் செல்லும் போக்கு அதிகரித்து வருகின்றது. ஏனைய மருத்துவங்களால் பக்க விளைவுகள் ஏற்படுகின்றன என அவர்கள் நம்புவதன் காரணமாக சுதேச மருத்துவத்தை தேடிச் செல்கின்றனர். இந்த மாற்றத்தை சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். கிளிநொச்சி மத்திய சித்த மருந்தகத்தின் புதிய கட்டடம் வடக்கு மாகாண ஆளுநரால் வெள்ளிக்கிழமை (11) கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஆணையாளர் வைத்தியர் தி.சர்வானந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக ஆளுநர் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், கௌரவ விருந்தினராக வடக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவ, சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலர் ப.ஜெயராணி, கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆளுநர் தனது உரையில், திணைக்களங்களுக்கு சிறப்பான பௌதீக வளம் இருந்தால் மக்களுக்குத் தேவையான சேவையை வழங்க முடியும். நாங்கள் அரச சேவைக்கு இணைந்து கொண்ட 1991ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டு வரையிலான காலம் போருடனேயே இருந்தது. அந்தக் காலப் பகுதியில் பௌதீக வளங்கள் சிறப்பாக இல்லாவிட்டாலும் மக்களுக்கு திருப்திகரமான சேவையை நாம் வழங்கியிருந்தோம். எங்களுடைய சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளுக்கு மிகப் பெரிய கட்டடங்கள் மற்றும் நவீன உபகரணங்கள் கிடைக்கப்பெற்றன. ஆனால் மனித வளம் இல்லாமையால் அவை இயங்காமல் இருக்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் அப்பால் பௌதீக வளங்கள் இருந்தாலும் மக்களுக்கு தரமான – சிறப்பானதொரு சேவையை வழங்கினாலேயே அந்தத் திணைக்களங்களை நோக்கி மக்கள் வருவார்கள். மக்கள் எவ்வளவு விரும்பி திணைக்களங்களை நோக்கிச் செல்கின்றார்களோ அதில்தான் அந்தத் திணைக்களங்களின் வெற்றி தங்கியிருக்கின்றது. திணைக்களங்களும் மக்களுக்குச் சிறப்பான சேவையை வழங்கினால்தான், அந்தத் திணைக்களங்களுக்கு மேலதிக உதவிகளைச் செய்யவேண்டும் என்ற உந்துததல் எங்களுக்கும் ஏற்படும். எனவே மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயற்பட வேண்டும் என்பதுடன், நகரின் மத்தியில் திறக்கப்பட்டமையால் சித்த மருந்தகத்தை நோக்கி மக்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்பதையும் நினைவிலிருத்தி செயற்படவேண்டும் என்றார். வடக்கு மாகாண ஆளுநரால் வளாகச் சுற்றாடலில் மரக்கன்றுகளும் நடுகை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/219751
3 months ago
பிள்ளைகளின் தலையில் பூ வைக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிய அம்மா.
3 months ago
🤣........................ நானே ஒரு பூனைக்குட்டி போல ஆகிவிட்டேன் அந்த விமானப் பயணத்தில்......... கனடாவிலிருந்து திரும்பி வந்தவுடன் ஓடிப் போய் குட்டிகளைத்தான் எட்டிப் பார்த்தோம். ஒரு குட்டியும் அங்கிருக்கவில்லை. அன்று நாள் முழுவதும் குட்டிகள் கண்களில் படவேயில்லை குட்டிகளை யாரோ பிடித்துக் கொண்டு போய்விட்டார்கள் போல என்று கவலையாகவும், பரவாயில்லை, அவைகள் எங்காவது வீடுகளில் வளரட்டும் என்று ஒரு ஆறுதலாகவும் இருந்தது. நேற்று மீண்டும் பார்க்கும் போது மூன்று குட்டிகள் நின்றன. ஒன்றைத்தான் காணவில்லை. பொதுவாக மனிதர்கள் இல்லாத பிரச்சனைகளை அவர்களே உருவாக்கி, அதற்குள் சுற்றிச் சுழல்வார்கள் என்று சொல்வார்கள். உருவாக்கிக் கொண்டிருக்கின்றேன் போல...............🤣.
3 months ago
பட மூலாதாரம்,BADRI NARAYANAN படக்குறிப்பு, பவபூரணி கட்டுரை தகவல் சேவியர் செல்வக்குமார் பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் கோவை தனியார் மருத்துவக் கல்லுாரியில் படித்து வந்த பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவி பவபூரணி கழிவறையில் உயிரிழந்து கிடந்தது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். இந்த மரணம் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தாமாக முன் வந்து கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி, 5 நாட்களுக்குள் இதுபற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், மருத்துவ மாணவி மூச்சுத்திணறலால் (asphyxia) உயிரிழந்திருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாகவும், அதற்கான காரணம் குறித்து உடற்கூறு ஆய்வக முடிவுகள் வந்த பின்பே தெரியவருமென்றும் கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார். மீண்டும் படிக்க வந்த பவபூரணி நாமக்கல் மாவட்டம் வகுரம்பட்டியைச் சேர்ந்த கந்தசாமியின் மகள் பவபூரணி (வயது 29), கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லுாரியில் மயக்க மருந்தியல் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஜூலை 6 ஞாயிற்றுக்கிழமையன்று காலையில், பவபூரணி இறந்துவிட்டதாக அவருடைய தந்தைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 5 ஆம் தேதி சனிக்கிழமையன்று இரவு, அறுவை சிகிச்சை தீவிர சிகிச்சைப் பிரிவில் பவபூரணி பணியாற்றி வந்ததாகவும், மறுநாள் காலை 6 மணியளவில் பணி மருத்துவர் அறையிலுள்ள கழிவறையில் இறந்து கிடந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பவபூரணியின் தந்தை கந்தசாமி, கூலித்தொழிலாளி. தாயார் இறந்து விட்டார். பவபூரணி மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லுாரியில் கடந்த 2014–2020 ஆம் ஆண்டுகளில் எம்.பி.பி.எஸ். முடித்த பின்பு, அதே மருத்துவமனையில் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார். இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, கோவை பி.எஸ்.ஜி. கல்லுாரியில் சேர்ந்துள்ளார் என்று பவபூரணியின் உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். பவபூரணியின் மரணம் தொடர்பாக, பீளமேடு காவல் நிலையத்தில் மர்ம மரணம் என்ற பிரிவில் (CRPC 174) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த பின், குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையில் வெளிக்காயம் எதுவுமில்லை என்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அவருடைய உடற்கூறு மாதிரிகள், ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் பீளமேடு போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் அர்ஜூன், ''கழிவறைக்குச் சென்ற அவர் வெகுநேரமாக வரவில்லை என்றதும் சக மாணவிகள் சென்று பார்த்துள்ளனர். கழிவறை கதவை உடைத்துத் திறந்தபோது, அவர் உள்ளே கீழே விழுந்து கிடந்துள்ளார். அவருக்கு அருகில் ஒரு சிரிஞ்சும், மருந்து பாட்டிலும் இருந்துள்ளது. அவரை வெளியே கொண்டு வந்து பரிசோதித்தபோது, அவர் இறந்துவிட்டது தெரியவந்துள்ளது. '' என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,(சித்தரிப்புப் படம்) தற்கொலைக்கான முகாந்திரம் இல்லை - உறவினர்கள் பவபூரணியின் மரணம் குறித்து தங்களுக்கு தாமதமாக தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், தாங்கள் வரும் முன்பே அவரின் நகைகள் உள்ளிட்ட உடைமைகளை காவல்துறையிடம் ஒப்படைத்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியதில் சந்தேகம் எழுவதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பவபூரணி தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்புள்ளதாக காவல்துறையினர் கூறும் நிலையில், அவர் தற்கொலை செய்து கொள்ள முகாந்திரமே இல்லை என்கின்றனர் பவபூரணியின் உறவினர்கள். பிபிசி தமிழிடம் பேசிய பவபூரணியின் சித்தப்பா கோவிந்தராஜ், ''எங்களுக்கு முதலில் தகவல் தெரிவித்த போது, பாத்ரூமில் வழுக்கி விழுந்து இறந்து விட்டதாகக் கூறினர். ஆனால் நேரில் சென்றபோது வெவ்வேறு விதமாகத் தகவல் தெரிவித்தனர். முதல் நாள் இரவு பவபூரணி, மருத்துவமனையில் பணியில் இருந்துள்ளார். அவருடன் கூடவே 2 பெண் டாக்டர்கள் இருந்துள்ளனர். அதிகாலை 3 மணியளவில் பவபூரணி, கழிவறை சென்றிருக்கிறார். அதன்பின் அவர் வரவேயில்லை. வேறு ஒரு நோயாளி இரவில் வந்ததால் அவர்கள் கவனிக்கவில்லை என்றும், 6 மணிக்குதான் கழிவறையில் சென்று பார்த்ததாகவும் கூறினர்.'' என்றார். மேலும் தொடர்ந்த அவர், ''கழிவறையை தட்டியபோது திறக்கவில்லை என்றும், பின்னாலுள்ள கண்ணாடி வழியாக பார்த்தபோது அவர் கீழே விழுந்து கிடந்ததாகவும், அதன் பின் கதவைத் தள்ளித் திறந்ததாகவும் உடனிருந்த பெண் டாக்டர்கள் கூறினர். ஆனால் காலை 8:30 மணிக்குதான் எங்கள் அண்ணனுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். நாங்கள் சென்றபோது அவர்கள் கூறிய தகவல்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால் சிசிடிவி கேமரா காட்சிகளைக் கேட்டோம். அவர்கள் காண்பிக்கவில்லை.'' என்றார். பட மூலாதாரம்,NCSC.NIC.IN படக்குறிப்பு,தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இதுபற்றி விசாரித்து 5 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கோவை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சுயமாக முன் வந்து விசாரணை! அதன்பின் காவல்துறையினர் அவர்களின் மொபைலில் சில காட்சிகளைக் காண்பித்தனர் என்று கூறிய கோவிந்தராஜ், அவர்கள் காண்பித்த காட்சியில் பவபூரணியும், மற்றொரு பெண்ணும் நடந்து செல்வது மட்டும்தான் தெரிந்தது என்றும், கழிவறை கதவை உடைத்தது, அவரைத் தூக்கி வந்தது, பரிசோதித்தது போன்ற எந்தக் காட்சிகளையும் காண்பிக்கவில்லை என்றும் தெரிவித்தார். இதே கருத்தைத் தெரிவித்த பவபூரணியின் தம்பி பத்ரி நாராயணன், ''முதல் நாள் இரவு 7 மணிக்கு, 'நான் டூட்டியில் இருக்கிறேன். ரூமுக்கு வந்து பேசுறேன்' என்றார். அதுதான் அவர் என்னிடம் கடைசியாகப் பேசியது. அப்போது அவர் இருந்த மனநிலைக்கு, அவர் மறுநாள் காலையில் இப்படி இறந்திருப்பது பல விதமான சந்தேகங்களை எழுப்புகிறது.'' என்றார். பவபூரணியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சந்தேகம் எழுப்புவதற்கு முன்பே, இந்த மரணம் குறித்து பல்வேறு தரப்புக்கும் புகார் மனுக்கள் சென்றுள்ளன. பட்டியலினத்தைச் சேர்ந்த பவபூரணியின் மரணம் குறித்து, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தாமாகவே முன் வந்து விசாரணை மேற்கொண்டு, இதுபற்றி விசாரித்து 5 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது. பவபூரணியின் மரணம் குறித்து தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்கம் வெளியிட்டுள்ள சமூக ஊடகப்பதிவில், ''மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய காரணம் என்னவென்று மருத்துவமனை நிர்வாகம் கூற மறுப்பதாகவும் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். மாணவியின் மர்மமான மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து இதுபோல் இனியொரு மரணம் நடக்காத வகையில் அதற்கேற்ற உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.'' என்று கூறியுள்ளது. இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய சங்கத்தின் நிர்வாகி மது, ''மருத்துவமனை நிர்வாகமும் தெளிவான காரணத்தைச் சொல்ல மறுக்கிறது. காவல்துறை சார்பிலும் சரியான தகவல்களைத் தர மறுக்கிறார்கள். அதனால்தான் இந்த விஷயம் பற்றி சமூக ஊடகத்தில் பகிரங்கமாக எங்கள் பதிவை வெளியிட்டோம். நியாயமான விசாரணை நடக்க வேண்டுமென்பதே எங்கள் கோரிக்கை.'' என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES அதேபோன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகளும், கோவை மாவட்ட ஆட்சியரிடம் இதுதொடர்பாக மனு கொடுத்துள்ளன. இதுபோன்று உயர் கல்வி படிக்கும் பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து மரணிப்பது பற்றி விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று அவர்கள் அந்த மனுக்களில் வலியுறுத்தியுள்ளனர். பிபிசி தமிழிடம் பேசிய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி தினேஷ் ராஜா, ''எய்ம்ஸ் உட்பட பல்வேறு மருத்துவக் கல்லுாரிகளிலும் பட்டியலின மாணவர்கள், மாணவிகள் மர்மமான முறையில் இறப்பது தொடர்ந்து வருகிறது. இந்த மரணத்திலும் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது இயற்கை மரணமா அல்லது தற்கொலையா என்பதை காவல்துறை நியாயமான விசாரணையில் உறுதி செய்யவேண்டும். முக்கியமாக பிரேத பரிசோதனை அறிக்கையை வெளிப்படையாக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.'' என்றார். தனது சகோதரியின் மரணத்தில் தங்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால், அதில் தேசிய மனித உரிமை ஆணையம் தலையிட வேண்டுமென்று மெயில் அனுப்பியிருப்பதாகத் தெரிவித்தார் பவபூரணியின் தம்பி பத்ரி நாராயணன். ''எனது அக்கா இரவு ஒன்றே முக்கால் மணிக்கு வார்டிலிருந்து வெளியே வந்ததாக சிசிடிவி காட்சியில் தெரிகிறது. அதன்பின் காலை 6 மணி வரை அந்த கழிவறையை யாருமே பயன்படுத்தவில்லை என்பது பல சந்தேகங்களை எழுப்புகிறது. அது டாக்டருக்கான தனி அறை என்றனர். ஆனால் வேறு சில படுக்கைகளும் அதில் இருக்கின்றன. பணியில் இருக்கும் டாக்டர் பல மணி நேரமாக வராமல் இருப்பதை ஏன் யாருமே சென்று பார்க்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.'' என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் பத்ரி நாராயணன். தனது அக்கா விழுந்து கிடந்த கழிவறையை திறந்து பார்த்த சக மாணவியான மற்றொரு பெண் டாக்டருக்கும், தன்னுடைய அக்காவுக்கும் இடையில் வாக்குவாதம் நடந்ததாக அங்கிருப்பவர்கள் கூறியதாகத் தெரிவிக்கிறார் பத்ரி நாராயணன். மற்ற மாணவர்களுக்கு இருப்பது போல தனது அக்காவுக்கும் நிர்ணயிக்கப்பட்டதை விட 3 மடங்கு அதிகமான பணி அழுத்தம் இருந்த விஷயமும் தனக்குத் தெரியுமென்று கூறினார். பவபூரணி யாரையும் காதலிப்பதாகவோ, திருமணம் செய்ய விருப்பமுள்ளதாகவோ தங்களிடம் எந்த விஷயத்தையும் பகிர்ந்தது இல்லை என்று அவரது கோவிந்தராஜ் கூறுகிறார் பவபூரணியின் மரணம் குறித்து பல்வேறு தரப்பிலும் எழுப்பப்படும் சந்தேகங்கள் குறித்து, கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லுாரி நிர்வாகத்திடம் கருத்து கேட்க பிபிசி தமிழ் முயன்றது. இதுகுறித்து நிர்வாகத்தரப்பு பதிலை கேட்டுச் சொல்வதாக மக்கள் தொடர்பு அலுவலர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் எந்த பதிலும் தரப்படவில்லை. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர், ''மாணவி விழுந்து கிடந்த கழிவறையில் அவருக்கு அருகில் இருந்த சிரிஞ்ச்சில் இருந்த மருந்தை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். பிரேத பரிசோதனையில், முதற்கட்டமாக பவபூரணியின் மரணத்துக்கு மூச்சுத்திணறலே (asphyxia) காரணமென்று தெரியவந்துள்ளது. ஆனால் மூச்சுத்திணறலுக்கு ரத்த அழுத்தம் போன்ற உடல்ரீதியான பாதிப்பு காரணமா அல்லது அவர் எடுத்த ஊசி மருந்து காரணமா என்பது தெரியவில்லை.'' என்றார். பவபூரணியின் இதயம், நுரையீரல், மண்ணீரல் உள்ளிட்ட பல்வேறு உடல் பாகங்களின் மாதிரிகளும் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்த காவல் ஆணையர் சரவணசுந்தர், அது வருவதற்கு சில வாரங்களாகலாம் என்பதால் அவற்றின் முடிவு வரும் வரை இறப்புக்கான காரணம் குறித்து எந்த முடிவுக்கும் வரமுடியாது என்றும் கூறினார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyz1j5jmd2o
3 months ago
3 months ago
11 JUL, 2025 | 02:56 PM கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வும் திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு ஒப்படைத்து அரசாங்கத்திற்கு 2.63 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவெல இன்று வெள்ளிக்கிழமை (11) உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு இன்று கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைகளை கருத்தில் கொண்ட நீதிவான், ராஜித சேனாரத்னவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/219735
3 months ago
வட கொரிய தொழிலாளர் கட்சியின் பொது செயலாளர் பெரும் மதிப்பிற்குரிய தோழர் கிம் ஜொங் உன்னை இடது சாரிகள் பட்டியலில் குறிப்பிட மறந்து விட்டீர்களே அண்ணா 😭
3 months ago
வரலாற்றில் முதல் 9A *************************** கிளிநொச்சியின் மேற்கு பகுதியில் நகரிலிருந்து சுமார் 10 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கிராமம் அது. பெரிதாக எவரும் கண்டுகொள்ளாத ஊர் அது. முக்கியமாக கல்வித்துறையில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சை என்றால் என்ன? க.பொ.த சாதாரன தரப் பரீட்சை பெறுபேறுகள் என்றால் என்ன அந்த பாடசாலையின் பெறுபேறு என்ன என்று எவரும் கேட்டுக்கொள்வதில்லை. வலயக் கல்வி அலுவலகம் மாத்திரம் தனது புள்ளிவிபர பதிவுக்காக பெறுபேறுகளை கேட்டுகொள்வார்கள். அவ்வளவுதான். பாடசாலை ஆரம்பித்த 1993 என நினைக்கின்றேன். அன்று இன்று வரை வளப்பற்றாக்குறை இன்றி இயங்கிய நாட்கள் இல்லை என்றே கூற வேண்டும். 1996 கிளிநொச்சி இடப்பெயர்வுக்கு முன் அந்த பாடசாலையினை தமிழ்த்தினப் போட்டியில் சிறுவர் நாடகத்திலும், கிளித்தட்டு போட்டியிலும் அந்தப் பாடசாலையினை மாவட்ட மட்டத்தில் பலரும் திரும்பி பார்த்தனர். அப்போதே இப்படியொரு பாடசாலை இருக்கிறது என்பது ஏனைய பல பாடசாலைகளுக்கு தெரியவந்தது. அதற்காக உழைத்தவர் அப்போது அந்த பாடசாலையில் தொண்டர் ஆசிரியராக கடமையாற்றி உருத்திரபுரத்தைச் சேர்ந்த சிங்கராசா ஆசிரியர். அவர் அந்த ஊர் மக்களும், மாணவர்களும் சிங்கா சேர் என்று அழைப்பர். இதன் பின்னர் மறுபடியும் அப்பாடசாலையினை எவரும் கண்டுகொள்வதில்லை. இப்படி பல வருடங்கள் கடந்தோடிய நிலையில் தற்போது அப்பாடசாலையினை ஒரு மாணவன் திரும்பி பார்க்க வைத்திருக்கின்றான். சக்திவேல் குயிலன் என்ற அந்த மாணவன் தற்போது வெளியாகியுள்ள க.பொ.த சாதாரன தரப் பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் 9 ஏ பெறுபேறுகளை பெற்றதன் மூலம் அப்பாடசாலையின் வரலாற்றில் முதற் தடவையாக 9ஏ பெற்ற வரலாற்று சாதனையினை ஏற்படுத்தியதன் மூலமே குயிலன் பாடசாலையினையும், ஊரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறான். இந்த ஒரு மாணவன் பெற்ற 9 ஏ ஏன் சாதனை என்றால், வளப்பற்றாக்குறையுடன் இயங்கும் பாடசாலை கல்வியினை பிரதானமாகவும், அந்த ஊரில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் மேலதிக கல்வியையும் மட்டுமே பெற்றிருக்கிறான் குயிலன். வறுமையான குடும்பம், பெற்றோர்கள் கூலித்தொழிலை செய்கின்றவர்கள். தினமும் வேலை கிடைக்காது வரையறுக்கப்பட்ட சொற்ப வருமானம், வசதிவாய்ப்புக்கள் குறைவு, இந்த வயதில் கல்வியை குழப்பும் வகையில் கவனக் கலைப்பான்கள் அதிகம், நகர்புற பிள்ளைகள் போன்று பெற்றோர்களால் மேலதிக வகுப்பு, பிரத்தியோக வகுப்பு, அந்த பயிற்சி புத்தகம், இந்த பயிற்சி புத்தகம் என எதுவும் இல்லை, தம்பி படிச்சனீயா? என்ன படிச்சனீ? இந்த முறை எத்தனை மாக்ஸ்? என கேள்வி கேட்காத பெற்றோர்கள் என அவனை சுற்றி காணப்பட்ட அந்த சூழலுக்குள் இருந்து படித்து அனைத்து பாடங்களிலும் ஏ சித்தி பெறுவது என்பது சாதனைதானே?! இந்த சாதனைக்கு அவனது பாடசாலையும், அந்த கவ்வி நிலையமும், படிப்பதற்கு தடை போடாத அந்த ஏழை பெற்றோரும், அவனது முயற்சியும், உழைப்பும்தான் காரணம். இதன் மூலமே அவன் சாதித்திருக்கிறான். அவனது இந்த சாதனையால்தான் இன்று ஊற்றுப்புலம் என்ற அந்த கிராமத்து பாடசாலையினை பலரும் திரும்பி பார்க்கின்றனர். ஊரும், பெருமைகொள்கிறது. தனது வரலாற்றில் முதல் தடவையாக ஒருவன் 9ஏ பெறுபேறுகளை பெற்றது அவர்களை பெருமை கொள்ள வைக்கிறது. Murukaiya Thamilselvan
3 months ago
ஓம் அண்ணா நான் சொன்னது இப்போது இங்கே நடைபெறுகின்ற நிகழ்வுகள் பற்றியது
3 months ago
11 JUL, 2025 | 02:30 PM செம்மணி மனிதப் புதைகுழி விசாரணையில் உண்மையைக் கண்டறிதல், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் நீதி ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தி இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. குறித்த கடிதம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அனுப்பி வைத்துள்ளது அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, செம்மணியில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதைகுழி அகழ்வுப் பணி குறித்து ஆழ்ந்த கவலையை தெரிவித்து இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பாக நாங்கள் எழுதுகிறோம். உண்மையை வெளிக்கொணரவும், தடயவியல் நெறிமுறைகள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரங்களை பூர்த்தி செய்வதை உறுதி செய்யவும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும் அவசர மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். 1998 ஆம் ஆண்டில், பாடசாலை மாணவியான கிருஷாந்தி குமாரசாமி மற்றும் குடும்ப உறுப்பினர்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததற்காக தண்டனை பெற்ற லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, தனது விசாரணையில் 300 முதல் 400 வரையிலான தமிழ் பொதுமக்கள் அங்கு புதைக்கப்பட்டதாக வெளிப்படுத்தினார். இதன் பின்னர் குறித்து பகுதியில் கடந்த 1999 இல் அகழ்வாராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன்போது அங்கு 15 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் இரண்டு 1996 ஆம் ஆண்டு காணாமல்போனவர்களது என அடையாளம் காணப்பட்டன. தடயவியல் உறுதிப்படுத்தல் இருந்தபோதிலும், வழக்குகள் தேக்கமடைந்தன, இன்றுவரை அதற்கு அர்த்தமுள்ள நீதி வழங்கப்படவில்லை. 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில், யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி அரியாலைச் சித்துப்பாத்தி இந்துமையான புனரமைப்புப் பணிகளின் போது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன, இதனால் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் அந்த இடத்தை ஒரு பாரிய மனித புதைகுழியாக அறிவித்து, நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. அதன் படி தற்போதைய நிலையில், குழந்தைகள் உட்பட சுமார் 65 எலும்புக்கூடுகள் இரண்டு கட்டங்களாக தோண்டி எடுக்கப்பட்டன, அவற்றுடன் பாடசாலை பை, பொம்மை, வளையல்கள், செருப்புகள் மற்றும் துணித் துண்டுகள் போன்ற சான்றுப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. அனைத்து எலும்புக்கூடுகளும் தடயவியல் பரிசோதனைக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மனித புதைகுழி அகழ்வாராய்ச்சிகள், இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை பிரச்சாரத்திற்கான தெளிவான சான்றுகளை காண்பிக்கின்றன. எந்தவொரு நிலைமாறுகால நீதி செயல்முறைக்கும் உண்மையைக் கண்டறிவது அடித்தளமாக இருக்க வேண்டும். 2009 இல் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 16 ஆண்டுகளுக்கும் மேலாகியும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியை எதிர்பார்த்து காத்துள்ளனர். எனவே, பின்வருவனவற்றை தாமதமின்றி செயல்படுத்துமாறு நாங்கள் உங்களிடம் வலியுறுத்துகிறோம்: 1.1999 மற்றும் 2025 ஆம் ஆண்டு புதைக்கப்பட்ட சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டவை தொடர்பான சட்ட வழக்குகளை, கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றங்களின் கீழ் ஒரே நீதித்துறை மற்றும் தடயவியல் விசாரணையாக ஒருங்கிணைக்கவும். 2. விசாரணையின் அனைத்து நிலைகளையும் மேற்பார்வையிட, தடயவியல் ஒருமைப்பாடு மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை உறுதி செய்ய, சுயாதீனமான, சர்வதேச அளவில் மதிக்கப்படும் தடயவியல் நிபுணர்களை ஈடுபடுத்துதல். 3. அனைத்து இடைக்கால மற்றும் இறுதி தடயவியல் அறிக்கைகள், டி.என்.ஏ விவரங்கள் மற்றும் அடையாள முடிவுகளை வெளியிடுதல், மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், சிவில் சமூகம் மற்றும் சர்வதேச பார்வையாளர்களுக்கு அணுகலை எளிதாக்குதல். 4. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் காணாமல் ஆக்கப்பட்ட அன்புக்குரியவர்களைத் தொடர்ந்து தேடுகின்றனர், உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் இல்லாமல், நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. தேசிய ஒற்றுமைக்கு அவசியமான இந்தக் கொடூரமான குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கவும். இலங்கையின் தார்மீக மற்றும் சட்டக் கடமைகளை நிலைநிறுத்துவதற்கும், உண்மை மற்றும் நீதியை நோக்கி நம்பகத்தன்மையை உருவாக்குவதற்கும் இந்த நடவடிக்கைகள் அவசியம் என்றும் இந்த நடவடிக்கைகளை எளிதாக்குவதிலும், அவை சரியான நேரத்தில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதிலும் ஆக்கபூர்வமாக ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/219730
3 months ago
குதிரை ஓடீயவர்கள் அதிபர்கள் ..ஆசிரியர்களா க இருப்பதும் ஒரு காரணம்
3 months ago
வடக்கு மாகாணத்தின் கல்வி அமைப்பு, வரலாற்று ரீதியாக, தமிழ் மக்களின் மிக முக்கியமான சொத்தாகக் கருதப்பட்டு வந்துள்ளது. இது பல சவால்களையும், மோதல்களையும் தாண்டி, கல்வியறிவு மற்றும் உயர் கல்வி வாய்ப்புகளில் முன்னணியில் இருந்த ஒரு பகுதியாகும். ஆனால், "கல்வி படிப்படியாக அழிக்கப்படுகிறதா?" என்ற கேள்வி பல கோணங்களில் ஆராயப்பட வேண்டிய ஒரு சிக்கலான விடயமாக இன்று மாறியுள்ளது. இதற்கு பிரதான காரணம், இன்று வெளியாகிய க.பொ.த சாதாரணத்தர பரீட்சையில் வடக்கு மாகாணத்தில் உயர்தரத்திற்கு தகுதி பெற்ற மாணவர்களின் சராசரியில் ஏற்பட்ட பின்னடைவு நிலையே. வடக்கு மாகாணத்தில் 2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த சாதாரணத்தர பரீட்சையில் 69.86% மாணவர்கள் மாத்திரமே உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர். க.பொ.த உயர்தரத்திற்குத் தகுதி 2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மொத்தம் 237,026 மாணவர்கள் க.பொ.த உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை பரீட்சைக்குத் தோற்றிய மொத்த பரீட்சார்த்திகளின் எண்ணிக்கையில் 73.45% ஆகும். கூடுதலாக, மொத்தம் 13,392 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் 'ஏ' சித்திகளைப் பெற்று சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். இந்த சாதனை மொத்த பரீட்சார்த்திகளின் எண்ணிக்கையில் 4.15% ஆகும். இதற்கிடையில், 2.34% மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளனர். இந்த நிலையை நாம் வடக்கில் கருத்தில் கொண்டால் பரீட்சைக்கு தோற்றும் 5 மாணவர்களில் 1 அல்லது 2 மாணவர்கள் சித்திப்பெறாத நிலை உருவாகிறது. ஒரு பாடசாலை சிறந்த பெறுபேற்றையோ அல்லது மோசமான பெறுபேற்றையோ பெற்றால் அதற்கு பொருப்பானவர்கள் அப்பாடசாலையின் அதிபர், மற்றும் ஆசிரியர்களே. அவ்வாறென்றால் மாகாண ரீதியாக பெறுபேறு வீழ்ச்சியடையும்போது அதன் பொறுப்பு யாருடையது? இலங்கையில் உள்ள 9 மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வட மாகாணம் தொடர்ந்து இறுதி நிலையில் இருப்பது ஏற்க முடியாத விடயமே. 1. வடமாகாண கல்வி முறைமையின் பின்னணி வடமாகாணம், குறிப்பாக யாழ்ப்பாணம், கல்வியில் கடந்த காலங்களில் எப்போதும் முன்னணியில் இருந்தது. உயர்தரப் பரீட்சைகளில் உயர் சித்தி வீதம், பல்கலைக்கழக நுழைவு, மற்றும் தொழில்முறை கல்வியில் தமிழ் மாணவர்கள் தேசிய மட்டத்தில் பங்களித்து வந்தனர். ஆனால், உள்நாட்டுப் போரின் பின்னர், இப்பகுதி பல பொருளாதார, சமூக, மற்றும் உள்கட்டமைப்பு சவால்களை எதிர்கொண்டுள்ளன. 2. தற்போதைய சவால்கள் வடமாகாணத்தில் கல்வி நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள பல சிக்கல்கள், குறிப்பாக ஆசிரியர் இடமாற்றங்கள் மற்றும் நியமனங்களில் முறைகேடுகள், கல்வியின் தரத்தை பாதித்துள்ளன. உதாரணமாக, 2025ஆம் ஆண்டு ஜனவரியில், வடக்கு மாகாண ஆளுநரின் பணிப்பில் என்ற போர்வையில், சிரேஷ்ட நிலை கல்வி நிர்வாக அதிகாரிகளை கவனத்தில் கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக இடமாற்றங்கள் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. இது கல்வி நிர்வாகத்தில் குழப்பத்தையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக ஆசிரியர் இடமாற்றங்கள் மற்றும் நிர்வாக முடிவுகளில் மத்திய அரசாங்கம் அல்லது ஆளுநரின் தலையீடு, கல்வி முறைமையை பலவீனப்படுத்துவதற்கு வழிவகுக்கிறது என்று குறிப்பிடுகின்றன. உதாரணமாக, 2014இல் ஆசிரியர் இடமாற்றங்கள் தேர்தல் சட்டங்களுக்கு முரணாக மேற்கொள்ளப்பட்டதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தது. இதன்படி இனிவரும் காலங்களிலேனும் ஆசிரியர் இடமாற்றங்கள் மற்றும் நியமனங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். 3. ஆசிரியர் பற்றாக்குறை இலங்கை ஆசிரியர் சங்கத்தை மேற்கோள்காட்டி 2024 ஆம் ஆண்டு "40,000 ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதாக செய்தி ஒன்றை தென்னிலங்கை பத்திரகை வெளியிட்டிருந்தது. அதில் வடமத்திய, கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், மத்திய மாகாணத்தில் உள்ள கிராம பாடசாலைகளிலும் இந்த நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று பத்திரிகைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்ததாக கூறப்பட்டது. அதன்படி, கிழக்கு மாகாணத்தில் 3,698 ஆசிரியர் பற்றாக்குறையும், வடமத்திய மாகாணத்தில் 3,860 ஆசிரியர் பற்றாக்குறையும், ஊவா மாகாணத்தில் 3,200 ஆசிரியர் பற்றாக்குறையும், வட மாகாணத்தில் சுமார் 2,900 ஆசிரியர் பற்றாக்குறையும், வடமேல் மாகாணத்தில் 4,500 ஆசிரியர் பற்றாக்குறையும், தென் மாகாணத்தில் 2,900 ஆசிரியர் பற்றாக்குறையும், மேல் மாகாணத்தில் 4,700 ஆசிரியர் பற்றாக்குறையும், மத்திய மாகாணத்தில் 4,800 ஆசிரியர் பற்றாக்குறையும் உள்ளது. மேலும், தேசிய பள்ளிகளில் 3,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர் பற்றாக்குறையும் உள்ளது, இது நாடு முழுவதும் மொத்தம் சுமார் 40,000 ஆகும் என தெரிவிக்கப்பட்டது. இது 2025 இல் 42,000க்கும் மேற்பட்ட அளவாக காணப்படுவதாக கல்விஅமைச்சில் இடம்பெற்ற ஒரு ஊடகசந்திப்பில் உயர் கல்வி, கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சி அமைச்சர் என்ற வகையில் சிறிலங்காவின் பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்திருந்தார். மேலும், வறுமை மற்றும் பொருளாதார பின்னடைவு காரணமாக, பல மாணவர்கள் கல்வியை தொடர முடியாத நிலை வடக்கில் இன்றும் தொடர்ந்து வருகிறது. இதன்படி வடமாகாண கல்விச் சமூகம் இந்தப் பிரச்சினைகளை வெளிப்படையாக விவாதித்து உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இல்லையேல் கல்வித்தரம் மேலும் சரியும் வாய்ப்புக்கள் அதிகரிக்கும். https://ibctamil.com/article/northern-province-education-decline-gce-ol-results-1752233400
3 months ago
323 கொள்கலன்களில் பிரபாகரனின் ஆயுதங்கள் என பாராளுமன்றில் தெரிவித்தவர்கள் விசாரணையில் வாக்கு மூலமளிக்கத் தயங்குவது ஏன்? - அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேள்வி 11 JUL, 2025 | 04:15 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) பிரபாகரனின் ஆயுதங்கள் தான் கொள்கலன்களில் இருந்ததாக பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு குறிப்பிட்டார்கள். இது உண்மையாயின் ஏன் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலமளிக்க அச்சமடைய வேண்டும். ஒன்று பொய்யுரைத்ததாக ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது விசாரணைகளுக்கு செல்லுங்கள். பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்து கொண்டு ஏதும் குறிப்பிட முடியாது, பொய்யுரைக்கவும் முடியாதென சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற அமர்வின் போது பரிசோதனையின்றி கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர முன்வைத்த விடயங்களை சுட்டிக்காட்டி உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்திக் கொண்டு எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்துக்குள்ளும், பேச்சுரிமையை பயன்படுத்திக் கொண்டு வெளியிலும் பொய்யுரைக்கிறார்கள். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டார்கள். அது குறித்து எவ்வாறு விசாரிக்காமல் இருக்க முடியும். விசாரணைகளுக்கு செல்ல இவர்கள் ஏன் அச்சமடைகிறார்கள். பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு ஏதும் கூற முடியுமா, பொய்யுரைக்க முடியுமா, 323 கொள்கலன்கள் விடுவிப்புக்கு நான் அனுமதி வழங்கியதாக குறிப்பிடும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கிறேன். கடந்த ஜனவரி மாத காலப்பகுதியில் இந்த கொள்கலன்கள் மேல் மாகாண ஆளுநருடையது என்று அனைவரும் குறிப்பிட்டார்கள். பாராளுமன்றத்தில் அதை குறிப்பிட்டு கூச்சலிட்டார்கள். இந்த குற்றச்சாட்டுக்கு எதிராக ஆளுநர் நடவடிக்கை எடுத்ததன் பின்னர் தற்போது அவ்வாறு குறிப்பிடவில்லை என்று குறிப்பிடுகிறார்கள். ஐந்து மாதங்களுக்கு பின்னர் இந்த கொள்கலன்களை நான் விடுவித்ததாக குறிப்பிட்டார்கள். நான் விடுவித்திருந்தால் நீதிமன்றத்துக்கு செல்லுங்கள், வழக்குத் தாக்கல் செய்யுங்கள். அரச நிதியை மோசடி செய்து நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. இந்த பாரதூரமான குற்றச்சாட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். கொள்கலன்களை விடுவிக்கும் அதிகாரம் எனக்கு கிடையாது, அமைச்சர் என்ற வகையில் எனக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களையும் நான் பயன்படுத்துவதில்லை. பரிசோதனைகளின்றி கொள்கலன்களை விடுவிப்பதற்கு எனக்கு எவ்வித அவசியமும் கிடையாது. பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு பொய்யுரைத்து குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். பிரபாகரனின் ஆயுதங்கள் தான் கொள்கலன்களில் இருந்ததாக பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு குறிப்பிட்டார்கள். இது உண்மையாயின் ஏன் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலமளிக்க அச்சமடைய வேண்டும். பொய்யுரைத்ததாக ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது விசாரணைகளுக்கு செல்லுங்கள். கீழ்த்தரமான செயற்பாடு தற்போது வெளிப்பட்டவுடன் என்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள் என்றார். https://www.virakesari.lk/article/219744
Checked
Tue, 10/14/2025 - 09:15
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed