புதிய பதிவுகள்2

பெண்களிற்கு எதிரான ஒடுக்குமுறை - தலிபான் தலைவர்களிற்கு சர்வதேச நீதிமன்றம் பிடியாணை

3 months ago
09 JUL, 2025 | 10:33 AM பெண்களை ஒடுக்குமுறைக்கு உட்படுத்தியமைக்காக தலிபான் தலைவர்களிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. தலிபானின் இரண்டு முக்கிய தலைவர்களிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. 2021ம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து தலிபானின் உயர் தலைவர் ஹைபதுல்லா அகுந்த்சதா மற்றும் தலைமை நீதிபதி அப்துல் ஹக்கீம் ஹக்கானி ஆகியோர் பெண்கள் மற்றும் சிறுமிகளை நடத்திய விதத்தின் மூலம் மனித குலத்திற்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டனர் என நம்புவதற்கான நியாயமான காரணங்கள் உள்ளன சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் அவர்கள் பெண்கள் சிறுமிகளிற்கு எதிராக பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் 12 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் கல்வி கற்பதற்கு தடைவிதித்துள்ளனர், பெண்கள் பல தொழில்களில் ஈடுபடுவதற்கு தடைவிதித்துள்ளனர் என ஐசிசி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/219541

அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் !

3 months ago
ஏனைய ட்ரம்ப் பக்தர்கள் போல சோசியல் மீடியா துணுக்குகளில் இருந்து தான் நீங்கள் செய்திகள் அறிந்து கொள்கிறீர்கள் போல! கீழே கார்டியன் இதழில் மிஷேல் ஒபாமா சொன்னதன் முழுவடிவம் இருக்கிறது. மணவாழ்க்கை பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்று புரிகிறதா என்று பாருங்கள். https://www.theguardian.com/us-news/2022/dec/29/michelle-obama-couldnt-stand-husband-barack-10-years

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ; பாலி தீவுக்கான விமான சேவைகள் இரத்து 

3 months ago
இந்தோனேசியாவில் எரிமலை குமுறல்; சாம்பல் சூழ்ந்த மேகம் Published By: DIGITAL DESK 3 08 JUL, 2025 | 03:24 PM கிழக்கு இந்தோனேசியாவிலுள்ள லெவோதோபி லாகி லாகி எரிமலை திங்களன்று உக்கிரமாக குமுறி 18 கிலோ மீற்றர் உயரத்துக்கு சாம்பலையும் புகையையும் வெளித்தள்ளியுள்ளது. இதனையடுத்த இந்தோனேசிய பாலித் தீவுக்கான மற்றும் அந்தத் தீவிலிருந்தான விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. சுற்றுலா தீவான புளோரஸிலேயே எரிமலையே குமுறியுள்ளது. பாலி சர்வதேச விமான நிலையத்துக்கான 24 விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இந்த பிராந்தியத்தினூடாக மேற்கொள்ளப்பட்டு வந்த புளோரஸ், அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், தென்கொரியாவுக்கான விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்டும் தாமதப்படுத்தப்பட்டும் உள்ளன. இருப்பினும் சில செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கின. நவம்பர் மாதத்திற்குப் பின்னர் திங்கட்கிழமை காலை அந்நாட்டு நேரப்படி 11:05 மணிக்கு எழுந்த வெப்ப மேகங்கள் மிக உயர்ந்ததாக இருந்தது என புவியியல் நிறுவனத் தலைவர் முகமது வாஃபித் தெரிவித்துள்ளார். கார்கள் மற்றும் பஸ்களில் குடியிருப்பாளர்கள் ஏறி தப்பிச் செல்லும்போது எரிமலையின் சிகரங்களிலிருந்து சிவப்பு நிற எரிமலைக் குழம்பு வெளியேறுவதை இரவு முழுவதும் பகிரப்பட்ட காணொளிகள் காட்டுகின்றன. இதுவரை 4,000க்கும் மேற்பட்டோர் அந்தப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள குடியிருப்பாளர்களுக்கு தண்ணீர், உணவு மற்றும் முகக்கவசங்கள் தேவைப்படுவதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தோனேசியா பசிபிக் "நெருப்பு வளையத்தில்" அமைந்துள்ளது, அங்கு டெக்டோனிக் தகடுகள் மோதுகின்றன, இதனால் அடிக்கடி எரிமலை மற்றும் பூகம்பங்கள் ஏற்படுகின்றன. லெவோடோபி லக்கி-லக்கி இந்த ஆண்டு பல முறை குமுறியுள்ளது. ஆனால் இதுவரை எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை. கடந்த நவம்பரில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதோடு, ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. https://www.virakesari.lk/article/219491

இறந்து போன குட்டியை 3 நாள் பிரியாத யானை - விலங்குகளும் துக்கம் அனுசரிக்குமா?

3 months ago
பட மூலாதாரம்,BBC NEWS SINHALA படக்குறிப்பு, தாய் யானை இறந்த தனது குட்டியை மூன்று நாட்களாக இழுத்துச் சென்றது. கட்டுரை தகவல் சுனேத் பெரேரா பிபிசி உலக சேவை 3 மணி நேரங்களுக்கு முன்னர் காடுகளில் கரடிகள் அல்லது பெரிய பூனைகள் போன்ற சில பாலூட்டிகள், தங்களது குட்டிகளை வாயால் மெதுவாக தூக்கி, பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் எடுத்துச் செல்வதைப் பொதுவாகவே நாம் பார்த்திருக்கலாம். ஆனால் ஒரு யானை இதைச் செய்வது, அதிலும் குறிப்பாக, அது சுமந்து செல்லும் குட்டி ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில் இவ்வாறு செய்வது மிகவும் அபூர்வமானதாகக் கருதப்படுகிறது. இலங்கையின் கவுடுல்லா தேசிய பூங்காவில் ஜூன் மாத இறுதியில், தாய் யானை ஒன்று, உயிரற்ற தனது குட்டியின் உடலை பல நாட்களாக தன்னுடன் எடுத்துச் செல்லும் மிகவும் வேதனையூட்டும் காட்சி ஒன்றை ஒரு உள்ளூர் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் பதிவு செய்திருந்தார். "அந்த யானை அக்குட்டியை கைவிட தயாராக இல்லை. அதனைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது," என்று கூறுகிறார் புகைப்படக் கலைஞர் சஞ்சய மதுஷன். தன் வயிற்றில் ஏறக்குறைய இரண்டு வருடங்கள் சுமந்த, தற்போது இறந்துவிட்ட குட்டியை, அந்த தாய் யானை பிடித்துக் கொண்டிருந்தது கொஞ்ச நேரமல்ல. "தாய் யானை அதை மூன்று நாட்கள் கைவிடாமல் பிடித்துக் கொண்டிருந்தது" என்று பிபிசியிடம் கூறுகிறார் மதுஷன் . அப்போது பூங்காவில் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற தாய் யானையை அவர் கண்காணித்தார். "முந்தைய நாள் பிறந்தவுடனே அந்தக் குட்டி இறந்துவிட்டதாக பூங்கா அதிகாரிகள் என்னிடம் சொன்னார்கள்," என்றும் அவர் கூறினார். மரணம் நிகழ்ந்தால் விலங்குகளுக்கு அது புரியுமா? 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில், இலங்கையில் சுமார் 7,000 யானைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, நாட்டின் சிறிய பரப்பளவைக் கருத்தில் கொண்டால் உலகிலேயே அதிக யானைகள் பரவல் உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை இருக்கிறது. பட மூலாதாரம்,SANJAYA MADUSHAN/CEYLON WILD TRAILS படக்குறிப்பு, யானை துக்கம் அனுசரிக்குமா என சமூக வலைதளங்களில் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட Elephas maximus maximus என்ற யானை இனம், ஆசிய யானைகளில் மிகப்பெரிதாகவும், மிகக் கருமையானதாகவும் அறியப்படுகிறது. இந்த யானைகள், கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் இடமாக கவுடுல்லா தேசிய பூங்கா உள்ளது. "இங்கு 300க்கும் மேற்பட்ட யானைகள் கூடுவதை நான் பார்த்திருக்கிறேன். அதனால், யானைகள் கூட்டமாக கூடுவதை அடிக்கடி பார்த்திருந்தாலும், இதுபோன்ற உணர்ச்சிகரமான காட்சியை நான் கண்டது இதுவே முதல் முறை," என்கிறார் மதுஷன் "ஆனால் அந்த யானை ஏன் இப்படி நடந்துகொள்கிறது? அது துக்கத்தை வெளிப்படுத்துகிறதா? அல்லது இது ஒரு தற்செயலான நிகழ்வா?" என்று சமூக ஊடகங்களில் வியப்பை வெளிப்படுத்தும் பலரைப் போலவே அவரும் ஆச்சரியப்படுகிறார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. பிரிட்டனில் உள்ள போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தில் விலங்கு நடத்தை மற்றும் நலன் தொடர்பான இணைப் பேராசிரியரான முனைவர் லீன் ப்ரூப்ஸ் பேசுகையில், "இந்த கேள்விக்கு பதிலளிப்பது மிகவும் கடினம், இருப்பினும் இதேபோன்ற காட்சிகள் உலகம் முழுவதும் முன்னர் பதிவாகியுள்ளன" என்று கூறுகிறார். "மற்ற விலங்குகளின் மனதில் என்ன ஓடுகிறது என்பதை உணர்வது கடினம். அவை மரணத்தை எவ்வளவு தூரம் புரிந்துகொள்கின்றன என்பதும், மரணம் எல்லோருக்கும் வரும் ஒன்று, அது திரும்ப முடியாத ஒன்று போன்ற மரணத்தின் முக்கிய அம்சங்களையும் புரிந்துகொள்கின்றனவா என்பதைத் தெளிவாகச் சொல்ல முடியாது," என்று முனைவர் லீன் ப்ரூப்ஸ் பிபிசியிடம் கூறினார். பட மூலாதாரம்,SANJAYA MADUSHAN/CEYLON WILD TRAILS படக்குறிப்பு, யானைகளின் கர்ப்ப காலம் மிக நீண்டது. இது 680 நாட்கள் நீடிக்கிறது. இலங்கையில் உள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ துறையின் யானை நிபுணரான பேராசிரியர் அசோக தங்கொல்ல, இலங்கையில் ஒரு யானை இவ்வாறு நடந்துகொள்வதைப் பார்ப்பது இதுவே முறையாக இருந்தாலும், அது ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை என்கிறார். "ஏனென்றால் அவற்றுக்கும் உணர்வுகள் உள்ளன. அந்த உணர்வுகளை யானைகள் பகிர்ந்து கொள்கின்றன. தாய்-குட்டி பிணைப்பு மிகவும் வலுவானது," என்று அவர் பிபிசியிடம் கூறினார். "நான் இதை விலங்கினங்களில், குறிப்பாக குரங்குகளில் அடிக்கடி பார்த்திருக்கிறேன். ஆனால் யானைகள் இதைச் செய்வது கொஞ்சம் விசித்திரமானது," என்றும் அவர் விளக்கினார். அந்த யானை குழப்பமடைந்திருக்கலாம் என்றும் முனைவர் ப்ரூப்ஸ் கூறுகிறார். "ஆனால் யானைகள் ஒரு உயிருள்ள குட்டியை சாதாரணமாக இழுத்துச் செல்லாது. அதனால், இது ஒருவித உணர்ச்சிப்பூர்வமான எதிர்வினை தான் என நான் நினைக்கிறேன்" என்று அவர் கூறுகிறார். "விலங்குகள் இறப்புக்கு எப்படி எதிர்வினையாற்றுகின்றன என்பதைப் பற்றி, இப்போது கம்பேரெட்டிவ் தானடோலஜி(Comparative Thanatology) எனப்படும் ஒரு புதிய அறிவியல் துறையில் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த துறையில் விஞ்ஞானிகள் இந்த நடத்தைகளை நெருக்கமாகக் கவனித்து ஆராய்கிறார்கள்" என்று அவர் விளக்கினார். "விலங்குகள் இறப்பைப் பற்றி என்ன தெரிந்துகொள்கின்றன என்பதை உணர்வதற்காக, இதுபோன்ற அறிக்கைகள் மற்றும் நிகழ்வுகளை ஒன்று சேர்த்து, ஒரு முறையான வழியில் ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் முயற்சி செய்கிறார்கள்," என்று அவர் குறிப்பிட்டார். மற்ற விலங்குகளிலும் இதேபோன்ற நடத்தை உள்ளதா ? யானைகள் மட்டும் இத்தகைய நடத்தையை வெளிப்படுத்துவதில்லை. விலங்குகள், திமிங்கலங்கள் மற்றும் டால்பின்கள் இறந்த அவற்றின் சக விலங்குகளின் அருகே தங்கியிருப்பது பல சந்தர்ப்பங்களில் கவனிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,KEN BALCOMB, CENTER FOR WHALE RESEARCH படக்குறிப்பு, திமிங்கலம் J35 (தஹ்லெக்வா என்று அறியப்படுகிறது) 17 நாட்களுக்கு தனது இறந்த குட்டியின் உடலைத் தள்ளிக்கொண்டிருப்பது காணப்பட்டது. தஹ்லெக்வா (Tahlequah) என்ற திமிங்கலம், 2018-ஆம் ஆண்டு, இறந்துவிட்ட தனது குட்டியின் உடலை 17 நாட்கள் தொடர்ந்து தள்ளிச் சென்றபோது, உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், அதே திமிங்கலம் மற்றொரு குட்டியை இழந்த பிறகு மீண்டும் துக்கத்தில் இருப்பதாக அமெரிக்காவில் உள்ள திமிங்கல ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. "அந்தத் திமிங்கலம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டது. ஏனென்றால், அது இறந்த தன் குட்டியை தனது மூக்குப் பகுதியில் (ரோஸ்ட்ரம்) சமநிலையுடன் தக்கவைக்க வேண்டியிருந்தது. அது மிகவும் கடினமானது. ஆனால், அது தனது குட்டியை இரண்டு வாரங்கள் பிடித்துக்கொண்டிருந்தது," என்கிறார் முனைவர் ப்ரூப்ஸ். இதற்கிடையில், இந்தியாவில் 2024 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், யானைக் கூட்டங்கள் இறந்த குட்டிகளை மண்ணால் மூடுவதைக் காணும் நிகழ்வுகள் ஆவணப்படுத்தப்பட்டன. சிலர் இதை 'புதைப்பது போன்ற செயல்பாடு' என விவரிக்கின்றனர். "யானைகள் உருவாக்கும் புதைகுழிகள் பற்றிய இந்த தகவல்களை விளக்குவது மிகவும் சிக்கலான ஒன்று என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக, எறும்புகள் மற்றும் எலிகள் போன்ற பிற இனங்கள் உள்ளன. அவையும் இறந்தவற்றை புதைக்கும்," என்று முனைவர் ப்ரூப்ஸ் கூறுகிறார். இலங்கையில் சமீப காலமாக, காடுகளை அழிப்பது மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் காரணமாக மனித - யானை மோதல் அதிகரித்து வருகிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான யானைகள் கொல்லப்படுகின்றன, மற்றும் பல இளம் குட்டிகள் தாய் யானைகளை இழந்துவிடுகின்றன. யானைகள் தங்கள் அறிவை ஒரு தாய்வழி சமூகத்தின் ஒரு பகுதியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்து தலைமுறைக்கு கடத்துகின்றன. இளைய யானைகள் தங்கள் மூத்த யானைகளிடமிருந்து கற்றுக்கொள்கின்றன. "ஒரு குழுவில் முதிய யானைகள் கொல்லப்பட்டால், மனிதர்களைப் போலவே, யானைகளுக்கும் கற்றுக்கொடுக்க யாரும் இருக்க மாட்டார்கள். அதனால், அவை புரிந்துகொள்ளவோ, அல்லது சரியான முறையில் நடந்து கொள்ளவோ முடியாது. அதனால், குடும்பங்கள் உடைந்துவிட்டால், அது மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தும்," என்கிறார் முனைவர் ப்ரூப்ஸ். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c939nwgq93eo

இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு

3 months ago
காசாவில் வீதியோர குண்டுவெடித்து ஐந்து இஸ்ரேலிய படையினர் பலி 08 JUL, 2025 | 03:16 PM காசாவில் வீதியோர குண்டுவெடிப்பில் ஐந்து இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர். காசாவின் வடபகுதியில் பெய்ட்ஹனோன் பகுதியில் படையினர் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை இரண்டு குண்டுகள் வெடிக்கவைக்கப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்போது ஐந்து படையினர் கொல்லப்பட்டதுடன் 14 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை இஸ்ரேலிய படையினர் தாக்கப்பட்டதால் சமாதான பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்தவேண்டும் என இஸ்ரேலின் வலதுசாரி அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாங்கள் எங்கள் படையினரை கொலை செய்பவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக்கூடாது, அவர்களை துண்டுதுண்டாக்கவேண்டும் அல்லது பட்டினி போடவேண்டும் அவர்களிற்கு ஒக்சிசன் வழங்கும் மனிதாபிமான உதவிகளை வழங்க கூடாது என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/219489

சிரிக்கலாம் வாங்க

3 months ago
எனக்கும் இந்த அனுபவம் உண்டு! 5ஆம் ஆண்டிற்குள் கற்கும்போது பாடசாலையில் எல்லோருக்கும் தடுப்பூசி போட அழைத்துச் செல்ல நான் மெதுவாக சிறுநீர் கழிக்க செல்வதுபோல போய் மறைந்திருக்க நண்பர்கள் பிடித்துக்கொண்டு போய் ஊசி போடவைத்தார்கள்.

செம்மணி மனித புதைகுழி குறித்து பிரிட்டன் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு - பிரிட்டிஸ் வெளிவிவகார அமைச்சர்

3 months ago
Published By: RAJEEBAN 09 JUL, 2025 | 11:35 AM செம்மணி மனித புதைகுழி குறித்து பிரிட்டன் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமி தெரிவித்துள்ளார். வெளிவிவகார குழுவின் கூட்டத்தில் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்;டுள்ளதாவது, செம்மணியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகள் குறித்து நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். ஆம் நாங்கள் இலங்கை அரசாங்கத்துடன் இந்த விடயம் குறித்து நேரடிப்பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம்.கடந்த மாதம் குறித்து பேசினோம். இலங்கையின் பல பகுதிகளில் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களுடன் நாங்கள் நெருக்கமான தொடர்பினை பேணி வருகின்றோம்.அவர்களின் குரல்கள் செவிமடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக அரசசார்பற்ற அமைப்புகள் உட்பட ஏனைய தரப்புகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம். எங்களால் தொழில்நுட்ப உதவிகளை வழங்க முடியுமா என்பது குறித்து ஆராய்வதற்கு நான் தயார். மனித புதைகுழி விடயத்தில் திறன் தொடர்பான பிரச்சினைகள் உள்ளமை குறித்த புரிந்துணர்வு காணப்படுகின்றது. இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை இதன் காரணமாக இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான நியாயாதிக்கம் சர்வதேச நீதிமன்றத்திற்கு இல்லை. https://www.virakesari.lk/article/219554

அறுகம்பையில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

3 months ago
அறுகம்பையில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு! இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அறுகம்பை பகுதிக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி இலங்கை அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக ஊறணி பகுதியில் இருந்து பொத்துவில் நகரப்பகுதி வரை இராணுவம், பொலிஸார் மற்றும் கடற்படையினரின் தற்காலிக வீதி தடையுடன் கூடிய வீதி சோதனை சாவடி அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது. மேலும் முக்கிய சந்திகள், வர்த்தக நிலையங்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் புலனாய்வாளர்கள் என மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் மோப்பநாய்களின் உதவியுடன் சோதனை செய்யப்பட்டு வருவதோடு, சில இடங்களில் ட்ரோனின் உதவியுடன் வான் பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடலலை விளையாட்டில் ஈடுபடுபவர்களையும் பாதுகாப்பதற்கென அரச பாதுகாப்புப் படையினர்கள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கடும் பாதுகாப்பு கெடுபிடிக்கு மத்தியில் பொதுமக்கள் தமது அன்றாட நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக இஸ்ரேல் நாட்டில் இருந்து பொத்துவில் பகுதிக்கு அதிகளவான உல்லாசப்பிரயாணிகள் வருகை தருவதால் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முப்படையினர் மற்றும் பொலிஸார் இவ்வாறு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438557

வடக்கில் பொலிஸாரின் டிப்பர்களில் மணல் கடத்தல்?

3 months ago
வடக்கில் பொலிஸாரின் டிப்பர்களில் மணல் கடத்தல்? வட மாகாணத்தில் இடம்பெற்று வரும் சில சட்ட விரோத மணல் கடத்தல் சம்பவங்களில் பொலிஸாருக்குச் சொந்தமான டிப்பர் வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வடக்கு மாகாணத்தில் மணல் விநியோகத்தை சீராக்குவது, சுண்ணாம்புக்கல் அகழ்வு மற்றும் விநியோகத்தை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது. ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் ம.கபிலன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – பொறியியல், வடக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களப் பணிப்பாளர், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் மாவட்டச் செயலாளர்கள், கிளிநொச்சி மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் பிராந்திய பொறியியலாளர்இ வடக்கு மாகாண கட்டடங்கள் திணைக்களப் பணிப்பாளர், ஒப்பந்தகாரர்கள் சங்க நிர்வாகத்தினர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். https://athavannews.com/2025/1438573

பாரிய அளவிலான ஆயுதங்கள், போதைப்பொருட்கள் மீட்பு!

3 months ago
பாரிய அளவிலான ஆயுதங்கள், போதைப்பொருட்கள் மீட்பு! பாரிய அளவிலான ஆயுதங்கள், ஒரு தொகை போதைப்பொருட்கள் என்பவற்றை களனி குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இரண்டு SMG வகை துப்பாக்கிகள், பத்து 9 மில்லி மீட்டர் தோட்டாக்கள் கொண்ட இரு மெகசின்கள், T56 துப்பாக்கி வகை ஆயுத பாகங்கள், 9.24 கிலோ ஹெராயின் மற்றும் 67.57 கிலோ கேரள கஞ்சா உள்ளிட்டவை மீட்கப்பட்ட பொருட்களாகும். கடந்த ஜூலை 03 ஆம் திகதி ராகமையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ‘ஆர்மி உபுல்’ என்ற நபர் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ராகம, படுவத்த மயானத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளை பொலிஸார் வழிமறித்து சோதனையிட்டனர். அப்போது, அவரது பையில் 09 கிலோ கிராமுக்கு அதிகமான ஹெராயின் இருந்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர். விசாரணையில் சந்தேக நபர், ராகமை துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை தான் வழங்கியதாகவும், அதை தனது தற்காலிக இல்லத்தில் மற்றொரு ஆயுதத்துடன் மறைத்து வைத்திருந்ததாகவும் கூறினார். இதையடுத்து குறித்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் இரண்டு துப்பாக்கிகளும் மீட்கப்பட்டன. மேலும் விசாரணையில் 67 கிலோவுக்கு மேல் எடையுள்ள கஞ்சா மற்றும் ஆயுதங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பிற பொருட்கள் கைப்பற்றப்பட்டன. 26 வயதான சந்தேக நபர் பொரளை, பேஸ்லைன் வீதியைச் சேர்ந்தவர் என்பதுடன், தற்போது மேலதிக விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார். https://athavannews.com/2025/1438594

தேசிய ரீதியான முஸ்லிம் மனித உரிமை அமைப்பின் அவசியம் உணரப்படுகிறது

3 months ago
அண்மைக்காலமாக இலங்கையில் இஸ்ரேலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்வது முஸ்லிம் சமூகத்திடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் தோற்றுவித்துள்ளது. கொழும்பில் இஸ்ரேலிய சபாத் இல்லம் அருகே சந்தேகத்திற்கிடமாக நடமாடியதாகவும் தனது கையடக்கத் தொலைபேசியில் இஸ்ரேலுக்கு எதிரான ஸ்டிக்கரை வைத்திருந்ததாகக் கூறியும் மாவனெல்லையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் எட்டு மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு இன்னும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள செய்தி வெளியாகியுள்ளமை முஸ்லிம் சமூகத்தை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதற்கு முன்னராக, இஸ்ரேலுக்கு எதிரான ஸ்டிக்கரை ஒட்டிய குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞரான ருஷ்தி, பல்வேறு அழுத்தங்களுக்குப் பின்னரே நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த கைதுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் கடும் ஆட்சேபனையை வெளியிட்டிருந்தது. முஸ்லிம்களும் மனித உரிமை ஆர்வலர்களும் இந்தக் கைது தொடர்பில் ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு கடுமையான அழுத்தங்களை வழங்கியிருந்தனர். உள்ளூராட்சித் தேர்தல் அண்மித்த நிலையில், முஸ்லிம் சமூகத்தின் எதிர்ப்பை சம்பாதிக்கக் கூடாது என்பதற்காக ருஷ்தி அவசர அவசரமாக விடுவிக்கப்பட்டார். எனினும் அதற்கு பல மாதங்களுக்கு முன்னராகவே இதே போன்றதொரு குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு மாவனெல்லை இளைஞர் சுஹைல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் கடந்த வாரம் மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் தனது முகநூலில் பகிர்ந்த தகவல் மூலமாகவே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இவ்வாறான கைதுகள் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அச்சத்தையும், பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தியுள்ளன. அரசாங்கம் இந்த நாட்டில் உள்ள சட்டவிரோத இஸ்ரேலிய மத தலங்களைப் பாதுகாப்பதற்கு வழங்கும் முக்கியத்துவத்தை, தனது சொந்தப் பிரஜைகளின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதில் காண்பிக்கவில்லை என்ற விமர்சனத்தை இந்த சம்பவங்கள் உண்மைப்படுத்துவதாக உள்ளன. ஈஸ்டர் தாக்குதலின் போது நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டபோது பல வழக்கறிஞர்கள் முன்வந்து அவர்களுக்கு உதவினர். குறித்த தாக்குதலுடன் சம்பந்தப்படாதவர்களை முடியுமான அளவு விரைவாக விடுவிப்பதற்கு கூட்டாக இணைந்து செயற்பட்டனர். ஆனால் தற்போது இவ்வாறான கைதுகளின்போது பாதிக்கப்படும் அப்பாவி இளைஞர்களுக்கு உதவ யாரும் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுஹைல் விவகாரத்தில் அவரது குடும்பத்தினர் யாரைச் சந்திப்பது? சட்ட உதவிகளை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது தெரியாமலேயே கடந்த 8 மாதங்களைக் கடத்தியுள்ளனர். இந்நிலையில்தான் இலங்கையில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் மனித உரிமைகள் சார்ந்த பிரச்சினைகளை உடனுக்குடன் ஆவணப்படுத்தி, அது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான விசேட பொறிமுறை ஒன்று அவசியமாகிறது. இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் கவுன்சில், சூறா சபை உள்ளிட்ட சிவில் அமைப்புகள் கூட்டாக இணைந்து செயற்படுவது பொருத்தமானதாகும். முஸ்லிம் சட்டத்தரணிகளுடன் இது தொடர்பில் கலந்துரையாடி தேசிய முஸ்லிம் மனித உரிமை நிறுவனம் ஒன்றை ஸ்தாபிப்பது காலத்தின் தேவையாகும். முஸ்லிம் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் முஸ்லிம் சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து இந்த விடயத்தில் விரைந்து செயற்பட்டு சமூகத்தைப் பாதுகாக்கவும் பாதிக்கப்படும் அப்பாவிகளுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்த விரும்புகிறோம்.- Vidivelli https://www.vidivelli.lk/article/19519

செம்மணி : அதிர்ச்சி தரும் அத்தாட்சிகள்!

3 months ago
அல்தாப் அஹமட் யாழ்ப்­பாணம், செம்­மணி மனிதப் புதை­கு­ழியைத் தோண்டத் தோண்ட அதிர்ச்­சி­யூட்டும் அத்­தாட்­சி­களே வந்­த­வண்­ண­முள்­ளன. கடந்த சில நாட்­க­ளாக சிறு­வர்­களின் எலும்புக் கூடு­களும் அவர்கள் பயன்­ப­டுத்­திய பொருட்­களின் எச்­சங்­களும் மீட்­கப்­பட்­டமை இந்த மனிதப் புதை­கு­ழி­களின் பின்னால் மறைந்­தி­ருக்கும் ஈவி­ரக்­க­மற்ற அரக்­கர்­களைக் கண்­ட­றிந்து தண்­டிக்க வேண்­டி­யதன் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­து­வ­தா­க­வுள்­ளன. கடந்த வாரம் இங்கு மேற்­கொள்­ளப்­பட்ட அகழ்­வா­ராய்ச்­சியின் போது, ஒரு குழந்­தையின் மனித எச்­சங்­களும், அத்­துடன் ஆங்­கில எழுத்­துக்­க­ளுடன் கூடிய நீல நிறப் பை, ஒரு சிறிய பொம்மை, விளை­யாட்டுப் பொருட்கள் மற்றும் ஒரு சப்­பாத்து போன்ற பொருட்­களும் மீட்­கப்­பட்­டுள்­ளன. யாழ்ப்­பாணம், செம்­மணி, சித்­துப்­பாத்தி மனிதப் புதை­கு­ழியில் இருந்து நேற்று வரை தொல்­லியல் ஆய்­வா­ளர்கள் 38 மண்டை ஓடு­களை அடை­யாளம் கண்­டுள்­ளனர். இவற்றுள் குறைந்­தது 10 மண்டை ஓடுகள் குழந்­தைகள் அல்­லது சிறு­வர்­க­ளுக்கு உரி­யவை என சந்­தே­கிக்­கப்­ப­டு­கி­றது. நீதி­மன்ற உத்­த­ரவின் பேரில் இந்த இடம் குற்­றச்­சம்­பவம் நடந்த பகு­தி­யாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் குடும்­பங்கள் சார்பில் அகழ்­வா­ராய்ச்சி பணி­களை மேற்­பார்­வை­யிடும் சட்­டத்­த­ரணி ரணிதா ஞான­ராஜா, “செம்­மணி மனிதப் புதை­குழி அகழ்வில் நேற்று முன்­தி­னத்­துடன் ஐந்­தரை நாட்கள் முடி­வ­டைந்­துள்­ளன. ஏற்­க­னவே அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட பாட­சாலை புத்­த­கப்­பை­யோடு இருந்த மனித எலும்புக் கூடு முழு­மை­யாக மீட்­கப்­பட்­டுள்­ளது. அகழ்ந்­தெ­டுக்கும் பொழுது சிறு குழந்­தையின் எலும்புக் கூட்­டுடன் சப்­பாத்து, குழந்தை விளை­யாடும் சிறிய பொம்மை ஒன்று அகழ்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. இதுவரையான அகழ்வுப் பணியில் ஐந்து வரை­யான மனித எலும்­புக்­கூ­டுகள் ஒன்­றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து காணப்­ப­டு­கி­றது. இதனால் அதில் உள்ள எலும்­புக்­கூ­டு­களின் எண்­ணிக்­கையை சொல்ல முடி­யாத குழப்­ப­மான நிலை ஏற்­பட்­டுள்­ளது” என்றார். தட­ய­வியல் தொல்­லியல் ஆய்­வாளர் பேரா­சி­ரியர் ராஜ் சோம­தேவ அடை­யாளம் காட்­டிய சாத்­தி­ய­மான புதை­கு­ழிகள் உள்ள இடங்­களில் கடந்த திங்­கட்­கி­ழமை சுத்தம் செய்யும் பணிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழக தொல்­லியல் மாண­வர்­களின் உத­வி­யு­டனும், நல்லூர் பிர­தேச சபை ஊழி­யர்­களின் உத­வி­யு­டனும் சுத்தம் செய்யும் பணிகள் நடை­பெற்­றன. பேரா­சி­ரியர் சோம­தே­வவும் யாழ்ப்­பாண சட்ட மருத்­துவ அதி­காரி டாக்டர் செல்­லையா பிர­ண­வனும் மே 15 அன்று செம்­மணி சித்­துப்­பாத்தி மயா­னத்தில் அகழ்­வா­ராய்ச்­சியைத் தொடங்­கினர். நல்லூர் பிர­தேச சபை ஊழி­யர்கள் செம்­மணி பகு­தியில் கட்­டிடம் ஒன்றை நிர்­மா­ணிப்­ப­தற்­காக நிலத்தை சுத்தம் செய்யும் போது கடந்த பெப்­ர­வரி 20 அன்று மனித எலும்புக் கூடு­களை கண்­டு­பி­டித்­ததை அடுத்து, இந்த மனிதப் புதை­கு­ழிகள் மீண்டும் வெளிச்­சத்­துக்கு வந்­தன. செம்­ம­ணியின் பின்­னணி 1998 ஆம் ஆண்டு இலங்­கையில் 18 வய­தான தமிழ் பாட­சாலை மாணவி கிருஷாந்தி குமா­ர­சா­மியின் பாலியல் வன்­பு­ணர்வு மற்றும் கொலை நாட்­டையே உலுக்­கி­யது. பரீட்சை முடிந்து வீடு திரும்பிக் கொண்­டி­ருந்த அவர், கொண்­டா­விலில் உள்ள இரா­ணுவ சோதனைச் சாவ­டியில் தடுத்து நிறுத்­தப்­பட்டார். அதன்­பின்னர் அவர் வீடு திரும்­ப­வில்லை. பின்னர், அவ­ரது சிதைந்த சடலம், அவரைத் தேடிச் சென்ற அவ­ரது தாயார், சகோ­தரன் மற்றும் அய­லவர் ஆகி­யோரின் சட­லங்­க­ளுடன் சேர்த்து கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. இந்த வழக்கின் விசா­ர­ணையில் பல இரா­ணுவ வீரர்கள் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டனர். அவர்­களில் ஒரு­வ­ரான சோம­ரத்ன ராஜ­பக்ச, 1995-1996 இல் இரா­ணுவம் யாழ்ப்­பா­ணத்தை மீண்டும் கைப்­பற்­றி­யதைத் தொடர்ந்து காணாமல் போன நூற்­றுக்­க­ணக்­கான தமிழ் பொது­மக்கள் செம்­மணி கிரா­மத்­திற்கு அருகில் கொலை செய்­யப்­பட்டு புதைக்­கப்­பட்­ட­தாக ஒரு அதிர்ச்­சி­யூட்டும் தக­வலை தெரி­வித்தார். இப் பகு­தியில் 300 முதல் 400 சட­லங்கள் புதைக்­கப்­பட்ட இடத்தை தனக்குத் தெரியும் என்றும் அவர் கூறினார். இத­னை­ய­டுத்து 1999 ஆம் ஆண்டில், சர்­வ­தேச அழுத்­தத்தின் கீழ், அர­சாங்கம் செம்­ம­ணியில் நீதி­மன்றக் கண்­கா­ணிப்பில் அகழ்­வா­ராய்ச்­சி­களை தொடர அனு­ம­தித்­தது. உலகம் உற்று நோக்கிக் கொண்­டி­ருக்க, மனித உரிமைக் குழுக்கள் கண்­கா­ணித்துக் கொண்­டி­ருக்க, செம்­மணி நிலம் தனது உண்­மையை வெளிப்­ப­டுத்தத் தொடங்­கி­யது. பதி­னைந்து சட­லங்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. அவற்றில் இரண்டு சட­லங்கள் 1996 இல் காணாமல் போன­வர்­க­ளு­டை­யவை என அடை­யாளம் காணப்­பட்­டன. ஆதா­ரங்கள் உறு­தி­யாக இருந்­தன. ஏழு இரா­ணுவ வீரர்­க­ளுக்கு எதி­ராக குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டன. ஆனால் இந்த விசா­ர­ணைகள் ஒரு கட்­டத்தில் நிறுத்­தப்­பட்­டன. கோப்­புகள் தூசி படிந்­தன. மேல­திக அகழ்­வா­ராய்ச்­சிகள் நடத்­தப்­ப­ட­வில்லை. 2006 ஆம் ஆண்­ட­ளவில், உத்­தி­யோ­க­பூர்வ அறிக்கை ஒன்றில் செம்­மணி விவ­காரம் கிட்­டத்­தட்ட முழு­மை­யா­கவே மறக்­கப்­பட்­டது. ஆனால் முத­லா­வது அகழ்­வா­ராய்ச்சி நடந்து இரண்டு தசாப்­தங்­க­ளுக்குப் பின்னர் ஜூன் 2025 இல் மீண்டும் இந்த விவ­காரம் பேசு­பொ­ரு­ளா­னது. செம்­மணி புதை­கு­ழியில், நீதி­மன்ற உத்­த­ரவின் பேரில் அகழ்­வா­ராய்ச்­சிகள் மீண்டும் தொடங்­கப்­பட்­டன. அங்கு கண்­டு­பி­டிக்­கப்­பட்­டவை தேசத்தின் மன­சாட்­சியை மீண்டும் உலுக்­கின. மூன்று குழந்­தைகள் உட்­பட, 19 மனித எலும்­புக்­கூ­டுகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. அவர்­களில் ஒருவர் ஒரு வய­துக்கும் குறை­வா­னவர் என்று நம்­பப்­ப­டு­கி­றது. செம்­மணி ஒரு தனித்து நிற்கும் துய­ர­மல்ல. இது வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் நடந்த மனிதப் படு­கொ­லை­களின் சாட்­சி­யாக நம்முன் காட்­சி­ய­ளிக்­கி­றது. 2013 ஆம் ஆண்டில், மன்னார் நகரில் கட்­டு­மான நட­வ­டிக்­கை­க­ளுக்­காக நிலத்தை தோண்­டிய போது 11 எலும்­புக்­கூ­டுகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. பின்னர் 2018 ஆம் ஆண்டில் மிகப்­பெ­ரிய மனிதப் புதை­குழி கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. இங்கு நடத்­தப்­பட்ட அகழ்­வா­ராய்ச்­சியில் 29 குழந்­தைகள் உட்­பட 346 எலும்­புக்­கூ­டுகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. தட­ய­வியல் தொல்­லியல் நிபு­ணர்கள் இந்த எச்­சங்கள் 30 வரு­டங்­க­ளுக்கு உட்­பட்­டவை என்­பதை உறு­திப்­ப­டுத்­தினர். ஆனால் தாம­தங்கள், அர­சியல் தலை­யீ­டுகள் மற்றும் நிதிப் பற்­றாக்­குறை என்­பன கார­ண­மாக மேல­திக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. தடயப் பொருட்­களும் காணாமல் போயின. விஞ்­ஞான பரி­சோ­த­னைகள் தடைப்­பட்­டன, காலப்­போக்கில் பொது மக்­களும் இவற்றை மறந்­தனர். எவ­ருக்கும் பொறுப்புக் கூறப்­ப­ட­வில்லை. ஆனால்குடும்­பங்கள் தொடர்ந்து நீதிக்­காக காத்­தி­ருக்­கின்­றன. 2000 ஆம் ஆண்டில் மிரு­சு­விலில் எட்டு தமிழ் பொது­மக்கள் இரா­ணு­வத்தால் கடத்­தப்­பட்­டனர். ஒருவர் அங்­கி­ருந்து தப்­பினார். அவர் மூல­மாக, ஏனைய ஏழு சட­லங்கள் கண்கள் கட்­டப்­பட்டும், சுடப்­பட்டும் ஆழ­மற்ற புதை­கு­ழியில் புதைக்­கப்­பட்­டி­ருந்­தமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. இதற்குக் கார­ண­மான, ஒரு தலைமை பொலிஸ் சார்ஜென்ட், 15 ஆண்­டு­க­ளுக்குப் பிறகு 2015 இல் மரண தண்­டனை விதிக்­கப்­பட்டார். எனினும் எந்­த­வொரு உயர் அதி­கா­ரியும் விசா­ரிக்­கப்­ப­ட­வில்லை. மட்­டக்­க­ளப்பில் உள்ள முரக்­கொட்­டாஞ்­சேனை மற்றும் முல்­லைத்­தீவில் உள்ள கொக்­குத்­தொ­டுவாய் ஆகிய இடங்­களில், கட்­டிட நிர்­மாணப் பணி­களின் போது எலும்­புக்­கூ­டுகள் வெளிப்­பட்­டன. எனினும் அவை மூடி மறைக்­கப்­பட்­டன. குருக்­கள்­மடம் புதை­குழி தமிழ் மக்கள் மாத்­தி­ர­மன்றி முஸ்லிம் மக்­களும் இவ்­வாறு கடத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்டு புதைக்­கப்­பட்­டுள்­ளனர். மட்­டக்­க­ளப்பு, குருக்கள் மடத்தில் உள்ள மனிதப் புதை­குழி இதற்­கான சாட்­சி­யாகும். விடு­த­லைப்­பு­லி­களால் 1990 ஆம் ஆண்டில், கடத்திக் கொலை செய்­யப்­பட்­ட­தாகக் கூறப்­படும் முஸ்­லிம்­களின் புதை­கு­ழிகள் இப் பகு­தியில் உள்­ள­தாக நம்­பப்­ப­டு­கி­றது. 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மட்­டக்­க­ளப்பு – கல்­முனை ெநடுஞ்­சாலை வழி­யாக வாக­னங்­களில் பயணம் செய்த குறிப்­பாக காத்­தான்­குடி பிர­தேச முஸ்­லிம்கள் 165 பேர் குருக்­கள்­மடம் என்­னு­மி­டத்தில் விடு­த­லைப்­பு­லி­க­ளினால் வழி­ம­றிக்­கப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்டு கட­லோ­ரப்­ப­கு­தியில் புதைக்­கப்­பட்­ட­தாக முஸ்­லிம்கள் தொடர்ந்து குற்­றம்­சாட்டி வரு­கின்­றனர். படு­கொலை செய்­யப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­ப­வர்­களின் உற­வி­னர்கள் சிலர் கடந்த 2014 ஆம் ஆண்டு இப் புதை­கு­ழி­களில் புதைக்­கப்­பட்­டுள்ள சட­லங்­களை தோண்டி எடுத்து இஸ்­லா­மிய மார்க்க முறைப்­படி அடக்கம் செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு களு­வாஞ்­சிக்­குடி பொலிசில் முறைப்­பா­டு­களை செய்­தனர். இத­னை­ய­டுத்து களு­வாஞ்­சிக்­குடி மஜிஸ்­திரேட் நீதி­மன்ற உத்­த­ரவின் பேரில் 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இப் பகு­தியில் அகழ்வுப் பணி­களை முன்­னெ­டுக்க நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டன. இதற்­காக சட்ட மருத்துவ நிபுணர், புதை பொருள் மற்றும் மண்ணியல் ஆய்வுத் துறை உட்பட 15 பேர் அடங்கிய நிபுணர்கள் குழு உறுப்பினர்கள் கொழும்பிலிருந்து சென்று அந்த இடத்தை பார்வையிட்டிருந்தனர். எனினும் புதைகுழிகள் உள்ள இடங்களை அடையாளம் காட்டுவதில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக இங்கு இதுவரை அகழ்வாராய்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்படவில்லை. வடக்கு கிழக்கில் இவ்­வாறு இரா­ணு­வத்­தி­ன­ராலும் விடு­தலைப் புலி­க­ளாலும் ஏனைய ஆயுதக் குழுக்­க­ளாலும் கொன்று புதைக்­கப்­பட்ட ஆயிரக் கணக்­கான மக்­களின் எலும்புக் கூடுகள் அவர்­க­ளது இறப்­பு­க­ளுக்­கான காரணம் கண்­ட­றி­யப்­ப­டாத நிலையில் இன்­னமும் புதையுண்டு கிடக்­கின்­றன. தற்­போ­தைய தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் இவ்­வா­றான படு­கொ­லை­களின் பின்­ன­ணி­களைக் கண்­ட­றிந்து குற்­ற­வா­ளி­களைத் தண்­டிப்­ப­தற்­கான விசேட பொறி­முறை ஒன்றை வகுக்க வேண்டும். எதிர்­கா­லத்தில் இந்த தேசத்தில் இவ்­வா­றான மோச­மான அநீ­திகள் நிகழாதிருப்பதை இதன் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.- Vidivelli https://www.vidivelli.lk/article/19561

ஈஸ்டர் தாக்குதல் குறித்து பிள்ளையான் முன்பே அறிந்து இருந்ததாகவும், விரைவில் இலங்கை புலனாய்வு துறையை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட உள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

3 months ago
Checked
Tue, 10/14/2025 - 00:12
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed