3 months ago
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதராக எரிக் மேயர்! இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் மேயரை (Eric Meyer) நியமிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிந்துரை செய்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதன்படி, ஜூலி சுங்கின் வெற்றிடத்திற்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர் நியமிக்கப்படவுள்ளார். கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் சிரேஷ்ட பணியக அதிகாரியாக செயல்படுகிறார். அத்துடன் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, கஸகஸ்தான், கிர்கிஸ்தான், மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் அமெரிக்க அரசின் கொள்கை முன்னுரிமைகளை ஒருங்கிணைக்கும் பணிகளை முன்னெடுத்து வருகிறார். எரிக் மேயர், நோர்வேயில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தற்காலிக தூதராகவும், வடமேசிடோனியாவின் ஸ்கோப்பே நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தற்காலிக தூதராகவும், துணை தூதராகவும் பணியாற்றியுள்ளார். இதேவேளை, வொஷிங்டனில் தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் பணியகத்தில் சிறப்பு உதவியாளர் மற்றும் சிரேஷ்ட ஆலோசகராக எரிக் மேயர் பணியாற்றியுள்ளார். அத்துடன் கம்போடியாவில் தூதரகத் தலைமை அதிகாரியாகவும், இடைக்கால துணை தூதராகவும் செயல்பட்டுள்ளார். பின்லாந்திலுள்ள அமெரிக்க தூதராகவும் ஆர்ஜன்டீனாவின் துணை தூதராகவும், பின்னர் எகிப்தின் கெய்ரோவிலுள்ள பண்பாட்டு விவகார தூதராகவும் பணியாற்றியுள்ளார் அவருக்கு அமெரிக்க வெளியுறவு துறையிலிருந்து பல உயரிய பாராட்டு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. https://athavannews.com/2025/1438886
3 months ago
இவரை எனக்கு நியாபகம் இருக்கிறது. முடியை பக்கவாட்டில் சீவி இருப்பார். அடிக்கடி தட்டி விட்டு கொள்வார். இடதுகை லெக்ஸ்பின் என நினைக்கிறேன்.
3 months ago
இன்று அமித்ஷா, தேர்தலில் வென்றால் அதிமுக + பிஜேபி கூட்டணி ஆட்சிதான் என அறிவித்துள்ளார்.
3 months ago
இந்தியாவில் மட்டும் 9% பேர் வீகன். அதாவது அண்ணளவாக 150 மில்லியன் மக்கள். அருமை. இந்த அடிப்படை அரசியல் அறிவு அவருக்கு இல்லாமல் இல்லை. இதேபோல் தன் சொந்த வாக்காளரில் கணிசமானோரை கொல்டி என திட்டி விட்டு வாக்கு அரசியலில் வெல்லவது கடினம் என்பதும் அவர் அறிந்ததே. ஆனால் நான் முன்பே சொன்னது போல் வெல்வது, அதிகாரத்தை பிடிப்பது எல்லாம் சீமானின் நோக்கமே அல்ல. அவர் வெறும் தரகர். விவசாயி சின்னம் அவருக்கு மிக பொருத்தமானது. தமிழ் நாடு என்னும் நிலத்தை, கிண்டி, கிளறி, பீஜேபி எனும் பயிர் வளர தோதாக்குவதே அவர் ஒரே அஜெண்டா.
3 months ago
எள்ளுப் பாகு அல்லது எள்ளு உருண்டை செய்யும் முறை.
3 months ago
கடைசியாக அனைத்து ஊகங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள், ஆறுதலான விடயம்.
3 months ago
என்னை அநியாயத்திற்கு புகழுகிறீர்கள்.🤣
3 months ago
80 களின் பிற்பகுதியில் ஒரு பாகிஸ்தான் சுழல் பந்துவீச்சாளரின் பெயரும் அப்துல் காதிர், அவர் பந்து வீச வரும் போது பந்தை போட்டு பிடித்து வீச வருவார் அதனை போலவே பின்னாளில் முரள்யும் பந்தை வீசுவதற்கு முன் பந்தை போட்டு பிடித்து வீசுவார் சில மாற்றங்களுடன் (இந்த அப்துல் காதர் டெண்டுல்கருடன் வம்பிழுந்து வாங்கிக்கட்டி கொண்டவர் என கூறப்படுகிறது).
3 months ago
ஐஸ் இல்லை ஐஸ் லான்டாம் , பச்சை இல்லை பச்சை லான்டாம் ........ ! 😂
3 months ago
3 months ago
படத்தில் 58 வயது இராமசாமி அந்தோணிப்பிள்ளை என்ற குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் பொலிஸாரால் செருகப் பட்ட தடியும், பொலிசாரின் அடையாள இலட்சனைகளும் காணப்படுகின்றது.
3 months ago
முன்னவர் கால்தடங்களை பின்பற்றுகின்றனர் கதிரையாசை, பதவியாசை பிடித்தவர்கள்.
3 months ago
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், முக்கிய மொழிப் பாடங்களான சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றில் சித்தி வீதங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆங்கில மொழியில் சித்தி வீதம் 73.82% ஆக கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும், பெறுபேறுகளை மீள் திருத்தம் செய்ய விரும்பும் மாணவர்களுக்கான இணையவழி விண்ணப்ப தவணை ஜூலை 14 முதல் ஜூலை 28 வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Vaanam.lk
3 months ago
சர்வதேச அரங்கில் கலக்கும் எம் இளம் தமிழச்சி! விம்பிள்டன் ஜூனியர் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாடியதன் மூலம் ஒட்டுமொத்த தமிழர்க்கும் பெருமை சேர்த்துள்ள தமிழகத்தின், கோவையைச் சேர்ந்த இளம் டென்னிஸ் வீராங்கணை செல்வி. மாயா ராஜேஷ்வரன் ரேவதி. இவர், 16 வயதில் 76% வெற்றி விகிதத்துடன், இவரின் திறமை அடையாளம் காணப்பட்டு டென்னிஸ் உலகின் சிறந்த பயிற்சி மையமான ரஃபா நடால் அகடமியில் ஊக்கத்தொகையுடன் பயிற்சி பெற்று வருகிறார் செல்வி மாயா, சிறந்த திறமையுடனும் கடின உழைப்புடன் கூடிய விடா முயற்சியுடன் முன்னேறி வரும் இளம் தமிழச்சி இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறோம்! Vaanam.lk
3 months ago
இன்ஜினுக்கு தேவையான எரிபொருள் மற்றும் காற்று செல்லாமல் தான் மேலே எழும்பும்போது இழுவை திறன்(pulling power) இல்லாமல் இஞ்சின் செயலிழந்து கீழே விழுந்து விட்டது என்று ஒரு ஆட்டோ ஓட்டுநருக்கு கூட தெரியும். கடமை என்பது காலில் கிடக்கும் செருப்புக்கு சமம் என்று கருதக்கூடிய பணியாளர்களை ஒவ்வொரு நிறுவனமும் பதவியில் அமர்த்திருக்கிறது .ரயில் வரும்போது கேட்டை திறந்து விடுவது, சாலையில் பள்ளத்தை தோண்டி போட்டு விட்டு எந்த எச்சரிக்கை பலகையும் வைக்காமல் செல்வது, மனித உயிர்களுடன் விளையாடும் பொறுப்பற்ற பணியாளர்களால், அதிகாரிகளால் அனைத்து நிலைகளிலும் மனித உயிர்கள் மாண்டு போகிறது. உண்மை உரைகல்
3 months ago
கல்கிசை - காங்கேசன்துறை குளிர்சாதனப் பெட்டி வசதியுடன் கூடிய சொகுசு ரயில் சேவை தினசரி ஆரம்பம்! கொழும்பு: இலங்கையின் தெற்கையும் வடக்கையும் இணைக்கும் மிக முக்கியமான ரயில் சேவைகளில் ஒன்றான கல்கிசை - காங்கேசன்துறை இடையேயான குளிர்சாதனப் பெட்டி வசதியுடன் கூடிய சொகுசு ரயில் சேவை (A/C Train), தினசரி சேவையாக அமுலுக்கு வந்துள்ளது. பயணிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று இலங்கை ரயில்வே திணைக்களம் இந்த புதிய சேவையை ஆரம்பித்துள்ளது. முக்கிய அம்சங்கள்: தினசரி சேவை: முன்னர் வார இறுதி நாட்களில் (சனி மற்றும் ஞாயிறு) மாத்திரம் இயக்கப்பட்ட இந்த சொகுசு ரயில், இனிமேல் வாரத்தின் ஏழு நாட்களும் சேவையில் ஈடுபடும். பயண அட்டவணை - கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை வரை: காலை 5:15 மணிக்கு கல்கிசையில் இருந்து புறப்படும். காலை 5:40 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும். காலை 5:45 மணிக்கு புறக்கோட்டையில் இருந்து காங்கேசன்துறையை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கும். மதியம் 12:45 மணிக்கு காங்கேசன்துறையை சென்றடையும். பயண அட்டவணை - காங்கேசன்துறையிலிருந்து கல்கிசை வரை: நண்பகல் 1:50 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து புறப்படும். மாலை 8:00 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும். மாலை 8:30 மணிக்கு கல்கிசையை சென்றடையும். யாழ் தேவி ரயில் சேவை மாற்றம்: நேர மாற்றம்: இந்த புதிய சொகுசு ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டதன் காரணமாக, பிரபலமான யாழ் தேவி ரயில் சேவையின் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய புறப்படும் நேரம்: யாழ் தேவி ரயில் இனி காலை 6:40 மணிக்கு புறக்கோட்டையில் இருந்து புறப்பட்டு, மாலை 3:00 மணிக்கு காங்கேசன்துறையை சென்றடையும். முந்தைய நேரம்: முன்னதாக யாழ் தேவி ரயில் காலை 5:45 மணிக்கு புறக்கோட்டையில் இருந்து புறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய குளிர்சாதனப் பெட்டி வசதியுடன் கூடிய சொகுசு ரயில் சேவை, வடக்கு நோக்கிய மற்றும் தெற்கு நோக்கிய பயணிகளுக்கு, குறிப்பாக வணிகப் பயணங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் வசதியான மற்றும் சொகுசான பயண அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Dharussafa NEWS
3 months ago
3 months ago
வவுனியா கூமாங்குளம் பகுதியில் பொலிஸார் துரத்தியதில் ஒருவர் உயிரிழப்பு! வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று (11) இரவு போக்குவரத்து பொலிஸார் துரத்திச்சென்றமையால் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதார். இதனால் அப்பகுதி மக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால் அந்தப்பகுதியில் பெரும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு10 மணியளவில் கூமாங்குளம் மதுபான விற்பனை நிலையம் அமைந்துள்ள வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பொலிஸார் வந்துள்ளனர். இதன்போது அவ்வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த நபர் ஒருவரை துரத்திச் சென்றதுடன் அவரது வாகன சக்கரத்தில் தடி ஒன்றினால் தடையினை ஏற்படுத்தியதாகவும் இதனால் நிலை தடுமாறி கீழே வீழ்ந்த குறித்த நபர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனை அவதானித்த இளைஞர்கள் மற்றும் ஊர்மக்கள் ஆத்திரமடைந்து பொலிஸாரின் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் ஒரு வாகனத்தையும் சேதப்படுத்தியதுடன் பொலிசாரின் இச்செயற்பாட்டிற்கு நீதி கிடைக்கவேண்டும் என தெரிவித்ததுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை நீண்டநேரமாக சிறைப்பிடித்து வைத்தனர். இதனால் குறித்த பகுதியில் குழப்பநிலை ஏற்பட்டது. உயிரிழந்தவரின் சடலத்தை அகற்றுவதற்கு மறுப்பு தெரிவித்த இளைஞர்கள் நீதிபதி இங்கு வரவேண்டும் வந்த பின்னரே சடலத்தை அகற்ற அனுமதிப்போம் என தெரிவித்தனர். இந்த நிலையில் வவுனியா சிரேஸ்டபொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்திற்கு வருகைதந்ததுடன், இந்த மரணத்தை கொலை வழக்காக பதிவுசெய்து அதனுடன் தொடர்புடையை சந்தேகநபர்களை விசாரிப்பதாக தெரிவித்ததுடன், சடலத்தை அகற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் பொலிஸார் மீது நம்பிக்கை இல்லை நீதிபதி இங்கு வரவேண்டும் என தெரிவித்தனர். இந் நிலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு வருகைதந்து மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தார். இதேவேளை, சம்பவத்தில் உயிரிழந்தவர் கூமாங்குளம் பகுதியை சேர்ந்த 58வயதுடைய இராமசாமி அந்தோணிப்பிள்ளை என்று தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2025/1438856
3 months ago
இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவன மோசடியில் நல்லாட்சி அரசாங்கத்துக்கு தொடர்பாம்! இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (SLIIT) தொடர்பான முறைகேடுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (CID) மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திடம் முறைப்பாடு அளிக்குமாறு அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்றக் குழு (COPE) அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் , SLIIT இல் பதிவாகியுள்ள நிதி மோசடிக்கு நல்லாட்சி அரசாங்கமும் அதன் முழு அமைச்சரவையும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார். மகாபொல புலமைப்பரிசில் நிதியிலிருந்து SLIIT ஐ நீக்கி, அதை ஒரு வரையறுக்கப்பட்ட நிறுவனமாக மாற்றியதன் காரணமாக, நல்லாட்சி அரசாங்கத்தில் நிதி முறைகேடுகள் நடந்ததாக அவர் தெளிவுபடுத்தினார். இந்த விடயத்தை ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் அடங்கிய அப்போதைய அரசாங்கமும் அமைச்சரவையும் விதிமுறைகளை மீறி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டத்தை கண்டறிந்துள்ளதாகவும் கூறினார். இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க சிஐடி மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திடம் முறைப்பாடு அளிக்கப்படும். இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை மீண்டும் மஹாபொல புலமைப்பரிசில் நிதியத்தின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் கூறினார். https://athavannews.com/2025/1438835
3 months ago
யாழ்.வேம்படி மகளீர் கல்லூரியின் சாதனை - 120 9ஏ சித்திகள்! 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகிய நிலையில், ஒவ்வொரு பாடசாலைகளின் சிறந்த பெறுபேறுகளும் அந்தந்தப் பாடசாலை நிர்வாகத்தால் வெளியிடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் வேம்படி மகளீர் கல்லூரியில் 120 9 ஏ சித்திகளும் 36 8ஏ சித்திகளும் 25 7ஏ சித்திகளும் கிடைக்கப்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேம்படி மகளீர் கல்லூரியில் 265 பேர் பரீட்சைக்குத் தோற்றியிருந்த நிலையில் மேற்குறிப்பிடப்பட்ட 181 மாணவர்களும் சிறந்த பெறுபேற்றைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர். பெறுபேறுகளின் அடிப்படையில் வேம்படி மகளீர் கல்லூரியில் 100 வீத சித்தி கிடைக்கப்பெற்றுள்ளது என்று கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, 237,026 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். இது பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் 73.45% ஆகும். இதற்கிடையில், அனைத்து பாடங்களிலும் 9 ‘A’ சித்திகளை பெற்ற 13,392 மாணவர்கள் உள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். https://newuthayan.com/article/யாழ்.வேம்படி_மகளீர்_கல்லூரியின்_சாதனை_-_120_9ஏ_சித்திகள்!
Checked
Tue, 10/14/2025 - 09:15
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed