3 months 2 weeks ago
"பிழையான, அடாவடித்தனமான" - இவையெல்லாம் சட்ட ரீதியான வினையுரிச் சொற்கள் அல்ல. இந்தச் சொற்களை வைத்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாது. "இலங்கை அரசியலமைப்பிற்கு எதிரான" என்பது தான் வர்த்தமானியை நிரந்தரமாக அரசின் ஆயுதங்களுள் இருந்து அகற்றும் மந்திரச் சொல். அதைத் தான் சுமந்திரன் மனுதாரராக வழக்குப் போட, அவர் சார்பில் ஒரு திறமையான சட்டத்தரணிகள் குழு முன்னிலையாகி தடை வாங்கியிருக்கிறது. நீங்கள் சட்டப் பரிச்சயம் இல்லாமல் இதன் பலனைக் கேள்விக்குள்ளாக்கலாம். ஆனால், இங்கே இன்னும் சிலர் வருவார்கள். வந்து உங்கள் கேள்வியை "நிரந்தரமாக வர்த்தமானியை அகற்றுவதில் இருந்து சுமந்திரன் அரசைக் காப்பாற்றியிருக்கிறார்" என்று புது விளக்கம் தர வெளிக்கிடுவார்கள்😂. இப்படித் தான் இன அழிப்பு பற்றிய ஜெனிவா விடயங்களிலும் சுமந்திரன் நடந்து கொண்டார் எனக் குற்றம் சாட்டினார்கள்.
3 months 2 weeks ago
1998 - இந்த BGM இசையை கேட்ட நொடியில் இருந்து எனக்கும் இதே உணர்வு தான்... மென்மையான மனதைக்கு வருடும் இசைத் துகள்..
3 months 2 weeks ago
இந்த விடயத்தில் எனக்கு முழுமையான சட்ட அறிவு / நுணுக்கம் இல்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன். இந்த திடீர் வர்த்தமானி அறிவிப்பு ஒருசட்ட மூலமாக்கல் முறைமையில் வரவில்லை. இது ஒரு காணி அதிகாரம் சார்ந்த தன்னிச்சையான அரசாங்க அறிவிப்பு மட்டுமே என்றே நான் கருதுகிறேன். இது தமிழர்களை பொறுத்தவரையில் அரச அடாவடித்தன நில அபகரிப்பு. இது அரசின் பிழையான முடிவு. இதை வழக்குமூலம் மட்டும் தான் தான் நிறுத்தலாம் என்றால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஆளை ஆள் தூக்கிக்கொண்டு வருஷ கணக்காய் அலைய வேண்டியது தான்.
3 months 2 weeks ago
அந்த BGM இதுக்கை இணைத்து விடுங்கோ Bro..................பல நாள் கவலைகளில் சோகங்களில் இருந்த போது கைபேயில் இருந்து அதிகம் கேட்பேன் , இப்படியா இசை மனதை மகிழ்விக்கும் இப்ப வார பாடல்கள் முன்னைய காலங்களில் வந்த பாடல் போல் இல்லை.....................1999களில் ஏ ஆர் ரகுமான் இசை அமைத்த அத்தனை பாடல்களையும் பிடிக்கும் அதை விட இந்த BGM இசை மிகவும் பிடிக்கும்🥰👍................................
3 months 2 weeks ago
எல்லாம் சொல்லி போட்டியள் இந்த virtue signaling க்கு தமிழ் என்ன எண்டும் சொல்ல முடியுமா? நியாயம் நான் ஆங்கில வார்த்தைகளை தூவுவதாக குறைபடுகிறார் (அரபு என்றால் ஓக்கேயாம்🤣). வச்சு கொண்டா வஞ்சகம் செய்கிறேன்.
3 months 2 weeks ago
ஒருவர் தும்மினால் “நூற்றாண்டு” என்று சொல்லி அவர் நூறு வயதுவரை வாழவேண்டும் என்று வாழ்த்துவது எங்கள் மரபு, இங்கு நீதிபதி கிழவனை 128 வயது வரை வாழ வேண்டித் தீர்ப்பு வழங்கிவிட்டாரே. இப்படியான வக்கிரர்கள் வளர்வதைச் சட்டம் போட்டோ தண்டனை கொடுத்தோ தடுக்க முடியாது. இப்படி நினைத்தாலே நினைப்பவர்கள் பயம்வந்து நடுங்கி வாழச் செய்ய வேண்டும். நலமடித்து கை கால்களை முடமாக்கி வாழும்வரை மனழ் நொந்து வாழ விடவேண்டும்.😳
3 months 2 weeks ago
உலகத் தமிழாராச்சி மாநாட்டு உயிர்க்கொடை உத்தமர் நினைவாலையம் முற்றவெளி, யாழ்ப்பாணம் தமிழீழத்தில் ஒரு படுகொலைக்கென்று நாட்டப்பட்ட முதலாவது நினைவுத்தூண் இதன் முதல் விருத்தேயாகும் (version). இந்நினைவுத்தூணானது 1974இல் நடந்த 4ஆவது உலகத்தமிழாராச்சி மாநாட்டின் பத்தாவது நாளில் (சனவரி 10) சிங்களவரால் கொல்லப்பட்ட தமிழர் பதினொருவருக்கு கட்டப்பட்டது. இது மொத்தம் நான்கு தடவைகள் சிங்கள இனவெறியர்களாலும் அவர்தம் ஏவலாளித் தமிழர்களாலும் உடைத்தெறியப்பட்டுள்ளது. கீழ்வரும் தகவல்கள் யாவும் என். செல்வராஜா அவர்களால் எழுதப்பட்ட "நினைவுகளே எங்கள் கேடயம்" என்ற நூலின் 138,139வது பக்கங்களிலிருந்து எடுக்கப்பட்டவையாகும். படிமங்கள் இந்நூலிருந்தும் வேறிடங்களிலிருந்தும் சேகரிக்கப்பட்டவையாகும். விருத்து 1 இதன் முதல் விருத்தினை 10.1.1975 அன்று மக்களும் அரசியல்கட்சி தொண்டர்களும் கட்டுவித்தனர். இது பதினொரு சிறு தூண்கள் கொண்ட நினைவுத்தூணாகும். செதுக்கிய மரக் கட்டைகளை மன்னாரிலிருந்தும் "தமிழர் நினைவு நடுகல்" என எழுதிய நடுகல்லை கொழும்பிலிருந்தும் பைஞ்சுதை, கல், மண் மற்றும் தொண்டர்களை யாழ்ப்பாணத்திலிருந்தும் தருவித்து கட்டினர். 10.1.1975 அதிகாலை நான்கு மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில் வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால் நினைவுத்தூண் அமைக்கப்பட்டது. பற்சமய வழிபாடும் நடந்தது. அது சில கிழமைகளின் பின்னர் சிங்கள ஆதரவாளர்களால் உடைத்தெறியப்பட்டுவிட்டது. விருத்து 2 பின்னர் மீண்டும் 10.1.1976 காலையில் 11 அடி உயரத்தில் நினைவுத்தூணொன்று எழுப்பப்பட்டது. அதுவும் சிங்கள ஆதரவாளர்களால் உடைத்தெறியப்பட்டுவிட்டது. கட்டும் போதே இதை மேலும் பல அடிக்கு உயர்த்தக்கூடிய வகையிலேயே கட்டியிருந்தனர். "தந்தை" செல்வா மலர்வணக்கம் செய்கிறார் விருத்து 3 பேந்து மூன்றாவது தடவையாக 10.1.1977இல் ஒன்பது நடுத்தர தூண்களும் ஒரு பெரிய தூணும் கொண்ட நினைவுத்தூணொன்று எழுப்பப்பட்டது. இதன் சிறிய தூண்களின் அடிப்பகுதியில் படுகொலைசெய்யப்பட்டவர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. இதற்கு புதிய நினைவு நடுகல்லும் பதிக்கப்பட்டது. விருத்து 3இன் தொடக்க வடிவம்: இதன் பெரிய தூணும் பின்னர் இடிக்கப்பட்டது: விருத்து 3.1 பின்னாளில் இடிக்கப்பட்ட நினைவுத்தூண் மீளவும் கட்டப்பட்டது, முன்னரிருந்தது போன்றே. விருத்து 3.2 பல ஆண்டுகளின் பின்னர் அந்நினைவுத்தூணானது நினைவாலயமாக மாற்றம் பெற்றது; சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு பெயர்ப்பலகையும் நாட்டப்பட்டது. இதுவே இன்று நீங்கள் காணும் விருத்தாகும். '2003'
3 months 2 weeks ago
வட அமெரிக்காவில் இருந்து இவ்வளவு கேஸ்களைப் பற்றி இங்கே வாசிக்கிற நீங்களே இப்படி இருந்தால், சோசியல் மீடியாவில் சட்ட அறிவு பெறும் ஆட்களின் நிலையை எண்ணிப் பார்க்கிறேன். ஒரு வழக்கு முழுமையாக விசாரிக்கப் பட இரு தரப்பும் கோர்ட்டுக்கு வந்து விளக்கம் தர வேணும். அதன் பின்னர் தான் தீர்ப்பு (verdict) வரும். அப்படித் தீர்ப்பு வழங்கப் பட முன்னர், தீமை பயக்கும் செயல்பாடுகளை உடனே தடுக்கும் முறை தான் இந்த இடைக்காலத் தடை உத்தரவு (temporary injunction). இது அமலில் இருக்கும் போது வழக்கு முன்னோக்கி நகரும்!
3 months 2 weeks ago
இனப்படுகொலை தொடர்பான நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவகங்கள் இதற்குள் தமிழீழத்திற்குள்ளும் உலகின் பல்வேறு நாடுகளிலும் 2009இற்குப் பின்னர் நிறுவப்பட்டுள்ள இனப்படுகொலை தொடர்பான சிலைகளின் படிமங்கள் உள்ளன. இந்தத் தகவல் இத்திரியோடு தொடர்பில்லையாதலால் வேறொரு திரியில் பதிந்த பின்னர் அத்திரியின் கொழுவி (link) கீழே தரப்படும்.
3 months 2 weeks ago
எமது விவசாயிகளுக்கு எதிராக திட்டமிட்டே இதைச் செய்கிறார்களோ? இவர்கள் அறுவடை செய்யும் காலம் பார்த்து இறக்குமதியை செய்வதால் இவர்களின் உற்பத்தி குறைந்த விலைக்கே விற்க முடிகிறது. இது கடந்த காலங்களிலும் சுட்டிக் காட்டப்பட்டது. இருந்தும் மீண்டும் மீண்டும் செய்கிறார்கள் என்றால் தமிழன் நாசமாக போக வேண்டும் என்றே செய்கிறார்கள்.
3 months 2 weeks ago
மாவீரர் துயிலுமில்லம் முதல் பெட்டியினை மாவீரர்களுக்கு ஒதுக்கியுள்ளேன். இதற்குள் மாவீரர் துயிலுமில்லங்களின் படிமங்கள் உள்ளன. மட்டுமின்றி இந்தியாவில் கட்டப்பட்ட மாவீரர் கல்லறைகளும் இதற்குள் உள்ளன.
3 months 2 weeks ago
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை (warning): ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற தரைப்புலிகளின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள். "பதிவிடப்பட்டிருக்கும் நினைவுச்சின்னங்களின் விடுபட்டுள்ள பெயர்களை தெரிவித்துதவுமாறு வாசகர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்" இதற்குள் தமிழர்களுக்கு சிங்களவராலும் முஸ்லிம் காடையர்களாலும் செய்யப்பட்ட இனப்படுகொலை தொடர்பாகவும் அதற்கு எதிராகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் சார்ந்தும் 1948 முதல் 2009 மே மாதம் வரை நிறுவப்பட்ட/கட்டப்பட்ட பல்வகையான நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவகங்கள் தொடர்பான படிமங்கள் பதிவிடப்படும். கீழ்க்கண்ட யாவையும் இதற்குள் காணலாம்: உருவச்சிலை நினைவுத்தூண் நினைவகம் வீரவணக்க நினைவாலயம் மாவீரர் நினைவாலயம் மாவீரர் நிழலுருப்படம் மாவீரர் நினைவு மண்டம் மாவீரர் துயிலுமில்லம் இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்: https://yarl.com/forum3/clubs/10-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88/
3 months 2 weeks ago
பத்து வருசமா வெளிநாட்டு அமைசரா இருந்தும் இப்ப தான் இதை பற்றி கேள்விப்படுகிறார் பாவம்.
3 months 2 weeks ago
கில்லின் காதலி சச்சினின் மகள் அண்ணா இணையத்தில் அடிச்சு பாருங்கோ இவர்களுடைய பல அழகிய படங்கள் வரும்..................................
3 months 2 weeks ago
சுமந்திரன் வழக்கு தொடுப்பதற்கு முன்னமே பாராளு மன்றத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டு, இந்த தீர்மானத்தை உடனடியாக பரிசீலிப்பதாக அரசாங்கம் அறிவித்தது தொடர்பாக செய்திகள் வாசித்த ஞாபகம். அது தவிர வழக்கரிஞர் அந்த காணி அபகரிப்பு அறிவிப்பில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக தன்னை அணுகினால் சட்ட உதவி செய்வதாகவும் அறிக்கை விட்ட ஞாபகம். அது என்ன இடை நிறுத்தம்!!! தவறான ஒரு வர்த்தமானி அறிவித்தல் முழுமையாக வாபஸ் பெறப்பட்டு அந்த செயல் பாட்டை நிறுத்துவது தானே சரியாக இருக்கும்.
3 months 2 weeks ago
மத்தியப் பிரதேசம்; தண்ணீர் கலந்த டீசலை... நிரப்பியதால், முதலமைச்சர் மோகன் யாதவின் வாகன ஊர்தியில் சென்ற 19 வாகனங்கள் பழுதாகி நடுவழியில் நின்றது.
3 months 2 weeks ago
சிறிது தேடல்கள் செய்து பார்த்தேன். இது உண்மை இல்லை போல தெரிகின்றது. தெண்டூல்கர் தனது மகனை கிரிக்கெட்டில் முன்னிலைக்கு கொண்டு வர பாடுபட்டார். சரிவரவில்லை. தற்போதைய இந்தியன் கிரிக்கெட் கப்டனுக்கும் இவர் மகனுக்கும் ஒரே வயதுதான். மகள் மகனை விட வயதில் மூத்தவர் என நினைக்கின்றேன்.
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
நல்ல பலனளிக்க கூடிய முயற்சி. சிங்கள இனவாத அரச இயந்திரத்தின் முதுகொழும்பாக இருக்கும் நீதித்துறையில் இருந்து தமிழ் மக்களுக்கு சாதகமான ஒரு விளைவை ஏற்படுத்துவது சவாலான விடயம். இதைச் செய்த சுமந்திரனுக்கு நன்றி.
Checked
Sun, 10/12/2025 - 18:00
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed