3 months 2 weeks ago
27 JUN, 2025 | 07:21 PM யாழ்ப்பாணக் குடாநாட்டில் வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 14ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கு பரந்தளவில் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவர் மருத்துவர் சுனிமல் ஜெயக்கொடி தெரிவித்தார். தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் தலைவர், தென்னை பயிர்ச் செய்கை சபையின் பொதுமுகாமையாளர் விஜயசிங்க, தென்னை பயிர்ச் செய்கை சபையின் உதவிப் பொது முகாமையாளர் ரி.வைகுந்தன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (27) கலந்துரையாடிய பொதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தும் திட்டத்துடனேயே வந்துள்ளதாகத் தெரிவித்த சபையின் தலைவர் ஜூலை மாதம் இரு வாரங்கள் யாழ்ப்பாணத்தில் வெள்ளை ஈ யைக் கட்டுப்படுத்துவதற்கான செயற்றிட்டங்கள் 5 பிரதேச செயலர் பிரிவுகளில் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இதற்காக கொழும்பிலிருந்து 100 இயந்திரங்கள் (High power water gun) கொண்டு வரப்படவுள்ளன. அத்துடன் அதை இயக்குவதற்கான ஆட்களும் அழைத்து வரப்படவுள்ளனர். அவர்களுடன் நான் உட்பட உயர் அதிகாரிகளும் இங்கு வரவுள்ளோம். https://www.virakesari.lk/article/218655
3 months 2 weeks ago
படக்குறிப்பு, காவல் உதவி ஆய்வாளர் மீரா கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 27 ஜூன் 2025 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் "நானா தெருவில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ஒரு பெண் மிரட்டிக் கொண்டிருக்கிறார்." கடந்த 23ஆம் தேதியன்று, பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் மீரா அந்த வழியாக வந்தபோது, அவரிடம் ஒருவர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் வருகையையொட்டி பாதுகாப்புப் பணிக்காக மீரா செல்ல வேண்டியிருந்தது. ஆனால், இளம்பெண்ணைக் காப்பாற்றுவதற்காக அவர் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அடுத்த ஒரு மணிநேரத்தில் தற்கொலை எண்ணத்தில் இருந்த இளம்பெண் மீட்கப்பட்டார். அவரை தற்கொலை முயற்சியை மேற்கொள்ள விடாமல் மனதை மாற்றி மீட்பதற்கு, பெண் உதவி ஆய்வாளர் மீரா செய்தது என்ன? அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை மிரட்டல் சென்னை தியாகராய நகரில் உள்ள நானா தெருவில் வசித்து வரும் தம்பதியின் 27 வயது மகள், பெங்களூருவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அங்கு "அவர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்படவே, தங்கள் மகளை அந்தத் தம்பதி அழைத்துக் கொண்டு சென்னை வந்துள்ளனர். ஆனால், இந்தப் பிரிவை அந்த இளம்பெண் ஏற்கவில்லை," என்று காவல்துறை நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. "அது மாம்பலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி. ஆனால், நான் பணிபுரியும் காவல் நிலையத்திற்கு மிக அருகில் அந்தத் தெரு இருந்தது. எனவே விவரம் அறிந்தவுடன் அவரைக் காப்பாற்றுவதற்காக ஓடினேன். அதற்குள் புகார் கூற வந்த நபரே தனது டூவீலரில் என்னை அழைத்துச் சென்றார்" என நடந்ததை விவரித்தார் உதவி ஆய்வாளர் மீரா. "நான்கு மாடிகளைக் கொண்ட அந்தக் குடியிருப்பின் வீட்டு ஜன்னல்களுக்கு தடுப்புக் கம்பிகள் எதுவும் அமைக்கப்படவில்லை" என்பதைக் குறிப்பிட்ட காவல் உதவி ஆய்வாளர் மீரா, பிபிசி தமிழிடம் விரிவாகப் பேசியபோது, "சம்பவ இடத்திற்குச் சென்றபோது பெண்ணின் தாய், பாட்டி ஆகியோர் பதற்றத்துடன் காணப்பட்டனர். அவரது தாய் தனது மகளை எப்படியாவது காப்பாற்றுமாறு கூறினார். பெண்ணின் படுக்கையறை கதவு உள்புறமாகத் தாழிடப்பட்டு இருந்தது," என்றார். போர்வைகளால் உருவாக்கப்பட்ட வலை படக்குறிப்பு, இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தகவலை மாம்பலம் மற்றும் சௌந்தரபாண்டியனார் அங்காடி காவல் நிலைய ஆய்வாளர்களைத் தொடர்பு கொண்டு மீரா தெரிவித்துள்ளார். தனது அறையில் இருந்து தற்கொலைக்கு முயலப் போவதாக அந்தப் பெண் சத்தம் போட்டுள்ளார். அதுகுறித்து விளக்கிய மீரா, "அவர் பேசுவது வீட்டின் ஹாலில் கேட்டது. யாரும் காப்பாற்ற உள்ளே வரக்கூடாது என மிரட்டினார். என்னால் எதுவும் செய்ய முடியாமல் தரைத் தளத்திற்கு வந்தேன்" என்றார். இதற்கிடையே இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள தகவலை மாம்பலம் மற்றும் சௌந்தரபாண்டியனார் அங்காடி காவல் நிலைய ஆய்வாளரைத் தொடர்பு கொண்டு மீரா தெரிவித்துள்ளார். தியாகராய நகரில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறைக்கும் காவல் நிலையத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்ணை மீட்பதற்கு வலை போன்று மீட்பு உபகரணங்கள் எதுவும் இல்லாததால், வீட்டில் இருந்த போர்வைகளைக் கட்டி அதன் மூலம் வலை போன்ற ஒன்றை உருவாக்கும் முயற்சியிலும் மீரா ஈடுபட்டார். ஆனால், அப்படியே அந்தப் பெண்ணை தாங்கிப் பிடிக்க நினைத்தாலும் எடை தாங்க முடியாமல் பலத்த காயம் அடைய வாய்ப்புள்ளதையும் அவர் கணித்தார். மீட்பு முயற்சிக்கு மாற்று வழிகள் இல்லாத சூழலில், அவரது கையில் செல்போன் இருந்ததை உதவி ஆய்வாளர் மீரா கவனித்துள்ளார். அதுகுறித்து விவரித்த அவர், "அவரை மீட்க அதுதான் ஒரே வழியாக இருந்தது. ஏனெனில், அவரை ஜன்னல் வழியாக மட்டுமே மீட்க முடியும். வேறு வழிகளும் இல்லை. எனவே, தீயணைப்பு வீரர் ஒருவரை அழைத்துக் கொண்டு மீண்டும் வீட்டுக்குள் சென்றேன்" என்றார். சமாதானம் ஏற்பட்டது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES இளம்பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கி அவரை மீரா தொடர்பு கொண்டுள்ளார். "யார் நீ?" எனக் கேட்டு ஒருமையில் உதவி ஆய்வாளரைத் திட்டியுள்ளார். அதற்குப் பதிலளித்த மீரா, "உன்னைக் காப்பாற்றவே வந்திருக்கிறேன். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் நான் தீர்த்து வைக்கிறேன். என்னை நம்பி வெளியில் வா" எனக் கூறியுள்ளார். "எனக்கு யார் மீதும் நம்பிக்கை இல்லை" எனக் கூறி அந்தப் பெண் தொடர்பைத் துண்டித்துவிட்டார். மீண்டும் தொடர்பு கொண்டபோது மீராவின் அழைப்பை அவர் ஏற்றுள்ளார். "சுமார் 8 நிமிடம் கடும் கோபத்துடன் அவர் பேசினார். ஒரு நபரின் பெயரைக் கூறி, 'அவன் என்னை விட்டுட்டுப் போய்விட்டான்' எனக் கூறினார். ஏற்கெனவே தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் தெரிவித்தார்" என்கிறார் மீரா. அவரைச் சமாதானப்படுத்திய மீரா, "அப்படியெல்லாம் உன்னை விட்டுவிட மாட்டேன். ஒரு தங்கையாக நினைத்து என்னிடம் பிரச்னையை கூறினால் சரி செய்து தருகிறேன். வேறு யாரையும் நம்ப வேண்டாம்" எனக் கூறியதாகத் தெரிவித்தார். இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டபோது தாயுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் அவரது அம்மாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகவும் உதவி ஆய்வாளர் மீரா தெரிவித்தார். "ஒரு கட்டத்தில், 'நீ மட்டும் உள்ளே வா' என அந்தப் பெண் கூறினார். இந்த வார்த்தையைக் கேட்ட மறு விநாடியே, தீயணைப்பு வீரர் மூலமாகக் கதவை உடைத்து உள்ளே சென்றேன். அந்தப் பெண்ணை உடனடியாக உள்ளே இழுத்துப் போட்டுவிட்டேன்" என்று விவரித்தார். 'நம்பிக்கை கொடுத்தால் மனநிலை மாறும்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தற்கொலைக்கு முயலும்போது பிரச்னையை உணர்ந்து நம்பிக்கையளித்தால் மனநிலை மாறும் என்கிறார் உதவி ஆய்வாளர் மீரா (சித்தரிப்புப் படம்) தற்போது தனியார் மருத்துவமனையில் அந்தப் பெண் சிகிச்சை பெற்று வருகிறார். "பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தபோது காதல் விவகாரத்தில் அவருக்கு ஏதோ பிரச்னை ஏற்பட்டுள்ளதாக அறிந்தேன். அந்த நேரத்தில் அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று மட்டுமே யோசித்தேன்" என்கிறார் மீரா. "அவர் கையில் செல்போன் இருந்ததால் அவரை அமைதிப்படுத்த முடியும் எனத் தோன்றியது. மேலும், அவரது மனநிலை தெரியாமல் உள்ளே நுழைந்தால் விபரீதமாகிவிடுமோ என்ற அச்சமும் இருந்தது" எனவும் அவர் குறிப்பிட்டார். "ஒருவர் தற்கொலைக்கு முயலும்போது பிரச்னையை அறிந்து, உணர்ந்து அதில் நம்பிக்கை கொடுத்தால் மனநிலை மாறும் என நினைத்தேன். வேறு காவல் எல்லையாக இருந்தாலும் அந்தப் பெண்ணை மீண்டும் சந்தித்துப் பேசுமாறு உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்" என்கிறார் மீரா. தருமபுரி மாவட்டம் அரூர் தாலுகாவில் உள்ள செல்லம்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மீரா. தமிழ்நாடு காவல் துறையில் காவலராகப் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு நேரடி உதவி ஆய்வாளராகத் தேர்வானார். தருமபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு பட்டப்படிப்பில் தமிழ் இலக்கியத்தைத் தேர்வு செய்து படித்துள்ளார். உதவி ஆய்வாளர் பணிக்கு மூன்றாம் முறையாக முயற்சி செய்து தேர்வானதாக அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார். தொடரும் காவல்துறையின் மீட்பு சம்பவங்கள் மீராவை போலவே, கடந்த சில வாரங்களாக தற்கொலை முயற்சியில் ஈடுபடும் நபர்களைக் காவல்துறை மீட்கும் சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த மார்ச் 30 அன்று மெரினா கடற்கரையில் இரண்டு பெண்கள் தற்கொலைக்கு முயன்றதைப் பார்த்த, அப்போது பணியில் இருந்த மெரினா காவல் நிலைய தலைமைக் காவலர் குமரேசன், காவலர்கள் சங்கர் குமார், முருகன் ஆகியோர் மீட்டனர். பெற்றோர் உடனான கருத்து வேறுபாடு காரணமாக மனமுடைந்து அப்படியான முயற்சியில் ஈடுபட்டதாக, போலீஸ் விசாரணையில் சகோதரிகள் கூறியுள்ளனர். அவர்களை உறவினர்களிடம் காவல் துறை ஒப்படைத்தது. திருவொற்றியூரைச் சேர்ந்த பெண் ஒருவர் கோடம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் மனநல சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த ஏப்ரல் 19ஆம் தேதியன்று உயிரை மாய்த்துக் கொள்வதாக மிரட்டினார். அவரிடம் சமாதானமாகப் பேசி சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு காவலர் தேவராஜ் மீட்டுள்ளார். தற்கொலையை தடுக்க உதவும் 4 முக்கிய வழிகள் தற்கொலை மற்றும் அதற்கான முயற்சிகளைத் தடுப்பதற்கு தனிநபர், சமூகம் மற்றும் தேசிய அளவில் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள முடியும் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இதைத் தடுப்பதற்கு நான்கு முக்கிய வழிகளையும் பட்டியலிட்டுள்ளது. தற்கொலை செய்வதற்கான வழிமுறைகளை அணுகுவதைக் கட்டுப்படுத்துதல் தற்கொலை பற்றிய செய்திகளை வெளியிடும்போது அதற்கான பொறுப்புகள் குறித்து ஊடக நிறுவனங்களுக்குத் தெரிவித்தல் வளரிளம் பருவத்தினர் இடையே சமூகம் சார்ந்த திறன்களை (socio-emotional life skills) வளர்த்தல் தற்கொலை நடத்தைகளால் பாதிக்கப்பட்ட நபர்களை முன்கூட்டியே அடையாளம் காணுதல், மதிப்பீடு செய்தல், அவர்களைப் பின்தொடர்தல் தற்கொலை தடுப்பு முயற்சிகளுக்கு சுகாதாரம், கல்வி, தொழிலாளர், விவசாயம், வணிகம், நீதி, சட்டம், பாதுகாப்பு மற்றும் ஊடகங்கள் எனப் பல துறைகளின் ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் தேவைப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,DR MALAIYAPPAN படக்குறிப்பு, மருத்துவர் மாலையப்பன் மேலும், தற்கொலைகளைத் தடுப்பதில் சமூகங்களுக்கு முக்கியப் பங்கு உள்ளதாகவும் கூறுகிறது. இதே கருத்தை முன்வைத்து பிபிசி தமிழிடம் பேசிய கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் மாலையப்பன், "இந்திய சமூகத்தில் தற்கொலை எண்ணம் என்பது இயல்பாகவே உள்ளது. குடும்ப உறவுகள் இடையே வாக்குவாதம் ஏற்படும்போது, தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறுவது வழக்கம்" என்கிறார். "தேர்வு, காதல், வணிகம் ஆகியவற்றில் தோல்வி வரும்போது தற்கொலை எண்ணம் வரும். உளவியல்ரீதியாக பலவீனமாக உள்ளவர்கள், எந்தவித திட்டமிடலும் இல்லாமல் கோபத்தில் இந்த முடிவை எடுப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன," எனக் கூறுகிறார் மருத்துவர் மாலையப்பன். தொடர்ந்து பேசிய அவர், "மனச்சோர்வு (Depression) உள்ளவர்களுக்கு தற்கொலை எண்ணம் ஏற்படும். அதைச் செயல்படுத்தவும் திட்டமிடுவார்கள். இதைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் எளிதில் குணமாக்கிவிடலாம்" என்கிறார். அதோடு, மனச்சோர்வுக்கான அறிகுறிகளையும் மருத்துவர் மாலையப்பன் பட்டியலிட்டார். "போதிய உற்சாகம் இல்லாமல் இருப்பது, மெதுவாக நடப்பது, மெதுவாகப் பேசுவது போன்றவற்றின் மூலம் கண்டறியலாம். முன்பு போல வேகமாகச் செயல்பட மாட்டார்கள். உறக்கம் குறைந்துவிடும். எதிலும் ஈடுபாடு காட்ட மாட்டார்கள்" எனக் குறிப்பிட்டார். "பிரச்னைகள் வரும்போது மரணம் ஒரு தீர்வல்ல என்ற எண்ணம் வர வேண்டும். மானம் போனால் உயிர் வாழக்கூடாது என்ற எண்ணம் உள்ளது. மானத்தைவிட உயிர் மிக முக்கியம் என எண்ணும் அளவுக்கு கலாசார மாற்றம் ஏற்பட வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார். "உளவியல் ரீதியாக பலவீனமாக உள்ளவர்களுக்கு வாழ்வியல் பயிற்சிகளை அளிக்கலாம். நேரத்தைக் கடைபிடிப்பது, கோபத்தை எவ்வாறு வெளிக்காட்டக் கூடாது, உற்சாகமாக இருப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொடுத்தால், அவர்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்" எனக் கூறுகிறார் மாலையப்பன். உதவி எண்கள் நீங்களோ அல்லது உங்களின் அன்புக்குரிய நபர்களோ மன அழுத்தத்தில் இருந்தால் அல்லது மனநலம் சார்ந்த பிரச்னைகளை எதிர்கொண்டால் அவர்களுக்குத் தேவையான உதவிகளைக் கீழ்கண்ட உதவி எண்கள் மூலமாகப் பெற்றுக்கொள்ள இயலும். சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044 -24640050 (24 மணிநேரம்) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம்: 104 (24 மணிநேரம்) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண்: 1800-599-0019 - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq8z0k5d4zwo
3 months 2 weeks ago
நீண்ட நாட்களாக தமிழரசுக் கட்சிக்குள் நடக்கும் குத்து வெட்டுக்களின் இறுதி அத்தியாயம் இது. ஆனால் இதை இங்கே செய்யக்கூடாது என்பது கூட தெரியாத நிலையில் தான் தமிழ் தலைமைகள்...
3 months 2 weeks ago
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2025-27: பங்களாதேஷை வீழ்த்தி முதலாவது வெற்றிப் புள்ளிகளை இலங்கை சம்பாதித்தது 28 JUN, 2025 | 12:10 PM (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கு எதிராக எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் நடைபெற்றுவந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 78 ஓட்டங்களால் இலங்கை அமோக வெற்றியீட்டியது. இதன் மூலம் நான்காவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2025-27 சுழற்சிக்கான அத்தியாயத்தில் இலங்கை தனது முதலாவது வெற்றியையும் முதலாவது வெற்றி புள்ளிகளையும் ஈட்டிக்கொண்டது. காலியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. இந்த இரண்டு போட்டிகளில் இலங்கை மொத்தமாக 16 ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகளைப் பெற்று 66.67 சதவீத புள்ளிகளுடன் அணிகள் நிலையில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. பெத்தும் நிஸ்ஸன்க குவித்த அபார சதம், தினேஷ் சந்திமால், குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் பெற்ற அரைச் சதங்கள், ப்ரபாத் ஜயசூரிய இரண்டாவது இன்னிங்ஸில் பதிவுசெய்த 5 விக்கெட் குவியல் என்பன இலங்கையை இலகுவாக வெற்றி அடையச் செய்தது. போட்டியின் நான்காம் நாளான இன்று சனிக்கிழமை (28) காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 117 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த பங்களாதேஷ், கடைசி 4 விக்கெட்களை 16 மேலதிக ஓட்டங்களுக்கு இழந்து 133 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பங்களாதேஷின் கடைசி 4 விக்கெட்களை வீழ்த்துவதற்கு இன்றைய தினம் இலங்கைக்கு 5.4 ஓவர்களும் 29 நிமிடங்களுமே தேவைப்பட்டது. இதற்கு அமைய எஸ்.எஸ்.சி. மைதானத்தில் தான் விளையாடிய 4 டெஸ்ட் போட்டிகளிலும் பங்களாதேஷ் தோல்விகளையே தழுவியுள்ளது. கடந்த புதன்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுததாடிய பங்களாதேஷ் அதன் முதல் இன்னிங்ஸில் 247 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ஷத்மான் இஸ்லாம், முஷ்பிக்குர் ரஹிம், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ் ஆகிய நால்வரே 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை இரண்டு தினங்கள் துடுப்பெடுத்தாடி 458 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில் பெத்தும் நிஸ்ஸன்க அபார சதம் குவித்ததுடன் தினேஷ் சந்திமால், குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்து இலங்கை அணியை பலமான நிலையில் இட்டனர். பங்களாதேஷ் பந்துவீச்சில் தய்ஜுல் இஸ்லாம் கணிசமான ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தார். மிகவும் நெருக்கடியான நிலையில் 211 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்தவாறு தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பங்களாதேஷ் மோசமாகத் துடுப்பெடுத்தாடி 133 ஓட்டங்களுக்கு சுருண்டது. முஷ்பிக்குர் ரஹிம் மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றார். பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்ததுடன் தனஞ்சய டி சில்வா, தரிந்து ரத்நாயக்க ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். இந்த வெற்றியின் பின்னர் தனது துடுப்பாட்டம் குறித்து விளக்கிய பெத்தும் நிஸ்ஸன்க, மூவகை கிரிக்கெட் போட்டிகளிலும் பிரகாசிக்க கிடைப்பதையிட்டு மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டார். அத்துடன் தனது துடுப்பாட்ட ஆற்றலை தொடர்ச்சியாக பேணும் வகையில் துடுப்பாட்ட பயிற்சிகளில் ஈடுபட்டுவருவதாகவும் அவர் கூறினார். 'இன்னும் ஒரு வருட காலத்திற்கு டெஸ்ட் போட்டிகள் எங்களுக்கு இல்லை. எனவே உள்ளூர் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் திறமையாக விளையாடி எமது துடுப்பாட்ட ஆற்றலை தொடர்ந்து சிறப்பாக பேண வேண்டியது டெஸ்ட் விளையாடும் வீரர்களின் கடமை' எனவும் பெத்தும் நிஸ்ஸன்க தெரிவித்தார். எண்ணிக்கை சுருக்கம் பங்களாதேஷ் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 247 (ஷத்மான் இஸ்லாம் 46, முஷ்பிக்குர் ரஹிம் 35, லிட்டன் தாஸ் 34, தய்ஜுல் இஸ்லாம் 33, மெஹிதி ஹசன் மிராஸ் 31, நயீம் ஹசன் 25, சொனால் தினூஷ 22 - 3 விக்., அசித்த பெர்னாண்டோ 51 - 3 விக். விஷ்வா பெர்னாண்டோ 45 - 2 விக்.) இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 458 (பெத்தும் நிஸ்ஸன்க 158, தினேஷ் சந்திமால் 93, குசல் மெண்டிஸ் 84, லஹிரு உதார 40, கமிந்து மெண்டிஸ் 33, தய்ஜுல் இஸ்லாம் 131 - 5 விக்., நயீம் இஸ்லாம் 87 - 3 விக்.) பங்களாதேஷ் 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 133 (முஷ்பிக்குர் ரஹிம் 26, அனாமுல் ஹக் 19, நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 19, ப்ரபாத் ஜயசூரிய 56 - 5 விக்., தனஞ்சய டி சில்வா 13 - 2 விக்., தரிந்து ரத்நாயக்க 19 - 2 விக்.) ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன்: பெத்தும் நிஸ்ஸன்க. https://www.virakesari.lk/article/218685
3 months 2 weeks ago
27 JUN, 2025 | 01:32 PM bbc இஸ்ரேல் ஈரான் போருக்கு பின்னர் இஸ்ரேலுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் இணைந்து செயற்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஈரானிய அதிகாரிகள் பலரை கைதுசெய்துள்ளதுடன் மரணதண்டனையையும் நிறைவேற்றியுள்ளனர். முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு ஈரானிய புலனாய்வு பிரிவிற்குள் இஸ்ரேலிய புலனாய்வாளர்கள் ஊருடுவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையிலேயே இந்த கைதுகளும் மரணதண்டனை நிறைவேற்றங்களும் இடம்பெறுகின்றன. மோதலின் போது பல ஈரானிய உயர் அதிகாரிகள் கொல்லப்படுவதற்கு தகவல்களே முக்கிய காரணம் என ஈரானிய அதிகாரிகள் கருதுகின்றனர். ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர இராணுவத்தின் சிரேஸ்ட தளபதிகளும் அணுவிஞ்ஞானிகளும் இலக்குவைத்து கொல்லப்பட்டனர். ஈரானிற்குள் இஸ்ரேலின் மொசாட்டின் முகவர்களின் நடவடிக்கைகளே இதற்கு காரணம் என ஈரான் கருதுகின்றது. இந்த கொலைகளின் துல்லியத்தன்மை மற்றும் அளவு காரணமாக அதிர்ச்சியடைந்துள்ள ஈரான் அதிகாரிகள் வெளிநாட்டு புலனாய்வாளர்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களை இலக்குவைக்கின்றனர். நாட்டின் பாதூகாப்பிற்காக இந்த நடவடிக்கை என அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இது கருத்து வேறுபாடுகளை அடக்குவதற்கும் மக்கள் தொகை கட்டுப்பாட்டை இறுக்குவதற்கும் ஒரு வழியாகும் என்று பலர் அஞ்சுகின்றனர். 12 நாள் மோதலின் போது இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கு ஈரானிய அதிகாரிகள் மரண தண்டனை விதித்தனர். போர் நிறுத்தத்திற்கு ஒரு நாள் கழித்து புதன்கிழமை இதே போன்ற குற்றச்சாட்டில் மேலும் மூன்று நபர்கள் தூக்கிலிடப்பட்டனர். இதையடுத்து நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான சந்தேக நபர்கள் உளவு பார்த்ததாக பார்த்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இஸ்ரேலிய உளவுத்துறையுடன் ஒத்துழைத்ததாக கூறப்படும் பல கைதிகளிடமிருந்து வரும் வாக்குமூலங்களை அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது. மனித உரிமைகள் குழுக்களும் ஆர்வலர்களும் சமீபத்திய சம்பவங்கள் குறித்து அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளன. ஈரானின் நீண்டகால நடைமுறையான கட்டாய ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெறுதல் மற்றும் நியாயமற்ற விசாரணைகளை நடத்துதல் ஆகியவற்றை மேற்கோள் காட்டி. அதைத் தொடர்ந்து மேலும் மரணதண்டனைகள் நிறைவேற்றப்படலாம் என்ற கவலைகள் காணப்படுகின்றன. ஈரானின் புலனாய்வு அமைச்சகம் மேற்கத்திய மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறை வலையமைப்புகள் - CIA மொசாட் மற்றும் MI6 எதிராக "இடைவிடாத போராட்டத்தில்" ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஜூன் 13 அன்று ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கியதிலிருந்து ஃபார்ஸ் செய்தி நிறுவனத்தின்படி "இஸ்ரேலிய உளவு வலையமைப்பு நாட்டிற்குள் மிகவும் தீவிரமாகிவிட்டது". 12 நாட்களில் ஈரானிய உளவுத்துறை மற்றும் பாதுகாப்புப் படைகள் "இந்த வலையமைப்புடன் தொடர்புடைய 700 க்கும் மேற்பட்ட நபர்களை" கைது செய்ததாக ஃபார்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் தொடர்பான சமூக ஊடகப் பக்கங்களில் தங்கள் தொலைபேசி எண்கள் தோன்றியதாக ஈரானியர்கள் பிபிசி பாரசீகத்திடம் தெரிவித்தனர். இந்தப் பக்கங்களை விட்டு வெளியேற வேண்டும் அல்லது வழக்குத் தொடர வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பிபிசி பாரசீகம் லண்டனை தளமாகக் கொண்ட ஈரான் இன்டர்நேஷனல் மற்றும் மனோட்டோ டிவி உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள பாரசீக மொழி ஊடகங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மீது ஈரானிய அரசாங்கம் அழுத்தத்தை அதிகரித்துள்ளது. https://www.virakesari.lk/article/218621
3 months 2 weeks ago
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் பெ.சிவசுப்ரமணியம் பிபிசி தமிழுக்காக 27 ஜூன் 2025 தமிழ்நாடு – கர்நாடக மாநிலங்களின் எல்லை பெரும்பாலும் காடுகள் சூழ்ந்த பகுதி. தமிழ்நாட்டின் 18வது, காட்டுயிர் சரணாலயமான தந்தை பெரியார் காட்டுயிர் காப்பகத்தை ஒட்டி, கர்நாடக மாநிலம், மலை மாதேஸ்வரா காட்டுயிர் சரணாலயம் அமைந்துள்ளது. இது பாலாறு, மாதேஸ்வரன் மலை, ஹூக்கியம், ராமாபுரம், பி.ஜி.பாளையம், அனூர், கொள்ளேகால் என ஏழு வனச் சரகங்களை உள்ளடக்கியது. தமிழ்நாட்டின் பர்கூர் வனச்சரக எல்லையை ஒட்டி அமைந்துள்ளது ஹூக்கியம் வனச்சரகம். இங்குள்ள மின்னியம் காட்டுப் பகுதியில், மாரி அணை கேம்ப் என்ற இடம் உள்ளது. இந்த இடத்திலுள்ள ஒரு மாட்டுப் பட்டியின் அருகில் இன்று காலை நான்கு புலிகள் உயிரிழந்து கிடப்பதாகக் கிடைத்த செய்தியைத் தொடர்ந்து, ஹூக்கியம் வனச் சரக அலுவலர் மாதேஷ், மலை மாதேஸ்வரா வனக் கோட்ட துணை வனப் பாதுகாவலர் சக்கரபாணி தலைமையிலான வனத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, இறந்து கிடந்த நான்கு புலிகளின் உடல்களைக் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனர். மூன்று வயது குட்டிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஹூக்கியம் வனச் சரக அலுவலர் மாதேஷ், "இறந்துபோன தாய்ப் புலிக்கு 15 வயது இருக்கலாம். அதன் குட்டிகளுக்கு இரண்டு முதல் மூன்று வயதுக்குள் இருக்கும். இன்னும் சில நாள்களில் தாய்ப் புலியை விட்டு குட்டிகள், தனித்து வாழும் நிலையை அடையும் வயதில் இருந்தன. நான்கு புலிகளும் 300 மீட்டர் சுற்றளவுக்குள் உயிரிழந்து கிடந்தன. அவை இறந்து இரண்டு நாள்கள் ஆகியிருக்கலாம். நான்கு புலிகளின் உடல்களிலும் காயங்கள் எதுவும் இல்லை. முதல் கட்ட விசாரணையில், விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. நாளை காலை கால்நடை மருத்துவர் குழுவைக் கொண்டு உடற்கூறாய்வு மேற்கொள்ள இருக்கிறோம். அதற்குப் பிறகுதான், புலிகள் உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் தெரிய வரும்" என்றார். இந்திய அளவில் காட்டுயிர் ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை விரும்பிகள் மத்தியில், நான்கு புலிகள் உயிரிழந்த செய்தி மிகப்பெரிய வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கர்நாடக வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மலை மாதேஸ்வரா காட்டுயிர் சரணாலய வனப்பகுதியில் உள்ள ஹூக்கியம் வனச்சரக எல்லையில் ஒரு தாய்ப் புலி மற்றும் மூன்று குட்டிகள் இயற்கைக்கு மாறான முறையில் இறந்தது மிகவும் வேதனையான செய்தியாகும். கர்நாடக அரசு, இதை மிகவும் தீவிர இழப்பாகக் கருதியுள்ளது," என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்திரா காந்தி தொடங்கி வைத்த புலிகள் பாதுகாப்பு திட்டம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புலிகள் அதிகமாக வாழும் காடு வளம் கொண்டது என வல்லுநர்கள் கூறுகின்றனர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, புலிகள் பாதுகாப்புக்காக ப்ராஜெக்ட் டைகர் (Project Tiger) எனும் திட்டத்தை 1973இல் தொடங்கி வைத்தார். அதன் பிறகு, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் புலிகளைப் பாதுகாக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில், கர்நாடக மாநிலம், 563 புலிகளுடன் நாட்டில் 2வது இடத்தில் உள்ளது. "புலிகள் பாதுகாப்பிற்குப் பெயர் பெற்ற மாநிலத்தில், ஒரே நாளில் நான்கு புலிகள் இயற்கைக்கு மாறான முறையில் இறந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. கர்நாடக மாநில முதன்மை வனப்பாதுகாவலர் சுபாஷ் கே. மல்கேடே தலைமையில் உடனடியாக ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது" என கர்நாடக வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், "வன ஊழியர்களின் அலட்சியம் அல்லது மின்சாரம் தாக்கியதாலோ, விஷம் கொடுத்தோ மரணம் ஏற்பட்டு இருந்தால், சம்மந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்து, 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து, அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது" என்றும் கூறப்பட்டுள்ளது. 'புலிகள் - வன வளத்தின் குறியீடு' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அளவில், கர்நாடகா மாநிலம் 563 புலிகளுடன் 2வது இடத்தில் உள்ளது தமிழ்நாட்டில் காட்டுயிர்களின் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வுப் பணிகளைச் செய்து வரும் ஓசை அமைப்பைச் சேர்ந்த காளிதாஸ், "தாய்ப் புலியோடு சேர்ந்து மூன்று குட்டிகளும் உயிரிழந்ததைப் பார்க்கும்போது, இந்த நான்கு புலிகளும் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது," என்று கூறுகிறார். தொடர்ந்து பேசிய காளிதாஸ், "புலிகள் அதிகமாக வாழும் காடு வளமானது எனப் புரிந்துகொள்ளலாம். ஒரு புலி வாழும் காடு என்றால், அங்கே 500 மான்கள் வரை வாழும். 500 மான்கள் வாழும் இடத்தில், அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப மற்ற விலங்குகள், பறவைகள் வாழும். மரங்கள், செடி, கொடி, புற்கள் செழிப்புடன் வளரும். ஒரு புலி, ஒரு மானை, ஒரே முயற்சியில் வேட்டையாடி உண்ண முடியாது. குறைந்தது 20 முறை முயற்சி செய்துதான், அது தன் இரையை வேட்டையாடி உண்ணும்" என்று விளக்கினார் காளிதாஸ். மேலும், "இந்தியாவில் சட்டவிரோத வேட்டையால் கொல்லப்படும் புலிகளின் எண்ணிக்கையை விடவும், விஷம் வைத்துக் கொல்லப்படும் புலிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. காட்டின் எல்லையோரப் பகுதிகளில், கால்நடைகளை வளர்க்கும் எளிய மக்கள், தங்கள் மாடுகளைப் புலிகள், சிறுத்தைகள் அடித்துச் சாப்பிட்டு விடுவதால் ஏற்படும் இழப்புகள் மற்றும் ஆத்திரத்தின் விளைவாக, இறைச்சியில் விஷத்தைக் கலக்கும் செயலில் ஈடுபடுவது நடக்கிறது" என்று கூறுகிறார். ஒரு புலி, தான் அடித்துச் சாப்பிடும் உணவைக் குறைந்தபட்சம் ஏழு நாட்களுக்கு வைத்திருந்து சாப்பிடும் வழக்கம் கொண்டது என்பதைச் சுட்டிக் காட்டும் காளிதாஸ், "இந்த நடைமுறையைத் தெரிந்துகொள்ளும் சிலர், தனது கால்நடையைக் கொன்ற புலியை அல்லது சிறுத்தையைப் பழிவாங்கும் எண்ணத்தில், அது மிச்சம் வைத்துள்ள இறைச்சியில் விஷம் கலந்து விடுகின்றனர். இந்தியாவில் நிகழும் இயற்கைக்கு மாறான புலிகள் இறப்புக்கான காரணங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது," என்று கூறினார். மேலும், காடுகளைப் பாதுகாப்பதில் வனத்துறை முற்று முழுதாகச் சுயமாகச் செயல்பட்டுவிட முடியாது எனக் கூறிய காளிதாஸ், காடுகளைச் சார்ந்து வாழும் பழங்குடி சமூகங்களுடன் இணைந்து அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதே இதற்கான தீர்வாக இருக்கும் என்று குறிப்பிட்டார். அதோடு, "கால்நடைகளை வளர்க்கும் ஒருவருக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் வகையில், உடனடியாக இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும். கால்நடைகளை விலங்குகள் வேட்டையாடி விட்டால், அதற்கு அரசு இழப்பீடு வழங்கும் என்ற புரிதலை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதற்குத் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்" என்று விளக்கினார். புலிகள் வேட்டையாடிய கால்நடைகளுக்கான இழப்பீடு பட மூலாதாரம்,GETTY IMAGES புலிகள் மற்றும் சிறுத்தைகளால் வேட்டையாடப்படும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அந்தியூர் வனச்சரக அலுவலர் முருகேசன், "காடுகளில் மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகளுக்கு ஆயிரம் முதல் 3,000 வரையும், எருமைகளுக்கு பத்தாயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையும், மாடுகளுக்கு 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரையும் வனத்துறையால் இழப்பீடு வழங்கப்படுகிறது" என்றார். தொடர்ந்து பேசிய அவர், "காட்டுயிர்களால் வேட்டையாடப்பட்ட கால்நடைகள் குறித்த தகவல்கள் கிடைத்ததும், கால்நடை மருத்துவர்கள் மூலம் உடற்கூறாய்வு செய்யப்படும். அப்படித்தான் அதன் வயது முடிவு செய்யப்படும். பிறகு தேவையான ஆவணங்கள் அனைத்தையும் வைத்து, மாவட்ட வன அலுவலருக்கு அறிக்கை அனுப்பி வைத்து, நிதி கையிருப்பு இருந்தால் உடனடியாக கிளைம் வழங்கப்படும். நிதி இல்லையெனில், அடுத்த மூன்று மாதங்களில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கால்நடைக்கு இழப்பீடு வழங்கப்படும்" என்று இழப்பீடு வழங்கப்படும் செயல்முறையை விளக்கினார். ஓய்வு பெற்ற கர்நாடக மாநில உதவி வனக்கோட்ட அலுவலர் அங்குராஜ் பேசும்போது, "கர்நாடக மாநில காப்புக் காடுகளின் எல்லைக்குள் வேட்டையாடப்படும் கால்நடைகளுக்கு அரசு இழப்பீடு கொடுப்பது இல்லை. ஊர் எல்லையில் உள்ள காடுகளில், காட்டுயிர்களால் வேட்டையாடப்படும் கால்நடைகளுக்கு கர்நாடக அரசு இழப்பீடு வழங்குகிறது" என்றார். மேலும், "மாநில அரசு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் இதுபோன்ற இழப்புகளுக்கான நிதியை ஒதுக்கீடு செய்து வைக்கும். அதில் போதிய நிதி இருந்தால் உடனடியாக இழப்பீடு வழங்கப்படும். நிதி இல்லையெனில், சீனியாரிட்டி அடிப்படையில், அடுத்த மூன்று மாதங்களிலோ அல்லது ஆறு மாதங்களிலோ இழப்பீடு வழங்கப்படும்" என்று கூறிய அவர், சில நேரங்களில், ஓர் ஆண்டு கடந்தும்கூட இழப்பீடு வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். கடந்த 2022ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 3,682 புலிகள் வாழ்கின்றன. இந்தியாவில் புலிகள் அதிகமுள்ள மாநிலம் மத்திய பிரதேசம். 2022ஆம் ஆண்டு, புள்ளி விவரங்களின்படி, மத்திய பிரதேசத்தில் 785 புலிகள் வாழ்வதாகத் தெரிய வந்துள்ளது. இரண்டாவது இடத்தில் கர்நாடகாவும், 560 புலிகளுடன் மூன்றாவது இடத்தில் சத்தீஸ்கரும் உள்ளன. தமிழ்நாட்டின் காடுகளில் 264 புலிகள் மட்டுமே வாழ்கின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce9x2870lv4o
3 months 2 weeks ago
பங்களாதேஷை இரண்டாவது டெஸ்டில் வெற்றிகொள்ளும் நிலையில் இலங்கை; நான்காம் நாள் காலையுடன் போட்டி முடிவடையும் அறிகுறி 27 JUN, 2025 | 07:07 PM (நெவில் அன்தனி) இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வெற்றிபெறும் தருவாயில் இருக்கிறது. பெரும்பாலும் இந்தப் போட்டி சனிக்கிழமை (28) முதலாவது ஆட்டநேர பகுதியில் இலங்கைக்கு சாதகமாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும் லிட்டன் தாஸ், நயீம் ஹசன் ஆகிய இருவரும் இலங்கையின் வெற்றியைத் தாமதிக்க முயற்சிக்கலாம் எனவும் கருதப்படுகிறது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் முன்னாள் அணித் தலைவர் குசல் மெண்டிஸின் அதிரடி இலங்கைக்கு சாதகமாக அமைந்ததுடன் இரண்டாவது இன்னிங்ஸில் பங்களாதேஷ் தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளது. முதல் இன்னிங்ஸ் நிறைவில் இலங்கையை விட 211 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த பங்களாதேஷ், இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்று தோல்வியை எதிர்கொண்ட வண்ணம் இருக்கிறது. இதற்கு அமைய 2ஆவது இன்னிங்ஸில் மேலும் 4 விக்கெட்கள் மாத்திரம் மீதம் இருக்க இலங்கையை விட 96 ஓட்டங்களால் பங்களாதேஷ் தொடர்ந்தும் பின்னிலையில் இருக்கிறது. இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 290 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை, 448 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கடைசி விக்கெட்டை இழந்தது. ஒரு கட்டத்தில் 2 விக்கெட் இழப்புக்கு 305 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்த இலங்கை தனது கடைசி 8 விக்கெட்களை 153 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இழந்தது. பெத்தும் நிஸ்ஸன்க தனது எண்ணிக்கைக்கு மேலும் 12 ஓட்டங்களை சேர்த்த நிலையில் 158 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா (07), ப்ரபாத் ஜயசூரிய (10) ஆகிய இருவரும் ஆட்டம் இழந்தனர். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த கமிந்து மெண்டிஸ், குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் கமிந்து மெண்டிஸ் 33 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் ஒரு பக்கத்தில் விக்கெட்கள் சரிய மற்றைய பக்கத்தில் குசல் மெண்டிஸ் அதிரடி ஆட்டம் மூலம் இலகுவாக ஓட்டங்களைப் பெற்ற வண்ணம் இருந்தார். இதனிடையே சொனால் தினூஷ (11), தரிந்து ரத்நாயக்க (10) ஆகிய இருவரும் ஆட்டம் இழந்தனர். குசல் மெண்டிஸ் உபாதைக்குள்ளானார் குசல் மெண்டிஸ் இல்லாத இரண்டாவது ஓட்டத்துக்கு ஆசைப்பட்டு தனது விக்கெட்டைத் தாரைவார்த்ததுடன் உபாதைக்கும் உள்ளானார். 87 பந்துகளை எதிர்கொண்ட குசல் மெண்டிஸ் 8 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 84 ஓட்டங்களைப் பெற்றார். ரன் அவுட்டைத் தவிர்ப்பதற்காக குசல் மெண்டிஸ் டைவ் செய்த போது அவரது வலது தோற்பட்டை நிலத்தில் பட்டதால் கடும் உபாதைக்குள்ளானார். இதனை அடுத்து அவர் இரண்டாவது இன்னிங்ஸில் களத்தடுப்பில் ஈடுபபடவில்லை. அவருக்குப் பதிலாக லஹிரு உதார விக்கெட் காப்பாளராக விளையாடினார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதுடன் தேவைப்படின் MRI ஸ்கான் செய்ய நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பந்துவீச்சில் தய்ஜுல் இஸ்லாம் 131 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் நயீம் ஹசன் 87 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். தனது 55ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் தய்ஜுல் இஸ்லாம் 17ஆவது தடவையாக 5 விக்கெட் குவியலைப் பதவுசெய்தார். இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ், 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 4 விக்கெட்களை இழந்து மேலும் அழுத்தத்தை எதிர்கொண்டது. அனாமுல் ஹக் (19), ஷத்மான் இஸ்லாம் (12) ஆகிய இருவரும் நிதானத்தைக் கடைப்பிடித்த போதிலும் மொத்த எண்ணிக்கை 31 ஓட்டங்களாக இருந்தபோது இருவரும் ஆட்டம் இழந்தனர். தொடர்ந்து மொமினுள் ஹக் 15 ஓட்டங்களுடனும் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 19 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். அதன் பின்னர் முஷ்பிக்குர் ரஹிமும், லிட்டன் தாஸும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடினர். ஆனால், ப்ரபாத் ஜயசூரியவின் சுழற்சியில் சிக்கிய முஷ்பிக்குர் ரஹிம் 26 ஓட்டங்களுடன் போல்ட் ஆனார். (100 - 5 விக்.) மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 5 ஓட்டங்கள் சேர்ந்தபோது மெஹிதி ஹசன் மிராஸ் 11 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததும் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. லிட்டன் தாஸ் 13 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் தனஞ்சய டி சில்வா 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்ரபாத் ஜயசூரிய 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தரிந்து ரத்நாயக்க 10 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் அசித்த பெர்னாண்டோ 22 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். பங்களாதேஷ் அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 247 ஓட்டங்களைப் பெற்றது. https://www.virakesari.lk/article/218665
3 months 2 weeks ago
RESULT 1st Test, Bridgetown, June 25 - 27, 2025, Australia tour of West Indies Australia 180 & 310 West Indies (T:301) 190 & 141 Australia won by 159 runs PLAYER OF THE MATCH Travis Head, AUS 59 & 61
3 months 2 weeks ago
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சட்டக் கல்லூரி மாணவியின் பாலியல் வன்கொடுமை வழக்கு, 2024 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை நினைவுபடுத்துகிறது. கட்டுரை தகவல் பிரபாகர் மணி திவாரி பிபிசி ஹிந்திக்காக கொல்கத்தாவில் இருந்து 27 ஜூன் 2025 மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஒருவரும் அடங்குவார். இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட அந்த முன்னாள் மாணவர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான திரிணாமூல் காங்கிரஸ் சத்ரா பரிஷத் (TMCP) உடன் தொடர்புடையவர் என்ற கூற்றுகளும் இந்த வழக்குக்கு அரசியல் சாயத்தைப் பூசியுள்ளன. இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் திரிணாமூல் காங்கிரஸையும் அதன் தலைமையிலான அரசையும் கடுமையாக விமர்சித்து, மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி பதவி விலக வேண்டுமென்று கோரியுள்ளன. இந்த விவகாரத்தில் பல அமைப்புகள் போராட்டங்கள் மூலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இருப்பினும், இந்தக் கூற்றுகளை அக்கட்சியின் மாணவர் அமைப்பான டிஎம்சிபி நிராகரித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர், சட்டக் கல்லூரியின் டிஎம்சிபி பிரிவில் பல ஆண்டுகளாகச் செயல்படவில்லை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, மூன்று நாட்களுக்குள் கொல்கத்தா காவல் ஆணையர் விரிவான அறிக்கையைக் சமர்ப்பிக்க வேண்டுமெனக் கோரியுள்ளது. தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் விஜயா ரஹத்கர், காவல் ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இந்தச் சம்பவம் குறித்த தனது கவலையைத் தெரிவித்துள்ளார். இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். கூடுதலாக, பாதிக்கப்பட்ட மாணவிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார். மாணவியின் புகார் அடிப்படையில் மூவர் கைது மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட மூவரும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், மூவரும் நான்கு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர். இந்த வழக்கு, 2024ஆம் ஆண்டு கொல்கத்தாவின் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நினைவுபடுத்துகிறது. அந்த நேரத்தில், கல்வி வளாகங்களின் பாதுகாப்பு குறித்த விவாதங்கள் எழுந்தன. அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. "இந்தச் சம்பவம் ஜூன் 25ஆம் தேதி இரவு 7.30 மணி முதல் 10.50 மணி வரை தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரி வளாகத்தில் நடந்தது" என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு போலீஸ் அதிகாரி பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி டவுன் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். அதன் பிறகு, பார்க் சர்க்கஸ் தேசிய மருத்துவக் கல்லூரியில் மாணவிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அதன் பிறகு, புதன்கிழமை மாலை இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், மூன்றாவது நபர் இரவு 12 மணியளவில் கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட இருவரின் பெயர்கள் பிரமித் முகர்ஜி மற்றும் ஜே அகமது. இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கின்றனர். மூன்றாவதாக கைது செய்யப்பட்ட நபரின் பெயர் மனோஜித் மிஸ்ரா, அவர் சட்டக் கல்லூரியின் முன்னாள் மாணவர். குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரின் மொபைல் போன்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். நடந்தது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 2024ஆம் ஆண்டு கொல்கத்தாவின் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நடந்த போராட்டம் வெள்ளிக்கிழமை, காவல்துறையினரை தவிர, தடயவியல் குழுவும் சம்பவ இடத்தைப் பார்வையிட்டது. "திரிணாமூல் காங்கிரஸின் மாணவர் அமைப்பின் கல்லூரி சங்கத் தலைவராக ஆக்குவதாக வாக்குறுதி அளித்து வளாகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்" என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். கடந்த புதன்கிழமை மனோஜித் தன்னை கல்லூரிக்கு அழைத்து அமைப்பின் தலைவராக ஆக்குவதாக உறுதியளித்ததாக மாணவி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து அந்த மாணவி மதியம் 12 மணிக்குப் பிறகு கல்லூரிக்கு வந்துள்ளார். பிறகு மனோஜித் மாணவியிடம் ஆபாசமான முறையில் காதலை முன்மொழிந்துள்ளார். ஆனால் அந்த மாணவி அதை ஏற்க மறுத்துவிட்டார். காவல்துறை அளித்த தகவல்களின்படி, "பின்னர் மனோஜித்தும் அவரது இரண்டு கூட்டாளிகளும் மாணவியை வலுக்கட்டாயமாக காவலாளியின் அறைக்கு இழுத்துச் சென்றனர். காவலாளியை அங்கிருந்து விரட்டியடித்த பிறகு இந்தக் குற்றம் நடந்துள்ளது." இந்த வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட முக்கிய நபரான மனோஜித் மிஸ்ராவின் ஃபேஸ்புக் சுயவிவரத்தின்படி, அவர் தெற்கு கொல்கத்தா மாவட்ட திரிணாமூல் காங்கிரஸ் மாணவர் அமைப்பின் அமைப்புச் செயலாளராக உள்ளார். அவர் முன்பு சட்டக் கல்லூரியின் டிஎம்சிபி பிரிவின் தலைவராகவும் இருந்துள்ளார். ஆனால் திரிணாமூல் மாணவர் அமைப்பின் மாநிலத் தலைவர் திரினன்கூர் பட்டாச்சார்யா ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, "குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைப்பில் ஒரு சிறிய பதவி வழங்கப்பட்டது, ஆனால் தலைவர் பதவி அல்ல. அவர் பல ஆண்டுகளாக சட்டக் கல்லூரியின் டிஎம்சிபி பிரிவுக்கு எந்த வகையிலும் பங்களிக்கவில்லை" என்று கூறினார். தகவல் அறிந்த வட்டாரங்களின்படி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற இரண்டு பேரும் டிஎம்சிபியுடன் தொடர்புடையவர்கள். ஆனால் இதை பிபிசியால் உறுதிப்படுத்த முடியவில்லை. இதற்கிடையில், முக்கிய நபராகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மனோஜித் மிஸ்ராவுடன் பல டிஎம்சிபி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இருக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்தத் தலைவர்களில் டிஎம்சிபி மாநிலத் தலைவர் திரினன்கூர் பட்டாச்சார்யாவும் ஒருவர். விசாரணைக் குழு அமைக்கப்படும் – கல்லூரி முதல்வர் பட மூலாதாரம்,SANJAY DAS படக்குறிப்பு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் திரிணாமூல் காங்கிரஸின் மாணவர் அமைப்புடன் தீவிரமாகத் தொடர்புடையவர்கள் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் முக்கியமான நபர், அந்த அமைப்பின் அலுவலகப் பொறுப்பாளரும்கூட என்றும் எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர். தெற்கு கொல்கத்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் சர்தாக் பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசியபோது, "குற்றம் சாட்டப்பட்டவர்கள் கட்சியுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் கட்சியில் எந்தப் பதவியையும் வகிக்கவில்லை. அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்," என்று தெரிவித்தார். மறுபுறம், செய்தியாளர்களின் இதுகுறித்த கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்காத திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திரினன்கூர் பட்டாச்சார்யா, "குற்றம் சாட்டப்பட்டவர்கள் திரிணாமூல் காங்கிரஸுடன் தொடர்புடையவர்களோ இல்லையோ, அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்தச் சம்பவத்தில் முக்கிய நபராகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் கல்லூரியின் தற்காலிக ஊழியர். அவருக்கு கட்சியின் மாணவர் அணியுடன் எந்தத் தொடர்பும் இல்லை," என்று கூறினார். ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் திரிணாமூல் காங்கிரஸின் மாணவர் அணியுடன் தொடர்புடையவர்கள் என்றும் முதல் நபராகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இளைஞர் அக்கட்சியின் மாணவர் அமைப்பின் அலுவலகப் பொறுப்பாளரும்கூட என்றும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். சட்டக் கல்லூரியின் முதல்வர் நயனா சாட்டர்ஜி, வெள்ளிக்கிழமை பேசியபோது, "இந்த விஷயம் எனக்குத் தெரியாது. கல்லூரியில் வகுப்புகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். அதற்குப் பிறகு இந்தச் சம்பவம் நடந்துள்ளது," என்றார். அதோடு, இந்தச் சம்பவத்தில் முக்கிய நபராகக் குற்றம் சாட்டப்பட்டவர் கல்லூரியில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வந்தவர் என்றும் அவர் கூறினார். கல்லூரி நேரத்திற்குப் பிறகு அவர் வளாகத்தில் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார். கொல்கத்தா பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்தா தத்தா டே, "இந்தச் சம்பவம் குறித்து சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்த முழு அறிக்கை கல்லூரி முதல்வரிடம் கேட்கப்பட்டுள்ளது," என்றார். அதோடு, செவ்வாய்க்கிழமைக்குள் விசாரணைக் குழு அமைக்கப்படும் எனவும் அதன் பிறகு பல்கலைக்கழக நிர்வாகம் இதுகுறித்த எழுத்துப்பூர்வ தகவலை கல்லூரி முதல்வருக்கு வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார். மமதா பானர்ஜியை விமர்சிக்கும் பாஜக பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் இதற்கிடையில், மனோஜித்தின் தந்தை செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தனது மகனுடன் தனக்கு எந்த உறவும் இல்லை என்றும் அவர் வீட்டிற்குக்கூட வருவதில்லை எனவும் கூறியுள்ளார். அதோடு, தனது மகன் கல்லூரியின் உள் அரசியலால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்ற அச்சத்தையும் அவர் வெளிப்படுத்தினார். "மனோஜித் சிறு வயதில் இருந்தே திரிணாமூல் காங்கிரஸால் ஈர்க்கப்பட்டு, கல்லூரியில் படிக்கும்போது தீவிர அரசியலில் இணைந்தார்," என்று அவரது தந்தை செய்தியாளர்களிடம் கூறினார். முதலமைச்சர் மமதா பானர்ஜி, ரத யாத்திரை தொடர்பாக தற்போது திகாவில் உள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுபேந்து அதிகாரி இதை விமர்சித்துப் பேசியுள்ளார். அவர், "முதலமைச்சரின் பாதுகாப்பில் அனைத்து காவல்துறை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். அதனால்தான் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது," என்றார். செய்தியாளர்களிடம் பேசிய சுபேந்து அதிகாரி, "சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்துவிட்டது. இதற்குப் பொறுப்பேற்று மமதா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அந்த நாற்காலியில் நீடிக்க அவருக்கு உரிமை இல்லை. மமதா பானர்ஜியுடைய அரசின் ஆட்சிக் காலத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதை இந்தச் சம்பவம் நிரூபித்துள்ளது," என்று கூறினார். இதற்கிடையில், பாஜக மாநில தலைவர் சுகந்தா மஜும்தார், "முதல்வர் முன்பு பாலியல் வன்கொடுமைகளை 'சிறிய சம்பவம்' என்று வர்ணித்த மாநிலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இயற்கையானவை. கல்வி வளாகங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. சட்டக் கல்லூரியிலேயே சட்டம் மீறப்படுகிறது," என்று விமர்சித்தார். போராட்டத்தில் ஈடுபடும் மாணவர் அமைப்புகள் பட மூலாதாரம்,SANJAY DAS படக்குறிப்பு, கொல்கத்தாவில் உள்ள சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவு செய்ததாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் இந்தச் சம்பவத்திற்கு எதிராகப் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின. மதியம் அந்தப் பகுதியில் உள்ள தபால் நிலையம் முன்பாக ஜனநாயக மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இடதுசாரி மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்.எஃப்.ஐ) மாநில செயலாளர் தேபாஞ்சன் டே இதுகுறித்துப் பேசியபோது, "தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரியில் திரிணாமூல் மாணவர் அணி நீண்ட காலமாக கலவரத்தை நடத்தி வருகிறது. இந்த விஷயத்தில் காவல்துறையும் நிர்வாகமும் மௌனம் காத்து வருகின்றன. முதல் நபராகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மனோஜித் மீது ஊழல், பாலியல் வன்கொடுமை மிரட்டல்கள் போன்ற பல குற்றச்சாட்டுகள் ஏற்கெனவே உள்ளன," என்றார். அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் தலைவர் ஒருவர் முக்கிய நபராகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் தெற்கு கொல்கத்தா திரிணாமூல் காங்கிரஸ் மாணவர் அமைப்பின் கிளைச் செயலாளர் என்று கூறினார். மற்ற இரண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களும் திரிணாமூல் காங்கிரஸின் மாணவர் அமைப்புடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர் தெரிவித்தார். மற்றுமோர் அமைப்பான அபயா மன்ச், கஸ்பா காவல் நிலையம் முன்பாகப் போராட்டம் நடத்தியது. காங்கிரஸ் குழுவும் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, மாணவியின் குடும்பத்தினரைச் சந்திப்பதாகத் தெரிவித்துள்ளது. காங்கிரஸின் மாநில தலைவர் சுபாங்கர் சர்க்கார், "இந்தச் சம்பவம் குறித்து நாங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளோம். காவல் நிர்வாகம் தீவிரமாக இருந்தால் இத்தகைய சம்பவங்கள் மாநிலத்தில் நடக்காது," என்றார். எதிர்க்கட்சிகளின் தாக்குதலுக்குப் பிறகு, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி இந்தச் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கட்சி கூறியுள்ளது. ஒவ்வொரு திரிணாமூல் உறுப்பினரும் இதைக் கண்டித்துள்ளதாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் கூறியுள்ளார். திரிணாமூல் மாணவர் அமைப்பின் தலைவர் திரினன்கூர் பட்டாச்சார்யா கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு சில சிறிய பதவிகள் வழங்கப்பட்டு இருந்தாலும், அவர் மாணவர் அமைப்பின் தலைவர் அல்ல என்று தெரிவித்தார். தனிப்பட்ட உரையாடல்களில், பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்தச் சம்பவத்திற்கும் ஆர்.ஜி. கர் சம்பவத்திற்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இது எதிர்காலத்தில் அரசுக்கும் கட்சிக்கும் சிக்கல்களை உருவாக்கக்கூடும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இத்தகைய சம்பவங்கள் நிகழ்வது, ஆளுங்கட்சி மற்றும் அரசாங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் என்றும், எதிர்க்கட்சிகள் இதை ஒரு பெரிய பிரச்னையாக மாற்ற முயலும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அரசியல் நிபுணர் ஷிகா முகர்ஜி, "குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் திரிணாமூல் காங்கிரஸுடன் தொடர்புடையவர்களோ இல்லையோ, தலைநகரில் இருக்கும் ஒரு கல்வி நிறுவனத்தின் வளாகத்திற்குள் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. இது மிகவும் தீவிரமான விஷயம். இது நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் திரிணாமூல் காங்கிரஸுடன் தொடர்புடையவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டால், அது கட்சியின் நற்பெயருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும்," என்று கூறினார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cqx24zz181ro
3 months 2 weeks ago
28 JUN, 2025 | 11:20 AM கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி. கே. கோலித்த கமல் ஜினதாசவின் தலைமையில் உத்தியோகபூர்வ பிரான்ஸ் விஜயத்தை மேற்கொண்ட தூதுக்குழுவின் மூன்றாம் நாளில் சமுத்திரவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான இரண்டு முக்கியமான நிறுவனங்களுடன் பயனுள்ள கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தக் கலந்துரையாடல்கள் தற்போதைய ஒத்துழைப்பு மற்றும் உறவுகளை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. Concarneau, Brest இல் அமைந்துள்ள பிரெஞ்சு தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்குச் சென்ற அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழுவினர், அங்கு நிலையத்தின் தலைவர் கலாநிதி Guillaume Massé யுடன் சுமுகமான மற்றும் பயனுள்ள கலந்துரையாடலை மேற்கொண்டனர். இதன்போது, இலங்கையில் ஒரு விசேட அருங்காட்சியகக் கண்காட்சியை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயப்பட்டதுடன் சமுத்திர மீன்வளப் பயிற்சியை மையமாகக் கொண்ட பரிமாற்றத் திட்டங்களை ஆரம்பித்தல், கடல் அட்டை மற்றும் கடல் குதிரைகள் போன்றவற்றை பெருக்கும்போது இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கான வழிமுறைகள் உட்பட நிபுணத்துவ அறிவைப் பரிமாறிக்கொள்ளுதல், பல கலாசார ஆராய்ச்சி ஒத்துழைப்பை மேலும் முன்னெடுத்தல் போன்றவற்றில் முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டன. பின்னர், CLS (Collecte Localisation Satellites SA) நிறுவனத்தின் அதிகாரிகளைச் சந்தித்ததுடன், அவர்களின் செய்மதி தரவு பெறுதல் மற்றும் பகுப்பாய்வு வசதிகள் குறித்து அறிந்துகொள்ளப்பட்டது. இதன்போது பல நிறுவனப் பயன்பாட்டிற்காக (MEPA, NARA, DFAR, முதலியன) செய்மதி அடிப்படையிலான தொழில்நுட்ப மையத்தை நிறுவுதல், உயர் தெளிவுத்திறன் கொண்ட செய்மதி புகைப்படங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள், NEMO சிறிய படகு கண்காணிப்பு அமைப்பின் நடைமுறைப் பயன்பாடு போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. மேலும், Quiet Oceans நிறுவனத்தின் Maud Duma வுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இதன்போது கடல் பாலூட்டிகளின் சத்தங்களைக் கண்டறிதல் மற்றும் நடத்தை பகுப்பாய்வுக்கான அவர்களின் Smartpam போன்ற தனியுரிம கருவிகளின் பயன்பாடு குறித்து முக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. இந்தக் கலந்துரையாடல்கள் எதிர்காலத்தில் இலங்கையின் கடற்றொழில் மற்றும் கடல் வளங்கள் முகாமைத்துவத்திற்கு அர்த்தமுள்ள ஒத்துழைப்பையும், புதிய செயற்பாடுகளுக்கான வழிகளையும் ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. https://www.virakesari.lk/article/218677
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
செம்மணி மனித புதைக்குழி விவகாரம் – மேலும் இரண்டு மனித சிதிலங்கள் கண்டுபிடிப்பு! செம்மணி மனித புதைக்குழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கபட்டிருந்த நிலையில் இன்று(27) இரண்டாவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன்போது இரண்டு மனித சிதிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுகளுக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்ற உத்தரவாதத்திற்கு அமைய நேற்று இரண்டாம் கட்ட அகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது. நிலையில் குழந்தையின் மண்டையோட்டுத் தொகுதி உட்பட மூன்று மனித சிதிலங்கள் நேற்றைய தினம் மீட்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் இரண்டாவது நாளாகவும் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் மேலும் இரண்டு மனித சிதிலங்களும், ஏனைய சிறு சிறு மனித எச்சங்களும் மீட்கப்பட்டிருந்தன. செம்மணி, சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் கடந்த பெப்ரவரி மாதம் அடையாளம் காணப்பட்ட மனிதப்புதைகுழியில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அகழ்வுகள் இடம் பெற்றன. மூன்று குழந்தைகளின் மனிதச் சிதிலங்கள் உட்பட 19 மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் புதை குழி மனிதப் புதைகுழியாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. அத்துடன் 45 நாட்களுக்கு இரண்டாம் கட்ட அகழ்வுகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது. இதன்படி அகழ்வுகளுக்கான செலவீன பாதீடு சமர்ப்பிக்கப் பட்ட நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்ற உத்தரவிற்கு அமைய வியாழக்கிழமை இரண்டாம் கட்ட அகழ்வுகளை முன்னெடுக்கப்பட்டது. இன்றைய தினத்துடன் இதுவரை 24 மனித சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 45 நாட்களுக்கு பாதீட்டு அளவு உள்ளதால் முதல் 15 நாட்களுக்கு அகழ்வு பணிகள் சிறிய இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்து நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437390
3 months 2 weeks ago
மத்திய ஆப்பிரிக்க குடியரசில் பாடசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 மாணவர்கள் உயிரிழப்பு! மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகரில் பாங்குயில் பாடசாலைக் கட்டிடமொன்று தீப்பிடித்து எரிந்ததில் 29 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி 280 பேர் காயம் அடைந்துள்ளனர். மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகரில் பாங்குயில் உயர்நிலைப் பாடசாலையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்தப் பாடசாலையில் இந்த ஆண்டுக்கான இறுதித் பரீட்சைகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதனிடையே நேற்று மாணவர்கள் பாடசாலையில் அமர்ந்து தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு குண்டு வெடிப்பது போல பயங்கர சத்தம் கேட்டதனால் பீதியடைந்த மாணவர்கள் அங்கும் இங்குமாக ஓடினர். இதனை தொடர்ந்து பாடசாலை கட்டிடம் தீப்பிடித்து எரிந்ததுள்ளது. இதற்கிடையே தீ விபத்து குறித்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த கோர சம்பவத்தில் 29 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி 280 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்பு படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது. https://athavannews.com/2025/1437379
3 months 2 weeks ago
போர்க்குற்றங்கள் தொடர்புடைய பொறுப்புக்கூறல்களுக்கு வழங்கும் நிதியை நிறுத்த அமெரிக்கா முடிவு! adminJune 28, 2025 பல்வேறு நாடுகளில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் தொடர்புடைய பொறுப்புக்கூறல் தொடர்பில் செயற்படுத்தப்பட்டு வந்த சுமார் 24 திட்டங்களுக்காக அமெரிக்க நிதி வழங்கல் நடவடிக்கையை நிறுத்துவதற்கு வெள்ளை மாளிகை பரிந்துரைத்துள்ளது. நிதியுதவியை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ள திட்டங்களில் ஈடுபட்டுள்ள நாடுகளில் இலங்கை, ஈராக், சிரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் அடங்குவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. https://globaltamilnews.net/2025/217444/
3 months 2 weeks ago
இருக்கட்டும் அவர்கள் அரசியல்வாதிகள் வேண்டாம் அரசியல் வேண்டாம் என்று சொல்லியே அவர்களை வெளியேறுமாறு கோரினர். அர்ச்சுனாவின் தந்தையும் காணாமலாக்கப்பட்டவர. வாழ வேண்டிய குருத்துக்களை, இராணுவத்தோடு சேர்ந்து கலைத்து கலைத்து சுட்டுக்கொன்றவன் டக்கிளஸ். என்னை சுடாதீர்கள், ஒருவேளை நீங்கள் தேடும் ஆள் நானில்லாமல் இருக்கலாம், முதலில் ஒருதடவை என்னை விசாரியுங்கள் என்று தம் உயிரை காக்க கதறியும் பலனில்லாமல் குருவிகளை சுடுவதுபோல் நடுரோட்டில் சுட்டுப்போட்டவன், இராணுவத்தின் பங்கருக்குள் நா...போல பதுங்கியிருந்து செய்த கொலைகள் ஏராளம். அந்த ஜென்மத்தோடு பதவிக்காக பேரம் பேசபோனவர் சிவஞானம். இவர் பெரிய மனிதனா? வயதில் மூத்தவராக இருக்கலாம் ஆனால் பகுத்தறிவு அற்றவர். எங்களுக்கு பதவி வேண்டும் இல்லையென்றால் அங்கை என்ன வாய்ப்பாக்கவோ என்று கேள்வி எழுப்பினாரே அதிலிருந்தே இவரின் அனுபவ முதிர்ச்சி தெரிகிறது? அப்படியானால் தலைமைப்பதவி இல்லாதவர்கள் வாய் பார்க்கிறார்கள் என்று சொல்லி மற்றவர்களை அவமானப்படுத்துகிறாரா இவர்? பதவிக்காக கட்சியில் இருக்கிறார்கள் இல்லையென்றவுடன் கட்சியை விட்டு வெளியேறுகிறார்கள் என்று ஏன் மற்றவர்களை ஏளனம் செய்கிறார்கள்? சம்பவத்துக்குப்பின் இவர் நேர்காணலில் கூறியதை கேளுங்கள் மிகுதி விளங்கும். மூப்பும் வயதும் மட்டும் மரியாதைக்குரியவையல்ல. அனுபவம், பொறுப்பு மிக அவசியம் மரியாதையை பெறுவதற்கு.
3 months 2 weeks ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
3 months 2 weeks ago
நிழற்படங்கள் சிறிலங்கா படைத்துறையில் உறுப்பினராகயிருந்த முஸ்லிம்களின் படிமங்கள் இதில் உள்ளவர்கள் தரைப்படை, காவல்துறை, ஊர்காவல்படை என்று பற்பல படைத்துறைக் கிளைகளில் பணியாற்றி புலிகளுடனான பல்வேறு காலகட்ட மோதல்களில் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் திருமலை மூதூரைச் சேர்ந்தோராவர். இவற்றின் படிமப்புரவு மூதூரைச் சேர்ந்த திரு. இஹ்ஷான் ஜே.எம்.ஐ முகமது என்பவருக்கே சொந்தமானதாகும்.
3 months 2 weeks ago
நிழற்படங்கள் சிறிலங்கா படைத்துறையில் உறுப்பினராகயிருந்த முஸ்லிம்களின் படிமங்கள் (2023 செப்டெம்பரில் முதற்பக்கத்தில் பதிந்திருந்ததை இங்கு மாற்றுகிறேன்) இதற்குள் ஊர்காவல் படையிலும் சிறப்பு பணிக்கடப் படை (Special Task Force) என்ற சிறப்பு அதிரடிப்படையிலும் உறுப்பினர்களாக இருந்த முஸ்லிம்களில் எனக்குக் கிடைத்த சிலரினது படிமங்களைப் பதிவேற்றியுள்ளேன். சிறப்பு பணிக்கடப் படை என்ற சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த நவாஸ். இவன் புலிகளுடனான சமர் ஒன்றில் கொல்லப்பட்டான். 'இவனது பெயர் றசாக் என்பதாகும். போர்க்காலத்தில் இவன் ஒரு ஊர்காவல்படையினன் ஆவான்.'
3 months 2 weeks ago
நிழற்படங்கள் சிறிலங்கா படைத்துறையில் உறுப்பினராகயிருந்த முஸ்லிம்களின் படிமங்கள் (2023 செப்டெம்பரில் முதற்பக்கத்தில் பதிந்திருந்ததை இங்கு மாற்றுகிறேன்) தமிழ்நெற்றில் சூலை 5, 2009 அன்று "Eastern armed Muslim groups surrender weapons" என்ற தலைப்பில் வெளியான செய்தியிலிருந்து: 2009 ஜூலை 4 பிற்பகல் 3:00 மணியுடன் முடிவடைந்த சிறிலங்காக் காவல்துறையினரால் விடுக்கப்பட்ட பொது மன்னிப்பின் வழிவகையில் காத்தான்குடி ஜும்மா மீரா மசூதியில் அன்றைய நாள் பிற்பகலில் சில முஸ்லிம் ஆயுததாரிகளால் (ஜிகாதிகள் மற்றும் ஊர்காவல் படையினர்) தம்மிடம் உள்ள சில ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டன. அவற்றின் காட்சிகள் சிலவற்றை கீழே இணைத்துள்ளேன். இந்நிகழ்வானது கிழக்கு துணைக் காவல்துறை மா அதிபர் எடிசன் குணதிலக மற்றும் மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது. அன்றைய நாள் 16 வகை- 56 தாக்குதல் துமுக்கிகள், ஒரு வக்- 81 துணை இயந்திரச் சுடுகலன், நான்கு .303 துமுக்கிகள், இரண்டு துணை இயந்திரச் சுடுகலன்கள், ஒரு வேட்டைச்சுடுகலன், ஒரு 9 மிமீ கரச்சுடுகலன், 16 கைக்குண்டுகள் மற்றும் பெருமளவு கணைகள் என்பன ஒப்படைக்கப்பட்டன. முஸ்லிம் ஜிஹாதிகள் சுமார் 250 வகை- 56 தாக்குதல் துமுக்கிகளை வைத்திருப்பதாக புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன, அவற்றுள் ஒரு பகுதியே காலக்கெடு முடிவடைந்த நிலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குணதிலக கூறினார். படிமப்புரவு: தமிழ்நெற், சூலை 5, 2009 படிமப்புரவு: army.lk, சூலை 5, 2009 | இவ்வலைத்தளத்திலிருந்து கிடைத்த படிமங்களை "படிம ஆதாரம்" என்ற வகையின் அடிப்படையில் சேர்த்திருக்கிறேனே ஒழிய பரப்புரைக்காகப் பாவிக்கப்படும் சிங்களத் தரைப்படையின் அலுவலசார் வலைத்தளத்தை எவ்வகையிலும் ஒழுங்குமுறையானது என்றெண்ணி அல்ல. முஸ்லிம் ஆயுததாரி ஒருவன் தனது துமுக்கியை ஒப்படைக்கிறான். படிமப்புரவு: சண்டே ரைம்ஸ், சூலை 5, 2009
3 months 2 weeks ago
வான்புலிகளின் செஸ்னா ஸ்கைமாஸ்ரர் வகை வானூர்தி பற்றிய தகவலை பதிவேற்றியுள்ளேன். மேலும் வான்புலிகளின் வால்கனெர் பி68.ஆர் அல்லது பி.68சியின் படிமங்களையும் பதிவேற்றியுள்ளேன், "வான்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sky Tigers Images" க்குள்.
Checked
Sun, 10/12/2025 - 18:00
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed