3 months ago
செம்மணி விவகாரத்தில் பொலிஸ் விசேட குழுவினரின் அறிக்கைக்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு 09 JUL, 2025 | 04:14 PM யாழ் செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் பொலிஸ் விசேட குழுவினர் தமது விசாரணை அறிக்கைகளை நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்த பின்னர் அவற்றை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்கிழமை (08) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், யாழ். செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி அவசர நிர்மாணிப்பு வேலை இடம்பெற்ற போது ஏற்பட்ட நிலையை அடிப்படையாகக் கொண்டு இந்த சம்பவம் முன்னோக்கி கொண்டு செல்லப்படுகின்றது. கடந்த 7ஆம் திகதி வரை மூன்று சந்தர்ப்பங்களிர் 21 நாட்கள் அகழ்வு நடைபெற்றுள்ளது. இதன்போது 44 மனித எழும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அதனோடு மனித பாவனைப் பொருட்கள் 61 கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளன. இச்செயற்பாடுகள் யாழ். மாவட்ட நீதிபதி, அவரது கட்டளையின் படி பேராசிரியர் ராஜ். சேவதேவ உள்ளிட்ட குழுவினர், யாழ் மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி எஸ். பிரதாபன் ஆகியோர் தொடர்புபட்டு மேற்கொள்ளப்படுகின்றது. அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெறும். பொலிஸ் விசேட குழுவினர் தமது விசாரணை அறிக்கைகளை நீதிமன்றத்திற்கு முன்வைப்பார்கள். என்ன பெறுபேறு என்று நாம் பார்ப்போம். நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம். குற்றப்புலனாய்வு திணைக்களம் பொலிஸ் விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நீதிமன்றத்திற்கு உரிய தேவைகளுக்கு ஏற்ப தேவையான விசாரணைகள் அரசினால் முன்னெடுக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/219587
3 months ago
Published By: DIGITAL DESK 3 09 JUL, 2025 | 03:59 PM செம்மணி மற்றும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் போன்றவற்றுக்கு சர்வதேச விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும், இல்லாவிடின் இதற்கான நீதி கிடைக்காது என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (09) நடைபெற்ற ஒத்திவைக்கும் பிரேரணையின் போதே இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சபாநாயகரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தேன், அதில் சர்ச்சைக்குரிய விடையங்கள் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கப்படும் போது அவர்களின் நாடாளுமன்ற சிறப்புரிமைக்கும் அவர்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் வழங்கவேண்டும். செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் நீதி மறுக்கப்பட்டது என்பது நல்லிணக்கத்திற்கு பாதகமான ஒரு விடயம். பொறுப்புக்கூறல் என்பது நல்லிணக்கம் உருவாக முக்கிய விடயமாக உள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 300 இற்கும் அதிகமானோர் கொல்லப் பட்டுள்ளனர். 1998/99 காலப்பகுதியில் சோமரட்ன ராஜபக்ஷ எனும் நபர் மொழிந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் செம்மணி பிரதேசத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 15 மனித எச்சங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இவ் எச்சங்கள் ஸ்கொட்லாந்தில் கிளஸ்கோவில் உள்ளதாக அறிகின்றோம். ஏன் இவற்றை இலங்கை அரசாங்கம் ஆய்வு செய்யவில்லை? DNA பரிசோதனை இலங்கை அரசாங்கத்திற்கு மேற்கொள்ள வசதிகள் இல்லாத நிலையில் ஏன் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தின் உதவியை நாட தயங்குகின்றது? அரசாங்கம் செய்ய குற்றங்களை அரசாங்கம் விசாரிப்பதில் சிக்கல்கள் உள்ளன என ஜனாதிபதி கூறியுள்ளார். இதானாலேயே நாங்கள் சர்வதேச விசாரணை ஒன்றினை எதிர்பார்க்கின்றோம். அரசாங்கம் ஊழல் ஒழிப்பிற்கு விசேட அலுவலகம் ஒன்றினை உருவாக்க யோசிப்பது போல் ஏன் மனித உரிமை மீறல்களை விசாரிக்க அலுவலகம் அமைக்கவில்லை? ஆரையம்பதியில் கொல்லப்பட்ட விஜிதா, மட்டக்களப்பில் கொல்லப்பட்ட ரிபாயா, பிறேமினி, மனித புதைகுழி உள்ள கொக்குத்தொடுவாய், மாத்தளை, செம்மணி, இன்னும் அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்படாத பிள்ளையானின் தீவுச்சேனை ஆகியவற்றின் மீது ஏன் இன்னும் விசாரணை மேற்கொள்ளவில்லை? சட்டத்தில் இணையவழி (Online) மூலமாக வாக்குமூலம் பதிவு செய்வதற்கு இயலுமாக இருப்பினும் தற்போது பிள்ளையானுக்கு எதிராக சாட்சி அளிக்க தயாராக உள்ள அசாத் மௌலானாவின் வாக்குமூலமானது பதிவு செய்யப்படவில்லை. அசாத் மௌலானா தனது வாக்குமூலத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கிய போதிலும் அவ் அறிக்கையினை இலங்கை அரசாங்கம் இன்றளவிலும் கேட்டுப் பெறவில்லை. 2004ம் ஆண்டிலிருந்து இந் நாட்டில் இஸ்லாமிய அடிப்படை வாதத்தினை உருவாக்கியது இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே. கலில் (ஓட்டமாவடி) மற்றும் பாயிஸ் (காத்தான்குடி) எனும் அழைக்கப்படும் இருவர் தற்போது வரை இயங்கிக் கொண்டிருக்கின்றனர். கலில் என்பவர் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் ஐயாவின் கொலை வழக்கில் பிள்ளையானுடன் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட ஒருவர். இலங்கை அரசாங்கம் இன்று வரை இவர்களிடம் எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளவில்லை. நியாஸ் எனும் ஒருவர் சாய்ந்தமருதில் சுட்டுக்கொல்லப்பட்டவர். இவர் நிந்தவூர் “Safe House” இல் இருந்ததாக இராணுவ புலனாய்வுத் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்ற போதும் அவரை பிடிக்க முடியவில்லை. ஆனால் இவர் ஒரு முக்கிய சாட்சியாக கருதப்படக்கூடிய ஒருவர். ஆனால் இச் சாட்சியை மூடி மறைத்துள்ளனர். சாரா எனப்படும் புலஸ்தினியினுடைய 3வது DNA அறிக்கையின் பிற்பாடே அவர் இறந்து விட்டார் என மொழியப்பட்டது. இரு தடவைகளும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் பிரகாரம் அவரை ஏன் இனங்காண முடியவில்லை? இவருடைய தேசிய அடையாள அட்டை அம்பாறை நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சாராவினுடைய அனைத்தும் தீக்கிரையாகி விட்டன என்றால் எவ்வாறு தேசிய அடையாள அட்டை மாத்திரம் கைப்பற்றப்பட்டது? இஸ்லாமிய அடிப்படை வாதத்தை வைத்துக்கொண்டு அரசியல் இலாபம் தேட நினைக்கும் கட்சிகள் உள்ளன. “மினுவாங்கொட போன்ற இடங்களில் இஸ்லாமியர்களின் கடைகளை எரித்ததற்கு பின்புலத்தில் சரத் வீரசேகர என்பவரே உள்ளார்.” என மைத்திரிபால சிறிசேன அவர்களின் குரல் பதிவும் உள்ளது. ஆனால் ஏன் இதுவரை காலமும் சரத் வீரசேகரவிடம் எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளவில்லை? ரொஹான் குணரட்ன என அழைக்கப்படும் விரிவுரையாளர் என்பவர் சிங்கப்பூரில் உள்ள தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தில் Security Defence பற்றிய விரிவுரையாளர். ஐஎஸ் தீவிரவாத அமைப்பே இக் குற்றங்களுக்கு காரணம் என இவர் இரு மாதங்களுக்கு முன்பே கூறியுள்ளார். அரசாங்க அமைச்சர் பிள்ளையானே இக் குற்றங்களுக்கு பின்னணி சூத்திரதாரி எனக் கூறுகின்றார். ரொஹான் குணரட்ன என்பவர் பொய்யான வாக்குறுதிகளை மொழிதமைக்காக கனடாவில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆகவே இது தொடர்பாகவும் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும். 2008ம் ஆண்டு காலப்பகுதியில் ஏறாவூர் பகுதியை சேர்ந்த முஹமட் ரசாக் என்பவரது துப்பாக்கி தொலைந்தது. இத் துப்பாக்கி நுவரெலியாவில் உள்ள ரசாக் என்பவரிடம் இருப்பதாக அவர் கைது செய்யப்பட்டார். இவர் “Islamic Centre” எனும் அமைப்பில் உள்ளார். இத் துப்பாக்கி சபீக் எனப்படுபவரிடமிருந்து ரசாக் என்பவருக்கு விற்கப்பட்டதாகவே தகவல். இத் துப்பாக்கியினையே ரில்வான் சாய்ந்தமருதில் ஏற்பட்ட குண்டு வெடிப்பின் போது வைத்திருந்தவர் என தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஏன் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. https://www.virakesari.lk/article/219585
3 months ago
பிள்ளையானிற்கு உயிர்த்தஞாயிறுதாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்தது - நாடாளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் 09 JUL, 2025 | 02:17 PM கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனிற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்தது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பிள்ளையான் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்தபோதே அவருக்கு இது குறித்து தெரிந்திருந்தது என அமைச்சர் தெரிவித்துள்ளார். உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து பிள்ளையானிற்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/219576
3 months ago
Published By: DIGITAL DESK 3 09 JUL, 2025 | 12:42 PM பிரான்ஸ் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மார்சேயில் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி ஒன்பது தீயணைப்பு வீரர்கள், 22 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 110 பேர் காயமடைந்துள்ளனர் என பிரான்ஸ் உள்நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. மார்சேய் பகுதியை சென்று பார்வையிட்ட உள்நாட்டு அமைச்சர் புருனோ ரீடெய்லியூ அங்கு அவர் உள்ளூர் அதிகாரிகளைச் சந்தித்தார். தற்போது தீயை அணைக்கும் பணியில் 800 தீயணைப்பு வீரர்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். "கடற்படை தீயணைப்பு வீரர்கள் கையில் குழாய்களுடன் கொரில்லாப் போரை நடத்தி வருகின்றனர்" என மார்சேயின் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையை மேற்கோள் காட்டி நகர மேயர் பெனாய்ட் பயான் தெரிவித்துள்ளார். தங்கள் வீடுகளை விட்டு 400 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். தீப் பரவல் நிமிடத்திற்கு 1.2 கிலோ மீற்றர் (0.7 மைல்) வேகத்தில் பரவியுள்ளது. காற்று, அடர்ந்த தாவரங்கள் மற்றும் செங்குத்தான சரிவுகளால் தீ வேகமாக பரவி வருவதாக நகர மேயர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், தீயணைப்பு வீரர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். "காயமடைந்தவர்கள் மற்றும் அனைத்து குடியிருப்பாளர்கள் மீது எங்கள் சிந்தனைகள் உள்ளன" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை நண்பகல் முதல் பல மணி நேரம் மூடப்பட்டிருந்த மார்சேய் புரோவென்ஸ் விமான நிலையம் அந்நாட்டு நேரப்படி இரவு 21:30 மணிக்கு (GMT 19:30) பகுதியளவு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதேபோன்றதொரு சம்பவம் இதற்கு முன்னர் நிகழ்ந்தது இல்லை என விமான நிலையத்தின் தலைவர் ஜூலியன் காஃபினியர் தெரிவித்துள்ளார். மார்சேய்க்கு வடக்கே பென்னஸ்-மிராபியூ அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ, சுமார் 700 ஹெக்டயர் (7 சதுர கி.மீ) பரப்பளவுக்கு பரவியதாகக் கூறப்படுகிறது. அதிவேக நெடுஞ்சாலையில் கார் ஒன்று தீப்பிடித்ததால் இந்த காட்டுத் தீ விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Bouches-du-Rhône பகுதியில் மே மாதம் 19 ஆம் திகதி முதல் ஒரு சொட்டு மழை கூட பதிவாகவில்லை. இதேவேளை, பிரான்சில் திங்களன்று நார்போன் அருகே மற்றுமொரு காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. அங்கு மணிக்கு 60 கிலோ மீற்றர் (40 மைல்) வேகத்தில் காற்று வீசியுள்ளதால் சுமார் 2,000 ஹெக்டயர் நிலப்பரப்பளவு எரிந்து நாசமாகியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். வடகிழக்கு ஸ்பெயினின் கட்டலோனியா பகுதி உட்பட ஐரோப்பாவின் பிற பகுதிகளிலும் காட்டுத்தீ பதிவாகியுள்ளது. கிழக்கு பகுதி தாரகோனாவில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் செவ்வாயன்று 18,000 க்கும் மேற்பட்ட மக்கள் தமது வதிவிடங்களுக்குள் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். இரவு முழுவதும் பலத்த காற்று வீசியதால் தீ அணைப்பு நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3,000 ஹெக்டயர் நிலப்பரப்பளவுக்கு தீ பரவியுள்ளது. ஜூன் மாதத்தில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் அதிகரித்தமையினால் ஸ்பெயினின் பல பகுதிகளுக்கு காட்டுத்தீ தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தன. கிரேக்கத்தில் நாடு முழுவதும் திங்களன்று சுமார் 41 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் ஏழு காட்டுத் தீ திங்கள் மாலை வரை செயல்பாட்டில் இருந்தன என்று தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு மற்றும் தென் ஐரோப்பாவின் பெரும்பகுதி கோடை கால ஆரம்பத்தில் கடும் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டது, தீ விபத்துக்களினால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். https://www.virakesari.lk/article/219549
3 months ago
பிரிட்டிஸ் அரசாங்கம் செம்மணி மனித புதைகுழி குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதா? உமா குமரன் வெளிவிவகார அமைச்சரிடம் கேள்வி Published By: RAJEEBAN 09 JUL, 2025 | 12:31 PM பிரிட்டிஸ் அரசாங்கம் செம்மணி மனித புதைகுழி விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதா? மனித புதைகுழிகளை அகழும் நடவடிக்கைகளிற்கு பிரிட்டன் ஏதாவது உதவிகளை வழங்குகின்றதா? என பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமியிடம் கேள்வி எழுப்பியுள்ளார் வெளிவிவகார குழுவின் கூட்டத்தில் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நீங்கள் இறுதியாக இந்த குழுவின் முன்னிலையில் 2024 நவம்பரில் தோன்றியபோது நான் தமிழ் மக்களிற்கான நீதி குறித்து உங்களிடம் கேள்வி எழுப்பியிருந்தேன். இந்த விடயம் குறித்து நீங்கள் கொண்டிருக்கும் தனிப்பட்ட அர்ப்பணிப்பிற்காகவும் கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக தமிழ் சமூகத்திற்கு நீங்க்ள வெளிப்படுத்திய ஆதரவிற்கும் நான் உங்களிற்கு எனது நன்றியை தெரிவிப்பதன் மூலம் எனது உரையை ஆரம்பிக்க விரும்புகின்றேன். உங்களிற்கு இது தொடர்பிலான எனது குடும்பத்தின் கதை தெரியும், இலங்கையில் மோதலின் போது பாரதூரமான மனித உரிமை மீறல்கள் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக மார்ச் மாதம் பிரிட்டன் தடைகளை அறிவித்தமை குறித்து நான் திருப்தியடைகின்றேன். சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் சட்டத்திற்கு புறம்பான கொலைகளில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக. இது அந்த சமூகத்திற்கு இந்த தருணத்தில் மிகவும் முக்கியமான விடயம். ஆனால் கவலையளிக்கும் விதத்தில் கடந்த மாதம் இலங்கையின் வடபகுதி யாழ்ப்பாணத்தில் செம்மணியில் மற்றுமொரு மனித புதைகுழியை கண்டுபிடித்துள்ளனர். அந்த புதைகுழியில் மூன்று குழந்தைகளின் உடல்களையும் கண்டுபிடித்துள்ளனர். புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள மனித புதைகுழிகளை சர்வதேச தராதரத்தின் கீழ் அகழ்வு செய்வதற்கான போதிய வளங்கள் இலங்கையில் இல்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் கரிசனை வெளியிட்டுள்ளது. பிரிட்டிஸ் அரசாங்கம் இந்த விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதா? மனித புதைகுழிகளை அகழும் நடவடிக்கைகளிற்கு பிரிட்டன் ஏதாவது உதவிகளை வழங்குகின்றதா? https://www.virakesari.lk/article/219562
3 months ago
ஏமனில் கேரள செவிலியர் நிமிஷாவின் மரண தண்டனை தேதி அறிவிப்பு - குடும்பத்தின் தரப்பில் தகவல் கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் 8 ஜூலை 2025 ஏமனில் கொலை வழக்கில் சிக்கிய கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு வரும் 16-ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிபிசி தமிழிடம் பேசிய அவரது தாயார் சார்பாக வழக்கைக் கையாளும் அதிகாரம் கொண்டவருமான சாமுவேல் ஜெரோம், நிமிஷா பிரியாவை காப்பாற்ற இன்னமும் வழியிருப்பதாக கூறியுள்ளார். நிமிஷா பிரியாவின் மரண தண்டனை தேதி அறிவிப்பு தொடர்பாக பிபிசியால் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை. என்ன நடந்தது? ஏமன் நாட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை தொடர்பான வழக்கில் கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் தற்போது ஏமன் தலைநகரான சனாவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நிமிஷா பிரியாவை மீட்பதற்கு 'சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்' என்ற குழுவும், நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரியும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தனர். பிரேமா குமாரி, இதற்காக இந்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஏமன் சென்றார். ஏமன் நாட்டில் ஷரியத் சட்டம் நடைமுறையில் இருப்பதால், கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினருக்கு 'ப்ளட் மணி (Blood Money)' என்னும் இழப்பீட்டுத் தொகையைக் கொடுத்து மன்னிப்பு பெறுவதன் மூலம் மட்டுமே நிமிஷாவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற முடியும். அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், நிமிஷாவின் மரண தண்டனையை நிறைவேற்ற ஏமன் நாட்டு அதிபர் மெஹ்தி அல் மஷாத்(ஹூதி பிரிவு) கடந்த ஜனவரியில் ஒப்புதல் அளித்தார். மரண தண்டனை தேதி அறிவிப்பு நிமிஷா பிரியாவை மீட்பதற்கு பல்வேறு முயற்சிகளை அவரது குடும்பத்தினர் எடுத்து வரும் நிலையில், அவரது மரண தண்டனை ஜூலை 16ஆம் தேதி நிறைவேற்றப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மனித உரிமை ஆர்வலரும், நிமிஷா பிரியாவின் தாயார் சார்பாக வழக்கைக் கையாளும் அதிகாரம் கொண்டவருமான சாமுவேல் ஜெரோம் தெரிவித்தார். மத்திய சிறையின் தலைவர் தொடர்புகொண்டு மரண தண்டனை தேதி முடிவு செய்யப்பட்டது குறித்துத் தனக்குத் தெரிவித்ததாக ஜெரோம் கூறுகிறார். அதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "நேற்று சிறைத் தலைவரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நிமிஷாவின் மரண தண்டனை ஜூலை 16ஆம் தேதியன்று நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். இதுகுறித்து சௌதியில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் தெரிவித்துள்ளேன். அவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் சனாவில் உள்ள இந்திய அதிகாரிகள் நேரடியாகச் சென்று மரண தண்டனை ஆவணத்தைப் பார்த்து உறுதி செய்துள்ளனர்" என்று தெரிவித்தார். இதனை பிபிசியால் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை. அதோடு, "நான் ஏமனுக்கு பயணித்துக் கொண்டிருக்கிறேன். அங்கு சென்றபிறகு என்ன வாய்ப்புகள் நம் முன் இருக்கின்றன என்பதைப் பார்க்கவுள்ளேன். இன்னமும் இதில் இந்திய அரசு தலையிட முடியும்" என்று சாமுவேல் ஜெரோம் தெரிவித்தார். கடந்த பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போரில் சிக்கியுள்ள ஏமனில், கேரள செவிலியர் நிமிஷா பிரியா ஹூதி பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்களுடன் இந்தியாவுக்கு தூதரக உறவு இல்லை என்பதால், நிமிஷா பிரியா விவகாரத்தை சௌதியில் உள்ள இந்திய தூதரகமே கவனிக்கிறது. நிமிஷா பிரியாவை காப்பாற்ற இருக்கும் வழி என்ன? படக்குறிப்பு, நிமிஷா பிரியா வழக்கை ஊடக வெளிச்சத்திற்கு கொண்டு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த சாமுவேல் ஜெரோம் நிமிஷா பிரியா வழக்கை ஊடக வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாமுவேல் ஜெரோம். பல ஆண்டுகளாக ஏமன் நாட்டில் வானூர்தி ஆலோசகராகப் பணிபுரியும் ஜெரோம், மஹ்தி குடும்பத்தினரின் மன்னிப்பை நிமிஷாவுக்கு பெற்றுத் தருவதற்கான முயற்சியில் முக்கியப் பங்காற்றி வருகிறார். கடந்த 2023 டிசம்பரில் பிபிசி தமிழிடம் பேசியபோது, மன்னிப்பு பெறுவதற்கான செயல்முறையில் பணம் பிரதானமல்ல என்று கூறிய ஜெரோம், "ப்ளட் மணி (Blood money) என்பது மன்னிப்புக்கான ஓர் அடையாளம் மட்டுமே. வேறு சில வழக்குகளில் 5 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 42 கோடிகள்) கொடுக்க முன்வந்தும்கூட பாதிக்கப்பட்ட ஏமன் குடும்பங்கள் மன்னிப்பு வழங்கவில்லை. எனவேதான் மஹ்தியின் குடும்பத்தாருடன் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது," என்றார். இந்த மன்னிப்பின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய அவர், "மரண தண்டனைக்கு ஏமன் அதிபர் அளித்துள்ள ஒப்புதல், அரசு வழக்கறிஞரின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு, பிறகு அவர் மரண தண்டனையை நிறைவேற்ற ஆணை பிறப்பிப்பார். அதற்கு முன், மஹ்தியின் குடும்பத்தை அழைத்து 'நிமிஷாவுக்கு தண்டனை வழங்குவதில் ஆட்சேபம் உள்ளதா எனக் கேட்பார்'. அவர்கள் விருப்பமில்லை அல்லது நிமிஷாவை மன்னிக்கலாம் என்று கூறிவிட்டால் உடனே தண்டனை நிறுத்தப்படும்" என்று கூறினார். இப்போதுள்ள சூழலில், கொலை செய்யப்பட்ட மஹ்தியின் குடும்பத்தினர் இழப்பீட்டுத் தொகையை ஏற்றுக்கொண்டு, நிமிஷாவுக்கு மன்னிப்பு வழங்குவதுதான் ஒரே வழி என்றும் அவர் முன்பு கூறியிருந்தார். நிமிஷா பிரியா வழக்கின் பின்னணி என்ன? படக்குறிப்பு, நிமிஷா பிரியா தனது கணவருடன் உள்ள புகைப்படம் நிமிஷா பிரியாவின் தாயார் பிரேமா குமாரி முன்பு பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த வழக்கு குறித்த முழு விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். அதன்படி, கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த 35 வயதான நிமிஷா பிரியா, கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு செவிலியர் பணிக்குச் சென்றார். அங்கிருந்த சில மருத்துவமனைகளில் பணிபுரிந்த அவர், 2011ஆம் ஆண்டு கேரளாவுக்கு திரும்பி வந்து டோமி தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு கணவருடன் ஏமன் சென்றார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். செவிலியர் பணியில் குறைந்த ஊதியமே கிடைத்தது என்பதால் நிமிஷாவின் குடும்பம் அங்கு வசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. எனவே 2014ஆம் ஆண்டு, தனது மகளுடன் கேரளா திரும்பினார் டோமி தாமஸ். நிமிஷா தொடர்ந்து ஏமனில் பணிபுரிந்தார். "மீண்டும் தனது குடும்பத்தை ஏமனுக்கு அழைத்து வர, நிதி நிலையை மேம்படுத்த வேண்டும் என்பதால், அங்கு சொந்தமாக ஒரு சிறிய மருத்துவமனையைத் தொடங்க விரும்பினார் நிமிஷா. ஆனால், ஏமன் நாட்டுச் சட்டப்படி மருத்துவமனை தொடங்க உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் கட்டாயம் பங்குதாரராக இருக்க வேண்டும். எனவே 2015ஆம் ஆண்டில், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலோல் அப்டோ மஹ்தி என்பவருடன் இணைந்து ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். இந்த மருத்துவமனைக்காக, நிமிஷா தனது நண்பர்கள், உறவினர்களிடம் 50 லட்சம் வரை கடன் வாங்கினார்" என்று பிரேமா குமாரி தெரிவித்தார். அதன் பிறகு கணவரையும் மகளையும் ஏமன் அழைத்து வருவதற்கான வேலைகளை அவர் தொடங்கிய போதுதான் அங்கு உள்நாட்டுப் போர் வெடித்துள்ளது. அதனால், அவர்களால் ஏமன் செல்ல முடியவில்லை. 2015இல் ஏமனில் வசித்த ஆயிரக்கணக்கான இந்தியர்களை 'ஆபரேஷன் ரஹாத்' என்ற பெயரில் இந்திய அரசு மீட்டது. அப்போது ஏமனில் இருந்து வெளியேறாமல், அங்கேயே தங்க முடிவு செய்த சில இந்தியர்களில் நிமிஷாவும் ஒருவர். மருத்துவமனை தொடங்கப்பட்டு, அது சிறப்பாகச் செயல்படத் தொடங்கியதும் நிமிஷாவுக்கும் உள்ளூர் பங்குதாரர் மஹ்திக்கும் இடையே முரண்பாடுகள் அதிகரித்தன என்றும், இது குறித்துப் பல புகார்களை தொலைபேசியில் பேசும்போது நிமிஷா தெரிவித்தார் என்றும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். படக்குறிப்பு, நிமிஷாவின் தாயார் பிரேமா, இந்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று கடந்த ஆண்டு ஏப்ரலில் ஏமன் சென்றார் கடந்த வருடம், நிமிஷாவின் தாயாரை ஏமன் அனுப்ப அனுமதி கோரி, 'சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்' டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "மஹ்தி, உடல்ரீதியாக நிமிஷாவை கொடுமைப்படுத்தியதாவும், மருத்துவமனை வருமானம் மொத்தத்தையும் எடுத்துக் கொண்டதாகவும்" தெரிவிக்கப்பட்டுள்ளது. பல சந்தர்ப்பங்களில், "மஹ்தி, துப்பாக்கியை வைத்து நிமிஷாவை அச்சுறுத்தியதாகவும்" மற்றும் "நிமிஷா நாட்டைவிட்டு வெளியேறாமல் தடுக்க அவரின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து வைத்துக் கொண்டதாகவும்" அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிமிஷா ஏமன் காவல்துறையிடம் புகார் அளித்தபோது, "மஹ்தி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், நிமிஷாவை ஆறு நாட்கள் சிறையில் அடைத்து வைத்ததாகவும்" கூறப்பட்டுள்ளது. "தனது பாஸ்போர்ட்டை மஹ்தியிடம் இருந்து மீட்க, அவருக்கு மயக்க மருந்து செலுத்த நிமிஷா முடிவு செய்தார். ஆனால் தவறுதலாக மயக்க மருந்தின் அளவு கூடியதால், மஹ்தி உயிரிழந்தார். இந்த வழக்கில் நிமிஷாவும் பாதிக்கப்பட்டவர்தான். அவரை குற்றவாளியாகக் கருத முடியாது" என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞர் கே.எல்.பாலச்சந்திரன். கடந்த 2018இல், கேரளாவின் வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆணையத்தில் (NRI Commission) நிமிஷா சார்பில் ஆஜரானவர் வழக்கறிஞர் கே.எல்.பாலச்சந்திரன். "இந்த வழக்கின் தொடக்கத்தில் நிமிஷாவுக்கு ஏமனில் சட்ட உதவிகள் முறையாகக் கிடைக்கவில்லை. இதனால் அவர் தரப்பு நியாயத்தைக் கூற முடியவில்லை. மொழி தெரியாமல், அவர்கள் காட்டிய ஆவணங்களில் எல்லாம் அப்போது அவர் கையெழுத்திட்டுவிட்டார்" என்று கூறுகிறார் பாலச்சந்திரன். தலோல் அப்டோ மஹ்தி கொலை வழக்கில், 2017ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட நிமிஷா சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2020ஆம் ஆண்டில், ஏமன் தலைநகர் சனாவில் உள்ள நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து நிமிஷா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை ஏமனின் உச்சநீதிமன்றம் நவம்பர் 2023இல் தள்ளுபடி செய்து, மரண தண்டனையை உறுதி செய்தது. நவம்பர் 2023இல் உறுதி செய்யப்பட்ட தண்டனையை நிறைவேற்ற ஏமன் அதிபர் மெஹ்தி அல் மஷாத் (ஹூதி பிரிவு) கடந்த ஜனவரி மாதம் ஒப்புதல் அளித்தார். ஏமனில் ஷரியத் சட்டம் அமலில் உள்ளதால், மஹ்தியின் குடும்பம் மன்னிப்பு வழங்கினால், நிமிஷாவால் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg5lvd1mgro
3 months ago
Posted inStory மாதா எழுதிய “முதுமை” சிறுகதை Posted byBookday07/07/2025No CommentsPosted inStory “முதுமை” சிறுகதை – மாதா அந்த முதியவருக்கு எண்பது வயதாகிறது. அவரது மனைவிக்கு எழுபது. அவர்கள் கிளையில் தொங்கிக்கொண்டிருக்கும் பழுத்த மாம்பழங்கள். ஒரு நாள் திடீரென்று பலத்த காற்று வீசும் போது ஒன்றன் பின் ஒன்றாக பூமியில் விழுந்து விடும். தனது மனைவியை விட தான் வயது மூத்தவர் என்பதால் தார்மீக அடிப்படையில் அவளுக்கு முன்பாகவே தான் காலமாகிவிட வேண்டுமென்று எண்ணினார். ஆனால் கடவுள் அந்த வயது முதிர்ந்தபெண்ணுக்கு அணுக்கமாகவே நடந்து வருகிறார். வயதான காலத்தில் வாழ்க்கையில் பெரிதாக ஒன்றும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் விரும்பியதை எல்லாம் கடவுள் வழங்கியிருப்பதாகவே நம்பினார்கள். தேவைகள் குறைவாக இருப்பவரே பெரிய செல்வந்தர். நலக்குறைவில்லா வாழ்க்கை. மூதாட்டிக்கு கடவுளிடம் ஒரே ஒரு பிரார்த்தனைதான். நூறு ஆண்டுகள் வரை கணவர் உயிரோடு வாழ வேண்டும். அவருக்கு முன்பு அவள் உயிர் பிரிய வேண்டும். நலமுடன் இருக்கும் போதே கடவுள் அவளை அழைத்துக் கொள்ள வேண்டும். அவரை விட்டால், அவள் யாரிடம் முறையிட முடியும்? தேவைப்படும் நாளில் உதவிக்கரம் கிடைக்காத சூழலில் மனிதன் கடவுளை எண்ணுகிறான், தன்னை மீட்டெடுப்பான் என்று நம்புகிறான். ஆனால் அளவான இறை நம்பிக்கையுள்ள முதியவர் ஆண்டவனிடம் இதுபோன்ற கோரிக்கை வைப்பதில்லை. பக்தர்களை கவனிப்பதை விட கடவுளுக்கு உலகில் ஏராளமான பிரச்சனைகளை தீர்க்க வேண்டிய கடமை இருக்கிறது. அவளுடைய வேண்டுகோளை கடவுள் எவ்வாறு நிறைவேற்ற முடியும்? இருப்பவர்களுக்கெல்லாம் நீண்ட ஆயுளைக் கொடுத்து தங்கி விட்டால், மற்றவர்களுக்கு பூமியில் இடமில்லாமல் போகுமே… சராசரி அயுளுக்கு மேல் நீணட கால வாழ்க்கையை யாரும் விரும்புவதில்லை. வாழ்க்கையின் இறுதிப் பகுதி துயரத்தின் வலி மிகுந்ததாகவே இருக்கும். அவர்கள் வசிக்கும் வீடு அந்த மூத்த தம்பதிகளின் வயதை விட பழமையானது. மூன்று தலைமுறையை தாங்கி நிற்கிறது. பழமையான அந்த வீட்டில் பழமையான இரு மனிதர்கள் வசித்து வருகிறார்கள். நூற்றி ஐம்பது ஆண்டு வயதுடைய அந்த வீட்டை மராமத்து செய்யவோ, நவீனப்படுத்தவோ அவர்கள் வரும்பவில்லை. பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் வந்து தங்காத வீட்டை புதுப்பிக்கவில்லை. பிள்ளைகளின் வாழ்வை கரை சேர்த்துவிட்டு மீண்டும் வாழத்தொடங்கி இருக்கிறார்கள். மூத்த தம்பதிகள் நீண்டகாலம் வாழ்வதால் முதுமைக்கால பிரச்சனைகள் துன்புறுத்தும். அவர்களை பராமரிப்பதற்காக செலவு ஏற்படும். பிள்ளைகள் ஒதுக்கி வைத்ததால் அவர்கள் தங்களிடம் சேர்ந்து கொண்டார்கள் மூத்த தம்பதிகள். முதுமைப் பருவம் என்பது பிறப்பு, இறப்பு எல்லைகளுக்கு இடையிலான விளிம்பு நிலை பருவம். கடந்து சென்ற வாழ்க்கைப் பாதையின் அனைத்து அனுபவங்களையும் அசை போட்டு, அடுத்த தலைமுறைக்கு சுவடுகளை விட்டுச் செல்லுகிற உன்னத பருவம். அவர்கள் ஏற்கனவே நீணட காலம் வாழ்ந்து விட்டார்கள். அந்த ஊரிலேயே அவர்கள்தான் வயதானவர்கள். அவர்கள் வயதையொத்தவர்கள் எல்லாம் ஏற்கனவே இறந்து விட்டார்கள். அதனாலேயே அவர்கள் இந்த உலகத்தை விட்டு பிரிய மனதளவில் தயாராகி விட்டார்கள். மரணம் யாரிடமும் அனுமதி கேட்பது இல்லை. மரணத்தை விட்டு ஓட முடியுமா? ஒருவருக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து முடிக்க வேண்டும். நிறைவான வாழ்க்கையில் மரணம் இருக்காது. கிழவரும், அவருடைய மனைவியும் மரணத்தைப் பற்றி சிந்திப்பதே இல்லை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் வாழ்க்கையை ரசித்து வாழ்கிறார்கள். அவர்கள் தங்கள் வேலைகளைத் தாங்களே செய்துகொள்கிறார்கள். தங்களின் தேவைக்கு யாருடைய உதவியையும் எதிர்பார்ப்பதில்லை. தினமும் ஒரு நேரம் மட்டுமே ரேஷன் அரிசியை சமைத்து இரண்டு வேளைக்கு சாப்பிடுகிறார்கள். பல நாட்களில் வயதான வயிறு ஒத்துழைக்க மறுக்கிறது. உண்ட உணவை செரிக்க முடியவில்லை. தினமும் குறைந்த அளவே உண்ணுகிறார்கள். உடலில் உயிரையும், ஆன்மாவையும் வைத்திருப்பதற்காக மட்டுமே சாப்பிடுகிறார்கள். சாப்பாட்டிற்காக அவர்கள் ஏங்கியதே இல்லை. அக்கம், பக்கத்து குடித்தனக்காரர்கள் அவர்களை பொறாமையோடு பார்ப்பார்கள். இந்த வயதான காலத்திலும் எப்படி இவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது? வெளியூர்களில் வசிக்கும் அவர்களுடைய பிள்ளைகள் தங்களை வந்து பார்க்கவில்லையே, பராமரிக்கவில்லையே எனற கவலைகள் கிடையாது. நீங்கள் எப்போது விரும்பினாலும் இந்த கிராமத்திற்கு வந்து நமது முன்னோர்கள் கட்டிய இந்த வீட்டில் தங்கிச்செல்லலாம் என்று பிள்ளைகளிடம் கூறியிருக்கிறார்கள். அவர்களுக்கு சிறு சிறு நலக்குறைவு ஏற்பட்டாலும் பிள்ளைகளுக்கு தந்தியோ, தகவலோ கொடுப்பதில்லை. ஆனால் கிழவிக்கு முதுமைக்கால புலம்பல்கள் அவ்வப்போது வரும். பெண்கள் எதற்காக குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள்? பெற்றோர்களை முதுமைக் காலத்தில் கவனித்து பராமரிப்பதற்குத்தானே…என் பிள்ளைகள் எனக்கு கடிதம் கூட எழுதுவதில்லை. இப்படியான பேச்சு வரும்போதெல்லாம் கிழவர் சட்டென்று சொல்லிவிடுவார்;. எந்த மனிதனும் எவரையும் காப்பாற்ற முடியாது. கடவுள் மட்டுமே நமக்கு நல்லது செய்ய முடியும் என்பார். அவரவர்க்கு ஏராளமான சொந்த பிரச்சனைகள். நமது பிள்ளைகளுக்கும் அப்படித்தான். அவர்கள் நமக்கு கடிதங்கள் எழுதுவதாலேயே நம்முடைய பிரச்சனைகள் மறைந்துவிடுமா? பிள்ளைகளைப் பற்றி தேவையில்லாமல் புலம்பிக்கொண்டிருப்பது தாய்மார்களுக்கு. வாடிக்கையாகிவிட்டது. அவர்களெல்லாம் நம்மைப் பார்க்க வந்து தங்கிவிட்டால், உன்னால் சமாளிக்க முடியாது. பத்துப் பனிரெண்டு தட்டுகளுக்கு உன்னால் சமைத்து பரிமாற முடியுமா? அவர்கள் எப்போது விரும்புகிறர்களோ அப்போது வந்து பார்க்கட்டும். சின்ன விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு பேசக்கூடாது. இதைக் கேட்டதும் பாட்டிக்கு பல்லில்லா வாயில் கனிவான புன்னகை பூக்கும். கண்டிப்பு கலந்த வார்த்தைகளை கணவன் உச்சரித்தாலும் அதில் ஒரு ஈர்ப்புத் தன்மை இருக்கும். சில நேரங்களில் தாய்மை உணர்வை வெளிப்படுத்துவதற்காக அவள் புலம்பினாலும், கணவன் அவளை அதட்டி கட்டுப்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்த கட்டிடம் பழுதாகி, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. ஆண்டுகள் உருண்டோடி, தம்பதிகள் முதுமையாகி தளர்ந்து விட்டார்கள். ஆனால் அவர்கள் வாழ்ந்து வரும் இந்த வீடு பழமையானாலும் கம்பீரமாக நிற்கிறது. பொலிவுடன் தொன்மையான மரபின் அடையாளமாகத் திகழ்கிறது. அனைவரின் கவனத்தையும் ஈர்த்து ஒரு பிரமாண்டத்தை அளிக்கிறது. மனிதருக்கு வீடும், உலகமும் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது. தனித்துவமாகவும் இருக்கிறது. சிலருக்கு வீட்டிற்கும், உலகிற்கும் பெரிய இடைவெளி உள்ளது. வீடு உங்களை எளிதாக அங்கீகரித்தாலும், உலகம் உங்களை எளிதில் அங்கீகரிக்காது. வீடும் அங்கீகரித்து, உலகமும் அங்கீகரித்து வாழும் வாழ்க்கைதான் சிறந்த வாழ்க்கை. உலகிலேயே வீடுதான் மனிதனுக்கு பாதுகாப்பானது. வீடு என்பது வெறும் சுவர்கள் அல்ல. அது வாழ்வின் அடையாளம். முதுமையை கழிப்பதற்கு பாதுகாப்பான இடம் வீட்டைத் தவிர வேறு எதுவும் இல்லை. அவர்களது உடம்பு முதுமையாகி தளர்ந்து விட்டது. முதுமை அவர்களுக்கு சுமையாகிப் போனது. சிரமமும், வேதனையும் தாங்க முடியவில்லை. அவர்கள் தூசிக்குள்ளும், சிலந்தி வலைக்குள்ளும் அடைந்து கிடக்கிறார்கள். இருந்தும் தங்களைத் தாங்களே மென்மையாகப் பாதுகாத்துக்கொண்டு அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்கிறார்கள். அண்மைக் காலமாக முதியவர் உடம்பு கூன் விழுந்து பலவீனமாகி, முதுமைக்கால தொந்தரவுகள் அதிகமாகி வருகிறது. கட்டிலில் இருந்து இறங்கக் கூட யாரேனும் கைத்தாங்க வேண்டிய காலத்தில் புரிகிறது அவளுக்கு நானும், எனக்கு அவளும்தான் கடவுள் என்பது. முதலில் பிறந்த மனிதன் பழையது ஆகிறான். பின்னால் பிறந்தவன் புதியவனாகிறான். ஆனால் ஒவ்வொருவரும் பழமையாகி, பயனற்றதாகி விடுகிறார்கள். இந்த முறையும் லீவுக்கு வரமுடியாதுன்னு தபால் வந்திருக்கு. ஒரு தடவையாவது அவன் வந்து பார்க்கக் கூடாதா என்று கிழவி கேட்டதற்கு, கிழவர் அமைதியாய் பதிலளித்தார். ஒருவன் பழையவர்களை அழைத்துச் செல்ல வருவான். யார் அவன்? அவன் புதியவற்றை வளரவிட்டு, பழமையாக்குபவன்;. நம்மை அழைத்துச் செல்ல எப்போது வேண்டுமானாலும் வரட்டும். அவள் நெற்றியைத் தடவிக்கொண்டே கூறினார். லௌகீக வாழ்வுக்கு தேவைப்படும் உதவி எங்கிருந்து கிடைக்கிறதோ அந்தப் பருப்பொருள்தான் கடவுள். ************* எழுதியவர் : ✍🏻 மாதா @ மே-பா மா.தங்கராசு சிஐடியு தேனி மாவட்ட கைத்தறி சங்க செயலாளர் 75- கிழக்குத் தெரு, சக்கம்பட்டி ஆண்டிபட்டி- அஞ்சல் 625512 தேனி- மாவட்டம் https://bookday.in/muthumai-tamil-short-story-written-by-matha/
3 months ago
சிறப்புக்கட்டுரைகள் ’யோகா தமிழருடையது- அடித்துச் சொல்லும் சித்த மருத்துவ வல்லுநர்’ இரா. தமிழ்க்கனல் Published on: 21 Jun 2025, 2:30 pm Share நாடு முழுவதும் இன்று யோகா நாள் கடைப்பிடிக்கப்பட்டு, ஏராளமானவர்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். அண்மை சில ஆண்டுகளாக மத்திய அரசும் யோகாவுக்கு அதிகமாக முக்கியத்துவம் அளித்துவருகிறது. இந்தப் பின்னணியில் யோகா முறையே தமிழர் மரபு நெறி என்கிற குரலும் வலுத்துவருகிறது. ஓகம் எனத் தமிழில் கூறப்பட்டதே யோகம் என வடமொழியில் திரிக்கப்பட்டுவிட்டது என்றும் சித்த மருத்துவம் ஆயுர்வேதம்போல மாற்றப்பட்டுவிட்டது என்கிற வாதமும் முன்னைவிட வலுவாக முன்வைக்கப்படுகிறது. தனித் தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த பொழிலனின் ’ஓகம் பயில்வோம்’ எனும் புத்தகம், யோகா தமிழ் மரபு முறைதான் என அடித்துச்சொல்கிறது. பெரியார்கூட யோகா கற்றுக்கொண்டார் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், இதைப் பற்றி மருத்துவக் கல்லூரிகள் போன்ற ஆய்வுமட்ட அளவில் துறைசார்ந்த வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்? கர்நாடக மாநிலம், மணிப்பால் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத் துறையின் தலைவர் பேராசிரியர் டாக்டர் அருள் அமுதனிடம் பேசினோம். அந்த உரையாடலிலிருந்து... பேராசிரியர் சித்த மருத்துவர் அருள் அமுதன், மணிப்பால் பல்கலைக்கழகம் யோகாவை வடமொழிசார்ந்த- வடக்கத்திய ஒன்றாகவும் இன்னொரு பக்கம் தமிழர் சொத்தாகவும் வேறுவேறாகச் சொல்கிறார்களே? உடலுக்கு வெளியில் இறைவனைத் தேடுபவர்கள், ஒரு வகையினர். மனிதன் முற்பிறவியில் செய்த வினையை முன்னிட்டு பிறக்கிறான்; நோய், துன்பங்கள் வருவது முன்வினைப் பலன் என்பது கர்மா... வேதாந்தம். இப்படிக் கருத்துடைய ஒருவருக்கு, தன்னுடைய பிரச்னையைத் தீர்க்க வேறு வழியே இல்லை; பூசையோ யாகமோ சோதிடப்படி பரிகாரமோ செய்யவேண்டும். இதற்கு அறிவியல் தேவையே இல்லை. வேதாந்திகள் இதைத்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகச் சொல்லிவருகிறார்கள். இன்னொரு பக்கம், மக்களுடைய கஷ்டங்களைப் பார்த்து, அவர்களின் நோய்களைத் தீர்க்க முடியும்; அறிவியல்பூர்வமாக எதையும் செய்யவேண்டும் என்று முயன்றவர்கள் சித்தாந்திகள். வேதாந்தம்- சித்தாந்தம் இரண்டும் நேர் மாறானவை. நம் நாட்டில் கௌதம புத்தர், மகாவீரர், கேரளத்தில் நாராயண குரு, தமிழ்நாட்டில் வள்ளலார்... இவர்கள் எல்லாரும் சித்தாந்திகள். வேதாந்தத்துக்கு எதிரானவர்கள்; மெய்ஞானம், விஞ்ஞானம், ஆன்மிகம் எனப் பேசியவர்கள். வேதாந்திகளுக்கு மதம்தான் எல்லாம். கடவுளை வெளியில் தேடினால் வியாபாரம்; உண்மையில் உனக்குள் கடவுளைத் தேடு என்கிறபடி சித்தர்கள் கண்டுபிடித்த வழிமுறைதான் யோகம். புத்த மதம், ஜைன மதம் யோகா தியானத்தைக் கற்பிக்கிறார்கள், செய்கிறார்கள். வேதாத்ரி மகரிஷியின் ’வாழ்க வளமுடன்’ வழியினரும், வள்ளலார் வழியினர் தியானம் செய்கிறார்கள். ஐயா வைகுந்தர் வழியில் ஒரு கண்ணாடி முன் தியானம் செய்யச் சொல்கிறார்கள். அதாவது கண்ணாடி முன்னால் நின்று பார்த்தால் நீதான் இறைவன். இவர்களை ஒரு குடையில் வைத்தால், கடவுளை உனக்குள்ளே தேடு என மனதுக்குள்ளே பயணம் (Inner Journey) செய்யச் சொல்கிறவர்கள், சித்தாந்திகள். இந்த சித்தாந்திகள் யோகாவில் எட்டு வகைப் படிநிலைகளைப் பயிற்சிசெய்து, கடைசியாக சமாதி நிலையை அடையும்போது அவர்களுக்கு எல்லையில்லா அதிசக்தி கிடைக்கிறது. பெரிய மேஜிக்கல் பவர் கிடைக்கிறது. அவர்களுக்குப் பெயர் அஷ்டமகா சித்திகள்... இவர்கள்தான் சித்தர்கள். வட இந்தியா, தென் இந்தியாவில் யோகிகள் எத்தனையோ பேர் இருந்தாலும் கடைசி நிலைக்குப் போய் சித்தர்கள் ஆவதில்லை. கடவுளை அடைய முயல்பவன் பக்தன்; அடைந்தவன் சித்தன். சமாதி என்றால் இறந்துவிடுவார்களா? இல்லை, உயிரோடுதான் இருப்பார்கள். அந்த நிலையில் அவர்களுக்கு அதிதீவிரமான சக்தி கிடைத்திருக்கும். தெளிவாக பிரச்னைக்குத் தீர்வைக் காண அவர்களால் முடியும். அந்த அளவுக்கு மனத் திட்பம் உருவாகியிருக்கும். சித்தர்கள் என்பவர்கள் ஒருபக்கம் மருந்துகளைச் செய்தாலும், காயகற்பம்- அதாவது காயம் என்றால் உடல், கற்பம் என்றால் உடலை கல்லைப் போல வலுவாக வைத்துக்கொள்வது; அதில் உள்ள ஒரு பயிற்சியான யோகாவை உருவாக்கினார்கள். இது முற்காலத்தில் துறவு வாழ்க்கைக்குப் போகிறவர்களுக்கான பயிற்சி, பொது மக்களுக்கானது அல்ல. அதனால்தான் இது எல்லாருக்கும் சொல்லித்தரப்படவில்லை. மரணமில்லாப் பெருவாழ்வு என வாழ முற்படுவோருக்கு, உடல், மனதை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு சித்தர்கள் கண்டுபிடித்ததுதான் காயகற்பம். அதைப் பயிற்சிசெய்ய எண்ணம், சொல், செயல் தூய்மையாக இருக்கவேண்டும்; உணவுக் கட்டுப்பாடு உள்ளது. உன்னையே நீ அறி- நமக்குள்ளேயே பயணம்... தியானம்..அதுதான் யோகா. சரி. ஏராளமானவர்கள் இப்போது யோகா செய்கிறார்கள். முற்காலத்தில் இதன் பயன்பாடு குறைந்த அளவினரிடம் மட்டுமே இருந்ததாகச் சொல்கிறீர்கள். இப்படி என்றால், சித்த மருத்துவத்தின் அங்கமாக யோகா என்னதான் செய்தது? யோகம் நம்முடைய கலைதான்; உடல், உள்ளத்துக்கான ஒரு முறைதான். திருமூலரின் திருமந்திரத்தில் நிறைய பாடல்கள்... இதைப் பற்றி மட்டும் 300 பாடல்கள் இருக்கின்றன. திருமந்திரத்தில் ஒரு அதிகாரம் முழுவதுமே அட்டாங்க யோகம் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. போகர் என்ற சித்தரின் நூலில் இருக்கிறது. அகத்தியரின் நூலில் இருக்கிறது. தமிழில் இயற்றப்பட்ட மூலநூல்களில் இருக்கிறது. யோகத்தின் தந்தை எனச் சொல்லப்படக்கூடிய பதஞ்சலி முனிவர், இராமேசுவரத்தில் யோகாவைக் கற்றுக்கொண்டு சமாதி நிலையை அடைந்ததாக நம்முடைய சித்த நூல்கள் சொல்கின்றன. திருமூலர், பதஞ்சலியும் தானும் உட்பட மொத்தம் எட்டு பேர் ஓர் ஆசிரியரிடம் யோகத்தைக் கற்றுக்கொண்டதாக திருமந்திரத்தில் எழுதியுள்ளார். தமிழர் ஆன்மிகத்தில் யோகம் இருக்கிறது. பதஞ்சலி தமிழிலிருந்து கற்றுக்கொண்டு போய் சமஸ்கிருதத்தில் எழுதிவைத்திருக்கிறார். கைகால் நோவு ஏற்படும்போது வர்ம சிகிச்சை அளித்தபிறகு, நோயாளிகளே தங்களின் வர்மப் புள்ளிகளைத் தூண்டிவிடும்வகையிலான வீட்டிலேயே செய்யக்கூடிய பயிற்சிதான் இந்த ஆசனங்கள். சித்த மருத்துவர்கள் தங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். சில நோயாளிகள் நீண்ட காலம் வாழவேண்டும் என விரும்பிக் கேட்கும்போது சிகிச்சையாக கற்றுத்தருவோம். ஆனால், காய்ச்சல், தலைவலி போன்றவற்றுக்குக் கற்றுத்தரப்படுவதில்லை. எல்லாரையும் கூட்டத்தைக் கூட்டி சொல்லித்தரப்படவில்லை. உடலுக்கும் மனதுக்கும் தெம்பு வேண்டும் என்றால், பூசை, பரிகாரம் செய்ய வேண்டும் என வேதாந்திகள் சொல்லிக்கொண்டு இருந்தபோது, அதற்கு மாற்றாக சித்தர்கள் யோகாவைக் கண்டுபிடித்தார்கள். நியமம், இயமம், யோகம், பிராணயாமம் செய்தால் அவ்வளவு பயன்களும் கிடைக்கும் என்றார்கள். கிடைத்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த சுவாமி சிவானந்தா என்பவர் அல்லோபதி மருத்துவர். வெளிநாடுகளுக்கெல்லாம் போய்வந்தவர். அவர் யோகத்தை நன்கு அறிந்தவர். நோயாளிகளுக்குக் கற்றுத்தந்து இது நன்றாக இருக்கிறது என ஒரு சிகிச்சையாக மாற்றினார். இன்னொரு பக்கம், இந்த யோகாவை தமிழ்ச் சமூகத்தில் கடவுள் மறுப்பாளர்கள் இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல; தேவை இல்லை என தள்ளிநிற்கிறார்கள்... கடவுள் மறுப்பாளர்கள், பகுத்தறிவாளர்கள், பெரியாரியர்கள், கம்யூனிஸ்ட்டுகள் எல்லாரும் யோகா செய்யலாம். இவர்களுக்கு இதைப் பற்றி போதிய விழிப்புணர்வு இருப்பதாகத் தெரியவில்லை. எதிர்ப்பக்கம் வேதாந்திகள் இதைத் தவறாகச் சித்திரிக்கிறார்கள். உனக்கு நீதான் கடவுள்- அதை உணர்வதற்குத்தான் யோக மார்க்கம் என்கிறார்கள் சித்தர்கள். ஆனால் வேதாந்திகள் பூசை புனஸ்காரம் செய் என்கிறார்கள். அவர்களே யோகாவையும் வலியுறுத்துவதால் பகுத்தறிவாளர்கள் மதம்சார்ந்த ஒன்றாக ஒதுக்கிவைக்கிறார்கள். புற்றுநோய் வந்த ஒருவரிடம் மருத்துவர், இனி ஒரு மாதம்தான், நீ இறந்துவிடுவாய் எனச் சொல்லிவிட்டார். இனி குழந்தையே பிறக்காது என ஒருவரிடம் சொல்லிவிட்டார்... இவர்களுக்கெல்லாம் ஒரு ஆன்மிகப் பிடிப்பு வேண்டும் அல்லவா? இதற்கு யோகா உதவியாக இருக்கிறது. வேதாந்திகள் சொல்வதை வைத்து இவர்கள் புறக்கணிப்பதால், யோகம் கூடாது எனச் சொல்லிவிட முடியாது. உண்மையில் யோகத்தைக் கற்றுக்கொண்டு பரப்பவேண்டியது, கடவுள் மறுப்பாளர்கள், பகுத்தறிவாளர்களின் பணி. அப்போதுதான் அறிவியல்பூர்வமாக பிரச்னைகளுக்குத் தீர்வுகாண்பது நடக்கும். மருத்துவரீதியாக எல்லாவற்றையும் குணப்படுத்த முடியாதபோது, உளவியலாக பணமில்லாத மருத்துவ முறையாக யோகா பயன்படுகிறது! எத்தனையோ பேர் யோகா ஆசிரியர் என விளம்பரம் செய்துகொள்கிறார்கள். சரியான பயிற்சியாளரைக் கண்டறிவதே சவாலாக இருக்கிறது. சரியான முறையில் எப்படி இதைக் கற்றுக்கொள்வது? தமிழ்நாட்டில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரிகளில் யோகாவுக்கென தனித் துறைகள் உள்ளன. அங்கு யோகத்தைக் கற்றுக்கொள்ள முடியும். நோய் வரும்முன் காப்போம் என்பதற்காகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறமுறையில், அந்தக் கல்லூரிகளில் யோகத்தை முறையாகக் கற்றுக்கொடுக்கிறார்கள். சென்னை, நெல்லை பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள், யோகா கல்லூரிகளில் இதற்கான வாய்ப்பு உண்டு. இதைத் தாண்டி நீங்களே யோகத்தை முறையாகக் கற்றுக்கொண்டு பயிற்சியாளர் ஆகவேண்டுமென்றால், விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முறையான படிப்புகள் உள்ளன. அப்படிக் கற்றுக்கொண்டவர்கள் தகுதியான ஆசிரியர்கள்தான். மேலும், வாழ்க வளமுடன், பாபாஜி கிரியா யோகா வழியினர் முதலியவர்கள் முறையான யோகப் பயிற்சியைத் தருகிறார்கள். எச்சரிக்கையாக இருக்கவேண்டியது, பணத்துக்காக இதைச் சொல்லித்தரும் கார்ப்பரேட் சாமியார்களிடம்தான். அவர்கள் வேதாந்தம், சித்தாந்தம் இரண்டையும் சேர்த்து குழப்பியடிக்கிறார்கள்; அது தவறு. இந்த மாதிரியான இடங்களில்தான் யோகாவை வியாபாரம் ஆக்குவதைப் பார்க்கமுடியும். யோகாவை முறையாகக் கற்காமல், வீடியோவைப் பார்த்து சுயவைத்தியம்போல தானாகச் செய்துகொள்கிறார்கள். அதை அப்படியான பயிற்சி தருவோரும் ஊக்குவிக்கிறார்கள். அதனால் சிக்கல்களும் உண்டாகும் என்கிறார்களே... இப்படியான வீடியோக்களை விழிப்புணர்வுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். அவ்வளவுதான். எப்போதும் யோகம் செய்யும்போது உடலில் உள்ள வர்மப்புள்ளிகள் தூண்டப்படும். தவறாகச் செய்தால் நிச்சயமாக சிக்கல் வரும். மூச்சுப் பயிற்சியைச் சரியாகச் செய்யாவிட்டால் ஆஸ்துமா, வயிற்றுப்புண் போன்றவை வருகின்றன. கூடுதலான நிலையில் உள்ள பயிற்சிகளில் சிக்கலாகிவிட்டால் மூலநோய் வரலாம். தவறாக யோகா செய்து மனநோய் வந்தவர்களைக்கூட பார்த்திருக்கிறேன். ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். மூளையின் பல மையங்களைப் பட்டை தீட்டுவதுதான் யோகத்தின் நோக்கம். இதைத் தவறாகச் செய்தால் மூளையில் பாதிப்புகளை உண்டுபண்ணும். அரிதாக மோசமான பாதிப்புகளும்கூட ஏற்படும். எனவே, நேரடிப் பயிற்சிதான் சரியானதாக இருக்கும். கடைசியாக, நான் சொல்லவருவது, தமிழர்களின் கண்டுபிடிப்பாகிய சித்தர்களின் யோக முறையை இன்னும் ஆராய்ச்சிசெய்து பரப்பவேண்டியது தமிழர்களின் கடமை. Andhimazhai’யோகா தமிழருடையது- அடித்துச் சொல்லும் சித்த மருத்துவ வல்ல...நாடு முழுவதும் இன்று யோகா நாள் கடைப்பிடிக்கப்பட்டு, ஏராளமானவர்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். அண்மை சில ஆண்டுகளாக மத்திய அரசும் யோகாவுக்கு அதிகமாக முக்கியத்த
3 months ago
சீனாவில் தலைமை பொறுப்பை தீர்மானிப்பது, அதில் வரும் பிரகணைகளை தீர்ப்பது இப்படித்த்தான். முதல் 3 தடவை க்ஸி யும், அதுகு முதல் தலைமை பொறுப்பை ஏற்றவர்களும் பகிரங்க அரசாங்க / நிர்வாக தளத்தில் இருந்து விலத்துவது அவ்வப்போது இப்படி நடந்தது. க்ஸி ஊழலை இருப்பதில் முதல் குறி, எனவே க்ஸி உடன் மிகவும் நெருக்கமானவர்கள் என்றாலும், ஊழலை ஒழிக்கும் செயற்குழு நடவடிக்கையில் தலையிடுவதில்லை. (சிலவேளைகளில் அது பிரச்சனைகளை உருவாக்கி இருக்கலாம்) க்ஸி ஊழலை கடுமையாக எதிர்ப்பதன் ஒரு காரணம் , CIA ஊழலை பாவித்து க்ஸி இன் உப தலைமை பொறுப்பு இருந்தபோது, தலைமை பொறுப்பு பீடதில் என்ன நடக்கிறது, எந பேசப்படுகிறது, அலசப்படுகிறது என்பதை நேரடியாக, உடனடியாக உளவு அனுப்புவார்கள் (இவர்கள் அந்த இலாகா நிர்வாகத்தில் தொழில்) மூலம் உடனடியாக அறிந்து கொள்கிறது என்பது, ஈரானில் cia இன் உளவாளிகளோடு தொடர்பு கொள்ளும் முறையை இரான், சீனாவின் துறைசார் மமற்றும் தொழிநுட்ப தேவியை கொண்டு உடைத்தாததால் சீனாவுக்கு தெரியா வந்தது. அதை தொடர்ந்து, 2010 -2012 இல் பல cia உளவாளிகள் சீனாவில் தொடர்சியாக பிடிக்கப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர். சீன, ஒரு உதாரணம் காட்டுவதற்கு, அமெரிக்கா தூதரகதுக்கு சென்று விட்டு வெளியே வெளியே வந்த சீனப் பிரஷையானா cia உளவாளி ஒருவர் அந்த இடத்தில குரூரமாக கொல்லப்பட்டார். இது அமெரிக்காவுக்கு, cia க்கு கடும் செய்தியை கொடுப்பது என்ற குறியீடாக செய்யப்பட்டது. மற்றது,சீன மொழி அறிவித்தலை மேட்ற்கு ஊடகங்கள் மொழிபெயர்பதிலும், அவற்றின் சீனா நலிவடைய வேண்டும் என்ற வெளியில் சொல்லப்படாத நோக்கத்தாள் பிறழ்வது. ஆங்கிலத்தில் ஒருவர் சொல்லுவதை அல்லது கருத்தை எப்படி pour cold water on என்பதை பாவித்து நிராகரிப்பது போல, சீன மொழியில் ஏவுககனைகள் வேலை செய்யாது என்பதை சீன நிராரித்தது, என்பதே உண்மையான சீன மொழி செய்தி. ப்ளூம் பெர்க், அந்த செய்தியை, சீன ஏவுகணைகள் குளிர் தண்ணீரால் நிரப்பப்பட்டு இருக்கின்றன என்று மொழிபெயர்த்து கரிபூசிக்கொண்டது. இந்த செய்தி மேட்ற்கு ஊடகங்களில் வந்து, கிட்டத்தட்ட 1 மாதத்தில் சீன பசிபிக் சமுத்திரத்தில் ஏவுகணை குறிபார்த்து ஏவி அடிப்பது 1 மீட்டரறிலும் குறைவான வட்டத்துக்குள் ஏவுகணையாகில் துல்லியமாக இலக்கை அடிக்கும் என்பதை சோதனை செய்து காட்டியது. அனால், இது சிலவேளையில் முன்பே திட்டமிடப்பட்டு இருக்கலாம்.
3 months ago
https://www.instagram.com/reel/DL2-QoGA3cO/?igsh=YWowa2p6dGd1cXN3
3 months ago
சண்டையில்லாத குடும்பம் எது ? ஆனால் குடும்ப கூடு மட்டும் கலையக் கூடாது .பெற்ற பிள்ளைகளுக்காக தியாகத்துடன் வாழ்ந்து மடிந்தவர்களேத் தனை பேர் சண்டை என்பது கருத்து வேறுபாடு சற்று நேர உணர்ச்சி கொந்தளிப்பு .
3 months ago
Global entry யைப் பாவிப்பதால் கடந்த சில வருடங்ளாக சப்பாத்து கழற்றாமல் கணனி ஐபாட் வெளியே எடுக்காமல் போய் வருகிறேன்.
3 months ago
இதைப் பார்த்துவிட்டே சிலர் வாகனங்களை வாங்கலாம். வியாபார தந்திரமோ?
3 months ago
சலுகைகள் கிம்பளம்கள் என்று இருக்கிறபடியால் இதுவே பறவாயில்லை.
3 months ago
இது அவங்கட "பாரம்பரியம், கலாச்சாரம்" எல்லோ? எப்படிக் குற்றமாகும்?😎
3 months ago
இந்த புகையிரத சேவைகள் கணனி மூலமாக பதிவு செய்யலாம் என்று முன்னர் கூறினார்கள். இதுபற்றி அந்த சேவையை பெற்றுக் கொண்டவர்கள் யாராவது இருந்தால் அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாமே!
3 months ago
இருவரும் சேர்ந்து அந்த மக்களை வெளியேற்றப் போகிறார்கள். இவர்களை மீள் குடிறேற்றுவார்கள் என்பது சந்தேகமே.
3 months ago
குசல் அபார சதம், பந்துவீச்சில் அசித்த, துஷ்மன்த அசத்தல்; பங்களாதேஷை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இலங்கை Published By: VISHNU 08 JUL, 2025 | 10:21 PM (பல்லேகலை அரங்கிலிருந்து நெவில் அன்தனி) இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற தீர்மானம் மிக்க கடைசி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 99 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இலங்கை, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் கைப்பற்றியது. துடுப்பாட்டத்தில் தொடர்ச்சியாக திறமையைப் பேணி வரும் குசல் மெண்டிஸ் குவித்த அபார சதம், அணித் தலைவர் சரித் அசலன்க பெற்ற அரைச் சதம் ஆகியவற்றுடன் அவர்கள் 4ஆவது விக்கெட்டில் 117 பந்துகளில் பகிர்ந்த 124 ஓட்டங்கள் என்பன இலங்கையை வெற்றி அடையச் செய்தன. இலங்கையின் வெற்றியில் வேகபந்துவீச்சாளர்கள் அசித்த பெர்னாண்டோ, துஷ்மன்த சமீர, சுழல்பந்துவீச்சாளர் துனித் வெல்லாலகே ஆகியோரும் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தனர். குசல் மெண்டிஸ், சரித் அசலன்க ஆகியோரின் இணைப்பாட்டத்திற்கு இணைப்பாட்டத்திற்கு முன்னர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றிய பங்களாதேஷ், கடைசி 10 ஓவர்களில் 63 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் குசல் மெண்டிஸ் துடுப்பெடுத்தாடிய விதம் அனைவரையும் பெரிதும் கவர்ந்தது. மோசமான பந்துகள் எதையும் விட்டு வைக்காமல் சிதறடித்தவாறு குசல் மெண்டிஸ் ஓட்டங்களைக் குவித்ததுடன் சரித் அசலன்கவுடன் இணைந்து அணியை பலமான நிலையில் இட்டார். கடைசிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 285 ஓட்டங்களைக் குவித்தது. இந்தத் தொடரில் மூன்றாவது தடவையாக இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ஆரம்ப வீரர் நிஷான் மதுஷ்க (1) தொடர்ச்சியான 3ஆவது தடவையாக குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து பெத்தும் நிஸ்ஸன்க (33), குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆரம்ப வீழ்ச்சியை சீர்செய்தனர். இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த முன்னாள் தலைவர் குசல் மெண்டிஸ், தற்போதைய தலைவர் சரித் அசலன்க ஆகிய இருவரும் மிகத் திறமையான வியூகங்களுடன் துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை இலகுவாக குவித்து அணியை பலமான நிலையில் இட்டனர். சரித் அசலன்க 68 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகளுடன் 58 ஓட்டங்களைப் பெற்றார். இது அவர் பெற்ற 16ஆவது அரைச் சதமாகும். இதனிடையே மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி தனது 6அவது சதத்தைக் குவித்த குசல் மெண்டிஸ் 114 பந்துகளை எதிர்கொண்டு 18 பவுண்டறிகளுடன் 124 ஓட்டங்களைப் பெற்றார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜனித் லியனகே 12 ஓட்டங்களுடன் துரதிர்ஷ்டவசமாக ஹிட் விக்கெட் முறையில் ஆட்டம் இழந்தார். துனித் வெல்லாலகே ஓட்ட வேகத்தை அதிகரிக்க முயற்சி செய்து 6 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார். வனிந்து ஹசரங்க 18 ஓட்டங்களுடனும் துஷ்மன்த சமீர 10 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் மெஹிதி ஹசன் மிராஸ் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தஸ்கின் அஹ்மத் 51 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 286 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 39.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 186 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பங்களாதேஷின் முன்வரிசை வீரர்கள் திறமையை வெளிப்படுத்தத் தவறியதால் அதன் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. தன்ஸித் ஹசன் (17), நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ (0), பர்வெஸ் ஹொசெய்ன் ஏமொன் (28), அணித் தலைவர் மெஹ்தி ஹசன் மிராஸ் (28), ஷமிம் ஹொசெய்ன் (12) ஆகிய ஐவரும் துடுப்பாட்டத்தில் பிரசாகிக்கத் தவறினர். (124 - 5 விக்) மறுபக்கத்தில் தனி ஒருவராக திறமையுடன் போராடிய தௌஹித் ஹிரிதோய் 51 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் துஷ்மன்த சமீரவினால் போல்ட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து தன்ஸிம் ஹசன் சக்கிப் 5 ஓட்டங்களுடனும் தஸ்கின் அஹ்மத் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டம் இழந்தனர். பங்களாதேஷின் கடைசி துடுப்பாட்ட வீரரான ஜாக்கர் அலி 27 ஓட்டங்களைப் பெற்றார். பின்வரிசை துடுப்பாட்டத்தில் எருவரும் தாக்குப் பிடிக்கவில்லை. பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் துஷ்மன்த சமீர 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் துனித் வெல்லாலகே 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன், தொடர் நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் குசல் மெண்டிஸ் வென்றெடுத்தார். https://www.virakesari.lk/article/219524
3 months ago
இதைத் தான் "ஒற்றைப் பரிமாணப் பார்வை" என்றேன். அதையே மீண்டும் எழுதியிருக்கிறீர்கள். மீள மீள எழுதுவதால் ஒரு ஆய்வுக்கு பல பரிமாணங்களும் ஆழமும் கிடைத்து விடாது. அரசுகள் எப்படி இருந்தாலும், முன்னாள் சோவியத் குடியரசுகளாக இருந்த நாடுகளின் மக்கள் இப்போது ஐரோப்பிய ஒன்றியம் நோக்கி நகர முற்படுவதன் காரணங்கள் மனித அபிவிருத்தி சார்ந்தது. இதை எவ்வளவு விவசாயிகள் உள்நாட்டில் தொழிலை இழந்தார்கள் என்ற இலக்கத்தை மட்டும் வைத்துக் கொண்டு தீர்ப்பிட முடியாது. சில தீமைகள் இருக்கும், பல நன்மைகள் இருக்கும். நிகர விளைவை அந்த நாடுகளின் நிலைமைகளே தீர்மானிக்கும். கடந்த இரு ஆண்டுகளாக, அமெரிக்காவின் டொலர் கடன் காரணமாக உலகில் செல்வாக்கிழக்கும் என்று கூட நீங்கள் எழுதிய நினைவு. அதுவும் ஒரு பரிமாணப் பார்வை என்று சுட்டிக் காட்டியிருந்தேன். அமெரிக்க டொலரை உலகம் நம்பி, சேமிப்பு நாணயமாக வைத்திருக்க அமெரிக்காவின் பொருளாதாரம்/கடன் நிலை மட்டும் காரணமல்ல என்று சுட்டிக் காட்டியிருந்தேன். இன்னும் உங்களுக்கு ஒட்டு மொத்தமாக ஒரு விடயத்தை அணுகும் கலை வாய்க்கவில்லையென நினைக்கிறேன்.
3 months ago
பட மூலாதாரம்,UGC 9 ஜூலை 2025, 06:25 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் (இந்த சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) மத்திய குஜராத்தையும் சௌராஷ்டிராவையும் இணைக்கும் கம்பீரா பாலத்தின் நடுப்பகுதி இன்று காலை திடீரென உடைந்து விழுந்ததில், அதில் சென்று கொண்டிருந்த சில வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய குஜராத் பகுதியில் உள்ள பிபிசி குஜராத்தி குழுவினர், மஹிசாகர் ஆற்றில் அமைந்துள்ள இந்த பாலம் பெரியளவில் உடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த பாலம் வதோதரா மாவட்ட எல்லைக்குள் அமைந்துள்ளது. இந்த சம்பவத்தையறிந்து, உள்ளூர் அதிகாரிகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இன்று காலை விபத்து நடந்ததுமே உயர்மட்டக் குழுவை சம்பவ இடத்திற்கு முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ளார்." குஜராத் சுகாதார அமைச்சர் ரிஷிகேஷ் படேல், "மஹி ஆற்றில் ஐந்து முதல் ஆறு வாகனங்கள் வரை வீழ்ந்துள்ளன. மத்திய குஜராத் மற்றும் சௌராஷ்டிராவை இணைக்கும் கம்பீரா பாலத்தின் ஒரு ஸ்லாப் (slab) விழுந்ததால் பாலம் உடைந்து வாகனங்கள் ஆற்றில் விழுந்துள்ளன" என கூறியதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. மத்திய குஜராத்தையும் சௌராஷ்டிராவையும் இணைக்கும் இந்த பாலம் முக்கியமான பாலமாக கருதப்படுகிறது. தற்போது, அந்த வழியாக வரும் வாகனங்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விபத்து நிகழ்ந்த பகுதியிலிருந்து சில படங்களும் வெளியாகியுள்ளன. அவற்றில், பாலத்தின் உடைந்த பகுதிக்கு அருகே டிரக் ஒன்று தொங்கிக் கொண்டிருப்பதை காண முடிகிறது. மற்றொருபுறம், ஆற்றில் சில வாகனங்கள் விழுந்துள்ளதையும் பார்க்க முடிகிறது. இந்த விபத்து தொடர்பாக, ஆனந்த் மாவட்ட ஆட்சியர் பிரவீன் கௌத்ரி பிபிசியிடம் கூறுகையில், "விபத்து நடந்த வதோதரா பகுதியில் முழு அளவில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. போக்குவரத்தை மட்டும் அங்கே நிறுத்தியுள்ளோம். வதோதரா மாவட்ட எல்லைக்குள்ளும் இந்த பாலம் வருகிறது. ஆனந்த் மற்றும் சௌராஷ்டிராவிலிருந்து வதோதரா செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன." என தெரிவித்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற உள்ளூர் மக்கள் சொல்வது என்ன? சம்பவ இடத்தில் சிக்கியவர்களை மீட்ட எகல்பரா கிராம தலைவர் தஞ்சிபாய் பதியார் கூறுகையில், "பாலம் இடிந்ததாக கேள்விபட்டதும் அரை மணி நேரத்தில் இங்கு வந்துவிட்டேன். நாங்கள் இங்கு வந்தபோது. நான்கு கார்களும், ஒரு பைக்கும் ஆற்றில் விழுந்திருந்தன." என்றார். பாலம் சிதிலமடைந்த நிலையில் இருப்பதாகவும் அதன் ஆயுட்காலம் முடிந்துவிட்டதாகவும் அவர் கூறுகிறார். முஜ்பூர் கிராமத் தலைவர் அபேசிங் பர்மார் பாலம் மோசமான நிலையில் இருந்ததாகவும் அனைத்து இடங்களிலும் குழிகள் இருந்ததாகவும் தெரிவித்தார். பாலத்தில் கம்பிகள் வெளியே தெரிந்தன. பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரும் பாலம் இடிந்ததால் ஆற்றுக்குள் விழுந்தனர். "நாங்கள் பட்கானா என்கிற பகுதிக்கு சென்று கொண்டிருந்தோம். எங்களுடன் ஆறு பேர் இருந்தனர். அவர்களில் என்னுடைய இளைய மகனும், கணவரும், மருமகனும், மைத்துனரும், மற்றவர்களும் உள்ளே இருந்தனர்." என ஒரு பெண்மணி தெரிவித்தார். பட மூலாதாரம்,@INFO_VADODARA படக்குறிப்பு,மீட்புப் பணிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் ஜக்மர் சிங் பதியா ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசுகையில், "நான் 7.30 மணிக்கு விபத்து பற்றி கேள்விபட்டேன். அதன் பிறகு இங்கு ஓடி வந்தேன். ஒரு ரிக்ஷா, லாரி, ஈகோ கார் மற்றும் சரக்கு ஏற்றும் மேக்ஸ் வாகனம் ஆற்றுக்குள் இருந்தன" என்றார். "மக்கள் மற்றவர்களையும் அழைத்தனர். காவல்துறையினரும் வந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்றாக வந்து சில சடலங்களை மீட்டனர். சில உடல்கள் இன்னும் மீட்கப்பட உள்ளன. தற்போது ஆற்றில் நான்கு அல்லது ஐந்து வாகனங்கள் உள்ளன, ஆனால் எந்த பைக்கும் இல்லை" என்றார். "இந்த விபத்தில் எனது கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேர் சிக்கினர், அதில் ஒரு பெண்மணி மட்டுமே பிழைத்தார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" என மேலும் தெரிவித்தார். மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த ராஜ்தீப் பதியார் பேசுகையில், "நாங்கள் காலை எட்டு மணியில் இருந்து இங்கு உள்ளோம். நாங்கள் கார்களை கயிறு கட்டி வெளியில் இழுத்தோம். உயிருடன் இருந்த 2 பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்." என்றார். முதலில் கிராம மக்கள் வந்ததாகக் கூறும் அவர் அதனைத் தொடர்ந்து மற்றவர்களும் வந்ததாகத் தெரிவித்தார். விபத்து நடந்த பகுதியை நோக்கி அதிக அளவிலான மக்களும் பாதசாரிகளும் வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் அல்லாமல் சில காவலர்களும் வாகனங்களும் பாலத்தின் மீது உள்ளது. ஒரு காணொளி சுகாதாரப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதைப் பார்க்க முடிகிறது. பட மூலாதாரம்,UGC முதலமைச்சர் கூறியது என்ன? விபத்தில் இறந்தவர்களுக்கு குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் இரங்கல் தெரிவித்துள்ளார். "கம்பீரா பாலத்தின் ஒருபகுதி உடைந்து விழுந்தது வேதனை அளிக்கிறது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு உறுதுணையாக நிற்கிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000-ம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும்." என்றார். பாலம் எவ்வளவு பழமையானது? பட மூலாதாரம்,NACHIKET MEHTA மாநில அமைச்சர் ரிஷிகேஷ் படேல் கூறுகையில், "1985-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த பாலம் தொடர்ச்சியாக அவ்வப்போது பழுது பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த விபத்து துரதிருஷ்டவசமானது. ரூ. 212 கோடி செலவீட்டில், புதிய பாலம் கட்டுவதற்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்தார். அதற்காக ஒப்பந்தம் கோருவது, மதிப்பீடு மற்றும் வடிவமைப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன," என்றார். சாலைகள் மற்றும் கட்டுமானங்கள் துறையின் முதன்மை பொறியாளர் சி.பி. படேல் பிபிசி குஜராத்தியிடம் கூறுகையில், "இந்த பாலம் 1985ம் ஆண்டில் திறக்கப்பட்டதாக" தெரிவித்தார். இந்த விபத்து எப்படி நடந்தது என கேட்டபோது, "இதுகுறித்த விசாரணைக்குப் பிறகே காரணம் தெரியும். அனைத்துப் பாலங்களிலும் பருவமழைக்கு முன்னதாகவும் அதற்கு பின்னரும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. ஆவணப் பதிவுகளை ஆராய்ந்த பின்னர், இந்த பாலத்தின் நிலை குறித்த விவரங்கள் தெரியவரும்" என்றார். சாலைகள் மற்றும் கட்டுமானங்கள் துறையின் செயலாளர் பிஆர் படேலியா கூறுகையில், "இந்த பாலத்தின் ஒருபகுதி மஹி ஆற்றில் சேதமடைந்து விழுந்ததாக இன்று காலையில் தெரியவந்தது. இதுகுறித்து ஆராய நிபுணர்கள் குழுவினர் நிகழ்விடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்" என்றார். பாஜகவை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் பட மூலாதாரம்,UGC மராத்தி பேசாத வணிகர்கள் மீது தாக்குதல் - மகாராஷ்டிராவை உலுக்கும் மொழிப் பிரச்னை கடலூர்: மூடிய கேட்டை ரயில் வரும் முன்பே திறக்க முடியுமா? ரயில் எவ்வளவு வேகத்தில் மோதியது? வாய் துர்நாற்றத்தை தவிர்ப்பது எப்படி? தினசரி எத்தனை முறை, எவ்வளவு நேரம் பல் துலக்க வேண்டும்? வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகளை டிரோன் மூலம் காப்பாற்றிய விவசாயி குஜராத் காங்கிரஸ் தலைவர் அமித் சாவ்தா கூறுகையில், "இம்மாதிரியான விபத்துகள் மீண்டும் மீண்டும் நிகழ்வது ஏன்? இந்த பாலம் ஆபத்தான அளவில் இருந்திருந்தால், முன்பே அது சரிசெய்யப்பட்டிருக்க வேண்டும் அல்லது மூடப்பட்டிருக்க வேண்டும். அரசின் அலட்சியத்தாலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது." என்றார். ஆம் ஆத்மி கட்சி தலைவர் இசுதன் காத்வி கூறுகையில், "இந்த பால விபத்து மனித தவறால் நிகழ்ந்துள்ளது. ஒரு டிரக் உட்பட 4 வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்துள்ளன. பொதுமக்கள் வரி செலுத்தும்போது அரசாங்கமும் பாஜகவும் ஒரு வலுவான உள்கட்டமைப்பை தருகின்றனவா என்பதுதான் கேள்வி." என தெரிவித்தார். இதுதொடர்பாக பாஜக மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்திய அவர், "ஒரு பாலத்தைக் கடந்து செல்லும் போது இன்றைக்கு ஒருவர் அச்சத்தில் உள்ளார். அந்த பாலம் சேதமடைந்த நிலையில் இருந்திருந்தால், ஏன் அப்பாலத்தில் போக்குவரத்தை நிறுத்தவில்லை?" என அவர் கேள்வியெழுப்பினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz6gy10vvwyo
Checked
Tue, 10/14/2025 - 00:12
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed