3 months ago
15 வயது சிறுமியை… அந்த இளைஞன் விடுதிக்கு கொண்டு வரும் போதே, விடுதி உரிமையாளர் காவல் துறைக்கு இரகசிய தகவல் கொடுத்திருக்க வேண்டும். மாறாக… அந்த விடுதி உரிமையாளரும் சிறுமியுடன் தவறாக நடந்து கொண்டமைக்காகவும், சிறுமியை பற்றிய தகவல்களை பொலிசாருக்கு வழங்காமல் இருந்தமைக்காகவும் பாரதூரமான குற்றமாக கருதி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்,
3 months ago
அறப் படித்த ஆட்கள்தான்… இப்பிடியான கூழ் முட்டை வேலை செய்யுறது. 😂
3 months ago
அப்ப சீனா ரசியா பிரேசிலுடன் எங்களையும் இணையுங்கள் என்று ஒற்றைக் காலில் நின்ற மாதிரி இருக்கே? கைவிட்டாச்சோ?
3 months ago
இவர்களைத் தான் மாங்காய் மடையர்கள் என்பது. அவகாடோவின் படத்தையாவது போடாமல் விட்டிருக்கலாம்.
3 months ago
என்ன ஏராளன் உங்க ஏரியாவில் அடிக்கடி நடக்கிற மாதிரி இருக்கே?
3 months ago
உணர்ச்சி பேச்சை கேட்டு ஆடு மாடுகள் பொங்கி எழுந்தால்….🤣
3 months ago
முஸ்டர் பதட்டப்பட்டு பிழையான முடிவு எடுத்தார் என்கிறார் கெயில்… talkSPORT'He panicked' - Chris Gayle gives ruthless response to Wi...Cricket icon Chris Gayle insisted Wiian Mulder ‘panicked and blundered’ by not attempting to surpass Brian Lara’s Test record. South African skipper Mulder made the bold decision …
3 months ago
5- வகையான பாரம்பரியமான துவையல் 🥥 1. தேங்காய் துவையல் (Coconut Thuvaiyal) சிறப்பம்சம்: எளியதும், பரம்பரிய சுவையும் 🔸 பொருட்கள்: துருவிய தேங்காய் – 1 கப் வத்தல் மிளகாய் – 2 உளுத்தம் பருப்பு – 1 மேசைக்கரண்டி இஞ்சி – சிறிய துண்டு பெருங்காயம் – சிட்டிகை உப்பு, எண்ணெய், சிறிது இம்லி 🔸 செய்முறை: 1. எண்ணெயில் பருப்பு, மிளகாய் வதக்கி, இறுதியில் இஞ்சி, பெருங்காயம் சேர்க்கவும். 2. தேங்காய், உப்பு, இம்லி சேர்த்து அரைக்கவும். 3. சாதத்துடன் கலந்தால் அருமை! --- 🍅 2. தக்காளி துவையல் (Tomato Thuvaiyal) சிறப்பம்சம்: கொஞ்சம் காரமானும், நல்ல Shelf life கொண்டதும் 🔸 பொருட்கள்: தக்காளி – 3 வத்தல் மிளகாய் – 3 கடலை பருப்பு – 1.5 மேசைக்கரண்டி இஞ்சி – சிறிய துண்டு பெருங்காயம், உப்பு, எண்ணெய் 🔸 செய்முறை: 1. பருப்பு, மிளகாய் வதக்கி, பின் தக்காளி சேர்த்து வெந்துவிடும்வரை வதக்கவும். 2. உப்பு சேர்த்து அரைத்து, சிறிது எண்ணெயில் சுட்டு வைக்கவும். --- 🌿 3. கொத்தமல்லி துவையல் (Coriander Thuvaiyal) சிறப்பம்சம்: கொத்தமல்லி வாசனையுடன் அருமையான பச்சை நிற துவையல் 🔸 பொருட்கள்: கொத்தமல்லி இலை – ஒரு கட்டு பச்சை மிளகாய் – 2 கடலை பருப்பு – 1 மேசைக்கரண்டி இஞ்சி – சிறிது இம்லி, உப்பு 🔸 செய்முறை: 1. பருப்பு, பச்சை மிளகாய் வதக்கி, பின் கொத்தமல்லி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். 2. அனைத்தையும் அரைத்துத் தாளிக்கவும். --- 🌶️ 4. கார வெங்காய துவையல் (Spicy Onion Thuvaiyal) சிறப்பம்சம்: சாதத்துடன் சும்மா சூப்பரா இருக்கும் 🔸 பொருட்கள்: வெங்காயம் – 2 (நறுக்கியது) வத்தல் மிளகாய் – 3 இஞ்சி – சிறிது பெருங்காயம் – சிட்டிகை உப்பு, எண்ணெய் 🔸 செய்முறை: 1. எண்ணெயில் வெங்காயம், மிளகாய், இஞ்சி வதக்கவும். 2. உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். 3. தேவைப்பட்டால் எண்ணெயில் சிறிது வதக்கவும். --- 🫘 5. பருப்பு துவையல் (Mixed Dal Thuvaiyal) சிறப்பம்சம்: அதிக நாள்கள் வைத்துக் கொள்ளக்கூடியதுடன், சத்து அதிகம் 🔸 பொருட்கள்: உளுத்தம் பருப்பு – 1 மேசைக்கரண்டி கடலை பருப்பு – 1 மேசைக்கரண்டி வத்தல் மிளகாய் – 3 இம்லி – சிறிது தேங்காய் – 2 மேசைக்கரண்டி (ஐச்சிகை) பெருங்காயம், உப்பு, எண்ணெய் 🔸 செய்முறை: 1. பருப்பு, மிளகாய் வதக்கி, தேங்காய், இம்லி சேர்த்து அரைக்கவும். 2. எளிய சாதம், இடியாப்பம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சூப்பர். தமிழ்நாடு ரெசிப்பீஸ்
3 months ago
10 JUL, 2025 | 09:35 AM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) செம்மணி மனித புதைகுழி விடயத்தில் உள்ளக விசாரணைகளில் நீதியை எதிர்பார்க்க முடியாது. தமிழ் இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சர்வதேச விசாரணை ஊடாகவே நீதியை பெற்றுக்கொள்ள முடியும். செம்மணி விவகாரத்தில் அரசாங்கத்தின் போக்கினை உன்னிப்பாக அவதானித்து வருகிறோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க உரையாற்றும் போது, இது அரசியல் அதிகாரத்திற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சம்பவம் என்று கூறியுள்ளார். ராஜபக்ஷக்கள் தோல்வியடைந்திருந்த காலத்தில் ராஜபக்ஷக்களை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக தேசிய பாதுகாப்பை பலமிழக்கச் செய்து இவ்வாறான சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளதாக கூறுகிறார். சுதந்திர காலத்தில் இருந்து 78 வருடங்களாக அரசியல் அதிகாரங்களுடனேயே அரசியல் நிறுவனங்கள் இருந்துள்ளன. சுயாதீனமாக இயங்கவில்லை. அரசியல் தலையீடுகளுடையே நடந்துள்ளன. இதுவே உண்மையாக காரணங்கள் இந்த விடயங்களுக்கு. இந்த அரசாங்கமும் இதனை புரிந்துகொள்ள வேண்டும். இங்கு உள்ளக விசாரணைகளின் நீதியை எதிர்பார்க்க முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர்களே விசாரிப்பது எப்படி நியாயமாக அமையும். செம்மணி மனித புதைகுழி விடயத்தில் அரசாங்கமொன்றே குற்றவாளியாக இருக்கின்றது. இந்த அரசாங்கமும் யுத்தத்திற்கு ஆதரவளித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அரசாங்க காலத்திலேயே செம்மணி புதைகுழிகள் உருவாகியுள்ளன. அங்கே முதல் அகழ்வின் போது 15 எலும்புகூடுகள் மீட்கப்பட்டன. ஆனால் அக்கால அரசாங்கம் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கின் குற்றவாளியின் வாக்குமூலத்தில் 500 முதல் 600 வரையிலான உடல்களை புதைப்பதற்கு தான் செயற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவற்றில் 15 எலும்புகூடுகளே மீட்கப்பட்டுள்ளன. அரசாங்கமே அதன் குற்றவாளி தரப்பாக இருக்கின்றது. தற்போது அதற்கு அருகில் இன்னுமொரு மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கே குற்றமொன்று நடந்துள்ளது. அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு நீதியை நிலைநாட்ட வேண்டும். சர்வதேச விசாரணைகள் இன்றி இதில் உண்மைகளை கண்டறிய முடியாது. இந்த அரசாங்கம் போருக்கு ஆதரவளித்துள்ளது. குற்றமிழைத்த தரப்பே விசாரணைகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் எவ்வாறு நீதியை பெற்றுக்கொள்ள முடியும். எவ்வாறு சுயாதீன விசாரணைகள் இடம்பெறும். இதனால் தான் நாங்கள் தொடர்ச்சியாக சர்வதேச விசாரணை கட்டமைப்பை கோருகிறோம். செம்மணி விவகாரத்தில் இந்த அரசாங்கத்தின் செயற்பாட்டை உன்னிப்பாக அவதானித்து வருகிறோம் என்றார். https://www.virakesari.lk/article/219632
3 months ago
09 JUL, 2025 | 08:41 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தேசப்பற்றாளர்களின் அதிகாரத்திற்கு அச்சப்பட்டே அரசாங்கம் மனித புதைகுழிகள் விடயத்தில் கவனம் செலுத்தாது இருக்கின்றது., செம்மணி மனித புதைகுழி உள்ள இடத்திற்கு இதுவரையில் அரசாங்கமோ, காணாமல் போனோர் அலுவலகமோ செல்லவில்லை என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான சபை ஒத்துவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாம் அனைவரும் கவலையடையும் விடயமொன்று தற்போது இடம்பெறுகின்றது. அதாவது செம்மணியில் மனித புதைகுழிகள் அகழப்படுகின்றன. தினமும் அங்கு எலும்புக்கூடுகள் மீட்கப்படுகின்றன. சிறுவர்கள், குழந்தைகள் தமது விளையாட்டுப் பொருட்களுடன் புதைக்கப்பட்ட கொடூரமான சம்பவம் தொடர்பில் தினமும் பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகள் வெளியிடப்படுகின்றன. குறிப்பாக தமிழ் பத்திரிகைகளில் அந்தச் செய்திகளை பார்க்கலாம். ஆனால் தெற்கில் மற்றைய பத்திரிகைகளில் இது தொடர்பில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. எங்கேயாவது ஒரு மூலையில் சிறிதாக குறிப்பிடப்படுகின்றன. யூடியுப் சனல் ஒன்றை நடத்தும் தரிந்து ஜயவர்தன என்பவர் அவ்விடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று ஆராய்கின்றார். ஆனால் அரச தரப்பில் எவரும் இதுவரையில் அந்தப் பகுதியில் கால் வைக்கவில்லை என்று அங்கு அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ள குழுவினர் கூறுகின்றனர். இந்த விடயத்தில் அரசாங்கத்தின் பொறுப்பு என்ன? காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தினர் அங்கு சென்றனரா? காணாமல் போனோர் தொடர்பான சட்டத்தின்படி உங்களுக்கு அதிகாரங்கள் உள்ளன. இதேவேளை அநீதிக்கு எதிரான ஜே.வி.பியின் இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். அது தொடர்பான ஆணைக்குழு அறிக்கைகள் பல உள்ளன. பல்வேறு மனித புதைகுழிகள் மற்றும் துன்புறுத்தல் நிலையங்கள் தொடர்பில் தகவல்கள் உள்ளன. இது தொடர்பில் என்ன செய்கின்றீர்கள். உங்களுடையவர்களின் மனித புதைகுழிகளைகூட இன்னும் அகழ்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் எதற்காக அமைக்கப்பட்டுள்ளது. சர்வதேசத்திற்கு முன்னால் எமது நாட்டின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் போது, பெயருக்கு கைக்கட்டிகொண்டு பார்த்துக்கொண்டிருக்கவா காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் இருக்கின்றது. அதிகாரங்களை பயன்படுத்த முடியும். அதனை செய்யாமல் இருப்பது ஏன்? உங்களின் தேசப்பற்றாளர்களுக்கு நீங்கள் பயத்துடன் இருக்கின்றீர்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை தேடுகின்றீர்கள் என்றால், ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் அபுஹிந் தொடர்பில் கூறப்பட்டுள்ளது. அவருடன் தொடர்புடைய இன்னுமொரு அபு இருந்தார். பக்தம்அபு என்பவரே அவர். அவர் இஸ்ரேலை சேர்ந்தவர். அவர் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். சஹரானின் மனைவியிடமும் முறையாக விசாரித்தால் இந்த விடயங்கள் தொடர்பில் அறிந்துகொள்ளலாம். இவரிடம் சாட்சியங்களை பதிவு செய்ய ஆணைக்குழு கேட்டபோது, சட்டமா அதிபர் திணைக்களம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இறுதியில் அவரிடம் விசாரணை நடத்தியதுடன், பல்வேறு விடயங்களை பதிவு செய்துள்ளனர். ஜனாதிபதி காலத்தினால் மூடி மறைக்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதாக அண்மையில் ஜனாதிபதி கூறியுள்ளார். அரசாங்கம், அரசாங்கம் தொடர்பிலேயே விசாரணை நடத்துவதாகவும் கூறியுள்ளார். யார் அவர்கள் என்று நாட்டுக்கு வெளிபடுத்துங்கள். நீங்கள் வயிற்றுக்கு தெரியாமல் மருந்து குடிக்க முயற்சிக்க வேண்டாம். உண்மைகளை உண்மையாகவே வெளியிட இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும என்றார். https://www.virakesari.lk/article/219619
3 months ago
யாழில் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞன் கைது! 10 JUL, 2025 | 09:00 AM யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் 13 வயதுச் சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞன் ஒருவர் நேற்று புதன்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமியின் மச்சான் முறையுள்ள 19 வயதுடைய இளைஞன் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய விடயம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வட்டுக்கோட்டை பொலிஸார் குறித்த இளைஞனை கைதுசெய்துள்ளனர். விசாரணைகளின் பின்னர் இளைஞனை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/219631 உறவுக்காற சிறுமி தான், உயிரோடு இருக்கிறாவா இல்லையா என பெற்றோர் உறவினர் தவித்த தவிப்பிருக்கே? போனை நிறுத்திவிட்டார்.
3 months ago
யாழில். 17 நாட்களின் பின் மீட்கப்பட்ட சிறுமி! இளைஞர் கைது. யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியொருவரை விடுதி ஒன்றில் 17 நாட்கள் தடுத்து வைத்து, துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என கடந்த 17 நாட்களுக்கு முன்னர் சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், குறித்த சிறுமி நல்லூர் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இருந்து பொலிஸாரினால் மீட்கப்பட்டார். இதனையடுத்து பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் குறித்த சிறுமியை இளைஞன் ஒருவர் காதலித்து வந்ததாகவும், அவரே சிறுமியை வீட்டில் இருந்து அழைத்து வந்து 17 நாட்கள் விடுதியொன்றில் தங்க வைத்திருந்தார் எனவும் தெரியவந்துள்ளது. அதேவேளை, விடுதியின் உரிமையாளரும், குறித்த சிறுமியுடன் தவறாக நடந்து கொண்டார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சிறுமியின் காதலன் என கூறப்படும் இளைஞனைக் கைதுசெய்த பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438714
3 months ago
செம்மணி மனித புதைகுழி: இன்றுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம். செம்மணி மனித புதைகுழியில் கடந்த 15 நாட்களாக அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வந்த நிலையில் இன்று நண்பகலுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு , எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீள அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் 15ஆம் நாள் பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அதன் போது, புதைகுழிகளில் அடையாளம் காணப்பட்ட 65 மனித எலும்பு கூட்டு தொகுதிகளும் முற்றாக இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு நடவடிக்கைகள் இன்றைய தினத்துடன் 24 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மனித புதைகுழியில் இருந்து 63 எலும்பு கூடுகளும் , “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” புதைகுழியில் இருந்து இரண்டு எலும்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன. அதேவேளை “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” புதைகுழியில் குழப்பகரமான முறையில் மனித எலும்பு சிதிலங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகள் அனைத்தும் சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட , பை , காலணிகள் , கண்ணாடி வளையல்கள் , ஆடையை ஒத்த துணிகள் , பொம்மை உள்ளிட்ட பொருட்கள் சான்று பொருட்களாக அடையாளப்படுத்தப்பட்டு , நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438700
3 months ago
படக்குறிப்பு, இந்தத் தூம்புக் கல்வெட்டுகள் சோழர் கால நீர் மேலாண்மை தொழில்நுட்பம் குறித்து விளக்குவதாகக் கூறுகிறார் கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் கட்டுரை தகவல் மாயகிருஷ்ணன் கண்ணன் பிபிசி தமிழுக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் திருவண்ணாமலையை அடுத்த மெய்யூரிலும் தண்டரையிலும் சோழர்கள் கால தூம்புக் கல்வெட்டுகளை திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் கண்டுபிடித்துள்ளது. இந்தக் கல்வெட்டுகள் பல முக்கிய வரலாற்றுச் செய்திகளைக் கூறுகின்றன. திருவண்ணாமலை வட்டம் மெய்யூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏரியின் வடக்குப் பகுதியில் கல்லால் ஆன தூம்பு இருக்கிறது. தூம்பு என்பது நீர்நிலைகளில் நீரை வெளியேற்ற அமைக்கப்பட்டிருக்கும் ஒரு வகையான திறந்து - மூடும் அமைப்பு. இந்தத் தூம்பின் ஒரு பகுதியில் கல்வெட்டுகள் உள்ளதை திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவ அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்டறிந்தனர். இந்தக் கல்வெட்டில் உள்ள எழுத்துகளின் அடிப்படையில், அது 12 அல்லது 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டாக இருக்கக்கூடும் என்கிறார் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளரும், திருவண்ணாமலை வட்டாட்சியருமான பாலமுருகன். இந்தக் கல்வெட்டில் "இத்தோரணம் செய்வித்தான் அருங்குன்றக் கிழான் பொன்னம்பலக்கூத்தன்" என்று பொறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டில் தூம்பு, தோரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தூம்புகளின் தனித்துவமான கட்டுமானம் இந்த கல்வெட்டுகளின் மூலம் சோழர்கள் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நீர் மேலாண்மைப் பணிகளை அறிய முடிவதாகக் கூறுகிறார் பாலமுருகன். மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை தென்முடியனூர், தேத்துறை ஆண்டபட்டு, வலையாம்பட்டு உள்பட 15க்கும் மேற்பட்ட இடங்களில் தூம்புக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார் பாலமுருகன். அதோடு, அந்தக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலன் சார்ந்த பணிகளும் நீர்ப்பங்கீடு தொடர்பான தொழில்நுட்பமும் எவ்வாறு இருந்தன என்பதற்கு இந்தக் கல்வெட்டுகள் சான்றாக அமைவதாகவும் அவர் விளக்கினார். படக்குறிப்பு, திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் பாலமுருகன் தூம்பு மதகு என்பது ஏரிகளில் தேக்கி வைக்கும் நீரை பாசனத்திற்குத் திறக்க அமைக்கப்பட்ட ஒரு திறன்மிக்க அமைப்பு என்கிறார் கல்வெட்டு ஆய்வாளரும், எழுத்தாளருமான முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன். இந்த குமிழித் தூம்பு கட்டுமான அமைப்பை சோழ அரசர்கள் அதிக அளவில் செய்துள்ளதாகவும் கூறுகிறார் குடவாயில் பாலசுப்ரமணியன். இந்தக் கட்டமைப்பு குறித்து விளக்கிய அவர், "இந்தத் தூம்பு அமைப்பில் தேவையான அளவில் தண்ணீரை வெளியேற்ற உதவும் வகையில் கட்டுமானம் அமைந்திருக்கும். தண்ணீர் திறக்கப்படும் இடத்தில் ஒரு கல் பெட்டி போன்று அமைக்கப்பட்டு இருக்கும். இந்தக் கல்பெட்டியின் மேலே அரையடி விட்டத்தில் துளை ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். இந்தத் துளை நீரோடித் துளை எனக் குறிப்பிடப்படும். இந்தத் துளையை குழவி போன்ற ஒரு கல்லைக் கொண்டு மூடி வைத்திருப்பார்கள். பெட்டியின் தரை மட்டத்திலும் சிறிய அளவிலான இரண்டு - மூன்று துளைகள் இருக்கும். அவற்றை சேரோடித் துளை என்பர். ஏரியின் தரைமட்டத்திற்குக் கீழே இந்தக் கல்பெட்டியில் உள்ள துளை வழியே தண்ணீர் செல்லும் வகையில் குழாய் அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும்" என்று விவரித்தார். சோழர்கள் போற்றிய நீர் மேலாண்மை கட்டமைப்பு இந்தக் கட்டமைப்பில் நீர் திறந்துவிடப்படும் நுட்பம் குறித்துப் பேசிய பாலசுப்பிரமணியம், "பாசனத்திற்குத் தண்ணீர் வேண்டியபோது துளையில் உள்ள குழவிக்கல்லை தண்ணீருக்குள் மூழ்கிச் சென்று எடுத்து விடுவார்கள். அப்போது ஏரியின் நீரோடித் துளை வழியாக 80 விழுக்காடு நீரும், சேரோடித் துளை வழியாக 20 விழுக்காடு சேறு கலந்த நீரும் வெளியேறும். இதனால் ஏரிக்குள் வண்டல் மண்படிவது குறையும். சில ஏரிகளில் இந்தத் தூம்பு மதகு உள்ள இடத்தை அடையாளம் காட்டும் விதமாக கல் மண்டபங்களையும் அமைத்திருப்பார்கள்" என்று விளக்கினார். அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் கண்டராதித்தம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு செம்பியன் மாதேவி பேரேரி அமைந்திருக்கிறது. பராந்தக சோழனின் இளைய மகன் கண்டராதித்தன் தனது இரண்டாவது மனைவி செம்பியன் மாதேவியின் விருப்பத்தின் பேரில் வெட்டிய ஏரி இது. படக்குறிப்பு, கல்வெட்டு ஆய்வாளரும், எழுத்தாளருமான முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் இதன் மதகு ஒன்றுக்கு, கண்டராதித்தன் தான் வளர்த்த ராஜராஜனின் பெயரால் ராஜராஜன் தூம்பு என்று பெயரைச் சூட்டியுள்ளார். மேலும், புதுக்கோட்டை அருகே உள்ள குமிழித் தூம்புக்கு ராஜராஜன் என்றே பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து சோழர்கள் இந்த அமைப்பை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதினார்கள் என்பதை அறிய முடிவதாகக் குறிப்பிட்டார் குடவாயில் பாலசுப்பிரமணியன். "ஆங்கிலேயர் காலத்தில் பொதுப் பணித்துறை ஏரிகளைப் பராமரிக்கத் தொடங்கியது. அதிலிருந்து இந்தத் தூம்புகள் கைவிடப்பட்டன. பராமரிப்பின்றிக் கைவிடப்பட்ட இத்தகைய குமிழித் தூம்புகளின் தூண்களில் இருக்கும் அரச மரபினர் காலத்துக் கல்வெட்டுகளும் அரசு சின்னங்களும் தெய்வச் சிற்பங்களும் நீர் மேலாண்மை தொடர்பான பல்வேறு செய்திகளை நமக்குத் தற்போதும் உணர்த்துகின்றன," என்கிறார் குடவாயில் பாலசுப்பிரமணியன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c23grgeglevo
3 months ago
யாழ். தையிட்டியில் கவனயீர்புப் போராட்டம்! யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌர்ணமி தினமான இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் போராட்டம் மாலை ஆறு மணி வரை இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ”விகாரை அகற்றப்பட்டு, காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் இப் போராட்டத்தில், காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. Athavan Newsயாழ். தையிட்டியில் கவனயீர்புப் போராட்டம்!யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌர்ணமி தினமான இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் போராட்டம் மால...
3 months ago
செம்மணியில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வு - இன்றுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம் 10 JUL, 2025 | 03:59 PM செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வடைந்துள்ளது. அதேவேளை இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த 15 நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் , இன்றைய தினம் வியாழக்கிழமை மதியத்துடன் , தற்காலிகமாக அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டு , எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீள அகழ்வு பணிகளை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் 15ஆம் நாள் பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அதன் போது, புதைகுழிகளில் அடையாளம் காணப்பட்ட 65 மனித எலும்பு கூட்டு தொகுதிகளும் முற்றாக இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு நடவடிக்கைகள் இன்றைய தினத்துடன் 24 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதில் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 01" மனித புதைகுழியில் இருந்து 63 எலும்பு கூடுகளும் , "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02" புதைகுழியில் இருந்து இரண்டு எலும்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன. அதேவேளை "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02" புதைகுழியில் குழப்பகரமான முறையில் மனித எலும்பு சிதிலங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகள் அனைத்தும் சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட , பை , காலணிகள் , கண்ணாடி வளையல்கள் , ஆடையை ஒத்த துணிகள் , பொம்மை உள்ளிட்ட பொருட்கள் சான்று பொருட்களாக அடையாளப்படுத்தப்பட்டு , நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/219668
3 months ago
2) வீட்டுத்திட்ட பணிகளுக்கு உதவுவதற்காக திரு @ஈழப்பிரியன்(அமெரிக்கா (இருபாலை) அவர்கள் 29970 ரூபாவை (100$) திரு லக்ஷன் அவர்களுடைய வங்கிக் கணக்கில் 08/07/2025 அன்று வைப்புச் செய்துள்ளார். ஈழப்பிரியன் அண்ணாவிற்கு எமது உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.
3 months ago
இது மார்க் டெய்லர் வெளியே சொன்னது. அவர் 334 இற்கு மேல் அடிக்காமல் விட்டதற்கு காரணம் அவருக்கு ப்ராட்மன் மேலிருந்த அபிமானமே. இரண்டு நாள் முழுவது ஆடியவருக்கு கடைசி இரண்டுபந்தில் ஒரு ஓட்டம் எடுப்பதொன்றும் கஷ்டமான காரியமேயில்லை. அத்துடன் நல்ல கேப்டன் என்றால் அடுத்தநாளும் அரைமணிநேரம் எதிர்தரப்பு ஆரம்ப ஆட்டக்காரர்களை வெய்யிலில் நிக்கவைத்துத்தான் ஆட்டத்தை நிறுத்திக்கொள்வார்கள். பிரெஷாக வந்து ஆடவிடமாட்டார்கள். ஆனால் முல்டருக்கு எவ்வளவோ நேரம் இருந்தும் 400 அடிக்க முயற்சிக்காதது லாராவின் மீதிருந்த அபிமானமே.
3 months ago
Avocado பழத்தை... மாம்பழம் என எழுதி வைத்திருக்கின்றார்கள்.
3 months ago
இலங்கை மீது அமெரிக்கா விதிக்கும் வரியில் தள்ளுபடி! அமெரிக்காவால் அதிகளவு வரி தள்ளுபடி வழங்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் அடங்குவதாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இன்று தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசு பல்வேறு பங்குதாரர்களுடன் மேற்கொண்ட தீவிர பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர முயற்சிகளின் பலனாகவே இந்த வரிக்குறைப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதன் அடிப்படையில் அமெரிக்கா, ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் அறிவித்திருந்த 44 சதவீத வரியை மறுசீரமைத்து, இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல் 30 சதவீத வரி மட்டுமே விதிக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் குறித்த தீர்மானம், இலங்கையின் ஏற்றுமதித் துறைக்கு நன்மை தரக்கூடிய ஒன்றாக இருக்குமென பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் குறித்த வரிச் சலுகை காரணமாக இலங்கை தயாரிப்புகள் அமெரிக்க சந்தையில் போட்டித் திறனை அதிகரிக்கும் என்பதுடன், முதலீட்டாளர்களின் நம்பிக்கையும் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அதுமட்டுமல்லாது இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சிக்கும் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438688
Checked
Tue, 10/14/2025 - 00:12
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed